(ரோமர் 8:4-11)
“மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். அன்றியும் மாம்சத்தின் படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட் பட்டவர்கள் அவருக்குப் பிரியமாயிருக்க மாட்டார்கள். தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட் பட்டவர்களாயிராமல் ஆவிக்குட் பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால், சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.”
புத்தகங்களின் மூலமாக பிரசங்கிக்கும போது வெளிநாட்டு ஊழியம் பயனுள்ளதாய் இருக்கிறது. இப்போது அதனைத் தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம். கர்த்தரின் வார்த்தையை வாசிக்கும போது நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருக்கிறோம். அவருடைய வார்த்தையை விசுவாசிப்பதால் நம் விசுவாசம் வளர்கிறது.
கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக மக்கள் துன்புறுகிறார்கள். படிப்படையாக பரிசுத்தமாதல் என்ற தத்துவம் சரியெனக் காட்டும் தத்துவம் மேலும் மனம் வருந்தி ஜெபிப்பதின் மூலம் பாவ விடுதலை சாத்தியமாகும் என்பதைப் போன்ற தத்துவங்கள் ஆகியவற்றினால் மக்கள் வஞ்சிக்கப்பட்டனர்.
மாமிசத்தில் செயல்படுவது கடினம் என்பதால் சட்டத்தால் செய்ய முடியாததை கர்த்தர் செய்தார் என ரோமர் 8:3 நம்மிடம் கூறுகிறது. பாவம் நிறைந்த மாமிசத்தின் சாயலில் கர்த்தர் தனது சொந்த குமாரனை அனுப்பி அவருடைய மாமிசத்தில் பாவத்தை ஆக்கினைக்குட்படுத்தி நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கும்படி அவரை நியாயந்தீர்த்தார்.
கர்த்தரின் சத்தியத்தைக் காண இன்று நாம் ரோமர் 8:4-12ஐ பார்ப்போமாக. ரோமர் 8:3-4 கூறுகிறது, “மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.” இதன் பொருள் என்னவென்பத நம்முடைய கேள்வியாகும்.
முதலாவது மாமிசத்தின் படி வாழக் கூடாது என்பதின் பொருள் என்ன?
மாமிசத்தின் ஆதாயங்களைத் தேடக் கூடாது என இது பொருள் படுகிறது. ஆவியின் விருப்பங்களிலிருந்து மாமிசத்தின் இச்சையை பிரித்துணர்வது இதுவாகும். மேலும் கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்படியாதவர்களிடமிருந்து தனியாக இருப்பதம் இதுவாகும். வசனம் 5 கூறுகிறது “அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.” “மாம்சத்துக்குரியவைகளை” என்பதின் பொருள் என்ன? அவர்கள் ஆலயத்திற்கு சென்றாலும் கூட தம்முடைய சொந்த ஆசைகளைக் குறிக்கோளாக கொண்டவராயிருக்கின்றனர் என இது பொருள்படும்.
இதனை தெளிவாகக் கூறினால் உலகின் ஆதாயங்களைத்தேடும் முயற்சிகளுக்காக கிறிஸ்தவர்கள் ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது. இது மாமிசத்திற்கேற்றவாரு வாழ்வதாகும். பெரிய சபைகளையுடைய ஆலயங்களுக்கு தம்முடைய வியாபாரங்களை அறிமுகப்படுத்துவற்காக இம்மக்கள் ஆலயங்களுக்கு செல்லுகின்றனர். தமக்கு விசுவாசமான வாடிக்கையாளர்கள் கிடைப்பர் என இவர்கள் விசுவாசிக்கின்றனர். தம்முடைய சொந்த மாமிசத்தின் நோக்கங்களுக்காக அவர்கள் ஆலயத்திற்டூகு சென்று இயேசுவை விசுவாசிக்கின்றனர்.
மற்றவர்களும் இருக்கிறார்கள். கிறிஸ்தவ சமூகத்தில் பிரிவினைகளைப் பாதிப்பவர்களாயும் பொருள் ஆசீர்வாதங்களைத் தேடுமாறு தம்மைப் பின்பற்றுவோர்களுக்கு போதிப்பவர்களும், இருக்கிறார்கள். இவர்கள் மாமிசத்தின்படி வாழுபவர்களாகவும் மாமிசத்தின் காரியங்களுக்கு தம் மனதை அளித்தவர்களாயும் உள்ளனர்.
நம்முடைய கிறிஸ்தவ சமுதாயத்தில் பிரிவினை வாதத்தை இலகுவாக நம்மால் சந்திக்க முடியும். அப்படியானால் பிரிவினைவாதிகள் யார்? தம்முடைய பிரிவின் மீது பெறுமைப் பாராட்டுவதில் தம் விசுவாசத்தை வைத்து தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் மக்கள் இவராவர். தம்முடைய பிரிவு இன்னாரால் தொடங்கப்பட்டது எனவும் இத்தகைய பெரிய மனிதர்கள் தம்மிடம் இருந்தனர் எனவும் அவர்கள் மிகப் பெரியவர்கள் என்றும் முழு உலகிற்கும் அவர்களைத் தெரியும் எனவும், இதற்கு மேலும் கூறிக் கொள்கின்றனர். இத்தகைய பெருமைப் பாராட்டல்களினால் உருவான வகைவகையான இம்மக்கள் தம் சொந்த விசுவாசத்தையும் தயாரித்துள்ளனர். இத்தகைய விசுவாசங்களையுடைய அநேகர் இவ்வுலகில் இருக்கின்றனர்.
தம்முடைய சொந்த சரீரத்தின் லாபங்களுக்காக பிரிவினை வாதிகள் இயேசுவை விசுவாசிக்கின்றனர். தம் மாமிசத்திற்கு ஏற்றபடி வாழுபவர்கள் தம் ஆலயங்களைக் குறித்து பெருமைப் பாராட்டுகின்றனர். இது அவர்கள் பெரிய ஆலயங்களுக்கு செல்வதன் மூலம் கிட்டிய பொருளாதாயத்தினால் வந்தது. உங்கள் மனைவியை நேசியுங்கள் போன்ற பொதுவான இலக்குகளை உடைய சில ஆலயங்களும் இருக்கின்றன. ஆனால் மாமிசத்தின் படி வாழுபவர்கள் என்பதின் பொருள் இதுவே. ஒருவர் தன் மனைவியை நேசிப்பதை பொது இலக்காக ஆலயங்கள் கூற முடியுமா? அப்படி செய்யக் கூடாது. நம் மனைவிமாரை நேசிக்கக் கூடாது என நான் கூறுகின்றேனா? அப்படி இல்லை. ஆனால் நல்லதாகவும் கவரக் கூடியதாகவுமுள்ள இத்தகைய இலக்குகள் ஆலயத்தின் அடிப்படை நோக்கமாக இருக்க முடியாது, அதிகமான விசுவாசிகளைக் கூட்டுவது பரலோகத்திற்கு அவர்களை வழிநடத்தவே எனவும், வேறு சாக்குபோக்குகளைக் கூறுவதும், வெளிப்படையானவை, அவர்களுடைய முக்கியநோக்கம் பெரிய ஆலயத்தைக் கட்ட பணம் சேர்ப்பதாகும்.
மாமிசத்தின் படி வாழுபவர்கள் மாமிசத்தின் காரியங்களில் தம் மனதைச் செலுத்துகின்றனர். இந்நாட்களின் அநேக போதகர்கள் இத்தகைய மக்களாக மாறியுள்ளனர். அவர்கள் தம் ஆலய உறுப்பினர்களின் அளவைப் பெருக்குவதிலும், காணிக்கையிலும், கட்டிடங்களின் மீதும் மட்டுமே ஆர்வமுடையவர்களாய் இருக்கின்றனர். அவர்களுடைய விசுவாசத்தின் முக்கியமான நோக்கம் இதுவாயிற்று. பெரிய, உயரமான, அகலமான ஆலயத்தைக் கட்டுவது அவர்களின் மிகப் பெரிய இலக்காகிவிட்டது.
தம் ஆலயங்கள் மாமிசத்தின் காரியங்களைப் பின்பற்றுமாறு செய்வதற்காக அவர்கள் தம்மைப் பின்பற்றுவோரை மதவாதிகளகாக மாற்றியுள்ளனர். தம் சபையினரை வெறியர்களாகவும், அரைக் கிறுக்கர்களாகவும், பைத்தியங்களாகவும், மோசமாக வழிநடத்தப்பட்டவர்களாகவும் மாற்றுவதில் அநேக போதகர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கர்த்தரின் ஆவியானவரின் படி நடப்பவர்கள்
ஆயினும், கிறிஸ்தவர்களில் கர்த்தரின் ஆவியானவருக்கு ஏற்றபடி உண்மையாக வாழுபவர்களும் இருக்கிறார்கள். ஆவியானவருக்கு ஏற்றபடி வாழுபவர்கள் கர்த்தரின் வார்த்தைக்கு ஏற்றபடியும் வாழுகின்றனர். அவர்கள் தம் சொந்த யோசனைகளை மறுத்து வேத வசனங்களில் எழுதப்பட்டுள்ளவைகளை விசுவாசித்து கர்த்தர் பிரியப்படுபவைகளைச் செய்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிக்கின்றனர்.
ஆவியானவருக்கு ஏற்றபடி வாழுபவர்கள் ஆவியானவருக்குரிய காரியங்களில் தம் மனதைச் செலுத்துகின்றனர். கர்த்தரின் நீதியை விசுவாசித்து நம் எல்லாப் பாவங்களையும் மன்னிக்கப்பட்டிருந்தால் யோசிக்காத நாம் வாழக் கூடாது. ஆனால் ஆவியானவரின் செய்கைகளை தியானித்து வாழ வேண்டும். ஆவிக்கேற்றபடி வாழுபவர்கள் ஆவிக்கேற்றபடி எண்ணுகின்றனர். மேலும் விசுவாசத்தின் மூலம் ஆவிக்குரிய காரியங்களில் மனதை செலுத்துகின்றனர். ஆவிக்குரிய காரியங்களை தேடுபவர்கள் மகிழ்ச்சியுடையவர்களாயிருப்பர். இம்மக்கள் கர்த்தரைப் பிரியப்படுத்துபவர்களாவர். உலகின் பாவங்களிலிருந்து மற்றவர்களை இரட்சிப்பவர்களாவர். விசுவாசத்தினால் வாழ்வர். நம்முடைய பாவங்களிலிருந்து நாம் மன்னிக்கப்பட்டோம். ஆகவே ஆவிக்குரிய காரியங்களில் நம் மனதைச் செலுத்த வேண்டும் என்பதோடு அவருக்கு ஏற்றபடி வாழ வேண்டும்.
நம் வாழ்வின் நோக்கமானது ஆவியானவரின் செய்கையை நிறைவேற்றுவதாகும். அது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிப்பதாகும். ஆவிக்குரிய காரியங்களில் நம் மனதைச் செலுத்த வேண்டும். ஆவிக்குரிய காரியங்களில் எத்தனையாய் உங்கள் மனதை செலுத்தியுள்ளீர்கள்? நாம் ஆவிக்குரிய போரில் ஈடுபட்டுள்ளதால் கர்த்தரின் நீதியை விசுவாசித்து அதனைப் பிரசங்கிப்பதின் மூலம் ஆவிக்குரிய காரியங்களை நாம் செய்ய வேண்டும். தேவனை எது பிரியப்படுத்தும் என எப்போதும் எண்ணி கர்த்தரின் செயல்களில் நம் மனதைச் செலத்தி ஆவிக்குரிய செயல்களில் ஈடுபட வேண்டும். நாம் பலவீனமானவர்கள் குறைகள் நிறைந்தவர்கள் என்பதையெல்லாம் பொருட்படுத்தக் கூடாது. ஒரு குறிப்பிட்ட செயல் முடிந்த பிறகு தேவனைப் பிரியப்படுத்தும் இன்னுமொரு செயலில் ஈடுபட வேண்டும்.
புத்தகங்களின் மூலம் முழு உலகிற்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இப்போது நாம் பிரசங்கித்து வருகிறோம். நம்முடைய இண்டர்நெட்டிற்கு வருகைப் புரிவதின் மூலம் 200இலிருந்து 300 பேர்கள் நம் இலவச கிறிஸ்தவ புத்தகங்களையும் மின் நூலையும் பெற்று வருகின்றனர். இவ்வுலகிலுள்ள எல்லா நாடுகளிலும் உள்ள அனைவருக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிக்க விசுவாசத்துடன் நாம் செயல்படுகிறோம். இதற்காக உங்களுடனே கூட அவருடைய ஆலயத்தில் ஊழியம் செய்கிறோம். ஆவிக்குரிய காரியங்களில் நம் மனதைச் செலுத்தவில்லையெனில் இந்த ஆவிக்குரிய கனிகளை நாம் கொடுத்திருக்க மாட்டோம். ஆவிக்குரிய காரியங்களில் நம்மனதைச் செலுத்தி ஒவ்வொன்றாக அவருடைய செயல்களை முடிக்க வேண்டும். நீதி மொழிகள் 31ஆம் அதிகாரத்தில் காணப்படும் சிறந்த மனைவியைப் போல் நம் ஆவிக்குரிய மணவாளராகிய இயேசு கிறிஸ்துவை நம் பிரியப்படுத்துவோம்.
வசனம் 8 கூறுகிறது, “மாம்சத்துக்குட்பட்டவர்கள் அவருக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.” பாவ மன்னிப்பு பெறாதவர்களைக் குறித்து இது குறிப்பிடுகிறது. “மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் அவருக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்” (ரோமர் 8:7-8). ஆவியானவர் தம்மில் இல்லாதவர்களால் கர்த்தரின் செயல்களைச் செய்யவும் முடியாது. அவரை பிரியப்படுத்தவும் முடியாது.
கர்த்தரின் சட்டத்திற்கு பாவிகள் தம்மை உட்படுத்துவதில்லை. கர்த்தரின் நீதிக்கும் அவர்கள் தம்மை உட்படுத்துவதில்லை. அவர்களால் அவரைப் பிரியப்படுத்த முடியாது. அவர்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் சஞ்சரிக்காததால் கர்த்தரின் சித்தம் என்ன என்பதை அவர்களால் புரிந்து கொள்ளமுடியாததே இதற்கான காரணம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் மனித குலத்தின் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பதே தேவனை பிரியப்படுத்துகிறது. பாவிகளின் துதித்தலினாலும் ஆராதனைகளினாலும் அவர் பிரியப்படுவதில்லை.
பாவிகள் அவரைத் துதிப்பதால் அவர் பிரியமாவதில்லை. அவரைத் துதிக்க பாவிகள் எத்தனையாய் கைகளைத் து¡க்கினாலும், ஆராதனையின் போது எத்தனையாய் அழுதாலும் அவர்களால் அவரைப் பிரியப்படுத்த முடியாது. பாவம் நிறைந்த கிறிஸ்தவர்கள் உணர்ச்சி வசப்படுதலினால் கர்த்தரைப் பிரியப்படுத்த முயலுகிறார்கள். தேவனை அவர்களால் பிரியப்படுத்த முடியாது. பாவத்துடனிருப்பவர்களால் தேவனைப் பிரியப்படுத்த முடியாது. ஏனெனில் அவர்கள் பாவிகளாவர். பாவிகள் எத்தனையாய் முயன்றாலும் தேவனை அவர்களால் பிரியப்படுத்த முடியாது. தேவனைப் பிரியப்படுத்த அவர்கள் எத்தனை சித்தமுள்ளவர்களாய் இருக்கின்றனர் என்பது பொருட்டல்ல. அவரைப் பிரியப்படுத்துவது அவர்களுக்கு சாத்தியமல்ல என்பதே முக்கியம்.
மக்கள் பெரிய ஆலயங்களைக் கட்டினால் கர்த்தர் பிரியப்படுவாரா? அவர் பிரியப்பட மாட்டார். பெரியதொரு ஆலயக்கட்டிடம் ஒன்றிற்கு செல்வது அவசியமானால் எப்படியாயினும் பெரியதொரு ஆலயத்தைக் கட்ட வேண்டும். ஆனால் கட்ட வேண்டும் என்பதற்காக பெரிய கட்டிடங்களைக் கட்டுவது கர்த்தைப் பிரியப்படுத்தாது.
உதாரணமாக என் நகரத்தில் உள்ள ஒரு ஆலயம் புதியதொரு ஆலயக் கட்டிடத்தைக் கட்டுவதற்கு முப்பது லட்சம் அமெரிக்க டாலர்களைச் செலவிட்டது. ஆனால் அதற்கருகில் இருக்கும் முந்திய கட்டிடம் மிகச் சிறந்ததாகவும் போதுமானதாகவும் இருக்கிறது. சபையில் வெறும் 200-300 பேரே இருக்கும் போது இததகையதொரு ஆலயத்தைக் கட்டுவது அவசியமா? கர்த்தரின் ஆலயம செங்கல்களினால் கட்டப்பட்டதல்ல. நம் கர்த்தரின் ஆலயமாக இருப்பதாக கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். நீதிமான்களின் இருதயங்களில் கர்த்தரின் ஆவியானவர் தங்கியிருக்கிறார்.
தேவைக்கேற்றபடி பெரிய ஆலயத்தைக் கட்டுவது சரியானது. ஆனால் பெரிய ஆலயங்களைக் கட்டுவதே கர்த்தருக்கு மகிமையளிக்குமா? இல்லை. அது மகிமைப்படுத்தாது. ஆலயத்தினுள் அதிக மக்களைச் சேர்ப்பது கர்த்தருக்கு மகிமையளிக்குமா? இல்லை இதனைச் செய்வதால் கர்த்தரை உங்களால் பிரியப்படுத்த முடியாது. மாமிசத்தின் படியாக வாழுபவர்களால் தேவனைப் பிரியப்படுத்தாது.
சில நேரம் நீதிமான்களான மக்களும் கூட மாமிசத்தின் ஆதாயங்களை மட்டுமே நாடுகின்றனர். இம்மக்களால கர்த்த¨ப் பிரியப்படுத்த முடியாது. நீதிமான்களின் நடுவிலும் கூட பாவிகளைப் போல் மாமிசத்தின் யோசனைகளினால் கட்டுப்பட்ட சிலர் இன்னமும் இருக்கின்றனர். இம்மக்களால் கர்த்தரை பிரியப்படுத்த முடியாது. உண்மையாகக் கூறினால் இவர்களால் ஆலயத்தில் ஆரோக்கியமானதொரு விசுவாச வாழ்க்கையைத் தொடர முடியாது. இவர்கள் புகார் கூறி கர்த்தரின் ஆலயத்தைக் குறித்து முணுமுணுத்து இறுதியில் ஆலயத்தை விட்டுவிட்டு போய்விடுவார்.
ஆகவே, நீதிமான்களாகிய நாம் நீதியின் வாழ்க்கையை நடத்தி கர்த்தரை பிரியப்படுத்த வேண்டுமேயன்றி மாமிசததின் ஆதாயங்களை மட்டுமே தேடும் வாழ்வை வாழக் கூடாது. கர்த்தரின் செயல்களையும் அவரின் நீதியையும் நாம் எண்ணிப் பார்த்து அவருடைய நீதியின் செயல்களுக்கு ஊழியம் செய்து நமது சரீரங்கள் மனம் மற்றும் உடமைகளை கர்த்தரின் நீதியின் கருவிகளாக பயன்படுத்த வேண்டும். கர்த்தரைப் பிரியப்படுத்தும் வாழ்வை ஏறெடுக்க வேண்டும்.
கிறிஸ்துவின் ஆவிக்குள்ளாக இருப்பவர்கள்
வசனம் ஒன்பதை அனைவரும் சேர்ந்து வாசிப்போமாக “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட் பட்டவர்களாயிராமல் ஆவிக்குட் பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.”
பவுலின் கூற்றுபடி இவ்வசனம் இவ்வாறு பொருள்படுகிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசித்தால் வேறு வார்த்தைகளில் கூறினால் கர்த்தரின் நீதியை நாம் விசுவாசித்தால் நாம் நமது பாவங்களிலிருந்து விடுதலையாவோம். ஆகவே நாம் மாமிசத்திற்குரியவர்களாயிராமல் ஆவிக்குரியவர்களால் இருப்போம். அவன்-அவள் இருதயத்தில் ஆவியானவர் இருந்தால் அந்நபர் கிறிஸ்துவுக்குள் இருக்கிறார். கிறிஸ்துவின் ஆவியானவர் இல்லாதவர்கள் யாரோ அவர்கள் அவருடையவர்கள் அல்ல.
ஆகவே நாம் மாமிசத்திற்குள்ளிராமல் ஆவிக்குள் இருக்கிறோம். நாம் ஆவிக்குள் இருப்பதோடு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் விடுதலையானோம். ஆகவே நீதிக்கான போர்ச் சேவகர்கள் நாம் என்பதை நாம் மறந்து போகக் கூடாது. கிறிஸ்துவின் நீதியாக கர்த்தரைப் பிரியப்படுத்தும் திறம் நம்மிடம் இருக்கிறது. நம் மாமிசத்தின் பலவீனத்தை அறிந்து நாம் கலங்கக் கூடாது. நாம் பலவீனர்களாயிருந்தாலும் கூட நாம் அவருடையவர்களாகவும் நாம் அவருக்குள் இருப்பதனாலும் நாம் அவருடைய ஊழியர்களாக இருக்கிறோம் என்ற விசுவாசத்துடனே அவரைப் பிரியப்படுத்த வேண்டும்.
நாம் மறுபடியும் பிறந்த பிறகு மாமிசத்தின் ஆதாயங்களை மட்டுமே பின்பற்ற நாம் அனுமதிக்கப்படவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். கர்த்தருடைய நீதிக்காக மட்டுமே நீதிமான்கள் வாழ வேண்டியவர்கள் என்பதையறிந்து நாம் வாழ வேண்டும். கிறிஸ்தவர்கள் எப்படி வாழ வேண்டுமென்பதை வசனம் 10 நம்மிடம் காட்டுகிறது: “மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால், சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.”
உண்மையாகக் கூறினால் நாமும் நமது சரீரமும் நம் பாவங்களினால் இயேசு கிறிஸ்துவுடனே கூட சிலுவையிலறையப் பட்டு மரித்துப் போனோம். கர்த்தரின் நீதியின் செயலால் நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டோம். இந்த நீதியினால் நீதிமான்களின் ஆத்துமாக்கள் நித்திய ஜீவனை பெற்றன. நித்திய ஜீவன் நீதிமான்களாக்கப்பட்டவர்கள் தம்முடைய சொந்த மாமிசத்தின் படி மட்டும் வாழுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். மறுபடியும் பிறந்த பிறகு கர்த்தரின் நீதிக்காக வாழாதவர்கள் அவருடைய ஆசீர்வாதங்களிலிருந்து தொலைவில் உள்ளனர்.
கர்த்தருடைய நீதிக்காக வாழ நாம் நியமிக்கப்பட்டோம். நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறந்த பிறகு உங்களில் சிலர் பரிதவிப்புடன் இவ்வாறு எண்ணியிருக்கலாம். மாமிசத்தில் இருப்பவர்களால் கர்த்தரைப் பிரியப்படுத்த முடியாது. நானும் அவர்களில் ஒருவன். ஆனால் இது உண்மையல்ல. அவருடைய நீதியின் போர் சேவகர்களாக கர்த்தர் நம்மை மீண்டும் படைத்தார்.
வேதாகமத்தை தவறாகப்புரிந்து கொண்டதால் சில மனிதர்கள் அவ்வாறு எண்ணலாம். தம் சரீரமானது மாமிசத்திற்கேற்றபடி வாழுவதாலும் தாம் பலவீனமானவர்களாய் இருப்பதினாலும் கர்த்தருக்கேற்றபடி தம்மால் வாழ முடியாது என நீதிமான்களில் சிலர் எண்ணுகின்றனர். ஆனால் உண்மையானது என்னவெனில் பரிசுத்த ஆவியானவரைத் தமக்குள் பெற்றவர்கள் கர்த்தரின் செயல்களைச் செய்வதன் மூலம் மகிழ்வர். கர்த்தரின் செயல்களைச் செய்யும் போது அவர்கள் மகிழ்ந்து ஆனந்தித்து இருப்பார். மறுபுறம் பார்த்தால் கர்த்தரின் செய்கைகளில் ஈடுபடாத வாழ்வானது உந்துதலும், நோக்கமும் இல்லாத சபிக்கப்பட்ட வாழ்வாயிருக்கும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் ஏற்றுக் கொண்டு கர்த்தரின் நீதியில் நாம் வாழும் போது பரிசுத்த ஆவியானவர் நம்முள் சஞ்சரிப்பார். பாவமன்னிப்பு பெற்ற எவரிடமும் பரிசுத்த ஆவியானவர் வந்து வசாசம் செய்வார். பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்யப்பட்டவர்கள் எப்படி இருப்பார்கள்? கர்த்தருடைய நீதிக்கு ஊழியம் செய்யவும் அவரின் நீதியின் செய்கையில் ஈடுபடவும் நியமிக்கப்பட்டவர்களாயிருப்பர்.
சுருக்கமாகக் கூறினால் பாவ மன்னிப்பைப் பெற்று நீதிமான்களாக்கப் பட்டவர்கள் விசுவாசத்தினால் மட்டுமே வாழ வேண்டும். விசுவாசத்தினால் வாழும் போதும் கர்த்தரின் செயல்களில் ஈடுபடும் போதும் மட்டுமே நீதிமான்களால் விசுவாசத்துடன் வாழ முடியும். நீங்கள் நீதிமான்களாக்கப்பட்ட பிறகும் உங்கள் மாமிசத்தின் படி இவ்வுலகில் வாழ வேண்டுமென நீங்கள் எண்ணினால் இதற்கான காரணம் நீங்கள் பாவ மன்னிப்பைப் பெற்ற பிறகு உங்கள் வாழ்க்கை முறை ஏற்கனவே மாறிவிட்டது என்பதை நீங்கள் அறியாதமையே.
நீதிமான்களின் வாழ்க்கைமுறை மாறிவிட்டது. அவர்கள் மறுபடியும் பிறப்பதற்கு முன்பாக உலகிற்காகவும் அவர்களுடைய சொந்த காரணங்களுக்காகவும் வாழந்தனர். தம்முடைய மனித ஆசைகளில் வாழும் போது மகிழ்ச்சியாயிருந்தனர். ஆயினும் மறுபடியும் பிறந்த பிறகு அப்படி மீண்டும் வாழ்வது சாத்தியமில்லாத ஒன்று. பாவ மன்னிப்பை நாம் பெற்றுக் கொண்டோம். லட்சக்கணக்காக சம்பாதித்தாலும் நாம் மகிழ்ச்சியுடனிருப்போமா? இவ்வுலகிலிருந்து மற்ற ஆத்துமாக்களை விடுதலையாக்குவதில் நம்மை அர்ப்பணித்த பிறகு பொருட்களின் மூலம் நாமெப்படி திருப்தியடைவோம்?
வேறு வார்த்தைகளில் கூறினால் மாமிசத்திற்குரிய காரியங்களையும் ஆவிக்குரிய காரியங்களையும் குறித்து எண்ணிப் பார்க்கும் படி உங்களிடம் கூறுகிறேன். அவற்றைத் தெரிந்து கொள்வதற்காக நீங்கள் செய்து பார்க்க வேண்டாம். இதனைக் குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டியது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது.
ரோமர் ஒன்றாம் அதிகாரத்திலிருந்து ஆறாம் அதிகாரம் வரை இதற்கு முன்தைய ரோமரின் பிரசங்க நூலில் பிரசங்கித்திருந்தேன். இப்புத்தகத்தில் ஏலாம் அதிகாரத்திலிருந்து பதினாறாம் அதிகாரம் வரை பிரசங்கித்துள்ளேன். என்னுடைய கிறிஸ்தவ நூல் வரிசையில் நான்காது மற்றும் ஐந்தாவது நூல்கள் இவ்விரு பிரசங்க நூல்களாகும். இவை உலக முழுவதுமுள்ள கிறிஸ்தவர்கள் வாசிப்பதற்காக விநியோகிக்கப்படும். என்னுடைய கிறிஸ்தவ நூல் வரிசையின் மூலமாக அநேக மக்கள் கர்த்தரின் நீதியை அறிந்து கொள்வார்கள் என்பதில் நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். என்னுடைய முந்தைய மூன்று பிரசங்க நூல்களிலும் கர்த்தரின் இரட்சிப்பை குறித்த அடிப்படைப் போதனைகளை எழுதியிருந்தேன். முதலாவது நூல் நற்செய்தியைப் பற்றியும், இரண்டாவது நூல் இறையியல் பிரச்சனைகளைப் பற்றியும், மூன்றாவது நூல் பரிசுத்த ஆவியானவரைப் பற்றியும், அவரைப் பெற்றுக் கொள்வதற்கு சரியான வழி எது என்பதைக் குறித்தும் விவரித்தன. இறையியல் கொள்கைகள் எத்தனைத் தவறானவை என்பதையும் கிறிஸ்தவர்கள் இயேசுவை விசுவாசித்தாலும் பாவங்கள் ஏன் மறையவில்லை என்பதையும் கர்த்தருடைய நீதியில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது எப்படி வெளிப்பட்டது என்பதையும் இந்த நான்காம் மற்றும் ஐந்தாம் நூல்கள் விவரிக்கின்றன.
இந்த நூலின் மூலமாக நற்செய்தியானது இன்னமும் அதிகமாக உலகம் முழுவதும் பரவும் என்பதை நான் விசுவாசிக்கிறேன். முதலிரண்டு நூல்களை நாம் வெளியிட்ட போது இருந்ததை விட மூன்றாவது நூலை வெளியிட்ட போது நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டது. இப்போது மூன்றாவது நூலிற்கு பிறகு என்னுடைய கிறிஸ்தவ நூல் வரிசையின் முதல் மற்றும் இரண்டாவது நூல்களை அதிகமதிகமானோர் கேட்கின்றனர்.
இந்த இரண்டு நூல்களும் வெளியிடப்பட்ட பிறகு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வல்லமை எத்தனைப் பெரிது என்பதை நாம் அறிந்து கொள்வோம். அவருடைய நீதியை அறிந்து கொண்டவர்களுக்கு கர்த்தரால் வழங்கப்பட்ட அளவில்லாத ஆசீர்வாதங்கள் கிடைக்க வேண்டுமென நான் ஜெபிக்கிறேன். ரோமரின் புத்தகத்தை புரிந்து கொள்வது எப்படி என்பதை அவர்கள் அறிந்து கொள்வர். அதாவது கர்த்தரின் நீதியை உள்ளடக்கிய நற்செய்தியின் மீதுள்ள நம்பிக்கையை அவர்கள் புரிந்து கொள்வர்.
நற்செய்திக்காக நாமனைவரும் ஒன்றாக பணியாற்றுகிறோம். நீங்கள் கர்த்தரின் பணியைச் செய்யவில்லையா? பாவிகளை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் நற்செய்தியைப் பிரசங்கிக நீங்கள் உதவுகிறீர்கள். நாம் நம் பங்கிற்கு உத்தமமானவர்களாயிருந்து நற்செய்திக்கு பணியாற்றினால் உலகிலுள்ள அநேக ஆத்துமாக்கள் தம் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையடைவர். அப்படியானால் இந்த உலகப் படியான செயல்களுக்காக இந்தவிலை மதிப்பில்லாத பணியை நம்மால் எப்படி மறுதலிக்க முடியும்?
நீதிமான்களாகிய நாம் நம்முடைய சொந்த மாமிசத்திற்காக மட்டும் வாழ நியமிக்கப்பட்டவர்களில்லை என்பதை நான் உங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கர்த்தரின் நீதியை செயல்படுத்தவும் ஆத்துமாக்களை இரட்சிக்கவும் இந்த நீதிக்காக வாழவும் நமது வாழ்வு நியமிக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் அறிந்து எஞ்சியிருக்கும் நாட்களை கர்த்தருக்காகவும் உண்மை நற்செய்திக்காகவும் பாவத்தில் மரித்துப் போன ஆத்துமாக்களை இரட்சிப்பிற்காகவும் வாழ வேண்டும்.
இப்பகுதியில் ரோமரின் புத்தகம் இதனைத் தான் கூறகிறது. வசனம் 10 மற்றும் 11ஐப் பார்ப்போமாக, “மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால், சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.”
நம்முடைய பாவங்களினால் நம் சரீரங்கள் வெகு காலத்திற்கு முன்பே மரித்துவிட்டது என மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. கர்த்தரின் நீதியினாலும் விசுவாசத்தினாலும் நம் ஆத்துமாக்கள் வாழுகின்றன. யார் கர்த்தரின் நீதியை விசுவாசித்தாலும் அவன்/அவள் புதியதொரு வாழ்வைப் பெற்றுக் கொள்கிறார். கர்த்தரின் நீதியை விசுவாசித்து புதியதொரு வாழ்வை நாம் பெற்றுக் கொண்டோம்.
வசனம் 11 கூறுகிறது “அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.” உலகின் முடிவின் போது அவர் நம்மை உயிரோடெழுப்புவாரென இது பொருள்படும். நம்முடைய மாமிசத்திற்காக மட்டுமே நாம் முன்னதாக வாழ்ந்த வாழ்வு இப்போது கடந்து போய்விட்டது. மீதியிருக்கும் வாழ்நாள் முழுதும் கர்த்தருக்காகவும் அவருடைய நீதிக்காகவும் மாறும்படியாக நம் வாழ்வானது நியமிக்கப்பட்டுள்ளது.
“நீதிமான்கள் தாம் கூறிக்கொண்டிருப்பவைகளைக் கூறுவதற்கு மீண்டும் ஒன்று கூடுவர்” என எண்ணி நீதிமான்களின் வாழ்வைக் குறித்து நீங்கள் சலிப்படையலாம். ஆயினும் மறுபடியும் பிறந்த விசுவாசி உங்களுக்கருகில் அமர்ந்து கொட்டாவி விடுவதைக் கேட்டாலோ அல்லது அவர்களின் துதித்தல்களையும் சத்தங்களையும் கேட்டாலோ அது உங்கள் மனதை புதிதாக்கும். அதற்கு நீங்கள் ஆலயத்தில் இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் கர்த்தரின் ஆலயத்தில் இருப்பதுவும் விசுவாசிகளின் இருதயங்களில் இருப்பதுவுமே இதற்கான காரணங்களாகும். உங்கள் மனது புதிதாகும் மேலும் உங்களிருதயத்தில் புதிய வல்லமையைப் பெறுவீர்கள். மேலும் ஆவிக்குரிய ஜீவ அப்பத்தினால் போஷிக்கப்பட்டு ஆவிக்குரிய கடமைகளைப் பெற்றவர்களாய் ஆவிக்குரிய பணிகளை செய்ய வெளியே செல்லுவீர்கள்.
விசுவாசிகளின் கூட்டத்தில் உங்களால் புத்துணர்ச்சி பெற முடியும். உலகிலிருந்து நீங்கள் பிரிந்து விட்டீர்கள் என்ற குறிப்பானது உங்கள் வாழ்வு முறை மாற்றப்பட்டது என்பதைக் காட்டுகிறது. இதனால் தான் மாமிசத்தின் படி வாழுபவர்கள் மாமிசத்தின் காரியங்களில் தம் மனதை செலுத்துகின்றனர். ஆனால் ஆவிக்குரிய படி வாழுபவர்களோ மனதைச் செலுத்துகின்றனர். ஆனால் ஆவிக்குரியபடி வாழுபவர்களோ ஆவிக்குரிய காரியங்களில் மனதை செலுத்துகின்றனர். நீதிமான்களாக்கப்பட்ட நாமோ மாமிசததிற்கேற்றபடி வாழவே மாட்டோம். பாவத்தின் அடிமையாக இருப்பதை நீதிமான்கள் எப்போதும் விரும்புவதில்லை. ஆவிக்கேற்ற படி வாழ்வதையும் ஆவிக்குரிய காரியங்களில் நம் மனதைச் செலுத்துவதிலும் நாம் வாழ விரும்புகிறோம். கிறிஸ்துவிற்காக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தும் பணியான ஆவிக்குரிய காரியங்களை நீதிமான்கள் செய்வர்.
கர்த்தருடைய செயல்களுக்கு நாம் கடினமாக உழைக்க வேண்டும். அதற்காக நம் சொந்த சிந்தனைகளை மறுதலிக்க வேண்டும். அதில் நம் மனதை செலுத்த வேண்டும். நம்முடைய எஞ்சியிருக்கும் வாழ்வை இப்படியாக கழிக்க வேண்டும். கர்த்தரின் நீதிக்காக மட்டுமே வாழும்படியாக உங்கள் வாழ்வு மாற்றியமைக்கப்பட்டது. ஏனெனில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்ததின் மூலம் பாவ மன்னிப்பை நீங்கள் பெற்றுக் கொண்டுள்ளீர்கள். இந்த உண்மை உங்களுக்குத் தெரியுமென நம்புகிறேன்.
உங்களால் மறுபடியும் உலகிற்கு திரும்பவோ, இனிமேலும் பாவத்திற்கு அடிமையாகவோ முடியாது. இப்போது நிங்கள் உலகிற்கு திரும்பினால் அது உங்கள் மரணம் என பொருள்படும். மனித மனதுடன் இருப்பது மரணமாகும். உங்கள் மனித ஆசைகளைப் பின் தொடர்ந்தீர்களானால் உங்கள் ஆத்துமா மரிக்கும். உங்கள் மனம் மரிக்கும். உங்கள் சரீரமும் மரிக்கும். எகிப்தை விட்டு புறப்பட்ட பிறகு இஸ்ரவேலர்கள் எகிப்திற்கு திரும்பவில்லை. செங்கடலைக் கடந்த பிறகு எகிப்தியர்களைச் சந்திக்கவும் அவர்கள் விரும்பவில்லை. அது போலவே நீதிமான்களாக்கப்பட்ட நம்மால் எகிப்திற்கு திரும்பிப் போகவும் முடியாது. மேலும் ஆவிக்குரிய எகிப்தியர்களைச் சந்திப்பதில மகிழவும் முடியாது.
நீதிமானாகிய மறுபடியும் பிறந்த ஒரு நபர் உலகினை விட்டுச் சென்று உலகின் பாவிகளோடு வாழும் போது கர்த்தரின் ஆலயத்திற்கு திரும்பி செல்ல வேண்டுமானால் அவன்/அவள் பைத்தியமாகி விடுவர். அவன்-அவள் கர்த்தரின் ஆலயத்தை இழந்து போவார். ஆகவே ஆவிக்குரிய காரியங்களில் நம் மனதைச் செலுத்தி வாழ்வோமாக.
கர்த்தரின் ஆவியானவரின் காரியங்கள் என்பதின் பொருள் என்ன? அவை கர்த்தரின் காரியங்கள் இல்லையா? அவை கர்த்தரின் நற்செய்திக்கு ஊழியம் செய்வதற்கான காரியங்களில்லையா? நாம் பலவீனமானவர்களாயும் குறைபாடுடையவர்களாயும் இல்லையா? நீங்கள் பலவீனமானவர்கள் நானும் அப்படிப்பட்டவனே. ஆனால் நீங்கள் பலவீனர்களாயும் குறையுடையவர்களாயும் இருக்கும் போது பாவ மன்னிப்பை நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லையா? நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள். அப்படியானால் பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசம் செய்கிறாரா? இதற்கான பதில் ஆமாம் என்பதாகும்.
அப்படியானால் ஆவிக்குரிய காரியங்களில் நம் மனதைச் செலுத்த முடியுமா இல்லையா? நம்மால் முடியும். ஆவிக்குரிய காரியங்களில் நம் மனதைச் செலுத்த நாம் திறமையானவர்களே. ஆவிக்குரிய காரியங்களை நீங்கள் செய்யும் படி கர்த்தர் உங்கள் வாழ்வை மாற்றியமைத்ததை நீங்கள் அறிவீர்களா? இதனை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
இப்போது நம் மனங்கள் மாறியுள்ளன. உங்கள் மனம் மாறியதாய் இருந்தாலும் அது மாறியதை நீங்கள் அறியாதவராய் இருந்தால் அதன் பொருள் உங்களுக்கு சோதனை உண்டாயிருக்கிறது என்பதாகும். கர்த்தருடைய நீதியின் மீது உங்கள் மனதை உறுதியாக செலுத்த வேண்டும். அப்பொழுது கர்த்தரின் ஆலயம் உங்களுடையதாகும். உங்கள் உடன் விசுவாசிகள் உங்கள் சகோதர்களாகவும் சகோதரிகளாகவும் பெற்றோர்களாகவும் மாறுவர். வேறு வார்த்தைகளில் கூறினால் அது உங்கள் குடும்பம். அவர்களில் இருப்பது ஒரே ஆவியானவரே. ஆலயத்திலுள்ள ஒவ்வொருவரும் உங்கள் குடும்பத்தினராவார். இப்படியாக இதற்கு முன் நீங்கள் சிந்தித்திராவிட்டால் இதனை எண்ணிப் பார்ப்பதற்கான நேரம் இதுவே. இந்த போதனையைக் குறித்து தீவிரமாக யோசியுங்கள்.
மாமிசம் மற்றும் இரத்தம் சம்பந்தமான குடும்பம் மட்டுமே உங்கள் குடும்பம் என்று எண்ணாதீர்கள். இது உங்கள் குடும்பம். மறுபடியும் பிறந்த ஒவ்வொருவரின் குடும்பமும் இதுவே. நீங்களனைவரும் கர்த்தரின் குடும்பத்தின் ஒரு பகுதியாவீர்கள். அதனால் தான் ஆவிக்குரியபடி நாம் வாழ வேண்டும். கர்த்தருக்காக நாம் வாழ வேண்டும். ஏனெனில் ஆவிக்குரிய மனது என்பது சமாதானத்தைப் பெற்றுக் கொள்வதாகும்.