(வெளி 3:7-13)
பிலதெல்பியா சபையைப் போன்ற சபைகள் இந்த உலகில் இன்னமும் இருக்கின்றன
ஆசியாவிலுள்ள ஏழுசபைகளிலும் பிலதெல்பியா சபையே தேவனால் அதிகம் பாராட்டப்பட்டதும் இரட்சிக்கப்பட்டதுமாகும் என் கர்த்தர் நமக்குக் கூறுகிறார்.
ஆசியாவின் ஏழுசபைகளுடனும் பேசிய கர்த்தர், இக்காலத்திலும் கூட, தம் சபை பிலதெல்பியாவின் சபையை போலிருக்கவேண்டும் என விரும்புவதை நாம் காணலாம், இப்படி இருப்பதால் அவற்றின் மூலம் அவரால் செயல்படவும் பிரியப்படவும் முடியும். இந்நாட்களிலும் கூட கர்த்தரால் பாரட்டப்பட்ட ஆலயங்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிக்கின்றன.
அந்த காலத்தைப் போன்றே, கர்த்தர் மீது விசுவாசமுள்ள பரிசுத்தவான்கள், தம் திறமைகள் குறைவானவையாக இருந்தாலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களாய் உள்ளனர். இத்தகைய ஊழியர்கள் மீது கர்த்தர் பிரியமாயிருக்கிறார். தம் கைகளை அவர்கள் மேல் வைத்து பிசாசுகளை விரட்டவோ தீர்க்கதரிசனம் கூறவோ அவர்களால் இயலாமலிருக்கலாம். பேசுவதிலோ மற்றவர்களை சமாளிக்கும் திறனிலோ கூட போதிய வல்லமை இராதவர்களாய் இருக்கலாம். அவர்கள் செய்யும் ஒரே காரியம் என்னவெனில், இயேசு யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் மனிதர்களின் அனைத்து பாவங்களையும் தன்ம்மீது ஏற்றுக்கொண்டதால் நம் பாவங்களுக்கான தண்டனை அவருக்குச் சென்றபோது அவற்றைத் தம் சிலுவையின் இரத்தம் மூலம் சுத்தப்படுத்தினார், என்பதை விசுவாசித்து அதனை பிரசங்கிப்பதே.
தேவனைப் பின்பற்றி, அவரை ஆராதித்து, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள தம் வார்த்தையினால் அவரின் சித்தத்திற்கு கீழ்ப்படியும் விசுவாசிகள் அவரின் ஊழியர்களாவர். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிப்பவர்கள் பொருட்களில் செல்வம் படைத்தவர்களாய் இல்லாதிருக்கலாம். அவர்களிடமிருப்பதெல்லாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நம்பிக்கையும் விருப்பமும் மட்டுமே. நற்செய்தியை பரப்பும் இந்த வேளையே தேவனின் இருதயத்தைப் பிரியப்படுத்தும் என்று அவர்கள் விசுவாசிக்கின்றனர். ஏனெனில் தேவன் யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, சிலுவையில் அறையுண்டு, நம்முடைய அனைத்துப் பாவங்களும் மறையும் வகையில் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை மட்டுமே விசுவாசிப்பவர்கள் தேவனுக்கு மட்டுமே நன்றி கூறி அவரை மட்டுமே பின்பற்றுபவார்கள்.
நமக்கு வேண்டியதெல்லாம், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது எல்லோருக்கும் பரப்பப்படுவதும், எல்லோரும் அவர்களின் அனைத்துப் பாவங்களிலிருந்து விடுதலையாவதுமே. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை முழு உலகிற்கும் பிரசங்கிக்க கர்த்தர் நம்மை அதிசயமாய் அனுமதித்ததோடு, அநேக கனிகளைக் கொடுக்கும் விதமாய் நம்மை ஆசீர்வதிக்கவும் செய்தார். முடிவு காலத்தில் இரத்தசாட்சியாக மரிக்கவும், ஆசீர்வாதமான எடுத்துக்கொள்ளப்படுதலையும் ஆயிர வருட அரசாட்சியின் வாழ்க்கையின் மீதும் விசுவாசத்தையும் நமக்கருளினார். தேவனுக்காக இரத்தசாட்சியாக மரிப்பதை கர்த்தர் அனுமதித்ததுடன், முதல் உயிர்த்தெழுதலில் பங்குபெறவும் பரலோக மகிமையினால் தரிப்பிக்கப்படவும் அனுமதித்தார்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கிக்க இப்போது அர்ப்பணித்தவர்களாகிய நாம் கர்த்தரின் நேசத்திற்குரிய ஆலயத்திற்கு சொந்தமானவர்கள். உலகம் முழுவதும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை எப்படி பிரசங்கிப்பது என எண்ணுவோம். நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கான கதவுகள் ஏற்கெனவே திறக்கப்பட்டுவிட்டதாக கர்த்தர் தமது சபைகளுக்கு கூறினார். கர்த்தர் நியமித்தவற்றை யாராலும் நிறுத்த முடியாததாகையால் எல்லாவற்றையும் அவர் நிறைவேற்றுவார்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் நாம், அவரின் ஞானஸ்நான நற்செய்தியை உலகம் முழுவதும் பிரசங்கிக்க அனுமதித்தார். இன்றும் கூட, இப்பூமியில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பரப்ப ஆலயங்கள் பணிபுரிவதால் அவை ஆசீர்வதிக்கப் பட்டவையாயுள்ளன. ஒவ்வொருவரின் தனித்திறமைகளையும் நோக்கினால் அவற்றில் அநேக குறைபாடுகள் இருக்கலாம், ஆனால் அவர்களின் இருதயங்களில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது அன்பிருப்பதால், கர்த்தர் அவர்களை இறுகப்பற்றிக் கொண்டு அவர்களின் மூலம் செயல்படுகிறார்.
இந்த உலகில் இதுபோன்ற ஆலயங்கள் இருப்பது இவ்வுலகிற்கான பெரிதான நம்பிக்கையாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பரப்பும் பணியை கர்த்தர் அவர்களிடம் ஒப்படைத்துள்ளார், அவர்கள் செய்வதை யாரும் நிறுத்த முடியாதவாறும் செய்துள்ளனர். இவ்வுலகின் எல்லா இடங்களிலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்கள் பிரசங்கிக்கின்றனர், இப்படியாக இந்த நற்செய்தி உலகம் முழுவது பரவி வருகிறது. கர்த்தர் அவர்களை பலப்படுத்தி, பாதுகாத்து அவர்களுடன் செயல்புரிகிறார். இப்பணிக்காக ஒன்று சேர்ந்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இவ்வுலகிலுள்ள எல்லா நாடுகளிலும் பரப்பிவரும் அவர்களை கர்த்தர் ஆவிக்குரியபடியும் சரீரப்படியும் ஆசீர்வதிப்பதை நாம் காண்போம்.
இவ்வுலகின் எல்லா மூலைகளுக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அச்சடித்தும் மின்னனுவியல் நூல்கள் மூலமாகவும் பிரசங்கிக்கிறோம். இதனை உலகின் முடிவு வரை தேவன் நம்மூலமாக செயல்புரிவார். நம்முடைய நூல்கள் மூலம் உலகிலுள்ள 6 பில்லியன் மக்களுக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிக்க கர்த்தர் நம்மை ஏதுவாக்குகிறார். கர்த்தர் நம்மனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
கர்த்தரைப் பிரியப்படுத்தும் செய்கைகளை நாம் செய்ய வேண்டுமானால், ஆவிக்குரிய போரிற்கு நாம் எப்போதும் தயாராக இருக்கவேண்டும். கர்த்தர் தம் ஊழியர்களை உறுதியாகப் பற்றிக்கொண்டு அவர்களை ஆசீர்வதிக்க வேண்டுமென ஜெபிக்கிறேன். நம்முடைய தேவனைப் போல் விசுவாசம் வைக்கக்கூடியவர்கள் யாருமில்லை. இவ்வுலகிலுள்ள எந்த ஒரு சத்தியமும், இத்தனைத் தெளிவாகவும் நிறைவாகவும், நாம் விசுவாசிக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி எடுத்து வந்த இரட்சிப்பை போல், எடுத்துவராது என்று நாம் நம்புகிறேன்.
ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு கர்த்தர் கொடுத்த ஆசீர்வாத வார்த்தை வெளிப்படுத்தின விசேஷமாகும்
கர்த்தர் நம்மிடம் கூறினார். “ஜெயங் கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன்” இச்சத்தியத்தின் பொருள் அவர் அத்தகைய மனிதர்களை ஆயிரவருட அரசாட்சியில் வாழச் செய்வர் என்பதாகும். இங்கு “ஜெயங்கொள்ளுகிறவன்” என்பது முடிவு காலத்தில் தம் விசுவாசத்தை பாதுகாக்க சத்தியத்தின் மூலம் அந்திகிறிஸ்துவை எதிர்த்து போராடுபவர்களையும், இக்காலத்தில் சத்திய வார்த்தையின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் தவறான நற்செய்தியை பின்பற்றுபவர்களை எதிர்த்து போராடி அவர்களை ஜெயங்கொள்ளுபவர்களையும் குறிக்கிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை முழு உலகிற்கும் பிரசங்கித்து தீமையை நன்மையால் வெல்லவேண்டும். வார்த்தையாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நமது விசுவாசத்தின் மூலம் தவறான கொள்கைகளையும், எல்லாப் பொய்யர்களையும் எதிர்த்துப் போராடி அவர்களை மேற்கொள்ளவேண்டும்.
பொய்யர்களை எதிர்த்து போராடி, அவர்களை வெல்ல நற்செய்தி வார்த்தையாகிய நீர் மற்றும் ஆவியை நாம் எப்போதும் அசைபோட வேண்டும். இப்போது நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கத் தொடங்கி நம் அனைத்துப் பாவங்களும் சுத்தமாக்கப்பட்டிருந்தால், பொய்யர்களுடனான நம் போர் இந்நொடியே தொடங்குகிறது. உண்மை நற்செய்தியை விசுவாசிப்பவர்கள் தவறான நற்செய்தியை உடையவர்களுடன் போராடி அவர்களை மேற்கொள்வர்.
தவறான நற்செய்தியைப் பின்பற்றும் இத்தகையவர்களுக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை எப்போதும் பிரசங்கிக்க வேண்டும். ஏன்? ஏனெனில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வல்லமையால் அவர்களின் தவறான விசுவாசத்தை அழித்து அவர்களுக்கு புதிய வாழ்வைக் கொடுக்கமுடியும். தீமையை நன்மையால் வெல்லுங்கள் என்று வேதாகமம் நமக்கு கூறுகிறது. இந்த ஆத்துமாக்களை அவற்றின் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் ஆவிக்குரிய நற்போரை எப்போதும் விட்டுக்கொடுக்கக் கூடாது.
நம்முடைய ஆவிக்குரிய போரில் ஆசீர்வாதமாகிய ஆத்துமாக்களின் இரட்சிப்பு காணப்படுகிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நமது விசுவாசத்தால் பொய்யர்களுடன் போரிட்டு அவர்களை எப்போதும் வெல்வதால், நித்திய ஜீவனின் அனைத்துக் கனிகளையும் கர்த்தருக்கு கொடுக்கலாம்.
அத்திமரக் கதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டுமென தேவன் நம்மிடம் கூறினார்
அத்திமரம் இஸ்ரவேல் நாட்டைக் குறிக்கிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் தேசிய பூவோ, தேசிய மரமோ இருப்பது போல், அத்திமரம் இஸ்ரவேலைக் குறிக்கிறது. இஸ்ரவேல் அடர்த்தியான இலைகளுடன் வளரும்போது, முடிவு காலம் உலகை நெருங்கிவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். இவ்வுலகில் இஸ்ரவேல் மீண்டும் கட்டப்பட்டு, வல்லமையுடையதாக மாறும்போது தேவன் திரும்பி வருவார் என்று வேதாகமம் நம்மிடம் கூறுகிறது.
இந்நாட்களில், இஸ்ரவேலர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்குமுள்ள சண்டையைப் பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. இஸ்ரவேல் தனது வரலாற்று எல்லைகளைப் பெற்று பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இஸ்ரவேலின் எதிர்காலம் கர்த்தரிடம் இருக்கிறது. இஸ்ரவேல் எழுச்சியடையுமா வீழ்ச்சியுடையுமா என்பதெல்லாம் கர்த்தரின் வார்த்தைக்கேற்ப நிறைவேறும். இஸ்ரவேல் இவ்வுலகிலிருந்து மறையும்போது தேவனின் இரண்டாம் வருகை இப்பூமியில் நிறைவேறியிருக்கும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். வேதாகமம் கூறுவதைப் போல், அத்திமரம் அடர்த்தியாக வளரும்போது தேவன் திரும்பி வருவார். இஸ்ரவேலின் கட்டுதலுடனும் செழிப்புடனும் உலகின் முடிவு வருமென அவர் முன்கூறினார். முடிவுகாலம் உலகின் இயற்கை சூழலை முற்றிலும் அழிக்கும் பேரழிவுகளை உடையதாக இருக்குமென முன்னறிவித்தார்.
ஒவ்வொருவரும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பெற்று அதனைக் கடைப்பிடிக்க வேண்டுமென கர்த்தர் கூறினார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது கர்த்தரின் அனைத்து நோக்கங்களும் உள்ளன. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களே தம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்படுவர். தேவன் கூறினார், “ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்” (லூக்கா 21:36). வரப்போகிற உபத்திரவத்திலிருந்து நமது பலத்தின் மூலம் தப்ப முடியாது. ஆனால் கர்த்தரின் வார்த்தையை விசுவாசித்து அதனை மேற்கொள்ளலாம். உபத்திரவத்தின் காலம் நெருங்கி வருவதால் இரத்தசாட்சிக்கான நம் விசுவாசத்தை ஆயத்தம் செய்யும் சூழ்நிலையில் நாமிருப்பதை காணலாம்.
முடிவுகாலத்தின் மகா உபத்திரவத்தின் போது நாம் இருக்கமாட்டோம் என்று கிறிஸ்தவர்கள் எண்ணினால், அவர்களுடைய விசுவாசம் தவறானது. இக்கொள்கை வேதாகமக் கொள்கையிலிருந்து விலகிச் செல்லுகிறது, வேதவசனங்கள் குறிப்பாக வெளிப்படுத்தின விசேஷம், ஏழு வருட உபத்திரவக் காலத்தின் முதல் மூன்றரையாண்டுகள் கடக்கும்போது பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக மரிப்பது நடக்கும் என கூறுகிறது. மகா உபத்திரவத்தின் ஏழாண்டு காலத்திற்குள் தாம் பிரவேசிக்க மாட்டோம் என பரிசுத்தவான்கள் எண்ணினால் அது மிகவும் ஆபத்தான உருக்குலைந்த விசுவாசத்திற்கு வழி நடத்தும். இயேசுவை விசுவாசிப்பவர்கள் மகா உபத்திரவத்தின் நடுவில் இருப்பார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும்.
கர்த்தரின் அனைத்து வார்த்தைகளையும் கருத்தில் கொண்டால், நீதிமான்கள் எத்தனை காலம் இவ்வுலகில் இருப்பர்? பாவிகளைத் தன் அடையாளத்தை பெற்றுக்கொள்ளும்படி சாத்தான் வற்புறுத்தும் வரை பூமியில் இருப்பர், பரிசுத்தவான்கள் அந்திகிறிஸ்துவின் படையினரால் இரத்தசாட்சியாக கொல்லப் படுவர். இதுவே கர்த்தர் வெளிப்படுத்திய சத்தியம், இதுவே சரியான விசுவாசம்.
மிகப்பெரிய ஆவிக்குரிய போர் முடிவுகாலத்தில் வரும்
நீதிமானின் விசுவாசப் பலம் கர்த்தர் அனுமதித்த மகா உபத்திரவத்தின் போது தெளிவாக விளங்கும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் உங்கள் விசுவாசம் இல்லாவிட்டால் முடிவு காலத்தில் சாத்தானுடனான உங்கள் போரில் உண்மையான வெற்றியை உங்களால் பெறமுடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதே சமயம், இறுதிவெற்றி நீதிமான்களுக்கே சொந்தமாகும் என்பதை நீங்கள் தெளிவாக அறிந்துகொள்ளவேண்டும், உலகின் முடிவு நெருங்கினாலும் கூட அவர்களின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தினால், அவர்கள் உண்மையாகவே வெற்றி வீரர்கள் ஆவர். முடிகாலம் வருவதற்கு முன் உலகம் முழுவதும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பரப்பும் செய்கையை நாம் முழுமைப்படுத்தவேண்டும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம் நம் தேவனை நாம் பிரியப்படுத்தவேண்டும். இறுதி வெற்றியை நமக்களிக்கும் விசுவாச வார்த்தையின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி நம்மிடம் இருக்கிறது. உலகின் அழிவைக் குறித்து கர்த்தர் தெளிவாக முன்கூறினார். அந்நேரத்தில் தேவன் திரும்பி வருவார் என்றும், பரிசுத்தவான்களை பரலோகத்திற்கு எடுத்துக்கொள்வார் என்றும், அதுவரை இவ்வுலகில் மிச்சமிருக்கும் அனைவருக்கும் பெரிதான பயங்கரத்தை எடுத்துவருவார் என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து, இந்த உண்மையை விசுவாசத்தால் ஆயுதம் ஏந்தியவர்களாய், முடிவு காலத்தை நாம் வரவேற்க வேண்டும். நோவாவின் காலத்தில் மக்கள் உண்டு, குடித்திருக்கும்போது உலகின் முடிவு வரும் என்று கூறியதைப் போல், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்போரிடம், ஆயிரவருட அரசாட்சிக்காக விசுவாசத்துடன் காத்திருக்குமாறு கர்த்தர் கூறினார்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காமல், உலகின் முடிவுகாலத்தின் பிரச்சனைகளை மக்களால் தீர்க்க முடியாது. எப்படியிருந்தாலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசித்தேயாக வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காதவர்களை கர்த்தரால் பொறுக்க முடியாது. முடிவு காலத்தின் கடைசிபகுதியில் இவ்வுலகிற்கு மகா பயங்கரமான வாதகளை கர்த்தர் அனுப்புவார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காதவர்களால் கர்த்தரின் நீதியின் தீர்ப்பிலிருந்து தப்பமுடியாது, எனவே நற்செய்தியை அவர்கள் இப்போதே விசுவாசிக்கவேண்டும்.
ஆகவே, கர்த்தரின் தீர்ப்பினைத் தவிர்க்க ஒவ்வொருவரும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் கற்று அவனின்/அவளின் முழு இருதயத்துடனும் அதனை விசுவாசிப்பது மிகவும் அவசியமானதாகும். அனைவருக்கும் பொதுவான இரட்சிப்பின் சத்தியம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே அன்றி கர்த்தருக்கு முன்பு வேறெந்த நற்செய்தியும் இல்லை. முன்பு எப்போதையும் விட, இப்பொழுதே இவ்வுலகிற்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி அவசியம் தேவைப்படுகிறது, ஏனெனில் அது தன் பாவச் சுபாவத்தால் பாவத்தின் ஆழத்தில் வாழுகிறது.
இக்கடைசி காலத்தில், எதிர்காலத்தைக் குறித்த எந்த உத்திரவாதமும் இல்லாததால், மக்கள் அன்றாடம் பாவஞ்செய்து தம் சொந்த ஆசைகளை மட்டுமே பின்தொடருகின்றனர். மனிதகுலத்தின் உண்மையான நம்பிக்கை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வார்த்தையில் காணப்படுகிறது, இந்த வார்த்தையால் மட்டுமே நமக்கு உண்மையான நம்பிக்கையை அளிக்க முடியும். நீங்கள் பாவியாக இருப்பதினால், வெகு சீக்கிரமாக உங்கள் பாவங்களுக்காக கர்த்தரால் நியாயந் தீர்க்கப் படபோவதால், உங்கள் முழு இருதயத்துடனும் இயேசு நல்கிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கவேண்டும். அப்பொழுது உங்களால் கர்த்தரின் பயங்கரமான தீர்ப்பிலிருந்து விடுதலையாக முடியும். ஒவ்வொருவரையும் தம் பாவங்களுக்காக மனம் வருந்தி, கர்த்தரிடம் திரும்பி, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென வேதாகமம் அறிவுரை கூறுகிறது.
உலகின் முடிவு நேரத்தில் மக்கள் நன்கு உண்டு, பாவத்தில் தூங்கியவர்களாக, உணர்ந்துகொள்ளுமுன்பே எரியும் கடலில், கந்தகக் கடலில் பிரவேசிப்பார்கள்.
கர்த்தர் அளித்த தம் பாவங்களுக்கான இரட்சிப்பை மக்கள் பெற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறியாமல், அவர்களால் எப்படித் தம் பாவங்களிலிருந்து விடுதலையாக முடியும்? அவன்/அவள் தம் பாவங்களுக்காக கர்த்தரிடமிருந்து பயங்கரமான நியாயத்தீர்ப்பை அவன்/அவள் பெறவேண்டுமென அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே விடுதலையின் சத்தியம் எனவும் ஆசீர்வாத வார்த்தை எனவும் அவர்கள் அறிந்துகொள்ளவேண்டும்.
எந்த நாளில், எந்த நேரத்தில் உலகின் முடிவு வரும் என்று வேதாகமம் நமக்கு கூறவில்லை. உலகம் அழியும் நேரத்தை மறைத்தது கர்த்தரின் ஞானமாகும். முடிவின் நேரத்தை கர்த்தர் வெளிப்படுத்தினால் அது பெரிய அமளிக்கையை எடுத்துவரும். இதனால் தான் நியாயத்தீர்ப்பு நாளைக் கர்த்தர் மக்களிடம் தெரிவிக்கவில்லை. ஆனால் கர்த்தர் நியமித்த நேரம் வருகையில், அனைத்தும் அவரால் நிறைவேற்றப்பட்டு, புதியதொரு உலகம் தொடங்கும்.
முக்கிய வசனத்தில் கர்த்தர் கூறினார், “என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிற சோதனைக் காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.” பரிசுத்தவான்களின் இரத்தசாட்சிக்குப் பிறகு வரும் ஏழு வாதைகளில் இருந்தும் பரிசுத்தவான்களை விடுவிப்பதாக அவர் கூறிய வார்த்தை கர்த்தரின் வாக்குத்தத்தமாகும். ஆயினும், அவர் பரிசுத்தவான்கள் முடிவுகாலத்தில் அந்திகிறிஸ்துவால் இரத்தசாட்சியாக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதிலிருந்து அவர்களுக்கு விலக்களிப்பார் என்பது இதன் பொருள் அல்ல. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து அவர்கள் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெறாததால் பெருந்திரளான மக்கள் கர்த்தரின் பயங்கரமான நியாயத்தீர்ப்பைப் பெறுவார்கள். இதன் விளைவாக, அவர்களின் பாவம் நிறைந்த ஆத்துமாக்கள் நரகத்தினுள் விழும். ஆனால் கர்த்தர் பரிசுத்தவான்களுக்கு இரத்தசாட்சியை முன்னதாக அனுமதிப்பார், இந்த இரத்தசாட்சியாக மரித்தலே கொடுமையான வாதைகளிலிருந்து அவர்களை விடுவிக்கும்.
முடிவுநேர உபத்திரவத்தின்போது எத்தகைய குறியீட்டைப் மக்கள் பெறுவார்கள்
அந்திகிறிஸ்துவின் பெயர் குறிக்கப்பட்ட குறியீட்டை மக்கள் பெறுவார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. அந்திகிறிஸ்துவின் பெயருடைய குறியீட்டைத் தமது நெற்றியிலோ வலது கரத்திலோ பெற்றவர்கள் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் தள்ளப்படுவார்களென வெளிப்படுத்தலின் வார்த்தை நம்மிடம் கூறுகிறது. அந்திகிறிஸ்துவின் பெயருடைய இந்த குறியீட்டைப் பெறுவதால் அவர்கள் நித்தியமாக சாத்தானின் ஊழியர்களாவர். அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல் பாவமுள்ளவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
விசுவாசத்தின் மூலம், தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படக்கூடிய கிருபையின் காலம், இப்போது கடந்து செல்கிறது. முடிவுகாலத்தில் எண்ணிலடங்கா இரத்தசாட்சிகள் தோன்றுவர் என்று வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த இரத்தசாட்சிகளின் பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப் பட்டுள்ளதால் அந்திகிறிஸ்துவின் பெயருடைய குறியீட்டை அவர்கள் இயல்பாகவே தள்ளிவிடுவார்கள்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் அனைவரும் இச்சமயத்தில் இரத்தசாட்சியாக கொல்லப்படுவார்கள் என்று கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். சாத்தானின் குறியை ஏற்க மறுத்தமைக்காக அவர்கள் இரத்தசாட்சியாக கொல்லப்படுவார்கள். நீதிமான்களாகியவர்கள் முடிவுகாலத்தில் இரத்தசாட்சியாக மரிப்பதைக் குறித்து பயப்படக் கூடாது, அதற்கு மாறாக, அவர்கள் கர்த்தருக்கு நன்றி கூறவேண்டும், ஏனெனில் அவர்களின் மரணத்திற்கு பிறகு ஆயிரவருட அரசாட்சி அவர்களுக்காக காத்திருக்கிறது.
அந்திகிறிஸ்துவின் பெயருடைய குறியீட்டைப் பெற்றுக் கொள்வது நம் தேவனுக்குத் துரோகமான வஞ்சமான செயல் என்பதால், அதனை நாம் நிராகரிக்கவேண்டும். இரத்தசாட்சியாக மரிக்க நம்மால் எழமுடியும், ஏனெனில் இச்சமயத்தில் கர்த்தர் மீதுள்ள விசுவாசத்தை பற்றியிருப்பது கர்த்தருக்கு மகிமை அளிப்பதாகும். எல்லாக் கஷ்டங்களையும் மேற்கொள்ளும் வல்லமையை பரிசுத்தவான்களுக்கு அளிப்பதாக நம் தேவன் நம்மிடம் கூறினார்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை கர்த்தரின் ஆலயம் எப்படி எதுவரை பிரசங்கிக்க வேண்டும்?
நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பரப்ப தேவன் எவ்வளவு காலம் அனுமதித்தார்? இதற்கு பதில், மகா உபத்திரவக்காலத்தில் நாம் இரத்தசாட்சியாக மரிக்கும்வரை என்பதாகும். நீதிமான்கள் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கான வாசலை கர்த்தர் அகல திறந்துள்ளார். ஆகவே அதுவரை அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிப்பார்கள். அவர்கள் இரத்தசாட்சியாக மரிக்கும் இந்த நேரம் வரை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தொடர்ந்து பிரசங்கிப்பார்கள். இதனை பயங்கரமான வாதைகள் பின் தொடரும்.
இப்பொழுது, நீதிமான்களும் பாவிகளும் தேவனருளிய அழகிய இயற்கையின் சூழலில் வாழுகிறார்கள். உபத்திரவத்தின் காலம் வரும்வரை நீதிமான்கள் தம் விசுவாசத்தை சுத்தமாக வைத்து தேவனுக்கு காத்திருந்து, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிக்க வேண்டும். நீதிமான்கள் நற்செய்தியை மென்மேலும் பயிரடவேண்டும்.
முடிவு காலத்தின் போது மிருகத்தின் குறியீடு நம்மீது திணிக்கப்படுகையில், தேவன் நமக்கருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நம் விசுவாசத்தினால் உலகப்படியான மக்களை எதிர்த்துப் போராடி அவர்களை வெற்றிகொள்ள வேண்டும். முடிவு காலத்தில், அந்திகிறிஸ்துவால் நாம் கொல்லப் படுகையில், நம் விசுவாசம் வெற்றிபெற்றதாயிருக்கும். நீதிமான்களின் வாழ்வு தேவனைப் பொருத்தது. அவர் சோதனையின்போது நம்மைக் காப்பார். என்ற தேவனின் வார்த்தையை விசுவாசித்து, உலகின் முடிவுவரை நற்செய்தியைப் பிரசங்கித்தால், வெற்றிவாழ்க்கையை கர்த்தர் அவர்களுக்களிப்பார். நீதிமான் இரட்சிப்பின் உண்மை நற்செய்தியை இன்றும் நாளையும் எல்லா இடத்திலும் பிரசங்கிக்கவேண்டும்.
நம்முடைய தேவனின் வருகைக்காக நாமனைவரும் காத்திருக்கவேண்டும், ஆயிரவருட அரசாட்சி நம்மிடம் வரும்போது நமக்கு கிடைக்கும் ஈவுகளுக்காக அவருக்கு விசுவாசமானவர்களாய் இருக்கவேண்டும். தேவன் இப்பூமிக்கு திரும்பவருகையில் ஆயிரவருட அரசாட்சி நீதிமான்களுக்கு வழங்கப்படும். அப்பொழுது, நீதிமான்கள் கர்த்தருடைய மகிமையாலும் தேவனுடைய மகிமையாலும் தரிப்பிக்கப்படுவர்.
ஆனால் இப்போது, நாம் இந்த பூமியில் இருக்கும்போது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டேயிருக்கவேண்டும். அப்படிச் செய்ய முடிந்த கடைசி நொடிவரை பிரசங்கிக்கவேண்டும். பாவிகளை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே உண்மையான பாவ விடுதலையின் நற்செய்தியாகும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உலகில் உலகின் முடிவுவரை தொடர்ந்து பிரசங்கித்து வாழ்ந்த நீதிமான்கள் தேவனைச் சந்தித்து ஆயிரம் வருடம் அரசாண்டு அந்த ஆயிரவருட அரசாட்சியின் முடிவில், கர்த்தரின் நித்திய ராஜ்யத்தினுள் பிரவேசித்து தேவனுடன் என்றென்றும் வாழ்ந்திருப்பர். விசுவாசத்துடன் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். இந்த நம்பிக்கையை நமக்குக் கொடுத்த தேவனுக்கு அதிக அளவில் நன்றிகளைக் கூறவேண்டும்.
பிலதெல்பியா சபை தேவனின் அன்புக்குரிய சபையாக இருந்தது, அதன் பலன் குறுகியதாயிருந்தாலும், இயேசுவின் பெயரை மறுதலிக்காமல் கர்த்தரின் சித்தத்தை பின்பற்றியது
சோதனையின் நேரத்தில் பிலதெல்பியா சபை விட்டு விடப்படும் என்ற சிறப்பு ஆசீர்வாதத்தை கர்த்தர் அவர்களுக்கு கொடுத்தார். இந்த ஆசீர்வாதத்தினால் பாவமன்னிப்பு பெற்று ஆயிரம் வருட அரசாட்சியில் வாழ்ந்து நித்தியமாக கர்த்தரின் ராஜ்யத்தின் சொந்தக்காரர்களாவோம். இன்னமும் பாவிகளாகவே இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு கர்த்தரின் ஆசீர்வாதம் நிறுத்தப்படும். ஆனால் நீதிமான்களோ ஆயிரம் வருடம் அரசாளுவர்.
பரிசுத்தவான்களை அவர்களின் இரத்தசாட்சி மரணத்தின் மூலம் தேவன் மேலே எடுத்துக்கொண்டு, உபத்திரவத்திரவங்களின் கொடிய வாதைகளை இவ்வுலகினுள் செலுத்துவார். நன்மையை தீமையிலிருந்து பிரிக்கவும், பாவிகளை நியாயந்தீர்த்து அவர்களை அழிக்கவும் கர்த்தர் அப்படிச் செய்வார். நீதிமான்களை கர்த்தர் நேசிக்கிறார், குறிப்பாக சிறிய அளவே பலமிருந்தும், வார்த்தையை கடைப்பிடித்து உலகின் முடிவுவரை நற்செய்தியை பிரசங்கிப்பவர்களை அதிகம் நேசிக்கிறார். இத்தகைய விசுவாசமுள்ள பரிசுத்தவான்களும் இத்தகைய சபையைச் சேர்ந்தவர்களும் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இந்த நீதிமான்களாகிய பரிசுத்தவான்களில் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தம் முழு இருதயங்களாலும் விசுவாசித்து சாத்தானை எதிர்த்துப் போராடி அவனை மேற்கொண்டவர்களுக்கு ஈவுகளை அழிப்பதாக கர்த்தர் கூறுகிறார்.
தாம் இயேசுவை விசுவாசிப்பதாகக் கூறினாலும் சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட அநேக கிறிஸ்தவர்கள் இப்பூமியில் உள்ளனர். இயேசு இவ்வுலகிற்கு வந்து பாவிகளை அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்க அவர் செய்த இரட்சிப்பின் செய்கைகள், இரண்டு நீதியின் செய்கைகளால் சாதிக்கப்பட்டது. இந்த இரட்சிப்பின் செய்கைகளின் மீதுள்ள விசுவாசம், யோர்தான் நதியில் அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் அனைத்துப் பாவங்களையும் அவர் தன் மீது ஏற்றுக்கொண்டு, இந்த உலகின் பாவங்களையெல்லாம் சிலுவைக்கு எடுத்துச் சென்ற தம்முடைய சொந்த இரத்தத்தின் மூலம் இப்பாவங்களுக்காக தீர்க்கப்பட்டு இரட்சிப்பின் செய்கையை நிறைவேற்றினார் என்று விசுவாசிக்கிறது. இதுவே இரட்சிப்பின் நற்செய்தியாகும், இந்த பாவக்கிரயம் செலுத்திய பாவிகளை இரட்சித்தது.
விசுவாசத்தில் குறைவுள்ளவர்கள் “இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிக்காது தாம் பாவமற்றவர்கள்” என்று வலியுறுத்துபவர்களாவர். இத்தகைய விசுவாசம் தவறானது மறுபுறம், சிலமக்கள், தம்மைவிட வேறுயாராலும் இத்தனையாய் இயேசுவை நேசிக்க முடியாது என கூறினாலும், தம்மை அவர்கள் பாவிகள் என்று கூறிக்கொள்கின்றனர். ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களைத் தவிர வேறு யாரையும் தேவன் பரலோகத்திற்குள் அனுமதிப்பதில்லை. பாவிகளின் பெயர்களை ஜீவப்புத்தகத்தில் எழுதுவதில்லை. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் மட்டுமே தேவனின் ஜீவப்புத்தகத்தில் எழுதப்படுவர்.
கர்த்தர் அளித்த இரட்சிப்பு “ஒருவன் என்ன செய்கிறான்” என்பதால் பெறப்படாமல் “ஒருவன் எதை விசுவாசிக்கிறான்” என்பதால் பெறப்படுகிறது. இந்த விசுவாசத்தில், முதலாவது இயேசுவை தேவகுமாரரென்றும் நம் இரட்சகரென்றும் விசுவாசிக்கவேண்டும், இரண்டாவது, நம்முடைய இரட்சிப்பிற்கு இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் சிலுவை இரத்தமும் பிரிக்கமுடியாத செய்கைகள் என நாம் விசுவாசிக்கவேண்டும். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும் அவரின் இரண்டாம் வருகையையும் நாம் விசுவாசிக்கவேண்டும்.
மத்தேயு 7:21-23 கூறுகிறது, “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.” இயேசு ஏன் இம்மக்களை மறுக்கிறார்? ஏனெனில் பாவமுடையவர்களை தேவனின் ஜீவ புத்தகத்தில் எழுத முடியாது. இந்நாட்களில் இயேசுவை தம் இரட்சகராக விசுவாசிப்பதாக அநேகர் கூறுகின்றனர், ஆனால் அவர்களில் அநேகர், இயேசு யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தை விசுவாசிப்பதில்லை.
அவர்களுடைய பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப்படவில்லை. ஆயினும் இப்பாவிகள் தம் எல்லாப் பாவங்களையும் சுமந்திருந்தாலும் தேவனுடைய ராஜ்யத்தினுள் செல்ல முயற்சி செய்கிறார்கள். ஆயினும், அவர்களால் அதனுள் செல்ல முடியாது. சில மக்கள் எத்தனை துணிச்சலுடையவர்களாய் இருக்கிறார்கள் என்றால் தம்மிடம் பாவமிருந்தாலும் பரலோகத்தினுள் தம்மால் செல்லமுடியுமென அவர்கள் விசுவாசிக்கிறார்கள். இத்தகைய மக்கள் கர்த்தர் அளித்த இரட்சிப்பை விசுவாசிக்காமல், தம் பெருமையினால் தயாரிக்கப் பட்ட தம் சொந்த இரட்சிப்பை விசுவாசிக்கிறார்கள். யாருடைய விசுவாசம் தவறானதோ அவர்கள் இயேசுவைக் கர்த்தரென்றோ தம் ஞானஸ்நானத்தினால் இயேசு உலகின் பாவங்களை சுமந்தார் என்பதையோ, இந்த பாவங்களையெல்லாம் அவர் சிலுவைக்கு எடுத்துச் சென்றார் என்றோ, விசுவாசிப்பதில்லை. இம்மக்கள் இயேசுவை உலகின் நான்கு மிகப்பெரிய மகான்களில் ஒருவராக மட்டுமே இருக்கிறார்கள். இம்மக்கள் இயேசுவைத் தம் இரட்சகராக விசுவாசித்தாலும் கூட அவர்கள் பாவிகளே. இப்பாவிகளுக்கு கொடுப்பதாக தேவன் சிலவற்றை வைத்திருக்கிறார். அது என்ன? என்று நீங்கள் கேட்கலாம். நல்லது, நரகம் அவர்களுக்காக காத்திருக்கிறது.
பாவங்கள் மன்னிக்கப்பட்ட நீதிமான்களாகிய நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம், உலகின் முடிவுவரை பொய்யர்களுக்கு எதிராகப் போரிட்டு அவர்களை மேற்கொள்ளவேண்டும். நீதிமான்கள் விசுவாசிப்பது திரிந்து போகக்கூடிய சத்தியமல்ல. தேவன் திரும்பி வரும் நாள் வரையிலும், யார் எதைக் கூறினாலும் உண்மை நற்செய்தியின் மீதுள்ள விசுவாசத்தை நாம் விட்டுக்கொடுப்பதில்லை, அதன் மூலமாகவே நாம் தேவனை விசுவாசிக்கிறோம். நீதிமான்கள் விசுவாசிக்கும் உண்மை வார்த்தை கர்த்தரிடமிருந்து நேரடியாக பெறப்பட்டது. இது கர்த்தரின் வார்த்தையில் சாட்சி கூறப்பட்டுள்ளது. கர்த்தர் தாமே இதனை நேரடியாகக் கூறினார். இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவையை விசுவாசித்து நீதிமான்கள் இரட்சிக்கப்பட்டு முழுமையானார்கள். நம்மைக் குறித்து பாவிகள் கூறுவதில் எதுவும் முக்கியமானதோ, பெறுமதியானதோ இருக்கிறதா? எதுவுமே இல்லை! நீதிமான்கள் கர்த்தரின் வார்த்தையை விசுவாசித்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தில் தொடர்ந்திருக்கவேண்டும்.
இயற்கை அழிவுகளின் காலம் இதுவே, அணுஆயுத போர் இவ்வுலகில் நடக்கப்போகும் காலம் அதிக தொலைவில் இல்லை. இயற்கை அழிவுகள் இதுவரை நடந்திராத அளவு மிகவும் அதிகமாய் இருக்கும்படி தயாராகவுள்ளது. இவ்வுலகிற்கு வரப்போகிறவைகளை கர்த்தரின் ஊழியர்கள் தெளிவாகக்கண்டு அதனைப் பிரசங்கிக்கவேண்டும். உலகின் முடிவு திடீரென வருமென நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். அணுஆயுதபோர் உலகில் மூளும்போது, இயற்கை அழிவுகள் எண்ணமுடியாத அளவு பெரியதாயிருக்கும். அப்போது மிருகத்தின் குறியீடு நம்மீது திணிக்கப்படும் -அதாவது, இரத்தசாட்சியாக மரித்து உயிரோடெழும்பி ஆயிரவருட அரசாட்சியைக் கட்டத் தொடங்கும்போது- கிறிஸ்து இவ்வுலகிற்கு திரும்பி வருவார். இவையெல்லாம் நடக்கும்போது தேவன் அதை முடிவிற்கு கொண்டு வருவார்.
யார் எதைக் கூறினாலும், உலகின் முடிவுவரை கர்த்தரின் வார்த்தையை நாம் விசுவாசித்து, இந்த விசுவாசத்தை நாம் பற்றிக்கொள்ளவேண்டும். அது எத்தனைக் கடினமானதாய் இருந்தாலும், தேவனைப் பின்பற்றி, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நமது விசுவாசத்தை நிச்சயமாகப் பற்றிக்கொண்டு அதனைப் பரப்பவேண்டும்.
தேவனின் நாளை எதிர்நோக்கி வாழுவோமாக. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் பாவிகளை அவர்களின் பாவமன்னிப்பிற்கு தயார் செய்யவேண்டும்! நம் தேவன் பரலோகத்தின் அனைத்து ஆசீர்வாதங்களையும் நமக்காக தயார் செய்துள்ளமையால், அவை நமக்காக காத்திருக்கின்றன என்பதை விசுவாசிக்கிறேன். மரித்தோர் உயிர்த்தெழுந்து பரிசுத்தவான்கள் மறு ரூபமடையும் நேரத்திற்கு முந்திய அந்நாளுக்காக ஆயத்தம் செய்வோமாக. உங்கள் வாழ்வு வெறுமையாக இருக்கிறது என்று கூறுவதை நிறுத்தி நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசியுங்கள்.
சத்தியத்தின் நற்செய்தி உங்களுக்குத் தெரியும்போது, அதனை விசுவாசிக்க மறுத்து எப்படி நரகத்திற்குச் செல்வீர்கள்? வாழ்வின் வெறுமையின் வெறுப்பினுள் விழுவதற்கு பதிலாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து அதன் மூலம் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டவர்களாய் ஆயிரவருட அரசாட்சிக்கு நம்மை ஆயத்தம் செய்வோமாக. கர்த்தர் பாராட்டிய பிலதெல்பியா சபையின் விசுவாசத்தைப் போன்ற விசுவாசத்துடன் நாம் வாழ்ந்த பிறகு தேவனை நாம் ஆகாயத்தில் நிச்சயமாக சந்திப்போம்! அல்லேலூயா!