(வெளி 2:1-7)
நம்மிலுள்ள அநேகருக்கு இரத்தசாட்சி என்பது பழக்கமில்லாத சொல்லாகும். ஆனால் கிறிஸ்தவ கலாச்சாரத்தில் வளர்க்கப்படாதவர்களுக்கு இது முற்றிலும் புதிது. நிச்சயமாக, “இரத்தசாட்சி” என்ற வார்த்தையை நம் அன்றாட வாழ்வில் நாம் அடிக்கடி கேட்பதில்லை; நாம் இந்த வார்த்தையிலிருந்து பிரிந்துபோனதாக உணருகிறோம், ஏனெனில் நம் சொந்த இரத்தசாட்சியைக் குறித்து நினைப்பது அதீத கற்பனையாக இருக்கும். அப்படியிருந்தும், வெளிப்படுத்தின விசேஷத்தின் அதிகாரங்கள் 2 மற்றும் 3 ஆகியவை இந்த இரத்தசாட்சியைக் குறித்து பேசுகின்றன, இந்த வார்த்தையின் மூலமாக இரத்தசாட்சியைக் குறித்த விசுவாசத்தை நம்மிருதயங்களில் ஏற்படுத்தவேண்டும் - அதாவது, இந்த விசுவாசத்தினால் நாம் இரத்தசாட்சிகளாவோம்.
ரோம சக்கரவர்த்திகள் தம் சாம்ராஜ்யத்தின் மக்களை முற்றிலும் ஆளுபவர்களாவர். தம் பகுதியின் மீது தம் வல்லமையினால் முற்றிலும் ஆதிக்கம் செலுத்திய இவர்களால், தம் இருதயங்கள் விரும்புவதையெல்லாம் செய்யமுடியும். அநேக போர்களைச் சந்தித்து வெற்றி பெற்ற ரோம சாம்ராஜ்யம் எண்ணிலடங்காத நாடுகளை தன் ஆளுகைக்குட்படுத்தியது, வெற்றி கொள்ளப்பட்ட நாடுகள் கொடுக்கும் கப்பத்தால் தன்னை செல்வமுடையதாக்கிற்று. ஒரு போரில் கூட தோல்வியடையாது, சிறியதொரு நாடு உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களில் ஒன்றாகியது. ஆளவந்த பேரரசர்களின் வல்லமையின் எல்லை வானம் மட்டுமேயாகும். இந்த வல்லமை மிகப்பெரிதாக இருந்ததால், மக்களால் இவர்கள் வாழும் தெய்வங்களாக வணங்கப்பட்டனர்.
உதாரணமாக, பேரரசர்கள் தம்மைப் போன்ற உருவங்களால் சிலைகளைச் செய்து அவற்றிற்கு முன்பாக மக்களை மண்டியிடச் சொல்வது பழக்கத்திலுள்ள ஒன்றாயிருந்தது. இப்பேரரசர்கள் தம்மை தெய்வங்களாக பிரகடனப்படுத்தியபோது, இயேசுவை விசுவாசிப்பவர்கள் அவர்களின் முழுவல்லமைக்கும் கேடு விளைவிப்பவர்களாகவே கருதப்பட்டார்கள். கிறிஸ்தவர்கள் கூடுவதை சட்டத்திற்கு எதிரானதாக்கி, அவர்களை நசுக்குவதிலும் ஈடுபட்டார்கள், விசுவாசிகளைத் துன்புறுத்தி, கைது செய்து, சிறையிலடைத்து, அவர்களின் விசுவாசத்திற்காக சில நேரங்களில் மரணதண்டனையையும் அளித்தார்கள். இந்த வரலாற்று பின்னனியில்தான் ஆதி கிறிஸ்தவர்கள் உபத்திரவங்களிலிருந்து தப்பிப்பதற்காக மரித்தோரிற்கான கல்லறை இருக்கும் நிலத்திற்கு அடியில் மறைந்தார்கள், இந்த உபத்திரவங்களே அவர்கள் தம் நீதியின் விசுவாசத்தைக் காப்பதற்கு இரத்தசாட்சியத்துவத்தை தழுவச் செய்தது.
ஆதிசபையின் காலத்தில் இரத்தசாட்சிகள் இப்படித்தான் தோன்றினார்கள். அக்காலத்திய பரிசுத்தவான்கள், பேரரசர்களின் அதிகாரங்களை ஒப்புக்கொள்ள மறுத்தமைக்காக மட்டும் இரத்தசாட்சியாக மரிக்கவில்லை. அவர்கள் உலகப் பூர்வமான அதிகாரத்தை ஏற்றுக்கொண்டார்கள், ஆனால் அந்த அதிகாரமானது மனிதர்களை ஆராதித்து இயேசுவை அவர்களின் இருதயங்களிலிருந்து கைவிடும்படியாக வலியுறுத்தியபோது, தம் வாழ்வு போனாலும் கூட சரியென கூறி, அதனை மறுத்தார்கள். ரோம பேரரசர்கள் கிறிஸ்தவர்களை இயேசுவை மறுக்கச் சொல்லி தம்மை மட்டுமே பேரரசர்களாக ஆராதிக்கச் சொல்லவில்லை, ஆனால் தம்மை தெய்வங்களாகவும் ஆராதிக்கக் கூறினர். அத்தகைய கட்டளைகளுக்கு முன் அடிபணிய முடியாத, மறுத்த ஆதி கிறிஸ்தவர்கள் தம் விசுவாசத்தை காக்க உபத்திரவமடைந்து இரத்தசாட்சிகளாக மரித்தனர். அவர்களுக்கு மத சம்பந்தமான சுதந்திரத்தை எடுத்து வந்த, கி.பி. 313 இன் மிலான் பிரகடனம் வரை இது தொடர்ந்தது. இப்படியாக நமக்கு முன்பு விசுவாச மூதாதையர்களைப் போல் நம் விசுவாசத்தை கைவிடுவதை விட நீதியின் மரணத்தைச் சந்திக்கலாம்.
சிறிய ஆசியாவின் ஏழுசபைகளைக் குறித்த மேற்கண்ட வசனங்கள் அக்காலத்தின் சூழ்நிலைகளையும், நிலைகளையும் பற்றிய விளக்கம் மட்டுமல்லாது, இது வரப்போகும் உலகத்தைக் குறித்த வெளிப்படுத்தலுமாகும். கர்த்தரின் ஊழியர்களும் அவரின் பரிசுத்தவான்களும் தம் விசுவாசத்தைக் காப்பதற்கு இரத்தசாட்சியாக மரிப்பார்கள் என்று இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை நாம் காணலாம். ரோம சாம்ராஜ்ய நாட்களில் நடந்தது போலவே, இன்றைய நாளின் அவதாரமாக ரோம சக்கரவர்த்தியைப் போன்று முழு அதிகாரமும் படைத்த ஒருவனின் காலம் வரும். அவன் தன் இரும்புக் கைகளின் ஆளுகைக்கு அனைவரையும் உட்படுத்துவான், அவன் தம் சாயலாக சிலைகளைச் செய்து, அதனை வணங்கும்படி அனைவரையும் வலியுறுத்தி, தன்னை தெய்வமாக ஆராதிக்கும்படிக் கூறுவான். இது நம்முடைய காலத்திலிருந்து அதிக தொலைவில் இல்லை, இக்காலம் வரும்போது, அநேக பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியத்துவத்தை நோக்கி ஆதிகால சபையினரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவர்.
ஆகவே, ஆசியாவின் ஏழுசபைகளுக்கும் நம் தேவன் அருளிய புத்திமதி வார்த்தைகளை நம் இருதயங்களில் வைத்திருக்க வேண்டும். ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கு வாழ்த்துக்களையும் ஊக்கமூட்டும் வார்த்தைகளையும் புத்திமதியையும் கூறிய கர்த்தர் வாக்குத்தத்தம் செய்தார். “ஜெயங்கொள்ளுகிறவன்” “பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிப்பான்” மேலும் அவன் “கிரீடத்தையும்” “மறைவான மன்னாவைப் புசிக்கவும்” “விடிவெள்ளி நட்சத்திரத்தையும்” இன்னும் பலவற்றையும் அவன் பெறுவான்! தம் இரத்தசாட்சிகளின் மூலம் ஜெயம் கொள்ளுகிறவர்களுக்கு கர்த்தர் அளிக்கும் வாக்குத்தத்தம் இதுவே, பரலோகத்தின் அனைத்து நித்திய ஆசீர்வாதங்களையும் அவர் அருளுவார்.
அப்படியானால், ஆதிசபையின் பரிசுத்தவான்களால் இரத்தசாட்சியாக எப்படி மரிக்க முடிந்தது? கர்த்தரின் ஊழியர்களாலும் அவரின் பரிசுத்தவான்களாலுமே இரத்தசாட்சியாக மரிக்கமுடியுமென்பதை முதலில் நம் நினைவில் வைத்திருக்க வேண்டும். இயேசுவைத் தம் இரட்சகராக விசுவாசிப்பவர்கள் உபத்திரவங்களுக்கு அடிபணியாதவர்களும், தேவன் மீதுள்ள விசுவாசத்தையும் நம்பிக்கையையும் பற்றிக்கொள்பவர்களாலும் மட்டுமே இரத்தசாட்சியாக முடியும்.
எபேசு சபையை கண்டிக்கும் அப்போஸ்தலனாகிய யோவான் பத்மு தீவில் நாடு கடத்தப்பட்டவனாயிருந்தான், இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் கடைசியாக உயிருடனிருந்தவன் அவனே. மற்ற எல்லா அப்போஸ்தலர்களும் மற்ற பரிசுத்தவான்களும் ஏற்கெனவே இரத்தசாட்சியாயினர். வரலாற்றின்படி பேசினால், ஆசியாவின் ஏழுசபைகளின் பரிசுத்தவான்கள் கி. பி. 313 வரை இரத்தசாட்சியாக மரித்த எண்ணிலடங்கா கிறிஸ்தவர்களில் சிலராவர். ரோம அதிகாரிகளின் உபத்திரவங்களுக்கு பயந்து போய், பூமிக்கு கீழ் சென்று, அவர்களின் பிடியிலிருந்து தப்பிக்க சுரங்கங்களைத் தோண்டி, கல்லில் குடையப்பட்ட கல்லறைகளில் கூடி ஆராதித்தனர் - இப்படியிருந்தும் இதற்கு மேலிருந்தும் கூட அவர்கள் தம் விசுவாசத்தை மறுதலிக்காமல் இரத்தசாட்சியத்தை வேண்டித் தழுவினார்கள்.
எபேசு சபை உட்பட, ஆசியாவின் ஏழுசபைகளின் ஊழியர்களும் பரிசுத்தவான்களும், கர்த்தரால் கண்டிக்கப்பட்டாலும் கூட, அவர்கள் அனைவரும் இரத்தசாட்சியத்தைத் தழுவினர். அவர்களை இரத்தசாட்சியாக மரிக்கச் செய்தது தேவன் மீதிருந்த அவர்களின் விசுவாசமே. அவர்களெல்லாம் தேவனைக் கர்த்தராகவும், அவர் தம் அனைத்துப் பாவங்களையும் எடுத்துப்போட்டார் என்றும், ஆயிரவருட அரசாட்சிக்கும் புதியவானத்திற்கும் புதிய பூமிக்கும் தம்மை வழி நடத்தும் மேய்ப்பர் அவரே என்றும் விசுவாசித்தனர். இந்த விசுவாசமும் நம்பிக்கையின் உணர்த்துதலுமே, இரத்தசாட்சியாக மரிக்கும் போதுள்ள மரணவேதனையையும் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் மேற்கொள்ளச் செய்தது.
நாம் இப்போது முடிவின் காலங்களில் இருக்கிறோம். இவ்வுலகம் ஒரு அதிகாரத்தில் கீழ் வந்து முழு வல்லமையும் பெற்றிருக்கும் ஆளுபவன் ஒருவன் தோன்றும் காலம் அதிக தொலைவில் இல்லை. வெளி 13 இல் எழுதப்பட்டுள்ளதைப் போல் இந்த சர்வாதிகாரி, பரிசுத்தவான்களின் வாழ்வில் பயமுண்டாக்கி அவர்களின் விசுவாசத்தை மறுதலிக்கும்படி வலியுறுத்துவான். ஆனால், முடிவு காலத்தின் பரிசுத்தவான்களாகிய நம்மால் அவனுடைய பயமுறுத்தல்களையும், பலவந்தத்தையும் மேற்கொண்டு நாம் இரத்தசாட்சியாவதன் மூலம் நமது விசுவாசத்தைப் பாதுகாப்போம், ஏனெனில் ஆதிசபையின் பரிசுத்தவான்களிடமிருந்த அதே விசுவாசம் நம்மிடமும் இருக்கிறது.
4-5 வசனங்களில் எபேசு சபையைக் கர்த்தர் கண்டித்தார், அவர் கூறினார், “ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.” இதன் பொருள் என்ன? இதன் பொருள் எபேசுசபை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விட்டுவிட்டது என்பதாகும். எபேசு சபையினர் உட்பட, ஆதிசபையின் அனைத்து பரிசுத்தவான்களும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்தனர். இது ஏனெனில் இயேசுவின் சீடர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கித்து அதனை பரப்பியிருந்தனர். ஆகவே, இக்காலத்தின் பரிசுத்தவான்களிடம் இருந்தது, அப்போஸ்தலர்களிடமிருந்து பெற்ற முழு நற்செய்தியாகும், அது மனிதர்கள் ஏற்படுத்திய சிலுவை இரத்தத்தை மட்டும் விசுவாசிக்கும் தவறான நற்செய்தியல்ல.
எபேசு சபையின் ஊழியன் ஆதியில் பெற்றிருந்த அன்பை இழந்து போனதாக இங்கு கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவெனில் எபேசு சபையின் ஊழியன் சபையின் ஊழியத்தில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை கைவிட்டான் என்பதாகும். இதனால் தான் அவன் மனந்திரும்பாவிட்டால், அதனிடத்திலிருந்து விளக்குத்தண்டை எடுத்துப் போடுவதாக தேவன் கூறினார். விளக்குத் தண்டை அவனிடமிருந்து எடுத்துபோடுவது என்பது அச்சபையை அகற்றிப்போடுவதாகும். இதன் பொருள் என்னவெனில் எபேசு சபையில் பரிசுத்த ஆவியானவரால் தொடர்ந்து செயல்படமுடியாது என்பதாகும்.
எபேசு சபையின் ஊழியனுக்கு, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்குத் திரும்புவது அத்தனைக் கடினமான ஒன்றாயிருக்கவில்லை. ஆனால் இது அவன் பிரச்சினைகளில் சிறியதே. அவனைக் கஷ்டத்திற்குள்ளாக்கியது எதுவெனில், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இருதயப்பூர்வமாக விசுவாசித்தபோதிலும் அதனை வெளிப்படைய பிரசங்கிப்பதில் தவறினான். இயேசுவை தம் இரட்சகராக அறிக்கைச் செய்தவர்களை எல்லாம் அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காதவர்களைக்கூட அவன் தன் சபையில் சேர்த்துக்கொண்டான். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தை விசுவாசிகள் அறிக்கைச் செய்யும்போது அவர்கள் இரத்தசாட்சியாக மரிப்பதற்கு ஆயத்தமாயிருந்தனர்.
ஆகவே, வேறுவார்த்தைகளில் கூறுவதானால், கர்த்தர் மீதும் அவரின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதும் அவர்களுக்கு ஒரேமாதிரியான விசுவாசமிருக்கிறதா இல்லையா என்று பாராமல் தன் ஆலயத்திற்கு வந்த அனைவரையும் வரவேற்றான். கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசிப்பது அத்தனைக் கடினமாக இருந்ததால் இத்தகைய கடினங்கள் அநேகர் சபையில் சேருவதைத் தடுக்குமென எபேசு சபையின் ஊழியன் பயந்தமையால், சரியான சொற்களின் மூலமாக முழு உண்மையையும் பிரசங்கிப்பதில் அவன் தவறினான்.
சத்தியமில்லாத இடத்தில் பரிசுத்த ஆவியானவரால் வாசஞ்செய்ய முடியாதாகையால், விளக்குத்தண்டை அகற்றிப்போடுவதாக கர்த்தர் கூறினார். எபேசு சபையின் ஊழியனும் பரிசுத்தவான்களும் சரிவர செயல்புரியவில்லை என்பதால் அச்சபையை எடுத்துப்போடப்போவதாக கர்த்தர் கூறாமல்; அச்சபையில் சத்தியம் இராததால் அவரால் தொடர்ந்து அங்கே சஞ்சரிக்க முடியாது என பொருள்படும்படி அவர் கூறினார்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை கர்த்தரின் சபை பின்பற்றுவது முற்றிலும் அவசியமானது. கர்த்தரின் ஊழியர்களும் பரிசுத்தவான்களும் நற்செய்தியை விசுவாசிப்பது மட்டுமின்றி அதனை தெளிவாக, சரியான சொற்களின் மூலம் பிரசங்கிக்கவும் போதிக்கவும் வேண்டும், ஏனெனில் இந்த நற்செய்தியில் மட்டுமே கர்த்தரின் அன்பையும், அவர் கிருபையையும் நமக்கான அனைத்து ஆசீர்வாதங்களையும் காணமுடியும்.
இந்த நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு பதிலாக, சிலுவையின் இரத்தத்தை மட்டும் விசுவாசிப்பவர்களை எபேசு சபையின் ஊழியன் தன் சபையில் அனுமதித்தான். ஆனால் மறுபடியும் பிறந்த ஊழியனோ, பரிசுத்தவானோ, அல்லது ஆலயமோ நம்முடைய அனைத்துப் பாவங்களையும் எடுத்துப்போட்ட இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றிலான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்தும் அதனைப் பிரசங்கிக்காவிட்டால் நம் தேவனின் அனைத்து செயல்களும் பயனற்றதாகிவிடும்.
தேவனுடைய கண்களுக்கு நாம் குறைவுள்ளவர்களாகத் தோன்றினாலும், நற்செய்தியை விசுவாசித்து அதனைப் பிரசங்கித்தால், கர்த்தர் நம்மிடம் பரிசுத்த ஆவியானவராக சஞ்சரித்து, நமக்குள் செயல்படமுடியும். கர்த்தரின் ஊழியர்களோ அல்லது பரிசுத்தவான்களோ முற்றிலும் குறைவுடையவர்களாய் இருந்தாலும், அவரால் தம் வார்த்தையின் மூலம் அவர்களுக்கு போதித்து வழி நடத்த முடியும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சபையில் பரிசுத்த ஆவியானவர் காணப்படுகிறார். பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் அங்கிருப்பதின் பொருள் அந்த ஆலயம் பரிசுத்தமானது என்பதைக் குறிக்கிறது.
கர்த்தரின் ஊழியர்களோ அல்லது பரிசுத்தவான்களோ நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கிக்காவிட்டால் அவர்களிடம் பரிசுத்தம் இருக்க முடியாது. தம்மிடம் பாவமில்லை என்று அவர்களால் கூறமுடியும், ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிக்காத இடத்தில் பரிசுத்தத்தைக் காணமுடியாது.
ஆதிசபையின் பரிசுத்தவான்கள் விசுவாசித்த நற்செய்தி, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியேயாகும். இந்நற்செய்தியானது, தேவன் தன் ஞானஸ்நானத்தினால் உலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துக்கொண்டு தன் சிலுவை மரணத்தின் மூலம் அவற்றை அகற்றி மனிதகுலத்தை இரட்சிக்க அவர் வந்தார் என்பதாயிருக்கிறது. அவர் தன் ஞானஸ்நானத்தின் மூலம் நம் எல்லா பலவீனங்களையும் குறைபாடுகளையும் எடுத்துப்போட்டார். கர்த்தர் நம்மிலுள்ள பலவீனம் மற்றும் குறையிலிருந்து நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டு நம் நித்திய மேய்ப்பராகினார்.
இத்தனையாய் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்போது, எவரால் தேவனை ரோம பேரரசனுடம் ஒப்பிடமுடியும்? ஒரு சாதாரண மனிதனை/மனுஷியை தெய்வமாக எப்படி ஆராதிக்கமுடியும்? கர்த்தருடைய கிருபையானது மிகப்பெரியதாகவும் அளவிட முடியாததாகவும் இருப்பதால், ரோம பேரரசனின் வசீகரிப்பினாலோ பயமுறுத்துதலாலோ பரிசுத்தவான்களை கர்த்தரின் அன்பை மறுதலிக்கும்படிச் செய்யமுடியாது, அவர்கள் தம் விசுவாசத்தை பாதுகாக்க, விருப்பத்துடனும் மகிழ்ச்சியுடனும், இரத்தசாட்சியத்துவத்தைத் தழுவினர். தம்முடைய விசுவாசத்தை இல்லை என்று கூறச் செய்யும் பயமுறுத்தல்களையும், அவர்களை வசீகரித்து, பொருளாதாயத்திற்காக விசுவாசத்தை விட்டுவிடச் செய்யும் அதிகாரிகளாக நியமிக்கச் செய்யப்பட்ட முயற்சிகளையும் தரைமட்டமாக்கினர். எதனாலும் அவர்களை அவர்களின் விசுவாசத்தை மறுத்து கர்த்தரை கைவிடும்படிச் செய்ய முடியவில்லை, இந்த குறைவுபடாத விசுவாசமே அவர்களை இரத்தசாட்சியாக்க அனுமதித்தது.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக தம்மைத் தம் பாவங்களிலிருந்து விடுவித்த கர்த்தரின் கிருபைக்கும் அன்புக்கும் இரத்தசாட்சிகளின் இருதயங்கள் நன்றியால் நிரம்பியிருந்தன. கர்த்தரின் அன்புக்கு துரோகம் செய்ய முடியாத விசுவாசமானது அவர்களை அவர்களின் பாவங்களிலிருந்து நித்தியமாக இரட்சித்ததால் அவர்கள் தவறி விழுவதற்கு பதிலாக இரத்தசாட்சியாயினர். ஒரு நேரம் வரும், ரோம பேரரசர்கள் ஆதிசபையின் பரிசுத்தவான்கள், தம்மை தெய்வீகத்தன்மை உடையவர்களாகவும் தெய்வங்களாகவும் அங்கீகரிக்க வலியுறுத்தப்பட்டதைப் போல், நம் விசுவாசத்தை மறுதலிக்கும்படி துன்புறுத்தப்படுவோம். இப்படியாக நடக்கும்போது, நம்முடைய விசுவாசத் தந்தைகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இரத்தசாட்சியத்துவத்தின் மூலம் நம் விசுவாசத்தை பாதுகாக்க வேண்டும்.
நாம் முழுவதுமாக குறைபாடுகளுடையவர்களாயிருந்தாலும் கர்த்தர் நம்மை மிகவும் நேசித்ததால் நம்முடைய குறைபாடுகளையும் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டார். அவருடைய மகிமைக்கு முன்பாக எத்தனை சிறியவர்களாக நாம் வந்தாலும், அவர் தம் கரங்களில் நம்மை ஏற்றுக்கொண்டார். அவர் நம்மைத் தழுவமட்டுமில்லை, நம் அனைத்து பாவப்பிரச்சினைகளையும் அழிவையும் தீர்த்து நித்தியமாக நம்மை அவரின் பிள்ளைகளாகவும் மணவாட்டிகளுமாக மாற்றினார். இதனால் தான் அவர் மீதுள்ள விசுவாசத்தை நம்மால் மறுதலிக்க முடியாது என்பதோடு இதனால்தான் அவர் பெயரிற்காக விருப்பத்துடனும் மகிழ்ச்சியுடனும் இரத்தசாட்சியத்தைத் தழுவுகிறோம். இரத்தசாட்சியாக மடிப்பதானது கர்த்தரின் முதல் நேசத்தை பாதுகாப்பதாகும். அது மனித உணர்ச்சிகளினால் உண்டானதல்ல, நம் பலவீனத்தையும் குறைபாடுகளையும் பொருட்படுத்தாது கர்த்தர் நமக்கு அனைத்து ஆசீர்வாதங்களையும் கொடுத்தார் என்பதின் மீதுள்ள விசுவாசத்தினால் அது உண்டாகியது. நாம் இரத்தசாட்சியாக மரிப்பதென்பது நம்முடைய பலத்தினால் நடக்கக்கூடியதல்ல, அது கர்த்தர் பெரியவர் என்ற நமது விசுவாசத்தினால் ஆகிறது.
தம் நாட்டிற்காகவும் கொள்கைக்காகவும் தியாகியாக மரிக்கும் மக்கள் இருக்கிறார்கள்தான். தாம் நினைப்பது சரியென விசுவாசிக்கும் வளைக்கமுடியாதவர்களாய் இவர்கள் உள்ளனர், அத்துடன் அதற்காக தம் உயிரைக் கொடுக்கவும் தயாராயுள்ளனர். ஆனால் எப்படி? நீரினாலும் ஆவியினாலும் இயேசுகிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தினாலும் மறுபடியும் பிறந்து கர்த்தரின் பிள்ளைகளான நாம் எப்படி இரத்தசாட்சியாக மரிக்க முடியும்? நாம் நற்செய்திக்கு பெரிதும் நன்றிபட்டவர்களாயிருப்பதால் நாம் இரத்தசாட்சியாக வேண்டும், இந்த நற்செய்தியின் மூலம் தேவன் நம்மை நேசித்ததுடன் நம்மை இரட்சிக்கவும் செய்தார். நம்மிடம் எண்ணிலடங்கா குறைபாடுகளிலிருந்தும், நம்மை அவர் ஏற்றுக்கொண்டதாலும், நமக்கவர் பரிசுத்த ஆவியானவரைக் கொடுத்ததாலும், அவர் நம்மைத் தம் மக்களாக்கி அவரின் சன்னிதானத்தில் நித்தியமாக வாழும்படி ஆசீர்வதித்திருப்பதாலும், நம்மால் அவரைக் கைவிட முடியாது.
புதிய வானத்தையும் புதிய பூமியையும் கர்த்தர் நமக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறார், இதற்காகவாவது நம் விசுவாசத்தை விட்டுவிடக்கூடாது. எது நடந்தலும் கூட - கடைசி காலத்தில் அந்திகிறிஸ்து நம்மை பயமுறுத்தி மரிக்கும்படியாக துன்பப்படுத்தினாலும் கூட - நாம் நம் தேவனையோ அவரின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியையோ மறுதலிக்கக் கூடாது. அந்திகிறிஸ்துவின் காலுக்கடியில் இழுத்துச் செல்லப்பட்டு மரிக்கும்படியாக நேர்ந்தாலும், நம்மை இரட்சித்த கர்த்தரின் கிருபையையும் அன்பையும் நாம் மறுதலிக்கக் கூடாது. ஒரு பழமொழி கூறுவதைப் போல நாம் மரித்தாலும் கூட நம் உயிரற்ற உடல்களால் கூட தேவனை நம்மால் மறுதலிக்க முடியாது. நாம் எதையெல்லாமோ செய்யத்துணிவோம், ஆனால் ஒன்றே ஒன்றிடம் மட்டும் தோல்வியடையலாகாது: நம்மை இரட்சித்த கிறிஸ்துவின் அன்பை மட்டும் விட்டுவிடவோ மறுதலிக்கவோ கூடாது.
நம்மிடம் குறைபாடுகளிருப்பதால் அந்திகிறிஸ்து நம்மீது கிருபையாயிருப்பான் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அப்படி இல்லை! அவனால் அத்தனை கரிசனம் காட்ட முடியாது. ஆனால் நம்முடைய தேவன் நம்மை முழுமையாகவும் நிறைவாகவும் செய்தார், அதற்காக நம்முடைய பாவப்பிரச்சினைகளையெல்லாம் தன் மீது ஏற்றுக்கொண்டு நம்மிடத்திலிருந்து மரித்தார், நாம் எத்தனை பலவீனமாகவும், குறைவானவர்களாகவும் இருக்கிறோம் என்பதை பொருட்படுத்தவில்லை. அதனால் தான் நீர் மற்றும் ஆவியின் மூலமாக நம்மை விடுதலையாக்கிய தேவனின் இரட்சிப்பின் அன்பை நம்மால் விட்டுவிடமுடியாது, அதனால்தான் இந்த ஆதியிலிருந்த அன்பை நம்மால் விட்டுவிடமுடியாது. நம்முடைய இருதயங்களால் முதலில் கைவிடாது எதையும் நம்மால் கைவிடமுடியாது.
அதுபோலவே, நம் விசுவாசத்தை நம்மிருதயங்களின் அடி ஆழத்தில் வைத்தால், எத்தனை பயமுறுத்தல்கள் வந்தாலும், வசீகரிக்கப்பட்டாலும், கட்டாய படுத்தப்பட்டாலும் முடிவுவரை நம் விசுவாசத்தை காத்துக்கொள்ளமுடியும். கர்த்தர் நம்மீது வைத்திருக்கும் விலையேறப்பட்ட அன்பை நம்மிருதயங்களில் அறிந்து, இந்த அன்பை முடிவுவரை பற்றியிருந்தால், நற்செய்தியை கடைசி தினம் வரை பாதுகாத்துக்கொள்ள முடியும். விசுவாசத்தினால் நடப்பவர்களுக்கு இரத்தசாட்சியைத் தழுவிக் கொள்வதற்கு கடினமேயில்லை.
நாம் நமது இரத்தசாட்சியாக மரிப்பதைக் குறித்து தீவிரமாக சிந்தனை செய்ய வேண்டும். இரத்தசாட்சி என்பது தொடர்ச்சியான வலி மற்றும் துன்பம் மட்டும் இல்லை, நம்முடைய மாமிசம் எத்தகையது என்றால், ஒரு ஊசி சிறிது குத்தினால் கூட தாங்கமுடியாத வேதனையை அது எடுத்து வருகிறது. இத்தகைய வலிகளைப் பொறுத்துக்கொள்வது மட்டும் இரத்தசாட்சியல்ல. மாறாக, இரத்தசாட்சி என்பது உங்கள் உயிரையே விட்டுவிடுவதாகும். சரீர வலிகளால் மட்டும் துன்பப்படாமல், ஒருவன் தன் உயிரையே விட்டுவிடுவதே இரத்தசாட்சியாகும். அந்திகிறிஸ்து நம்மை அழைத்து அவனை தெய்வமாக வணங்கும்படி வலியுறுத்தும்போதும், நம் மரணப்பரியந்தமும் நாம் எதிர்ப்போம். நம்முடைய தேவனே கர்த்தராயிருப்பதாலும், அவரே வணங்கத்தக்கவராயிருப்பதாலும், அவருடைய பெயரைக் காக்க இரத்தசாட்சியாக நாம் மரிப்பது சரியானதே. இந்த விசுவாசத்தை எதற்கும் விட்டுக் கொடுக்க நம்மால் இயலாது.
கர்த்தரை மறுத்து, தன்னையே தெய்வமாக வழிபட கூறும் அந்திகிறிஸ்துவானவன் அப்படி வணங்கத் தகுதியானவனா? அப்படி இல்லைதான்! கர்த்தருக்கு மட்டுமே உலகையும் பிரபஞ்சத்தையும் படைக்கும் வல்லமை இருக்கிறது. வாழ்விற்கும் மரணத்திற்கும் மேல் அவருக்கு மட்டுமே வல்லமை இருக்கிறது, அவர் மட்டுமே களங்கமில்லாதவர், பாவமில்லாதவர், படைப்புகள் அனைத்துக்கும் முன்பு அவரே நீதிமான், இவ்வுலகின் பாவங்களை எடுத்துப்போடுவதற்கான வல்லமை அவரிடம் மட்டுமே இருக்கிறது. அப்படியானால் அந்திகிறிஸ்து எப்படிப்பட்டவன்? அந்திகிறிஸ்துவிடம் இருப்பதெல்லாம் உலகச் சம்பந்தமான வல்லமையே. இதனால் தான் நம் தேவனை அவனுக்கு விட்டுகொடுக்க முடியாது, இதனால் தான் மகத்துவமுள்ள கர்த்தர் மீதுள்ள நம் விசுவாசத்திற்கு எப்போதும் நம்மால் துரோகம் செய்ய முடியாது.
நிச்சயமாக நம்மை நித்திய மகிழ்ச்சியுடையவர்களாக்கப் போவது கர்த்தர் மட்டுமே. இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து பாவமற்றவர்களாகியவர்களை மகிமையின் சரீரத்துடன் உயிரோடெழும்பி, ஆயிர வருட அரசாட்சிக்கும் புதிய வானம் மற்றும் புதிய பூமிக்கும் கதவைத் திறப்பார். ஆனால் அந்திகிறிஸ்துவிற்கு முன்பாக வளைபவர்கள் நித்திய தண்டனையைப் பெற்று சாத்தானுடனே கூட நரகத்தினுள் எரியப்படுவர். மாறிப்போகும் வலிக்கும் துன்பத்திற்கும் பயந்து அந்திகிறிஸ்துவுடன் நின்று நம்முடைய நித்திய மகிழ்ச்சியை தூக்கி எரிவதே மிக முட்டாள்தனமான காரியமாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை தம்மிருதயங்களில் விசுவாசிப்பவர்கள் இந்த உண்மையை அறிந்து அந்திகிறிஸ்துவை தைரியமாக எதிர்த்து நின்று இரத்தசாட்சியாக மரித்து, அவர்களின் இந்த செயலுக்காக நித்திய மகிழ்ச்சியை பரிசாக பெறுவர்.
நீங்களும் நானும் இரத்தசாட்சியாக வேண்டியவர்கள். எத்தவறையும் செய்யவேண்டாம்: கறுப்புக்குதிரையின் காலம் முடியும்போது மங்கின நிறக்குதிரையின் காலம் வரும், அப்பொழுது, அந்திகிறிஸ்து தோன்றுவான், அவனுடன் ஏழு எக்காளங்களின் வாதைகளும் தொடங்கும். அந்திகிறிஸ்து நிச்சயமாகத் தோன்றுவான், பரிசுத்தவான்களாகிய நாம் நிச்சயமாக இரத்தசாட்சியாவோம், நாம் நம் உயிர்த்தெழுதலுடன் மிக நிச்சயமாக எடுத்துக்கொள்ளப்படுவோம். மிக நிச்சயமாக ஆயிரவருட அரசாட்சிக்குள் செல்வோம். இதனால் தான் அந்திகிறிஸ்து நம்மை துன்புறுத்தி நம் மரணத்தை வலியுறுத்தும்போது நமது சித்தத்துடன் இரத்தசாட்சியாக்கப்படுவோம்.
குவோ வாடிஸ், என்பது ஒரு பழைய திரைப்படமாகும் அது அநேக கிறிஸ்தவர்கள் தம் விசுவாசத்தைக் காக்க தம் வாழ்வையே கொடுத்ததைக் காட்டுகிறது, அவர்களை மரணத்திற்குள்ளாக்கும் போதும் அவர்கள் அவர் புகழைப் பாடினார்கள். இத்திரைப்படம் ஒரு புனைகதையாகும், ஆனால் அதன் பின்னனியான வரலாறு உண்மையாகும் - அதாவது, அநேக கிறிஸ்தவர்கள் தம் விசுவாசத்தைக் காக்க தம் வாழ்வையே கொடுத்தனர். அவர்கள் ஏன் அப்படிச் செய்தனர்? ரோம அதிகாரிகள் அவர்களிடம் வலுயுறுத்திய - கர்த்தரை மறுத்து, அதற்கு பதிலாக மற்ற கடவுள்களை ஆராதிப்பது, அவர்களின் விசுவாசத்தை வீசி எறிவது - ஆகியவை அவர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல.
ரோம பேரரசர்கள் வலியுறுத்தியதைப் போல் அவர்கள் தம் கர்த்தரை விட்டிருந்தார்களானால் எல்லாவற்றையும் அவர்கள் மாற்றியிருப்பார்கள். சக்கரவர்த்தி அவர்களின் தெய்வமாகியிருப்பான், அவர்களைத் தன் கொடுங்கோலினால் அடக்கியிருப்பான், போர்களில் அவன் கைப்பாவைகளாக மரித்திருப்பர். அவர்களால் பாவத்திலிருந்து விடுதலையாகவும் முடியாது, புதியவானம் புதிய பூமி ஆகியவற்றிற்குள்ளும் செல்ல முடியாது. இதனால் தான் அவர்களால் தம் விசுவாசத்திற்கு துரோகஞ்செய்ய முடியவில்லை, அதனால் தான் மரணத்தை மகிழ்ச்சியுடனும் புகழுதலுடனும் சந்திப்பதைத் தேர்ந்தெடுத்தனர். மரிக்கும் போது கூட தேவனைப் புகழ்ந்து பாட அவர்களால் முடிந்தது, ஏனெனில் மரிக்கும் வலியை விட அவர்களின் நம்பிக்கை மிகவும் பெரிதாயிருந்தது.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பாதுகாப்பது நமக்கு மிகவும் முக்கியமானதாகும். நம்பிக்கையுடன் வாழ்ந்திருப்பதுவும் நமக்கு முக்கியமானதாகும், நம்முடைய மரணத்திற்கு பிறகு மகிழ்ச்சியினாலும் மகிமையினாலும் நிறைந்த புதிய உலகில் நித்திய வாழ்வு காத்திருக்கிறது என விசுவாசிக்கவேண்டும்.
தேவனுக்காக எப்போதாவது துன்பப்பட்டிருக்கிறீர்களா? உங்களுடைய குறைபாடுகளுக்கும், தவறுகளுக்கும் அல்லாமல், தேவனுக்காக உண்மையாகவே நீங்கள் துன்பப்பட்டதுண்டா? நம் துன்பம் தேவனுக்கானதாக இருந்தால், நம் துன்பமெல்லாம் பெரிதான சந்தோஷமாக மாறும். “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும். மகிமைக்கு ஒப்பிடத் தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.” (ரோமர் 8:18) என்று அப்போஸ்தலனாகிய பவுல் தன் மகிச்சியைத் தெரிவித்தான். நமக்குள் வெளிப்படும் மகிமையின் மகிழ்ச்சியானது தேவனுக்காக நாம் துன்பப்படுவதின் வலியை விட மிக்ப்பெரிதானது, இப்போது நாம் படும்பாடுகள், பெரிதான மகிழ்ச்சி, நம் விசுவாசத்தின் ஆனந்தம் ஆகியவற்றின் அடியில் புதையுண்டு போகும்.
வேறுவார்த்தைகளில் கூறுவதானால், ஆதிசபையின் பரிசுத்தவான்களாலும் இரத்தசாட்சிகளாலும் தம் வேதனையை மேற்கொண்டு தேவனுக்காக தம் வாழ்வைக் கொடுக்க முடிந்தது, ஏனெனில் இப்போதைய துன்பத்தைவிட அவர்களுக்காக காத்திருக்கும் மகிழ்ச்சி மிகப்பெரிதானது என அவர்களுக்குத் தெரியும். அவர்களின் இரத்தசாட்சி, அவர்களின் வலி மற்றும் தொடர்ந்த வேதனையை தாங்கு திறமையின் விளைவல்ல, அது அவர்களுக்காக காத்திருக்கும் மகிமையின் மீதுள்ள நம்பிக்கையினால் ஆயிற்று.
பொதுவாக, வலியுடன் அனுசரித்துப் போக வேண்டும் என எண்ணி வேதனையில் தொடர்ந்து வாழுகின்றனர். இது கடினமானதும் களைப்படையச் செய்வதுமான யுத்தமாகும். அவர்களுடைய விடாப்பிடியான செய்கை எதிர்பாராத முடிவுகளைத் தரும்போது, அவர்களின் தவிப்பு மிகவும் அதிகமாகிவிடுகிறது - அவர்களுடைய வேதனை எதற்குமில்லை! கிறிஸ்தவர்களாகிய நமக்கு, மகிழ்ச்சியும் நம் விடாமுயற்சியின் ஆனந்தமுமே பெரிதாகிவிடுகிறது, ஏனெனில் நம் நம்பிக்கை மற்றும் பரிசுகளைக் குறித்த பாதுகாப்புணர்வுடன் இருக்கிறோம். அவருடைய உண்மையுள்ள ஊழியர்களாக நம் முழு இருதயங்களுடன் தேவனுக்கு ஊழியம் செய்ய நம் மனதைத் திடப்படுத்தும் போது, நம்முடைய தற்போதைய இழப்புகளின் வலியைவிட, நமக்காக காத்திருக்கும் மகிழ்ச்சியும், சுகமும் மிகப்பெரியவை என நாம் அறிந்துகொள்வோம். இந்த மகிழ்ச்சிக்குள் நம் எல்லா கஷ்டங்களும் புதைக்கப்பட்டு விடுவதால், தேவனுக்காக நம் எல்லா வாழ்வையும் வாழலாம், அதற்கு மேலும், அவரின் பொருட்டு நாம் இரத்தசாட்சியத்துவத்தை தழுவலாம்.
மக்களிடம் ஆத்துமாக்களும், உணர்ச்சிகளும், சிந்தனைகளும், விசுவாசமும் இருக்கின்றன. மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களிடம் தேவனின் ஆவியானவர் சஞ்சரிப்பதால், அவர்கள் நீதியின் நிமித்தம் துன்புறுத்தப்படும்போது, அவர்களுக்கு காத்திருக்கும் மகிமைக்காக, விவரிக்கமுடியாத மகிழ்ச்சியை அடைவர். ஆனால் அவர்கள் முதல் நேசத்திலிருந்து விலகிச் செல்ல விரும்பினால், விளக்குத்தண்டை அகற்ற தேவன் தயங்கமாட்டார்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு தம் இருதயப் பூர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் ஊழியம் செய்தவர்கள் அப்படி வாழும் வாழ்க்கையை விரும்பமாட்டார்கள், அதன் பொருள் என்னவென்றால் முதல் அன்பாகிய நற்செய்திக்கு அதனை முற்றிலுமாக வீசி எரிந்து விடாவிட்டாலும் கூட, அதற்கு ஊழியம் செய்வதனால் கிடைக்கும் மகிழ்ச்சியிலிருந்து படிப்படியாக விலகினர் என்று இதற்கு பொருள்படும். அவர்கள் தம் சொந்த விசுவாசங்களைப் பற்றிக் கொண்டிருக்கலாம், ஆனால் அவர்கள் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் பெருமையில் பங்கேற்காது, இரட்சிக்கப்பட என்ன செய்யப்பட்டது என்று தெளிவாக அறியாவிட்டால் - அதாவது சிலுவை இரத்தம் இரட்சிப்பிற்கு போதுமானது அல்ல - என்றிருந்தால் - அவர்களுடைய விசுவாசம் தளர்ந்துபோயிருக்கும். இரத்தசாட்சியத்துவம் அவர்களுக்கு எட்டமுடியாததாயிருக்கும். கர்த்தர் அவர்களிடத்திலிருந்து விளக்குத் தண்டை எடுத்துப்போடுவார்.
நற்செய்திக்கு மகிழ்ச்சியுடனும், உறுதியுடனும் பணியாற்றுபவர்களால் விருப்பத்துடன் இரத்தசாட்சியத்துவத்தை தழுவ முடியும், ஏனெனில் முதல் நேசத்தை அவர்கள் விட்டுவிடவில்லை. கிறிஸ்துவின் அன்பை விசுவாசித்து அதனை பிரசங்கிப்பவர்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்களாக இருப்பதால், அவர்களால் இரத்தசாட்சியாக மரிக்க முடியும். நீங்கள் எத்னை திறமைசாலியாக இருந்தாலும், எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் நீங்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கவில்லையெனில் அவை பொருட்டல்ல, சபையானது அதனிடத்திலிருந்து அகற்றிப் போடப்படும். நாம் பற்றிக்கொள்ள வேண்டுமென கர்த்தர் விரும்பும் முக்கியமான செய்தி இதுவாகும். இந்த உண்மையை அறிந்து அதனை விசுவாசிக்கும்போது, கடைசி காலங்களில் நம்மிருதயங்களை புதிதாக்கி, தேவனின் பெயரிற்காக இரத்தசாட்சியாக மரிக்கமுடியும்.
நம்முடைய விசுவாசத்தை தவறவிடாது செய்யும் அடிப்படை சாராம்சம் எது? அது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கில்லாமல் நம் விசுவாசத்தின் வேலைகள் எதற்கு பயன்படமுடியும்? நம்மால் நம் விசுவாசத்தைக் கடைப் பிடிக்க முடிவதற்கான காரணம், கர்த்தர் நம்மை நேசித்து அவரின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் நம்மைத் தம் கரங்களினால் அரவணைத்ததே. இந்த அன்பு மாறாததாகவும் இது நம்மை மகிமைப்படுத்தும் அன்பாகவும் இருப்பதால் நம் விசுவாசத்தைக் கடைப்பிடித்து, அதனைத் தொடர்ந்து பிரசங்கிப்பதோடு, அதனை பரப்பவும் வேண்டும்.
நாம் பலவீனர்களாயிருந்தாலும் கூட, முடிவுவரை கர்த்தரை நோக்கி நம்மால் வேகமாகச் செல்ல முடியும், ஏனெனில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது நம்மை இரட்சித்தது, மேலும், இந்த நற்செய்தியினால் கிறிஸ்துவின் அன்பு காணப்படுகிறது. நாம் குறைகளினால் நிறைந்தவர்கள், ஆயினும் நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் தரிப்பிக்கப் பட்டிருப்பதால் நம் தேவனின் அன்பினால் நிரப்பப்பட்டிருக்கிறோம், நம் சகோதரர்களையும் சகோதரிகளையும், கர்த்தரின் ஊழியர்களையும், உலகின் அனைத்து ஆத்துமாக்களையும் நம்மால் நேசிக்க முடிகிறது. அடிப்படையில், நிறைவான அன்பு மனிதர்களிடமில்லை. நமக்குள் அன்பு இல்லாதிருப்பதால், நம்மால் யாரையும் நேசிக்க முடியாது, சுயநலமிகளாக நம்மை மட்டுமே நேசிக்க முடியும். மேற்பரப்பில் தோன்றுவதைக் கண்டு அநேக மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர், வெறும் நூலளவு அகலமே உள்ள பளபளப்பில் விழுந்து போகிறோம், மக்களின் வெளித்தோற்றத்தைக் கொண்டும் அவர்களிடமுள்ள பொருட்களைக் கண்டும் அவர்களை எடைபோடுகிறோம். ஆனால் உண்மை விசுவாசிகளின் நடுவே இருப்பது கர்த்தரின் அன்பாகும். நம் தேவனின் நிறைவான அன்பாகிய இது நற்செய்தியைப் பரப்ப நம்மை ஏதுவாக்குகிறது.
நம் தேவன் இவ்வுலகிற்கு வந்து, நம் குறைபாடுகளை எல்லாம் ஏற்றுக்கொள்ள ஞானஸ்நானம் பெற்று, நம்மை நம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்க நம்மை சுத்தம் செய்தார். அப்படியானால், நம்மை கர்த்தரின் பிள்ளைகளாகச் செய்த அவரின் முதல் அன்பினை எப்படி விட்டுச்செல்லமுடியும்? நாம் அநேக காரியங்களில் குறைவானவர்களாயிருக்கலாம். ஆனால் இந்த உண்மையில் சிறிதும் குறைவுடையவர்களாய் நாமிருக்கக் கூடாது. நம் முழு நம்பிக்கையுடனும் இந்த நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும். உபத்திரவத்தின் காலத்தில் மிக அவசியமான நம்பிக்கை இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே ஆகும். நாம் சோதனைகளையும் உபத்திரவங்களையும் சந்திக்கும் போது நம் விசுவாசத்தை பாதுகாப்பதற்கும், கஷ்டங்களை மேற்கொள்வதற்குமான பலம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்திலிருந்தே வருகிறது. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எண்ணிலடங்காத பிரச்சினைகளினால் களைப்படைந்தாலும் கூட, இந்த நற்செய்தியின் வல்லமையினால் நம் முகங்கள் மகிழ்ச்சியினால் ஒளி பெறும். இதுவே நம் தேவனின் அன்பாகும்.
சட்டப்ப்படியானவர்களின் பொறியில் இலகுவாக சிக்கிக் கொள்ளுபவர்களாக சில வேலைகளில் மக்கள் இருக்கிறார்கள். தாம் செய்தவற்றிற்காக கர்த்தர் தம்மை ஆசிர்வதிப்பதாக அவர்கள் எண்ணுகின்றனர். இது முற்றிலுமாக தவறு என்று நான் கூறமாட்டேன், ஏனெனில், தன்னை நேசிப்பவர்களை அவரும் நேசிப்பதாக தேவன் கூறினார். ஆனால் நம்மைப் பாவமற்றவர்களாக்கும் வரை அவர் கர்த்தர் இரட்சித்தமைக்கான காரணம் நாம் செய்த செயல்களினாலே அல்ல. அவர் நமக்கு வாக்குத்தத்தம் செய்தது என்னவென்று நமக்குத் தெரியுமாகையால், தம்முடைய நிறைவான சித்தத்தினாலும் அன்பினாலும் நம்மைத் தழுவி, நம்மை முழுமையானவர்களாக்கினார். அவருடைய ஆசீர்வாதங்களினாலேயே நம்மால் மகிழ்ச்சியுடன் வாழ முடிகிறது. கர்த்தர் நம்மைத் தமது மக்களாகவும் ஊழியர்களாகவும் மாற்றியதாலேயே நம்மால் தேவனுக்காக ஊழியம் செய்யவும் அவரின் மகிமையை தரித்தவர்களாகவும், நற்செய்தியை மற்றவர்களுக்கு பிரசங்கிக்கவும் முடிகிறது, மேலும் காலம் வரும்போது அவரின் பெயரிற்காக இரத்தசாட்சியாக மரிப்போம். இவற்றையெல்லாம் செய்வதற்கு நம்மை ஏதுவாக்கியது அவரே.
குவோ வாடிஸின் பெண் இரத்த சாட்சிகள், மரணத்திற்குள்ளாகும்போது தேவனைப் புகழ்ந்து பாட எங்கிருந்து பலத்தைப் பெற்றார்கள்? தேவனின் அன்பில் அவர்கள் பலத்தைக் கண்டனர். கிறிஸ்துவின் அன்பு மிகப்பெரியதாக இருந்ததால் புகழும் பாடல்களுடன் அவர்களால் இரத்தசாட்சியத்துவத்தைத் தழுவ முடிந்தது.
இந்த தத்துவம் நம் சொந்த வாழ்க்கைக்கு கூட பொருந்தும். தேவன் நம்மை வாழச் செய்வதால் நாம் வாழுகிறோம்; நம்முடைய சொந்த செயல்களால் கர்த்தரின் பிள்ளைகளாகவும் ஊழியர்களாகவும் நாம் இவ்வாழ்வைப் பெறவில்லை. அதனைப் பெற நாம் எதையும் செய்யவில்லை. கர்த்தரின் மாறாத நிறைவான அன்பினாலும், இந்த அன்பின் மீதுள்ள நம் விசுவாசத்தினாலும் முடிவு வரை, சில வேளைகளில் இடறினாலும் கூட, அவரைப் பின்பற்ற முடிகிறது. இப்பலம் நம்முடையதல்ல, அது கர்த்தருடையதாகும். நம்மை முழுமையாக்கின தேவனின் அன்பினால் மட்டுமே நாம் இரத்தசாட்சியாவது சாத்தியமாகும் - கர்த்தரின் கிருபையினாலேயே இரத்தசாட்சியத்துவத்தை நம்மால் தழுவமுடியும். இந்த உண்மையை நினைவில் வைத்திருங்கள், நீங்கள் இரத்தசாட்சியாக மரிப்பதை ஏதுவாக்குவது கர்த்தரே, ஆகவே, உங்களால் எல்லாவற்றையும் செய்து முடிக்கமுடியுமென எண்ணி இரத்தசாட்சியாக மரிக்க உங்களை தயார் செய்யும் முயற்சிகளில் காலத்தை வீணாக்கவேண்டாம்.
ஆசியாவின் ஏழுசபைகளுக்கும் கர்த்தர் கூறினார்: “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன்” ஜீவ விருட்சம் புதிய வானம் மற்றும் புதிய பூமியில் காணப்படுகிறது. இங்கு கர்த்தரின் சிங்காசனமும், விலை உயர்ந்த கற்களால் கட்டப்பட்ட வீடுகளும், ஜீவ நீர் கரைபுரண்டு செல்வதுமாக இருக்கும், ஜெயங் கொள்ளுகிறவர்களுக்கு, கர்த்தர் தம் பரலோகத்தை வாக்குத்தத்தம் செய்தார், இங்கு நிறைவாக கர்த்தருக்குள் அவர்கள் நித்தியமாக வாழ்வர்.
ஜெயங்கொள்ளுகிறவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தினால் ஜெயங்கொள்ளுகிறார்கள். இந்த நற்செய்தியைத் தவிர வேறெதினாலும் ஜெயங்கொள்வதைச் சாத்தியமாக்க முடியாது. அதனைக் கர்த்தரின் பலத்தினாலேயே பெற்றுக்கொள்ளமுடியும், அது மனித பலத்தினால் ஆவது அல்ல. ஜெயங்கொள்ள நம்மை ஏதுவாக்கும் பலம் கர்த்தரிடத்திலிருந்து மட்டுமே வருகிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது எத்தனை பெரிதானது எனவும், கர்த்தரின் அன்பும் அவரின் இரட்சிப்பும் எத்தனை பெரிதானது எனவும் நாம் உணர்ந்து அதனைப் புகழவேண்டும், ஏனெனில் இரத்தசாட்சியத்துவத்தை நம்மைத் தழுவ செய்வதற்கான விசுவாசத்தை இந்த நற்செய்தி அளிக்கிறது. நாம் பலவீனர்களாகவும் திறமை இல்லாதவர்களாகவும், முட்டாள்களாகவும் அறிவில்லாதவர்களாகவும் இருக்கலாம், ஆனால் நம்மிடம் இன்னமும் வல்லமை இருக்கிறது, ஏனெனில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது நம்மிருதயங்களில் இருக்கிறது.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களின் பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. மறுபுறம், யாருடைய பெயர்களெல்லாம் ஜீவ புத்தகத்தில் எழுதப்படவில்லையோ, அவர்கள் விழுந்து சாத்தானுக்கு முன்பு கட்டுண்டு போவார்கள். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம் பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மட்டுமே சாத்தானுக்கு முன்பாக குனிந்து வணங்க மாட்டார்கள். இந்த ஜீவ புத்தகத்தில் உங்கள் பெயர் எழுதப்பட்டிருப்பதை தெளிவாகவும் உறுதியாகவும் நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
தேவன் நமக்கு கொடுத்த கிறிஸ்துவின் முதல் அன்பாகிய விசுவாசத்தினாலேயே இரத்தசாட்சியாவோம். நமக்குள் சஞ்சரிக்கும் பரிசுத்த ஆவியானவர் இரத்தசாட்சியை சந்திப்பதற்கான பலத்தைக் கொடுப்பாராகையால் நம் இரத்தசாட்சியைக் குறித்த கவலையோ, பயமோ இன்றி அதற்கு காத்திருக்கலாம். இரத்தசாட்சியாக மரிப்பதன் துன்பத்தை நமக்காக காத்திருக்கும் பரலோகத்தின் மகிமையுடன் ஒப்பிடமுடியாதாகையால், நாம் மரணத்திற்கு முன் மண்டியிடுவதில்லை, மாறாக மதிப்பு மிக்க நற்செய்தியை பாதுகாக்க நாம் இரத்தசாட்சியாக மரிப்பதை மகிழ்ச்சியுடன் தழுவுவோம். நாம் எப்படி இரத்தசாட்சியாக மரிப்போம் என்பதைக் குறித்து இப்போது கவலைப்படவேண்டியதில்லை, நாம் இரத்தசாட்சியாக மரிப்பது கர்த்தரால் ஆகிறது, அது நம் முயற்சியினால் ஆவதில்லை.
என்றாவது ஒரு நாள் கீழ்க்கண்ட அறிவிப்புகள் ஒலிப்பெருக்கி வழியாக அறிவிக்கப்படுமென நிச்சயமாக நம்புகிறேன்: “அன்புள்ள குடிமக்களே, குறியீட்டைப் பெறுவதற்கு இன்றே கடைசி நாள். குடிமக்களில் சிலரே இன்று குறியீட்டைப் பெறவேண்டும். இதுவரை நீங்கள் ஒத்துழைத்தமைக்கு நன்றி கூறுகிறோம். இந்த குறியீட்டைப் பெறுவது உங்களுக்கு அவசியமானதும் நன்மை பயப்பதுமாகும், ஏனெனில் இது நாட்டில் ஒரு ஒழுங்கைக் கொண்டுவர அவசியமானது. ஆகவே நகர சபைக்கு உடனே வந்து குறியீட்டைப் பெற்றுக்கொள்ளுங்கள். மீண்டும் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் குறியீட்டைப் பெற்றுக்கொள்ள இன்றே கடைசி நாள். கடைசி நாளான இன்று வரை குறியீட்டைப் பெறாதவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இதனைத் தெளிவுபடுத்த, இதுவரை குறியீட்டைப் பெறாதவர்களின் பெயர்களை இப்போது அழைக்கிறேன்.” இது உண்மைக் கதையல்ல, இத்தகையவைகள் வெகு சீக்கிரம் நடந்தேறும்.
மீன் அடையாளத்தின் மூலம் ஆதிசபையின் விசுவாசிகள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டனர். அவர்களுக்குள்ளிருந்த சங்கேதக் குறி இதுவே. நம்முடைய சகோதரர்களையும் சகோதரிகளையும் அறிந்துகொள்ள நம்மை ஏதுவாக்கும் ஒரு குறியீட்டை நாம் உருவாக்க வேண்டும், அப்படி செய்வதால் இரத்தசாட்சியத்துவத்தைத் தழுவுவதற்கு ஒருவரின் விசுவாசத்தை மற்றொருவர் உற்சாகப்படுத்தலாம்.
இரத்தசாட்சியாக மரிப்பது நம்மால் செய்யக்கூடிய ஒன்றாக இல்லாதிருப்பதால், நம் குழப்பங்களை தூரவைத்துவிட்டு அதனை தைரியமாக சந்திக்கலாம். நம் நீதியின் மரணத்திற்கு முன் பயப்படுவதற்கு எதுவுமில்லை. நாம் செய்யவேண்டிய ஒன்று இவ்வுலகில் வாழும்போது தேவனுக்காக வாழ்வது மட்டுமே. நம்மையே தேவனுக்கு கொடுக்கலாம், ஏனெனில் நம் கர்த்தரின் பெயரிற்காக நாம் இரத்தசாட்சியாக மரிக்க வேண்டியவர்களென்பது நமக்குத் தெரியும். உங்கள் உடமைகளை இழந்துவிடுவோம் என்ற பயத்தினால் இரத்தசாட்சியாக மரிப்பதிலிருந்து தப்பிக்க முயன்றால், இன்னும் அதிக துன்பங்களும் பெருந்துயரங்களும் காத்திருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் விசுவாசத்தின் மக்களாக இருக்கவேண்டும், கிறிஸ்துவிற்காக இரத்தசாட்சியாக வேண்டியதை அறிந்து, முடிவுவரை தேவனுக்காக ஒரு வாழ்வை வாழுங்கள்.
நாம் இரத்தசாட்சியாக மரிப்போம் என்பதை உணரும்போது நம் விசுவாசத்திலும், மனதிலும், நம் வாழ்க்கையிலும் ஞானம் பெற்றவர்களாவோம். நம் முட்டாள்தனங்களுக்கான மருந்து இந்த ஞானமேயாகும். இது நம்மை அலைபாயச் செய்யும் உலகப் பற்றுகளை விட்டுவிடச் செய்யும். இதன் பொருள் நம் வாழ்க்கையை விட்டுவிட வேண்டுமென்பதல்ல, ஆனால் தேவனுக்காக வாழ்ந்திருப்போம். கர்த்தரின் வல்லமையானது சாத்தானை பாதாளத்திற்குள் தள்ளும்வரை, நம்மை இரட்சித்த தேவனுக்காக வாழ்ந்து, சாத்தானையும் அந்திகிறிஸ்துவையும் போராடி வெற்றிகொண்டு, வெற்றியின் எல்லா மகிமையையும் கர்த்தருக்கே கொடுக்கவேண்டும். நம்மால் மகிமைப்படுவதைக் கர்த்தர் எதிர்பார்க்கிறார். நம் விசுவாசத்தால், அவருக்கு மகிமையக் கொடுக்க அனுமதித்த தேவனுக்கு நன்றி கூறுகிறேன், அவர் நமக்கு அத்தனைக்காரியங்களைக் கொடுத்தார்.
நம்மை எடுத்துக்கொள்ள தேவன் சீக்கிரமாக வருவார் என்று நாம் விசுவாசிக்கிறோம். முடிவு காலத்தில் அநேக ஆத்துமாக்கள் கர்த்தரிடம் திரும்பும்போது, கர்த்தர் அவர்களைத் தம் கரங்களால் பற்றிக்கொண்டு எடுத்துச் செல்வார். வெளி 3:10 இல் பிலதெல்பியா சபைக்கு கர்த்தர் கூறுகிறார், “என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக் கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும் படியாகப் பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிற சோதனைக் காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.” கர்த்தர் தம் வாக்குத்தத்தத்தை நிச்சயமாக நிறைவேற்றுவார்.
“என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால்” என்பதன் மூலம், பரிசுத்தவான்கள் விசுவாசத்துடன் வாழ்ததை கர்த்தர் குறிப்பிடுகிறார். இதன் பொருள் என்னவெனில், மற்றவர்கள் எதைக் கூறினாலும் எதைச் செய்தாலும் தம் விசுவாசத்தை உறுதியுடன் பற்றிக்கொண்டிருப்பர் என்பதாகும். “வரப்போகிற சோதனைக் காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்” என்று கர்த்தர் கூறும்போது, அவரின் வசனத்தைக் காத்துக்கொண்டவர்கள், சோதனைக் காலத்திற்குத் தப்புவார்கள் என்று அவர் கூறுகிறார்.
வேறுவார்த்தைகளில் கூறுவதானால் உபத்திரவத்தின் காலமும் இரத்தசாட்சியாக மரிக்கும் சமயமும் வரும்போது நாம் ஆலய ஆராதனைக்கும் ஜெபத்திற்கும் விசுவாசத்துடன் செல்வதால் கர்த்தர் நம்மை அவ்விடத்திலிருந்து அகற்றிப்போடுவார். நாம் இரத்தசாட்சியாக மரிக்கவேண்டுமென மனதை ஆயத்தப் படுத்தும்போது, நம்மிருதயங்கள் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தமாகி, அதன் பலனாக நம் விசுவாசம் இன்னமும் உறுதியாகிறது. நம்முடைய இரத்தசாட்சியுடன், உபத்திரவத்தின் நேரத்தில் காக்கப்படுவோம் என்ற கர்த்தரின் வாக்குத்தத்தத்தை எண்ணி, இப்போதைய விசுவாச வாழ்வை கர்த்தருக்கு வாழவேண்டும். சுருக்கமாக கூறினால், நம் விசுவாசத்தினால் நாம் வாழவேண்டும்.
இக்காலம் வெளிப்படுத்தலின் காலமாக இருக்கிறது. கர்த்தரின் வார்த்தையை அலட்சியம் செய்து, உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக்கொள்ளப்படுதல் என்ற தவறான தத்துவத்தை விடாது பிடித்துக்கொண்டிருக்கும் அநேக கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இறுதி நாட்கள் வரும்போது தாம் எத்தனை தவறானவர்கள் என்று கண்டுகொள்வார்கள். அவர்களின் செல்வாக்கு மற்றும் அதிகாரமுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன; நாம் செய்யவேண்டியதெல்லாம், கர்த்தர் தன் வாக்குத்தத்தின் வார்த்தையை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையின் உறுதியில் வாழ்ந்திருப்பது மட்டுமே.
மகா உபத்திரவத்தின் நடுக்காலத்தை நாம் அடையும்போது, நம் விசுவாசத்தைக் காப்பதற்கு இரத்தசாட்சிகளாவோம். ஏழு பாத்திரங்களின் வாதைகள் தொடங்குவதற்கு முன் கர்த்தரால் நாம் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆயிரம் வருட அரசாட்சிக்குள் செல்லுவோம். கிறிஸ்துவுடனே ஆளுவோம் என்ற நம்பிக்கை நனவாகும்போது நாம் பூமியில் பட்ட பாடுகள் அவற்றிற்கும் மேலாக நமக்கு காத்திருக்கும் பரிசுகளினால் சரிசெய்யப்படுவதோடு, புதிய வானம் புதிய பூமிக்குள் நித்தியமாக பிரவேசிப்பது விவரிக்கமுடியாத ஆனந்தத்தினால் நம்மை முழுகடிக்கும். இன்று கர்த்தரின் இந்த வாக்குத்தத்தம் நிறைவேறும் என்று, தேவனுக்காக விசுவாசத்துடன் நாம் வாழுகிறோம். தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவார் என விசுவாசித்து, மகிமைப்படுத்தப்பட்ட சரீரங்களுடன் அவருடன் நித்தியமாக வாழப்போகிற நாளை எதிர்பார்த்து நாம் வாழுகிறோம். நற்செய்தியாகிய முழுப்பாவமன்னிப்பையும் அளித்து அவரின் மீதான விசுவாசத்தைக் காக்க இரத்தசாட்சியத்துவத்தை தழுவ நம்மை ஏதுவாக்கி, அவரின் ஆசீர்வதிக்கபட்டவர்களில் நம்மையும் நிறுத்தியதற்காக தேவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.
எபேசு சபையின் பின்னனி
ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியான சிறிய ஆசியாவின் மிகப்பெரிய துறைமுக நகரமாகிய எபேசு, வர்த்தகம் மற்றும் மதச்செயல்கள் நடைபெறும் முக்கிய இடமாக இருந்தது. ஆதி சபையின் காலத்திலும் அது ஒரு முழு உலக நகரமாக விளங்கியது, அதற்கு வடக்கே சிமிர்னாவும், தெற்கே மிலேசுவும் இருந்தன. புராணக்கதைகளைப் பொருத்தவரை தைரியமான யுத்தங்களின் தேவதையான அமேசான், கி.மு. 12 ஆம் நூற்றாண்டில் இந்நகரத்தைச் செய்து, ஏதேன் நாட்டின் இளவரசரனான அண்ரோகிளஸ் என்பவனுக்குக் கொடுத்தாள்.
பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தால், எபேசு ஒரு செழிப்பான நகரம், இதன் பொருள் அது ஒரு உலகச் சம்பந்தமான நகரம் என்பதாகும். இதனால் தான் சாத்தானை மேற்கொள்ள முடிவுவரை போராடுமாறு எபேசு சபைக்கு கர்த்தர் கூறினார், இப்படிச் செய்வதால் அவரின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அது இழந்து போகாது. கர்த்தரின் சத்திய வார்த்தைகள் எத்தனை முக்கியமானவை என்பதை நாமறிந்து, நம் விசுவாசத்தை எல்லாவற்றிலிருந்தும் காத்துக்கொள்ளவேண்டும்.
அப்போஸ்தலனாகிய யோவான் மூலம் எபேசு சபைக்கு கர்த்தர் எழுதினார்: “எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக் கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்; நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.” எபேசு சபை அதன் செயல்களுக்காகவும், பொறுமைக்காகவும், தீமையானவைகளை வெறுக்கிறதுக்கும், கள்ள அப்போஸ்தலர்களை சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டதற்காகவும், அவரின் பெயரின் பொருட்டு இளைப்படையாமல் பிரயாசப்பட்டு உழைப்பதற்கும், கர்த்தரால் பாரட்டப்பட்டது.
அதே நேரம் எபேசு சபை அதன் தவறுகளுக்காக கடிந்துகொள்ளப்பட்டது. வசனம் தொடர்ந்து கூறுகிறது, “ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன். நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.”
நிக்கொலாய் மதத்தினரை கர்த்தர் வெறுப்பதாக மேற்கண்ட வசனம் கூறுகிறது. கர்த்தருக்கு எதிராகவும், அவரின் ஆலயத்திற்கும் அவரின் சத்தியத்திற்கும் எதிராக இருந்த ஒரு குறிப்பிட்ட கூட்டமானது நிக்கொலாய் என்று இங்கு குறிப்பிடப்படுகிறது. பெர்கமு சபைக்கு எழுதப்பட்ட தொடர்ந்து வரும் வசனங்களில் நிக்கொலாய் மதத்தினர் செய்துகொண்டிருந்தது விவரிக்கப்பட்டுள்ளது.
நிக்கொலாய் மதத்தினரின் அக்கிரமச் செய்கைகள்
வெளி 2:14 கூறுகிறது, “ஆகிலும், சில காரியங்களைக் குறித்து உன்பேரில் எனக்கு குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பிலேயாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைகொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.” இந்த வசனத்தில் வருவதைப் போன்ற சம்பவத்தை எண்ணாகமம் 22 ஆம் அதிகாரத்தில் காணலாம். இங்கு மோவாபியரின் அரசனாகிய பிலேயாகின் வரலாறு எழுதப்பட்டுள்ளது.
எகிப்திலிருந்து புறப்பட்டு கானானிலுள்ள மோவாப் சமவெளியை இஸ்ரவேலர்கள் அடைந்தபோது “அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும்” என்பதுபோல், அவர்கள் அத்தேசத்தின் ஏழு கோத்திரத்தை வென்றவராயிருந்தார்கள். இந்த வெற்றிகளைக் கேள்விப்பட்ட பிலேயாகு அவர்களின் கடவுளுக்கு பயந்தான், கானானில் தோல்வியுண்ட கோத்திரத்தாருக்கு நேர்ந்ததுபோல் மோவாபியருக்கும் நடக்குமென அவன் பயந்தான். இஸ்ரவேலர்கள் அவர்களை வெற்றிகொள்ளாதிருக்கும் வகையில் ஒரு வழியை ஏற்படுத்த முயற்சிக்க கள்ளத்தீர்க்கத்தரிசியாகிய பிலேயாமை பிலேயாகு வரவழைத்தான், ஆகவே அவனின் வேண்டுதலின் படி பிலேயாம் இஸ்ரவேலர்களைச் சபிப்பான்.
பிலேயாம் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி, ஆனால் புறஜாதியார் அவனைக் கர்த்தரின் ஊழியனாக எண்ணினார்கள். அவன் தலைமை ஆசாரியனான ஆரோனின் சந்ததியினனுமில்லை, லேவியனுமல்ல. ஆனால் மோவாபியரின் ராஜாவாகிய பிலேயாகு, பிலேயாம் ஆசீர்வதிப்பவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்களாகவும், சபிப்பவர்கள் சபிக்கப் பட்டவர்களாகவும் இருப்பார்கள் என்று நம்பினான். அக்காலத்தில் பிலேயாம் ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாக இருந்தாலும், அந்நாடு முழுவதும் ஒரு மந்திரவாதியாக பேர் பெற்றிருந்தான்.
அப்படியிருந்தும் ராஜாவாகிய பிலேயாகு கேட்டதற்கு பிலேயாமால் இணங்கமுடியவில்லை. அதற்கு காரணம் இஸ்ரவேலர்கள் கர்த்தரின் மக்களாக இருந்தது மாத்திரமல்ல, இஸ்ரவேலர்களை சபிக்க கர்த்தரிடம் அவனுக்கு அனுமதியில்லை, ஆனால் அவன் அப்படிச் செய்தால் அச்சாபம் அவனையே பிடிக்கும். கர்த்தரின் ஆவியின் வல்லமையால் மேற்கொள்ளப்பட்ட பிலேயாமால் செய்ய முடிந்ததெல்லாம் இஸ்ரவேலர்களை ஆசீர்வதிப்பது மட்டுமே. இதனால் கோபமுற்ற பிலேயாக், இஸ்ரவேலரைப் பிலேயாமால் பார்க்கக்கூடாத இடத்திலிருந்து அவர்களைச் சபிக்குமாறு கூறினான்.
பிலேயாம் பிலேயாக்கிடமிருந்து பெருந்தொகையான பணத்தைப் பெற்று அதற்கு பதிலாக இஸ்ரவேலருக்கு சாபத்தை எடுத்துவரும் ஒரு வழியைக் கூறினான். அவர்களுடையத் திட்டமானது, இஸ்ரவேலை இச்சைப் படுத்தி விபசாரம் செய்யத் தூண்டும் விதமாக, அவர்களை மோவாபியரின் விருந்துகளுக்கு வரவழைத்து அவர்களின் பெண்களை அளிப்பதாயிருந்தது, இதனால் இஸ்ரவேலர்கள் தம் பாவங்களுக்காக கர்த்தரால் தண்டிக்கப்படுவர். இஸ்ரவேலருக்கு அழிவைக் கொண்டுவரும் வழியை இப்படித்தான் பிலேயாம் பாலகிற்கு போதித்தான்.
பிலேயாம் பணத்தை நேசிக்கும் ஒரு மனிதனாக இருந்ததால் அவனை வெறுப்பதாக கர்த்தர் கூறினார். இன்றைய கிறிஸ்தவ சமூகத்தில் கூட பிலேயாமைப் போன்ற அநேக மக்கள் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் கள்ளத்தீர்க்கதரிசிகள், ஆனால் அவர்களில் அநேகர் மதிக்கப்பட்டும் மரியாதை செய்யப்பட்டும் வருகிறார்கள். பிலேயாம் பொருள் சேர்ப்பதைத் தொடர்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு பணம் கொடுக்கும்போது ஆசீர்வாதித்தான்; கொடுக்காதபோது சபித்தான். கவலைக்கிடமாக, இன்றைய கிறிஸ்தவ சமூகத்தில் கர்த்தரின் ஊழியர்களாக இருக்கவேண்டிய அநேகர் பிலேயாமைப் போலிருக்கிறார்கள். கர்த்தரை விசுவாசிப்பவர்கள் பொருளாதாயத்தை மட்டும் பின் தொடர்ந்தால் அவர்கள் முடிவில் கள்ளத்தீர்க்கதரிசி ஆகிவிடுகிறார்கள். இதனால் தான் கர்த்தர் நிக்கொலாய் மதத்தினரை வெறுத்தார்.
கர்த்தரின் சபைக்கும் அவரின் ஊழியர்களுக்கும் அழிவினை எடுத்து வருவது எதுவென உங்களுக்குத் தெரியுமா? அது பணத்தின் மீதுள்ள நேசம். தம் கண்களுக்கு முன்பாக பொருள் ஆதாயங்களை மட்டுமே பின் தொடருபவர்கள் கர்த்தருக்கு முன் அழிந்து போவதைச் சந்திப்பார்கள்.
பிலேயாமைப் பின்பற்றும் ஆலயங்கள்
இன்றும் அப்போஸ்தலர்களின் காலங்களில் நடைபெற்றதைப் போன்றே, உலகப்படியான சபைகளும் கள்ள ஊழியர்களும் பிலேயாமின் வழியைப் பின்பற்றுகிறார்கள். தம்மைப் பின்பற்றுவோரிடமிருந்து பணம் பறிக்க எல்லா விதங்களிலும் முயலுகிறார்கள், உதாரணமாக, சபையார் ஒருவருடன் ஒருவர் போட்டியிடும் வகையில் செய்யப்பட்டுள்ளது, அவர்கள் ஆவிக்குரியபடி தம் விசுவாசத்திற்கு சாட்சியாக இல்லாமல், விசுவாசியின் காணிக்கை அவனின்/அவளின் அளவுமானி போல் கருதப்பட்டு அவர்களின் விசுவாசம் அளக்கப்படுகிறது. இது அதிகமாகக் கொடுப்பவர்களின் விசுவாசம் குறைவாக கொடுப்பவர்களின் விசுவாசத்தை விட பெரியது என்பது போல் குறிப்பிடுகிறது, இத்தகைய மோசமான ஒரு காரியத்தைச் செய்வதற்கான ஒரே காரணம் ஆலயத்தை வளப்படுத்துவது மட்டுமே.
விசுவாசிகள் தம்மிருதயங்களில் கர்த்தருக்கும் அவரின் நற்செய்திக்கும் ஊழியம் செய்யத்தீர்மானிப்பது மிகவும் நல்ல காரியம் தான். ஆனால் பிலேயாம் போன்ற கள்ளத்தீர்க்கதரிசிகள் தம் வயிற்றை நிரப்ப விசுவாசிகளை சாப்பிடுகிறார்கள். அவர்கள் பொருள் கொடுப்பதன் மூலம் சாட்சி கூறும் போட்டியை உருவாக்குகிறார்கள், “நான் தசமபாகத்தை தவறாது விசுவாசத்துடன் கொடுத்தேன், கர்த்தர் என் வியாபாரம் மூலம் பத்து மடங்கு ஆசீர்வாதத்தை அளித்தார்.” பிலேயாமல் வஞ்சிக்கப்பட்ட விசுவாசிகளின் உண்மை விசுவாசத்திற்கான வழி இதுவே என்று எண்ணுகின்றனர். அது அவர்களின் ஆவிக்குரிய மற்றும் பொருளின் வளமையைக் குன்றச் செய்து, தவறான பெருமையை உண்டாக்கி இறுதியில் அவர்களை அழிவுக்குள்ளாக்குகிறது.
“நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள்” பிலேயாமின் கிரியைகளைத் தவிர வேறில்லை. பேராசையினால் பிலேயாம் பாலாக்குவிற்கு இஸ்ரவேலரின் வழிகளில் முட்டுக்கட்டையிடும் வழியை போதித்தது போல், இன்றைய கிறிஸ்தவ சமூகத்திலுள்ள கர்த்தரின் ஊழியர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளுபவர்கள் தம் சபையாரின் சட்டைப் பைகளில் மட்டுமே ஆர்வமுடையவர்களாய் உள்ளனர். இந்த கள்ளத்தீர்க்கதரிசிகளால் மோசத்திற்கு வழிநடத்தப்பட்டவர்கள், இந்த கள்ள மேய்ப்பர்களுக்கு தம்மிடமுள்ளவற்றைக் கொடுத்துவிட்டு வெறுங்கையினராவதோடு மட்டுமில்லாது, தாம் விசுவாசித்தது மிகவும் தவறானது என சீக்கிரமாகவோ, மெதுவாகவோ அறிய வருவது மிகவும் கொடுமையானதாகும். முடிவில் அவர்கள் கள்ள சபையை பழித்து கூறி, தம் விசுவாசத்தை விட்டுவிடுவர். துரதிருஷ்டவசமாக, யதார்த்தத்தில் இதற்காக வருந்தும் நிலை அத்தனை பொதுவானதில்லை, நற்செய்தி ஆலயங்கள் என்று தம்மை அழைப்பவைகளிலும் இதே நிலைமையே. பிலேயாமால் வஞ்சிக்கப்பட்டு, இந்த திருட்டால் மோசத்திற்கு வழி நடத்தப்பட்ட அநேக விசுவாசிகள் சபையைவிட்டு விலகுவதில் முடிவடைவர்.
நிக்கொலாய் மதத்தினரின் செய்கைகளை கர்த்தர் வெறுப்பதாக வேதவசனம் நமக்கு கூறுகிறது. நிக்கொலாய் மதத்தினரை நாம் பின்பற்றினால், கர்த்தர் மீதுள்ள விசுவாசத்தை நாம் இழந்து போவோம். கர்த்தர் நமக்களித்த சாட்சிகள் அநேகம், இவை ஆவியை வளப்படுத்தும் பொக்கிஷங்களாகும். ஆனால் சாட்சிகளை உபயோகித்து பொருளாதாயத்தைப் பின்பற்றுவதை நாம் விட்டுவிடவேண்டும், ஏனெனில் இது கர்த்தரே வெறுத்த நிக்கொலாய் மதத்தினரின் வழியாக இருக்கிறது.
பண்புடன் கூடிய விசுவாசம்
ஆசியாவின் ஏழுசபைகளுக்கும் நிக்கொலாய் மதத்தினரின் செய்கைகளைக் குறித்து கர்த்தர் எச்சரிக்கைச் செய்தார், அத்துடன், ஜெயங்கொள்ளுபவர்கள் ஜீவ மரத்திலிருந்து சாப்பிடுவார்கள் என்றும் உறுதியளித்தார். நாம் தேவனுக்கு ஊழியம் செய்யும்போது, விசுவாசத்தினால் அப்படிச் செய்கிறோம், ஏனெனில் அவர் நம்மை விடுவித்தமைக்கு நன்றியறிதலுடன் அப்படிச் செய்கிறோம், மேலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பரப்புவதற்கான அறிவே சரியான செயலாகும். நாம் மற்றவர்களுக்கு காட்டிக்கொள்ளவோ அல்லது நல்ல விதமாக தோன்றவோ கர்த்தருக்கு ஊழியம் செய்வதில்லை. இப்படிச் செய்வது உண்மையான ஊழியமும் இல்லை, உண்மை விசுவாசமும் இல்லை. கர்த்தரின் ஆலயத்தில் நிக்கொலாய் மதத்தினரின் இச்செய்கைக்களைக் குறித்து மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இதனால் தான் நிக்கொலாய் மதத்தினரைக் குறித்து ஏழுசபைகளையும் தேவன் எச்சரிக்கைச் செய்தார்.
மறுபடியும் பிறவாத அநேக ஆலயங்கள் எப்படி மிகப் பெரியதாகவும் துரிதமாகவும் வளர்ந்துள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா? தவறான விசுவாசமும் கள்ளசாட்சிகளும் இந்த ஆலயங்களைக் கட்டியிருப்பதினாலேயே அவை வளர்ந்துள்ளன. கர்த்தரின் ஊழியர்கள் தம் வயிறை வளர்ப்பதற்கு தம் ஆடுகளை பயன்படுத்தக் கூடாது.
உண்மை விசுவாசமானது கர்த்தர் நமக்கு கொடுத்த, இயேசுவின் ஞானஸ்நானத்தினாலும், அவரின் சிலுவை இரத்தத்தினாலும், அவர் பெற்ற நியாயத்தீர்ப்பினாலும் கிட்டிய இரட்சிப்பை விசுவாசிப்பதாகும். ஆனால் அநேக ஆலயங்கள், மறுபடியும் பிறந்தவையோ இல்லையோ, சாட்சிகளைத் தம் சபையாரின் பைகளைக் கொள்ளையடிப்பதற்கே உபயோகிக்கின்றனர். உண்மை சாட்சிகள் உங்கள் விசுவாசத்தை வளரச் செய்து கர்த்தரை மகிமைப்படுத்தும் என்றும், தவறானவை உங்களுக்கான கன்னி என்றும் நீங்கள் அறிந்துகொள்வதில் கவனமாகவும் அறிவுடனும் இருக்கவேண்டும்.
இன்றைய உலகத்தின் அநேக பணம் படைத்த ஆலயங்கள் பிலேயாமைப் போன்றே ஊழியர்களினால் வழிநடத்தப்படுகின்றன. பிலேயாமின் வழியைப் பின்பற்றும் ஆலயத் தலைவர்கள் பொருளின் மீது குறியாயிருப்பதினாலே தம்மைப் பின்பற்றுபவர்களை கொள்ளையடிப்பதற்கு ஆலயத்தை உபயோகிக்கின்றனர். பொருட்களைக் குறித்த சாட்சியங்களினால் தம்மைப் பின்பற்றுபவர்களிடம் ஒரு போட்டியை ஏற்படுத்தி, பிலேயாமைப் போன்ற கிறிஸ்தவத் தலைவர்கள் அவர்களிடம் பணம் பறிக்கின்றனர். நான் அவர்களுடைய செயல்களை மிகவும் வெறுக்கிறேன்.
உண்மையான விசுவாச வாழ்வு விசுவாசத்திலிருந்து தொடங்குகிறது. சாத்தான் ஏற்பாடு செய்துள்ள நிக்கொலாய் மதத்தினரின் கன்னிகளைத் தவிர்க்கும் அளவிற்கு அறிவு பெற்றவர்களாக நாமிருக்க வேண்டும். நிக்கொலாய் மதத்தினரின் செய்கைகளை எல்லோரும் அறிந்திருக்கவேண்டும், பேராசையின் எல்லையே தெரியாத சாத்தானின் ஊழியர்களிடம் நாம் வஞ்சிக்கப்படலாகாது. கர்த்தரின் ஊழியர்கள் இதைக் குறித்து மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். ஊழியர்கள் பொருட்களைக் குறித்து மிகவும் கரிசனை உடையவர்களாகும் போது - அவர்கள் செலுத்தும் கார் என்ன, அவர்கள் வீடு எத்தனைப் பெரியது, அவர்களிடம் எவ்வளவு பெரிய நிலம் இருக்கிறது, அவர்களுடைய வங்கிக்கணக்குகள் எத்தனை கொழுத்தவை - என்று பார்க்கும்போது அவர்கள் தம் ஆலயங்களைக் கெடுத்து, நிக்கொலாய் மதத்தினரின் பாதைக்கு வழி நடத்துவார்கள்.
இதனைக் குறித்து கவனமாக இருக்குமாறு ஆசியாவின் ஏழுசபைகளுக்கு கர்த்தர் கூறினார். பிலேயாமைப் போன்ற விசுவாசமுள்ள மனிதன், பொருளாதாயத்தையும், சுய மகிமையும் எதிர்பார்ப்பவனாயிருப்பதால், ஒரு மதப் பிரிவை தோற்றுவிப்பவனாயிருக்கிறான். கர்த்தரின் சபை பொருள் சேர்ப்பதை மட்டுமே தேடக் கூடாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பின்பற்றுபவர்களை ஆசீர்வதிப்பேன் என்று கர்த்தர் நமக்கு வாக்குத்தத்தம் செய்திருப்பதால், நம் பொருட்களை நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு உபயோகிக்கவேண்டும், அவற்றை இப்பூமியில் சேர்த்து வைக்கக் கூடாது.
கள்ள மேய்ப்பர்களை புறம்பேத் தள்ளுங்கள்
நிக்கொலாய் மதத்தினரின் பொறியில் மாட்டினால் மறுபடியும் பிறந்த விசுவாசிகள் கூட அழிந்துபோவர். அத்தகைய தலைவர்களின் விசுவாசம் அதிசயமானதாகவும் உறுதியானதாகவும் முதலில் தெரியலாம், ஆனால் கள்ள மேய்ப்பர்களின் வஞ்சனை முடிவில் அவர்களை அழிவிற்கு வழி நடத்தும்.
நிக்கொலாய் மதத்தினரின் செய்கைகளை வெறுத்ததாக எபேசு சபையின் தூதனிடம் கர்த்தர் கூறினார். நிக்கொலாய் மதத்தில் மாட்டிக்கொண்டவர்கள் நிச்சயமாக அவனின்/அவளின் அழிவைச் சந்திப்பர். அவன்/அவள் மறுபடியும் பிறந்த விசுவாசியாயினும், கர்த்தரின் ஊழியனாயிருந்தாலும், யாராயிருந்தாலும்; நிக்கொலாய் மதத்தினரிடம் மாட்டிக்கொண்டால் அழிவு நிச்சயம். மோசமான மேய்ப்பன் மந்தைகளை மரணத்திற்கு வழி நடத்துவதைப் போல், கள்ளத்தீர்க்கதரிசிகள் சாபங்களை எடுத்துவருகிறார்கள்.
இதனால் தான் கர்த்தர் “என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பீர்களாக” என்று தன் ஊழியர்களிடம் கூறினார். மேய்ப்பர்கள் தம் ஆடுகளை மேய்ப்பதைப் போல கர்த்தரின் ஊழியர்கள் தம் விசுவாசிகளை மேய்க்கவேண்டும். அவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றி அவர்களின் தேவைகளைப் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் மேய்ப்பர்களாயிருப்பதால் தம் மந்தைகள் மோசம் போகாதிருக்கச் செய்ய வேண்டும், அவர்களை எந்த ஆபத்து தாக்கும் என கண்டுபிடித்து, அத்தகைய ஆபத்துகள் நெருங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
செம்மறியாடுகளை வளர்க்கும் மக்கள் அவை மிகவும் பிடிவாதமானவை என்று கூறுவதைக் கேட்டிருக்கிறேன். கர்த்தருக்கு முன்பு புத்தியில்லாத இந்த செம்மறியாடுகளைப் போல் நாமிருக்கிறோமா? நம்மைக் குறித்து கூட செம்மறியாடுகளைப் உபயோகப்படுத்த கர்த்தரிடம் காரணங்கள் இருந்திருக்க வேண்டும். அடிப்படையில் நாம் எத்தனை பிடிவாதமானவர்கள் என்று அவருக்குத் தெரியும்.
கர்த்தர் ஏன் அடிக்கடி நிக்கொலாய் மதத்தினர், யேசபேல், மற்றும் பிலேயாம் ஆகியோரின் செயல்களைக் குறித்து ஆசியாவின் ஏழுசபைகளுக்கும் கூறுகிறார்? ஜெயங்கொள்ளுபவர்களுக்கு ஜீவ மரத்தின் கனியைக் கொடுப்பதாக அவர்களுக்கு கர்த்தர் ஏன் வாக்குத்தத்தம் செய்தார்? கள்ளத்தீர்க்கதரிசிகள் நம்மை வஞ்சிப்பதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள நமக்கு போதிக்கும் வகையில் அவர் அப்படிச் செய்தார். கர்த்தரின் வார்த்தையை தியானித்து நம்மை நாமே கேட்கவேண்டும் “எது உண்மையான நற்செய்தி” கர்த்தரின் வார்த்தையை மனிதபோதனைகளுடன் கலந்து அதனை செவ்வையாக இருக்கும்படி ஒழுங்குபடுத்துவது நற்செய்தியாகாது. இன்றைய கிறிஸ்தவத்தில் அழகாக புனையப்பட்ட பிரசங்கங்கள் அநேகம் இருக்கின்றன, அவற்றிற்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கும் எவ்வித தொடர்புமில்லை. மிகவும் பிரபலமான அநேக பிரசங்கியார்கள், பிரசங்கங்களை அவர்களுக்காக எழுதிக்கொடுக்கும் எழுத்தாளர்களை வைத்துள்ளனர். அவர்கள் செய்வதெல்லாம் யாரோ எழுதிய சொற்களை வாசிப்பது மட்டுமே.
நிக்கொலாய் மதத்தினரிடம் நாம் மாட்டிக்கொள்ளக்கூடாது. பொருளாதாயத்தை பின்பற்றாமலிருக்க மறுபடியும் பிறந்த சபை மிகவும் கவனமாக இருக்க வேண்டும்; குறிப்பாக ஊழியர்கள் தொடர்ந்து காவல் புரியவேண்டும், அப்படியே சபையாரின் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும். சபையின் உறுப்பினர்களிடமிருந்து பணம் பிடுங்குவதும், பொருட்களின் அலங்காரத்தினால் ஆலயத்தை அழகு செய்வதும், ஆராதனைக்கான ஆலயத்தைப் போலில்லாமல் அரண்மனைகளைப் போன்ற ஆலயங்களைக் கட்டுவதும் -தேவனின் வருகை சமீபமாயிருக்கிறது என்று பிரசங்கிப்பதுடன் இதனைச் செய்கிறார்கள்- ஆகிய இவைகளெல்லாம் தவறான விசுவாசத்தின் செயல்களாகும், இவை நிக்கொலாய் மதத்தினரின் செய்கைகளுக்கு ஒத்தவை.
கள்ள மேய்ப்பவர்களைக் குறித்து நாம் கவனமாக இருக்கவேண்டும், அவர்களின் விசுவாசத்தைப் பின்பற்றும் வகையில் வஞ்சிக்கப்படாதிருக்கிறோம் என்பதில் நிச்சயமாக இருக்கவேண்டும். பரிசுத்தவான்கள் பணத்தை நேசிக்க கூடாது. மாறாக, நாம் நேசிக்கவேண்டியதும் கடைப்பிடிக்கவேண்டியதும் கர்த்தரின் முதல் நேசமாகிய, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே. கிறிஸ்துவின் நீரினாலும் இரத்தத்தினாலும் அவர் நம்மை இரட்சித்தார் என்ற உண்மையைப் பற்றிக்கொண்டு, அவரைச் சந்திக்கும் நாள்வரை விசுவாச வாழ்வை வாழவேண்டும். இயேசு தம்முடைய ஞானஸ்நானத்தினாலும், சிலுவை மரணத்தினாலும் நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டார் என்ற கர்த்தரின் வார்த்தையை நாம் விசுவாசிக்க வேண்டும்.
நிக்கொலாய் மதத்தினரை பின்பற்றுபவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கிப்பதேயில்லை. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் செயல்களில் அவர்கள் ஆர்வமாயிராமல், பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாயிருக்கிறார்கள். இஸ்ரவேலருக்கு முன்பாக முட்டுக்கல்லைப் போட்டு அவர்களை அழிவிற்கு வழிநடத்திய பிலேயாமைப் போன்ற இன்றையவர்கள் இவர்கள், இதனை நீங்கள் நினைவில் வைத்திருக்கவேண்டும்.
பிலேயாம் யோசுவாவால் கொல்லப்பட்டான். யோசுவா புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதைப் போல், இஸ்ரவேலர்கள் கானானை வென்றபோது, இக்கள்ளத்தீர்க்கதரிசி யோசுவாவின் வாளால் கொல்லப்பட்டான். பிலேயாம் கர்த்தரின் உண்மை ஊழியனாக இராதபடியினால் கொல்லப்பட்டான். அப்பாவி விசுவாசிகளை ஏமாற்றுவதற்கு கிறிஸ்துவின் பெயரை உபயோகப்படுத்தி தம் வயிறை வளர்ப்பவர்கள் இன்றைய பிலேயாம் ஆவார்கள். பிலேயாம் தன் பேராசைகளை நிறைவேற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தான் என்பதை நாம் நினைவில் வைத்திருக்கவேண்டும்.
எபேசு சபையின் ஊழியர்களுக்கு கர்த்தர் கூறினார் “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.” வேறுவகையாக கூறுவதானால், இதனைத் தவறவிடுவோரும் இழந்து போவோரும் மரிப்பார்கள் என்று இந்த வசனம் கூறுகிறது. பிலேயாமின் வழியைப் பின்பற்றுவது இழப்பதாகும், அது ஒருவன் மரிப்பதற்கான பாதையாகும். கர்த்தர் தமது எச்சரிக்கை வார்த்தையை நமக்கு கொடுத்திருப்பதால் நாம் நிக்கொலாய் மதத்தினரின் பொறியில் மாட்டிக்கொள்வ்வதில்லை, அதற்காக அவருக்கு நான் நன்றி கூறுகிறேன். நீங்கள் பொருளின் இச்சைக்குள் அடங்கி உங்கள் பேராசையினால் கர்த்தரால் கைவிடப்படுவதில் முடிவடையாமலிருக்க வேண்டுமென விசுவாசித்து ஜெபிக்கிறேன்.