• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 9 : ரோமர் (ரோமர் புத்தகத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 8-3] கிறிஸ்தவன் என்பவன் யார்? (ரோமர் 8:9-11)

(ரோமர் 8:9-11)
“தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட் பட்டவர்களாயிராமல் ஆவிக்குட் பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால், சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.”
 
 
அவனுக்குள்/அவளுக்குள் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கிறாரா என்பதைப் பொருத்து ஒருவர் உண்மையான கிறிஸ்தவரா இல்லையா என்பதை பிரித்து அறிகிறோம். அவன்/அவள் இயேசுவை விசுவாசிக்காமலிருந்தால், அவனுடைய/அவளுடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரை அவன்/அவள் பெற்றிராவிட்டால் எப்படி ஒருவரால் கிறிஸ்தவராயிருக்க முடியும்? இயேசுவை நாம் விசுவாசிக்கிறோமா என்பது முக்கியமான கேள்வியல்ல, கர்த்தருடைய நீதியை அறிந்து அவரை விசுவாசிக்கிறோமா இல்லையா என்பதே முக்கியமானது என பவுல் கூறுகிறான். பரிசுத்தவான்களுக்கு தேவையான நம்பிக்கை பரிசுத்த ஆவியானவரை அவர்களுக்குள் வாசம் செய்ய வைக்கும் படியான நம்பிக்கையாகும். உங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் இருப்பது நீங்கள் கிறிஸ்தவரா இல்லையா என்பதை தீர்மானிக்கும்.ஆகவே பவுல் கூறினான், “கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.” அவன் “ஆவியில்லாதவன்” எனக் கூறினான். ஒருவர் அமைச்சராக இருக்கிறாரா நற்செய்தியாளராய் இருக்கிறாரா அல்லது எழுப்புதலாளராய் இருக்கிறாரா என்பது பொருட்டல்ல., அவனின்/அவளின் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் இல்லை என்றால் அந்நபர் அவருடையவரல்ல. பரிசுத்த ஆவியானவரை நீங்கள் பெற உங்களை வழிநடத்தும் கர்த்தரின் நீதியை நீங்கள் விசுவாசிக்கவில்லை எனில் நீங்கள் நரகத்திற்கு செல்ல வேண்டிய பாவி என்பதை உங்கள் மனதில் எப்போதும் வைத்திருங்கள். இப்படியாக கர்த்தரின் நீதியை உள்ளடக்கியிருக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்த அக்கறை உடையவர்களாய் நாமிருக்க வேண்டும்.
பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம் செய்தால் கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தின் மீதுள்ள நமது விசுவாசத்தின் மூலம் பாவத்திற்கு நாம் மரித்தோம் என பொருள்படும். புதிதாக நாம் பெற்றுக் கொண்ட நீதியினால் நம் ஆத்துமா உயிருடனிருக்கிறது. மேலும் நம தேவன் வரும் அந்நாளிலே அழிந்து போகும் நம் சரீரங்களும் உயிர் பெறும். இதனால் தான் பரிசுத்த ஆவியானவரை நமக்கு கொடுத்தவரைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.கர்த்தரின் நீதியை விசுவாசிக்கும் நம்பிக்கை உங்களிடம் இராவிட்டால் நீங்கள் கிறிஸ்துவிற்கு சொந்தமானவர் அல்ல. அதே நேரத்தில் கர்த்தரின் நீதியின்மீது உங்களிடம் விசுவாசம் இருந்தால் கர்த்தரின் ஆவியானவர் உங்களுக்குள் சஞ்சரிப்பார். இவ்விசுவாசம் இல்லாவிடில் பரிசுத்த ஆவியானவரால் உங்களை ஆளுகைச் செய்ய முடியாது. ஆகவே கர்த்தரின் நீதியை உள்ளடக்கிய விடுதலையின் வார்த்தை உங்களிடம் இல்லாவிட்டால் நீங்கள் கிறிஸ்துவிற்கு சொந்தமானவர்களில்லை. வெளிப்படையாக நீங்கள் அறிக்கை செய்து ஞாயிற்றுக் கிழமை ஆராதனைகளில் அப்போஸ்தலக் கொள்கைகளை திரும்பத் திரும்பக் கூறினாலும் அது பொருட்டல்ல. நீங்கள் கிறிஸ்துவிற்கு சொந்தமானவர்களாயிராவிட்டால் உங்கள் ஆத்துமா சபிக்கப்பட்டதாய் நித்திய அழிவிற்கு உங்களை வழிநடத்தும். நீங்கள் நன்மை செய்ய விழைந்தது பொருட்டேயல்ல.