• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 10 : வெளிப்படுத்தின விசேஷம் (வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 2-1] எபேசு சபைக்கு எழுதப்பட்ட நிருபம் (வெளி 2:1-7)

2021.04.22 37
(வெளி 2:1-7)
“எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக் கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்; நீ சகித்துக் கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாத பட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன். நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.”
 
 
விளக்கவுரை
 
வசனம் 1: “எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகலின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது”
பவுல் பிரசங்கித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் விசுவாசத்தினால் நடப்பட்ட கர்த்தரின் சபை எபேசு சபையாகும். இவ்வசனங்கள் “ஏழு பொன் குத்துவிளக்குகள்” என்பது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் கூட்டமாகிய கர்த்தரின் ஆலயங்களையும் “ஏழு நட்சத்திரங்கள்” என்பது அங்கிருக்கும் கர்த்தரின் ஊழியர்களையும் குறிக்கிறது. “ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கரத்தில் ஏந்திக்கொண்டு” என்ற சொற்றொடர், கர்த்தர் தாமே தம் ஊழியர்களைப் பற்றிக்கொண்டு அவர்களை உபயோகப்படுத்துகிறார் என்று பொருள்படும்.
கர்த்தர் தன் ஊழியனான யோவான் மூலமாக ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் பேசியது, முடிவுகாலமாகிய இக்காலத்தில் நாம் நோக்கும் எல்லா ஆலயங்களுக்குமானது என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். கர்த்தர் தம்முடைய ஆலயங்களின் மூலமாகவும் தம் ஊழியர்களின் மூலமாகவும், நமக்கு காத்திருக்கும் சோதனைகளையும் உபத்திரவங்களையும் மேற்கொள்வது எப்படியென நம்முடன் பேசுகிறார். வெளிப்படுத்தலின் வார்த்தையைக் கேட்டு அதனை விசுவாசிப்பதன் மூலமாக சாத்தானை நாம் மேற்கொள்ள வேண்டும். கர்த்தர் தம் சபையிலுள்ள ஒவ்வொருவருடனும் பேசுகிறார்.
 
வசனம் 2: “உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக் கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்”
எபேசு சபையின் செய்கைகளுக்காகவும், உழைப்பிற்காகவும், பொறுமைக்காகவும், தீமையை வெறுப்பதற்காகவும் கள்ள அப்போஸ்தலர்களை சோதித்து முகத்திரையைக் கிழிப்பதற்காகவும் தேவன் அதனை பாராட்டினார். இந்த வசனத்தின் மூலம் எபேசு சபையின் நம்பிக்கையும் சமர்ப்பனமும் எத்தனை பெரிதாயிருந்தது என்பதை நம்மால் காணமுடியும். தொடக்கத்தில் விசுவாசம் எத்தனை சிறந்ததாக இருந்தாலும், அது பின்காலத்தில் மோசமாகிப் போனால் அது உபயோகமற்றதாகிவிடும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நம்முடைய விசுவாசம் உண்மை விசுவாசமாயிருக்க வேண்டும். அதன் தொடக்கமும் முடிவும் மாறுதலின்றி அப்படியே இருக்கிறது.
ஆனால் எபேசு சபையின் ஊழியனின் விசுவாசம் அத்தகையதாக இருக்கவில்லை, இதற்காக அவன் கர்த்தரால் மிகக் கடினமாகக் கண்டிக்கப்பட்டு, அதனிடத்திலிருக்கும் விளக்குத்தண்டை அகற்றிப் போடப்போவதாக கர்த்தர் எச்சரித்தார். சபையின் வரலாறு கூறுவதைப் போல் சிறிய ஆசியாவின் ஏழு சபைகளும் தம் விளக்குத் தண்டுகள் அகற்றப்படப்பட்டன. எபேசு சபையிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும், அத்துடன் நமது சபைகள் கர்த்தருக்குச் சொந்தமானவை என்று அவரால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதற்கு அது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலுள்ள விசுவாசத்தில் நிலைப்பட்டிருக்க வேண்டும் எனவும், இவ்விசுவாசத்தால் நம் ஆலயங்களைத் தாங்கும் கர்த்தரின் ஊழியர்களாகவும் வேண்டுமெனவும் உள்ளதை நம் நிலையில் கொள்ளவேண்டும்.
 
வசனம் 3: “நீ சகித்துக் கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.”
தேவன் தம் சபைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருடைய பெயரிற்காக அவரின் ஊழியர்கள் படும்பாடுகளையும் அவர் நன்கு அறிந்திருக்கிறார். ஆனால் எபேசு சபையினர் முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை விட்டுவிலகி, சுத்தமான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை மற்ற நம்பிக்கைகளுடன் கலந்து தவறான பாதையில் விழத்தொடங்கினர்.
 
வசனம் 4: “ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.”
எபேசு சபையின் ஊழியர்களினதும் பரிசுத்தவான்களினதும் நம்பிக்கையின் செய்கைகள் எத்தனைப் பெரியவைகள் என்றால், தேவனே அவர்களின் செய்கைகளையும், உழைப்பையும், பொறுமையையும் பாராட்டினார். அவர்கள் கள்ள அப்போஸ்தலர்களை சோதித்தறிந்து முகத்திரையைக் கிழித்தார்கள். தேவனின் பெயரிற்காக உழைத்து அதனைப் பராமரித்தார்கள், அவர்கள் சோர்ந்துபோகவில்லை. ஆனால் இத்தகைய மிகப் பாராட்டப்படக் கூடிய செயல்களின் நடுவில், இவற்றைவிட மிகப்பெரிய ஒன்றை இழந்து போனார்கள்; அவர்கள் இயேசுகிறிஸ்துவால் அளிக்கப் பட்டவைகளை இழந்து போனார்கள்.
இதன் பொருள் என்ன? அவர்களை ஒரேதரமாக அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாக்கும் நற்செய்தியையும், தேவன் மீதுள்ள விசுவாசத்தின் ஒப்புகையையும் பராமரிக்கத் தவறினார்கள் என்று இது பொருள்படும். மறுபுறம், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை கைவிட்டது, தவறான போதனைகளையும் மற்ற நற்செய்திகளையும் தம் ஆலயத்தில் படரவிட்டார்கள் என்று இது பொருள்படும்.
அப்படியானால், இந்த மற்ற நற்செய்திகளும் போதனைகளும் என்ன? அவை உலகப்பூர்வமான தத்துவங்களும் மனித சிந்தனைகளுமாகும். மனித குலத்திற்கு கர்த்தர் அளித்த இரட்சிப்பு சத்தியத்தை இவை எதிர்த்து நிற்கின்றன. அவை மனித மாமிசத்திற்கு ஆதாயமானவைகளாக இருக்கலாம், அல்லது மக்களுக்குள் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் எடுத்து வரச் செய்பவையாகவும் இருக்கலாம், ஆனால் அவற்றால் மக்களின் இருதயங்களை கர்த்தருடன் ஐக்கியமாக்க முடியாது. இப்படித்தான் எபேசு சபையின் ஊழியர்களும் பரிசுத்தவான்களும் முடிந்துபோயினர், அவர்கள் தம் விசுவாசங்களை மாற்றியமைத்து, கர்த்தருக்கு முன்பாக சபிக்கப்பட்டவர்களாயினர். இதனால் தான் அவர்கள் தேவனால் கண்டிக்கப்பட்டனர்.
சபையின் வரலாறைப் பார்க்கும்போது, ஆதிசபையின் காலத்திலிருந்தே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது திரிந்து போய்க்கொண்டிருப்பதை நாம் காணலாம். இந்த பாடத்திலிருந்து நாம் கற்று, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உறுதியாகப் பிடித்துக்கொண்டு, அலைபாயாத விசுவாசத்தினால் தேவனைப் பிரியப்படுத்தி, சாத்தானுக்கும் உலகத்திற்கும் எதிரான போராட்டத்தில் அவற்றை மேற்கொள்ளவேண்டும்.
அப்படியானால், எபேசு சபையின் ஊழியர்களுக்கும் பரிசுத்தவான்களுக்குமான “ஆதியிலிருந்த நேசம்” என்பதென்ன? கர்த்தர் அவர்களுக்கு கொடுத்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தவிர, ஆதியிலிருந்த நேசம் என்பது வேறெதுமில்லை. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே இரட்சிப்பின் வார்த்தையாகும். அதற்கு ஒவ்வொருவரையும் உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கும் வல்லமை இருக்கிறது.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி என்பது என்னவென்று பவுலுக்கும், யோவானுக்கும் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளின் ஊழியர்களுக்கும் கர்த்தர் வெளிப்படுத்தி அவர்கள் அதனைப் புரிந்துகொள்ளுமாறு செய்தார். இப்படித்தான் இவர்களால் இந்த நற்செய்தியை விசுவாசிக்க முடிந்தது, இப்படியாகத்தான் அவர்களால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தியைக் கேட்டு விசுவாசித்தவர்களால் உலகின் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட முடிந்தது.
நம் தேவனால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது, கிறிஸ்துவின் ஞானஸ்நான வார்த்தையிலும் அவரின் சிலுவை இரத்தத்திலும் காணப்படுகின்றது. ஆயினும் எபேசு சபையின் ஊழியன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை தேவனின் மூலமாக சந்தித்து, தொடக்கத்தில் அதனை நன்றியறிதலுடன் பிரசங்கித்திருந்தாலும், பின் வந்த நாட்களில் அதனைக் கைவிட்டான். ஆகவே, இந்த வசனத்தில், அவன் தவறான கொள்கைக்குள் விழுந்தமைக்காக தேவன் அவனைக் கண்டித்தார்.
 
வசனம் 5: “ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.”
கர்த்தரின் அன்பிலிருந்து எபேசு சபையாரின் ஊழியர்கள் விழுந்துபோனார்கள் என்பதன் பொருள் சபையோர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை கைவிட்டார்கள் என்பதாகும். இதனால் தான் அவர்கள் எந்த இடத்தில் விசுவாசத்தை விட்டார்களோ அதனைக் கண்டுபிடித்து, மனந்திரும்பி, முதல் செய்கைகளைச் செய்யவேண்டுமென தேவன் அவர்களிடம் கூறினார்.
அப்படியானால் எபேசு சபையினரை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை தொலைக்கச் செய்தது எதுவாயிருக்கும்? எபேசு சபையின் பலவீனமானது அதன் ஊழியனின் மனித சிந்தனைகளிலிருப்பதையும் அது சபையை அழிவை நோக்கி வழி நடத்தியதையும் நாம் காணலாம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது கர்த்தரிடமிருந்து வந்தது, முற்றிலும் உண்மையானது இது, உலகின் அனைத்து மதங்களின் தவறான கொள்கைகளிலும் போதனைகளிலும் மறைந்திருக்கும் பொய்யை வெளிப்படுத்திற்று. இதன் பொருள் என்னவெனில், எபேசு சபை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பரப்ப முயல்கையில் உலக மக்களுடனான மாறுபாடுகள் தவிர்க்க முடியாதவை என்பதாகும்.
இந்த மாறுபாடானது, எதிர்பலனாக, எபேசு சபையின் விசுவாசிகள் உலகின் மக்களைச் சமாளிப்பதை மேலும் கடினமாக்கியதுடன், அவர்களுடைய விசுவாசத்திற்காக துன்புறுத்தப்படுவதற்கும் வழிநடத்தியது. இதனைத் தவிர்த்து, கர்த்தரின் சபைக்குள் மக்கள் நுழைவதை இலகுவாக்க, எபேசு சபை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலிருந்து பிரிக்கப்பட்டு தத்துவரீதியான நற்செய்தி பிரசங்கிக்கப்பட அனுமதிக்கப்பட்டது.
இங்கு கூறப்படும் “தத்துவ ரீதியான நற்செய்தி” மனிதர்களுக்கும் கர்த்தருக்கும் இடையே உள்ள தொடர்பை மட்டும் தேடாது, மனிதர்களுடனான தொடர்பையும் தேடும் மனித சிந்தனைகளிலிருந்து வரையறுக்கப்பட்டது. இத்தகைய மேலும் கீழுமான விசுவாசம் கர்த்தர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் விசுவாசமில்லை. நம்மிடமிருக்கவேண்டிய விசுவாசமாக கர்த்தர் எதிர்பார்க்கும் விசுவாசம், கர்த்தருடனான கீழ்ப்படிதலுள்ள விசுவாசத்தின் மூலமாக, நம் சமாதானத்தை அவருடன் மீண்டும் வரச் செய்கிறது.
எபேசு சபையின் ஊழியன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இழந்து போனதற்கான காரணம் அவன் கர்த்தரின் சபைக்குள் ஏற்றுக்கொள்ளக்கூடாதவைகளை ஏற்றுக்கொள்ள முயன்றதே - அதாவது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காத உலகத்தின் மக்களை - அவர்களின் ஆசைக்கேற்றவாறு, அவன் தன் போதனைகளை அமைத்ததே அது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வார்த்தையின் அஸ்திபாரத்தின் மீதே கர்த்தரின் ஆலயம் அமையமுடியும்.
ஆதிசபையின் காலத்தில் இருந்ததைப்போன்று இக்காலத்திலும் கூட அநேக மக்கள், இரட்சிக்கப்பட இயேசுவை எப்படியோ விசுவாசத்தால் போதும் என்று எண்ணுபவர்களாக இருக்கின்றனர், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்கள் விசுவாசிக்கவேண்டுமென யாராவது பார்க்கிறார்களா. இயேசுவை விசுவாசிக்கும் அதே நேரம் கர்த்தரால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அலட்சியப்படுத்துவது மிகவும் தவறான விசுவாசமாகும். வெறும் மதச்சடங்காக மட்டும் தேவனை விசுவாசித்து, அப்படியே அரை மனதுடன் செல்பவர்கள் கர்த்தரின் எதிரிகளாவர். இதனால் தான் தேவன் எபேசு சபையின் ஊழியனைக் கண்டித்து, அவனின் தவறான விசுவாசத்தைக் கைவிட்டு, அவன் முதலில் கேட்டு விசுவாசம் கொண்டிருந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு, மனந்திரும்பி, அந்த சரியான விசுவாசத்திற்கு வருமாறு அழைத்தார்.
இங்கு நமக்கு ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது: கர்த்தரின் ஆலயம் ஒன்று நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலிருந்து விழுந்துபோனால், கர்த்தர் அதனைத் தம் ஆலயம் என்று அழைப்பதில்லை. அதனால் தான் அதனை விளக்குத் தண்டின் இடத்திலிருந்து அகற்றி, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் விசுவாசிகளுக்கு அதனைக் கொடுப்பதாக தேவன் கூறினார்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் கைவிட்டு அதனைப் பிரசங்கிக்காத சபை கர்த்தரின் சபையே அல்ல. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதும், அதனைப் பாதுகாப்பதும், பிரசங்கிப்பதும் மற்ற எல்லா செயல்களை விடவும் முக்கியமானது, மேலும் அதனை அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது.
மேற்கண்ட வசனம் குறிப்பிடும் ஏழுசபைகள் இருந்த சிறிய ஆசியா இப்போது முஸ்லீம்களின் பகுதியாக உள்ளது. அதனால் தேவன் கர்த்தரின் சபையாகிய விளக்குத் தண்டை அதனின்று அகற்றி, இங்கு வைத்து, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உலகம் முழுவதற்கும் நம்மை பிரசங்கிக்கச் செய்தார். உண்மையான கர்த்தரின் சபையில், உண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி இருக்கிறது. அது இல்லாமல் கர்த்தரின் சபை இருக்க முடியாது. அப்போஸ்தல காலத்தில், இயேசுவின் பன்னிரண்டு சீடர்களிடமும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது மாறாத விசுவாசமிருந்தது. (1 பேதுரு 3:21, ரோமர் அதிகாரம் 6, 1 யோவான் அதிகாரம் 5).
மிகவும் துரதிருஷ்டவசமானது என்னவெனில், ஆதிசபையின் காலம் தொடங்கியே சிறிய ஆசியாவின் கர்த்தரின் ஆலயங்கள் உண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இழந்து போனதால், இப்பகுதி முஸ்லீம் பகுதியானது. அதற்குமேலும், ரோமப் பேரரசனான கான்ஸ்டன்டைனால் பிரகடனப்படுத்தப்பட்ட மிலான் பிரகடனத்தின் மூலமாக ரோம சபையும் தாக்கப்பட்ட துன்பகரமான நிகழ்வு நிகழ்ந்தது.
 
வசனம் 6: “நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு.”
நிக்கொலாய் மதத்தினர் உலகின் ஆதாயங்களுக்காகவும் பொருளாதாயங்களுக்காகவும் இயேசுவின் பெயரை உபயோகித்தனர். ஆனால் எபேசு சபை நிக்கொலாய் மதத்தினரின் கொள்கைகளையும் செய்கைகளையும் வெறுத்தது. கர்த்தரால் பாராட்டப்படுவதற்கு எபேசு சபையாரிடமிருந்த ஒரு நற்காரணம் இதுவாகும்.
 
வசனம் 7: “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.”
பரிசுத்த ஆவியானவர் கூறுவதை கர்த்தரின் ஊழியர்களும் பரிசுத்தவான்களும் கேட்கவேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது விசுவாசம் வைத்து அதனை முடிவு வரை பரப்பவேண்டுமென பரிசுத்த ஆவியானவர் அவர்களிடம் கூறுகிறார். அப்படிச் செய்வதற்கு, உண்மை அல்லாதவைகளை பரப்புவோருடன் போரிட்டு அவர்களை மேற்கொள்ளவேண்டும். உண்மை அல்லாதவைகளுடனான போரில் தோல்வியடைவது அழிவு என்பதாகும். கர்த்தரின் விசுவாசிகளும், ஊழியர்களும் தம் எதிரிகளைத் தம் கரங்களால் வென்று அவர்களை மேற்கொள்ளவேண்டும் - அதாவது, கர்த்தரின் வார்த்தையாலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினாலும் அவர்களை மேற்கொள்ளவேண்டும்.
கர்த்தர் கூறினார், “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.” “ஜெயங்கொள்ளுகிறவனுக்கு” மட்டுமே ஜீவ விருட்சத்தின் கனிகளை கர்த்தர் கொடுப்பார். ஆனால் யாரை அல்லது எதனை மேற்கொள்வது? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காதோரை நம் விசுவாசத்தினால் மேற்கொள்ள வேண்டும். உண்மை அல்லாதவைகளுக்கு சொந்தமானவர்களுடன் விசுவாசிகள் ஆவிக்குரிய யுத்தத்தைத் தொடர்ந்து செய்யவேண்டும், மேலும் தம் விசுவாசத்தினால் அவர்களை மேற்கொண்டு, வெற்றிவீரர்களாக வெளிப்படவேண்டும். கர்த்தருக்கே அவர்கள் அனைத்து மகிமைகளையும் கொடுப்பதோடு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள தம் விசுவாசத்தினால் வெற்றிவாழ்வையும் வாழவேண்டும். உண்மை விசுவாசத்தின் மூலமாக, தம் போராட்டத்தில் எதிரிகளை மேற்கொள்கிறவர்களால் மட்டுமே கர்த்தர் கொடுத்த புதிய வானம் புதிய பூமியில் வாழமுடியும்.
ஆதிசபையின் காலத்தில், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து அதற்காக போராடியவர்கள் இரத்தசாட்சியானார்கள். அதுபோலவே, அந்திகிறிஸ்து எழும்பும் காலம் வரும்போது, அதிகமான இரத்தசாட்சிகள் உருவாவர்.