• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 10 : வெளிப்படுத்தின விசேஷம் (வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 2-3] சிமிர்னா சபைக்கு எழுதப்பட்ட நிருபம் (வெளி 2:8-11)

(வெளி 2:8-11)
“சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்ததும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன். நீ படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரனபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரிடத்தை உனக்குத் தருவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.”
 
 
விளக்கவுரை
 
வசனம் 8: “சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது”
எபேசு சபையில் பவுல் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது சிமிர்னா சபை உருவாக்கபட்டது. மேற்கண்ட வசனத்தின் படி, இவ்வாலயத்தின் உறுப்பினர்கள் ஏழைகளாவர், இவர்களுடைய விசுவாசத்தினால் அவர்கள் தம் சமூகத்திலிருந்து யூதர்களால் பகைவர்களாக்கப்பட்டார்கள். யூதர்களால் இந்த சபை எத்தனையாய் துன்புறுத்தப்பட்டது என்பதை ஆலயத் தந்தையின் காலத்தில் கண்கானிப்போனாயிருந்த பாலிக்காப்புவை அவர்கள் இரத்தசாட்சியாக கொன்றதிலிருந்து நாம் காணலாம். ஆதிசபையின் பரிசுத்தவான்கள் யூத விசுவாசிகளால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டனர், அவர்கள் கிறிஸ்துவை தம் மேசியாவாக ஏற்க மறுத்தனர்.
சிமிர்னா சபை அப்போஸ்தலனாகிய பவுலால் உருவாக்கப்பட்டது. “முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர்” என்று பிரபஞ்சத்தைப் படைத்த கர்த்தரை யோவான் குறிப்பிடுகிறான். கன்னி மரியாளுக்குப் பிறந்த நம் தேவன், யோவானிடம் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களை ஏற்றுக்கொண்டு, சிலுவையில் இரத்தம் சிந்தி இப்பாவங்களுக்காக தீர்க்கப்பட்டார். மூன்று நாட்களில் அவர் மரித்தோரிலிருந்து எழுந்து கர்த்தரின் வலது பக்கத்தில் இப்போது அமர்ந்திருக்கிறார். இயேசுவானவர் கர்த்தரின் ஆலயத்தின் தேவதூதனுக்கு நம் இரட்சகராக மட்டும் பேசாமல் மகத்துவமுள்ள கர்த்தராகவும் பேசுகிறார்.
 
வசனம் 9: “உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்ததும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.”
சிமிர்னா சபை எதிர்கொள்ளும் அனைத்து கஷ்டங்களும் உபத்திரவங்களும் தேவனுக்குத் தெரியும். பொருள்வளத்தில் இந்த ஆலயம் ஏழையாயிருந்தாலும், சிமிர்னா சபை ஆவியில் வளம் பொருந்தியதாக இருந்தது. சிமிர்னாவில் அநேக யூதர்கள் வசித்தார்கள். அவர்களை கர்த்தர் “தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள்” என்று விவரித்தார். சாத்தான் தன் நோக்கங்களைச் செய்யும் பொருட்டு யூதர்கள் தம்மை அவனின் கருவிகளாக ஒப்புக்கொடுத்ததினால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கிக்கத் தடையாயிருந்ததோடு கர்த்தரின் சபையை துன்பப்படுத்தினார்கள். தாமே யூதர்கள் என்றும் தாம் மட்டுமே ஆபிரகாமின் பிள்ளைகள் என்றும் அவர்கள் விசுவாசித்தனர். ஆனால் அவர்கள் ஆபிரகாமின் விசுவாசத்தைப் பின்பற்ற தவறியதோடு, எதற்கும் மேலாக, அவர்களின் மூதாதையர்களின் கர்த்தரையே புறம்பேத் தள்ளினர். இந்த யூதர்களால் துன்பப்பட்ட, ஏழையாயிருந்த சிமிர்னா சபை ஆவியில் வளமுடைய சபையாக இருந்தது.
 
வசனம் 10: “நீ படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரனபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.”
“நீ படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே” என்று சிமிர்னா சபைக்கு கர்த்தர் கூறினார். “நீ மரணபரியந்தம் உண்மையாயிரு” என்றும் அவர் அவர்களுக்கு கூறினார், மேலும் அவர்களுக்கு “ஜீவ கிரிடத்தை” தருவதாகவும் உறுதி கூறினார். சிமிர்னா சபையின் சில பரிசுத்தவான்கள் சாத்தானால் பயமுறுத்தப்படுவர் என்றும் அவருக்கு முன்பே தெரியும். அதனால் தான் அவர்கள் மரணம் வரை விசுவாசம் உடையவர்களாயிருந்தால் ஜீவ கிரிடத்தை அவர்களுக்கு அளிப்பதாக உறுதி கூறினார்.
இந்த வசனத்தின் மூலம் தேவன் நமக்கு என்ன கூறுகிறார் என்றால், இறுதி காலத்தில் வாழப்போகும் கர்த்தரின் ஊழியர்களும் பரிசுத்தவான்களும், சாத்தானாலும் அவனைப் பின்பற்றுபவர்களாலும் துன்புறுத்தப்படுவர். ஆனால் நாம் மரணம் வரை கர்த்தருக்கு விசுவாசமாயிருக்கும் பலத்துடனிருக்கிறோம், ஏனெனில் இந்த பலமானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலுள்ள நமது விசுவாசத்திலிருந்தும், கர்த்தர் நமக்கு உறுதியளித்த புதிய வானம் மற்றும் புதிய பூமியிலுள்ள நம்பிக்கையிலிருந்தும் அளவில்லாமல் வருகின்றது.
 
வசனம் 11: “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.”
இறுதிகாலத்தின் விசுவாசிகள் அந்திகிறிஸ்துவுடனும் கர்த்தருக்கு எதிராக நிற்பவர்களுடனுமான போரில் ஈடுபடுவர். உண்மை நற்செய்தி மற்றும் பரலோகம் மீது நம்பிக்கையுள்ளவர்கள் தம் விசுவாசத்தினால் வெற்றிபெறுவார்கள் என்று கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். தம்முடைய உண்மை மற்றும் விசுவாசம் ஆகிய வார்த்தையை கொடுத்த, விசுவாசிகள் தம் பகைவரை வெற்றி பெற அவர்களை ஏதுவாக்கினார். நாம் கர்த்தரின் பக்கத்திலும் அவரின் ஊழியர்களின் பக்கத்திலும் இருப்போமா என்பதே கேள்வி.
ரோமர் 8:18 நம்மிடம் கூறுகிறது “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத் தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.” அந்திகிறிஸ்துவாலும் அவனைப் பின்பற்றுபவர்களாலும் நாம் துன்பப்படுவது சிலகாலமே, அது 10 நாட்களாகக் கூட இருக்கலாம். கர்த்தரை விசுவாசித்து, இந்த சிலகாலத்தின் பாடுகளை மட்டும் தாங்கி, அந்திகிறிஸ்துவை மேற்கொண்டு, கர்த்தரை மகிமைப்படுத்தி அவரின் நித்திய ராஜ்யத்தை உங்கள் பரிசாகப் பெற்றுக் கொள்வீர்களாக.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நமது விசுவாசத்தினால் அந்திகிறிஸ்துவை நாம் வெற்றிக்கொள்வோமாக, நாம் மீண்டும் ஆயிரவருட அரசாட்சி மற்றும் புதியவானம் புதிய பூமி ஆகியவற்றில் சந்தித்து ஒன்று சேர்ந்து நித்தியமாக வாழ்வோமாக. முதல் மரணம் என்பது நம் சரீர மரணத்தைக் குறிக்கிறது, இரண்டாவது மரணம் ஆவிக்குரிய மரணமாகிய நித்திய நரகத் தண்டனையைக் குறிக்கிறது. பரிசுத்தவான்களுக்கு சரீர மரணமாகிய இரத்தசாட்சி இருக்கிறது, அவர்களுக்கு ஆவிக்குரிய மரணம் இல்லை.
இரத்தசாட்சியாக மரிப்பதை ஆதிசபையின் இரத்தசாட்சிகளுக்கு கொடுத்ததுபோல கடைசிக்கால விசுவாசிகளாகிய நமக்கும் இரத்தசாட்சியின் மகிமையையும் மரியாதையும் கொடுத்த கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன்.