(ரோமர் 8:35-39)
“உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ் காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.”
வசனம் 35 கூறுகிறது, “கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?” கர்த்தரின் நீதியை உள்ளடக்கியுள்ள நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட கிறிஸ்துவின் அன்பிலிருந்து யாரால் நம்மைப் பிரிக்க முடியும்? துன்பங்களாலும் பாடுகளாலும் அந்த அன்மை துண்டிக்க முடியுமா? ஏழாண்டு கால உபத்திரவத்தினால் அந்த அன்பிலிருந்து நம்மை பிரிக்க முடியுமா? முடியாது.
நம்மை நமது பாவங்களிலிருந்து இரட்சித்த நம் தேவனின் அன்பிலிருந்து இவ்வுலகின் எந்த உபத்திரவங்களாலும் துன்பங்களினாலும் நம்மைப் பிரிக்க முடியாது. நாம் களைப்படைந்து ஓய்வெடுக்க வேண்டுமென விரும்பி தனிமையை நாடும் போது நம்மை நமது பாவங்களிலிருந்து இயேசு இரட்சித்தாரா இல்லையா என யாராவது கேட்டால் இயேசு நம்மை இரட்சித்தார் எனவும் நாம் பாவமற்றவர்களாயிருக்கிறோம் எனவும் உற்சாகத்துடன் பதில் கூறுவோம். நம்மிருதயங்கள் எத்தனைக் களைப்படைந்து துன்புற்றிருந்தாலும் கூட அவா நம்மை இரட்சித்தார். மேலும் அவர் நமது நித்திய இரட்சருமாவார். நாம் மிகவும் களைப்படைந்திருந்தாலும் நம் சரீரத்தை நேராக நிறுத்தி வைக்காத படியாக சுகவீனமாயிருந்தாலும் கர்த்தரின் நீதியைக் குறித்து நாம் நன்றியறிதலோடு அறிக்கை செய்வோம். நம்மை நம் பாவங்களிலிருந்து விடுவித்த கர்த்தரின் நீதியிலிருந்து எத்தகைய களைப்பாலும் நம்மை பிரிக்க முடியாது.
துன்புறுத்தல்களோ, பஞ்சமோ, நிர்வானமே, அழிவோ, பட்டயமோ இவை எதனாலும் நம்மைக் கர்த்தரின் நீதியிலிருந்து துண்டிக்க முடியாது. சில மதவாத மக்களால் இழிவு படுத்தப்படுவதும், ஆக்கினைக்குள்ளாவதும் நாம் சந்திக்கும் துன்புறுத்தல்களாகும். நம் நண்பர்களாலும் அண்டை அயலாராலும் உறவினர்களாலும் நம் சொந்த குடும்ப உறுப்பினர்களாலும் கூட நாம் துன்புறுத்தப்படுவோம். நம்மை வேதப் புட்டர்கள் என அவர்கள் குற்றம் சாட்டுவர். இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பிலிருந்து இந்த துன்புறுத்தல்களால் நம்மை பிரிக்க முடியுமா? நிச்சயமாக அவற்றால் பிரிக்க முடியாது.
நாம் எத்தனைக் கொடுமையாக துன்புறுத்தப்பட்டாலும் நம்மை இரட்சித்த கர்த்தரின் நீதியிலிருந்து இதனால் நம்மை பிரிக்க முடியாது. கர்த்தரின் நீதி நம்மை பாவமற்றவர்களாக்கியதாலும் இதுவே மாறாத சத்தியமாய் இருப்பதாலும் யாராலும் அல்லது எதனாலும் கர்த்தரின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது.
ஆவிக்குரிய அல்லது சரீரப்படியான பஞ்சங்களால் நம்மைப் பிரிக்க முடியாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம விசுவாசிப்பதால் நம்மிருதயங்களில் இருப்பதெல்லாம் கர்த்தரின் நீதி மட்டுமேயாகும். அதாவது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் தேவன் நம்மைப் பாவமற்றவர்களாக்கினார் என்ற நம் தேவனின் மீதுள்ள விசுவாசம் இதுவாகும். கர்த்தரின் நீதியை விசுவாசித்தமையால் கிட்டும் ஆவீர்வாதமாகிய விசுவாசம் இதுவேயாகும். என் எல்லாப் பாவங்களையும் தேவன் மறையச் செய்தமையால் என்னிடம் எப்பாவங்களும் இல்லை. கர்த்தர் என்னை நீதிமானும் பாவமில்லாதவனுமாக்கினார். அவர் தன்னுடைய நீதியினால் முற்றிலுமாகத் தரிப்பித்தார். இதனால் தான் பஞ்சம் எத்தனைக் கொடியதாயிருந்தாலும் கர்த்தரின் நீதியின் மீதுள்ள நம் விசுவாசம் மாறாது.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலான கர்த்தரின் நீதி
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை ஒருவர் விசுவாசிக்காதவரை அவனின்/அவளின் இருதயத்தில் இன்னமும் பாவமிருக்கிறது. ஆனால் கர்த்தரின் நீதியை விசுவாசிக்கும் ஒருவரிடம் பாவமில்லை. இதனால் தான் கனிகளைப் பார்த்து மரத்தை அறிந்து கொள்ளுங்கள் என நம் தேவன் கூறினார். கர்த்தரின் நீதியை விசுவாசிக்காதவர்கள் சிறிதளவு கஒக்ஷடத்தையோ, பஞ்சத்தையோ, துன்புறுத்தலையோ அல்லது உபத்திரவங்களையோ அனுபவிக்கும் போது இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தை விட்டுவிடுகின்றனர்.
சில மக்கள் இப்படி எண்ணுகிறார்கள். என்னுடைய பாவங்களுக்காக எனக்காக இயேசு சிலுவையில் தீர்க்கப்பட்டாலும் மூலப் பாவம் மட்டுமே அகற்றப்பட்டது. ஆகவே நான் அன்றாடம் செய்யும் பாவங்களுக்காக தினந்தோறும் நான் பாவ மன்னிப்பை கேட்க வேண்டும். இயேசு தம்முடைய எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்டார் என்பதை இவர்கள் விசுவாசிக்காததால் இத்தகைய விசுவாசம் உடையவர்கள் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்கின்றனர். இப்படி செய்யும் போது அவர்கள் தம்மை ஆக்கினைக்குட்படுத்தி தம்மையே அழித்துக் கொள்ளுகின்றனர். இம்மக்கள் இயேசுவை மறுக்கும் மக்களாவர் அவர்கள் கர்த்தரின் நீதியையும் விசுவாசிப்பதில்லை.
ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் கர்த்தரின் நீதியையும் கூட விசுவாசிப்பவர்களாவர். அவர்கள் எத்தகைய சூழ்நிலைகளைச் சந்திக்க நேர்ந்தாலும் அவர்களால் தம் விசுவாசத்தை உறுதியாகப் பற்றிக் கொள்ள முடியும், உலகின் அனைத்துப் பாவங்களிலிருந்தும் கர்த்தர் நிச்சயமாய் என்னை இரட்சித்தார். என்னிடம் பாவங்களில்லை. என அவர்கள் கூறுவர். நம் ஆவிக்குரிய பஞ்சத்தின் கடைசி நாட்களில் மரணத்தை சந்திக்க நேர்ந்தாலும் நம்மைக் கர்த்தர் பாவமற்றவர்களாக்கினார் என்பதையும் நாம் அவரின் மக்களானோம் என்பதையும் மறுக்கவே மாட்டோம். நம் எல்லாப் பாவங்களையும் அகற்றிய கர்த்தரின் நீதியானது நம்மிருதயங்களில் விசுவாசமாய் இருக்கும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது வல்லமையானதும் மகத்துவமானதுமாகும். கிறிஸ்துவினுள் உள்ள கர்த்தரின் நீதியின் நிமித்தமாக எத்தகைய உபத்திரவங்களை நம் வாழ்வினில் சந்தித்தாலும், கிறிஸ்துவின் அன்பிலிருந்து நாம் பிரியவே மாட்டோம்.
மேற்கண்ட வசனத்தில் “நிர்வாணம்” என்பது எதனைக் குறிக்கிறது? நம்முடைய எல்லா உரிமைகளையும் இழப்பதை நிர்வாணம குறிக்கிறது. மத்திய காலம் வரை ஜரோப்பிய நாடுகளிலுள்ள கிராமங்களிலோ அல்லது நாடுகளிலோ ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் மக்கள் சூனிய வேலைகளில் இறங்கிவிடுவர். எல்லாப் பிரச்சனைகளுக்கும் யாரையாவது பலி கூறுவர். மக்கள் அவர்களை வேதப் புரட்டர்களாக பலி கூறி அவர்களிடமுள்ள எல்லாவற்றையும் பிடுங்கிக் கொள்வர். அதனால் தான் “நிர்வாணம்” என்ற சொல்லை பவுல் இங்கே உபயோகப்படுத்துகிறான்.
அக்காலங்களில் யாரையாவது புரட்சியாளன் என இலகுவாக குற்றம் சாட்ட முடிந்தது. ஒன்றிரண்டு சாட்சியங்களை வைத்துக் கொண்டு அவரை ஆக்கினைக் குட்படுத்துவர். அது நெருப்பில் எரிப்பதாகவே அவனின்/அவளின் எல்லா உடமைகளையும் கையகப்படுத்துவதாகவோ, அவன்/அவள் மரியாதையைக் குலைப்பதாகவோ இருக்கலாம்.
இத்தகைய முறையில் நாம் நிர்வாணமாக்கப்பட்டாலும் நம்முடைய அனைத்தையும் இழந்தாலும் மரணத்திற்குள்ளானாலும் நம்முடைய எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்ட நம்முடைய அன்மைப் கொண்டிருக்கும் கர்த்தரின் நீதியானது நம்மிடமிருந்து மறையாது. இப்படியாக நற்செய்தியான நீர் மற்றும் ஆவியானது நிறைவானதாகும்.
மரணத்தாலோ பட்டயத்தாலோ கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை பிரிக்க முடியாது. நம்மை பட்டயத்திற்கு உட்படுத்தி அதனால் கொல்லப்பட்டாலும் நம்மிடம் பாவமில்லை என்பதை நம்புகிறோம். ஆதிசபையின் அநேக கிறிஸ்தவர்கள் தவறாக குற்றச்சாட்டப்பட்டு ரோம நகரத்தில் எரிக்கப்ட்டனர். மேலும் கொலோசியம் என்ற இடத்தில் பொது மக்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் சிங்கங்களுக்கு இரையாக்கப்பட்டனர். அவர்கள் மரிக்கும் போது கூட அவர்களை இரட்சித்த தேவனைக் துதித்தனர். அவர்களால் துதிக்க முடிந்தது ஏனெனில் அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும்ஆவியை விசுவாசித்தனர். கர்த்தர் அவர்களை நேசித்து அவர்களுடைய எல்லாப் பாவங்களையும் அகற்றியதால் தாம் விடுதலையானதை விசுவாசித்தவர்களால் தம் மரண தருவாயிலும் சிங்கங்களால் உண்ணப்படும் போதும் தேவனைத் துதிக்க முடிந்தது.
நம்முடைய எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்ட கர்த்தரின் நீதியின் மீதுள்ள விசுவாசத்தினாலும் அவரின் அன்பின் மீதுள்ள விசுசாசத்தினாலும் பலம் வருகிறது. கர்த்தர் நமக்குள் இருப்பதாலும், நம்முடன் பேசுவாதாலும் நம்மை உறுதியாகப் பிடித்துக் கொள்வதாலும் நம்மை பாதுகாத்து ஆறுதல் படுத்துவதினாலும் இத்தகைய பலம் காணப்படுகிறது. மரணத்தாலோ பட்டயத்தாலோ அல்லது பயமுத்தலாலோ இரத்த சாட்சியாலோ கர்த்தரின் அன்பிலிருந்து நம்மை பிரிக்க முடியாது.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்களுமானவர். மேலும் அவர்கள் கிறிஸ்துவின் மக்களாவர். கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்கள் கிறிஸ்துவால் நேசிக்கப் பட்டவர்களுமாவர். ஆனால் சில மக்கள் கிறிஸ்துவின் நிறைவான அன்பை வெறும் உணர்ச்சி பூர்வமான அன்பாக மாற்றி விடுகின்றனர். அவரின் சிலுவை மரணத்தை மட்டுமே நோக்கி பார்த்து அதனால் துன்புற்று அவருடைய பாடுகளால் அழுகின்றனர். ஆனால் மனித உணர்ச்சிகள் இரவுக்குள்ளாக மாறிப் போகும்.
நம்முடைய உணர்வுகள் ஒவ்வொரு காலையிலும் ஒவ்வொரு இரவிலும் மாறினாலும் நம்மை இரட்சிக்க காரணமாயிருந்த தேவனின் அன்பை எதனாலும் மாற்றவோ, அழிக்கவோ முடியாது. அவருடைய அன்பு எப்போதும் மாறுவதேயில்லை நற்செய்திகாயிய நீர் மற்றும் ஆவியானது இத்தனை வல்லமையுள்ளது. மேலும் கர்த்தரின் நீதி இத்தனை மகத்துவமானது. நம் தேவனிடமிருந்து நம்மை யாராலும் பிரிக்க முடியாது. அவர் நம்மை முழுமையாக்கி நிறைவான அன்பினால் நம்மைத் தரிப்பித்தார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வல்லமை இதுவேயாகும். மேலும் கர்த்தரின் நீதியின் மீதுள்ள நம் விசுவாசத்தின் வல்லமையும் இதுவாகும்.
“நற்செய்தி” என்ற சொல்லின் கிரேக்க வார்த்தை “யூகெல்லியோன்” என்பதாகும். இதனில் “டுனாமிஸ்” இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கிரேக்க வார்த்தையின் பொருள், பலம், வல்லமை, திறமை என்பதாகும். இதனில் இருந்து டைனமைட் என்ற சொல்லைப் பெற்றோம். சிறிய அளவு டைனமைட் ஒரு வீட்டை உடைத்து அதனை புழுதியாக்குவதற்கு போதுமானது. டோமோஹாக் எனப்படும் ராக்கெட் ஒரு போர்க் கப்பலில் இருந்து ஏவப்பட்டால் மிகப் பெரிய கான்கிரீட் கட்டிடத்தை அழித்து அதனை உருக்குலைக்கும் திறமை அதனிடம் இருக்கிறது. அக்கட்டிடம் எத்தனை பாதுகாக்கப்பட்டதாயிருந்தாலும் அந்த ராக்கெட்டின் அழிக்கும் சக்திக்கு முன்னால் தாக்கு பிடிக்க முடியாது.
பொது மக்கள் பயணிக்கும் இரண்டு ஆகாய விமானங்கள் நியூயார்க் நகரிலுள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கட்டிடங்களை தரைமட்டமாக்கின. விமானங்கள் அந்தக் கட்டிடங்களை முட்டும் போது என்ன நடந்தது? விமானங்கள் வெடித்த போது அவற்றிலிருந்து எரிபொருள்கள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதால் அந்த அடுக்கில் இருந்த அனைத்தும் உருகத் தொடங்கின. அந்த அடுக்கிலிருந்து எஃகு கட்டுமானப் பொருட்கள் உருகிவிட்டதால் அந்த அடுக்கு திடீரென இடிந்து விழுந்தது, இப்படி திடீரென விழுந்த மேலடுக்குகளை கீழுள்ள அடுக்குகளால் தாங்க முடியவில்லை. ஆகவே அவை முற்றிலுமாய் அழிந்து போயின. இந்த அடுக்குகள் மெதுவாக விழுந்திருந்தால் அக்கட்டிடம் நொருங்கியிருக்காது. ஆனால் அடுக்குகள் திடீரென வேகமாக விழுந்ததால் அந்தக் கட்டிடத்தைதாங்கியிருந்த அமைப்புகள் உடைந்து போய் சில நொடிப் பொழுதில் அப்பெரிய கட்டிடத்தைத் தரை மட்டமாக்கியது. இவற்றையெல்லாம் நாம் பார்த்தோம்.
கர்த்தரின் நற்செய்தியின் வல்லமையானது நற்செய்தியானது நீர் மற்றும் ஆவியில் இருக்கிறது. கர்த்தரிந் நீதியை உள்ளடக்கியுள்ள வல்லமையும் அதனுள் இருக்கிறது. கர்த்தரின் நீதியை விளக்குவதற்கு இந்த கொடூர சம்பவத்தை கூறுவது பொருத்தமில்லாதது. ஆனால் கர்த்தரின் நீதியால் கொடுக்ப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வல்லமையானது டைனமைட்டைப் போன்றது. அதனால் பாவங்கள் அனைத்தையும் சிதறடிக்க முடியும். நம் தேவன் இப்பூமிக்கு வந்து ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்து மரித்தோரிலிருந்து உயிரோடெழும்பியதன் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டு நம்மை இரட்சித்தது கர்த்தரின் நீதியாகும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது கர்த்தரின் நீதியாகும். இதன் மூலமாக மனிதர்கள் பிரபஞ்சத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை செய்த அனைத்துப் பாவங்களையும் இயேசு அகற்றி விட்டார். இதனால் தான் கர்த்தரின் நீதியான நற்செய்தியின் மீதுள்ள தம விசுவாசத்தினால் விடுதலையானதன் மூலமாக அவரை நேசிப்பவர்களை கர்த்தரிடமிருந்து எதனாலும் பிரிக்க முடியாது. பவுலின் விசுவாசமும் கூட கர்த்தரின் நீதியை விசுவாசிக்கும் ஒன்றாயிருந்தது.
அப்படியானால் சிலுவையின் இரத்தத்தினால் மட்டுமே ஆகிய நற்செய்தியின் மூலம் கர்த்தரின் நீதியைப் பெற்றுக் கொள்ள முடியுமா? நம்மால் முடியாது. சிலுவை இரத்தத்தால் ஆகிய நற்செய்தியை மட்டுமே விசுவாசிப்பதால் கர்த்தரின் நீதியை நமக்கு கொடுக்க முடியாது. இத்தகைய விசுவாசமுடையவர்கள் சிறிதளவு பிரச்சனைக் கொடுக்கப்பட்டாலே இயேசுவின் மீதுள்ள தமது விசுவாசத்தை விட்டுவிடுவர்.
உதாரணமாக அவர்களுடைய பூலோக உடமைகள் பிடுங்கப்பட்டாலோ அல்லது அவர்களின் மத வாழ்வு முறையினால் தம் பணியிடங்கள் பிரச்சனைகளைச் சந்தித்தாலோ அவர்கள் தம் விசுவாசத்தை மிக இலகுவாக விட்டுவிடுவர். இது தவிர்க்க முடியாத விளைவு என்பதோடு அநேக கிறிஸ்தவர்களுக்கும் இது பொருந்தும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காததால் பரிசுத்த ஆவியானவரை தம்மிருதயங்களில் பெற்றுக் கொள்ளாதவர்கள் தம் பாவங்களிலிருந்து விடுதலையாகாதவர்கள் என்பதால் சிறிதளவு பயமுறுத்தப்பட்டாலே பின் வாங்கிப் போய்விடுவர்.
இவ்வுலகில் இன்றைய கிறிஸ்தவம் இத்தனை பலவீனமாக இருந்பதற்கான காரணம்; விசுவாசமானது சிலுவையின் இரத்தத்தினை மட்டுமே உடையதாய் இருப்பதாகும். இத்தகைய விசுவாசம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக கர்த்தரின் நீதியைப் பெற்றுக் கொள்ளவில்லை.
கர்த்தருடைய நீதியைப் பெற்றுக் கொண்டதன் மூலம் அவன்/அவளின் பாவங்களிலிருந்து விடுதலையான ஒரு நீதிமானாகிய விசுவாசியால் அநேக ஆத்துமாக்களுக்காக பணியாற்ற முடியும். அவன்/அவள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதால் பரிசுத்த ஆவியானவர் அவரினுள் இருக்கிறார். மேலும் கர்த்தர் தன் வார்த்தையால் அவனுள்/அவளுள் இருப்பதால் அந்நபரால் அநேக ஆவிக்குரிய காரியங்களைச் செய்ய முடியும். இதனால் அநேக இழந்து போன ஆத்துமாக்களையும் கர்த்தரிடம் திருப்ப முடியும். இது கர்த்தரின் நீதியின் மீதுள்ள விசுவாசமாகும். மேலும் இது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலுள்ள விசுவாசமுமாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது கர்த்தராலே கொடுக்கப்பட்டதேயன்றி, நம்முடைய சொந்த செயல்களினால் கிடைத்ததல்ல. ஆகவே அவருடைய செயல்களை கர்த்தரின் மூலமாக செய்ய வேண்டும்.
வசனம் 36 கூறுகிறது, “உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி” நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களில் இத்தகையவர்கள் இப்பூமியில் வாழும் போது இம்முறைகளினால் துன்புறுத்தப் பட்டவர்களாவர். குறிப்பாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களே மற்றவர்களால் அடிக்கடி வெறுக்கப்படுகிறார்கள். இதில் முக்கியமானவர்கள் தம்மைக் கிறிஸ்தவர்கள் என அழைத்துக் கொண்டு தவறான விசுவாசமுடையவர்களாவர்.
வேறு வார்த்தைகளில் கூறினால் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் மற்ற மதத்தினரை விட சாதாரண கிறிஸ்தவர்களாளே அதிகமாய் வெறுக்கப்படுகிறார்கள். இந்த வசனத்தின் “உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்” என்ற சொற்றொடர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களுக்கு கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தையாகும். நம்முடைய தேவனும் கூட கர்த்தரின் சித்தத்தைப் பின்பற்றி ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்ததினாலே “அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறார்” நம் தேவன் நம்மிடம் வந்து அத்தகைய வாழ்வு வாழ்ந்ததின் மூலம் நம்மை இரட்சித்தார்.
உலகின் எல்லாப் பாவங்களையும் கர்த்தரின் நீதி வென்றது
வசனம் 37 கூறுகிறது இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. இவற்றையெல்லாம் நம்மால் எப்படி வெல்ல முடியும்? கர்த்தரின் அன்பின் மீதுள்ள நம் விசுவாசத்தின் வல்லமையினால் நம் வெற்றியைப் பெறுகிறோம்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவனிடம் கர்த்தரின் வல்லமை இருக்கிறது. ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காதவரிடம் அவனின்/அவளின் இருதயத்தில் பாவம் மட்டுமே இருக்கிறது. பாவத்துடனே கூட இருக்கும் விசுவாசத்தாலும் இரட்சிப்பினாலும் தம்முடைய உணர்ச்சிகளினால் மேலும் கீழும் செல்வதைத் தவிர்க்க முடியாது. ஆகவே அவர்களிடம் வல்லமை இல்லை. ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களிடம் வல்லமை இருக்கிறது. அவர்களாகவே இந்த வல்லமையைப் பெறவில்லை. ஆனால் கர்த்தரால் கொடுக்கப்பட்ட நற்செய்தியின் வல்லமை அவர்களிடம் இருக்கிறது. இந்த வல்லமையினால் அவர்களால் அனைத்து துன்பங்களையும் சோதனைகளையும் எதிர் கொண்டு நிலை நிற்க முடியும். பாவிகளுக்கெதிரான ஆவிக்குரிய போரில் நீதிமான்கள் ஈடுபட்டு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்களுக்கு பிரசங்கிக்க வேண்டும். நீதிமான்கள் நற்செய்திக்காக துன்புறுத்தப்படுவதை இயற்கை நிகழ்வாக எண்ணி அதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். தேவனுக்காக வாழும் வாழ்வு நமது குழுவின் பண்பாகும்.
ஒரு பழமொழி இவ்வாறு கூறுகிறது, ஒரு நாள் படிக்காவிட்டால் கொடிய வார்த்தையைப் பேசுவான். அப்படியானால் நம்மைக் குறித்தது என்ன? கர்த்தருக்காகவும் அவருடைய நற்செய்திக்காகவும் ஒருநாள் கூட வாழாமல் இருந்தால் நாமும் கூட கெட்டுப் போய்விடுவோம். இப்படித் தான் நம் மரணம் வரை நம் வாழ்வை வாழுவோம். ஆனால் கிறிஸ்துவிற்காக நாம் வாழ வேண்டுமானால் நம்மை அர்ப்பணித்து கர்த்தருக்காக துன்பங்களை அனுபவித்து ஆவிக்குரிய தீய சக்திகளுக்கு எதிரான ஒரு ஆவிக்குரிய போரை நடத்தினால் நம்மிருதயங்கள் ஆவிக்குரிய உணர்வினால் நிரப்பப்படும். இதிலிருந்து நாம் புதிய பலத்தைப் பெறுவோம்.
கிறிஸ்தவர்கள் விழுந்து போவதற்கான காரணம், அவர்கள் தேவனுக்காக வாழாததேயாகும். ஆனால் நாம் தேவனுக்காக வாழும் போது நம்முடைய ஆவிக்குரிய பலமும் அதிகரிக்கும். நம்முடைய சரீர ஆரோக்கியமும் பலமும் கூட அதிகரிக்கும்.
வசனம் 38-39 கூறுகிறது, “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.” பவுல் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்ததால் இதனைக் குறித்து உறுதியாயிருந்தான். இந்தஉண்மை நமக்கும் பொருந்துகிறது. மரணத்தினாலோ வாழ்வினாலோ நம்மைக் கிறிஸ்துவிடமிருந்து பிரிக்க முடியாது.
பழைய காலத்தில் உலக அதிகாரங்களைக் கொண்டிருந்த ரோமப் பேரரசர்களைப் போன்றவர்கள் கிறிஸ்தவர்கள் தமது விசுவாசத்தை மறுதலிக்கும் படி அநேக காரியங்களைச் செய்தனர். அவர்கள் தம் விசுவாசத்தை மறுதலித்தால் எல்லாவித கேளிக்கைகளையும், அதிகாரங்களையும் மனைவிகளையும் சொத்துக்களையும் கொடுப்பதாகவும், அவர்கள் தனது அதிகாரத்தை பின்பற்ற வேண்டுமெனவும் அவன் கூறினான். ஆனால் நற்செய்தியை உண்மையாகவே விசுவாசித்தவர்கள் அதிகாரம், சொத்து அல்லது மரியாதை ஆகியவை அளித்த இச்சைக்கு மயங்கவில்லை.
உலகம் அளிப்பவைகளுக்காக மாற்றிக் கொள்ளக் கூடிய ஒன்று நம்பிக்கையல்ல. யாராவது ஒருவர் நமக்கு ஒரு வெற்று காசோலையைக் கொடுத்து “நற்செய்தியை நீங்கள் பரப்புவதை நிறுத்தினால் இந்த காசோலையை உங்களுக்குத் தருகிறேன்” எனக் கூறினால், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையினாலும் கர்த்தர் மீதுள்ள உறுதியான நம்பிக்கையினாலும் “இது உங்களுக்குத் தான் தேவைப்படும். இதனை நீங்களே உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள், என்னைப் பொறுத்த வரையில் இது ஒரு துண்டு காகிதமே” என கூற முடியும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மட்டுமே கர்த்தரின் நீதியை உள்ளடக்கியுள்ள நற்செய்தியாகும்
அநேக மக்கள் என்னிடம் கூறினர், “நீங்கள் எம் விசுவாசமான சிலுவை இரத்தத்தையும், சரியான விசுவாசமாக அங்கீகரித்தால் நாங்களும் உங்கள் விசுவாசத்தை அங்கீகரிப்போம். உங்களை வேதப்புரட்டர் என்றழைப்பதை நிறுத்தி விடுவதோடு உங்களுக்கு உதவியும் செய்வோம்.” இத்தகைய மதத் தலைவர்கள் என அழைக்கப்படுவர்கள் என்னிடமிருந்து இத்தகைய சமரசங்களை எதிர்பார்த்தனர். ஆனால் கர்த்தருடைய நீதியை அவருடைய வார்த்தையால் அளக்கும் போது அது துல்லியமாகவும் நிச்சயமாகவும் இருக்கிறது. தவறானது தவறானதாகும். உண்மையானது உண்மையானதாகம். தவறான விசுவாசத்தினை அங்கீகரிப்பதும் கர்த்தரை எதிர்த்தது புரட்சி செய்வதாகும். ஆகவே என்னால் அவர்களின் விசுவாத்தை அங்கீகரிக்கவும் முடியவில்லை. ஆனால் அவற்றின் தவறுகளை தொடர்ந்து சுட்டிக் காட்டுவேன்.
சிலுவையின் இரத்தத்தை மட்டும் தான் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் உங்களிருதயத்தில் இன்னமும் பாவமிருக்கிறது. நீங்கள் நரகம் செல்ல வேண்டியவர்கள். நான் மிகவும் தீவரமாக இருப்பதாகவும், உங்களுக்கு வளைந்து கொடுக்கவில்லை என ந¨ங்கள் நினைத்தாலும் பரவாயில்லை. உண்மையானது உண்மையே. இத்தகைய வார்த்தைகளினால் மக்கள் என்னைவிட்டுத் தூரமாக இருக்கிறார்கள். துல்லியமாகக் கூற வேண்டுமானால் இத்தகைய மக்களால் என்னை நெருங்க முடியாது. தம்மைப் போலிருப்பதாக எண்ணி அநேக மக்கள் என்னிடம் வருவார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்களிடம் கூறியிருக்கிறேன். “நீங்கள் கள்ள மேய்ப்பர்களும், திருடர்களுமாயிருக்கிறீர்கள், வாழ்வதற்காக கர்த்தரின் பெயரை வியாபாரம் செய்கிறீர்கள். நீங்கள் வெறும் கள்ளர்கள்.” இத்தகையவற்றைக் கூறும் போது என்னை விரும்புவது யார்? ஆனால் இல்லை என்பது இல்லை. இதனால் தான் நான் இத்தனை உறுதியாகவும் என் நிலையை மாற்றாமலும் இருக்கிறேன்.
சிலுவையின் இரத்தத்தை மட்டுமே நான் விசுவாசித்தால் அவர்கள் எனக்கு இன்னின்ன அதிகாரங்களைத் தருவதாக கூறி என்னை சோதித்திருக்கிறார்கள். ஆனால் மேற்கண்ட வசனம் “நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும்” எனக் கூறுவதைப் போன்று நமக்கு அதிகாரங்களோ, உயரமோ, ஆழமோ தேவையில்லை. சில ஏமாற்றுப் பேர்வழிகளிடம் இருக்கும் சுகமாக்கும் அதிகாரம் நமக்கு வேண்டியதில்லை. மறுபடியும் பிறந்தவர்களாகிய நமக்கு அத்தகையவைகள் தேவையில்லை, நாம் அதனை விரும்புவதும இல்லை.
நம் தேவனாகிய இயேசு கிறிஸ்துவிற்குள்ளாக இருக்கும் கர்த்தரின் அன்பிலிருந்து நம்மை படைக்கப்பட்ட எதனாலும் பிரிக்க முடியாது எனவும் இந்த வசனம் கூறுகிறது. இந்தபிரபஞ்சத்தில வேறு ஜீவராசிகள் இருந்தாலும் நம்மை இரட்சித்த கர்த்தரின் அன்பிலிருந்து அவற்றால் நம்மைப் பிரிக்க முடியாது.
வேறு கிரகங்களிலும் மக்கள் இருக்கிறார்கள் என்பதை சில கிறிஸ்தவர்கள் விசுவாசிக்கின்றனர் அநேக போதகர்களும் கூட அவர்களிருப்பதை விசுவாசிக்கிறர்கள். ஆனால் இத்தகைய வேற்று கிரக மனிதர்கள் கிடையாது. நான் வேதாகமக் கல்லு¡ரியில் படித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு கிரேக்கம் கற்றுக் கொடுத்த ஒரு பேராசிரியர் வேற்று கிரகங்களில் மனிதர்கள் இருப்பதாக நம்பினார். ஆகவே அவரிடம் நான் கேட்டேன். உங்கள் விசுவாசத்தை வேத வசனங்களுடன் தொடர்பு படுத்தி அதனை நிருபிக்க முடியுமா? என் கேள்விக்கு அவரால் எந்த பதிலையும் எடுத்து வர முடியவில்லை. அங்கு வேற்றுக் கிரக உயிரினங்களே இல்லை. கர்த்தர் இந்த உலகை இத்தனையாய் நேசித்தமையால் அவர் தனது ஒரே பேறான குமாரரை நமக்குத் தந்தார். வேறு உயிரினங்கள் வேறு கிரகங்களில் இருந்தார். இது இயேசுவானவர் இந்த பூமியில் தான் பிறக்க வேண்டுமென்பதில்லை.
ஆராய்சிக்காக மிகப் பெரிய முதலீடுகளைச் செய்து நம்மால் ஏற்கனவே சந்திரனுக்கு செல்ல முடிந்தது. நம்முடைய விண்கலங்கள் செவ்வாய் கிரகத்திற்கும் ஏற்கனவே சென்றுள்ளன. ஆனால் இதுவரை பூமிக்கு வெளியே உயிரினங்கள் இருப்பதற்கான எந்த ஒரு அத்தாட்சியையும் கண்டு பிடிக்கவில்லை. மனிதர்கள் விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப ரீதியாக எத்தனையாய் வளர்ந்தாலும் நாம் எத்தனையாய் பிரபஞ்சத்தைத் தேடினாலும் வேற்று கிரக மனிதர்களை நாம் காணப் போவதில்லை என வேத வசனங்களின் அடிப்படையில் மிக உறுதியாக கூறுகிறேன். நம் தேவனாகிய இயேசு கிறிஸ்துவிற்குள் உள்ள கர்த்தரின் அன்பிலிருந்து படைக்கப்பட்ட எதனாலும் நம்மை பிரிக்க முடியாது என வேதாகமம் கூறுகிறது. அப்படியானால் இந்த கர்த்தரின் அன்பு என்பதென்ன? இது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தவிர வேதொன்றுமில்லை. இது கர்த்தரின் அன்பாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நம்மை இரட்சித்து பாவமில்லாதவர்களாக்கிய இரட்சிப்பு கர்த்தரின் அன்பைத் தவிர வேறில்லை. இந்த அன்பிலிருந்து எதனாலும் நம்மை பிரிக்க முடியாது.
அதிகாரம் 9இல் நம்பிக்கையைக் குறித்து பவுல் மீண்டும் பேசுகிறான். ஆனால் அதிகாரம் 8இன் முடிவில் நம்பிக்கை அதன் உச்சியை எட்டுகிறது. ரோமர் புத்தகத்தின் முதலாம் அத்தியாயத்திலிருந்து எட்டாம் அத்தியாயம் வரை ஒரு கருப் பொருள் உள்ளது. இதன் கடைசி அதிகாரமாக எட்டாம் அதிகாரத்தில் நம்பிக்கை தனது உச்ச நிலையை அடைகிறது. அதிகாரம் 8இல் கர்த்தரின் வார்த்தை நமக்கு கூறுவதைப் போல் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசவாசிப்பவர்களால் கர்த்தரின் அன்பிலிருந்து பிரிபட முடியாது.
ஆயினும் இப்படி விசவாசிக்காதவர்களால் இப்படி செய்ய முடியாது. தற்காலிகமாக அவர்களால் தேவனுக்காக வாழ முடியும். ஆனால் அவர்களுடைய மரணம் வரை அவர்களால் தம் விசுவாசத்தைக் காத்து அவருக்காக வாழ முடியாது. மதப் பிரகாரமாக 10, 20 வருடங்கள் அவர்கள் வாழலாம். ஆனால் அவர்களுடைய விசுவாசம் சிறிது சிறிதாக குறைந்த கடைசியில் மறைந்துவிடும். ஆகவே இது அவர்களை கர்த்தரிடமிருந்து பிரித்து விடும். மேலும் இதன் பிறகு கர்த்தருக்கும் அவர்களுக்கும் எச்சம்பந்தமும் இராது. அவர்களுடைய செயல்களின் அளவு குறைவதில்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவின் மீதான அவர்களின் இருதயங்களில் இருக்கும் அன்பு அவர்களிடமிருந்து மறைந்து போகும். அவர்களுடைய மனங்களில் பரிசுத்த ஆவியானவர் இல்லாததால் அவர்களுடைய இருதயங்களிலும தேவனுக்கான அன்பு இராது. சுருக்கமாக கூறினால் அவர்கள் இருதயத்தில் பாவமிருக்கிறது.
நாட்கள் செல்லச் செல்ல இரட்சிப்பின் அன்பு எத்தனைச் சிறந்தது என்பதையும் அது எத்தனை ஆழமானது என்பதையும் கண்டு கொள்வோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமான தனது அன்பினால் தேவன் நம்மை இரட்சித்தார். நான் முதன் முதலாக தேவனை சந்தித்த போது கிறிஸ்துவின் அன்பைக் குறித்த எனது உணர்ச்சிகளின் ஆழம் அமைதியாக இருந்தது. ஒரு ஏரியில் எறியப்பட்ட கல் எப்படி சிறிய கண்டுபிடிக்க முடியாத அலையை உருவாக்குகிறதோ அப்படித் தான் இதுவுமிருந்தது. இயேசு என்னுடைய எல்லாப் பாவங்களையும் அகற்றிவிட்டார் என்பதும், இப்படியாக நான் பாவமற்றவனாயினேன் என்பதும் அமைதியான உணர்ச்சியாக என்னுள் வெளிப்பட்டது. ஆனால் அப்போதிலிருந்து நற்செய்தியைப் பிரசங்கிக்கும் ஒரு வாழ்வை வாழத் தொடங்கினேன். இதன் பிறகு என்னிருதயத்தில் அலையானது மிகப் பெரியதாகவும் ஆழமாகவும் மாறிற்று. இது என்னிருதயத்தில் குண்டு வெடித்ததைப் போன்றதாயிற்று.
சிலுவையின் இரத்தத்தை மட்டுமே விசுவாசிக்க வேண்டுமென நமக்கு கூறியது யார்? பவுல் இதனைக் கூறினானா? ரோமர் புத்தகத்தில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து பவுல் தெளிவாகவும், சந்தேகத்திற்கிடமில்லாமலும் கூறினான், “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்” (ரோமர் 6:3-4).
இந்த நற்செய்தியாகிய நீர் மற்றம் ஆவியானது மகத்துவமானதும், முற்றிலும் நிறைவானதுமாயும் இல்லையா? ஒருவருடைய விசுவாசம் எத்தனை சிறியதாயிருந்தாலும் அவர் நற்செய்தியாகிய நீர் மற்றம் ஆவியை விசவாசித்தால் அவன்/அவள் பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுவார். உங்களிடம் எத்தனைக் குறைபாடுகள் இருந்தாலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் உங்கள் விசுவாசம் முழுமைப்படுத்தப்பட்டது. நீங்கள் எத்தனை பலவீனமுள்ளவர்களாயிருந்தாலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலுள்ள உங்கள் விசவாசத்தினால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். நம்மிடம் எந்தவித வல்லமையும் இல்லாவிட்டாலும் கர்த்தருடனே கூட கர்த்தருக்காக வாழ்ந்தால் நம்மிருதயங்களிலுள் ளஎல்லா அழுக்குகளும் அகற்றப்படும்.
ஆனால் தொடக்கத்திலிருந்தே விசுவாசிக்காதவர்கள் முடிவில் கர்த்தருக்கு எதிராக மாறி அவரை விட்டுவிடுவர். அவர்கள் இந்த நற்செய்தியைக் கேட்டு 10 வருடங்கள் வாழ்ந்திருந்தாலும் அது பொருட்டல்ல. தம்முடைய கண்களை மூடி தம் காதுகளை அடைத்துக்கொண்டு கர்த்தரின் உண்மையை கேட்கக் கூடாதெனவும் பார்க்கக் கூடாதெனவும் தீர்மானித்தவர்கள் மிகவும் முட்டாள்களாவர். அவர்கள் கர்த்தரின் ஆசீர்வாதத்தை புறம்பே தள்ளிவிட்டு தம்முடைய மரணத்தை நோக்கிச் செல்லுகின்றனர். அவர்கள் தம் பாவங்களால் கிறிஸ்துவை அன்றாடம் சிலுவையில் அறைகின்றனர். அங்கு இயேசுவின் ஞானஸ்நானம் இல்லாவிட்டால் அவர் சிலுவையில் மரிக்க வேண்டிய அவசியமே இல்லை.
ஓவ்வொரு நாளும் செல்லுகையில் இந்த நற்செய்தியானது எத்தனை மகத்துவமானது எனவும் நிறைவானது எனவும் நான் உணருகிறேன். நான் அதிகம் பலவீனமுடையவனாகும் போது நம் தேவனுடைய அன்பானது எத்தனை ஆச்சரியமானதும் முபமையானதும் ஆகும் என்பதை உணருகிறேன். இது நற்செய்தியில் காட்டப்பட்டுள்ளது. இதற்காக அதிகமதிகமாய் நான் நன்றி கூறுகிறேன். இந்த நற்செய்தியை அதிகமாய் நான் பிரசங்கிக்கும் போது எனது சத்தம் அதிகமாகிறது. இந்த நற்செய்தியை அதிகமாய் பிரசங்கிக்கும் போது மிகவும் உறுதியானவனாகிறேன். இந்த உண்மை நற்செய்தியை அதிகமாய் பிரசங்கிக்கையில் இன்னமும் அதிகமாய் உணர்கிறேன்.
நீங்கள் மறுபடியும் பிறந்தவர்களாயிருந்தாலும் கூட கர்த்தரின் வார்த்தையை நீங்கள் விசுவாசிக்காமலும் அவருக்கு ஊழியம் செய்யாமலும் இருக்கும் போது உங்கள் மனதில் கெட்டவைகள் முளைக்கத் தொடங்கும். இந்த கெட்டவைகளினால் உங்கள் மனம் அழியத்தொடங்கும். இப்படி நடக்கும் போது உங்கள் துதிப் பாடல்களைப் பாடி மீண்டும் யொகோவாவை நினையுங்கள். கர்த்தருக்கு துதிப் பாடல்களை ஏறெடுக்கும் போது உங்கள் உற்சாகத்தை மீண்டும் பெற முடியும்.
உங்கள் மனதில் உள்ள அழுக்குகளை உதறிப் போட வேண்டும். கர்த்தருடைய வார்த்தையால் அதனை நிறைத்து உங்களிருதயத்தை புதிதாக்குங்கள். நம்முடைய இருதயங்கள் ஏற்கனவே சுத்தமாயுள்ளன. ஆனால் உலகிலுள்ள அழுக்குகள் நம் மனதிற்குள் நுழைந்து நம்மைக் குழப்பவும் திசைத் திருப்பவும் முயலும் போது நம்மால் கர்த்தரை ஆராதித்து தேவனுக்கான துதிகளைப் பாடுவதின் மூலம் மீண்டுமாக அவரிடம் ஜெபிக்க முடியும். இப்படியாக நம் இருதயங்களை புதிதாக்கி மீண்டும் உயர்த்த முடியும்.
நாம் எந்த நிலையில் இருந்தாலும் கர்த்தரைத் துதிப்பது மகிழ்ச்சியானதும், புல்லரிக்கச் செய்வதுமான ஒரு அனுபவமாகும். விடுதலையானவர்களின் மனங்களில் எப்பாவமும் இல்லை. ஆகவே துதித்தலும் மகிழ்தலும் இயற்கையாகவே நம் மனங்களில் வருகிறது. நம் மகிழ்ச்சியான இருதயங்களிலுள்ள துதிப்பாடல்களால் நம் மனங்களில் வளரும் அழுக்குகளை மறையச் செய்கின்றன.
சில சமயங்களில் நம் பலவீனங்கள் வெளிப்படுகின்றன. வெவ்வேறு சமயங்களில் நம் சிந்தனைகளும் உணர்வுகளும் இலகுவாக மாறிவிடுகின்றன என்பதால் கிறிஸ்துவுக்குள்ளான சகோதர்களுடன் நம் நல்ல மனநிலையிலும் சந்தோஷமாகவும் இருந்தாலும் நாம் மட்டும் இருக்கும போது அசுத்தமானதும் அழுக்கானதுமான சிந்தனைகள் நம்மிடம் இருக்கும். இதனால் தான் பவுல் தனது சொந்த மாமிசத்தைப் பார்க்கும் போது கூக்குரலிட்டான், “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.”
அவன் தன் சரீரத்தில் பலவீனமாயிருந்தாலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டதால் பவுல் முபமையடைந்தான். இப்படிப்பட்பட நபர் பவுல் மட்டுமே தானா? நானும் கூட பவுலைப் போன்றவனாகவே இருக்கிறேன். நீங்களும் அவனைப் போன்றவரில்லையா?
உலகப்படியான மக்கள் ஒன்று சேரும் போது மனிதர்கள் குடிக்க விரும்புவர்கள். அடிக்கடி தம் வேலைகளைக் குறித்து பேசுவார்கள். யார் பதவி உயர்வு பெற்றது யார் பதவி உயர்வு பெறவில்லை என்பது அவர்கள் பேச்சாயிருக்கும். அதே நேரத்தில்; பெண்கள் தமதுகணவர்களைப் பற்றியும், பிள்ளைகளைப் பற்றியும், குடும்பங்களை பற்றியும் பேசிக் கொண்டிருப்பர். ஆனால் நீதிமான்களுக்கிடையேயான உரையாடல்கள் உலகப் படியான மக்களின் உரையாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நாம் நம்முடைய உணவை ஒன்றாக சாப்பிட்டு கொண்டிருந்தாலும் உலகம் முழுவதும் இரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்களைக் குறித்து நாம் பேசுவோம். இந்தியாவில் ஜப்பானில், ஜரோப்பாவில், ஆபிரிக்காவில், அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றை எண்ணி கர்த்தரைத் துதித்து நம் மனதினால் ஒருவருடன் ஒருவர் உறவாடுகிறார்.
ரோமர் புத்தக்ததை நாம் வாசிக்கும் போது பவுலின் சொந்த விசுவாசத்தை நம்மிருதயங்களில் அனுபவித்து அதனைப் பகிர்ந்துகொள்ள முடியும். கர்த்தரால் கொடுக்கப்பட்ட இரட்சிப்பானத எத்தனை மகத்துவமானது என்பதையும் நம்மால் கண்டு கொள்ள முடியும். நற் செய்தி எத்தனை அபூர்வமானது என்பதை நம்மால் உணர முடியும். இவ்வனங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும் மேலும் அந்த சொற்களில் மறைந்திருக்கும் பொருளையும் கண்டுபிடிக்க முடியும். நம் தேவனின் இரட்சிப்பு எத்தனை முபமையானதாயும் நிறைவானதாயும் இருக்கிறது என நாம் உணருவதால் அவருடைய நீதியைப் புகழாமல் நம்மால் இருக்க முடியாது.
இப்பொழுது இம்முழு உலகமும் மாறுவதாயிருந்தாலும் நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை இரட்சித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது மாறுதலடையாததாயிருக்கும். கிறிஸ்துவின் அன்பு நம்மை இரட்சித்தமையாலும் இந்த அன்பு நம்மை கைவிடாததாலும் நமக்குள் அது இருப்பதாலும் நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம்மிருதயங்களை உலகிலிருந்து திருப்பி மீண்டும் கர்த்தரை நோக்குவதேயாகும். நாம் பலவீனமானவர்கள். இந்தபலவீனத்தால் சில சமயங்களில் உலகின் வழிகளில் விழுந்து போகிறோம். ஆனால் ஒவ்வொருமுறையும் இப்படி நடக்கும் போது கர்த்தரை நோக்கி நம் மனதைத் திருப்பி நம் தேவன் நம் இரட்சிததார் என்ற உண்மையை விசுவாசிக்க வேண்டும். நம் மாமிசமானது இன்னமும் மாற வேண்டும். அது இன்னமும் பாவச் சட்டத்தின் கீழ் வாழ்கிறது. ஆகவே நாம் தொடர்ந்து நம் மாமிசத்ததை மறுத்து நம் ஆவிக்குரிய சிந்தனைகளால் நாம் வாழ வேண்டும். நம்முடைய இருதயங்களில் அழுக்குகள் வளராமலிருக்க வேண்டுமானால் கர்த்தரிடம் நாம் திரும்பி அவருடைய நீதியை நாம் துதிக்க வேண்டும்.
இந்த நற்செய்தியாகி நீர் மற்றும் ஆவியானது எத்தனை வல்லமையுள்ளது என்பதை இப்போது நீங்கள் உணர்ந்து கொள்கிறீர்களா? ரோமர் புத்தகமானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் அடிப்படையில் அமைந்ததால் இந்த நற்செய்தியை முதலில் விசுவாசிக்காமல் கர்த்தரின் வார்த்தையை நம்மால் திறக்க முடியாது.
இந்த வார்த்தையின் இரகசியங்களைத் திறந்து அதனைப் பார்க்க அனுமதித்த தேவனுக்கு நான் நன்றி கூறுகிறேன். கிறிஸ்துவின் அன்வாகிய கர்த்தரின் நீதியிலிருந்து யாராலும் நம்மைப் பிரிக்க முடியாது. கர்த்தரின் நீதியை நீங்கள் விசுவாசிக்க விரும்பினால் யோவான் இயேசுவிற்களித்த ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் உங்கள் விடுதலையாகவும் இரட்சிப்பாகவும் விசவாசியுங்கள். அப்பொழுது நீங்களும் கூட கர்த்தரின் நீதியைப் பெற்றுக் கொள்வீர்கள்.
நம் கர்த்தரின் நீதியின் ஆசீர்வாதங்கள் உங்களுடனே கூட இருப்பதாக.