• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 10 : வெளிப்படுத்தின விசேஷம் (வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 5-1] பிதாவாகிய கர்த்தரின் பிரதிநிதியாக சிங்காசனத்தில் வீற்றிருக்கும் இயேசுவானவர் (வெளி 5:1-1)

(வெளி 5:1-14)
“அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன். புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யாரென்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன். வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது. ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன். அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம். அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுபக்கத்திலிருந்து புஸ்தகத்தை வாங்கினார். அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக் குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து; தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கொன்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள். பின்னும் நான் பார்த்ததாவது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாவுமிருந்தது. அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள். அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக் கேட்டேன். அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமேன் என்று சொல்லின. இருபத்து நன்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுது கொண்டார்கள்.”
 
 
விளக்கவுரை
 
வசனம் 1: “அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.”
ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப் பட்டிருந்த புஸ்தகத்தைத் தனது வலது கரத்தில் பிதாவாகிய கர்த்தர் பிடித்திருந்ததாக இங்கு கூறப்பட்டுள்ளது. பிதாவின் வலது கரத்திலிருந்து நம் தேவனாகிய இயேசுகிறிஸ்து இப்புஸ்தகத்தை எடுத்தார் என்பது இயேசுவிற்கு பரலோகத்தின் அனைத்து அதிகாரங்களும் கொடுக்கப் பட்டிருக்கிறது என பொருள்படும்.
 
வசனங்கள் 2-4: “புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யாரென்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன். வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது. ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.”
உலகை நியாயந்தீர்க்கவும், புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கவும், பிதாவாகிய கர்த்தரின் பிரதிநிதியாக பரிசுத்தவான்களுடன் அதில் வாழவும் இயேசுவைத் தவிர வேறு யாராலும் ஆகாது.
 
வசனம் 5: “அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங் கொண்டிருக்கிறார் என்றான்.”
இங்கு, “இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர்” என்ற சொற்றொடர் இயேசுகிறிஸ்துவே மகத்துவமுள்ள கர்த்தர், ராஜாதிராஜா, தகுதியானவர், அவர் கர்த்தரின் திட்டங்களை முழுவதும் நிறைவேற்றுபவருமாவார் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. இயேசுகிறிஸ்து கர்த்தராவார், கர்த்தரின் பிரதிநிதியான அவர் பிதாவின் திட்டங்களை நிறைவேற்றுவார்.
 
வசனம் 6: “அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.”
பிதாவாகிய கர்த்தரிடமிருந்து வானம் மற்றும் பூமியின் மீதான முழு அதிகாரத்தையும் பெற்ற இயேசுகிறிஸ்து, எல்லாவற்றையும் படைத்த மகத்துவமுள்ள கர்த்தராவார். மனித மாம்சத்தில் இவ்வுலகிற்கு வந்ததும், உலகின் எல்லாப் பாவங்களையும் பெற்றுக் கொண்டதும், நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை விடுவிக்க இப்பாவங்களுக்காக மரித்ததும் இவரே.
 
வசனம் 7: “அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுபக்கத்திலிருந்து புஸ்தகத்தை வாங்கினார்.”
இயேசுகிறிஸ்து கர்த்தர் என்ற தகுதியைப் பெற்றதால், பிதாவின் கையிலிருந்த புத்தகத்தை அவரால் எடுக்க முடிந்தது. அப்போதிலிருந்து நம் தேவன் கர்த்தரின் அனைத்து செயல்களையும் பொறுப்பெடுத்துக்கொள்வார் என இது பொருள்படும்.
 
வசனம் 8: “அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்க லசங்களையும் பிடித்துக் கொண்டு, ஆட்டுக் குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து”
இதன் பொருள் இயேசுகிறிஸ்து பிதாவிற்காக கர்த்தராக செயல்படுவார் என்பதாகும், 24 மூப்பர்களாலும், நான்கு ஜீவன்களாலும் கூறப்பட்ட அவரின் முதல் வேலை பரிசுத்தவான்களின் ஜெபங்களாயிருக்கும்.
 
வசனம் 9: “தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கொன்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு”
இயேசுகிறிஸ்து கர்த்தரின் பிரதிநிதியான பிறகு பரலோகத்தின் அமைச்சர்களால் இங்கு புகழப்படுகிறார். பூமியில் உள்ள பாவிகளை உலகத்தின் பாவங்களிலிருந்து இயேசுகிறிஸ்து இரட்சித்தமைக்காக பரலோகத்தின் அமைச்சர்கள் அவரைப் புகழ்ந்தனர். அவர் இவ்வுலகில் இருக்கும்போது, இயேசு யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு பாவிகளை உலகின் அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கும்பொருட்டு சிலுவையில் மரித்தார், மேலும் பாவத்திற்குரிய சம்பளத்தை தனது இரத்தத்தின் மூலம் பிதாவிற்கு கொடுத்து இப்பாவிகளை கிரயத்திற்கு வாங்கினார். இதனால் தான் தமது கர்த்தராகியவரின் நீதியின் செய்கைகளுக்காக பரலோகத்தின் அமைச்சர்கள் அவரைப் புகழுகின்றனர்.
 
வசனம் 10: “எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள்.”
பிதாவாகிய கர்த்தரின் பிரதிநிதியாக மாறிய இயேசுகிறிஸ்து பரிசுத்தவான்களை கர்த்தரின் ராஜ்யத்தின் மக்களாகவும் ஆசாரியர்களாகவும் மாற்றி அவர்கள் அதனை ஆளும்படிச் செய்தார். ஆகவே, இப்போது அனைத்து மகிமைகளையும் பெறவும் பரலோகத்தின் அமைச்சர்களின் புகழுரைகளைப் பெறவும் அதிகத் தகுதியுடையவரானார்.
 
வசனம் 11-12: “பின்னும் நான் பார்த்ததாவது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாவுமிருந்தது. அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக் கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.”
யோவான் அளித்த ஞானஸ்நானத்தின் மூலமாக உலகின் அனைத்துப் பாவங்களையும் இயேசு தன் சரீரத்தில் சுமந்ததால், அவரால் சிலுவையில் இரத்தஞ்சிந்த முடிந்தது, இதற்காக வல்லமையையும், ஐசுவரியங்களையும், ஞானத்தையும், அறிவையும், மரியாதையையும், பரலோகத்தின் அனைத்து ஜீவன்களின் ஆசீர்வாதங்களையும், பிதாவின் பிரதிநிதியாக பெறுவதற்கு அவர் தகுதியானவர். பரலோகத்தின் அமைச்சர்களாலும், அதன் தூதர்களாலும் சூழப்பட்ட அவர், அவர்களின் புகழுரைகளையும் ஆராதனைகளையும் பெறுகிறார். அல்லேலூயா! தேவனைப் புகழுங்கள்! கர்த்தரின் சிங்காசனத்தைச் சுற்றி நான்கு ஜீவன்களும் 24 மூப்பர்களும் உள்ளனர். எல்லா ஆத்துமாக்களையும் பாவத்திலிருந்து விடுதலையாக்கிய அவரின் மகிமை எல்லையில்லாததாகையால் அவர்கள் கர்த்தரைப் புகழ்ந்தனர்.
 
வசனம் 13-14: “அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக் கேட்டேன். அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமேன் என்று சொல்லின. இருபத்து நன்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்”
இறுதியாக, கர்த்தரின் பிரதிநிதியாக மாறிய இயேசுகிறிஸ்து பரலோகத்தின் அமைச்சர்கள் புகழுவதையும் ஆராதிப்பதையும் பெற்றுக்கொள்ளும் தகுதியுடையவராக உயர்த்தப்பட்டார். பரலோகத்தின் அனைத்து அமைச்சர்களும் அவருக்கு ஆசீர்வாதத்தையும், மரியாதையையும், மகிமையையும் என்றென்றும் வழங்கினர், ஏனெனில் கர்த்தர் அத்தகைய தகுதியை பெற்றிருப்பது ஆச்சர்யமானதும் அவர்கள் நன்றிகூறுவதுமாகும். பிதாவாகிய கர்த்தரின் பிரதிநிதியாக சிங்காசனம் ஏறிய அவருக்கு வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்துப் பரிசுத்தவான்களும் மகிமையையும் மரியாதையையும் கொடுக்கவேண்டும்.