(ரோமர் 8:28-30)
“அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப் படுத்தியுமிருக்கிறார்.”
இன்று ரோமர் 8ஆம் அதிகாரத்திலுள்ள மேற்கண்ட வசனத்தைப் பார்ப்போமாக. தேவகுமாரராகிய இயேசு கிறிஸ்துவினில் உள்ளவர்கள் கர்த்தர் முன்குறித்து அழைத்து மகிமைப்படுத்தியதாக இங்கு கூறப்பட்டுள்ளது. இதனைக் குறித்து உரையாடுவோம். மேலும் படிப்படியாக பரிசுத்தமாகும் தத்துவத்தை மக்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்பதையும் பார்ப்போம்.
ரோமர் 8:29 கூறுகிறது “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” இங்கு “தேவனிடத்தில் அன்புகூருகிறவர்கள்” என்பது யாரென நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நன்மைக்கேதுவாக அனைத்தும் ஒன்றாகச் செயலாற்றுகின்றனவா? கர்த்தர் அப்படித் தான் கூறுகிறார். தொடக்கக் காலத்தில் கர்த்தர் மக்களை படைக்கும் முன்னதாக தன்னுடைய நோக்கத்தின் படி தன் மக்களை மாற்ற திட்டமிட்டார். அதன்படி தன்னுடைய ஒரே பேறான இயேசு கிறிஸ்துவினுள் நன்மையானதைச் செய்தார்.
ஏதேன் தோட்டத்தில் நன்மைத் தீமை அறியத்தக்க மரம் இருந்ததை நாம் நினைவு படுத்த வேண்டும். இந்த மரத்தை கர்த்தர் ஏன் அங்கே வைத்தார். நன்மைத் தீமை அறியத்தக்க மரத்தை முதலாவதாக கர்த்தர் படைக்காதிருந்தால் எத்தனை நலமாயிருந்திருக்கும். இந்த விஷயத்தை பற்றி அறிய மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
ஆனால் கர்த்தரிடம் உள்நோக்கமும் திட்டமும் இருந்தது. கர்த்தர் தம்முடைய சாயலாக இருக்கும் படி மனிதனைப் படைத்தார். குறிப்பாகக் கூறினால் கர்த்தரின் நீதியை நாம் பெற்றுக் கொள்ளும் வரை மற்ற படைப்புகளுக்கும் மனிதர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
நன்மைத் தீமை அறியத்தக்க மரத்தை கர்த்தர் ஏன் வைத்தார்?
நன்மைத் தீமை அறியத்தக்க மரத்திலிருந்து கனிகளைச் சாப்பிட வேண்டாமென கர்த்தர் ஏன் ஆதாமிற்கும் ஏவாளிற்கும் கூறினார் என அதனால் தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான காரணம் என்ன? மனிதர்களைக் கர்த்தரின் சட்டத்திற்கு உட்பட்டவர்களாக்கவும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக நம்மை விடுதலைச் செய்து நம்மை அவரின் பிள்ளைகளாக்கவும் இப்படிச் செய்யப்பட்டது. கர்ததருடைய நீதியெல்லாம் வார்த்தையில் மறைந்திருக்கிறது, “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப் பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 8:28), எனக் கர்த்தர் கூறியதால் இயேசு கிறிஸ்துவால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலிருந்து இதற்கான பதிலைக் காண வேண்டும்.
இதனைச் செய்வதற்கு கர்த்தரின் நற்செய்தியை முதலாவதாக நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது கர்த்தர் திட்டமிட்டு செயலாற்றும் அனைத்தும் நன்மையானது என்பதை நாம் புரிந்து கொள்வோம். ஆனால் இதனைப் புரிந்து கொள்வதற்கு நற்செய்தியாகிய நீர் மற்றும ஆவியின் மீதுள்ள விசுவாசத்தினால் நாம்மறுபடியும் பிறக்க வேண்டும். கர்த்தர் நமக்கருளிய நற்செய்தியில் இதற்கான பதிலைக் காண வேண்டும்.
கர்த்தர் நம்மைப் படைத்தமைக்கும் ஏதேன் தோட்டத்தில் நன்மைத் தீமை அறியத்தக்க மரத்தை நட்டதற்கும் ஆதாமையும் ஏவாளையும் அதனை உண்பதற்கு அனுபவித்தமைக்கும் சட்டத்தை நாம் அறிந்து கொள்ளச் செய்தமைக்குமான காரணம் நம்மை அவர்களின் பிள்ளைகளாக்கவே. நம் அனைவரையும் விடுவித்த நம் தேவன் இவற்றையெல்லாம் நம் மீது அனுமதித்தார். இதனால் நமக்கு பாவ மன்னிப்பையும், நித்திய ஜீவனையும் மகிமையையும் பரலோகத்தையும் அவரால் நமக்கு கொடுக்க முடிந்தது. கர்த்தர் மனிதனைப் புழுதியிலிருந்து படைத்தார். மனிதர்கள் பலவீனமுள்ளவர்களாக படைக்கப்பட்டனர். களிமண் பாண்டத்துட்ன் வேதாகமம் நம்மை ஒப்பிடுகிறது. குயவராகிய கர்த்தர் மனிதனை களிமண்ணிலிருந்து படைத்தார். அவர் மனிதனை புழுதியிலிருந்து படைத்து அவன் நாசியில் நீர் மற்றும் ஆவியின் நேசத்தை ஊதினார். கர்த்தர் நமக்கு சத்தியமாகிய நீர் மற்றும் ஆவியைத் தந்தததின் மூலம் நம்மைத் தனது சொந்த பிள்ளைகளாக்கினார்.
களிமண்ணால் செய்யப்பட்ட மண் பாண்டங்கள் இலகுவாக உடைந்து போகும். இப்படியாக கர்த்தர் மனிதனையும் அவன் ஆவியையும் பலவீனமுள்ளதாய் படைத்தார். இதனால் அவனைத் தனது பிள்ளையாக்க முடிந்தது. இந்நோக்கம் இயேசுவால் நிறைவேற்றப்பட்டது. அவர் மனித குலத்தின் எல்லாப் பாவங்களையும் கழுவிவிட்டு கர்த்தருடைய பரிசுத்தத்தால் அவர்களைத் தரிப்பித்தார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் அவர்களை மனுபடியும் பிறக்கச் செய்து அவர்களுக்கு நித்திய ஜீவனையும் கொடுத்தார். இதனால் தான் நம் குறைவற்றவர்களாய் படைப்பதற்கு பதிலாக குறைவுள்ளவர்களாகவும் பலவீனமானவர்களாகவும் தொடக்கத்தில் படைத்தார்.
கர்த்தர் ஏன் மனிதனைத் தொடக்கத்தில் பலவீனமானவனாக படைத்தார்?
நன்மைத் தீமை அறியத்தக்க மரத்தை ஏதேனில் நட்டு ஆதாமையும் ஏவாளையும் அதன் கனிகளை உண்ணக் கூடாது என கர்த்தர் ஏன் கட்டளையிட்டார். இதற்கான காரணத்தை நற்செய்தியாகிய நீர் மற்டூறும் ஆவியைப் புரிந்து கொண்டு விசுவாசிப்பதில் இருக்கிறது. ஆதாமும் ஏவாளும் விழுந்து பாவம் செய்த போது ஸ்திரீயின் வித்து சாத்தானின் தலையை நசுக்கும் என்றும், சாத்தான் அவரின் குதிங்காலை நசுக்குவார் என்றும கர்த்தர் ஏன் கூறினார்? மக்களைத் தன் சொந்தப் பிள்ளைகளாக்கவே இவற்றையெல்லாம் செய்தார். இது அவருடைய ஒரே பேறான குமாரராகிய இயேச கிறிஸ்துவினுள் அவர் செய்த திட்டமாகும்.
அப்படியானால் கர்த்தருடைய திட்டத்தின் படி அழைக்கப்பட்டவர்கள் யார்? தம்முடை பாவங்களையும் மீறுதல்களையும் ஏற்றுக் கொண்டு கர்த்தரின் அன்பையும் இரக்கத்தையும் தேடுபவர்களே அவர்கள். நிபந்தனையற்றத் தேர்வு என்ற தத்துவம். படிப்படியாக பரிசுத்தமாதல் என்ற தத்துமவ் ஆகிய இறையியல் தத்துவங்கள் வலியுறுத்துபவைகள் தவறானவை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நிபந்தனையற்றத் தேர்வு என்ற தத்துவம் தவறானது. ஏனெனில் சிலறை நிபந்தனையின்றி தேர்வு செய்து மற்றவர்களை எக்காரணமும் கூறாமல் அப்படியே விட்டுவிடும் வகையைச் சேர்ந்தவர் நம் கர்த்தரல்ல.
மாறாக நரகம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என அறிக்கை செய்து தம்முடைய பாவங்களை எண்ணி மனம் வருந்துபவர்களே கர்த்தரால் தேர்வு செய்யப்பட்டு அழைக்கப்படுபவர்கள். அவர்கள் மீது கர்த்தர் மனமிரங்குவதுடன் தம்முடைய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் அவர்களை அழைக்கிறார்.
இவ்வுலகில் பிறந்து மீண்டும் கர்த்தரிடமம் சென்ற கணக்கிலடங்காத மக்களில் எக்காரணமும் இல்லாமல் ஒரு நபர் கூட கர்த்தரால் தேர்வு செய்யப் பட்டதுமில்லை, கைவிடப் பட்டதுமில்லை. எக்காரணத்தையும் கூறாமல் கர்த்தர் உங்களை தேர்வு செய்யாவிட்டால் கர்த்தருக்கெதிராக நீங்கள் போராடுவீர்கள். எக்காரணமும் இல்லாமல் உங்களையோ, இன்னொருவரையோ கர்த்தர் பிசாசின் பிள்ளைகளாக்கினார் எனக் கூறினால் அது சரியான கூற்றல்ல. கர்த்தர் இப்படி செய்யவில்லை.
கர்த்தரால் நீங்கள் தேர்ந்தெடுக்கப் படவில்லையெனில் அதற்கான காரணம் நற்செய்தியாகிய நீர் மற்றும ஆவியை நீங்கள் விசுவாசிக்காமல் இருப்பதே. கர்த்தரால் அருளப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீங்கள் விசுவாசியாவிட்டால் கர்த்தர் உங்களைக் கைவிடுவார். ஏனெனில் தேவன் கூறினார் “நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” (மத்தேயு 9:13). துரதிருஷ்டவசமாக இறையியலாளர்கள் நம் கர்த்தரை ஒருதலைப்பட்சமானவர்களாய் மாற்றி விட்டனர்.
கர்த்தரின் சித்தப்படி அழைக்கப்பட்டவர்கள் யார்?
நரகத்திற்கு செல்ல வேண்டிய பாவிகளே கர்த்தரால் அழைக்கப்பட்டவர்கள். அவர்கள் கர்த்தரிடம் வந்து அவரிடம் அறிக்கை செய்கின்றனர். தாம் பலவீனமானவர்களாய் இருப்பதினாலே தாம் மரிக்கும் வரை கர்த்தரின் கட்டளைகளுக்கு கீர்படியாமல் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் தாம் நரகம் செல்ல வேண்டியவர்கள் என அவரிடம் கூறுகின்றனர். கர்த்தர் பாவிகளை அழைத்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் அவர்களை சுத்தப்படுத்தினார். நரகத்திற்கு செல்லுவதைத் தவிர வேறு வழியில்லாதவர்களை அவர் அழைத்து நற்செய்தியாகிய நீர் மற்றும ஆவியின் மூலம் அவர்களின் பாவங்களிலிருந்து விடுதலையாக்கினார்.
நல்லவர்களையும் சட்டத்திற்கு கீழ்ப்படிபவர்களையும் அழைப்பதற்காக கர்த்தர் வரவில்லை. அவருடைய சித்தத்தின் படி வாழ உண்மையாகவே கடினமாக முயற்சிப்பவர்களையே அவர் அழைக்கிறார். ஆனால் அவர்கள் கர்த்தரைச சார்ந்து அவர் மீது விசுவாசமுடையவர்களாயிருந்தாலும் அவர்களுடைய பலவீனமானது அவர்களைப் பாவம் செய்ய வைக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறார். பலவீனமானவர்களையும், குறைபாடுடையவர்களையும் சிறியவர்களையும், நீதிமான்களாக்குவதும் அவர்களை அவரின் பிள்ளைகளாக்குவதும் கர்த்தருடைய நோக்கமாகும். இது கர்த்தருடைய சித்தப்படியான அவருடைய அழைப்பாகும். அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப் பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது
கர்த்தருடைய அழைப்பை நாம் விசவாசிக்க வேண்டும். எக்காரணமுமின்றி இயேசுவை நாம் விசுவாசிக்கிறோம் என்று நாம் கூறக் கூடாது. இத்தகைய விசுவாசம் சரியான விசுவாசமல்ல. சரியான விசுவாசமானது உங்களின் நோக்கப்படியல்லாமல் கர்த்தரின் நோக்கப்படி தேவனை விசவாசிப்பதாகும். நம் எல்லா பலவீனங்களும் கர்த்தருக்கு நன்கு தெரியும். ஒரே தரமாக அவர் நம் பாவங்களை எடுத்துப் போட்டார். இப்படியாக அவர் நம்மை பாவமற்றவர்களாக்கினார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டுமென இது பொருள்படுகிறது. கர்த்தரின் நோக்கமாகிய இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் ஆகியவற்றை நாம நம்புகையில் நம்மால் அவரின் பிள்ளைகளாக முடியும். அவருடைய நோக்கத்தை நாம் ஏற்றுக் கொண்டு அதனை ஒப்புக் கொள்கையில் நம்மை பாவ மற்ற பிள்ளைகளாக்குவது கர்த்தரின் சித்தமாயிருக்கிறது. இந்த மக்களையே கர்த்தர் உண்மையாக நேசிக்கிறார். மேலும் அவர்களை அழைக்கவும் செய்கிறார்.
கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார்?
கர்த்தர் மக்களை இரண்டு பிரிவாக நிறுத்தி வைத்து தமது வலது பக்கத்திலிருப்பவர்களையெல்லாம் தேர்ந்தெடுத்து இயேசுவை விசுவாசித்து நீங்களெல்லாம் பரலோகம் செல்லுங்கள், என்றும் இடது பக்கம் இருப்பவர்களிடம் திரும்பி நீங்களைவரும் நரகம் செல்லுங்கள் என்றும் கூறவதில்லை.
கல்வானிசத்தை நம்புகிறவர்கள் கர்த்தர் எக்காரணமுமின்றி ஒரு குறிப்பிட்ட மக்களை தேர்ந்தெடுத்தார் எனவும் தொடக்கத்திலிருந்தே மற்றவர்களை கைவிட்டனர் எனவும் கூறுகின்றனர். ஆனால் கர்த்தர் அப்படிப்பட்டவரில்லை. அவருயை நோக்கத்தின் படி அழைக்கப்பட்ட அனைவருக்கு எல்லாமும் நல்லபடியாக நடக்கும்படி கர்த்தர் செய்தார். எக்காரணமுமின்றி நிபந்தனையற்று நாம் தேர்வு செய்யப்பட்டோம் என நினைப்பது சரியான கூற்றல்ல.
அப்படியானால் கர்த்தர் நீதியற்ற கர்த்தரா? நிச்சயமாக இல்லை. கர்த்தருக்கு முன்பாகவும், அவருடைய சட்டத்திற்கு முன்பாகவும் அனைவரும் சமமானவர்களே. நியாயத் தீர்ப்பிற்கு முன் அனைவரும் சமமானவர்களே. கர்த்தரிடமிருந்து இரட்சிப்பின் கிருபையை நாம் பெற்றுக் கொண்டோம். அது நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலமாக நம் பாவங்களில் இருந்து இரட்சித்தது. இந்த உண்மையை விசுவாசிப்பதற்கான வாய்ப்புகளும் அனைவருக்கும் சமமாகும். கர்த்தருடைய நோக்கத்தை அறிந்து தம்முடைய பலவீனங்களை அறிந்தவர்களை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க அனுமதிக்கிறார்.
அப்படியானால் உண்மையான தெய்வீக முன்குறித்தல் மற்றும் தேர்வு என்பது என்ன? கர்த்தர் நமக்கு கொடுத்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினுள் உள்ள கர்த்தரின் நோக்கத்தின் படி நம் அழைப்பதற்கானவை அவை. இயேசுவின் மூலமாக கர்த்தர் நம் பாவங்களை எடுத்துப் போட்டதாலும் இந்த உலகில் நாம் பிறந்தமையால் நம்மை அவர் பிள்ளைகளாக்கவும், நற்செய்தியைக் கேட்பதற்கான வாய்ப்பளிக்கவும் இவை ஏற்படுத்தப்பட்டன. கர்த்தர் இவைகளை இயேசு கிறிஸ்துவுக்குள் முன்கூட்டியே திட்டமிட்டார். இது கர்த்தருடைய திட்டமாகும். ஆகவே கர்த்தருடைய சந்நிதானத்திற்கு நாம் வரும் போது நாம் யாக்கோபைப் போலிருக்கிறோமா அல்லது ஏசாவைப் போல் இருக்கிறோமா என முதலில் தீர்மானிக்க வேண்டும்.
கர்த்தர் யாக்கோபை நேசித்தார் எனவும் ஏசாவை அவர் வெறுத்தார் எனவும் வேதாகமம் கூறுகிறது. காயீனையும் ஆபேலையும் குறித்தும் இது கூறுகிறது. கர்த்தர் ஆபேலை நேசித்தார். ஆனால் காயினை வெறுத்தார். கர்த்தர் ஏசாவையும் காயினையும் வெறுத்து யாகோபையும் ஆபேலையும் எக்காரணமுமின்றி நேசித்தாரா? இல்லை. ஏசாவுயம் காயினும் தம்முடைய சொந்த பலத்தை மட்டுமே விசுவாசித்து கர்த்தருடைய கிருபையை கேட்கவேயில்லை. அதே நேரத்தில் யாக்கோபுக்கும் ஆபேலுக்கும் தமது பலவீனங்கள் தெரியும். அவர்கள் கர்த்தரின் கிருபையை வேண்டி அவரின் வார்த்தையை விசுவாசித்தனர்.
இந்த மக்களை உதாரணமாக காட்டி கர்த்தரின் முற்குறித்தலும் தேர்வும் என்னவென்று வேதவசனம் விளக்குகிறது. நாம் எப்பக்கத்தில் இருக்கிறோம்? ஏசா செய்ததைப் போல் நம் சொந்த பலத்தை நம்பினால் கர்த்தரை நம்மால் சந்திக்க முடியுமா? இல்லை, நம்மால் முடியாது. கர்த்தரைநம்மால் சந்திக்க முடிந்த ஒரே வழி கர்த்தரின் கிருபையினால் நிறைவேற்றப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மட்டுமே. கர்த்தருக்கு முன்பாக இதில் எப்பக்கத்தில் நாம் இருக்கிறோம்? கர்த்தரின் சந்நிதானத்தில் ஆசீர்வதிக்கப்பட்ட விரும்பி நிற்பவர்கள் நாம் மட்டுமே. ஆனால் நம் பலவீனத்தினால் அப்படி செய்வதில் நாம் தவறி விடுகிறோம். கர்த்தரின் நோக்கத்தின் படி நாம் வாழ விரும்பினாலும் கர்த்தருக்கு முன்பாக பலவீனமானவர்களாகவும் குறைபாடுடையவர்களாலும் நாம் இருக்கிறோம். ஆகவே அவருடைய கிருபையை மட்டுமே நம்மால் கேட்க முடியும்.
கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென விரும்பினால் யாக்கோபைப் போல் நாம் மாற வேண்டும். ஆபேலிடமிருந்த விசுவாசம் நம்மிடம் இருக்க வேண்டும். நாம் பலவீனமானவர்கள் என்பதையும் குறைபாடுடையவர்கள் என்பதையும், கோழைகள் என்பதையும் கர்த்தருக்கு முன்பாக நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.
சங்கீதம் 145:14 கூறுகிறது, “கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.” உண்மையாகவே கர்த்தரின் சந்நிதானத்திற்கு முன் வணங்க வேண்டும். நம்மிடம் ¨தரியமில்லை. சிறியதொரு ஆதாயத்திற்காக நாம் மாறிவிடுவோம். நாம் கோழைகள். ¨தரியமானவர்களாக நாம் தோன்றலாம். ஆனால் அது நொடிப் பொழுதிற்கு மட்டுமே. நம் வாழ்வை நெருக்கமாகப் பார்த்தால் நாம் எத்தனைக் கோழைகள் என்பதை இலகுவாக கண்டு கொள்ளலாம். நாம் பலமுள்ளவர்களுக்கு அடிபணிகிறோம். நம்மை வற்புறுத்தும் பொய்க்கு உண்மையை விட்டுக் கொடுக்கிறோம். ஆனால் நேசிப்பதற்காக கர்த்தர் இக்கோழைகளை அழைத்தார். இயேசு கிறிஸ்துவினுள் அவர்களுக்கு இரட்சிப்பை அளித்து அவர்களைத் தனது பிள்ளைகளுமாக்கினார்.
கர்த்தரால் நேசிக்கப்படுவதற்கு நாம் எத்தனை பலவீனமானவர்களாயும் பாவம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறோம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சட்டம் திருப்தியடையுமளவிற்கு அதற்கு கீழ்படிய முடியுமாவென கேட்க வேண்டும். சட்டத்தைக் கடைப்பிடிக்க திறமையில்லாதவர்கள் எனவும், சிறந்த வாழ்வை நம்மால் வாழ முடியாதெனவும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
நான் சிறந்தவனாய் இருந்தால் எனக்கு இரட்சகர் தேவை இல்லை. நாம் சிறந்தவர்களாயிருந்தால் கர்த்தரின் உதவியும் ஆசீர்வாதங்களும் நமக்கு ஏன்? நாம் கர்த்தருக்கு முன்னதாக பலவீனமாயிருப்பதால் அவருடைய ஆசீர்வாதங்கள் நமக்குத் தேவைன. அவருடைய இரக்கம் நமக்குத் தேவை. கர்த்தர் நம் மீது வைத்த அன்பு மிகவும் உறுதியானதாய் இருந்ததால் அவர் தன்னுடைய ஒரே பேறான குமாரரை அனுப்பி நம் பாவங்களைக் கழுவிப் போடும் படி அவற்றை சுமக்கச் செய்தார். நமக்கு பதிலாக பாவத்திற்கான தீர்ப்பை கர்த்தர் இயேசுவிற்கு வழங்கினார். ஆகவே நம்மால் பாவத்திலிருந்து விடுதலையாக முடிந்தது. நாம் விசுவாசிக்க வேண்டியது இதைத் தான்.
இந்த விசவாசத்தினனால் மட்டுமே நம்மால் கர்த்தரின் பிள்ளைகளாக முடியும். இந்த கிருபையினால் தான் அவருடைய அன்பினால் நாம் தரிப்பிக்கப் பட்டுள்ளோம். இது நம்முடைய சொந்த முயற்சிகளினால் நம்சொந்த இரட்சிப்பை பெற்றதால் அல்ல.
முன்குறிக்கப்படுதல் தெரிந்து கொள்ளப்படுதல் ஆகிய தத்துவங்களை அநேக கிறிஸ்தவர்கள் போதித்து அதனைப் பின்பற்றினாலும் சில சமயங்களில் இந்த தத்துவங்களால் குழம்பிப் போய் விடுகின்றனர். தாம் கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களா இல்லையா என அடிக்கடி ஆச்சரியப்படுவதே இதற்கான காரணம்.
இந்த இரண்டு தத்துவங்களும் கல்வானிஸ்ட் கொள்கையின் 90 சதவிகித இடத்தைப் பெறுகின்றன. அவர்கள் இயேசுவை விசுவாசித்தாலும் கூட அவர்கள் உண்மையாகவே தெரிந்து கொள்ளப்பட்டவர்களா இல்லையா என்ற கேள்வியே அவர்களை குழப்பத்திற்குள்ளாக்குகிறது. ஆனால் நீங்கள் தெரிந்தெடுக்கப்பட்டீர்களா இல்லையா என்பது முக்கியமானதல்ல. மாறாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து இரட்சிக்கப்படும் படி கர்த்தரின் நீதியைப் பெற்றுக் கொள்வதே உங்களுக்கு மிகவும முக்கியமானதாகும். விசுவாசத்தினால் இந்த கர்த்தரின் நீதியைப் பெற்றுக் கொண்டவர்களே தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்.
முன்பு இறையியலில் டாக்டர் பட்டம் பெற்ற ஒருவர் இருந்தார். அவர் மரபியலைச் சார்ந்த இறையியலில் நிபுணர் எனப் பெயர் பெற்றார். முன் குறிக்கப்படுதல் மற்றும் தெய்வீகத் தோவு ஆகிய தத்துவங்களை உள்ளடக்கிய கல்வானிச போதனைகளுக்கு இவர் அதிக மதிப்பளித்தார்.
ஓருநாள் இத்தலைப்புகளில் அவர் விரிவுரையாற்றிக் கொண்டிருக்கும் போது ஒரு மாணவர் கேட்டார். நல்லது நீங்கள் கர்ததரால் தெரிந்து கொள்ளப்பட்டவரா? கர்த்தர் யாரைத் தெரிந்தெடுத்துள்ளார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?
அந்த இறையியலாளர் பதிலளித்தார். அதனை யாரால் அறிந்து கொள்ள முடியும். கர்த்தருக்கு முன்னால் நாம் நிற்கும் போது மட்டுந்தான் இதனை நாம்அறிந்து கொள்வோம்.
ஆகவே அந்த மாணவர் திரும்பவும் கேட்டார். அப்படியானால் கர்த்தருக்கு முன்னால் நீங்கள் நிற்கும போது நீங்கள் தெரிந்தெடுக்கப்படவில்லை என்றால் என்ன செய்வீர்கள்.
பேராசியர் பதில் கூறினார், கர்த்தர் ஏற்கனவே முடிவு செய்திருக்கும் போது என்னால் என்ன செய்ய முடியும்? அதனால் தான் கர்த்தருக்கு முன்னால் நிற்கும் போது மட்டுமே உங்களுக்குத் தெரியும் எனக் கூறினேன்.
ஆகவே மாணவர்கள் எண்ணினர் அவர் மிகவும் தாழ்மையான மனிதர். தான் தேர்ந்தெடுக்கப்பட்டாரா இல்லையா என்பது இத்தகைய பெரிய மனிதருக்கு கூட தெரியாது. ஆகவே அவன்-அவள் தெரிந்தெடுக்கப்பட்டவரா என அறிந்து கொள்ள முடியாதது இயற்கையே.
ஆனால் கர்த்தரின் நீதியில் மறைந்திருக்கும் சத்தியம் இப்போது தெளிவாக வெளிப்பட்டது. சில காரியங்களை கர்த்தர் மனிதனிடமிருந்து மறைத்து வைத்தார். ஆனால் சமயம் வரும் போது அவற்றை வெளிப்படுத்தினார். ஒரு நற்செய்தியாளரால் தான் இரட்சிக்கப்பட்டோமா, தெரிந்து கொள்ளப்பட்டோமா இல்லையா எனத் தெரியாமல் எப்படி நற்செய்தியைப் பிரசங்கிக்க முடியும்? கர்த்தரால் அழைக்கப்பட்டவர்களே கர்த்தருடைய நீதியை விசுவாசிக்கிறார்கள்.
ரோமர் 8:29 கூறுகிறது, “தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்.” பிதாவாகிய கர்த்தர் தன் ஒரே பேறான குமாரராகிய இயேசு கிறிஸ்துவைப் போல் நம்மை மாற்ற முன்குறித்தார். ஆகவே அநேக சகோதரர்களில் அவரே முதல் பிறந்தவராயிருப்பார். இங்கு இயேசுவானவர் முதல் கனி என அழைக்கப்படுகிறார். இயேசுவை நாம் விசுவாசித்து அவர் நமக்கு வழங்கிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்தால் நாம் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டு கர்த்தரின் பிள்ளைகளாவோம். அப்படியானால் இயேசு நமக்கு என்ன முறையாவார்? அவர் நமது மூத்த சகோதரராவார். அவர் கர்த்தருடைய தலைப் பிள்ளை, நாம் அவரின் இளைய சகோதரர்களும் சகோதரிகளும் ஆவோம்.
முன்பொரு காலத்தில் நானொரு ஜெப வீட்டில் வசித்து வந்த போது ஒரு முதிர்ந்த நற்செய்தியாளர் என்னைச் சந்தித்தார். அவர் சீனாவில் இருக்கும் போது இயேசுவை விசுவாசிக்கத் தொடங்கி பிறகு கொரியாவிற்கு வந்து விட்டார். அவர் ஒரு நாள் ஜெபிக்கும் போது அது என் காதில் விழுந்தது. இப்படியாக அவர் ஜெபித்தார். “சகோதரர் இயேசுவே, பிதாவாகிய கர்த்தாவே, என்னை இரட்சித்தமைக்காக உமக்கு நன்றிகள். சகோதரர் இயேசுவே தயவு செய்து எனக்கு உதவும்!” இயேசு நம் சகோதரர்!
நம்மைப் பற்றிய எல்லா விவரங்களும் கர்த்தருக்கு தெரியுமா என நாம் கேட்கலாம். ஆம் அவருக்கு நம்மைப் பற்றி எல்லாம் தெரியும் என்பதே இதற்கான பதில். பிதாவாகிய கர்த்தருக்கு நம்மைப் பற்றிய எல்லாம் தெரியும். இவ்வுலகம் படைக்கப்படுவதற்கு முன்னமேயே தம்முடைய ஒரே பேறான குமாரரின் மூலம் நம்மை நம் பாவங்களிலிருந்து இரட்சிக்க அவர் திட்டமிட்டார். இது கர்த்தருடைய திட்டமாகும். நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்க அவருடைய குமாரராகிய இயேசு இவ்வுலகிற்கு வந்து ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் அறையப்பட்டார். கர்த்தர் இதனை ஏற்கனவே திட்டமிட்டிருந்தார்.
இவ்வுலகைப் படைப்பதற்கு முன்னால் முத்தலைவர்கள் கூட்டத்தை கர்த்தர் கூட்டினார் என நாம் கூறலாம். திரியேகக் கர்த்தர் பிதா, குமாரர், பரிசுத்த ஆவியானவர் ஆகியோர் அவருடைய நீதியை விசுவாசிப்போரை விடுதலைச் செய்ய திட்டமிட்டனர். மக்களைப் படைத்து அவர்களைத் தமது பிள்ளைகளாக்கி அவருடைய நிறைவான ராஜ்யத்தில் ஒன்றாக வாழ அவர் திட்டமிட்டார்.
பிதா, குமாரர் மற்றும் பரிசுத்த ஆவியானவர் எல்லோரும் இத்திட்டத்தை ஒத்துக் கொண்டனர். பிறகு மனிதனை எப்படி உருவாக்குவது எனவும், மனித குலத்தை எவ்வாறு தனது பிள்ளைகளாக்குவது என்பதற்கும் அவர்கள் யோசிக்கையில் கர்த்தர் தன் குமாரராகிய இயேசுவை உலகிற்கு அனுப்பி அவரை ஞானஸ்நானம் பெறச் செய்து சிலுவையில் மரிக்கச் செய்ய திட்டமிட்டார். ஆகவே அவர்கள் அவரின் குமாரரின் சாயலுக்கு மாற முடியும்.
நம்மை ஏன் கர்த்தர் படைத்தார்? நாம் அவரின் பிள்ளைகளாவதற்காகப் படைத்தார். இயேசுவானவர் கர்த்தரின் முதற்பேறான குமாரரா? ஆம் அவர் முதல் குமாரரே மேலும் நாமும் கூட கர்த்தரின் பிள்ளைகளாகியதால் நாமும் கூட அவரின் சகோதரர்களே.
இயேசுவானவர் 33 வருடங்கள் இப்பூமியில் வாழும் போது மனிதர்களுடைய பலவீனங்களையும் குறைபாடுகளையும் அவர் அனுபவித்தார். இதனால் தான் நாம் ஜெபிக்கும் போது இவ்வாறு கூறுகிறோம். இயேசுவே நான் பலவீனமானவான். நான் இப்படியே தானிருக்கிறேன். தயவு செய்து எனக்கு உதவி என்னை பாதுகாத்தருளும். உம்முடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளும்படி மக்களின் இருதயங்களை மிருதுவாக்கும். அவர்களை கண்காணித்து கிருபையை அருளி உதவி செய்யும். தேவன் நம் ஜெபங்களை கேட்டு அதற்கு பதிலளிக்கிறார். இயேசுவினிடம் ஜெபிப்பதும் கர்த்தரிடம் ஜெபிப்பதும் ஒன்றே.
நம்மை ஏன் கர்த்தர் படைத்தார்? நம்மைத் தன் பிள்ளைகளாக்குவதற்காகவே அவர் படைத்தார். நம்மைப் பற்றி கர்த்தருக்கு எல்லாம் தெரியும். அவர் நம்மை இப்பூமியில் பிறக்கச் செய்து இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் மூலம் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார். இதற்கான காரணம் இவ்வுலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே அவரின் சொந்த குமாரர்களாயும் குமாரத்திகளாயும் தத்தெடுத்துக் கொள்வதற்காக அவர் நம்மைத் தெரிந்து கொண்டார். ஆகவே நம்முடைய வாழ்வும் மரணமும் மட்டுமின்றி நம்முடைய ஒவ்வொரு அசைவுகளையும் தெரிந்து வைத்திருக்கிறார். நாம் எப்போது பிறந்தோம், யாருக்கு பிறந்தோம், எப்போது திருமணம் நடந்தது, எப்போது நமக்கு பிள்ளைகள் பிறந்தது. நம் வாழ்க்கையின் முடிவில் என்னவாகும் என்பதெல்லாம் அவரிற்குத் தெரியும். நம்முடைய வாழ்வைப் பற்றி எல்லாம் தெரிந்த கர்த்தர் இயேசு கிறிஸ்துவிற்குள் நாம் விசுவாசித்து கர்த்தரின் பிள்ளைகளாவதற்காக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை கொடுத்தார்.
கர்த்தருக்கு நம்மை முன்கூட்டியே தெரிவதால் நம்மை முன் குறிக்கவும் செய்தார். ரோமர் 8:30 கூறுகிறது, “எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.” இந்த வசனத்தைப் புரிந்து கொண்டு இதனை விசவாசிப்பது எத்தனை முக்கியமானது என்பதை இதற்கு மேல் வலியுறுத்த முடியாது.
படிப்படியாக பரிசுத்தமாகும் தத்துவத்திற்கு ஆதரவாக மேற்கண்ட வசனத்தை அநேக மக்கள் உபயோகிக்கின்றனர். இந்த வசனத்தின் அடிப்படையில் அதாவது கர்த்தர் நம்மை முன் குறித்து அழைத்து நீதிமானாக்கி மகிமைப்படுத்தினதை அவர்கள் இப்படி பொருள் கூறுகின்றனர். நம்மிருதயங்களில் பாவங்களிருந்தாலும் கூட நம்மைப் பாவமற்றவர்களாக கர்த்தர் கருதுகிறார். மேலும், ஒரு குறிப்பிட்ட காலத்தில் நாம் பரிசுத்தமாக்கப்பட்டு மகிமைப்படுத்தப்படுவோம். இது நாம் ஒவ்வொரு காலகட்டமாக பரிசுத்தமாவதைப் போன்றது.
இயேசு கிறிஸ்துவினுள் எல்லாப் பாவிகளையும் அழைக்க கர்த்தர் அவர்களை முன் குறிக்கவில்லையா? அவர் நம் அனைவரையும் அழைத்தார். ஆயினும் சில மக்கள் அவர் அழைப்பிற்கு பதிலளிப்பதில்லை. அவர்கள் ஏசாவையும், காயீனையும் போன்றவர்கள். அவர்கள் தான் நரகத்திற்கு அனுப்பப்பட்டவர்கள்.
கர்த்தரின் கிருபையிலிருத்தல்
கர்த்தர் தன்னுடைய ஒரே பேறான குமாராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நம்மை அழைக்கத் திட்டமிட்டார். நம்மை நம் பாவங்களிலிருந்து நீர் மற்றும் இரத்தத்தில் கழுவி தன் சொந்த குமாரர்களாக தத்தெடுக்க அவர் முன் குறித்தார். கர்த்தர் அழைத்தப் பிறகும் அவரிடம் செல்லாத மக்கள் அவரின் இரட்சிப்பிற்கு வெளியிலேயே இருக்கின்றனர். அத்தகைய மக்கள் அவர் கிருபையிலிருந்து அகற்றப்பட்டு, நரகம் செல்ல தயாராகவிருக்கின்றனர். அவர்கள் கூறுகின்றனர், “தேவனே நான் இப்படி பலவீனமாயிருந்தாலும் என்னைப் போன்ற ஒருவனை நீர் ஏற்றுக் கொள்வீரா?”
கர்த்தர் கூறுகிறார் “ஆம் ஏற்றுக் கொள்வேன்.”
“உண்மையாகவா? நான் இத்தனைப் பலவீனமானவனாயிருந்தாலும் நீர் என்னை ஏற்றுக் கொள்வீரா?”
“ஆம் உன்னை நான் ஏற்றுக் கொள்வேன்.”
“கர்த்தாவே உமக்களிப்பதற்கு என்னிடம் சிறப்பான எதுவுமில்லை இப்போதிலிருந்துநான் நல்லவனாய் இருப்பேன் என என்னால் உறுதி கூற முடியாது.”
“ஆயினும் கூட உன்னை நான் ஏற்றுக் கொள்வேன்.”
“நான் நல்லவன் ஆவேனா என நிச்சயமில்லை, அப்படி செய்வதற்கு என்னிடம் திறமையுமில்லை.”
“ஆயினும் கூட உன்னை நான் ஏற்றுக் கொள்வேன்.”
“என்னைக் குறித்து உமக்குத் தெரியாததால் இப்படி கூறுகிறீர். என்னிடம் நீர் ஏமாறப் போகிறீர்.”
நாமெப்படிப்பட்டவர்கள் என்பது நமக்குத் தெரியும் போது, அவன்/அவள் நம்மை விசுவாசிப்பதாக கூறும் போது, எங்காவது ஒழிந்து கொண்டால் நலமாக இருக்குமென எண்ணி வெட்கமடைவதில்லையா? நாம் ஏன் ஒழிந்து கொள்ள வேண்டும்? நம்மால் நல்லவர்களாக முடியாது என்பதாலும் இதுவரை செய்தவைகளை தொடர்ந்தும் நம்மால் செய்ய முடியாது என்பதாலும் நாம் ஒழிந்து கொள்ள விரும்புகிறோம்.
இதனால் தான் நாம் தொடர்ந்து கேட்கிறோம், “நான் இத்தனை பலவீனமானவனாயிருந்தாலும் என்னை நீர் ஏற்றுக் கொள்வீரா? உண்மையாகவே நீர் என்னை ஏற்றுக்கொள்வீரா? உம்மை விசுவாசிக்க அனுமதிக்கப்படுவேனா? என்னைப் போன்ற ஒருவனால் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ள முடியுமா? எதிர்காலத்தில் என்னால் நல்லவனாயிருக்க முடியாவிட்டாலும் கூட என்னைப் போன்ற ஒருவனால் நீதிமானாக முடியுமா?” ஆனால் நம் தேவனுக்கு காட்டு ஓலிவ மரத்தை நல்ல ஒலிவமரமாக மாற்றும் வல்லமை இருக்கிறது.
நாம் ஒலிவ மரங்களாயிருந்தோம். அதன் சுபாவம் காட்டுத் தனமானதாகும். ஆனால் இயேசு நமக்கருளிய நற்செய்தியின் மூலமாக நல்ல ஒலிவ மரங்களாக மாறினோம். பாவம் செய்வதை தவிர்க்க முடியாத நம்மை அவர் அழைத்தார். நாம் சிறிதளவு பலவீனமடையவர்களாயிருந்கும் போது அவர் நம்மை அழைத்தாரா? நாம் திறனோம் இல்லாத போதும் அழைத்தவர். நாம் மோசமான குறைபாடுடையவர்களாயிருந்தாலும் பலவீனமானவர்களாயிருந்தாலும் இயேசு கிறிஸ்துவிற்குள் அவர் நம்மை அழைத்தார். பாவிகளாயிருந்த நம்மை அவர் அழைத்தார். நம்மை அழைத்தப் பிறகு அவர் என்ன செய்தார்? நித்திய ஜீவனை நமக்கு அளிக்கும் படி நம்முடைய எல்லாப் பாவங்களையும் சுமந்து கொண்டு அவருடைய நீதியை நமக்குத் தந்தார்.
இவற்றையெல்லாம் அவர் எப்படிச் செய்தார்? மத்தேயு மூன்றாம் அதிகாரத்தில் கர்த்தரால் மனித குலத்திற்காக நியமிக்கப்பட்ட எல்நீதிகளையும் நிறைவேற்றுவதற்காக இயேசு உலகிற்கு வந்து ஞானஸ்நானம் பெற்றார் எனக் கூறப்பட்டுள்ளது. இயேசு யோவானால் ஞானஸ்நானம் செய்யப்பட்ட போது மனிதர்களின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டு அவர்களின் எல்லாப் பாவங்களையும் சுமந்தவாறு சிலுவையில் மரித்தார். அதன் பிறகு உலகின் பாவங்களிலிருந்து அவர்களை இரட்சிக்க மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார். அவர் நமக்கு புதிய வாழ்வைத் தந்தார். இப்படிச்செய்ததினால் அவர் நம்மை நீதிமான்களாக்கி நம் எல்லாப் பாவங்களையும் கழுவினார். இயேசு நம்மை அழைத்தார். நீர் மற்றும் இரத்தத்தினால் நம் பாவங்களைக் கழுவினார். கர்த்தரின் நீதியை நமக்குத் தந்தார். நம்மை பாவமற்றவர்களாக்கினார். நீதிமான்களாக்கிய நம்மை கர்த்தரின் பிள்ளைகளாக மாற்றி நம்மை மகிமைப்படுத்தவும் செய்தார்.
பரலோகத்திற்கு செல்லவும் கர்த்தரின் பிள்ளைகளாக நித்தியமாக வாழவும் இயேசு நம்மை மகிமைப்படுத்தினார். இதனை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் பாவியாயிருந்தாலும் இயேசுவை நீங்கள் விசுவாசித்தால் காலம் செல்லுகையில் படிப்படியாக பரிசுத்தமாவீர்கள் எனவும், நீங்கள் மரிக்கும் போது நிறைவானதொரு நபராக கர்த்தருக்கு முன் நிற்பீர்களெனவும் மதக் கொள்கைகள் போதிக்கின்றன. இது சத்தியத்திற்கு எதிரானது. இது உண்மையான விசுவாசமில்லை. அத்தகைய விசுவாசம் பரிசுத்தமாகும் தத்துவத்திற்கு சரியாக இருக்கலாம், ஆனால் சத்தியத்திற்கு சரியாக இருக்காது.
நம் பாவங்களிலிருந்து தேவன் நம்மை இரட்சித்தார், மேலும் கர்த்தர் நம்மை முற்குறித்து அழைத்து நீர் மற்றும் இரத்தத்தினால் ஒரே தரமாக நம் பாவங்களைக் கழுவி பரிசுத்தமான நம்மை தன் பிள்ளைகளாக்கி நம்மை ஆசீர்வதித்ததினால் கர்த்தருடைய ராஜ்யத்திற்கு மகிமையுடனே நம்மால் நுழைய முடியும். இதுவே உண்மையாகும். இப்படியாகத் தான் அவன் கூறினான். இயேசு கிறிஸ்துவின் எல்லா ஆசீர்வாதங்களையும் ஒரே வசனத்தில் அவன் கூறியுள்ளான். படிப்படியாக பரிசுத்தமாவதற்கு ஏழு நிலைகளைக் கடந்த பிறகு நாம் நிறைவானவர்களாவோம் என இது கூறவில்லை.
இயேசுவை நாம் விசுவாசித்தப் பிறகோ அல்லது நாம் முடியவர்களாகும் போது பரிசுத்தமாவோம் என்பதாலோ கர்த்தர் நம்மை அழைப்பார் என ரோமர் 8:30 கூறவில்லை. பரிசுத்தமாக்கும் ஏணிப்படியில் ஒவ்வொரு படியாக ஏறி இறுதியாக முற்றிலுமாக பரிசுத்தமாகும் நிலைக்கு படிப்படியாக ஏறுவோம் எனவும் இது கூறவில்லை. இயேசு கிறிஸ்துவை நாம் அறிந்து இயேசு கிறிஸ்து நம்மை அழைத்த போது நீரினாலும் இரத்தத்தினாலும் அவர் ஒரே தரமாக நம் பாவங்களையெல்லாம் மன்னித்தார். இந்த சத்தியத்தின் நற்செய்தியின் மூலம் கர்த்தரிடம் வருகையில் அவர் தமது கரங்களால் நம்மைத் தழுவுவார்.
சில மக்கள் கூறுவர், “என்னுடைய பாவங்களை கூட எனக்கு முன்பு தெரியாது. ஆனால் இந்த பிரசங்கத்தை கேட்ட பிறகு அவற்றை உணரத் தொடங்கினேன். பழைய காலத்தில் நான் செய்த ஒன்றிரண்டு பாவங்களை நினைவு கூறுகிறேன். மேலும் எதிர்காலத்தில் நான் தொடர்ந்து பாவம் செய்து கொண்டேயிருப்பேன். ஆகவே கர்த்தரை என்னால் விசுவாசிக்க முடியுமென எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அது சரியல்ல.. அதற்கு பதிலாக நாம் இப்படியாக எண்ண வேண்டும். ஆ அது சரியானது. நான் பாவம் செய்து கொண்டிருந்தாலும் அதனைப் பற்றி எனக்குத் தெரியாது. கர்த்தரின் வார்த்தையெல்லாம் சரியானதே. அவருடைய வார்த்தையை நான் விசுவாசிக்க வேண்டும். ஆனால் அதன்படி என்னால் வாழ முடியவில்லை. நான் மிகப் பெரிய பாவி நரகம் செல்ல வேண்டியவன். இதற்காகத் தான் இயேசு வந்தார்.”
இயேசுவை விசுவாசித்து பாவ மன்னிப்பைப் பெற்றதால் நாம் பாவமற்றவர்களானோம். நாம் பரிசுத்தமாக்கப்பட்டு கர்த்தரின் பிள்ளைகளாக்கப் பட்டோம். நாம் கர்த்தரின் பிள்ளைகளானதால் நம்மால் பரலோகத்திற்கு பிரவேசித்து மகிமைப்பட முடிந்தது. இது கர்த்தரின் நீதியும் உண்மையுமாகும்.
கர்த்தர் நம்மை முன் குறித்து அழைத்து நீதிமான்களாக்கி மகிமைப்படுத்தினார். படிப்படியாக பரிசுத்தமாகும் தத்துவம் சரியானது என நீங்கள் எண்ணி இவ்வாறு கூறலாம். நான் சிறிது சிறிதாக மாறி பாவமற்றவன் ஆவேன். ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்த அந்நொடியே நீங்கள் நீதிமானாக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டீர்கள். ஒவ்வொரு நிலையாக உங்களிருதயம் மாறுவதில்லை. ஒரே தரமாக உங்களிருதயம் பாவமற்றதாகும். மேலும் கர்த்தருடைய வார்த்தையையும் அவரின் ஆலயத்தையும் நீங்கள் விசுவாசிக்கும் போது படிப்படியாக உங்கள் விசுவாசம் வளரும்.
மற்றவர்களுக்கு நாம் போதிக்கும் ஒரு நிலை வரும் வரை கர்த்தரின் வார்த்தையால் நாம் போஷிக்கப்படுவதால் நம் விசுவாசம் படிப்படியாக வளருகிறது. ஆனால் நாம் முபமையாகி பாவமற்றவர்களாகும் போது கர்த்தரின் பிள்ளைகாவோம். என்ற கூற்றானது வேதாகமத்தின் அடிப்படையில் அமைந்ததல்ல. ஒரே தரமாக நாம் பரிசுத்தமாக்கப்பட்டு பாவமற்றவர்களாகிறோம்.
கிறிஸ்து இயேசுவினுள் கர்த்தரின் முன் குறித்தலின் படி அவர் நம்மை அழைத்தாரா, ஆம் அவர் அழைத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவிற்குள் அழைத்து நம்மை நீதிமான்களாகவும் பாவமற்றவர்களாகவும் மாற்றினார். இயேசு கிறிஸ்துவின் மூலமாக கர்த்தர் நம்மை நீதிமான்களாக்கி பாவ மற்றவர்களுமாக்கினார். அத்துடனே அவர் நம்மைத் தனது பிள்ளைகளாக்கி அவருடைய ராஜ்யத்திற்கு செல்லும் படி மகிமைப்படுத்தினார்.
கர்த்தரின் எல்லா நீதியையும் நிறைவேற்றிய இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை விசுவாசித்ததின் மூலம் ஒரே தரமாக நாம் நீதிமான்களானோம். கர்த்தரின் அழைப்பிற்கு கீழ்ப்படிவதுடன் நாம் குறைபாடுடையவர்களாயிருந்தாலும் நம்மை பாவமற்றவர்களாகவும் கர்த்தரின் பிள்ளைகளாவும் மாற்றி அவரின் ராஜ்யத்தின் மக்களாக்கி இயேசு நம் எல்லாப் பாவங்களையும் கழுவினார் என்பதையும் விசுவாசித்ததால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டோம்.
இதனால் தான் பரிசுத்தமாகும் தத்துவம் தவறானதாகும். இக்கூற்றிற்கு பொருள் ஏதும் இல்லை. வேதாகமம் நமக்கு தெளிவாகக் கூறுகிறது, “எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.” விசுவாசம் படிப்படியாக வளருகிறது. ஆனால் பாவ மன்னிப்பு கர்த்தரின் பிள்ளையாதல், பரலோகத்திற்குள் நுழைதல் இவையெல்லாம் ஒரே தரமாக நிகழுகின்றன. இதனை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதினால் நம்மால் கர்த்தரின் பிள்ளைகளாக முடிகிறது. நீர் மற்றும் ஆவியின் கிருபையின் மூலமாக நம் விலையேதுமில்லாத வாழ்க்கையை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் கர்த்தர் இரட்சித்தார். நம்முடைய இரட்சிப்புக்காக கர்த்தருக்கு நாம் எதையும் செய்தோமா? நீதிமான்களாவதற்கு நாம் எதையும் செய்தோமா? நாம் எதனையும் திட்டமிடவில்லை. அவன்/அவள் பிறப்பதற்கு முன் இயேசுவை விசுவாசிக்கும் படி யாரும் முடிவு செய்யவில்லை. அவனின்/அவளின் தாயின் கருவிலிருக்கும் போது இயேசுவை விசுவாசிக்கும் படி அவன்/அவள் தீர்மானிக்கிறாரா?
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கித்தவர்களிடமிருந்து உண்மையை நாம் கேட்டோம். இது தான் உண்மையென அறிந்து கொண்டோம். நமக்குள் இவ்வாறு எண்ணினோம். இதனை விசுவாசிப்பதைத் தவிர வேறு வழியில்லை. என்னைப் போன்ற பாவம் நிறைந்த மனிதன் இதனை விசுவாசிக்க வேண்டும். அந்நேரம் முதல் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கத் தொடங்கியதால் பாவ மன்னிப்பை பெற்று கர்த்தரின் பிள்ளைகளாகினோம்.
நீதிமான்கள் மட்டுமே கர்த்தரின் பிள்ளைகளாக முடியும். பரலோக ராஜ்யத்தின் நித்தியமான செல்வங்களாலும் மரியாதைகளினாலும் கர்த்தர் அவர்களை நித்தியமாக மகிமையாக்குவார். மகிமைப் படுத்தப்படுவது என்பது இது தான். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களுக்கு கர்த்தர் இந்த ஆசீர்வாதங்களை வழங்குகிறார்.
தேவனைத் துதியுங்கள்!