• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 10 : வெளிப்படுத்தின விசேஷம் (வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 1-2] ஏழு காலங்களைக் குறித்து நாமறிந்து கொள்ளவேண்டும் (வெளி 1:1-20)

(வெளி 1:1-20)
 
இந்த இருண்ட காலத்தில் நமக்கொரு நம்பிக்கையை அளித்த தேவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். வெளிப்படுத்தின விசேஷத்தில் எழுதப்பட்டுள்ளபடி அனைத்தும் நடக்கும் என்பது நமது நம்பிக்கை, தீர்க்கதரிசன வார்த்தைகள் எல்லாம் நிறைவேறும் என்று விசுவாசத்தில் காத்திருக்கவேண்டும்.
வெளிப்படுத்தின விசேஷத்தில் அநேக காரியங்கள் எழுதப்பட்டுள்ளன. அறிவு படைத்தவர்களால் எழுதப்பட்ட அநேக தத்துவங்களும் விளக்கங்களும் இருந்தாலும், முற்றிலும் வேதாகமத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தைக் காண்பது மிகவும் கடினமாக ஒன்றாயிருக்கிறது. கர்த்தரின் கிருபையினால் மட்டுமே, வெளிப்படுத்தலின் வார்த்தையை படிப்பதிலும் ஆராய்வதிலும் கணக்கிலடங்காத நேரத்தை செலவிட்ட என்னால் இப்புத்தகத்தை எழுத முடிந்தது. நான் இதனைக் குறித்து இப்போது இப்போது பேசிக் கொண்டிருக்கும் போதும் கூட, என்னிருதயம் வெளிப்படுத்தலின் சத்தியத்தினால் நிறைந்துள்ளது. இந்நூலிற்காக என்னுடைய விளக்கங்களையும் பிரசங்கங்களையும் தயார் செய்து கொண்டிருக்கும் வேளையில் பரிசுத்த ஆவியானவர் என்னை நிரப்பினார்.
பரலோகத்தைக் குறித்த நம்பிக்கையும் ஆயிரம் வருட அரசாட்சியின் மகிமையும் என்னிருதயத்தை அளவுக்கதிகமாக நிறைத்தது, எந்த ஆச்சர்யத்தையும் அளிக்காது. நம் தேவனுக்காக பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக மரிப்பது எத்தனை மகிமைப் படுத்துவதாக இருக்கும் எனவும் அறிந்துகொண்டேன். கர்த்தர் எனக்கு காண்பித்த ஞானத்தின் வார்த்தைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் அதனை நீங்கள் புரிந்துகொள்ள உதவவும் இப்போது தயாராக இருக்கிறேன்.
வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்து நான் எழுதிக்கொண்டிருக்கும்போது கர்த்தரின் மகிமை என்னிருதயத்தை வெகுவாக நிரப்புகிறது. வெளிப்படையாக கூறினால், வெளிப்படுத்தலின் வார்த்தை எத்தனை பெரிதானது என நான் அறிந்துகொள்ளவேயில்லை.
இயேசுகிறிஸ்துவின் உலகத்தை கர்த்தர் யோவானுக்கு காட்டினார். “தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும்” என்ற தொடக்க வார்த்தைகளின் பொருள் என்ன? வெளிப்படுத்தல் என்ற சொல்லிற்கான அகராதியின் வரையறை என்னவெனில் தெய்வீக உண்மையை அறிவிக்கும் அல்லது தெரியப்படுத்தும் செய்கை என்பதாகும். இயேசுகிறிஸ்துவின் வெளிப்படுத்தல் என்பது எதிர்காலத்தில் இயேசுகிறிஸ்துவுக்குள் என்ன நடக்கும் என்பதை வெளிப்படுத்துவது என்று பொருள்படும். வேறு வகையாக கூறுவதானால், இயேசுகிறிஸ்துவின் ஊழியனான யோவானுக்கு, இறுதி காலத்தில் நடக்கப் போகும் நிகழ்வுகளை கர்த்தர் காண்பித்தார்.
வெளிப்படுத்தலின் வார்த்தையைக் குறித்து பேசுவதற்கு முன்பாக ஒன்றைக் குறித்து நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டும் - அதாவது வெளிப்படுத்தின விசேஷத்தின் தீர்க்க தரிசன வார்த்தைகள் வெறும் அடையாளமா அல்லது உண்மையானதா என்பதைக் குறித்து தெளிவுபடுத்தவேண்டும். வெளிப்படுத்தின விசேஷத்தில் எழுதப்பட்வைகளெல்லாம் உண்மையானவைகள், இவ்வுலகத்தில் நடக்கப்போகிறவைகளை விளக்கமாக, யோவான் கண்ட கனவின் மூலமாக கர்த்தர் நமக்கு வெளிப்படுத்தினார்.
வெளிப்படுத்தின விசேஷத்தின் தீர்க்கதரிசனங்களைக் குறித்து அநேக ஞானிகள் வெவ்வேறு கொள்கைகளையும் விளக்கங்களையும் வெளியிட்டிருப்பது உண்மையே. வெளிப்படுத்தலின் உண்மையின் திரையை அகற்ற அவர்கள் தம் திறமைகளையெல்லாம் உபயோகப்படுத்தி அதிக முயற்சிகளைச் செய்துள்ளார்கள் என்பதும் உண்மையே. ஆனால் அத்தகைய விளக்கங்கள் கிறிஸ்தவத்திற்கு அதிக தீமையை எடுத்து வந்தன, ஏனெனில் அவை வேதாகமத்தின் உண்மையைக் கூறாமல், அதிக குழப்பத்தை எடுத்து வந்தன. உதாரணமாக, அநேக ஞானிகள் “ஆயிரவருட அரசாட்சி இல்லை” என்றழைக்கப்படும் தத்துவத்தை ஆதரித்தனர் - அதாவது, ஆயிரவருட அரசாட்சி என்பது இல்லை என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் அவை வேதாகம உண்மையிலிருந்து மிக அதிக தொலைவில் உள்ளன.
 வெளி 20 ஆம் அதிகாரத்தில் ஆயிரவருட அரசாட்சி தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது, இங்கு பரிசுத்தவான்கள் அரசாளுவது மட்டுமின்றி, கிறிஸ்துவுடனே கூட ஆயிரம் வருடங்கள் வாழ்ந்திருப்பர். மறுபுறம், 21 ஆம் அதிகாரம், இந்த ஆயிர வருட அரசாட்சிக்கு பிறகு, பரிசுத்தவான்கள் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சுதந்தரித்து கிறிஸ்துவுடனே கூட நித்தியமாக அரசாள்வர். இவை எல்லாம் உண்மையே. வேதாகமம் கூறுகிறது, இந்த உண்மைகளெல்லாம் அடையாளமாக விசுவாசிகளின் இருதயங்களில் நிறைவேற்றப்படாமல், வரலாற்றில் உண்மையாகவே நிறைவேற்றப்படும்.
ஆனால் இந்நாளின் கிறிஸ்தவர்களைப் பார்த்தால், அநேகர் ஆயிரவருட அரசாட்சியைக் குறித்து சிறிதளவு நம்பிக்கை உடையவர்களாய் இருப்பது போன்றே தோன்றுகிறது, அவர்கள் கூறுவது உண்மையை மறுக்கவில்லையா, இதன் பொருள் விசுவாசிகளுக்கு கர்த்தர் அளித்த உறுதிமொழி வெற்று வார்த்தைகள் மட்டுமே என்று பொருள்படாதா? ஆயிரவருட அரசாட்சியோ, புதியவானம் மற்றும் புதிய பூமி ஆகியவை விசுவாசிகளுக்காக காத்திருக்கவில்லையானால், இயேசுவை தம் இரட்சகர் என்று விசுவாசித்து இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளின் நம்பிக்கை பயனற்றதாகிவிடும்.
அதைப் போன்றே, அநேக கொள்கையியலாளர்களும் போதகர்களும், வெளிப்படுத்தின விசேஷத்தில் தீர்க்கதரிசனம் கூறப்பட்டுள்ள 666 என்ற குறியீடு வெறும் அடையாளமே என்று கூறுகின்றனர். ஆனால் தவறு செய்யவேண்டாம்: இத்தீர்க்கதரிசனம் நிறைவேறும் நாள் வரும்போது, இத்தகைய தவறான கருத்துக்களை விசுவாசித்த துரதிருஷ்டமான ஆத்துமாக்களின் நம்பிக்கை மணல் வீட்டைப் போல் சரிந்துபோகும்.
இயேசுவை விசுவாசித்து உண்மை வார்த்தையை விசுவாசிக்காதவர்களைக் குறித்து வேதாகமத்தில் வெளிப்படுத்தப் பட்டுள்ளது, அவர்கள் அவிசுவாசிகளாகவே கர்த்தரால் கருதப்படுவர். அவர்களுக்கு கர்த்தர் கொடுத்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தெரியாது என்பதுடன், பரிசுத்த ஆவியானவர் கூட அவர்கள் இருதயங்களில் சஞ்சரிப்பதில்லை. அதனால் தான் கர்த்தர் நமக்கு உறுதிமொழி கூறிய ஆயிரவருட அரசாட்சி மற்றும் புதியவானம் புதியபூமியைக் குறித்த நம்பிக்கையும் அவர்கள் இருதயங்களில் இருப்பதில்லை. அவர்கள் இயேசுவை விசுவாசித்தபோதிலும், எழுதப்பட்ட சத்தியமாகிய கர்த்தரின் வார்த்தைக்கேற்ப அவர்கள் விசுவாசிக்கவில்லை. வெளிப்படுத்தின விசேஷத்தில் எழுதப்பட்டவைகள் கர்த்தரின் வார்த்தைகளாகும், இங்கு உலகில் வெகு சீக்கிரமாக நிச்சயமாக நடக்கப்போகிறவகளைக் குறித்து நமக்கு காண்பிக்கிறது.
வெளிப்படுத்தின விசேஷத்தின் 2 மற்றும் 3 ஆம் அதிகாரங்களில் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் புத்திமதி கூறும் வார்த்தைகளாகும். இங்கு ஏழுசபைகளுக்குமான கர்த்தரின் கட்டளைகளையும், கண்டிப்புகளையும் காணலாம். குறிப்பாக, தம் விசுவாசத்தையும், சோதனைகளையும் மேற்கொள்பவர்களுக்கு ஜீவகிரிடத்தை அளிப்பதாக கர்த்தர் உறுதியளித்துள்ளார். இதன்பொருள், இறுதிகாலத்தில் எல்லா விசுவாசிகளுக்கும் நிச்சயமாக இரத்தசாட்சியாகும் நிலை காத்திருக்கிறது என்பதே.
வெளிப்படுத்தலின் வார்த்தையானது பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக மரிப்பதைக் குறித்தும், அவர்கள் உயிரேடெழும்பி மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொள்ளப்படுவதையும், ஆயிரவருட அரசாட்சியைக் குறித்த வாக்குத்தத்தத்தையும், கர்த்தர் அவர்களுக்கு ஏற்படுத்தின புதியவானம் மற்றும் பூமியைக் குறித்தும் கூறுவதாகும். தம் இரத்தசாட்சியாகும் நிலைக் குறித்து விசுவாசிப்போருக்கு வெளிப்படுத்தலின் வார்த்தை பெரிதான ஆறுதலும் ஆசீர்வாதமுமாயிருக்கிறது, அதனை விசுவாசியாதோருக்கு அதில் கிடைப்பது மிகவும் கொஞ்சமே. ஆகவே வெளிப்படுத்தலில் எழுதப்பட்டுள்ள வாக்குத்தத்த வார்த்தையின் மீதும் இறுதி காலத்தைக் குறித்த அதன் சத்திய வார்த்தையின் மீதும் நம் விசுவாசத்தின் மூலமாக பற்றிக்கொண்டு நம்மால் வாழமுடியும்.
வெளிப்படுத்தலின் வார்த்தைகளில் மிக அதிகமாக பேசப்பட்ட மிக முக்கியமானவைகள், பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக மரிப்பதும், உயிரோடெழும்புவதும் மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொள்ளப்படுவதும், ஆயிரவருடம் இருக்கப்போகும் ராஜ்யமும் புதியவானமும் புதியபூமியுமாகும். பரிசுத்தவான்கள் தம் இரத்தசாட்சி வரை விசுவாசத்தை காத்துக்கொள்ள வேண்டுமென்பதே ஆதிசபைக்கான கர்த்தரின் நோக்கமும் சித்தமுமாயிருந்தது. கர்த்தர் இவைகளையெல்லாம் செய்ய திட்டமிட்டுள்ளதால், இரத்தசாட்சியாக மரிப்பதைக் குறித்து அனைத்து பரிசுத்தவான்களிடமும் பேசினார். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், இறுதி காலத்தில் பரிசுத்தவான்கள் தம் இரத்தசாட்சியால் அந்திகிறிஸ்துவை மேற்கொள்வார்கள் என கர்த்தர் நம்மிடம் கூறினார்.
வெளிப்படுத்தின விசேஷத்தை முழுமையாக அறிந்துகொள்ள அதிகாரம் 1-6 ஐ முற்றிலுமாக புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். அத்தியாயம் 1 ஐ முன்னுரையாக கூறலாம், ஆனால் அதிகாரம் இரண்டும் மூன்றும் ஆதிசபையின் பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக மரிப்பதைக் குறித்து கூறுகின்றன. அதிகாரம் 4 கிறிஸ்து கர்த்தரின் சிங்காசனத்தின் மீது வீற்றிருப்பதைக் குறித்து கூறுகிறது. அதிகாரம் 5 இல் இயேசுகிறிஸ்து கர்த்தரின் திட்டங்கள் எழுதப்பட்ட புத்தகச் சுருளைத் திறப்பதைக் குறித்தும் அதனை நிறைவேற்றுவதைக் குறித்தும் கூறுகிறது, அதிகாரம் 6 கர்த்தர் மனிதர்களுக்கு ஏற்படுத்திய ஏழு காலங்களைக் குறித்து விவரிக்கிறது. குறிப்பாக நீங்கள் அதிகாரம் 6 ஐ புரிந்துகொள்வது அவசியமானதாகும். ஏனெனில், அது நீங்கள் முழு வெளிப்படுத்தலையும் புரிந்து கொள்ள ஏதுவான கதவைத் திறக்கும்.
பிதாவாகிய கர்த்தர் மனிதர்களுக்காக இயேசுகிறிஸ்துவினுள் ஏற்படுத்தின ஏழு காலங்களைக் குறித்த திட்டம் என்று அதிகாரம் 6 ஐ விவரிக்கலாம். இந்த கடவுளின் திட்டத்தில், கர்த்தர் மனிதகுலத்திற்கு எடுத்துவரும் ஏழுகாலங்களில் அவரளிக்கும் தெய்வீக அருளை நாம் காணலாம். ஏழு காலங்களையும் நாம் அறிந்து அதனைப் புரிந்துகொள்ளும்போது, இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் எதுவென நம்மால் அறிந்துகொள்ளமுடியும். மங்கின நிறமுள்ள குதிரையின் காலத்தை மேற்கொண்டு அதற்கு எதிராக யுத்தம் புரியவும், வரப்போகிற அந்திகிறிஸ்துவின் காலத்திற்கு தேவையானதுமான விசுவாசம் என்னவென்றும் நாம் புரிந்துகொள்வோம்.
வெளி 6 விவரிப்பதைப் போன்று, முதலாவது முத்திரை உடைக்கப்பட்டபோது, அதிலிருந்து வெள்ளைக்குதிரை ஒன்று புறப்பட்டது. அதனை விரட்டிச் செல்பவரிடம் வில்லும், கிரீடமும் கொடுக்கப்பட்டிருந்தது, அவர் எல்லாவற்றிலும் வெற்றிமேல் வெற்றி பெற்றுக்கொண்டிருந்தார். இங்கு வெள்ளைக் குதிரையை ஒட்டிச் செல்பவர் இயேசுகிறிஸ்துவைக் குறிக்கிறார். அவரிடம் வில்லொன்றிருந்தது என்பது அவர் சாத்தானுடன் தொடர்ந்து போரிட்டு அவனை வெல்வார் என்று பொருள்படும். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், வெள்ளைக் குதிரையின் காலம் எனக் குறிப்பிடப்படுவது கர்த்தர் பூமியில் அனுமதித்துள்ள நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வெற்றியின் காலமாகும். கர்த்தரின் அனைத்து நோக்கங்களும் நிறைவேறும் வரை இக்காலம் தொடர்ந்துகொண்டேயிருக்கும்.
இரண்டாவது காலம் சிகப்புக் குதிரையின் காலமாகும். இது சாத்தானின் காலம் வருவதைக் குறிக்கிறது, இக்காலத்தில் சாத்தான் மக்களைப் போரிடும்படியாக அவர்கள் இருதயங்களை வஞ்சித்து, பூமியிலிருந்து சமாதானத்தை அகற்றி பரிசுத்தவான்களை துன்புறுத்துவான்.
சிகப்புக் குதிரையின் காலத்திற்கு பிறகு கருப்புக்குதிரையின் காலம் வரும், அப்போது, மக்களின் ஆத்துமாக்களையும் சரீரங்களையும் பஞ்சம் தாக்கும். இதன் பிறகு சீக்கிரமாக வரப்போகும் மங்கின நிறமுடைய குதிரையின் காலத்தில், அந்திகிறிஸ்து தோன்றுகிறான், அவன் தோன்றும்போது உலகம் கொடிய துன்பங்களினுள் விழும்.
மங்கின குதிரையின் காலம் நான்காவது காலமாகும். இக்காலத்தில், ஏழு எக்காளங்களின் வாதைகளால் இவ்வுலகம் தாக்கப்படும், இதில் மூன்றிலொரு காடுகள் எரிந்துபோகும், மூன்றிலொரு சமுத்திரம் இரத்தமாகும், மூன்றிலொரு நல்ல நீரும் கூட இரத்தமாகும், சூரியனின் மூன்றிலொரு பாகமும் சந்திரனின் மூன்றிலொருபாகமும் தாக்கப்பட்டு கருமையாகும்.
ஐந்தாவது காலம் பரிசுத்தவான்கள் உயிரோடெழும்பி, எடுத்துக்கொள்ளப்படும் மகிழ்ச்சியின் காலமாகும். வெளி 6:9-10 இல் எழுதப்பட்டுள்ளதைப் போல் “அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தம் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தம் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின் மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக் குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.”
ஆறாவது காலம் முதல் உலகின் அழிவின்காலமாகும். வெளி 6:12-17 இவ்வாறு கூறுகிறது, “அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப் போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம்போலாயிற்று. அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது. வானமும் சுட்டப்பட்ட புஸ்தகம்போலாகி விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின. பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு, பர்வதங்களையும் கன்மலைகளும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள். அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக் கூடும் என்றார்கள்.”
அப்படியானால், கர்த்தர் நமக்காக ஏற்படுத்திய ஏழாவது காலத்தில் என்ன நடக்கும்? கடைசி காலமான இதில், கர்த்தர் பரிசுத்தவான்களுக்கு தம் ஆயிர வருட அரசாட்சியையும் புதியவானத்தையும் புதிய பூமியையும் அளிப்பார்.
அப்படியானால், இந்த ஏழுகாலங்களினுள் நாம் எந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? உலகம் அநேக யுத்தங்களினால் சீரழிக்கப்பட்ட காலமாகிய சிகப்புக்குதிரையின் காலத்தைக் கடந்து, கறுப்புக்குதிரையின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
வெளிப்படுதலின் வார்த்தைகள் விசுவாசிகளை சோர்ந்து போகும்படி எழுதப்படாமல், ஊக்கமளிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது. இறுதிகாலத்தின் நம்பிக்கையாக ஆயிரம் வருட அரசாட்சியை மட்டும் விசுவாசிகளுக்கு கொடுக்காமல், இப்பூமியில் அவர்களை அனாதிகளாக விட்டு விடாதிருப்பதாகவும் கர்த்தர் கூறினார்.
வெளிப்படுத்தின விசேஷத்தில் வெளிப்படுத்தப் பட்ட உண்மையை அறிய வேண்டுமானால், சோதனைக்கு முன்பு எடுத்துக்கொள்ளப்படுதல், ஆயிரவருட அரசாட்சி இல்லை. சோதனைக்கு பிறகான எடுத்துக்கொள்ளப்படுதல் ஆகிய தவறான போதனைகளைக் கைவிட்டு, வேதவசனங்களிடம் திரும்ப வேண்டும்.
கர்த்தர் நமக்கு ஏழு காலங்களை இயேசுகிறிஸ்துவுக்குள் ஏற்படுத்தினார். இந்த ஏழுகாலங்களும், அவரின் படைப்பின்போதே, இயேசுகிறிஸ்துவின் பரிசுத்தவான்களுக்கு கர்த்தரால் திட்டமிடப்பட்டது. ஆயினும் அநேக ஞானிகள், கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட ஏழுகாலங்களைக் குறித்து அறிவில்லாதிருப்பதால், வெளிப்படுத்தலின் வார்த்தையைக் குறித்து தம் சொந்த விளக்கங்களையும், கொள்கைகளையும் கொடுத்து, மக்களை அதிக குழப்பங்களுக்கு உட்படுத்தினர். ஆனால், நாம் கர்த்தர் ஏற்படுத்திய ஏழுகாலங்களையும் அறிந்துகொண்டு, இந்த உண்மையின் மீதுள்ள அறிவினாலும் விசுவாசத்தினாலும் அவர் நமக்குச் செய்த அனைத்திற்காகவும் அவருக்கு நன்றிகளையும் மகிமையையும் அளிக்கவேண்டும். இந்த ஏழு காலங்களுக்குள் விசுவாசிகளுக்காக கர்த்தர் ஏற்படுத்தின அனைத்து திட்டங்களும் நிறைவேறும்.
இதுவரை நான் விவரித்தவை வெளிப்படுத்தின விசேஷத்தின் முன்னுரையான வசனங்களுக்கு அடிப்படையான ஞானத்தைக் கொடுத்திருக்கும் என நம்புகிறேன். வெளிப்படுத்தின விசேஷத்தின் மூலமாக கர்த்தரின் படைப்பு ஏழுகாலங்களின் தொடக்கத்தையும், அதனை அவர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக கிறிஸ்து இயேசுவை ஏற்படுத்தியதையும் நாம் அறியலாம். இந்த ஏழுகாலங்களையும் நாம் அறியும்போது நம் விசுவாசம் உறுதியாகிறது. அவற்றை அறிந்துகொள்வதால், கறுப்பு குதிரையின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு எத்தகைய சோதனைகள் காத்திருக்கின்றன என்பதை அறிந்துகொண்டு, இந்த ஞானத்தினால், விசுவாசத்தினால் நம்மால் வாழமுடியும்.
விசுவாசிகள் - நீங்களும் நானும் உள்ளடங்கியுள்ள விசுவாசிகள் - கர்த்தர் ஏற்படுத்தின ஏழுகாலங்களில் மங்கின நிறமுடைய குதிரையின் காலத்தில் இரத்தசாட்சியாக மரிக்கவேண்டும். இதனை விசுவாசிகள் அறிந்துகொள்ளும்போது, அவர்கள் இருதயங்கள் நம்பிக்கையினால் நிறைந்து, அவர்கள் கண்கள் அதற்கு முன் காணமுடியாதவைகளைக் காணும். கர்த்தரின் ஊழியர்களும் பரிசுத்தவான்களும் இரத்தசாட்சியின் காலம் சமீபித்திருப்பதை உணரும்போது, அவர்களின் வாழ்க்கை குப்பைகளிலிருந்து சுத்தமாக்கி, மங்கின குதிரையின் காலத்தின் இரத்தசாட்சிகளாவர் என்றும் அறிந்துகொள்வதோடு, அதனை அறியாவிட்டாலும் கூட அவர்களின் இருதயங்கள் தயாராக இருக்கும்.
ஆதிசபையின் பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக மரித்ததைப் போல் நாமும் கூட இரத்தசாட்சிகளாக மரிப்போம். மங்கின குதிரையின் காலம் வரும்போது உண்மை விசுவாசிகளுக்கு இரத்தசாட்சியக மரிப்பது தவிர்க்க முடியாத ஒன்று எனவும், இந்த இரத்தசாட்சிக்கு பிறகு அவர்களின் உயிர்த்தெழுதல் இருக்கிறது எனவும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
இரத்தசாட்சியாக மரித்தமைக்கு பிறகு பெருமகிழ்ச்சியான உயிர்த்தெழுதல் உருவாகும், இந்த எடுத்துக்கொள்ளப்படுதலினால் தேவனை நாம் பரலோகத்தில் சந்திப்போம். பரிசுத்தவான்களின் இரத்தசாட்சிக்கு பிறகு, நம் தேவன் பரிசுத்தவான்களை மரித்தோரிலிருந்து எழுப்பி, பரலோகத்தின் திருமண பந்திக்கு அவர்களின் பெருமகிழ்ச்சியுடனே எடுத்துச் செல்வார்.
பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படும் நேரம் வரும்போது பூமியானது முற்றிலும், அழிந்துபோய் வாழ்வதற்கேற்றவாறு இல்லாதிருக்கும். மூன்றிலொரு பாகம் காடுகள் எரிந்துபோயிருக்கும்; கடல்களும், ஆறுகளும், நீரூற்றுகளும் கூட இரத்தமாகிப்போயிருக்கும். நீங்கள் கண்டிப்பாக வாழவேண்டியிருக்கிற இத்தகைய உலகில் தொடர்ந்து வாழ விரும்புவீர்களா? உலகிற்கு வேறெந்த நம்பிக்கையும் இல்லாதிருப்பதால், பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக மரிப்பதற்கு அதிக காரணங்கள் உள்ளன.
அழிந்துபோன உலகில் பயத்தால் நடுங்கிக்கொண்டு வாழ விரும்புகிறீர்களா? அப்படி இல்லை! முடிவு காலம் பரிசுத்தவான்களின் இரத்தசாட்சியாகும், அதன்பிறகு உயிரோடு எழும்புவதும் எடுத்துக்கொள்ளப்படுதலும் நடக்கும், அவர்களின் உயிர்த்தெழுதலுக்கும் எடுத்துக்கொள்ளப்படுதலிற்கும் பிறகு, ஆயிர வருட அரசாட்சியில் புதியவானம் புதிய பூமியில் நித்தியமாக மகிமையுடன் வாழ்ந்திருப்போம்.
மிகக்கொடிய உபத்திரவக் காலத்தின் நடுவில் - அதாவது ஏழாண்டு காலத்தின் மூன்றரையாண்டுகள் நடக்கும்போது - தமது விசுவாசத்தினால் அந்திக்கிறிஸ்துவை எதிர்த்து நிற்கும் பரிசுத்தவான்கள் இரத்தசாட்சிகளாக மரித்தமைக்குப் பிறகு அவர்களின் உயிர்த்தெழுதலும், எடுத்துக்கொள்ளப்படுதலும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் நடந்தேறுமென வேதாகமம் நமக்குத் தெளிவாகக் கூறுகிறது. வேறுவார்த்தைகளில் கூறுவதானால், கிறிஸ்து மீண்டும் வருவதும், பரிசுத்தவான்கள் உயிர்த்தெழுதலும், எடுத்துக்கொள்ளப்படுதலும், மிகுந்த உபத்திரவக் காலத்தின் இரத்தசாட்சியாக மரித்தலுக்கு பிறகு நடந்தேறும். நீங்கள் இத்தகைய காரியங்களைக் குறித்து கவனமாக சிந்திக்க வேண்டிய காலம் இதுவே.
கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட மங்கின நிறமுடைய குதிரையின் காலம் இதுவரை வராவிட்டாலும் கூட, நம்மால் இரத்தசாட்சியாக மரிக்கமுடியுமா? முடியாதுதான். ஆனால் “மிகுந்த உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக்கொள்ளப்படும் தத்துவம்” மிகுந்த உபத்திரவத்தின் தொடக்கத்திற்கு முன்பே எல்லா பரிசுத்தவான்களும் எடுத்துக்கொள்ளப்படுவர் என்றும் அவர்கள் ஏழாண்டுகளின் மிகுந்த உபத்திரங்களினூடே செல்வதில்லை எனவும் போதிக்கின்றது. இந்த நோக்கு இரத்தசாட்சி இல்லை என்கிறது, மேலும் பரிசுத்தவான்களுக்கு மங்கின குதிரையின் காலம் வரும் என்பதையும், இது விசுவாசிப்பதில்லை.
இந்த “மிகுந்த உபத்திரவத்தின் முன்பே எடுத்துக்கொள்ளப்படும் தத்துவம் சரியானதாக இருந்தால், வெளி 13 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பரிசுத்தவான்களின் இரத்தசாட்சி என்பது என்ன? இங்கு பரிசுத்தவான்கள் ஏன் இரத்தசாட்சியாக மரிப்பர் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது, கர்த்தரின் ஜீவ புத்தகத்தில் பெயர்கள் எழுதப்பட்டுள்ள இப்பரிசுத்தவான்கள் சாத்தானுக்கு அடிபணியாததால் அவர்கள் இரத்தசாட்சியாக மரிப்பர்.
“மிகுந்த உபத்திரவத்திற்கு முந்திய எழுத்துக்கொள்ளப்படும் தத்துவத்தை” போதிப்பவர்கள், மங்கின குதிரையின் காலத்தைக் குறித்தும், இரத்தசாட்சிகளைக் குறித்தும், உயிரோடெழும்புவதைக் குறித்தும், பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படுவதைக் குறித்தும் புரிந்துகொள்ளாதவர்களாய் உள்ளனர். இந்த தத்துவத்தைப் பொறுத்தமட்டில், வாதையின் ஏழாவது எக்காளம் ஊதப்படும்வரை பரிசுத்தவான்கள் இப்பூமியிலே இருப்பர். ஆனால், கடைசி தூதன் எக்காளத்தை ஊதுவதற்கு முன்பே -அதாவது ஏழு பாத்திரங்களிலுள்ள கர்த்தரின் கோபாக்கினை ஊற்றப்படும் என்று எந்த வித சந்தேகங்களுக்கு இடமின்றி வெளிப்படுத்தின விசேஷம் கூறுகிறது. இதனால் தான் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்போருக்கு வெளிப்படுத்தின விசேஷம் மிகுந்த ஆறுதலாகவும் ஆசீவாதமாகவும் இருக்கிறது.
“ஆயிரம் வருட அரசாட்சி இல்லை” என்பது மக்களுக்கு ஏமாற்றத்தையும் குழப்பத்தையுமே அளித்தது, இதில் உண்மை இல்லை. நம் தேவன் தம் சீடர்களுக்கு வாக்குத்தத்தம் செய்த - பரிசுத்தவான்கள் ஐந்து அல்லது பத்து நகரங்களை ஆளுவதற்கான அதிகாரத்தைப் பெறுவர் என்பது - ஆயிரவருட அரசாட்சியில் நிச்சயமாக நடக்கப் போகிறதாகும்.
எடுத்துரைக்கப்பட்ட கூற்றுகளாகிய உபத்திரவக் காலத்திற்கு முந்திய எடுத்துக்கொள்ளப்படுதல், உபத்திரவக் காலத்திற்கு பிறகு எடுத்துக்கொள்ளப்படுதல், ஆயிரம் வருட அரசாட்சி இல்லை ஆகிய அடிப்படையில்லாத தத்துவங்கள் விசுவாசிகளுக்கு அவநம்பிக்கைகளையும் குழப்பங்களையும் எடுத்து வந்தன என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்கவேண்டும்.
அப்படியானால், கர்த்தர் ஏன் வெளிப்படுத்தின விசேஷத்தை நமக்குக் கொடுத்தார்? இந்த ஏழுகாலங்களிலும் அவர் நமக்கு செய்யப்போகும் நன்மைகளையும் இயேசுவின் சீடர்களாகியவர்களுக்கு பரலோகத்தைக் குறித்த உண்மை நம்பிக்கையை அளிப்பதற்கு அவர் நமக்கு வெளிப்படுத்தலின் வார்த்தகளைக் கொடுத்தார்.
இன்றும் கூட, கர்த்தர் திட்டமிட்டபடியே அனைத்தும் நடக்கின்றன. இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம் கறுப்புக்குதிரையின் காலமாகும். வெகு சீக்கிரமாக, இந்த கறுப்புக்குதிரையின் காலம் முடிந்து மங்கின குதிரையின் காலம் வரும். மங்கின குதிரையின் காலத்தில் பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக மரிப்பது நடப்பதுடன் அந்திகிறிஸ்து எழுச்சியடைவான். இந்த காலமே உலகம் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு அந்திகிறிஸ்துவின் ஒரே அதிகாரத்திற்கு கீழ் வரும் காலமாகும். இயேசுவின் சீடர்கள் இப்போதே ஆயத்தமாக இருக்கவேண்டும், அவர்கள் தம் விசுவாசத்துடன், வரவிருக்கிற மங்கின குதிரையின் காலத்தைச் சந்திக்க ஆயத்தமாக இருக்கவேண்டும்.