• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 10 : வெளிப்படுத்தின விசேஷம் (வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 5-2] சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் ஆட்டுக்குட்டியானவர் (வெளி 5:1-14)

2021.04.22 28
(வெளி 5:1-14)
 
வெளி 5ஐ இப்போது நாம் பார்த்தோம். இங்கு கர்த்தரின் வார்த்தை, இறுதிகாலத்தில் மனிதகுலத்தை இரட்சிப்பதும் தீர்ப்பதும் தேவனே என்று கூறுகிறது. நாம் விசுவாசிக்கும் இந்த தேவன் யார்? விசுவாசிப்பவர்களுக்கு இயேசுகிறிஸ்துவே இரட்சகர் என்றும், மனிதகுலத்தின் நியாயாதிபதி என்றும், ராஜாதி ராஜா என்றும் வார்த்தை கூறுகிறது.
இயேசுவை ஒரு வரையறுக்கப்பட்ட தேவனாக நாம் அடிக்கடி நினைக்கிறோம். ஆனால் நம் தேவனே படைக்கப் பட்டவைகளின் நீதிபதியாயிருக்கிறார்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நமக்கு கொடுத்ததன் மூலம் தேவன் நம்மை நம் அனைத்துப் பாவங்களிலிருந்தும், நியாயத்தீர்ப்பிலிருந்தும், அழிவிலிருந்தும் விடுவித்தார். நம் தேவன் நமது உண்மை இரட்சகரும் உண்மை கர்த்தருமானார். அதே சமயம், நம் தேவனே அனைத்து மனிதர்களினதும் ராஜாவாகவும் நியாயாதிபதியாகவும் இருக்கிறார். நாம் விசுவாசிப்பதும் சார்ந்திருப்பதுமான தேவனுக்கு நம் நன்றியுள்ள இருதயங்களை எழுப்புவோமாக.
வசனம் 1 இலிருந்து, அவருக்கு வலது பக்கத்தில் அமர்ந்திருந்தவரின் வலது கையில் ஒரு புத்தகம் இருந்தது, அது ஆட்டுகுட்டியாகும் -அதாவது இயேசுகிறிஸ்து- இப்புத்தகத்தை எடுத்தார் என்பதை நாம் காணலாம். இந்த சிங்காசனத்தில் நம் தேவன் அமர்ந்ததை கடைசி வசனத்தில் நாம் காணலாம். விசுவாசிகள் அவிசுவாசிகள் உட்பட அனைத்து மனிதர்களுக்கும் சீக்கிரமாகவே அவர் நியாயாதிபதியாவார் என்று இவ்வசனம் நம்மிடம் கூறுகிறது. ஆகவே, இயேசுவே கர்த்தர் என்பதை நாம் அறிந்து அதனை விசுவாசிக்கலாம், அவர் அனைவருக்கும் நியாயாதிபதியானார்.
நம் தேவன் மறுபடியும் பிறந்தவர்களாகிய நமக்கு மட்டும் தன் பரிசுகளையும் தண்டனைகளையும் அளிப்பவராயிராமல் உண்மையான நீதிபதியாகவும் மனிதர்கள் உட்பட பிரபஞ்சத்தின் எல்லாவற்றிற்கும் ராஜாதிராஜாவாகவும் இருக்கிறார். 21 ஆம் நூற்றாண்டுக்குள் வந்துவிட்டதாக மக்கள் அடிக்கடி கூறுகிறார்கள். இதுவே தேவன் திரும்பி வரும் காலமாக இருக்கலாம். நம் தேவனுடைய வருகை சமீபமாயிருக்கிறது என நாம் கூறும்போது, உலகின் அழிவும் சமீபமாயிருக்கிறது எனவும் அது பொருள்படும்.
இங்கு வார்த்தையின் மூலம் நாம் காண்பது, அனைவரையும் நியாயம் தீர்க்க நம் தேவனுக்கு அதிகாரம் உண்டு என்பதாகும். நம் தேவன் மனித மாமிசத்தில் இவ்வுலகிற்கு வந்து, 30 வயதில், தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலம் மனிதகுலத்தின் பாவங்களையெல்லாம் ஒரேதரமாக தன் மீது ஏற்றுக்கொண்டார். மரிக்கும்படியாக அவர் சிலுவையில் அறையப்பட்டதால், மனிதர்களின் அனைத்துப் பாவங்களுக்காகவும் அவர் தீர்க்கப்பட்டார்.
பிதாவாகிய கர்த்தரால் மட்டுமே எல்லா மனிதர்களினதும், வானத்திலும் பூமியிலும் படைக்கப்பட்டவைகளின் மரியாதையையும் ஆராதனையையும் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கும் பிதாவுடன் சேர்ந்து மரியாதையையும் ஆராதனையையும் பெறும் உரிமை வழங்கப்பட்டது, ஏனெனில் அவர் பிதாவாகிய கர்த்தருக்கு கீழ்ப்படிந்து அவரின் சித்தத்தை நிறைவேற்றினார். ஆகவே, கிறிஸ்துவால் தன் தந்தையின் அனைத்து அதிகாரங்களையும் சுதந்தரித்துக் கொள்ள முடிந்தது.
மனிதகுலத்தை நியாயந்தீர்க்கும் உரிமை கிறிஸ்துவுக்கு வழங்கப்பட்டது, அவராலேயே மனிதகுலம் இரட்சிக்கப்பட்டு தீர்க்கப்பட்டது. நம்மை இரட்சித்த தேவன் யாரென நாம் அறிந்துகொள்ளுவது மிகவும் ஆதாயமுள்ளதாகும். முடிவு காலத்தில் நம் விசுவாசத்தை உறுதியாக வைத்துக்கொள்ள இந்த அறிவு மிகவும் அவசியமானதாகும். நம்முடைய தேவனிடம் எத்தகைய வல்லமை இருக்கிறது என தெளிவாக அறிந்து அவரை விசுவாசிக்கும்போது, இந்த அறிவு நமக்கு மிகுந்த பலமாயிருக்கிறது.
நம்மை இரட்சித்த தேவனுக்கு, ஒவ்வொருவரின் நன்மைக்காகவும் தீமைக்காகவும் அவர்களை நியாயந்தீர்க்கும் வல்லமை இருக்கிறது. நம் தேவன் பிதாவாகிய கர்த்தரைப் போன்றே நம் ஆராதனைகளைப் பெற்றுக்கொள்ள தகுதியானவர் என்பதை நாம் உணர்ந்து அதனை விசுவாசிக்க வேண்டும். நம் தேவன் இப்பூமிக்கு வந்து கொல்லப்பட்டார், அவர் தன் இரத்தத்தின் மூலம் ஒவ்வொரு இனத்தினதும், மொழியினதும், நாடுகளினதும், மக்களுக்காக கர்த்தருக்கு கிரயஞ்செலுத்தி, நம் கர்த்தரின் சந்நிதானத்தில் அவர்கள் பூமியை ஆளும் விதமாக அவர்களை ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் ஆக்கினார்.
பரலோகத்தில் தூதர்களின் குரல் ஒலித்ததாக இவ்வசனம் கூறுகிறது. அவர்கள் பத்தாயிரம் மடங்கு பத்தாயிரமாகவும், ஆயிரம் மடங்கு ஆயிரமாகவும் இருந்தார்கள், அவர்கள் சத்தமாக தேவனைப் புகழ்ந்து அவரை ஆராதித்தார்கள்: “அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்” வசனம் 13 இல் யோவான் தான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் குறித்து தொடர்ந்து சாட்சி கூறினான். “அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக் குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக் கேட்டேன்.” படைக்கப்பட்டவைகளெல்லாம் யாருக்கு மகிமையைச் செலுத்துகின்றன? அனைத்து ஆசீர்வாதங்களும் மரியாதையும், வல்லமையும், நித்திய நித்தியமாக சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கு அளிக்கப்படுகிறது.
மனிதகுலத்தின் மகிமை அளிப்பதுவும், புகழ்பாடுவதும், ஆராதனைச் செய்வதும், இயேசுகிறிஸ்துவின் தந்தையாகிய பிதாவிற்கு உரித்தாகிய ஒன்றாயிருந்தது. இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து மனிதகுலத்தை அதன் பாவங்களிலிருந்தும், அழிவிலிருந்தும், நியாயத்தீர்ப்பிலிருந்தும், விடுவித்தமையால், இந்த பாவவிடுதலைக்காக பிதாவுடன் சேர்த்து அனைத்து மகிமையும் கொடுக்கப்பட்டு அனைத்து ஆராதனைகளையும் பெறவும் தகுதியானதால், அவருக்கும் பிதாவைப் போன்றே அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
தேவன் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்றும் அவர் தேவனாகவும் நியாயாதிபதியாகவும், நமது இரட்சகருமாகவும் இருக்கிறார் என்றும் எண்ணுவதே ஒரு மகத்தான மகிமையால் நம்மிருதயங்கள் நிரம்பும்படிச் செய்கிறது. அது சரியானதே-தேவனே ராஜாதி ராஜா இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் படைத்த படைப்பின் கர்த்தர் அவரே.
நம் தேவன் படைப்பின் கர்த்தராய் இருப்பதாலும் அவர் இவ்வுலகிற்கு வந்து தம் நீராலும் இரத்தத்தாலும் நம்மை இரட்சித்ததாலும், மனிதர்களும் இப்பிரபஞ்சத்திலுள்ள யாவும் அவரின் சிங்காசனத்திற்கு முன்பாக முழங்கால் படியிட்டு, எல்லா ஆராதனைகளையும் புகழையும், மகிமையையும் மரியாதையும் அவருக்கு அளிக்க அவர் தகுதியானவரே. இந்த மகிமையின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் இத்தேவனே எல்லோருக்கும் நீதிபதியாயிருக்கிறார் என்ற அறிவினால் நம் விசுவாசம் பலமடைந்து நம் இருதயங்கள் பெரிதாக ஊக்கப்படுத்தப்படுகிறது.
நான்கு பெரிய மகான்களில் ஒருவராக இயேசுவை சில மக்கள் எண்ணுகின்றனர். ஆனால் எவ்வகையிலும் நம் தேவன் மனிதனில்லை. தேவன் நம்மை உருவாக்கியவரும், படைத்தவரும் இரட்சித்தவருமாக இருக்கும் கர்த்தராவார். ஆகவே, நம்மைப் படைத்த தேவனை எந்த மனிதனுடனும் ஒப்பிடவே கூடாது. சாக்ரடீசுடனோ, கன்பூசியசுடனோ, புத்தருடனோ அல்லது எந்த மனிதர்களுடனோ நம் தேவன் ஒப்பிடத்தக்கவரல்ல. இயேசு நம்மை இரட்சிக்க மட்டுமே 33 வருடங்கள் மனிதனாக வாழ்ந்தார். ஆனாலும் கூட அவர் கர்த்தரைப் போன்றவராகவே இருந்தார். இது சரியான உதாரணம் அல்ல. ஆனால் மனிதர்கள் மனிதர்களை மட்டுமே பிரசவிப்பதைப் போல, அவர் பிதாவாகிய கர்த்தரின் குமாரனாயிருப்பதால் இயேசுகிறிஸ்துவும் கர்த்தராவார்.
ஆகவே, நம் படைப்பின் கர்த்தராகிய இயேசுவும் கர்த்தரே. ஆனால் நம்மை இரட்சிக்கவே தேவன் இவ்வுலகிற்கு வந்தார். அவர் நம்மை இரட்சித்ததால், நாம் அவரை மகிமைப்படுத்துவதைப் பெற்றுக்கொள்ள அவர் தகுதியானவரே, இயேசுவானவர் படைக்கப்பட்டவரல்ல என்றும், அவரே படைத்தவரென்றும் நம்மிருதயங்களில் மிக உறுதியாக விசுவாசிக்கவேண்டும். நாம் எத்தனை மகிழ்ச்சியுடையவர்களாகவும் நன்றியறிதல் உடையவர்களாகவும் இருக்கிறோம்!
 
 
கர்த்தரின் திட்டத்தை நிறைவேற்றக்கூடிய நம் தேவன்
 
ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டுள்ள புஸ்தகத்தை தேவனைத் தவிர வேறு யாராலும் திறக்க முடியாது. ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்ட இப்புஸ்தகம் கர்த்தரின் வாக்குத்தத்தங்கள் அடங்கிய புஸ்தகமாயிருக்கிறது. நாம் உட்பட கர்த்தர் இப்பிரபஞ்சத்திலுள்ள யாவற்றையும் இயேசு கிறிஸ்துவுக்குள் படைத்தார். படைப்பிற்கு முன்பே, நம்மைத் தம் பிள்ளைகளாக்க இயேசுகிறிஸ்துவுக்குள் கர்த்தர் ஒரு திட்டத்தினை வைத்திருந்தார். கர்த்தரின் படைப்பின் நோக்கத்தை நிறைவேற்றவும் நம் இரட்சிப்பை நிறைவேற்றவும் மனிதகுலத்தை நியாயந்தீர்க்கவும் நம் தேவன் இந்த முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தைப் பெற்றுக்கொண்டார்.
கர்த்தரின் வார்த்தை நமக்கு கூறுகிறது, “வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது.” வேறுவார்த்தைகளில் கூறுவதானால், கர்த்தரின் திட்டத்தை நிறைவேற்றக்கூடியவர்கள் யாருமில்லை. இயேசுகிறிஸ்துவால் மட்டுமே இதனைச் செய்யமுடியும். ஏன்? ஏனெனில் தனது குமாரனின் மூலமே கர்த்தர் அனைத்தையும் திட்டமிட்டார்.
பிதாவாகிய கர்த்தரின் திட்டமாகிய, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தை திறக்கும் நியாயத்தீர்ப்பின் அதிகாரம் தேவனிடத்திலிருந்தது எனவும் இது பொருள்படும். இந்த அதிகாரத்துடன், இயேசு திரியேகக் கடவுளின் திட்டதிலுள்ள ஒவ்வொன்றையும் நிறைவு செய்தார், ஞானஸ்நானத்தினால் நம் அனைத்துப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டு, இப்பாவங்களினால் நமக்காக சிலுவையில் தண்டிக்கப்பட்டார். தேவன் தம் தியாகத்தினாலும், தம் சொந்த உயிரை விலையாகக் கொடுத்தும் நம்மைப் பாவங்களிலிருந்து விடுவித்து கர்த்தருக்கு முன்பாக நம்மை அவரின் ஆசாரியர்களாக்கினார்.
இயேசுகிறிஸ்து தன் இரட்சிப்பை விசுவாசிப்போர் தம்முடன் ஆளும்படிச் செய்தார். “இவ்வுலகை நாம் ஆளுகைச் செய்வோமாக” என்று கர்த்தரின் வார்த்தை கூறுவதைப் போன்று, தேவன் இவ்வுலகிற்கு திரும்பிவருகையில் எல்லாவற்றையும் அவர் வென்று பூமியில் ஆயிரவருட அரசாட்சியை எடுத்துவருவார்.