• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 10 : வெளிப்படுத்தின விசேஷம் (வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 2-7] நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் (வெளி 1:12-17)

(வெளி 1:12-17)
 
பிலேயாமின் வழி
 
ஆசியாவின் ஏழுசபைகளினுள், நிக்கொலாய் மதஸ்தரின் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் சிலர் பெர்கமு சபையில் உறுப்பினர்களாக இருந்தனர் என்று இங்கு கூறப்பட்டுள்ளது. உலகச் செல்வங்களையும் புகழையும் கட்டியெழுப்பும் ஆசைக்கு இம்மக்கள் இறையாயினர். அவர்களிடம் ஆத்துமாக்களை இரட்சிக்கும் ஆர்வம் இல்லாதிருந்தது. பிலேயாமின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதில் முடிவடையாமலிருக்க போதகர்கள் கவனமாக இருக்க வேண்டும். பரிசுத்தவான்கள் உலகை ஆராதிக்கும்படிச் செய்து பிலேயாம் அவர்களை அழிவிற்கு வழிநடத்தினான்.
மறைவான மன்னாவையும் வெள்ளைக் கல்லையும் ஜெயங் கொள்ளுகிறவர்களுக்குக் கொடுப்பதாக கர்த்தர் வாக்குத்தத்தம் செய்தார். வேறுவிதமாக கூறுவதானால், உலகை பின்தொடரும் போதகர்கள் தம் மன்னாவை இழந்து போவார்கள். இங்கு மன்னா என்பது “ஈடிணையற்ற கர்த்தரின் வாத்தையாகும்.” மன்னாவை இழப்பது என்பது கர்த்தரின் வார்த்தையில் மறைந்துள்ள அவரின் சித்தத்தை இழந்து போவதாகும்.
மறுபடியும் பிறந்த கர்த்தரின் ஊழியர்கள் உலகைப் பின்பற்றும் போது, கர்த்தரின் வார்த்தையின் பார்வையை இழந்துபோகிறார்கள். இது பயங்கரமான முன்னேற்றமாகும். இப்படி நடக்க வாய்ப்பிருப்பதால் நான் பயப்படுகிறேன், நீங்களும் கூட இதற்கு பயப்படவேண்டும். ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு மறைவான மன்னாவையும் வெள்ளைக் கல்லையும் கொடுப்பதாக கர்த்தர் நமக்கு கூறுகிறார். உலகிற்கு அடிபணிந்து, உலகப்பிரகாரமான பிரபலத்திற்கும் அதன் உல்லாசத்திற்கும் சரணடைந்தவர்களுக்கு இம்மன்னா கொடுக்கப்பட மாட்டாது.
வேதாகமம் கூறுகிறது, “அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக் கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.” கர்த்தரின் வார்த்தை எத்தனை உண்மையானது! இயேசுகிறிஸ்துவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசித்து தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படாதவர்கள் இவ்வுலகத்தை நேசிப்பவர்களாயுள்ளனர். கிறிஸ்து தன் ஞானஸ்நானத்தின் மூலம் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் மன்னித்துவிட்டார் என்ற உண்மை இவர்களுக்குத் தெரியாது.
இயேசுவின் மீதான சில மக்களின் விசுவாசம் கொள்கைத் திட்டமாகவே இருக்கிறது. இயேசு அவர்களின் பாவங்களை எடுத்துப் போட்டதால் அவர்கள் நீதிமான்களாயினர் என்று அவர்கள் எண்ணுகின்றனர். ஆனால் அவர்களின் விசுவாசம் வெறுமையானது, ஏனெனில் அவர்களின் இருதயங்களில் பரிசுத்த ஆவியானவர் இல்லை. இது ஒரு கொள்கை விசுவாசம். ஒருவன் உண்மையாகவே பாவநிவிர்த்தி செய்யப்பட்டவனாயிருந்தால், அவன்/அவள் உலகத்தின் பெருமை, மரியாதை செல்வம் மற்றும் அதிகாரம் -ஆகிய உலகிற்குரியவைகளுடன் போரிட்டு, அவற்றை ஜெயிப்பான். உலகை மேற்கொள்வது என்பது நம்மை மறுபடியும் பிறக்கச்செய்யும் கர்த்தரின் வார்த்தையை பற்றிக்கொண்டு, பரிசுத்த ஆவியானவரை நம்மிருதயங்களில் இருக்கச் செய்து, இவ்வுலகின் செல்வம் மற்றும் மரியாதையை பின்பற்றுபவர்களை எதிர்ப்பதாகும்.
விடுவிக்கப்பட்டவர்களின் பெயர்களையும், பரிசுத்த ஆவியானவரைத் தம்மிருதயங்களில் வாசஞ்செய்யப்பெற்றவர்களின் பெயர்களையும் ஜீவபுத்தகத்தில் எழுதப்போவதாக கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். வேதாகமம் நமக்குக் கூறுகிறது “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால், புதுச்சிருஷ்டியாய் இருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.” மறுபடியும் பிறந்தவர்களுக்கும், பரிசுத்த ஆவியானவரைத் தம்மிருதயங்களில் வாசஞ் செய்யப் பெற்றவர்களுக்கும், தாம் முன்பிருந்ததைப் போல் இப்போதில்லை என்பது தெரியும். இயேசுகிறிஸ்துவின் நீர் மற்றும் ஆவியை விசுவாசித்தமையால் பழையவைகள் ஒழிந்து தாம் புதிய படைப்பாகியதை அவர்களால் உணரமுடிகிறது. தம்முடைய பெயர்கள் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதை தம் விசுவாசத்தினால் அவர்கள் அறிவர். இப்படித்தான் அவர்களால் கர்த்தரின் மறைவான மன்னாவைப் பார்க்கமுடியும், இப்படித்தான் கர்த்தரின் உண்மை வார்த்தையையும், கர்த்தரின் ஈடிணையற்ற குரலையும், கர்த்தரின் ஊழியர்களாலும் பரிசுத்தவான்களாலும் கேட்கமுடியும்.
வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசமாகிய கானானை அடையுமுன் இஸ்ரவேலர்கள் நாற்பது வருடங்களாக வனாந்தரத்தில் அலைந்தனர். அப்பொழுது அவர்களுக்கு மன்னா கொடுக்கப்பட்டது. வேதாகம விளக்கத்தின்படி மன்னாவானது கொத்தமல்லியைப் போன்று, உருண்டையாகவும் சிறியதாகவும் இருந்தது. இஸ்ரவேலர்கள் காலையில் எழுந்தபோது, அவர்களைச் சுற்றியுள்ள நிலமானது மன்னாவால் மூடப்பட்டிருந்தது, அது இரவு முழுவதும் பெய்தது. இஸ்ரவேலர்கள் காலையில் அதனைச் சேகரித்து உண்டனர். இது அவர்களின் அன்றாட அப்பமாயிருந்தது. அதனை பொரித்தனர், அதனை அவித்தனர், அதனை வறுத்தும் சாப்பிட்டனர். இது இஸ்ரவேலர்கள் 40 வருடமாக வனாந்தரத்தில் அலைந்தபோது அவர்களின் முக்கிய உணவாயிற்று.
மன்னாவானது மல்லிவிதையைப் போன்று சிறிதாக இருந்ததால் ஒரு மன்னாவை கூட சேமித்து வைக்க முடியாதிருந்தது. ஆனால் கர்த்தர் தேவையான அளவு மன்னாவை இரவில் பெய்வித்தார் -ஒரு நாளைக்கு அதிகமுமில்லை, குறைவுமில்லை, மன்னாவை சேமித்து வைக்கமுடியாது. ஆனால் ஆறாம் நாளில் கர்த்தர் இரண்டு நாட்களுக்குத் தேவையான மன்னாவை பெய்வித்தார், ஆகவே இஸ்ரவேலர்கள் இளைப்பாறுதலின் நாளில் மன்னாவை சேகரிக்க வேண்டியதில்லை.
 
 
ஜீவ அப்பம்
 
கர்த்தரின் வார்த்தை நம் மன்னாவாகவும் ஜீவ அப்பமாகவும் இருக்கிறது. கர்த்தரின் வார்த்தையில் நம் ஆத்துமாவிற்கான அப்பமாகிய ஜீவ அப்பம் காணப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட வசனத்தில் பெரிய ரொட்டித்துண்டை உங்களால் காணமுடியாது, ஆனால் கர்த்தரின் பெரிதான சித்தம் வேதாகமம் முழுவதும் காணப்படுகிறது. அதன் சிறு விளக்கங்களிலும் அது இருக்கிறது.
உலகத்துடன் ஒத்துப்போகாத கர்த்தரின் ஊழியர்களுக்கும் பரிசுத்தவான்களுக்கும் கர்த்தர் ஜீவ அப்பத்தை வழங்கினார். நம்முடைய சரீர மற்றும் ஆவிக்குரிய தேவைகளைச் சந்திக்கும் இந்த அன்றாட அப்பத்தை நம் ஒவ்வொருவருக்கும் அவர் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்.
பாலைவனம் எவ்வித உணவுப்பொருட்களையும் இஸ்ரவேலர்கள் உண்ணும்படி அளிக்காவிட்டாலும், அவர்கள் இந்த மன்னாவால், 40 வருட வனாந்தர வாசத்தில் பசியுடன் இருந்ததே இல்லை. இதுபோலவே, நிக்கொலாய் மதஸ்தினரின் செய்கைகளை மறுக்கிறவர்களுக்கு, தம் மறைவான மன்னாவை உண்ணும்படி அளிப்பதாக அவர் உறுதியளித்தார். செல்வம் மற்றும் சமூக நிலை ஆகிய இவ்வுலகின் காரியங்களைப் பின்தொடராத கர்த்தரின் ஊழியர்களுக்கு மறுபடியும் பிறக்கச் செய்யும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி என்ற ஜீவ வார்த்தையை அளித்தார். அது ஈடிணையற்ற அவரின் வார்த்தையாகும்.
இன்றைய கிறிஸ்தவத்தில் பரவியிருக்கும் நிக்கொலாய் மதஸ்தரின் செய்கைகளை நாம் வெறுத்து, அதனை புறம்பேத்தள்ள வேண்டும். மறுபடியும் பிறக்காதவர்களின் நம்பிக்கைகளை நாம் பின்பற்றக் கூடாது, உலகிற்கு அடிபணிவதை நாம் மறுக்க வேண்டும். மாமிசமானது மாமிசத்திற்குரியதைத் தேடுகிறது, ஆவியானது ஆவிக்குரியதைத் தேடுகிறது என்பது கர்த்தரின் சட்டமாயிருந்தாலும் கூட, நிக்கொலாய் மதஸ்தரின் கொள்கைகளை புறம்பேத்தள்ளி, உலகிற்குரிய செயல்களை வெறுக்கவேண்டும். அதற்கு பதிலாக கர்த்தர் நமக்குக் கொடுத்த சத்திய வார்த்தையை விசுவாசித்து கர்த்தரின் மன்னாவைப் புசிக்கவேண்டும். நாம் இப்போது நீதிமான்களானோம் என்பதையும் பரிசுத்த ஆவியானவர் நம்மிருதயங்களில் தங்கியிருக்கிறார் என்பதையும் அறிந்து, விசுவாசத்தினால் வாழவேண்டும்.
மறுபடியும் பிறந்தவர்கள் உலகுடன் போரிடவேண்டும். நிக்கொலாய் மதஸ்தினருடன் அவர்கள் போரிடவேண்டும். இன்றையப் போதகர்களில் அநேகர் செல்வத்தையும், புகழையும் பின்தொடர்ந்து, தமக்குத் தாமே முடிசூட்டி, உலகுடன் ஒத்துப்போய், உலகப்படி வெற்றிகரமாக வாழ முயற்சிப்பதை நீங்களே அறிந்திருப்பீர்கள். இக்கள்ளத்தீர்க்கதரிசிகளுடன் நாம் போரிடவேண்டும்.
நாமும் கூட மாமிசத்திலானவர்கள், ஆகவே ஆதாயங்களை நாடும் ஆசை நம்மிடமும் இருக்கிறது. ஆனால் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டவர்களால் உலகத்தை தம்மிருதயங்களால் பின்பற்ற முடியாது, ஏனெனில் அவர்கள் உலகத்திற்குரியவைகளை வெறுத்து, விசுவாச வாழ்வு மட்டுமே வாழவேண்டியவர்கள். உலகைப் பின்பற்றுபவர்களுடன் உங்கள் இருதயங்கள் ஐக்கியமானாலோ, அவர்களின் விசுவாசத்தை அங்கீகரித்தாலோ, அவர்கள் உலகைப் பின்தொடர்வதைப் போல் நீங்களும் பின் தொடர்ந்தாலோ, பிலேயாமின் வழிகளின் படி நடப்பதில் முடிவடைவீர்கள், அது உங்கள் முழு அழிவிற்குரிய பயணமாயிருக்கும். இது உங்கள் சரீர மற்றும் ஆவிக்குரிய அழிவின் பாதையாகும். நீங்கள் உலகத்தைப் பின்பற்றும்போது, உங்கள் விசுவாசத்தை இழந்துபோவீர்கள். இப்படிப்பட்ட மக்களைத் துப்பிவிடப்போவதாக கர்த்தர் கூறினார்; இம்மக்கள் மன்னாவைச் சாப்பிடப்போவதில்லை, அவர்கள் தம் விசுவாசத்தை முற்றிலும் இழந்து போவர்.
பெர்கமு சபையின் ஊழியர்கள் பிலேயாமின் கொள்கைகளைக் கடைப்பிடித்தமையே கர்த்தர் அவர்களை கண்டித்தமைக்கான காரணம். பெர்கமு சபையின் ஊழியனை கர்த்தர் கண்டித்தார், ஏனெனில் அவன் மறுபடியும் பிறந்தவனாயிருந்தும், பரிசுத்த ஆவியானவரைத் தன்னிருதயத்தில் வாசஞ் செய்யப்பெற்றிருந்தும், உலகம் தன்னை அங்கீகரிக்க வேண்டுமென வாஞ்சித்தான், அவனே எல்லாம் என்பது போல் தன் ஆலயத்தை வழி நடத்தினான். அதுமட்டுமில்லாமல் தன் மந்தையிடமும் தவறான நம்பிக்கையை விதைத்து அவர்களை நாசத்திற்கு வழி நடத்தினான். இத்தகைய ஊழியன் மறுபடியும் பிறவாத உலகப்படியான போதகனிலிருந்து எவ்விதத்திலும் சிறந்தவனில்லை. இவ்வசனத்தின் மூலம், சுயநலத்தை மட்டுமே விரும்பி, ஆலய கரூவூலத்தை நிரப்புவதில் மட்டுமே ஆர்வமுள்ள கர்த்தரின் ஊழியர்களுக்கு கர்த்தர் தெளிவாகவும் கண்டிப்புடனும் எச்சரிக்கைச் செய்தார். “இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.”
 
 
அழிவை நோக்கி உங்களை வழிநடத்தும் விசுவாசம்
 
கர்த்தருடன் போரிடும் மனிதனின் கதி என்னவாகும்? இதனை ஒரு நிமிடம் கூட நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டியதில்லை -ஏனெனில் இது அழிவிற்கான உடனடியான வழி. “இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர்” என்பது கர்த்தரின் வார்த்தை இருபுறமும் கருக்குள்ளது என்று பொருள்படும். நீங்கள் யாரென்பது பொருட்டல்ல; கர்த்தரின் வார்த்தையால் தாக்கப்பட்டால் நிச்சயம் நீங்கள் சாவீர்கள். கர்த்தரின் வார்த்தையானது “ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊணையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும்” (எபிரெயர் 4:12) உள்ள பட்டயமாகும். அது இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறபடியால், கிறிஸ்து இயேசுவின் நீர் மற்றும் ஆவி அளித்த பாவ விடுதலையினால் மக்கள் தரிப்பிக்கப்பட்டவர்களாய் இருப்பார்களாக.
இயேசுவை விசுவாசிக்கும் அநேகர், அவரை விசுவாசித்தும் சட்டத்தின் கன்னியில் மாட்டிக்கொள்கின்றனர், இதனால் அவர்கள் சாகும்வரை சட்டத்தால் அடிக்கப்படுகின்றனர். இந்த வருந்தத்தக்க விளைவைத் தவிர்க்க, இத்தகைய உலக விசுவாசங்களுடன் போரிட்டு அவற்றை வெற்றிக் கொள்ள வேண்டும். கர்த்தரின் ஊழியர்கள் கள்ளப்போதனைகளை மேற்கொள்ளவேண்டும், தம்முடைய மந்தைகள் இத்தகைய பொய்களால் வஞ்சிக்கப்படாதிருக்கும்படி நிச்சயப்படுத்தவேண்டும். யார் உலகினை நேசித்து அதின் கன்னியில் சிக்கிக்கொள்கிறாரோ, அவனின்/அவளின் விசுவாசம் காணாமல் போகும்.
இந்நாளின் அநேக ஆலயங்கள், ஆலயங்களென அழைக்கப்படாமல் வியாபாரம் செய்யுமிடமாக அழைக்கப்படுகிறது. இது கவலையளிக்கக் கூடிய, ஊசிப்போல் குத்தும் விளக்கமாகும். இந்த ஆலயங்கள் ஏன் வியாபாரம் செய்யுமிடமாக கருதப்படுவதற்கு இடமாயின? ஏனெனில் இன்றைய ஆலயங்கள் உலகைப் பின்பற்றுவதில் மிகவும் தீவிரமாயுள்ளன. உலகத்தினை பின்பற்றி அதனை ஆராதிப்பதில் இவை முதலாவதாயுள்ளன. மறுபடியும் பிறந்த விசுவாசிகளுக்கு மாமிசத்தின் ஆசைகள் முற்றிலுமாக இல்லை என்று நான் கூறவில்லை. மறுபடியும் பிறந்த விசுவாசிகளிடமும் மாமிசத்தின் இச்சைகள் இருக்கின்றன, ஆனால் அவை அவர்களின் விசுவாசத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. அவிசுவாசிகள் தம் முழு இருதயங்களாலும் மனித ஆசைகளைத் தொடருவதைப் போல், அவர்கள் மாமிசத்திற்குரியவைகளைத் தேடிக்கொண்டிருப்பதில்லை.
மறுபடியும் பிறவாதவர்கள் தமக்குத் தாமே அளவுகோல்களை ஏற்படுத்துகின்றனர். இந்த வரைமுறைகளுக்குள் உள்ள எல்லாவற்றிலும் ஆனந்திக்கும் ஒரு வாழ்வை அவர்கள் வாழுகின்றனர். விக்கிரகாரதனையும் விபசாரமும் அவர்களுக்கு இயற்கையானது. மிகவும் மோசமானது, அவர்களில் சிலர் சாத்தானை வணங்குவதாகும். மறுபடியும் பிறந்தவர்களால் இவற்றில் எதையும் செய்யமுடியுமா? அது முடியாது! அவர்கள் அப்படிப் பட்டவைகளைச் செய்யவே முடியாது, ஏனெனில் இச்செய்கைகள் எத்தனை அழுக்கானவைகள் என்றும் அவர்களுக்குத் தெரியும். மறுபடியும் பிறந்தவர்களாகிய நாம், உலகம் அளிக்கும் மகிமையையும் தம் மனித ஆசைகளையும் பின்தொடர்பவர்களாகிய அவர்களிடமிருந்து அடிப்படையில் வேறுபட்டவர்கள், உலகின் ஆதாயங்களினால் கொழுத்து நாம் வாழக்கூடாது, நம்மால் அப்படி வாழவும் முடியாது.
நிக்கொலாய் மதஸ்தரின் செய்கைகளைப் பின்பற்றுபவர்கள் உலகின் செல்வத்தை மட்டுமே பின்பற்றுகிறார்கள். நன்கு வாழ முயல்வதும், செல்வந்தர்களாகுவதிலும் எத்தவறும் இல்லைதான். ஆனால் உங்கள் வாழ்வின் முழு நோக்கமும் சேர்ப்பதில் இருக்கும்போது, உங்கள் பேராசையினால் உந்தப்பட்டு இச்சையினுள் விழுந்துபோவதால், உங்கள் விசுவாசம் நிச்சமாய் அழிந்துபோகும். பணத்தினை ஆராதிப்பவர்களும், உலகின் செல்வங்களுக்காக ஆலயம் செல்பவர்களும் நிக்கொலாய் மதஸ்தரின் செய்கைகளைப் பின்பற்றுகின்றனர். இம்மக்கள், முடிவில் இவ்வுலகிலேயே காணாமற்போவர், அவர்கள் கர்த்தரை விசுவாசிப்பதாகக் கூறினாலும் அவர்களின் இருதயங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்படாமலிருப்பதே அதற்கான காரணம்.
 
 
இருதயத்தின் நான்கு வகை நிலங்கள்
 
விதை விதைப்பவனின் விதைகள் நான்கு வகையான நிலங்களில் விழுந்த உவமான கதையை இயேசு கூறியதைக் குறித்து மத்தேயு சுவிசேஷம் நமக்கு கூறுகிறது. முதலாவது நிலம் வழி அருகிலாகும்; இரண்டாவது கற்பாறைகளுடைய நிலம்; மூன்றாவது முற்செடிகளுடையது; நான்காவது நல்ல நிலமாகும். இவை ஒவ்வொன்றையும் பார்ப்போமாக.
வழியருகில் உள்ள நிலம் கடினமான இருதயத்தைக் குறிக்கிறது. இந்நபர் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறார், ஆனால் அவன்/அவள் அதனை உடனடியாகத் தன் இருதயத்திற்குள் எடுத்துக்கொள்ளாதாதால், பறவைகள் அவற்றை உண்டுவிடுகின்றன, வேறுவார்த்தைகளில் கூறுவதானால், அவனை/அவளை நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறக்கச் செய்யும் இரட்சிப்பின் வார்த்தையை அறிவுப்பூர்வமாகப் பார்த்துக் கொண்டிருப்பதால் பறவையானது (சாத்தான்) அதனை பறித்துச் சென்றுவிடுகிறது, இதனால் அவனின்/அவளின் விசுவாசம் முளைப்பதேயில்லை.
அப்படியானால் கற்பாறை நிலமென்பது எதனைக் குறிக்கிறது? வார்த்தையை மகிழ்ச்சியுடன் பெற்றாலும், நிலத்தினுள் செல்வதற்கு வேரில்லாதமையால், அதிக காலம் அவர்கள் தாக்குப் பிடிக்கமாட்டார்கள் என்பதை இது குறிக்கிறது. மறுபுறம், முற்செடிகளுக்கிடையே விதைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளவர்கள், உலகினைக் குறித்த சிந்தனையுள்ளவர்களை குறிக்கிறது. ஐசுவரியத்தின் வஞ்சனை அவர்கள் முதலில் ஆனந்தத்துடன் பெற்ற வார்த்தையை நெருக்குகிறது.
இறுதியாக, கர்த்தரின் வார்த்தையை முற்றிலுமாக ஏற்றுக்கொண்டு அதனைப் பின்பற்றுவதன் மூலம் தம்மிருதயங்களில் கனிகளைச் சுமப்பவர்கள் விதைகள் விழுந்த நல்ல நிலத்தைப் போன்றவர்கள்.
உங்கள் இருதயம் எந்நிலத்தைக் குறிக்கிறது? உங்கள் இருதயம் வழியருகில் உள்ள நிலம் போலிருந்தால், அது வார்த்தையின் விதையை முளைக்கப்பண்ண எவ்வித ஆயத்தமும் இல்லாதது, அது கூட்டித்தள்ளப்படும் அல்லது பறவைகளால் உண்ணப்படும், இவ்வார்த்தையின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வது உங்களைப் பொறுத்தவரை எச்சம்பந்தமும் இல்லாதது. நாம் பாவ வித்துக்களாயிருப்பதினாலே, கர்த்தரின் வார்த்தை இல்லை என்றால் நாம் அவருக்கு சம்பந்தம் இல்லாதவர்களாய் இருந்திருப்போம் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும். மறுபுறம், நம்மிருதயங்கள் கற்பாறை போலிருந்தால், வார்த்தையின் விதையினால் வேர்விட முடியாமல் போயிருக்கும் என்பதால், புயலிலோ, காற்றிலோ, வறட்சியிலே நிலைத்திருக்க முடியாது. இம்மக்கள் தம் நிலங்களை மாற்ற வேண்டும். முதலில் எத்தனை மகிழ்ச்சியுடன் கர்த்தரின் வார்த்தையை அவர்கள் பெற்றிருந்தாலும், அதனால் வளர முடியாததோடு சிறிய பிரச்சினையினாலே உதிர்ந்து போய்விடும். அவர்கள் முதலில் அதனை எற்றுக்கொண்டதில் எந்த பலனும் இல்லை.
முற்செடிகளுடைய நிலம் போன்ற இருதயங்களை நாம் மேகொள்ளவேண்டும். நம் வாழ்வை பயமுறுத்தும் முற்களுடன் போரிட்டு அதனை வெட்டி ஏறியவேண்டும். அவற்றை விட்டுவிட்டால், முற்கள் நம்மைச் சூழ்ந்து சிறிது நேரத்திலேயே சூரிய ஒளியைத் தடுத்துவிடும். சூரிய ஒளி தடுக்கப்பட்டு, நிலத்தின் சத்து முற்களுக்கு இழக்கப்பட்டால், இவ்வார்த்தையாகிய மரம் காய்ந்துபோகும்.
நம் வாழ்க்கையில் சோதனைகளையும் உபத்திரவங்களையும் நாம் சந்திக்கும்போது, நாம் அவற்றை துணிச்சலுடன் மேற்கொள்ளவேண்டும். நம் முழுவாழ்வும் இதில் தானிருக்கிறது என்றெண்ணி, நம் வழியை மறித்து முகத்தை மூடும் முற்களுடன் நம் முழு பலத்துடனும் போரிடவேண்டும். இவ்வுலகத்தின் பணம் நம்மை பிடித்துக்கொண்டாலோ, அதன் புகழ் நம்மை பயமுறுத்தினாலோ, அவற்றுடன் போரிட்டு அவற்றை மேற்கொள்ளவேண்டும். ஏனெனில் உலகின் கவலைகளும் அது தரும் பேராசைகளும் ஆத்துமாவிற்கு நஞ்சாக இருப்பதால், அவற்றை எப்பொழுதும் வெல்லவேண்டும். இப்படிப்பட்ட ஆவிக்குரிய வெற்றி பெற்ற ஒரு வாழ்வை நாம் வாழும்போது, நம் சரீரமும் ஆவியும் செழிக்கும், ஏனெனில் அவை சூரிய ஒளியைப் பெறுவதுடன் கர்த்தரிடமிருந்து சத்தையும் பெறுகின்றன.
மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்களுக்கும் கர்த்தரின் ஊழியர்களுக்கும், உலகினுடனான ஆவிக்குரிய யுத்தம் எப்போதும் நடைபெற்றுக்கொண்டேயிருக்கவேண்டும். ஆகவே, நாம் நிக்கொலாய் மதஸ்தரைப் பின்பற்றக்கூடாது. நிக்கொலாய் மதஸ்தினரைப்போல் மக்களுக்கு தொண்டாற்றுவது மட்டுமே ஆலயத்திற்குரிய முக்கியவேலை அல்ல. ஆலயத்தின் முக்கிய நோக்கம் சமூகப்பணியாற்றுவது என்று நினைப்பது மிகப்பெரிய தவறாகும்.
 
 
துணிச்சலுடன் நிராகரிக்கவும்
 
நாம் உலகிற்கு உப்பாயிருப்பதாக கர்த்தர் கூறுகிறார். அவர் என்ன பொருள்படுபடி அப்படிக் கூறினார்? நாம் உலகிற்கு உப்பாயிருக்கிறோம் என்று கர்த்தர் கூறினால் நாம் இவ்வுலகிற்கு தேவைப்படுகிறோம் என்று பொருள்படும். உப்பின் வேலை கிறிஸ்துவின் நீர் மற்றும் ஆவியின் வார்த்தையை பாவிகளுக்கு பிரசங்கிப்பதாயிருக்கிறது, அதனால் அவர்கள் அவர்களின் பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு, கர்த்தரின் பிள்ளைகளாக்கப் பட்டு, பரலோகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். உப்பானது ருசியளிப்பதைப் போன்று, உலகத்திற்கு, மறுபடியும் பிறந்த நீதிமான்கள் உப்பாகத் தேவைப்படுகிறார்கள். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், மறுபடியும் பிறந்த நீதிமான்கள் வார்த்தையாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கித்து, பாவவிடுதலையடையும்படி மக்களை வழிநடத்தவேண்டும். நாம் பாவிகளை நீதிமான்களாக மாற்றவேண்டும்.
கர்த்தரின் உண்மையான ஆலயம் எது? மக்கள் அவரை ஆராதிக்கக் கூடும் இடமே கர்த்தரின் உண்மையான ஆலயமாகும்; அங்கே அவர்கள் கர்த்தரைப் புகழுவார்கள்; அங்கு தான் அவர்கள் அவரிடம் ஜெபிப்பார்கள். இச்சைகள் வரும்பொழுது கர்த்தரின் ஊழியர்களால் அவற்றை எதிர்க்க இயலவேண்டும். சாத்தானிடமிருந்து வரும் இச்சகங்களை பரிசுத்தவான்களாலும் எதிர்க்க இயல வேண்டும். சாத்தான் உங்களை இச்சிப்பான் “உங்கள் விசுவாசத்தை மறந்துவிடுங்கள்; நான் உங்களை செல்வந்தனாக்குவேன்! மறுபடியும் பிறந்த ஆலயத்திற்கு நீங்கள் செல்லவேண்டியதில்லை; என்னுடைய ஒரு ஆலயத்திற்கு வாருங்கள், உங்களை நான் மூப்பராக்குவேன்!” சாத்தான் எப்போதும் நீதிமான்களை விழச்செய்து அவர்களை அவனின் பொறிக்குள் அகப்படச் செய்ய முயன்று கொண்டேயிருப்பதால், முடிவு பரியந்தமும் நம் விசுவாசத்தை பாதுகாக்க, எப்போதும் போரிட்டு, அவனை மேற்கொள்ள ஆயத்தமுடையவர்களாய் இருக்கவேண்டும்.
தவறான விசுவாசமுடையவர்கள் விடுவிக்கப்பட்டவர்களை பொருட்களினால் இச்சிக்க அவ்வப்போது முயல்கிறார்கள். பணத்தினாலும், பிரபலத்தினாலும் இச்சிக்கிறார்கள். சாத்தான் நமக்கு உலகின் மதிப்புகளைக் காண்பித்து கர்த்தரையும் நம் விசுவாசத்தையும் கைவிடும்படி கூறுகிறான். அத்தகைய சமயங்களில் தேவன் நம் எல்லாத் தேவைகளையும் சந்திப்பார் என்ற விசுவாசம் நமக்கிருக்கவேண்டும், இந்த விசுவாசத்தினால் நாம் சாத்தானின் இச்சைகளை தைரியமாக நிராகரித்து அதனை மேற்கொள்ளலாம்.
ஆசீர்வாதங்களின் வேர் கர்த்தரிடம் காணப்படுகிறது. ஆவிக்குரிய, சரீரத்திற்குரிய ஆசீர்வாதங்களை அளிப்பது கர்த்தரே. மனிதகுலத்தை ஆசீர்வதித்தது சாத்தான் அல்ல என்பதை நாம் உணர்ந்து, அவனுக்கெதிராக போர்புரிய முடியும். நம் ஆசைகளுக்கு எதிராக போர்புரியவேண்டிய நேரங்களும் உண்டு. இவ்வுலகத்தின் போக்கில் செல்ல நம்மிருதயங்களை விட்டுவிட்டால் பேராசையும் இச்சையும் வெளியோடும், நாம் நமக்கெதிராக போர் புரியவேண்டும். நம் விசுவாசத்தை குலைக்க முயலும் உலகப் பிரகாரமான மக்களுடனும் நாம் போராட வேண்டுமென்பதை கூறவேண்டியதில்லை. உலகப் பிரகாரமான அனைத்து வல்லமைகளுடனும் ஆவிக்குரிய போராட்டம் போராடுவதைத் தவிர வேறு வழி நமக்கில்லை.
ஏன்? ஒரு கிறிஸ்தவன் ஆவிக்குரிய போராட்டத்தில் ஈடுபடாதவனாயிருந்தால், அவனின்/அவளின் விசுவாசம் செத்துவிட்டது என்றே பொருள்படும். இவ்வுலகின் முடிவுவரை, நீதிமான்களும் பாவிகளும் தீர்க்கப்படும் அந்நாள்வரை நம் விசுவாசத்தை அழிக்க தந்திரங்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கும். இதனால் தான் இடைவிடாது போரில் பங்கேற்று கொண்டேயிருக்க வேண்டும். கர்த்தருக்கு எதிராக எழும்பி, நம் விசுவாசத்தை அழிக்க வகை தேடுபவர்களை நாம் சகித்துக்கொண்டிருந்தால், நம் வாழ்வு உட்பட அனைத்தையும் இழந்துபோவோம். நம்மை ஆள நம் விசுவாசத்தைத் தவிர வேறு எதையும் அனுமதிப்பதில்லை என்ற தீர்க்கமான முடிவு இல்லையெனில், நாம் நம் உடமைகளை மட்டும் இழந்து போகாமல், கர்த்தராலும் கைவிடப்படுவோம். நம் எதிரிகளை மேற்கொள்ள நாம் செய்யும் போரில், நம்முடன் இருப்பது யார், நமக்கெதிராக இருப்பது யார் என்பதை தெளிவாக நாம் பிரித்து அறியமுடியவேண்டும். நாம் ஒருவருக்கொருவர் தாராள மனப்பாண்மையுடயவர்களாயிருந்தாலும், எதிரிகளை எதிர்ப்பதில் நிலையாக இருக்கவேண்டும் - நம்மீது எதைச் செய்யவும் துணிச்சலில்லாதபடி அவர்களைச் செய்யவேண்டும்.
நிக்கொலாய் மதஸ்தினர் நமக்கு எதிரிகளாவர். அவர்கள் நமக்கு பகைஞர் ஏனெனில் அவர்கள் “சாத்தானின் கூட்டத்தினர்” அவர்களைப் பொறுத்துக் கொள்வதோ அவர்களுடன் பணியாற்றுவதோ முடியாது. விக்கிரகாராதனையிலும் பொருளாதாயங்களிலும் ஈடுபட்டுள்ள நிக்கொலாய் மதஸ்தினரை, பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாகிய நாம் சகிக்கக்கூடாது, அதற்கு பதிலாக தேவனுக்கு ஊழியஞ்செய்ய நம் வாழ்வை அர்ப்பணிக்கவேண்டும், மேலும் இப்பூமியில் கர்த்தரின் ராஜ்யத்தைக் கட்டும் அவரின் நீதியின் செயலிலும் ஈடுபட வேண்டும்.
 
 
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுங்கள்
 
“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்” என்று இயேசு நம்மிடம் கூறினார். மாமிசத்திற்கேதுவான செயல்களைச் செய்வதற்கு முன்னால் கர்த்தரின் செயல்களைச் செய்யுமாறு அவர் அறிவுறுத்துகிறார். மறுபடியும் பிறந்தவர்களாகிய நமக்கு ஆவிக்குரிய ஆசைகள் இருக்கின்றன. இவை மாமிசத்தின் ஆசைகளில்லை, இவை ஆவிக்குரிய ஆசைகள். இப்படித்தான் கர்த்தரின் செயல்களுக்கும் அவரின் ராஜ்யத்திற்கும் முதலில் ஊழியம் செய்ய முடியும். நாம் முதலில் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறோம், ஆனால் நம் மாமிசத்தின் செயல்களையும் செய்கிறோம். வேதாகமம் கூறுவது போல், “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்” வேறுவார்த்தைகளில் கூறுவதானால் நாம் மாமிசத்தினால் மட்டும் வாழவில்லை, மாமிசத்தினாலும் ஆவியினாலும் வாழுகிறோம். இவை இரண்டிற்கும் சமமாயிருக்கவேண்டும். இவ்வுலகில் நம் சந்தோஷமே எல்லாம் என்றெண்ணி நிக்கொலாய் மதஸ்தரின் செயல்களை நாம் பின்பற்றினால், நம் அழிவை சந்திப்பதில் முடிவடைவோம். இதனால் தான் ஆவிக்குரிய ஆசைகளை முதலில் நிறைவேற்ற வேண்டும்.
பரலோகம் மற்றும் நரகம் ஆகியவற்றைக் குறித்த வாதம் எழும்போது சில மக்கள் கோபமுடையவர்களாகின்றனர். “நீங்கள் நரகம் சென்றிருக்கிறீர்களா? உங்கள் கண்களால் அதனைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்கின்றனர். ஆனால் இக்கேள்விகள் சாத்தானின் சிந்தனைகளிலிருந்து வருகின்றன. சாதாரண மக்கள் மட்டுமின்றி வருடக்கணக்காக இறையியலைப் படித்த போதகர்களும் கூட பரலோகத்தைக் குறித்த எவ்வித உறுதியுமில்லாமல், மறுபடியும் பிறப்பது எப்படி என்ற அறிவில்லாமல், தம் மந்தைகளுக்கு ஊழியம் செய்கிறார்கள். இது மிகவும் துரதிருஷ்டவசமானதும் வருந்தக்கூடியதுமாகும். இத்தகைய உறுத்தல்கள் இல்லாத ஊழியர்கள் மறுபடியும் பிறக்காதவர்கள், இவர்களால் கர்த்தரைக் குறித்து எதுவும் தெரியாதவர்களை மறுபடியும் பிறந்தவர்களாக்க வழி நடத்தவே முடியாது. இத்தனை ஆத்துமாக்கள் சாத்தானின் சிந்தனைகளால் கட்டப்பட்டு கர்த்தருக்கு எதிராக நிற்கும்போது, பரலோகத்தை விசுவாசிக்காததோடு, தம் சொந்த இரட்சிப்பைக் குறித்தும் உணராத போதகர்களிடமிருந்து அவர்களால் எதைக் கற்றுக்கொள்ளமுடியும்?
“சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில்” என்பது, சாத்தான் இம்முழு உலகத்தையும் ஆளுகிறான் என்று பொருள்படும். நாம் இத்தகைய காலத்தில் வாழுகிறோம், இக்காலமானது இவ்வுலகம் முழுவதும் நிக்கொலாய் மதஸ்தினர் பரவியுள்ள காலமாகும், அவர்கள் இரவின் வானத்தை நியான் சிலுவைகளினால் வெளிச்சமாக்கி, வியாபாரம் செய்வதைப் போன்று ஆலயங்களை நடத்துகின்றனர். இவை தன் ஆலயங்கள் அல்லவென்றும் அவை “சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள்” என்றும் கர்த்தர் நம்மிடம் கூறினார். சாத்தானின் சிந்தனைகளில் அகப்பட்டுள்ள எண்ணிலடங்கா மனிதர்கள் உள்ள உலகமாக இன்றைய உலகம் உள்ளது, அவர்கள் இவ்வுலகின் ஆசைகளைத் தேடி, போதகர்கள் போன்று காட்டி, ஆலயம் சென்று தேவனின் பெயர் சொல்லி அழைக்கிறார்கள்; ஆயினும் அவர்கள் ஆத்துமா மீண்டும் பிறந்ததும் பரலோகத்தின் மீதுள்ள அவர்களின் விசுவாசமும் வெகு காலத்திற்கு முன்பே மறைந்தன. இத்தகைய காலத்தில் நாம் வாழ்ந்து தேவனுக்கு ஊழியஞ்செய்கிறோம்.
 
 
மறுபடியும் பிறக்காதவர்களுடனான ஆவிக்குரிய போர்
 
“சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற” இப்பூமியில் நாம் வாழுகிறோம். நாம் நம் விசுவாசத்தை காவல் புரிந்தும் சவாலை சந்திக்கும் போது தைரியமாக நம் எதிரிகளைச் சந்தித்தும் பாதுகாக்கிறோம். தேவன் வரும் நாள் வரை “வெண்மையான குறிக்கல்லையும்” -அதாவது, நம் விசுவாசத்தை- பாதுகாத்து கடைப்பிடிக்கவேண்டும். அப்படிச் செய்ய நம்மை அதன் நீர் மற்றும் இரத்தத்தினால் மறுபடியும் பிறக்க அனுமதித்த நற்செய்தியை விசுவாசிக்கவேண்டும்.
கர்த்தரின் வார்த்தையாகிய மன்னாவை நாம் உண்டு வாழ்ந்திருக்கவேண்டும். அப்படிச் செய்ய நிக்கொலாய் மதஸ்தரின் செயல்களுடன் போரிட்டு அதனை மேற்கொள்ளவேண்டும். அவற்றை நாம் நிராகரிக்கவேண்டும். பணத்தையும் உலகப் புகழையும் மட்டுமே தேடும் அவர்களுக்கு அருகில் நாம் செல்லக்கூடாது. அவர்களுடைய பலவீனத்தைச் சகித்து அவர்களை மன்னித்தாலும் கூட, சத்தியத்திற்கு எதிராகவும், பணத்தை மட்டுமே தேடுபவர்களாகவும் இருக்கும் அவர்களுடன் உணவருந்த முடியாது, இத்தகைய மக்களுடன் கர்த்தரின் செய்கைகளைச் செய்வது இயலாத காரியம்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து மறுபடியும் பிறந்தவர்களின் பெயர்கள் எங்கு எழுதப்பட்டுள்ளன? அவை ஜீவப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. அப்படியானால், இந்த வெள்ளைக் கல்லில் புதிய பெயர் எழுதப்படும் என்பதின் பொருள் என்ன? அது நாம் கர்த்தரின் பிள்ளைகளானதைக் குறிக்கிறது. “அதைப் பெறுகிறவனேயன்றி” வேறு யாருக்கும் இந்த புதிய பெயர் தெரியாது எனவும் எழுதப்பட்டுள்ளது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து மறுபடியும் பிறந்தவர்களுக்கு இயேசுவின் இரட்சிப்பைக் குறித்து தெரியுமே தவிர யாருக்கும் இது தெரியாது என்று இது பொருள்படும். தாம் எப்படி நீதிமான்களாக முடியும் என்று பாவிகளுக்குத் தெரியாது - அதாவது, இயேசுவிடமிருந்து புதிய பெயர்களைப் பெற்றவர்களுக்கே, தம் பாவங்கள் எப்படி மறையச் செய்யப்பட்டன என்பதைக் குறித்து தெரியும்.
நாம் நிக்கொலாய் மதத்தினருக்கு எதிராக போரிடவேண்டும்; வேறு யாருடனும் அல்ல, நிக்கொலாய் மதத்தினருக்கு எதிராகவே போராடவேண்டும். நிக்கொலாய் மதத்தினருக்கு எதிராக யுத்தம் புரிந்து அவர்களை வெல்ல வேண்டுமென்பதே இந்த வசனத்தின் முக்கிய சாராம்சம். அவர்கள் கர்த்தரை விசுவாசித்தாலும் சத்தியத்தின் வார்த்தைகளை அறிந்திருந்தாலும், கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் அதனை நிராகரிக்கின்றனர், ஆனால் பணம் பொருளாதாயம், செல்வம் மற்றும் மாமிசத்தின் புகழ் ஆகியவற்றை பின்தொடருகின்றனர்.
நமக்கு எதிராகவும் நாம் போரிடவேண்டும். நம்முடைய பெருமையினாலும் கர்வத்தினாலும் கர்த்தரை பின்பற்ற முடியவில்லை என்றால், அத்தகைய இருதயங்களுடன் போரிடவேண்டும். மறுபடியும் பிறவாமல் இயேசுவை விசுவாசிப்பதாக கூறிக்கொண்டிருப்பவர்களுடனும் ஆவிக்குரிய போரில் நாம் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.
அவரின் மகிமையில் நாம் குறைவுள்ளவர்களாகிப் போனாலும் தேவன் நம்மைத் தன் நீரினாலும் இரத்தத்தினாலும் இரட்சித்தார். அவருடைய வார்த்தையை விசுவாசித்து அதனை நாம் பாதுகாக்கவேண்டும் என்பதோடு கர்த்தரின் ஊழியர்களாக, அவர் நமக்குக் கொடுத்த நிறைவான இரட்சிப்பிற்கு நன்றி கூறி வாழும் ஒரு வாழ்க்கையை வாழவேண்டும். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவர் நீதியையும் தேடவேண்டும். விசுவாசத்தினால் முடிவுவரை போரிட்டு ஜெயங் கொள்ளுகிறவர்களாவோமாக.
 
 
ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு மன்னா அளிக்கப்படும்
 
மனிதர்களின் வரலாறில் பெருமளவு மக்கள் மறைந்து போகும் நாள், வரப்போகிற எடுத்துக்கொள்ளப்படுதலே. அதே நேரம், இயேசுவின் இரண்டாம் வருகையே, கிறிஸ்துவை விசுவாசிக்கும் அனைவரையும் ஆர்வமுடையவர்களாகச் செய்வதாயிருக்கிறது. சில மக்கள் எண்ணுகின்றனர் “விமானம் செலுத்துபவர்களிலிருந்து தொடர்வண்டி நடத்துனர்கள் வரையிலும், பேருந்து செலுத்துனர்களும் வாழ்வின் அனைத்து வகையான மனிதர்களிலிருந்தும் பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படுவதால் அநேக மக்கள் திடீரென காணாமற் போவார்கள்; உலகம் எல்லா விதமான அழிவுகளையும் விபத்துக்களையும் சந்திக்கும். விமானங்கள் வானத்திலிருந்து விழுந்து நொருங்கும், தொடர் வண்டிகள் தடம் புரளும், நெடுஞ்சாலைகள் விபத்துகளினால் குப்பை மேடாகியிருக்கும்.” இதனை மையமாக வைத்து எழுதப் பட்ட கதையான எடுத்துக்கொள்ளப்படுதல் கடந்த காலத்தில் பரப்பாக விற்பனையானது. பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப் படுகையில் அவர்கள் காற்றில் மறைந்துபோவர் என்று இம்மக்கள் விசுவாசித்தனர். ஆகவே தாம் எடுத்துக்கொள்ளப்படும் நாளிற்காக தம் விசுவாசத்தை ஆயத்தப்படுத்த மனம் வருந்தி ஜெபித்தது மட்டுமின்றி, பாடசாலைகளிலிருந்தும் வேலைகளிலிருந்தும் கூட விலகினர், இது சிரிப்பை வரவழைக்கும் சம்பவம் அல்ல.
சில காலத்திற்கு முன் ஒரு பிரிவினர் உபத்திரவத்திற்குமுன் எடுத்துக்கொள்ளப்படுதலை தழுவியதோடு, அவர்களின் உடமைகளையெல்லாம் ஆலயத்திற்கு கொடுத்துவிட்டு, அதன் போதகர்கள் தீர்க்கதரிசனம் கூறிய எடுத்துக்கொள்ளப்படும் நாள்வரை காத்திருந்தார்கள். அவர்கள் தீர்க்கதரிசனம் கூறிய நாளுக்காக காத்திருந்தபோதிலும் எல்லா நாட்களையும் போல் அதுவும் கடந்தது -அவர்கள் காத்திருந்தது வீணே! அவர்கள் மிகத்தீவிரமாக விசுவாசித்ததும் காத்திருந்ததும் பொய்யென நிரூபனமாயிற்று.
அவர்களில் சிலர் 1999 இன் ஒரு நாளை எடுத்துக் கொள்ளப்படும் நாளாக மீண்டும் அறிவித்து, தொடர்ந்து காத்திருந்தார்கள். ஆயினும், முன்பு போலவே பொய்களினால் வஞ்சிக்கப்பட்டதை அவர்கள் அறிந்தனர். அவர்களின் தலைவர்கள் நிறைவேறாத தீர்க்கதரிசனத்தின் நிமித்தம் வெட்கத்திற்குள்ளானார்கள், அவ்வப்போது கிறிஸ்துவின் வருகையை மீண்டும் அறிவிப்பதில்லையென தீர்மானித்தனர். இச்சம்பவங்களிலிருந்து உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக் கொள்ளப்படும் தத்துவம் கர்த்தரின் வார்த்தையுடன் ஒத்துப் போகாததை நாம் காணலாம்.
வெளிப்படுத்தின விசேஷத்தின் முக்கியமான செய்தி இயேசுவின் இரண்டாம் வருகையும் பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படுவதுமாகும். அனைத்து விசுவாசமிக்க கிறிஸ்தவர்களும், கிறிஸ்து இவ்வுலகிற்கு வரும்போது அவரின் விசுவாசிகளையெல்லாம் ஆகாயத்திற்கு எடுத்துச் செல்வார் என்று பெரிதான நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். கிறிஸ்துவின் வருகைக்காக கிறிஸ்தவர்கள் ஆவலுடன் காத்திருப்பது சரியானது. இயேசுவை உண்மையாகவே விசுவாசிக்கும் அனைவரும் தேவனுடைய வருகையின் நாளிற்காக பெரிதான எதிர்ப்பார்ப்புடனும் ஆர்வத்துடனும் காத்திருக்கவேண்டும்.
தேவனின் இரண்டாவது வருகைக்காகவும், நாம் எடுத்துக் கொள்ளப்படுவோம் என்றும் காத்திருப்போரின் இத்தகைய விசுவாசம், காத்திருக்காததை விட மிகச் சிறந்தது. இறுதிகாலத்தைக் குறித்து அறிஞர்கள் தம்முடைய எடுத்துக்கொள்ளப்படும் சரியான நாளையும் நேரத்தையும் அறிவிப்பதினால், சரியான பாதையை விட்டு விலகிப் போகின்றனர். அவர்களுடைய கணக்கிடுதலுக்கு அடிப்படையாக தானியேல் 9, மற்றும் சகரியாவில் தோன்றும் எழுபது வார தீர்க்கதரிசனத்தை தவறாக விளக்கி, தம் சொந்த நாட்களை கண்டுபிடிக்கின்றனர்.
கிறிஸ்து இவ்வுலகிற்கு திரும்பி வரும்போது, பரிசுத்தவான்கள் அவரைச் சந்திக்க ஆகாயத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்று 1 தெசலோனிக்கேயர் 4 இல் பவுல் கூறுகிறான். இயேசுவை உண்மையாகவே விசுவாசிப்பவர்கள் மட்டுமே தாம் எடுத்துக்கொள்ளப்படும் நாளிற்காக காத்திருப்பர் என்று கூறுவதே சரியானதாகும். எடுத்துக்கொள்ளப்படும் நாளை கணக்கிடுவதும் அதனைக் குறிப்பதும் மிகவும் தவறானதாகும், இது கர்த்தரின் ஞானத்தை அலட்சியப்படுத்தியதையும் அவர்களின் கர்வத்தையும் பிரதிபலிக்கிறது. மனிதர்களினால் உருவாக்கப்பட்ட சூத்திரங்களால் வேதாகமத்தின் தீர்க்கதரிசனங்களை புரிந்துகொள்ள முயல்வதும் தீர்க்கமுயல்வதும் பெரிதான தவறுகளாகும்.
அப்படியானால் எடுத்துக்கொள்ளப்படுதல் எப்போது நிகழும்? வெளி 6 பரிசுத்தவான்களின் எடுத்துக்கொள்ளப் படுதலைக் குறித்து கூறுகிறது; அதன்படி, கர்த்தரின் ஏழு காலங்களில் நான்காவது காலத்தின்போது -அதாவது மங்கின நிறமுடைய குதிரையின் காலத்தின்போது- பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக மரிப்பது நிகழும், இதன் பிறகு ஐந்தாம் காலத்தில் பரிசுத்தவான்களின் எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழும். பரிசுத்தவான்களின் எடுத்துக்கொள்ளப்படுதல் விவரமாக விவரிக்கப்பட்டுள்ளது, நேரம் வரும்போது அது நடக்கும்.
மனிதகுலத்திற்கு ஏழு காலங்களை கர்த்தர் திட்டமிட்டார், முதலாவது வெள்ளைக் குதிரையின் காலமாகும். இக்காலத்தில் தான் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி உருவாகி தொடர்ந்து வெற்றிபெறும். இரண்டாவது காலம் சிகப்புக் குதிரையின் காலமாகும். இது சாத்தானின் காலம் உருவாவதைக் குறிக்கிறது. மூன்றாவது காலம் கறுப்புக் குதிரையின் காலமாகும், இக்காலத்தில் சரீர மற்றும் ஆவிக்குரிய பஞ்சத்தினால் உலகம் தாக்கப்படும். நான்காவது காலம் மங்கின நிறமுடைய குதிரையின் காலமாகும். இக்காலத்தில் தான் அந்திகிறிஸ்து தோன்றுவான், பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக மரிப்பார்கள். ஐந்தாவது காலம் பரிசுத்தவான்கள் மீண்டும் உயிரோடெழும்பும் காலமாகும். ஆறாவது காலத்தில் முதல் படைப்பு முற்றிலும் அழிந்துபோகும் -அதாவது இவ்வுலகம்-கர்த்தரால் அழிக்கப்படும், அதனைத் தொடர்ந்து ஏழாவது காலம் வரும், இதில் கர்த்தர் ஆயிரவருட அரசாட்சியையும் புதிய வானத்தையும் புதிய பூமியையும் பரிசுத்தவான்கள் நித்தியமாக வாழும்படி பிறப்பார். இப்படியாக மனிதகுலத்திற்காக கர்த்தர் ஏழுகாலங்களை உருவாக்கினார். இயேசுவை விசுவாசிப்பவர்கள் கர்த்தர் ஏற்படுத்தின இந்த ஏழுகாலத்தையும் அறிந்து அதனை விசுவாசிப்பது சரியானதாகும்.
கடந்த நூற்றாண்டில், கொரியாவில் மட்டும் 100,000 மக்கள், கிறிஸ்துவின் இரண்டாவது வருகைக்கான நாளைக் குறித்தும், தாம் எடுத்துக்கொள்ளப்படும் நாளைக் குறித்துக் காத்திருந்தனர். கொரியாவில் 12 மில்லியன் கிறிஸ்தவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களின் 100,000 பேர் இயேசுவின் வருகைக்காகவும் தாம் எடுத்துக்கொள்ளப் படுவதற்காகவும் காத்திருந்தனர். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், எழுதியுள்ளபடி கர்த்தரின் வார்த்தையை விசுவாசித்த தீவிர விசுவாசிகள் இவர்களாவர், இவர்கள் தேவன் திரும்பி வருவதற்காக காத்திருந்தனர் -12 மில்லியனில் 100,000 பேர் அதாவது ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே காத்திருந்தனர்.
அவர்களுடைய பிரச்சினை என்னவெனில், கர்த்தர் அவர்களுக்கு ஏற்படுத்திய காலங்களைக் குறித்த தெளிவான அறிவு அவர்களிடமிருக்கவில்லை. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் ஆதிசபையின் கிறிஸ்தவர்களில் அநேகர் இத்தகைய தவறுகளைச் செய்தனர். அவர்கள் தம் தவறான அறிவின் அடிப்படையில் கிறிஸ்துவின் இரண்டாவது வருகை மற்றும் பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்படுதல் ஆகியவை நடக்கும் நாளை கணக்கிட முயன்றனர். ஆகவே, அப்போஸ்தலனாகிய பவுல் அவர்களை எச்சரித்தான், “ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகின்ற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்” (2 தெசலோனிக்கேயர் 2:2).
வரலாற்றின்படி கூறினால், அநேகர் கர்த்தரின் திட்டங்களை அறியாமல் தொடர்ந்து ஒவ்வொரு நாட்களாக வீணாக அறிவித்துக் கொண்டேயிருந்தார்கள், அவர்களுடைய தவறான விசுவாசத்தை சரிசெய்வது அவசியமென நான் நம்புகிறேன். அவர்களை கடினமாக கண்டிப்பதில் எனக்கு விருப்பமில்லை -அவர்களைத் திருத்த மட்டுமே விரும்புகிறேன். ஏன்? கர்த்தர் மனிதகுலத்திற்கு ஏற்படுத்திய ஏழு காலங்களைக் குறித்த அறிவின்மையே அவர்களின் தவறுகளுக்கு காரணமாகும். அவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகையைத் தவறாகக் கணக்கிட்டனர், அவர்கள் வேதாகமத்தில் காணப்படும் எண்களைத் தவறாக உபயோகித்து, அவற்றை மனிதர்களின் சொற்களாக நோக்கியதால், தவறாகப் புரிந்துகொண்டனர்.
இத்தவறு கொரிய கிறிஸ்தவர்களுக்கு மட்டும் உரியதல்ல, அது முழு உலகிற்கும் பொதுவானது. இப்பூமியின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள ஆலயத்தலைவர்கள், அதேவித தவறுகளையே செய்தனர், அவர்களில் பிரபலமானவர்களும் அடக்கம். இப்படியாக இயேசுவை விசுவாசித்து தாம் குறிப்பிட்ட நாளில் எடுத்துக் கொள்ளப்படுவோம் என்று காத்திருந்தவர்களுக்கு, கர்த்தரின் திட்டத்தை அனைவருக்கும் கூற என்னிருதயம் விரும்புகிறது, இப்படிச் செய்வதால் அவர்கள் தவறில்லாமல் சரியாக கர்த்தரின் திட்டத்தைப் புரிந்துகொள்வர். அவர்களும் கூட கர்த்தரால் எடுத்துக்கொள்ளப்படும் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.
மங்கின நிறமுடைய குதிரையின் காலத்திற்குப் பிறகும், பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக மரித்த பிறகும், கர்த்தரால் நாம் எடுத்துக்கொள்ளப்படுதல் நிறைவேறும். மங்கின நிறமுடைய இக்குதிரையின் காலத்தின் மகா உபத்திரவ காலமாகிய ஏழாண்டு காலம் வருகையில், அந்திகிறிஸ்து மிக வல்லமையுடைய உலகின் தலைவனாகத் தோன்றி அதனை ஆளுவான்.
மகா உபத்திரகாலம் தொடங்கும் போது அந்திகிறிஸ்து பரிசுத்தவான்களைத் துன்புறுத்தத் தொடங்குவான், மகா உபத்திரவ காலத்தின் முதல் பாதியில் -மூன்றரை வருடங்களாக- துன்பம் சிறிது சிறிதாக அதிகரித்து அதன் நடுப்பகுதியில் மிகவும் அதிகமானதாக இருக்கும். இப்போது தான் தம் விசுவாசத்தைக் காக்க பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக மரிப்பார்கள். இதனை ஆறாவது காலம் பின்தொடரும், அப்பொழுது இரத்தசாட்சியாக மரித்த பரிசுத்தவான்கள் யாவரும் உயிரோடெழுப்பப் பட்டு எடுத்துக்கொள்ளப்படுவர்.
இயேசுவை விசுவாசிப்பவர்கள் காலங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும். உபத்திரவத்திற்கு முன் எடுத்துக் கொள்ளப்படுதலை விசுவாசிக்கிறார்களா அல்லது உபத்திரவத்தின் நடுவில் எடுத்துக் கொள்ளப்படுவதை விசுவாசிக்கிறார்களா என்பதைப் பொறுத்து அவர்களின் விசுவாச வாழ்க்கை மாறுதலடையும். விசுவாசிகள் சரியான விசுவாசத்துடன் தாம் எடுத்துக் கொள்ளப்படும்வரை ஞானத்துடன் காத்திருக்கிறார்களா அல்லது தாம் தெரிந்துகொண்ட நாளின்மீது தவறாக நோக்கிக் கொண்டிருக்கிறார்களா -என்பதில் அவர்கள் கர்த்தரின் வார்த்தையின் மீது விசுவாசத்தை வைத்திருக்கிறார்களா இல்லையா என்பது தெரியவரும்.
வெளிப்படுத்தலின் வார்த்தைகள் மீதான இப் போதனைகளை அமைதியுடன் அணுகினீர்களானால், எது சரியானது என நீங்கள் கண்டுபிடித்து, உங்கள் அனைத்துக் கேள்விகளுக்கும் தீர்வினைக் காண்பீர்கள். ஆனால் எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்த சரியான புரிந்துகொள்ளுதல் இல்லாமல் அதற்காக காத்திருக்கத் தவறினால் உங்கள் விசுவாசம் அழிந்துபோகும்.
உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவத்தை அறிவித்தது ஸ்கோஃபீல்ட் ஆகும், அமெரிக்க இறையியலாளரான இவர் தன் ஸ்கோஃபீல்டின் வேதாக விளக்கத்தில் படிப்படியாக தன் தத்துவத்தை உறுதிப்படுத்தினார். இந்த விளக்க வேதாகமம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் உபயோகிக்கப்படுகிறது. ஸ்கோஃபீல்டின் வேதாகம விளக்கத்தினால் உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவம் இத்தனையாய் பரவிற்று. ஸ்கோஃபீல்டின் வேதாகம விளக்கம் வல்லமையுள்ள நாட்டின் செல்வாக்குடைய ஒருவரால் எழுதப்பட்டதால், இப்புத்தகம் அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அநேக கிறிஸ்தவர்களால் படிக்கப்படுகிறது.
தான் கூறிய உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவம் உலகம் முழுவதும் இத்தனையாய் பரவும் என்று ஸ்கோஃபீல்ட் சிந்திக்கவில்லை. அதன் பலன் உபத்திரவத்திற்குமுன் எடுத்துக் கொள்ளப்படும் தத்துவத்தை உலகின் அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஏற்றுக் கொண்டதாகும். ஆனால் ஸ்கோஃபீல்டின் உபத்திரவத்திற்குமுன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவத்திற்கு முன்பு கிறிஸ்தவ உலகத்தில் உபத்திரவத்திற்கு பின் எடுத்துக் கொள்ளப்படும் தத்துவம் பரவியிருந்தது.
உபத்திரவத்திற்கு பின் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவம், கிறிஸ்து ஏழாண்டு உபத்திரவத்திரவ காலத்திற்கு பிறகு திரும்புவாரெனவும், அப்பொழுது அவர் பரிசுத்தவான்களை எடுத்துக்கொள்வார் என்றும் அறிவிக்கிறது. எனவே தேவனின் இரண்டாவது வருகைக்கு முன்னும் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னமும் உபத்திரவம் இருக்கிறதே என்று அநேக மக்கள் பயந்தனர். கிறிஸ்துவின் இரண்டாவது வருகையைக் குறித்து எழுப்புதலாளர்கள் மேடையிலிருந்து பிரசங்கித்தபோது, மக்கள் மனம் வருந்தி சென்று, பாவத்தை நினைத்து துக்கப்பட்டு அழுது, மனம் வருந்தி ஜெபிப்பதில் விழுந்தார்கள். ஆகவே, அதிகம் அழுதது யாரோ அவர் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவராக அளக்கப்பட்டார். இத்தகைய மக்கள் இயேசுவை விசுவாசித்தாலும், அதிக அளவு கண்ணீரைச் சிந்தினர்.
ஆனால் முன்பிருந்த நம்பிக்கையாகிய உபத்திரவத்திற்கு பின் எடுத்துக்கொள்ளப்படும் தத்தும் உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவத்தினால் அகற்றப்பட்டது. இது ஏன் இப்படியாயிற்று? உபத்திரவத்திற்கு பின் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவத்திலிருந்து உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவத்திற்கு மாறுவது மக்களுக்கு அளவில்லா சுகத்தையளித்தது, இதன் பொருள் என்னவெனில், அவர்கள் எந்த உபத்திரவத்திற்குள்ளும் செல்லவேண்டியதில்லை என்பதாகும், இப்படி இல்லாவிட்டால் அவர்கள் உபத்திரவத்திற்குள்ளாகச் செல்லவேண்டும். மகா உபத்திரவம் தம்மீது இறங்கி பயங்கரமான கடினங்கள் வருவதற்கு முன் வானத்தில் எடுத்துக்கொள்ளப் படுவதை அவர்கள் தெரிந்தெடுத்ததில் எந்த ஆச்சரியமுமில்லை. இப்படியாக உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவம் காட்டுத்தீயைப் போல் பரவியது, ஏனெனில் இது சுகமான விசுவாசமாகும், மகா உபத்திரவத்தின் பாடுகளுக்கு மத்தியில் செல்வதை விட இது இலகுவில் ஜீரணிக்கக் கூடியதாயிருந்தது.
மக்கள் கசப்புக்கு பதிலாக இனிப்பை விரும்புவதைப் போல், தம் விசுவாசமாயிருந்தாலும் இலகுவானதையே மக்கள் விரும்புகின்றனர். அறிவியலாளர்கள் தயாரித்த வெவ்வேறு கொள்கைகளில் தமது ருசிக்குத் தகுந்தவைகளை அவர்கள் தேர்ந்தெடுத்து அதனை விசுவாசிக்கின்றனர். இதனால் தான் அநேக மக்கள் உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவத்தை இத்தனை இலகுவாய் ஏற்றுக்கொண்டனர். இந்த உபத்திரவத்திற்கு முன் எடுத்துக் கொள்ளப்படுதலை ஆதரித்தவர்கள், தாம் எடுத்துக்கொள்ளப்படும்படி தம் சரீரங்களையும் இருதயங்களையும் தெளிவாக வைத்திருக்க வேண்டுமென விசுவாசித்தனர். ஆகவே அவர்கள் தம் விசுவாச வாழ்வில் பிடிப்புள்ளவர்களாய் இருந்தார்கள். ஆனால் அவர்களின் உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் விசுவாசத்தை முக்கியமான ஒன்று இடறிக் கொண்டிருந்தது, அவர்களின் இயேசுவின் மீதுள்ள விசுவாசமும், தேவனுக்காக அவர்கள் காத்திருப்பதும் பாராட்டத்தக்க ஒன்றாயிருந்தாலும், அவர்கள் இரண்டு மோசமான தவறுகளைச் செய்தனர்.
முதலாவது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காமல், தம்மிருதயங்களில் பாவம் இன்னமும் இருந்த போதிலும் அவர்கள் தேவனுக்காக காத்திருந்தனர். அவர்கள் சிலுவை இரத்தத்தைச் சார்ந்து அதனைப் பற்றிக்கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் அன்றாடம் செய்யும் பாவங்களுக்கு எத்தனையாய் மனம் வருந்தி ஜெபித்தாலும் அது அவர்களுக்கு முழுமையான பாவமன்னிப்பை எடுத்துவராது. ஆயினும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக இரவும் பகலும் அவர்கள் காத்திருந்தனர். தம் பாவங்களுக்கும் மனம் வருந்தி ஜெபிக்கவும் இரவு முழுவதும் புகழைப்பாடவும் எடுத்துக்கொள்ளப்படுதலை எதிர்பார்த்தும் ஐக்கியமாக ஆலயங்களில் கூடினர். இப்படி காத்திருந்ததும் தம் எடுத்துக் கொள்ளப்படுதலை எதிர் பார்த்திருந்ததும் தவறில்லை. ஆனால் சரியான விசுவாசத்துடன் காத்திருக்காத மிகப்பெரிய தவறைச் செய்தனர் -அதாவது அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கவில்லை, இவ்விசுவாசமே கர்த்தருக்கு முன்பாக அவரின் பிள்ளைகளாக அவர்களை நிறுத்தும்.
இரண்டாவது தவறு, கர்த்தரின் திட்டத்தை சரியாகப் புரிந்துகொள்ளாது, அவர்களாகவே ஒரு நாளைக் குறித்தனர். இது அநேக விசுவாசிகளை வீணாக காத்திருக்கச் செய்ததோடு மட்டுமல்லாது, அநேக தீமைகளை உலகில் விட்டது, கிறிஸ்தவத்திற்கு அவப்பெயரை உருவாக்கி அவிசுவாசிகள் மத்தியில் அதன் மரியாதையைக் குலைக்கச் செய்தது.
இந்த இரு தவறுகளால், இம்மக்கள் எதிர்ப்பார்த்திருந்த எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழாததால், எடுத்துக்கொள்ளப்படுதலை அநேக மக்கள் தவறாக நினைக்க வழி நடத்தியதோடு, சத்தியத்திலிருந்தும் அவர்களைத் தூரமாக்கியது. இப்போது, கிறிஸ்துவின் வருகை வெகு அருகில் இருக்கும்போது, அதனைக் குறித்து பேசுவதற்கு இதுவே சரியான நேரமாயிருந்தாலும், அதனை யாரும் பேசுவதே இல்லை -தவறாக வழிநடத்தப் பட்டவர்களின் அறிவிப்புகளுக்கு நன்றிகள்.
இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் வசனம் யோவான் மூலமாக கர்த்தரால் பெர்கமு சபையின் தூதனுக்கு எழுதப்பட்டது. ஆலயத்தின் ஊழியனும் அதின் பரிசுத்தவான்களும் இரத்தசாட்சியாக மரித்து தம் விசுவாசத்தைக் காப்பாற்றியதற்காக கர்த்தர் அவர்களைப் பாராட்டினார். ஆனால் பெர்கமு சபைக்கான கர்த்தரின் பாராட்டுதல்களுடன், அவரின் கண்டிப்புகளும் கூட வந்தன, ஏனெனில் அச்சபை உலகைப் பின்பற்றும் சிலரையும் உறுப்பினராகக் கொண்டிருந்தது. இதனால்தான் கர்த்தர் அச்சபையை மனம் வருந்தும்படி கூறினார். அவர் ஏன் அதைக் கூறினார் என்றால், அவர் சீக்கிரமாக அதைத் தண்டிக்கக்கூடும்.
யோவானின் மூலமாக ஆசியாவின் ஏழுசபைகளுக்கும் கர்த்தர் பொதுவாகக் கூறியவற்றை நாம் கவனிக்கவேண்டும்: “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” கர்த்தர் தன் ஆலயங்கள் மூலமாகவும் அவரின் ஊழியர்கள் மூலமாகவும், பரிசுத்தவான்களுக்கும் ஆத்துமாக்களுக்கும், தான் உண்மையே பேசுவதை அவர் நிச்சயப்படுத்துகிறார் என்று இது பொருள்படுகிறது. குறிப்பாக பெர்கமு சபைக்கு கர்த்தர் கூறினார்: “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக் கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.”
இந்த வசனத்தை அழுத்திச் சொல்வோமாக “ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து” தேவனுக்காக காத்திருப்பவர்கள் கர்த்தரின் எதிரிகளை மேற்கொள்ளவேண்டுமென இது பொருள்படுகிறது. உலகைப் பின்பற்றுவோர்களுடன் போர்புரியவேண்டுமெனவும், இவ்வுலகை நேசிப்பவர்களிடமிருந்து தூரமாக வேண்டுமெனவும் இது பொருள்படுகிறது. பிலேயாமைப் பின்பற்றுகிறவர்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளைப் பின்பற்றுகிறவர்களாவர். தம் பாவச் செய்கைகளால் உலகின் ஐசுவரியங்களை மட்டுமே தேடும் மக்கள் இவர்களென கர்த்தர் நம்மிடம் கூறுகிறார், பிலேயாமின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள் என கர்த்தர் இவர்களை அழைக்கிறார்.
எல்லா ஆலயங்களும் கர்த்தரின் ஆலயங்களல்ல. இன்றைய சபையின் அநேகத் தலைவர்கள் இயேசுவை தேவகுமாரனாக ஏற்றுக்கொள்கிறார்கள், ஆனால் அவரே கர்த்தர் என்று அவர்கள் விசுவாசிப்பதில்லை. இயேசுகிறிஸ்து இவ்வுலகினைப் படைத்தார் என்பதை விசுவாசிக்காதவர்கள் அநேகர் உள்ளனர்.
அத்துடன், பொருளினால் ஆசீர்வதிக்கபடுவோம் என்பதற்காகவே அநேக மக்கள் ஆலயங்களுக்கு வருகிறார்கள். அதிக பணத்தை ஆலயத்திற்கு கொடுத்தால் ஆசீர்வதிக்கப் படுவீர்கள் என்று அநேக ஆலயத் தலைவர்கள் தம் சபையோருக்கு கூறுகிறார்கள். இத்தகைய தவறான போதனைகளினால் வஞ்சிக்கப்பட்டு, ஆலயத்திற்கு எவ்வளவு காணிக்கை கொடுக்கிறோமோ அது தம் விசுவாசத்தைப் பிரதிபலிக்கிறது என அநேக விசுவாசிகள் எண்ணுகின்றனர். காணிக்கை கொடுப்பதாலும் ஒழுங்காக ஆலயம் செல்வதாலும், தாம் சிறந்த விசுவாசிகள் என்று அங்கீகரிக்கப்பட்டவர்கள் அநேகம். அதற்கு மேலும் அவர்கள் ஒழுங்காக ஆலயத்திற்கும் ஆராதனைக்கும் வருவதால் டீக்கனாகவோ மூப்பர்களாகவோ அவர்களுக்கு ஆலயத்தில் இடங்கொடுக்கப்படுகிறது. அவர்களின் காணிக்கைகளுக்காக பெரிய கேக்குகள் வெட்டப்படுகின்றன. இவையே பிலேயாமின் வழிகளாகும், இவற்றிலிருந்து நாம் விலகிச் செல்லவேண்டும்.
இத்தகைய விசுவாசத்திற்கு எதிராக நாம் போரிடவேண்டும். மறைவான மன்னாவால் நீங்கள் போஷிக்கப்படவேண்டுமானால், உங்களின் ஆலயம் உண்மையாகவே கர்த்தரின் வார்த்தையை பின்பற்றுகிறதா இல்லையா என்பதை முதலில் நீங்கள் பிரித்துணர வேண்டும். அப்படியில்லையெனில் அத்துடன் நீங்கள் போரிட்டு அதனை மேற்கொள்ளவேண்டும். அப்படிச் செய்வதினாலேயே கர்த்தரின் உண்மை வார்த்தையாகிய நீராலும் ஆவியாலும் நீங்கள் போஷிக்கப்படுவீர்கள்.
நீர் மற்றும் ஆவியாகிய மறைவான மன்னாவை நீங்கள் சாப்பிட்டால்தான் உங்களால் மறுபடியும் பிறக்கமுடியும், மறுபடியும் பிறந்தால் மட்டுமே கர்த்தர் கொடுத்த சத்தியவார்த்தைகளை தொடர்ந்து சாப்பிடமுடியும். அதனைக் கேட்டு உட்கொண்டு பார்த்து, அதனைத் தன்னுடன் உள்ளவர்களுடன் பகிர்ந்துகொண்டு, இவ்வழிகளின் மூலம் கர்த்தரின் வார்த்தையைக் குறித்து ஒருவருக்கொருவர் இப்படியாகப் பேசிக்கொள்ளவேண்டும்.
கர்த்தரால் எடுத்துக்கொள்ளப்படவேண்டுமென நீங்கள் விரும்பினால், உண்மையாகவே மறுபடியும் பிறக்கவேண்டுமென விரும்பினால், பேரில் மட்டுமே ஆலயமாயிருக்கும் ஒரு ஆலயத்திற்கு தொடர்ந்து செல்வது முட்டாள்தனமாகும். கர்த்தருக்குச் சொந்தமில்லாத ஒரு ஆலயத்திற்குச் செல்வதின் மூலம் உங்களால் உண்மையான ஜீவவார்த்தையால் போஷிக்கப் படவே முடியாது, நீங்கள் எத்தனை காலம் அந்த ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தாலும், நூறு ஆண்டுகள், ஆயிரம் ஆண்டுகள், அல்லது அதற்கு மேலிருந்தாலும், இரட்சிப்பிற்கான சரியான பாதையில் உங்களை எதுவும் விடாது.
இத்தகைய மக்களால், மறுபடியும் விசுவாசத்தினால் பிறக்க முடியாது, ஆனால், முதலில் தேவைப்படும் -அதாவது மறுபடியும் பிறக்காமலேயே தம் எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக காத்திருக்கும் முட்டாள்தனமான தவறைச் செய்வதில் அவர்கள் முடிவடைவர். இத்தகைய விசுவாசம் தவறானதாகும். கிறிஸ்து திரும்பி வரும் வருகைக்காக எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறீர்கள் என்பது பொருட்டல்ல, தேவனை உங்கள் இருதயத்தில் நேசிக்கிறீர்கள் என்பதும் பொருட்டல்ல, இவையெல்லாம் தேவையில்லாதவை. இத்தகைய மக்கள் தேவனைச் சந்திக்க மாட்டார்கள். கர்த்தர் மீதுள்ள அவர்களின் அன்பு வேண்டப்படாத அன்பாக முடிவடையும்.
இதனால் தான் கர்த்தர் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் கூறினார்: “ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து” எவ்வித உழைப்புமில்லாமல் கர்த்தருடைய சத்தியத்தின் வார்த்தையை நம்மால் பெற்றுக் கொள்ளமுடியுமென கர்த்தர் நம்மிடம் கூறவில்லை. பொய்யர்களுடன் போரிட்டு அவர்களை மேற் கொள்ளவில்லையென்றால், ஜீவ வார்த்தையாகிய அவரின் மன்னாவை நம்மால் சாப்பிடவே முடியாது. நீங்கள் உங்களின் ஆலயத்திற்கு எத்தனை விசுவாசத்துடன் சென்றிருந்தாலும், சத்தியத்தை நீங்கள் அறிந்திராவிட்டால், இதுவரை நீங்கள் அறிந்தவை அனைத்தும் பொய்களே என இது பொருள்படும். உங்கள் உண்மைத் தேடும் முயற்சியில் இப்பொய்களுடன் போரிட்டு அவற்றை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் அவற்றிலிருந்து தப்பவேண்டும். கர்த்தரின் வார்த்தைக்கு சாட்சி பகரும் ஆலயமாகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கிக்கும் ஆலயத்தைக் கண்டிபிடிப்பதன் மூலமாக இந்த உண்மையை நீங்கள் சந்திக்கும்போது ஜீவ மன்னாவை உங்களால் சாப்பிடமுடியும்.
சத்தியவார்த்தையாகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நம்மிருதயங்களில் ஏற்றுக்கொள்ள நம்மைத் தடுப்பவை எதுவுமில்லை. வார்த்தையாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கித்து அதனைக் கேட்பவர்களின் இருதயங்கள் ஐக்கியமாவதோடு, பரிசுத்த ஆவியானவரும் அவர்களிருதயங்களில் சஞ்சரிப்பார்.
ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு தம் மறைவான மன்னாவைக் கொடுப்பதாக கர்த்தர் நமக்கு வாக்குத்தத்தம் செய்தார்; சாத்தானுடனான போரில் நாம் அவனை மேற்கொள்ள வேண்டும், பொய்யர்களுக்கு எதிராக நாம் போரிட்டு அவர்களை வெல்லவேண்டும். நித்திய வாழ்வு உங்களுக்கு வேண்டுமானால், நீங்கள் உண்மையாகவே மறுபடியும் பிறக்கவேண்டும்; கர்த்தரால் நீங்கள் எடுத்துக்கொள்ள்ளப்படவேண்டுமானால், சரியான விசுவாசம் உங்களிடம் இருக்க வேண்டும். நீங்கள் இவ்வுலகின் பொய்யர்களுடனும், கிறிஸ்தவ உலகில் காணப்படும் பொய்யர்களுடனும் போராடி அவர்களை மேற்கொள்ள வேண்டும்.
உங்கள் விசுவாசம் தீர்மானமில்லாததாய் இருக்கக்கூடாது, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு அலைபாய்வதாயும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்த திசையில் செல்லுகிறதோ அந்த திசையில் செல்வதாயும் உங்கள் விசுவாசம் இருக்கக்கூடாது. உங்களுடைய ஆலயம் கர்த்தரின் வார்த்தையை அப்படியே பிரசங்கிக்கும் ஆலயமாயிராவிட்டால், அத்தகைய ஆலயத்திற்குச் செல்வதை நிறுத்தவேண்டும், சத்தியத்தை நாடி அதனை நேசிக்கும் இருதயங்கள் உடையவர்களை மட்டுமே, சத்திய வார்த்தையாகிய நீர் மற்றும் ஆவியான தன் வார்த்தையாகிய மன்னாவால் கர்த்தர் அவர்களைச் சந்திக்க வருவார்.
இறையியல் கல்லூரியில் படிக்கும்போது நான் ஒரு சிறந்த மாணவனாயிருந்தேன் ஒரு வகுப்பைக் கூட நான் தவறவிட்டதில்லை, என்னுடைய மதிப்பெண்கள் மிகவும் சிறந்தவை. நான் கவனமாகவும் விசுவாசத்துடனும் படித்தேன். ஆயினும் எனக்குத் தெரியாத அநேக காரியங்கள் இருந்தன. நானும் என் குடும்பத்தினரும் இயேசுவை சந்தித்து விசுவாசிகளாவதற்கு முன் பௌத்தர்களாயிருந்ததினால், அந்நேரத்தில் அவரைக் குறித்த அறிவு மிகவும் குறுகியதாயிருந்தது. வார்த்தையை நான் புரிந்து கொண்டது இன்னமும் குறுகியதாயிருந்தமையால் வேதாகமத்தை அதிகம் படிக்க ஆவலுடையவனாயிருந்தேன். கர்த்தரின் வார்த்தையின் மீதான அறிவை குறித்து தாகமாயிருந்தபடியால் இறையியல் கல்லூரியின் அநேக பேராசிரியர்களிடம் படிக்க முயன்றேன். வேதாகமத்தைக் குறித்த என் தாகத்தை அவர்களின் பதில்கள் தீர்க்கும் என நம்பி அவர்களிடம் சரமாரியாக வினாக்களை எழுப்பினேன்.
அவர்களில் யாரும் எனக்கு தெளிவான பதிலை அளிக்கவில்லை. தம்முடைய வேதாகம அறிவினால் புகழ்பெற்ற பேராசியர்களிடம் எனது கேள்விகளை எடுத்து வந்தபோது, என் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக, என் வேதாகம அறிவை பாராட்டமட்டுமே செய்வார்கள். வேதாகமக் கல்லூரிகளில் வார்த்தைகளை பிரசங்கிப்பதற்கு பதிலாக, பேராசிரியர்கள் வேதாகமத்தைக் குறித்த தம் சொந்தத் தத்துவங்களையே போதிக்கின்றனர். பழைய ஏற்பாட்டு இறையியலிளிருந்து புதிய ஏற்பாடு இறையியல் வரையிலும், முறைப்படுத்த இறையியலிளிருந்து கிறிஸ்தவத்தின் வரலாறுவரையிலும், கால்வனிசம் முதல் அர்மீனியனிசம் வரையிலும், கிறிஸ்துவியலில் இருந்து பரிசுத்த ஆவியானவர் குறித்தக் கொள்கை வரையிலும் அடிப்படை பாடங்களிலிருந்து விரிவான விளக்கங்கள் வரையிலும் ஆன அவர்களின் அனைத்து கொள்கைகளும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சிந்தனைகளே. அவர்கள் அறிஞர்கள் எடுத்து உரைத்த வெவ்வேறு தத்துவங்களை மட்டுமே போதிக்கின்றனர், நீங்கள் தேர்ந்தெடுத்த பாடத்தில் வெவ்வேறு தத்துவங்களை கல்லூரியில் படிப்பதற்கும் இதற்கும் வித்தியாசமில்லை.
நான் வேதாகமத்தைக் குறித்த அறிவில்லாத மனிதனாயிருந்தேன், அறிவுப்பூர்வமான எத்தனை பயிற்சிகளைப் பெற்றிருந்தாலும், வேதாகமத்தைக் குறித்த எனது விரிவான அறிவை பலர் பாராட்டினாலும், நானே இந்த அறிவின் மூலம் பிரசங்கங்களைச் செய்தாலும் - அதிக அளவில் வேதாகமத்தையும் இறையியலையும் படிக்கும்போது, அதிகமான சந்தேகங்கள் என் வழியில் வந்தன. நான் ஒரு அறிவில்லாதவன் என்றும், அடிப்படையிலிருந்து எல்லாவற்றையும் மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் உணர்ந்தேன். ஆகவே எனது வகுப்புகளில் வித்தியாசமான கேள்விகள் என்றும் குழப்பமான கேள்விகள் எனவும் கூறப்பட்ட கேள்விகளை எழுப்பினேன். அவற்றில் ஒன்று: “இயேசு ஏன் ஞானஸ்நானம் பெற்றார்?” இக்கேள்விக்கு தெளிவான பதில் கிடைக்கவில்லை. நம்முடைய அனைத்துப் பாவங்களையும் தனது சரீரத்தில் ஏற்றுக்கொள்ளவே யோவான் ஸ்நானனால் இயேசு ஞானஸ்நானம் பெற்றார் என்ற சரியான பதிலை யாராலும் கூறமுடியவில்லை.
ஐந்து அப்பங்களினாலும் இரண்டு மீன்களினாலும் ஐயாயிரம் பேரை இயேசு போஷித்தது உட்பட அவர் செய்த அநேக அற்புதங்களைக் குறித்த கேள்விகள் என்னுள் இருந்தன. ஆகவே நான் கேட்டேன், “இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஆசீர்வதித்தபோது, அப்பமும் மீனும் குவியல் குவியலாக பெருகியதா, அல்லது அவற்றை ஒவ்வொருவருக்காக கொடுத்தபோது அது பெருகிக் கொண்டேயிருந்ததா? இத்தகைய கேள்விகளைக் கேட்டதால் அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டேன்.
“இது தான் இறையியல். பிரெஞ்சு நாட்டின் கால்வின் முறைமைப்படுத்திய அறிவுப்பூர்வமான தத்துவத்தையும் விளக்கங்களையும் நாம் படிக்கிறோம். வேதாகமத்தைக் குறித்து நமக்கு எதுவும் தெரியாது” என்று இப்படியாக நான் அறிந்து கொண்டேன். ஆகவே அநேக பிரிவுகள் எழுதியுள்ள கட்டுரைகளைச் சேர்த்து அதனை வேதாகமத்துடன் ஒப்பிட்டு விரிவாக ஆராய்ந்தேன். ஆயினும் நான் எதனையும் ஆதாயப்படுத்தவில்லை.
அவையெல்லாம் ஒரே முடிவிற்கே வந்தன, மக்கள் இயேசுவை விசுவாசிக்கும்போது, அவர்கள் தொடர்ந்து மனம் வருந்தி ஜெபித்து பரிசுத்தமாகும்போது அவர்களின் பாவங்கள் சிறிது சிறிதாக மறைந்து, அவர்கள் மரிக்கும்போது எந்தப்பாவமும் இல்லாதவர்களாகி பரலோகத்திற்குள் செல்வர். பிரிவுகள் கூறும் வேறுபாடுகள் பொருட்டேயல்ல - கிறிஸ்தவர்கள் மனம் வருந்தி ஜெபிப்பதையும் படிப்படியாக பரிசுத்தமாவதையும் தொடர வேண்டுமென்பதே அவையெல்லாம் அடிப்படையாக கொண்டுள்ளன, அதற்கும் வார்த்தைக்கும் தொடர்பேயில்லை. ஆகவே கர்த்தர் முன்பு முழங்காலிட்டு அவரின் சத்தியத்தைக் கேட்டு அதனைத் தேடினேன்.
இப்போதுதான் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து கர்த்தர் எனக்கு போதித்தார். இந்த சத்தியம் என்னை அதிசயிக்கச் செய்தது. சத்தியமாகிய நீர் மற்றும் ஆவியானது வேதாகமத்தின் 66 புத்தகங்களிலும் இருப்பதை நான் உணர்ந்தபோது, குருடாயிருந்த என் கண்கள் திறந்தன, அப்போது நான் வேதாகமத்தின் வார்த்தையை தெளிவாகப் பார்க்கத் தொடங்கினேன். பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் ஒன்றுடன் ஒன்று எப்படி பொருந்துகின்றன என்பதை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. நான் இந்த சத்தியத்தைக் கண்டுபிடித்தபோது பரிசுத்த ஆவியானவர் என்னிருதயத்தில் வாசஞ்செய்யும்படி வந்தார். இந்த சத்திய வார்த்தையைக் கண்டு அதனை உணர்ந்தபோது என் இருதயத்தை அறுத்துக் கொண்டிருந்த, என்னைத் தன் பாரத்தால் கீழேத் தள்ளிக்கொண்டிருந்த அனைத்துப் பாவங்களையும், கர்த்தரின் நேசத்தினாலும் கிருபையினாலுமாகிய அதிசயமான செய்கையினால் முற்றிலுமாக மறைந்து போயின.
அமைதியான ஏரியில் ஒரு சிறிய கல்லை எறிந்தால் அது சிறிய அலைகளை உருவாக்குவதைப் போல், அமைதியான ஆனந்தமும் வெளிச்சமும் என்னிருதயத்திற்குள் நுழைந்தது. ஒளி என்பதன் மூலம், வார்த்தையின் சத்தியம் என்னவென்று நான் புரிந்துகொண்டதைக் கூறினேன். இந்த நொடியிலேயே பரிசுத்த ஆவியானவர் என்னிருதயத்தினுள் வந்தார். பரிசுத்த ஆவியானவர் எனக்குள் இருப்பதால் வேதாகமத்தின் வார்த்தையை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது. இந்நொடி முதல், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நான் எப்போதும் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன்.
இது நாள்வரை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது என் இருதயத்தை திடப்படுத்தியதோடு, எனக்கு ஆறுதலாயும் பலமாயும் இருந்தது, என் இருதயத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கிறது. இப்படித்தான் கர்த்தரின் வார்த்தையால் போஷிக்கப்படலானேன். நான் வார்த்தையில் சஞ்சரித்தபோது, அதன் பொருளை நான் உணர்ந்து கொண்டதுடன் அழகிய ஆசீர்வாதத்தால் இருதயமும் நிரப்பப்பட்டது. இதனால், என்னிருதயம் கிருபையின் கடலில் நீந்தலாயிற்று. இப்படியாக இந்த ஆசீர்வாதத்தால் என்னிருதயம் நிரப்பப்பட்டபோது, மறுபடியும் பிறக்கும் இரட்சிப்பை நீங்கள் விசுவாசிக்கும்போது, கர்த்தரின் வார்த்தை உங்களுக்கு அதன் கிருபையையும் ஆசீர்வாதத்தையும் எடுத்துவரும்.
நான் வேதாகமத்தைத் திறந்து வார்த்தையுடன் சஞ்சரிக்கும்போது, என் எல்லாக் கவலைகளையும் நிலையில்லாத சிந்தனைகளும் காணாமற்போயிற்று. அதற்கு பதிலாக என்னிருதயம் ஆனந்தத்தினாலும் சமாதானத்தினாலும் நிறைந்தது. எப்பொழுது வேதாகமத்தைக் குறித்து கேட்டாலும், கர்த்தர் தன் வார்த்தையில் என்ன கூறினார் என்று பதிலளிக்கும் அளவு நான் ஏதுவாக்கப்பட்டேன். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்து அதனை விசுவாசித்தாலேயே கர்த்தரின் வார்த்தையை ஒருவனால் புசிக்கமுடியும், கர்த்தரின் வார்த்தையை புசித்தால்தான் ஒருவனால் மறுபடியும் பிறக்கமுடியும். மறுபடியும் பிறந்தவர்களின் இருதயங்களில் பாவம் எதுவும் இருக்காதாகையால், தேவன் இவ்வுலகிற்கு எப்போது வந்தாலும் அவர்களனைவரும் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள், தேவன் அவர்களை ஆகாயத்தின் மீது எடுத்துக்கொள்வார்.
 
 
எடுத்துக்கொள்ளப்படுவதற்கு நம்மை வழிநடத்தும் விசுவாசம்
 
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்து அதனை விசுவாசித்து நம் பாவவிடுதலையைப் பெற்றபிறகு நாம் காத்திருப்பது எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு மட்டுமே. நாம் காத்திருக்கையில், கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட நேரத்தைக் குறித்த தெளிவான அறிவுடன் காத்திருக்க வேண்டும். கர்த்தரால் ஏற்படுத்தப் பட்ட காலங்கள் ஏழு காலங்களாகும், இவற்றில் இரத்தசாட்சியாக மரிக்கவேண்டிய காலம், மங்கின நிறமுடைய குதிரையின் காலமாகும். மங்கின நிறமுடைய குதிரையின் காலம் கர்த்தர் ஏற்படுத்திய ஏழு காலங்களில் நான்காவது காலமாகும். நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இக்காலம் கறுப்புக்குதிரையின் காலமாகிய மூன்றாவது காலமாகும்.
நாம் ஒரு மலையில் ஏறினால், வரைபடம் ஒன்றை வழிகாட்டியாக சார்ந்திருக்கிறோம். ஆனால் இந்த வரைபடத்தை உபயோகித்து நாம் செல்லவேண்டிய இடத்திற்கு சரியாகவும் பாதுகாப்பாகவும் செல்லவேண்டுமானால், முதலில் நாம் எங்கிருக்கிறோம் என்று தெரியவேண்டும். வரைபடங்களை கிரகிப்பதில் நீங்கள் எத்தனை சிறந்தவர் என்பதோ, அந்த வரைபடம் எத்தனை சரியானது என்பதோ பொருட்டல்ல - நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால் வரைபடம் பயனற்றது. நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று தெளிவாக தெரிந்தால் மட்டுமே செல்லவேண்டிய இடத்திற்கு உங்களால் செல்லமுடியும்.
அதுபோலவே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் நீங்கள் மறுபடியும் பிறந்தால் மட்டுமே எப்போது நீங்கள் எடுத்துக் கொள்ளப்படுவீர்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள். எடுத்துக் கொள்ளப்படுவதற்கான வேதாகம நேரம், மகா உபத்திரவக் காலத்தின் நடுப்பகுதியைத் சிறிதே தாண்டிய நேரமாகும் -அதாவது உபத்திரவத்தின் மூன்றரையாண்டுகளுக்குப் பிறகு இது நடக்கும், கர்த்தர் முதலில் பிரபஞ்சத்தைப் படைத்தபோது இயேசுகிறிஸ்துவுக்குள் திட்டமிட்டது இதுவே.
இயேசுகிறிஸ்துவினுள் இரட்சிப்பாகிய கர்த்தரின் திட்டப்படி, அவர் தன் ஒரே பேறான குமாரனை உலகிற்கு அனுப்பி ஞானஸ்நானம் பெறச்செய்ததுடன் மரிக்கவும் செய்து, மரித்தோரிலிருந்து அவரை மறுபடி எழுப்பியது மட்டுமே அவரின் திட்டமாகாது, ஆனால் பிரபஞ்சத்திற்கான காலங்களையும் நியமித்தார், அதன் படைப்பு முதல் முடிவுவரை ஏழுகாலங்கள் உள்ளன. நாம் வீடு கட்டுவதற்கு முன் விரிவான திட்டப்படங்களைத் தயாரிக்கிறோம், நம் வியாபாரத்தை முன் கூட்டியே திட்டமிடுகிறோம் -ஒரு நாளில் என்ன செய்யப்போகிறோம் என்று பட்டியலிடுகிறோம். அப்படியிருக்க எத்திட்டமுமின்றி பிரபஞ்சத்தையும், மனிதனையும், உங்களையும் என்னையும் கர்த்தர் இயேசுகிறிஸ்துவிற்குள் எவ்வித திட்டங்களும் இன்றி படைத்தாரா? இல்லை! ஒரு திட்டத்துடனேயே அவர் நம்மைப் படைத்தார்!
இத்திட்டமானது வெளிப்படுத்தலின் வார்த்தையில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வார்த்தையைத் திறந்து அதில் சஞ்சரித்தால், கர்த்தரின் திட்டம் எதுவென மிகச்சரியாக நம்மால் கண்டுபிடிக்கமுடியும். கர்த்தரின் வார்த்தையானது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானதாயிருந்தாலும், அது மாறாத, மாற்றமுடியாத சத்தியமாயிருக்கிறது, அதில் எதையும் சேர்க்கவும் முடியாது கழிக்கவும் முடியாது. இதனைத் தெரியாதவர்களும் நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறக்காதவர்களும், கர்த்தரின் வார்த்தை வெளிப்படுத்திய சத்தியத்தைக் குறித்த அறிவில்லாதவர்களாகவே உள்ளனர். ஆனால் வார்த்தையில் சஞ்சரிப்பவர்களால் வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்ட அனைத்து உண்மைகளையும் கண்டுபிடித்து அறிந்து கொள்ளமுடியும்.
கர்த்தர் ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு தன் மன்னாவைக் கொடுக்கப்போவதாக உறுதியளித்த வசனத்தின் பொருள் என்னவெனில், யாருக்கு பொய்யிலிருந்து உண்மையை பிரித்துணர முடியுமோ, யாருக்கு அவரின் சத்தியவார்த்தை தெரிந்து அதனால் பொய்யர்களை வெல்லுகிறார்களோ அவர்கள் கர்த்தரால் பிரகாசிக்கப்படுவார்கள் என்று பொருள்படுகிறது. இந்த பொய்களிலிருந்து தப்பி உண்மையைக் கண்டுபிடித்தவர்கள், இந்த உண்மையை பிரசங்கித்து பொய்களை மேற்கொள்ளவேண்டும். நற்செய்தியை விசுவாசிப்பவர்களுக்கு தன் மன்னாவை புசிக்கக்கொடுப்பதாக கர்த்தர் நமக்கு உறுதியளித்தார்: “ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக் கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன்.”
மறைவான மன்னாவென்பது கர்த்தரின் வார்த்தையாகும். மறுபுறம், வெள்ளைக் கல்லென்பது நம் பெயர்கள் ஜீவப் புத்தகத்தில் எழுதப்படும் என்பதாகும். கர்த்தர் மக்களுக்களித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்கள் விசுவாசிக்கும் போது, அவர்களின் இருதயங்கள் மாறுதலடைகின்றன. அவர்களுடைய இருதயங்கள் பரிசுத்த ஆவியானவரின் வார்த்தையால் நிரப்பப்படும்பொழுது, வார்த்தையை விசுவாசித்தமையால் தம்மிருதயங்களிலிருந்த அனைத்துப் பாவங்களும் மறைந்து போயின என்று உணர்ந்து கொள்வர். இப்படியாக அவர்கள் நீராலும் ஆவியாலும் சுத்திகரிக்கப் படுவதால், அவர்களின் பெயர்கள் வெள்ளைக் கல்லில் எழுதப்படும்.
அதனைப் பெற்றுக் கொள்கிறவனுக்குத் தவிர வேறுயாருக்கும் அந்த புதிய பெயர் தெரியாதென கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். தம்முடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டவர்கள், தம்மிருதயங்களில் எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டவர்கள், தம்மிருதயங்களில் எந்தப் பாவமும் விடப் படவில்லையெனவும், அவர்களின் பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். வேறுவார்த்தைகளில் கூறுவதானால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது அவர்களின் இருதயங்களிலுள்ள அனைத்துப் பாவங்களையும் எடுத்துப் போட்டதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். சத்தியவார்த்தையாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்து விடுதலைப் பெற்று இப்படியாக மறுபடியும் பிறந்ததினால் தேவனையும் சத்தியத்தையும் குறித்து அவர்களுக்குத் தெரியும். மறுபடியும் பிறக்காதவர்களுக்கு தாம் மறுபடியும் பிறக்க வேண்டியவர்கள் என்பது தெரியாது. ஆனால் மறுபடியும் பிறந்தவர்களால் இவர்களை இலகுவாக பிரித்துணரமுடியும், அவர்கள் கர்த்தரின் மன்னாவை இன்னமும் சாப்பிடவில்லை என்றும், அவர்களின் பெயர் வெள்ளைக்கல்லில் எழுதப் படவில்லையென்பதையும் அவர்கள் அறிவார்கள்.
உண்மையாகவே நீங்க எடுத்துக் கொள்ளப் படுதலை விரும்புகிறீர்களா? நீங்கள் எடுத்துக்கொள்ளப் படவேண்டுமானால் மன்னாவைப் புசிப்பதற்கான தகுதியையும் நீங்கள் பெறவேண்டும். அதாவது நீங்கள் நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறக்கவேண்டும். மன்னாவைப் புசிக்கவேண்டுமானால், உங்கள் விசுவாசத்தினால் பொய்களுடன் போரிட்டு அவற்றை மேற்கொள்ள வேண்டும். கள்ளப்போதகர்கள் பாவிகளுக்கு விடுதலையை எடுத்து வருவதில்லை, ஆனால் அவர்களின் ஆத்துமாக்களையும் பொருட்செல்வத்தையும் நாசம் செய்வர். இன்றைய கிறிஸ்தவத்தில் காணப்படும் இத்தகைய தவறான ஆலயங்களையும், கள்ளத்தீர்க்கதரிசிகளையும், தவறான உழியர்களையும் மேற்கொள்ள அவர்களை எதிர்த்து போராடவேண்டும்.
இயேசு எப்படி நம் பாவங்களை எடுத்துப்போட்டார், அவர் ஏன் ஞானஸ்நானம் பெற்றார், அவர் ஏன் உலகின் பாவங்களை எடுத்துப்போட்டார், அவர் ஏன் சிலுவையில் மரித்தார் அவர் ஏன் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார் என்பதை வேதாகமத்தின் அடிப்படையில் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். இயேசு ஏன் இப்பூமிக்கு மாமிசமாக வந்து இவை யாவற்றையும் செய்தார் என்று தெளிவாக நாம் அறிந்துகொள்வதோடு இயேசு யாரெனவும் அறிந்து கொள்ளவேண்டும். ஆனால் தவறான ஆலயங்கள் இந்த உண்மைகளைப் போதிப்பதற்கு பதிலாக, அங்கு வரும் அனைவைரையும் தம் அதிகாரத்தின்படி “பரிசுத்தவான்கள்” என்றழைக்கின்றனர். “நீங்கள் இயேசுவை விசுவாசிக்கிறீர்களா?” என்று மட்டுமே கேட்கிறார்கள் பதில் “ஆமாம், நாம் விசுவாசிக்கிறோம்” என்றிருந்தால் இந்த தவறான ஆலயங்கள் அவர்களை பரிசுத்தவான்களென அழைத்து, ஒரு ஆண்டுக்குள்ளாகவே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, எல்லாவித காணிக்கைகளையும் கறக்கிறார்கள், இதில் ஆலயத்தின் புதிய பளபளப்பான கட்டிடத்திற்கு நன்றி காணிக்கை, சிறப்பு காணிக்கை, பொருத்தனை காணிக்கை ஆகியவை அடங்கும். பணத்தால் மட்டுமே கொழுத்து, பெரிய பளபளப்பான ஆலயக் கட்டிடத்தைக் கட்டும் பேராசையுடைய இத்தகைய ஆலயங்கள் தவறான ஆலயங்களாகும்.
மன்னாவால் நாம் போஷிக்கப்படுகையில், இத்தகைய தவறான ஆலயங்களுடனும் கள்ளப்போதனைகளை பரப்புபவர்களுடனும் எதிர்த்துப் போராடவேண்டும். இப்போரில் நாம் தோல்வியுற்றால், நாம் கர்த்தரின் பரிசுத்தவான்கள் அல்லவென்று பொருள்படுவதுடன், அவரால் நாம் எடுத்துக் கொள்ளப்படமாட்டோம் என்றும் பொருள்படும். கர்த்தரின் பரிசுத்தவான்களாக இல்லையென்பது அவரின் பிள்ளைகளும் அல்லவென்றும் பொருள்படும்; கிறிஸ்து 100 முறை வந்தாலும் நாம் எடுத்துக்கொள்ளப்படமாட்டோம்.
மத்தேயு 25 பத்து கன்னிகைகளின் கதையை நமக்குக் கூறுகிறது, அவர்களில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்கள் மீது ஐந்து பேர் புத்தியில்லாதவர்கள். தம் விளக்கை எடுத்துச்சென்றும் அத்துடன் எண்ணெய்யை எடுத்துச் செல்லாமல் மணவாளன் வரும் நேரத்தை அறிவித்தபோது எண்ணெய் வாங்கச் சென்ற ஐந்து மணவாட்டிகளின் முட்டாள்தனத்தை நமக்குக் கூறுகிறது. எண்ணெய்யை முன் கூட்டியே ஆயத்தம் செய்த புத்தியுள்ள மணவாட்டிகளாக நாமிருக்கவேண்டும். எண்ணெய்யை ஆயத்தம் செய்ய தேவையான விசுவாசம் என்பதன் மூலமாக, இயேசுவிற்கு முன்பாக மன்னாவை புசிக்கும் தகுதியையும், பொய்யர்களை மேற்கொள்ளவேண்டுமெனவும், வார்த்தையாகிய நீராலும், ஆவியாலும் மறுபடியும் பிறக்கவேண்டுமெனவும் கூறுகிறேன்.
ஒரு பிரசங்கத்தைக் கேட்கும்போது, போதகர் கர்த்தரின் வார்த்தையை பிரசங்கிக்கிறாரா இல்லையா என்று நம்மிடமே கேட்கவேண்டும். கர்த்தர் கூறியபடி, அவருடைய வேலைக்காக ஆலயம் பணத்தை செலவு செய்கிறதா அல்லது தனக்காக செலவு செய்கிறதா என்று நாம் கேட்கவேண்டும். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், உண்மையான கர்த்தரின் ஆலயத்தை நாம் கண்டு பிடிக்கவேண்டும். கர்த்தரின் வார்த்தை மற்றும் அவரின் போதனைகளுக்கு உதட்டளவில் ஆராதனைச் செய்யும் ஆலயங்களைத் தவிர்க்கவும்.
தம் பேச்சிலும் மனம் வருந்துதலிலும் அவர்கள் எத்தனை நல்லவர்களாயிருந்தாலும், அவர்கள் செய்கைகள் அவர்கள் எதனை வேண்டுகிறார்கள் என்பதைக் கூறும் - எல்லாவற்றையும் விட பெரிதான ஆலயக் கட்டிடத்தைக் கட்ட அதிக ஆர்வமுடையவர்களாய் இருக்கிறார்களா; அவர்கள் ஏழைகளைக் கவனிக்கிறார்களா அல்லது பணக்காரர்களுக்கும் மட்டும் விருந்து படைக்கிறார்களா; ஆத்துமாக்களை இரட்சிக்க ஆர்வம் காட்டுகிறார்களா என்று பார்க்க வேண்டும். கர்த்தர் உங்களுக்கு கண்களையும் காதுகளையும் கொடுத்திருப்பதால் உங்களால் பார்த்து எது சரியெனக் கூறமுடியும். உங்கள் ஆலயம் சரியான ஆலயம் அல்ல என்ற முடிவிற்கு வரும்போது, அதனை விட்டு வெளியே வரத் தயங்காதீர்கள், இத்தகைய தவறான ஆலயத்திற்கு செல்வதைத் தொடர்ந்தால். அது நரகம் செல்ல முயல்வதற்கு சமமாகும். அதற்கு பதிலாக உங்கள் வாழ்க்கையை வீசியெறியலாம்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது எத்தனை சிறந்தது என்று அறிவீர்களா? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகிய இந்த உண்மையை அறிந்து அதனை நீங்கள் உங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொண்டால் நீங்கள் புதிய முழு மனிதனாவீர்கள். பூமிக்குரியவர்கள் இப்போது பரலோகத்திற்கு உரியவர்களாயினர், பிசாசுகளினால் துன்புறுத்தப்பட்டவர்கள் இப்போது விடுதலையடைந்தார்கள்.
தம்மிருதயங்களில் பாவமுள்ளவர்களின் ஆத்துமாக்களுக்குள் பிசாசுகள் புகுந்து துன்புறுத்தும், இப்படியாக தம் பாவங்களினால் கட்டப்பட்டுள்ளார்கள். ஆனால் தேவன் இவ்வுலகிற்கு வந்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டார். நம்முடைய பாவங்களை முற்றிலுமாக அவர் எடுத்துப்போட்டதால், பிசாசுகளினால் நம் ஆத்துமாக்களைத் துன்புறுத்தவோ அவற்றைத் திருடவோ முடியாது. இப்படியாக நீங்கள் இந்த நற்செய்தியை அறிந்து அதனை விசுவாசிக்கும்போது, பிசாசுகள் துரத்தப்படும், உங்கள் வாழ்வு மாறிப்போகும்.
வேறுவார்த்தைகளில் கூறுவதானால், உலகின் அடிமைகள் அடிமைத் தனத்திலிருந்து விடுதலையானார்கள். பாவிகளை நீதிமான்களாக்கி, பூமிக்கு உரியவர்களை பரலோகத்திற்கு உரியவர்களாக்கும் அதிசயமான செய்கையைக் கர்த்தர் செய்தார், தேவன் திரும்பி வரும்போது, அவர்களைத் தனது ராஜ்யத்திற்கு எடுத்துச் செல்வார்.
நமது பூலோக வாழ்க்கை நமது முடிவல்ல. தமது சாயலாகவே நம்மைப் படைத்த கர்த்தர் சில காலம் மட்டுமே வாழும்படி நம்மை இப்பூமியில் விட்டுவிடவில்லை. மாம்சத்தின் ஜீவன் மிகவும் குறுகியது. பாடசாலையை விட்டு நாம் வெளியேறும்போது 20 வயதைத் தாண்டியிருப்போம். 30 வயதுகள் கடக்கும் போது நமது வாழ்விற்கான அடித்தளத்தை அமைத்திருப்போம், அடித்தளம் தயாராகி கட்டிடம் கட்டத்தொடங்கும்போது 40 களையே 50களையோ தொட்டிருப்போம். நாம் இனி கஷ்டப்படாமல் வாழ்வை அனுபவிப்போம் என்று எண்ணும் காலம் வருகையில் நமது வாழ்வுகாலம் முடிந்து போய், முடிவினைச் சந்திக்கிறோம். பூக்கள் காலையில் பூத்து சாயங்காலம் உதிர்ந்து போவதைப் போல், நம் வாழ்க்கையில் பிடிமானம் கிடைத்திருக்கிறது என நாம் எண்ணும்போது, நமது காலம் சென்றுவிட்டிருப்பதை நாம் அறிந்துகொள்கிறோம், அத்துடன் நெருங்கி வரும் முடிவினை பார்த்துக் கொண்டிருப்போம்.
குறுகிய வாழ்வு இத்தகையது. இதில் மிகவும் துரதிருஷ்டவசமானது என்னவெனில் அநேக மக்கள் வாழ்வின் குறுகிய நேரத்தை உணர்ந்துகொள்வது கூட இல்லை. ஆனால் நம்முடைய மாமிசத்தின் முடிவு நம்முடைய முடிவல்ல. அதுவே நம் ஆவிக்குரிய வாழ்வின் தொடக்கமாயிருக்கிறது. ஏன்? நம்முடைய பூலோக வாழ்க்கைக்கு சமன் செய்யும் விதம் போல், கர்த்தர் நமக்காக ஆயிரவருட அரசாட்சியை மட்டுமின்றி, புதியவானத்தையும் புதிய பூமியையும் கூட படைத்துள்ளார், அங்கு நாம் நித்தியமாக வாழ்வோம். இது கர்த்தரின் ஆசீர்வாதமாகிய நித்திய ஜீவனாகும், அவருடைய நீர் மற்றும் ஆவியாகிய வார்த்தையை விசுவாசித்து மறுபடியும் பிறந்தவர்களுக்கு மட்டும் இது உரித்தாகிறது.
நீங்கள் நிறைவான மன்னாவை சாப்பிடும்போதும், உங்கள் பெயர் வெள்ளைக்கல்லில் எழுதப்பட்டிருக்கும் போதும் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுவீர்கள். தன் மன்னாவை புசிப்பவன் மட்டுமே மகா உபத்திரவத்தின் போது சாத்தானை மேற்கொள்ள முடியுமெனவும், மேற்கொண்டவர்களின் பெயர்கள் மட்டுமே வெள்ளைக் கல்லில் எழுதப்படும் எனவும் கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். ஆகவே, ஜெயங்கொள்ளாதவர்கள் எடுத்துக்கொள்ளப் படுவதையோ மறுபடியும் பிறப்பதையோ கனவிலும் காணக்கூடாது.
விலைமதிப்புள்ள எதையாவது பெறவேண்டுமானால் அநேக தியாகங்களைச் செய்யவேண்டியிருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் தங்கமாகும்; தங்கத்தைக் கண்டுபிடித்து அதனை பிரித்தெடுப்பதற்கு அதிக அளவு முயற்சியும் நேரமும் தேவைப்படுவதோடு அநேக ஆபத்துக்களும் உண்டு. ஒரு சிறிய துண்டு தங்கத்தைக் கண்டு பிடிக்கும் முன்னதாக, தங்கத்தைப் பிரித்தெடுப்பதற்கு அநேக மக்களின் அதிக உழைப்புத் தேவை. ஒரு லாரி மண்ணை நாள் முழுவதும் அரித்தால் சிறிய அளவு தங்கமே கிடைக்கும். மேலும் இதனை எல்லா ஆறுகளிலும் செய்யமுடியாது, எந்த ஆற்று மண்ணில் தங்கம் இருக்கிறது என முதலில் கண்டுபிடிக்கவேண்டும். வேறுவார்த்தைகளில் கூறுவதானால் தங்கத்தைக் கண்டிபிடிக்க மிகவும் உழைக்க வேண்டும், சில நேரம் உங்கள் உயிருக்கும் ஆபத்தேற்படலாம். அப்படியானால் மக்கள் ஏன் இத்தனைக் கடினமாக தங்கத்தைத் தேடுகிறார்கள்? தங்கமானது மிகுந்த விலை மதிப்புடையது என்று அவர்கள் எண்ணுகிறார்கள். தம் வாழ்வைக் கொடுப்பது சரியே என்றும் கூறுகிறார்கள்.
தங்கத்தை விடவும் வெள்ளியை விடவும் விலையேறப்பெற்றது யாதெனில் நாம் கர்த்தரின் பிள்ளைகள் ஆவதேயாகும். தங்கம் உங்கள் சரீரத்திற்கு தற்காலிகமான சந்தோஷத்தை எடுத்து வரலாம், ஆனால் கர்த்தரின் பிள்ளையாவது முடிவில்லாத நித்திய மகிழ்ச்சியை உங்களுக்கு எடுத்துவரும். முடிவு காலத்தில் எடுத்துக் கொள்ளப்படவும், செல்வத்தையும் செழிப்பையும் அனுபவிக்கவும், ஆயிரவருட அரசாட்சி மற்றும் புதியவானம் புதிய பூமியில் மரியாதைப் பெறவுமான இத்தகைய வாழ்வை நித்தியமாகப் பெற பூமியின் பொய்யர்களுடன் போரிட்டு, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து உங்கள் விசுவாசத்தை பாதுகாத்து வெற்றிபெறவேண்டும்.
நம்முடைய இருதயங்களைத் திருடவும், நம் விசுவாசத்தை இழந்து போகச் செய்யவும் அநேக பொய்கள் இவ்வுலகில் சந்தர்ப்பங்களை எதிர்பார்த்திருக்கின்றனர். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம்மிருதயங்களில் சத்தியத்தை வைத்துள்ளவர்களுக்கு தம் விசுவாசம் எத்தனை விலைமதிப்புடையது என்று தெரியும். இவ்விசுவாசத்தின் மதிப்பு எத்தகையது என்று அவர்களுக்குத் தெரியுமாகையால் அதனைப் பரிக்க முயலும் கள்ளப்போதகங்களுடன் அவர்கள் எதிர்த்து போரிடுகின்றனர். எத்தனை மக்கள் இந்த சத்தியத்தை தேடியும் அதனைக் காணாதிருக்கிறார்கள் என்று நாமறிந்தால், இந்த விசுவாசமே கல்யாணப்பந்திக்கான நமது ஆடையெனவும், இதுவே நித்திய வாழ்வாகிய ஆசீர்வாதத்தைத் தருமெனவும் நாமறிந்தால், இதனை முற்றிலும் நமதாக்கி, யாரும் இதனை நம்மிடமிருந்து பிரித்து செல்லாமலும் பார்த்துக்கொள்வோம். இத்தகைய விசுவாசமே போராடுவதும் வெற்றிபெறுவதுமான விசுவாசமாகும்.
வெளிப்படுத்தலின் வார்த்தையைக் குறித்து சரியான அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் பரப்புவது சரியானது என உணர்ந்தேன். இப்படிச் செய்தால் விலையேறப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உங்களால் பாதுகாக்க முடியும் என்று நிச்சயப்ப்படுத்த முடியும் -ஏனெனில் மக்களை மட்டுமல்லாது மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்களையும் குழப்ப அநேக கள்ளப்போதகர்கள் வெளிப்படுத்தலின் வார்த்தையை உபயோகிப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் இறுதி காலத்தில் சரியான அறிவுடனும் விசுவாசத்துடனும் விசுவாச வாழ்வை வாழுவதை உறுதிசெய்ய வெளிப்படுத்தலின் வார்த்தையை என் பிரசங்கங்களிலும் நூல்களிலும் போதித்து வருகிறேன்.
மிகமிக முக்கியமான சிலவற்றை வெளிப்படுத்தின விசேஷம் அளிக்கிறது. கர்த்தரின் மறைவான மன்னாவை சாப்பிட முடியாதவர்களுக்கும், பரிசுத்த ஆவியானவர் தம்மிருதயங்களில் இல்லாதவர்களுக்கும் வெளிப்படுத்தலின் வார்த்தை எதையும் வெளிப்படுத்துவதில்லை. முடிவுகாலத்தின் அடையாளங்களிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்வரை, ஒவ்வொரு கிறிஸ்தவர்களினதும் நம்பிக்கையிலிருந்து புதியவானம் புதிய பூமி வரை, வெளிப்படுத்தின வார்த்தையில் சிறப்புத் திட்டமொன்று விவரிக்கப்பட்டுள்ளது. கர்த்தரின் ஞானம், தன் இரகசியங்களை எல்லோரும் அறியச் செய்யாது என்பதால், வெளிப்படுத்தல் கடினமான சொற்களாகவே இருக்கிறது, அதனை எல்லோராலும் அறிந்துகொள்ளமுடியாது. கர்த்தரின் மன்னாவால் போஷிக்கப் பட்டவர்க்ளாலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறந்தமையால் வெள்ளைக் கல்லில் தம் பெயர்கள் எழுதப்பட்டவர்களாலும், பொய்களை மேற்கொள்பவர்களாலும் மட்டுமே வெளிப்படுத்தலின் வார்த்தையை புரிந்துகொள்ள முடியும்.
இதனால் தான், மறுபடியும் பிறவாத அவர்கள் தம் அறிவின்மையால் உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படுதல், உபத்திரவத்திற்குப் பின் எடுத்துக்கொள்ளப்படுதல் ஆகியவற்றைப் பேசுகிறார்கள். இதனால் தான் இன்று ஆயிரம் வருட அரசாட்சி வெறும் அறிகுறியே என்று வாதிடும் சில மக்கள் இருக்கின்றனர். கர்த்தரின் வார்த்தையே சத்தியமாகும், மகா உபத்திரவம் இல்லாது எடுத்துக்கொள்ளப்படுதல் இல்லையென அது தெளிவாகக் கூறுகிறது. மகா உபத்திரவக்காலத்தின் ஏழாண்டுகளில் அரைவாசி கடந்த பிறகு, பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக மரித்தபிறகு அவர்களின் உயிர்த்தெழுதலுடன் எடுத்துக்கொள்ளப் படுதல் நிகழும் என அது நமக்கு கூறுகிறது.
அன்றாட வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது -விமானம் செலுத்துபவர்கள் திடீரென காணாமல் போவது, உலகம் முழுவதும் தாய்மார்கள் சாப்பிட்டு மேசையிலிருந்து காணாமற்போவது- நான் கூறுவதற்கு மன்னிக்கவும், அப்படி நடக்கவே நடக்காது. மாறாக, மிகப்பெரிய விபத்துகள் உலகில் நடக்கும் போதும், பூமியதிர்ச்சிகள் நிகழும்போதும் வானத்திலிருந்து விண்கற்கள் விழும்போதும், பூமி பிளக்கும் போதும் எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழும். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், அமைதியான ஒரு நாளில், நண்பகலின் போது எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழாது.
விண்கற்கள் இன்னமும் விழவில்லை, உலகத்தின் மூன்றிலொரு பாகம் இன்னமும் எரிக்கப்படவில்லை, கடல் இன்னமும் இரத்தமாக மாறவில்லை. இதிலிருந்து என்ன கூறுகிறேன்? இப்போதுள்ள காலம் எடுத்துக்கொள்ளப்படுவதற்கான காலம் இல்லை என்று கூறுகிறேன். எடுத்துக்கொள்ளப்படுதல் நடக்கும் முன்பாக நம்மால் புரிந்துகொள்ளக் கூடிய அடையாளங்களை அளிப்பதாக அவர் கூறுகிறார். இந்த பெரும்விபத்துகள் உலகின் மீது அடையாளமாக விழும் -கடலின் மூன்றிலொரு பாகமும் நதிகளில் மூன்றிலொரு பாகமும் இரத்தமாகும், காடுகளில் மூன்றிலொரு பாகம் எரிந்துபோகும், விண்கற்கள் விழும், நீர் குடிக்கமுடியாததாகும், இது போன்று நிறைய சம்பங்கள் நடக்கும்.
இத்தகைய கொடூர சம்பவங்களால் உலகம் மூடப்படும்போது ஒழுங்கைக் கொண்டு வரும்பொருட்டு அந்திகிறிஸ்து தோன்றுவான். முதலில் உலகின் குறிப்பிடத்தக்கத் தலைவனாகத் தோன்றி, காலஞ்செல்லச் செல்ல கொடுங்கோலனாகி உலகம் முழுவதும் தம் முழு வல்லமையினாலும் ஆளுவான். அந்திகிறிஸ்துவின் கொடுங்கோலாட்சி பூமியில் நிலைநிறுத்தப் பட்டபிறகு தம் பரிசுத்தவான்களை எடுத்துக்கொள்வதற்காக தேவன் பூமிக்கு வருவார் என்று வேதாகமம் நமக்குக் கூறுகிறது. மிகப்பெரிய இயற்கையின் பேரழிவுகள் நிகழும் முன்னமும், அந்திகிறிஸ்து தோன்றுவதற்கு முன்னமும் எடுத்துக்கொள்ளப் படுதல் நிகழாது.
வேறுவார்த்தைகளில் கூறுவதானால், கர்த்தர் கூறிய இந்த அடையாளங்கள் இது வரை நிகழாததால், நாம் எடுத்துக்கொள்ளப்படுவோம் என்றெண்ணி தம் வேலைகளை விட்டுவிடுவதும், பாடசாலைகளுக்கு செல்லாமலிருப்பதும், தம் வாழ்வின் கடமைகளை முற்றிலுமாக நிறுத்திவிடுவதும் தவறானதாகும். இப்படியாக நீங்கள் வஞ்சிக்கப்படலாகாது, இது சாத்தானின் பொய்க்கண்ணீருக்குள் விழுந்துபோவதாகும்.
இத்தகைய கள்ளப்போதனைகள் ஏற்பாடு செய்துள்ள பொறிகளையெல்லாம் எதிர்த்து போரிடவேண்டும். கள்ளப் போதனைகளை மேற்கொள்ளும் ஒரே விசுவாசம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசமேயாகும். இயேசுவின் ஞானஸ்நானமே தம் அனைத்துப் பாவங்களையும் எடுத்துப் போட்டது என்று விசுவாசிப்பவர்கள் மட்டுமே பாவக் கட்டுகளிலிருந்து விடுதலையாவார்கள். இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் நம் பாவங்களைத் தன் மீது ஏற்றுக் கொண்டதாலும், நம் பாவங்களை கழுவிய தம் சொந்த இரத்தத்தினால் அவர் நம்மை வாங்கியதாலும், தேவன் நமக்காக செய்த இவற்றையெல்லாம் விசுவாசிப்பதால் நாம் அவரின் நிறைவான இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டோம், இது விசுவாசத்தினாலேயே நடக்கிறது. இந்த வார்த்தையை விசுவாசித்தவர்கள் கர்த்தரின் பிள்ளைகளானார்கள். அவர்கள் கர்த்தர் ஏற்படுத்திய எல்லா திட்டங்களிலும் வெற்றி பெறுவார்கள்.
மறுபுறம், தாம் இயேசுவை விசுவாசிப்பதாகக் கூறினாலும் தம்மிருதயங்களில் பாவங்களுடனிருந்து, தேவனுக்கு ஊழியம் செய்வதில் தம் சொந்த பேராசைகளை மட்டுமே தேடும் பொய்யர்களுக்கு காத்திருக்கும் ஒன்று, சாத்தானுடன் சேர்ந்து அவர்களும் தண்டனை அனுபவிப்பதே. இதனால் தான் நம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது விலையேறப்பட்டது. அதனை அறிந்தவர்களாலும் உண்மையான நற்செய்தியையும் தவறான நற்செய்தியை பிரித்துணர்பவர்களாலும் மட்டுமே கர்த்தரின் மறைவான மன்னாவை சாப்பிடமுடியும், முடிவுகாலத்தில் அவர்கள் எல்லாப் பொய்களையும் மேற்கொள்வதோடு, ஆயிரவருட அரசாட்சிக்குள்ளும், புதியவானம் புதிய பூமிக்குள்ளும் பிரவேசிப்பார்கள். உங்களை இரட்சிப்பிற்கு உள்ளாக்கும், நம்பிக்கையளிக்கும், நித்தியவாழ்வினால் ஆசீர்வதிக்கும், அது சத்தியம் என்று வார்த்தையை நீங்களே காணுங்கள். அதனை அறிந்து அதில் விசுவாசமாயிருங்கள் வெற்றிக்கான விசுவாசம் இதுவே.
இப்போரில் தோல்வியடைவது வெறும் தோல்வி மட்டும் இல்லை, அது நாம் நரகம் செல்ல வேண்டியிருப்பதாகப் பொருள்படுவதால், ஆவிக்குரிய போரில் நாம் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது. வேறு சண்டைகளில், இழப்பிலிருந்து நாம் மீளுவோம், ஆனால் இந்த விசுவாசப்போரில் மீளுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆகவே, எது சத்தியமெனவும், உங்கள் சிந்தனைகள் எவையெனவும், உங்கள் மாம்சத்தின் இச்சைகளையும், கள்ளப்போதகர்களின் பொய்களையும் பிரித்துணர்ந்து, வார்த்தையின் வெளிச்சத்தால் காலத்தைக் குறித்த அறிவைப் பற்றிக்கொள்வதற்கேதுவாக உங்கள் விசுவாசத்தை ஆயத்தம் செய்யவேண்டும்.
கர்த்தர் நமக்காக ஏழு எக்காளங்கள் மற்றும் ஏழு பாத்திரங்களின் வாதைகளை ஏற்படுத்தியதோடு, மகா உபத்திரவத்தையும் நம்மீது அனுமதித்தார். உலகம் பெரிதான இயற்கை அழிவுகளால் தாக்கப்படும்போது -பெரிதான தீ, விண்கற்கள் விழுவது, கடல், ஆறு மற்றும் ஊற்றுகள் இரத்தமாவது ஆகியவை நடக்கும்போது- அந்திகிறிஸ்து தோன்றுவான், ஏழாண்டு கால மகா உபத்திரவத்தின் தொடக்கத்தை இது குறிக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். இரத்தசாட்சி, உயிரோடெழும்புதல், பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படுதல் ஆகியவையெல்லாம் கடைசி எக்காளம் ஊதப்படுகையில், ஏழு பாத்திரங்கள் வாதைகள் தொடங்குமுன் ஏழு எக்காளங்களின் வாதைகளுக்குப் பின்னால் நடக்கும்.
கர்த்தரின் நான்காம் முத்திரை உடைக்கப்படும்போது, பரிசுத்தவான்கள் தன்னை ஏற்றுக்கொள்ளவேண்டுமென அந்திகிறிஸ்து கேட்பான். இந்நேரத்தில், ஜீவ புத்தகத்தில் தம் பெயர் எழுதப்பட்டவர்கள் -அதாவது, மன்னாவைச் சாப்பிட்டு, தம் பெயர்கள் வெள்ளைக் கல்லில் எழுதப்பட்ட மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்கள் - தைரியமாக இரத்தசாட்சியாக மரிப்பார்கள். இந்த கடைசியானதும் பெரிதானதுமான விசுவாசமே தேவனுக்கு மிகவும் அதிக மகிமையை அளிக்கும். இது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து அதன் படி வாழ்ந்தவர்களின் தைரியமான விசுவாசமாகும். சுருக்கமாகக் கூறினால், இவ்விசுவாசத்தின் மூலமே நம் ஆவிக்குரிய போரில் நாம் வெற்றிப் பெற்றவர்களாக முடியும்.
எப்படியாயினும் நம் பகைவர்களை மேற்கொள்ள வேண்டும். நாம் மறுபடியும் பிறந்தபிறகு, பொய்யர்களுடன் தொடர்ந்து போரிட்டு, அவர்களை வெற்றிக்கொள்ளவேண்டும். இப்படிச் செய்வதற்கு கர்த்தரின் மன்னாவை சாப்பிட்டு, முடிவுவரை நம் தேவனின் வார்த்தையை பிரசங்கிக்கும் ஒரு வாழ்வை வாழவேண்டும். ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு தம் ஆசீர்வாதத்தையும் மகிமையையும் அளிப்பதாக கர்த்தர் உறுதி கூறினார். கர்த்தரின் வார்த்தையின் மீதான விசுவாசத்தின் மூலம் எல்லாப் பொய்களையும் மேற்கொண்டதால், கர்த்தரின் மறைவான மன்னாவைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு, விசுவாசிகளின் பெரிதான நம்பிக்கையாகிய வானத்திற்கு எடுத்துக் கொள்ளப் படத்தேவையான விசுவாசம், ஆயிரவருட அரசாட்சி புதியவானம் புதிய பூமி ஆகியவற்றைக் குறித்த உறுதி ஆகிய -இவையெல்லாம் அனுமதிக்கப்படும்.
எது உண்மையாகவே விலையேறப்பட்டது என அறிந்தவர்கள் அதனைப் பெற எல்லாவற்றையும் விற்று அதனை பராமரிக்க எத்தியாகங்களையும் செய்வர். இத்தியாகங்கள் நமக்கு வலியாகத் தோன்றாமல் பெரும் மகிழ்ச்சியாக தோன்றுவதாலும், முடிவு காலத்தில் எல்லாவற்றையும் கொடுக்கப்போகும் விலையில்லா பொக்கிஷமாய் இது இருப்பதாலும், அதனைக் காப்பதற்கு நாம் எதனை இழந்தாலும் அது பெறுமதி உள்ளதே.
ஆயிரவருட அரசாட்சி, புதியவானம் புதிய பூமி ஆகியவை மீது நீங்கள் தொடர்ந்து விசுவாசமுள்ளவர்களாய், இந்த நம்பிக்கையினால் நம் பகைவர்களை மேற்கொண்டு, பெருமகிழ்சியுடனும் ஆனந்தத்துடனும் முடிவில் வெற்றி பெற்றவர்களாவீர்கள் என்று விசுவாசித்ததோடு, அதற்காக ஜெபிக்கவும் செய்கிறேன்.