(வெளி 3:14-22)
லவோதிக்கேயா சபையின் விசுவாசம் தேவனால் வாந்திப்பண்ணும் படியாக இருந்தது. ஆகவே தேவன் அதற்கு அறிவுரை வழங்கினார், அவர்கள் விசுவாசமும் பெருகும்படி தங்கம் புடம்போடப்படுவதைப் போல் விசுவாசம் புடம்போடப்பட வேண்டுமென அவர் கூறினார். இக்காலத்தின் நீதிமான்களிடமும் கூட இந்த வெதுவெதுப்பான விசுவாசம் தோன்றுகிறது. அவர்கள் தம் விசுவாசத்தை இலவசமாகப் பெற்றுக்கொண்டதால், அந்த விசுவாசம் எத்தனை மதிப்புடையது என்பது அவர்களுக்குத் தெரியாது. கர்த்தர் தம் கடிந்துகொள்ளும் வார்த்தையை இப்படி கூறினார், மேலும் தங்கம் நெருப்பில் புடம்போடப்படுவதைப் போல் அவர்களுக்கு விசுவாசத்தைக் கொடுக்கும்படி நீதிமான்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த வசனத்திலிருந்து ஆசியாவிலுள்ள ஏழு சபைகளும் இத்தகைய ஒரே விதமான விசுவாசத்துடனிருக்கவேண்டுமென தேவன் விரும்புவதை நாம் காணலாம். பரிசுத்த ஆவியானவரின் அவரின் ஆலயங்களுக்கு கூறுவதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று தேவன் அவர்களுக்கு கட்டளையிட்டார்.
வசனம் 3:17 இலிருந்து, லவோதிக்கேயா சபை சுயவஞ்சனையில் ஆழமாகச் சிக்கிக் கொண்டிருப்பதை நாம் காணலாம், அதனுடைய பொருள் செல்வத்தை கர்த்தருடைய ஆவிக்குரிய ஆசீர்வாதமாக எண்ணியதுடன் அது அவர்களின் விசுவாசத்திற்கு சொந்தமானது எனவும் நினைத்தனர். இந்த தவறான நம்பிக்கையுடைய சபையினருக்கு, அவர்களின் ஆவிக்குரிய வறுமையைக் குறித்தும் மோசமான நிலையைக் குறித்தும் கர்த்தர் சுட்டிக்காட்டினார்.
லவோதிக்கேயா சபை விசுவாசத்தின் செல்வமுடையதாக தோன்றலாம், ஆனால் அது விசுவாசமில்லாத, வறுமை நிறைந்த ஆலயம். அதன் விசுவாசம் அவிந்துபோனது, அது ஆவிக்குரிய மூர்க்கம் நிறைந்ததாயிருந்தது, இது இயேசுவை விட உலகை அதிகமாக நேசித்தது.
வெளி 3:14-22 சீடத்துவ வாழ்க்கையைக் குறித்து பேசுகிறது. கிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அதனைப் பின்பற்றுபவர்களே இயேசுவின் உண்மையான சீடர்களாவர். இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து மறுபடியும் பிறந்த அனைவரும் அவரின் சீடர்களாகும் தகுதி பெற்றவர்கள். சீடத்துவ வாழ்க்கையை நாமனைவரும் வாழுவதை தேவன் விரும்புகிறார். இந்த சீடத்துவ வாழ்க்கை நமக்கு கொடுக்கப்பட்டது என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.
சீடத்துவ வாழ்க்கை வாழாத பரிசுத்தவான்களை வாந்திப்பண்ணிபோடுவதாக தேவன், இந்த வசனத்தில் கூறினார். வசனம் 15-16 இல் எழுதப்பட்டுள்ளதைப் போல் “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிற படியினால் உன்னை என் வாயினின்று வாந்தி பண்ணிப் போடுவேன்.” இரட்சிக்கப்பட்டவர்கள் தேவனுக்கு முன்பாக அனலுமில்லாமல் குளிருமில்லாமலும் இருப்பது அவர்களின் ஆவிக்குரிய வறுமையைக் குறிக்கிறது. மேலும் இத்தகைய மக்களுக்கு வாழ்க்கை என்னவென்பது தெரியாது. ஆனால் மறுபடியும் பிறந்தவர்கள் யாராயிருந்தாலும் சீடத்துவ வாழ்க்கை வாழவேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம் பாவங்களிலிருந்து விடுதலை பெற்றோம். இதுவே நம் இரட்சிப்பாகும்.
அப்படியானால் நமது இரட்சிப்பிற்கு பிறகும், மறுபடியும் பிறந்தமைக்கு பிறகும் என்ன கொடுக்கப்பட்டது? தேவனைப் போலாக முயற்சிக்கும், அவருடைய கட்டளைகளைப் பின்பற்றி அதற்கு கீழ்ப்படிந்து,. அவருடைய வார்த்தையைத் தேடும் ஒரு வாழ்வு நமக்குக் கொடுக்கப்பட்டது. இத்தகைய சீடத்துவத்தை தனது பரிசுத்தவான்களிடம் வலியுறுத்திய கர்த்தர், லவோதிக்கேயா சபையை “அது அனலுமில்லாமல் குளிருமில்லாமல் இருக்கிறது” எனக் கூறி அதனைக் கண்டித்தார்.
அனலுமில்லமல் குளிருமில்லாமல் இருக்கும் விசுவாசம் வெதுவெதுப்பான விசுவாசமாகும். மனிதகுலத்திற்கு சுகத்தை அளிக்கும் இந்த வெதுவெதுப்பான விசுவாசம் எத்தகைய விசுவாசம் ஆகும்? அது இரண்டு வழிகளிலும் அதனைப் பெற முயற்சிக்கும் விசுவாசமாயிருக்கிறது, அதற்கு கேக்கும் வேண்டும் அதனை சாப்பிடவும் வேண்டும். இத்தகைய விசுவாசம் சீடத்துவ வாழ்வின்படி வாழும் வாழ்வாகாது. இரட்சிக்கப்பட்டும், இயேசுவின் சித்தத்தைப் பின்பற்றாதவர்களின் விசுவாசம் வெதுவெதுப்பான விசுவாசமாயிருக்கிறது. அவர்கள் இயேசுவைப் பின்பற்றுவதைப் போல் தோன்றலாம், ஆனால் உண்மையில் அப்படி அல்ல வேறுவார்த்தைகளில் கூறுவதானால், வேலியின் இருபுறமும் அமர முயற்சிக்கும் அவர்களின் விசுவாசம், வெதுவெதுப்பான விசுவாசமென அழைக்கப்படுகிறது.
இத்தகைய விசுவாசம், ஞானம் என்று உலகம் கூறுகிறது. உலகத்தைப் பொருத்தவரை இத்தகைய விசுவாசம் ஞானமுடையதாக இருக்கலாம், ஆனால் இத்தகைய விசுவாசமே தேவனை வாந்திப்பண்ணச் செய்கிறது. தேவனை வெதுவெதுப்பான விசுவாசம் எதை வாந்திபண்ணும்படிச் செய்கிறது, அனலுமில்லாத குளிருமில்லாத விசுவாசம் எப்படி இருக்குமென்ற தெளிவான அறிவு உங்களிடம் இருக்கவேண்டும். வெதுவெதுப்பான விசுவாசமுடையவர்கள் கர்த்தரின் ஆலயத்தின் செய்கைகளில் பங்கேற்பதுமில்லை விலகிச் செல்வதுமில்லை; அவர்கள் ஒரே சமயத்தில் செய்பவர்களாகவும், செய்யாதவர்களுமாய் இருக்கிறார்கள். அவர்களுடைய விசுவாச வாழ்க்கையின் மதிப்பெண் சரியாக 60 புள்ளிகள் இருக்க வேண்டுமென நியமிக்கப்பட்டிருந்தால், எப்படியோ முயற்சித்து 60 புள்ளிகளை வாங்கிவிடுவர், அதிகமுமில்லை, குறைவுமில்லை.
இத்தகைய விசுவாச வாழ்க்கையுடையவர்கள் ஆவிக்குரிய ஏழ்மையில் வாழுகிறார்கள். வசனங்கள் 17-18 கூறுவதைப் போல் “நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும் நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியாவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்; நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக் கொள்வதற்கு வெண் வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக் கொள்ளவும், நீ பார்வையடையும் படிக்கு உன் கண்களுக்குக் கலிங்கம் போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.”
வெதுவெதுப்பான விசுவாசமுடையவர்கள் தம் உலகத்தின் செழிப்பை ஆவிக்குரிய வளமையாக எடுத்துக்கொள்ளுகிறார்கள். தம் உபயோகமற்றவர்களாக, களைப்படைந்தவர்களாக, ஏழைகளாகத் தோன்றினாலும், அவர்கள் அதனை அறிந்துகொள்வதில்லை. இம்மக்கள் தம்மைத் தாமே அறியாத மக்கள். அவர்கள் தமக்குள் எண்ணுகின்றனர், “நான் சரியானவன். நான் நியாயமானவன், நேர்த்தியானவன், மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட்டவன், நான் இரட்சிக்கப்பட்டிருந்தாலும் கூட, இத்தகைய வாழ்வு வாழ்வது எனக்கு போதுமானதே,” மேலும் இவர்கள் தம் சொந்த அளவுகளின்படி வாழுகின்றனர். இம்மக்கள் உலகத்திற்கு விசுவாசமானவர்கள், ஆனால் கர்த்தரின் ஆலயத்திற்கு விசுவாசமானவர்களில்லை. அவர்களுடைய விசுவாசம் வெதுவெதுப்பானது. ஆகவே, கர்த்தர் அவர்களை வாந்திப் பண்ணுவதாகக் கூறுகிறார்.
வீசப்படுவதை தவிர்ப்பதன்றி வேறு எந்தவிதமான உயர்ந்த குறிக்கோளிற்காகவும் அவர்கள் ஆலயத்திற்கு வருவதில்லை. அவர்கள் ஆலய ஆராதனை முழுவதும் அமர்ந்திருந்து, அது முடிந்தவுடனேயே போய்விடுகின்றனர். அவர்கள் தாமாகவே முன்வந்து ஆலய செய்கைகளில் பங்கேற்பதில்லை, அப்படி பங்கேற்றாலும் அது சிறிய அளவில் இருக்கவேண்டும் என நிச்சயப் படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் செய்யாததைப் போல் செய்கிறார்கள், செய்வதைப் போல் செய்யாமலிருக்கிறார்கள். இம்மக்கள் ஆவிக்குரிய ஏழைகள்.
இத்தகைய மக்களுக்கு தேவன் கீழ்க்கண்ட ஆலோசனையை வழங்குகிறார்: “நான்: நீ ஐசுவரியவானாகும் படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாத படிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண் வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக் கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிங்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.” செல்வந்தர்களாக இருப்பதற்கு நெருப்பில் புடம்போட்ட்ட தங்கத்தை வாங்கும்படி அவர்களிடம் கூறினார்.
தேவனை நீங்கள் உண்மையாகவே பின்பற்ற வேண்டுமானால், உங்களுடைய விசுவாசத்திற்காக அவரிடமிருந்து உண்மையாகவே பாராட்டுதலைப் பெறவேண்டுமானால், உங்கள் விசுவாசத்தைக் குறித்து கற்றுக்கொள்ளவேண்டும். அப்படியானால் உங்கள் விசுவாசத்தை கற்றுக்கொள்வதெப்படி? தியாகத்தின் விலையைக் கொடுத்து வார்த்தையை விசுவாசிப்பதின் மூலம் நீங்கள் அதனைக் கற்றுக்கொள்ளவேண்டும். நெருப்பிலே புடமிடப்பட்ட தங்கத்தை வாங்கும்படி இவ்வசனம் கூறுகிறது. கர்த்தரின் வார்த்தையைப் பின்பற்றும்போது அநேக சோதனைகளும் உபத்திரவத்திரவங்களும் வரும் என்பது இதன் பொருளாகும். ஆனால், கர்த்தரின் வார்த்தையை விசுவாசித்து அதனைப் பின்பற்றுவதன் மூலம், அவ்வித சோதனைகளையும் உபத்திரவங்களையும் மேற்கொள்ள முடியும். இப்படிச் செய்வதால், நம்மிருதயங்கள் புடமிட்டதாகும். அது கர்த்தரின் வார்த்தையை உண்மையென்று அறியக்கூடியதும் அதனை முழு இருதயத்துடன் விசுவாசிக்கக் கூடியதுமான விசுவாசத்தைத் தரும். இது சுத்தமான தங்கத்தைப் போன்ற விசுவாசமாகும்.
உண்மையான விசுவாசத்தைப் பெற, தியாகத்திற்கான விலையை நாம் கொடுக்கவேண்டும், ஏனெனில் தியாகத்திற்கான விலையைக் கொடுக்காமல், விசுவாசத்தை நம்மால் கற்றுக்கொள்ள முடியாது. வேறுவார்த்தைகளில் கூறுவதானால், கஷ்டங்களுக் கூடாக செல்ல்லாமல் விசுவாசத்தை நம்மால் கற்றுக் கொள்ளமுடியாது. உண்மையாகவே நாம் விசுவாசத்தின் மக்களாகவும், தேவனின் சீடத்துவ வாழ்வை வாழவும், நம் விசுவாசத்திற்கான ஆசீர்வாதத்தைப் பெறவும், தியாகத்திற்கான விலையை கொடுத்தேயாக வேண்டும். தியாகமிலாமல், இதனை அடையவே முடியாது.
தொடக்கத்திலிருந்தே உறுதியான விசுவாசம் யாரிடமிருக்கிறது? யாரிடமும் இல்லை. இது ஏனெனில், மக்கள் விசுவாசத்தைக் குறித்த அறிவில்லாதவர்களாயுள்ளனர், ஆலயம் வார்த்தையைப் போதித்து அதன் மூலம் அவர்களை வழிநடத்துகிறது. ஆலயத்தின் வழிநடத்தலுக்கு நாம் கீழ்ப்படிந்து விசுவாசத்துடன் அதனைப் பின்பற்றவேண்டும். அப்படிச் செய்வது கஷ்டங்களை அளிக்கிறது; சில சமயங்களில் பொறுமை தேவைப்படுகிறது. இதனால் தான், வார்த்தையின் வழி நடத்துதல், ஐக்கியம் மற்றும் போதனை ஆகியவைகளை பெற்று விசுவாசத்தின் மக்களாவது தியாகத்துடனேயே வருகிறது. மக்கள் தியாகம் செய்ய விரும்பாததால், அவர்களுக்கு விசுவாசத்தைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தாலும், புடம்போடப்பட்ட உண்மை விசுவாசத்தை அவர்களால் பெறமுடியாது. இதனால் தான் நாம் விசுவாசத்தில் வளமையுடையவர்களாகும்படி அக்கினியால் புடம்போட்ட தங்கத்தை தன்னிடமிருந்து வாங்குமாறு தேவன் நம்மிடம் கூறினார்.
நமக்கு முன்சென்ற பரிசுத்தவான்களிடமிருந்து விசுவாசத்தைக் கற்று அவர்களின் வாழ்வைப் பின்பற்றும் போதே இவ்வார்த்தையின் பொருளை உங்களால் புரிந்துகொள்ளமுடியும். நீங்கள் வார்த்தையை பாடத்தில் மட்டுமே கேட்டு, அது உங்களுக்கு கட்டளையிட்டபடி நடக்காவிட்டாலோ, சாட்சி கூறுவதிலும், ஜெபத்திலும், கூட்டங்களிலும் பங்கேற்று அவற்றை இயல்பான வாழ்வில் செய்யாமலோ இருந்தால், விசுவாசத்தை உங்களால் கற்றுக்கொள்ளமுடியாது. உங்களிடம் சிறிதளவு விசுவாசமே இருப்பதால், உங்களுடைய சொந்த உலகின் அளவுகளின்படி, உங்கள் விசுவாசம் அத்தனை மோசமானதில்லை என்று நீங்கள் அளப்பீர்கள். நீங்களே உங்களுக்குள் எண்ணுவீர்கள், “நான் இரட்சிக்கப்பட்டேன், என்னிடம் பணமிருக்கிறது, நான் நன்றாக இயங்குகிறேன், ஆகவே, மற்றவர்களை விட நான் சிறந்தவனாக இருக்கவேண்டும். ஆம், இந்த மக்களைவிட நான் சிறந்தவனாக இருக்கவேண்டும். ஆம், இந்த மக்களை விட நான் நிச்சயமாக சிறந்தவன்.”
தங்கத்தைப் போன்ற உண்மையான விசுவாசத்தை நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டுமானால் தியாகத்தின் விலையை நீங்கள் கொடுத்தாகவேண்டும். கீழ்ப்படிவதும் பின்பற்றுவதும் அத்தனை இலகுவானதா? கீழ்ப்படிய அநேக தியாகங்களைச் செய்யவேண்டும். தியாகம் செய்வது அத்தனை இலகுவானதா? அப்படி இல்லை. ஆனால் வாந்திப் பண்ணிப்போடுவதைத் தவிர்க்க வேண்டுமானால், நீங்கள் தியாகங்களின் மூலம் கீழ்ப்படியவேண்டும்.
உணமை விசுவாசத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள், ஆவியில் வறுமையுடையவர்களாக இருக்கின்றனர், அவர்கள் தியாகம் செய்வதை விரும்புவதில்லை. கீழ்ப்படியவேண்டுமானால் அவன்/அவள் தனது மனதை முதலில் உடைக்கவேண்டும். அப்படிச் செய்யமுடியாததால், நேரம் சென்றாலும் கூட அவர்களுடைய இருதயங்கள் ஆவியின் பரிதாபமான நிலையைத் தொடருகின்றன். அவர்களுடைய விசுவாசக் குறைபாடை அறிந்துகொள்ளாமல், அவர்களைக் கடந்துசென்ற பரிசுத்தவான்களின் விசுவாசத்தை அவர்கள் பின்புறம் நின்று குறைகூறுவதில் முடிவடைவீர்கள். உண்மையான விசுவாசத்தை நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் ஆவிக்குரிய போரில் நுழைந்து, கர்த்தரின் பக்கத்திலிருந்து போர் புரியும்போது, நீங்கள் ஆவிக்குரிய செல்வங்களை சேர்க்கையில் உங்கள் விசுவாசம் புடமிடப்படுவதையும், ஆவிக்குரிய வெற்றியுள்ள ஒரு வாழ்வு வாழ அதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதையும் அறிந்துகொள்வீர்கள். இந்த விசுவாசத்தை நேரடியாக அனுபவிக்கும்போதே அதனை அறிந்துகொள்வீர்கள்.
“உன்னுடைய நிர்வாணமும் வறுமையும் உனக்குத் தெரியாது. நீ இரட்சிக்கப்பட்டாய், அனால் உன் விசுவாசம் வெதுவெதுப்பாயிருக்கிறது - இதுவுமல்ல, அதுமல்ல, உன்னிடமிருக்கும் ஒன்று உன் இரட்சிப்பு மட்டுமே, அதனையும் நீ அமுக்கி வைத்திருக்கிறாய். இதனைத் தவிர உன்னிடம் வேறெதுவுமில்லை” என்றெழுதி கர்த்தர் லவோதிக்கேயா சபையின் ஊழியனைக் கண்டித்தார்.
கர்த்தரின் ஊழியனோ அல்லது ஆவிக்குரிய உதாரணங்களோ நேரம் செல்லச் செல்ல சீடத்துவ வாழ்வு வாழாமலேயே நம் விசுவாசத்தின் முன்னோடியாக ஆகிவிடமுடியுமா? அப்படியாக முடியாது! அவர்கள் தேவனுக்காக எல்லா துன்பங்களையும் அனுபவித்தனர், இன்பத்திலும் துன்பத்திலும் அவர்கள் தேவனுடனிருந்தனர். அவர்கள் சென்றவைகளினூடாக நீங்களும் செல்ல வேண்டியவர்களாயிருப்பதால், அவர்களை உங்களுக்கு முன்பாக செல்லச் செய்து, உங்களை இப்படியாக வழி நடத்துகிறார். ஆகவே உங்களுக்கு முன்பாக சென்றவர்கள் பின்பற்றிய விசுவாச வழியை கர்த்தர் உங்களுக்கு போதித்து அதன் வழியே உங்களை வழிநடத்துகிறார் என்பதை நீங்கள் விசுவாசிக்கவேண்டும்.