(வெளி 3:1-6)
வசனம் இவ்வாறு கூறுகிறது, “ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடே கூட நடப்பார்கள்.” “வெண்மையில்” வாழுவது என்பது கர்த்தரின் நீதியில் அவர்கள் தம் விசுவாசத்தைக் காத்தனர் என்பதாகும்.
தம் விசுவாசத்தை விட்டுவிடாது கடைப்பிடிப்பவர்களுடன் கர்த்தர் நடக்கிறார். அவர் அவர்களைத் தனியே விட்டுவிடுவதில்லை, அவர் அவர்களுடன் எப்போதுமிருந்து அவர்களை ஆசீர்வதிக்கிறார்.
அவர்களே பரிசுத்த ஆவியானவருடன் நடக்கும் இப்பூமியின் நீதிமான்களாவர். கர்த்தர் அவர்கள் பெயரை ஜீவப்புத்தகத்தில் எழுதியதோடு என்றென்றும் வாழும்படி நித்தியஜீவனையும் அவர்களுக்கு வழங்கினார். வெண்மையான நீதியின் ஆடையை அவர்களுக்கு அணிவித்து எப்போதும் அவர்களுடன் இருப்பதால், சாத்தானுடனான அவர்களின் போரில் எப்போதும் அவனை வெற்றிப்பெறுவதை அவர்களுக்குச் சாத்தியமாக்கினார்.
சாத்தானை மேற்கொள்பவர்களில் ஒருவராயிருத்தல்
சாத்தானை மேற்கொள்பவர்களில் ஒருவராயிருப்பதற்கு, தேவன் நமக்களித்த விடுதலையின் வார்த்தையை நாம் விசுவாசிக்க வேண்டும். நாம் வார்த்தைக்கு திரும்பி நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலம் தேவன் எப்படி நம்மை இரட்சித்தார் என்று காண்போமாக.
லூக்கா 10:25-35 ஐ பார்ப்பதிலிருந்து தொடங்குவோமாக அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: “போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார். அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழுஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான். அவர் அவனை நேரக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார். அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான். இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக்கண்டு, பக்கமாய் விலகிப்போனான். அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.”
இவ்வசனங்களில் இரு முக்கிய பாத்திரங்களைக் காண்கிறோம்: இயேசுவும் ஒரு நியாயசாஸ்திரியும் அதுவாகும். சட்டத்தின் மீதுள்ள விசுவாசத்தை பெருமைப் பாராட்டும் வகையில் இந்த நியாயசாஸ்திரி இயேசுவிடம் கேட்டான்: “போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும்?” இக்கேள்வியிலிருந்து எவ்வகையான எண்ணம் உங்களுக்குத் தோன்றுகிறது?
சட்டத்தை எழுத்தின்படி கீழ்ப்படிந்து அதனைப் பின்பற்ற முடியும் என நியாயசாஸ்திரி தன் கேள்வியில் தவறாக எண்ணினான். ஆனால் மக்கள் தம் இருதயங்களிலுள்ள பாவங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு கர்த்தர் மக்களுக்கு தம் சட்டத்தைக் கொடுத்தார். மக்களின் இருதயங்களுக்கு, அடிப்படையான பாவங்களை கர்த்தரின் சட்டம் கூறி, அதனை வெளியரங்கமாக்குகிறது. அவர்களுடைய இருதயங்களில் தீய சிந்தனைகள் இருக்கின்றன, ஒழுக்கமற்ற மனங்கள், கொலைசெய்யும் மனங்கள், திருடும் மனங்கள், கள்ளசாட்சி கூறும் மனங்கள், முட்டாள்தனமான மனங்கள் ஆகியவையும் இன்னபிறவும் உள்ளன.. ஆகவே நியாயசாஸ்திரியின் இருதயத்திலுள்ள பாவங்களைச் சுட்டிக்காட்ட நம் தேவன் திருப்பிக்கேட்டார் “நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன”
நியாயசாஸ்திரியின் இருதயத்தில் அடிப்படை பாவம் இருப்பதை அவன் புரிந்துகொள்ளவேண்டுமென நம் தேவன் விரும்பினார். “நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று இயேசுவிடம் திமிராகக் கேட்ட நியாயசாஸ்திரி தம் சொந்த நீதியை பெருமைப்பாராட்டினான். அவனுடைய வார்த்தைகளிலிருந்து “இதுவரை சட்டத்தை நன்கு கடைப்பிடித்தேன், எதிர்காலத்திலும் இதனைக் கடைப்பிடிப்பேன்” என்று நியாயசாஸ்திரி நினைத்ததை நாம் காணலாம்.
கர்த்தர் கொடுத்த சட்டத்தை அவரால் மட்டுமே கடைப்பிடிக்கமுடியும், யாராலும், ஒரு தனி மனிதனால் கூட அவரின் சட்டத்தை முற்றிலுமாகக் கடைபிடிக்க முடியாது. ஆகவே, கர்த்தரின் சட்டத்தை ஒரு மனிதன் கடைப்பிடிக்க முயல்வது அவனின் முட்டாள்தனத்தையும் தேவனுக்கு முன்பாக அவன் மூர்க்கனாயிருப்பதையுமே காட்டுகிறது. நாம் பாவிகளென்றும் கர்த்தரின் சட்டங்களைக் கடைபிடிக்கவே முடியாது எனவும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
நம்மனைவருக்கும், கர்த்தரின் வார்த்தையை எப்படி படிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். கர்த்தரின் வார்த்தையை நாம் வாசிக்கும்போது, கர்த்தர் நம்மிடம் எதைக் கூறுகிறார் என்ற நோக்கத்தின் விழிப்புணர்வோடு வாசிக்கவேண்டும். கர்த்தர் நம்மிடம் எதைக் கூறுகிறார் என்ற விழிப்புணர்வு இல்லாது வேதாகமத்தை வாசித்தால், நம்முடைய விசுவாசம் அவரின் சித்தத்திற்கு எதிராக செல்லலாம். இதனால்தான் இத்தனை வேறுபட்ட பிரிவுகளிலிருக்கின்றன, இதனால் தான் கர்த்தருடன் ஐக்கியமாகிய விசுவாசத்தை உடையவர்கள் அடிக்கடி தள்ளிவிடப்படுகின்றனர்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் வேதாகமத்தை வாசிக்கும்போது, கர்த்தரின் நோக்கம் எதுவென அவர்களால் மிகச்சரியாக அறிந்துகொள்ளமுடியும். ஆனால் கர்த்தர் அருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காமல், ஒருவன் வேதாகமத்தை வாசிக்கும்போது, இது மிகத் தவறாகப் புரிந்துகொள்ளச் செய்யும், இத்தகைய நபர் எத்தனை உழைத்து வேதாகமத்தைப் படித்தாலும் அவனால்/அவளால் சரியென வேதாகம அறிவுடன் இருக்கமுடியாது.
சட்டம் என்ன கூறுகிறது?
லூக்காவின் வசனங்களைத் தொடருவோமாக: “அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார். அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழுஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.”
ரோமர் 3:20 கூறுகிறது, “பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால்” வேதாகமம் மேலும் கூறுகிறது “நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்” (கலாத்தியர் 3:10)
பாவிகளாக பிறந்த நம்மை, சட்டமானது பெரிய பாவிகளக மட்டும் மாற்றாமல், நம் செயல்களின் குறைபாடுகளையும் கூட வெளிப்படுத்துகிறது. அதனால் தான் “சட்டத்தின் படி செயல்புரிகிறவர்கள் சபிக்கப்பட்டவர்களாயிருக்கிறார்கள்”.
ஒருவன்/ஒருத்தி கர்த்தரை விசுவாசித்து சட்டப்படி வாழ்ந்தால் பரலோகம் செல்லலாம் என்றும், ஒரு நபர் சட்டத்தைக் கடைபிடிக்க வெகுவாக முயற்சிக்க வேண்டுமெனவும் சில மக்கள் கூறுகின்றனர். இம்மக்கள், அவர்கள் இயேசுவை விசுவாசித்தாலும் கூட, சட்டத்தைக் கடைபிடிக்க முயல்வதிலேயே தம் முழு வாழ்வையும் செலவு செய்கின்றனர். ஆனால் அவர்கள் சட்டத்தின் சாபத்தில் இருக்கிறார்கள். இயேசுவை விசுவாசித்தும் தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்டாதவர்களால், சட்டத்தை வீணில் கடைபிடிக்க முயலும் தம் விசுவாசத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து தப்பிக்க முடிவதில்லை. இயேசுவை அவர்கள் விசுவாசிக்கலாம், ஆனால் கர்த்தருக்கு முன்பாக அவர்கள் பாவிகளாகவே இருப்பார்கள், கர்த்தருக்கு முன்பு பாவிகளாக இருக்கும் அவர்களால் அவரின் கடுந்தண்டனையை மட்டுமே எதிர்பார்க்க முடியும். இதனால் தான், கர்த்தராகிய இயேசு நமது இரட்சகராக நம்மிடம் வந்து பாவிகளை விடுவிப்பரானார். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், இயேசு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டபோது நம் அனைத்துப் பாவங்களையும் பொறுப்பேற்றுக்கொண்டார். ஞானஸ்நானமானது நம் இரட்சிப்பின் அடையாளமாகவும் அது நம் எல்லாப் பாவங்களையும் சுத்திகரித்தது என்பதும் உங்களுக்குத் தெரியுமா? நம் எல்லாப் பாவங்களையும் சுத்திகரிக்க கர்த்தர் ஏற்படுத்திய ஒரே வழி இயேசுவின் ஞானஸ்நானமாகும்.
மத்தேயு 3:15 இல் வேதாகமம் கூறுகிறது “இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார்.” “இப்படியாக” என்று இங்கு குறிப்பிடப்படும் சொல் அதன் மூல மொழியில் “மிகச் சரியான” அல்லது “மிகவும் பொருத்தமான” என்று பொருள்படும். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், இயேசு யோவானிடம் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டது மிகச்சரியானதும் மிகவும் பொருத்தமானதுமாகும். சுருக்கமாகக் கூறினால், இயேசுகிறிஸ்துவின் ஞானஸ்நானம் நம் அனைத்துப் பாவங்களையும் பொறுப்பெடுத்துக்கொண்டது. இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்ததன் மூலம் நம்மை நம் பாவங்களிலிருந்து விடுவித்தார். இந்த சத்தியத்தை மக்கள் அறிந்து பொய்களுடன் அவர்கள் போரிடும்போது கர்த்தர் அவர்களை ஜெயங்கொள்ளுகிறவர்கள் என்றழைப்பார்.
மறுபடியும் பிறந்தவர்கள் யாரை எதிர்த்துப் போரிடவேண்டும்?
சட்டத்துவத்துடன் மறுபடியும் பிறந்தவர்கள் போராடி அதனை மேற்கொள்ளவேண்டும். மதச் சொற்களின்படி சட்டத்தின் தலைவர்கள் நல்லவர்களைப் போல் தோன்றலாம், ஆனால் உள்ளேயோ கர்த்தருக்கே சவால் விடுபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நல்லவர்களைப் போல் தோன்றினாலும், அவர்களுடைய வார்த்தைகள், அவர்களைப் பின்பற்றுவோரை பாவத்தின் சாபத்தில் வைத்திருக்கும் சாத்தானின் வார்த்தைகளாகவே உள்ளன. இதனால் தான் பரிசுத்தவான்கள் இந்த மதவாதிகளுடன் போரிட்டு அவர்களை மேற்கொள்ளவேண்டும்.
இயேசுவை விசுவாசிப்பதால் இரட்சிப்பு வருகிறதென்று மதவாதிகள் கூறுகிறார்கள், அதே சமயம் அவனோ/அவளோ சட்டத்திற்கு முன் நல்வாழ்க்கை வாழ்ந்தால் பரலோகத்தினுள் செல்ல முடியுமெனவும் கூறுகிறார்கள். இத்தகைய விசுவாசம் ஒருவனின் இரட்சிப்பை நோக்கி அவனை வழிநடத்தும் விசுவாசம் என்று அழைக்கப்படமுடியுமா? அப்படி முடியாது தான்!
ஆகவே, இதைக்குறித்து சட்டத்தின் படி நடப்பவர்களுக்கும் நமக்கும் அறிவுண்டாகும்படி நம் தேவன் ஒரு உவமாணக் கதையைக் கூறினார். இக்கதை இப்படிக் கூறுகிறது: ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோவிற்கு செல்லும் வழியில் திருடர்களிடம் அகப்பட்டான். அவர்கள் அவனை அரை உயிராய் விட்டுச் சென்றனர். ஒரு ஆசாரியர் எருசலேமிலிருந்து எரிகோவிற்கு செல்லும் அதே வழியில் அடிபட்ட அம்மனிதனைச் சந்தித்தான். ஆனாலும் ஆசாரியன் அவனுக்கு உதவாமல், வேறுவழியில் சென்றுவிட்டான். இன்னொரு மனிதன், இம்முறை ஒரு லேவி, அடிபட்டவனின் அருகில் வந்தாள், அந்த உதவி கேட்கும் பரிதாபமானவனின் குரல் கேட்கவில்லை என்பது போல் நடித்து அவனைச் சுற்றி சென்றுவிட்டான்.
அப்பொழுது, மூன்றாவது ஒரு மனிதன் வந்தான், இவன் ஒரு சமாரியன். ஆசாரியனையும் லேவியனையும் போலில்லாது சமாரியன் அவன் காயங்களைக் கட்டி, எண்ணெய்யையும் ரசத்தையும் ஊற்றி, தன் மிருகத்தின் மீது அவனை ஏற்றி சத்திரத்திற்கு எடுத்துச் சென்று, அவனைக் கவனித்தான். அவன் சத்திரகாரனுக்குக் காசு கொடுத்து “இவனைக் கவனித்து கொள், நான் திரும்பி வருகையில் இங்கு வருவேன்; இவனைக் குணப்படுத்த நான் உனக்கு கொடுத்த பணத்தைவிட அதிம் செலவு செய்தால், நான் திரும்பி வருகையில் அதனைச் செலுத்துவேன். ஆகவே உன்னால் முடிந்த அளவு இவனுக்கு உதவி செய்” என்று கூறினான்.
இவர்கள் மூவரில் யார் சிறந்தவன்? சமாரியனே அது. இச்சமாரியன் இயேசுவே. நம்மைப் போன்ற பாவிகளை எது இரட்சித்தது, கர்த்தரின் சட்டம், அதன் போதகர்கள், அதன் தலைவர்கள், நம் சொந்த பலம் அல்லது மனம் வருந்தி ஜெபித்தல், ஆகியவை நம்மை இரட்சித்தனவா? நம் பாவங்களைக் கழுவ இப்பூமிக்கு வந்த இயேசுவே நம் உண்மையான இரட்சகர். இயேசு “இப்படியாக (மத்தேயு 3:15)” எல்லாப் பாவிகளையும் விடுவித்தார். இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் சிலுவை இரத்தமும் பாவிகளின் இரட்சிப்பிற்கான அடையாளமாயிருக்கிறது (1 பேதுரு 3:21). இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மூலமாக இவ்வுலகின் அனைத்துப் பாவிகளும் இரட்சிக்கப்பட்டனர். யோர்தான் நதியில் இயேசு பெற்ற ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை தம் இரட்சிப்பாக விசுவாசிப்பவர்கள் முழுமையாகவும் நிறைவாகவும் தம் அனைத்துப் பாவங்களிலிருந்து விடுவிக்கப்படுவர்.
பொய்யின் தவறான கொள்கைகளை எதிர்த்துப் போரிட்டு அதனை மேற்கொள்ளும் வலிமையை இயேசு நமக்கு கொடுத்தார். “இயேசுவை நாம் விசுவாசிக்கிறோம், ஆனால் நீங்கள் கர்த்தரின் சட்டத்தைக் கடைப்பிடித்து உங்கள் செய்கைகள் நலமானதாயிருந்தால், நீங்கள் உங்கள் பாவங்கள் எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கப்படுவீர்கள்” என்று மக்கள் வலியுறுத்தும்போது, அவர்கள் தம் வீண் பிடிவாதத்தைக் காட்டி பொய்களைப் பரப்புகிறார்கள். இயேசு நமக்களித்த இரட்சிப்பின் சத்தியத்தில் எதையாவது கூட்டினாலோ அல்லது கழித்தாலோ, இது சத்தியமாகவே இருக்காது. பொய்யின் இத்தகையத் தவறான கொள்கைகளுடன் போரிட்டு அதனை வெற்றிக்கொள்ளும் வலிமையை இயேசு நமக்குக் கொடுத்துள்ளார்.
இன்றைய சட்டத்தின் தலைவர்கள், தாம் சட்டத்தைக் கடைப்பிடிப்பதைப் போல், மக்களுக்கு முன்பாக சத்தமிட்டு பேசுகிறார்கள். அது எத்தனைக் கடினமாயிருந்தாலும், அத்தகைய ஒரு சூழ்நிலையை அவர்கள் சந்திக்கும்போது தமது வார்த்தைகளின்படி அவர்கள் நடக்காததை நம் அடிக்கடி காண்கிறோம், ஆனால் சட்டம் அவர்களிடமிருந்து எதிர்ப்பார்ப்பதை அவர்கள் அனுசரித்தேயாக வேண்டும். தம்மிருதயங்களில், நன்மை செய்யவேண்டுமென விரும்பினாலும், தம் மாமிசம் பலவீனமுடையதால் அப்படிச் செய்யமுடியாது என்பதை அவர்களே உணர்ந்து கொள்வர். தம்முடைய பலவீனங்களை மறைத்து, மதச் சடங்குகளினுள் தம்மைத் திணித்துக் கொள்வதன் மூலம் அவர்கள் மற்றவர்களை வஞ்சித்து, அதே பாரத்தால் அவர்களும் அமுங்கிப்போகிறார்கள்.
மேற்கண்ட வசனத்தின் ஆசாரியனையும் லேவியனையும் போன்று, இன்றைய சட்டத்தைக் கடைபிடிப்பவர்களும் இரண்டு தரங்களை உடையவர்களாய் இருக்கின்றனர், அவர்களுடைய வேலைகள் தியாகங்களை எதிர்ப்பார்க்கும் போது நழுவி விடுகின்றனர். இது கர்த்தரின் சட்டத்திற்கு முன் மனிதனின் வல்லமையின்மையைக் காட்டுகிறது. மதம் என்னும் அழகிய ஆடையினுள் மக்கள் இதனை மறைத்து வைக்கின்றனர். ஆனால் தேவனுக்கு முன்பாக தம்மை மறைப்பவர்களால் இரட்சிக்கப்படமுடியாது. சட்டத்தின்படி தம்மைக் குறித்து வெளிப்படுத்தி தம் பாவசுபாவத்தை அறிந்தவர்களால் மட்டுமே, நீர் மற்றும் ஆவியின் சத்திய வார்த்தைகளின் மூலம் தம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுதலையாக முடியும்.
அழிந்து போகும் பாவிகளைக் கடந்துபோகாதது இயேசு மட்டுமே, அவர்களைக் கண்டு பிடித்து, சந்தித்து அவர்களை இரட்சிப்பது அவர் மட்டுமே அவரே ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் நம் அனைத்துப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டார், அவர் தன் சரீரத்தின் மூலம் அவர்களின் பாவக்கூலியைக் கொடுத்து மரிக்கும் பாவிகளை அவர்களின் பாவங்களிலிருந்து விடுவித்தார்.
ஜெயங்கொள்ளுகிறவர்கள் வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படுவர்
ஜெயங்கொள்ளுகிறவர்கள் வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படுவர் என்று வசனம் இங்கு கூறுகிறது. இதன் பொருள் கிறிஸ்தவ உலகினுள் உள்ள பொய்யர்களுடன் போரிட்டு வெற்றிபெற வேண்டுமென்பதாகும். நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும்போது கூட, இப்பொய்யர்கள் இயேசுவை விசுவாசித்து நல்வாழ்க்கை வாழும்படி மக்களுக்கு பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்வாழ்க்கை வாழ்வதென்பது சரியான செயலாகும். ஆனால் அடிப்படையில், மக்களின் இருதயங்கள் அனைத்து வகையான கெட்ட காரியங்களாலும் நிரம்பியுள்ளது, கொலையிலிருந்து சிலைவணக்கம் வரையிலும், களவு, பொறாமைகளாலும் அது நிரம்பியுள்ளது; இம்மக்களை நல்வாழ்க்கை வாழும்படி கூறுவது, அப்படி கூறுவது சரியானதாயினும், இது அவர்களை மதத்திற்குள் அடக்கி வைத்து மரிக்கும்படி மூச்சுத்திணரச் செல்வதாகும். தம் தொண்டை வரை பாவங்களால் மூழ்கியவர்களிடம் “நல்வாழ்க்கை வாழுங்கள்” என்று கூறுவது அவர்களை சுய தண்டனையினுள் தள்ளுவதாகும்.
ஆனாலும், அவர்களுக்கு நம்மிடமிருந்து தேவைப்படுவது என்னவெனில் அவர்களுடைய அடிப்படைப் பாவங்களிலிருந்து அவர்களை இரட்சிக்கக் கூடிய சத்தியமாகிய நீர் மற்றும் ஆவியை போதித்து அவர்களின் அடிப்படை பாவங்களிலிருந்து விடுதலை செய்வதே. இதுவே சரியான பாடமாகும், இதன் பிறகு கர்த்தருக்குள் நல்வாழ்க்கை வாழுவதற்கான அறிவுரை போதிக்கப்படுகிறது. வேறுவார்த்தைகளில் கூறுவதானால், கிறிஸ்துவுக்கு வெளியே பாவிகளாயிருப்பவர்களை, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை முதலில் அவர்களிடம் பிரசங்கித்து அவர்களை நீதிமான்களாக்குவதே முன்னுரிமைக் கொடுக்கவேண்டிய ஒன்று.
உலக மதமாக குன்றிப்போய்க் கொண்டிருக்கும் கிறிஸ்தவம்
உலக மதங்களினால் நாம் வஞ்சிக்கப்படக் கூடாது. பொய்களைப் பரப்பும் உலக மதங்களுடன் போரிட்டு அவற்றை வென்றால் மட்டுமே நம்மால் பரலோகம் செல்லமுடியும். நாம் கர்த்தரின் சட்டங்களைக் கடைபிடிக்க முடியாதவர்களாய் இருப்பதால் இயேசு நமக்களித்த கிருபையின் இரட்சிப்பு நமக்குத் தேவைப்படுகிறது, இந்த கிருபையை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே தேவனை நம்மால் சந்திக்க முடியும்.
ஆனால் கிறிஸ்தவத்தின் அநேகர், இயேசுவை விசுவாசித்தாலும் கூட, பொய்யைப் பரப்புவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுகின்றனர். மக்களால் நல்லவர்களாக இருக்கமுடியும், இருக்கவேண்டும் என்ற வசீகரிக்கும் கூற்றுகளால் அவர்கள் வஞ்சிக்கப்பட்டனர். அடிப்படையில் நாம் பாவத்துடன் பிறந்தமையால், நாம் எத்தனையாய் முயன்றாலும் நல்லவர்களாய் இருக்க முடியாது. ஆயினும், இயேசு தன் நற்செய்தியின் சத்தியமாகிய நீரினாலும் ஆவியாலும் நம்மை இரட்சித்தார் என்பதை விசுவாசிப்பதால் மட்டுமே நம்மால் இரட்சிக்கப்பட முடியும். இந்த சத்தியத்தை விசுவாசித்து நாம் பாவமற்றவர்களானோம் என்று அறிந்துகொள்ளும்போது மட்டுமே புதியதொரு வாழ்வை நம்மால் வாழமுடியும்.
வேதாகமத்தின் பரிசேயரும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காமல், தம் பாவங்கள் சுத்திகரிக்கப்படாத இன்றைய கிறிஸ்தவர்களும் ஒன்றே- அவர்கள் அனைவரும் வேதப்புரட்டர்கள். கர்த்தரையும் ஆத்துமாக்கள் உயிரோடெழுப்பப் படுவதையும், வேதவசனங்கள் குறிப்பிடும் மரணத்திற்கு பிந்திய வாழ்வையும் பரிசேயர் விசுவாசித்தனர். ஆனால் இயேசுவைத் தம் மேசியாவாக அவர்கள் விசுவாசிக்கவில்லை. மேலும், கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் மிதித்து அதனை அலட்சியம் செய்தனர்.
இன்று, இந்த பரிசேயரைப் போன்ற அநேக கிறிஸ்தவர்கள் உள்ளனர். வேதாகமத்தை விடவும் கிறிஸ்தவக் கொள்கைகளுக்கு அதிக அங்கீகாரம் கொடுக்கும் தன்மையுடையவர்களாய் அவர்கள் உள்ளனர். இதனால் தான் இந்நாட்களில் முடிவில்லாமல் அநேக வேதப்புரட்டுகள் முளைவிடுகின்றன. தீத்து 3:10-11 இல் கர்த்தர் வேதப்புரட்டர்களைக் குறித்து கூறுகிறார் “வேதப்புரட்டனாய் இருக்கிற ஒருவனுக்கு இரண்டொருதரம் புத்தி சொன்ன பின்பு அவனை விட்டு விலகு. அப்படிப்பட்டவன் நிலை தவறி தன்னிலேதானே ஆக்கினைத் தீர்ப்புடையவனாய் பாவம் செய்கிறவன் என்று அறிந்திருக்கிறாயே.” வேதப்புரட்டர்களுடன் சேர்ந்தவர்கள் வேதாகமத்தை விடத் தம் மதத்தலைவர்களை விசுவாசித்து, அவர்களைப் பின்பற்றுகின்றனர், இதன் பலனாக, அவர்கள் அழிந்துபோவார்கள்.
முன்பு போலவே, அநேக கள்ளத் தீர்க்கதரிசிகள் இப்போதும் இவ்வுலகில் ஊற்றெடுக்கிறார்கள். முக்கிய வசனங்களின் வார்த்தையின்படி, இக்கள்ளத்தீர்க்கதரிசிகளுடன் போரிட்டு அவர்களை மேற்கொள்ள வேண்டுமென கர்த்தர் கூறினார். மேற்கொள்ளுபவர்கள் மட்டுமே நீதியின் ஆடையால் தரிப்பிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
லூக்கா 18 இல் “பரிசேயன் மற்றும் வரி வசூலிப்பவன் ஆகியோரைக் குறித்த உவமாணக் கதை” இருக்கிறது. ஒரு பரிசேயன் ஆலயத்திற்குச் சென்று, தன் கைகளை உயர்த்தி பெருமையுடன் ஜெபித்தான்: “கர்த்தாவே, ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் உபவாசம் இருக்கிறேன், நான் சம்பாதிப்பவைகளில் தசமபாகமும் கொடுக்கிறேன்.” அதற்கு மாறாக, வரி வசூலிப்பவனால், ஜெபிக்கும்போது தன் முகத்தைக் கூட உயர்த்த முடியவில்லை: “கர்த்தாவே, அவன் செய்பவைகளை என்னால் செய்யமுடியாது. நான் அதிகக் குறைபாடுகளுள்ள ஒரு பாவி, என்னால் வாரத்திற்கு இரண்டுமுறை உபவாசம் இருக்க முடியாது, என்னால் உமக்குத் தசமபாகமும் கொடுக்க முடியாது. அது மட்டுமல்ல, நான் மக்களை வஞ்சித்தேன், அவர்களிடமிருந்து திருடினேன், அநேகத் தீய காரியங்களைச் செய்துள்ளேன். நான் எதற்கும் பயன்படாதவன். கர்த்தாவே என் மீது கிருபையாயிரும். தயவுசெய்து கிருபையாக என்னை இரட்சியும்.”
கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப் பட்டவன் வரி வசூலிப்பவனேயன்றி பரிசேயனல்ல என்று வேதாகமம் நமக்குக் கூறுகிறது. “யாருடைய பாவங்கள் மன்னிக்கப்படக்கூடும்?” என்ற கேள்வியில் இது காட்டப்படுகிறது. தம்முடைய குறைபாடுகளை உணர்ந்துகொள்பவர்களே அது. தாம் பாவிகளென்றும், தம் ஆத்துமாக்கள் நிச்சயமாக நரகம் செல்ல வேண்டியவை என்றும் அறிந்தவர்கள் சட்டத்தினாலோ அல்லது கர்த்தரின் நீதியின் தீர்ப்பினாலோ தண்டிக்கப் படவேண்டியவர்கள் -இவர்களே இயேசுவிடமிருந்து இரட்சிப்பின் விடுதலையைப் பெற்றுக்கொள்பவர்கள்.
ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் இயேசு பேசியதாக மத்தேயு 3:15 இல் எழுதப்பட்டுள்ளது. இவ்வசனத்தில் “இப்படி” என்பது பாவிகளை இரட்சிக்க இயேசுவின் ஞானஸ்நானமே மிகச் சரியான வழி என்று பொருள்படும் -அதாவது, இயேசுவிடம் அவர்கலின் எல்லாப் பாவங்களையும் ஒப்புவித்த அவரின் ஞானஸ்நானத்தினால் அவர்கலின் பாவங்களை மறையச் செய்து அவர்களை இரட்சிப்பதாகும்.
“இப்படி” இயேசு உங்களை உங்கள் பாவங்களிலிருந்து இரட்சித்தார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? “இப்படி” அவர் ஞானஸ்நானம் பெற்றபோது உங்கள் அனைத்துப் பாவங்களையும் தேவன் சுமந்து தீர்த்தார். அதன் பிறகு அவர் உலகின் எல்லாப் பாவங்களையும் சிலுவைக்குச் சுமந்து சென்று தன் சொந்த இரத்தத்தால் அதற்கு கிரயஞ்செலுத்தினார். உங்கள் ஆத்துமா வாழ்ந்திருக்க இதனை நீங்கள் விசுவாசிக்கவேண்டும். இதனை நீங்கள் விசுவாசிக்கும்போது, உங்கள் ஆத்துமா பாவநிவர்த்தி செய்யப்பட்டதாகும், நீங்கள் கர்த்தரின் பிள்ளையாக மறுபடியும் பிறப்பீர்கள்.
இந்த சத்தியமாகிய இரட்சிப்பின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை மறுக்கும் அநேகர் இவ்வுலகில் இருக்கின்றனர். இதனால் தான் ஆவிக்குரிய போரில் நாம் ஈடுபடவேண்டும். நம்முடைய பாவங்களை அறிந்துகொள்ள அதிகப் பாவங்களைச் செய்யவேண்டுமென நான் கூறவில்லை, ஆனால் அடிப்படையில் நாம் பாவம் செய்ய வேண்டியவர்களெனவும் ஆவிக்குரிய நியாயத்தீர்ப்பை பெறவேண்டியவர்கள் என்பதையும் ஒப்புக்கொண்டு கர்த்தரின் கிருபையினால் தரிக்கப்படவேண்டும். இயேசு உன் இரட்சகர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இரட்சிக்கப் படவேண்டுமென விரும்பும் அனைவரும் விடுதலைத் தரும் இயேசுவை விசுவாசிக்க வேண்டும், அவர் நம்முடைய அனைத்துப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டு நமக்காக தீர்க்கப்பட்டார். அப்படி விசுவாசிப்பதால் மட்டுமே ஒருவனின் இருதயத்தில் எப்பாவமும் மிச்சம் விடப்பட்டிருக்காது.
இப்போது உங்களிருதயத்தில் பாவமிருக்கிறதா? தம்முடைய இருதயங்களில் பாவங்கள் இருக்கின்றன என எண்ணுபவர்களுக்கு கர்த்தரின் சட்டம் முதலில் தெரிந்திருக்க வேண்டும். கர்த்தரின் சட்டத்தின்படி பாவத்தின் சம்பளம் மரணம். உங்களிடம் பாவமிருந்தால் நீங்கள் மரிக்கவேண்டும். உங்கள் பாவங்களை நிவர்த்தி செய்யாமல் நீங்கள் மரித்தால் நீங்கள் தீர்க்கப்பட்டு நரகத்திற்கு அனுப்பப்படுவீர்கள். இவ்வுலகிலுள்ள எல்லோராலும் பாவம் செய்வதைத் தவிர்க்க முடியாததாகையால், கர்த்தரின் சட்டத்திற்கு முன்பாக அவர்கள் நரகம் அனுப்பப்படுவதைத் தவிர்க்க முடியாது. இதனால் தான் கர்த்தர் நம்மீது கிருபை வைத்து, தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை இப்பூமிக்கு அனுப்பி யோர்தான் நதியில் அவர் பெற்ற ஞானஸ்நானம் மூலம் “இப்படி (மத்தேயு 3:15)” உலகின் எல்லாப் பாவங்களையும் சுமக்கச் செய்து, நம்மிடத்திலிருந்து சிலுவையில் அவர் தீர்ப்படையும்படிச் செய்து நம்மை இரட்சித்தார் -இதனால் நம்மை அவரால் பரலோகத்திற்கு அனுப்பமுடியும்.
நம்முடைய நற்செயல்களால் இரட்சிக்கப்படமுடியாது. மக்கள் வெவ்வேறு அளவுகளில் கபடர்களாய் இருப்பர், ஆனால் எல்லோருமே கபடர்களே, யாராலும் நிறைவான சிறந்தவர்களாகவே முடியாது. ஆகவே, கிறிஸ்துவின் இரட்சிப்பின் பாவநிவாரணத்தை விசுவாசித்து தம் பாவங்கள் அனைத்தும் முற்றிலுமாக மன்னிக்கப்பட்டவர்களாலேயே அனைத்துப் பாவங்களிலிருந்தும் மக்களால் விடுதலைப் பெறமுடியும். இது வேதாகமத்தின் மிகமுக்கியமான சத்தியமாகும்.
தான் தேவனைச் சந்திக்கும் முன் எப்படியிருந்தேன் என்று பவுல் விளக்க, அதனை அறிக்கைச் செய்தான் “நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையை செய்கிறேன்” (ரோமர் 7:19). பவுல் ஏன் இப்படி இருந்தான்? ஏனெனில் மனிதகுலம் எந்த நன்மையையும் செய்ய முடியாதது. நல்லவற்றைச் செய்வதே நாம் செய்யவேண்டிய சரியான காரியம் என்று எல்லோருக்கும் தெரியும், ஆனால் யாராலும் அப்படிச் செய்யமுடியவில்லை. இது நீதிமான்களிடம் கூட இருக்கும் மாமிசத்தின் ஆசைகளுக்கேற்ப அளவிலும் பரிமாணத்திலும் வித்தியாசப்படுகிறது. இதனால் தான் தேவன் அவர்களுக்களித்த சத்தியத்தின் நற்செய்தியை விசுவாசிப்பதால் மட்டும் மக்களால் இரட்சிக்கப்படமுடிகிறது.
நம்மைப் போன்ற அசுத்தமானவர்களையும் அழுக்கு நிறைந்தவர்களையும் நீதியும் பாவமுமற்ற கர்த்தர் எப்படி ஏற்றுக்கொண்டார்? நம்முடைய தேவனாகிய இயேசுவால் கர்த்தர் நம்மை இரட்சித்து நம்மைத் தழுவினார். மனிதகுலத்தின் தலைமை ஆசாரியனான யோவான் அளித்த ஞானஸ்நானத்தின் மூலம் மனிதகுலத்தின் அனைத்துப் பாவங்களையும் தன்மீது இயேசு ஏற்றுக்கொண்டு, அவற்றை சிலுவைக்கு சுமந்துசென்று, நமக்காகத் தீர்க்கப்பட்டார். இயேசுவை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசுவை விசுவாசிப்பது அவர் நமக்காக செய்தவற்றை விசுவாசிப்பதாகும்.
கர்த்தரிற்கு முன் நிற்பதற்கான வழி
காயீனும் ஆபேலும் மனிதகுலத்தின் முதல் பெற்றோரான ஆதாம் மற்றும் ஏவாளிற்கு பிறந்தவர்கள். ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, கர்த்தர் அவர்களுக்கு பதிலாக ஒரு மிருகத்தைக் கொன்று அதன் தோலை அவர்களுக்கு ஆடையாக அணிவித்தார். இது கர்த்தரின் இருவித சட்டங்களை மனிதர்களுக்குப் போதிக்கிறது. ஒன்று கர்த்தரின் நியாயப்பிரமாணச் சட்டம், இதில் “பாவத்தின் சம்பளம் மரணம்” மற்றது “அவரின் அன்பின் சட்டம்,” இங்கு பாவிகளின் வெட்கக்கேடான பாவங்கள் பலிகாணிக்கைகளால் மூடப்பட்டன. சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு ஆதாமும் ஏவாளும் கர்த்தருக்கெதிராக பாவஞ்செய்தனர். அவர்கள் எப்படியாக பாவஞ்செய்தபோதிலும், கர்த்தரின் சட்டப்படி பாவத்தின் சம்பளம் மரணம் என்பதால் அவர்கள் கொல்லப்படவேண்டியவர்கள். ஆனால் அவர்களுக்கு பதிலாக கர்த்தர் ஒரு மிருகத்தைக் கொன்று அதன் தோலினால் அவர்களை உடுத்துவித்தார். இது வரப்போகும் பாவநிவாரணப்பலிகளின் அடையாளமாக இருந்தது.
பாவஞ்செய்தபிறகு, ஆதாமும் ஏவாளும் அத்திமர இலைகளினால் தமக்கு ஆடைகளைச் செய்தனர். ஆனால் அவை சூரிய வெளிச்சத்தில் காய்ந்து, அவை அசையும்போது உடைந்து கீழே விழுந்து போவதால், அவற்றால் அதிக காலம் இருக்கமுடியவில்லை, இதனால் அவர்களால் தம்முடைய களங்கத்தை மறைக்கமுடியவில்லை. தம்முடைய கேவலத்தை அத்திமர இலையினால் மறைக்க முயன்ற ஆதாமிற்கும் ஏவாளுக்கும் பதிலாக, கர்த்தர் ஒரு மிருகத்தைக் கொன்று, தோலினால் ஒரு ஆடையைச் செய்து அவர்களுக்கு அணிவித்தார். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், பலிகாணிக்கைகளின் மூலமாக கர்த்தர் பாவிகளின் எல்லா வெட்கக்கேட்டையும் மூடினார்.
இது கர்த்தரின் அன்பையும் அவரின் நீதியின் இரட்சிப்பையும் நமக்குக் கூறுகிறது. கர்த்தர் அவர்களுக்கு பதிலாக மிருகத்தைக் கொன்று, அவர்களின் நிர்வாணத்தை மூடி, அவர்களை இரட்சித்ததை ஆதாமும் ஏவாளும் அறிந்தனர். அவர்கள் இந்த விசுவாசத்தை தம் பிள்ளைகளுக்கு கொடுத்தனர்.
ஆதாமிற்கு காயீன் ஆபேல் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். முதல் மகனாகிய காயீன் தன் சொந்த முயற்சியினாலும் பலத்தினாலும் உருவானவைகளுக்கு கர்த்தருக்கு காணிக்கையாக கொடுத்தான், ஆனால் கர்த்தரின் பாவநிவாரணச் சட்டத்தின்படி ஆபேல் ஆட்டுக்குட்டி ஒன்றை பலியிட்டான். இவற்றில் கர்த்தர் எதை ஏற்றுக்கொள்வார்? பழைய ஏற்பாட்டின் மிக முக்கிய நிகழ்வுகளாக இந்த இரண்டு வித காணிக்கைகளும் அமைந்தன, இவை விசுவாச காணிக்கைக்கும் மனித சிந்தனையின் காணிக்கைக்கும் உள்ள வேறுபாட்டைக் காட்டுகிறது. கர்த்தர் ஆபேலின் காணிக்கையை ஏற்றார். காயீன் அளித்த பூமியின் விளைச்சலையும், அவனின் வேர்வையையும் உழைப்பையும் கர்த்தர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், ஆபேல் தன் மந்தையில் முதல் பிறந்தவற்றை காணிக்கையாக்கியபோது அதனை பலியாக ஏற்றுக்கொண்டார் என்றும் வேதாகமம் நமக்குக் கூறுகிறது.
“ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்” என்று வேதாகமம் கூறுகிறது. கர்த்தர் ஆபேலின் காணிக்கைகளையும் பலிகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றார். இந்த வார்த்தையின் மூலம் கர்த்தரின் இருதயம் நம்மிடம் வேண்டுவதை நம்மால் வாசிக்கமுடியும்.
கர்த்தர் எப்படி நம்மை ஏற்றுக்கொள்வார்? ஒவ்வொரு நாளும் அவருக்கு முன்பு மிகுந்த குறைபாடுகளுடையவர்களாய் வருகிறோம்; நம்மால் எப்படி கர்த்தருக்கு முன் நிற்க முடியும்? ஒரே வழியில் மட்டும் கர்த்தரிடம் நாம் செல்லலாம், கர்த்தர் நமக்காக ஒரே ஒரு வழியை மட்டும் ஏற்படுத்தினார். இது “காணிக்கை” என்பதைத் தவிர வேறில்லை -இது நம் “செய்கைகளின்” காணிக்கையாக இராமல், நம் “விசுவாசத்தின்” காணிக்கையாக இருக்கிறது. இதனைத் தான் கர்த்தர் ஏற்றுக்கொள்ளுகிறார்.
ஆதாம் ஏவாள் தம் பிள்ளைகளுக்கு எந்த விசுவாசத்தை அளித்தனர்? இது “தோலினால் செய்யப்பட்ட ஆடையின்” விசுவாசமாகும். வேறு விதமாகக் கூறினால் பலிகாணிக்கைகள் மூலம் கிட்டும் பாவநிவாரணத்தை விசுவாசிக்கும் விசுவாசமே இது. இன்று, இந்த விசுவாசம் நற்செய்தியாகிய நீர் மற்றும் இயேசுவின் இரத்தமாகும். “இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தின் மூலம் என் எல்லாப் பாவங்களும் எடுத்துப்போடப் பட்டதையும், என்னிடத்திலிருந்து அவர் தீர்க்கப்பட்டதையும் நான் விசுவாசிக்கிறேன். இந்த விசுவாசத்தை என் காணிக்கையாக கொடுக்கிறேன். தேவன் ஞானஸ்நானம் பெற்றபோது என் எல்லாப் பாவங்களையும் எடுத்துக்கொண்டார் என்பதை விசுவாசிக்கிறேன். என்னுடைய எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டதை நான் விசுவாசிக்கிறேன். பழைய ஏற்பாட்டில் கர்த்தர் எனக்கு வாக்குத்தத்தம் செய்தபடி, இயேசுகிறிஸ்து என் பலியாட்டுக்குட்டியாக மரித்து என்னை பாவமற்றவனாக்கினார். இந்த இரட்சிப்பை நான் விசுவாசிக்கிறேன்.”
தேவன் நம்மை இப்படியாக இரட்சித்தார் என்று விசுவாசித்து, கர்த்தருக்கு முன்பாக நாம் நிற்கும்போது, கர்த்தர் இந்த விசுவாசத்தின் காணிக்கையை ஏற்று நம்மைத் தழுவுவார் ஏன்? ஏனெனில் அவருடைய “பலிகாணிக்கையினாலேயே” நாம் பாவமற்றவர்களாகி கர்த்தருக்கு முன்பு நீதிமான்களானோம்.
இயேசு நம் இரட்சகர் என்று விசுவாசிக்கும் விசுவாசத்தை கர்த்தருக்கு காணிக்கையாக கொடுத்ததால் அவர் நம்மை ஏற்றுக்கொண்டார். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், கர்த்தர் இயேசுவின் பலியை ஏற்றுக்கொண்டபோது, நம்மையும் கிறிஸ்துவுக்குள் ஏற்றுக்கொண்டார். காணிக்கையினுள் நம் எல்லாப் பாவங்களும் செலுத்தப்பட்டதே இதற்கு காரணம். நம்முடைய பாவங்களுக்கான தீர்ப்பு இந்த பலிக்கு கொடுக்கப்பட்டதால் நாம் பாவமற்றவர்களானோம். இதுவே கர்த்தரின் நியதியாகவும் அவரின் நீதியாகவும் இருக்கிறது. இதுவே கர்த்தரின் அன்பும் அவரின் நிறைவான இரட்சிப்புமாகும்.
நாமும் கூட, ஆபேலின் விசுவாசத்தைக் காணிக்கையாக கொடுக்கவேண்டும்
ஆபேலின் காணிக்கையை கர்த்தர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாக வேதாகமம் நமக்குக் கூறுகிறது. அப்படியானால், இன்று கர்த்தர் எற்றுக்கொள்ளும் விசுவாசத்தின் காணிக்கை என்ன? இயேசு நம் இரட்சகர் என்றும், அவர் நம் அனைத்துப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டார் என்றும், நமக்காகத் தீர்க்கப்பட்டார் என்றும் நம்மிருதயங்களில் விசுவாசித்து, இந்த விசுவாசத்தைக் கர்த்தருக்கு கொடுக்கும்போது, இந்த விசுவாச காணிக்கையை கர்த்தர் ஏற்றுக்கொள்வார். நம் செயல்கள் எத்தனைக் குறைபாடுகளுடையவையாக இருந்தாலும், நம்முடைய பாவங்களெல்லாம் இயேசுவின் மீது சுமத்தப்பட்டதாலும், நம் இடத்திலிருந்து இயேசு தீர்ப்பை அடைந்ததாலும், பிதாவாகிய கர்த்தர் தம் குமாரனிடத்தில் நம் பாவங்களைக் கண்டார், நம்மிடம் பாவங்களை காணவில்லை. இப்படியாக கர்த்தர் நம் பாவங்களையெல்லாம் தன் குமாரனின் மீது சுமத்தி, நமக்கு பதிலாக அவரை தீர்த்து, மூன்று நாட்களில் அவரை மரித்தோரிடமிருந்து உயிரோடெழுப்பி, அவரைத் தனது வலது பக்கத்தில் அமரும்படிச் செய்தார்.
இதனை விசுவாசிப்பவர்களைக் கர்த்தர் இரட்சித்தார். நம் விசுவாச காணிக்கையை அவர் ஏற்றுக்கொண்டார். இயேசுகிறிஸ்து இல்லாமல் கர்த்தர் முன் நம்மால் நிற்கமுடியாது. இயேசு நம் நிச்சயமான இரட்சகரானதால், இந்த விசுவாச காணிக்கையுடன் கர்த்தர் முன் செல்லமுடியும், மேலும் இந்த காணிக்கையால் கர்த்தர் நம்மை ஏற்றுக்கொண்டார். இந்த சத்தியத்தின் மீதுள்ள நம் விசுவாசம் முழுமையாக இருக்கிறதா? ஆம் அப்படியே இருக்கிறது!
இப்போது நாம் உண்மையாகவே பாவமற்றவர்களானோம். நம்முடைய பாவங்கள் இயேசுவின் மீது சுமத்தப்பட்டு நாம் பாவமற்றவர்களாகியதால் வெண்மையான வஸ்திரங்கள் கர்த்தர் நம்மை தரிப்பித்தார். அவர் நம்மை நீதிமானாக்கினார். நம்முடைய தேவன் “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல்.” என்று வாக்குத்தத்தம் செய்தபடி தம்முடைய தூதர்களுக்கு முன்பாக நம் பெயர்களை அறிக்கைச் செய்வர்.
கர்த்தரின் சர்தை சபையில், வெள்ளையாடைகளை அணிந்து சிலர் தேவனுடன் நடந்தனர். அது கர்த்தரின் ஊழியன், அவரின் பிள்ளைகள் பரிசுத்தவான்கள் ஆகியோராகும்.
கர்த்தர் ஆபேலின் காணிக்கையை ஏற்றுக்கொண்டார். அவர் ஆபேலையும் ஏற்றுக்கொண்டார். காணிக்கைகள் முழுமையானவைகளாக இல்லையெனில் கர்த்தர் அவற்றை ஏற்பதில்லை. இதனால் கர்த்தர் காயீனையும் அவன் காணிக்கைகளையும் ஏற்கவில்லை. கர்த்தர் ஏன் அவன் காணிக்கைகளை ஏற்கவில்லை? காயீனின் காணிக்கை உயிரில்லாத காணிக்கையாகவும், பாவநிவாரணம் செய்யும் இரத்தத்தினால் தயாரிக்கப்படாமலும் இருந்ததினால் அவர் அவற்றை ஏற்கவில்லை. காயீன் பூமியின் கனிகளையும், தன் உழைப்பில் உருவானவற்றையும் தன் காணிக்கையாகக் கொடுத்ததாக வேதாகமம் நமக்கு கூறுகிறது. அவை முலாம் பழம், சோளம் அல்லது உருளைக் கிழங்கோ, வேறெதுவோ, அது சிறந்தமுறையில் சுத்திகரிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கர்த்தர் இத்தகைய காணிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை.
இன்றைய கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமானால் காயீனின் காணிக்கையின் முக்கியமான பொருளை புரிந்து கொள்ளவேண்டும். இன்றைய உலகின் சிலருக்கு மட்டுமே கர்த்தரின் இருதயம் புரியும், அவர்களுக்கு தம் கனவில் கூட தாம் கர்த்தருக்கு கொடுப்பது காயீனின் காணிக்கை என்பது புரியாது.
கர்த்தருக்கு முன் ஒருவர் நிற்கும்போது, அவனின்/அவளின் பாவங்களினால் அவர் மரித்து நரகம் செல்ல வேண்டியவர் என்பதை அவன்/அவள் முதலில் அறிந்துகொள்ளவேண்டும். உங்களுடைய பாவத்தின் காரணமாக நீங்கள் அழிந்து நரகம் செல்லவேண்டியவர்கள் என்று கர்த்தருக்கு முன்பாக அறிந்துகொண்டீர்களா? இதனை நீங்கள் ஒத்துக் கொள்ளவில்லையெனில், நீங்கள் இயேசுவை விசுவாசிக்க வேண்டியதில்லை, ஏனெனில் இயேசு பாவிகளின் இரட்சகராயிருக்கிறார். தேவன் நம்மிடம் கூறினார், “நோயில்லாதவர்களுக்கு மருத்துவன் தேவையில்லை, நோயுள்ளவனுக்கே மருத்துவன் தேவை.” பாவத்தின் நுகத்தடியில் துன்புறும் ஆத்துமாக்களுக்கு நம் தேவன் தேவை, தாம் மறுபடியும் பிறக்காவிட்டாலும் தம்மை பாமற்றவர்கள் எனக் கூறிக்கொண்டு தம்முடைய சொந்தப் பாவங்களை அறிந்துகொள்ளாதவர்களுக்கு அவர் தேவையில்லை.
அடிப்படையில் அனைவருமே பாவிகள். ஆகவே கர்த்தர் மனிதகுலத்தை தீர்க்க வேண்டியவராயிருக்கிறார், மனிதகுலம் கர்த்தரின் ஆக்கினைத் தீர்ப்பை சந்திக்க வேண்டியதாயிருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்களும் நானும், அழிந்து நாசமாய்ப்போக வேண்டியவர்கள். ஆனால் நம்மை நரகத்தின் அழிவிலிருந்து தப்புவிக்க தேவன் யோர்தான் நதியில் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் சுமந்து, நம்முடைய இடத்திலிருந்து கர்த்தரின் தீர்ப்பைப் பெற்றார். ஆகவே, கர்த்தருக்கு முன்பாக பாவம் செய்பவர்கள், தம்மைப் பாவிகள் என்று ஒப்புக்கொள்பவர்கள் மட்டுமே கர்த்தரை விசுவாசிக்க வேண்டும், இவர்களுக்கு மட்டுமே கர்த்தர் இரட்சகரானார்.
இரட்சிப்பெனும் வெள்ளை ஆடையை அணிவிக்கும் விசுவாசம்
வேதாகமம் “மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது” என்று கூறுவதைப் போல், மனிதனின் உயிர் இரத்தமாகும். நம்முடையப் பாவங்களுக்காக நாம் மரிக்கவேண்டும். அப்படியானால் இயேசு ஏன் சிலுவையில் மரித்தார்? இயேசு தன் மீது நம் அனைத்துப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டதால் சிலுவையில் மரித்தார், பாவத்தின் சம்பளம் மரணம் என்றிருப்பதால், இயேசு தம் உயிராகிய இரத்தத்தை கிரயமாகச் சிந்தி, நம் இடத்திலிருந்து மரித்தார். இந்த உண்மைக்கு சாட்சியாகவே, அவர் சிலுவையில் அறையப்பட்டு, இரத்தஞ் சிந்தி நமக்காக சிலுவையில் மரித்தார்.
வேதாகமம் “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்” என்று கூறுவதைப் போல், நமது மீறுதல்களினிமித்தமாகவும், அக்கிரமங்களினிமித்தமாகவும் அவர் மரித்தார். ஆகவே, அவருடைய மரணம் நம் மரணமாகும், அவருடைய உயிர்த்தெழுதல் நமது உயிர்த்தெழுதலாகும். இதனை நீங்கள் விசுவாசிகிறீர்களா?
நம்மை இரட்சிக்க இயேசு இப்பூமிக்கு வந்தார், நம் பாவங்களை மறையச் செய்ய ஞானஸ்நானம் பெற்றார். மக்கள் அவரை அவமதித்தனர், அவரின் ஆடைகளைத் திருடினர், துப்பினர், அவர் முகத்தில் அறைந்தனர். தன் முகத்தில் அறையப்படவும் உமிழப்படவும், கர்த்தராகிய இயேசு இத்தகைய விதமாய் ஏன் தாழ்த்தப்பட்டார்? நம்முடைய பாவங்களினிமித்தம் அவர் அவமதிக்கப்பட்டார்.
ஆகவே தேவனின் மரணமும் உயிர்த்தெழுதலும் நம் ஒவ்வொருவரினதும் மரணமும் உயிர்த்தெழுதலுமாகும். இவ்வுலகின் எந்த மதத்தலைவர்களும் நம் பாவங்களை பொறுப்பெடுத்ததில்லை. முகம்மதுவோ, புத்தரோ, அல்லது இவ்வுலகிலுள்ள வேறு யாருமோ நம் பாவங்களுக்காகத் தன் உயிரைவிட்டதில்லை.
ஆனால் தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து இப்பூமிக்கு வந்து யோர்தான் நதியில் தான் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் நம் பாவங்களை ஏற்றுக்கொன்டு நம்மைப் பாவமற்றவர்களாக்கினார். நம்முடைய மரணத்திலிருந்தும், நியாயத்தீர்ப்பிலிருந்தும், அழிவிலிருந்தும் நம்மை விடுதலை செய்ய, அவர் தன் சொந்த உயிரையே விட்டார்.
ஆகவே, வேதாகமம் “ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைப் பேரோ, அத்தனைப்பேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே” என்று கூறுவதைப் போல், நம்முடைய எல்லாப் பாவங்களையும் நம்மிடமிருந்து எடுத்த இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிப்பதின் மூலம் நம்முடைய விசுவாசம் நீதியின் ஆடையினால் உடுத்தப்பட்டு, பாவ நிவாரணம் பெற்றதாய் இருக்கவேண்டும். இயேசுவின் ஞானஸ்நானத்தின் மீது இப்படியாகவுள்ள விசுவாசம் நம் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.
தம்முடைய குமாரனை விசுவாசிக்கும் நம் விசுவாசத்தைக் கண்டு கர்த்தர் நம்மைத் தன் பிள்ளைகளாக்கினார். இதுவே பெற்றுக்கொள்வதாகும். நாம் அவருக்கு முன் எடுத்துவரும் நம் விசுவாச காணிக்கையைப் பார்த்து கர்த்தர் நம்மை வரவேற்கிறார். நமது செய்கைகளைப் பார்த்து அவர் நம்மை வரவேற்காமல், தேவகுமாரரும் இரட்சகராகி, நம் பாவங்களைச் சுமந்து, நமக்காக தீர்க்கப்பட்டு, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்த இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தைக் கண்டு நம்மைத் தம் பிள்ளைகளாக வரவேற்கிறார்.
என்னுடைய அன்பு சகோதர சகோதரிகளே, இதுவே உண்மையான விசுவாசமாகும். நாம் நம்முடைய செய்கைகளினால் இரட்சிக்கப்படவில்லை, ஆனால் இயேசுகிறிஸ்துவின் செய்கைகளினால் வெள்ளை ஆடைகளை அணிந்தோம். எந்தவொரு மனிதனின் செய்கையும் 100 சதவீதம் சுத்தமாயிருக்காது. நம்முடைய இருதயங்கள் பாவமில்லாததாக வேண்டுமெனில், நம்முடைய முயற்சிகளைக் கைவிட்டு அதற்கு பதிலாக தேவனை நம் இரட்சகராக விசுவாசிக்கவேண்டும். இதனை விசுவாசிப்பதினால், இதனால் மட்டுமே வெள்ளை ஆடை உடுத்தியவர்களாக முடியும்.
அப்பொழுது நம் பெயர்கள் ஜீவப்புத்தகத்தில் எழுதப்படும், நாம் தூதர்களுக்கு முன்பாக கர்த்தரால் அங்கீகரிக்கப்படுவோம். இயேசுதாமே நம்மைக் கர்த்தரின் பிள்ளைகளாக அங்கீகரிப்பார், அவர் கூறுவார், “நான் உன்னை இரட்சித்தேன்; நான் உன் பாவங்களை மறையச் செய்ததால் நீ நீதிமான் ஆனாய்” இதுவரை நாம் பேசிக்கொண்டிருந்த வெளிப்படுத்தின விசேஷத்தின் முக்கிய வசனங்கள் கூறும் சரியான பொருள் இதுவே. கர்த்தரின் ஆலயத்திற்குள் வருவதன் மூலமே நாம் பாவநிவாரணம் பெறமுடியும், பாவநிவாரணம் பெற்றவர்கள் அவரின் ஆலயத்தில் மட்டுமே காணப்படுகிறார்கள்.
பிதாவாகிய கர்த்தர், தம்முடைய குமாரர் மீதுள்ள நமது விசுவாசத்தைக் கண்டு நம்மை வரவேற்றார். தினமும் நாம் தவறிழைப்பவர்களும் குறைபாடுள்ளவர்களும், நாசமடைவதைத் தவிர வேறுவழியில்லாதவர்களும் பலவீனத்தில் தொடர்ந்து விழுந்து கொண்டே இருப்பவர்களாய் இருந்தாலும், கர்த்தர் தனது குமாரனின் மீதுள்ள நம் விசுவாசத்தைக் கண்டு, தன் சொந்தகுமாரனை வரவேற்றதைப் போன்றே, நம் விசுவாசத்தின் பொருட்டு நம்மை வரவேற்றார். நம் தேவன் நம்மை இரட்சித்தார்.
அவர் நம்மை வெள்ளை ஆடைகளால் தரிப்பித்தார். நம்மிருதயங்களில் பாவங்களில்லை என்ற விசுவாசமே நாம் வெள்ளை ஆடைகளை அணிந்திருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சி. நம்முடைய இருதயங்கள் வெள்ளை ஆடைகள் அணிந்திருப்பவையாக அவர் முன் நிற்கும் போது நம் மாமிசத்தை தெய்வீக சரீரமாக மாற்றுவதாக தேவன் நமக்கு உறுதியளித்தார்.
இவ்வுலகில் நீதிமான்களும் கர்த்தரின் ஊழியர்களும் இருக்கும் கர்த்தரின் ஆலயங்களை நாம் காணலாம். இந்த ஆலயங்களில் வெள்ளை ஆடைகளை அணிந்தவர்கள் இருப்பார்கள், கர்த்தர் தன் ஆலயங்கள் மூலமாகவும், தம் ஊழியர்கள் மூலமாகவும் செயல்புரிகிறார்.
வெளி 3:5 இற்கு மீண்டும் திரும்புவோமாக: “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.”
மேற்கண்ட வசனத்தின் மூலம் கர்த்தர் கூறிய ஒரே முன் நிபந்தனை “ஜெயங்கொள்ளுகிறவனுக்கு” மட்டுமே வெள்ளை ஆடைகளை அவர் அணிவிப்பார். நாம் ஜெயங்கொள்ளவேண்டும். ஆனால் இயேசுவை விசுவாசித்தாலும் தன் அன்றாடப் பாவங்கள் மன்னிக்கப்பட தினமும் பாவ அறிக்கை செய்து பாவமன்னிப்பு பெறவேண்டும் என்று நம்புகிறவர்கள் சாத்தானுடனான போரில் அவனை வெல்லுகிறவர்கள் அல்ல, அவர்கள் தோல்வியுற்றவராவர். இத்தகைய விசுவாசமுள்ள மக்களை வெள்ளை ஆடையால் தரிப்பிக்க முடியாது. அவர்கள் நீதிமான்களாவதே இல்லை.
ஜெயங்கொண்டவர்களால் மட்டுமே தேவனின் முழுமையான இரட்சிப்பின் செய்கைகளை விசுவாசிக்க முடியும். பரிசுத்தமாகும் தத்துவம், சரியெனக்காட்டும் தத்துவம், ஆகிய தவறான போதனைகளை மேற்கொள்ளும் விசுவாசத்தை, தேவன் ஏற்கெனவே உங்களுக்கு அளித்துள்ளார். நற்செய்தியாகிய ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் ஆகிய தன் உண்மை நற்செய்தியால் கர்த்தர் உங்களை இரட்சித்தமையால், நிறைவான இரட்சிப்பையும் சாத்தானிடமிருந்து விடுதலையையும் எடுத்துவராத தவறான நற்செய்திகளுடன் போரிட்டு அவற்றை மேற் கொள்ளலாம்.
நாம் செய்யவேண்டியதெல்லாம், நம் பாவங்கள் அனைத்தும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டுவிட்டது என்று நம் இருதயங்களில் உறுதியாக உணர்ந்து விசுவாசத்துடன் நம் பாவங்களை கையளிப்பது மட்டுமே. இயேசு மரித்தபோது நாமும் மரித்தோம் என்றும் அவர் நம்மிடத்திலிருந்து நமக்காக மரித்தார் என்றும் நாம் விசுவாசிக்கவேண்டும். நாம் மீண்டும் வாழும்படியாக இயேசு மீண்டும் உயிரோடெழுந்தார் என்பதையும் விசுவாசிக்க வேண்டும். இந்த உண்மையின் மீது இத்தகைய உறுதியான விசுவாசமிருக்கையில் கர்த்தர் நம் விசுவாசத்தைக் கண்டு நம்மை நீதிமான்களாக அங்கீகரிப்பார்.
இதனை வேறுவிதமாகக் கூறினால், அது இவ்வார்த்தையின் பொருளாகும் “அவருடைய நாமத்தின் மேல் விசுவாசம் உள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.” (யோவான் 1:12). இயேசுவைக் குறித்து தெளிவான அறிவு இல்லாவிட்டாலும் “இயேசுவை நான் விசுவாசிக்கிறேன்” என்று வாயினால் கூறினால் மட்டும் மக்களால் கர்த்தரின் பிள்ளகளாகிவிடமுடியாது.
கர்த்தரின் வார்த்தை தொடர்கிறது, “அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல் தேவனாலே பிறந்தவர்கள்.” இது சரியே கர்த்தரின் பிள்ளைகளாவது விசுவாசத்தினால் மட்டுமே சாத்தியமாகும். இதற்கு நாம் பொய்யர்களுடன் போரிட்டு அவர்களை வெற்றிப்பெற வேண்டும். இப்படியாக பொய்யர்களை வெற்றி பெற்று பாவமன்னிப்பு பெற்றவர்கள் தம் மாமிசத்தின் ஆசைகளை மேற்கொண்டு கர்த்தருடனும் நடக்கவேண்டும். வேறுவார்த்தைகளில் கூறுவதானால் கர்த்தரின் சித்தத்தின்படி அவர்கள் வாழவேண்டும்.
அப்படியானால் கர்த்தரின் சித்தம் என்ன? வெள்ளை ஆடை அணிந்தவர்களுக்கான கர்த்தரின் சித்தம், அவர்கள் ஐக்கியமாகி தன் நற்செய்திக்கு ஊழியஞ்செய்ய வேண்டுமென்பதே. நீதிமான்கள் தனித்தனியே வாழ்ந்தாலும், அவர்களுக்கான அவரின் சித்தம், அவர்கள் ஒன்றாக கூடிச் சேர்ந்து, ஊழியஞ்செய்து, கர்த்தரைப் புகழ்ந்து, பாவிகளும் வெள்ளை ஆடையை அணியும்படி அவர்களுக்கும், நற்செய்தியைப் பரப்ப வேண்டுமென்பதே. ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக செயல்படும் வாழ்க்கையானது, கர்த்தரின் மக்களினதும், அவரின் ஊழியர்களினதும் வாழ்க்கையாகும்.
நாம் இத்தகைய விதமாக வாழும்போது, கர்த்தர் நம்மைத் தன் “நீதியினால்” மட்டும் தரிப்பிக்காது, பூலோகத்தின் ஆசீர்வாதங்களையும் ஆவிக்குரிய பரலோக ஆசீர்வாதங்களையும் கூட தருகிறார். நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு இந்த நற்செய்தியைப் பிரசங்கிக்கச் செய்வதின் மூலம் அவர்களை அவர் வெள்ளை ஆடைகளால் தரிப்பிக்கிறார். கர்த்தர் நீதிமான்களையும் அவர்களைச் சுற்றியிருப்பவர்களையும், வெள்ளையால் தரிப்பித்தார். சத்திய வார்த்தையை விசுவாசிப்பதின் மூலம், பொய்யுடனான போரில் வெற்றி பெற கர்த்தர் நம்மை அனுமதித்தார். இந்த ஆவிக்குரிய போரில் வெற்றிபெற்ற நீதிமான்களுக்கு வெள்ளை ஆடையை அணியும் ஆசீர்வாதத்தையும் அவர் அருளினார். தேவனுக்கே புகழ் உண்டாவதாக.