(ரோமர் 9:30-33)
“இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்? நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள். அது விசுவாசத்தினாலாகும் நீதியே. நீதிப்பிரணமானத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை. என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள். இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிற படியாயிற்று.”
நம்மனைவரையும் அழைக்கும் போது நம் தேவன் கூறினார், “நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” (மத்தேயு 9:13) தம்முடைய சொந்த நீதியை விசவாசிப்பவர்களுக்க இரட்சிப்பின் ஈவு வழங்கப்படாது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதனைத் தவிர்க்க கர்த்தரின் நீதியை நாம் விசுவாசிக்க வேண்டும்.
கர்த்தர் யாக்கோபை நேசித்த அதே சமயம் ஏசாவை அவர் வெறுத்தார் என ரோமர் 9:13 கூறுகிறது. கர்த்தரின் நீதியை நன்றியுடன் பெற்றுக் கொண்டவர்களுக்கு பாவ மன்னிப்பைக் கர்த்தர் ஈவாக வழங்கினார். அத்துடனே கூட அவர்களைகத் தமது மக்களாக மாற்றுவதையும் பரிசாக வழங்கினார். கர்த்துருடைய நீதியைக் குறித்த அறிவுடனே கர்த்தரை நாம் விசுவாசிக்க வேண்டும்.
நம்மனைவருக்கும் வழங்கப்பட்ட கர்த்தரின் நீதியின் வார்த்தையைக் கற்று அதனை அறிந்து கொள்ள வேண்டும். ஒருவர் தன்னுடைய பாவத்திலிருந்து விடுதலையாக வேண்டுமென விரும்பினால் முதலாவது அவனின்/அவளின் பாவங்கள் அந்நபருக்குத் தெரிய வேண்டும். அத்துடனே கூட கர்த்தரின் நீதியையும் தெரிந்திருக்க வேண்டும். தாம் நரகத்திற்கு செல்ல வேண்டியவர்கள் என்பதை அறிந்தவர்களுக்கே தன் நீதி தெரிந்திருக்க வேண்டுமென கர்த்தர் நம்மிடம் கூறினார். நம்முடைய சொந்த பாவங்களை அறிந்து கொண்டு நம்முடைய பாவங்களினிமித்தம் கர்த்தரின் கோபாக்கினையை நாம் சந்திக்கிறோம். ஆகவே நரகத்தண்டனையை நம்மால் தவிர்க்க முடியாது என்பனவற்றை அறிவது முக்கியமாகும்.
ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றம் ஆவியை நம்மிருதயங்களுக்குள் பெற்றுக் கொள்ள முடியும். இதனை நம் தேவனின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் மற்றும் உயிர்தெழுதல் ஆகியவற்றின் மூலம் பெறலாம், ஏனெனில் கர்த்தரின் நிதியை அறிந்தவர்களால் மட்டுமே இந்த நீதியை விசவாசிக்க முடியும். இதற்க காரணம் என்னவெனில் அநேக மதப்படி வாழுபவர்கள் செய்வதைப் போல் மனம் வருந்தி ஜெபிப்பதாலும் நல்லவர்களாக வாழ்வதாலும் கர்த்தரின் இரக்கத்தையும் அன்பையும் நம்மால் பெற்றுக் கொள்ள முடியாது. ஆயினும், அவருடைய நீதியை மதித்து அதனை விசுவாசிக்கம் அனைவருக்கம் கர்த்தரால் கொடுக்கப்பட்ட பாவ மன்னிப்பு பொதுவானது.
நற்செய்தியாகிய நீர் மற்றம் ஆவியை விசவாசிக்க நம்முடைய இருதயங்களை விருப்பபத்துடன் ஆயத்தம் செய்து வைக்க வேண்டும். கர்த்தருடைய நீதியை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமா? அப்படியானால் கர்த்தருக்கு முன்பாகவும் சட்டத்திற்கு முன்பாகவும் உங்கள் குறைபாடுகளை ஒத்துக் கொள்ளுங்கள். உங்கள் பாவங்களினிமித்தம கர்த்தரின் கோபத்திலே நீங்களிருக்கிறீர்கள் என்பதையும் அவருடைய நீதி உங்களுக்குத் தேவை என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசவாசித்து அதனை உங்களிருதயத்தில் விசுவாசிக்கும் போது கர்த்தரின் நீதி உங்களுடையதாகும். இந்த உண்மையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
கர்த்தரின் நீதியை விசுவாசியாதோரின் மனங்கள் குழப்பத்திலும் வெறுமையிலும் அடைக்கப் பட்டிருக்கின்றன
தொடக்கத்திலிருந்தே நம்முடைய சிந்தனைகள் குழப்பத்துள் ஆழ்ந்திருக்கின்றன என கர்த்தர் நம்மிடம் கூறினார் (ஆதியாகமம் 1:2) மனிதனின் சிந்தனைகள் தொடக்கத்திலிருந்தே ஏன் குழப்பத்திலிருக்கிறது? கர்த்தரை எதிர்த்துப் போராடியதற்காக தள்ளிவிடப்பட்ட தேவ துரிதன் கர்த்தருடைய நீதியின் வார்த்தையை மக்கள் விசவாசிப்பதிலிருந்து தொடக்கத்திலிருந்தே தடுத்து வந்தான், இதற்காக அவர்களின் மனங்களை குழப்பத்திலும் வெறுமையிலும் ஆழ்த்தினான். இதனால் தான் மனிதனின் இருதயத்திற்க பாவம் வந்தது (ஆதியாகமம் 3:1-8).
கர்த்தரால் உருவாக்கப்பட்ட ஒரு தேவ துரிதன் அவருக்கு எதிராக மாறினான் என வேதாகமம் கூறுகிறது. இந்த தேவ துரிதன் கர்த்தருடைய சிங்காசனத்தை தன்னுடைய சொந்த சித்தத்தினாலும் திட்டத்தினாலும் கைப்பற்ற முயற்சி செய்தான். இந்த புரட்சியில் தோல்வியடைந்த அவன் அவனுடைய முக்கியமான நிலையிலிருந்து துரத்தப்பட்டடான். விழுந்து போன இந்த தேவ துரிதன் மனித குலத்தை ஏமாற்றி அவர்களை வஞ்சித்து கர்த்தருக்க எதிரானவனாய் மாற்றினான். இந்த தேவ துரிதனே சாத்தர்ன என அழைக்கிறோம். இந்த பெருமை மிக்க தேவ துரிதன் விசுவாசிகளின மத்தியிலும் அவிசுவாசிகளின்மத்தியிலும் செயல்புரிந்து இன்னமும் அவர்களைப் பெருமைகளிலும் புரட்சிகளிலும் ஈடுபடச் செய்கிறான். மனிதனை ஏமாற்றியதின் மூலம் கர்த்தரின் நீதியின் வார்த்தைக்கும் அவரின் அதிகாரத்திற்கும் அவன் சவால் விட்டான்.
பிசாசானவன் பொய்களை நாடுகிறான். இதனால் நற்செய்தியாகிய நீர் மற்றும ஆவியை அவர்களால் விசுவாசிப்பது கடினமாகிவிடுகிறது. பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட அநேகர் எப்பயனும் இன்றி தம்முடைய சுய நீதியை நிலை நிறுத்த முயலுகின்றனர். அவன் மனிதர்களை பாவத்தில் விழச் செய்தான். இதன் பலனாக குழப்பமானதும் வெறுமையானதுமான மனங்களுடன் அவர்கள் வாழும்படி செய்தான்.
கர்த்தரால் கொடுக்கப்பட்ட பாவ மன்னிப்பும் அவரின் நீதியும்
சாத்தானின் தீய இச்சைக்குள் விழுந்து போன மனித குலத்தின் பாவ விடுதலையானது ஒருவரின் விருப்பதிலோ அல்லது அவனின்/அவளின் சுய நீதியையோ சார்ந்திருப்பதில்லை. ஆயினும் அநேக மக்கள் தம்முடைய பாவங்களிலிருந்து தப்பவே மிக்க வியாகூலத்துடன் வீணே முயற்சி செய்கின்றனர். அவர்கள் தம்முடைய சொந்த குறைபாடுகளை அறிந்து கொள்ளாமல் கர்த்தருக்கு எதிரானவர்களாக மாறுகின்றனர். தம்முடைய சுய நீதியைத் தேடிக் கொண்டிருப்பவர்களையும், தம்முடைய செய்கைகளினால் கர்த்தருடைய நீதியை சம்பாதிக்க முயல்பவர்களையும் அவர் சபிக்கிறார். பாவ விடுதலை இத்தகைய மக்களுக்கானதல்ல. தாம் பாவிகள் என்பதை அறிந்துஉண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களுக்கு மட்டுமே கர்த்தர் தன்னுடைய நீதியை அனுமதித்தார்.
கர்த்தருடைய தனிப்பட்ட சித்தமானது அடிப்படையில் மக்களின் சிந்தனைகளிலிருந்து வேறுபட்டது. மத வாழ்வு ஆலயம் செல்வது, நள்ளிரவு ஜெபம், அதிகாலை ஜெபம், காணிக்கை, மனம் வருந்தி ஜெபித்தல், ஆகிய வெளிப்படையான செயல்கள் ஒரு நபர் எத்தனையாய் சிறந்து விளங்கினாலும் அவனால்/அவளால் தம்முடைய சொந்தப் பாவங்களை அவன்/அவள் கழுவ முடியாது என பவுல் நம்மிடம் கூறினான்.
சட்டப்படியான செயல்களால் நம்மை நம் பாவங்களில் இருந்து விடுதலை செய்து கர்த்தரின் நீதியை நம்முடையதாக்க முடியாது என் கர்த்தர் நம்மிடம் கூறினார். அதிகாரம் 9இன் 32-33ஆம் வசனங்கள் கூறுகின்றன, “என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள். இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப் படுவதில்லை என்று எழுதியிருக்கிற படியாயிற்று.”
கர்த்தரின் நீதியை நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் நாம் விசுவாசிக்க வேண்டும். அதன் மூலமாக கர்த்தருக்கும் மனிதர்களுக்குமிடையேயான பலி காணிக்கையாக அவர் மாறினார். கர்த்தரின் நீதியைப் பெற்றுக் கொள்ளும் விதமாக உங்கள் சொந்த நீதியை விட்டெறிவது மிக முக்கியமான ஒன்று என்பதை நீங்கள் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. இயேசுவை நமது இரட்சகராக அறிவிக்கை செய்யும் போது நமக்க இலவசமாக கொடுக்கப்பட்ட கர்த்தரின் நீதியை நாம் தள்ளிவிடக் கூடாது.
தேவனாகிய இயேசுவைத் தமது இரட்சகராக அறிக்கை செய்தாலும் அநேக மனிதர்கள் இன்னமும் பாவிகளாகவே இருக்கிறார்கள். ஏனெனில் கர்த்தரின் நீதியை அறிவிக்கும் நற்செய்தியை அவர்கள் விசுவாசிப்பதில்லை. அவருடைய சட்டத்திற்கு கீழ்ப்படிவதின் மூலம் மக்களால் அவருடைய நீதியைப் பெற்றுக் கொள்ள முடியாது. கர்த்தரின் நீதியின் வார்த்தையை விசுவாசிப்பவர்கள் தம் சொந்த நிதியைப் பின்பற்றுவதை துரிர எறிந்துவிட வேண்டும். தம்முடைய சொந்த சட்டப்படியான செயல்களினால் கர்த்தரின் நீதியையும், தம் பாவ மன்னிப்பையும் பின்பற்றியவர்களுக்கு இயேசுவானவர் தடைக்கல்லாக இருக்கிறர் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
இயேசு கிறிஸ்துவைத் தமது இரட்சகராக விசுவாசிப்பவர்களை விடுதலையாக்கும்உண்மை கர்த்தரால் நமக்குக் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றம் ஆவியே ஆகும். கர்த்தரின் நீதியைப் பின்பற்றுபவர்களுடன் இதுவும் கூடவே இருக்க வேண்டும். பாவ விடுதலைக்கும் நித்திய ஜீவனுக்கும் மிகவும் அவசியமான ஒன்று கர்த்தரின் நீதியின் வார்த்தையின் மீதுள்ள நம்பிக்கையே ஆகும். இது இயேசுவின் ஞானஸ்நானம் மற்றம் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றால் அறிவிக்கப்பட்டது. எத்தகைய கிறிஸ்தவர்களால் பாவ மன்னிப்பைப் பெற்றக் கொள்ள முடியாது என இவ்வார்த்தை நமக்கு வெளிப்படுத்தும் அதே நேரம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களால் கர்த்தரின் நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இது நமக்கு போதிக்கிறது.
ஆகவே குறிப்பிட்ட ஒரு வகை மக்களை கர்த்தர் தேர்ந்தெடுத்து எந்நிபந்தனையுமின்றி அவர்களை நரகத்திற்க அனுப்ப கர்த்தர் தீர்மானிக்கவில்லை என்ற சரியான புரிந்து கொள்ளுதல் சரியான விசுவாசத்திற்க தேவைப்படுகிறது. கர்த்தர் சிலரை நேசித்து மற்றவர்களை வெறுத்தாக என்பது சரியானால் அவரின் நீதியை மக்கள் மதிக்க மாட்டார்கள்.
நற்செய்தியாகிய நீரி மற்றம் ஆவியின் மூலமாக எல்லாப் பாவிகளையும் அவர்களின் பாவங்களிலிருந்து விடுதலையாக்குவதற்காக கர்த்தர் தன் நீதியின் சட்டத்தினை ஏற்படுத்தினார். மேலும் அவரின் அன்பினால் தரிப்பிக்கப்படும் மிகப் பெறும் ஆசீர்வாதத்தையும் கூட அவர் நமக்குத் தந்தார். கர்த்தரின் நீதியைப் பற்றிக் கூறும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்க முன்னால் எல்லோரும் அவனின்/அவளின் சுய நீதியை வீசி எறிய வேண்டும். தன்னுடைய நீதியை விசுவாசிப்பவர்களுக்க மட்டுமே கர்த்தர் அதனை வழங்கினார்.
தம்முடைய சொந்த நீதியினால் தம்மைத் தாமே மக்கள் இரட்சித்துக் கொள்ளட்டும் என கர்த்தர் அவர்களை விட்டுவிடவில்லை. அவனோ/அவளோ இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தை அறிக்கை செய்தாலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை கர்த்தரின் நீதியாக விசுவாசிக்காவிட்டால் இந்த நீதியை யாராலும் பெற்றுக் கொள்ள முடியாது (யோவான் 3:1-8).
இயேசு பெற்ற ஞானஸ்நானமும் சிலுவையின் அவர் சிந்திய இரத்தமும் கர்த்தரின் நீதியாகிற்று. இதனால் தான் தம்முடைய சொந்த நீதியை விசுவாசிப்பவர்களுக்க இயேசு எதிர் கல்லாக மாறினார். ஆகவே இயேசுவை விசுவாசிப்பவர்கள் தம்முடைய சொந்த நீதியைப் பின்பற்றும் போது அவர்கள் கர்த்தரின் நீதியால் தடுக்கி விழுவார்கள் என்பதை அறிந்து அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். கர்த்தரின் நீதியின் மீது விசுவாசமில்லாமல் பரலோக வாசலினுள் யாராலும் செல்ல முடியாது. இயேசுவை விசுவாசிப்போர்களாகிய நாம கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதின் மூலம் பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வுலகிற்கு வந்த இயேசு கிறிஸ்துவானவர் பாவிகளின் இரட்சகரும் கர்த்தரின் நீதியுமானார். இந்தக் கர்த்தரின் நீதியை உண்மையாகவே நாம் விசுவாசிக்க வேண்டும். நீர் மற்றும் ஆவியின் வார்த்தையால் இயேசு நம் பாவங்களை மன்னித்தார். இயேசுவை விசுவாசிப்பவர்கள் யோவானிடமிருந்து அவர் பெற்ற ஞானஸ்நானத்தையும், சிலுவையில் அவர் சிந்திய இரத்தத்தையும் கர்த்தரின் நீதியாக விசுவாசிக்க வேண்டும். எழுதப்பட்ட வார்த்தையாகிய நீர் மற்றும்ஆவியை விசுவாசிப்பவர்களால் மட்டுமே பரலோகத்திற்குள் பிரவேசிக்க முடியும்.
கோபாக்கினையின் பாத்திரமாகவும் கிருபையின் பாத்திரமாகவும் பிரியும் படி நாம் கூறப்பட்டோம்
தேவன் கூறினார், “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” (மத்தேயு 16:26). ஒரு நபர் அவனின்/அவளின் நித்திய ஜீவனை இழந்தால் இவ்வுலகில் அவன்/அவள் சம்பாதித்த அனைத்தும் வீணே, அவர்கள் சம்பாதித்தவைகள் ஒரு பொருட்டேயல்ல. ஒருவர் உலகையோ, முழு பிரபஞ்சத்தையோ வென்றிருந்தாலும் அதனால் எப்பயனும் இல்லை. அவன்/அவள் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசித்து கர்த்தரின் நீதியைப் பெற்றக் கொள்ளாவிட்டால் அதனால் எப்பயனும் இல்லை.
இறையியல் தத்துவங்கள் எத்தனையாய் முன்னேற்றம் அடைந்தாலும் அது பொருட்டல்ல. கர்த்தரின் நீதியை நிறைவேற்றிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசவாசிப்பதினால் மட்டுமே இந்த நீதியைப் பெற்ற அதனை விசுவாசிக்க முடியும். கர்த்தரின் நீதியை விசுவாசித்து அதனைப் பெற்றுக் கொள்ளும் போது மட்டுமே இயேசுவை விசுவாசிப்பவர்களால் தம் பாவங்களிலிருந்து விடுதலையாக முடியும்.
தாம் கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பதாக அறிவிக்கும் விசுவாசிகள் தம்முடைய அதிகாலை ஜெபங்களின் போது தம பாவங்களை எண்ணி துன்பப்படுவதை நாம் எல்லா இடத்திலும் நம்மால் காண முடியும். உண்மையில் பார்த்தால் கர்த்தரின் நீதியை அவர்கள் விசுவாசிப்பதில்லை. கர்த்தருடைய நீதிக்குள் உள்ள பாவ விடுதலையை விசுவாசிக்காமல் இத்தகைய விசுவாசங்களை அறிவிப்பவர்கள் தாம் கர்த்தரை பிரியப்படுத்தாமல் அவரை கோபப்படுத்துவதை அறிந்து கொள்ள வேண்டும். கர்த்தரின் நீதியை எதிர்ப்பவர்களாக அவர்கள் மாறியதால் அவர்களால் அவருடைய எதிரியாக மட்டுமே இருக்க முடியும்.
யோவான் 3:5 நம்மிடம் கூறுகிறது, “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்” இதனால் தான் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியையும் கர்த்தரின் நீதியையும் விசுவாசிப்பதின் மூலம் உங்கள் பாவப் பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வைப் கண்டு பிடிக்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது கர்த்தரின் நீதியாகிற்று. அதனால் மட்டுமே உங்களுக்கு பாவ மன்னிப்பையும் அவருடைய நீதியையும் கொடுக்க முடியும்.
கர்த்தருடைய நீதியின் படி உங்களை நீதிமானாககும் வகையான விசுவாசம் உங்களுக்கு வேண்டுமானால் இந்த நீதியை உள்ளடக்கியுள்ள நீர் மற்றும் ஆவியை நீங்கள் பின்பற்றி அதனை விசுவாசிக்க வேண்டும். கர்த்தரின் நீதியின் மீதுள்ள விசுவாசத்தினால் உங்களிருதயம் நிரப்பப்பட வேண்டுமானால் உங்கள்ட சொந்த நீதியை எறிந்துவிட வேண்டுமென்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். கர்த்தரின் நீதியை இஸ்ரவேலர்களும் புற ஜாதியாரும் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் அவர்கள் தம் சொந்த நீதியை விட்டுவிட வேண்டுமென பவுல் அவர்களிடம் கூறினான்.
கர்த்தருடைய நீதியின் மீதுள்ள ஆபிரகாமின் விசுவாசத்திற்காக கர்த்தர் அவனிற்கொரு மகனைக் கொடுத்தார். நீர் மற்றும் ஆவியின் வார்த்தையில் கர்த்தரின் நீதி காணப்படுகிறது. நீதியின் வார்த்தையை விசுவாசிக்கும் யாவரும நீதிமானாகிறார்கள். ஈசாக்கின் மனைவியாகிய ரெபேக்காள் கர்ப்பந்தரித்த போது அவர்கள் பிறப்பதற்க முன்னரே அதாவது அவர்கள் நன்மைத் தீமை செய்வதற்கு முன்னரே மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என் அவள் கூறப்பட்டான். இவ்வசனத்திலிருந்து கர்த்தர் நீதியின் கர்த்தர் அல்ல என மக்களால் கருதப்பட்டார். இது ஒரு தவறான முடிவாகும்.
யாக்கோபும் ஏசாவும் ரெபேக்காவின் கர்ப்பத்திலிருந்தாலும் அவர்களுடைய எதிர்கால நம்பிக்கைகளை கர்த்தர் ஏற்கனவே அறிந்திருந்தார். கர்த்தரின் நீதியின் இரகசியம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் மறைந்திருக்கிறது. ஏசா தன்னுடைய சொந்த நற்காரியங்களின் மீது பெருமைப் பாராட்டிக் கொண்டிருந்தமையால் அவனுடைய விசுவாசத்திற்கும் தன்னுடைய நீதிக்கும் எச்சம்பந்தமும் இல்லை என்பதை கர்த்தர் கண்டார். இதனால் தான் கர்த்தர் அவனை வெறுத்தார். மறுபுறம் பார்த்தால் கர்த்தரின் நீதியை விசுவாசித்து எல்லா மகிமையையும அவருக்கு மட்டுமே கொடுக்கும் ஒருவனாக யாக்கோபு இருந்தான். ஆகவே அவனை நேசிப்பதை கர்த்தரால் தவிர்க்க முடியவில்லை.
ஆகவே கர்த்தர் யாக்கோபை நேசித்து ஏசாவை வெறுத்தது இந்த சத்தியத்தின்படி சரியான ஒன்றாகம். ஏசாசைப் போன்ற மக்களை கர்த்தர் விரும்புவதில்லை. அவனைப் போன்றவர்கள் கர்த்தரின் நீதியை விசுவாசிக்காமல் தம்முடைய சொந்த வல்லமையில் மட்டுமே அவர்கள் பெருமைப் பாராட்டுகிறார்கள். ஆனால் யாக்கோவைப் போன்ற மக்களினால் அவர் பிரியப்பட்டு அவர்களை நேசிக்கவும் செய்கிறார். அவர்களுக்க தம்முடைய குறைபாடுகள் தெரிவதால் அவருடைய நீதியை மட்டுமே நேசித்தார்கள்.
ஏசாவிடம் கர்த்தர் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டுமென கேட்பதின் மூலம் கர்த்தரின் நீதியை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். கர்த்தர் சிலரை நேசித்து மற்றவர்களை வெறுக்கும் போது கர்த்தரிடம் ஏதோ குறைபாடு இருக்கிறது என அவர்கள் எண்ணுகின்றனர். மேலும் அவர்கள் இயேசுவை விசுவாசிக்கவும் மறுக்கலாம், ஏனெனில் அவரை அவர்கள் அநீதியின் கர்த்தராக எண்ணுகின்றனர்.
கர்த்தரால் எப்படி அநீதராய் இருக்க முடியும்? ஒருவன் கர்த்தரை அநீதராக எண்ணினால் இதன் பொருள் கர்த்தரின் நீதியைக் குறித்த சரியான புரிந்து கொள்ளுதல் அவனிடம்-அவளிடம் இல்லை என்பதாகும். அதற்க மேலும் கர்த்தரின் நிதியை விசுவாசிக்காததின் மூலம் அவருடைய நீதியை தம்முடைய மனித நீதியினால் மூடி மறைத்து கர்த்தருக்கு முன்னதாக கொடிய பாவத்தைச் செய்வதும் இவர்களேயாவர். கர்த்தருடைய நீதிக்கு முன்பாக ஒவ்வொருவரும் தமது சொந்த நீதியை துரிர எறிந்து விட்டுநற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வார்த்தையை அவர்கள் விசுவாசிக்க வேண்டும்.
கர்த்தரின் நீதியில் உள்ள விடுதலையின் வார்த்தையை விசுவாசிப்பதற்கான ஒரே வழி இது மட்டுமே. கர்த்தர் அநீதர் என்பது உங்கள் கற்பனையிலுள்ள ஒரு பகுதியாகும். இது கர்த்தரின் திட்டமிடப்பட்ட நோக்கத்தையும், அவரின் முன் குறித்தல் போன்ற திட்டங்களையும் அறியாத உங்கள் அறியாமையிலிருந்து தோன்றியது. நமக்க முன்பதாக தன்னுடைய நீதியை வெளிப்படுத்துவது கர்த்தருடைய நீதியின் திட்டமாய் இருந்தது. இரட்டையர்களின் எதிர்காலத்தை கர்தத்ர் அறிந்திருந்தமையால் தம்முடைய நீதியின் படி கர்த்தர் திட்டமிட்டு யார் விசுவாசித்தானோ அவனை அவர் நேசித்தார்.
அவருடைய திட்டத்திற்குள் உள்ள கர்த்தரின் நீதியை நாம் புரிந்து கொள்ளவேண்டும். யாக்கோபு மற்றம் ஏசாவிற்குள் கர்த்தர் யாரை அழைப்பார்? நீதிமான்களை அல்ல பாவிகளை அழைப்பதற்காகவே நான் வந்திருக்கிறேன் என நம் தேவன் கூறினார். வேறு வார்தத்தைகளில் கூறினால் கர்த்தரின் நீதியானது யாக்கோ¨ப் போன்ற மக்களை அழைக்கிறது. ஏசாவானவன் கர்த்தருடைய நீதியின் அழைப்பை மட்டும் புறக்கணிக்கவில்லை. தன்னுடைய நீதியைக் குறித்தும் அவன் பெருமைப்பாராட்டினான். இதனால் தான் ஏசா வெறுக்கப்பட்டான். அதே நேரம் கர்த்தரின் நீதியின் அழைப்பிற்கு பதிலளித்தவன் யாக்கோபு மட்டுமே.
கர்த்தரின் நீதியின் அன்பை அறிந்து விசுவாசிக்கும் விசுவாசித்தினுள்ளே இந்த அனைத்து வேதாகம உண்மைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். கர்த்தருடைய முன் குறித்தலில் உள்ள சிக்கலை அவிழ்க்க கர்த்தரின் நீதியின் அன்பைக் குறித்த சரியான அறிவில்லாமல் முயற்சித்தால் அவன்/அவள் ஏற்படுத்திய கன்னியின் அவனும்/அவளும் விழுவர். அவர்கள் தம்மைத் தாமே அழிவை நோக்கி வழிநடத்துகின்றனர்.
கர்த்தர் தம்முடைய நீதியிலுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்காக முன் குறித்தலை அவர் ஏற்படுத்தினார். யாக்கோபு தன்னுடைய குறைபாடுகளை அறிந்து கொண்ட மனிதர் ஆனான். மேலும் கர்த்தரின் நீதியிலான வார்த்தையையும் அவன் விசுவாசித்தான். ஆகவே கர்த்தர் யாக்கோபை நேசித்து ஏசாவை வெறுத்தது சரியானதே. கர்த்தரின் நீதியின் பார்வையின் படி எல்லலோருமே அவருடைய கோபத்திற்குள்ளாக வேண்டியவர்கள். ஆனால் அவருடைய நீதியை விசவாசிக்கும் எல்லோருக்கம் தன்னடைய விடுதலையை அளித்தார். கர்த்தருக்கு முன்பாக அவருடைய கிருபையினால் தரிப்பிக்கப்பட்டவர்கள் தம்முடைய சொந்த நீதியைக் குறித்து பெருமைப் பாராட்டுவதில்லை. ஆனால் தம்முடைய பாவ விடுதலையாக கர்த்தரின் நீதியை அவர்கள் விசுவாசிக்கின்றனர். இத்தகைய மக்கள் இவ்வாறு அறிவிக்கின்றனர். என்னுடைய பாவங்களுக்காக நான் நரகத் தண்டனையை அனுபவிக்க வேண்டியவன். தேவனாகிய கர்த்தாவே என் மீது இரங்கும்உம்முடைய நீதியைக் குறித்து எனக்கு போதியும்.
தன்னுடைய நீதியின் அன்பை விசுவாசிப்பவர்களுக்கு மட்டுமே கர்த்தர் தன்னுடைய பாவ மன்னிப்பை வழங்குகிறார். இது அவர் நமக்கு ஏற்கனவே வெளிப்படுத்திய நாம் அவருடைய பிள்ளைகளாவதற்ரின கர்த்தரின் திட்டமாகும். கர்த்தர் ஏன் யாக்கோபை நேசித்து ஏசாவை வெறுத்தார் என்பதை நீங்கள் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. துரதிருஷ்டவசமாக கர்த்தரின் நீதியை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை எனில் அவருடைய நீதிக்கள் உள்ள கர்த்தருடைய நீதயின் அன்பை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கான உங்களுக்கான நேரம் இதுவே.
கர்த்தரின் நீதியை நான் விசவாசிக்கிறேன். கர்த்தருடைய நீதியின் அன்பை சரியாக புரிந்து கொள்கிறவர்களால் அவருடைய நீதிக்குள் உள்ள கர்த்தரின் நீதியின் திட்டங்களையும் கூட தெளிவாக விசுவாசிக்க முடியும். இப்வுலகிலுள்ள சிலர் மட்டுமே கர்த்தருடைய நீதியின் திட்டத்தை சரியாக அறிந்து கொண்டு அதனை விசுவாசிக்கின்றனர். அநேக மக்கள் கர்த்தரை தவறாக புரிந்து கொண்டதால் அழிந்து போயினர்.
ஏசாவைக் கர்த்தர் வெறுத்தார் என வேத வசனங்கள் நம்மிடம் கூறுவதால் அவரால் ஏனோதானேவென தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை அவர் வெறுக்கிறார் எனவும், அவரால் வெறுக்கப்படுவது அவர்களின் தலைவிதி எனவும் சில மக்கள் எண்ணுகின்றனர். ஆனால் நம்முடைய கர்த்தர் இத்தகைய ஒருதலைபட்சமான கர்த்தரல்ல. கர்த்தர் நியாயாதிபதியாவார். அவர் தனதுநீதியில் நீதியும் நேர்மையும் மிக்கவர். தன்னுடைய நீதியின் இரக்கத்தையும் அன்பையும் நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்க கர்த்தர் விரும்புகிறார்.
இயேசு கிறிஸ்துவின் மூலமாக தன்னுடைய நீதியை நமக்கு அளிக்க கர்த்தர் விரும்புகிறார். அவருடைய நீதியை விசுவாசித்தவர்களைத் தன்னுடைய இரக்கத்தால் தரிப்பித்து அவர்களைத் தனது பிள்ளைகளாக்கினார்.
இந்த உண்மையானது புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மத்தேயு 9:12-13இல் இயேசு கூறுகிறார், “பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” சுகமாக இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் தேவை இல்லை. அவர்கள் பாரமாக இருக்கிறார்கள் என்பதைக் கூட எண்ண வேண்டியதில்லை. மக்கள் சுகமாயிருக்கும் போது மருத்துவர்களின் முக்கியத்துவத்தைக் குறித்து அவர்கள் அறிந்து கொள்வதேயில்லை. அது போலவே கர்த்தரின் நீதியை விசுவாசித்து அதனைத் தம்மிருதயங்களுக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதின் முக்கியத்தை அவர்கள் அறிந்து கொள்வதில்லை. கர்த்தரின் நீதியை அவர்கள் அறிந்து கொள்ளாமல் தம்முடைய சுய நீதியை வெகு தீவரமாக அவர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் பாவிகள் தம்முடைய சொந்த நீதியை விட்டுவிட்டு கர்த்தரின் நீதியை விசுவாசிக்க வேண்டும் கர்த்தருக்க முன்பாக நீங்கள் யாக்கோபைப் போலவும் ஏசாவைப் போலவும் இருக்க முடியும். நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள்? கர்த்தரின் நீதியிலுள்ள விடுதலையை விசுவாசிப்பதா இல்லையா என்பதைக் குறித்த உங்கள் தீர்மானத்தைப பொறத்து கர்த்தரின் சன்மானமும் தண்டனையும் அமையும்.
கர்த்தரிடம் எத்தவறும் இல்லை
ஒவ்வொரு நபரும் இயற்கையாக போட்டி மனப்பான்மை உடையவர்களாய் இருக்கிறார்கள். சில மக்கள் அதிபுத்திசாலிகளாகவும் வெற்றிகரமான மக்களாகவும் இருக்கலாம். சிலர் மற்றவர்களுக்காக அநேக நல்ல காரியங்களையும் செய்திருக்கலாம். ஆனால் கர்த்தரடைய நீதியின் மேல் உள்ள விசவாசத்தைப் புரிந்து கொள்ளாவிட்டால் கர்த்தரின் ஒப்புதலை அவர்களால் பெற முடியாது. நீங்களும் நானும் உட்பட அனைவரும் இஸ்ரவேலர்கள் உட்பட கர்த்தருக்கு முன்பாக நரகத்தில் அழிய வேண்டியவர்கள். இப்படியிருந்தாலும் நாம் நீதிமான்களாக்கப்பட்டோம். நம்முடைய சொந்த முயற்சிகளாலோ, செயல்களாலோ அல்லது பலத்தினாலோ அல்ல. ஆனால் கர்த்தருடைய நீதியின் மீதுள்ள விசுவாசத்தினால் மட்டுமே நீதிமான்களாக்கப் பட்டோம்.
கர்த்தர் தம்முடைய நீதியின் அன்பை எவ்வித பாகுபாடும் இன்றி அனைவருக்கம் கொடுத்தமையால் அதனை விசவாசிக்கும் அனைவராலும் அவர்களுடைய எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலையாக முடியும். நீங்கள் எண்ணியதைப் போல் கர்த்தர் அநீதிரல்ல.
கர்த்தருடைய பாவ விடுதலை ஆசீர்வாதத்தை ஒருவர் பெற்றுக் கொள்கிறாரா இல்லையா என்பது அவன்/அவள் அதனைப் பெற்றுக் கொள்வதா இல்லையா என தீர்மானிப்பதில் இருக்கிறது. இதனால் தான் சிலர் கோபாக்கினையின் பாத்திரங்களாகவும் மற்றவர்கள் கிருபையின் பாத்திரங்களாகவும் மாறினர். வேறு விதமாகக கூறினால் யாக்கோபு கிருபையின் பாத்திரமானான். ஆனால் ஏசாவோ கோபத்தின் பாத்திரமாக மாறினான்.
ஆனால் சில இறையியலாளர்களும் பரிசுத்த ஆவியானவர் தம்மிடம் இல்லாதவர்களும் கர்த்தரைச் சாடுகிறார்கள். அவர்கள் கூறுகின்றனர், “பாருங்கள் பாரோனைக் கர்த்தர் கோபத்தின் பாத்திரமாக்கவில்லையா? யாக்கோபையும் ஏசாவையும் பாருங்கள், ரெபேக்காளைப் பாருங்கள். குயவன் செய்தவற்றைப் பாருங்கள். சிலரைத் தொடக்கத்திலிருந்தே மரியாதையின் பாத்திரமாக கர்த்தர் மாற்றவில்லையா? இது தலைவிதியாக மட்டுமே இருக்க வேண்டும்!” அவர்களுடைய தர்க்கம் கீழ்கண்டவாறு சில மனிதர்கள் அவர்கள் பிறப்பதற்கு முன்னமேயே கர்த்தரின் பிள்ளைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கர்த்தருடைய அன்பினால் தரிபகேப்படும் படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் முன் குறிக்கப்பட்டவர்களுமான இத்தகைய மக்கள் அவருடைய பிள்ளைகளாக மாறினார்கள். ஆனால் மற்றவர்களோ நரகத்திற்காக நியமிக்கப்பட்டனர். இப்படித் தான் கர்த்தரின் தெரிந்து கொள்ளதல் தாக்க்பபடுகிறது. ஆனால் கர்த்தர் தன் நீதியை எல்லோருக்கம் கொடுத்தார். மேலும் அதனை விசவாசிப்பவர்களை அவர் பாகுபாடின்றி தேர்வு செய்தார்.
நாம் இதற்கு முன்பாக அவருடைய மக்களாக இல்லாத போதிலும் கூட கர்த்தரின் நீதியை விசவாசித்ததின் மூலம் நாம் நீதிமான்களாக்கப் பட்டோம். அவருடைய வார்த்தையின் மூலமாக நற்செய்தியாகிய நீர் மற்றம் ஆவியை விசவாசித்ததின் மூலம் நாம் நீதிமான்களாக்கப்பட்டதால் கர்த்தர் நம்முடைய விசுவாசங்களை அங்கீகரிக்கிறார். கர்த்தருடைய மகத்துவமான வல்லமையைக் காட்டும் நற்செய்தியின் சத்தியம் இதுவே.
முதன்முதலாக நாம் கர்த்தருக்குள் இருக்கவில்லை. அவரை நமக்குத் தெரியாது. மேலும் நாம் பாவிகள். ஆனால் கர்த்தரின் நீதியை நாம் விசவாசித்ததின் மூலம் நாம் அவருடைய பிள்ளைகளாயினோம். நாம் விசுவாசிக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றம் ஆவியானது குறைபாடுடைய நற்செய்தியல்ல. அது முழுமையானதும் நிறைவானதுமாகும். அவருடைய நீதியைப் பெறச் செய்யும் உண்மையை நமக்க கொடுத்தமைக்காக கர்த்தரை நாம் துதிக்க வேண்டும்.
நம் வாழ்வு பாடுகள் நிறைந்ததாயிருக்கலாம். ஆனாலும் கர்த்தரின் நீதியை நாம் மறந்துவிடலாகாது ஏனெனில் கர்த்தர் தன்னுடைய வல்லமையின் மகத்துவத்தை நமக்க காட்டினார். கர்த்தரின் நீதியை அறிந்தவர் இப்பிரபஞ்சத்திலேயே அதிக மகிழ்ச்சியை உடைய நபராவார். கர்த்தரை விசவாசிக்கும் நமக்க திரியேகரே கிருபையின் பிதாவாவார். அவர் நம்முடைய பரிசுத்தமான கர்த்தர். கர்த்தருடைய நீதியை விசவாசிக்கம் ஆத்துமாக்களுக்க அந்நம்பிக்கையை அவர் கொடுத்தால் அவருடைய நீதியை அறிந்து அதனை விசவாசிப்பதினால் நாம் கர்த்தரின் பிள்ளைகளாக்கப்பட்டு அவருடைய கிருபையையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டவர்கள் ஆனோம்.
ஆயினும் கூட அநேக மக்கள் நற்காரியங்களைச் செய்து தம் சுய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். காணிக்கை செலுத்துதல் ஆலயத்திற்கு ஊழியம் செய்தல் மற்றவர்களடன் போட்டியிட்டு பெருமளவு நன்கொடைகளைக் கொடுப்பது ஆகியவையெல்லாம் நற்செயல்கள் என நீங்கள் எண்ணலாம். ஆனால் அவற்றினால் மட்டுமே உங்களை இரட்சிக்க முடியாது. இச்செயல்களில் கண்ணும் கருத்துமாயிருப்பது மட்டுமே கர்த்தரின் நீதியிலுள்ள விசுவாசத்தைக் காட்டுவதில்லை. ஆனால் அது நீங்கள் உங்கள் சொந்த நீதியை மட்டுமே பின்பற்றுகிறீர்கள் என்பதையே இது காட்டுகிறது. தம்முடைய சொந்த மாமிசத்தின் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் கர்த்தருக்க எதிராகப் போய் கொண்டிருக்கிறார்கள். கர்த்தரின் நீதியை அறியாவதவர்களே மாமிசத்தின் இத்தகைய காரியங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.
கர்த்தரின் இரட்சிப்பிற்காக ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கு அது கொடுக்கப்படுவதில்லை எனவும், அவருடைய நீதியை விசவாசிப்பவர்களுக்க மட்டுமே அது கொடுக்கப்படுகிறது எனவும் வேத வசனம் நமக்கு கூறுகிறது. நம்முடைய இரக்கமிக்க கர்த்தரை விசவாசிப்பதினால் மட்டுமே இந்த நீதியை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். நம்முடைய செயல்களினால் நாம் கர்த்தரால் நேசிக்கப்படுவதில்லை. ஆனால் அவருடைய நீதியை விசுவாசித்தமையால் மட்டுமே அவருடைய இரக்கமிக்க அன்பை நாம் பெற்றுக் கொண்டோம். அதனால் தான் கர்த்தரின் நீதயை நாம் அறிந்து அதனை விசவாசிக்கிறோமா இல்லையா என்பதில் உண்மையான விசவாசம் முழுவதுமாக சார்ந்திருக்கிறது.
தொடக்கத்திலிருந்தே நாம் பயனற்றவர்களாய் இருந்தோமா? அப்படியிருந்தாலும் கூட கர்த்ரின் நீதியின் மீதுள்ள நம்முடைய விசுவாசத்தினால் மிகச் சிறந்தவர்களாய் நாம் மாறவில்லையா? கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதின் மூலமும், நாம் கர்த்தரின் பிள்ளைகளாகிவிட்டோம் என நமக்கு நாமே பெருமைப் பாராட்டிக் கொள்வதின் மூலமும் முடிவு வரை நம் விசுவாசங்களைக் கடைபிடிக்க முடியும்.
இவ்வுலகிலுள்ள அநேகர் தீயவற்றைச் செய்து கர்த்தரில்லை என வலியுறுத்துகிறார்கள். ஆனால் அவருடைய நீதியை நாம் விசவாசித்தமையால் கர்த்தர் நம் மீது இரக்கமுடையவராய் இருக்கிறார். கர்த்தருக்க முன்பாக உண்மையாகவே நாம் சிறந்தவர்களாய் இருக்கிறோம். ஆகவே கர்த்ரி மீதுள்ள நம் பெருமை மிகவும் சரியானதே. இவ்விலகில் நாம் வாழும் போது சோதனைகளையும் உபத்திரவங்களையும் நாம் சந்திப்போம். ஆனால் நாமனைவரும் ஆவிக்குள் செல்வ மிக்கவர்களாகவும் மகிழ்ச்சியுடையவர்களாயும் இருப்போம். நாமனைவரும் கர்த்தரின் நீதியைப் பின்பற்ற இயேசுவை துதிக்க வேண்டும்.
தனக்கு முன்பாக எல்லாப் பாவிகளையும் தன் பிள்ளைகளாக்கி பாவ மற்றவர்களாகவும், நீதிமான்களாகவும் நிறைவானவர்களாகவும் கர்த்தர் அவர்களை மாற்றினார். கர்த்தருடைய நீதி யாருக்க வந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த கர்த்தரின் நீதியானது நம்முடைய எல்லா குறைபாடுகளையும் பொறுப்பெடுத்து நம்முடைய பாவங்களையெல்லாம் கழுவியது. இந்த சத்தியத்தை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா இல்லையா என்பது முற்றிலுமாக உங்களைச் சார்ந்தது. நீங்களும் கூட கர்த்தரின் இந்த நீதியினால் உங்கள் பாவங்களிலிருந்து முற்றிலுமாக இரட்சிக்கப்பட்டீர்கள். அப்படியானால் நீங்கள் என்ன செய்வீர்கள்? விசவாசிப்பதற்கான தீர்மானம் செய்வதை நாளையத் தினத்திற்காக மாற்றுவீர்களா?
கர்த்தரின் நீதி உங்களுடனே இருப்பதாக.