(வெளி 2:12-17)
“பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருப்பதையும் நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன். ஆகிலும், சில காரியங்களைக் குறித்து உன்பேரில் எனக்கு குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைகொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு. அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைகொள்ளுகிறவர்கலும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன். நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம் பண்ணுவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக் கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.”
விளக்கவுரை
வசனம் 12: “பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது”
பெர்கமு என்பது சிறிய ஆசியாவின் நிர்வாகத் தலைநகரமாக இருந்தது, அதில் வாழ்ந்தவர்கள் அநேகர் புறதெய்வங்களை வணங்கினர். குறிப்பாக அது பேரரசனை வழிப்படுதாயிருந்தது. “இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர்” என்பது கர்த்தரின் பகைவர்களுடன் தேவன் போரிடுகிறார் என்று பொருள்படும்.
வசனம் 13: “உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருப்பதையும் நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.”
பெர்கமு, பேரரசர்களை வணங்குபவர்கள் அதிகமாக வாழுமிடமாயினும், அந்திப்பா என்ற கர்த்தரின் ஊழியன் வாழுமிடமாயும் இருந்தது; அவன் தன் தேவன் மீதுள்ள விசுவாசத்தைக் காக்க பேரரசனை வணங்க மறுத்தமைக்காக கொல்லப்பட்டான். அந்திகிறிஸ்துவை ஆராதிக்கும்படி மக்கள் வலியுறுத்தப்படும் காலம் மீண்டும் வரும், ஆனால், அந்திப்பா தன் உயிர் போகும் வரை தன் விசுவாசத்திற்காக போராடியதைப் போல், பரிசுத்தவான்களும் கர்த்தரின் ஊழியர்களும் இறுதிவரை தம் விசுவாசத்தைப் பாதுகாப்பர். இத்தகைய துணிச்சலான விசுவாசத்தைப் பெற, சிறிய அளவில் நாம் தொடங்கினாலும் கூட நம் விசுவாசத்தை இப்பொழுது செயலில் காட்டுவதைத் தொடங்கவேண்டும். உபத்திரவத்தின் காலம் வரும்போது பரிசுத்தவான்களும் கர்த்தரின் ஊழியர்களும் பரிசுத்த ஆவியானவரைச் சார்திருக்கவேண்டும். அவர்கள் கர்த்தரை நம்பி இரத்தசாட்சியத்துவத்தை விருப்பத்துடன் தழுவ வேண்டும், இப்படிச் செய்வதால் அவர்கள் கர்த்தரை மகிமைப்படுத்துவதோடு, அவர்களிடமிருந்து புதியவானத்தையும் புதியபூமியையும் பெறமுடியும்.
வசனம் 14: “ஆகிலும், சில காரியங்களைக் குறித்து உன்பேரில் எனக்கு குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைகொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.”
பெர்கமு சபையின் சில உறுப்பினர்கள் பிலேயாமை பின்பற்றுபவர்களாய் இருந்தபடியால் கர்த்தர் அச்சபையைக் கண்டித்தார். பிலேயாம் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி, அவன் இஸ்ரவேலர்களை கர்த்தரிடத்திலிருந்து விலக்கினான், அவன் சிலைகளை வணங்கும் புறஜாதிப் பெண் ஆசாரியர்களுடன் விபசாரம் செய்யும்படி இச்சையை உண்டாக்கியதன் மூலம் கர்த்தரிடமிருந்து அவர்களைப் பிரிக்க முயன்றான். கர்த்தரின் மீதுள்ள விசுவாசத்தை விட்டு விலகியவர்களை தேவன் கண்டித்தார். மக்களின் இருதயங்கள் அவரை விட்டு விலகி சிலைகளை வணங்கின. விபசாரம் செய்யும் பாவம் கர்த்தருக்கு முன்னதாக மிகப்பெரிய பாவமாகும்.
வசனம் 15: “அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கை கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்.”
வேதாகமத்தில் காணப்படும் “நிக்கொலாய்” மற்றும் “பாவம்” ஆகிய சொற்கள் ஒரே மாதிரியானவை, அவை “மக்கள் மீது வியாபித்துள்ளவர்கள்” என்று பொருள்படும். “நிக்கொலாய் மதஸ்தரின் கொள்கைகளை கடைப்பிடிப்பவர்களை” என்று கர்த்தர் கூறியது, “பிலேயாமின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்களை” குறிப்பிடுவதாகவும், கர்த்தரின் சபை அவர்களைப் புறம்பேத்தள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். நிக்கொலாய் மற்றும் பிலேயாமின் கொள்கைகளைப் பின்பற்றியவர்கள் பொருளாதாயத்தையும் சிலை வணக்கத்தையும் ஏறெடுத்தவர்கள் ஆவர். இத்தகைய மக்களை கர்த்தரின் ஆலயத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும்.
வசனம் 16: “நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம் பண்ணுவேன்.”
ஆகவே கர்த்தர் பெர்கமு சபையிடம், தவறான தெய்வங்களை வணங்குவதையும் உலகின் ஆதாயங்களைத் தேடிக்கொண்டிருப்பதையும் விட்டுவிடும்படி கூறியதோடு, அவர்கள் மனந்திரும்பாவிட்டால் தம் வாயின் பட்டயத்தினால் அவர்களுடன் போரிடப்போவதாகவும் எச்சரித்தார். வேறுவார்த்தைகளில் கூறுவதானால் இது கர்த்தரின் கடுமையான எச்சரிக்கையாகும், அவர்கள் விசுவாசியாகவிருந்தாலும், பிலேயாமின் கொள்கையை விட்டு மனந்திரும்பவில்லையெனில் அவர் அவர்களை தண்டிப்பதாக கூறினார். கர்த்தரின் இந்த எச்சரிக்கையை கேட்டு அவரிடம் திரும்பி வருபவர்கள் சரீரப்பிரகாரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமும் வாழ்வர், ஆனால் அப்படிச் செய்யாதவர்கள் சரீரப்பிரகாரமும் ஆவிக்குரிய பிரகாரமும் அழிந்துபோவர். பரிசுத்தவான்களும் கர்த்தரின் ஊழியர்களும், இவ்வுலகிலும் அதற்கப்பாலும் ஆசீர்வதிக்கப் பட்டவர்களாயிருக்கவேண்டுமானால் அவர்கள் கர்த்தரின் வார்த்தையைக் கேட்டு விசுவாசத்துடன் தேவனைப் பின்பற்ற வேண்டும்.
வசனம் 17: “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக் கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.”
உண்மையான பரிசுத்தவான்கள் தம் சொந்த இரத்தசாட்சியத்துவத்தைத் தழுவுவர். தம்முடைய பெயரினால் இரத்தசாட்சியாக மரிப்பவர்களுக்கு பரலோகத்தின் உணவுகளைக் கொடுப்பதாகவும் அவர்களின் பெயர்களை தம் ராஜ்யத்தில் பதிவுசெய்வதாகவும் கர்த்தர் கூறினார். சரீரப்பிரகாரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் நாம் வாழ, கர்த்தரின் ஆலயத்திற்கு பரிசுத்த ஆவியானவர் கூறியவற்றைக் கேட்கவேண்டும். ஜெயங்கொள்ளுகிறவர்கள் -அதாவது, சாத்தானைப் பின்பற்றுபவர்களுக்கு எதிரான போடில் வெற்றி பெறுபவர்களுக்கு- கர்த்தர் விசுவாசத்தின் நீதியைக் கொடுப்பார். அது அவர்களை பாவத்திலிருந்து விடுவிக்கும். அவர்களுடைய விசுவாசத்திற்காக, அவர்களின் பெயர்களை ஜீவப் புத்தகத்தில் எழுதுவார்.
இறுதிவரை நிலைத்திருப்பவர்கள் இரட்சிப்பை பெறுவார்கள் என்று வெவ்வேறு வசனங்களில் வேதாகமம் திரும்பத் திரும்பக் கூறுகிறது. வேறுவார்த்தைகளில் கூறுவதானால், இறுதிகாலங்களில் பரிசுத்தவான்கள் பொறுமையுடன் இருக்கவேண்டும், இப்படிச் செய்வதால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள தம் விசுவாசத்தை அவர்களால் பாதுகாக்க முடியும். மறுபடியும் பிறந்தவர்களின் பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. விசுவாசிகள் கர்த்தருக்கு முன்பாக இருக்கும் நாள்வரையிலும் பொருளாதாயத்தையும் உலக ஆதாயங்களையும் பின் தொடராமல், அவற்றை விசுவாசத்தால் மேற்கொண்டு கர்த்தருடைய ராஜ்யத்திற்குள் செல்லவேண்டும்.