• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 9 : ரோமர் (ரோமர் புத்தகத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 8-12] எங்களை எதிர்த்து நிற்க துனிபவன் யார்? (ரோமர் 8:31-34)

2021.04.22 27
(ரோமர் 8:31-34)
“இவைகளைக் குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.”
 
 
ரோமர் 8:31-34இல் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து கூறுவதின் மூலமும் அதன் இறுதி கருத்தை அறிவிப்பதின் மூலமும் விசுவாசிகளின் மீதான கிறிஸ்துவின் அசைக்க முடியாத நம்பிக்கையைக் குறித்து பவுல் சாட்சி கூறுகிறான். விசுவாசத்தின் உச்சியில் பெரிதான இரட்சிப்பின் சந்தோஷம் உருவாயிற்று என இவ்வசனம் அறிவிக்கிறது.
ரோமர் 8:31இல் பவுல் கூறினான், “இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” பவுலைப் போன்று நாமும் கூட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது காலச் செல்லச் செல்ல நமக்குள்ளிருந்து ஒளி வீசுவதை நம்மால் அறிய முடிகிறது, நம்முடைய பலவீனங்கள் அதிகமாக வெளிப்படும் போது அது மிகப் பெரிய இரட்சிப்பின் நற்செய்தியாகி விடுகிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு அதிகமதிகமாய் நாம் ஊழியம் செய்யும் போது அதிகமான மகிழ்ச்சியினாலும் உணர்த்துதலாலும் நிரம்புகிறோம்.
“என் சுவிசேஷத்தின்படியே” (2 தீமோத்தேயு 2:8) என பவுல் தான் விசுவாசித்த நற்செய்தியை அழைத்தான். இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்ததின் மீதான விசுவாசத்திற்கு பவுல் சாட்சி பகன்றான்.
“என் சுவிசேஷத்தின்படியே” என்று பவுல் பிரசங்கித்தது மதவாத மக்கள் விசுவாசித்துக் கொண்டிருக்கும சிலுவையின் நற்செய்தியைக் குறிப்பிடவில்லை. ஆனால் மனிதர்களின் அனைத்துப் பாவங்களையும் ஒரே தரமாக எடுத்துப் போட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியான ஆசீர்வாதத்தை அறிவிக்கிறது.
இந்த நற்செய்தியானது பவுலை தைரியமுள்ளவனாக்கியது. பாவ மன்னிப்பை அவன் பெற்றவனாகையால் கர்த்தரின் நீதி அவனிருதயத்தை நிறைத்தமையினாலே பரிசுத்த ஆவியானவரும் கூட அவனிருதயத்தை நிறைத்தார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்குத் தன் வாழ்நாள் முழுவதும் சாட்சி கூறுவதற்காக அவன் தன்னை அர்ப்பணித்தான். மனித குலத்தின் பாவங்களை ஒரே தரமாக எடுத்துப் போடும் வல்லமையும் அதிகாரமும் நற்செய்தியாகிற நீர் மற்றும் ஆவியிடமிருக்கிறது.
அப்படியானால் பவுல் விசுவாசித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கெதிராக யாரால் துணிந்து நிற்க முடியும்? யாராலும் முடியாது. ரோமர் 8:31 நம்மிடம் கூறுகிறது, “இவைகளைக் குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களுக்கு எதிராக இப்பூமியிலுள்ள யாரால் எதிர்த்து நிற்க முடியும்? நற்செய்தியாகிய நீர் மற்றம் ஆவியின் மூலமாக கர்த்தர் மனித குலத்தை அதன் பாவங்களிலிருந்து இரட்சித்திருக்கும் போது அவருடைய வல்லமையை யாரால் வீணில் வழங்க முடியும்? வெறும் இயேசுவின் பெயரை மட்டுமே விசுவாசிப்பவர்களாலும் சாத்தானாலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களை எதிர்த்து அவர்களை மேற்கொள்ள முடியாது.
 
 
அவர் நம்மை ஒரே தரமாக நீதிமானாக்கினார்
 
ரோமர் 8:29-30 கூறுகிறது, “தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப் படுத்தியுமிருக்கிறார்.”
கிறிஸ்துவிற்குள்ளாக எல்லாப் பாவிகளையும் இரட்சிக்க பிதாவாசிய கர்த்தர் திட்டமிட்டாரென்றும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் அவர் அவர்களை அழைத்தார் எனவும், அவர்களைத் தனது பிள்ளைகளாக்கும் படியாக அவர்களுடைய எல்லாப் பாவங்களையும் ஒரே தரமாக கழுவினார் எனவும் இவ்வசனங்கள் கூறுகின்றன. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நம் தேவன் எல்லாப் பாவிகளையும் அவர்களின் பாவங்களிலிருந்து விடுதலையாக்கி இருக்கும் போது அவர் செய்தமைகளுக்கு எதிராக யாரால் நிற்கக் கூடும்?
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்தமையால் நீதிமான்களாக்கப்பட்டவர்களுக்கு எதிராக யாரால் போராடி வெற்றி பெற முடியும்? இது தவறான கூற்று. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை எதிர்த்து நீதிமான்களாக்கப்பட்டவர்களை எதிர்த்து நிற்பவர்கள் கர்த்தரையே எதிர்த்து நிற்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்படுவதற்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். உங்கள் மனதாலும் இருதயத்தாலும் சத்தியத்தின் நற்செய்தியை நீங்கள் எதிர்த்து நின்றால், உங்கள் பாவங்களிலிருந்து உங்களால் இரட்சிக்கப்பட முடியாது. நீங்கள் நரகாக்கினையை அடைவீர்கள்.
 
 
கர்த்தரின் நீதி உள்ளவர்களை எவராலும் எதிர்த்து நிற்க முடியாது
 
“இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோமர் 8:31) கர்த்தர் நம்பட்சத்திலிருக்கும் போது என்பதின் பொருள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் அவர் நம் எல்லாப் பாவங்களையும் அகற்றி நம்மை இரட்சித்தார் என்பதாகும். அப்படியானால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களை யாரால் எதிர்க்க முடியும், மேலும் இத்தகைய விசுவாசம் தவறானது என யாரால் கூற முடியும்? இது வீணான ஒரு செயலாகும். நற்¦ச்யதியாகிய நீர் மற்றும் ஆவியினை விசுவாசித்தவர்களின் விசுவாசத்தை கர்த்தர் அங்கீகரித்தார்.
இதற்கு யாரால் சவால் விட முடியும்? இயேசு தன்னுடைய ஞானஸ்நானத்தினாலும் தன் சிலுவை இரத்தத்தினாலும் உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்த்தார். இதனை விசுவாசிப்பது தவறானது என யாரால் கூற முடியும்? யாராலும் முடியாது.
ரோமர் 6:3இல் பவுல் கூறினான், “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?” இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்ததாக பவுல் கூறினான். அதன் மூலம் அவனின் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டு சுத்திகரிக்கப்பட்டது. இதன் மூலம் இயேசுவுடன் பவுல் மரித்து மீண்டும் உயிரோடெழும்பினான்.
கலாத்தியர் 3:27 நம்மிடம் கூறுகிறது, “ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.” இயேசு தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டு இப்பாவங்களுக்காக சிலுவையில் அறையுண்டு உயிரோடெழுப்பப் பட்டார். இந்த உண்மையை விசுவாசிப்பவர்கள் கர்த்தருடைய பிள்ளைகளாவதற்கான ஆசீர்வாதங்களை நமக்குத் தந்தருளினார். என்பவைகளை இவ்வசனம் நம்மிடம் கூறுகிறது. பவுலின் விசுவாசமானது தான் இயேசுவுடனே கூட ஞானஸ்நானம் பண்ணப்பட்டு அவருடனே கூட சிலுவையில் அறையப்பட்டு அவருடனே கூட உயிரோடெழுந்ததின் மீது கட்டப்பட்டது. ஆகவே இயேசுவின் ஞானஸ்நானத்தை ஒருமுறை விசுவாசித்தீர்களேயானால் உங்கள் பாவங்கள் அனைத்தும் சுத்திகரிக்கப்பட்டு கிறிஸ்துவுடனே கூட உங்கள் பாவங்கள் அனைத்தும் சுத்திகரிக்கப்ட்டு கிறிஸ்துவுடனே கூட உயிரோடெழுப்பப் பட்டதால் நீங்கள் கர்த்தரின் பிள்ளையானீர்கள்.
“உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.” வேறு வார்த்தைகளில் கூறினால் இயேசு இவ்வுலகிற்கு வந்து உலகின் எல்லாப் பாவங்களையும் தன் மீது சுமந்து தீர்க்க யோவான் ஸ்நானால் ஞானஸ்நானம் பெற்றார் என்பதை விசுவாசிப்பவர்கள் இயேசுவிறிகுள் ஞானஸ்நானம் பெற்றவர்களாவர். மேலும்இயேசுவுடனே கூட தாமும் சிலுவையில் மரித்ததாகவும் அவர்கள் விசுவாசிக்கின்றனர். அவருடனே கூட தாம் உயிரோடெழுந்தோம் என்பது அவர்களின் விசுவாசமாகும்.
ஆகவே இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவருடைய இரத்தத்தையும் விசுவாசிப்பவர்கள் அவனின்/அவளின் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவர். இயேசுவானவர் எத்தனை நிச்சயமாய் தேவகுமாரரோ, அதுபோலவே கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தையும் இரத்தத்தையும் விசுவாசித்து தம் பாவங்களிலிருந்து விடுதலையானவர்களும் கர்த்தரின் பிள்ளைகளாவர், “ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.” நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிக்கும் போது கர்த்தரின் பிள்ளைகளாகும் படி கிறிஸ்துவின் நீதியை நாம் அணிந்து கொள்கிறோம்.
இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்து பவுல் பேசினான். ஏனெனில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசவாசித்தமையால் பெரிதானதொரு ஆசீர்வாதத்தை அவன் பெற்றான். ஆயினும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆசீர்வாதத்துடனே வரும் இத்தகைய கர்த்தரின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டியவர்கள் அநேகர். பவுல் பிரசங்கித்த நற்செய்தியானது சிலுவையின் இரத்தத்தைக் குறித்தது என அநேக மக்கள் எண்ணுகின்றனர். ஆனால் அவன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசவாசித்து அதனைப் பரப்பினான் என்பதே உண்மை. இந்த நற்செய்தியில் இயேசுவின் ஞானஸ்நானமம் அவரின் சிலுவை இரத்தமும் உள்ளடங்கியுள்ளன.
அப்படியானால் இயேசுவைப் பின்பற்றும் இன்றைய கிறிஸ்தவர்கள் ஏன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அறியாதவர்களாய் உள்ளனர்? ஆதி சபையில் போதிக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது காலப் போக்கில் மாறிப் போனதே இதன் காரணம். ஆதி சபையின் காலத்தில் எல்லா விசுவாசிகளும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் விசுவாசித்து அதனைப் பிரசங்கித்தனர்.
காலப்போக்கில் நற்செய்தியானது மாற்றப்பட்டு கிறிஸ்துவின் இரத்தம் மட்டுமே போதிக்கப்பட்டு அவருடைய ஞானஸ்நானத்தின் முக்கியத்துவம் மறையலாயிற்று. ஆதி கால சபையின் உண்மை நற்செய்தியிலிருந்து விலகியிருக்கும் சிலுவை இரத்தத்தை மட்டுமே ஏன் அநேக மக்கள் இப்போதும் கூட விசுவாசிக்கிறார்கள் என்பதை இது விளக்குகிறது.
இம்மக்களிடம் இன்னமும் பாவங்களிருக்கின்றன. அவர்கள் கர்த்தரின் நீதி வெளிப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பற்றி அறியாதவர்களாய் இருக்கின்றனர். ஆயினும் அவர்கள் இன்னமும் பாவிகளே. மேலும் அவர்கள் கர்த்தரின் நீதியையும் எதிர்த்து நிற்கின்றனர். அவர்கள் இயேசுவை விசுவாசிப்பதாக கூறுவது பொருட்டல்ல.
ஆவிக்குரிய குருடனால் எதைப் பார்க்க முடியும்? குருடன் யானையைத் தொட்டுப் பார்ப்பதின் மூலம் அதனை அறிந்து கொள்கிறான். ஒரு குருடன் யானையின் காலைத் தொட்டு இது தூன் என்றும், இன்னொருவன் அதன் தும்பிக்கையைத் தொட்டு அது ஏதோ நீளமான ஒன்று எனவும் கூறுவான். அவர்களிருவரும் இதற்கு முன் யானையைப் பார்த்ததேயில்லை. அதுபோலவே ஆவிக்குரிய குருடர் ஒருவரால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மகத்துவங்களை பேசவே முடியாது.
ஆகவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் ஆசீர்வாதத்தை அறியாதவர்களால் அதனைக் குறித்து பேச முடியாது. ஒன்றைப் பார்த்தவர்களால் மற்றவர்கள் அதனை வார்த்தைகளால் விளக்கும் போது புரிந்து கொள்ள முடியும். ஆனால் குருடர்களால் அதனைப் புரிந்து கொள்ளவே முடியாது.
மக்கள் பிறவிப்பாவிகளாவர். நம்பிறப்பிலிருந்தே நாம் ஆவிக்குரிய பாவிகளாய் இருப்பதினாலே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் உண்மை நமக்குத் தெரியாது. சிலுவையின் இரத்தத்தை மட்டும். விசுவாசித்தவர்கள் புதிய வகை கிறிஸ்தவத்தை சொந்தமாக உருவாக்கிக் கொண்டனர். அவர்கள் இயேசுவை விசவாசித்தாலும் சிலுவை இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பதாக கூறும் போது அவர்களில் பாவங்கள் எப்படிக் கழுவப்பட முடியும்? காலம் செல்லச் செல்ல அதிகமதிகமான பாவங்கள் சேரும்.
தம்முடைய இரட்சிப்பிற்காக இயேசுவின் இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பவர்கள் ஆவிக்குரிய படி விழிப்படையாதவர்கள். ஆனால் யோவான் 3:5இல் இயேசு தெளிவாக கூறுகிறார், “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.” ஆகவே கர்த்தரின் பிள்ளைகளாகும் மகிமை அடைவதற்கும் அவரின் ராஜ்யத்திற்கு செல்லும் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிக்க வேண்டும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பவுல் விசுவாசித்தமையால் நம்பிக்கையுடனே அவன் கூறினான், “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோமர் 8:31). நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறியாதவர்களால் கர்த்தரின் பிள்ளைகளை எதிர்த்து நிற்க முடியுமா? கர்த்தரின் பிள்ளைகளை அவர்களால் எதிர்த்து நிற்க முடியும். ஆனால் அவர்களை வெல்ல முடியாது. சிலுவை இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பவர்களால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களை வெற்றி கொள்ள முடியாது.
கர்த்தரின் நீதியை எதிர்த்து நிற்பவர்கள் அவருடைய எதிரியாக மாறிவிடுவதர் அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறவே முடியாது. கர்த்தருடைய நீதி வெளிப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின்நற்செய்தியை விசுவாசிக்கா விட்டால் யாராலும் இரட்சிப்பை பெற முடியாது என்பதுடன் அவனை/அவளை பரலோகத்திற்கு எடுத்துச் செல்லும் விசுவாசத்தையும் பெற முடியாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களால் தவறான நற்செய்திகளை மேற்கொண்டு உண்மையான விசுவாசத்திற்கு திரும்ப முடியும். கர்த்தரின் பிள்ளைகளால் உலகையும் சாத்தானையும் மேற்கொள்ள முடியும்.
இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் தெளிவாக புரிந்து கொள்ள முடியாதவர்களை அவர்களுடைய தவறான புரிந்து கொள்ளுதல் தவறான நம்பிக்கைக்கு வழிநடத்துகிறது. நீங்கள் சிலுவையின் இரத்தத்தை விசுவாசித்து திருந்தாலும் இயேசுவின் ஞானஸ்நான நற்செய்தியை விசுவாசிதது பாவ மன்னிப்பைப் பெற வேண்டும் என எண்ணாவிட்டால் அவர்களுடைய விசுவாசம் தவறானதாகும்.
கர்த்தருக்கு முன்பாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காதவர்கள் அவருடைய நீதியைப் பெற்றுக் கொண்டு உண்மை விசுவாசம் உடையவர்களாயும் இருப்பர். தன் குமாரரின் சிலுவை இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பவர்களின் விசுவாசம் தவறானது என கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். அவருடைய நீதியை விசுவாசிக்காதவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அங்கீகரிப்பதுமில்லை, விசுவாசிப்பதுமில்லை, ஆனால் அவருடைய நீதியை விசுவாசிப்பவர்கள் கிறிஸ்துவின் சிலுவை இரத்தமும் அவருடைய ஞானஸ்நானமும் அவர்களுடைய பாவங்களை அகற்றியது எனவும் விசுவாசிக்கின்றனர்.
நம்முடைய பிடிவாதத்தை நாம் தூர எறிய வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தம்முடைய விசுவாசங்கள் உண்மையானவை என வற்புறுத்துகிறார்கள். இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பவர்களுக்கு அவருடைய நீதியில் அரை விசுவாசம் மட்டுமே இருக்கிறது. நற்செய்தியாகிய நிர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களிடம் மட்டுமே முழுமையான விசுவாசம் இருக்கிறது. அவர்கள் மட்டுமே கர்த்தரின் நீதியை விசுவாசிக்கின்றனர். மேலும் அவரின் நீதியையும் பெற்றுக் கொண்டனர் (மத்தேயு 3:15, 11:11).
இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பவர்களால் எழுதப்பட்ட புத்தகங்கள் தாள்களை வீணடிக்கின்றன. இறையியலாளர்களால் கூறப்பட்ட தத்துவங்கள் கிறிஸ்தவர்களால் இப்போது புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது ஆவலுடன் வரவேற்கப்படுகிறது. இந்த சத்தியம் அப்போஸ்தலர்களின் காலத்திலிருந்தே இருக்கிறது என்பதுடன் இது மாறவும் மாறாது. கர்த்தரின் வார்த்தை நித்தியமாக இருக்கும். ஆனால் இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பவர்கள் மக்களின் நினைவுகளிலிருந்து அழிந்து போவர். இதற்கு காரணம் என்ன? கர்த்தரின் நீதியில் அரைவாசியே இருக்கும் இரத்தம் பாவிகளின் மீது எத்தாகத்தையும் விளைவிப்பதில்லை.
வெளிப்படையாக கூறினால் இக்காலத்திய அநேக மக்கள், கிறிஸ்தவர்களாயினும் கிறிஸ்தவர்கள் அல்லாதவராயினும் அநேக பாவங்களைச் செய்கின்றனர். இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பதின் மூலம் இந்த எல்லாப் பாவங்களும் எப்படி மன்னிக்கப்படும்? சிலுவையின் இரத்தத்தை மட்டுமே வலியுறுத்தும கொள்கைகள் மக்கள் பாவம் செய்யும் போதெல்லாம் பாவ மன்னிப்பிற்கா ஜெபிக்கும் படி போதிக்கின்றன. ஆனால் தம் பாவ மன்னிப்பிற்காக அவர்களால் எத்தனைக் காலத்திற்கு ஜெபிக்க முடியும்? அவர்கள் எதனைக் கூறினாலும் கூட அவர்களால் பாவ மன்னிப்பை பெற முடியாது.
ஞானஸ்நானம் பெறாமல் வெறுமனே இரத்தம் சிந்துவதற்காக இயேசு இவ்வுலகிற்கு வந்தாரா? இது உண்மையல்ல என்பது உங்களுக்குத் தெரியும். இயேசு இவ்வுலகிற்கு வந்து ஞானஸ்நானம் பெற்றதின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டார் (மத்தேயு 3:15). சிலுவையில் அவர் இரத்தம் சிந்துவதற்கு முன்னர் யோவானால் அவர் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார். இது அவர் சிலுவையில் அறையப்படுவதை அனுமதித்தது. இப்படித் தான் இயேசு எல்லா நீதியையும் நிறைவேற்றினார். இயேசு யோவானிடம் பெற்ற ஞானஸ்நானத்தை நீங்கள் விசுவாசித்தால் உங்கள் பாவமன்னிப்பிற்காக எப்பொழுதும் கர்த்தரிடம் அவரின் கிருபைக்காக அழுத கொண்டிருக்க வேண்டியதில்லை. மாறாக கர்த்தரின் நீதியை விசுவாசித்து முழு இரட்சிப்பையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
உலகின் அனைத்துப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொள்வதற்காக இயேசு ஞானஸ்நானம் பெற்றார். உலகின் எல்லாப் பாவங்களுக்குமாக ஒரே தரமாக தீர்க்கப்படுவதற்காக அவர் சிலுவையில் அறையப்பட்டார். இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் விசுவாசிப்பதால் மட்டுமே பாவ விடுதலை கிட்டும்.
 
 
நாம் செய்யும் பாவங்களைவிட பெரிதான இரட்சிப்பை இயேசு நமக்களித்தாரா?
 
இயேசு நமக்களித்த பாவ மன்னிப்பானது நாம் செய்த பாவங்களை விடவும் செய்யப் போகும் பாவங்களை விடவும் மிகப் பெரியது. இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமும் மனித குலத்தின் பாவங்களை விட பெரிதாக இல்லாவிட்டால் இயேசுவை நம்மால் இரட்சகர் என்றும் விசுவாசிக்கவும் முடியாது. மேலும் பாவ மன்னிப்பையும் நம்மால் பெற்றுக் கொள்ள முடியாது. ஆயினும் தேவனின் நல்லிதயம் மிகப் பெரியதாகையால் தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களை ஒரே தரமாக எடுத்துப் போட்டார்.
அது போலவே பரலோகத்தின் வாசல் அகலமாகத் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் நற்செய்தியாகிய நிர் மற்றும ஆவியை விசுவாசிக்காமல் யாராலும் இந்த வாசலின் வழியாக செல்ல முடியாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களை நீங்கள் எதிர்காலம். ஆனால் கர்த்தரின் கொடிய நியாயத் தீர்ப்பிலிருந்து உங்களால் தப்ப முடியாது. கர்த்தரின் நீதியை நிறைவேற்றிய இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் வெற்றி கொள்ளலாம் என நீங்கள் எண்ண வேண்டாம்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை எதிர்ப்பவர்களில் அநேகர் அப்போஸ்தலனாகிய பவுலையும் எதிர்த்து நிற்கின்றனர். ஆனால் பவுல் விசுவாசித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி தவறானது என யாராலும் கூற முடியாது. இயேசு கிறிஸ்து தேவகுமாரர் என்பதையும் அவர் தமது இரட்சகர் என்பதையும மட்டுமே அவர்களால் ஒப்புக் கொள்ள முடிந்தது.
ரோமர் 8:32 நம்மிடம் கூறுகிறது “தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” கர்த்தர் தன்னுடைய ஒரே பேறான குமாரரை உலகிற்கு அனுப்பினார். ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் சுமக்கச் செய்தார். சிலுவையில் மரிக்கச் செய்து நம்மை நம் பாவங்களிலிருந்து விடுவிக்கும் பொருட்டு அவரை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பினார்.
உலகின் பாவங்களிலிருந்து நம்மை இரட்சித்து இயேசுவைப் போல் நம்மையும் அவரின் பிள்ளைகளாக்க பிதாவாகிய கர்த்தர் தன்னுடைய ஒரே பேறான குமாரரை நமக்கு அருளினார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களை தனது பிள்ளைகளாகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் நீதிமான்களாகவும் மாற்ற கர்த்தர் தன் ஒரே பேறான குமாரர் ஞானஸ்நானம் பெறும் படி அனுப்பினார். கர்த்தர் தன்னுடைய பரலோக ஆசீர்வாதங்களையும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியையும் நமக்களிக்க கர்த்தர் திட்டமிட்டார். இவற்றில் ஒரு ஆசீர்வாதம் நற்செய்தியாகிய நீர் மற்றும ஆவியை விசுவாசித்து அவரின் பிள்ளையாவதாகும்.
“தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” (ரோமர் 8:32). “எல்லாவற்றையும்” என்பது கர்த்தரின் பரிசுகளைக் குறிக்கிறது. என்ன பரிசுகள் அவை? இயேசுவைப் பெற்றுக் கொண்டு அவருடைய பெயரை விசுவாசித்தவர்களுக்கு தன் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார். அதாவது நற்செய்தியாகிய நீர் மற்றும ஆவியை விசுவாசித்தவர்கள் கர்த்தரின் பிள்ளைகள் ஆக்கப்பட்டனர். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்தவர்களிடம் பாவமில்லை. அவர்கள் நீதிமான்களும் கர்த்தரின் பரிசுத்தமாக்கப்பட்ட பிள்ளைகளுமாவர்.
இவற்றையெல்லாம் விசுவாசித்து கர்த்தரின் பிள்ளைகளானவர்களுக்கு ஆயிர வருட அரசாட்சியும் பரலோக ராஜ்யமம் பரிசாக வழங்கப்படும். பரலோகத்தின் அனைத்து மகிமைகளையும் சுதந்தரித்துக் கொள்ளும் படியாக நீதிமான்கள் ஆசீர்வதிக்கப்பட்டனர்.
“மற்ற எல்லாவற்றையும் நமக்கு” என்பது பரிசுத்த ஆவியானவரை கொடுப்பது என சிலர் விளக்குகின்றனர். இயேசுவை நாம் விசுவாசிக்கும் போது பரிசுத்த ஆவியானவர் தமக்கு தனியாக வழங்கப்படுகிறார் என இதற்கு பொருள் படுமா? என அவர்கள் எண்ணுகின்றனர். இது உண்மையல்ல ஏனெனில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீங்கள் விசுவாசிக்கும் போது பாவமன்னிப்பையும் பரிசுத்த ஆவியானவரையும் ஒரே நேரத்தில் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். பாவம் நிறைந்த இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரால் வாசம் செய்ய முடியாது. நம்முடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்ட அந்நொடியிலேயே பரிசுத்த ஆவியானவரும் வருகிறார்.
பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதுடன் இன்னமும் அநேக பரிசுகளையும் விசுவாசிகள் பெற்றுக் கொள்கின்றனர். பரலோகத்தின் எல்லா ஆசீர்வாதங்களையும் பெறும் வரை கர்த்தரின் பரிசுகள் முடிவிற்கு வருவதில்லை. இவ்வுலகில் சுகமாக்குதல், பலமொழிகள் பேசுதல், தீர்க்க தரிசனம் கூறுதல் ஆகியவற்றை பரிசாக சில மக்கள் எண்ணுகின்றனர். ஆனால் இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்ட பரிசுகள் நம் பிதாவிடம் உள்ள பரலோகத்திற்கு உரியவைகளைக் குறிக்கின்றன. பரிசுகள் என்பதன் மூலம் கர்த்தரின் நீதியைப் பெற்றுக் கொண்ட அவரின் பிள்ளைகளுக்கு கர்த்தர் வழங்கும் அனைத்தையும் பவுல் கூறுகின்றான்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களுக்கு எல்லா நல்லவைகளையும் பரிசாக வழங்குவதாக கர்த்தர் கூறினார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களுக்கு மறுபடியும் பிறத்தலை கர்த்தர் பரிசாக வழங்கினார். நற்செய்தியாகிய நீர் மற்றும ஆவியை விசுவாசிப்பவர்களுக்கு பரலோகத்தின் எல்லாவற்றையும் கர்த்தர் வழங்கினார். இவ்வுலகில் வாழும் போது கிறிஸ்தவர்கள் எத்தனையோ பாடுகளை அனுபவிக்கின்றனர். ஆனால் கர்த்தரின் ராஜ்யம் வரும் போது பரலோக ராஜ்யத்தின் மகிமையினால் அவர்கள் தரிப்பிக்கப்படுவர்.
 
 
எக்காரணமுமின்றி நீங்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் எனக் கூறாதீர்கள்
 
ரோமர் 8:33-34 கூறுகிறது “தேவன் தெரிந்து கொண்டவர்கள் மேல் குற்றஞ் சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.”
“தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்?” நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் கர்த்தரால் இரட்சிக்கப்பட்டவர்களின் மீது உங்களால் குற்றம் சுமத்த முடியுமா? அப்படி செய்ய முடியாது.
கல்வினின் தத்துவத்தை சில இறையியலாளர்கள் சுட்டிக்காட்டி சில நிபந்தனையற்று தெரிந்தெடுக்கப்பட்னடர் எனவும் மற்றவர்கள் தெரிந்தெடுக்கப்படவில்லை எனவும் கூறுகின்றனர். ஆயினும் கர்த்தரின் சந்நிதானத்தில் நிபந்தனையற்ற என்ற சொல்லை நாம் உபயோகிக்கப் கூடாது. இப்படி செய்வதால் கர்த்தரை அவர்களுககு அறவே தெரியாது என்பதையும், தம் தத்துவங்கள் தவறானவை என்பதையும் அவர்கள் நிருபிக்கின்றனர். நிபந்தனையற்ற தேர்வு என்பது கர்த்தர் சிலரை எக்காரணமுமின்றி நேசிக்கிறார் எனவும் மற்றவர்களை எக்காரணமுமின்றி வெறுக்கிறார் எனவும் பொருள்படும். கர்த்தர் சிலரை நேசித்து மற்றவர்களை வெறுக்கும் போது அவர் நீதியுள்ளவர் என நம்மால் எப்படிக் கூற முடியும்? இது நம் கர்த்தரல்ல. நம் கர்த்தர் எல்லோரையும் நேசித்து கிறிஸ்துவிற்குள்ளாக அனைவரையும் பொறுப்பேற்றுள்ளார்.
இங்கு வசனம் 32இல் கூறப்பட்டுள்ளது, “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” மனித குலமனைத்தையும் இரட்சிக்கும் படி கர்த்தர் தன் குமாரரை நமக்கு கொடுத்துள்ளார். அவரின் மூலமாக நீர் மற்றும் ஆவியின் வார்த்தையினால் நம் எல்லாப் பாவங்களையும் அவர் சுமந்து தீர்த்தார் என்பதை கர்த்தர் நாம் நம்பும்படி செய்தார். வசனம் 33 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, “தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்?” இங்கு “தேவன் தெரிந்துகொண்டவர்கள்,” என்ற வார்த்தை கர்த்தர் நிபந்தனையில்லாமல் தேர்ந்தெடுக்கிறார் என பொருளாகாது. இயேசு கிறிஸ்து இல்லாமல் வாழ முடியாதவர்களையும் தம்முடைய சொந்த நீதியில்லாதவர்களையும் தன் நீதியினால் தரிப்பிக்க கர்த்தர் அவர்களைத் தெரிந்து கொண்டார்.
கர்த்தரின் நீதியால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் இயேசு இவ்வுலகிற்கு வந்ததையும், ஞானஸ்நானம் பெற்றதையும் நம் பாவங்களை அகற்றும்படி சிலுவையில் தன்னைப் பலியிட்டதையும் விசுவாசித்து இந்த உண்மையில் நிலை நிற்கின்றனர். அவர்க்ள கர்த்தரை விசுவாசிகின்றனர். அவர் அவர்களை உலகின் பாவங்களிலிருந்து இரட்சித்து தம்முடைய நீதியினால் அவர்களைத் தரிப்பித்தார்.
அப்படியானால் நீதிமானிற்கெதிராக யாரால் குற்றம் கூற முடியும்? நற்செய்தியாகிய நீர் மற்றும ஆவியை விசுவாசித்து தம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு கர்த்தரின் பிள்ளைகளாக தெரிந்து கொள்ளப்பட்டவர்களை யாராலும் நியாயம் தீர்க்க முடியாது. சிலுவையின் இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பவர்களால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசவாசிப்பவர்களை தவறானவர்கள் எனவும் கூற முடியாது. கர்த்தருக்கு முன்னதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தவும் முடியாது.
நற்செய்தியாகிய நீர் மற்றும ஆவியை விசுவாசித்து கர்த்தரின் நீதியால் தரிப்பிக்கப்பட்டவர்களை சில மக்கள் தவறாக நியாயம் தீர்க்கிறார். அது சரியானதா? இல்லை. கர்த்தரின் சந்நிதானத்தில் நீதிமான் என தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை யாராலும் தவறாக நியாயந்தீர்க்க முடியாது.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களை பாவிகள் எனக் கூறி அவர்களுடைய விசுவாசங்களை யாரால் தவறாக நியாயந்தீர்க்க முடியும்? கர்த்தரின் நீதி வெளிப்படுத்தப்பட்டுள்ள நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உலகின் எல்லா மக்களுக்கும் அநேக வருடங்களாக நாம பிரசங்கித்து வருகிறோம்.
ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கித்தமைக்காக யாரும் எங்கள் மீது குற்றம் சுமத்தவில்லை. வெகு சிலர் சிலுவை இரத்தத்தின் மீதுள்ள விசுவாசத்தை அங்கீகரிக்கும் படி எங்களைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்களாலும் கூட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பது தவறு எனக் கூற முடியவில்லை.
உண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது கர்த்தரின் நீதியை உள்ளடக்கியிருக்கும் நற்செய்தியாகும். இதுவே உண்மை நற்செய்தியாகும். மற்ற நற்செய்திகள் அனைத்தும் முழுமை அடையாதவைகளே. நற்செய்தியாகிற நீர் மற்றும் ஆவியை பிரசங்கித்த அப்போஸ்தலனாகிய பவுல் இந்தஉண்மை நற்செய்தியைத் தவிர வேறொரு நற்செய்தி இல்லை எனக் கூறினான். அவன் இவ்வாறு கூறினான், “நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” (கலாத்தியர் 1:8-9).
வேதாகமத்தின் அடிப்படையில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது தவறு என யாராலும் கூற முடியாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காதவர்கள் அதற்கெதிரானவர்கள். கர்த்தரால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது தவறானது என நீங்கள் நம்பினால் போய் கர்த்தருக்கெதிராக புரட்சி செய்யுங்கள். சிலுவையின் இரத்தத்தை மட்டுமே வலியுறுத்தும் குறைபாடுடைய தவறான நற்செய்திகளை எதிர்த்துப் போராட வேண்டும். அதற்கான திறமை நம்மிடமும் இருக்கிறது. அவரின் ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடையப் பாவங்களை முதலில் தன் மீது ஏற்றுக் கொள்ளாமல் இயேசுவால் எப்படி சிலுவையில் அறைபட முடியும்?
 
 
கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்களிடம் பாவங்களிருக்கின்றன எனக் கூறாதீர்கள்
 
“குற்றம் சாட்டப்படுதல்” என்பது ஒரு விசாரணையின் மூலம் தீர்ப்பிற்குட்படுத்துவது என பொருள்படும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்துபவர்கள் அக்கிரமச் செய்கைக்காரராய் மட்டுமே இருக்க முடியும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களிடம் கர்த்தரின் நீதியின் மீதும் நம்பிக்கை இருக்கிறது. அப்படியானால் அவர்கள் நம்பிக்கையை யாரால் தவறாக தீர்க்க முடியும். அவர்களைத் தவறானவர்கள் என யாரால் கூற முடியும்? கர்த்தர் அவர்களை நீதிமான்களாக்கியதால் யாராலும் அவர்களைக் குற்றப்படுத்த முடியாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களிடம் பாவமிருக்கிறது என யாராலும் குற்றம் சாட்ட முடியாது.
“தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்” (ரோமர் 8:33). நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களை பாவமற்றவர்களென யாரால் அறிவிக்க முடியும். கர்த்தரால் மட்டுமே முடியும். தன்னுடைய நீதியின் மூலம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசவாசிப்பவர்கள் நீதிமான்களாக்கப்பட்டனர் என அவர் அறிவிக்கிறார்.
நீதிமான்களாக்கப்பட்டவர்கள் என்பது பாவமிருப்பவர்களை குறிக்காது. ஆனால் அது உண்மையாகவே தம் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களைக் குறிக்கிறது. அவர்கள் பாவமில்லாதவர்களாகவும் நீதிமான்களாகவும் மாற்றப்பட்டனர். நற்செய்தியாகிய நீர் மற்றம ஆவியை விசுவாசிப்பவர்களிடம் பாவங்களில்லை என கர்த்தர் கூறும் போது அவர்கள் தவறானவர் எனவும், கர்த்தரின் நீதி அவர்களிடம் இல்லை எனவும் யாரால் கூற முடியும்? இவ்வுலகிலுள்ள எந்த இறையியலாளர்களாலும் அப்படிக் கூற முடியாது.
மதத்தின் புனிதத்துவத்தை அடைய முயற்சிக்கும் பரிசுத்தமாதால் என்ற தத்துவத்தினால் இன்றைய கிறிஸ்தவ கெட்டுப்போயுள்ளது. இங்கிலாந்திலுள்ள ஒரு இறையியலாளர் கர்த்தரின் ஆலயம் பரிசுத்தமானதா? எனக் கேட்டுவிட்டு கர்த்தரின் ஆலயத்திலும் கூட குறைபாடுகளுள்ளன என கூறினார். இந்த இறையியலாளருக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்தும் தெரியாது. கர்த்தரின் நீதியின் மீதும் அவரிடம் நம்பிக்கையில்லை என்பது தெளிவு.
ஆனால் கர்த்தரின் ஆலயத்திலுள்ள எல்லா விசவாசிகளும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதால் அவர்களிடம் எப்பாவங்களும் இல்லை. மாமிசத்தின் படி அவன்-அவள் பலவீனமுடையவராய் இருந்தாலும் அவனிடம்-அவளிடம் குறைபாடில்லாத கர்த்தரின் நீதி இன்னமும் இருக்கிறது.
கர்த்தரின் ஆலயத்திலுள்ள அனைவரும் பாவமில்லாதவர்களா? ஆம். ஆலயம் என்பது பரிசுத்தமாக்கப்பட்ட பாவமற்ற விசுவாசிகள் கிறிஸ்துவிற்குள்ளாக ஒன்று கூடும் ஒரு இடமாகும். விசுவாசிகளிடம் பாவமிருந்தால் அவர்கள் கர்த்தரின் பிள்ளைகளல்ல. அவர்களை எது பரிசுத்தப்படுத்தியது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசவாசத்தினால் கர்த்தரின் நீதியைப் பெற்று பாவமில்லாதவர்களானதே அதுவாகும். கர்த்தரின் ஆலயத்தில் குறை இருக்கிறது என அந்த இறையியலாளர் கூறினார். இதற்கு காரணம் அவருக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து தெரியாது. அவர் அதனை விசுவாசிப்பதுமில்லை.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் விசுவாசிகள் என யாரால் துணிச்சலுடன் கூற முடியும்? கர்த்தரே அவர்களை நீதிமான்கள் ஆக்கினார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் நாம் பலவீனர்களாயிருப்பதால் பாவத்துடனிருக்க முடியுமா? நிச்சயமாய் நம்மால் அப்படி இருக்க முடியாது. நாம் தொடர்ந்து பாவம் செய்தாலும் நம்மிடம் பாவம் இல்லை என இது பொருள் படவில்லையா? ஆம் நம்மிடம் பாவமில்லை. இதனால் தான் நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க வேண்டும். மக்கள் வேண்டுமென்றே பாவங்களைச் செய்வதில்லை. தம் பலவீனத்தால் அவற்றைச் செய்கின்றனர்.
சில மக்கள் வேண்டுமென்றே பாவங்கள் செய்ய முயற்சி செய்கிறார்கள். எல்லாவித மீறுதல்களும் மனிதர்களின் பலவீனத்தால் செய்யப்படுகிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களின் இருதயங்களில் பாவமில்லை. ஏனெனில் அவர்களிடம் கர்த்தரின் நீதியுள்ளது. நாம் பாவமற்றவர்களாயுள்ளோம். ஏனெனில் கர்த்தர் தன் நீதியால் நம் எல்லாப் பாவங்களையும் அகற்றிவிட்டார். அதனால் தான் வேதாகமம், “தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்” எனக் கூறுகிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களிடம் தன்னுடைய நீதி இருப்பதால் அவர்களிடம் பாவம் இல்லையென கர்த்தர் அறிவிக்கிறார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசவாசித்ததின் மூலம் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நாம் விடுவிக்கப்பட்டோம்.
நம்முடைய எதிர்காலப் பாவங்களை இயேசு அகற்றியிராவிட்டால் நம் பாவங்களிலிருந்து நாமெப்படி விடுதலையாகியிருப்போம், மேலும் நாம் எப்படி பாவமில்லாதவர்களாகியருப்போம்? கர்த்தரின் நீதியை நாம் விசுவாசித்த பிறகு தொடர்ந்து பாவம செய்து அதில் வாழ்ந்திருந்தால் இது நம் பரிசுத்தத்தை இழிவு செய்துநம்முடைய பாவ விடுதலையை ரத்து செய்து இப்படியாக நம்மை நரகத்திற்கேற்றவாறு நம்மை மாற்றிவிடாதா? இதற்கான பதில் இல்லை என்பதாகும். சுய பரிசுத்தமாக்கலில் இருந்து நம்முடைய இரட்சிப்பு வருகிறதென்றால் இவ்வுலகிலுள்ள யாரால் இரட்சிக்கப்பட முடியும்? யாராலும் முடியாது, மாமிசத்தினால் யாராலும் நிறைவாக வாழ முடியாது. கட்டளைகளை முற்றிலுமாக கடைபிடிப்பதாலும் அவர்களால் பரிசுத்தமாக முடியாது. ஆகவே வேதாகமம் கூறுகிறது, “அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை” (ரோமர் 3:10).
 
 
இயற்கையாக தம் சொந்த செயல்களால் கர்த்தரின் நீதியை மக்களால் பெற முடியாது
 
கர்த்தர் தன் ஒரே பேறான குமாரனை அனுப்பினார். அவர் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்று உலகின் பாவங்களிலிருந்து அனைத்து மனிதர்களையும் இரட்சிக்கும் பொருட்டு அவர் சிலுவையில் அறையப்பட்டார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்தவர்கள் அந்த நம்பிக்கையினால் நீதிமான்களாயினர். அதனால் தான் இவ்வுலகிலும் கூட நீதிமான்களைக் காண முடிகிறது. கர்த்தரின் வார்த்தையை விசுவாசித்ததின் மூலம் ஆபிரகாமும் விசுவாசத்தின் தந்தையாகினான்.
நீதிமானாக்கப்படும் தத்துவத்தால் கர்த்தரின் நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என அநேக கிறிஸ்தவர்கள் கூறினாலும் கூட அவர்கள் இதனைக் குறித்து அறியாதவர்களாகவே உள்ளனர். கர்த்தரின் நீதி என்ன? அது மனித நீதியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கர்த்தருடைய நிதி எந்நற்செய்தியில வெளிப்பட்டது? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் கர்த்தரின் நீதி வெளிப்பட்டது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காமல் அதனைப் புறம்பே தள்ளினால் அதன் பொருள் நாம் கர்த்தரை எதிர்த்து நிற்கிறோம் என்பதாகும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது விசுவாசம் இல்லாமல் யாராலும் பாவத்திலிருந்து விடுதலையடையவோ அல்லது கர்த்தரின் நீதியைப் பெறவோ முடியாது. கர்த்தரின் நீதிக்கு சிறிதளவு கூட யாராலும் எதிர்த்து நிற்க முடியுமா? நற்செய்தியாகிற நீர் மற்றும் ஆவியை நான் அதிக காலமாக விசுவாசித்து அதனைப் பிரசங்கித்து வருகிறேன். ஆனால் இந்த நற்செய்தியை எதிர்த்து நிற்பவர்களை இதுவரைக் காணவில்லை. கர்த்தரின் வார்த்தையின் அடிப்படையில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை யாராலும் எதிர்த்து நிற்க முடியாது. ஏனெனில் கர்த்தரின் நீதியாகிய இந்த நற்செய்தி நம் பாவங்களிலிருந்து நிறைவான முழுமையான விடுதலையை அளிக்கிறது.
 
 
கர்த்தரின் நீதியைப் பெற்றிருப்பவர்களை யாரால் ஆக்கினைக்குட்படுத்த முடியும்?
 
ரோமர் 8:34ஐ வாசிப்போமாக “ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.” கர்த்தரின் நீதியை விசுவாசிக்கும் ஒருவரை பாவம் நிறைந்தவரென யாராலும் ஆக்கினைக்குட்படுத்த முடியுமா? யாராலும் முடியாது.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து இவ்விசுவாசத்தினால் தம் பாவங்களிலிருந்து விடுதலையானவர்களைப் பார்த்து பாவிகளென யாராலும் இவர்களை ஆக்கினைக்குட்படுத்த முடியுமா? முடியாது! “ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்?” கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்களை பாவிகளென யாரால் கூற முடியும்?
பாவத்தின் சம்பளம் மரணம். உங்களிருதயத்தில் பாவமிருந்தால் நீங்கள் நரகத்திற்கு செல்லப் போகிறீர்கள். பாவமிருக்கும் மக்களை கர்த்தர் நியாயந்தீர்க்கிறார். ஆனால் கர்த்தரின் நீதியின் மீதுள்ள விசவாசத்தால் தம் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் கர்த்தரால் நியாயந்தீர்க்கப்படுவதில்லை. ஏனெனில் நியாயந்தீர்க்கும் படி அவர்களிடம் எப்பாவங்களுமில்லை. கர்த்தரின் நீதியை விசுவாசிப்பர்களை கர்த்தரே நியாயந்தீர்க்காத போது அவர்களை ஆக்கினைக்குட்படுத்த யாரிடம் துணிச்சல் இருக்கிறது? இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒரு விசுவாசி பாவத்துடனிருந்தால் அவன்/அவள் ஒரு பாவியாயிருக்கிறான். ஆகவே அவன் கர்த்தரால் நியாயந்தீர்க்கப்பட்டு ஆக்கினைக்குட்படுகிறார்கள். பாவிகள் தம்மிருதயங்களிலுள்ள பாவங்களுக்காக கர்த்தரால் நியாயந்தீர்க்கப்படுவதோடு மற்ற மக்களாலும் இழிவு படுத்தப்படுகிறார்கள். ஆனால் கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒரு விசுவாசி நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்தால் கர்த்தரின் நீதியைப் பெறுகிறார். அப்போது கர்த்தருக்கு முன் அந்நபர் பாவமில்லாதவராயிருப்பதினாலே யாரும் அவரை ஆக்கினைப்படுத்துவதில்லை. அம்மக்களின் மனசாட்சியிலும் அவர்களின் பாவங்கள் இருப்பதில்லை.
“ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.” கர்த்தருடைய நற்செய்தியை நமக்கு கொடுப்பதற்காக தேவகுமாரராகிய இயேசு பூமிக்கு வந்து நம்முடைய எல்லாப் பாவங்களையும் சுமக்கும்படியாக யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்று தன் இரத்தத்தை சிலுவையில் சிந்தி மரித்து நம் இரட்சகராகும் படி மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்தார். இப்போது அவர் கர்த்தரின் வலது பக்கத்தில் அமர்ந்து நமது இரட்சகராக நமக்காக வேண்டுதல் செய்கிறார்.
கர்த்தரின் நீதியிருப்பவர்களுக்காக பரிசுத்த ஆவியானவரும் ஜெபிக்கிறார். இயேசு பரலோகத்திலிருந்து நமக்காக ஜெபிக்கிறார். பிதாவாகிய கர்த்தரிடம் பரிசுத்த ஆவியானரும் நமக்காக வேண்டுதல் செய்கிறார். ஆனால் அது வேறு வழியிலாகும். நாம் பலவீனர்களாயிருக்கையில் நமக்குப் புரியாத புலம்பல்களின் மூலமாக அவர் ஜெபிக்கிறார்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களின் இருதயங்களிலிருக்கும் கர்த்தரின் நீதி எத்தனை சிறந்தது? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது எத்தனை நலமானது என்றும் நிறைவானது என்றும் கர்த்தரின் நீதியின் நிறைவு நம்மிடம் கூறுகிறது.