• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 10 : வெளிப்படுத்தின விசேஷம் (வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 2-5] பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுவது யார்? (வெளி 2:8-11)

(வெளி 2:8-11)
 
இவ்வசனங்கள் சிறிய ஆசியாவின் சிமிர்னா சபைக்கான கர்த்தரின் நிருபமாகும் இவ்வாலயம் பொருளில் வறுமை உடையதாயிருந்தாலும், விசுவாசம் என்னும் ஆவிக்குரிய செல்வம் அதிகமுடையதாக இருந்தது. அதன் பரிசுத்தவான்களும் கர்த்தரின் ஊழியர்களும் தம் விசுவாசத்தைக் காத்தனர், அவர்கள் யூதர்களால் துன்புறுத்தப்பட்ட போதிலும், மரணத்திற்கேதுவான துன்பத்தை அனுபவித்தாலும், தேவனையும் அவரின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியையும் அவர்கள் மறுக்கவில்லை. கர்த்தரின் வார்த்தையை விசுவாசித்து போரிட்டு அதில் வென்றார்கள்.
சிமிர்னா சபையின் பரிசுத்தவான்களை மரணம் வரை விசுவாசத்துடனிருக்குமாறும், வரவிருக்கிற பாடுகளுக்கு பயப்படவேண்டாம் என்றும் தேவன் கூறினார், ஜீவகிரீடத்தை அவர்களுக்குத் தருவதாகவும் உறுதியளித்தார்.
தம்மை தீர்க்கதரிசிகள் என் அழைத்துக்கொள்வோரின் போலி தத்துவங்களுடன் போரிட்டு அதனை வெற்றிக் கொள்ளுமாறு கர்த்தர் தம் மக்களிடம் கூறினார். நம்முடைய அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட எத்தகைய விசுவாசம் நமக்குத் தேவையென அறிந்துகொள்ளவேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே உண்மையான நற்செய்தியென அறிந்து, இவ்விசுவாசத்தினால், இன்றைய கிறிஸ்தவ உலகத்தை சுகவீனமாக்கியுள்ள தவறான தத்துவங்களுடனும் பொய்களுடனும் போரிட்டு அவற்றை வெல்லவேண்டும். முழு உலகமும் சாத்தானால் வஞ்சிக்கப் பட்டிருந்தபோது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நிறைவேற்ற நம் தேவனை கர்த்தர் அனுப்பினார். அதனை விசுவாசிக்கும் அனைவரையும் அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் அவர் இரட்சித்தார். இந்த உண்மையை அறிந்து அதனை நாம் விசுவாசிக்க வேண்டும்.
கர்த்தருக்கு முன்பாக தம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்ட மக்கள் யார்? அவர்கள் பயில்வான்களோ, திடசித்தமுள்ள மக்களோ அல்ல, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை மட்டும் விசுவாசித்து தம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டவர்கள் அவராவர். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்து அதனை விசுவாசிப்பதன் மூலம் போலி தத்துவங்களுடனும் பொய்களுடனும் போராடி ஜெபித்த மக்கள் இவர்களேயாவர். இந்த நற்செய்தியை விசுவாசித்து போலித் தத்துவங்களை வெல்பவர்களுக்கு இரண்டாம் மரணத்தை தவிர்க்கும் வரத்தை கர்த்தர் வழங்குவார்.
 
 
ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு கர்த்தரின் இரட்சிப்பு அருளப்படும்
 
வெளிப்படுத்தலின் வார்த்தை நமக்கு கூறுவதுபோல, “ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை.” ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு மட்டுமே கர்த்தர் புதியவாழ்வையும் தம் புதிய ராஜ்யத்தையும் கொடுக்கிறார். நம்மிடம் இரண்டு காதுகளிப்பதால், இரண்டு வகையான கதைகளை கேட்கிறோம் - அதாவது, உண்மையையும் பொய்யையும் ஒரே நேரத்தில் கேட்கிறோம். கர்த்தரின் வார்த்தை மற்றும் சாத்தானுடைய வார்த்தை ஆகியவற்றில் எதனை நாம் ஏற்கிறோம் எதனை நாம் தள்ளிவிடுகிறோம் என்பதில் நம் எதிர்காலம் இருக்கிறது.
இதனால் தான் நாமனைவரும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கவேண்டும், இந்த சத்தியவார்த்தையுடனும் அதன் மீதுள்ள விசுவாசத்துடனும், தவறான போதனைகளுடன் போரிட்டு அதனை வெற்றி கொள்ளவேண்டும். இவ்வுலகிலுள்ள அனைவரும் பாவ பாரத்தால் துன்பப்படுவதால், நம்மை நம் பாவங்களில் இருந்து முற்றிலுமாக விடுதலைச் செய்யும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் தேடி அதனைக் காணவேண்டும். ஆனால் அநேகர் கள்ளப்போதர்களால் ஏற்கெனவே பொய்களால் நன்கு திணிக்கப்பட்டிருப்பதால் அவர்களால் உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் பாவஞ் செய்யாவிட்டால், நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள் என்பதின் அடிப்படையில் இக்கள்ளத் தீர்க்கதரிசிகளின் இரட்சிப்பைக் குறித்த பிரசங்கம் அமைந்திருக்கிறது.
ஆனால் அடிப்படையில் நாம், பாவஞ்செய்யவே பிறந்தவர்கள்; பாவஞ்செய்வது நமது தவிர்க்க முடியாத இயற்கை, ஆகவே இவ்வுலகின் பாவங்களுக்கு சங்கிலியால் கட்டப் பட்டவர்களாய் மட்டுமே நம்மால் இருக்கமுடியும். இப்படியாக பாவங்களின் இருதயங்கள் உலகின் பாவங்களுடன் கள்ளத் தீர்க்கதரிசிகளால் கட்டுண்டிருந்தால், அவர்கள் எப்படி கர்த்தரை விசுவாசித்து தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட முடியும்? அவர்கள் கர்த்தரின் ஆலயத்திற்கு திரும்பி நற்செய்தி வார்த்தையாகிய நீர் மற்றும் ஆவியைக் கேட்டு, தம் பாவங்களுக்கு கிரயஞ் செலுத்தப்பட்டு தம்மிருதயங்களில் உண்மையான ஆறுதலைப் பெறலாம். இவ்வுலகிலுள்ள அநேக மக்கள் உண்மையென ஆலயத்தைத் தேடி தம் இரட்சிப்பிற்காக அலைகிறார்கள், ஆனால் அவர்களின் அநேகர் அதைக் கண்டுபிடிக்கத் தவறி சட்டத்தின்படியான ஆலயத்தில் சேருவர் - இதனால் தான் அவர்கள் நரகத்தை நோக்கிச் செல்கிறார்கள்.
பாவிகளுக்கு உண்மையாகவே தேவைப்படும் கர்த்தரின் ஆலயம் என்பது, எந்தவகையான ஆலயமாகும்? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கிக்கும் ஆலயமே ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் கர்த்தரின் ஆலயமாகும். வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கர்த்தரின் ஆலயம் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் பிரசங்கிக்கிறது. உலகின் பாவங்களையெல்லாம் இயேசு எப்படி மிகச்சரியாக தன் மீது எடுத்துக்கொண்டு அவற்றை மறையச் செய்தார் என்பதை, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்குள், உண்மையான கர்த்தரின் ஆலயம் விளக்கி அதனைப் போதிக்கிறது. கர்த்தரின் ஆலயத்தின் மூலமாக வந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் கேட்டு, அதன் மூலமாக வந்த விசுவாசத்தினால் அவனும்/அவளும் தம் பாவங்களிலிருந்து விடுதலையடைய முடிந்தது.
ஆயினும் அநேக கிறிஸ்தவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் கேட்காமலும், அதனுடன் தொடர்பு இல்லாமலும் இருப்பதால் அவர்களால் தம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்படமுடியவில்லை. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து, போலி நற்செய்திகளை வெல்லப் போராடுபவர்களை பாவத்திலிருந்து விடுதலை செய்வதாக கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். ஜெயங்கொள்ளுகிறவர்கள் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்று கர்த்தர் நமக்கு உறுதியளித்தார்.
தவறான போதகர்களுக்கு எதிராக நின்று அவர்களை மேற்கொண்டவர்களுக்கு மட்டுமே உண்மையான பாவவிடுதலை கிடைக்கும். நாம் பாவிகளாய் பிறந்தமையால், தவறான போதனைகளை நம்மால் மேற்கொள்ள முடியவில்லையெனில், நாம் சாத்தானின் கைதிகளாகி, பாவத்தினால் பிணைக்கப்பட்டு, முடிவில் நரகத்தில் முடிவடைவோம். இதனால் தான் நம் ஆவிக்குரிய இரட்சிப்பின் போரில் பகைவரை, நாம் ஒவ்வொருவரும் வெல்லவேண்டுமென கர்த்தர் கூறினார்.
சிங்கம் அல்லது புலி போன்ற சில மிருகங்கள் தம் குட்டிகளை வேண்டுமென்றே மலைகளிலிருந்து கீழே தள்ளிவிட்டு அவைகளாகவே மேலே ஏறிவரச் செய்யும் என்று கூறப்படுகிறது. மலையின் மீது ஏறிவரும் குட்டிகள் மட்டுமே வளர்க்கப்படும், அதுபோல கர்த்தர் நமக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் கொடுத்துள்ளார், இந்த நற்செய்தியின் மூலம் தவறான போதனைகளுடன் போராடி அதனை மேற்கொள்ளுபவர்களை மட்டுமே அவர் பரலோகத்திற்குள் அனுமதிப்பர்.
நம் இரட்சிப்பு சொந்த இரத்தத்தினாலும் மாம்சத்தினாலும் மட்டும் வரவில்லை. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்ததினால் மட்டுமே பாவத்திலிருந்து நம்மால் இரட்சிக்கப்பட முடியும். உண்மையான இரட்சிப்பை, இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவை மூலமே அடையமுடியும். உலகின் பாவங்களையெல்லாம் சுமந்து தீர்த்த தேவகுமாரனின் ஞானஸ்நானத்தையும் இரத்தஞ் சிந்துதலையும் நம்மிருதயங்கள் விசுவாசிக்கும்போது, நாம் நம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டு, நிச்சயமான அழிவிலிருந்து விடுவிக்கப்படுவோம். பரலோகத்தினுள் செல்லும் ஒவ்வொருவரும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள். நரகத்தினுள் முடிவடைபவர்கள் எல்லாம் இந்த நற்செய்தியை விசுவாசிக்காததால் அங்குச் செல்லுகின்றனர். இதனால் தான் நாம் அனைவரும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தவறான போதனைகளைத் தள்ளிவிடவேண்டும்.
தவறான போதனைகளையும் பொய்களையும் பரப்பி, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து மக்கள் இரட்சிப்படைவதைத் தவிர்க்க சாத்தான் முயல்கிறான். இந்த தவறான போதனைகள் என்ன? இத்தவறான போதனைகள் இயேசு தன் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போடவில்லை என்று போதிக்கின்றனர். இயேசு நம் மூலப் பாவங்களை மட்டுமே எடுத்துக்கொண்டார், நம் அன்றாடப் பாவங்களை தினமும் மனம் வருந்தி ஜெபித்து சுத்திகரிக்க வேண்டுமென அவை போதிக்கின்றன. மதத்தின் வரைமுறைகளுக்கேற்ப இப்போதனைகள் சரியானதாக இருக்கலாம், ஆனால் உண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் இதனை நோக்கினால், அவை தவறானவை.
ஒவ்வொருவரின் விடுதலையும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதால் வருகிறது; தவறான நற்செய்திகள் பாவத்திலிருந்து நம்மை விடுதலையாக்காது. இதனால் தான் முதலில் இந்த தவறான போதனைகளுடன் போராடி அவற்றை மேற்கொள்ள வேண்டும். சாத்தானுடன் போர்புரிவது என்பது, உண்மையல்லாததுடன் போர்புரிவது என்பதாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதா அல்லது தவறான நற்செய்திகளை விசுவாசிப்பதா என்று நாம் தீர்மானிக்க வேண்டும், நாம் தீர்மானித்தபிறகு மற்றதுடன் போராடவேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்தாலும் கூட, அவர்களின் விசுவாசம் அழிந்துபோனதாயிருந்தால் அவர்களால் சாத்தானை வெல்ல முடியாது.
இரட்சிக்கப்பட்ட அநேக மக்கள் இரட்சிக்கப்படுவதற்கு முன்னால் கர்த்தரின் வார்த்தையைக் குறித்தும் சாத்தானுடையதைக் குறித்தும் தர்க்கம் செய்தனர். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கத் தீர்மானித்தபோது மட்டுமே அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. படைத்தலின் தொடக்கத்திலிருந்து இப்போது வரை, இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தவறான நற்செய்திகளுடன் போராடி அதனை வென்றவர்களே. நாமனைவரும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நோக்கி, தவறான நற்செய்திகளைத் தள்ளிவிட்டு, விசுவாசத்தினால் நம் எல்லாப் பாவங்களிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்.
 
 
தவறான நற்செய்திகள் யாவை?
 
இதனை விளக்கிக் கூறுவதற்கு, ஒரு கண் மட்டுமே உடையவர்கள் வாழும் ஒரு கிராமத்திற்கு, இரண்டு கண்கள் உடைய ஒருவன் வருகைப் புரிவதாக எண்ணிக்கொள்ளுங்கள். இரண்டு கண்கள் உடைய மனிதனை “வித்தியாசமானவன்,” “இயற்கைக்கு மாறுபட்டவன்,” “முற்றிலும் வேறுபட்டவன்” அல்லது “வேதப்புரட்டன்” என்று கூட அக்கிராமத்தினர் அவனை அழைத்திருக்கலாம். வருகைப் புரிந்தவன் வித்தியாசமானவனாக இருந்தமையே, அவர்களால் வித்தியாசமானவனாகக் கருதப்பட ஏதுவாயிற்று, ஏனெனில் அவர்கள் அநேகராய் இருந்தார்கள். அதுபோலவே, “அதிகமான எண்ணிக்கையுடையவர்கள் ஆளுகையில்” இவ்வுலகம் அவர்களுடையதாக இருக்கிறது, வேறுவகையில் கூறுவதானால் “உண்மை அதிக எண்ணிக்கை உடையவர்களிடம் இருக்கிறது.” ஆனால் இத்தகைய தீர்ப்புகளும் முடிவுகளும் தவறானவையாக இருக்கலாம் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
நித்தியமான உலகில், உண்மையானது பெரும்பான்மையினரால் தீர்மானிக்கப்படாமல், அடிப்படை தராதரங்களினால் தீர்மானிக்கப்படுகிறது. அப்படியானால், இந்த உண்மையை எங்கு காணலாம்? பாவிகளின் பாவ விடுதலையில் இருந்தும், அவர்கள் அழிவிலிருந்து தப்புவதிலிருந்தும் இதனைக் காணலாம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் உண்மையை தம் காதுகளால் கேட்டபிறகு, தம் இருதயங்களால் இந்த நற்செய்தியை விசுவாசித்த பிறகு -அப்படிச் செய்ததினால் தம் பாவங்களில் இருந்து இரட்சிக்கப்பட்டவர்கள், நீதிமான்களாயினர்.
இத்தனைக் காலமாக அநேக மக்கள் தவறான நற்செய்திகளில் விழுந்துபோனதால், அவர்களுக்கு உண்மையான சத்தியம் வெளிப் படுத்தப் படும்போது, அதனை வித்தியாசமானதாகவும், வேதப்புரட்டல் எனவும் அழைத்து அதனைப் புறம்பேத் தள்ளினர். ஆனால் அவர்கள் புறம்பேத் தள்ளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே உண்மையின் நற்செய்தியாகும், அப்போஸ்தலர்களின் காலத்திற்குள் சென்றால், இதுவே அப்போஸ்தலர்களால் வெளிப்படுத்தப் பட்டு விசுவாசிக்கப் பட்டு அவர்களால் பிரசங்கிக்கப்பட்டதுமாகும். கர்த்தருக்கு முன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதினாலேயே பாவப்பிரச்சினையைத் தீர்க்க முடியும்.
நமது சத்தியமாகிய இயேசு, ஆரோனின் சந்ததியினனாகிய யோவானிடம் பெற்ற ஞானஸ்நானம் மூலமாக உலகின் பாவங்களையெல்லாம் தம் மீது ஒரே தரமாக எற்றுக்கொண்டு நமக்காக தன் இரத்தத்தைச் சிலுவையில் சிந்தினார். இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்தார் என்பதற்கு கர்த்தரின் வார்த்தை சாட்சியாக இருக்கிறது. அவர் சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, கர்த்தரின் வலது பக்கத்தில் உட்காருவதற்காக பரலோகம் ஏகினார். தன் ஞானஸ்நானத்தின் மூலமாகவும், சிலுவையின் இரத்தத்தின் மூலமாகவும் உலகின் பாவங்களையெல்லாம் ஏற்றுக்கொண்ட சத்தியத்தின் தேவனாக இயேசு மாறியபோது, இந்த சத்தியம் 2000 வருடங்களுக்கு முன்னதாக நிறைவேற்றப்பட்டது.
பொய்களினால் வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலமாக முழு விடுதலை கிடைக்கிறது என்பது இன்னமும் தெரியாது; மிக மோசமானது யாதெனில், இன்றைய கிறிஸ்தவ உலகத்தின் அநேக ஆத்துமாக்கள் பாவத்தில் தொலைந்துபோய், தவறான நற்செய்திகளினால் குழம்பிப் போயுள்ளனர். இதனால் தான் உண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள், இந்நற்செய்தியை மென்மேலும் பரப்ப வேண்டியவர்களாயுள்ளனர். இந்த உண்மை நற்செய்தியை கேட்பதன் மூலமே மக்களால் தம் பாவங்களிலிருந்து விடுதலையடைய முடியும்.
வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சத்தியம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகும் (மத்தேயு 3:13-17, எபேசியர் 1:13). மேற்கண்ட வசனங்களில் கர்த்தர் சிமிர்னா சபையை பாராட்டினார், அவர்கள் பொருள் வளமில்லாதவர்களாய் இருந்தாலும், விசுவாசத்தில் வளமையுடையவர்களாய் இருந்தனர். ஆனால் யூதர்களை அவர் சாத்தானின் ஊழியர்கள் என்றழைத்தார், அவர்களை கர்த்தரை விசுவாசிப்பதாகக் கூறினாலும், அவர்கள் அவரின் விடுதலையின் நற்செய்தியை தம் இருதயங்களினுள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். நம் தேவன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் அவர்களின் பாவங்களையும் சுமந்து தீர்த்த போதிலும் அவர்கள் இயேசுவைக் கர்த்தரின் குமாரனாகவும் தம் இரட்சகராகவும் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் கர்த்தராகிய யெகோவாவை விசுவாசிப்பதாகக் கூறினாலும், இயேசு அவர்களின் பாவங்களை ஏற்றுக்கொண்டார் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் தம் இருதயங்களில் பாவமுள்ளவர்களாகவே இருக்கின்றனர்.
இத்தகைய மக்கள் தம் உதடுகளால் கர்த்தரை விசுவாசிப்பதாகக் கூறினாலும், உண்மையில் அவர்கள் அவரை விசுவாசிக்காத “சாத்தானின் கூட்டத்தினராயிருக்கின்றனர்”. இயேசுவை விசுவாசிப்பதாகக் கூறிக்கொண்டு அவரின் விடுதலையை தம்மிருதயங்களில் பெற்றுக்கொள்ளாதவர்களும் சாத்தானின் கூட்டத்தினரே.
உலகில் இரண்டு கூட்டத்தினர் உள்ளனர்: ஒன்று சாத்தானுடையது, மற்றது கர்த்தருடையது. தேவன் மீண்டும் வருகையில் சாத்தானின் கூட்டம் நித்தியமாக அழிக்கப்பட்டு கர்த்தரின் கூட்டம் நித்தியமாக ஆசீர்வதிக்கப்படும். வேறுவார்த்தைகளில் கூறினால், கர்த்தர் நீதிமான்களை பாவிகளிலிருந்து தெளிவாகப் பிரிப்பார். இயேசுவை தம் இரட்சகராக கூறுபவர்களில், அவன்/அவள் ஆகிய அனைவரும் பரலோகத்திற்குள் செல்வதில்லை.
மத்தேயு 7:21-23 இல் இயேசு நமக்கு கூறியவை இதனை தெளிவாக விளக்குகிறது: “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.”
வேறுவார்த்தைகளில் கூறுவதானால், இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதாகக் கூறிக்கொண்டு அவரின் பெயரை அழைக்கும் அனைவருக்கும் பரலோகம் நிச்சயம் என்று நம்மால் கூறமுடியாது. இயேசுவைத் தம் இரட்சகராக விசுவாசித்தாலும், அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காவிட்டால், முடிவில் அவர்கள் சாத்தானின் ஊழியர்களாக நரகம் செல்வர். இயேசுவை விசுவாசிப்பதாகக் கூறினாலும், அவர்கள் தவறான நற்செய்திகளைப் பின்பற்றுவதால், அவர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவது பொருந்தக்கூடியதும் சரியானதுமாகும்.
தம்மிடம் பாவம் இருப்பதால் சாத்தானுக்குச் சொந்தமானவர்கள் நரகம் செல்வர். ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நம் அனைத்துப் பாவங்களுக்கும் பாவநிவாரணம் பெற்றவர்களாகிய நமக்கு, பரலோகத்தின் கதவுகள் திறக்கும். இயேசுவை விசுவாசிக்கும் யாவரும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பரலோகத்திற்குள் செல்லவேண்டும்.
உலகின் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவதற்கு, நம் பாவங்களைக் குறித்த தெளிவான அறிவு மட்டும் போதாது. உண்மையை பொய்யிலிருந்து பிரித்தெடுக்கும் ஆவிக்குரிய திறமையும் வேண்டும். இப்படிச் செய்வதற்கு, கர்த்தரின் எழுதப்பட்ட வார்த்தையினுள் வாழ்ந்து அதன் படி விசுவாசிக்கவேண்டும். எரியும் கடலில் நீங்கள் எறியப்படக்கூடாது என்றால் விசுவாசத்தினால் தவறான நற்செய்திகளை புறம்பேத் தள்ளவேண்டும். உங்கள் விசுவாச வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி என்பது என்னவென்று உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும். அப்பொழுது தான் இரண்டாம் மரணத்தைத் தவிர்த்து, கர்த்தரின் பரலோகத்தினுள் உங்களால் செல்லமுடியும்.
2 யோவான் 1:7 நம்மிடம் கூறுகிறது, “மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைப்பண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திகிறிஸ்துவுமாயிருக்கிறான்.” இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு மாமிசமாய் வந்தார் என்பதை மறுப்பவன் வஞ்சகன் என்று இங்கு குறிப்பிடப்படுகிறான். வேறுவிதமாகக் கூறுவதானால், மாமிசமாக வந்த தேவன் தேவகுமாரன் என்றும், யோர்தான் நதியில் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் அவர் ஏற்றுக்கொண்டார் எனவும், நம்முடைய இடத்திலிருந்து, நமது பாவங்களுக்காக தம் இரத்தத்தினால் சிலுவையில் தீர்க்கப்பட்டார் எனவும் இருப்பதை மறுப்பவர்களே அவர்கள்.
நமது பாவங்களுக்கான அனைத்து தீர்ப்புகளையும் எடுத்துக்கொண்டார் என்பதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் வஞ்சகர்களும் சாத்தானின் சேவகர்களுமாய் இருக்கிறார்கள். அவர்கள் தம்முடைய தவறான நற்செய்திகளைப் போதித்து அதனைப் பரப்புவதாலும் உண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு எதிராக நிற்பதாலும், அநேக மக்களை குழப்பத்திற்குள்ளாக்கி அழிவிற்கு வழி நடத்துகின்றனர்.
தாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதாகக் கூறிக்கொண்டு, சாத்தானின் தவறான நற்செய்தியுடனான ஆவிக்குரிய போரில் போர் புரியாதவர்கள், முடிவில் கர்த்தரின் ராஜ்யத்திற்கும் அவரின் மக்களுக்கும் எதிரியாவார்கள். இத்தகைய மக்கள் தம்மைப் பின்பற்றுவோர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கிறார்களா இல்லையா என்று கவலைப் படுவதில்லை. அவர்கள் கவலைப் படுவதெல்லாம் தம் சொந்த மகிமையைக் குறித்தும் செல்வத்தைக் குறித்துமேயாகும். இந்த கள்ள ஊழியர்களுக்கு தம் வயிற்றை வளர்ப்பதில் மட்டுமே ஆர்வமுண்டு. சுருக்கமாகக் கூறினால் வேதாகமம் கூறும் அந்திகிறிஸ்துவிற்கு சொந்தமானவர்கள் இவர்களே.
 
 
வேதப்புரட்டர்களின் தந்திரங்கள்
 
எசேக்கியேல் 13:17-18 கூறுகிறது, “மனுபுத்திரனே, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்து, தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற உன் ஜனத்தின் குமாரத்திகளுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உடைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்குச் சகல கைகளுக்கும் தழுவணைகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டுபண்ணுகிறவர்களுக்கு ஐயோ! நீங்கள் என் ஜனத்தின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடே காப்பாற்றுவீர்களோ?” இவ்வசனங்களிலிருந்து சாத்தானின் ஊழியர்கள் மக்களின் ஆத்துமாக்களைத் திருட முயற்சிக்கிறார்கள் என்பதை நாம் காணலாம்.
சாத்தான் மக்களின் கைகளுக்கு தழுவணைகளைத் தைப்பதாக இவ்வசனம் நமக்குக் கூறுகிறது. தமிழ் வேதாகமத்தில் இவ்வசனம் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது, “சகல கைகளுக்கும் தழுவணைகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டுபண்ணுகிறவர்களுக்கு ஐயோ.” உங்கள் கைகளுக்கிடையே தழுவணைகள் இருப்பது எத்தனை உறுத்தலாயிருக்கும், மற்றவர்களுடைய பார்வைக்கு இது எத்தனை அசிங்கமாயிருக்கும்? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அறியாது அதனை விசுவாசிக்காதவர்களுக்கு ஆலயத்தின் தலைமை பொறுப்பைக் கொடுத்திருப்பது இப்படிப்பட்டதே; அது உறுத்தலாகவும், அசிங்கமானதாகவும், வெறுக்கக்கூடியதாகவும் இருக்கும். ஏன்? ஏனெனில் ஆலயத்தின் இத்தகுதிகள் அவர்களுக்குப் பொருத்தமானதில்லை. தாம் நீதிமானாக்கப்படவோ மறுபடியும் பிறக்கவோ இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும், ஏனெனில், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்கள் இன்னமும் விசுவாசிக்கவில்லை.
அப்படியானால் அவர்களால் எப்படி தேவனுக்கு ஊழியம் செய்யமுடியும்? கர்த்தரின் பணிகளைச் செய்வதற்கு, முதலில் நீங்கள் செய்யவேண்டியது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து உங்கள் பாவங்கள் நிவர்த்திக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயங்களில் இருக்கிறார் என்பதை உறுதிசெய்து, ஆலயப்பொறுப்புகளை ஏற்பதற்கு முன்னால், கர்த்தரின் வார்த்தை மற்றும் அவரின் சத்தியங்களில் போதுமான அளவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
வேதாகமத்தின் மூலம் அவர் மக்களாகிய நம்மிடம், அவர் கூறுவது என்னவென்றால், தம்முடைய சத்தியத்தை விசுவாசித்து கள்ளத் தீர்க்கதரிசிகளுடன் போராடி அவர்களை மேற்கொள்ள வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து மறுபடியும் பிறந்தது, எதையுமே செய்யாமல் வெற்றியாகப் பெற்றதல்ல. அது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து கர்த்தரின் நீதியை வென்றதால் பெற்றுக் கொள்ளப்பட்டது. மத்தேயு 11:12 கூறுகிறது, “யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது. பலவந்தம் பண்ணப்படுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.” பலவந்தம் பண்ணுகிறவர்கள் கர்த்தரின் ராஜ்யத்தினுள் பிரவேசிப்பார்கள் - பலவந்தம், அதாவது அது பொய்களுக்கெதிரான அவர்களின் யுத்தமாயிருக்கிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உங்கள் இருதயத்தினுள்ளே ஏற்று தவறான போதனைகளை மேற்கொள்ளுவதின் மூலமே முற்றிலுமாக உங்களால் இரட்சிக்கப்படவும், பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயத்தினுள்ளே வாசஞ்செய்யப் பெறமுடியும் என்பதையும் நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வுலகில் பிறந்த ஒருவன் முற்றிலுமாக இரட்சிப்படைய, கர்த்தரின் சத்திய வார்த்தைகள் மூலமாக பொய்யுடன் போரிட்டு அதனை மேற்கொள்ளவேண்டும். உண்மை சக்திகளுக்கும் பொய்யின் சக்திகளுக்கும் மறுபடியும் பிறந்தவர்களுக்கும் மறுபடியும் பிறக்காதவர்களுக்கும் இவ்வுலகமானது போர்களமாகும். இவ்வுலகம் கர்த்தருக்கும் சாத்தானுக்குமான போர்களமாயிற்று. ஏனெனில் ஆதாமும் ஏவாளும் கர்த்தரால் உயிரூட்டப் பட்டவர்களாயிருந்தும், கர்த்தரின் வார்த்தைக்கும் மேலாக சாத்தானின் பொய்களை விசுவாசித்தனர்.
குறிப்பாக இன்றைய காலமானது, மிகவும் ஆபத்தானது, சாத்தானுக்கு தன்னுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன என்பது தெரியுமாகையால், கள்ளத்தீர்க்கத்தரிசிகளின் மூலமாக மக்களைக் குழப்பி அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதைத் தடுக்க முயல்கிறான், பொய்யான அற்புதங்கள் மூலமாகவும், பரிசுத்த ஆவியானவரின் செய்கைகள் என்ற போர்வையின் மூலமாகவும் அவர்கள் மக்களை தவறாக வழி நடத்துகின்றனர். “அது ஆச்சர்யமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.” (2 கொரிந்தியர் 11:14) முக்கிய மதங்களை வெற்றிக்கொண்ட சாத்தான் நீதிமான்களுக்கு எதிராக நிற்கிறான். இக்காலமானது பொய்யினால் சத்தியம் மறைக்கப்படும் காலமாயிருந்தாலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள், பொய்களிலிருந்து விடுதலைப் பெற்று, முடிவில் அவற்றை மேற்கொள்வார்கள்.
நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிப்பதோடு, நம் பாவங்கள் மன்னிக்கப்பட தினமும் மனம் வருந்தவேண்டும் என்ற தவறான போதனைகளுக்கும் தூரமாயிருக்கவேண்டும். இத்தகைய பொய்களை அவரின் சத்தியத்தால் மேற்கொள்பவர்கள் இரண்டாம் மரணத்தால் சேதப்படுவதில்லை என்று கர்த்தர் உறுதியளித்தார். நமக்கு முன்பிருந்த சிமிர்னா சபையினரைப் போல், கர்த்தருக்கு முன்பாக நம் விசுவாசத்தைப் பாதுகாக்க நாமும் முயன்றால் தேவன் மீதுள்ள நமது விசுவாசத்திற்காக நாமும் கூட அவரால் பாராட்டப்படுவோம்.