(ரோமர் 8:26-28)
“அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தனை இன்னதென்று அறிவார். அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.”
கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்களின் இருதயங்களில் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் அவர்களை ஜெபிக்கும் படி செய்கிறார். அவர்களுக்காக அவர் ஜெபிக்கிறார். அவருடைய புலம்பல்களை விவரிக்க முடியாது. இதன் பொருள் என்னவெனில் கர்த்தரின் சித்தப்படி அவர்கள் ஜெபிக்க பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு உதவுகிறார். இதனால் தான் கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்கள் கர்த்தரின் பிள்ளைகள் என அழைக்கப்படுகின்றனர். முடிவு காலம் வரை அவர்களுடனே கூட இருப்பதாக தேவன் வாக்குத்தத்தம் செய்கிறார்.
நீதிமான்களுக்குள் உள்ள பரிசுத்த ஆவியானவர் கர்த்தரின் சித்தப்படி ஜெபிக்க செய்கிறார். பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வது எப்படி என நீங்கள் எண்ணுகிறீர்கள்? ஜெபிப்பதின் மூலமா? உங்களிடம் பாவங்களிருந்தாலும் உங்களால் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ள முடியுமென எண்ணுகிறீர்களா? கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்களின் இருதயங்களில் மட்டுமே பரிசுத்த ஆவியானவரால் வாசம் செய்யவும் செயல் புரியவும் முடியும்.
கர்த்தரின் சித்தப்படி ஜெபிக்க விரும்பும் கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து உதவியைப் பெற்றுக் கொள்கின்றனர். எதற்காக அவர்கள் ஜெபிக்க வேண்டுமென அவர்கள் கற்று புரிந்து கொள்ளுகின்றனர். கர்த்தரின் நீதியை விசுவாசித்ததின் மூலம் பரிசுத்த ஆவியானவரை நீங்கள் பெற்றிருந்தால் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்காக ஜெபிப்பதுடன் உங்களை வழிநடத்தவும் செய்வார்.
சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது
“அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 8:28).
கர்த்தர் விசுவாசிகளின் பட்சத்திலிருக்கிறார். கர்த்தரை நேசிப்பவர்களுக்கு அனைத்து நன்மைக்கேதுவாக நடக்கும் படி செய்கிறார். மறுபடியும் பிறந்த விசுவாசிகளை கர்த்தர் நேசிக்கிறார். நமக்காக சில சமயங்களில் நம் எதிரிகளை அவர் சில வேளைகளில் பயன்படுத்தினாலும் முடிவில் அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களைத் தண்டிப்பார். இப்படியாக நம்முடைய எல்லாப் பகைவர்களும் அவருடைய நித்திய தண்டனையில் மறைந்து போவர். ஏனெனில் பரிசுத்தவான்களின் நன்மைக்காகவே கர்த்தர் எல்லாவற்றையும் செய்கிறார்.