• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 10 : வெளிப்படுத்தின விசேஷம் (வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 6-2] ஏழு முத்திரைகளின் காலங்கள் (வெளி 6:1-17)

(வெளி 6:1-17)
 
வெளிப்படுத்தின விசேஷத்தின் ஒவ்வொரு அதிகாரத்தின் கருக்களையும் கீழ்க்கண்டவாறு சுருக்கமாகக் கூறலாம்.
அதிகாரம் 1 - வெளிப்படுத்தலின் வார்த்தைக்கான முன்னுரை
அதிகாரம் 2-3 - ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கு எழுதப்பட்ட நிருபங்கள்
அதிகாரம் 4 - கர்த்தரின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் இயேசு
அதிகாரம் 5 - பிதாவாகிய கர்த்தரின் பிரதிநிதியாக முடிசூட்டப்பட்ட இயேசு
அதிகாரம் 6 - கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட ஏழு காலங்கள்
அதிகாரம் 7 - மகா உபத்திரவக்காலத்தில் இரட்சிக்கப்படுபவர்கள்
அதிகாரம் 8 - ஏழு வாதைகளை அறிவிக்கும் எக்காளங்கள்
அதிகாரம் 9 - பாதாளத்தின் வாதைகள்
அதிகாரம் 10 - எடுத்துக்கொள்ளப்படுதல் எப்போது நிகழும்?
அதிகாரம் 11 - இரண்டு ஒலிவ மரங்களும் இரண்டு தீர்க்கதரிசிகளும் யார்?
அதிகாரம் 12 - பெரிதான துயரங்களைச் சந்திக்கப்போகும் கர்த்தரின் ஆலயம்
அதிகாரம் 13 - அந்திகிறிஸ்துவின் தோன்றுதலும் பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக மரிப்பதும்
அதிகாரம் 14 - பரிசுத்தவான்களின் உயிர்த்தெழுதலும் எடுத்துக்கொள்ளப்படுதலும், வானத்தில் அவர்கள் கர்த்தரைப் புகழுவதும்
அதிகாரம் 15-16 - ஏழுபாத்திரங்களின் வாதைகள் தொடங்குதல்
அதிகாரம் 17 - திறளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கும் மகாவேசி நியாயந்தீர்க்கப்படுதல்
அதிகாரம் 18 - பாபிலோனின் வீழ்ச்சி
அதிகாரம் 19 - மகத்துவமுள்ளவரால் ஆளப்படும் ராஜ்யம்
அதிகாரம் 20 - ஆயிரவருட அரசாட்சி
அதிகாரம் 21 - பரலோகத்தின் பரிசுத்த நகரம்
அதிகாரம் 22 - ஜீவத்தண்ணீர் செல்லும் புதிய வானமும் புதிய பூமியும்
 
முதல் அதிகாரத்தின் தொடக்கமுதலே, வெளிப்படுத்தலின் ஒவ்வொரு அதிகாரமும் ஒரு கருவை உடையதாயிருக்கிறது, அவற்றை விரிவாகப் பார்த்தால் அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து கடைசி அதிகாரம் வரை தொடர்ச்சியாக இருக்கின்றன. ரோமரில் முதலாம் அதிகாரம் முன்னுரையாகவும், இரண்டாம் அதிகாரம் யூதர்களுக்கான கர்த்தரின் வார்த்தையாகவும், மூன்றாம் அதிகாரம் புறஜாதியாருக்கான அவரின் வார்த்தையாகவும் இருப்பது போல, வெளிப்படுத்தின விசேஷமோ ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒவ்வொரு கருவை உடையதாய் தொடர்ந்து செல்கிறது.
முழு வார்த்தையின் அடிப்படையில் வெளிப்படுத்தலை நான் விளக்குவதற்கான காரணம் அநேக மக்கள் வெளிப்படுத்தின விசேஷத்தை எல்லாவிதமான தத்துவங்களாலும் எழுதியுள்ளனர், இத்தகைய கோட்பாடுகளை மையமாக வைத்து வெளிப்படுத்தின விசேஷத்தை நீங்கள் வாசித்தீர்களானால், ஆபத்தான தவறுகளை இழைப்பதிலிருந்து நீங்கள் தப்பிக்கமாட்டீர்கள்.
வேதாகமம் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்ட கர்த்தரின் மக்களின் மூலமாக எழுதப்பட்டதால், அதில் திருத்தம் செய்வதற்கு எதுவுமே இல்லை. அதற்கு மாறாக, எழுத்தாளரின் எழுத்துக்கள் எத்தனை சரியானதாகவும் அறிவு பூர்வமானதாகவும் இருந்தாலும் இத்தகைய நூல்களில் தவறுகள் இருப்பதால் இவற்றிற்கே திருத்தங்கள் தேவை. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கடந்து வந்தாலும் கர்த்தரின் வார்த்தை மாறவே இல்லை. எத்தனை ஆண்டுகளைக் கடந்தாலும் வார்த்தையானது தவறின்றியே இருக்கிறது, ஏனெனில் வேதாகமம் பரிசுத்த ஆவியானவரால் தம் இருதயங்கள் ஏவப்பட்ட கர்த்தரின் ஊழியர்களால் எழுதப்பட்டுள்ளது.
கர்த்தர் நமக்கு கூற விரும்புபவைகள் வேதாகமத்தில் மறைவாக உள்ளதால் நம்மில் அநேகர் வேதாகமத்தைக் குறித்த அறிவில்லாதவர்களாய் உள்ளனர். பிரபஞ்சம் படைக்கப்பட்டது முதல் வேதாகமம் மாறியதே இல்லை, ஒருமுறை கூட மாறியதில்லை. ஆனாலும் அநேக மனிதர்களுக்கு கர்த்தரின் வார்த்தையைக் குறித்தும் அவரின் திட்டங்களைக் குறித்தும் குறைவான அறிவே உள்ளபடியால், வேதவசனங்களைத் தம் சொந்த யோசனைகளின் படியே விளக்கத் தொடங்கினர்.
கர்த்தர் அவற்றில் மறைந்திருப்பவைகளை எல்லோருக்கும் வெளிப்படுத்துவதில்லை என்பதால், அவரை ஆராதிக்காதவர்களும், வார்த்தையின் படி விசுவாசிக்காதவர்களும், கர்த்தரின் பெயரை வீணில் அழைத்து தம் சொந்த ஆசைகளை நிறைவேற்ற முயல்வதால், அவர்களால் சத்தியத்தைக் காணவே முடியாது. வேறுவார்த்தைகளில் கூறுவதானால், தம்மிடம் பாவமுள்ள மக்களால், எத்தனை கஷ்டப்பட்டு முயற்சித்தாலும் வெளிப்படுத்தலின் வார்த்தையை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. வார்த்தையைப் புரிந்துகொள்ளும் திறமை அவர்களிடம் இல்லாததே இத்தனை தவறுகளுக்கும் காரணம் - சிலர் முடிவுகாலத்தைக் குறித்த காட்சிகளை விசுவாசித்து அவற்றை ஆராய்கின்றனர், சிலர் இயேசுவின் இரண்டாம் வருகையின் நேரத்தை கூட அறிவிக்கின்றனர், அதே நேரம் மற்றவர்கள் தம்முடைய சொந்த அறிவினால் வேதாகமத்தை விளக்குகின்றனர், இப்படிச் செய்யும்போது வேதவசனங்களில் எல்லா விதமான தவறுகளையும் இழைக்கின்றனர்.
நமக்குத் தெரிந்த அத்தகைய இறையிலாளர்களின் பிரதிநிதிகளான, ஆபிரகாம் குய்பர் மற்றும் லூயிஸ் பொக்காஃப் ஆகியோர் ஆயிரவருட அரசாட்சி இல்லையென வாதிட்டனர், மற்றும் சி.ஐ.ஸ்கோஃபீல்ட் என்பவர் உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படுதல் என்ற தத்துவத்தை அறிவித்தார். ஆனால் இந்த அறிஞர்கள் வாதிட்ட தத்துவங்களெல்லாம் அவர்களின் யோசனைகளின் படி அமைந்த தவறான போதனைகள்.
முதலில், அடிப்படைவாதிகளால் ஆயிரவருட அரசாட்சி இல்லை என்ற தத்துவம் தனியான ஆயிரவருட அரசாட்சி இல்லையெனவும், இப்போது உலகில் உள்ள பரிசுத்தவான்களின் இருதயங்களில் இந்த அரசாட்சி நிரம்பும் என வாதிடுகிறது. ஆயிர வருட அரசாட்சியில்லை என்பது உண்மையாகவே ஆயிரவருட அரசாட்சி நிறுவப்படும் என்பதை மறுக்கிறது. இக் “கொள்கை” ஆயிரவருட அரசாட்சியை குறியீடாக விளக்கமளித்து, கிறிஸ்துவின் வருகைக்காக பரிசுத்தவான்கள் ஆயிரம் வருடங்கள் காத்திருக்கும் காலம் என இதனைக் கூறுகிறது. ஆயிரவருட அரசாட்சி மகா உபத்திரவம் இல்லாமலேயே பரிசுத்தவான்களின் இருதயங்களில் நிறுவப்பட்டு விட்டது என ஆயிரவருட அரசாட்சி இல்லையென விளக்கம் கூறுவது மிகவும் தவறானதாகும்.
ஆயிரவருட அரசாட்சி இல்லை என்பதைவிட உலகம் முழுவதும் பரவியுள்ளது ஸ்கோஃபீல்ட் அறிவித்த உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவமாகும். ஆனால் இந்த “விளக்கவுரை” கர்த்தரின் திட்டத்தையே மாற்றியமைப்பதில் முடிவுற்றது. கர்த்தர் பிரபஞ்சத்தை படைக்கும் முன்னரே ஏழுகாலங்களையும் திட்டமிட்டார், அதினதின் நேரத்தில் அவரின் திட்டப்படி எல்லாவற்றையும் நிறைவேற்றினார். ஆனால் வெளி 6 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள கர்த்தரின் திட்டத்தை குறித்த அறிவில்லாத மக்கள் தவறான, உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவத்தை உருவாக்கினர். புறஜாதியாரிலிருந்து மறுபடியும் பிறந்தவர்கள் மகா உபத்திரவ காலம் தொடங்குவதற்கு முன்னரே எடுத்துக்கொள்ளப்படுவர் என்றும், இஸ்ரவேலின் சில மக்கள் ஏழாண்டு கால உபத்திரவத்தின் போது இரட்சிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
இத்தத்துவம் இறையியல் கொள்கையாக தொடர்ந்திருந்து, அநேக மக்களை குழப்பத்திற்குள்ளாக்குகிறது. மகா உபத்திரவத்திற்கு முன் இத்தத்துவம் வலியுறுத்துவது போல் பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்பட்டால் வெளி 13 இல் எழுதப்பட்டுள்ள பரிசுத்தவான்களின் துன்பப்படுதலோ, இரத்தசாட்சிகளாய் மரிப்பதோ நடைபெறாது. இயேசுவை விசுவாசிப்பவர்கள் மகா உபத்திரவத்தின் நடுவே எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழும் என்பதை விசுவாசிப்பதன் மூலம் தம் நம்பிக்கையை தயார் செய்து உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவத்திலிருந்து வெளியேறவேண்டும்.
வெளிப்படுத்தின வார்த்தை கர்த்தர் தம் ஏழு காலங்களில் உலகை எப்படி வழி நடத்துவார் என்பதை வெளிப்படுத்துகிறது. வெளி 6 முழுவதும் விவரிக்கப்பட்டுள்ள கர்த்தர் ஏற்படுத்திய ஏழு காலங்களை மையமாக வைத்து நாம் பார்க்க வேண்டும். வேத வசனங்களின் இந்த ஏழு காலங்களைக் குறித்த உண்மை மக்களுக்குத் தெரியாததாகையால் மக்கள் குழப்பமுற்றவர்களாகவும் தம் விசுவாசம் ஆடிப்போகிறவர்களாயும் உள்ளனர். ஆகவே வெளி 6 இல் எது எப்படி எழுதப்பட்டுள்ளதோ, அப்படியே விசுவாசிக்க வேண்டும். இப்படிச் செய்வதற்கு வேதவசனங்களில் குறுகிய துண்டு துண்டான சொற்களை எண்ணுவதற்கு பதிலாக, முழு வேதாகமமும் சாட்சி கூறும் ஏழு காலங்களையும் குறித்த மறைவான வார்த்தையை நாம் விசுவாசிக்க வேண்டும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது மக்களிடம் மறைக்கப்பட்டதைப் போல் கர்த்தரின் ஏழு காலங்களும் கூட மறைக்கப்பட்டிருந்தன. அநேக வேதாகம வல்லுநர்கள் வெளிப்படுத்தலின் வார்த்தையை புரிந்துகொள்ள முயற்சித்து தம் யோசனைகளை மையமாக வைத்து அநேக கொள்கைகளை அறிவித்தாலும், வெளிப்படுத்தலின் வார்த்தை புரிந்துகொள்வதற்கு கடினமாகவே இருக்கிறது. இது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது இதுவரை மறைந்திருந்ததற்கு ஒப்பானது. ஆனால் இந்த அறிஞர்களால் கிறிஸ்துவின் வருகையைக் குறித்தும், பரிசுத்தவான்களின் எடுத்துக் கொள்ளப் படுதலைக் குறித்தும் ஆயிரவருட அரசாட்சியைக் குறித்தும் கூறப்பட்ட தத்துவங்கள் இயேசுவை விசுவாசிப்பவர்களுக்கு எந்த ஆதாயத்தையும் அளிக்கவில்லை.
வெளிப்படுத்தலின் வார்த்தையை புரிந்து கொள்வதற்கு 6ஆம் அதிகாரத்தைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமானதாகும். இந்த அதிகாரம் வெளிப்படுத்தலின் வார்த்தையை முற்றிலுமாக புரிந்துகொள்ளவும் அதனைத் தீர்க்கவும் அவசியமான திறவுகோலாகும், வெளிப்படுத்தலின் வார்த்தையை நாம் முற்றிலுமாக அறிந்துகொள்ள முயற்சிக்கும் முன் ஒன்றை நாம் நினைவு கூற வேண்டும்: நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்து அதனை விசுவாசிக்காவிட்டால் வெளிப்படுத்தலைப் புரிந்துகொள்வது சாத்தியமில்லாத ஒன்று. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்து விசுவாசிக்கும்போது மட்டுமே கர்த்தரின் சத்தியத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என நீங்கள் அறியவேண்டும்.
“அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது” என வெளி 8 இல் எழுதப்பட்டுள்ளபடி ஏழு எக்காளங்களின் வாதைகள் பூமியின் மீது வரும். இது வெளி 6 இல் எழுதப்பட்டுள்ள நான்காவது காலமாகிய மங்கின நிறமுடைய குதிரையின் காலத்தில் நடக்கப்போகிறவைகளைக் குறித்து விளக்குகிறது. ஆகவே, கர்த்தர் ஏற்படுத்திய ஏழு காலங்களைக் குறித்து நீங்கள் புரிந்துகொள்ளாமல், ஏழு எக்காளங்களின் வாதைகளையும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. முழுவதுமாக வெளிப்படுத்தின வார்த்தையை புரிந்துகொள்ள கர்த்தர் நமக்களித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை முதலில் புரிந்துகொண்டு அதனை விசுவாசிக்க வேண்டும்.
வெளி 6 இல் உள்ள கர்த்தரின் வார்த்தை அவர் மனிதகுலத்தை உருவாக்கியபோது கர்த்தர் தயாரித்த திட்டத்தினை முற்றிலுமாக அளிக்கிறது. மனிதகுலத்தின் தொடக்கத்திலிருந்து முடிவுவரை கர்த்தர் ஏழு காலங்களாகப் பிரித்தார்.
அவையாவன: முதலில், வெள்ளைக் குதிரையின் காலம்; இரண்டாவது சிகப்புக் குதிரையின் காலம், மூன்றாவது கறுப்புக் குதிரையின் காலமாகும்; நான்காவது மங்கின நிறக் குதிரையின் காலம்; ஐந்தாவது பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக மரிப்பதும் எடுத்துக்கொள்ளப்படுவதுமான காலமாகும்; ஆறாவது, இவ்வுலகம் அழியும் காலமாகும்; ஏழாவது, ஆயிரவருட அரசாட்சி மற்றும் புதியவானம் புதியபூமி ஆகியவற்றின் காலங்களாகும். மனிதகுலத்திற்கான தன் திட்டத்தில் கர்த்தர் இந்த ஏழுகாலங்களை பிரித்தார் என்பதை விசுவாசத்து அதற்கு கீழ்ப்படியவேண்டும். இப்போது வெள்ளை மற்றும் சிகப்புக் குதிரையின் காலங்கள் கடந்து, உலகம் கறுப்புக் குதிரையின் காலத்தில் சென்று கொண்டிருக்கிறது.
நாம் இப்போதுள்ள காலம் பஞ்சத்தின் காலமென்று வேதவசனங்கள் கூறுகின்றது. ஆனால் மங்கின நிறமுடைய குதிரையின் காலம் அருகில் உள்ளது. மங்கின நிறமுடைய குதிரையின் காலம் தொடங்குவதுடன் பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக மரிக்கும் காலமும் தொடங்கும், அப்போது ஏழாண்டுகால மகா உபத்திரவக் காலத்திற்குள்ளும் பிரவேசிப்போம். இந்த உபத்திரவத்தின் காலமும் இரத்தசாட்சியாக மரிக்கும் காலமும் மங்கின நிறமுடைய குதிரையின் காலமாகும்.
“அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ மங்கினநிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்டமிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.” இங்கு “பூமியின் துஷ்டமிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.” என்ற இந்த வசனம் மங்கின நிறமுடைய குதிரையின் காலத்தில் அந்திகிறிஸ்து தோன்றி பரிசுத்தவான்களை இரத்தசாட்சியாக்குவான் என்பதைக் குறிக்கிறது.
மங்கின நிறமுடையக் குதிரையின் காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகள் வெளி 8:1-7 இல் எழுதப்பட்டுள்ளன. அதில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது “அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று. பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங் கண்டேன், அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது. வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது அதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று. பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின. அப்பொழுது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள். முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப் பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொரு பங்கு வெந்து போயிற்று, பசும் புல்லெல்லாம் எரிந்து போயிற்று”
வெளி 8 இன் ஏழு எக்காளங்களின் வாதைகளைக் குறித்த மேற்கண்ட வசனங்கள் மங்கின நிறமுடைய குதிரையின் காலத்தைக் குறித்த சத்தியத்தின் விளக்கமான வலியுறுத்துதலாகும். இதில் அந்திகிறிஸ்துவின் தோன்றலைக் குறித்தும், மங்கின நிறமுடைய குதிரையின் காலத்தில் நடக்கப்போகும் ஏழு எக்காளங்களினதும் ஏழு பாத்திரங்களினதும் வாதையைக் குறித்தும் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.
மறுபுறம், அதிகாரங்கள் 4 மற்றும் 5 ஆகியவை இயேசுகிறிஸ்து உலகம் முழுவதையும் ஆளுவார் என்பதையும், அவை கர்த்தரிடம் வரவேண்டுமெனவும், கர்த்தரின் முழுத்திட்டங்களும் இயேசுகிறிஸ்துவாகிய கர்த்தரால் நிறைவேற்றப்படும் எனவும் நம்மிடம் கூறுகிறது. இப்படியாக, வெளி 4 மற்றும் 5 இலிருந்து, இயேசுகிறிஸ்து எத்தகைய மகத்துவமான கர்த்தரென்பதையும் வல்லமை உள்ளவர் என்பதையும் நாம் காணலாம்.
வெளி 8 நம்மிடம் கூறுகிறது, “அப்பொழுது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள். முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.” மங்கின நிறமுடைய குதிரையின் காலம் வரும் போது, உலகின் காடுகளில் மூன்றிலொரு பாகம் எரிந்து போகும், இந்த அழிவிற்கு பிறகு அதிகமான வாதைகள் தொடரும்.
முதலாவது எக்காளத்தின் வாதை பேரழிவாகும், இது மூன்றிலொரு பாகம் மரங்களையும் புற்களையும் எரித்துபோடும். இந்த அழிவு உலகைத் தாக்கும்போது, உலகின் மூன்றிலொரு பாகத்தின் காடுகள் எரிவதால், இவற்றின் புகை சூரியனை மறைத்து ஒரு வித புகை மண்டலத்தை உருவாக்குவதால், மீதியிருக்கும் மரங்களும் அழிந்துபோகும். பயிர்கள் விளையாது, ஆகவே முழு உலகமும் பஞ்சத்தினாலும், பட்டியினாலும் அவதிப்படும்.
இந்த பஞ்சத்தின் காலத்தில், ஒரு நாள் சம்பளம் கால் பாகம் கோதுமை வாங்கவோ அல்லது முக்கால் பாகம் வாற்கோது வாங்கவோ மட்டுமே போதுமாயிருக்கும். இப்போது உலகம் சீக்கிரமாக வரப்போகும் பஞ்சத்தையும் பட்டினியையும் சந்திக்கிறது. இவ்வுலகத்தின் பஞ்சம் ஆவிக்குரியதாகும் சரீரத்திற்குரியதாகவும் இருக்கும். ஆவிக்குரிய பஞ்சம் இன்றைய உலகில் ஏற்கெனவே உள்ளது.
இன்றைய சபைகள் சாதாரண கிறிஸ்தவர்களால் நிரப்பப் பட்டுள்ளது, அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் ஆவிக்குரிய ரொட்டியையும் ஜீவனையும் உலகிற்கு பகிர்ந்தளிக்கும் திறமை இல்லாதவர்களாய் உள்ளனர். ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரையிலும் அங்கிருந்து அமெரிக்கா கண்டம் வரையிலும் வாழுகின்றனர். இன்றைய கிறிஸ்தவ சமூகத்தின் சிலர், பசியுடனிருக்கும் ஆத்துமாக்களுக்கு ஆவிக்குரிய உணவை அளிக்கின்றனர்.
மங்கின நிறமுடைய குதிரையின் காலத்தை அந்திகிறிஸ்து தோன்றும் காலமாக நாம் கூறுகிறோம். இக்காலத்தில் இயற்கை அழிவுகள் ரொட்டியையும் தண்ணீரையும் அரிதானவையாக்கும், இந்த பெரிதான பஞ்சத்தில் வெகு சிலராலேயே தப்பிக்க முடியும். உலகம் விஞ்ஞான பூர்வமாக தொடர்ந்து முன்னேறினாலும், வாழ்க்கைத் தரம் கொடிய வறுமைக்குள் முடிவடையும், இதைப் போன்று இது நாள்வரை கண்டதில்லை. இத்தகைய உலகில் வாழுபவர்கள் தாம் தொடர்ந்து வாழ்வதை விரும்புவார்களா?
உபத்திரவ காலத்தின்போது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வார்த்தையை நம்பி, இரத்தசாட்சியத்தை நாமனைவரும் தழுவி, கர்த்தரை மகிமைப் படுத்தவேண்டும். இப்படியாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் பரிசுத்தவான்கள் தம் இரத்தசாட்சியின் மூலம் எல்லா மகிமையையும் கர்த்தருக்கு அளிப்பர். இதற்கு பதிலாக, தம் விசுவாசத்தைக் காக்க இரத்தசாட்சியாக மரித்தவர்களைக் கர்த்தர் ஆகாயத்திற்கும் எடுத்துக்கொண்டு ஆட்டுகுட்டியானவரின் திருமன பந்திக்கு அவர்களை அழைப்பார்.
தேவனுடைய ராஜ்யத்திற்காக அவரின் ஊழியனாகியதாக அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான். அநேகர் ஆயிரவருட அரசாட்சிக்குள் பிரவேசிக்கும்படி அப்போஸ்தலர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கித்தனர்.
மகா உபத்திரவக் காலத்தின்போது, இயேசுவை விசுவாசித்தற்காக இஸ்ரவேலர்களில் சில மக்களும் இரத்தசாட்சியாகக் கொல்லப்பட்டு எடுத்துக்கொள்ளப்படுவர். இப்படியாக இந்த பரிசுத்தவான்கள் மங்கின நிறமுடையக் காலத்தில் மகா உபத்திரவக் காலத்தினுடையவர்களாயிருப்பர். மகா உபத்திரவம் வருகையில் அழிவிற்குட்பட்ட உலகை கட்டுக்குள் கொண்டுவரும் யாராவது ஒருவனை இவ்வுலகிலுள்ள அனைவரும் நோக்குவர். இயற்கையான பேரழிவுகள் எடுத்துவந்த பிரச்சினைகளைத் தீர்க்கும், அவர்கள் தாம் எதிர்நோக்கியுள்ள அரசியல், பொருளாதார மற்றும் மதப்பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒருவனிற்காக அவர்கள் ஏங்கி நிற்பர், இப்போதுதான் அந்திகிறிஸ்து தோன்றுவான்.
அண்மையில் ஒரு ஜப்பானிய எழுத்தாளர் “ரோமர்களின் கதை” என்று வரிசையாக சில புத்தகங்களை எழுதினார், இவை ரோமப் பேரரசர்களைப் புகழுவதாக இருந்தது. முழு வல்லமையையும் தன்னிலடக்கியுள்ள ஒரு தலைவன் இவ்வுலகிற்கு தேவைப்படுகிறான் என்பதே இந்த எழுத்தாளனின் முக்கிய வாதமாகும். அநேக மக்கள் அவளுடன் ஒத்துப்போயினர். மகா உபத்திரவக் காலத்தின் போது மக்கள் விரும்புவது முழு உலகத்தையும் இரும்புக்கரங்களால் ஆளும் ஒருவனையே. அவர்கள் விரும்புவது அநேக ஆளுநர்கள், அதாவது அவன்/அவள் தன் பகுதியை மட்டும் அரசாளுபவர்களையல்லாமல், முழு உலகத்தையும் ஆளும் தனியொரு வல்லமை படைத்தவனையே ஆகும்.
இப்போது உலகம் அநேக தேசங்களாகவும் நாடுகளாகவும் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றிற்கும் தலைவன் இருக்கிறான். ஆனால் முடிவு காலத்தில், தம் எல்லா பிரச்சினைகளையும் முற்றிலும் தீர்க்கும் வசீகரிக்கும் உலகத் தலைவனை அவர்கள் விரும்புவர். உலகம் இந்தத் தலைவனுக்காக காத்திருக்கிறது, இந்த அந்திகிறிஸ்து முழு உலகையும் அரசாளுவான்.
மங்கின நிறமுடைய குதிரையின் காலம் வருகையில் அந்திகிறிஸ்து பெரிதான வல்லமையுடன் தோன்றி உலகிலுள்ள அனைவரையும் தன் ஆளுகைக்கு உட்படுத்துவான் என்று வேதாகமம் நமக்கு கூறுகிறது. இந்த மங்கின நிறமுடைய குதிரையின் காலம் வரும்போது, நெருப்பு மழை பொழிந்து உலகின் காடுகளில் மூன்றிலொரு பங்கை எரித்துபோடுமென்றும் வேதாகமம் நமக்குக் கூறுகிறது. இந்த காலம் வருகையில் அந்திகிறிஸ்து உலகை அரசாளுவான், அவனுடைய குறியீடு இல்லாமல், யாராலும் எதையும் வாங்கவும் விற்கவும் முடியாது. இந்நேரத்தில் பரிசுத்தவான்கள் இக்குறியை மறுப்பதற்காகவும், சிலையை வணங்காமல் இருப்பதற்காகவும், இரத்தசாட்சியாக கொல்லப்பட்டு பிறகு உயிரோடெழுப்பப்பட்டு, எடுத்துக் கொள்ளப்படுவர். இப்படியாக மங்கின நிறமுடைய குதிரையின் காலம் முடிவடைகையில் ஆயிரவருட அரசாட்சியின் காலம் தொடங்கும்.
இவ்வுலகின் அழிவும் மகா உபத்திரவமும் திருடனைப் போல வருமென தேவன் நம்மிடம் கூறினார். ஆகவே, இந்த அழிவு மற்றும் மகா உபத்திரவத்தின் எல்லா சோதனைகளையும் மேற்கொள்ளும் விசுவாசத்தை இப்போதே நாம் ஆயத்தம் செய்யவேண்டும். இந்த ஆயத்தமானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலம் மட்டுமே சாத்தியமாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து இப்படியாக தமது விசுவாசத்தை ஆயத்தம் செய்தவர்களின் மீது எல்லா வாதைகளும் அழிவுகளும் வரும்.
இன்றைய காலம் கறுப்புக் குதிரையின் காலமென நாம் தெளிவாகப் புரிந்து அதனை விசுவாசிக்கவேண்டும். அக்கடைசி நாள் வருவதற்கு முன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசித்து வருங்காலத்திற்கு ஆயத்தமாக வேண்டும்.
இப்போது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் அவர்களின் இரத்தசாட்சிக்குப் பிறகு எடுத்துக் கொள்ளப்படுவர். பணக்காரர்களால் உல்லாசமாக வாழமுடியாது, ஏழைகளால் வறுமையினுள்ளும் வாழ முடியாது, ஆகவே, இப்போது நடப்பவைகளைக் குறித்து நாம் கவலைப்படவும் கூடாது, பெருமைப் பாராட்டவும் கூடாது, ஏனெனில் மங்கின நிறமுடைய குதிரையின் காலம் சமீபமாயிருப்பதையும், எல்லா பரிசுத்தவான்களும் இரத்தசாட்சியாக மரிப்பர் என்பதையும் நாம் விசுவாசிக்கிறோம்.
ஒவ்வொரு சமயத்திலும், நம்மைச் சுற்றியுள்ள சில மக்கள் கிறிஸ்து வருகைக்கான நேரத்தைக் குறித்து தம் சொந்தத்தில் அலசி, தேவனின் இரண்டாவது வருகைக்கான தமது சொந்த நாளையும், நேரத்தையும் அறிவித்து அநேக மக்களை அத்தகைய கூற்றுகளால் தவறாக வழி நடத்தி, பெரிய குழப்பங்களை ஏற்படுத்துபவர்களாய் உள்ளனர். ஆனால் வேதாகமத்தைப் பொறுத்தவரை ஏழாவது எக்காளம் ஊதப்படும்வரை கிறிஸ்துவின் வருகை நிகழாது. ஆகவே வேதாகமத்தின் வார்த்தையை கணக்கிடும் தவறினைச் செய்து தேவன் திரும்புவதற்கான நம் நாட்களை அறிவிக்கக் கூடாது.
கிறிஸ்து வரும் நாளைத் தம் கனவிலோ அல்லது காட்சியிலோ கண்டதாக கூறுபவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அவர்களுடைய கனவுகள் வெறும் கனவே. கர்த்தர் தம் வார்த்தை மூலமாக எடுத்துக்கொள்ளப்படுதலின் நேரத்தை துல்லியமாக நம்மிடம் கூறியுள்ளமையால், வார்த்தையை மட்டுமே நாம் விசுவாசிக்கவேண்டும்.
வெளி 6 இன் நான்காவது காலமாகிய மங்கின நிறமுடைய குதிரையின் காலம் வருகையில், ஏழு எக்காளங்களின் வாதைகளின் போது இரத்தசாட்சிகள் எழும்புவதும், பரிசுத்தவான்கள் உயிரோடெழுப்பப்பட்டு எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழும்.
கர்த்தர் ஏற்படுத்திய ஏழு காலங்களின் மூன்றாவது காலத்தில் நாம் வாழுகிறோம் என அறிந்துகொள்வது நமக்கு முக்கியமானதாகும். இன்றைய காலம் கருப்புக்குதிரையின் காலமென நாம் அறிந்துகொள்ளவேண்டும். அப்படிச் செய்வதால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் விதைகளை இப்போது விதைக்கலாம். இப்போது விதைகளை விதைப்பதன் மூலம், மங்கின நிறமுடைய குதிரையின் காலத்தில் நம்மால் அறுவடை செய்யமுடியும்.
கர்த்தரால் படைக்கப்பட்ட உலகில், ஒரு வாரத்திற்குள் முளைத்து, பூத்து கனிதரும் செடிகள் இருக்கின்றன. இப்பாலைவனச் செடிகளைப் போன்று மங்கின நிறமுடைய குதிரையின் காலம் வருகையில், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டு, இப்போது பிரசங்கித்துக்கொண்டிருக்கும் நாமும் இரத்தசாட்சியாகி தேவன் நமக்கு அனுமதியளித்த உயிர்த்தெழுதலிலும் எடுத்துக் கொள்ளப்படுதலிலும் பங்கேற்போம். உபத்திரவத்தின் காலத்தில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் மக்கள் இப்போதுள்ளவர்களை விட அதிகமாயிருப்பர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள தம் விசுவாசத்தினால் இரத்தசாட்சியாக மரிக்கும் அநேக மக்கள் இருப்பர்.
வெளிப்படுத்தலின் வார்த்தை இஸ்ரவேல் மக்களின் இரட்சிப்புடன் நிறுத்தவில்லை. வெளிப்படுத்தலின் காலம் இஸ்ரவேலருக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டது என யாராவது விசுவாசித்தால், அவன்/அவள் மிக மோசமான தவறைச் செய்கிறார். ஏன்? ஏனெனில், வெளிப்படுத்தலின் காலங்கள் வரும்போது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து அநேக புறஜாதியார் இரட்சிக்கப்பட்டு தம் விசுவாசத்தைக் காக்க இரத்தசாட்சிகளாய் மரிப்பர். வெளிப்படுத்தலின் வார்த்தையின் அறிவு சரியானதா தவறானதா என்பது உங்கள் விசுவாசத்தில் பெரிய வேறுபாட்டை உருவாக்க முடியும்.
ஆகவே, உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவத்தை இன்¨றைய கிறிஸ்தவர்கள் விசுவாசிப்பது தவறானது என நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். மகா உபத்திரவ காலமாகிய ஏழு வருடங்களின் நடுப்பகுதியை தாண்டிய பிறகு பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக மரிப்பார்கள் எனவும் அதற்கு பிறகு எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழும் எனவும் வேதாகமம் நமக்குக் கூறுகிறது. வெளிப்படுத்தலின் வார்த்தையை, எழுதப்பட்டுள்ளதைப் போன்று அதிகாரங்களிலிருந்து அதிகாரங்களாகவும், வசனங்களிலிருந்து வசனங்களாகவும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்குள்ளும் நாம் அலசி ஆராயவேண்டும். இப்படிச் செய்வதால் வெளிப்படுத்தலின் வார்த்தையைக் குறித்த சரியான அறிவை நாம் பெறலாம்.
எண்ணிலடங்காத புறஜாதியாரின் மக்களும் அவர்களின் விசுவாசத்தின் மூலம் இரட்சிக்கப்பட்டு அந்த விசுவாசத்திற்காக இரத்தசாட்சியாக மரிப்பார்கள் என வெளி 7 நம்மிடம் கூறுகிறது. எழுதப்பட்டுள்ளதைப் போன்றே வேதாகமத்தை நாம் விசுவாசிக்கவேண்டும் -உபத்திரவத்திற்கு முன் எடுத்துக் கொள்ளப்படும் தத்துவத்தை அல்ல, உபத்திரவத்திற்குப் பின் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவத்தையும் அல்ல, ஆயிரவருட அரசாட்சி இல்லை என்ற தத்துவத்தையும் அல்ல, கர்த்தர் ஏற்படுத்திய ஏழு காலங்களை மட்டுமே நாம் விசுவாசிக்கவேண்டும்.
வெளிப்படுத்தின விசேஷத்தின் முதல் அதிகாரம் முன்னுரையாகும், அதிகாரம் 2 மற்றும் 3 ஆகியவை பரிசுத்தவான்களின் இரத்தசாட்சி மரணத்தைக் குறித்து கூறுகின்றன. அதிகாரம் 4 இயேசுகிறிஸ்துவே கர்த்தரெனவும் அவர் கர்த்தரின் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார் எனவும் நமக்குக் கூறுகிறது. அதிகாரம் 5 பிதாவாகிய கர்த்தரின் திட்டங்களை இயேசு எப்படி நிறைவேற்றுவார் என்று நமக்கு காட்டுகிறது. அதிகாரம் 6 கர்த்தர் திட்டமிட்ட ஏழு காலங்களையும் குறித்த முழுமையான வரைபடத்தை அளிக்கிறது. இந்தத் திட்டங்களெல்லாம் வெளிப்படுத்தலின் வார்த்தையில் தெளிவுபடுத்தப் பட்டுவிட்டன.
“கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது” என்று வெளிப்படுத்தலின் வார்த்தை நம்மிடம் கூறுவதைப் போல், இப்போதிலிருந்தே பரிசுத்தவான்கள் தம் உயிர்த்தெழுதல் மற்றும் ஆயிரவருட அரசாட்சி ஆகியவற்றின் மீதுள்ள விசுவாசத்தினால் வாழவேண்டும்.
வெளி 8:10-11 இன்னொரு வாதையை விளக்குகிறது: “மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீருற்றுகளின்மேலும் விழுந்தது. அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.” அந்நேரத்தில் ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப் போல் எரிந்து ஆறுகளின் மீதும் ஊற்றுகளின் மீதும் விழுந்தது என்று இவ்வசனம் இங்கு கூறுகிறது. தீவட்டியைப் போல் விழும் நடசத்திரம் வால்நட்சத்திரம் ஆகும். வேறுவார்த்தைகளில் கூறுவதானால் வானம் அசைக்கப்படும் போது, நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, அவற்றின் துண்டுகள் பூமியில் விழும்.
வெளி 8:12-13 இன்னொரு வாதையை தொடர்ந்து கூறுகிறது “நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று. பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்துவரக்கண்டேன்; அவன் மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்.” பகல் இரவாகிப் போவதால் உலகின் மூன்றிலொரு பாகம் இருண்டு போகும்.
இப்படியாக ஏழு எக்காளங்களின் வாதைகள் தொடங்குபோது, நீங்களும் நானும் நிச்சயமாக அதனுள் வாழ்ந்திருப்போம். ஆனால் உயிரோடுள்ள பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக கொல்லப்படுவர், அவர்கள் தம் விசுவாசத்தால் சாத்தானை மேற்கொள்ளுவர்.
வெளி 6 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள ஏழு காலங்களைக் குறித்து நீங்கள் தெளிவாகப் புரிந்துகொண்டால் இந்த காலத்தில் நீங்கள் என்ன செய்யவேண்டுமெனவும் எத்தகைய விசுவாசம் உங்களிடம் இருக்க வேண்டும் எனவும் தெளிவான அறிவு இருக்கும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் வெளிப்படுத்தலின் காலத்தில் இரத்தசாட்சியாக மரிக்க வேண்டுமென்பதால், கர்த்தரின் ராஜ்யத்தின் மீதுள்ள நம்பிக்கையுடன் இக்காலத்தைச் சந்திக்கவேண்டும். இவ்வுலகில் வாழும்போதே பரிசுத்தவான்கள் தம் விசுவாசத்தின் மூலம் தம் இரத்தசாட்சியத்துவத்தை ஆயத்தப் படுத்தவேண்டும், இவ்விசுவாசத்தைப் பரப்பி கர்த்தரின் ராஜ்யத்தை பரப்ப அவர்கள் மிகக் கடினமாக உழைக்கவேண்டும்.
கர்த்தர் ஏற்படுத்திய ஏழு காலங்களையும் அறிந்து நீ அவற்றை விசுவாசிக்கிறாயா? நாம் இப்போது வாழும் காலமாகிய கறுப்புக் குதிரையின் காலத்தை உன்னால் பிரித்துணர முடிகிறதா? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீ அறியாமலோ அல்லது விசுவாசிக்காமலோ இருந்தால் உலகிற்கு இறங்கி வரும் உபத்திரவங்களிலிருந்து உன்னால் தப்பமுடியாது. ஆகவே, இப்போதே ஆயத்தம் செய்யவேண்டும். உபத்திரவங்களை மேற்கொள்ளச் செய்யும் விசுவாசத்தைப் பெற, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து உங்கள் எல்லாப் பாவங்களுக்கும் முதலில் நிவாரணம் பெறவேண்டும், அத்துடன் பரிசுத்த ஆவியானவரை பரிசாகப் பெற்று ஆயிரவருட அரசாட்சிக்குள் பிரவேசித்து அதில் வாழ ஆயத்தம் செய்யவேண்டும்.
இப்போதே ஆயத்தப்படுத்துங்கள். நீங்கள் நாட்களைக் கடத்த விரும்பி, ஏழு எக்காளங்களின் வாதைகள் வரும்போது மட்டும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்தால் அநேக உபத்திரவங்களை நீங்கள் சந்திப்பீர்கள். நீங்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இந்நொடியே விசுவாசித்து, மறுபடியும் பிறந்து, கர்த்தரின் மக்களாக உங்களின் எதிர்காலத்தை ஆயத்தம் செய்யவேண்டும் என நம்பி ஜெபிக்கிறேன்.
 
கர்த்தர் ஏற்படுத்திய ஏழு காலங்கள்:
1. வெள்ளைக் குதிரை: நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி தொடங்கி, அது தொடர்ந்து செல்லும் காலம்.
2. சிவப்புக் குதிரை: சாத்தானின் காலத்தின் வருகை, சமாதானம் சிதறுண்டு போகும்.
3. கறுப்புக் குதிரை: சரீரப்படியான மற்றும் ஆவிக்குரிய பஞ்சம் நிலவும் காலம். இது இப்போது நடக்கிறது.
4. மங்கின நிறமுடைய குதிரை: அந்திகிறிஸ்துவின் தோற்றமும், பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக மரிக்கும் காலமும் இதுவாகும்.
5. பரிசுத்தவான்கள் உயிர்த்தெழுந்து, எடுத்துக் கொள்ளப்பட்டு ஆட்டுக்குட்டியானவரின் திருமண பந்தியில் பங்கேற்கும் காலம் இதுவாகும்.
6. முதல் உலகம் அழிக்கப்படும் காலம்.
7. ஆயிரவருட அரசாட்சி மற்றும் புதிய வானத்தையும் புதிய பூமியையும் தேவனும் அவருடைய பரிசுத்தவான்களும் ஆளும் காலம்.
இவையே கர்த்தர் ஏற்படுத்திய ஏழு காலங்களாகும். இக்காலங்களைத் தெளிவாக அறிந்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களே முடிவு காலத்தில் வாழ தம் விசுவாசத்தை ஆயத்தப்படுத்தியவர்கள். உங்களாலும் கூட கர்த்தர் ஏற்படுத்திய இந்த ஏழு காலங்களை உண்மை விசுவாசத்தால் பிரித்துணர இயலவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் ஜெபிக்கிறேன்.