ரோமர் 14:1 கூறுகிறது, “விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.”
ஒருவருடைய விசுவாசத்தை மற்றவர்கள் நியாயம் தீர்க்கவோ, குறை கூறவோ வேண்டாமென ரோம பரிசுத்தவான்களை பவுல் எச்சரித்தான். அந்த காலத்தில் ரோம ஆலயங்களில் மிகத் தீவரமான விசுவாசிகளும், சுரிதாரணமான தீர்க்கதரிசிகளும் வாழ்ந்திருந்தனர். அப்போது அவர்கள் ஒருவரின் விசுவாசத்தை மற்றவர்கள் குறை கூறி வந்தனர். இது உங்களுக்கு நிகழ்ந்தால் மற்றவர்களின் விசுவாசத்தை நீங்கள் விசுவாசித்து கர்த்தரின் ஊழியர்களுக்கு எதிரான மோசமான கருத்துக்களை தவிர்க்க வேண்டும். தன்னுடைய ஊழியர்களை உயர்த்துவதும் அவர்களை உருவாக்குவதும் நாமல்ல. கர்த்தரே அவற்றைச் செய்கிறார்.
கர்த்தருடைய ஆலயத்தினுள் கூட விசுவாசிகளினுரிடே அநேக பிரச்சனைகள் உருவாகின்றன. அவர்களுடைய விசுவாசத்தை நோக்கிப் பார்த்தால் எல்லா விரமான விசுவாசங்களையும் அவர்களிடம் காணலாம். சிலர் விடுதலையாவதற்கு முன்னால் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களாய் இருந்திருக்கலாம். ஆகவே இன்னமும் அவர்களிடம் பழைய சட்டப்படியான விசுவாசம் இருக்கலாம்.
எதனைச் சாப்பிடலாம் என்பதற்கு சில கிறிஸ்தவர்கள் பெரிதான முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார்கள். உதாரணமாக இத்தகைய மக்கள் பன்றியைச் சாப்பிடக் கூடாது என விசுவாசிக்கின்றனர். எத்தனை சூழ்நிலையிலும் கூட ஓய்வு நாளைக் கடைபிடிக்க வேண்டுமென மற்றவர்கள் விசுவாசிக்கலாம். ஆனால் கர்த்தரின் நீதிக்குள்ளாக நம் விசுவாசங்களிலுள்ள வேறுபாடுகளை நாம் கலைய வேண்டும் இத்தகைய சிறிய காரியங்களுக்காக நாம் ஒருவரை ஒருவர் குறைகூறக் கூடாது. பவுல் கூறுதின் சாராம்சம் இதுவே.
கர்த்தருடைய நீதியினமீது நம் உடன் விசுவாசிகளுக்கு விசுவாசம் இருக்கும் போது அவர்களுடைய பலவீனங்களை நாம் குறைகூறக் கூடாது என அதிகாரம் 14இல் பவுல் போதிக்கிறான். ஏன் அப்படிச் செய்யக் கூடாது, ஏனெனில் அவர்கள் பலவீனர்களாயிருந்தாலும் அவர்களும் கூட கர்த்தரின் நீதியையே விசுவாசிக்கிறார்கள்.
கர்த்தருடைய நீதியை விசுவாசித்து தம் பாவங்களிலிருந்து விடுதலையானவர்களை கர்த்தரின் விலையேறப்பட்ட மக்களாக வேதாகமம் கருதுகிறது. மற்றவர்களின் கண்களுக்கு அவர்கள் குறைபாடுடையவர்களாய் தோன்றலாம். ஆயினும் கூட மற்ற விசுவாசிகளின நம்பிக்கையைக் குறை கூறக கூடாது என கர்த்தர் நமக்கு கட்டளையிட்டார். மாமிசத்தின் படி அவர்கள் குறைபாடுடையவர்களாய் இருந்தாலும் விசுவாசத்தினால் அவர்கள் கர்த்தரின் பிள்ளைகளானதே இதற்கான காரணமாகும்.
ஒவ்வொருவருடைய நம்பிக்கையும, மற்றவர்களுடையதிலிருந்து வேறுபடுகிறது
வசனங்கள் 2-3 கூறுகின்றன, “ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளை மாத்திரம் புசிக்கிறான். புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே.”
கர்த்தருடைய நீதியை விசுவாசித்து அவரைப் பின்பற்றுவதில் கர்த்தருடைய ஊழியர்களுக்கு நடுவில் வேறுபாடு இருக்கலாம். இரட்சிப்பின் மீதுள்ள விசுவாசம்ஒன்றே ஆனால் அவ்வார்த்தையின் மீதுள்ள விசுவாசத்தின் அளவு மாறுபடலாம்.
கர்த்தரின் நீதியாகியாகிய நற்செய்தியிலுள்ள விசுவாசத்தினால் மறுபடியும் பிறப்பதற்கு முன்னர் சிலர் சட்டத்தின்படி நடப்பவர்களாயிருந்தால் கர்த்தருடைய நீதியை முற்றிலுமாக விசுவாசித்து அவனுடைய/அவளுடைய சொந்த நீதியை விட்டுவிட அவனுக்கு/அவளுக்கு அதிகமான நேரம் தேவைப்படலாம். இவர்கள் ஓய்வு நாளை ஆசரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முயலலாம். ஆனால் நீங்கள் அவர்களைக் குறை கூறக் கூடாது ஏனெனில் அவர்களும் கூட கர்த்தரின் நீதியை விசுவாசிக்கிறார்கள்.
தன்னுடைய நீதியை அறிந்து அதனை விசுவாசிப்பவர்களின் நம்பிக்கையில் கர்த்தர் பிரியப்படுகிறார். அவர் அவர்களைத் தன்னுடைய மக்களாக கருதுகிறார். ஆகவே கர்த்தருடைய நீதியை முழுமையாக விசுவாசிப்பவர்கள் தம்முடைய உடன் விசுவாசிகளை கர்த்தரின் நீதியினர் போக்ஷிக்க எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும். அவர்களுடைய விசுவாசத்திலுள்ள பலவீனங்களை குறை கூறிக் கொண்டிருக்க கூடாது.
கர்த்தருடைய ஊழியர்களை நாம் நியாயம் தீர்க்க கூடாது
வசனம் 4 கூறுகிறது, “மற்றொருவனுடைய வேலைக்காரரைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.”
கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்ட கர்த்தரின் ஊழியர்களையும், அவர்களின் விசுவாசங்களையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் கர்த்தரின் ஊழியர்களை நீங்கள் குறைகூறுவதிலும் நியாயம் தீர்ப்பதிலும் ஈடுபட்டிருக்கிறீர்களா? அப்படியானால் கர்த்தர் உங்கள் விசுவாசத்தை இன்னமும் அதிகமாக கண்டிப்பார். கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்டவர்களை நீங்கள் விரும்பாததினால் அவர்களுடைய விசுவாசத்தை நீங்கள் கண்டிக்கும் போது நீங்கள் கர்த்தரின் நியாய ஆசனத்திற்கு ஏறி அவருடைய ஊழியர்களை நியாயம் தீர்க்கிறீர்கள். இது சரியானதல்ல. அதற்கு பதிலாக நீங்கள் விரும்பாத கர்த்தரின் ஊழியர்களையும் கூட நன்றியுடனே கூட நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும். மேலும் கர்த்தரின் நீதியை உயர்த்தியவாறு அவர்களுடைய வழிகாட்டுதல்களுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்.
கர்த்தர் நம்முடைய விசுவாசத்தை அங்கீகரிக்க வேண்டும். கர்த்தருடைய பாராட்டுதல்களுக்கும் பரிசுகளும் ஏற்றவிதத்தில் நம்முடைய உண்மையான விசுவாசம் இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவிற்கு நம் வாழ்வை அர்ப்பணிக்க கர்த்தர் நம்மை அனுமதித்தமையால் அவருடைய நீதிக்காக அவருக்கு நன்றி கூறுகிறோம். கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்டவர்களை நாமும் அங்கீகரிக்க வேண்டும. கர்த்தாரால் அங்கீகரிக்கப்படாதவர்களை நாமும் அங்கீகரிக்கக் கூடாது. உங்களுடைய சொந்த நீதியை உயர்த்துவதற்கு பதிலாக கர்த்தருடைய நீதியின் மீது விசுவாசம வைத்து கர்த்தரை நீங்கள் மகிமைப்படுத்துவீர்கள் என விசுவாசிக்கிறேன். உங்கள் விசுவாசத்தை கர்த்தர் அங்கீகரிப்பார் என நம்புகிறேன். அவருடைய நீதியின் மீதுள்ள உங்கள் விசுவாசத்திற்காக அப்பொழுது நீங்கள் உயர்த்தப்படுவீர்கள்.
கர்த்தரின் நீதியை அவர்களும் கூட விசுவாசித்தால்..........
“அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன். நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான்.” (ரோமர் 14:5-6).
நற்செய்தியாகிய நீர் மற்றும் நீதியின் தேவனாகிய கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டவர்கள் யூதர்களுடனே கூட அநேகர் உண்டு. அவர்களில் அநேகர் இயேசுவை விசுவாசித்தாலும் கூட இன்னமும் சட்டத்தினால் கட்டுப்பட்டுள்ளார்கள். ஆயினும அவர்கள் ஏற்கனவே கர்த்தரின் நீதியின் ஊழியர்கள் ஆவர். ஏனெனில் சட்டத்தைக் கடைப்படிக்க எதையெல்லாம் செய்தார்களோ, அவற்றையெல்லாம் கர்த்தரின் நீதியைப் பரப்புவதற்கும செய்தார்கள்.
இதனால் தான் பவுல் கூறினான், “யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப் படுத்திக் கொள்ளும் படிக்கு நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன். நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணாமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்” (1 கொரிந்தியர் 9:20-21)
கர்த்தரின் நீதியை விசுவாசிப்போரின் நம்பிக்கைகளை நாம் அலட்சியம் செய்யவும் கூடாது. தள்ளி விடவும் கூடாது. கர்த்தருடைய நற்செய்தியை விசுவாசித்து அவருக்கு அவர்கள் ஊழியம் செய்தால் அவர்களை நாம் கர்த்தரின் ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும்.
தேவனுக்காக நீதிமான்கள் வாழ்வர்
வசனங்கள் 7-9 கூறுகின்றன, “நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை. நாம் பிழைத்தாலும், கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம். கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.”
நற்செய்தியில் வெளிப்படுத்தப்பட்ட கர்த்தரின் நீதியை விசுவாசித்து எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டு புதிய வாழ்வை நாம் பெற்றுக் கொண்டதால் கிறிஸ்துவுடனே கூட நாம் வாழ்ந்து அவருடனே கூட நாம் மரிக்கிறோம். கிறிஸ்துவுக்குள்ளாக பழையவைகளெல்லாம் மறைந்து போயின. நாம் புதிதாகப் படைக்கப்பட்டவர்களானோம். கர்த்தருடைய நீதியை உண்மையாகவே விசுவாசிக்க வேண்டுமென்பதின் பொருள் நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் என்பதை அறிந்து அதனை விசுவாசிப்பதாகும். இப்படியாக கர்த்தரின் நீதியை விசுவாசிப்பாவ்களுக்கு இப்பூமியுடன் எத்தொடர்பும் இல்லை. மாறாக கர்த்தரின் ஊழியர்களாக அவர்கள் மாறினர்.
நீங்கள் கர்த்தருடைய ஊரியரானால் அவரை நீங்கள் உயரே உயர்த்தி நேசித்து அவருடைய மகிமைக்காக வாழ்ந்து உங்கள் வாழ்க்கையை இப்படியாக வாழ அனுமதித்தமைக்காக அவருக்கு நன்றி கூறுவீர்கள்.
நீங்கள் உண்மையாகவே கிறிஸ்துவிற்கு சொந்தமானவரா? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசவாசிப்பவர்கள் கிறிஸ்துவுடனே கூட சிலுவையில் அறையப்பட்டு அவருடனே கூட மீண்டும் உயிரோடெழுந்தார்கள். நாம் வாழுகிறோமோ சாகிறோமோ, கர்த்தருடைய நீதியினால் நாம் கிறிஸ்துவுடையவர்களானோம். தேவன் இரட்சிக்கப்பட்டவர்களின் தேவனானார்.
நம் உடன் விசுவாசிகளை நாம் தீர்க்கக் கூடாது
வசனங்கள் 10-12இல் எழுதப்பட்டுள்ளன, “இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே. அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.”
நம் கர்த்தராகிய கிறிஸ்து வாழுவதினால் ஒருநாள் நாம் அவருக்கு முன்பாக முழங்கால் படியிட்டு எல்லாவற்றையும் அறிக்கை செய்வோம். ஆகவே நாம் நியாயாசனத்தில் அமர்ந்து நம் சகோதரர்களையும் சகோதரிகளையும் தீர்க்காமல் கர்த்தருக்கு முன்பாக தாழ்மையுடன் நிற்க வேண்டும். கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள மற்றவரை தீர்த்து குறை கூறுவதை விட கர்த்தருடைய சித்தத்திற்காக வாழ்வது மிகமிக முக்கியமானதாகும். நம் சகோதர சகோதரிகளின் பலவீனங்களை நாம் தீர்த்து அவர்களைக் குறை கூறினால் கர்த்தருக்கு முன்பாக நாழும் கூட நம்முடைய பலவீனங்களுக்காக தீர்க்கப்படுவோம். இதனால் தான் கர்த்தரின் ஆலயத்தில் ஒன்று சேர்ந்து கர்த்தரின் சித்தத்திற்காக வாழ்வது எத்தனை நல்லது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
உண்மையான விசுவாசம் உடன் விசுவாசிகளுக்கு உற்சாகமளித்து கர்த்தரின் நீதியைப் பின்பற்றுகிறது. தவறான விசுவாசம் கர்த்ரின் நீதியைக் கைவிட்டு தன் சொந்த நீதியை மட்டுமே உருவாக்குகிறது என்பதை நீங்கள் நினைவில் வைத்திருங்கள். உங்களைக் குறித்தென்ன? விசுவாசத்தினால் கர்த்தருடைய நீதியை நீங்கள் பின்பற்றுகிறீர்களா? அல்லது உங்கள் மாமிசத்தின் சொந்த நீதியைப் பின்பற்றுகிறீர்களா?
மற்றவர்களின் விசுவாசத்தை வளர்க்க வேண்டும்
வசனம் 13-14 “இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள். ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒருபொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும்.”
கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பவர்களிடம் விசுவாசத்தின் அளவில் வேறுபாடுகள் இருப்பதினால் ஒவ்வொருவரின் விசுவாசத்தையும் வளர்க்க ஒருவருக்கொருவர் செயல்பட வேண்டும். கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்களுக்கு இது வளர்ச்சியை எடுத்து வருகிறது. உணமையாகவே நாம் கர்த்தர்ருக்காவும் அவருடைய நீதிக்காகவும் வாழ்ந்தால் இன்னமும் நாம் அனைவரும் அவருடைய மக்களாயிருப்போம்.
நீங்கள் கர்த்தருடைய நீதியை விசுவாசிக்கக் கூடிய கிறிஸ்தவராயிருந்தால் கர்த்தரின் வார்த்தையிலுள்ள உங்கள் விசுவாசத்தால் எதனை வேண்டுமானாலும் செய்யலாம். அப்படி உங்களால் செய்ய முடியாவிட்டால் அது நீங்கள் உங்களுடைய நீதியை கர்த்தரின் நீதிக்கு பதிலாக பின்பற்றுகிறீர்கள் என பொருள்படும். கர்த்தருடைய நீதிக்குள் உங்கள் சொந்த நீதியைப் பின்பற்றுவது என்பது உலகைப் பின்பற்றி தவறான விசுவாசத்துடனிருப்பது என பொருள்படும்.
கர்த்தருடைய நீதியை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டிருந்தாலும் கூட தம்முடைய சொந்த நீதியைத் தேடுபவர்கள் கர்த்தரின் எதிரிகளாகவே வாழுகின்றனர். கர்த்தருடைய நீதியை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டவர்கள் அவர்களுடைய வாழ்வு முழுவதும் அவரின் நீதியைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென கர்த்தர் விரும்புகிறார்.
அன்பினால் நடங்கள்
வசனம் 15-18 கூறுகிறது, “போஜனத்தினாலே என் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே. உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள். தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப் பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப் பட்டவனுமாயிருக்கிறான்.”
கர்த்தருடைய நீதியை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டு அதனை பரப்புவதற்காக வாழுபவர்கள் உணவின் பொருட்டு கர்த்தரின் மக்களை அழிவிற்கு எடுத்து வரமாட்டர்கள். பகிர்ந்து கொள்வதற்கான சில நேரங்களில் உணவும் பொருட்களை எடுத்து வருகிறோம். மேலும் அன்பினால் நட்புடனிருக்கிறோம். ஆனால் ஏழைகளான சகோதர சகோதரிகளை விட்டுவிட்டு செல்வமிக்கவர்களிடம மட்டுமே பகிர்ந்து கொள்வதற்காக பவுல் நம்மை எச்சரிக்கை செய்தான். ஏ¦னினல் அது நம் உடன் கிறிஸ்தவர்களை தடுக்கி விழச் செய்யும்.
கர்த்தருடைய நீதியை விசுவாசிப்போரின் மீது கர்த்தர் அருளிய ஆசீர்வாதங்கள் கர்த்தரின் நீதியைப் பின்பற்ற நம்மை அனுமதிக்கிறது. மேலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் கொடுக்கப்பட்ட நம் மன அமைதியுடன் ஒன்றாகச் சேர்ந்து தேவனுக்கு ஊழியம் செய்வது ஏதவாயிற்று. அது நமக்கு கொடுத்த மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம். ஆகவே செல்வந்தர்கள் யாவரும் தமது செல்வங்கள் கர்த்தரிடமிருந்து வந்தவை என்பதை அறிந்து மற்றவர்களுடன் அதனைப் பகிர்ந்து கொண்டு நற்செய்திக்கு ஊழியம் செய்து கர்த்தரின் நீதியை ஒன்றாகக் கூடி பின்பற்ற வேண்டும்.
மற்றவர்களை வளர்ப்பதை தேடுங்கள்
வசனம் 19-21 கூறுகிறது, “ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம். போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும். மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.”
முன்னொரு காலத்தில் வரலாற்று நகரங்களான ரோம் மற்றும் கொரிந்து ஆகிய நகரங்களில் சிலைகளுக்கு பலி காணிக்கையாக ஒருமுறைப் படைக்கப்பட்ட உணவுபொருட்களை மக்கள் விற்றனர். கர்த்தருடைய நீதியை விசுவாசிக்கும் சில விசுவாசிகள் இவற்றை வாங்கி சாப்பிடுவது வழக்கம். அப்பொழுது கர்த்தரின் சில விசுவாசிகள் இவற்றை வாங்கி சாப்பிடவது வழக்கம். அப்பொழுது கர்த்தரின் ஆலயத்தில் அவர்களின் உடன் விசுவாசிகளான பலவீனமுள்ள விசுவாசத்தை உடையவர்கள். இத்தகைய இறைச்சியை சாப்பிடுவது பாவகாரியம் என எண்ணினர். இதனால் தான் பவுல் கூறினான், “போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே” (வசனம் 20).
இதுவே திராட்சைரசத்தை அருந்துவதற்கும் பொருந்துகிறது. குடிப்பதைக் குறித்து சில விசுவாசிகள் கவலைப்படவே இல்லை. ஆனால் இத்தகைய பண்புகள் அவர்களுடைய உடன் விசுவாசிகளின விசுவாசத்தை பலவீனமாக்கி விடுகிறது எனவும், தம்முடைய குடிப் பழக்கத்தால் மற்ற விசுவாசிகளுக்கு இடையூறு உண்டாக்க வேண்டாமென பவுல் அவர்களுக்கு அறிவுரைக் கூறினான். இது நமக்கும் கூட பொருந்துகிறது. ஆகவே மற்றவர்களை வளர்க் கர்த்தருடைய நீதியைத் தேடும் வகையான கிறிஸ்தவ வாழ்வை நாம் வாழ வேண்டும். மூதாதையர்களுக்கு காணிக்கையாக படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடுவதைக் குறித்த பிரச்சனைகள் எழலாம். ஆகவே தம் விசுவாசத்தில் பலவீனமாக இருப்பவர்களை எண்ணி அத்தகைய உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.
கர்த்தருடைய நீதியை விசுவாசியுங்கள்
வசனம் 22-23 கூறுகிறது, “உனக்கு விசுவாசமிருந்தால் அது தேவனுக்குமுன்பாக உன்மட்டும் இருக்கட்டும். நல்லதென நிச்சயித்த காரியத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான். ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.”
கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பவர்களிடம் சரியான விசுவாசம் இருக்கிறது. கர்த்தருடைய நிதியை விசுவாசிப்பது கர்த்தரால் நமக்குக் கொடுக்கப்பட்ட விசுவாசமாகும். இது நமது எல்லாப் பாவங்களையும் சுத்தமாக்கியது. ஆகவே கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய நீதியை விசுவாசித்து அவருடைய நீதியின் மேலுள்ள தமது விசுவாசத்தைக் குறித்த உறுதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
கர்த்தருடைய நீதியை விசுவாசிக்காமல் கர்த்ரைப் பின்பற்றுவது பாவம் என வேத வசனங்கள் நமக்கு கூறுகின்றன. விசுவாசம் இல்லாமல் நாம் செய்யும் அனைத்தும் பாவமாகும். கர்த்தருடைய நீதியின் மேல் விசுவாசம் இல்லாமல் நாம் செய்யும் அனைத்தும பாவம் என்பதை நாம் அறிந்திருப்பதால் அவருடைய நீதியின் மீது அதிக விசுவாசமுடையவர்களாய் நாமிருக்க வேண்டும்.
வேதாகமம் கூறுகிறது, “ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான்.” கர்த்தர் எல்லா செடிகளையும் மிருகங்களையும் படைத்ததால் கர்த்தருடைய நீதியின மீதுள்ள விசுவாசத்தின் மூலம் நீங்கள் சாப்பிடும் அனைத்தும் சுத்தமானவையே.
கர்த்ருடைய நீதியை நாம் அறிந்து அதனை விசுவாசிப்பது எத்தனை முக்கியமானது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம்முடைய உடன் விசுவாசிகளாகிய மறுபடியும் பிறந்தவர்களை நாம் வளர்ந்து அவர்களுடைய விசுவாசத்தையும் மதிக்க வேண்டும்.