(வெளி 2:18-29)
தியத்தீரா சபை கர்த்தரின் செய்கைகளை அன்புடனும் விசுவாசத்துடனும் பொறுமையுடனும் செய்தது, அதன் செய்கைகள் காலஞ்செல்லச் செல்ல இன்னமும் சிறந்ததாயிற்று. அதேசமயம், அச்சைபையானது தீய பெண் தீர்க்கதரிசியினால் வாதைகளுட்பட்ட ஒரு சபையாகும். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், இதன் தவறு என்னவெனில், இந்த மனந்திரும்பாத பெண் கள்ளத் தீர்க்கதரிசியினால் அதன் சில உறுப்பினர்கள் சிலை வணக்கத்தையும் விபசாரம் செய்யும் பாவத்தையும் செய்தனர். இதனால் தேவன் தியத்தீரா சபையானது மனந்திரும்பி, இறுதிவரை அதன் முதல் நேசத்தைக் கடைப்பிடிக்குமாறு கூறினார். முடிவுவரை தம் விசுவாசத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு தேசங்களின் மீது அதிகாரத்தையும் விடிவெள்ளி நட்சத்திரத்தையும் தருவதாக தேவன் உறுதி கூறினார்.
யேசபேலின் பாகால்
புறஜாதி இளவரசியான யேசபேல் ஆகாப் ராஜாவின் மனைவியாகியபோது பாகாலையும் இஸ்ரவேலுக்கு எடுத்து வந்தாள். (1 ராஜாக்கள் 16:31). பாகால் என்பது சூரியக் கடவுளாகும், இச்சிலையை செல்வம் தேடும் பொனீசியர்கள் வணங்கினர். இத்தெய்வத்தின் சிலை செதுக்கப்பட்டு வணங்கப்பட்டது, அதனைப் பின்பற்றுபவர்கள் தம் குடும்பமும் நிலமும் விளைச்சலுடையதாயிருக்க வேண்டினார்கள். இது உலகம் முழுவதும் பூமியையும் இயற்கையையும் ஆராதிக்கும் பாகானின் பொதுவான பழக்கத்தைப் போலிருந்தது. உதாரணமாக, ஒரு பெரிய கல்லில் ஒரு தெய்வத்தைச் செய்து அதனை தெய்வமாக வணங்குவது புறமதத்தினரின் இயற்கையை வழங்கும் பழக்கமாயிருந்தது. பேந்தீயிசத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இத்தகைய மதப்பழக்கமும் விசுவாசமும் இருந்தது.
யேசபேல் இந்த புறமதத்தினரின் மதத்தை அறிமுகப்படுத்தியதால் பாகால் இஸ்ரவேல் மக்களின் சிலை வணக்கத்திற்கான மிகப்பெரிய தெய்வமாகிற்று. கர்த்தராகிய யெகோவை மட்டுமே வணங்கிப் பழக்கப்பட்டிருந்த ஆகாப் ராஜா, புறஜாதிப் பெண்ணான இவளை திருமணம் செய்ததால் பாகாலை ஆராதிக்கலானான். அநேக இஸ்ரவேலர்கள் அவனின் காலடிகளைத் தொடர்ந்தனர், அவர்கள் தம் உண்மைக் கடவுளைக் கைவிட்டு, பாகாலை அதாவது சிலையை வணங்கினர்.
கள்ளப் பெண்தீர்க்கதரிசியாகிய யேசபேலின் விசுவாசத்தை சபைக்குள் அனுமதித்தமைக்காக, கர்த்தர் தியத்தீரா சபையின் ஊழியனைக் கண்டித்தார். யேசபேலிற்கும் அவளைப் பின்பற்றுவோருக்கும் கட்டளையிட்ட கர்த்தர், அவர்கள் கீழ்ப்படியாவிட்டால் மகாஉபத்திரவத்தையும் அழிவையும் அவர்கள் மீது எடுத்து வருவதாக எச்சரிக்கை செய்தார்.
செல்வமும் பொருள்சேமிப்பும் அதன் நோக்கமாயிருப்பதை உண்மையான கர்த்தரின் ஆலயம் அனுமதிக்கக்கூடாது என்று இது பொருள்படும். இஸ்ரவேலர்கள் தம் விளைச்சலுக்கும் செழிப்புக்கும் சூரியக்கடவுளாகிய பாகாலை வணங்கியதுபோல, இந்நாளின் விசுவாசிகள் உலகைத் தமது கடவுளாக வணங்கக் கூடாது என்பது இதன் அர்த்தமாகும்.
3 யோவான் 1:2 கூறுகிறது, “பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்” அப்போஸ்தலனாகிய யோவானின் விசுவாசத்தை நோக்கினால், அவனுடைய முதல் நோக்கமெல்லாம் ஆவிக்குரிய செழுமையிலிருந்ததை நாம் காணலாம். யோவானின் ஆவிக்குரிய செழுமையின் நோக்கத்தை மற்ற காரியங்கள் பின்பற்றின, அவை அதற்கு முன்பானதாக வரவில்லை. அப்படியானால், இன்றைய உலகின் விசுவாசம் எப்படி மாறியது? மாமிசத்தின் ஆசீர்வாதங்களை மட்டுமே தேடும் விசுவாசமாக அது கெட்டுப்போனது, மற்றெந்த ஆவிக்குரிய நலன்களையும் நோக்காமல் உலகத்தில் செழிப்பதை மட்டுமே விசுவாசத்தின் முன்னோடியாகக் கொண்டுள்ளது. தம் ஆத்துமாக்களை வளப்படுத்துவதற்காக இயேசுவை விசுவாசிக்காமல், தம்முடைய மாமிசத்தை மட்டும் அநேகர் வளமைப் படுத்துகின்றனர்.
போதைப் பொருட்களின் விஷத்தைப் போன்ற அநேக மோசமான மத பழக்கங்கள் நம்மைச் சுற்றிலுமிருக்கின்றன, அவர்கள் அவற்றை வணங்கினால் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் அளிப்பதாக அவை கூறுகின்றன. யேசபேலின் பாகால் வணக்கம் இத்தகையது. மக்கள் தம் மாமிசத்தின் செழிப்பிற்கும் வளமைக்கும் மட்டுமே இத்தகைய பழக்கங்களை பின்பற்றுகின்றனர்.
இன்றைய மறுபடியும் பிறந்த சபைகள் தம் சபையை விரிவாக்க எண்ணி யேசபேலின் விசுவாசத்தை அனுமதிக்க முயற்சிக்கலாம். ஆனால் இப்படிச் செய்வது கர்த்தரின் கோவிலில் சிலைகளை வைப்பதைப் போன்றதாகும்.
யேசபேல் புறஜாதி தெய்வமாகிய பாகலை இஸ்ரவேலிற்குள் மட்டும் எடுத்து வராமல், யெகோவாவின் கோவிலிற்குள்ளும் அதனை எடுத்து வந்தாள். இத்தகைய விசுவாசம் மாமிசத்தின் செழிப்பையும் உலகத்தின் ஆதாயங்களையும் பின்பற்றும் அதேநேரம் இயேசுவினுள் பாவவிடுதலையையும் தொடர்ந்து கொண்டிருப்பது கர்த்தரின் கண்களுக்கு முன் சிலைகளை வணங்குவதற்கு ஒத்ததாகும்.
உலகிலுள்ள இன்றைய ஆலயங்கள் யோவான் 1:29 இலிருந்து எடுத்து “உங்கள் பாவங்கள் முடிந்துபோயின இயேசு அவற்றை சிலுவையில் எடுத்துப்போட்டார்” என்று கூறுகின்றன. இயேசுவின் ஞானஸ்நானத்தை வெறும் சடங்காக அவர்கள் மாற்றினர், அவரின் ஞானஸ்நானத்தை விசுவாசிக்காவிட்டாலும் இயேசுவை எப்படியோ விசுவாசித்தால் இரட்சிப்பு கிட்டும் என அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் யோவானிடமிருந்து கிறிஸ்து பெற்றுக்கொண்ட ஞானஸ்நானம், உலகின் பாவங்களையெல்லாம் தன்மீது ஏற்றுக் கொள்ளச் செய்த அவரின் ஞானஸ்நானம், தேவைக்கேற்றவாறு சேர்க்கவோ விலக்கவோ கூடிய ஒன்றல்ல. இயேசுவின் ஞானஸ்நானத்தை ஏதோ நற்செய்தியின் சடங்குபோல் பாவித்து அதனைப் பிரசங்கிப்பது பாகாலை வணங்குவதைப் போன்றதாகும்.
அப்படியானால், இயேசுவின் ஞானஸ்நானம் இல்லாமல் இம்மக்கள் ஏன் நற்செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள். அவர்களுடைய விசுவாசம் கர்த்தரின் ராஜ்யத்தின் மேலில்லாமல் இப்பூமியின் உலகச் செல்வங்களின் மீதிருப்பதால் அப்படிச் செய்கிறார்கள். இத்தகைய விசுவாசமுடைய மக்களுக்கும் புறமதத்தினரின் பாகாலை வணங்கியவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை முதலில் விசுவாசித்து, இப்போது சிலுவையின் இரத்தத்தை மட்டும் பிரசங்கிப்பவர்கள் பாகாலை வணங்குவதற்கொத்த கொடிய பாவத்தைச் செய்துகொண்டிருப்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.
இவ்வுலகின் பொருளாதாயங்களை தம் இலக்காக வைத்த அவனாலும்/அவளாலும் சரியான முறையில் ஊழியஞ்செய்ய முடியாது. போதகர்கள் இயேசுவின் ஞானஸ்நானத்தை விட்டுவிட்டு அவரின் சிலுவை இரத்தத்தை மட்டும் விசுவாசித்தால் அவர்களால் இவ்வுலகின் பொருளாதாயங்களைச் சேர்க்கமுடியும். ஆனால் இத்தகைய விசுவாசம் உண்மை விசுவாசமுமில்லை, இத்தகைய பிரசங்கங்கள் உண்மைப் பிரசங்கங்களும் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
வெளிப்படுத்தின விசேஷத்தின் வசனத்தைப் பார்த்தால், யேசபேல் பாகாலை வணங்கியதைப் போல் தியத்தீரா சபையின் தலைவன் தன் ஆலயத்தில் பாகாலை வணங்கியதை நாம் காணலாம்.
மக்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காவிட்டால், பரிசுத்த ஆவியானவரால் அவர்களின் இருதயங்களில் வாசஞ்செய்வதும் இயலாது அவர்களுக்குள் செயல்புரியவும் முடியாது. அப்போஸ்தலனாகிய பவுல் “கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல” என்று கூறுவதைப் போல், ஒருவன் கர்த்தரின் பிள்ளையா இல்லையா என்பது அவனின்/அவளின் இருதயத்தில் கிறிஸ்துவின் ஆவி இருக்கிறதா இல்லையா என்பதிலிருந்து அறியப்படுகிறது. கிறிஸ்துவின் ஆவி இல்லாதவர்கள் கைவிடப்பட்டவர்கள் என்று வேதாகமம் நம்மிடம் கூறுகிறது.
இயேசுவின் ஞானஸ்நானத்தை அறிந்து அதனைப் பிரசங்கிப்பவர்கள்
உலகின் பாவங்களை தன் மீது ஏற்றுக்கொள்ளச் செய்த இயேசுவின் ஞானஸ்நானத்தையும் (நீர்) அவரின் சிலுவை இரத்தத்தையும் ஒருவன் விசுவாசிக்கும்போது, பரிசுத்த ஆவியானவரால் அவனின்/அவளின் இருதயத்தில் வாசஞ்செய்யமுடியும்.
ஒருவன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காமல், இயேசுவிற்காக அவன்/அவள் இரத்தசாட்சியாக மரித்தால், இது உண்மையான இரத்தசாட்சியாயிராமல், அவனின்/அவளின் சொந்தநீதியை நிலைநிறுத்த முயற்சிப்பதாய் மட்டுமே இருக்கும். சிலுவையின் இரத்தத்தை மட்டுமே விசுவாசிக்கும் சில மக்கள், நற்செய்தியைப் பிரசங்கிக்க உலகின் மூலைகளுக்குச் சென்று, தம் ஊழியத்திற்காக தம் முழு வாழ்வையும் கொடுத்து, தம் நம்பிக்கைக்காக சில சமயம் இரத்தசாட்சியாகவும் மரிக்கின்றனர்.
கிறிஸ்துவின் சிலுவை இரத்தத்தை மட்டுமே விசுவாசித்தாலும், கிறிஸ்துவின் அன்பினால் உந்தப்பட்டவர்களாய் மக்களால் இப்படி இரத்தசாட்சியாக மரிக்கமுடியும். ஆனால் மத்தேயு 7:23 நமக்கு கூறுகிறது, அவர்களுடைய எல்லாச் செயல்களையும் காணிக்கைகளையும் தேவனே அங்கீகரிக்க மறுத்தால் அதனால் உண்டாகும் நன்மை என்ன? அவர்கள் எத்தனை ஆர்வத்துடனும் விசுவாசத்துடனும் நற்செய்தியைப் பரப்புகிறார்கள் என்பது பொருட்டல்ல -உதாரணமாக மர்மோன் ஊழியர்களின் செயல்களைக் கூறலாம். அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிக்காததால், அவர்களுடைய முயற்சிகளெல்லாம் வீணே.
யேசபேலின் விசுவாசத்தைப் பின்பற்றுபவர்கள், ஆலயத்தில் ஊற்றெடுத்து அவர்கள் வளருவதைப் பொறுத்திருந்த தியத்தீரா சபையின் ஊழியனைக் கர்த்தர் கண்டித்தார். இன்றைய உலகில் இதுபோன்ற அநேக மதத்தலைவர்கள் இருக்கின்றனர். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சிக்கத் தேடுகிறார்கள். கிறிஸ்துவின் பிறப்பு அவரின் ஞானஸ்நானம், அவரின் சிலுவைப்பாடுகள், அவரின் மரணம் அவரின் உயிர்த்தெழுதல், அவரின் வானம் ஏறுதல் ஆகியவை இவையனைத்தின் மீதும், உண்மையான கர்த்தரின் ஆலயம் விசுவாசத்துடனிருந்து சரியான நற்செய்தியைப் பரப்பவேண்டும். அப்படியில்லை எனில் அவர்களின் விசுவாசம் பயனற்றது.
சில கள்ளத்தீர்க்கதரிசிகள் கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தின் முக்கியத்தை உணராமல், இரட்சிக்கப்பட அவரின் சிலுவை இரத்தத்தை மட்டும் விசுவாசிப்பது போதுமானது என்று கூறுகின்றனர். அவர்கள் நீரின் சத்தியத்தை விட்டுவிட்டதால், கிறிஸ்தவம் கெட்டுப்போய் உலகின் பல மதங்களில் ஒன்றாகிப் போனது. இதனால் தான் கிறிஸ்தவத்தால் உலகின் அனைத்து மக்களுக்கும் இரட்சிப்பை எடுத்து வர முடியவில்லை.
இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் சிலுவை இரத்தமும் இல்லாது, கிறிஸ்தவம் உலகின் நற்பண்புகளை மட்டுமே வலியுறுத்தும் ஒரு மதமாக மாறிவிட்டது. ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பெரும்பான்மையாக மக்கள் கிறிஸ்தவர்களாயிருந்தாலும், கிழக்கத்திய மதங்கள் இப்போது பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன. ஏன்? இத்தகைய மதச் சார்புடைய கிறிஸ்தவத்தால் பாவமன்னிப்பையும் கர்த்தர் மீது உண்மை விசுவாசத்தையும் அளிக்கமுடியாது, இதனால் அநேக மக்கள் கிழக்கத்திய மதங்களின் மந்திர பண்புகளினால் கவரப் படுகின்றனர். அவை மேற்கத்திய மதங்களுக்கு சிறந்த மாற்றாக இருப்பதாக அவர்கள் எண்ணுகின்றனர். ஆனால் கிறிஸ்தவம் மேற்கத்திய மதமுமல்ல கிழக்கத்திய மதமுமல்ல.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியையும் இன்றைய கிறிஸ்தவத்தின் நிலையையும் எண்ணிப்பார்க்கும் நேரம் இதுவே. இன்றுள்ளதைப் போல் கிறிஸ்தவத்தின் சத்தியம் ஏன் மாறிப் போயிற்று எனவும், அநேக மக்களின் கண்களுக்கு கிறிஸ்தவம் ஏன் மதிப்பிழந்தும், அக்கறையில்லாததுமாயிற்று எனவும் நாம் கேட்கவேண்டும். இதற்கான பதில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் காணப்படுகிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறியாமல் இயேசுவை விசுவாசிப்பது கர்த்தரின் கண்களுக்கு முன்பாக பாகாலை ஆராதிப்பதைப் போன்றது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உண்மை இரட்சிப்பின் சத்தியமாக ஏற்க மறுப்பது கர்த்தருக்கு முன்பாக மிகத்தீமையான காரியமாகும்.
இன்றைய கிறிஸ்தவம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் அழகினால் கவரப்படாமல், உலகின் அழகினால் கவரப்பட்டுள்ளது. ஆசியாவின் ஏழுசபைகளும் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்து தேவனுக்கு ஊழியஞ் செய்தன. ஆனால் வேதாகமம் கூறுவதுபோல், அவர்களின் ஒரு பகுதியும் கூட உலகிற்கு உட்பட்டது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது மேலும் மேலும் வெளியேற்றப்பட உலகம் மக்களின் இருதயங்களில் அதன் இடத்தைப் பிடித்தது.
ஒரு ஆலயம் நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறக்கும் நற்செய்தியாகிய இரட்சிப்பின் சத்தியத்தைப் பிரசங்கிக்காமல் சிலுவையின் இரத்தத்தை மட்டுமே பிரசங்கித்தால் என்னவாகும்? இந்தக் கேள்வியை நான் ஏன் எழுப்புகிறேன் என்றால், கர்த்தரின் ஆலயம் கூட, உலகினைப் பின்தொடர்ந்தால், இரட்சிக்கப்பட இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்து அறியாவிட்டாலும் பரவாயில்லை என்றெண்ணிய சிலகாலத்திலேயே உலகத்தினால் அது கெட்டுப்போகும். அதனால் தான் இந்த முக்கியக் கருத்தை கர்த்தரின் வார்த்தையின் மூலம் மீண்டும் ஆராய்ந்து இதனை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இயேசுவின் ஞானஸ்நானம் உள்ளடங்கிய நற்செய்தி, அவரின் ஞானஸ்நானம் இல்லாத நற்செய்தி ஆகியவற்றிற்குள்ள வேறுபாடுகள்
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நீங்களும் நானும் நம் அனைத்துப் பாவங்களுக்கும் பாவமன்னிப்பைப் பெற்றோம். இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே தேவனின் சத்தியமாகும். இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் பரிசுத்த ஆவியானவர் எல்லாம் இரட்சிப்பைக் குறித்து சாட்சி கூறுகின்றன.
1 யோவான் 5:5-7 மற்றும் 1 பேதுரு 3:21 ஆகியவை “நீரே” -அதாவது ஞானஸ்நானமே- நம் இரட்சிப்பின் அடையாளம் என்று கூறுகின்றன, இதே வார்த்தை மத்தேயு 3:15 இலும் காணப்படுகிறது, இங்கு இயேசு தன் ஞானஸ்நானத்தின் மூலம் மனிதர்களின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டார். இயேசுவின் ஞானஸ்நானத்திற்கு இத்தகைய முக்கியத்துவம் இருக்கையில் கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தை அலட்சியப்படுத்தி அவரின் சிலுவை இரத்தத்தை மட்டுமே பிரசங்கிப்பது முழு நிறைவான இரட்சிப்பிற்கு எப்படி வழி நடத்தும்? பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டவர்கள் வார்த்தையை விசுவாசித்து தெளிவான கோட்டை வரைய வேண்டும். அவர்கள் மீண்டும் மீண்டும் தமக்கு நினைவு படுத்திக் கொண்டேயிருந்தால் இக்கோடு தெளிவாகும்.
ஒரு நபரால் அவனின்/அவளின் இரட்சிப்பிற்கு தெளிவான கோட்டை வரைய முடியாவிட்டால், இது அந்நபர் இன்னமும் இரட்சிக்கப்படவில்லை என்பதையே குறிக்கிறது. நம் பாவ விடுதலையானது விசுவாசத்தின் உச்சக்கட்டம் என நினைப்பது மிகவும் தவறானது. பாவத்திலிருந்து விடுதலையாவது ஆவிக்குரிய உறுதி செய்யும் நிலையல்ல, அது நம் விசுவாசத்தின் அடிப்படையாக இருக்கிறது, இது கற்பாறையின் மீது நம் வீட்டைக் கட்டுவதற்கான மிக முக்கியமான ஒரு நிலையாகும்.
இரட்சிப்பானது வெவ்வேறு பிரிவினரும் கூறும் “கொள்கை நிலைப்பாடு” என நாம் எண்ணுவது தவறானது: கொள்கைகள் ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவிற்கு வேறுபடும் ஆனால் வேதாகமத்தின் சத்தியமாகிய, இயேசு நம் எல்லாப் பாவங்களையும் தன் ஞானஸ்நானத்தின் மூலம் ஏற்றுக்கொண்டார் என்பது, ஒரு விசுவாசத்திலிருந்து மற்றொரு விசுவாசத்திற்கு மாறாது. இதனால் தான் நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து பிரசங்கிக்கும்போது இயேசுவின் ஞானஸ்நானத்தின் முக்கியத்தை விட்டுவிடமுடியாது.
கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தை விட்டுவிட்டு “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டி” என்று மட்டும் பிரசங்கிக்கவோ, சிலுவையின் இரத்தத்தை மட்டுமே விசுவாசித்து மக்கள் இரட்சிக்கப்படலாம் என்றோ, நாம் பிரசங்கிக்கக் கூடாது. இயேசுகிறிஸ்துவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்து நம் பாவமன்னிப்பை பெற்றுக்கொள்ளவேண்டும். ஒரு நபரால் கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தை விட்டுவிட்டு அவரின் சிலுவை இரத்தத்தை மட்டுமே விசுவாசித்து அவனின்/அவளின் அனைத்துப் பாவங்களையும் மறையச் செய்யமுடியுமா? மக்கள் சிலுவையின் இரத்தத்தை மட்டுமே விசுவாசித்தால் அவர்களின் மனசாட்சியிலிருக்கும் பாவங்கள் மறைந்து விடுமா? இல்லை தான்!
வேதாகமத்தின் மூலமே, கர்த்தரின் நீதியைக் குறித்தும், நம் பாவங்களைக் குறித்தும், அவற்றிற்கான தீர்ப்பைக் குறித்தும் இயேசு சாட்சி கூறுகிறார். கிறிஸ்துவின் இச்சாட்சியத்தைக் குறித்த உண்மை அறிவில் இருக்கவேண்டிய விசுவாசமே, உண்மையாக நம்மிடம் இருக்கவேண்டிய விசுவாசமாகும். உண்மையான அறிவு என்று எதைக் குறித்து கூறுகிறேன்? கர்த்தரால் தீர்க்கப்படவேண்டிய நம் பாவங்கள் என்னவென்றும், அவரின் நீதியக் குறித்தும், அவருக்கு முன்பாக அழிந்து போகக்கூடிய விசுவாசம் என்னவென்றும் தெளிவான அறிவு நம்மிடம் இருக்க வேண்டும். இதனை அறிந்தாலே நம் உண்மையான அறிவில் இருந்து, உண்மையான விசுவாசத்தால் ஊற்றெடுக்க முடியும்.
நாம் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் போது, இயேசுவின் ஞானஸ்நானத்தை விட்டுவிட்டாலோ அல்லது அவரின் சிலுவை இரத்தத்தை விட்டுவிட்டாலோ, நாம் பிரசங்கிப்பது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே அல்ல. கர்த்தரின் சத்தியத்தை மனித சொற்களாக பாவித்து வெறுமனே இயேசுவை விசுவாசிப்பதன் மூலம், எல்லோராலும் பாவமற்றவர்களாக முடியும் என்று பிரசங்கித்தால், அதனைப் பிரசங்கித்தோரும், அப்பிரசங்கத்தைக் கேட்பவர்களும் பாவிகளாகவே இருக்கவேண்டியது தான். இயேசுவின் நற்செய்தியை நாம் பிரசங்கிக்கிறோமா இல்லையா என்பதற்குள்ள வேறுபாடே, ஆத்துமாக்களை இரட்சிப்பதற்கான வேறுபாடாகும்.
அப்போஸ்தலர்களின் விசுவாசத்தை நாம் பார்க்கும்போது, அவர்கள் சிலுவையின் இரத்தத்தை மட்டும் பிரசங்கிக்காததை நாம் காணலாம். அவர்களெல்லாம் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் இரட்சிப்பிற்கான ஒரே செய்கையாக விசுவாசித்தனர். இயேசு தன் ஞானஸ்நானத்தின் மூலம் நம் பாவங்களையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல், சிலுவையில் அவர் அவைகளைப் பார்த்துக்கொண்டார் என்று வாதிடுவது மனித சிந்தனைகளின் படி தவறானது மட்டுமின்றி, நீர் மற்றும் ஆவியின் சத்தியத்திற்கும் இது பொருந்தாது. இத்தகைய அரைவாசி நற்செய்தியை விசுவாசிப்பதால் அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படமுடியாது.
நற்செய்தியைப் பிரசங்கிப்பவரின் செய்கைகள்
வேதாகமத்தின் படி கூறினால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கிப்பவர்கள் ஆவிக்கு ஜோடிப் பொருத்தம் செய்பவராவர். ஆவிக்குரிய ஜோடிப்பொருத்தம் செய்பவர்கள் தேவனுக்கும் அவரின் மணவாட்டிற்கும் இடையில் பொருந்தத்தக்க வகையில் செயலாற்றவேண்டும். அவர்கள் முதலில் செய்ய வேண்டியது தேவன் பாவிகளுக்காகச் செய்தவற்றை பாவிகளுக்கு பிரசங்கிக்கவேண்டும். அவர்களுடைய பாவங்களைத் தன்மீது ஏற்றுக்கொள்ளும் விதமாக அவர் ஞானஸ்நானம் பெற்றதை அவர்களுக்குப் போதிக்கவேண்டும். மணவாட்டி இதனை விசுவாசிக்கிறாளா இல்லையா என்பதை தெளிவாக பிரித்துணர வேண்டும். மணவாட்டி இதனை விசுவாசிக்கும் போது, பொருத்தம் செய்பவர்களின் பாத்திரம் நிறைவேறுகிறது.
இதனை சாதிப்பதற்கு, மணவாளன் யாரெனவும், அவர் மணவாட்டிகளுக்காகச் செய்தவற்றையும், பொருத்தம் செய்பவர்கள் அவர்களுக்கு விளக்குவது அவசியமானதாகும், இப்படிச் செய்வதால் மணவாட்டி இதனை இலகுவாக புரிந்துகொள்வாள். மணவாளன் தமக்காகச் செய்தவற்றை மணவாட்டிகளின் இருதயங்கள் உணரும்போது, அவர் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் தன் நீராலும் இரத்தத்தினாலும் எடுத்துப் போட்டார் என்பதை பொருத்தம் செய்பவர்கள் போதிக்கவேண்டும்.
மணவாளன் தமக்காகச் செய்த அனைத்தையும் மணவாட்டிகள் ஏற்றுக்கொள்ளும்போது, அவர்கள் கிறிஸ்துவின் மணவாட்டிகள் என்றழைக்கப்படுகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் மணவாட்டிகளானோர், மணவாளன் இந்த வெகுமதியை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் பெற்று வந்தார் என்பதை அறியவேண்டும். அவர்களைத் தன்னுடையவர்களாக்க மணவாளன் அவர்களுடைய எல்லாப் பாவங்களையும் தன் நீர் மற்றும் ஆவியினால் சுத்தம் செய்து, அவர்களைப் பனியைப் போல் வெண்மையாக்கி, தம்முடைய மணவாட்டிகளாக அவர்களை ஏற்றுக்கொண்டார் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவேண்டும்.
அப்போது தான் மணவாட்டிகளால் மணவாளனை மதிக்கவும் நித்தியமாக ஏற்றுக்கொள்ளவும் முடியும். தம் பாவங்களுக்கு பாவமன்னிப்பு பெற்றவர்களே நீதிமான்களாவர். நீதிமான்கள் பாவமற்றவர்கள், பாவமற்றவர்கள் இயேசுகிறிஸ்துவின் மணவாட்டிகள். மணவாட்டிகளுக்கு இத்தகைய விசுவாசம் இருக்கும்போது, அவர்கள் மணவாளனைத் திருமணம் செய்து கொள்ளலாம், மணவாளனால் அவர்களைத் தம் கைகளில் அணைத்துக்கொள்ளமுடியும். எப்படியாயினும், ஆவிக்குரிய பொருத்தஞ்செய்பவர்கள் சத்திய வார்த்தைகளினால் மணவாட்டிகளை ஆயத்தஞ்செய்வதின் மூலமே அவர்களால் அத்திருமணத்தை வெற்றிகரமாக நடத்தமுடியும்.
வெற்றிகரமாகச் செயல்பட ஆவிக்குரிய இரட்சிப்பினை பொருத்தம் செய்பவர்கள், மணவாளனுக்கு எத்தகைய மணவாட்டிகள் தேவை என அறிந்திருக்கவேண்டும். நம் மணவாளனாகிய இயேசுவிடம் பாவமில்லை. அவர் பரிசுத்தவான். இதனாலேயே களங்கமில்லாத பாவமற்ற மணவாட்டிகளை இயேசு எதிர்பார்க்கிறார். இதனால் தான் பொருத்தம் செய்பவர்கள் மணவாளனின் செய்கைகளை உபயோகித்து மணவாட்டிகளைச் சுத்தம் செய்து அவர்களை சரி செய்கிறார்கள். இம் மணவாட்டிகளைச் சரிசெய்வதென்பது, அவர்களின் பாவங்கள் எல்லாம், மணவாளனால் நிறைவேற்றப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் முற்றிலுமாக சுத்திகரித்தப்பிறகு அவரிடம் அழைத்து வரவேண்டுமென பொருள்படுகிறது. அவர்களுடைய பாவங்கள் அரைவாசியே சுத்தப்படுத்தப்பட்ட நிலையில் அவரிடம் அழைக்கப்பட்டு வந்தால் மணவாளன் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார், ஏனெனில் மணவாட்டிகள் எப்பாவங்களும் இல்லாதவர்களாய் இருக்கவேண்டும் என அவர் விரும்புகிறார். இந்தப் பாத்திரத்தைப் பொறுப்பெடுத்துள்ள கர்த்தரின் ஊழியர்கள் ஆவிக்குரிய இரட்சிப்பின் பொருத்தம் செய்பவர்களாவர்.
ஆகவே கர்த்தரின் ஊழியர்கள் மணவாட்டிகளை அவர்களின் ஆவிக்குரிய இரட்சிப்பிற்கு தொடர்ந்து ஆயத்தம் செய்யவேண்டும். அதே சமயம், இன்றைய கிறிஸ்தவத்தில் தம்முடைய பொருளாதாயங்களுக்காக மாமிச பொருத்தம் செய்பவர்கள் எங்கும் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். இந்த மாமிச பொருத்தம் செய்பவர்கள் இயேசுகிறிஸ்துவாலும் தள்ளிவிடப்பட்ட மணவாட்டிகளாலும் அடிக்கப்படுவர். நாம் மாமிச பொருத்தம் செய்பவர்களாக இருக்கக்கூடாது.
சாத்தானின் ஆழத்தைத் தெரிந்துகொள்ளுதல்
கர்த்தரின் மக்கள் மற்றும் அவரின் ஊழியர்களில் அநேகர் சாத்தானின் தந்திரத்தின் ஆழம் தெரியாதவர்களாய் உள்ளனர். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், அநேகருக்கு சாத்தான் எப்படி நம்மை விழப்பண்ணுவான் என்பது தெரியாது. சாத்தான் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை எத்தனையாய் நாசஞ் செய்தான் என்பதையும், அவன் எப்படி விசுவாசிகளைத் தனது தவறான விசுவாசத்தினைப் பின்பற்றச் செய்தான் என்பதையும் அறிந்துகொள்ள அநேக கர்த்தருடைய ஊழியர்கள் தவறினர். அதன் பலனாக, இயேசுவின் விசுவாசிகள் உண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதற்கு பதிலாக நாசமாய்ப்போன நற்செய்தியில் முடிவுற்றனர், கர்த்தருடைய விருப்பத்திற்கு மாறாக அவர்களின் ஆத்துமாக்களும் அழிந்து போயிற்று.
கர்த்தர் நம்மிடம் கூறுகிறார் “யேசபேலின் கொள்கைகளைப் பின்பற்றவேண்டாம். நான் மீண்டும் வரும்வரை உங்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பற்றிக்கொண்டு அதனை விசுவாசத்துடன் பிரசங்கம் செய்யுங்கள். அப்போது நாடுகளுக்கு மேல் உங்களுக்கு அதிகாரத்தைத் தருவேன்.” ஆனால் யேசபேலின் விசுவாசத்தினால் வஞ்சிக்கப்பட்டவர்களை உபத்திரவத்திற்குட்படுத்தி அவர்களை மீண்டும் சரிசெய்வதாக கர்த்தர் கூறுகிறார்.
கிறிஸ்துவின் வருகையின் காலம் வருகையில், இயேசுவின் இரத்தத்தில் மட்டுமே இரட்சிப்பு உண்டு என விசுவாசித்து அதனைப் பிரசங்கித்தவர்கள் தம் விசுவாசத்திற்கு துரோகஞ் செய்வதை நாம் காணலாம். இம்மக்கள் தம் விசுவாசத்தைக் குறித்து பெருமைபாராட்டுபவர்களாகவும், தம் விசுவாசத்திலிருந்து வேறுபட்டோரை விட தாம் பெரியவர்கள் என்றும் எப்போதும் கருதுபவர்களாயிருப்பர். ஆனால் கர்த்தர் அவர்களின் விசுவாசத்தையும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களின் விசுவாசத்தையும் பிரித்தறிகிறார்: “ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப் போல நொறுக்கப்படுவார்கள்.”
நம் தேவன் பூமிக்குத் திரும்பி வருகையில் அநேக கிறிஸ்தவர்கள் மறுபடியும் பிறவாமலேயே தேவனைச் சந்திக்க நேரிடும், அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காததால், தம்மிருதயங்களின் பாவங்களுடனேயே தேவனைச் சந்திப்பர். அதற்கு மாறாக, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்தமையால் தம்மிருதயங்களின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டவர்கள், தேவனுடைய வருகையால் மாற்றமடைந்து அவருடனே கூட அரசாளுவர். இங்கு கூறப்பட்டுள்ளதைப் போல் தேவனுடைய வல்லமையும் அவருடைய மக்களின் வல்லமையும் மண்பாண்டங்களை நொறுங்கச் செய்யும் இரும்புக்கோலாயிருக்கிறது.
தம் முடிவுவரை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள தம் விசுவாசத்தை பாதுகாத்தவர்களுக்கு நாடுகளின் மேல் வல்லமையை கர்த்தர் நிச்சயமாய் வழங்குவார். நம் தேவன் தம் பிதாவிடம் பெற்றுக்கொண்ட வல்லமையை போன்றதே இவ்வல்லமையும் என நம் தேவன் கூறுகிறார். நாம் யேசபோல் மற்றும் பிலேயாமைப் போன்ற கள்ளத்தீர்க்கதரிசிகளுடன் போரிட்டு அவர்களை மேற்கொள்ளவேண்டும், ஆகவே, தேவன் நமக்குத் தரும் வல்லமையுடன் நித்தியமாக நாடுகளை அரசாளுவோம்.
தெளிவான இரட்சிப்பின் சத்தியம்!
பாவிகளை இரட்சிக்க, நம் தேவன் இப்பூமிக்கு வரவேண்டியிருந்தது, மனித குலத்தின் பாவங்களைத் தன் மீது ஏற்றுக்கொள்ள யோவானால் ஞானஸ்நானம் பெறவேண்டியிருந்தது. நம்முடைய பாவங்களை ஏற்றுக்கொள்ள நம் தேவன் ஞானஸ்நானம் பெற்றதால், அவரால் நம் பாவங்களை சிலுவைக்கு சுமந்து அதில் மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழும்ப முடிந்தது. மனிதகுலம் தொடர்ந்து பாவங்களைச் செய்து அவற்றினால் அவதிப்படுவதை காணப் பொறுக்காததினால் இந்த நீதியின் செய்கைகளை அவர் நமக்காகச் செய்தார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியமே உங்களை உங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலைச் செய்யும்.
ஆகவே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் அனைவருக்கும் நம் தேவனால் இரட்சிக்க முடியும். தேவன் யோவானால் ஞானஸ்நானம் பெறவேண்டியிருந்ததால், அவரால் யோவான் 1:29 மற்றும் யோவான் 19:30 இன்படி அதிசயிக்கும் சாட்சியத்தின் படி கனிகளைச் சுமக்க முடிந்தது: “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” மற்றும் “முடிந்தது” என்றெழுதப்பட்டுள்ளது. கர்த்தரின் வார்த்தையின் மூலம் தம் விடுதலையைக் குறித்த உணர்வு இருப்பவர்களிடம், இயேசு தம் ஞானஸ்நானத்தினால் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் பொறுப்பேற்றுக் கொண்டார் என்ற அறிவு இருப்பதால், அவர்களால் அவர் மீது உறுதியுடனிருக்க முடிகிறது. நாம் நம்முடைய சொந்த இருதயங்களை நோக்கவேண்டும், ஏனெனில் நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கவில்லையெனில், அவை நமது இருதயங்களில் தொடர்ந்து இருக்கும்.
இயேசுவின் ஞானஸ்நானத்தை அலட்சியம் செய்து அவரின் சிலுவை இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்போரின் இருதயங்களைக் கூர்ந்து நோக்கினால், அவர்களின் இருதயங்களில் பாவமிருப்பதை அவர்களால் மறுக்கமுடியாததை நாம் காணுகிறோம். இயேசு யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தை நாம் அதிகமாய் கவனித்து அதனை மிக உறுதியாக விசுவாசிக்கவேண்டும். ஏனெனில் கர்த்தரின் வார்த்தையில் எதனையும் சேர்க்கவோ கழிக்கவோ முடியாது. நாம் தவறான நற்செய்திகளுடன் போரிடவேண்டும், ஏனெனில் அவை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களின் விசுவாசத்தை அழிக்கக்கூடும்.
இயேசு தாமே கூறினார், “பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.” இங்கு “புளித்தமாவை” என்பது குடிபாணங்களையோ ரொட்டியையோ தயாரிக்க உபயோகிக்கும் பொருளைக் குறிக்காமல், இயேசுவின் ஞானஸ்நானம் இல்லாத நற்செய்தியைக் குறிப்பதாயிருக்கிறது. இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களை ஏற்றுக்கொண்டு அதனைச் சிலுவைக்கு எடுத்துச் சென்றார் என்றும், அவர் சிலுவையில் அறையப்பட்டு மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தமையால் நம் உண்மை இரட்சகரானார் என்பதை அறிந்து அதனை விசுவாசிக்கவேண்டும்.
இயேசு தனது பங்காக யோவானால் அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் அனைத்துப் பாவங்களையும் பெற்றுக்கொண்டு தன் சிலுவை இரத்தத்தால் அவற்றை மறையச் செய்தார். ஆனால் மக்களின் பங்கில், அவர்கள் இயேசு யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தை விசுவாசிக்காதமையால் அவர்களுடையப் பாவங்கள் அப்படியேதானிருக்க முடியும். இயேசு யோவானால் ஞானஸ்நானம் செய்யப்பட்டது உலகின் அனைத்துப் பாவங்களையும் அவரிடம் கையளிக்கவே என்ற சத்தியத்தை விசுவாசிக்காவிட்டால் அடிப்படையில் அவர்களின் பாவங்கள் துடைக்கப்படாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே, நாம் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசிக்கையில் நம் பாவங்களைச் சுத்திகரித்து நம்மைப் பனியைப் போல் வெண்மையாக்கும் வல்லமையின் நற்செய்தியாகும்.
மேற்கொள்கிறவர்களாக நாமிருப்போமாக
இந்த முக்கிய வசனத்தின் மூலமாக, தியத்தீரா சபைக்கு கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தையைக் கேட்டோம். தியத்தீரா சபையின் ஊழியனுக்கு நாடுகளுக்கு மேல் அதிகாரத்தை அளிப்பதாக கர்த்தர் உறுதியளித்தார். ஒவ்வொரு மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்களும் ஆவிக்குரிய போர்க்களத்தில் ஆவிக்குரிய போரில் வாழுகின்றனர். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தினால் நாம் இந்த ஆவிக்குரிய போரில் எப்போதும் வெற்றிபெறவேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கத் தொடங்கிய அந்நொடியே நம் ஆவிக்குரிய போர் தொடங்குகிறது.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் சாத்தானுடனான தம் போரில் அவனை வெற்றிகொள்ளவேண்டும். நாம் கர்த்தருக்கு முன்பாக நிற்கும் நாள்வரையிலும் சாத்தானுக்கு எதிராக போரிட்டு தவறான நற்செய்திகளை மேற்கொள்வோம். நம் தேவன் உலகிற்கு வந்து, ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்ததன் மூலமாக நம் பாவங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார் என்று வெற்றி பெறுபவர்கள் விசுவாசிக்கின்றனர். மற்றவர்கள் எதைக் கூறினாலும் அவர்கள் அலைபாய்வதில்லை. தம் பாவங்கள் சுத்திகரிக்கப்பட்ட இடம் யோர்தான் நதியெனவும், இயேசு யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் தம் பாவங்களெல்லாம் இயேசுவிடம் கையளிக்கப்பட்டது என்பதும் அவர்களின் விசுவாசமாகும்.
சாத்தானுடன் போரிட்டு அவனை வெல்லுமாறு நம் தேவன் நமக்கு கட்டளையிட்டார். சில வேளைகளில் நம் சரீரம் உழைத்து களைப்படையலாம், அனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதான விசுவாசம் தவறான நற்செய்திகளுடன் நடத்தும் அதன் போரில் தோல்வியடையாது.
தேவன் நமக்குக் கூறுகிறார், “இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” (மத்தேயு 7:13-14) பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியாகிய எலியா 850 பாகாலின் ஆசாரியர்களுடன் போரிட்டு வென்றான்.
தான் பரப்பும் நற்செய்தியைத் தவிர வேறொரு நற்செய்தி இல்லையென அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான் (கலாத்தியர் 1:7). பவுலின் இந்த நற்செய்தி இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவை மீதுள்ள விசுவாசத்தைத் தவிர வேறில்லை. இந்நற்செய்தியை விசுவாசிப்பவர்கள், தாம் மறுபடியும் பிறந்த பிறகும் கூட குறைபாடுகளுடனிருந்தாலும், எத்தகையப் பாவங்களும் அவர்களின் இருதயங்களில் இருக்கப் போவதில்லை. நம் தேவன் தன்னுடைய நீரினால் நம் எல்லாப் பாவங்களையும் கழுவி அவற்றிற்கு தன் இரத்தத்தை அளித்து தீர்ப்பைப் பெற்றார். இயேசுவின் நற்செய்தியும் அவரின் சிலுவை இரத்தமும் அதனை விசுவாசிப்போரிற்கு நித்திய விடுதலையைப் பெற்றுத் தந்தன.
இரட்சிக்கப்பட்டோருக்கு, முடிவுவரை போரிட்டு மேற் கொள்வதற்கான, தம் விசுவாசத்தை பாதுகாக்கும் வல்லமையை தேவன் வழங்கினார்.