(ரோமர் 8:18-25)
“ஆதலால் இக்காலத்துப் பாடுகள் நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விதையாக்கப்பட்டு, அவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவாரலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப் பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்ப வேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.”
கர்த்தரின் நீதியை விசுவாசித்து நீதிமான்களானவர்கள் பரலோகத்தின் மகிமையையும் பெற்றுக் கொண்டனர். இதனால் தான் பரலோகத்தின் மகிமையினால் எல்லா மக்களும் தரிப்பிக்கப்பட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியுடன் அவர்கள் பாடுபடுகின்றனர். நற்செய்தியாகிய கர்த்தரின் நீதிக்கு விசுவாசிகள் தம்மை அர்பணித்ததுடன் பூமியிலும் அவர்கள் பாடுகளை அனுபவிக்கின்றனர். ஏனெனில் கிறிஸ்துவின் பாடுகளுடன் பங்கேற்பது மகிமையும் நீதியும் நிறைந்த செயலாகும்.
நாம் மரியாதையும் கனமும் செலுத்தும் கர்த்தருக்காக பாடுகளை அனுபவிப்பது நமக்கு மரியாதை இல்லையா? அது மரியாதை ஆனதே. அது மகிமையான பாடுகளாகும். இதனால் தான் கர்த்தரின் நீதியை விசுவாசிக்கும் யாவரும் அவருடைய நீதியின் நிமித்தம் துன்புறுகின்றனர். இப்போது நீங்கள் யாரக்காக பாடுகளை அனுபவிக்கிறீர்கள்? உங்கள் மாமிசத்திற்காகவும் உலகிற்காகவும் பாடுகளை அனுபவிக்கிறீர்களளா? கர்த்தரின் நீதிக்காக பாடுகளை அனுபவித்து அதனை விசுவாசியுங்கள். கர்த்தரின் மகிமை அப்போது உங்களுடனிருக்கும்.
நாம் வாரிசாவதால் எதிர்காலத்தில் பெறப் போகும் ஆசீர்வாதம்
நாம் பெறப் போகும் வாரிசுரிமையைக் குறித்து எண்ணுவோம். பரலோகத்தில் நாம் பெறப் போகும் வாரிசுரிமையானது, புதிய வானம் புதிய பூமியில் இயேசுவுடனே கூட ஆளுவதற்கு நாம் அனுமதிக்கப்படுவதாகும். ஆயிர வருட அரசாட்சியிலும் கர்த்தரின் நித்திய ராஜ்யத்திலும் நாம் பெறப் போகும் மகிமையானது மிகப் பெரியதும், அளக்க முடியாததுமாகும். மறுபடியும் பிறந்த விசுவாசிகளால் மட்டுமே இதனை அறிந்து அவர்களுக்காக காத்திருக்கும் இந்த மகிமையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஒப்பிட முடியாத மகிமை
“ஆதலால் இக்காலத்துப் பாடுகள் நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்” (ரோமர் 8:18).
விசுவாசிகள் பெறப் போகும் மகிமையுடன், அவர்களுடைய இக்காலத்துப் பாடுகளை ஒப்பிடும் போது அவர்களுடைய மகிமையானது இக்காலப்பாடுகளை விட மிகப் பெரியதாக இருக்குமென பவுல் கூறினான். இது முற்றிலும் உண்மையானது. நமக்காகத் காத்திருக்கும் மகிமையானது இப்போது நாம் அனுபவிக்கும் பாடுகளை விட மிக நிச்சயமாக பெரியது.
படைக்கப்பட்டவைகளின் எதிர்பார்ப்புகள்
“மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக் கொண்டிருக்கிறது. அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விதையாக்கப் பட்டு, அவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக் கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவாரலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது” (ரோமர் 8:19-21).
கர்த்தரால் படைக்கப்பட்ட அனைத்தும் பாவத்தின் தீமையிலிருந்து விடுவிக்கப்படுவதை விரும்புகின்றன. அப்படி விடுவிக்கப்பட வேண்டுமானால் கர்த்தரின் ராஜ்யம் பூமியிலே நிறுவப்பட வேண்டும். ஆயிர வருட அரசாட்சியின் போது கர்த்தரின் பிள்ளைகள் தம் எஜமானர்களாக வேண்டமென இந்த படைக்கப்பட்டவைகளெல்லாம் காத்திருக்கின்றன. இப்படியாக கர்த்தரின் மகிமையினால் தரிப்பிக்கப்பட்டு கர்த்தருடைய குமாரர்கள் அவருடனே கூட அராசாளும் நாளுக்காகவும் வரப்போகிற கர்த்தரின் ராஜ்யத்திற்காகவும் எல்லா படைப்புகளும் காத்திருக்கின்றன.
நம் சரீரத்தின் விடுதலைக்காக காத்திருத்தல்
“ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்” (ரோமர் 8:22-25).
கர்த்தருடைய நீதியின் நற்செய்தியை விசுவாசிக்கும் அனைவரும் அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டனர். அவர்கள் கர்த்தரின் ராஜ்யத்திற்காக காத்திருக்கின்றனர். அவர்கள் தம் பாடுகளுக்கு நடுவிலும் பொறுமையுடனே கூட அந்நாளுக்காக காத்திருக்கின்றனர். நற்செய்திக்காக அவர்கள் இடைவிடாது பாடுகளை அனுபவிக்கின்றனர். இந்த பாடுகளால் அவர்களின் கர்த்தரின் ராஜ்யத்தைக் குறித்த நம்பிக்கை இன்னமும் அதிகரிக்கிறது. இது அவர்களுக்கு இயற்கையானதே. சரீரத்தின் கண்களால் காணக் கூடிய நம்பிக்கைக்காக அவர்கள் காத்திருக்கவில்லை. ஆனால் அதற்கு மாறாக அவர்கள் காண முடியாத கர்த்தரின் ராஜ்யத்தையும் அவர்களின் சொந்த மாறுதல்களையும் நம்புகின்றனர்.
மக்களும், இந்நாளின் உலகத்தின் அனைத்து உயிரினங்களும், விவரிக்க முடியாத சலிப்பான ஒரு வாழ்க்கையை வாழுகின்றனர். காலம் செல்லச் செல்ல உலகம் மாறுகிறது. தொழி நுட்பமும் நாகரீகமும் மாறும் போது எதிர்காலத்தைக் குறித்த எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகரிக்கிறது. பூமியில் ஒரு பரலோகத்தை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் அவர்கள் ஆர்வத்துடனும், பரிதவிப்புடனும், களைப்புடனும், காத்திருக்கின்றனர். எத்தனையோ மாறுதல்கள் நிகழ்ந்தாலும் இதற்கு ஏன் இத்தனைக் காலம் பிடிக்கிறது என அவர்கள் ஆச்சிரியப்படுகின்றனர். கம்யூட்டர்கள், வாகனங்கள் மற்றும் தொழில் நுட்ப அறிவியல் முன்னேற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்தாலும் மக்களின் சிரிப்பைக் கேட்பது மிகமிக கடினமாயுள்ளது.
மனித குலத்தின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையிருக்கிறதா? இதற்கான பதில் துரதிருஷ்டவசமாக இல்லை என்பதாகும். வெளிப்படுத்தின விசேஷத்தையும், விஞ்ஞானிகளின் கருத்துக்களையும் பார்க்கும் போது அழிவுகள் காத்திருப்பதைக் காணலாம். குடிநீர் தட்டுப்பாடு, ஓசோன் அடுக்கு அழிந்து போதல், காடுகள் அழிதலும், வறட்சியும் அநேக மக்களை தாகத்திற்கும் சூட்டிற்கும் மரணத்திற்கும் எடுத்துச் செல்லும். நமக்காக இத்தகைய அழிவுகள் காத்திருக்கின்றன என்பதை உங்களிருதயத்தால் உணர முடிகிறதா?
மகிழ்ச்சியான உலகில் நாம் வாழுகின்றோமா? சில வழிகளில் பார்க்கும் போது அப்படித் தோன்றலாம். பணத்தால் எதனை வாங்க முடியாது, ஆனால் தெளிவான நீரும் ஆரோக்கியமான சுற்றுச் சூழலும் நமக்குத் தேவை. ஆயினும் ஓசோன் அடுக்கு அழிந்து பயங்கரமான கதிர்களை காற்று மண்டலத்தினூடே அனுமதிக்கிறது. புற ஊதாக் கதிர்கள் தாவரங்களை மாற்றுகிறது. மனிதர்களின் இருதயங்களும் கடினமாகிறது. மக்கள் தொடர்ந்து கவலைப்படுகின்றனர். இவ்வுலகிற்கு என்ன நடக்கும்? ஆனால் இவ்வுலக மக்களைப் போல் மறுபடியும் பிறந்த விசுவாசிகளாகிய நாம் இராமல் முதலாவது உயிர்த்தெழுதலில் பங்கு பெறுவோம் எனவும் ஆயிரம் வருடங்கள் இயேசுவுடனே கூட வாழுவோம் என்றும் நம்புகிறோம்.
பெரிய சத்தத்துடனும், பிரதான தூதனுடைய தொனியுடனும் கர்த்தரின் எக்காளத்துடனும் நம் தேவன் பரலோகத்திலிருந்து இறங்கி வருவார் என வேதாகமம் நம்மிடம் கூறுகிறது (1 தெசலோனிக்கேயர் 4:16). அவர் எப்போது வருகிறார் என்பதே கேள்வி. நற்செய்தியாகிய நீர் இரத்தம் மற்றும் ஆவியானவரை எடுத்துக் கொள்ள அவர் இறங்கி வருவார் என நம் தேவன் வாக்குத் தத்தம் செய்தார். மேலும் நாம் அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்.
மறுபடியும் பிறந்தவர்கள் இந்த நற்செய்தியை விசுவாசிக்கின்றனர், “இயேசு ஞானஸ்நானம் பெற்ற போது என் பாவங்களெல்லாம் அவரின் மீது சுமத்தப்பட்டது. என்னுடைய இடத்திலிருந்து என் பாவங்களுக்காக தீர்க்கப்பட்ட என் தேவனை இரட்சகராக விசுவாசிக்கிறேன்.” கர்த்தர் தன் ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் இரட்சிப்பை நமக்கு அருளினார். அவர் தமது மக்களை உயிரோடெழுப்பவும் அவர்களை இப்பூமியை ஆயிரம் வருடங்கள் அரசாளச் செய்யவும் மீண்டும் வருகிறார். வேதாகமம் சித்திரப் புதிரைப் போன்றது, அதை வாசிப்பவர்களால் அது சரியாகப் பொருத்தப்பட வேண்டும்.
இயேசு முதலில் இறங்கி வந்தார். பாவிகளை மனந்திரும்ப அழைப்பதற்காக அவர் வந்தார். அவர் தன்னுடைய சரீரத்தில் பாவங்களை தன் ஞானஸ்நானத்தின் மூலம் சுமந்து சிலுவையில் தன் இரத்தத்தைச் சிந்தியதின் மூலம் அவர்களுக்காக தீர்க்கப்பட்டார். பரலோகத்தில் இப்போது இருக்கும் தேவன் மீண்டும் வருகையில் கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பவர்களுடனே கூட ஆயிரம் வருடங்கள் ஆளும் விதமாக அவர்களை உயிருடன் எழுப்புவார்.
ஆயிர வருட அரசாட்சி
இவ்வுலகில் உண்மையாகவே மற்றவர்களை நேசிப்பவர்கள் கர்த்தரின் பிள்ளைகளேயாவார். இழந்து போன ஒவ்வொரு ஆத்துமாக்களையும் கிறிஸ்துவிற்காக வெல்ல நற்செய்தியாகிய கர்த்தரின் நீதியை பரப்பும் மக்கள் இவர்கள் மட்டுமேயாகும். இவ்வுலகின் மக்கள் கிறிஸ்துவின் பிள்ளைகளுக்கு சன்மானம் வழங்குவார்களா, இல்லை. அப்படியானால் வழங்குவது சன்மானம் யார்? இயேசு மீண்டும் வருகையில் அவர்அவர்களுக்கு சன்மானம் வழங்குவார். மறுபடியும் பிறந்தவர்களை உயிரோடெழுப்பி ஆயிரம் வருடங்கள் அவர்களை ஆளச் செய்வார்.
ஆயிர வருட அரசாட்சியானது மறுபடியும் பிறந்த விசுவாசிகளான நமக்குரியது. இன்றைய உலகம் அழிந்து போனாலும் கூட நம்முடைய தேவன் திரும்பி வருகையில் புதியதொரு உலகில் நாம் வாழுவோம். அங்கு அவர் நம்மைத் தன்னுடனே கூட அரசாள அனுமதிப்பதால் நாம் மகிழ்ச்சியுடனும் ஆனந்தத்துடனும் வாழுவோம்.
ரோமர் 8:23இல் பவுல் கூறினார், “அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.” அந்த நாளுக்காக நீங்கள் காத்திருக்கிறீர்களா? ஆவியானவரின் முதற்கனிகள் நமக்குள் புலம்பினாலும் கூட நம் சரீரங்களின் விடுதலைக்காக ஆவலுடன் நாம் காத்திருக்கிறோம். நம்மை உயிரோடெழுப்பி நம் சரீரங்களை மாற்றி அவருடனே கூட வாழ அனுமதிப்பதாக கர்த்தர் கூறினார். நீதிமான்களாக மறுபடியும் பிறந்த நாம் அவருடைய இரண்டாவது வரு¨க்காக எதிர்பாப்புடனே கூட பரிசுத்த ஆவியானவரின் மூலமாய் காத்திருப்போமாக.
நமக்குள்ளே நாம் புலம்புகிறோம். இந்த உலகம் எத்தகையதாயிருக்கப் போகிறது என்பதை மறுபடியும் பிறந்த விசுவாசிகள் அறிவர். எதிர்காலத்தைக் கூறும் ஜோதிடர்கள் கூறுவது ஒன்றுமில்லை. எதிர்காலத்தில் நடக்கப் போவது என்னவென்று மறுபடியும் பிறந்த விசுவாசிகளுக்கு துல்லியமாக தெரியும். நாம் கூறியதைப் போன்று இவ்வுலகம் முற்றிலுமாய் மாறுமென்றாலும் கூட இப்போது அதனையாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் எழுதப்பட்டுள்ள கர்த்தரின் வார்த்தையை விசுவாசிப்பவர்கள் எந்த பெருமையுமின்றி காத்திருப்பர். கர்த்தரின் வார்த்தையை ஏற்றுக் கொள்ளாத மற்ற மக்கள் அவர்களைக் கேலி செய்தாலும், அவர்கள் நம்பிக்கையுடன் வாழ்வர்.
ஆகவே விசுவாசிக்காதவர்களும், அவர்களுடைய வாழ்வு முடியும் முன்னதாக இரட்சிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும். இயேசு தன்னுடைய ஞானஸ்நானத்தினாலும் அவர்களுடைய பாவங்களையெல்லாம் ஏற்றுக் கொண்டு தம்முடைய இடத்திலிருந்து சிலுவையில் தீர்க்கப்பட்டார் என்பதை அவர்கள் விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே இறுதி நாட்கள் வரும் போது அவர்களால் கர்த்தரின் ராஜ்யத்திற்குள் பிரவேகிக்க முடியும். அப்பொழுது நமக்கு சன்மானம் வழங்கப்பட்டு நித்திய ஜீவனை அடையும் பொருட்டு அவருடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்போம்.
நீங்கள் கவலைப்படுகிறீர்களா? நீங்கள் சோர்ந்து போனீர்களா? அல்லது உங்கள் வாழ்வில் திருப்தியடைந்துள்ளீர்களா? நாம் மரிப்பதற்கு முன்னதாக இயேசு எப்படி நமது இரட்சகரானார் என்பதை தெளிவாக அறிந்து அதனை விசுவாகிக்க வேண்டும். பரலோ ராஜ்யத்தின் நம் வாழ்வையும் ஆயத்தம் செய்ய வேண்டும். அறிவுள்ளவர்கள் இதனைத் தான் செய்வார்கள். ஒவ்வொரு நாளும் உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் நீங்களொரு முட்டாள். மறுபுறம் சிறந்தவற்றை நாடுபவர்கள் அதாவது பரலோக நாட்டை நாடுபவர்களை அதற்குள்ளே பிரவேசிப்பதின் மூலம் தமது கனவுகளை நனவாக்குவர். இவர்கள் கற்பாறையின் மீது தமது வீட்டைக் கட்டிய ஞானிகளாவர்.
ஆயிர வருட அரசாட்சியில்
கர்த்தர் நம்மைத் தன சாயலாக படைத்தார். நாம் அவருடனே கூட எப்போதும் வாழ வேண்டுமென விரும்பினார். இதனால் தான் தேவன் இவ்வுலகிற்கு வந்து தன் ஞானஸ்நானததைப் பெற்று நம் எல்லா பாவங்களிலிருந்தும் நம்மை விடுதலையாக்க தன் இரத்தத்தைச் சிந்தினார். கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பவர்கள் தேவனுடனே கூட வாழுவர். அதற்காக தேவன் அவர்களுக்கு தகுந்த பரிசை அளிப்பார். நம்முடைய கண்களிலிருந்து நம் தேவன் கண்ணீரையெல்லாம் துடைத்து நாம் பட்ட துன்பங்களாகிய கஷ்டங்களுக்கும தனிமைக்கும் ஏற்ற பரிசுகளை வழங்குவர்.
கர்த்தர் எல்லாவற்றையும் புதிதாக்குவார். அவர் ஒரு புதிய உலகை அனுமதிப்பார். இங்கு ஒரு குழந்தை விரியன் பாம்பு புற்றில் தன் கைகளை விட்டாலும் அது கடிப்பதில்லை (ஏசாயா 11:8). நாம் காணாதவற்றை விசுவாசித்து அதற்காக ஆர்வத்துடன் காத்திருக்க வேண்டும். நம்பிக்கையிழக்காமல் அந்நாளை எதிர்பார்க்க வேண்டும். நாம் காணுபவைகளுக்காக காத்திருக்கிறோம் எனக் கூறினால் நாம் முட்டாள்களாவோம். மறுபுறம் நாம் காணாதவைகளுக்கு காத்திருந்து கர்த்தரின் வார்த்தையை விசுவாசித்தால் நாம் முட்டாள்களாவோம். நம்முடைய இரட்சிப்பிற்கு பிறகு மகிமைக்காக காத்திருக்கிறோம். அதனை நம் கண்களால் காண முடியாவிட்டாலும் அது நிச்சயமாய் வரும்.
நம்மை விட கர்த்தர் அதிகமாய் புலம்புகிறார். ஆயினும் நம்மை காத்திருக்கச் செய்கிறார். நம்முடைய சரீரமானது ஆவிக்குரிய சரீரங்களாக மாறுவதற்கும், நம்முடை நேரம் வரும் போது அரசாளுவதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறோம். நமக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவர் கூறுவது என்ன? எதற்காக அவர் நம்மைக் காத்திருக்கச் செய்கிறார்? ஆயிர வருட அரசாட்சிக்காக நம்மைக் காத்திருக்கக் செய்கிறார். நம்முடைய சரீரங்களை புதிதாக்கி நம்முடனே கூட வாழுவதற்கு தேவன் காத்திருக்கிறார். கர்த்தருடனே கூட ஆயிரம் வருடங்கள் அரசாளுவதற்காக நாமும் கூட காத்திருக்கிறோம்.
அல்லேலூயா! நம் தேவனை நாம் துதிக்கிறோம்
கிறிஸ்தவர்கள் பரலோகத்தினை எதிர்பார்த்து வாழுகின்றனர். அவர்கள் தம் எதிர்பார்ப்பில் உறுதியுடன் உள்ளனர். இந்த உறுதியானது நம் உணர்ச்சிகளினால் உருவானதல்ல. ஆனால் பொய் கூறாத கர்த்தரின் வார்த்தையால் இது ஆயிற்று.