• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 10 : வெளிப்படுத்தின விசேஷம் (வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 2-4] மரணம் வரைக்கும் விசுவாசமாயிருங்கள் (வெளி 2:8-11)

(வெளி 2:8-11)
 
ஆதிசபையின் காலத்தில் அநேக கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு இடமாக அலைந்துகொண்டிருந்தார்கள், ரோம அதிகாரிகளின் துன்புறுத்தும் கைகளிலிருந்து தப்பிக்க பாதுகாப்பான இடங்களைத் தேடினார்கள். நீரோ சக்கரவர்த்தியின் அழிவிற்கு பிறகும் கூட, அவனைத் தொடர்ந்து வந்த மற்ற சக்கரவர்த்திகளின் அதிகாரத்தையும் கிறிஸ்தவர்கள் ஏற்கமறுத்தமையால், ரோம சாம்ராஜ்யம் அவர்களைத் துன்புறுத்தும் கொள்கையைத் தொடர்ந்தது. ஆதி பரிசுத்தவான்கள் ரோம சக்கரவர்த்திகளின் உலகப் பிரகாரமான அதிகாரத்தை உணர்ந்து அதனை ஏற்றுக்கொண்டார்கள், ஆனால் அவர்கள் தம் விசுவாசத்தை விட்டுவிடவேண்டிய சூழ்நிலை வந்தபோது அந்த அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ரோம அதிகாரிகளின் அத்தகைய வற்புறுத்தல்களை அவர்கள் எதிர்த்து நின்றதால் ஆதிசபையின் வரலாற்றுப்பக்கங்கள் துன்புறுத்தல்களாலும் இரத்தசாட்சிகளாலும் நிரம்பியிருக்கிறது.
இன்றைய கிறிஸ்தவர்களுக்கு வெளிப்படுத்தலின் வார்த்தையில் பொருந்தக்கூடிய வகையில் ஏதாவது இருக்கிறதா என்று நாம் நம்மைக் கேட்கவேண்டும். அது இன்றல்ல, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்டது, நமக்கல்ல, அது ஆசியாவின் ஏழு சபைகளுக்கு எழுதப்பட்டது, அது எப்படி நமக்கு பொருந்தும்?
அது கர்த்தருடைய வார்த்தையாயிருப்பதால் பொருந்தும், எதிர்காலத்தில் வரவிருக்கிறவைகளைக் குறித்த அதிசயங்களை அது வெளிப்படுத்துகிறது. வெளி 6 இல் விவரிக்கப்பட்டுள்ள “நான்கு குதிரைகளின் காலங்களில்” மூன்றாவது காலமான கறுப்புக்குதிரையின் காலத்தில் நாமிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். வெள்ளை மற்றும் சிகப்பு குதிரைகளின் காலங்களைக் கடந்து, கறுப்புக் குதிரையின் காலத்திலும் அதன் முடிவில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உலகம் சரீரப்பிரகாரமானதும், ஆவிக்குரியதுமான பெரிதான பஞ்சத்தை வெகு சீக்கிரம் சந்திக்கும் பஞ்சகாலம் ஏற்கெனவே வந்துவிட்டது என்று கூறுவது அநேகமாக பாதுகாப்பானதாகும். பஞ்சத்தின் காலமான, இப்போதைய கறுப்புக்குதிரையின் காலம் முடிவடையும்போது, மங்கின குதிரையின் காலம் வரும்.
வெளி 6 இல் குறிப்பிட்டுள்ள ஏழு முத்திரைகளும், கர்த்தர் பிரபஞ்சத்தை முதலில் படைத்தபோது கிறிஸ்துவுக்குள் மொத்தமாக ஏழு காலங்களை திட்டமிட்டதாக பொருள்படுகிறது. முதலாவது காலமான, வெள்ளைக் குதிரையின் காலம் நற்செய்தியின் காலமாகும்; இரண்டாவது காலமான சிகப்புக்குதிரையின் காலம் சாத்தானின் காலமாகும். இதில் சாத்தான் உலகில் பெரிய குழப்பங்களை எடுத்து வந்து போர்களை உருவாக்கி, கர்த்தரின் ஆலயத்தை தொடர்ந்து துன்புறுத்துவான். இந்த காலங்களுக்குப் பிறகு கறுப்புக்குதிரையின் காலம் வரும், இக்காலத்தில் சரீர மற்றும் ஆவிக்குரிய பஞ்சம் உலகத்தை நாசஞ்செய்யும். இந்த கறுப்புக்குதிரையின் காலம் சில காலத்திற்கு முன்னால் ஏற்கெனவே தொடங்கிவிட்டது.
இக்காலம் முடியும்போது, மங்கின குதிரையின் காலம் தொடங்கும். இதில் அந்திகிறிஸ்து தோன்றுவான், அவனுடனே கூட வெளி 8 இல் விவரிக்கப்பட்டுள்ள ஏழு எக்காளங்களின் வாதைகளும் தொடங்கும். ஏழு எக்காளங்களில் கடைசியானது ஊதப்படும்போது, பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படுவர், இதனை ஏழு பாத்திரங்களின் வாதைத் தொடரும். எடுத்துக் கொள்ளப்பட்ட பரிசுத்தவான்களுடன் ஆட்டுக் குட்டியானவரின் கல்யாணப்பந்தி ஆகாயத்தில் நடந்தேறும், மேலும் ஏழு பாத்திரங்களின் வாதை முடிவடையும் போது, நம்முடனே கூட தேவன் பூமிக்குத் திரும்பி தன் ஆயிரவருட அரசாட்சியைத் தொடங்குவார். ஆயிரம் வருட அரசாட்சியைத் தொடர்ந்து புதியவானமும் புதியபூமியும் வரும், அது தம் முதல் உயிர்த்தெழுதலின்போது, ஆயிரவருட அரசாட்சியில் வாழ்ந்த, பரிசுத்தவான்களின் மீது வரும்.
மேலும், “நீ மரணபரியந்தமும் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரிடத்தை உனக்குத் தருவேன்” மற்றும் “ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை” ஆகிய வெளிப்படுத்தின விசேஷத்தின் வசனங்கள் நம்மிடம் நேரடித் தொடர்புடையவை. வேறுவார்த்தைகளில் கூறுவதானால், இன்றைய உலகில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு வெளிப்படுத்தலின் வார்த்தைகள் நிச்சயமாக பொருந்துகின்றன. வெளிப்படுத்தல் நமக்கு சம்பந்தமில்லாத ஒன்றென்றால், கர்த்தரின் இந்த வார்த்தைக்கு எப்பொருளும் இருந்திருக்காது.
வெளிப்படுத்தின விசேஷத்தில் வெளிப்படுத்தப்பட்ட ஏழு காலங்களும் நடைமுறைப்படுத்தப் பட்டு நம் தேவனாகிய கிறிஸ்துவினால் முழுமைப்படுத்தப்பட்டது. மங்கின குதிரையின் காலம் வரும்போது, அந்திகிறிஸ்து தோன்றுவான். அக்காலத்தில் தேவன் நமக்காக வைத்திருக்கும் திட்டத்தை கர்த்தரின் வார்த்தையிலிருந்து கண்டுபிடிக்க வேண்டும். கர்த்தர் நமக்காக எப்படி முழுத்திட்டத்தையும் ஏற்படுத்தினார் என்றும் -அவற்றை எப்படி முடிவு செய்வார் என்றும்- எத்தகைய வாதைகள் உலகிற்கு வரும் என்றும், விசுவாசிகளுக்கு என்ன நடக்கும் என்றும், அவிசுவாசிகளுக்கு எத்தகைய விபத்துக்களும் வாதைகளும் வரும் என்றும் வெளிப்படுதலின் வார்த்தையிலிருந்து நாம் புரிந்துகொள்வது முற்றிலும் அவசியமானது. இந்த தீர்க்கதரிசன வர்த்தைகள் கூறும் முக்கியத்துவத்தையும் பொருந்துவதனையும் நீங்கள் ஏற்று விசுவாசிக்கவேண்டும்.
ஏழு வருட மகா உபத்திரவகாலம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை போன்றவற்றைக் குறித்து வெளிப்படுத்தின விசேஷம் என்ன கூறுகிறது என்று தெளிவான அறிவு உங்களிடம் இருக்கவேண்டும். உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக்கொள்ளப்படுதல் என்ற தத்துவத்தை இன்றைய கிறிஸ்தவர்களின் அநேகர் விசுவாசிக்கிறார்கள். இது 1830 இல் இங்கிலாந்தில் தோன்றியது, அதன்பிறகு மூடி வேதாகம பாடசாலையின் பேராசிரியரான சி. ஐ. ஸ்கோஃபீல்ட் என்ற அறிஞரால் பிரபலப்படுத்தப்பட்டது.
மகா உபத்திரவக் காலமாகிய ஏழு வருட காலம் தொடங்குவதற்கு முன்னமே பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப் படுவர் என்று இத்தத்துவம் கூறுகிறது. இதன்படி புறஜாதியார் முதலில் எடுத்துக்கொள்ளப்படுவர், அதன்பிறகு இஸ்ரவேல் மக்களின் இரட்சிப்பிற்கான செயல்களைக் கர்த்தர் தொடங்குவார். மேலும், அந்திகிறிஸ்து தோன்றுவதற்கும் ஏழு பாத்திரங்களின் வாதைகள் தொடங்குவதற்கும் முன்னதாகவே பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படுவர்.
பொதுவாக, ஆயிரம் வருடம் இல்லை அல்லது உபத்திரவகாலத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவம் ஆகியவற்றை அநேக கிறிஸ்தவர்கள் விசுவாசிக்கின்றனர். இவையெல்லாம் வெறும் தத்துவங்களே, இவை போதுமான வேதாக அறிவு இல்லாமலும் தெளிவான ஞானமில்லாமலும் கட்டப்பட்டுள்ளது. வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விசுவாசிகளின் அநேக கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக, இந்த கொள்கை அதிக தீமைகளைச் செய்தது, இது வெளிப்படுத்தலின் வார்த்தையைக் குறித்து அதிகக் கேள்விகளையும் சந்தேகங்களையும் உருவாக்குகிற்று.
உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படுதல் என்ற இத்தத்துவம் சரியானதாக இருந்தால், வெளிப்படுத்தின விசேஷத்திற்கு புறஜாதியாரான விசுவாசிகளுடன் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்? வெளிப்படுத்தலில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ள மகா உபத்திரவத்திற்கும் அதனைத் தொடரும் சம்பவங்களுக்கும் நம்முடன் எந்த சம்பந்தமும் இல்லாது போயிருக்கும், ஏனெனில் நாம் ஏற்கெனவே எடுத்துக்கொள்ளப் பட்டிருப்போம். இப்படித்தான் அநேக மக்கள் வெளிப்படுத்தின வார்த்தையை விசுவாசமாக எடுத்துக்கொள்வதற்கு பதிலாக ஆர்வமானதாக பார்க்கின்றனர்.
இந்நாளின் உலகில் வசிப்போராகிய நமக்கு வெளிப்படுத்தலின் வார்த்தைகள் சரியாகப் பொருந்துகின்றன என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். நான் ஒன்றைக் கேட்கட்டும்: நீங்கள் கர்த்தரின் வார்த்தையை விசுவாசிக்கிறீர்களா? முடிவு காலத்தின் எண்ணிலடங்கா தத்துவங்கள் உள்ளன, ஆயிரவருட அரசாட்சி இல்லை என்பதிலிருந்து அந்த அரசாட்சிக்கு பிந்திய எடுத்துக்கொள்ளப்படுவது வரையிலும், உபத்திரவத்திற்கு பிந்திய எடுத்துக் கொள்ளப்படுதல், உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக்கொள்ளப்படுதல், உபத்திரவத்தின் நடுவில் எடுத்துக்கொள்ளப்படுதல் ஆகியவை அவை. அறிஞர்களால் கூறப்பட்ட இக்கொள்கைகள் -வெறும் தத்துவங்களும், தத்துவக் கருத்துக்களும், எதிர்ப்பார்ப்புகளுமாகும்.
இத்தத்துவங்களில் நீங்கள் எதனை விசுவாசிக்கிறீர்கள்? உபத்திரவ காலத்திற்கு முந்திய எடுத்துக்கொள்ளப்படும் மகிழ்ச்சியை விசுவாசிப்பதாக அநேக மக்கள் கூறுகின்றனர், ஏனெனில் அவர்கள் போதகர் அவர்களுக்கு போதித்தது அப்படிதான். நான் உங்களுக்கு தெளிவாகவும் உறுதியாகவும் கூறுகிறேன். நீங்களும் நானும் ஏழு எக்காளங்களின் வாதைகளுக்கு ஊடே செல்வதுடன் மகா உபத்திரவத்திற்குள்ளும் வாழ்வோம். மகா உபத்திரவத்திற்குள் நாம் நிச்சயமாய் செல்லவேண்டியிருப்பதால், நம்முடைய விசுவாசமானது நமக்கு காத்திருக்கும் சோதனைகளையும் உபத்திரவங்களையும் மேற்கொள்ள உண்மையானதாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும்.
உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவத்தை நீங்கள் விசுவாசித்தால் எப்படியாகும், நீங்கள் உங்களுக்கு “மகா உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படுவேன், அதைக் குறித்து கவலைப்படத் தேவையில்லை” என்று கூறி முடிவு காலத்திற்கு உங்களை ஆயத்தம் செய்வதில்லை அல்லவா? கர்த்தருடைய வார்த்தை கூறுவதுபோல் ஏழாண்டு கால, மகா உபத்திரவத்தின் காலம் வரும்போது, தம் விசுவாசத்தை உபத்திரவத்திற்கு ஆயத்தஞ் செய்யாதவர்கள் பெரிதான குழப்பத்திற்குள்ளும், துன்பத்திற்குள்ளும், மரணத்திற்குள்ளும் மூழ்கிப்போவர் - அதாவது, இயேசுவின் மீதுள்ள நம்பிக்கை ஆடிப்போகும். அவர்களில் அநேகரால் உபத்திரவத்தை மேற்கொள்ள முடியாது விசுவாச யுத்தத்தில் தோல்வியடையவதில் முடிவடைவர்.
உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவம் தோன்றுவதற்கு முன்னால், ஏழு வருட மகா உபத்திரவ காலத்தினூடே செல்லவேண்டும் எனவும், மேலும் இதன் முடிவிற்கு பிறகு, கிறிஸ்து இரண்டாம் முறை வரும்போது தான், தாம் எடுத்துக்கொள்ளப்படுவோம் எனவும், அநேக கிறிஸ்தவர்கள் நம்பினர், ஏழு வருட காலத்தின் ஒவ்வொரு வருடமும் அனுபவிக்க வேண்டியிருப்பதை எண்ணி, அதிக பயத்துடன் தம் விசுவாசத்தை ஒரு வித எதிர்ப்பார்ப்புடன் ஆயத்தம் செய்தனர். அனைத்து வாதைகளுக்குள்ளும் செல்லவேண்டும் என்பது மிகவும் பயங்கரமான சிந்தனையாக இருந்திருக்க வேண்டும், எல்லோருக்கும் அப்படிப்பட்ட பயமிருக்கிறது. அப்படிப்பட்ட விசுவாசமும் கூட பள்ளிக்கூட தத்துவங்களே, அது கர்த்தரின் வார்த்தையைக் குறித்த அறிவீனத்தால் தோன்றியது.
ஆயிரவருட அரசாட்சி இல்லையென விசுவாசிக்கும் பழமைவாதிகள் இருக்கிறார்கள். ஆயிரவருட அரசாட்சியானது வெறும் அடையாளாமே என்று இம்மக்கள் கருதுகிறார்கள். விசுவாசிகள் தம் இரட்சிப்பின் மூலமாக கிறிஸ்துவுடன் செய்துகொள்ளும் சமாதானத்திற்கு அறிகுறியாக இதனைக் கருதுகின்றனர். இந்த பள்ளிக்கூட தத்துவங்கள் சரியானவை என்றால், உலகிற்கு நடப்பவைகளைக் குறித்து கவலைப்படோம், ஏனெனில் உபத்திரவம் தொடங்குவதற்கு முன் கர்த்தரால் நாம் வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருப்போம்.
அவை உண்மையில்லையென்றால் என்னவாகும்? நம் விசுவாசத்தை ஆயத்தம் செய்யாமல் மகா உபத்திரவத்தை சிந்தித்தால், சில்லிடும் பயத்தினால் பிடிக்கப்பட்டவர்களாயிருப்போம். நம் விசுவாசத்தை பாதுகாக்க முடியாதவர்களாகவும், அலையலையாய் வரும் சோதனைகளுக்கும் உபத்திரவங்களுக்கும் அடிபணிந்து, உலகம் செல்லும் பிரகாரமாய் நாமும் வேகமாகச் செல்லத்தொடங்குவோம், ஆனால் கர்த்தர் நம்மிடம் கூறினார், யாருடைய பெயர்கள் ஜீவப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதோ -அதாவது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்கள்- சரணடைவதில்லை.
மறுபடியும் பிறந்தவர்களில், மகா உபத்திரவத்தின் சோதனைகளை தம் விசுவாசத்தினால் வெல்பவர்களை, உபத்திரவத்தின் மத்தியில் ஆகாயத்திற்கு எடுத்துக்கொள்வதாக கர்த்தர் வெளிப்படுத்தலின் வார்த்தையில் நமக்கு கூறுகிறார். இப்படியாக உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக்கொள்ளப்படும் தத்துவம் வேதாக உண்மையிலிருந்து தூரமாகிறது, இதன் பொருள் இக்கூற்று மனிதர்களினால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதாகும். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், இது ஒரு பொய், உண்மையல்ல.
ஆனாலும் கூட உலகிலுள்ள அநேக மக்கள் உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவத்தை ஏற்றுக்கொண்டனர். ஸ்கோஃபீல்டின் போதனையான உபத்திரவத்திற்கு முன் எடுத்துக் கொள்ளப் படுதலை விசுவாசிப்பவர்கள் கீழ்க்கண்டவற்றை நம்புகின்றனர்.
1. இறுதிகாலங்களில் அந்திகிறிஸ்து தோன்றிய பிறகே மகாஉபத்திரவக் காலமாகிய ஏழுவருடங்கள் தொடங்கும்.
2. மகா உபத்திரவக் காலத்தின் ஏழு வருடங்களாக அந்திகிறிஸ்து உலகை அரசாளுவான்; பின்பகுதியை தீய கொடுங்கோலனாகவும் ஆட்சி புரிவான்.
3. எருசலேம் ஆலயம் மீண்டும் கட்டப்பட்டு பலிகாணிக்கைகள் மீண்டும் தொடங்கும்.
4. அந்திகிறிஸ்து இஸ்ரவேலர்களுடன் ஏழாண்டு ஒப்பந்தம் ஒன்றைச் செய்வான்.
5. உபத்திரவ காலத்தின் மூன்றரையாண்டுகள் முடியும்போது இஸ்ரவேலுடனான ஒப்பந்தத்தை அந்திகிறிஸ்து முறியடிப்பான்.
6. அதன் பிறகு வரும் மூன்றரை வருடங்கள் இஸ்ரவேலர்களுக்கு பெருத்த உபத்திரவமும் துன்பமுடைய காலமாகும். இக்காலத்தில் கிருபையின் நற்செய்திக்கு பதிலாக ஆயிரவருட அரசாட்சியின் நற்செய்தி பிரசங்கிக்கப்படும்.
7. உபத்திரவத்திற்கு பிறகு இஸ்ரவேலர்களில் 144,000 பேர் உயிரோடிருப்பர்.
8. ஆர்மகெதோன் யுத்தத்துடன் உபத்திரவம் முடிவடையும்.
மேற்கண்டவாறு மகாஉபத்திரவத்தை வரையறுத்த ஸ்கோஃபீல்ட், உபத்திரவத்தின்போது புறஜாதியாருக்கு என்னவாகும் என்று குறிப்பிடவில்லை. வேறுவார்த்தைகளில் கூறினால், கிறிஸ்துவை விசுவாசிக்கும் புறஜாதியார் உபத்திரவத்திற்கு முன்பே எடுத்துக் கொள்ளப் படுவர் என்றும் அவர்கள் எடுத்துக் கொள்ளப் பட்ட பிறகே கர்த்தர் இஸ்ரவேல் மக்களின் மத்தியில் செயல்படுவர் என்றும், ஸ்கோஃபீல்ட் வாதிட்டார். 144,000 இஸ்ரவேலர்களை விடுவிப்பதுடன் அவரின் செயல் முடிவடையும், இத்துடன் அவர் தன் இரட்சிப்பின் செய்கைகளை முடிப்பார். அப்போது ஆயிரவருட அரசாட்சி தொடங்கும்.
ஜான் நெல்சன் டார்பி என்பவரே ஸ்கோஃபீல்டிற்கு உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக்கொள்ளப்படுதல் என்ற கொள்கையை வழங்கியவர். இவர் பிளைமவுத் சகோதரர்கள் என்ற குழுவைத் தொடங்கியவர், மேலும் அவர் ஒரு பெந்தேகோஸ்தே தலைவரைச் சந்தித்த பிறகு இத்தத்துவத்தை அறிவித்தார். இத்தலைவர் ஸ்காட்லான்ட்டின் மார்க்ரெட் மாக்டொனால்ட் என்ற பெயருடைய 15 வயதுடைய சிறுமியாவாள், அவள் கர்த்தரின் ஒரு காட்சியில் மகா உபத்திரவக் காலத்திற்கு முன் கிறிஸ்தவர்கள் எடுத்துக்கொள்ளப்படுவதைக் கண்டதாக 1830 இல் கூறினாள். இச்சிறுமியை டார்பி சந்தித்த பிறகே உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக்கொள்ளப்படுதலை அவர் போதிக்கத் தொடங்கினார்.
அமெரிக்க இறையிலாளரான ஸ்கோஃபீல்டிற்கு டார்பியின் போதனைகள் கூறப்பட்டன, ஸ்கோஃபீட்டின் விளக்கமான வேதாகமம் என்ற அதிகம் பயன்படுத்தப்பட்ட நூலிற்கு தன் முழுவாழ்வையும் செலவு செய்த ஸ்கோஃபீல்ட், உபத்திரவத்திற்கு முன்பு எடுத்துக்கொள்ளப்படுதல் நடக்குமா அல்லது அதற்கு பிறகு நடக்குமா என்ற கேள்வியால் குடையப்பட்டார். டார்பியின் உபத்திரவத்திற்கு முந்தைய எடுத்துக்கொள்ளப்படுதல் என்ற தத்துவத்தை ஸ்கோஃபீல்ட் கேட்டபோது, அவர் அதனில் மூழ்கிப்போனார், அது கூறுபவற்றினால் முழுத்திருப்தியடைந்த அவர் அத்தத்துவத்தை தழுவி அதனை தன் ஸ்கோஃபீல்டின் விளக்கமான வேதாகமத்திலும் சேர்த்தார். இப்படித்தான் ஸ்கோஃபீல்ட், உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக்கொள்ளப்படுதலை விசுவாசித்து அதற்காக வாதிட்டார், அதனை எத்தனைக் கிறிஸ்தவர்கள் இன்று பின்பற்றுகின்றனர்.
டார்பி மற்றும் ஸ்கோஃபீல்ட் ஆகியோரால் உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக்கொள்ளப்படுதல் என்ற தத்துவம் அறிவிக்கப் படுவதற்கு முன்னால், அநேக கிறிஸ்தவர்கள் உபத்திரவத்திற்கு பிந்திய எடுத்துக்கொள்ளப்படுதலை விசுவாசித்தனர். ஆனால் அமெரிக்காவின் மூடி வேதாகமம் பாடசாலையின் பேராசிரியரான ஸ்கோஃபீல்ட், தன்னுடைய ஸ்கோஃபீல்டின் விளக்கமான வேதாகமத்தினால் பிரபலமாகியதால், வேதாகம, தர்க்கங்களில் அவர் கூறுவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாயிருந்தது. ஸ்கோஃபீல்ட் மற்றும் அவரின் தாக்கத்தினால் உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக்கொள்ளப்படுதல் என்ற தத்துவம் உலக முழுவதுமுள்ள கிறிஸ்தவ சமூகங்களில் பரவியது.
இதன் பயனாக, இந்நாளின் அநேக கிறிஸ்தவர்கள் தம் விசுவாசத்தில் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்திக்கிறிஸ்துவுக்கும் தமக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று அவர்கள் தவறாக எண்ணுவதால் அவர்கள் தூங்குகிறார்கள். மகா உபத்திரவத்தின் காலம் தொடங்குவதற்கு முன்பே தாம் எடுத்துக்கொள்ளப்படுவதால் தம் விசுவாசத்தை ஆயத்தம் செய்ய அவசியமில்லை என நினைக்கின்றனர். மணவாளன் வரும்பொழுதை யாரும் அறிந்திராதபடியினாலே எப்போதும் விழித்திருங்கள் என்று நம் தேவன் கூறினார். கர்த்தரின் வார்த்தையை பொருட்படுத்தாது உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படுதலின் போதனைகளைச் சார்ந்து தூங்கிக்கொண்டிருப்பது வேதனையானது.
இதுவே விழிப்பதற்கான நேரம். உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படுதலை எறிந்துவிட்டு சத்தியவார்த்தையை விசுவாசிப்பதற்கான நேரமும் இதுவே. உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவமோ, உபத்திரவத்திற்கு பின் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவமோ, இவை இரண்டுமே வேதாக அடிப்படை இல்லாதவை; நீங்கள் கர்த்தரின் உண்மையான வார்த்தைக்குத் திரும்பவேண்டும். வெளிப்படுதலின் வார்த்தை (6:8) நம்மிடம் கூறுகிறது “நான் பார்த்தபோது, இதோ மங்கினநிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்டமிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.”
மங்கின நிறமுடைய குதிரையின் மீது அமர்ந்திருக்கும் அந்திக்கிறிஸ்துவின் பெயர் மரணம் என்றும், அவனைப் பாதாளம் தொடர்ந்தது என்றும் இங்கு கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் அந்திகிறிஸ்து கொலைகாரன் என்றும், அவன் தன்னால் பிடியுண்டவர்களை நரகத்திற்கு வழிநடத்துவான் என்பதாகும். பட்டயத்தாலும், பட்டியினாலும், பூமியின் மிருகங்களினாலும் கொல்வதற்கு, பூமியின் நான்கில் ஒரு பாகத்திற்கு அவனுக்கு அதிகாரம் கொடுக்கப்படும் என்று இங்கு கூறப்பட்டுள்ளது. வேறுவார்த்தைகளில் கூறுவதானால் ரோமச் சக்கரவர்த்திகளைப் போன்றே அக்கிரமங்களைச் செய்வான் -இப்போது மிக அதிகமாயிருக்கும்- கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி அவர்களின் விசுவாசத்தை அழிக்க கொலை, துஷ்பிரயோகம் ஆகிய அனைத்தையும் செய்வான்.
மங்கின நிறமுள்ள குதிரையின் காலம் அந்திகிறிஸ்துவின் காலம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். தேவன் கூறுகிறார், “வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?” (மத்தேயு 16:3) காலங்களின் அடையாளங்களை நம்மால் நிதானிக்க முடியவில்லை என்றால், நம்மிடம் இருக்கவேண்டிய விசுவாசம் எத்தகையது என்றும் தெரியாது, இதனால் விதை விதைக்கவும், பழங்களைப் பறிக்கவும் கூடாது போகும், வேறுவார்த்தைகளில் கூறுவதானால், தேவனுக்காக நம்மால் செயல்பட முடியாது, இன்று சிகப்புக் குதிரையின் காலம் போய், கறுப்புக்குதிரையின் காலத்திலிருக்கிறோம். சீக்கிரமாக உலகம் பொருளாதார விபத்தினால் தாக்கப்பட்டு கடுமையான பஞ்சத்தைச் சந்திக்கும். பசியும் பட்டினியும் முழு உலகத்திலும் தலை விரித்தாடும். இவையெல்லாம் நடக்கும்போது, அநேகர் மனக்கிலேசத்தால் வருந்துவர். அவர்களில் ஒருவராயிருக்க வேண்டாம்; அதற்கு பதிலாக, காலத்தின் அடையாளங்களை நிதானிக்க தெரிந்த விசுவாசமுடையவர்களாயிருங்கள்.
இன்றைய காலம் கறுப்புக்குதிரையின் காலமாகும். இக்கறுப்புக்குதிரையின் காலம் முடிவடையும்போது, மங்கின நிறமுடைய குதிரையின் காலம் வரும். இக்காலகட்டத்தில் தோன்றும் அந்திகிறிஸ்து பரிசுத்தவான்களைக் கண்மூடித்தனமாகக் கொன்று துன்புறுத்துவான், இதனை இரத்தசாட்சிகளின் காலமாக குறிப்பான்.
வெளி 13:6-8 கூறுகிறது, “அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது. மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப் பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர் மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது, உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.” இங்கு “அவன்” என்பது அந்திகிறிஸ்துவைக் குறிக்கிறது. கர்த்தரை தூஷித்து பரிசுத்தவான்களைத் துன்புறுத்துவதற்கான சாத்தானின் வல்லமை உலகை ஆளும் ஒருவனுக்கு கொடுக்கப்படும் என்று இந்த வசனங்கள் கூறுகின்றன. இது சாத்தானின் குழந்தை, பறக்கும் நாகத்தின் வல்லமை இதனிடம் இருக்கும். இந்த வல்லமையினால் பரிசுத்தவான்களுடன் போரிட்டு அவர்களை “ஜெயிக்கும்படி.” ஜெயிக்கும்படி என்பதன் பொருள் அவன் பரிசுத்தவான்களை இரத்தசாட்சிகளாக்குவான் என்பதே. இது பரிசுத்தவான்களின் சரீர மரணத்தை மட்டுமே குறிக்கிறது; அந்திகிறிஸ்துவால் பரிசுத்தவான்களின் விசுவாசத்தை ஒரு போதும் அகற்ற முடியாது.
ஸ்கோஃபீல்ட் வாதிடுவது பரிசுத்தவான்கள் மகா உபத்திரவத்தை சந்திப்பதேயில்லை என்பதாகும். ஆனால் ஏழு வருட மகா உபத்திரவம் இல்லாது, பரிசுத்தவான்களுக்கு ஆயிரவருட அரசாட்சியில்லை. பரிசுத்தவான்கள் மகா உபத்திரவக் காலத்திற்கு பிறகு இரத்தசாட்சிகளாக வெளிவருவர். வேதாகமத்தின் இத்தீர்க்கதரிசனங்களெல்லாம், உலகின் மிகத் தொடக்கத்திலேயே கிறிஸ்து இயேசுவிற்குள் திட்டமிடப்பட்டது. கிறிஸ்து நிறைவேற்றும் செயல்களில் உலகின் வரலாறுகள் நிறைவடையும்.
கர்த்தர் நமக்கு ஆயத்தமாக்கியுள்ள ஏழு காலங்களையும் நிதானிக்க உங்களால் இயலவேண்டும். முதலாவது காலம் வெள்ளைக் குதிரையின் காலமாகும், இக்காலத்தின் கர்த்தரின் வார்த்தை தன் செயல்களைத் தொடங்கும். இரண்டாவது காலமாகிய, சிகப்புக்குதிரையின் காலமானது, சாத்தானின் காலமாகும். மூன்றாவது காலமாகிய கருப்புக்குதிரையின் காலம் சரீர மற்றும் ஆவிக்குரிய பஞ்சத்தின் காலமாகும். நான்காவது காலமாகிய மங்கின நிறமுடைய குதிரையின் காலம் அந்திகிறிஸ்து தோன்றும் காலமாகும், இதுவே ஏழு எக்காளங்களின் காலம், இரத்தசாட்சிகளின் காலமும் இதுவே. இந்த மங்கின நிறமுடைய குதிரையின் காலத்தை அறிந்துகொள்ள தவறியதே மக்களை இத்தனை குழப்பத்திற்குள்ளாக்கியது.
இக்காலத்தை அறியாமல், மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களாகிய நம்மால் சரியாக வாழ முடியாது. நமக்காகக் காத்திருப்பது எதுவென அறியாமலிருந்தால், எதிர்காலத்திற்கு நம்மால் எப்படி ஆயத்தமாக இருக்கமுடியும்? தம் வியாபாரத்தில் வெற்றி பெறவேண்டுமானால் காலத்திற்கேற்ப எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை வியாபாரம் செய்பவர்கள் அறிந்திருக்கவேண்டும். நமக்காக காத்திருப்பது என்னவென எதுவும் தெரியாமல், கிறிஸ்துவின் விசுவாசிகளாகிய நம்மால் எப்படி அவர் வருகைக்கு ஆயத்தமாயிருக்க முடியும்?
ஆயத்தமாக இருப்பதற்கு மகா உபத்திரவத்தைக் குறித்த தெளிவான அறிவு இருக்கவேண்டும். உபத்திரவ காலத்தின் முதல் மூன்றரை ஆண்டுகள் பரிசுத்தவான்கள் வாழ்ந்திருப்பர், இக்காலத்தில் அவர்கள் இரத்தசாட்சியாவார். அவர்கள் உபத்திரவத்தின் ஏழு ஏண்டுகளும் செல்வதில்லை, முதல் அரைவாசி கடக்கும்போது, அவர்கள் இரத்தசாட்சிகளாக்கப்பட்டு பிறகு உயிரோடெழுப்பப்பட்டு எடுத்துக் கொள்ளப் படுவார்கள். பரிசுத்தவான்களின் எடுத்துக்கொள்ளப்படுதல் என்பது கிறிஸ்து உலகிற்கு வருவார் என்று பொருள்படாது, ஆனால் அதற்கு பதிலாக, அவர்கள் ஆலயத்திற்கு தேவனால் எடுத்துக் கொள்ளப் பட்டு ஆட்டுக்குட்டியானவருடன் திருமண பந்தியில் பங்கு பெறுவார்கள்.
இதற்கிடையில் ஏழுபாத்திரங்களின் வாதையினால் இப்பூமி மூழ்கிப்போகும். தேவனால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம் பாவங்களிலிருந்து பனியைப் போல் வெண்மையாக்கப்பட்டவர்கள் மட்டுமே வாதைகளுக்குப் பிறகு கிறிஸ்துவுடனே கூட பூமிக்குத் திரும்புவார்கள். அதனால் தான் இக்காலத்தையும் அதன் தொடர்பு மற்றும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு நம் நம்பிக்கையை ஆயத்தப்படுத்தவேண்டும்.
சிமிர்னா சபையின் தூதனுக்கு நம் தேவன் கூறினார், “சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்ததும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன். நீ படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரனபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரிடத்தை உனக்குத் தருவேன்.” இந்த வசனத்தின் மூலம் சிமிர்னா சபை யூதர்களால் அதிகம் துன்புறுத்தப்பட்டிருப்பதை நாம் காணலாம். இந்த யூதர்கள் உண்மையான யூதர்களாயில்லாமல் சாத்தானின் கூட்டத்தினராயிருக்கின்றனர் என நம் தேவன் கூறினார். இதனை அவர் சிமிர்னா சபைக்கு மட்டுமில்லாமல், ஆசியாவின் ஏழு சபைகளுக்கும் கூறினார்.
சிமிர்னாவில் மிகப்பெரிய யூதர்களின் குடியிருப்பு இருந்தது, கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களைப் போன்று அதே கர்த்தரையே யூதர்கள் விசுவாசித்தாலும், ரோமர்கள் செய்தது போலவே, அவர்களும் சிமிர்னா சபையின் பரிசுத்தவான்களைத் துன்புறுத்தினர். கர்த்தர் கூறினார், “நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்போழுது ஜீவகிரிடத்தை உனக்குத் தருவேன்.” மேலும் “ஜெயங் கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை” ஜெயம் கொள்ளவேண்டுமென கர்த்தர் பரிசுத்தவான்களிடம் கூறினார். அதுபோல முடிவு பரியந்தம் நாம் அந்திகிறிஸ்துவுடன் போரிட்டு அவனுடனான நம் விசுவாசப்போரில் அவனை வெற்றிபெறவேண்டும். அப்பொழுது நம் தேவன் ஜீவகிரீடத்தை நமக்குத் தருவார் - வேறுவார்த்தைகளில் கூறுவதானால் நம்மை புதியவானம் புதிய பூமியில் வாழச் செய்யும் படி அவர் ஆசீர்வதிப்பார்.
இரத்தசாட்சியாகும்படியான தைரியம் உங்களிடமிருக்கிறதா? இரத்தசாட்சியாவதற்கு, உங்கள் விசுவாசத்தை ஆயத்தம் செய்வதற்கான சமயம் இதுவே. அப்படிச் செய்வதற்கு, தேவன் முன் நிற்பதற்கு உங்களை முற்றிலும் ஏதுவாக்கும் பாவவிடுதலையின் விசுவாசம் உங்களிடம் இருக்கவேண்டும் -இவ்விசுவாசம் எத்தயக்கமும் இன்றி இரத்தசாட்சியைத் தழுவும்.
இந்த விசுவாசத்தை நாம் இப்போதே ஆயத்தம் செய்யவேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காமல் ஒருவனால் பரலோக ராஜ்யத்தைக் காணவோ அதனுள் பிரவேசிக்கவோ முடியாது என நம் தேவன் எல்லோரிடமும் கூறினார். இந்த நற்செய்தியின் மீதுள்ள விசுவாசமே இறுதி காலத்தில் இரத்தசாட்சியாக மரிக்கச் செய்யும் விசுவாசம் என்று அவர் நம்மிடம் கூறினார்.
மக்களின் இருதயங்களில் பாவமிருந்தால் அவர்களால் எப்படி இரத்தசாட்சியாக மரிக்கமுடியும்? இரத்தசாட்சியாக மரிப்பதற்கு பதிலாக, மிருகத்திடம் குறியீட்டைப் பெற மற்றவர்களை வழி நடத்தும் மக்களாக அவர்களிருப்பர்! வேறெதுவுமல்ல, நம்மை நம் பாவங்களிலிருந்து சுத்திகரிப்பது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே, நீங்கள் அன்றாடம் மதச்சடங்காகச் செய்யும் மனம் வருந்தி ஜெபிப்பதாலும் கூட உங்கள் பாவங்களைச் சுத்திகரிக்க முடியாது. உங்கள் பாவங்களை மனம் வருந்தி ஜெபிப்பதன் மூலம் சுத்திகரிக்க முயல்வது உங்கள் நேரத்தையும் முயற்சியையும் வீணாக்குகிறீர்கள் என்பதாகும்.
இப்படிச் செய்ய முயலுபவர்கள் கர்த்தரின் வார்த்தை அவர்களிடம் கூறியதை விட இறையிலாளர்கள் கூறுவதை அதிகம் விசுவாசிக்கிறார்கள். அநேக கிறிஸ்தவர்கள் நம்பிக்கை வைத்துள்ள மக்களாகிய இந்த ஞானிகளே ஆயிரம் வருட அரசாட்சி இல்லை என விசுவாசித்து வாதிடுவதோடு தம்மை அறிஞர்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் வேதாகமத்தைக் குறித்து எத்தனை அறிவு குறைந்தவர்கள் என்பதைக் காட்டவில்லையா? இக் கொள்கையிலாளர்களின் படி ஆயிரம்வருட அரசாட்சியோ மகா உபத்திரவத்தின்போது, பரிசுத்தவான்களின் இரத்தசாட்சி மரணமோ இல்லை. உபத்திரவத்திற்கு முன் எடுத்துக் கொள்ளப்படும் தத்துவத்தையும், ஆயிரவருட அரசாட்சியையும் விசுவாசிப்பவர்களுக்கு வெளிப்படுத்தின விசேஷம் எந்தக் கருத்தையும் அளிப்பதில்லை.
வெளிப்படுத்தலின் வார்த்தை கர்த்தரின் வார்த்தையாகும். கிறிஸ்துவின் மிகவும் நேசத்திற்குரிய சீடனாகிய அப்போஸ்தலனாகிய யோவானால் எழுதப்பட்ட கர்த்தரின் வார்த்தை இது. இதனை யாரும் மறுப்பதில்லை.
இறையியலாளரின் கொள்கைகளையும் தத்துவங்களையும் நான் எதற்காகவும் குறைகூறவில்லை, ஆனால் நான் அப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விசுவாசத்தை ஆயத்தம் செய்ய இயலும். இது உங்கள் மரணபரியந்தம் தேவனுக்கு நீங்கள் விசுவாசமாயிருக்க செய்யும், மாக உபத்திரவத்தின் போது உங்கள் இரத்தசாட்சி மரணத்தைத் தழுவும் தீர்க்கமான ஆயத்தம் உடையவர்களாக துன்பத்தை சகித்துக்கொள்ள வேதாக வார்த்தைகளால் உங்களுக்கு பயிற்சி அளிக்கிறேன்.
அப்படிச் செய்வதற்கு உங்கள் விசுவாசத்தை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் ஆயத்தம் செய்யவேண்டும். மறுபுறம், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காதவர்கள், சாத்தானால் பிடியுண்டு கர்த்தரின் எதிரிகளாவர், ஏனெனில் ஜீவ புத்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்கள் சாத்தானை ஆராதிப்பர் என கர்த்தரின் வார்த்தை நம்மிடம் கூறுகிறது.
மகா உபத்திரவக்காலத்தின் நடுவில் பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாவதை கர்த்தர் அனுமதிப்பார். மகா உபத்திரவத்தின் ஏழாண்டு காலத்தின் முதல் மூன்றரையாண்டுகள் முடியும்போது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் இரத்தசாட்சிகளாயிருப்பர். அவர்களின் இரத்தசாட்சிகளுக்குப் பிறகு உயிர்த்தெழுதலும் எடுத்துக் கொள்ளப்படுதலும் வரும். வெளிப்படுத்தின விசேஷத்தின் மொத்த சாராம்சம் இதுவே. இதனால் தான் அதன் முக்கியக் கருத்துக்களை வலியுறுத்துகிறேன்.
அந்திகிறிஸ்துவின் காலம் வரும்போது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்தமைக்காக கொல்லப்பட்ட அநேகர், சிலகாலத்தில் உயிரோடெழுப்பப்பட்டு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். மங்கின நிறக் குதிரையின் காலம் வரும்போது, அவர்களின் இரத்தசாட்சியால் நம்பிக்கை பூக்கள் மலரும். சரியான காலம் வரும்போது, உண்மை விசுவாசம் உண்மைக் கனிகளைக் கொடுப்பதோடு அழகிய மலர்களும் மலரும்.
பாலைவனங்களில் சிலவகைச் செடிகள், ஒரே வாரத்தில் முளைத்து, பூத்து கனிகளைத் தரும். அவை பாலைவனத்தின் சூழ்நிலைக்கேற்ப ஒத்துப்போயுள்ளன, இங்கு மழை எப்போதாவது பெய்வதால் தண்ணீர் மிகவும் அரிதானது. அவை சீக்கிரமாக முளைத்து, பூ பூத்து சீக்கிரமாக கனிகளைத் தரவேண்டும், ஏனெனில் மிக்குறைவான, நீர் கிடைக்கும் காலம், அவ்வளவே.
மகா உபத்திரவக்காலத்தின் ஏழாண்டு காலத்தில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்போர்கள் இச்செடிகளைப் போன்றவர்கள். இந்த நற்செய்தியை விசுவாசித்து, அதனைப் பின்பற்றி, நம்முடனே கூட நற்செய்திக்காக மரிப்பதற்கு இந்த குறுகிய காலம் மட்டுமே போதுமானது. மகா உபத்திரவத்தின் நடுப்பகுதியான முதலாவது மூன்றரையாண்டுகளுக்குப் பிறகு அந்திகிறிஸ்துவின் பைத்தியம் உச்சக்கட்டத்தை அடையும்.
இப்போது தான் பரிசுத்தவான்களின் இரத்தசாட்சியாக மரித்தல் நிகழும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை ஏற்கெனவே கேள்விப்பட்டு அதனை தம் இருதயங்களினால் ஏற்றுக்கொள்ளாதவர்களால் கூட, நேரம் குறுகியதாக இருந்தாலும் கூட உபத்திரவக் காலத்தின் போது இந்த நற்செய்தியை விசுவாசித்ததால், அவர்களால் உண்மை விசுவாசத்தைப் பெற முடிவதோடு இரத்தசாட்சியாக நம்முடன் மரிக்கவும் முடியும். இதனால் தான் நற்செய்தியைப் பரப்புகிறோம், உலகிலுள்ள கிறிஸ்தவர்களை ஆவிக்குரிய உறக்கத்திலிருந்து எழுப்பவேண்டும். நாம் இரத்தசாட்சியாக மரிக்கும் வரை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உலகின் கடைசிவரை பரப்புவோம். இரத்தசாட்சி இல்லையென்றால், நாம் பரப்பும் இந்த நற்செய்தி எதற்கு உதவும்? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களால் இரத்தசாட்சியாக மரிக்கமுடியும். அதற்காக நம் விசுவாசத்தை இப்போதே ஆயத்தம் செய்யவேண்டும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் காப்பதற்கு இரத்தசாட்சியத்தைத் தழுவ நாம் கர்த்தருடன் சமாதானமாக இருக்கும்போதே நம் விசுவாசத்தை ஆயத்தஞ்செய்யவேண்டும், பிற்காலத்தில் வருந்த மட்டுமே முடியும். இறுதி காலம் வருகையில் நாமே பரபரப்பாக இருக்கிறோம், “தேவனே, இப்போது நான் அதிக வேலைகளுடனிருக்கிறேன், இன்னும் சிறிது காலம் பொறும்; இப்போது நான் மனம் வருந்திக்கொண்டிருக்கிறேன்” என்று கூறுகிறோம். முடிவுவரை இத்தகைய விசுவாசத்தை நாம் பிடித்துக்கொண்டிருந்தால், தேவன் நம்மிடம் விசுவாசத்தை நாம் பிடித்துக்கொண்டிருந்தால், தேவன் நம்மிடம் கூறுவார், “அக்கினிக் கடலில் நீயே ஏன் குதிக்க கூடாது? நீ அதற்கு மிகவும் தகுதியானவன்!” இப்போது பாவத்துடனிருப்பவர்கள் முடிவில் இப்படியாக முடிவடைவர் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். இதனால் தான் கர்த்தர் கூறினார், “ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.”
பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக மரித்துபோகும்போது, உலகின் இயற்கைச் சூழ்நிலை முற்றிலும் அழிந்து போயிருக்கும். காடுகள் எரிந்துபோயிருக்கும், கடல்கள், ஆறுகள் நீரூற்றுகள் யாவும் இரத்தமாகியிருக்கும்; சூரியன் சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் யாவும் ஒளியிழந்துபோகும். அதில் வசிப்பவர்கள் தீய ஆவிகளினால் பீடிக்கப்பட்டு, தம் மனதை இழந்துபோயிருப்பர், அவர்கள் குணம் மிகவும் வன்மையானதாக மாறியிருக்கும், அவர்களுடைய ஒரே இலக்கு, தாம் காணும், கர்த்தரின் பிள்ளைகளைச் சுற்றி வளைத்து அவர்களைக் கொல்வதே. இதனால் தான் நீங்கள் வெளிப்படுத்தலின் வார்த்தையை விசுவாசிக்க வேண்டும்.
இன்றைய சபைகள், பெரிய, அதிக இடமுள்ள உயரமான ஆலயங்களைக் கட்டுவதில் மட்டுமே தீவிரமாயிருக்கின்றன. கோடிக்கணக்கான டாலர்களை தம் ஆலயங்களைக் கட்டுவதற்கு செலவு செய்கின்றனர், ஆயினும் அவர்களின் இருதயங்களில் பாவங்கள் மட்டுமே உள்ளன, இயேசுவிற்காக இரத்தசாட்சியத்துவத்தை தழுவச் செய்யும் விசுவாசம் அவர்களிடம் இல்லை. இம்மக்கள் தம்மிருதயங்களை பாவங்களிலிருந்து கழுவவேண்டும்.
இவ்வுலகம் மிகச்சீக்கிரமாக மங்கின நிறமுடைய குதிரையின் காலமாகிய உபத்திரவத்தின் காலத்திற்குள் செல்லும். இரத்தசாட்சியத்தை தழுவச் செய்யும் விசுவாசம் உங்களிடம் இருக்கவேண்டுமெனவும், மரணம் வரை கிறிஸ்துவிடம் விசுவாசமுடையவர்களாய் இருக்க வேண்டுமெனவும் எதிர்ப்பார்ப்புடன் ஜெபிக்கிறேன். ஆவிக்குள்ளாக அதனைத் தீவிரமாக சோதித்து வெளிப்படுத்தலின் வார்த்தையை நாம் விசுவாசிக்கவேண்டும்.