• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 10 : வெளிப்படுத்தின விசேஷம் (வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 4-2] இயேசுவே கர்த்தர் (வெளி 4:1-11)

(வெளி 4:1-11)
 
வெளிப்படுத்தலின் வார்த்தை 4 இன் மூலம், இயேசு எத்தகைய கர்த்தர் என்று நாம் அறிகிறோம், மேலும் இந்த அறிவினால் நம் விசுவாசம் பலப்படுகிறது. வார்த்தையின் மூலம் அறிவைப் பெறும்போது அது விசுவாசமாகி நம்மிருதயங்களில் நடப்படுகிறது, அவர் திரும்பி வரும் நேரம் நெருங்கி வருகையிலும் அந்திகிறிஸ்து தோன்றி நம்மைப் பயமுறுத்தும்போதும் தேவன் மீதுள்ள உறுதியான விசுவாசத்தின் மூலம் சாத்தானுடன் போரிட்டு அவனை மேற்கொள்ளமுடியும்.
மகா உபத்திரவகாலத்தின் முதல் மூன்றரையாண்டுகளின் சோதனைகளுக்கு விசுவாசத்தை தயார் படுத்தும் விதமாக அதனை இப்போது வளர்க்கிறோம். இதனை வளர்க்காமல் அந்நாளை நாம் சந்தித்தால், நிச்சயமாக நம் விசுவாசத்தை இழந்துபோவோம். நம்மை இரட்சித்தது கர்த்தர் என்றும், நாம் மகத்துவமுள்ள கர்த்தரின் பிள்ளைகளென்றும் அவர் சாத்தானைவிட மிகவும் உயர்ந்தவராதலால் அவன் அவருக்கு சமமானவன் இல்லை எனவும் நம் விசுவாசத்தை மிக உறுதியாக ஆயத்தம் செய்தால், அடுத்த நொடியில் மரிக்க நேரிட்டாலும் நாம் அதனை துணிச்சலுடன் அறிவிப்போம்.
ஆனால் அப்படிச் செய்வதற்கு தேவன் மகத்துவமானவர் என்றும் நாம் அவரின் பிள்ளைகளென்றும் நம் இருதயங்களினுள்ளே முதலில் விசுவாசிக்கவேண்டும். பிதாவாகிய கர்த்தருக்கு சமமான தேவன், நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்க இவ்வுலகிற்கு வந்தபோது எத்தனை தாழ்மையாயிருந்தார்? இவ்வுலகிற்கு மனித சரீரத்தில் வந்தார், அவரின் படைப்புகளான நமக்கு, கீழானவராக, ஊழியனின் சாயலாக அவர் வந்தார். இப்படி தாழ்மையாக வராமல், உலகை ஆளுபவர்களுக்கு ஒப்பான வல்லமையுடனும் அதிகாரத்துடனும் நம் தேவன் வந்திருந்தால் என்னவாகியிருக்கும். வல்லமையுடையவர்கள் வல்லமையுடையவர்களுடன் நட்பு கொள்வது இயற்கையானதால், தாழ்மையான, களங்கமுள்ள, பலவீனமானவர்களுக்கு வல்லமையை மட்டுமே காட்டுவர். ஆனால் தேவன் நம்மை விடவும் தாழ்மையானவராக இவ்வுலகிற்கு வந்து, தாழ்மையானவர்களுடனும் பலவீனமானவர்களுடனும் நட்புடன் இருந்து, அவர்களை அவர்களின் பாவங்களிலிருந்து விடுதலை செய்ததன் மூலம் அவர்களைத் தம் மக்களாக்கினார்.
இதனால்தான் கர்த்தர் நல்ல மேய்ப்பராகவும் இரக்கம் நிறைந்த தேவனுமாயிருக்கிறார். இதனால் தான் இந்த இரக்கமுள்ள நல்ல மேய்ப்பருக்கு, நம்மைத் தமது பிள்ளைகளாக்கிய மகிமையை புகழாமல் இருக்க முடியாது. அவர் இவ்வுலகிலிருந்த போது அவர் காட்டிய கிருபைக்கும் அவர் கொடுத்த ஆசீர்வாதங்களுக்கும் நம் இருதயப்பூர்வமாக தேவனைப் புகழுகிறோம், நாம் அவரின் ராஜ்யத்திற்குள் செல்லும்போது அவரின் வல்லமைக்காகவும் மகிமைக்காகவும் அவரைத் தொடர்ந்து புகழுவோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கிப்பவர்களால் மட்டுமே தேவனை புகழமுடியுமாகையால், தேவனை நம் சொந்தக் குரலால் புகழக்கூடுவது பெரிதான ஆசீர்வாதமாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் நமக்கு இந்த பெரிதான ஆசீர்வாதம் அருளப்பட்டுள்ளது. இத்தகைய கம்பீரமான கர்த்தருக்கு அவரின் மக்களாகவும் ஊழியர்களாகவும் ஆனோம் என்பதை மறக்கவே கூடாது.
சில மக்கள் இயேசுவை தேவகுமாரன் மட்டுமே என்றும், அவர் கர்த்தரில்லை என்றும் கூறுகின்றனர். மனிதர்கள் மனிதர்களையே பிரசவிப்பதைப் போலவும், மிருகங்கள் மிருகங்களையே பிரசவிப்பதைப் போலவும், கர்த்தரின் குமாரனும் கர்த்தரே. மனிதர்களால் எப்படி நாயைப் பிரசவிக்க முடியாதே, அப்படியே மகத்துவமுள்ள கர்த்தரின் குமாரர், அவரின் படைப்பாகிய மனிதனாய் இருக்கமுடியாது. இயேசுவை கர்த்தர் என்று அறிந்துகொள்ளாதவர்களுக்கு அவர் அவரின் நீர் மற்றும் ஆவியின் மூலம் நம்மை இரட்சித்தார் என்பதும் தெரியாது.
இயேசுவே கர்த்தர் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும் (யோவான் 1:1). பிதாவாகிய கர்த்தர் இயேசுகிறிஸ்துவுக்காக ஒரு சிங்காசனத்தை ஏற்படுத்தி தனது சகல வல்லமைகளையும் அவருக்களித்தார், இயேசு -இருந்தவரும், இருக்கிறவரும் நியாயத்தீர்ப்பு நாளில் இருக்கப்போகிறவராகவும் என்றென்றும் இருப்பார் -அவர் தன் சிங்காசனத்தில் அமர்ந்து, படைப்பின் கர்த்தருக்குரிய கம்பீரத்துடனும், இரட்சிப்பின் கர்த்தருக்குரிய கம்பீரத்துடனும், நியாயத்தீர்ப்பின் கர்த்தருக்குரிய கம்பீரத்துடனும் அரசாளுவார். நாம் தேவனை விசுவாசித்து அவரின் பிள்ளைகளாகியதால் அவருடைய ராஜ்யத்தினுள் பிரவேசித்து நித்தியமாக வாழுவோம். இந்த கர்த்தரை இயேசுவின் மூலம் விசுவாசிக்கிறோம், அவரின் இரட்சிப்பைப் பெற்று கர்த்தரின் பிள்ளைகளாகியது நாமே.
மறுபடியும் பிறந்த கர்த்தரின் பரிசுத்தவான்கள், பணியாளர்கள், ஊழியர்கள் ஆகியோர் பெருமைப்படலாம். இவ்வுலகில் நமது செல்வம் குறைவானதாய் இருந்தாலும், கர்த்தரின் பிள்ளைகள் என்ற ராஜாக்களின் பெருமை நமக்கு இருக்கவேண்டும், ஏனெனில் நாம் முழு பிரபஞ்சத்தையும் ஆளப்போகிறவர்கள். நம்மை உலகின் பாவங்களிலிருந்து இரட்சித்து தமது பிள்ளைகளாக்கிய மகத்துவமுள்ள கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்.
கர்த்தர் இந்த பூமியில் செய்தவற்றுக்காக, பரலோகத்தின் 24 மூப்பர்களும் அவருக்கு புகழ்பாடினர். எல்லாமே அவரால் படைக்கப்பட்டவையாயும் அவை அவரின் சித்தப்படி இருப்பதாலும், கர்த்தர் எல்லா மகிமையையும் மரியாதையும், வல்லமையையும் பெறுவதற்கு தகுதியானவர் என்பது அவர்களின் புகழுரையாக இருந்தது.
நாம் மிக அவசியமாக புரிந்துகொள்ளவேண்டியது சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் இயேசுகிறிஸ்து என்பதும் அவரே கர்த்தர் என்பதுமாகும். நாம் விசுவாசிக்கும் இந்த இயேசுகிறிஸ்து நம்மை இரட்சித்த உண்மையான கர்த்தராவார். பரலோக ராஜ்யத்தின் அனைத்து அதிகாரங்களும் நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடம் இருக்கிறது. கடைசி நியாயத்தீர்ப்பை வழங்கியது நம் இரட்சிப்பின் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே. தம் சிங்காசனத்திலிருந்து கிறிஸ்து நம்மை நியாயம் தீர்க்கும்போது யாருடைய பெயர்களெல்லாம் ஜீவப்புத்தகத்தில் எழுதப் பட்டுள்ளதோ அவர்கள் புதிய வானத்திற்கும் புதிய பூமிக்கும் செல்வார்கள். இப்புத்தகத்தில் தம் பெயர் இடம் பெறாதவர்கள் எரியும் நெருப்பினுள் வீசப்படுவர்.
ஆகவே, இயேசுவை விசுவாசிக்காதது கர்த்தரை விசுவாசிக்காததாகும், கர்த்தரை விசுவாசிக்காதது அவரை எதிர்த்து நிற்பதற்கு ஒத்ததாகும். இதனால் தான், இயேசுவே கர்த்தர், அவரே இரட்சகர், அவரே பரலோகத்தின் ராஜா என்று விசுவாசிக்காதவர்கள் கர்த்தருக்கு முன்பாக பயங்கரமான நியாயத்தீர்ப்பைப் பெறுவர்.
கர்த்தரை விசுவாசிப்பவர்களில், யெகோவாவின் சாட்சிகள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழு இருக்கிறது, அவர்கள் இயேசு கர்த்தரின் குமாரராய் இருந்தாலும், அவர் கர்த்தரல்ல என்று தவறாக விசுவாசிக்கின்றனர். நிறைவானவராலேயே நமக்கு நிறைவான இரட்சிப்பை கொடுக்க முடியும் என்பதால் இயேசு கர்த்தரில்லை என்றால், அவரால் நம்மை நம் பாவங்களிலிருந்து விடுவித்திருக்க முடியாது.
மாறுகிற சூழ்நிலைகளுக்கேற்ப நம் இருதயங்களும் இலகுவாக மாறுமளவிற்கு நாம் பலவீனமானவர்கள். நாம் குறை பாடுடையவர்களாய் இருந்தாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நித்தியமாக புகழுவதற்கு காரணம், நித்தியமாக வாழுபவரும், நித்தியமாக நிறைவாக இருப்பவருமான இயேசு பாவிகளின் இரட்சகரானதே. எல்லாப் பாவங்களையும் மறையச் செய்த நிறைவான கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் இரட்சிக்கப் பட்டவர்களாலே தேவனைப் புகழ முடியும். இயேசுகிறிஸ்துவின் மீதுள்ள நம் விசுவாசம், நம் சிந்தனைகளிலும் மனதிலும் உலக மதங்களில் இருப்பதைப் போல் எப்போதுமே இருக்ககூடாது. இயேசுவைக் கர்த்தராக எண்ணுவதுடன் அவரின் மீதுள்ள விசுவாசம் சரியாக இருக்கும்போது, உண்மையான கர்த்தரை நாம் அனுபவிப்போம்.
இயேசுகிறிஸ்துவே நம் இரட்சிப்பின் கர்த்தர் என விசுவாசிக்கும் விசுவாசத்தில் நாம் வாழவேண்டும். மேலும் இவ்விசுவாசத்துடன் நம் பகைவர்களுடன் போரிட்டு அவர்களை வெற்றிகொள்ளவேண்டும். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், இயேசுவை நம் கர்த்தராக விசுவாசிக்கும்போது, இந்த விசுவாசம் சாத்தானை பயத்தினால் நடுங்கச் செய்யும், இப்படியாக இது முடிவுகாலத்தின் சோதனைகளையும் உபத்திரவங்களையும் மேற்கொள்ளவும் உறுதியாக நிற்கவும் நம்மை ஏதுவாக்கும். மறுபுறம் நாம் இயேசுவை நம் கர்த்தராக விசுவாசிக்கவில்லையெனில், சாத்தான் நம்மை இகழ்ந்து நம் விசுவாசத்திலிருந்து நம்மைப் பிரிப்பான்.
பிதாவாகிய கர்த்தரிடமிருந்து தன் சிங்காசனத்தைப் பெற்ற இயேசு, நமது கர்த்தராக அதில் வீற்றிருக்கிறார். வெளிப்படுத்தின வார்த்தையின் மூலம் இயேசுவே மகத்துவமுள்ள கர்த்தர் எனவும், முழு பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் அவர் ஆளுகிறார் என்றும் நாம் உணருகிறோம், ஏனெனில் பிதாவாகிய கர்த்தரிடமிருந்து அனைத்து அதிகாரங்களையும் வல்லமையையும் அவர் பெற்றுள்ளார்.
இந்த சத்தியத்தின் மீதுள்ள உங்கள் விசுவாசம் துணிச்சலுடன் சாத்தானை மேற்கொள்ள உங்களை ஏதுவாக்கும். அவரின் பிள்ளைகளாக நம் கர்த்தரின் எங்கும் வியாபித்துள்ள வல்லமை நம் முதுகில் இருப்பதால், எதுவும் நம்மை நசுக்காது, முடிவு காலத்தை நம்மால் மன உறுதியுடனும், ஆடிப்போகாமலும் வெற்றி கொள்ள முடியும். கர்த்தர் நமக்கு செய்த சகல காரியங்களுக்காகவும் அவருக்கு நன்றி கூறி அவரைப் புகழுகிறேன்!