நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது இஸ்ரவேலர்களுக்கும் புறஜாதியாருக்குமானது
தன்னுடைய சொந்த நாட்டினரை எண்ணி தான் பெரிதான கவலையுடன் இருப்பதாயும் தொடர்ந்து துக்கப்படுவதாகவும் பவுல் ஏன் கூறினான்? பவுலிடம் தன் சகோதரர்களைக் குறித்த ஒரு ஆவல் இருந்ததே இதன் காரணம். அவர்கள் அவனிருதயத்திற்கு மிகவும் இதமானவர்களாயிருந்தனர். அதற்காக தான் சபிக்கப்பட்டு கிறிஸ்துவிடமிருந்து துண்டிக்கப்பட்டாலும் பரவாயில்லை என அவன் எண்ணினான். அவனுடைய சொந்த மாமசித்தின் படி தன் சொந்த நாட்டினர் இரட்சிக்கப்படுவதை அவன் விரும்பினான்.
இந்த கடைசி காலத்தில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை முழு உலகிற்கும் பிரசங்கிக நாம் மிகப் பெரிய ஆவலுடையவர்களாயிருக்கிறோம். இந்த சத்திய நற்செய்தியை பரப்புவது கர்த்தரின் பெரிதான நோக்கமாயிருக்கிறது. அதே நேரம் இது மறுபடியும் பிறந்த விசுவாசிகளின் மிக முக்கிய இல்காகவும் இருக்கிறது. கடைசி நாட்களில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இஸ்ரவேலர்கள் ஏற்றுக் கொள்வார்களா இல்லையா என்பது நமது கவனத்தைக் கவருவதாயிருக்கிறது. இஸ்ரவேலர்களின் சார்பாக நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்கள் இரட்சிக்கப்படுவர். அவர்கள் நற்செய்தியை ஏற்றுக் கொள்ளும் போது நம் தேவனின் இரண்டாவது வருகை சமீபித்திருப்பதை நம்மால் அறிந்து கொள்ளலாம்.
இவ்வருடத்திற்கான எனது ஜெபத்தலைப்பு உலக நற்செய்திக்காக ஜெபிப்பதும் இஸ்ரவேலர்கள் உண்மையான நற்செய்தியை ஏற்றுக் கொள்ளவதுமாகும். இஸ்ரவேலில் அவர்களுடைய சொந்தமக்களே கர்த்தரின் ஊழியர்களாய் இருக்க வேண்டுமெனவும் நான் ஜெபிக்கிறேன். ஒருமுறை கர்த்தர் இஸ்ரவேலர்களுக்கு தனத சட்டத்தைக் கொடுத்தார். மேலும் அவர் தன்னுடைய கண்களுக்கு முன்பாக அவர்களை ஆசாரியர்களின் ராஜ்யமாக்கினார். மாமிசத்தின் படி கிறிஸ்துவும் கூட இஸ்ரவேலர்களிலிருந்து தோன்றினார். ஆயினும் அவர்கள் அவரை விசுவாசிக்க மறுத்தனர். இப்போதும் கூட கர்த்தரின் சித்தத்திற்கு எதிராக நிற்கின்றனர்.
தேவன் மீண்டும் வருகையில் விசுவாசத்தைக் காண்பது கடினமாயிருக்கும் என அவர் நம்மிடம் கூறினார்
எருசலேமில் தோன்றிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது முழு உலகமும் பரவ வேண்டும் என்பது கர்த்தரின் சித்தமாகும். ஆயினும் இக்காலத்தின் மக்களின் இருதயங்கள் கடினமாயுள்ளன. உண்மையைத் தேடுவதற்கு பதிலாக அநேக மக்கள் சிதறிப் போயுள்ளனர்.
அண்மையில் “கிறிஸ்துவின் கடைசி சோதனை” என்ற திரைப்படம் கொரியாவில் திரையிடப்பட்டது. இது இயேசுவைத் தவறாகப் பிறந்தவராக சித்தரித்தது. அது முற்றிலும் தேவ தூஷனத்தால் நிறைந்தது. அதன் முக்கியமான செய்தி யாதெனில் இயேசு கர்த்தரல்ல, அவர் சாதாரண மனிதரே என்பதாகும். புத்தர் என அழைக்கப்படும் இந்திய இளவரசராகிய சித்தார்த்தர் என்பவரைப் போன்றவர் இயேசு என இது கூறியது. இயேசு நமது கர்த்தராகவும் இரட்சகராகவும் இருக்கிறார் என்ற உண்மையை இத்திரைப்படம் மறுத்தது. இதனால் தான் கர்த்தர் கூறினார், “மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ?” (லூக்கா 18:8).
நாம் விசுவாசிக்கும் இயேசு கிறிஸ்து கர்த்தராவார். அவர் படைத்தவைகளிலிருந்து உயர்ந்தவர். நித்திய காலமாக புகழப்படத்தக்கவர். இஸ்ரவேலில் பிறந்த அவர் யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் மனிதர்களில் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டு சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து மூன்றாவது நாளில் மரித்தோரிலிருந்து உயிரோடெழும்பி அவரை விசுவாசிக்கும் அனைவருக்கும் இரட்சகரானார். கர்த்தரின் நீதியாகிய நம் தேவன் தன்னை விசவாசிப்பவர்களை நீதிமான்களாக்குவதன் மூலம் நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார்.
ஆபிரகாமின் சந்ததியினரான இஸ்ரவேலர்கள் எத்தனைப் பேர் இருந்தாலும் இயேசுவை விசுவாசிப்பவர்களால் மட்டுமே கர்த்தரின் பிள்ளைகளாக முடியுமென பவுல் நம்மிடம் கூறினார்.
எதிர்காலத்தில் அநேக சோதனைகளையும் உபத்திரவங்களையும் இஸ்ரவேலர்கள் சந்திப்பர். முடிவின் போது நம் தேவனைத் தமது இரட்சகராக அவர்களின் சிலர் விசுவாசிப்பது கர்த்தரின் சித்தமாகும். இஸ்ரவேர் உட்பட உலகின் எல்லாப் பாவங்களையும் தேவன் அகற்றிப் போட்டாலும் இன்னமும் சிலர் இயேசுவைத் தமது இரட்சகராக விசுவாசிக்க மறுக்கிறார்கள்.
நீங்கள் பலவீனமானவரா? நம்மில் சிலர் மற்றவர்களைவிட பலவீனமானவர்களாகவோ பலமுள்ளவர்களாகவோ நம் தேவன் இவ்வுலகிற்கு வந்து தனது ஞானஸ்நானத்தினால் தமது பாவங்களைத் தனது தோளில் சுமந்து சிலுவையில் மரித்ததின் மூலம் நமக்காக அவர் தீர்க்கப்பட்டு தண்டிக்கப்பட்டார் என விசுவாசிப்பதின் மூலம் மட்டுமே பாவங்களிலிருந்து விடுதலையான நம்மால் கர்த்தரின் பிள்ளைகளாக முடியும். நம்மை கர்த்தரின் பிள்ளைகளாகவும், பாவமற்றவர்களாகவும் மாற்றிய கர்த்தானே வல்லமையை நாம் துதிக்கவும் விசுவாசிக்கவும் வேண்டும். நம் தேவன் உண்மையாகவே மகத்துவமானவர்.
மக்களினால் அனைத்தும் உருவாகின என சில மக்கள் எண்ணுகின்றனர். உதாரணமாக சட்டமானது மனிதர்களினால் உருவாக்கப்பட்டு அவர்களுக்காக உள்ளது என அவர்கள் எண்ணுகின்றனர். ஆயினும் அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்படவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். கர்த்தரின் சித்தத்தினால் அவையாவும் சாத்தியமாகின. கர்த்தர் இவ்வுலகையும் பிரபஞ்சத்தையும் படைத்தார். நம்மை ஆளுகைச் செய்யும் மனிதர்களின் சட்டங்கள் கூட அடிப்படையில் கர்த்தரின் சித்தப்படி அமைந்ததேயாகும்.
கர்த்தர் அனைத்திலும் செயல்புரிவதாலும் அனைத்தும் அவரின் சித்தப்படி செயல் புரிவதாலும் எல்லாவற்றிலும் அவருடைய நீதியை நம்மால் கண்டு கொள்ள முடியும். நாம் பலவீனர்களாயிருக்கும் போதும் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்யும் போதும் நம்முடைய பாவங்களினால் நாம் அவரிடமிருந்து துண்டிக்கப்பட்டும் போதும், இயேசு கிறிஸ்துவை நம்மிடம் அனுப்புவதாக கர்த்தர் வாக்குத் தத்தம் செய்தார். இயேசுவை அனுப்பியதின் மூலமாகவும் அவரின் ஞானஸ்நானத்தின் மூலமாகவும் அவர் தன்னுடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார். ஞானஸ்நானத்தினால் உலகின் பாவங்களிலிருந்து நம்மை விடுதலைச் செய்தார்.
இப்போது நற்செய்தியாகிய நீர் மற்றம் ஆவியானது உலகின் ஒவ்வொரு மூலைக்கும் பரவும் போது கர்த்தரின் முதலாவது திட்டம் நிறைவேற்றப்படும். உலகில் ஙவ்வொரு காரியங்களும் எப்படி மாறி வருகின்றன என நாம் காணும் போது அமெரிக்காவும் இஸ்ரவேலும் நடுவில் இருப்பதை நம்மால் காண முடியும். கர்த்தர் தலையிடாவிட்டால் இன்னுமொரு உலக யுத்தம் மிகவும் சாத்தியமே.
உலக வர்த்தக மைய கட்டிடங்கள் நொறுங்கிய போது அதன் தாக்கத்தை முழு உலகமும் உணர்ந்தது. இந்த காலத்தில் உலகில் மீண்டும் போர் நிகழ்ந்தால் நமது கதி என்னவாகும்? இன்னொரு உலக யுத்தத்திலிருந்து நம்மால் நிச்சயமாக மீள முடியாது. நம்மால் உருவான மொத்த அழிவுகளில் இருந்து இயற்கையாலும் கூட மீள முடியாது. உலகம் சமாதானத்துடனிருக்கும் போது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை முழு உலகத்திற்கும் பிரசங்கிக முடியுமென்பதால் நீங்களெல்லாம் ஜெபிப்பீர்களென நம்புகிறேன். உலகில் சமாதானமில்லாவிட்டால் நம்மால் அப்படி செய்ய முடியாது என்பது நமது கவலையாகும். சமாதானத்திற்காக நாம் ஜெபிக்க வேண்டும். யுத்தத்தையும் பயங்கரவாதத்தையும் ஒழிக்க பாடுபட வேண்டும்.
மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களால் மனிதனின் பாவங்களை அழிக்க முடியாது. இயேசு கிறிஸ்துவால் மட்டுமே நம் பாவங்களிலிருந்து நம்மை விடுதலையாக்க முடியும். யோவானிடமிருந்து அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாகவும் அவரின் சிலுவை இரத்தத்தின் மூலமாகவும் மட்டுமே நம் பாவங்கள் துடைக்கப்பட்டு தீர்க்கப்பட முடியும். கர்த்தரின் நீதியை விசவாசிப்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆசீர்வாதம் கொடுக்கப்படுகிறது. நம் பாவங்களிலிருந்து விடுதலையாவதற்கான ஒரே வழி கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் விசுவாசிப்பது மட்டுமே. வேறு வழிகளே இல்லை. மற்ற மத சம்பந்தப்பட்ட மக்கள் விரும்புவதைப் போல சடங்காச்சாரப்படி மனம் வருந்தி ஜெபிப்பதினால் நாம் பாவ நிவர்த்தியடைவதில்லை. மாறாக கர்த்தருடைய நீதியை விசுவாசித்து நம் பாவங்களை நிவர்த்தி செய்வதே ஒரே வழியாகும். இது நம்மை முற்றிலுமாக நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாக்கிற்று. இயேசு அனுப்பப்பட்டதன் மூலம் இந்நிலையை அடைந்தோம். அவர் தன் ஞானஸ்நானத்தின் மூலமும் சிலுவை மரணத்தின் மூலமும் நம் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்த்தார்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் உண்மையை விசுவாசிப்பதின் மூலம் நம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டோம்
உலகின் ஒவ்வொரு மூலையிலும் இந்த சத்தியம் பிரசங்கிக்கப்பட வேண்டும். இந்த உண்மை விசுவாகிக்காவிட்டால் இஸ்லவேலின் மக்களுக்கும் புறஜாதியாருக்கும் இது பாவமாகும் என்பதை நாம் அறிய வேண்டம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நம் அனைவரும் விசுவாசிக்க வேண்டும்.
இஸ்ரவேலர் மற்றும் புற ஜாதியார் ஆகிய இவ்விரு மக்களும் இவ்வுலகில் வாழும் போது பாவம் செய்வதை தவிர்க்க முடியாது. ஆனால் நம் தேவன் தன் ஞானஸ்நானத்தின் மூலமாக ஒரே தரமாக இப்பாவங்கள் அனைத்தையும் பொறுப்பேற்றுக் கொண்டார். இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகிய சத்தியத்தை விட இலகுவானதும் தெளிவாதுமான சத்தியம் வேறெதுவும் இருக்கிறதா? யோவான் ஏன் இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்தான்? யோவானால் அவர் ஞானஸ்நானம் பெற்று சிலுவையிலறையப்பட்டதால் நம் எல்லாப் பாவங்களையும் அவரால் ஒரே தரமாக அகற்ற முடிந்தது. இந்த சத்தியத்தை விசுவாசிக்காததாலும் அதனைத் தம்மிருதயங்களில் ஏற்றுக் கொள்ளாததாலும் அவர்கள் தம் பாவங்களின் பொருட்டு தம் சொந்த அழிவை நோக்கிப் போயக் கொண்டிருக்கின்றனர்.
“இப்படி” (மத்தேயு 3:15) இயேசு ஞானஸ்நானம் பெற்று எல்லா நீதியையும் நிறைவேற்றினார். இப்படி என்ற வார்த்தை கிரேக்கத்தில் ஹூட்டோஸ் என அழைக்கப்படுகிறது. அதன் பொருள் ‘இந்த வழியாக,` ‘மிகவும் பொருத்தமான,` அல்லது ‘இதைத் தவிர வேறு வழியில்லை` என்பதாகும். ஞானஸ்நானத்தின் மூலம் மனித குலத்தின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டார் என இவ்வார்த்தை காட்டுகிறது. யோவானிடமிருந்து ஞானஸ்நானம் பெறும் போது இயேசுவானவர் உலகின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டதால் சிலுவைக்கு அதனைச் சுமந்து சென்று நமக்காக அவரால் இரத்தம் சிந்த முடிந்தது. முழு மனித குலமும் தன் பாவங்களிலிருந்து விடுதலையாகக் கூடிய இந்த பாவ நிவர்த்தியைக் குறித்த சத்தியம் இதுவாகும் என நாம் அறிய வேண்டும்.
நம் தேவன் கூறினார், “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமும் கர்த்தரின் சத்தியமாகும், அது நம்மை நம் பாவங்களிலிருந்து விடுதலையாக்கிற்று. இது முற்றிலும் கர்த்தரின் எழுதப்பட்ட வார்த்தையின் அடிப்படையில் அமைந்தது. நற்செய்தியாகிற நீர் மற்றும் ஆவியுடனே கூட இந்த பாவ நிவர்த்தியின் சத்தியமும் நித்திய காலமாக இருக்கும். இயேசவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றின் மூலமாக பாவிகளை பாவ நிவர்த்தி செய்ய பிதாவாகிய கர்த்தர் தீர்மானித்தது அவரின் சித்தமாகும். இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் நமது விடுதலைக்காக விசுவாசிக்கும் போது கர்த்தர் நமக்காக ஏற்படுத்தியவைகளையும் நாம் விசுவாசிக்கிறோம். சத்தியமாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் போது மட்டுமே நம் பாவங்கள் நிவர்த்திக்கப்படுகின்றன.
இந்த நொடிப் பொழுது சத்தியமாகிய பாவ நிவர்த்தியாகிய கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் உங்கள் விடுதலையாக நீங்கள் விசுவாசித்தால் இப்பொழுதே நீங்கள் நீதிமானாக்கப்படுவீர்கள். மறுபுறம் நீங்கள் இதனை விசவாவிக்கவில்லையெனில் நீங்கள் இன்னமும் பாவியாக இருக்கிறீர்கள், “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி” என்றிருக்கிறது. இயேசு கிறிஸ்துவை நமது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வதின் மூலம் மட்டுமே, நம்முடைய எல்லாப பாவங்களும் மன்னிக்கப்பட்டு நம்மால் கர்த்தரின் பிள்ளைகளாக முடியும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை சிலர் ஏன் விசுவாசிக்க கூடாது என்பதற்கு எக்காரணமும் இல்லை. இந்த பாவ விடுதலையின் நற்செய்தி தேவைப்படாதவர்கள் யாருமில்லை. எல்லோருக்கும் அது தேவை. அவனுக்கு-அவளுக்கு முன்னால் சத்தியத்தின் நற்செய்தியாகிய நிர் மற்றும் ஆவியானது ஏற்படுத்தப்பட்டிருக்கும் போது அதனை ஏன் யாராலும் விசுவாசிக்க முடியாது. அது அவனின்/அவளின் பாவங்கள் சுத்திகரிக்கப்படுவதற்கான அவனின்/அவளின் விருப்பமில்லையா?
உலகம் முழுவதும் உள்ள அநேகர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசவாசித்து அது இன்னமும் பரவும் விதமாக அவர்களும் பிரசங்கிக்கின்றனர். அவர்களில் சிலர் நம் புத்தகங்களை விநியோகிக்கிறோம் என கூறியிருக்கிறார்கள். சிலுவையின் இரத்தத்தை மட்டுமே விசுவாசித்து உங்கள் பாவங்களிலிருந்து விடுதலையாக முடியுமென்றால் இவ்வுலகிலுள்ள அனைவரும் கூட நீதிமானாக்கப்பட்டிருப்பர். பாவத்திலிருந்தும் விடுதலையாகியிரப்பர். ஒருவர் சிலுவையின் இரத்தத்தை மட்டுமே விசுவாசித்தால் அவர் தொடர்ந்து பாவம் செய்கிறார். அவர் அன்றாடம் மனம் வருந்தி ஜெபித்தாலும் இதனை கிரமமாக செய்து வந்தாலும் இயக்கதினூடாக சென்றாலும் இது வெறும் மதச் சடங்காக மாறிவிடும்.
மனம் வருந்தி ஜெபிப்பதின் மூலம் உங்கள் பாவங்களைக் கழுவ நீங்கள் முயற்சி செய்தீர்களானால் கர்த்தருக்கெதிராக ஒரு கொடிய பாவத்தை நீங்கள் செய்கிறீர்கள். ஏனெனில் உங்கள் செயல் கர்த்தரின் நீதிக்கு இழுக்கு ஏற்படுத்துகிறது. இதனை உங்கள் முயற்சிகளால் நிறைவேற்ற முடியாது. ஆனால் இயேசுவின் ஞானஸ்நானத்தினாலும் அவரின் சிலுவைப் பலியாலும் மட்டுமே நிறைவேற்ற முடியும். ஞானஸ்நானம் மூலம் உங்கள் எல்லாப் பாவங்களையும் இயேசு ஏற்றுக் கொண்டு உங்களுக்காக சிலுவையில் தண்டிக்கப்பட்டார்.
இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டால், இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவையின் மரணம் மூலம் உங்கள் பாவ நிவர்த்தி இருக்கிறது என விசுவாசியுங்கள். பாவிகளை அவர்களின் பாவங்களில் இருந்து விடுவிப்பதாக இயேசுவானவர் வாக்குத்தத்தம் செய்தார், யோதான் நதியின் அவர் யோவானால் ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் இரத்தம் சிந்தி கர்த்தரின் நீதியை நிறைவேற்றியதன் மூலம் தனது வாக்குத்தத்ததின் படி வாழ்ந்தார். இந்த உண்மையை விசுவாசிக்காமல் இருக்க என்ன காரணம் இருக்கிறது? இயேவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தையும் உங்கள் பாவ மன்னிப்பாக நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.
இயேசு ஞானஸ்நானம் பெற்ற போது அவர் உலகின் எல்லா பாவங்களையும் தன் மீது எடுத்தக் கொண்டர். என்ற சத்தியத்தை மத்தேயு 3:13-17ல் நாம் காணலாம். தம்முடைய எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட கூடாது என எண்ணுபவர்கள் மட்டுமே இந்த சத்தியத்தை விசுவாசிக்க மறுப்பர். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உண்மையை விசவாசிப்பதால் மட்டுமே உங்களால் கர்த்தரின் பிள்ளையாகவும் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளவும் முடியும் - உங்கள் பாவங்களில் இருந்து உங்களை எதுவும் விடுதலையாக்காது. இந்த சத்தியத்தை விசவாசிப்பதை தவிர வேறு எதுவும் ஆச்சரியமில்லை. கர்த்தரின் பாவ மன்னிப்பை தவிர வேறேதுவும் சிறந்த பரிசு அல்ல. கர்த்தர் நமக்கு அளித்த அநேக பரிசுகளில், நம் பாவங்களின் நிவர்த்தியே எல்லாவற்றிலும் சிறந்த பரிசாகும்.
கர்த்தரின் இரண்டாவது சிறந்த பரிசு, நாம் அரசாளப் போகும், வரப்போகிற ஆயிர வருட அரசாட்சி ஆகும். மூன்றாவது பரிசு பரலோக இராஜ்யத்தில், நித்தியமாக, கர்த்தருடனே கூட நாம் வாழ்வதாகும். இந்த விடுதலையின் சத்தியமானது இஸ்ரவேலருக்கும் பிற ஜாதியாருக்கும் வெளிப்பட வேண்டும் என இந்த கடைசி காலத்தில் கூட கர்த்தர் அதனை அனுமதித்தார்.
வேத வசனங்களில் தீர்க்க தரிசனம் உரைக்கப்பட்டதை போல், கர்த்தருடைய இரண்டு ஊழியர்கள் இஸ்ரவேலர்களில் இருந்து தோன்றுவர், இவர்களின் மூலமாக கர்த்தர் ஆச்சரியமாக அற்புதங்களை நிகழ்த்துவார். இந்த இரண்டு ஊழியர்களின் மூலமாக இஸ்ரவேல் மக்கள் நற்செய்தியாகிய நீர் மற்றம் ஆவியை குறித்து கேட்பர், இவர்களை கர்த்தர் அவர்களிடம் இருந்து உருவாக்குவார், அப்பொழுது இயேசுவே தம் மேசியா என்பதை அநேகர் விசுவாசிப்பர். கர்த்தராகிய இயேசுவே, வாரும், (வெளி 22:20), என யோவான் கூறி காத்திருந்ததை போல நாமும் அந்நாளுக்காக காத்திருக்கிறோம்.
தேவன் மீண்டும் வருவதற்கான சமயம் வருகையில், இந்த சத்தியத்தை விசுவாசிக்க நேர்ந்தது எத்தனை நலமாயிற்று என்பதை நீங்கள் உணர்வீர்கள், இந்த சத்தியத்தின் மூலம் நீங்கள் மன்னிக்கப்பட்டு இரட்சிக்கபட்டீர்கள். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தை விசவாசிகத்து உங்கள் எல்லா பாவங்களில் இருந்தும் விடுதலையாவீர்கள் என்பது என்னிருதயத்தின் மிகப் பெரிய ஆசையாகும். இவ்வுலகம் மாறிப் போகலாம், ஆனால் நம் பாவங்களிலிருந்து நம்மை கர்த்தர் இரட்சிக்க உபயோகப்படுத்திய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது, எப்போதும் மாறாத நித்தியமான உண்மையாகும். மாறாத பாவ நிவர்த்தியாகிய இரட்சிப்பை பெற்றுக் கொள்ள இந்த சத்தியத்தை நாம் விசுவாகிக்க வேண்டும். கர்த்தரின் விடுதலையின் சத்தியம் உங்களுடையதாவதாக.
நம்மை கிருபையின் பாத்திரமாக்கியதன் மூலம் கர்த்தர் நம்மை விடுதலையாக்கினார்
யாகோபை, ஏசாவை விடவும் கர்த்தர் அதிகமாக நேசித்ததால் அவனை இரட்சித்ததாக ரோமர் 9ம் அதிகாரம் கூறுகிறது. யாக்கோபு கிருபையின் பாத்திரமாக்கப்பட்ட அதே நேரம் ஏசா கோப்பாக்கினையின் பாத்திரமாக்கப்பட்டார். இது ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது. அதாவது ஏசாவை விட யாக்கோபிற்கு கர்த்தர் இணக்கம் காட்டினாரா? சந்தேகத்திற்கு இடமில்லாமல் அநேக மக்கள் வாக்கு வாதம் செய்தார்கள், “கர்த்தர் ஒருதலைபட்சமாகவும் முன் தீர்ப்பின் படியும் நடந்து ஒரு நபரை அன்பு செலுத்த தேர்ந்தெடுத்து மற்ற நபரை எந்த நிபந்தனையும் இன்றி வெறுத்தார், அவருடைய முன் குறித்தலும் தெரிந்து கொள்ளுதலும் தவறானவை.”
கர்த்தரால் படைக்கப்பட்ட உலகை நாம் பார்க்கும் போது, அவருடைய படைப்புகள் எத்தனை அழகாகவும் சுத்தமாகவும் இருக்கின்றன என நம்மால் காண முடியும். செடிகள், விலங்குகள், கர்த்தர் படைத்த மற்ற பொருட்கள் ஆகியவை மிகவும் நன்றாக இருக்கின்றன. அப்படி இருக்கும் போது கர்த்தரால் எப்படி ஒருவரை நேசித்து மற்றவரை ஒருதலைபட்சமாக நடத்த முடியும்? இது அப்படியானதல்ல.
ஆதாமின், ஏவாளின் கீழ்படியாமையால் உலகினுள் பாவம் நுழைந்தது, இப்பாவத்தினால் நம் மூதாதையர்களுக்கு பின்னால் வந்த அனைவரும் தொடர்ந்து பாவம் செய்கின்றனர். அவர்களால் நரகத் தண்டனை அடைவதை தவிர்க்க முடியாது. பாவத்தில் இருந்து கர்த்தர் யாக்கோபை இரட்சித்து ஏசாவை விடுதலை செய்யாமல் விட்டுவிட்டது, கர்த்தர் தவறு செய்வதாக பொருள்படாது. அவருடைய கண்களுக்கு முன்னால் கர்த்தர் செய்யும் அனைத்திற்கும் காரணங்கள் உள்ளன.
கிறிஸ்தவ சமுதாயத்திற்குள் ஏசாவை போன்ற அநேகரை நாம் காணலாம். இத்தகைய ஒரு நபர் ஒரு ஆலய ஆராதனையை கூட விட்டுவிடுவதில்லை, அது எங்கே, எப்போழுது, என்பது பொருட்டே அல்ல. அது அதிகாலை ஆராதனையாக இருந்தாலும் இரவு நேர கூட்டமாய் இருந்தாலும் சரி. சில நபர்கள் வீட்டில் செலவிடும் நேரத்தை விட ஆலயத்தில் செலவிடும் நேரம் அதிகம். அவர்கள் வீட்டிற்கு வேலை செய்வதில்லை, ஆனால் ஆலயத்திற்கு வேலை செய்கிறார்கள். நாம் அவர்களை “மத ஓட்டக்காரர்கள்” என அழைக்கலாம். ஆயினும் அவர்களில் அநேகர் கர்த்தரின் நீதியை பொருட்படுத்துவதில்லை. இதற்கு காரணம் அவர்கள் தமது சொந்த நீதியை உருவாக்க முயலுகிறார்கள், அப்படி செய்வதால் கர்த்தரின் நீதியை அலட்சியம் செய்கிறார்கள்.
கர்த்தரின் நீதியை அலட்சியம் செய்பவர்கள் கூட பரலோகம் செல்லவும் தம் பாவங்கள் மன்னிப்படவும் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களின் முயற்சிகள் கர்த்தருக்கு முன்பாகவும் மனிதர்களுக்க முன்பாகவும் தம் சொந்த நீதியை உருவாக்கின்றன, அவர்கள் தம் பாவங்களில் இருந்து இரட்சிக்கப்பட முயல்வதில்லை. தம்முடைய நீதியை விசவாகிக்காதவர்களிடம் கர்த்தரின் நீதியின் மீதுள்ள விசுவாசம் அனைவருக்கும் ஆனதல்ல என கர்த்தர் கூறினார்.
அப்படியானால் எத்தகைய மக்களால் கர்த்தரின் நீதியை விசுவாசிக்க முடியும்? இம்மக்கள் தாம் பாவங்களால் நிறைந்திருப்பதை அறிந்திருக்கின்றனர், அவர்கள் தம் மனதில் தாம் எதற்கும் பெறாதவர்கள் என்பதை அறிந்திருக்கின்றனர். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை வெளிப்பட்ட அவரின் பாவ நிவர்த்தியின் மூலம் கர்த்தரின் நீதியை அவர்கள் கண்டு கொள்ளும் போது, உடனடியாக அவர்கள் அதனை விசுவாசித்து கர்த்தருக்கு மகிமை அளிக்கும் மக்கள் இவர்கள் ஆவார். கர்த்தரின் நீதியை விசுவாசித்து இப்படியாக நாம் இரட்சிக்கப்பட்டோம் என்பதின் பொருள் நாம் கர்த்தரின் நீதயை பெரும்படியான இறங்கத்தக்க நிலையுடைய மக்கள் என்பதாகும். அப்படி இல்லாவிட்டால் நம் எஞ்சியிருக்கும் வாழ்வு முழுவதும் பாவத்தில் வாழ்ந்து அழிந்து போவோம்.
ஆனால் கர்த்தருக்கு முன்பாக தமது சொந்த நீதியை தேடுபவர்கள் பெருமை படைத்தவர்கள். இத்தகைய நபர் இப்படி கூறுவார், “தேவனே, நான் உமக்கு தசம பாகம் கொடுத்தேன், முழு இரவும் தரித்திருந்து உம்மிடம் ஜெபித்திருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில், அதிகாலை ஆராதனை ஒன்றைக் கூட தவறவில்லை, உமக்காக நற்காரியங்களை செய்துள்ளேன்.”
ஆயினும், அவனிடம்/அவளிடம் எந்த வித சுய நீதியும் இல்லை என கர்த்தர் காணும் போது அதிகமாக பிரியப்படுவார், ஆகவே நீர் மற்றும் ஆவியின் பாவ நிவர்த்தியின் மூலம் கர்த்தரின் நீதியை விசுவாசிக்க வேண்டும், அவனின்/அவளின் முயற்சிகளின் மூலம் அவனால்/அவளால் பெற முடியாத ஒன்றை நிருபிக்க முயற்சிப்பதை விட்டுவிட வேண்டும்.
இப்போதும் கூட கிறிஸ்தவ சமுதயாத்தில் தமது சொந்த நீதியை காட்டிக் கொள்ள அநேக மக்கள் எல்லாவகையான காரியங்களையும் செய்கின்றனர். சிலர் தம் வார்த்தைகளால் விசுவாசத்தை அறிவிப்பர். நற்செய்தியாகிய நீர் மற்றும ஆவியினால் அறிவிக்கப்பட்ட கர்த்தரின் நீதியை அவர்கள் விசுவாசிக்காததால், அவர்களுடைய பாவங்கள் முற்றிலுமாக கழுவப்படவில்லை. அவர்களுடைய முடிவை கர்த்தர் தீர்மானிப்பார். நம் தேவனின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தமானது பாவ நிவர்த்தியின் சத்தியம் என எண்ணும் அவர்களின் விசுவாசத்தின் மூலம் பாவ மன்னிப்பை பெற்று அவர்களும் உண்மையாக கர்த்தரின் பிள்ளைகளாவர் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.
இரட்சிப்பின் பாத்திரத்தை பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் கூறும் போது, கர்த்தர் கிருபையாய் இருப்பவர்களிடம் கிருபை இருக்கிறது எனவும், அவரின் நேசம இருப்பவர்களிடம் நேசம் இருப்பதாகவும் அவன் கூறினான், அப்படியானால் கர்த்தரின் கிருபையை பெற்றுக் கொள்ளும் மக்கள் யார்? கர்த்தரின் வார்த்தையின் படி வாழ விரும்பினாலும் எல்லா மனிதர்களாலும் அப்படி வாழ முடியாது, அவருடைய வார்த்தையை விசுவாசித்து அதன் படி வாழ உண்மையாகவே ஆசைப்பட்டாலும் மீண்டும் மீண்டும் அவர்கள் தடுக்கி விழுவர். அவர்கள் கர்த்தருக்கு முன்னால் பாவ உணர்வுடனும், குற்றவுணர்வுடனும் நின்று, தாம் நரகாக்கினை பெறுவதற்கு தகுதியானவர்கள் என எண்ணுவர். ஆகவே தாம் பூமியிலும் பரலோக இராஜ்யத்திலும் இரட்சிக்கப்படதக்கவர்களாய் இருப்பதை உணர்ந்து, தம் மீது கிருபையாய் இருக்குமாறு கர்த்தரிடம் வேண்டுவர். கர்த்தருடைய கிருபை தம் மீது இல்லாவிட்டால் தம்மால் இரட்சிக்கப்பட முடியாது என்பதை அவர்கள் அறிவதால், அதனை தரும்படி அவரிடம் பரிதவிப்புடன் கேட்பர்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கர்த்தர் இரட்சிக்கப் படுபவர்களுக்கும், அவரின் கிருபை இருப்பவர்களிடமும், பாவவிடுதலை காணப்படுகிறது. இத்தகைய மக்களுக்காக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை கர்த்தர் வழங்கினார். இதற்காக அவர் தனது ஒரே பேறான குமாரரை ஞானஸ்நானம் செய்வித்து எல்லாப் பாவங்களையும் அவர் மீது சுமத்தி சிலுவையில் மரிக்க செய்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார் - அவர்களை நிச்சயமான அழிவில் இருந்து விடுதலைச் செய்ய இவற்றை செய்தார். இரங்கப்படதக்கவர்களிடம் நம் பிதா இரக்கம் உள்ளவர்.
இவ்வுலகில் கர்த்தர் கிருபையை அளித்தவர்களைவிட அவரின் கோபாக்கினையுள்ள மக்களே அதிகம் இருப்பதாக தெரிகிறது. இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தில் கிருபையின் பாத்திரங்களும் கோபாக்கினையின் பாத்திரங்களும் இருப்பதாக கர்த்தர் நம்மிடம் கூறினார். வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தரால் நேசிக்கப்படும் மக்களும் இருக்கிறார்கள். அவரால் நேசிக்கப்படாத மக்களும் இருக்கிறார்கள்.
ரோமர் 9:17 நம்மிடம் கூறுகிறது, “மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.” பாரோன் போன்ற மக்கள் உருவாவதை கர்த்தர் அனுமதித்தார். இதனால் அவரின் வல்லமை தெரிந்தது. ஆயினும் கிருபையின் பாத்திரங்களுக்கு அவர் தமது அன்பை காட்டினார். அதனால் அவரின் பெயர் முழு உலகமும் அறிவிக்கப்பட்டது. நம்முடைய பாவங்களினாலும், கர்த்தருடைய கோபத்தினாலும், நாம் அனைவரும் நரகம் செல்ல வேண்டியவர்கள். கர்த்தர் நம் மீது தன் அன்பின் நீதியை தரிப்பித்ததால் நம் எல்லா பாவங்களில் இருந்தும் நாம் இரட்சிக்கப்பட்டோம். ஏனெனில் அவரை விசுவாசிக்கும் நம் மீது அவரின் கிருபை இருந்தது.
கர்த்தருடைய நீதியை விசுவாசிக்காமல் தம்முடைய சொந்த நீதியை பின்பற்றுவதில் மட்டுமே ஆர்வம் காட்டுபவர்கள் கர்த்தரை எதிர்த்து நிற்கிறார்கள். இத்தகைய மக்களை தமது கோபாக்கினைக்காக கர்த்தர் விட்டுவிட்டார். அவருடைய வல்லமையான கோபாக்கினை விளங்கும் படி, அவருக்கு எதிராக நிற்பவர்கள் வேண்டும். இதன் மூலமாக கர்த்தரின் நியாயத் தீர்ப்பில் உள்ள நீதி காட்டப்படும்.
பாரோனை போன்ற மக்கள் கர்த்தரின் நீதியாகிய அன்பை நிராகரித்தவர்கள் ஆவர். பாரோனுக்கு பத்து வாதைகளை கர்த்தர் வழங்கினார். கடைசியில் வந்தது மரணமாகும். கர்த்தரின் நிராகரித்தவர்களுக்கு எல்லையில்லாத எரியும் கடல் காத்திருக்கிறது. கர்த்தரின் கோபாக்கினையின் வல்லமை இதுவே. இவ்வுலகில் வல்லமைமிக்க மனிதர்கள் அநேகர் இருக்கின்றனர். அவர்களில் கர்த்தரை மறுதலிக்கிறவர்களும் இருக்கிறார்கள், ஆனால் கர்த்தர் அவர்களை விழப்பண்ணுவார். இதன் மூலம் தனது கோபத்தின் வல்லமையை அறிவிப்பார். இதனால் தான் தன்னை மறுதலிக்கும் கடின இருதயங்களை அவர் தனியே விட்டுவிடுகிறார்.
ஆகவே கிருபையின் பாத்திரமாக நாம் எப்படி மாறுவது என்பது நமக்கு முக்கியமானது ஆகும். ஏனெனில் இப்படியாவதன் மூலம் கர்த்தரின் நீதியின் அன்பை நம்மால் விசுவாசிக்க முடியும். கர்த்தருக்கு முன்பாக காட்டுவதற்கு நம்மிடம் எதுவுமே இல்லை. அதற்கு மாறாக அவரின் நீதியின் அன்பை விசுவாசிப்பதற்காக நாம் பிறந்துள்ளோம். கர்த்தருக்கு முன்பாக ஜெபித்த வரி வசூலிப்பனையும் பரிசேனையும் குறித்த கதையை வேதாகமம் நமக்கு கூறுகிறது. வரி வசூலிப்பவனிடம் கர்த்தர் இரக்கம் காட்டினார். மற்றவனிடம் கர்த்தர் இரக்கம் காட்டவில்லை. தாம் எந்த நன்மைகளையும் செய்யாதவர்கள் என்பதையும் கர்த்தரின் மகஒமைக்கு முன்னதாக குறைபாடு உடையவர்கள் ஆகியதாகவும் வரி வசூலிப்பனை போல், தம்மை அறிந்து கொள்ளும் மக்கள், கர்த்தரின் கிருபையை அவரிடம் வேண்டுகின்றனர்.
இத்தகைய மக்கள் கர்த்தரின் நீதி என்றும் அன்பினால் தரிப்பிக்கப்படுவர். ஆனால் பரிசேயனைபோல், தான் கர்த்தருக்காக எத்தனை செய்திருக்கிறேன் என இடைவிடாது புலம்பும் மக்களும் இருக்கிறார்கள் - அவர்கள் தசம பாகம் கொடுத்ததாகவும், வாரத்திற்கு இரண்டு முறை உபவாசம் இருந்ததாகவும், ஜெபித்ததாகவும், மதப்படி அர்ப்பனத்துடன் வாழ்ந்ததாகவும் கூறுகிறார்கள். கர்த்தருக்கு முன்பாக நாம் எப்படி இருக்கிறோம் என்பதை பொருத்து, கர்த்தரின் நீதியின் அன்பினால் தரிபிக்கப்படுவோம் அல்லது அவருடைய கோபாக்கினையை அனுபவிப்போம். கர்த்தருக்கு முன்பாக நம்மிருதயங்களை கடினப்படுத்தினால் நம் பாவங்கள் ஆனது நித்தியமாக மன்னிக்கப்படாது இருக்கும். பாவ மன்னிப்பு இல்லாவிட்டால் நாம் செல்ல வேண்டிய இடம் நரகம் ஆகும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது முழு உலகமும் பிரசங்கிக்கப்படுகிறது. இரட்சிக்கப்படாதவர்கள் தம் இருதயங்களை இருக்கமாக வைத்திருப்பதால் அவர்கள் இரட்சிக்கப் படாதவர்களாகவே இருக்கிறார்கள். மனிதர்களிடம் எந்த நீதியும் இல்லை. விசுவாசத்தினால் மட்டுமே கர்த்தரின் நீதியின் அன்பை நம்மால் தரித்துக் கொள்ள முடியும். கர்த்தர் தாமே அவர்களை படைத்திருந்தாலும், அவருடைய நீதியை ஏற்றுக் கொள்ளாதவர்களை அவர் வெறுக்கிறார். ஆனால் கர்த்தரின் நீதியாகிய நற்செய்தியாகிய நீர் மற்றம் ஆவியை விசுவாசிப்பவர்கள் அனைவரும் அவரால் நேசிக்கப்பட்டு நித்திய ஜீவனையும் பெற்றுக் கொள்கின்றனர்.
இந்நாளில் அநேக கிறிஸ்தவர்கள் கர்த்தருக்கு முன்பான கோபத்தின் பாத்திரமாக இவ்வுலகில் வாழுகின்றனர். இதனால் தான் கர்த்தரின் நீதி என்ன என்பதை ரோமர் புத்தகத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். கர்த்தர் சிலரை நேசித்து, மற்றவர்களை நேசிக்காமல் இருப்பதற்கான காரணம், சிலர் அவருடைய நீதியை விசவாசிக்கிறார்கள், சிலர் அதனை விசுவாசிப்பதில்லை. இந்த சத்தியத்தை நான் பேச விரும்புகிறேன். யாக்கோபிற்கும் ஏசாவிற்கும் கர்த்தர் செய்தது சரியானதே. இயேசுவை விசுவாசிக்கும் அநேகரில், நற்செய்தியாகிய நீர் மற்றம் ஆவியை விசுவாசிக்காமலேயே கர்த்தரால் நேசிக்காப்படி வேண்டும் என்னும் மக்கள் இருக்கின்றனர். இம்மக்கள் ஏசாவை போன்றவர்கள், அவர்களை அவர்களின் பாவங்களுக்கு ஏற்றவாறு கர்த்தர் நியாயம் தீர்ப்பார்.
உலகில் உள்ள எல்லா பாவங்களையும் எடுத்துக் கொள்ளும்படியாக யோவானிடம் இருந்து ஞானஸ்நானம் பெறும் படி கர்த்தர் தன் குமாரரை அனுப்பினார். இந்த உண்மையை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் இருதயத்தின் ஆழத்தில் இருந்து இதனை உண்மையாகவே விசுவாசிக்கிறீர்களா? கர்த்தரின் நீதி காட்டப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றம் ஆவியின் சத்தியத்தை நாம் விசுவாசிக்கும் போது, அந்நொடியே, ஒரே தரமாக நம் எல்லா பாவங்களில் இருந்தும் நாம் விடுவிக்கப்படுவோம். இயேசு இவ்வுலகின் எல்லா பாவங்களையும் எடுத்து தன் தோளில் சுமந்து சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பப்பட்டார். இதனை ஒரே தரமாக அவர் செய்தமையால், நாமும் கூட நம் பாவங்களில் இருந்து ஒரே தரமாக விடுவிக்கப்பட்டோம்.
ஆனால் கர்த்தரின் நீதியை விசுவாசிக்காமல் பாவ நிவர்த்தி செய்ய நாம் முயன்றால் அவருக்கெதிராக நாம் பாவம் செய்வோம். அவருடைய நீதியை நாம் விசுவாசிக்காவிட்டால் நம்முடையப் பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து தினந்தோறும் ஞானஸ்நானம் பெற்று மரிக்க வேண்டுமென இது பொருள்படும். அளவில்லாத ஞானமுடையவராகிய கர்த்தர் இத்தகையதொரு வழியைத் தேர்ந்தேடுப்பாரா? நம்மை நம் பாவங்களிலிருந்து விடுவிக்க கர்த்தர் தன் குமாரரை ஒருமுறை அனுப்பினார். அவர் ஞானஸ்நானம் பெற்ற நம் பாவங்களுக்காக ஒரே ஒருமுறை சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிரோடெழுப்பப்பட்டார். ஆகவே அவரால் ஒரே தரமாக முற்றிலுமாக நம்மை இரட்சிக்க முடிந்தது.
நம் கர்த்தர் நீதியின் கர்த்தராவார். கர்த்தர் தன் நீதிக்குள் நம் பாவமன்னிப்பைத் திட்டமிட்டார். நாம் பாவம் செய்யும் போதெல்லாம் அவரிடம் பாவமன்னிப்பு கேட்டு ஜெபிப்பதால் அவர் நம் பாவங்களைத் துடைப்பதில்லை. அதற்கு மாறாக அவருடைய நீதியினை விசுவாசித்து ஒரே தரமாக விடுதலையானவர்களின் எல்லாப் பாவங்களையும் அவர் துடைத்தார்.
அதன் பிறகு நாம் செய்யும் அன்றாடப் பாவங்களின் கதி என்ன? அவருடைய நீதிக்காக கர்த்தரை நாம் நன்றியறிதலுடன் ஜெபிக்கும் போதும் அவருக்கு மட்டுமே மகிமையளிக்கும் போதும் அவர் அவைகளைப் பொறுப்பெடுத்துக் கொள்கிறார். கர்த்தருடைய பார்வையின் படி இயேசு தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றக் கொண்டு சிலுவையின் இரத்தம் சிந்தி நமக்காக தீர்க்கப்பட்டதால் நம் பாவங்களை எல்லாம் ஒரே தரமாக துடைத்து முழு இரட்சிப்பை நமக்க வழங்கினார். உலகின் அனைத்துப் பாவங்களையும் ஒரே தரமாக அழிக்க வேண்டும் என்ற அவரின் திட்டத்தை கர்த்தரின் நீதியின் அன்பு நிறைவேற்றியது.
ரோமர் 9:25 கூறுகிறது, “அந்தப்படி: எனக்கு ஜனங்களால் யூதர்களை என்னுடைய ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்.” ஆம், தம்முடைய மக்களில்லாதவர்களையும் தம் மக்களென அழைக்கப் போவதாக கர்த்தர் கூறினார். நாம் விசுவாசிக்கும் கர்த்தரின் நீதியானது தத்துவமாக இல்லாமல் யதார்த்தமாயிருப்பதால் அவருடைய நீதியை விசுவாசித்ததின் மூலம் நாமனைவரும் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப் பட்டோம். அது யதார்த்தமாக இருப்பதால் அவருடைய நீதியை அலட்சியம் செய்பவர்கள் ஏசாவைப் போல் வெறுக்கப்பட்டு தீர்க்கப்படுவர்கள். கர்த்தருக்கு முன்பாக அவனால்/அவளால் தன் சொந்த நீதியைக் குறித்து பெருமைப்பாராட்ட முடியாது.
நம்மை நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்து விடுவிக்க கர்த்தர் நம்மைத் தனது நீதியின் மூலம் இரட்சித்தார். அப்படியானால் அவருக்கு நாம் நன்றி கூறி துதிக்க முடியாதா? நன்றியறிதலுடனும் விசுவாசத்துடனும் கர்த்தரின் நீதியாகிய நற்செய்தியை பரப்புவதை நம்மால் தவிர்க்க முடியாது.