• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 9 : ரோமர் (ரோமர் புத்தகத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 12] கர்த்தருக்கு முன்பாக உங்கள் மனதைப் புதிதாக்குங்கள்

“அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, அவருடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.”
கர்த்தருக்கு நாம் கொடுக்க வேண்டுமென புதிய உலக வேதாகமப் பதிப்பில் “ஆவிக்குரிய ஆராதனைச் செய்தல்” என மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்த “புத்தியுள்ள ஆராதனை” என்பது என்ன? புத்தியுள்ள ஆராதனை செய்தல் என்பது அவருடைய நீதியின் செயலைச் செய்ய நம் சரீரத்தை அவருக்கு ஒப்புவித்தல் என பொருள்படும். நாம் இரட்சிக்கப்பட்டவர்களாயிருப்பதால் நீதியின் நற்செய்தியைப் பரப்புவதற்காக நம் சரீரங்களை கர்த்தரிடம் ஒப்புவித்து அதனை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். கர்த்தருக்கு நாம் கொடுக்க வேண்டிய புத்தியுள்ள ஆராதனை நமது சரீரத்தை பரிசுத்தத்தினால் பிரித்து அவருக்கு கொடுக்க ஏற்படுத்தப்பட்டதாய் இருக்கிறது.
நம்முடைய ஆவிக்குரிய பணி என்னவென்று அதிகாரம் 12இல் பவுல் கூறுகிறான். அது இவ்வுலகினுடையதல்ல. ஆனால் அது நமது மனங்களை புதுப்பிப்பதில் இருக்கிறது. கர்த்தருடைய சித்தமானது எத்தனை நலமானது என்பதையும், பிரியமானது என்பதையும் நிறைவானது என்பதையும் நாம நிருபிப்போம்.
நற்பணியானது நம் எல்லா அவயங்களையும் இருதயங்களையும் கர்த்தருக்காக அர்ப்பணிப்பதாகும். அப்படியானால் நீதிமானால் எப்படி அப்படிப்பட்டதொரு வாழ்வை கர்த்தருக்கு முன்¡ல் வாழ முடியும்? நாம இவ்வுலகினுடையவர்களாயிராமல் நமது மனங்களைப் புதுப்பிப்பதில் இருக்கிறது எனவும், கர்த்தருடைய நீதியின் செய்கைகளுக்காக நமது அவயங்களைக் கொடுக்க வேண்டுமென பவுல் கூறினான். நம்முடைய இருதயங்களையும் சரீரங்களையும் காணிக்கையாக்கி கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதும் கூட கர்த்தருக்கான நற்பணியாகும்.
இந்த வசனமானது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் நாம் இவ்வுலகினுடையவர்களாயிராமல் நம் மனங்களை புதுப்பிப்பதின் மூலம் கர்தருடைய பணிகளுக்கு அர்ப்பணிக்க வேண்டுமென இது கூறுகிறது.
நம்முடைய இருதயங்களை முதன்முதலாக புதுப்பிக்காமல் ஆவிக்குரிய ஆராதனைகளை நம்மால் ஏறெடுக்க முடியாது. கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பதிலிருந்து நீதிமான்கள் பின் வாங்கினால் அவர்களாலும் கூட அவருக்கு சரீரங்களையோ இருதயங்களையோ கொடுக்க முடியாது.
பவுலின் தலைமுறையில் நடைபெற்றதைப் போலவே இந்த தலைமுறையும் நம்மைத் தாக்க முயலக்கூடும். பாவம நிறைந்த இத்தலைமுறையின் வேகமான ஓட்டத்திற்கு நடுவே நாம் வாழ்வதால் கர்த்தரின் நீதியை நாம் விசுவாசிக்காவிட்டால் இந்த ஓட்டத்தின் போக்கிலேயே நாம் அடித்துச் செல்லப்படுவததை நம்மால் தவிர்க்க முடியாது. கர்த்தரின் நீதியை விசுவாசித்து நீதிமான்களானவர்களாலும் கூட இந்த உலகத்தின் ஓட்டத்தினால் தாக்கப்படுவதை தவிர்க்க முடியாது. ஏனெனில் அவர்கள் உலகப்படியான மக்களின் மத்தியில் வாழுகின்றனர். இதனால் தான் உலகிற்கேற்றவர்களாக இருக்கப் கூடாது என வேதாகமம் நம்மிடம் கூறுகிறது.
அப்படியானால் இந்த உலகின் பாதிப்பிற்குள்ளாகிய நீதிமான்களால் தம்முடைய முழு இருதயங்களினாலும் சரீரங்களினாலும் கர்த்தருக்கான பரிசுத்த பலியாகிய நற்பலியை அவர்களால் அப்படி அளிக்க முடியும்? நம்முடைய மனங்களை மீண்டும் மீண்டும் புதிதாக்கும நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமே இது சாத்தியமாகும். பரிசுத்தவான்கள் தம் மனங்களைப் புதுப்பிதது அவருடைய நீதியினால் மாறுதலடையும் போது மட்டுமே கர்த்தரின் சிறந்த நிறைவான சித்தத்தை அறிந்து அதனைப் பின்பற்ற முடியும்.
உலகப் படியான காரியங்களைக் குறித்து அறியாததினாலே பவுல் இவற்றைக் கூறவில்லை. அல்லது அவர்களுடைய சூழ்நிலைகளையும் திறமைகளையும் அறியாமல் நாம் நல்லவர்களாக இருப்போம் என்று மதப் போதனைகளை விசுவாசிகளுக்கு கொடுக்கவும் முயலவில்லை. இவ்வுலகின் போக்குகளினால் விசுவாசிகள் கூட அடித்துச செல்லப்படுவர் என்பதை பவுல் நன்றாக அறிவதால் கர்ததருக்கு பணியாற்றும் படி நம்மிருதயங்களை புதிதாக்கும படி பவுல் நம்மை உற்சாகப்படுத்துகிறான்.
மறுபடியும் பிறந்தவர்களோ இல்லையோ, மாமிசத்திலான சரீரங்களுக்கு ஒன்றிலிருந்து ஒன்றிக்கு எவ்வித வேறுபாடுகள் இல்லை. ஆனாலும் கூட மறுபடியும் பிறந்தவர்களுக்கும் மறுபடியும் பிறக்காதவர்களுக்கும் பெரியதொரு வேறுபாடு இருக்கிறது. இது கர்த்தரின் நீதியின் மீதுள்ள விசுவாசமாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலம் தம் மனங்களை எப்போதும் புதுப்பித்தவாறு கர்த்தரைப் பின்பற்ற நீதிமான்களால் மட்டுமே முடியும.
அப்படியானால் நம்மிருதயங்களை எதனால் புதிதாக்க முடியும்? பாவத்திலிருந்து முழு விடுதலையை அறிவிக்கும் நற்செய்தியின் வார்த்தையின் மீதுள்ள விசுவாசத்தினால் மட்டுமே நம்மிருதயங்களைப் புதுபிக்க முடியும். நம் மாமிசத்தின் பலவீனங்களினாலும் குறைபாடுகளினாலும் நம் சரீரங்களிலும் மனங்களிலும் செய்த எல்லாப் பாவங்களையும் நம் தேவன் மன்னித்தார். நீதிமான்களின் மனங்கள் புதுபிக்கப்படலாம். ஏனெனில் நம் தேவன் தன்னுடைய ஞானஸ்நானத்தினாலும் சிலுவை இரத்தத்தினாலும் உலகின் எல்லாப் பாவங்களையும் மன்னித்தார். வேறு வார்த்தைகளில் கூறினால் நமது மனங்கள் புதுபிக்கப்பட்டன. ஏனெனில் கர்ததரின் நீதியை நாம் விசுவாசிக்கிறோம்.
கர்த்தருக்கு முன்பாக என்ன செய்யப் போகிறோம் என்ற தெளிவான புரிந்து கொள்ளுதல் நமக்குத் தேவை. அவருடைய நிறைவான சித்தம் இன்னதென்பதையும், நம்மிடமிருந்து அவா எதனை எதிர்பார்க்கிறார் என்பதையும், நமக்கு அவர் கொடுத்த ஊழியம் என்னவென்பதையும் மறுபடியும் பிற்நத நீதிமான்கள் என்ன செய்ய வேண்டுமென்பதையும் நாம பிரித்துணர வேண்டும். இவற்றைக் குறித்து நம்மிருதயங்களை நாம் புதிதாக்க அவருக்கு ஊழியம் செய்யவும் வேண்டும். நம்முடைய மனங்களையும் சரீரங்களையும் காணிக்கை யாக்குவது கர்த்தரின் சித்தமாகும். அவருக்கான பரிசுத்த பலிகளாக நம்மை ஒப்புவிக்க வேண்டும். நம்முடைய மனங்களைப் புதிதாக்கும் போது நம்மையே பலியாக அவருக்கு ஒப்பு கொடுக்க முடியும். கர்த்தர் நம்முடைய எல்லாப் பாவங்களையும் அகற்றி விட்டார் என்பதிலிருந்து நமது மனங்களைப் புதிதாக்குதல் வருகிறது.
மறுபடியும் பிறந்தவர்களுக்கும் மறுபடியும் பிறக்காதவர்களுக்கும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பதின் மூலம் நீதிமான்களால் மட்டுமே தம் மனங்களை புதிதாக்க முடியும். நம்முடைய இருதயங்களை சுத்தப்படுத்தி அதனைப் புதிதாக்கி மாமிசத்தின் உலகப் படியான இச்சைகளை மறுப்பதின் மூலம் நீதிமான்களாகிய நம்மால் கர்த்தரை பரியப்படுத்தும் காரியங்களை எப்போதும் செய்ய முடியும். நீதிமான்கள் பாவிகளிலிருந்து வேறுபட்டவர்கள் ஏனெனில் அவர்களால் தம்மிருதயங்களை புதிதாக்க முடிவதோடு எப்போதும் தேவனுக்கு ஊழியம் செய்து அவருடனே நடக்கவும் முடியும்.
 
 
விசுவாசத்தினால் உங்களிருதயங்களை புதிதாக்குங்கள்
 
தொலைகாட்சிகளில் நிறைய பிரபலமானவர்கள் இருக்கிறார்கள். இவ்வுலகிலுள்ள மக்கள் இந்த நட்சத்திரங்களின் ஆடைகளையும் வாழ்க்கை முறைகளையும பின்பற்ற கடினமாக முயலுகினறனர். தொலைகாட்சிகளைப் பார்ப்பதின் மூலம் புதிய பாணிகளை நாம் இலகுவாக அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு ரிமோட் கண்ட்ரோலின் மூலமாக புதியதொரு உலகை நம்மால் திறக்க முடியும். உங்கள் வாழ்வு இவ்வுலகினுடையதாய் இல்லையா?
இவ்வுலகம் வேகமாக மாறுகிறது என நான் உணருகிறேன். இப்பொழுது நாம் கையில் பணத்தை எடுத்துக் கொண்டு செல்லுகிறோம். ஆனால் சிறிது நாட்களுக்குப் பிறகு எலக்ட்ரானிக் பணத்தையும் எலக்ட்ரானிக் கார்டுகளையும் எடுத்துச் செல்லுவோம். இந்த எலக்ட்ரானிக் கார்டுகளை தொலைத்துவிட்டால் அது பெரிய பிரச்சனையாகிவிடும். நமது கரங்களிலோ அல்லது நெற்றிகளிலோ நம் வசதியாயிருக்கும் என பார்கோடுகளைப் பதியச் சொல்லுவார்கள். அப்பொழுது அநேக இயற்கை பேரழிவுகளும் நிகழுமென எண்ணுகிறேன். இத்தகைய காலர்கள் வருவதற்கு முன் நீதிமான்களாகிய நாம் இவ்வுலகினுடையவர்களாய் இல்லாதிருப்பதால் நம்முடைய மனங்களை புதுப்பிக்கவும் கர்த்தரின் நற்செய்தியையும் பரப்புவதற்கு நம்மிருதயங்களை ஏற்பாடு செய்வோமாக.
நான் விழித்தெழும் போதெல்லாம் கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என எண்ணுகிறேன். கர்த்தருடைய நீதியை உள்ளடக்கியுள்ள நற்செய்தியைப் பரப்ப மிகவும் விரும்புகிறேன். ஏ¦னினல் இந்த பார் கோடுகளை நம் கைகளிலும் நெற்றிகளிலும் போட்டுக் கொள்ளும் நேரம் வரும் போது அவருடைய வார்த்தைகளைப் பரப்புவதற்கான சாத்தியமிருக்காது. கர்த்தரின் சித்தத்தைப் பின்பற்ற களைப்பின்றி உழைக்கிறேன். இனிமேல் என்னால் வேலை செய்ய முடியாது என்ற நேரம் வரும் போது மட்டுமே என்னால் ஓய்வெடுக்க முடியும். நேரம் வரும் போது என்னுடைய எல்லா உடமைககைளும் தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து விடுவேன்.
ஆனால் இப்போதைக்கு கர்த்தருடைய சித்தத்திற்கு மட்டுமே என்னால் பின்பற்ற முடியும். நான் இவ்வுலகைவிட்டு விலகி அதனுடையவனாயில்லாதிருக்கிறேன். பவுல் பிரசங்கித்த நற்செய்தியினால் இரட்ச§க்கப்பட்ட ரோம நகரின் அநேக நீதிமான்கள் கால்ம செல்லச் செல்ல உலகினுடையவர்களாய் மாறி நம் தேவனிடமிருந்து து¡ரப் போய் விட்டான். அவர்களுடைய காலடிகளை நாம் பின்பற்றக் கூடாது.
ரோம நகரில் உள்ள விசுவாசிகள் இவ்வுலகினுடையவர்கள் ஆகிறார்கள் என்று பவுல் இந்த வசனத்தை ஆதங்கத்துடன் எழுதினான். உங்கள் சரீரங்கள் இவ்வுலகினுடன் ஒத்துப் போகிறது. ஆனால் உங்களால் செய்யக் கூடிய விலையேறப்பட்ட ஒன்று இருக்கிறது. உங்கள் மனங்களைப் புதிதாக்குங்கள். தேவன் உங்கள் பாவங்களிலிருந்து விடுதலையளிக்க வில்லையா? கர்த்தரின் நீதியின்நற்செய்தியை நினைவு கூர்ந்து எது அவரைப் புரியப்படுத்தும் என சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மனங்களைப் புதிதாக்குங்கள், முழுமையானதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான செயல்களைச் செய்யுங்கள். ஆவிக்குரிய விதமாய் தியானியுங்கள். சரீரப்பிரகாரமாய் செய்யாதீர்கள். ரோமிலிருந்த விசுவாசிகளுக்கும் இந்நாளிலுள்ள நமக்கும் இதனைத் தான் பவுல் கூறுகிறான்.
நாம் இவ்வுலகினுடையவர்கள் இல்லை என வெளியரங்கமாக காட்டிக கொண்டாலும் நாம் இவ்வுலகினுடையவர்களாகவே இருக்கிறோம். ஆயினும் கூட நம் மனங்களைப் புதிதாக்குவதின் மூலம் இன்னமும் தேவனுக்கு நம்மால் ஊழியம் செய்ய முடியும். நாம் மாமிசப் படியானவர்களாதலால் நாம் இவ்வுலகினை ராகாமலிருப்பதை கடினமான ஒன்றாக கண்டாலும் கர்த்தரின் நீதியின் மூலமாக நம் தேவன் நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டார் என இன்னமும் விசுவாசிக்கிறோம். இப்படியாக கர்த்தரின் நீதியின் மீதுள்ள நம் விசுவாசங்களின் மூலம் கர்த்தருடைய நீதியின் செய்கைளுக்கு நம்மால் ஊழியம் செய்ய முடியும். கர்த்தரை நாம் விசுவாசிப்பதின் மூலம் அவரின் நல்ல மற்றும் நிறைவான அவரின் சித்தத்தை முழுமையாக பின்பற்றலாம்.
நம் மனங்களை ஒவ்வொரு நொடியும் நாம் புதுப்பிக்க வேண்டும். ஏனெனில் இவ்விலகிற்கு மரித்த நீதிமான்கள் உலகப் படியான மக்களைவிட ஏழைகளாய் இருப்பதால் உலகப் படியான மக்களை விட தவறான சிந்தனைகள் மற்றும் மனங்கள் மற்றும் சரீரங்கள் மாறும் அபாயத்தில் இருக்கின்றனர். இதனால் தான் கர்த்தரின் நீதியின் மீதுள்ள விசுவாசத்தால் நம்மிருதயங்களை எப்போதும் பாதுகாக்க வேண்டும்.
கிறிஸ்து நம்முடைய எல்லாப் பாவங்களையும் எடுத்துப போட்டுவிட்டதால் விசுவாசத்தில் நிலையாக இருக்க வேண்டும். நம்முடைய விசுவாசம் சிறந்ததாக்கப்பட்டது என நமக்கு நாமே உறுதி செய்ய வேண்டும். கர்;த்தருடைய நீதியின் மூலமாக உங்கள் எல்லாப் பாவங்களையும் நம் தேவன் எபடுத்துப் போட்டார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படி விசுவாசித்தால் நம் தேவனின் பணிகளை விசுவாசத்தினால் உங்களால் செய்ய முடியும் உங்கள் பாவங்களுக்கான எல்லா தீர்ப்புகளையும் ஆக்கினைகளையும் தேவன் எடுத்துப் போட்டார்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசவாசித்து நம் மனங்களை நாம புதிதாக்கிக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமானது. இந்த கடைசி காலத்தில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நம் மனங்களைப் புதிதாக்கா விட்டால் ஆலயங்களை விட்டு நாம் விலகி மரித்துப் போவோம்.
தொடர்ந்து புதிதாக்கியவாறு விசுவாச வாழ்வு ஒன்றை வாழுவது மிதிவண்டியை மலை உச்சியை நோக்கி அழுத்துவதற்கு சமமானதாகும். ஒருவர் தனது மனதைப் புதுப்பிக்காதது மலை உச்சிக்கு செல்லும் பாதையில் மிதி வண்டியை நிறுத்திவிட்டு அதனை மதிக்காததைப் போன்றது. நீங்கள் பெடலை அழுத்தவில்லையென்றால் நீங்கள் நின்று போவது மட்டுமல்லாமல் பின்னால் ஓடி படுபாதாளத்திற்குள் விழுந்து போவீர்கள்.
கர்த்தருடைய நீதியின் மீதுள்ள நமது விசுவாசத்திற்கு இந்த உதாரணம் பொருந்துகிறது. மிதிவண்டியின் மூலம் நாமனைவரும் மலை உச்சிக்கு போகிறோம். நம்முடைய பலத்தினாலும் சித்தத்தினாலும் மட்டுமே மலை உச்சிக்கு சென்றடைவது மிகவும் கடினமானதாகும். நாம் இன்னமும் மாமிசமாகவே இருப்பதால் கர்த்தரின் நீதியை நாம்ம இருக்கமாகப் பற்றிக் கொள்ள வேண்டும். மனித சிந்தனைகளில்லாமல் ஒரு நொடிப் பொழுது கூட கடந்து செல்வதில்லை.
நாம் பலவீனமானவர்களாகும் போதெல்லாம் நம் மாமிசத்தினல் உள்ள ¨தரியம் தளர்ந்து போய் விடுகிறது. இதனை என்னால் செய்ய முடியாது. இதற்கு என்னால் பழகிக் கொள்ள முடியாது. என்னுடைய மன உறுதி மிகவும் பலவீனமானது. ஆனால் சகோதரரின் மன உறுதி உண்மையாகவே உறுதியானது. என்னிடம் வல்லமையே இல்லை. ஆனால் சகோதரியிடம் பெரிதான வல்லமை இருக்கிறது. அந்த சகோதரர்களுடனும் சகோதரிகளுடனும் ஒப்பிடும் போது நான் மிகவும் பலவீனமானவன். அவர்கள் கர்;த்தருக்கு பணிபுரிய பொருத்தமானவர்களாகத் தோன்றுகின்றனர். ஆனால் நான் அப்படி இல்லை. கர்த்தருடைய நீதியை யாரொருவன் விசுவாசத்துடன் பற்றிக் கொள்ளவில்லையோ அவன் மிதிவண்டியை மிதிப்பதை நிறுத்தி படுபாதாளத்திற்குள் விழுந்து போவான்.
குறிப்பிட்ட சில மக்களுக்கு மட்டும் தான் இது பொருத்தமானதா? இல்லை, அப்படிஇல்லை. இது எல்லோருக்கும் பொருந்துகிறது. நன்கு பயிற்சி பெற்ற மிதிவண்டி ஓட்டுபவனால் இலகுவாக மலை உச்சிக்கு சென்று விட முடிகிறது. ஆனால் பலவீனமானவனிற்கோ அது கடினமான சமயம் ஆகும். ஆயினும் நீதிமான்களின் பிரச்சனை அவர்களின் சரீர பலத்தில் இல்லை. அது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை எத்தனை உறுதியாக பிடித்துக் கொண்டுள்ளார்கள் என்பதில் இருக்கிறது. சரீரப்படியான பலத்தை மட்டுமே வைத்துக் கொண்டு ஆவிக்குரிய உச்சானியை அடைவது சாத்தியமில்டலாத ஒன்று. சரீரப்படியாக நாம் பலமுள்ளவர்களாக இருக்கிறோமா அல்லது பலவீனர்களாக இருக்கிறோமா என்பது பொருட்டல்ல.
அவனிடம்/அவளிடம் பலமான மன உறுதி இருப்பதால் மட்டுமே யாராலும் விசுவாச வாழ்வு வாழ முடியாது என்பதை நினைவில் வைத்திருங்கள். உங்களை நீங்கள் மற்றவர்களுடன் ஒப்பிட்டு உற்சாகமிழந்து போகக் கூடாது. கர்த்தருடைய நீதியை மட்டுமே பற்றிக் கொள்ளுங்கள். கர்த்தருடைய நிதியின் மீதுள்ள விசுவாசத்தினால் இடைவிடாது நம் மனங்களை புதிதாக்கினால் தேவன் நம்மை உச்சியை நோக்கி பிடித்திழுப்பார். நாம் பெற்றுக் கொண்ட இரட்சிப்பின் நற்செய்தியானது நம்மிருதயங்களில் வேரூன்றியுள்ளது. நம்மிருதயங்களை தினந்தோறும் பரிசோதித்தோமானால் அவர் நம்மைப் பிடித்துக் கொள்வார். கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பதினாலும் கர்த்தருடைய செய்கைகளை செய்வதாலும் நம் அசுத்தமான மனங்களை சுத்தப்படுத்த வேண்டும்.
நம்முடைய புதிதாக்கப்படக் கூடிய மனங்களினால் அவருக்கு ஊழியம் செய்ய அனுமதித்த நம் தேவனின் கிருபைக்காக நான் நன்றி கூறுகிறேன். நம் மனங்களை புதிதாக்க கூடியதாக செய்து நம் விசுவாசத்தினால் அவருக்கு முன்னால் ஓடுவதற்கு நம் தேவன் அனுமதித்தார்.
 
 
எனக்குள் எந்த நல்லவைகளும் இல்லை என்பதை அறிந்திருக்கிறேன்
 
ரோமர் 7:18இல் பவுல் கூறுகிறான், “அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை.” தன் மாமிசத்தில் நலமானது ஒன்றுமேயில்லை என்பது பவுலுக்கு நன்கு தெரியும். மாமிசத்திற்குள் நல்லது எதுவுமே இருக்காது என்பதே சட்டமாகும்.
தன் மாமிசத்தில் நலமானது ஒன்றுமேயில்லை என்பதை பவுல் ஒப்புக் கொண்டான். சட்டத்தை தான் மிகவும் நேசித்தும் அதன்படி வாழ கடினமாக முயற்சித்ததும் பொருட்டல்ல என்பதையும் அதனை அவனால் செய்ய முடியாததையும் அவன் அறிந்திருந்தான். தேவனைப் பின்பற்ற இருதயம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறது. ஆனால் மாமிசமோ ஆவிக்குரிய போராட்டத்திலிருந்து பின் வாங்கவே எப்போதும் முயற்சி செய்கிறது.
இதனால் தான் ரோமர் 7:21-24இல் பவுல் புலம்பினான், “ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன். உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தின் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கினது. நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?”
தன் சரீரத்தை பவுல் எவ்வாறு வரையரை செய்கிறான்? “சாவுக்கேதுவான சரீரம்” என அதனை வரையறுக்கிறான். உங்கள் சரீரம் எப்படிப் பட்டது? அதுவும் கூட சாவுக்கேதுவான சரீரம் இல்லையா? அப்படி இல்லை. சரீரமானது சாவுக்கேதுவான சரீரம் தான். அது பாவம் செய்யவே விரும்புகிறது, பாவங்கள் இருக்குமிடத்தையே நாடுகிறது, “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலே தேவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.” (ரோமர் 7:25).
இரண்டு சட்டங்களிருப்பதாக பவுல் சுட்டிக் காட்டுகிறான். முதலாவது மாமிசத்தின சட்டமாகும். அது மாமிசத்தின் ஆசைகளை மட்டுமே பின்பற்ற விரும்புகிறது. மேலும் கர்த்தரைப் பிரியப்படுத்துவதற்கு முற்றிலும் எதிரானதாயிருக்கும் மாமிசத்தின் சிந்தனைகளில் உழல்கிறது.
இரண்டாவது ஜீவ ஆவியின் சட்டமாகும். நாம் எப்பாதையில் நடக்க வேண்டுமென கர்த்தர் விரும்புகிறாரோ அந்த சரியான பாதைக்கு ஆவிக்குரிய சட்டம் நம்மை வழிநடத்த விரும்புகிறது. மாமிசத்தின் சட்டத்திற்கு எதிரானவைகளைச் செய்ய ஆவியின் சட்டம் விரும்புகிறது. கிறிஸ்தவர்களாகிய நாம இவை இரண்டின் நடுவில் மாட்டிக் கொண்டுள்ளோம். எங்கு செல்ல வேண்டுமென முடிவு செய்ய வேண்டும்.
சில நேரங்களில் மாமிசம் விரும்புவதை தொடர்நது பின்பற்றுகிறோம். ஆனால் நம் மனங்களை நாம் புதிதாக்கும போது ஆவியானது விரும்பும் கர்த்தரின் செய்கைகளைப் பின்பற்றுகிறோம். நாமனைவரும் மாமிசத்தை உடையவர்களாய் இருப்பதே இதற்கு காரணமாகும். அதாவது நம் சரீரங்களை கர்த்தருக்கான பலி காணிக்கையாக்கி மறுநொடியே மாமிசத்தின் காரியங்களை நாம் செய்து கொண்டிருக்கிறோம். ஆயினும் கூட பரிசுத்த ஆவியானவரால் எப்பொழுதும் நம் மனங்களை புதிதாக்க வேண்டும்.
நாம் இரட்சிக்கப்பட்டவர்களாயிருந்தாலும் நாம் இலகுவாக இவ்வுலகினுடையவர்களாய் மற்ற அனைவரும் கூட இவ்வுலகினுடையவர்களாய் வாழுவதாலே நாம் அவர்களால் இலகுவாக தாக்கப்படுகிறோம். கர்த்தரைப் பின்பற்றுவதற்கு ஒரே ஒரு வழிதானிருக்கிறது. அது நம்முடைய மனங்களைப் புதிதாக்குவதாகும். விசுவாசத்தினால் நம்முடைய மனங்களைப் புதிதாக்குவதின் மூலம் மட்டுமே நம்மால் வாழ முடியும். இப்படித் தான் நம் தேவன் வரும் வரை அவரை எப்போதும் பின்பற்ற வேண்டும்.
நம்முடைய மாமிசங்களை மட்டுமே நோக்கிப் பார்த்தால் தேவனுடைய நீதியின் செய்கைகளை நம் யாராலும் பின்பற்ற முடியாது என்பதுடன் அழிவிற்காக நாம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறோம். நம்மிருதயங்களினால் அவருடைய நீதியைப் பற்றிக் கொண்டு நம்மனங்களைப் புதிதாக்கி அவரைப் பின்பற்ற வேண்டும். இதனால் தான் பவுல் ரோமர் 8:2இல் கூறினான், “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.”
மாமிசம் பலவீனமுள்ளதாயிருப்பதால் அதனால் செய்ய முடியாதவைகளை எல்லாம் கர்த்தருடைய நீதியின் மூலம் கிறிஸ்து செய்து முடித்தார். ரோமர் 8:3 கூறுகிறது, “அதெப்படியெனில், மாம்சத்திலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.”
கர்த்தர் தன்னுடைய ஒரே பேறான குமாரரை இவ்வுலகிற்கு அனுப்பி நம் பாவங்களையெல்லாம் அவருடைய மாமிசத்தில் ஆக்கினைக்குட்படுத்தினார். “முடிந்தது” என்பதின் பொருள் என்னவெனில் நம்முடைய எல்லாப் பாவங்களும் எடுத்துக் கொள்ளப்பட்டதால் நாம் பாவமற்றவர்களாகினோம் என்பதாகும். கர்த்தருடைய நீதியை விசுவாசித்தமையால் நாம் நம்முடைய பாவங்களிலிருந்து விடுதலையானோம். நியாயப் பிரமாணத்தின் நீதியின் தேவைகளை ஈடுசெய்யவும், நம்மை இவ்வுலகின எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கவும், கர்த்தர் தன் குமாரரை இவ்வுலகிற்கு அனுப்பினார். அவர் தனது ஞானஸ்நானத்தினாலும் சிலுவையின் இரத்தினாலும் நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டார்.
இந்த இரட்சிப்பைப் பெற்ற பிறகு இரண்டு வகையான மனிதர்கள் தோன்றுகின்றனர். ஒரு குழுவினர் மாமிசத்தின் படி வாழ்ந்து மாமிசத்திற்குரியவைகளின் மீது தம் மனதைச் செலுத்துகின்றனர். மற்றவர்கள் ஆவிக்கேற்றபடி வாழ்ந்து ஆவிக்குரிய காரியங்களில் தம் மனதைச் செலுத்துகின்றனர். மாமிசத்தின் எண்ணங்கள் சாலை நோக்கி வழிநடத்துகின்றன என்பதையும், ஆவிக்குரிய சிந்தனைகள் வாழ்விற்கும் சமாதானத்திற்கும் ஏதுவாக உங்களை வழிநடத்துகின்றன என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மனித மனங்கள் கர்த்தருக்கு எதிரான எதிரிகளாகும்.
கர்த்தரின் சட்டத்திற்கு நாம் உட்படவும் கூடாது. அல்லது இதனை நம்மால் செய்யவும் முடியாது (ரோமர் 8:7). மறுபடியும் பிறந்த நீதிமான்கள் கூட தம் மனங்களைப்புதிதாக்கவில்லை எனில் மாமிசத்தின் சிந்தனைகளுக்குள் விழுந்து போவர். கர்த்தர் நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டார் என்பதை விசுவாசிக்காமலும் நாம் நமது மனங்களை புதிதாக்கவஒல்லை என்றால் மாமிசத்தின் செயல்களுக்குள் மிக இலகுவாக விழுந்து போவோம் ஆகையால் தேவனை நம்மால் பின்பற்ற முடியாது. இதனால் தான் நம் மனங்களை நாம் எப்பொழுதும் புதிதாக்க வேண்டும்.
மறுபடியும் பிறந்த நிதிமான்களால் சரீரத்தின் சிந்தனைகளைப் பின்பற்றி மாமிசத்திற்குள் விழுந்துவிடவும் முடியும்.அல்லது நமது மனங்களைப் புதிதாக்குவதின் மூலம் ஆவிக்குரிய சிந்தனைகளையும் பின்பற்ற முடியும் என்று பவுல் கூறினான். நாம் இவ்விருபக்கங்களுக்குமாக அலைபாய்கிறோம். ஆனால் பவுல் இன்னமும் கூறினான், “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட் பட்டவர்களாயிராமல் ஆவிக்குட் பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல” (ரோமர் 8:9).
நாம் கர்த்தரின் ஆவிக்குரிய மக்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் நாம் அவருடைய மக்களாவோம். நம் பலவீனர்களாயிருப்பதினால் உலகின் இச்சைகளைப் பின்பற்றி அவற்றினுடையவர்களானாலும் கூட நாம் இன்னமும் மறுபடியும் பிறந்தவர்களாகவே இருக்கிறோம். மாமிசத்திற்குரிய காரியங்களில் நம் மனதைச செலுத்தும் போது நாம் மாமிசத்திற்குள் விழுந்து போகிறோம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் சஞ்சரிப்பதால் நாம் கிறிஸ்துவினுடைய மக்களாகிறோம். வேறு வகையாக கூறினால் நாம் கர்த்தரின் மக்களாகிய நீதிமான்களானோம்.
நம்முடைய சரீரங்கள் கிறிஸ்துவினாலே மரித்தவையாயின என பவுல் கூறினான். “மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால், சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்” (ரோமர் 8:10), எனவும் அவன் கூறினான். நம்முடைய ஆவிக்குரிய சிந்தனைகள் விழித்தெழு வேண்டும். நாம் மரித்துப் போகும் வரையில் இன்னமும் பலவீனர்களாயிருக்கிறோம். ஆகவே இலகுவாக நாம் நாசமடைவோம். ஆனால் கர்த்தரின் நீதியை விசுவாசிப்பதின் மூலம் நம் மனங்களும் சிந்தனைகளும் எப்போதும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
நமக்குள் பாவம் செய்யும் ஆவலிருக்கிறது என்பதை உணரும் போதெல்லாம் நம் கண்களை கர்த்தரின் நீதியின் மீது பதிப்போமாக. அப்பொழுது கர்த்தரின் நீதியானது நமது எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்த்தது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். கர்த்தரின் நீதியை நோக்கிப் பார்த்து அதனை விசுவாசியுங்கள். நம் எல்லாப் பாவங்களையும் அகற்றிப் போட்ட கர்த்தருக்கு நன்றி கூறி கர்த்தருடைய செய்லகளை எண்ணிப் பாருங்கள். கர்த்தருடைய சித்தம் என்னவென்பதையும் அவரை எது நிறைவாக பிரியப்படுத்தும் என்பதையும் நினைத்துப் பாருங்கள். அப்பொழுது உங்கள் மனம் எப்போதும் புதிதாயிருக்கும்.
விசுவாசத்தினால் நம் மனங்களைப் புதிதாக்கி கர்த்தரைப் பிரியப்படுத்தும் காரியங்களை நோக்கி நம் மனதைச்செலுத்த வேண்டும். நீதிமான்கள் இப்படித் தான் வாழ வேண்டும். இப்படிச் செய்வதின் மூலம் மட்டுமே நம் தேவன் திரும்பி வரும் வரையில் அவரை நாம் பின்பற்ற முடியும். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் களைப்படைந்ததை நான் அறிவேன். வேலைச் செய்வது கடினமாயிருக்கிறது. ஆலயத்திற்கு வருவதும் கடினமாயிருக்கிறது. எல்லோருமே கஷ்டங்களை சந்திக்கிறார்கள். “முடிந்தது” என இயேசு கூக்கிரலிட்டதை எண்ணி சில சமயங்களில் இயேசுவின் மீது நான் பொறாமைப்படுகிறேன். “முடிந்தது” என நம்மாலும் கூட கூற முடியுமெனவும், மேலும் இந்த கஷ்டங்களிலிருந்து விடுதலை கிட்டும் எனவும், நான் உறுதியாக இருக்கிறேன்.
தேவனின் இரண்டாவது வருகை சமீபமாயிருக்கிறது. அதுவரையில் இந்த உலகத்தினுடையவர்களாய் மாறாமல் நம் மனங்களைப் புதுபிக்க வேண்டும். தேவனைப் பின்பற்ற வேண்டுமானால் நமது இருதயங்கள் கர்த்தரின் நீதியைப் பற்றிக் கொள்வது அவசியமாயிருக்கிறது. மேலும் நம் மனங்கள் தொடர்ந்தும் புதிதாக வேண்டும். இப்படித் தான் நம் தேவன் திரும்பி வரும் வரை அவரை நம்மால் பின்பற்ற முடியும. அந்த நேரம் சமீபமாயிருக்கிறது.
அமெரிக்க நாட்டைப் போன்று மூன்று மடங்கு பெரிதான ஓசோன் துளையானது அண்டார்டிக் கண்டத்தின் வானில் ஏற்பட்டிருப்பதாக உண்மையில் ஒரு பத்திரிக்கை செய்தியைப் படித்தேன். ஏவுகனைகளிலிருந்து பாதுகாக்கும் இராணுவத்திட்டமொன்றின் தொடக்கத்தையும் கூட நான் வாசித்தேன். இம்முறையின் படி ஏவுகலன்களை நடுவானிலேயே சுட்டுத் தள்ளிவிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடக்கப்பட்ட சோதனைகள் வெற்றிகரமாய் இருக்கின்றன. இத்தகைய முன்னேற்றங்களின் முடிவுகள் தெளிவானவை. இராணுவத்தின் அழிக்கும் திறனானது எத்தனையாய் உயர்ந்தாலும் கூட சுற்றுப் புற சூழ்நிலை தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது.
ஒருநாடு தன்னுடைய இராணுவ வல்லமையை அதிகரிக்கும் போது அதன் எதிரி நாடுகளும் கூட அந்நாட்டின் இராணுவ வளர்ச்சிக்கு சமமாக தம்முடைய இராணுவ வல்லமையை வளர்க்க மாட்டர்களா? ஒரு நாடு தன்னுடைய இராணுவ வல்லமையை வளர்க்கும் போது உலகின் மற்ற நாடுகள் அதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாயிருக்க மாட்டார்கள். இத்தகைய பெரிய சக்திகளின் நடுவில் போர் மூண்டால் என்ன நடக்கும்?
சில நாடுகள் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயலுகையில் அந்நாடுகளுக்கு அணு ஆயுதங்கள் கிடைக்கக் கூடாது என பெரிய சக்திகள் மிகக் கடுமையாக முயன்றன. ஆனால் இப்படிப்பட்ட தடுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து அந்த குறிப்பிட்ட நாடு பேரழிவு ஆயுதங்களைத் தயாரித்து அதனைப் பயன்படுத்த உபயோகிக்கப் போவதாக பயமுறுத்துகிறது என எண்ணுவோமாக. அப்போது உலகின் மற்ற நாடுகளும் கூட இத்தகைய ஆயுதங்களைத் தயாரிக்க முயற்சி செய்யும்.
இத்தகைய புதிய ஆயுதங்கள், அணு ஆயுதங்களை விட மிகப் பெரிய சக்தியின் மூலம் இவ்வுலகை அழிக்கும். முன் காலத்தில் நடந்ததைப் போல் போரானது துப்பாக்கியினால் நடைபெறாது. மனிதர்களைக் கொல்வது சாதாரணமாகி விடும். ஒரு நொடிப் பொழுதில் ஒரு மொத்த நகரமோ அல்லது நாடோ முற்றிலுமாக அழிந்து விடும். அணு ஆயுதப் போரானது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டுமே உரியதாய் இருக்காமல் உலகப் போரிட்டு வழிவகைச் செய்யும். இத்தகையப் போரினால் அழிந்து போன இவ்வுலகை இயற்கை பேரழிவுகள் தாக்கி மிகப் பெரிய அழிவுகளை அது உருவாக்கும். ஓசோன் அடுக்கு மிக வேகமாக அழிக்கப்படும். மேலும் பேரலைகளும் புயல்களும் காடுகளைத் தொடர்ந்து அழிக்கும். அப்பொழுது அந்தி கிறிஸ்து பெரிதான வல்லமையுடன் தோன்றி இவ்வுலகை வெல்லுவான்.
இந்த சம்பவங்களையெல்லாம் நான் மிகைப்படுத்துகிறேன் என நீங்கள் கூறலாம். ஆனால் அடிப்படையில் மனித சுபாவங்கள் மிகவும் தீயவை. நாடுகள் ஆயுதங்களையும் இராணுவங்களையும் ஆயத்தம் செய்கின்றனர். இவற்றையெல்லாம் எந்த நல்ல காரியங்களுக்கும் உபயோகிக்க முடியாது. அணு ஆயுதங்களை அதற்கு சமமான பேரழிவு ஆயுதங்களால் மட்டுமே சமன்படுத்த முடியும். தாம் பிழைத்திருக்கும் படி ஒவ்வொரு நாடும் ஒன்றை ஒன்று தாக்கும். உலகை ஆள முயற்சி செயயும் தனியொரு நாட்டின் முயற்சிகளுக்கு மற்ற நாடுகள் தக்க பதிலடி கொடுக்க முயற்சி செய்யும். அது எதற்கான தயாரிக்கப்பட்டதாயிருந்தாலும், ஒருமுறைத் தயாரிக்கப்பட்டு விட்டால் அணு ஆயுதங்களையும், இராணுவ தளவாடங்களையும தீய செயல்களுக்கே பயன்படுத்த முடியும்.
இவ்வுலகினுடையவர்களாகாமல் தம்முடைய இருதயங்களை புதுப்பித்து தேவனை பின்பற்ற வேண்டுமென ரோம விசுவாசிகளுக்கு பவுல் முன்னொரு காலத்தில் கூறினான். இந்த காலத்தில் வசிக்கும் நமக்கும் கூட இந்த வசனம் மிகவும் பொருந்துகிறது. இந்த கடைசி நாட்களில் நல்லது எதுவென்றும், அவரைப் பிரியப்படுத்தும் எனவும் கர்த்தரின் நிறைவான திட்டம் என்னவென்பதையும் பிரித்துணர்ந்து நம் விசுவாசத்தினால் தேவனைப் பின்பற்ற வேண்டும்.
நாம் மிகுந்த குறைபாடுடையவர்களாய் இருந்தாலும் நம் தேவன் மகத்துவம் நிறைந்த கர்த்தர். மகத்துவமானவர் பரிசுத்த ஆவியானவராக நமக்குள் சஞ்சரிக்கிறார். நம்முடைய மாமிச சரீரங்கள் பலவீனமானவைகளாயிருந்தாலும் நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் மிகவும் உறுதியானவர். வார்த்தையின் மீதுள்ள விசுவாசத்தினால் பரிசுத்த ஆவியானவர் நம் மனங்ளைப் புதிதாக்குகிறார். எனவே தேவனை நம்மால் பின்பற்றுவது சாத்தியமாகிறது.
பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை நாமனைவரும் சார்ந்திருப்போமாக. நமது மனங்களைப் புதிதாக்கி தேவனுக்கு ஊழியம் செய்வோமாக. நாம் தேவனுக்கு ஊழியம் செய்யும் போது அவர் நம்மிடம் திரும்பி வந்தால் நாமும் கூட அவருடனே செல்வோமாக. இந்த கிறிஸ்துவின் வருகை நாள் வரை கர்த்தரின் நீதியைப் பரப்புவதற்காக நாம் வாழுவோமாக. கர்த்தருடைய நீதியை விசுவாசித்து உங்கள் மனதைப் புதிதாக்குங்கள்.