• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 9 : ரோமர் (ரோமர் புத்தகத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 8-5] கர்த்தரின் நீதியில் நடத்தல் (ரோமர் 8:12-16)

(ரோமர் 8:12-16)
“ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல. மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.”
 
 
கர்த்தரிடமிருந்து இரட்சிப்பைப் பெற்ற மனிதனாக அப்போஸ்தலானகிய பவுல் மறுபடியும் பிறந்த விசுவாசிகள் மாமிசத்தின் படி வாழாமல் ஆவிக்குரிய படி வாழ வேண்டுமெனக் கூறினான். கர்த்தரின் நீதியைப் பெற்றுள்ள நாம் மாமிசத்தின் படி வாழ்ந்தால் மரித்துப் போவோம் எனவும் ஆவிக்குரிய படி வாழ்ந்தால் நாம் வாழுவோம் என்றும் பவுல் குறிப்பிட்டுக் கூறினான். இந்த சத்தியத்தை இப்படியாக விசுவாசிக்க வேண்டும். அப்படியானால் கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்கள் எப்படியாக வாழ வேண்டும்? கர்த்தரின் நீதிக்கேற்ற படி வாழ வேண்டுமா அல்லது மாமிசத்தின் இச்சைக்கேற்ற படி வாழ வேண்டுமா? எது சரியென அவர்கள் அறிந்து தம் சரீரத்தை சீர் செய்து கர்த்தருடைய நீதியின் செயல்களுக்கு தம்மை அர்ப்பணிக்க வேண்டும்.
 
 
தவிர்க்க முடியாத செய்கை
 
ஆவிக்குரியபடி வாழ வேண்டியது நமது செய்கையாகும் என பவுல் கூறினான். நம்முடைய பாவ சுபாவத்தின் படி வாழக் கூடாது. ஏனெனில் கிறிஸ்தவர்களாகிய நாம் கர்த்தரின் கோபாக்கினையிலிருந்து இரட்சிக்கப்பட்டு அவரின் நீதிக்குள்ளானோம். கர்த்தருடைய நீதியைக் குறித்து அறிந்து அதனை விசுவாசிப்பதற்கு முன்னதாக ஆவிக்கேற்றபடி நம்மால் வாழ முடியவில்லை. ஆனால் இப்போதோ கர்த்ரின் நீதியை நாம் அறிந்து அதனை விசுவாசிக்கிறோம். ஆகவே நம் இருதயங்களையும் சிந்தனைகளையும், தாலந்துகளையும், சரீரங்களையும், நேரத்தையும் அவருடைய நீதியின் செயல்களுக்காக ஒப்புக் கொடுக்க வேண்டும். கர்த்தருடைய நீதியை பிரசங்கிக்கவும், அவரின் நீதியின் செய்கைகளைச் செய்யவும் நம்மைக் கருவிகளாக பயன்படுத்த வேண்டும்.
 
 
மாமிசத்தின் படி வாழுதல்
 
நீங்கள் கிறிஸ்துவிற்குள் இருந்து ஆவியின் படி வாழாமல் உங்கள் பாவச் சுபாவப்படி வாழ்ந்தால் மற்ற அவிசுவாசிகளைப் போல நீங்களும் அழிந்து போவீர்கள் என வேதாகமம் கூறுகிறது. நீங்கள் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவராயிருந்தாலும் கர்த்தர் நீதியின் படி வாழ வில்லை என்பதே இதற்கான காரணம். நீங்கள் உண்மை கிறிஸ்தவராக இருந்தால் மாமிசத்தின் படி வாழாமல் கர்த்தரின் நீதியின் படி நீங்கள் வாழ வேண்டும். ஏனெனில் நீங்கள் அவருடைய நீதியை விசுவாசிப்பதால் அதற்கு ஊழியம் செய்யும்படி நீங்கள் நியமிக்கப்பட்டுள்ளீர்கள். இப்படி இருந்தும் கூட மாமிசத்திற்கேற்றபடி நீங்கள் வாழ்ந்தால் உங்கள் ஆத்துமா மரித்துப் போகும். ஆயினும் கர்த்தரின் நீதியின்படி நீங்கள் வாழ்ந்தால் சமாதானத்தோடேகூட நித்தியமாக வாழுவீர்கள்.
 
 
கர்த்தரின் குமாரர்கள்
 
“எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.”
கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்கள் பரிசுத்த ஆவியானவரை வரமாக பெற்றனர். அதனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களை வழிநடத்துகிறார். இவர்களே “கர்த்தரின் குமாரார்கள்” ஆவர். “கர்த்தரின் குமாரர்கள்” பரிசுத்த ஆவியானவரை வாசம் செய்யப்பெற்றவர்கள். பரிசுத்த ஆவியானவரை தம்முள் வாசம் செய்ய பெறாதவர்கள் அவருடையவர்கள் அல்ல. அவருடைய நீதியின் மீதுள்ள விசுவாசத்தில் இருந்து கர்த்தரை பின்பற்றும் தொடக்க புள்ளி இருக்கிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வார்த்தையை விசுவாசித்து கர்த்தரின் பிள்ளையாவதில் இருந்து அது தொடங்குகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதனால் அவரின் நீதி எனும் நற்செய்தியை விசுவாசிப்பதில் இருந்து கர்த்தரின் பிள்ளையாவது தொடங்குகிறது. இதன் பொருள் என்னவெனில் கர்த்தரின் நீதியை விசுவாசித்து அவரின் குடும்ப உறுப்பினராக நீங்கள் மாறுவதாகும். மேலும் உங்களை உங்கள் பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்காக கர்த்தர் தன் நீதியை கொடுத்தார்.
யூதர்களின் தலைவனாகிய நிக்கொதேமுவை இயேசுவானவர் சந்தித்த போது ஒருவன்/ஒருத்தி நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறக்காவிட்டால் யாராலும் கர்த்தரின் பிள்ளையாக முடியாது என இயேசு அவனிடம் கூறினார். நிக்கொதேமு ஆச்சரியப்பட்டு கேட்டான். “ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்?” (யோவான் 3:4). இயேசு பதில் கூறினார். “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டுமென்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான்” (யோவான் 3:5-8).
நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறக்காதவர்களால் மறுபடியும் பிறப்பது என்பதின் பொருளை புரிந்து கொள்ள முடியாது என இயேசு கூறினார். யோவான் ஸ்நானனிடமிருந்து இயேசு பெற்ற ஞானஸ்நானம் மற்றும் சிலுவையில் அவர் சுமந்த இரத்தம் ஆகியவை மீதுள்ள விசுவாசம், அவருடைய நீதியின் செயல்களை விசுவாசிப்போர் கர்த்தரின் நீதியை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக்கியது. நற்செய்தியின் வார்த்தையை விசுவாசிப்பவர்களால் பரிசுத்த ஆவியானவரை வரமாக பெற்றுக் கொள்ள முடியும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலம் கர்த்தரின் நீதியை ஒருவரால் அடைய முடியும். கர்த்தரின் நீதியை ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொருவராலும் கர்த்தரின் பிள்ளையாக முடியும். அவருடைய மக்களாகியவர்கள் நம்முடைய சகோதரர்களும், சகோதரிகளும் ஆவர்.
 
 
நாம் கர்த்தரின் பிள்ளைகள் என்பதற்கு ஆவியானவர் சாட்சியாய் இருக்கிறார்
 
“அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்” (ரோமர் 8:15-16).
நாம் கர்த்தரின் பிள்ளைகள் என்பதற்கான அத்தாட்சியை இரண்டு வழிகளில் நம்மால் கண்டு கொள்ள முடியும். முதலாவது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கர்த்தரின் நீதி நம்மை அவரின் பிள்ளைகளாக்கியது. இரண்டாவது பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் வருகிறார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்குள் பரிசுத்த ஆவியானவர் செயல்புரிகிறார். இவற்றை எல்லாம் கர்த்தர் திட்டமிட்டார். நாம் கர்த்தரின் பிள்ளைகளானோம் என்று நம்மிடம் இருந்து கூறும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசமே இதற்கான சாட்சியாகும். கர்த்தரின் நீதியை அறிந்து விசுவாசிப்பதால் கர்த்தரின் பிள்ளைகளானவர்களுக்கு “அப்பா,” எங்கள் பிதாவே என கர்த்தரை நோக்கி ஜெப்பிப்பதற்கான உரிமை இருக்கிறது.
நாம் சிறிது யோசிக்கலாம். அவனின்/அவளின் இருதயத்தில் பாவமுள்ள ஒருவரால் கர்த்தரை எப்படி பிதாவாக கூப்பிட முடியும். பிதாவாகிய கர்த்தர் பாவியை தன் பிள்ளையாக அங்கீகரித்ததில்லை. மேலும் பாவியால் கர்த்தரை தனது பிதாவாக ஆராதிக்க முடியாது. இத்தகைய தவறுகளை நீங்களும் செய்கிறீர்களா என நீங்கள் உங்களுக்குள்ளாக பார்க்க வேண்டும். பரிசுத்த ஆவியானவரின் மூலமாக கர்த்தரின் பிள்ளையாக நாம் மாறியதை அறிந்தவர்கள் கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்களாவர். கர்த்தரின் நீதியை குறித்து ஆழமாக நாம் எண்ணி பார்க்க வேண்டும்.