ரோமர் 11:1 கூறுகிறது, “இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.” வேறு வார்த்தைகளில் கூறினால் இஸ்ரவேலர்களை கர்த்தர் கைவிடவில்லை. மேலும் பவுலும் கூட இஸ்ரவேலர்களில் ஒருவன்.
ரோமர் 11:2-5 இல் கர்த்தர் கூறுகிறார், “தேவன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை அறிந்தீர்களா? அவன் தேவனை நோக்கி: கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை. அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத்தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு விரோதமாய் விண்ணப்பம்பண்ணினபோது, அவனுக்கு உண்டான தேவஉத்தரவு என்ன? பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே. அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது.”
இயேசுவை விசுவாசிப்பதின் மூலமும் அநேக இஸ்ரவேலர்கள் தன்னிடம் திரும்பி வருவார்கள் என கர்த்தர் நம்மிடம் கூறியதைப் போல் அநேக யூதர்கள் தம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவார்கள். இறுதி காலம் வரும் போது கர்த்தருடைய நீதியை விசவாசிப்பதின் மூலமாகவும், இயேசு கிறிஸ்துவிடம் வருவதின் மூலமும், அதிக எண்ணிக்கையிலான புற ஜாதியார் விடுதலைச் செய்யப்படுவர் என்பதை நாம் விசவாசிக்க வேண்டும்.
“எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை அறிந்தீர்களா?” என பவுல் கேட்டான். அநேக இஸ்ரவேலர்கள் தம்முடைய பாவங்களைக் கழுவச் செய்யும் கர்த்தரின் நீதியை விசுவாசிக்கும் அநேக இஸரேவேலர்கள் இருப்பார்கள் என்பதை பவுல் இங்க குறிப்பிடுகிறான். எலியாவிற்க பேசப்பட்ட கர்த்தரின் வார்த்தையானது. இஸ்ரவேலர்களில் அநேகர் இயேசு கிறிஸ்துவை தமது இரட்சகராக ஏற்றுக் கொள்வார்கள் என கூறுகிறது. இந்த வார்த்தையை நாம் விசுவாசிக்கிறோம்.
வேத வசனங்களில் “7” என்ற எண் முழுமையைக் குறிக்கிறது. கர்த்தர் இவ்வுலகை ஆறு நாட்களில் படைத்து ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார். பாகாலுக்கு முழங்கால்படியிடாத ஏழாயிரம் பேரை இருப்பில் வைத்திருப்பதாக கர்த்தர் வாக்குறுதி கூறினார். இயேசு கிறிஸ்துவை தம்முடைய இரட்சகராக ஏற்றுக் கொண்டு அநேக இஸ்ரவேலர்கள் தம்முடையப் பாவங்களிலிருந்து இரட்சிப்பைப் பெறுவார்கள் என இது பொருள்படுகிறது.
இஸ்ரவேலருக்கும் புற ஜாதியாருக்கும் உள்ள தொடர்புகளை பவுல் விளக்கும் போது இஸ்ரவேல் மக்களில் அநேகர் இரட்சிக்கப்படுவார்கள் என்பதை பவுல் விசுவாசித்தான்.
விழும்படியாக அவர் தடுக்கிவிடப்பட்டார்கள்?
இயேசு தம்முடைய இரட்சகர் என்ற கூற்றை இஸ்ரவேலர்கள் முழுமையாக நம்பியதால் புற ஜாதியாரின் இரட்சிப்பிற்கான காலம் இருந்தருக்காது என ரோமர் 11:6-12இல் பவுல் கூறினான். இயேசுவைத் தமது இரட்சகராக இஸ்ரவேலர்கள் ஏற்றுக் கொள்ளாததால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து இரட்சிக்கப்படுவதற்ர்ன வாய்ப்பை கர்த்தர் புறஜாதியாருக்க வழங்கினர். இதன் மூலமாக இஸ்ரவேலர்கள் புற ஜாதியார் மீது பொறாமைப்பட வேண்டுமென கர்த்தர் திட்டமிட்டார். அவர்கள் இயேசுவை விசுவாசித்ததன் மூலம் கர்த்தரின் பிள்ளைகளானார்கள். ஆகவே இயேசு கிறிஸ்துவைத் தமது இரட்சகராக இஸ்ரவேலர்கள் ஏற்றுக் கொள்வர். மேலும் இயேசு கிறிஸ்துவே மேசியா என்ற கூற்றையும் அவர்கள் ஏற்றுக் கொள்வர்.
வேரானது பரிசுத்தமாக இருப்பதினாலே கிளைகளும் கூட பரிசுத்தமானவையே
ரோமர் 11:13 கூறுகிறது, “புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன்; புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று, என் ஊழியத்தை மேன்மைப் படுத்துகிறேன்.” புற ஜாதியாருக்கான அப்போஸ்தலனாக தனது ஊழியத்தை விரிவுபடுத்தியதாக பவுல் கூறினான். தன்னுடைய சொந்த மாமிசமும் இரத்தமுமான இஸ்ரவேல் மக்களை இரட்சிக்க அவன் விரும்பினால் இதற்கு மறுபடியும் பிறந்த புற ஜாதியாரின் மீது அவர்களைப் பொறாமைப்படச் செய்தான்.
“அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கிகரித்துக் கொள்ளுதல் என்னமாயிராது; மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானது போலிருக்குமல்லவோ? மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்” (ரோமர் 11:15-16). கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்து இஸ்ரவேலர்களின் வேரான ஆபிரகாம் இரட்சிக்கப்பட்டு அவருடைய நீதியையும் பெற்றுக் கொண்ட நிலையில் ஆபிரகாமின் கிளைகளான இஸ்ரவேலர்களுக்கும் தாம் இரட்சிக்கப்படுவது சாத்தியமான ஒன்ற என இவ்வசனங்கள் பொருள்படுகின்றன.
அதே நேரத்தில் மறுபடியும் பிறந்த புற ஜாதியார் பெருமைப் பாராட்டுபவர்களாக இருக்கக் கூடாது என பவுல் எச்சரித்தான். ஏனெனில் காட்டு ஒலிவ மரத்தின் உடைந்து போன கிளைகளுக்கு புதுவாழ்வு கொடுத்து சிறந்ததொரு ஒலிவ மரமாக அதனை மாற்றியதைப் போல புற ஜாதியார் கர்த்தரின் பரிசுத்தமிக்க மக்களாயினர். இதனை ரோமர் 11:18 கூறுகிறது, “நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமை பாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நீ நினைத்துக்கொள்.”
கர்த்தரின் நீதியை விசுவாசித்ததினால் நாம் நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு கர்த்தரின் மக்களாயினோம். ஆனால் கர்த்தரின் நீதியை நாம் கைவிட்டு விட்டால் நாமும் கூட கைவிட்டுவிடப்படுவோம். நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிப்பதற்காக இயேசு கிறிஸ்து கர்த்தரின் எல்லா நீதியையும் நிறைவேற்றியதற்காகவும் நம் எல்லாப் பாவங்களிலிருந்து நாம் இரட்சிக்கப்பட்டதாலும் இதனை நம்மால் செய்ய முடியாது. நம்முடைய சொந்த செய்கைகளினால் அல்ல. முழுமையான கர்த்தரின் நீதியின் மீதுள்ள நமது விசுவாசத்தினால் நாம் இரட்சிக்கப்பட்டோம். இஸ்ரவேலரின் உடைந்து போன கிளைகளுக்கு பதிலாக புற ஜாதியாராகிய நாம் அவருடைய நீதியின் மீதுள்ள விசுவாசத்தினால் அவருடைய மக்களாகினோம்.
கர்த்தரின் நீதியை நாம் விசுவாசிப்பதால் உறுதியாக நம்மால் நிற்க முடியும்
ஆகவே கிறிஸ்துவின் நீதியை விசுவாசிப்பதின் மூலம் கிறிஸ்தவர்களாலும் யூதர்களாலும் அவரின் மக்களாக இயேசுவிற்குள் மாறுதலடைய முடியும். கர்த்தருடைய நீதியை நாம் விசுவாசிக்காவிட்டால் நிச்சயமாக நாம் மரிப்போம்.ஏனெனில் நமது பாவங்களுக்க அவருடைய நியாயத் தீர்ப்பு இருக்கிறது. இதனை இஸ்ரவேலர்களுக்கு எச்சரிக்கையாக பவுல் கூறினான். ஆனால் இந்த எச்சரிப்பு நமக்கம் பொருத்தமானது.
புறஜாதியாகிய நம் மீது கர்த்தர் பரிதாப்பட்டார். மேலும் அவர் தன்னுடைய நீதியினால் நம்மை முற்றிலும் இரட்சித்தார். கர்த்தரின் நீதயை அறிந்து அதனை விசுவாசிப்பவர்கள் தம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்படுகின்றனர். தம்மை நிறைவாக இரட்சித்த கர்த்தரின் நிதயை இன்றைய கிறிஸ்தவர்கள் அனைவரும் விசுவாசிக்கா விட்டால் அவர்களெல்லாம் அழிந்து போவர். இயேசுவைத் தமது இரட்சகர் என அறிக்கை செய்வதும் பொருட்டல்ல.
ரோமர் 11:23-24 கூறுகிறது, “அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவைகளும் ஒட்டவைக்கப்படுவார்கள், அவர்களை மறுபடியும் ஒட்டவைக்கிறதற்கு தேவன் வல்லவராயிருக்கிறாரே. சுபாவத்தின்படி, காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா?” வேறு வார்த்தைகளில் கூறினால் தம்முடைய நீதியை நோக்கி அனைவரையும வழி நடத்தும் வல்லமை கர்த்தரிடம் இருக்கிறது. அந்த வல்லமையானது நற்செய்தியாகிய நீர் மற்றம் ஆவியின் மூலமாக கர்த்தரின் நீதியின் மீது வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளது
இஸ்ரவேலர்களையும் புற ஜாதியார்களையும் அவர்களுடைய செயல்களானது கர்த்தரின் பிள்ளைகளாகும் படி அவர்களை வழி நடத்தாது. அதற்க மாறாக கர்த்தருடைய நீதியையும் அவர்களைத் தனது மக்களாக்கப் போவதாக கூறிய அவருடைய வாக்குத் தத்தத்தையும் விசுவாசிப்பதின் மூலமாக அவர்களால் கர்த்தரின் பிள்ளைகளாக முடியும். கர்த்தரின் நீதியானது சட்டத்தின் நீதியை முற்றிலுமாக அகற்றியது. கர்த்தருடைய நீதியின் மூலம் உலகம் முழுவதும் உள்ள இஸ்ரவேலர்களும் புற ஜாதியார்களும் தம்முடைய விசுவாசத்தினால் இரட்சிக்கப்படுவர். நம்மால் பரப்பப்படும் நற் செய்தியின் மூலமாக நிறைவேற்றப்படவிருக்கும் பெரிதான கர்த்தரின் இரட்சிப்பின் ஆசீர்வாதம் இதுவேயாகும். இந்த கர்த்தரின் வல்லமையானது அவர் நீதியின் மீது செய்யப்பட்ட கர்த்தரின் வாக்குத்தத்தமாகும்.
ரோமர் 11:26-27ஐ நாம் பார்ப்போமாக இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்.
மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து,
அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்;
நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது,
இது தேவன் அவர்களுடனே செய்யும்
உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது.
இறுதி காலத்தில் தான் இஸ்ரவேலர்களை இரட்சிக்கப் போவதாக கர்த்தர் வாக்குத்தத்தம் செய்தார். இஸ்ரவேலர்களின் மனங்களிலிருந்து தீமைகளையும் அழுக்குகளையும் அகற்றி இயேசு கிறிஸ்துவை அவர்கள் தமது இரட்சகராக எண்ணும்படி செய்யப்போவதாக கர்த்தர் தாமே வாக்குத்தத்தம் செய்தார். இஸ்ரவேலர்களின் மூதாதையர்கள் விசுவாசிகளாயிருந்தாலும் இஸ்ரவேலர்கள் இரட்சிப்பை பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அவர்களின் இருதயங்களைத் தொட்டு அவருடைய நீதியை விசுவாசிக்கும் படி செய்யப் போவதாக கூறியதின் மூலம் வெகு சீக்கிரமாக அவர்களை இரட்சிக்க அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
எல்லார் மேலும் இரக்கமாயிருக்கத் தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப் போட்டார்
வசனம் 32ஐ வாசிப்போமாக அது மிகவும் தெளிவான வசனமாகும், “எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.” எல்லோருமே புரட்சி செய்து கர்த்தரை எதிர்த்து நிற்கின்றனர். யாராலும் அவருக்கு முற்றிலுமாக கீழ்படிய முடியாது. நாமனைவரும் கீழ்படியாமலிருக்கும் படி கர்த்தர் செய்தமைக்கான காரணம் தன்னுடைய ஆறுதலையும் அன்பையும் நமக்க கொடுப்பதற்காகவே. இது மிகவும் ஆச்சரியமானதும் அதிசயமானதமான உண்மையாகும்.
கர்த்தர் மனிதர்களை ஏன் கீழ்படியாமைக்குள் அனுமதித்தார் என்பதை இந்த வசனங்களின் மூலமாக நம்மால் கண்டு கொள்ளலாம். அவருடைய வெகுமானங்கள் எத்தனை ஆச்சரியமானவை. கர்த்தர் தன்னுடைய நிறைவான நீதியினாலும் இரக்கமிக்க அன்பினாலும் நம்மைத் தரிப்பிக்க கர்த்தர் நம்மைக் கீழ்படியாதவர்களாக்கினார். இந்த ஆச்சரியமான நோக்கத்திற்காக அவரை விசுவாசித்து நன்றியை மட்டுமே அவருக்கு கூற முடியும். தன்னுடைய நீதியின் அன்பை இஸ்ரவேலர்களுக்கு அளிப்பதற்காக இஸ்ரவேலர்களைக் கூட தமக்கு கீழ்படியாதவர்களாக இயேசு மாற்றினார். நசரேத்திலிருந்து வந்த மரியாதை இல்லாத ஒரு நபராகவே இஸ்ரவேலர்கள் இன்னமும் இயேசுவைப் பார்க்கின்றனர். அதே நேரம் புற ஜாதியாரான அநேக கிறிஸ்தவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக இயேசுவானவரை உபயோகிக்கின்றனர்.
கர்த்தருடைய இரக்கமான அன்பிற்கு கீழ்படியாதவர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. எரியும் நரகத்தை கர்த்தர் அவர்களுக்காக ஏற்கனவே ஆயத்தப்படுத்தியுள்ளார். ஆனால் மக்கள் நரகம் செல்வதை அவரால் சகித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் அவர் அவர்கள் மீது இரக்கமுள்ளவராயிருக்கிறார். நான் உங்களை எப்படி நரகத்திற்கு அனுப்புவேன்? புற ஜாதியார்கள் அனைவரும் அவருடைய இரட்சிப்பின் கீழ் வந்த பிறகு இஸ்ரவேலர்களின் அநேகர் இயேசுவைத் தமது இரட்சகராக விசுவாசிக்கத் தொடங்குவர். அப்பொழுது ஏழாண்டு கால உபத்திரவத்தின் பின் பாதியில் அந்தி கிறிஸ்து அவர்களை துன்புறுத்துவான். எதிர் காலத்தில் இயேசுவே கர்த்தரின் நீதி என அறிக்கைச் செய்யும் எண்ணிலடங்காத விசுவாசிகள் இஸ்ரவேலர்களிடமிருந்து தோன்றுவர்.
“எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப் போட்டார்.” கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பதின் மூலம் எல்லாப் பாவிகளும் இரட்சிக்கப்டுவதற்கு அவர் அனுமதித்தார் என்பதை இந்த ஆச்சரியமான வசனம் விளக்குகிறது.
உபத்திரவ காலத்தின் போது போதுமான அளவு புற ஜாதியார்கள் இரத்த சாட்சிகளாகிவிட்ட போதும் இஸ்ரவேலர்களை மனம் வருந்தி கிறிஸ்துவை விசுவாசிக்கச் செய்யப் போவதாக கர்த்தர் பவுலிடம் கூறினார். பவுல் ரோமர் 11:33இல் கூறுகிறான், “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!”
உண்மை ஞானமும் தெய்வீக அருளும் கர்த்தரிடமிருந்து வருகிறது. தொடக்கத்திலிருந்தே எல்லா மனிதர்களையும் குறைபாடுடைய மனிதர்களாக கர்த்தர் படைத்தார், இது கர்த்தருடைய ஞானத்தைக் காட்டுகிறது, மேலும் அவருடைய இரட்சிப்பை பெற்றுக் கொள்ளவும் இது அனுமதிக்கிறது. இதனால் கடைசி நாட்களில் அவரை விசுவாசிப்பது கூட இஸ்ரவேலர்களை எல்லாம் இரட்சிக்கும். குப்பைக் கூடைக்குள்ளும் நெருப்புக்குள்ளும் வீசப்படுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. ஆனால் கர்த்தர் தன்னுடைய நீதியினால் நம்மை நம எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்க திட்டமிட்டு அதனை நிறைவு செய்தார். சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு கர்த்தரின் சட்டத்தை உடைத்து எல்லா மனிதர்களும் பாவிகளான போது பழைய ஏற்பாட்டில் காணப்படும் ஆசரிப்புக் கூடாரத்தின் பலியிடும் முறைமையின் படி இயேசுவின் ஞானஸ்நானத்தினாலும் அவருடைய இரத்தத்தினாலும் எல்லாப் பாவிகளையும் இரட்சிப்பதற்கு கர்த்தர் சித்தமாயிருந்தார்.
அப்படியானால் கர்த்தருடைய ஞானத்தை எதிர்த்து யாராலும் நிற்க முடியுமா? “சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.” நமக்குத் தனது கிருபையைத் தருவதற்காக கர்த்தர் நம்மை கீழ்படியாமைக்குட்படுத்தினார் என்ற உண்மையை யாரால் மறுக்க முடியும்? அதனைச் செய்வது தவறானது என யாராவது கூறுவதற்கு அவர்களிடம் என்ன துணிச்சலிருந்தது? யாரிடமுமில்லை. எல்லா மகிமையும் அவருடைய தெய்வீக அருளும் அவருடனே கூட நித்திய நித்தியமாய் இருக்கும்.
பரிசுத்த ஆவியினால் நிறைந்து அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினான், “கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்? தனக்குப் பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்” (ரோமர் 11:34-36).
நாம் குறைபாடுடையவர்களாய் இருந்தாலும் கர்த்தருடைய நீதியின் நற்செய்தியைப் பரப்புவதற்காக நாம் வாழுகிறோம். கர்த்தரின் நீதியின் நற்செய்திக்கு எதிராக நிற்பவர்கள் அவருடைய எதிரிகளாவர். அதுசரியே. இத்தகைய மக்கள் நம்மிடமிருந்தும் தோன்றலாம். ஆகவே இத்தகைய இச்செயல்களில் நம்மில் யாரும் விழுந்து விடக் கூடாது என நாம் ஜெபிப்பது விழிப்புடனே இருக்க வேண்டும். எத்தகைய சூழ்நிலைகளிலும் கூட நற்செய்தியை நாம் எதிர்த்து நிற்கக் கூடாது. விசுவாசிக்காத இருதயங்களின் மூலம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு எதிரானவர்களாக எப்போதுமே மாறக் கூடாது. அதனை எதிர்த்து நிற்பவர்கள் இப்பூமியிலும் அடுத்த உலகத்திலும் அழிந்து போவார்கள்.
இஸ்ரவேலர்கள் இயேசுவை விசுவாசிப்பதற்கான நேரம் வெகுவேகமாக நெருங்கி வருகிறது. இவ்வுலகிலுள்ள ஆறு பில்லியன் மக்களும் கர்த்தரிடம் திரும்பி வந்து இரட்சிப்பை பெற்றுக் கொண்டால் அது எத்தனை ஆச்சரியமளிப்பதாய் இருக்கும்? கர்த்தரின் நீதியை விசுவாசிக்கும் நீதிமான்கள் இப்போதைய சூழ்நிலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க கூடாது. ஆனால் இஸ்ரவேலர்களுக்காக கர்த்தர் திட்டமிட்டுள்ள செயல்களையும் நாம் பார்க்க வேண்டும். மேலும் புதிய வானம் மற்றும் புதிய பூமியில் வாழுவதற்கு அதில் பிரவேசிக்க தம்முடைய விசுவாசத்தை ஆயத்தம் செய்ய வேண்டும். நீதிமான்கள் எப்போதும் விசுவாசத்துடனும் நம்பிக்கையுடனும் வாழ வேண்டும்.
கிறிஸ்துவைத் தமது இரட்சகராக இஸ்ரவேலர்கள் விசுவாசிக்கும் நாள் அருகிலிருப்பதை நான் அறிவதால் கர்த்தருக்கு நான் நன்றி கூறுகிறேன்.
தேவனாகிய இயேசுவே சீக்கிரமாக வாரும்!