“அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்” (ரோமர் 15:1-2).
கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பவர்கள் தம் சொந்த நீதியைத் தேடிக் கொண்டிருக்கக் கூடாது. ஏனெனில் இயேசு கிறிஸ்துவும் கூட தன்னுடைய நீதியைத் தேடவில்லை. கர்த்தருடைய ராஜ்யத்திற்காக நீதிமான்கள் வாழுகின்றனர். மேலும் மற்றவர்களின் நன்மைக்காக நற்செய்தியைப் பரப்புகின்றனர். பலமானவர்கள் தம்மைத் தாமே பிரியப்படுத்திக் கொள்வதை விட பலவீனமானவர்களின் குறைபாடுகளைத் தாங்க வேண்டுமென பவுல் கூறினான்.
கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பவர்கள் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும். இப்படி செய்வதால் இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தினாலும் இரத்தத்தினாலும் மற்றவர்களை அவர்களின் பாவங்களிலிருந்து சுத்திகரிக்க முடியும். இதனால் தான் பாவிகளை இரட்சிக்கும் படியாக நற்செய்தியைப் பரப்பாத சோம்பேறிகளைக் கர்த்தர் வெறுக்கிறார். ஆகவே நாம் நம்முடைய சொந்த நீதியைத் தேடக் கூடாது. மாறாக கர்த்தரின் நீதியை மற்றவர்களுக்கு பரப்ப வேண்டும். விசுவாசத்தின் மூலம் பாவிகள் இரட்சிக்கப்பட முடியுமாகையால் நற்செய்தியாகிய நீர் மற்றும ஆவியை நாம் அறிவிக்க வேண்டும்.
மற்ற மனிதனின் அத்திவாரத்தில் உங்கள் விசுவாச வீட்டைக்கட்டாதீர்கள்
வசனம் 20 கூறுகிறது, “நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்.”
பவுல் பிரசங்கித்த நற்செய்தியில் வித்தியாசமான ஏதோ ஒன்று இருக்கிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை மட்டுந்தான் பரப்ப அவன் கடும் முயற்சி செய்தான். பவுல் செய்ததைப் போல் கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்களும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பரப்ப கடும் முயற்சி செய்ய வேண்டும். இது நடப்பதற்காக நமக்கு நாமே நன்மைகளைத் தேடுவதற்கு பதிலாக மற்றவர்களுக்காக நன்மைகளைத் தேட வேண்டும். மற்றவர்களுக்காக நல்லவைகளைத் தேடும் மக்கள் கிறிஸ்துவுடனே சிலுவையில் அறையப்பட்டு அவருடனே கூட உயிரோடெழுந்ததால் அவற்றைத் தேடுகிறார்கள். கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் மரித்தவர்களல்ல, அவர்கள் உயிருள்ளவர்கள்.
“அப்படியிருந்தும், சகோதரரே, புறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு, நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து புறஜாதிகளுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகும்பொருட்டு, தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்தும்படிக்கு இவைகளை நான் அதிக தைரிமாய் எழுதினேன். ஆதலால் நான் தேவனுக்குரியவைகளைக் குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மைபாராட்ட எனக்கு இடமுண்டு. புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வேறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை; இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன். மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள், காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே, நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன். உங்களிடத்தில் வருகிறதற்கு இதினாலே அநேகந்தரம் தடைபட்டேன். இப்பொழுது இந்தத் திசைகளிலே எனக்கு இடமில்லாதபடியினாலும், உங்கடளித்தில் வரும்படி அநேக வருஷமாய் எனக்கு மிகுந்த விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும், நான் ஸ்பானியா தேசத்திற்குப் பிரயாணம்பண்ணுகையில் உங்களிடத்தில் வந்து, உங்களைக் கண்டுகொள்ளவும், உங்களிடத்தில் சற்றுத் திருப்தியடைந்தபின்பு, அவ்விடத்திற்கு உங்களால் வழிவிட்டனுப்பப்படவும், எனக்குச் சமயங் கிடைக்குமென்று நம்பியிருக்கிறேன். இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக நான் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருக்கிறேன். மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள்சகாயம் செய்ய விருப்பங்கொண்டிருக்கிறார்கள்; இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயுமிருக்கிறார்கள். எப்படியென்றால், புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே. இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப் போவேன். நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன்” (ரோமர் 15:22-29).
கர்த்தரின் ஆலயத்தை மேற்பார்வை செய்பவனாயும் பிரசங்கிப்பவனாயும் பவுல் விளங்கினான்
எருசலேம் ஆலயத்திலுள்ள கிறிஸ்தவர்களுக்கு ஊழியம் செய்ய பவுல் சென்று கொண்டிருக்கையில் வழியிலுள்ள மக்கதேனியா மற்றும் அசாயா ஆகிய நாட்களில் கிட்டிய காணிக்கைகளை அக்கிறிஸ்தவர்களுக்கு கொடுத்தான். புற ஜாதியார்கள் யூதர்களுடன் ஆவிக்குரிய காரியங்களைப் பகிர்ந்து கொண்டால் பொருள் காரியங்களிலும் கூட அவர்களுக்கு ஊழியம் செய்வது அவர்களின் கடமையாகுமென பவுல் கூறினான். எருசலேம் ஆலயத்தில் அப்போது வாழ்ந்த பரிசுத்த வான்கள் துன்பங்களுக்கு நடுவே வாழ்ந்தனர். அவர்களால் தம்முடைய பொருள் குறைபாடுகளிலிருந்து விடுதலையாகவே முடியிவல்லை. இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தமையால் பெரிதான துன்புறுத்தல்களைச் சந்தித்த எருசலேம் ஆலயமானது புற ஜாதியார்களான சகோதரர்களாலும் சகோதரிகளாலும் பெரிதும் ஆறுதலடைந்தார்கள்.
இன்றைய காலத்திலும் சரி அக்காலத்திலும் சரி கர்த்தருடைய ஆலயங்கள் தம்முடைய செல்வங்களைத் தாமே அனுபவிப்பதற்கு பதிலாக தேவைபடுபவர்களுக்கு கொடுப்பதை பழக்கமாக்கிக் கொண்டனர். ஆவியால் நிரம்பிய விசுவாசிகளால் தமக்குத்தாமே வாழ முடியாது. ஏன்? ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் வாசம் செய்கிறார். மறுபடியும் பிறந்தவர்களாகிய அவர்களை அவர்களுக்குள் வாழும் பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துகிறார்.
எருசலேம் ஆலயத்தை புற ஜாதியாரிகள் ஆலயங்கள் ஆதரித்தது மிகவும் ஆச்சரியமானதாகும். இது பரிசுத்த ஆவியானவரின் செயலாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்காக எருசலேம் ஆலயத்தை பரிசுத்த ஆவியானவர் ஆதரித்தார் இதனை தனிப்பட்டவர்களுக்காக கொடுக்காமல் பொருளாதரமாக கொடுத்தார். அக்காலத்தில் இஸ்ரவேலில் அநேகர் கிறிஸ்துவைத் தமது இரட்சித்ததாக விசுவாசித்தமையால் அநேகர் அடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சில நேரங்களில் கொல்லவும் பட்டனர்.
தொலைகாட்சி செய்திப் படங்களில் பல்வேறு இரத்த சாட்சிகளின மிஞ்சியிருக்கும் உடல் பாகங்களையும் மலைக் குகைகளின் அவர்கள் மறைந்திருந்த இடங்களையும் நாம் காணலாம். அக்காலத்தில் எருசலேம் ஆலயம் இதனைத் தான் அனுபவித்தது. கர்த்தரின் ஆலயங்கள் துன்பத்தை அனுபவிக்கும போது நம் உதவிக் கரத்தை நீட்ட வேண்டும்.
ஆதிகால ஆலயங்கள் ஒன்றுக்கொன்று உதவிக் கொண்டதன் முக்கியத்தை நாம் தள்ளிவிடக் கூடாது. ஆனால் இந்த சமயத்தில் விசுவாசிகள் ஒளிந்து கொண்டும் துன்பங்களிலிருந்து ஓடிக் கொண்டும் வாழ வேண்டியிருந்தது. இந்த சூழ்நிலைகளில் பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே பகிர்ந்து கொள்வதை சாத்தியமாக்க முடிந்தது. எருசலேம் ஆலயம் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருந்ததால் அதற்கு உதவுவது மற்ற ஆலயங்களின் சுபாவமாயிருந்தது. இது பரிசுத்த ஆவியானவரின் செய்கை ஆதலால் இது பொருத்தமானதாயும் அழகானதாயும் இருந்தது.
நீங்கள் கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்களாதலால் இத்தகை வேலைகளில் நீங்கள் பங்கு பெற வேண்டும். புது வாழ்வு இயக்கத்தின் உறுப்பினர்களான மற்ற சபைகள் தேவையான பணத்தைச் சேகரித்து நற்செய்தியை உலகம் முழுவதும் பரப்புவதற்கு உதவி செய்கின்றன. அவர்கள் சமாளிக்க வேண்டிய எத்தனையோ வகையான பணப் பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் ஆத்துமாக்களை இரட்சிப்பதற்கு நற்செய்தியைப் பரப்ப அவர்கள் ஆவலாயுள்ளனர்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிக்க கூடாரம் செய்பவனாக பவுல் வேலைச் செய்தான். அவன் ஏற்படுத்திய ஆலயத்தை பொறுப்பெடத்து நடத்தும் ஒருவனைக் கண்ட போது அந்த ஆலயத்தை அவனிடம் கொடுத்துவிட்டு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக இன்னொரு பக்கத்திற்கு சென்று விடுவான் இவற்றின்டே தன்னுடைய கூடாரம் செய்யும் தொழிலில் கிட்டும் வருமானத்தில் வாழ்ந்தான்.
நீங்கள் உங்களுக்காகவே வாழாததைப் போலவே நமது ஊழியர்கள் தமக்காக வாழ்வதில்லை. தம்மிடம் பரிசுத்த ஆவியானவர் உள்ளவர்கள் கர்த்தருடைய செயல்களுக்காக தம்மை அர்ப்பணித்துள்ளனர். அதாவது இழந்து போன ஆத்துமாக்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிக்கிறார்கள். எங்கள் இயக்கத்திலுள்ள ஊழியர்களும் சாதாரண உறுப்பினர்களும் கூடாரம் செய்யும் ஊழியத்தின் மூலமாக நற்செய்திக்கு பணியாற்றுகிறார்கள். இங்கு அவர்கள் தமக்கு உதவியாக இருக்கும் பொருட்டு தம்முடைய சொந்த வேலைகளிலும் இருக்கிறார்கள். அதே சமயம் நற்செய்தியைப் பரப்ப பொருளாதார மற்றும சரீரப்படியான உதவிகளையும் அவர்கள் செய்கின்றனர்.
இதனைப் போன்று பவுலின் ஊழியத்திற்கும் ஏன்றைய கர்த்தரின் ஆலயத்திற்கும் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதை நாம காணலாம். நமக்குள் ஒரே விதமான மனங்கள் இருக்கின்றன. மேலும் பரிசுத்த ஆவியானவரை பிரியப்படுத்தும் வாழ்வை வாழுகிறோம். கடும் குளிரடிக்கும் போது நம் மனதில் என்ன இருக்கிறது? நாம் நிச்சயமாக நம் உடன் கிறிஸ்தவர்களையும் கர்த்தரின் ஊழியர்களையும் எண்ணிப் பார்த்து அவர்களும் கூட குளிரால் கஷ்டப்படுகிறார்களா என நினைக்கிறோம். மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களான நாம் ஒருவருக்கொருவர் கரிசனையாய் இருக்கிறோம். வேதாகமத்திலுள்ள நீதிகளுக்கெல்லாம் ஒன்றுடன ஒன்று தேவைப்படுவதுடன் ஒன்றாக கர்த்தரின் நீதிக்குப் பணியாற்றுகின்றன. இந்த விசுவாச வாழ்வானது நீதிமான்களின் உண்மையான வாழ்க்கையாகும்.
இத்தகைய மன நிலையுடன் நாம் வாழ்ந்துள்ளோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை முதன்முதலாக பிரசங்கிக்கத் தொடங்கிய போது நம்மிடம் எதுவுமே இருந்காததால் ஒன்றுமில்லா நிலையில் இருந்து தொடங்க வேண்டியிருந்தது. நாம் பணததிற்காகக மிகவும் அவதிப்பட்டோம். ஆலயக் கட்டிடத்திற்கு வாடகைக கட்டுவதற்கு சில நூறு டாலர்களை வைத்துக் கொண்டு மிகவும் கடினமாக உழைத்தோம். ஆயினும் கூட இந்நாடு முழுவதும் நம் புத்தக ஊழியத்தைச் செய்ய தொடர்ந்து நம்மை அர்ப்பணித்தோம்.
நாம் பணக் கஷ்டங்களை சந்தித்த போது அவற்றை நமக்காக சரி செய்தது கர்த்தரேயாகும். நம் ஊழியத்தின் முதற்கனிகளைப் பார்க்க நம்மை அனுமதித்தார். நமக்கு முன் எத்தகைய கஷ்டங்கள் இருந்தாலும் பரிசுத்த ஆவியானவர் நம்மிருதயங்களில் வாழ்வதால் நற்செய்தியைப் பரப்பும் நம் ஆவல் நம்மிருதயங்களில் எரிந்து கொண்டிருக்கிறது. வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள கர்த்தரின் ஆலயங்களும் நீதிமான்களும் செய்ததைப் போல் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிப்பதின் மூலம் கர்த்தரின் அன்பை எல்லா இழந்து போன ஆத்துமாக்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
ஆதி சபையின் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் கவனித்துக் கொண்டதை நாம் காணலாம். நாமும் கூட அப்படித் தான் செய்கிறோம். பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதல் இல்லாமல் இது சாத்தியமாகாது. மறுபடியும் பிறந்தவர்களின் ஊழியத்தின் மூலமாக கர்த்தரின் நீதியை பரிசுத்த ஆவியானவர் முழு உலகிற்கும் பரப்பி வருகிறார். மேலும் அவர் அதனைத் தொடர்ந்து செய்வார்.
நாட்களின் முடிவை நாம் சந்தித்தாலும் கூட
கடைசி காலத்தில் நாம் வாழுவதாக மக்கள் கூறுகின்றனர். அப்பொழுது வேதாகமத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட அனைத்து கஷ்டங்களும் நிறைவேறும்.
கடைசி நாட்களில் பேரழிவுகளும் இயற்கைச் சீற்றங்களும் பூமியை விழுங்கும். விசுவாசிகளாகிய நாம், கர்த்தரின் நீதியின் மீதுள்ள நமது விசுவாசத்தினால் மிக உறுதியாக நின்று, இன்னமும் தீவிரமாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிப்போம். கர்த்தரின் நீதியை விசுவாசிப்பவர்களுக்கு, கடைசி காலத்தில் ஒருவரை ஒருவர் கவணித்துக் கொள்ளும் இருதயங்களும் இருக்கவேண்டும். உலகின் இருதயங்கள் கடினமாகியதைப் போல் நம்முடைய சொந்த இருதயங்களும் கூட இருகிப் போகலாம், ஆனால் முடிவிலே இவ்வுலகை நம்மால் வெற்றிக் கொள்ளமுடியும், ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருக்கிறார். சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும் கூட கர்த்தரின் ஆலயத்தையும் ஆத்துமாக்களையும் நாம் பொறுப்பெடுத்துக் கொள்ளவேண்டும். நம்முடைய உதவித் தேவைப்படுகிறவர்களை நாம் கவணிக்க வேண்டும், அவர்களை நேசிக்கவும் வேண்டும், நம் உடன் சகோதரர்களையும் சகோதரிகளையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும், மேலும் முடிவு வரை நற்செய்தியைப் பரப்பவேண்டும்.
நம்முடைய சொந்த நீதியை தேடிக்கொண்டிருப்பதற்கு பதிலாக, மற்றவர்களின் இரட்சிப்பிற்காக நம்மை அர்ப்பணிக்கவேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் கேள்விப்படாத எண்ணிலடங்காத ஆத்துமாக்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அநேக நாடுகளிலுள்ள மக்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து கேள்விப் படவேயில்லை, கர்த்தரின் நீதியை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு கிட்டவில்லை. போர்ச்சேவகர்களைப் போன்ற மனநிலையை நாம் கொண்டிருக்கவேண்டும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் நாடுகளையும் இழந்துபோன ஆத்துமாக்களையும் வெல்ல போரிட வேண்டும். யாரோ பலத்காரம் செய்ததால் இந்த இயக்கமானது காலத்தின் கட்டாயத்தால் உருவாகவில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்யப்பெற்றவர்களாகிய நம்மிருதயத்தில் இயற்கையாகவே இது வருகிறது.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உலகின் முடிவுகளில் எல்லாம் பரப்புவதற்கான கர்த்தருடைய பெரிதான கட்டளையானது இன்னமும் கூட நம்மிருதயங்களில் செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. நான் உங்களுக்கு எதனைக் கூற விரும்புகிறேன் என்றால், இவ்வுலகமானது அதிகக் கடிணமாகும்போது, தன்னுடைய பரிசுத்த ஆவியானவரை கர்த்தர் இன்னமும் அதிகமாக ஊற்றுவார். உண்மையைக் குறித்த தாகமுள்ளவர்களுக்கு அச்சிடப்பட்ட புத்தகங்களின் மூலமாகவும், எலக்ட்ரானிக் புத்தகங்கள் மூலமாகவும், இலவசமாக நாம் கொடுத்து வருகிறோம். இண்டர்நெட்டின் மூலமாக உலகம் முழுவதும் நம் ஊழியத்தை தொடர்ந்து செய்வோம்.
நாம் அமெரிக்காவில் போன்றோ அல்லது ஐரோப்பியர்களைப் போன்றோ செல்வந்தர்களாக இல்லாவிட்டாலும் கூட, கர்த்தரின் நீதியை உள்ளடக்கிய நற்செய்தியை நம்மால் கொடுக்கமுடியும். பேதுருவைப் போன்ற மனநிலையில் நாமிருக்கிறோம், அவன் கூறினான், “அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி” (அப்போஸ்தலர் 3:6).
அவர்கள் அறிந்திராத, கர்த்தரின் நீதியை நிறைவேற்றிய நற்செய்தியை இலவசமாக அவர்களுக்கு கொடுக்க முடியும். உலகப்படியாக அளக்கும் போது நாம் அவர்களுடன் ஒப்பிடக்கூடாதவர்களாய் இருந்தாலும் கூட, கர்த்தருடைய நீதியை உள்ளடக்கியுள்ள நற்செய்தியைக் கொடுக்கக் கூடிய கர்த்தருடைய ஊழியர்களாய் நாம் இருக்கிறோம். நம்முடைய ஊழியத்தின் மூலம் இந்த நற்செய்தியை சந்திப்பவர்கள், இந்த நற்செய்தியை அறிந்து அதனை விசுவாசித்து அதனால் பெரிதும் ஆசீர்வதிக்கப் படுவர்.
இது இண்டர்நெட்டின் காலமாகும், இதன் மூலமாக முழு உலகையும் திறக்கக்கூடிய ஒருவழியை கர்த்தர் நமக்குத் தந்தார். கர்த்தரின் நீதியை நிறைவேற்றிய நற்செய்தியை நாம் கொடுக்கும்போது மக்கள் எத்தனை மகிழ்ச்சியையும் நன்றியறிதலையும் உடையவர்களாய் இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டோம். கர்த்தருடைய நீதியை இழந்து போனவர்களுக்கு நாம் பிரசங்கிக்கும்போது உலகம் இருண்டு போனாலும்கூட அதிக நன்றியுடையவர்களாயும் வல்லமை மிக்கவர்களாயும் நாம் மாறுவோம். உலகம் இப்படியே முடிந்து போகுமா அல்லது அவருடைய நற்செய்தியைப் பரப்புவதற்கு கர்த்தர் நமக்கு அதிக வாய்ப்புகளைக் கொடுப்பாரா? இதனைக் குறித்து தான் நாம் ஜெபிக்கவும் நினைக்கவும் வேண்டும். பரிசுத்த ஆவியானவரால் அனைத்தும் சிறப்பாக நிறைவேற்றப்படும்.
நானும் கூட சுயநலமியாகத்தான் இருந்தேன், நான் மறுபடியும் பிறப்பதற்கு முன்பாக என் மாமிசத்தை மட்டுமே கவனித்தேன். நான் மட்டுமில்லை, நாமனைவரும் இப்படித்தானிருந்தோம். மாமிசத்தின் உல்லாசத்திற்காக மட்டுமே வாழுபவர்கள் தம்மிடம் அன்பிருப்பதாக கூறுவர், ஆனால் உண்மையாகப் பார்த்தால் அவர்களால் மற்றவர்களை நேசிக்க முடியாது. பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் அவர் இல்லாதவர்களுக்குமான வேறுபாடு இதுவே. பாவிகளால் தமக்காக மட்டுமே வாழமுடியும், ஆனால் பரிசுத்த ஆவியானவரைத் தமக்குள் பெற்றுக்கொண்டவர்களிடம் மற்றவர்களுக்காக வாழும் வல்லமையும் இருக்கிறது, மேலும் மற்றவர்களுக்காகத்தான் அவர்கள் வாழுகின்றனர். மற்ற ஆத்துமாக்களுக்காக வாழும் வல்லமையை திரியேகர் தனது விசுவாசிகளுக்கு கொடுக்கிறார். கர்த்தர் அவர்களுடைய இருதயத்தில் வாழ்ந்து அவர்களை வழிநடத்துவதால், அவருடைய நீதியின் செயல்களை அவர்களால் செய்யமுடியும்.
இவ்வுலகில் எத்தனை ஆலயங்கள் இருக்கின்றன என்பது பொருட்டேயல்ல, ஏனெனில் ஏறத்தாழ எல்லா ஆலயங்களும் உலகப்பிரகாரமான வியாபார நிறுவனங்களாகிவிட்டன. தம்முடைய ஆடம்பரமான ஆலயங்களைக் கட்டுவதற்கு பெருந்தொகையை செலவு செய்கின்றனர், அவர்களிடம் கோடிக்கணக்கான டாலர்கள் செலவழிப்பதற்காக இருக்கிறது, ஆனாலும்கூட, தேவைப்பட்டால், அச்செல்வத்தின் ஒரு சிறுபகுதி மட்டுமே ஊழியங்களுக்காக செலவிடப்படுகிறது. இவ்வுலகிலிருந்து அதிகமதிகமாக செல்வம் சேர்ப்பதற்கு அவர்களிடம் பைத்தியம் பிடித்துள்ளது, பாவத்திலிருந்து ஆத்துமாக்களை இரட்சிக்கும் உண்மையான ஊழியத்தை விட்டுவிட்டு, அதனை இரண்டாவதாகவும் முக்கியமில்லாததாகவும் மாற்றிவிட்டார்கள். அது கர்த்தரின் ஒரு ஆலயத்தின் ஒரு பாகமாக இருக்கமுடியாது, ஏனெனில் அவருடைய ஆலயம் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றுவதில்லை.
உண்மையான கர்த்தருடைய ஆலயம் தன்னுடைய ஆதாரங்களையெல்லாம், நேர்மையுடனும், வெளிப்படையாகவும் இழந்து போன ஆத்துமாக்களை இரட்சிப்பதற்காக உபயோகிக்கிறது. வேதாகமம் கூறுகிறது, “இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” (மத்தேயு 5:7). இவ்வுலகிலுள்ள ஆத்துமாக்களைக் கவணித்து பாவவிடுதலையை நோக்கி வழிநடத்தும் இருதயத்தைக் கர்த்தர் கொடுத்துள்ளார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது இப்போது புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன, அவை இப்போது 40 இற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 60 தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன, அவை ஒவ்வொன்றும், ஆவிக்குரிய மரணத்தை நோக்கியிருப்பவர்களுக்கு கர்த்தரின் நீதியை சாட்சியாக அறிவிக்கிறது.
இந்த உலகம் மகா உபத்திரவத்தினால் முழுங்கப்பட்டு, அதன் முடிவிற்கு வருவதற்கு முன்னால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அநேகரிடம் கூறி அவர்களை இரட்சிப்பதினாலும், நாம் மிகவும் நேர்மையுடன் ஜெபிப்பதினாலும் கர்த்தர் எத்தனையாய் பிரியப்படுவார்? நாம் மனம் தளர்ந்து போக வேண்டாம், முடிவுவரை விசுவாசமுடையவர்களாய் இருப்போமாக.
கடந்த காலத்தில், ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலம் ஏழைகளால் பிழைத்திருக்க முடிந்தது. ஆனால் பலவான்கள் மட்டுமே பிழைத்திருக்கக் கூடிய எல்லையில்லாத போட்டி நிலவும் காலத்திற்குள் நாம் பிரவேசித்துள்ளோம். இந்த தலைமுறையைப் பார்க்கும் போதெல்லாம், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இன்னமும் கேட்டிராதவர்களுக்கு அதனைப் பரப்பும் கடமை இருக்கிறது என உதவுகிறோம். இவ்வுலகில் தம்முடைய முடிவில்லாத பாடுகளால் களைப்படைந்து சோர்ந்து போனவர்களுக்கு சமாதானத்தை எடுத்துவரும் நற்செய்தியை அறிவிப்பதற்கான இருதயம் நம்மிடம் இருக்கிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை அவர்களுக்கு அறிவிப்போமாக. கர்த்தருடைய நீதியின் மீதுள்ள நமது விசுவாசங்களினால் கிறிஸ்துவிற்காக நம்மால் வாழமுடியும், ஏனெனில் அவர் நம் எல்லாப் பாவங்களையும் அகற்றினார்.
கர்த்தருடைய நீதியை உள்ளடக்கியுள்ள நற்செய்தியானது இப்போது வேகமாக பத்து மடங்காகவும், நூறுமடங்காகவும், ஆயிரம் மடங்காகவும், இலட்சம் மடங்காகவும் பரவும். நாம் அநேக காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கும், ஆகவே நாம் விசுவாசத்துடனிருப்போமாக. தாலந்துகளை உடையவர்கள் தம் தாலந்துகளை தேவனுக்கு ஒப்புவித்து ஒவ்வொரு ஆத்துமாவிற்கும் நற்செய்தியைப் பரப்பவேண்டும். கர்த்தரால் கொடுக்கப்பட்ட தாலந்துகளுக்கு ஏற்றவாறு நற்செய்தியைப் பரப்ப நாமனைவரும் பணியாற்றவேண்டும். நமக்குள் எவ்வித வல்லமையும் இல்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் கூறுவதைப்போல் கர்த்தரிடம் நாம் ஜெபித்தால், நமது விருப்பங்களை எல்லாம் கர்த்தர் அருளுவார் என விசுவாசிக்கிறேன்.
கிறிஸ்து நமக்குத் தன்னுடைய உண்மையான அன்பைத் தந்தார், அது பாவிகளை நேசிக்கிறது. கர்த்தருடைய நீதியின் மீதுள்ள நமது விசுவாசத்தால் இவ்வுலகத்தின் பாவங்களிலிருந்து நாம் இரட்சிக்கப்பட்டோம். இவ்வுலகில் வாழுவது இன்னமும் கடினமாக மாறினாலும், இதன் பொருட்டே நாம் நற்செய்தியைப் பரப்புவதற்கு மிகவும் கடினமாய் உழைக்க வேண்டும். இதுவரை நற்செய்தியைக் கேட்டிராதவர்களுக்கு அதனைக் கூறும் கடமை நம்மிடம் இருக்கிறது.
கர்த்தர் கூறினார், “பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன்” (ரோமர் 11:4). நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி தேவைப்படும் அநேகர் இவ்வுலகில் இருக்கின்றனர். ஆத்துமாக்களோ, போதகர்களோ, இறையியலாளர்களோ, அல்லது சாதாரண மனிதர்களோ, இவர்கள் யாவரும் உயர்வடைகிறார்கள்.
நற்செய்திக்காக நம்மால் பணியாற்றமுடிவது கிறிஸ்துவின் அன்பினால் ஆகும். நாம் செய்வதற்கு இன்னமும் எத்தனையோ உள்ளன, சிலசமயங்களில் அதனில் முழுகிப்போகிறோம். நாம் அதிகமதிகமாய் துன்பங்களை அனுபவிக்கும்போது, அதிக விசுவாசமுடையவர்களாய், இன்னமும் தீவிரமாக நற்செய்தியைப் பரப்பவேண்டும். இது கிறிஸ்துவின் இருதயமாகும். நீதிமானாகிய நீங்கள், உங்களை மட்டுமே சிந்திக்கமாட்டீர்கள் என ஜெபிக்கெறேன். நீங்கள் உங்களைக் குறித்து மட்டுமே சிந்தித்தால், விசுவாசத்திற்கோ அல்லது ஜெபத்திற்கோ தேவையில்லை, ஏனெனில் நீங்கள் உங்களுக்காக மட்டுமே வாழ முயற்சி செய்கிறீர்கள், இந்த இழந்துபோன ஆத்துமாக்களுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் உங்களுக்கு நீங்களே ஆதரவாக இருக்க, உங்கள் சம்பளத்தையும் மற்ற ஆத்துமாக்களையும் சம்பாதிக்க விரும்பினால், என்ன நடக்கும்? நீங்கள் பலவீணர்களாக இருப்பதினாலே கர்த்தரிடம் நீங்கள் ஜெபிப்பீர்கள்.
இப்படித்தான் நமது விசுவாசமும் ஜெபமும் வளருகிறது. இதனால் தான் கர்த்தர் கூறுகிறார், “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம் பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு” (நீதிமொழிகள் 11:24).
மற்றவர்களுக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பரப்புவதே கிறிஸ்தவர்களின் அதிக நீதியான வாழ்க்கையாகும். மக்களைக் கிறிஸ்துவை நோக்கி வழிநடத்தும் உண்மை நற்செய்தியை பரப்புவதே ஆவிக்குரிய வாழ்வாகும். நம்முடைய அயலாரையும் அவர்களுடைய ஆத்துமாக்களையும் கவணிப்போமாக. கர்த்தருடைய நீதியின் ஆசீர்வாதங்கள் உங்களுடன் இருப்பதாக.
அல்லேலூயா! நம் தேவனைத் துதிப்போமாக! அவருடைய நீதியையும் நற்செயல்களையும் அனுமதித்தமைக்காகவும், அந்தகார வல்லமையிடமிருந்து நம்மை விடுதலைச் செய்தமைக்காகவும் குமாரரின் ராஜ்யத்திற்கு நம்மை வழிநடத்துவதற்காகவும் அவருக்கு நன்றி கூறுகிறேன்.