தம்முடைய சொந்த நீதியைக் கடைபிடிக்கும் போது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசவாசிக்காத மக்கள் யாரேனும் உளரா? கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதற்க பதிலாக தம்முடைய சொந்த நீதியை கடைபிடிக்கும் இத்தகைய மக்கள் கர்த்தருக்க எதிரானவர்களாயினர் என்பதை வேத வசனம் கூறுகிறது. இம்மக்கள் என்ன செய்வார்கள்?
எல்லா மக்களும் கர்த்தருடைய நீதியாகிய அவரின் இரட்சிப்பைக் கொடுப்பதற்காக இயேசு கிறிஸ்துவை இஸ்ரவேலர்களின் மூலமாக கொடுப்பது என கர்த்தரை திட்டமிடவில்லையா? ஆம் அவர் திட்டமிட்டார். எல்லாப் பாவிகளையும் அவனின்/அவளின் பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்காக இயேசு அன்புடனே விரும்பியதால் அவர் இவ்விலகிற்க வந்து சிலுவையில் மரித்து மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுப்பினார். வேறு வார்த்தைகளில் கூறினால் அவரை விசவாசிக்கும் அனைவரையும் இரட்சிக்கம படியாக அவர் வந்தார்.
இஸ்ரவேலர்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்காக பிதாவாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவை அனுப்பினார். ஆனாலும் கூட கர்த்தரின் நீதியாகிய இயேசுவை இஸ்ரவேலர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக தம் சொந்த நீதியைப் பின்பற்றியதால் அவர்கள் கொழுத்து போயிருந்தனர். இன்னும் கூட அம்மக்களின் மேசியாவாகவும் அவர்கள் ஆத்துமாக்களின் இரட்சகராகவும் அவரை ஏற்றுக் கொள்ள அவர்களால் முடியவில்லை.
கர்த்தரால் அனுப்பப்பட்டவர்கள் இருக்கின்றார்கள் என்பதாகவும், அவர்களின் மூலமாக அழகிய நற்செய்தியைக் கேட்கவும் முடியுமென பவுல் கூறினான். கர்த்தரால் அனுப்பப்பட்ட அவரின் ஊழியர்களிடமிருந்து கேட்கப்படும் நற்செய்தியே கர்த்தான் நீதியுள்ள நற்செய்தியாகும். இவ்வாய்ப்பை உங்களால் இழக்க முடியாது. கர்த்தருடைய நீதியை அறிந்த அதனை விசுவாசிக்கம் கர்த்தரின் ஊழியர்களால் பிரசங்கிக்கப்படும் நற்செய்தியாகிய நீர் மற்றம் ஆவியை கேட்பதின் மூலம் மட்டுமே கர்த்தர் உங்களுக்கு பாவ மன்னிப்பையும் அவரின் நீதியையும் கொடுத்ததை உங்களால் விசுவாசிக்க முடியும்.
நற்செய்தியாகிய நிர் மற்றும் ஆவியானது இவ்வுலகிலுள்ள செய்திகளிலேயே சிறந்ததும் மிகவும் அழகியதுமான செய்தியாகும். இந்த நல்லதும் அழகியதுமான செய்தியே பாவிகளை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சித்து. கர்த்தரால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றம ஆவியானது ஆத்துமாக்களுக்கான உண்மையான உணவாக இருப்பதால் இந்த அழகிய செய்தி ஆத்துமாக்களக்கு புத்துணர்வை அளிக்கிறது.
கர்த்தரால் கொடுக்கப்பட்ட அழகிய நற்செய்தியாகிய பாவ மன்னிப்பிடம் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பதற்கான வல்லமை இருக்கிறது. நம் பாவங்களை மன்னிப்பதின் மூலம் நம் மனங்களுக்கு சமாதானத்தை அளிக்கும் ஆசீர்வாதத்தின் வல்லமை நற்செய்தியாகிய நீர் மற்றம் ஆவியிடம் இருக்கிறது.
கர்த்தரின் சட்டத்தை மையப்படுத்தி இஸ்ரவேலர்கள் தம்முடைய சொந்த நீதியை கடைபிடித்தனர். அவர்கள் சட்டத்திற்க கீழ்படிந்தமையால் தம்முடைய நீதியானது அளவில்லாத என அவர்கள் எண்ணியதால், இயேசுவை தமது இரட்சகராக அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சட்டத்தின் படியான செயல்களை கடை பிடிப்பதில் அவர்கள் மிகவும் தீவிரமாக இருந்தமையால், கர்த்தரின் நீதியை அவர்களால் பொருத்துக் கொள்ளக் கூட முடியவில்லை. இன்னமும் கூட அவர்கள் தம் சொந்த நீதியை கடைபிடிப்பதால், தேவனை தமது இரட்சகராக ஏற்றக் கொள்வதில் தவறினர்.
இஸ்ரவேலர்கள் கர்த்தரின் நீதியை எதிர்த்துதம்முடைய சொந்த நீதியை நிலைநிறுத்த முயன்றார்கள் என் வேத வசனங்கள் நம்மிடம் கூறுகின்றனவா? சட்டத்தினால் கொழுத்துபோன இஸ்ரவேலர்களிடம் பேசும் போது பவுல் அவர்களுடைய விசுவாசத்ததை கண்டித்தான், “விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்” (ரோமர் 10:4).
தன்னுடைய சொந்த நீதியை கடைப்பிடிக்கும் தர்க்க ரீதியான விசுவாசம் கர்த்தருக்கு முன்பாக சரியான நீதியல்ல. பழைய ஏற்பாட்டின் சட்டங்களை பின்பற்றவதற்கு மட்டுமே இஸ்ரவேலர்கள் கண்ணும் கருத்தமாக இருக்கும் போது, கர்த்தரின் நீதியாகிய இயேசுவை அறிந்து கொள்ளவும், அவரை தமது இரட்சகராக ஏற்றுக் கொள்ளவும் தவறியதுடன், அவருக்கு எதிரானவர்களாகவும் மாறினர். தாம் தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள் எனவும், கர்த்தரின் வார்த்தை தமக்கு கொடுக்கப்பட்டது எனவும், தாம் அதனை பின்பற்ற வேண்டும் எனவும், பெருமை பாராட்டுவதில், தம் நாடு முழுவதையும் கர்த்தரின் நீதிக்கு எதிரானதாக இஸ்ரவேலர்கள் மாற்றினர்.
உங்கள் சொந்த நீதியை நிலை நிறுத்தியதின் மூலம் கொழுத்து போயுள்ளீர்களா?
இஸ்ரவேலர்களின் சட்டத்தை குறித்த வெறியின் பிரச்சனையானது, அதன் மூலமாக அவர்கள் தம் சொந்த நீதியை ஏற்படுத்த முயன்றார்கள். அவர்களுடைய சொந்த நீதியின் நிமித்தமாக நம் தேவனால் எற்படுத்தப்பட்ட கர்த்தரின் நீதியானது முற்றிலுமாக அலட்சியம் செய்யப்பட்டது.
இஸ்ரவேலர்களின் சட்டத்தின் மீதுள்ள விசவாசத்தினால் அவர்கள் கர்த்தரின் நீதிக்கு எதிராக மாறுவதில் முடிவடைந்தனர். இப்படியாக இதன் விளைவு எத்தனை மோசமானதாய் இருக்கிறது என இதுவரை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. சட்டப்படியான செயல்களை அவர்கள் பின்பற்றியது எத்தகைய நன்மைகளையும் ஆதாயங்களையும் அவர்களுக்கு எடுத்து வந்தது? கர்த்தரின் வார்த்தையை பின்பற்றும் அவர்களின் வெறியானது, கர்த்தரின் நீதியை அவர்கள் அறிந்து அதனை விசவாசிப்பதற்கான தடையாக மாறியது. சட்டத்தை குறித்து சரியான புரிந்து கொள்ளதல் இல்லாவர்களின் “பக்தியான” முடிவில் அவர்களை கர்த்தரின் நீதிக்கு எதிரானவர்களாய் மாற்றவதற்கு மட்டுமே வழிநடத்தும் என்பதை நான் உணர்ந்து கொள்ள வேண்டும்.
விசுவாசிக்கும் அனைவருக்கும் நீதிக்கான சட்டத்தின் முடிவாக இயேசு மாறினார் என வேதாகமம் தெளிவாக நம்மிடம் கூறுகிறது. நம் தேவன் தனது ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லா பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டு சிலுவையில் இரத்தம் சிந்தியதின் மூலம் கர்த்தரின் நீதியை அவர் நிறைவேற்றினார், இஸ்ரவேலர்களினதும், புற ஜாதியார்களினதும் பாவங்களை எல்லாம் சுத்தமாக்கவே இப்படி செய்தார். கர்த்தரின் நீதியை உள்ளடக்கியிருக்கம் நற்செய்தியாகிய நீர் மற்றம் ஆவியானது, அனைத்து பாவிகளுக்குமான பாலைவனச் சோலையான மாறிற்று. நம் எல்லாப் பாவங்களையும் துடைத்து உண்மையாகவே நம்மை பரிசுத்தமாக்கியது. நற்செய்தியாகிய இந்த நீர் மற்றம் ஆவியை ஆகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது இல்லாவிட்டால், உலகில் உள்ள எல்லா பாவிகளாலும் தம் இருதயங்களில் பரிசுத்தத்தை பெறறுக்கொள்ள முடியும்.
கர்த்தரின் நீதியை விசுவாசிக்காமல் தன்னுடைய சொந்த நீதியை ஏற்படுத்த முயல்வது கொடியதொரு பாவமாகும் என ரோமர் புத்தகத்தில் பவுல் நம்மிடம் கூறுகிறான். புற ஜாதியாராகிய நமக்கு எவ்வகையான நற்செய்தி அழகிய நற்செய்தியாக இருக்கும்? நம் தேவனாகிய இயேசு தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டார் என நம்மிடம் கூறிய நற்செய்தியே அது.
இந்நற்செய்தியே மத்தேயு 3:13-17இல் எழுதப்பட்டுள்ள நற்செய்தியாகும். அது இயேசு தன் மீது உலகத்தின் பாவங்களை ஏற்றுக் கொண்டதற்கு சாட்சியாக இருக்கிறது. “அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.” இப்படியாக யோவானிடம் இருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லா பாவங்களையும் இயேசு தன் மீது ஏற்றுக் கொண்டார்.
கர்த்தான் நீதியை விசவாசிக்காத சட்டப்படியானவர்களை கண்டித்து பவுல் இவ்வாறு கூறினான். “கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி பரலோகத்துக்கு ஏறுகிறவன் யார்?” வேறு வகையாக கூறினால், “சட்டத்தை மட்டுமே பின்பற்றினால் எவனால்/எவளால் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட முடியும்?” என இக்கேள்வி கேட்டது. சட்டத்தை பின்பற்றுவது பாவத்தில் இருந்து இரட்சிப்பை நமக்கு எடுத்து வராது என்ற குறிப்பை அடிக்கோடிட்டு காட்டுவது பவுலின் இக்கேள்விக்கான நோக்கமாகும். வேறு வார்த்தையில் கூறுவதானால் பாவத்தில் இருந்து தப்பிக்க நம்மால் எதனையும் செய்ய முடியாது என அவன் நம்மிடம் கூறுகிறான்.
பவுல் தம் நிருபங்களில் கர்த்தரின் நீதியை குறித்து அடிக்கடி கூறுகிறான். உண்மை விசவாசத்திற்கான பவுலின் பதில் ரோமர் 10:10இல் காணப்படுகிறது, “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்,” என இங்கு கூறுப்பட்டுள்ளது. கர்த்தரின் நீதி வெளிப்படுத்தப்பட்டுள்ள நம் தேவனின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசிப்பதின் மூலம் கர்த்தரின் நீதியை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என பவுல் பிரசங்கித்த நற்செய்தி நம்மிடம் கூறுகிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை தேவன் நமக்கு கொடுத்தார் என நாம் விசுவாசிக்க வேண்டும், மேலும் இந்த நற்செய்தியை விசுவாசிப்பவர்கள் உண்மையான மன அமைதியுடன் வாழ கர்த்தர் அனுமதித்தார்.
கர்த்தரின் வார்த்தையை கேட்பதின் மூலம் உண்மை விசவாசம் வருகிறது
உண்மை விசவாசத்தை குறித்து பவுல் நம்மிடம் என்ன கூறினான்? ரோமர் 10:17 கூறுகிறது, “ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.” வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தர் தம்முடைய ஊழியர்கள் மூலமாக தன்னுடைய வார்த்தையை பிரசங்கிக்கும் போது, அதனை நாம் கேட்பதின் மூலமாக உண்மை விசுவாசம் வருகிறது.
கர்த்தரின் வார்த்தையை கேட்பதின் மூலம் உண்மை விசுவாசத்தைக் குறித்த உறுதி நமக்கு கிட்டுகிறது. ஆகவே உண்மை விசவாசத்தின் பிள்ளைகளாய் நாம் இருக்க வேண்டுமானால், அவருடைய வார்த்தையை கேட்டு அதனை விசுவாசிக்க வேண்டும். கர்த்தரின் வார்த்தையை கேட்பதின் மூலம் மட்டுமே உண்மை விசுவாசத்தை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் இதன் முலம் மட்டுமே நம் விசுவாசத்தால் வளர முடியும. இதனால் தான் கர்த்தர் தனது ஊழியர்களை நம்மிடம் அனுப்பினார். அவர்கள் அவருடைய நீதியை பிரசங்கிக்கிறார்கள்.
கர்த்தரால் மனித குலத்திற்கு கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிக்கும் போது, பாவ மன்னிப்பை நம்மால் பெற்றக் கொள்ள முடியும். மேலும் நம்மிருதயங்களிலும் ஆறுதலாய் இருக்க முடியும். கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதின் மூலம் மட்டுமே பாவ விடுதலை நமக்கு சாத்தியமாகும். இதனால் மனச் சமாதானத்தை நாம் காண்போம்.
தேவனுடைய நீதியனாது நம் கண்ணீரைத் துடைத்து நம் எல்லா வேதனைகளில் இருந்தும் வலிகளில் இருந்தும் நம்மை விடுதலையாக்கும் என நமக்கு கூறப்படவில்¨லா? நாம் கூறப்பட்டுள்ளோம். கர்த்தரால் கொடுக்கபபட்ட நற்செய்தியாகிய நீர் மற்றம் ஆவியை நீதியை விசுவாசித்ததின் மூலம், நம் எல்லா வேதனைகளும் அகற்றப்பட்டது. நற்செய்தியாகிய நீர் மற்றம் அவியானது உலகிலேயே மிகவும் அழகிய செய்தியாகும். அதுவே கர்த்தரின் நீதியின் நிறைவேறுதல் ஆகும்.
கர்த்தருடைய நீதியை நிறைவேற்றிய நம் தேவனை கர்த்தர் இஸ்ரவேலர்களிடம் அனுப்பினார், ஆனால் அவர்கள் தம் சொந்த நீதியை கடை பிடித்ததால் அவரை பின்பற்ற மறுத்துவிட்டனர். அப்போது கர்த்தர் என்ன செய்தார்? இஸ்ரவேலர்களுக்க பொறாமை உண்டாகும் படி, தம் நீதியின் நிறைவேறுதலாகிய நற்செய்தியை புறஜாதியார் விசுவாசிக்கம் படி அவர்களுக்கு கொடுத்துவிட்டார். அப்படியானால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதற்கான வாய்ப்பை பிற ஜாதியாருக்க கர்த்தர் அளித்தாரா? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதற்கான வாய்ப்பை அவர்களுக்கு கொடுத்தார். அவர்கள் அவர்களை தேடாததையும் அவரை அழைக்காததையும் இஸ்ரவேலர்களை போல் அவரை ஆராதிக்காததையும் அவர் பொருட்படுத்தவே இல்லை.
இதனால் தான் புற ஜாதியாரால் கர்த்தரின் பிள்ளைகளாக முடிந்தது. அவருடைய நீதியின் நிறைவேறதலான அழகிய நற்செய்தியை விசுவாசித்தமையால் அப்படி ஆயிற்று. இதனால் தான் கர்த்தரின் நீதியானது இஸ்ரவேலுக்கு வெளியேயும் மதிக்கப்பட்டு மகிமைப்படுத்தப்பட்டது என வேத வசனம் நமக்கு கூறுகிறது.
கர்த்தரின் நீதியை நிறைவேற்றிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நம் அனைவருக்கும் கொடுத்த தேவனுக்கு எத்தனை மக்கள் உண்மையாகவே நன்றி கூறுகின்றனர்? அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக உலகின் எல்லா பாவங்களையும் நம் தேவன் எடுத்துப போட்டார். ஆயினும் கூட அநேக கிறிஸ்தவர்கள் இந்த சத்தியத்தை விசுவாசிப்பதே இல்லை. அப்படியானால் கர்த்தருக்கு முன்பாக ஏற்படுத்தக் கூடிய எவ்வகையான நீதியும் நம்மிடம் இருக்கிறதா? நம்மிடம் எதுவுமே இல்லை. அப்படியானால் நாம் ஏன் விசுவாசிப்பதில்லை? கர்த்தரின் நீதியை எந்த நீதி நிறைவேற்றியது என்பதை அறியாததே இதற்கான காரணம் ஆகும். ஆனால் இந்த நற்செய்தியை அறிந்து கொள்வது மிகவும் இலகுவானது.
இஸ்ரவேலர்கள் செய்ததை போல், நாமும் கூட நம் சொந்த நீதியை கடைபிடிக்கும் மக்களாக இருந்திருப்போம். ஆயினும் கூட அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நமக்கு கொடுத்ததின் மூலம் நம் எல்லா பாவங்களிலிருந்தும் கர்த்தர் நம்மை இரட்சித்தார். கர்த்தரின் நீதியின் நிறைவேறுதலாகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிப்பதற்காக தேவன் நமக்கு கொடுத்ததற்க்கு அவருக்கு நாம் நன்றி கூறுகிறோம்.
“பரலோகத்துக்கு ஏறுகிறவன் யார்?” எனக் கூறாதீர்கள்
வசனம் 6 கூறுகிறது, “விசுவாசத்தினாலாகும் நீதியானது: கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி பரலோகத்துக்கு ஏறுகிறவன் யார்?” நம்முடைய பாவ விடுதலையும், சத்தியத்தின் நற்செய்திக்கு நாம் ஊழியம் செய்வதும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் உள்ள நம் விசுவாசத்தினாலே சாத்தியமாயிற்றே அன்றி நமது செய்கைகளினால் அது சாத்தியமாகவில்லை. கர்த்தரின் நீதியை நிறைவேற்றிய சத்தியத்தின் மீது நம் நம்பிக்கை இல்லாவிட்டால் நாமும் கூட பாவிகளாகவே இருந்திருப்போம். தம்முடைய சொந்த நீதியை கடைபிடித்த சட்டத்தினரைப் போல கர்த்தரை நாம் துன்பப்படுத்தி இருப்போம்.
கர்த்தரின் நீதியை விசுவாசித்தமையால் நம் இரட்சிப்பு வந்ததைப் போல் அவருடைய இந்த நீதியின் மீதுள்ள விசுவாசத்தினால் நம்மாலும் கூட நமது தேவனுக்காக வாழ முடியும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நமது விசவாசத்தினால் இந்த நீதியை குறித்த நமது அறிவு அதிகரித்தததைப் போல், கர்த்தரின் நீதியின் மீதுள்ள நமது விசவாசத்தில் இருந்து நம் வாழ்வை தொடர்ந்து நடத்துவதற்கான பலமும் நமக்கு கிடைக்கிறது.
பாவத்தில் இருந்து விடுதலையாக வேண்டியவர்களுக்கு கர்த்தருடைய நீதியின் மீதான விசுவாசத்தை தவிர வேறெந்த சத்தியமும் இருக்கிறதா? எதுவுமே இல்லை. கிறிஸ்தவத்தின் சாராம்சம் விசவாசத்தில் இருக்கிறது. கர்த்தரின் நீதியே கிறிஸ்தவ விசுவாசத்தின் அனைத்தும் எனக் கூறினால் அது மிகையாகாது. நீதிமான்களாக்கப்பட்டவர்களால் தம்முடைய நம்பிக்கைகளின் மூலமாக நற்செய்தியை இந்த நீதிக்குள் பிரசங்கித்து வாழ முடியும். அப்படியானால் கர்த்தரின் நீதியை விசவாசிப்பவர்களும் கூட பாடுகளை அனுபவிக்கிறார்களா? ஆம், அவர்கள் அனுபவிக்கிறார்கள். ஆனால் கர்த்தரின் நீதியிலுள்ள அவர்களின் விசுவாசத்தினால் எல்லா பாடுகளையும் அவர்களால் மேற்கொள்ள முடியும். கர்த்தர் அவர்களின் எல்லாப் பிரச்சனைகளையும் பொருப்பெடுத்துக் கொள்கிறார் என அவர்கள் விசுவாசிக்கின்றனர்.
கர்த்தரின் நீதியை உள்ளடக்காத மற்ற விசுவாசங்களை குறித்து என்ன? மனித செயல்களின் அடிப்படையில் அமைந்த இவைகளெல்லாம் தவறான விசுவாசங்கள் ஆகுமா? ஆம் அவை அப்படிப்பட்டவைகளே. கர்த்தருடைய நீதியை விசுவாசிக்காமல் இயேசுவை விசுவாசிப்பவர்களின் நம்பிக்கையானது, உண்மையான நம்பிக்கை அல்ல.
முதன்முதலாக கர்த்தரின் நீதியை விசுவாசிக்காமல் உங்களாலும் என்னாலும் நம் பாவங்களிலிருந்து விடுதலையாக முடியுமா? அவருடைய நீதியின் மீது விசுவாசம் இல்லாமல் கர்த்தரின் மீதுள்ள விசுவாசத்தினால் நம்மால் வாழ முடியுமா? இவை இரண்டுமே சாத்தியமில்லாதவை. தேவனுக்கு ஊழியம் செய்வதற்கான நீதிமானின் வல்லமை பரிசுத்த ஆவியானவரின் வல்லமையிலிருந்து வருகிறது. கர்த்தருடைய நீதியின் மீதுள்ள அவர்களின் விசுவாசத்திற்கான ஈவாக பரிசுத்த ஆவியானவர் வழங்கப்பட்டார். உங்கள் சொந்த பலத்தினாலும் உலகப் படியான செல்வந்தங்களினால் மட்டுமே உங்களால் இவ்வுலகில் வாழ முடியுமா? இவற்றினால் உங்களால் உண்மையாகவே மன உறுதியைப் பெற முடியுமா?
கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதின் மூலம் சமாதானத்துடனே கூட நற்செய்திக்கு நம்மால் ஊழியம் செய்ய முடியும். நற்செய்தியாகிய நீர் மற்றும ஆவிக்கு ஊழியம் செய்பவர்களிடம் விசுவாசமும, துணிவும், பலமும், சுமாதானமும் இருக்கிறது. கர்த்தரின் நீதியின் நிறைவேறுதலாகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு ஊழியம் செய்யாத நீதிமான்களாகிய மக்களிடம் சமாதானமம் இல்லை, துணிச்சலுமில்லை. நீதிமான்களின் மனங்களுக்கு சமாதானம் தேவைப்படுகிறதா? அவர்களுக்கும் தேவைப்படுகின்றன. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பரப்புவதற்கு மட்டும் அவர்களுக்கு சமாதானம் தேவைப்படாமல் தம் வாழ்வை முழுமையாக வாழவும் அது தேவைப்படுகிறது.
உங்கள் மனம் சமாதனாமாயிருக்கிறதா? உங்களுக்காக மட்டுமே நீங்கள் வாழ வேண்டுமானால் உங்கள் மனதில் சமாதானம் உண்டாவதற்கு எக்காரணமும் இல்லை. மாமிசத்தின் படி வாழுவதற்கு மாமிசத்தின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டியதாயிருக்கும் போது சமாதானமோ விசுவாசமோ உங்களுக்கு ஏன் தேவைப்படுகிறது? ஆனால் கர்த்தருக்கு நீங்கள் ஊழியம் செய்ய வேண்டுமானால் உங்கள் மனதிலுள்ள சமாதானமும் கூட வளர வேண்டும். கர்த்தரின் நீதியை நிறைவேற்றிய நற்செய்தியக்கு ஊழியம் செய்ய வேண்டுமானால் உங்கள் விசுவாசமும் சமாதானமும் கூட வளர வேண்டும். அது நிச்சயமாய் வளரும்.
கர்த்தரின் நீதியின் நற்செய்தியை விசுவாசிப்பவர்களுக்கு அந்த சமாதானத்தை முழு உலகிற்கும பரப்புவதற்கான முழுப் பொறுப்பும் இருக்கிறது. ஏனெனில் இது தனிப்பட்டவர்களுக்கான பிரச்சனை மட்டுமல்ல ஆனால் இயேசு கிறிஸ்துவால் அளிக்கப்பட்ட மன அமைதியை எல்லோருக்கும் பரப்பும் அவசியம் இருக்கிறது. கர்த்தரின் நீதியின் நற்செய்தியை முழு உலகிற்கும் நாம் பிரசங்கிக்க வேண்டும். கர்த்தருடைய சமாதானம் மற்றவர்களுக்கும் வேண்டும் நமக்கும் கூட இது தேவைப்படுகிறது. இந்த சமாதானத்தை மற்றவர்களுக்கு பரப்ப முயற்சிக்கும் போது கர்த்தரிடமிருந்து அதிக வேண்டுதல்கள் நமக்குத் தேவைப்படுகிறது. கர்த்தரின் நீதியை பரப்புவதற்காக நாம் வாழும் போது நம் மன அமைதி மேலும் வளரும் நம்முடைய வாழ்விற்கான தெளிவான துல்லியமான இலக்கை நாம் காண்போம்.
கர்த்தரால் அருளப்பட்ட உண்மையான சமாதானத்தை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டுமானால் அவருடைய நீதியை நிறைவேற்றிய நற்செய்தியை நீங்கள் அறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும். கர்த்தர் உங்களுக்காக ஏற்படுத்திய மன அமைதியை நீங்கள் அனுபவித்துப் பார்க்க வேண்டும்.
இதுவரை நீங்கள் தேவனுக்கு நன்றாக ஊழியம் செய்துள்ளீர்கள். ஆனால் இன்னமும் நீங்கள் அவருக்கு தொடர்ந்து ஊழியம் செய்யவேண்டும். அவருடைய சந்நிதானத்திற்கு அழைக்கப்படும் வரை உங்கள் சமாதானத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். கர்த்தரின் நீதியுடனான உங்கள் விசுவாசத்துடனே கூட சமாதானத்துடன் மற்றவர்களை அணுகும் போது பாவ விடுதலையை நோக்கி உங்கள் அடிச் சுவடுகளைப் பின்பற்றும் விசுவாசிகளாலும் கூட மற்றவர்களின் சமாதானத்திற்காக வாழ முடியும்.
தம்முடைய விசுவாசங்களில் இளமையாக இருப்பவர்கள் விசுவாசத்தின் யதார்த்தத்தைப் பொறுத்த வரை குழந்தைகளாகவே இருக்கிறார்கள். அதனைப் புரிந்து கொள்ளும் திறமை மிகவும் குறைவு. ஆனால் நாம் விசுவாசத்துடன் வாழும் போது சிறிது நேரம் பிடித்தாலும் கூட நமக்கு பின்னால் உள்ளவர்கள் நம் விசுவாச அடிச்சுவட்டைப் பின்பற்றி விடுதலையானவர்கள் எப்படி சமாதானத்துடனே வாழுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வார்கள்.
விசுவாசத்தினால் எப்படி வாழ்வது என்ற உங்கள் தலைமையைப் பின்பற்றுபவர்களுக்கு போதிப்பதில் கடினமாயிருக்கிறதா? இத்தகைய போதிக்கும் வாழ்வை ஓரிரவிற்குள் பெற்றுவிட முடியாது. சமாதானத்துடன் வாழ்வதற்கு தேவையான விசுவாசத்தை நோக்கி அவர்களை உங்களால் வழிநடத்துவதற்கு முன்னர் மிக அதிக காலம் உங்களுக்குப் பிடிக்கலாம். ஆனால் சில காலத்திற்குள்ளேயே கர்த்தரின் நீதியை விசுவாசித்து பாவ விடுதலையைப் பெற்றவர்கள் விசுவாசத்தின் மக்களாக சமாதானத்துடனே கூட வாழுவதற்கு கற்றுக் கொள்வார்கள். நமக்கு முன்பாகச் சென்றவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொண்டதைப் போல் கர்த்தருக்கு ஊழியம் செய்யும் முந்திய விசுவாசிகளிடமிருந்து அவருடைய மன அமைதியை அவர்கள் பெற்றுக் கொள்வர்.
நீங்களும் நானும் கர்த்தருடைய நிதியின் மீதுள்ள விசுவாசத்தினால் வாழ வேண்டும். வார்த்தையின் மீதுள்ள விசுவாசத்தினால் நீதிமான்கள் வாழ வேண்டும். நம்முடைய இப்போதைய மற்றும் எதிர்கால வாழ்க்கையானது விசுவாசத்தினால் தீர்மானிக்கப்பட வேண்டும். வேத வசனம் நம்மிடம் கேட்கிறது, “பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?” கர்த்தரின் நீதியை நாம் விசுவாசிப்பதினால் நற்செய்தியை உலகிற்கு நாம் பிரசங்கிக வேண்டும். நற்செய்தியை நாம் பரப்பும போது சந்திக்கும் எல்லா சவால்களையும் விசுவாசத்தினால் நம்மால் சந்திக்க முடியும்.
விசுவாசத்தினால் வாழப்படாத நீதிமான்களின் வாழ்வானது தம் மனங்களில் அமைதியில்லாத வாழ்வு வாழ்பவர்களின் வாழ்வாயிருக்கும். கர்த்தருடைய நீதியை விசவாசிப்பது மக்கள் தம் மனச் சமாதானத்தைப் பெறுவதற்கு வழி நடத்தும். நாம் கர்த்தரின் வார்த்தையையும் அவரின் நீதியையும், எல்லாக் காரியங்களுக்கும் விசுவாசிக்கும் போது நம் சமாதானம் நமக்குக் கொடுக்கப்படும்.
கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பதின் மூலம் உங்கள் சமாதானம் மற்றும் நம்பிக்கையில் மிக உறுதியாக நிற்க வேண்டும். கர்த்தரை நீங்கள் துதிக்க வேண்டும். ஏனெனில் கர்த்தர் தன் நீதியின் பாவ விடுதலையாலும் சமாதானத்தினாலும் உங்களை வாழ அனுமதித்தார். நற்செய்தியை பிரசங்கித்து உங்கள் வாழ்வை வாழுவீர்களாக. அப்படி செய்ய உங்கள் மன அமைதியைப் பெற்றுக் கொண்ட கர்த்தர் மீது விசுவாசம் வைத்திருங்கள்.
கர்த்தரின் நீதி எத்தனைச் சிறந்தது என ரோமர் புத்தகத்திலிருந்து நம்மால் படித்துக் கொள்ள முடிந்ததா? கர்த்தரின் நீதி என்னவென்று ரோமர் விரிவாக விளக்குகிறது. நாம் பேசிக் கொண்டிருக்கும் கர்த்தரின் நீதியானது மனித நீதியல்ல, அது கர்த்தருடையது அது அவருடையது மட்டுமே.
கர்த்தரின் நீதியானது நிறைவானது, மேலும் நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரடசிப்பதற்கு அது போதுமானது. இயேசு தன் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்டு நிறைவாக அவற்றைப் பொறுப்பெடுத்துக் கொண்டார். கர்த்தரின் நீதியானது நிறைவானது என்ற குறிப்பினால் இயேசு கிறிஸ்துவை நம்மால் விசுவாசிக்க முடிகிறது. இக்கர்த்தரின் நீதியானது நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் முற்றிலுமாக இரட்சித்தமையால் அவருடைய நிதியை நிறைவேற்றிய நற்செய்தியை விசுவாசிப்பது நமக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பதின் மூலம் அதனை இரசித்து நன்றி கூறி துதிப்பதின் மூலம் நம் வாழ்வை நம்மால் வாழ முடியும். கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பதின் மூலம் மட்டுமே கர்த்தருடைய பரிசுத்தத்தில் மக்களால் வாழ முடியும். இந்த நீதியை நாம் விசுவாசித்தமையால் நம் மனம் சுத்திகரிக்கப்பட்டதால் கர்த்தரை நம்மால் துதிக்க முடியும். மேலும் அவருடைய மகிமைக்காக நம்மால் வாழ முடியும்.
கர்த்தருடைய நீதியானது நிறைவானதாயில்லாவிட்டால் நம்முடைய பாவங்களிலிருந்து நம்மால் விடுதலைப் பெற்றிருக்க முடியாது. இயேசுவை விசுவாசித்ததின் மூலமாக நம் மூலப் பாவம் மன்னிக்கப்பட்டிருந்தாலும். அதன் பிறகு நாம் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு பாவமும் தினமம் மனம் வருந்தி ஜெபிப்பதை வேண்டியிருக்கும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கர்த்தரின் நீதியை விசுவாசித்து பாவ விடுதலையை நாம் பெற்ற பிறகு கர்த்தரின் நீதியானது முபமையானது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். இதனால் தான் கர்த்தரின் நீதியானது விசுவாசிக்க கூடியதும் நித்தியமாக நிறைவானதுமானது என்பதால் எல்லையில்லாத அளவு நன்றியறிதலுடையவனாயிருக்கிறேன். நம்முடைய வாழ் நாட்களில் செய்யக் கூடிய அனைத்துப் பாவங்களிலிருந்தும் கர்த்தருடைய நீதியானது நம்மை விடுதலைச் செய்ததால் அவருடைய நீதியை விசுவாசிப்பதின் மூலம் பாவத்திலிருந்து நம்மால் இரட்சிக்கப்பட முடியும்.
கர்த்தரின் நீதியை மனிதனின் பாவங்களுடன் ஒப்பிடாதவர்களினால் அவருடைய நிதியை விசுவாசிக்க முடியாது. ஏனெனில் அது எத்தனைப் பெரிதானது என்று அவர்களால் அறிந்து கொள்ளவே முடியாது. கர்த்தருடைய நீதியுடன் ஒப்பிடும் போது மிகவும் நிறைவான மனிதர் கூட ஒன்றுமில்லாதவராகி விடுகிறார். இதனால் தான் அவருடைய நீதியை நாம் விசுவாசிக்கிறோம். இதனால் அவர்கள் அவருடைய பரிசுத்தத்தில் வாசம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். வேறு வார்த்தைகளில் கூறினால் கர்த்தருடைய நீதியை விசுவாசித்து அதனில் வாசம் செய்வதின் மூலம் அவரை மகிமைப்படுத்துபவர்களாக நாம் மாறினோம்.
கர்த்தருடைய நீதியைக் குறித்து நமது இருதயங்களில் சரியானதொரு புரிந்து கொள்ளுதலை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். அதாவது கர்த்தரின் நீதியானது நம்மை முற்றிலுமாக நம்மை நமது பாவங்களிலிருந்தது விடுவித்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்வு முழுவதும் எண்ணிலடங்காத பாவங்களை நாம் செய்வதில்லையா? அப்படியானால் இத்தகைய எண்ணிலடங்காத பாவங்களிலிருந்து நம்மை விடுதலை செய்த கர்த்தர் செய்த நீதியின் செய்கை என்ன? நம்முடைய சரீரத்தின் சாயலில் இவ்விலகிற்கு வந்து யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டு சிலுவையில் மரித்து மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்ததின் மூலம் இதனை நிறைவு செய்தார். சுருக்கமாகக் கூறினால் கர்த்தரின் எல்லா நீதியையும் அவர் நிறைவேற்றினார்.
இளையவர்களும் முதியவர்களும், ஏழைகளும், செல்வந்தர்களும், பலசாலிகளும் பலவீனர்களுமாகிய அனைவரும் பாவம் செய்கின்றனர். அப்படியானால் உலகின் இந்த எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சித்தது யார்? அது இயேசு கிறிஸ்துவேயாகும். கர்த்தருடைய நீதியை நிறைவேற்றியதின் மூலம் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை விடுவித்தார். கர்த்தர் இயேசுவை அனுப்பி நம்முடைய எல்லாப் பாவங்களையும் முழுமையாக தன் மீது ஏற்றுக் கொண்டு அவற்றை முற்றிலுமாக அழித்தது கர்த்தரின் நீதியாகும்.
நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்து இரட்சித்த கர்த்தரின் நீதியானது இதைத் தவிர வேறு எதுவும் இல்லை. கர்த்தருடைய நீதியானது நம்மை உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் ஒரே தரமாக விடுதலையாக்கிற்று. கர்த்தருடைய நீதி முற்றிலுமாக நிறைவானதில்லையா? கர்த்தர் நமக்கு இந்த அன்பை அவரின் நீதியென அழைக்கிறார். அது நமது காலத்தில் மட்டுமல்லாமல் நித்திய நித்தியமாகவும் நிலைத்திருக்கும்.
யோவான் ஸ்நானன் இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்ததற்கு மறுநாள் அவரைக் குறித்து கூறினான், “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.” முதன்முதலில் இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கு யோவான் தயங்கிய போது அவனிடம் கூறினார், “இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” (மத்தேயு 3:15). இந்த வசனங்கள் எதைப் பற்றிக் கூறுகின்றன? இயேசுவின் ஞானஸ்நானமும் அவருடைய சிலுவை மரணமும் கர்த்தரின் நீதியே அன்றி வேறல்ல என அவை கூறுகின்றன. நாம் பலவீனர்களாகும் போதும் மகிமையில் குறைபாடுடையவர்களாகும் போதும் இந்த கர்த்தரின் நீதியானது நம்மைக் கைவிடாது.
நம்மை இரட்சித்ததும அவருடைய நீதியில் வாசம் செய்ய அனுமதித்ததுமான அவருடைய இந்த அளவில்லாத அன்பிற்காக கர்த்தரை நம்மால் துதிக்கவும் மகிமைப்படுத்தவும் மட்டுமே முடியும். கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்களால் தம் எஞ்சியிருக்கும் வாழ்வு முழுவதும் அவருடைய நீதிக்காக வாழுவர். மனிதர்களையோ அல்லது உலகத்தையோ விசுவாசிப்பதற்கு பதிலாக கர்த்தரை விசுவாசிப்பது மிகவும் நல்லது. அழகிய வாழ்வானது பாவத்திலிருந்து முற்றிலும் விடுதலைச் செய்யும் நீதியைப் பிரசங்கிக்கும் வாழ்க்கையாகும். இதனால் தான் கர்த்தரின் நீதியை நாம் முற்றிலும் அறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும்.
பாவ விடுதலையைப் பெற்றுக் கொண்டவர்கள் இவ்வாறு சாட்சி கூறுவர். “யோவானால் ஞானஸ்நானம் பெற்ற போது இயேசு நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்டார். உலகின் எல்லாப் பாவங்களுக்காகவும் நம்மிடத்திலிருந்து அவர் நியாயம் தீர்க்கப்பட்டார்.” கர்த்தரின் நீதியை நாம் விசுவாசிக்கும் போது இத்தகைய ஆசீர்வாதங்களுக்காக அவரைத் துதிக்க மட்டுமே முடியும்.
உங்கள் பலவீனத்தால் நீங்கள் தடுக்கி விழும் போதும், மாமிசத்தால் நீங்கள் பாவத்திற்குள் விழும் போதும் அல்லது உங்கள் பாவங்களினால் நீங்கள் ¨தரியத்தை இழக்கும போதும் வெட்கமடையும் போதும் உங்களை முபமையானவர்களாக்கிய கர்த்தரின் நீதியை நோக்கிப் பாருங்கள். கர்த்தரின் நீதியானது நம்மையும் நீதியானவர்களாக்கவில்லையா? தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலம் முற்றிலுமாக நம் பாவங்களை இயேசு எடுத்துப் போடவில்லையா? நாம் எதிர் காலத்தில் செய்யப் போகும் பாவங்கள் உட்பட நம் எல்லாப் பாவங்களையும் அவருடைய பாவ விடுதலை இரட்சிக்கவில்லையா?
இயேசு கிறிஸ்து நம்மை முற்றிலுமாக இரட்சித்தார் என விசுவாசிக்கும் போது மட்டுமே கர்த்தரின் நீதியை நம்மால் முழுமையாக விசுவாசிக்கமுடியும். கர்த்தருடைய நீதியை விசுவாசிக்கும் போது மட்டுமே நாம் நீதிமான்களாக்கப் படுகிறோம். கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்களால் அவரின் நீதியின் கருவிகளாக மாற முடியும். கர்த்தருடைய நீதியின் நிறைவானது முழுமையானதாகும். தம்முடைய சொந்த நீதியைப் பின்பற்றுபவர்கள் கர்த்தரின் நீதயைக் குறித்து அறியாதவர்களாவர். அவர்கள் தம் சொந்த அழிவின் மீது உட்கார்ந்திருக்கும் முட்டாள்கள். கர்த்தரால் சபிக்கப்படப் போகிறார்கள்.
“தேவனைப் பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டு ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல,” என்ற பவுலின் கூற்றைக் கவனியுங்கள்
அவருடைய நீதியைக் குறித்து தொடர்ந்து அறிவில்லாதவர்களாய் இருக்கும் போது விசுவாச வாழ்வை எப்படி வாழ முடியும். எப்படி விடுதலையாக முடியும். கர்த்தரின் மக்களாக எப்படி மாறுவோம்? சட்டத்தைப் பின்பற்றுபவர்களுக்கு தம்முடைய பாவங்கள் தம்முடைய சொந்த அழிவை நோக்கி வழி நடத்துகின்றன என்பதை அறிந்து தம்மை முற்றிலுமாக இரட்சித்த கர்த்தரின் நீதிக்கு நன்றியறிதலுடையவர்களாய் இருக்கிறார்கள். இயேசு நம்முடைய இரட்சகரானார். நாம் அவரை விசுவாசிக்கிறோம். மேலும் அவரை நாம் மகிமைப் படுத்துகிறோம். ஏனெனில் கர்த்தரின் நீதியை அறிந்து அதனை நாம் விசுவாசிக்கிறோம். அவருடைய நீதியை விசுவாசிப்பதினால் அவருடைய பிள்ளைகளாகவும், பாவமற்றவர்களாகவும், நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டவர்களாகவும் நாம் ஆனோம். இயேசுவை விசுவாசிப்பதாகவும், விசுவாச வாழ்வு வாழ்வதாலும் அறிவித்தவாறு கர்த்தரின் நீதியைப் பற்றிய அறிவில்லாமல் இருப்பவர்கள் சபிக்கப்பட வேண்டியவர்கள்.
கர்த்தரின் நீதியை அறியாத இஸ்ரவேலர்கள் தம்முடைய சொந்த நீதியை ஏற்படுத்த விழைந்ததாகவும், அப்படி செய்ததால் அவர்கள் கர்த்தரின் நீதிக்கு கீழ்ப்படியாமல் போனதாகவும் பவுல் ரோமர் புத்தகத்தில் சாட்சி பகருகின்றனர். அவர்களும் கூட கர்த்தரின் நீதியை விசுவாசிக்க வேண்டும்.
உலகின் பாவங்களிலிருந்து கர்த்தர் நம்மை விடுவித்தார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும. உலகின் பாவங்களில் நம்முடைய எல்லாப் பாவங்களும் கூட அடங்கியுள்ளன. கர்த்தரின் நீதியின் நிறைவேறுதலுடனே கூட இவை அனைத்தும் மறைந்து போயின. இந்த சத்தியத்தை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும் படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்
கர்த்தருடைய நீதியானது சட்டத்தின் முடிவாகும். இயேசு கிறிஸ்து தன் ஞானஸ்நானத்தின் மூலமும் சிலுவை மரணத்தின் மூலமும் உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்த்து சட்டத்தின் எல்லா நிபந்தனைகளுக்கும் பதிலளித்ததே இதன் காரணமாகும்.
பாவத்தின் சம்பளம் மரணம் என்பதில் எந்த மாறுதலும் இல்லை. ஆயினும் கர்த்தரின் நீதியானது சட்டத்தின் முடிவு என எழுதப்பட்டுள்ளது. ஏன்? கர்த்தர் தன்னுடைய ஒரே பேறான குமாரரை பூமிக்கு அனுப்பி மனிதர்களின் எல்லாப் பாவங்களையும் அவா சுமக்கச் செய்து சிலுவையில் அறையுண்டு மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பியதன் மூலம் பிதாவாகிய கர்த்தர் நம்மை முழுமையாக இரட்சித்ததே இதன் காரணம்.
கர்த்தரின் நீதியை உங்கள் இருதயத்தால் விசுவாசிப்பதும் சட்டத்தின் நீதியைப் பின்பற்றுவதும் இரண்டு வெவ்வேறு செயல்களாகும். உங்கள் செயல்களின் மூலமாக பாவமன்னிப்பைப் பெற்றீர்களா? உங்களுடைய சொந்த நற்செயல்களின் மூலம் உங்கள் இரட்சிப்பை நீங்கள் பெற்றீர்களா? நற்செயல்கள் செய்வதின் மூலமே உங்கள் பாவங்களைச் சமாளிக்க முடியுமென இவ்வுலகிலுள்ள எல்லா மதங்களும் போதிக்கின்றன. உதாரணமாக உங்களுடைய பழைய வாழ்க்கையின் பாவங்களையெல்லாம், இப்போது நீங்கள் செய்யும் நன்மையின் மூலமாக அகற்றலாம் என புத்த மதத்தின் பாவத்தைக் குறித்த குறிப்புகள் கூறிகின்றன. இது உங்களுக்கு சரியானதாகப் படுகிறதா?
ஒரு நபர் ஒருமுறை மட்டுமே பிறக்கிறார், ஒருமுறை மட்டுமே இறக்கிறார், நியாயத்தீர்ப்பு பின்னால் வருகிறது. ஒவ்வொருவரும் ஒரே முறை மட்டுமே இவ்வுலகில் பிறந்து ஒரே ஒருமுறை மட்டுமே கர்த்தரிடம் திரும்பிச் சென்று விடுவதால் இன்னுமொருமறை வாழுவதற்¡க யாராலும் பூமிக்கு திரும்பி வர முடியாது. இதனால் தான் மக்கள் பூமியின் வாழும் போதே கர்த்தரின் நீதியை விசுவாசித்து அவர்கள் பாவத்திலிருந்து விடுதலையடைய வேண்டும். கருமம் என்ற புத்த போதனைக்கு எத்தகைய பொருள் இருக்கிறது?
நம்முடைய பாவங்களிலிருந்து விடுதலைப் பெற்றோம் என்று விசுவாசிப்பது கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதற்கு சமமானதாகும். கர்த்தரின் நீதியை விசுவாசிப்பது என்பது அவருடைய நீதியை மட்டுமே விசுவாசிக்க வேண்டும் என்பதாகும். நம்முடைய செயல்களுக்கு அங்கே இடமில்லை. அப்படியானால் கர்த்தரின் நீதியைக் குறித்த விசுவாசம என்ன கூறுகிறது? ரோமர் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதைப் போல் அது இவ்வாறு கூறுகிறது, “கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி பரலோகத்துக்கு ஏறுகிறவன் யார்?” இதற்கு காரணம் என்னவெனில் கர்த்தரின் நீதியானது ஒருவர் தனது இருதயத்தினால் விசுவாசிப்பதில்இருக்கிறது. அது சரீர பலத்தினால் வருவதில்லை.
கர்த்தரின் நீதியை விசுவாசித்ததினால் நாம் கர்த்தரின் பிள்ளைகளாகவும் பாவமற்றவர்களுமாக மாறியதோடு நித்திய ஜீவனையும் பெற்றுக் கொண்டோம். நமக்கு நாமே நம்முடையப் பாவங்களை அழிக்க முடியாது என்பதால் நம்முடைய முயற்சிகளெல்லாம் கர்த்தருக்கு முன்பாக அதிகமான பாவங்களாகிவிடும். நாம் எத்தனை நற்செயல்களைச் செய்கிறோம் என்பது இங்கே பொருட்டல்ல. இதனால் தான் நமக்குள்ளிருக்கும் இத்தகைய விசுவாசங்களை நாம் கைவிட்டுவிட்டு இதற்கு பதிலாக கர்த்தரின் நீதியை நாம் விசுவாசித்து அவருடைய நீதியைப் பின்பற்ற வேண்டும். சில மக்கள் இவ்வாறு கேட்பர். கர்த்தருடைய நீதியை நாம் அறியாவிட்டாலும் இயேசுவை விசுவாசிப்பதால் நம்மால் இரட்சிக்கப்பட முடியாதா? தேவனுடைய பெயரை அழைக்கும் அனைவரும் இரட்சிக்கப்படும் என எழுதப்பட்டுள்ளது அல்லவா? ஆனால் இயேசுவின் பெயரை மட்டும் அழைப்பதால் இரட்சிப்பு வருவதில்லை, ஆனால் கர்த்தரின் நீதியை அறிந்து அதனை முற்றிலும் விசுவாசிப்பதினால் இரட்சிப்பு வருகிறது.
கர்த்தரின் நீதியை விசுவாசிக்கும் எவருக்கும் வெட்கம் உண்டாகாது
வசனம் 11 கூறுகிறது, “அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.” இந்த வசனத்தின் பொருள் யாது? அவரை விசுவாசிக்கும் யாவரும் வெட்கப்பட்டுப் போவதில்லை ஏனெனில் அவன்/அவள் கர்த்தரின் நீதியை “விசுவாசிக்கிறவன் எவனோ” என்பது அவருடைய நீதியை விசுவாசிப்பவர்களைக் குறிக்கிறது.
“கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்” என்ற வசனத்தின் பொருள் என்ன? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்து விசுவாசிப்பவர்கள் இயேசுவை அழைக்கிறார்கள். ஏனெனில் அவரை இரட்சிப்பின் கர்த்தரென அவர்கள் விசுவாசிக்கின்றனர் என்பது இதன் பொருளாகும். கர்த்தரின் நீதியின் மூலமாக இரட்சிப்பை நாம் பெற்றதால் இந்த சத்தியத்தை விசுவாசித்தமையால் பாவ விடுதலைக் கொடுக்கப்பட்டது என நாம் விசுவாசிக்கிறோம்.
வேறு வார்த்தைகளில் கூறினால் இந்த விசுவாசம் இல்லாது எத்தனை முறை நாம் இயேசுவின் பெயரை அழைத்தாலும் நாம் நம்முடைய பாவங்களில் இருந்து இரட்சிக்கப்பட மாட்டோம். ஏனெனில் இயேசுவினுள் உள்ள கர்த்தரின் நீதியை முழு வேத வசனங்களும் பேசுகின்றன. ஆகவே தேவனுடைய பெயரை அழைப்பதால் மடடுமே நம் பாவ விடுதலை வருவதில்லை.
கர்த்தருடைய நீதியைக் குறித்து வேதாகம் தொடக்கத்திலிருந்தே நமக்கு கூறுகிறது. ஆதியாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதைப் போல் ஏதேன் தோட்டத்தில் ஜீவமரத்தையும், நன்மைத் தீமை அறியத் தக்க மரத்தையும் கர்த்தர் நட்டார். மேலும் நன்மைத் தீமை அறியத்தக்க மரத்திலிருந்து எதனையும் சாப்பிட வேண்டாம் என ஆதாமிடமும் ஏவாளிடமும் கூறினார். தன்னுடைய வார்த்தையை அவர்கள் விசுவாசிக்க வேண்டுமென்பது கர்த்தரின் எதிர்பார்ப்பாயிருந்தது. வேறு வகையாக கூறினால் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும் படி ஜீவ மரத்தின் கனிகளைச் சாப்பிடுமாறு கர்த்தர் அவர்களிடம் கூறினார்.
“விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என கர்த்தரின் வார்த்தை கூறுகிறது. நாமும் கூட கர்த்தருடைய நீதியின் மீதான நம்முடைய விசுவாசத்தின் மூலம் நம் வாழ்நாள் முழுவதும் வாழுகிறோம். இரட்சிக்கும் படியாக அவரை முதன்முதலாக விசுவாசித்த நாளிலிருந்து நம் இரட்சிப்பைப் பெற்றது வரையுலும் இறுதியாக கர்த்தரின் ராஜ்யத்தை நாம் அடையும் வரையிலும் இப்படியாக வாழுகிறோம்.
இயேசுவை விசுவாசிப்பதின் மூலம் பாவத்திலிருந்து இரட்சிப்பு கிடைக்கிறது என இவ்வுலகிலுள்ள அநேக கிறிஸ்தவர்கள் கூறகின்றனர். ஆனால் உண்மையில் பார்த்தால் அவர்களில் அநேகர் அவர்களுடைய பாவங்களிலிருந்து விடுதலையாகவில்லை. ஏ¦னினல் கர்த்தரின் நீதியைக் குறித்த அறிவில்லாதவர்களாய் அவர்களுள்ளனர். கர்த்தரின் நீதியை அறிந்து கொள்ளாமல் மக்கள் இயேசுவை விசுவாசித்தால் என்னவாகும்? தம்முடைய ஆராதனைகள் மற்றும் ஜெபங்களின் மூலமாக தாம் பக்திமிக்க விசுவாசிகள் என இத்தகைய மக்கள் வெளியரங்கமாக காட்டிக் கொள்வர். ஆனால் கர்த்தரின் நீதியைக் குறித்து அவர்கள் அறியாததால் விடுதலையாகாத பாவிகளாக மதத்தினைப் பின்பற்றும் மக்களாக மட்டுமே அவர்கள் வாழ்வர்.
கிறிஸ்தவ சமூகத்தினர் மற்றும் இஸ்ரவேலர்கள் ஆகியோரில் அநேகர் கர்த்தரின் நீதியைக் குறித்த அறிவில்லாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் அவருடைய நீதிக்கு கீழ்படிவதில்லை. இயேசுவை விசுவாசிப்பவர்கள் இன்னமும் கர்த்தரின் நீதியை விசுவாசிக்காவிட்டால் இந்த நீதியையே அவர்கள் மிதித்துப் போடுகின்றான். இயேசுவை விசுவாசிப்பவர்கள் நற்காரியங்களைச் செய்வதாலோ மிகப் பெரிய காணிக்கைகளைக் கொடுப்பதினாலேயோ அல்லது கர்த்தருக்கு முன் தம்முடைய சொந்த செயல்களை செய்வதாலேயோ. இந்த நீதியைப் பெற்றுக் கொள்வதில்லை. கர்த்தரின் நீதியை அறிந்து கொள்ளும் வரை அவர்கள் அதனைப் பெறுவதில்லை.
கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்கள் தாம் எத்தகைய சூழ்நிலையிலிருந்தாலும் அதனை விசுவாசித்து துதிக்கும் வாழ்வை அவர்கள் வாழ்வதுடன் கர்த்தரின் மகிமைக்கு அவர்கள் நன்றியறிதலுடையவர்களாயும் இருப்பர். கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்களுக்கு தம்முடைய குறைபாடுக்ள அதிகமாய் வெளிப்படும போது நம்முடைய ஆத்துமாக்களுக்கு முன்பாக அவருடைய நீதியானது மிகப் பிரகாசமாக ஒளிரும். இத்தகைய விழிப்புணர்வை நீங்களும் பெற வேண்டுமென நான் ஜெபிக்கிறேன்.
நம்முடைய சரீரத்தில் எப்படியோ சிறிதளவு நீதி ஒட்டிக் கொண்டிருப்பதனால் கர்த்தரின் நீதியை நம்மால் பெற்றுக் கொள்ள முடியுமா? அப்படி செய்ய முடியாது. கர்த்தருடைய நீதியைப் தவிர வேறெந்த நீதியும் நமக்குள் இல்லை. தன்னுடைய நீதியால் நம் பாவங்களிலிருந்து கர்த்தர் நம்மை முற்றிலுமாக இரட்சித்தமையால் அவருடைய இந்த நிதியை நாம் விசுவாசித்து அவரைப் புகழுகிறோம். அவருடைய நீதி நம்மை நம் பாவங்களிருந்து முற்றிலுமாக இரட்சித்தது.
உங்கள் வாழ்க்கையின் கருமையான நேரங்களைச் சந்திக்கும் போது செய்கையின் அடிப்படையில் அமைந்த விசுவாசங்களுக்குள் விழுந்துவிடாதீர்கள். நீங்கள் எத்தகைய சூழ்நிலைகளில இருந்தாலும் கர்த்தரின் நீதியை மட்டுமே நீங்கள் விசுவாசியுங்கள். கர்த்தருடைய நீதியானது நித்திய காலமும் நிறைவானதாயிருக்கும். இவ்வுலகில் வாழும் அனைவரும் கர்த்தரின் நீதியை அறிந்து கொள்ள வேண்டும். நற்செய்தியாகி நீர் மற்றும் ஆவிக்கு கீழ்ப்படிவதின் மூலம் அதனை விசுவாசிக்க வேண்டும். இயேசுவைத் தாம் விசுவாசிப்பதாக கூறும் அநேகர் இன்னமும் சட்டத்தின் நீதியில் மட்டுமே வாழ்வதினால் கர்த்தருடைய நீதி தமக்கு தெரியும் என்பதில் நிச்சயமாய் இருக்க வேண்டும்.
கர்த்தருடைய நற்செய்தியானது அவருடைய நீதியை நிறைவேற்றுகிறது என பவுல் முடிவாக கூறுகிறான். கர்த்தரின் உண்மை நற்செய்தியைக் குறித்த அறிவில்லாம், அவருடைய நீதி என்னவென்று யாராலும் விளக்க முடியாது. கர்த்தருடைய நீதியின் பொருள் என்னவென்று உரையாடுமாறு கேட்டால் இத்தகைய மக்கள் கூறுவர், “இயேசு என் இரட்சகர், அவர் சிலுவையில் மரித்தார், மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார், என்னை என் பாவங்களிலிருந்து இரட்சித்தார்.” தம்முடைய அன்றாடப் பாவங்களுக்காக தினம் மனம் வருந்தி ஜெபிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறுவர். மேலும் தாம் நிறைவானவர்களாக மாறுவதற்கு படிப்படியாக பரிசுத்தமாக வேண்டுமெனவும் கூறுவர்.
கர்த்தரின் நீதியைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டுமானால் உங்களைக் குறித்து நிங்களே முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களைக் குறித்தும் கர்த்தரின் நீதியைக் குறித்தும் நீங்கள் அறியும் போது அவருடைய நீதியை விடூசுவரிப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லாமல் இருப்பதை அறிவீர்கள். ஏனெனில் உங்களுடன் ஒப்பிடும் போது கர்த்தருடைய நீதியானது எத்தனை உயரமானது எனவும், பெரிதானதெனவும், அகலமானதெனவும் நீங்கள் அறிவீர்கள். ஆனால் அவருடைய நீதியை நீங்கள் அறியாவிட்டால் உங்கள் சொந்த நீதியைப் பின்பற்றுவதின் மூலம் நீங்கள் கொழுத்துப் போவீர்கள். தம்முடைய சொந்த நீதியினால் கொழுத்துப் போனவர்களால் கர்த்தருடைய நீதியைப் பின்பற்ற முடியாது. ஏனெனில் தாமாகவே நீதிமான்களாவதை அவர்கள் விரும்புகின்றனர்.
கர்த்தருடைய நீதியை விசுவாசித்து அதற்கு நன்றி கூறுவதற்கு முன்னதாக அதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும். கர்த்தரின் நீதியை நாம் அறிந்து கொண்டால் இயேசுவானவர் தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டு சிலுவையில் மரித்தார் என்பதையும் நாம் அறிந்து கொள்வோம். நம் சொந்த செயல்களினால் நம்மால் நீதிமான்களாக முடியுமென்றால் கர்த்தரின் நீதியின் மூலமாக வரும் இரட்சிப்பு நமக்குத் தேவையில்லாததாகிவிடும். ஆனால் இது சாத்தியமில்லாதது என்பதை நாம் அறிந்து கொள்ளும்போது அவருடைய நீதியை இன்னமும் அதிகமாக விரும்ப முடியும். ஏனெனில் தம் சொந்த செயல்களின் அடிப்படையில் வாழ முடியாத நம்மை கர்த்தர் இரட்சித்தார்.
உங்களுடைய சிந்தனைகளும் செயல்களும் நல்லவைகளா? நல்லவையல்ல. நாம அதிக குறைபாடுகளை உடையவர்களாதலால் கர்த்தர் தன் நீதியின் மூலமாக நம்மை முற்றிலுமாக இரட்சித்தார். கர்த்தருடைய நீதியை விசுவாசித்தது நம்மை இரட்சித்தமையால் இதனைக் குறித்து அறியாத உலகிலுள்ள அனைவருக்கும் அவருடைய நீதியைப் பிரசங்கிக்க நாம் விரும்புகிறோம்.
தன்னைத் தானே அறிந்து கொள்ளாதவன் மற்றவர்களிடம் குற்றங்களைக் கண்டுபிடித்து அவர்களைப் பற்றி தீமையானவைகளைப் பேசுகிறான். ஆனால் அவன்/அவள் கர்த்தரின் நீதியை விசுவாசிக்கும் விசுவாசியாயிருந்தால் அவன்/அவள் இந்த நீதியை பெருமையுடனே அறிவிப்பதுடன் அவனின்/அவளின் சொந்த நீதியைக் குறித்து பெருமைப் பாராட்டுவதில்லை. ஆனால் கர்த்தருடைய நீதியை விசுவாசிக்காதவர்கள் அவருடைய நீதியைப் பிரிக்கும் பாவத்தைச் செய்கின்றனர். அவர்களுடைய பாவங்களுக்காக கர்த்தர் அவர்களை நியாயம் தீர்ப்பார்.
கர்த்தர் தனது குமாரரை இப்பூமிக்கு அனுப்பி தன்னுடைய நீதியை உங்களுக்கு அளித்தார். கடைசி நாளை நாம் நெருங்கிக் கொண்டிருப்பதால் யாருடைய நீதியின் சட்டம் சரியானது அல்லது தவறானது என ஒருவருடன் ஒருவர் விவாதித்துக் கொண்டிருக்க கூடாது. கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பவர்கள் தம்முயைட மாமிசத்துடன் தம்மை இணைக்கக் கூடாது. ஆனால் கர்த்தருடைய நீதியை விசுவாசித்து அவருக்கு நன்றியறிதலுடையவர்களாய் மட்டுமே இருக்க வேண்டும்.
தன்னுடைய நீதியினால் முற்றிலுமாக நம்மை இரட்சித்த நம் கர்த்தருக்கு நன்றி கூறுவோமாக. கர்த்தருடைய நீதியானது உங்கள் எல்லாப் பாவங்களையும் மன்னித்தால் தம்முடைய சொந்த நீதியை பின்பற்றி கர்த்தருக்கு எதிரானவர்களாக மாறியவர்களைப் போல் நீங்கள் மாறக் கூடாது.