• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 9 : ரோமர் (ரோமர் புத்தகத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 8-10] தவறான இறையியல் தத்துவங்கள் (ரோமர் 8:29-30)

2021.04.22 26
(ரோமர் 8:29-30)
“தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப் படுத்தியுமிருக்கிறார்.”
 
 
இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக மக்களை இரட்சிக்கும் படி கர்த்தர் முன் குறித்தார் என இவ்வசனங்கள் கூறுகின்றன. அப்படி செய்வதற்காக கிறிஸ்துவுக்குள் கர்த்தர் அவர்களை அழைத்தார். அழைக்கப்பட்டவர்களை நீதிமான்களுமாக்கினார். நீதிமான்களாக்கியவர்களை மகிமைப்படுத்தினார். வேத வசனங்களின் அடிப்படைகளெல்லாம் இயேசு கிறிஸ்துவினுள் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இப்படித் தான் ரோமர் புத்தகம் நம்மிடம் கூறுகிறது. ஆயினும் அநேக இறையியலாளர்களும் கள்ளப் போதகர்களும் இந்த தெளிவான இலகுவான சத்தியத்தை வெறும் இறையியல் கொள்கையாக்கினார். இதில் அவர்கள் தம் சொந்த சிந்தனையையும் சுய விருப்பங்களையும் திணித்து மிகுந்த அக்கறையுடன் இதனைப் பரப்பினர். இந்த சத்தியத்தை எத்தனைப்பேர் தவறாகப் புரிந்து கொண்டனர் என்பதை நாம் சோதிப்போமாக.
இந்த வசனங்களிலிருந்து சில இறையியலாளர்கள் ஐந்து இறையியல் கொள்கைகயை உருவாக்கினர், 1) முன்னறிவியல், 2) முன்குறித்தல், 3) வல்லமையாய் அழைத்தல், 4) நீதிமானாக்குதல் மற்றும் 5) மகிமைப்படுத்துதல். இந்த ஐந்து தத்துவங்களும் இரட்சிப்பின் தங்க சங்கிலி என அழைக்கபபடுகின்றன. இது விசுவாசிகள் மத்தியிலும் அவிசுவாசிகள் மத்தியிலும் ஏதோ உண்மைப் போல் பரப்பப்படுகிறது. ஆனால் அவர்களின் கூற்றுகளில் அநேகத் தவறுகளிருக்கின்றன.
ஐந்து தத்துவங்களும் கர்த்தர் செய்தவற்றையே கூறுகின்றன. அதாவது கர்த்தருக்கு ஏற்கனவே தெரியும் ஏற்கனவே தெரிந்தெடுத்தார். ஏற்கனவே அழைத்துள்ளார். நீதிமானாக்கினார். மேலும் சிலரை மகிமைப்படுத்தினார். ஆனால் முன்குறித்தல் என்றத் தத்துவம் அவர்களின் பிறப்பிற்கு முன்பே கர்த்தர் அவர்களை இரட்சிப்பதற்காக தேர்ந்தெடுத்தார் என வலியுறுத்துகிறார். ஆனால் கர்த்தர் தன் அன்மை அவர்கள் மீது பொழிந்து அவர்களைத் தமது பிள்ளைகளாக்கினார் என்பது வேதாகமம் கூறும் முன்குறித்தலாகும். இப்படியாக தேர்ந்தெடுத்த அவர்களை கர்த்தர் அழைத்து நீதிமான்களாக்கி மகிமைப்படுத்தினார்.
 
 
முன்குறித்தல், தெரிந்துகொள்ளுதல், ஆகிய இறையியல் தத்துவங்களில் உள்ள தவறுகள்
 
கிறிஸ்தவ கொள்கைகளில் ஜான் கால்வினால் அறிவிக்கப்பட்ட கல்வானிசத்தில் ஐம்பெரு கொள்கைகளை நாம் காணலாம். அவற்றில் முன்குறித்தல் மற்றும் தெரிந்து கொள்ளுதல் ஆகிய தத்துவங்கள் இருக்கின்றன. கீழ்கண்ட விளக்கங்களில் இந்த தத்துவங்கள் வேதாகமத்தின் படி எப்படி தவறானவை என்பதையும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது எப்படி சரியானது என்பதையும் காட்டுகிறேன்.
இறையியலாளரான ஜான் கல்வின் என்பவரால் தெரிந்தெடுக்கப்படுதல் என்ற தத்துவம் உருவாகிற்று. கல்வினின் காலத்திற்கு முன்பே இயேசு கிறிஸ்துவுக்குள் தெரிந்து கொள்ளுவதைக் குறித்து கர்த்தர் கூறியுள்ளார். ஆனால் கல்வினின் தெரிந்தெடுக்கப்டுதல் என்ற தத்துவம் அநேகரைக் குழப்பத்திற்குள்ளாக்கியது. இந்த தவறான தத்துவம் கர்த்தரின் அன்பை எல்லைக்குள்ளாக்கி நீதியில்லாததாகவும், பேதமையையும் கற்பிக்கிறது. அடிப்படையில் பார்த்தால் கர்த்தரின் அன்பிற்கு எல்லையோ அல்லது அளவோ கிடையாது. ஆகவே கர்த்தரின் அன்பை எல்லைக்குட்படுத்தும் முன்குறித்தல் என்ற தத்துவம் தவறாகத் தான் இருக்க வேண்டும். ஆனாலும் கூட இந்நாட்களில் அநேக கிறிஸ்தவர்கள் இந்த தத்துவத்தை இயற்கையானதாகவும் சரியானதாகவும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அநேகருடைய மனங்களை இந்த முன்குறித்தல் என்ற தத்துவம் ஆளுகை செய்யலாயிற்று. இத்தத்துவம் தத்துவங்களை விரும்புவோருக்கு ஏற்றதாகி அவர்கள் மனதை ஆளுகைச் செய்து அதனை அவர்கள் நம்பும்படிச் செய்தது. படைத்தலுக்கு முன்பே கர்த்தர் சிலரை நிபந்தனையற்ற தேர்ந்தெடுத்தார் எனவும், இத்தேர்வில் மற்றவர்களை விட்டுவிட்டார் எனவும் இத்தத்துவம் வலியுறுத்துகிறது. இத்தத்துவம் உண்மையானதாய் இருந்தால் தேர்ந்தெடுக்கப்படாத ஆத்துமாக்களுக்கு கர்த்தரை எதிர்த்துப் போராட வாய்ப்பு கிடைத்திருக்கும். மேலும் அவரை நீதியில்லாத ஒருதலைபட்சமான கர்த்தராகவும் இது காட்டியிருக்கும்.
இந்தத் தத்துவங்களினால் இன்றைய கிறிஸ்தவ தத்துவங்கள் பெருங்குழப்பத்திற்குள்ளானது. இதன் பலனாக அநேக கிறிஸ்தவர்கள் துன்பப்படுகின்றனர். நான் தெரிந்தெடுக்கப்பட்டேனா? படைத்தலுக்கு முன்பே கர்த்தர் என்னைக் கைவிட்டிருந்தால் இயேசுவை விசுவாசிப்பதில் என்ன பயன்? என் ஆச்சரியப்படுகின்றனர். கர்த்தரால் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டோமா இல்லையா என்பதில் இவர்கள் அதிக ஆர்வ முள்ளவர்களாகி விடுகின்றனர். இதனால் தான் முன்குறித்தல் என்றத் தத்துவம் இயேசுவின் விசுவாசிகளினுள் இத்தனையாய் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கர்த்தரால் கொடுக்கப்பட்ட உண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விட இலை அவர்களின் தெரிந்து கொள்ளப்படுதலைக் குறித்த ஆவலில் அவர்கள் அழுத்தி வைத்திருக்கின்றன்.
இத்தத்துவம் கிறிஸ்தவத்தின் உண்மையை இன்னொரு உலக மதமாக மாற்றிவிட்டது. கிறிஸ்தவ மதத்திலிருந்து இத்தகைய தவறான தத்துவங்களை கர்த்தரின் நீதிக்கு சாட்சியாகும் நற்செய்தியால் மாற்ற வேண்டிய சமய்ம் இப்போது வந்துவிட்டது. முதலாவதாக முன்குறித்தல் என்ற தத்துவம் சரியானதா இல்லையா என நீங்களே முதலில் காணுங்கள். அதன்பிறகு நற்செய்தியாகிய நீர் மற்றும ஆவியை விசுவாசித்து உங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலைப் பெறுங்கள். கர்த்தரால் உண்மையாக தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் கர்த்தரின் நீதியை அறிந்து அதனை விசுவாசிப்பவர்களாவர்.
 
 
சத்தியத்தால் கூறப்பட்ட முன்குறித்தல் மற்றும் தெரிந்து கொள்ளப்படுதல்
 
எபேசியர் 1:3-5 கூறுகிறது, “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும் படி முன் குறித்திருக்கிறார்.” இந்த எபேசியரின் வசனங்களில் கூறப்பட்ட தெரிந்தெடுத்தல் என்பது, “அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே” (எபேசியர் 1:4) என்பதாகும். பாவத்திலிருந்து இரட்சிப்பிற்கான கிருபையிலிருந்து இயேசு கிறிஸ்து ஒரு நபரைக் கூட விட்டுவிடவில்லை எனவும் இது நமக்கு கூறுகிறது.
இந்த வசனத்திலிருந்து முன்குறித்தல் என்ற தத்துவத்தில் எது தவறானது என நாம் காண வேண்டும். இந்த தத்துவத்தின் அடிப்படைத் தவறு கர்த்தரின் தெரிந்தெடுத்தலுக்கு மாறாக இது கூறப்படுகிறது என்பதாகும். அதாவது யார் இரட்சிக்கப்படுவது யார் இரட்சிக்கப்படக் கூடாது என்பது கர்த்தரின் வார்த்தையின் படியல்லாமல் அவருடைய நிபந்தனையற்ற தீர்மானத்தின் படி செயல்படுகிறது என கூறுகிறது.
இத்தகைய நிபந்தனையற்ற முன்குறித்தல் மற்றும் தெரிந்து கொள்ளப்படுதல் ஆகியவற்றின் மீது நம் விசுவாசத்தை வைத்தால் நம்முடைய நிலையில்லாத் தன்மையாலும் கவலையாலும் குழம்பியிருக்கும் போது இயேசுவை எப்படி விசுவாசிக்க முடியும். கல்வானிசம் தவறான கொள்கையைப் போதிக்கிறது. இது நிதியான கர்த்தரை அநீதியின் கர்த்தராகவும் ஒருதலை பட்சமானவருமாய் செய்கிறது. கர்த்தரின் முன் குறித்தலிலிருந்து இயேசு கிறிஸ்துவினுள் என்ற நிபந்தனையை கல்வின் நீக்கிவிட்டதால் இத்தகையதொரு தவறினை அவர் செய்தார். இத்தவறு அநேகரை பயங்கரமாய் குழப்பி அநேகரைத் தவறுதலாக வழி நடத்தியது. ஆனால் வேத வசனம் தெளிவாக நம்மிடம் கூறுகிறது, “கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே” (எபேசியர் 1:4).
கல்வினிசத்தைப் பின்பற்றுபவர்கள் கூறுவதைப் போல் சிலருக்கு தாம் கர்த்தராக மாற சிலரை நிபந்தனையற்றுத்து தேர்ந்தெடுத்து மற்றவர்களை எக்காரணமும் இன்றி விட்டுவிட்டது, குழப்பமானதாயில்லையா? அநேக மக்களின் மனதில் கர்த்தர் அநீதியாளராயும் ஒருதலைப் பட்சமானவருமானார். ஆனால் ரோமர் 3:29 இல் வேதாகமம் நம்மிடம் கூறுகிறது, “தேவன் யூதருக்கு மாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான்.” கர்த்தர் எல்லோருக்கும் கர்த்தர், அவர் அனைவருக்கும் இரட்சகருமாவார்.
இயேசு அனைவருக்குமான இரட்சகராவார். யோவானிடமிருந்து அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமும் அவரின் சிலுவை இரத்தத்தின் மூலமும் மனிதர்களின் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்த்து எல்லோருக்கும் விடுதலையை வழங்கினார் (மத்தேயு 3:15). தன் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் கிறிஸ்துவானவர் சுமந்து அப்பாவங்களை சிலுவைக்கு எடுத்துச் சென்று (யோவான் 1:29) நம்முடைய இடத்திலிருந்து இப்பாவங்களுக்காக தீர்க்கப்பட்டார் (யோவான் 19). மேலும் யோவான் 3:16 நம்மிடம் கூறுகிறது, “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” ஒவ்வொருவருடைய பாவங்களையும் இயேசு தனது ஞானஸ்நானத்தால் பெற்றுக் கொண்டு சிலுவையில் மரித்து கர்த்தருடைய நீதியினுள் எல்லா மனிதர்களுக்குமாக மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார்.
கர்த்தர் யாரை அழைத்தார் என்று புரிந்து கொள்வது அவரின் வார்த்தையின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். அப்படி செய்ய ரோமர் 9:10-11 இலுள்ள வசனங்களை நோக்குவேமாக, “இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது, பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்து கொள்ளுதலின் படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு.”
“அழைக்கிறவராலே” என்பதில் கர்த்தரின் நோக்கம் இருக்கிறது என இங்கு கூறப்பட்டுள்ளது. அப்படியானால் கர்த்தர் யாரை இயேசு கிறிஸ்துவிற்குள் தெரிந்தெடுத்தார்? கர்த்தரால் அழைக்கப்பட்டவர்கள் பாவிகள் என்பது தெளிவு. ஏசா, யாக்கோபு ஆகியோரில் கர்த்தர் யாரை நேசித்தார்? யாக்கோபை அவர் நேசித்தார். சுப நீதியினால் நிறைந்த ஏசா போன்ற மக்களை கர்த்தர் நேசிக்கவில்லை. ஆனால் யாக்கோபை போன்ற பாவிகளை அழைத்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் மறுபடியும் பிறக்க அவர்களை அனுமதித்தார். இயேசு கிறிஸ்துவின் மூலமாக யாக்கோபு போன்ற பாவிகளை தேர்ந்தெடுத்து நேசித்து அழைக்கும் கர்த்தரின் நீதியின் சித்தம் இதுவேயாகும்.
ஆதாம் எல்லோருக்கும் மூதாதையனாயிருப்பதினால் பாவியின் பிள்ளைகளாக அனைவரும் பிறந்தனர். சங்கீதம் 51இல் தன் தாயின் கர்ப்பத்தில் பாவத்தினால் கர்ப்பந்தரித்ததாக தாவீது கூறுகிறான். மக்கள் பாவிகளாய் பிறப்பதினாலே அவர்கள் பாவம் செய்கிறார்கள். அவர்கள் எப்பிரிவை சார்ந்தவர்கள் என்பது பொருட்டல்ல. அவர்கள் தம் வாழ்வு முழுவதும் அவர்களின் முடிவு வரையிலும் அவர்கள் பாவக் கனிகளை சுமக்கின்றனர். மாற்கு 7:21-23 நம்மிடம் கூறுவதைப் போல் ஆப்பிள் மரங்கள் ஆப்பிள் பழங்களைக் கொடுக்கின்றன, பேரிக்காய் மரம் பேரிக்காய் பழங்களைக் கொடுக்கின்றன, அதுபோல மனிதர்கள் தம் வாழ்வு முழுவதும் பாவத்தில் வாழுகின்றனர், ஏனெனில் அவர்கள் பாவத்திற்கு பிறந்தவர்கள்.
உங்கள் விருப்பத்திற்கு மாறாக பாவம் செய்த அனுபவம் உங்களிடம் இருக்கும். இதற்கான காரணம் தொடக்கம் முதலே நீங்கள் பாவிகளாயிருக்கின்றனர். மக்கள் தீய சிந்தனைகளும், பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் உள்ளடங்கிய மற்றப் பாவங்களுடனும் பிறந்தனர். இதனால் தான் ஒவ்வொருவரும் தன் வாழ்வை பாவத்தில் கழிக்கின்றனர். பாவம் சுதந்தரிக்கப்பட்டது. நம்முடைய மூதாதையர்கள் நம் மீது பாவத்தை வைத்ததுடன் நாம் பிறந்தமையால் பாவத்துடன் வாழ அடிப்படை விருப்பம் நம்மிடமிருக்கிறது. இதனால் தான் இயேசுவை நமது இரட்சகராக விசுவாசிக்க வேண்டும். மேலும் கர்த்தரின் நீதியையும் விசுவாசிக்க வேண்டும்.
அப்படியானால் கர்த்தரின் முதல் படைப்பாகிய ஆதாம், தவறிப்போனது என இது பொருள்படுகிறதா? இல்லை. மனித குலத்தைத் தனது பிள்ளைகளாக்க கர்த்தர் தீர்மானித்தார். ஆகவே முதல் மனிதனைப் பாவத்திற்குள் விழ அவர் அனுமதித்தார். இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தினாலும் அவரின் இரத்தத்தினாலும் நம்மை இரட்சித்து தன் பிள்ளைகளாக்க கர்த்தர் நம்மை பாவிகளாயிருக்க அனுமதித்தார். ஆகவே எவ்வித விதிவிலக்குமின்றி பாவிகளாய் நாம் பிறந்தோம் என்பதை நாம் அறிய வேண்டும்.
ஆயினும் படைத்தலுக்கு முன்பே இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்ப கர்த்தர் தீர்மானித்தார். ஏனெனில் மனிதர்கள் பாவிகளாவர் என்பது அவரிற்கு தெரியும். அதன் பிறகு யோவானிடமிருந்து இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்ற போது உலகின் எல்லாப் பாவங்களையும் அவர் இயேசுவின் மீது சுமத்தினார். அதன் பிறகு அவர் அவரை சிலுவையில் மரிக்கச் செய்தார். வேறு வார்த்தைகளில் கூறினால், பாவ விடுதலையை யாரைல்லாம் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் கர்த்தரின் பிள்ளைகளாகும் படியான ஆசீர்வாதத்தை நமக்களிக்க அவர் தீர்மானித்தார். மனிதர்களைப் படைத்தமைக்கான கர்த்தரின் திட்டமும் அவரின் நோக்கமும் இதுவாகும்.
சில மனிதர்கள் புரிந்து கொள்ளாமல் கூறுவார்கள். யாக்கோபையும் ஏசாவையும் பாருங்கள். கர்த்தரால் ஒருவன் தேர்ந்தெடுக்கப்பட்டு மற்றவன் கைவிடப்படவில்லையா? ஆனால் இயேசு கிறிஸ்துவிற்கு வெளியே இரட்சிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியவர்களை கர்த்தர் நிபந்தனையின்றி தேர்ந்தெடுக்கவில்லை. இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஒவ்வொருவரையும் தனது பிள்ளைகளாக்க அவர் அனைவரையும் தேர்ந்தெடுத்தார். பழைய ஏற்பாட்டை மட்டுமே நாம் நோக்கினால் கர்த்தர் ஒரேஒரு பக்கத்தை மட்டுமே தேர்ந்தெடுத்ததைப் போல் தோன்றும். ஆனால் புதிய ஏற்பாட்டையும் பார்க்கும் போது இயேசு கிறிஸ்துவின் மூலமாக யாக்கோபைப் போன்ற எல்லாப் பாவிகளையும் அவர் தேர்ந்தெடுத்ததை நாம் தவறின்றி காணலாம். கர்த்தர் தம் வார்த்தை மூலம் அழைத்ததைக் குறித்து தெளிவாக புரிந்து கொண்டு அதனை விசுவாசிக்க வேண்டும்.
ஏசா மற்றும் யாக்கோபில் யாரைக் கர்த்தர் அழைத்து நேசித்தார்? யாக்கோபைத் தவிர வேறு யாரையும் அழைக்கவில்லை. அவன் குறைபாடுடையவனாயும், ஏமாற்றுபவனாயும் ஆநீதனாயும் இருந்தான். அவனை நேசித்து கர்த்தரின் நீதியில் அவனை இரட்சிக்கும் அழைத்தார். இயேசு கிறிஸ்துவின் மூலமாக கர்த்தரின் நீதிக்குள் பிதாவாகிய கர்த்தர் உங்களை நேசித்தார் என்ற உண்மையை நீங்களும் கூட விசுவாசிக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவினுளுள்ள நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது கர்த்தரின் நீதி என்பதையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.
அப்படியானால் யாக்கோபைப் போன்ற மக்களை கர்த்தர் ஏன் படைத்தார்? நீதியில்லாத மக்களின் பிரதிநிதியாக யாக்கோபு இருந்தமையால் கர்த்தர் அவனை தெரிந்தெடுத்தார். யாக்கோபு கர்த்தரால் அழைக்கப்பட்டது அவரின் சித்தப்படியானதாகும். “நாம் இயேசு கிறிஸ்துவிற்குள் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.” கர்த்தரின் வார்த்தைக்கேற்ற அழைப்பு இதுவாகும். இந்த அழைப்பு “தேவனுடைய தெரிந்து கொள்ளுதலின் படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும் படிக்கு” என்ற சத்திய வார்த்தையுடன் ஒத்துப் போகிறது.
இயேசு கிறிஸ்துவின் மூலம் பாவிகளை இரட்சிப்பதற்கான வழி அவருடைய அன்பின் மூலமாக கர்த்தரின் நீதியை முற்றிலும் நிறைவேற்றுவதாகும். பாவிகளிகளுக்கான கர்த்தரின் நீதியால் ஏற்படுத்தப்பட்ட இரட்சிப்பின் சட்டம் இதுவாகும். கர்த்தர் தன்னுடைய நீதியால் அவர்களைத் தரிப்பிக்க யாக்கோபு போன்ற மக்களை அழைத்தார். அவர்களிடம் சுய நீதி எதுவும் இருக்கவில்லை. அவர்கள் இயேசுவின் மூலம் அவரின் அழைப்பிற்கு பதிலளித்தார்கள்.
சுய நீதியுடையவர்களையும், சரியானவர்களாய் காணப்படுகிறவர்களையும் கர்த்தர் அழைத்தாரா? அல்லது சுய நீதி எதுவுமில்லாத முற்றிலும் குறைபாடுடையவர்களை அவர் அழைத்தாரா? யாக்கோபை போன்ற மக்களையே கர்த்தர் அழைத்தார். தம்முடைய பாவங்களுக்காக நரகம் செல்ல வேண்டிய பாவிகளை கர்த்தர் அழைத்து அவர்களை இரட்சித்தார். உங்கள் பிறப்பிலிருந்தே நீங்களும் கூட பாவிகளென்பதையும் கர்த்தரின் மகிமையைப் பெற தகுதியில்லாதவர்களானீர்கள் என்பதையும், நரகம் செல்ல வேண்டியவர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். வேறு வார்த்தையில் கூறினால் உங்களைக் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்துவின் மூலமாக கர்த்தர் எல்லாப் பாவிகளையும் அழைத்து தன் நீதியினால் அவர்களை இரட்சித்தார்.
அவருடைய நீதியை விசுவாசித்து நீதிமான்களாக்கப் பட்டவர்கள் கர்த்தரின் மக்களாவர். எல்லாப் பாவிகளையும் அழைத்து இயேசுவிற்குள் அவர்களை விடுதலைச் செய்ய கர்த்தர் முன் குறித்தார். அவர் முன்குறித்ததை நிறைவேற்றினார். கர்த்தர் கூறும் இயேசு கிறிஸ்துவுக்குள்ளான முன்குறித்தலும் உண்மைத் தேர்தலும் இதுவாகும். கர்த்தரின் இந்த உண்மை தேர்ந்தெடுத்தலை புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த உண்மையாயை தெரிந்து கொள்ளப்படுதலின் பின்னணியை பழைய ஏற்பாடு விளக்குவதைப் போன்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
 
 
கர்த்தரின் தெரிந்து கொள்ளப்படுதலுக்கான பழைய ஏற்பாட்டு பின்னனி
 
யாக்கோபு மற்றும் ஏசா ஆகியோர் அவர்களின் தாயின் கருப்பைக்குள் இருந்த போது நடந்த கதையை ஆதியாகமம் 25:21-26 கூறுகிறது. அவர்கள் இருவரில் யாக்கோபை கர்த்தர் தொந்து கொண்டார். இந்த வசனத்தை கல்வின் தனது தெரிந்தெடுத்தல் தத்துவத்திற்கு அடிப்படையாக்கினார். ஆனால் அவருடைய புரிந்து கொள்ளுதல் கர்த்தரின் சித்தத்திலிருந்து விலகியதை நாம் காணலாம். ஏசாவை விட கர்த்தர் ஏன் யாக்கோபை அதிகம் நேசித்தார் என்பதற்கு காரணம் இருக்கிறது. ஏசா போன்ற மக்கள் கர்த்தரை விசுவாசித்து அவரில் சார்ந்திருப்பதற்கு பதிலாக தம்முடைய சொந்த பலத்தை நம்பியிருந்தனர் என்பதும், யாக்கோபைப் போன்றவர்கள் கர்த்தரின் நீதியை விசுவாசித்து அதனைச் சார்ந்திருந்தனர் என்பதும் இந்த காரணமாகும். ஏசாவை விட கர்த்தர் யாக்கோபை அதிகம் நேசித்தார் என்ற இங்கு கூறப்டுவது யாக்கோபைப் போன்ற மக்களை கர்த்தர் நேசித்தார் எனவும் பொருள்படும். இதனால்தான் நாம் “கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே” (எபேசியர் 1:4) என்பதற்கு பொருந்துகிறோம்.
இயேசு இல்லாமலும் கர்த்தரின் நீதிக்கு வெளியில் இருப்பதுமான நிபந்தனையற்ற தேர்வு என்பது தவறான கிறிஸ்தவ கொள்கையாகும். இது தலைவிதி போன்றவற்றைக் கொண்டிருக்கும் தெய்வங்களை கிறிஸ்தவத்திற்குள் எடுத்து வந்து அதனை நம்புவதற்கு ஒத்ததாகும். எல்லாப் பாவிகளையும் இயேசுவிறிகுள் கர்த்தர் தெரிந்தெடுத்தார் என்பதை இந்த உண்மை நமக்கு கூறுகிறது. இயேசு கிறிஸ்துவிற்குள் எல்லாப் பாவிகளையும் இரட்சிக்க கர்த்தர் அவர்களைத் தேர்ந்தெடுத்திருப்பது நீதியான தேர்ந்தெடுத்தலாகும். யாக்கோபைக் கர்த்தர் நிபந்தனையற்று தேர்ந்தெடுத்து ஏசாவை எவ்வித காரணமுமின்றி கைவிட்டிருந்தால் அவர் ஒருதலை பட்சமான கர்த்தராயிருந்திருப்பார். ஆனால் அவர் இயேசு கிறிஸ்துவிற்குள் நம்மை அழைத்தார். தர்ன அழைத்தவர்களை இரட்சிப்பதற்காக கர்த்தர் இயேசுவை பூமிக்கு அனுப்பினார். அவர் தன்னுடைய ஞானஸ்நானத்தினால் உலகின் பாவங்களை எல்லாம் தன் மீது ஏற்றுக் கொண்டு கர்த்தரின் நீதியை நிறைவேற்றினார். பிறகு அவர் தனது விலையேறப்பட்ட இரத்தத்தை சிலுவையில் சிந்தினார். இப்படியாகத் தான் கிறிஸ்து இயேசுவின் மூலமாக கர்த்தர் நம்மைத் தேர்ந்தெடுத்து நேசித்தார்.
நம் மனித சிந்தனைகளைத் துர்ர எறிந்து விட்டு வேத வசனங்களின் வார்த்தையை விசுவாசிக்க வேண்டும். புத்தகங்களின் விசுவாசத்தை விட்டு ஆவிக்குரிய விசுவாசத்தை விசுவாசிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால் இயேசு கிறிஸ்துவின் மூலமாக பிதாவாகிய கர்த்தர் நம் அனைவரையும் தேர்ந்தெடுத்தார். ஆனால் கர்த்தரின் தேர்வை கல்வின் எங்கனம் பார்க்கிறார்? கர்த்தரின் நீதியை அறிந்து அதனை விசுவாசிக்கும் போது உண்மையான விசுவாசம் காணப்படுகிறது. மனித சிந்தனைகளை உண்மையென விசுவாசிப்பது கர்த்தரல்லாத சிலையை ஆராதிப்பதற்கு ஒத்தது.
இயேசுவின் மூலமாக கர்த்தரின் நீதியை விசுவாசிப்பது முன் குறித்தல் என்ற தவறான தத்துவத்தை விசுவாசிப்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எழுதப்பட்ட கர்த்தரின் வார்த்தையின் படி இயேசுவை அறிந்து நாம் விசுவாசிக்கவில்லை எனில் புத்தியில்லாத மிருகத்திற்கும் நமக்கும் எந்த வேறுபாடுகளும் இருக்காது. இயேசு கிறிஸ்துவினுள் கர்த்தரின் நீதியால் முத்திரையிடப்பட்டு கர்த்தரின் பிள்ளைகளாக நாம் தேர்ந்தெடுக்கப்பட்டோம். வேத வசனங்களில் வார்த்தையின் அடிப்படையில் நம் விசுவாசங்களை நாம் சோதிக்க வேண்டும்.
கல்வினிசம் பேசும் ஐந்து தத்துவங்களில் ஒன்று எல்லையுள்ள பாவ நிவாரணம் என்பதாகும். இவ்வுலகிலுள்ள அநேக மக்களில் சிலர் கர்த்தரின் இரட்சிப்பிலிருந்து தவிர்க்கப்பட்டனர் என இத்தத்துவம் வலியுறுத்துகிறது. ஆனால் கர்த்தரின் நேசமும் அவரின் நீதியும் இத்தனை ஒருதலைப்பட்சமாக இருக்காது. வேத வசனம் இவ்வாறு கூறுகிறது, “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்” (1 தீமோத்தேயு 2:4). இரட்சிப்பன் ஆசீர்வாதமானது வரையறையுள்ளதாயும் அது சிலருக்கு மட்டும் அளிக்கப்பட்டு மற்றவர்களுக்கு அளிக்கப்படாவிட்டால் இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தை விட்டு விடும் மக்கள் அநேகராயிருப்பார்கள். இத்தகைய தவறான தத்துவங்களை விசுவாசிபப்வர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்குத் திரும்பி தம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வர். இது இயேசு கிறிஸ்துவை தமது இரட்சகராக அறிந்து விசுவாசிப்பதால் சாத்தியமாகும். இயேசு கிறிஸ்துவின் மூலமாக கர்த்தர் தன் நீதியினால் அனைவரையும் இரட்சித்தார்.
கர்த்தர் சிலரை நேசித்து மற்றவர்களை வெறுத்தால் மக்கள் கர்த்தரிடமிருந்து திரும்பிப் போய் விடுவர். கர்த்தர் இங்கே இப்போது நிற்கிறார் என எண்ணுவோம். அவர் தமக்கு வலது பக்கம் இருப்பவர்களை இரட்சித்து இடது பக்கம் இருப்பவர்களை நரகத்திற்கும் அனுப்ப எக்ககாரணமும் இல்லாமல் முடிவு செய்தால் அது நியாயமாகுமா? இடது பக்கம் நிற்பவர்களுக்கு கர்த்தரை எதிர்த்து நிற்பதைத் தவிர வேறு வழியில்லை. கர்த்தர் இப்படியானவராயிருந்தால் அவரை உண்மைக் கர்த்தராக யார் கருதி ஊழியம் செய்வர்? எந்த ஒரு காரணமும் இல்லாமல் கர்த்தரால் யார் கருதி ஊழியம் செய்வர்? எந்த ஒரு காரணமம் இல்லாமல் கர்த்தரால் வெறுக்கப்பட்டவர்கள் அவருக்கு எதிராக போராடி முடிவில் அவரையும் வெறுக்கத் தொடங்குவர். இவ்வுலகிலுள்ள கொடிய குற்றவாளிகளிடமும் கூட நல்லொழுக்கமும் நீதியும் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படியானால் நம்மைப் படைத்த கர்த்தரால் எப்படி அநீதராயிருக்க முடியும்? மேலும் யார் இத்தகைய கர்த்தரை விசுவாசிப்பார்?
இயேசு கிறிஸ்துவினுள் காணப்படும் கர்த்தரின் நீதியால் எல்லாப் பாவிகளையும் இரட்சிக்க நம் பிதா முடிவு செய்தார். ஆகவே எல்லையுள்ள பாவ நிவர்த்தி எனப்படும் கல்வினி தத்துவத்திற்கும் கர்த்தரின் நீதிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஆயினும் இத்தகைய தவறான கொள்கையினால் அநேக மக்கள் நாசமாகிப் போகிறார்கள். அவர்களுடைய தவறான புரிந்து கொள்ளுதலினால் கர்த்தரை தவறாக விசுவாசித்து அவரிலிருந்து விலகிப் போகின்றனர்.
 
 
உண்மையல்லாத திரைப்படம்
 
சில வருடங்களுக்கு முன் ஸ்டீஃபன் கிங் என்பவரின் “நிலைப்பாடு” என்ற புதினம் தொலைகாட்சி நிகழ்ச்சியாக தயாரிக்கப்பட்டது. இது முழு உலகிலும் வெற்றிகரமாக ஓடியது. இப்புதினத்தின் சம்பவங்கள் இப்படி செல்லுகின்றன. 1991ஆம் வருடத்தில் அமெரிக்காவை ஒருகொடிய நோய் தாக்குகிறது. இது சில ஆயிரம் மக்களை மட்டுமே உயிருடன் விட்டுச் செல்கிறது. அவர் அந்நோயை எதிர்க்கும் சக்தியைப் பெற்றிருந்தனர். பிழைத்திருந்த மக்களில் கர்த்தரை உண்மையாக ஆராதித்தவர்கள் பவுல்டர், கொலராடேஸில் சந்தித்தனர். அதே நேரத்தில் கருப்பு மனிதனை ஆராதித்தவ்கள் நெவாடாவின் லாஸ்வேகாஸில் சந்தித்தனர். இந்த இரண்டு குழுவினரும் தம் கூட்டங்களைச் சேர்ந்தனர். இது ஒருவரை ஒருவர் அழிக்கும் அளவிற்கு வளர்ந்தது.
பிழைத்திருந்தவர்களில் ஸ்டூவர்ட் என்ற வாலிபன் ஒருவன் மீண்டும் மீண்டும் ஒரு கனவைக் கண்டான். அதில் உலகத்தின் முடிவு வந்தது. மேலும் அபிகாயில் என்ற மூதாட்டி அவன் கனவில் தோன்றி கர்த்தர் உன்னை ஏற்கனவே தேர்ந்தெடுத்துவிட்டார் எனவும், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்லுமாறும் கூறினார். இத்திரைப்படத்தைப் பொருத்தவரை இவ்வாலிபன் கர்த்தரையோ இயேசுவையே விசுவாசிக்கா விட்டாலும் படைப்பிற்கு முன்னரே இவ்வாலிபன் முன் குறிக்கப்பட்டதால் கர்த்தர் இந்த வாலிபனை இரட்சித்தார்.
அப்படியானால் இயேசுவை விசுவாசிக்காதவர்களைக் கூட நிபந்தனையேதுமின்றி கர்த்தர் இரட்சிப்பாரா? அப்படி இல்லை. கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பவர்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் படி இயேசு கிறிஸ்துவினுள் கர்த்தர் முன் குறித்தார்.
கல்வினின் தத்துவமாகிய முன் குறித்தல் மற்றும் தெரிந்து கொள்ளப்படுதலின் அடிப்படையில் இப்படத்தின் கதை அமைந்திருக்கிறது. இந்தப் படமானது வெறும் கதை தான். இது ஒரு இறையியலாளரின் தத்துவத்தின் ஒரு பகுதியை மட்டுமே கூறுகிறது. சில மனிதர்களை ஏனோதானோ என்று கர்த்தர் தேர்ந்தெடுத்து அவர்களை நரகத்திற்கும் மற்றவர்களை இரட்சிப்பிற்கும் அவரால் எப்படி அனுப்ப முடியும்? கர்த்தர் நீதிமானாய் இருப்பதினால் ஒவ்வொருவரையும் அவர் இயேசு கிறிஸ்துவிற்குள் முன் குறித்து தெரிந்து கொண்டார். அவருடைய நீதியின் இரட்சிப்பு கிட்டாதவர்கள் யாருமில்லை. இயேசு கிறிஸ்து இல்லாமல் முன் குறித்தலும் தெரிந்து கொள்ளப்படுதலும் பொருளற்றது என்பதுடன் வேதாகமத்தின் படியானதுமல்ல. கர்த்தர் சிலரைத் தேர்ந்தெடுத்து மற்றவர்களை அவர் கைவிட்டார் என அநேக இறையியலாளர்கள் வலியுறுத்துவது துரதிருஷ்டவசமானது.
கர்த்தர் பிரபஞ்சத்¨த்ப படைப்பதற்கு முன்னறே இயேசு கிறிஸ்துவின் மூலமாக எல்லாப் பாவிகளையும் இரட்சித்து தன் நீதியினால் அவர்களைத் தனது பிள்ளைகளாக்க திட்டமிட்டார். வேறு வார்த்தைகளில் கூறினால் இயேசுவின் நற்செய்தியின் மூலம் எல்லாப் பாவிகளையும் அவர் தேர்ந்தெடுத்தார். அப்படியானால் நாம் எப்படி விசுவாசிப்பது?
மலைகளினுள்ளே அமர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கும் புத்த மத பிக்குகள் கர்த்தரின் தெரிந்து கொள்ளப்படுதலில் இருந்து விடுவிக்கப்பட்டனர் என்பதை விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்து இல்லாமல் கர்த்தரின் முன் குறித்தலும் தெரிந்து கொள்ளப்படுதலும் இருந்தால் அவருடைய வார்த்தையை விரசங்கிக்கவோ, விசுவாசிக்கவோ யாரும் தேவையில்லை. இயேசு கிறிஸ்து இல்லாமல் சில மக்கள் இரட்சிக்கப்பட முன் குறிக்கப்பட்டும் மற்றவர்கள் விட்டுவிடப்பட்டும் இருந்தால் பாவிகளுக்கு இயேசுவை விசுவாசிக்க வேண்டிய அவசியமேயில்லை. முடிவில், இயேசு தனது ஞானஸ்நானத்தினாலும் தனது சிலுவையின் இரத்ததினாலும், நம்பாவங்களிலிருந்து நம்மை இரட்சித்தமையும் பொருளற்றதாகிவிடும். ஆனால் இயேசு கிறிஸ்துவினுள் காணப்படும் கர்த்தரின் நீதியின் மூலமாக இயேசுவை விசுவாசிக்காத புத்த பிக்குகளுக்கு கூட கர்த்தர் இரட்சிப்பை அருளிச் செய்தார். ஆனால் அவர்கள் மனம் திரும்பி கர்த்தரை நோக்கி அவர்களின் மனங்களைத் திருப்ப வேண்டும்.
இயேசுவை விசுவாசித்து வாழும் அநேக மக்கள் இப்பூமியில் இருக்கிறார்கள். நாம் அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தால் ஒரு குழுவினர் ஏசாவைப் போலிருப்பர். மற்ற குழுவினர் யாக்கோவைப் போலிருப்பர். யாக்கோவைப் போன்ற மக்கள் தம்மை நரகம் செல்ல வேண்டிய பாவிகளென்பதைஅறிவதால் இயேசு அருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டனர். மற்ற குழுவினர் ஏசாவைப் போன்ற மக்களால் ஆனது. அவர்கள் இயேசுவின் மீதுள்ள தமது விசுவாசத்தில் தமது முயற்சிகளையும் சேர்ப்பதால் பரலோக வாசலை அடைய முயற்சிக்கின்றனர்.
நீங்கள் யாரைப் போலிருக்கிறீர்கள்? யாக்கோபைப் போலவா ஏசாவை போலவா? கர்த்தரின் நீதியை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அல்லது தவறான முன் குறிக்கப்படுதல் என்ற தத்துவத்தை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இவ்விருவகையான விசுவாசங்களில் எதனை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் என்பதில் நீங்கள் நரகம் செல்வீர்களா அல்லது மோட்சம் செல்வீர்களா என்பது இருக்கிறது. இந்ததவறான தத்துவங்களை நீங்கள் புறம்பேத் தள்ளிவிட வேண்டும். கர்த்தரின் நீதியால் அறிவிக்கபபட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலம் கர்த்தருடன் சமாதானம் செய்யும் பொருட்டு கர்த்தரின் நீதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த விசுவாசம் நமது பாவங்களிலிருந்து நமக்கு விடுதலையையும் நித்திய ஜீவனையும அளிக்கிறது.