ரோமர் 13:1 கூறுகிறது, “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.”
சமுதாய கட்டுப்பாடுகளின் எல்லைகளுக்குள் நாம் வாழ வேண்டும். சரீர மற்றும் ஆன்மீக வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் அதிகாரிகளுக்கு பயப்படுவதுடன் அவர்களை மதிக்கவும் வேண்டுமென கர்த்தர் நமக்கு கட்டளையிட்டார். அரசாங்க அதிகாரிகளுக்கு ஒரு நோக்கத்துடனேயே கர்த்தர் அதிகாரத்தைக் கொடுக்கிறார். ஆகவே நாம் அவர்களை அலட்சிய்ம செய்யக் கூடாது. பவுல் பற்றியாதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும், “ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்” (ரோமர் 13:8).
இதனால் தான் நாம் இலவச புத்தகங்களை வெளியிட்டு இந்த அழகிய நற்செய்தியை முழு உலகிற்கும் விநியோகித்து வருகிறோம்.
“அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.” என்று கர்த்தர் கூறினார். தம்முடைய மத வாழ்வில் சட்டத்தை தாம் விசுவாசத்துடன் கடைப்பிடிப்பதாக எண்ணி மக்கள் ஒரு மாயையில் வாழ்கிறார்கள்.
கர்த்தர் நமக்கு நற்செய்தியாகிய நிர் மற்றும் ஆவியைக் கொடுத்தார். அது நம்மை நம் பாவங்களிலிருந்து இரட்சிக்க அவரின் நீதியை வெளிப்படுத்துகிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும ஆவியில் காட்டப்பட்ட கர்ததரின் நீதியை நாம் விசுவாசிப்பது அவசியமாகும்.
நம் தேவன் நமக்கு வழங்கிய இந்த அழகிய நற்செய்தியானது உண்மையாகவே மற்றவர்களுக்கு வாழ்க்கையை அளிக்கிறது. ஏனெனில் இது உண்மையாகவே மக்களை அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கிறது. நாம் இயேசு கிறிஸ்துவிடமிருந்த பெற்ற அன்பிற்கு மட்டுமே கடனாளிகளாக இருக்க வேண்டுமேயன்றி வேறெதற்கும் கடனாளிகளாக இருக்கக் கூடாது.
நாம் விழித்தெழுவதற்கான நேரம் இதுவே
வசனம் 11 கூறுகிறது, “நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.” நம்முடைய குறைபாடுகள் நிறைந்த சரீரம் மாறும் போது கிறிஸ்துவடனே கூட ஆயிரம் வருடங்கள் அரசாளுவோம். நமது சரீரங்களும் கூட மாறுகிறது.
நமது தலைமுறைக்கும் நோவாவின் காலத்திலிருந்த தலைமுறைக்கும் உள்ள வேறுபாட்டை நம்மால் காண முடியும். பல்கலைக் கழகங்களில் புதிதாக ஒரு ஓரினச் சேர்க்கை அலை உருவாக்கியுள்ளது. ஒரு தொலைபேசியை அதிக நேரம் உபயோகித்தமைக்காக ஒரு மனிதர் இன்னொருவரை அடித்துக் கொள்ள நிகழ்வு நடந்த இவ்வுலகம் எத்தனைக் கொடுமையானது? இத்தலைமுறையில் இத்தகைய கொடூரமான தீய சம்பவங்கள் நடந்தேறுகின்றன.
நாம் விழித்தெழுவதற்கான நேரம் இதுவே என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம்முடைய தேவனின் இரண்டாவது வருகைக்கான நேரம் மிகவும் நெருங்கியுள்ளது. இக்காலம் எதனைப் போன்றது என சரியாகப் பிரித்துணர்ந்து தேவனின் இரண்டாவதுவருகை மிகவும் அருகாமையில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதே சமயத்தில் இந்த காலத்தைக் குறித்து அறிந்து கொள்ளாத அநேக மக்களிருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள்.
“நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.” (மத்தேயு 24:37) நோவாவின் காலத்தில் கூட மக்கள் வீடுகளைக் கட்டினார்கள். திருமணம் செய்து கொண்டார்கள். எல்லாவிதமான பாவங்களையும் செய்தனர். ஒருநாள் திடீரென கர்த்தரின் நியாயத் தீர்ப்பு அவர்கள் மீது ஊற்றப்படும் வரையில் தம் காரியங்களில் அன்றாடம் ஈடுபட்டிருந்தனர். நோவா மட்டுமே பெருமழையை எதிர்பார்த்தர்ன. அவனுடைய போழைக்குள் தஞ்சம் அடைந்தவர்களைத் தவிர மீதி அனைவரும் வெள்ளத்தினால் அழிந்து போயினர். உணவருந்தி கொண்டிருந்த போதும் குடித்துக் கொண்டிருந்த போதும், கர்த்தருடைய நியாயத் தீர்பபை திடீரென அவர்கள் சந்தித்தனர். இதனை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
போர் அபாயங்களை மட்டும் இவ்வுலகம் சந்தித்துக் கொண்டிராமல் சுற்றுச் சூழலின் மாறுபாடுகளின் மூலம் உலகம் முழுவதும் நடந்தேறும் மிகப் பெரிய இயற்கைப் பேரழிவுகளையும் சந்திக்கிறது. நாம் சாப்பிடும் சாப்பாட்டில் கூட மிகப் பெரிய அபாயம் காத்திருக்கிறது. நாம் சாப்பிடும் உணவைக் குறித்து கவலைப்படாமல் நம்மால் அதனை அனுபவிக்க முடியாது. இதனால் தான் இக்காலத்தில் நாம் ஞானத்துடன் வாழ வேண்டும். நாம் தொடக்கத்தில் விசுசாசிக்கத் தொடங்கிய போது இருந்ததைவிட நம் சரீரங்களுக்கான இரட்சிப்பு அருகாமையில் இருக்கிறது என்பதை நாம் நினைவு கூற வேண்டும்.
கிறிஸ்துவின் இரட்சிப்பினால் நீங்கள் தரிப்பிக்கப்பட்டீர்களா?
விசுவாச வாழ்விற்கும் இவ்வுலகின் அழிவிற்கும் எத்தகைய தொடர்பும் இல்லை எனவும் எதனையும் சாராத அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்குத் தான் தொடர்பிருக்கிறது எனவும் நீங்கள் எண்ணலாம். ஆனால் உலகில் நிகழும் பேரழிவுகள் உலகின் அழிவிற்கான எச்சரிக்கை அடையாளங்களாகும். இந்த உலகம் சீக்கிரமாகவே மிகத் தீவிரமான பொருளாதார மற்றும் சுற்றுச் சூழலைக் குறித்த கஷ்டங்களை சந்திக்கும். தேவனின் இரண்டாவது வருகை நெருங்கும் போது நாம் “ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்” என வேதாகமம் நமக்கு கூறுகிறது. அன்பினாலே நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து பாதுகாத்து வழிநடத்தி ஒருவருக்கொருவர் இசைய வேண்டும். நாம் தொடக்கதில் விசுவாசிக்கத் தொடங்கிய போது இருந்ததை விட நம் எதிர்பார்ப்புகள் சமீபமாயிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
நம்பிக்கையுடன் வாழ வேண்டியதும், இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருக்க வேண்டியதமான ஒரு காலத்தில் நாம் வாழுகிறோம்.
நம் நம்பிக்கை எங்கே இருக்கிறது? கிறிஸ்து திரும்பவும் வருவதற்காக காத்திருப்பதில் நம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அவர் நம்மை உயிரோடெழுப்பி ஆயிரம் வருட அரசாட்சியில் அரசாளும் பரிசை நமக்கு வழங்குவார். ஏழாண்டு கால மகா உபத்திரவத்தின் காலத்திற்குப் பின்னால் வரும். காலம் நெருங்கி வருகையில் கிறிஸ்துவின் நீதியைப் பெற்றவர்களாய் நம்பிக்கையுடனே கூட நாம் வாழ வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது அதிகமதிகமாய் உறுதியாக நின்று நம் முழு இருதயங்களுடனும் அதற்கு ஊழியம் செய்ய வேண்டும். இந்த முழு உலகிலும் உள்ள ஒவ்வொரு ஆத்துமாக்களுக்கும் இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள நம் ஊழியத்தை பெரிதாக்க வேண்டும்.
ஒருவருக்கொருவர் அன்பிலே கடனாயிருக்க வேண்டுமே தவிர வேறெதிலும் கடன் படக் கூடாது
பூமியதிர்ச்சி எரிமலைகள் போன்ற இயற்கை சீற்றங்களினால் அநேக பாடுகள் உண்டு என்பதை நான் அறிவேன். உலக அழிவை கருப்பொருளாகக் கொண்டு அநேக திரைப்படங்கள் இப்போது வெளியிடப்படுகின்றன. ஹாலிவுட் எழுத்தாகளர்கள் கற்பனை செய்வதைப் போலவே உலகம் அநேகமாக மாறுகிறதென்பதானது. உலகின் அழிவு சமீபமாயிருக்கிறது என்பதை மக்கள் உணருகிறார்கள் என்பதற்கான அத்தாட்சிகயாகும் என நான் எண்ணுகிறேன்.
ஆகவே மாமிசத்தின் செயல்களுக்கு நம்மை ஈடுபடுத்தக் கூடாது. ஆனால் ஆவிக்குரிய வேலைகளில் நாம் ஈடுபட வேண்டும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பரப்பும் வாழ்க்கையானது மிகவும் அழகிய வாழ்க்கையாகும் என நாம் விசவாசிக்க வேண்டும். நம்முடைய ஊழியத்தைக் கண்டு உலகிலுள்ள மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். நம்முடைய ஊழியத்தினால் அவர்கள் எததனையாய் மாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை எண்ணிலடங்காத மக்கள் நம்மிடம் கூறியுள்ளனர். ஒரு சிறிய நாடான கொரியாவிலுள்ள கர்த்தருடைய ஊழியர்களின் குபவினரால் கர்த்தரின் நீதியை வல்லமையாக பரப்ப முடிவதை அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை. ஆம், நாம் சிறியோர்களாயும் பலவீனர்களாயும் இருக்கிறோம். ஆயினும் உலகம் முழுவதும் நற்செய்தியை நாம் பரப்புகிறோம். இதற்கு காரணம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிப்பதேயாகும். அதாவது நாம் கர்;த்தரின் நீதியை விசுவாசிக்கிறோம்.
ரோமரின் 14:8 கூறுகிறது “நாம் பிழைத்தாலும், கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.” முந்திய வசனத்தில் பவுலும் கூட கூறினான் “நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை.” நம்முடைய தேவனாலே நாம் வாழந்திருக்கிறோம்.
நம் தேவனால் நாம் இவ்வுலகினுள் பிறந்தமையாலும், அவருடைய நீதியினாலே நாமும் நீதிமான்களாகியதாலே நாம் வாழ்ந்தாலும் மரித்தாலும் கூட கிறிஸ்துவிற்கு சொந்தமானவர்களே. கிறிஸ்துவிற்காக நாம் இவ்வுலகில் வாழ்ந்து இதனை விட்டுச் செல்லுவோம். கர்த்தருடைய நீதிக்காக நம் வாழ்வை வாழுகிறோம். கர்த்தர் நம்மால பிரியப்படுகிறார். மகிழ்ச்சியான செய்தியை உலகம் முழுவதும் பரப்புவதற்கு கருவிகளாக உபயோகிக்க அவர் நம்மைத் தேர்ந்தெடுத்தார். இப்படியாக நமக்காக நற்செய்தியின் கதவை அவர் திறந்தார். ஒவ்வொரு நாட்டிற்கும நடந்து சென்று நற்செய்தியைப் பரப்பாமல் புத்தகங்களின் மூலம் அதனைப் பரப்ப அனுமதித்தார்.
கர்த்தரின் நீதியின் நற்செய்தியை உள்ளடக்கிய ஒரு புத்தக தொடர்ச்சியை மொழிபெயர்த்து ஆங்கிலம் பேசும் உலகிற்கும், ஸ்பானிய மொழி பேசும உலகிற்கும் ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றிலுள்ள எல்லா நாடுகளுக்கும் அனுப்பியுள்ளோம், கர்த்தருடைய நீதியாக வந்த நம் தேவன் என்று தலைப்பிடப்பட்ட இந்த புதிய தொடர்ச்சியானது உலகிலுள்ள ஒவ்வொரு ஆத்துமாவுக்கும பெரிதான ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை தரும் என்பதில் உறுதியாயிருக்கிறேன். கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பவர்களின் மூலமாக தன்னுடைய சித்தத்தை நிறைவேற்ற அவர் எப்படி செயல்படுகிறார் என்பது ஆச்சரியமானது.
இவ்வுலகம் இந்த அழகிய நற்செய்தியால் நிரப்பப்படும். கர்த்தரின் நீதியை உள்ளடக்கியுள்ள நற்செய்தியானது உலகம் முழுவதும் பரப்பப்பட்டவுடனேயே நமக்காக கர்த்தரிடமிருக்கும் ஒவ்வொரு திட்டத்தையும் கர்த்தர் நிறைவேற்றுவார்.
இக்காலமானது புயலுக்கு முந்திய இரவாகும். எண்ணெய் தட்டுப்பாடும், உலக பொருளாதார அச்சமும் இவ்வுலகை இன்னுமொரு முறைத் தாக்கும். நமக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பதில் காவனமாக இருக்க வேண்டும். இவ்வுலகின் முடிவு வரும் வரை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் பரப்ப வேண்டும். இந்த உலகிலுள்ள ஒருவர் கூட கேட்பதிலிருந்து விடுபடாதவாறு நற்செய்தியாகி நீர் மற்றும் ஆவியை மிகுந்த தீவிரத்துடன் பரப்புவோமாக. இந்த ஒரே நோக்கத்திற்காக இசைவுடனே கூட பணியாற்ற வேண்டும். கிதியோனின் முன்னூறு போர் வீரர்களைப் போன்று நாம் பணியாற்ற வேண்டும். நமது எண்ணிக்கை மிகவும் குறைவானதாக இருந்தாலும் நாம் பரலோகத்தின் தைரியமிக்க போர் சேவகர்கள் மேலும் கர்த்தர் நம்முடனே இருக்கிறார்.
பாவ மன்னிப்பை யாரெல்லாம் பெற்று கர்த்தருக்கு நன்றியறிதல் உடையவர்களாய் இருக்கிறார்களோ அவர்கள் கர்த்தரின் நீதியைப் பரப்புவதற்கு தகுதியானவர்கள். கர்த்தருடைய நீதி நம்முடனே கூட இருப்பதால் விசுவாசத்தினால் நாம் வெற்றி வாகைச் சூடுவோம். கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பவர்கள் ஆவிக்குரிய செயல்களில் மட்டுமே ஈடுபட்டு ஆவிக்குரிய பணிகளில் ஈடுபடுவதை தமது இலக்காக ஏற்படுத்துவர்.
கர்த்தருடைய நீதியானது உங்களிடம் இருக்க வேண்டுமென நான் ஜெபிக்கிறேன்.