• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 10 : வெளிப்படுத்தின விசேஷம் (வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 7-1] மிகுந்த உபத்திரவத்திலிருந்து இரட்சிக்கப்படப்போவது யார்? (வெளி 7:1-17)

(வெளி 7:1-17)
“இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று பூமியின்மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன். ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறிவரக் கண்டேன்; அவன் பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி: நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப் படுத்தாதிருங்கள் என்று சத்தமிட்டுக் கூப்பிட்டான். முத்திரை போடப் பட்டவர்களின் தொகையைச் சொல்லக் கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களுலும் முத்திரை போடப்பட்டவர்கள் இலட்சத்துநாற்பத்து நாலாயிரம் பேர். யூதா கோத்திரத்தில் முத்திரைப் போடப்பட்டவர்கள் பன்னீராயிரம் ரூபன் கோத்திரத்தில் முத்திரைப் போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். காத் கோத்திரத்தில் முத்திரைப்போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ஆசேர் கோத்திரத்தில் முத்திரைப்போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். நப்தலி கோத்திரத்திரத்தில் முத்திரைப் போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். மனாசே கோத்திரத்தில் முத்திரைப் போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். சிமியோன் கோத்திரத்தில் முத்திரைப் போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைப் போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைப் போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். செபுலோன் கோத்திரத்தில் முத்திரைப் போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரைப் போடப்பட்டவரகள் பன்னீராயிரம். பெஞ்சமீன் கோத்திரத்தில் முத்திரைப் போடப்பட்டவரகள் பன்னீராயிரம். இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக் குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக் குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும், நான்கு ஜீவன்களையும் சூழ நின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு: ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் கனமும் ஸ்தோத்திரமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக: ஆமேன், என்றார்கள். அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அதற்கு நான் ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்; இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும், அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள் மேல் படுவதில்லை. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.“
 
 
விளக்கவுரை
 
வசனம் 1: “இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று பூமியின்மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.”
 உபத்திரவத்தின் காற்று வீசுவதும் வீசாததும் கர்த்தரின் அனுமதியின் பேரிலேயே நடக்குமென இது காட்டுகிறது. மகா உபத்திரவக்காலத்தை இவ்வுலகில் அனுமதிக்கும் முன்பு இஸ்ரவேல் கோத்திரங்களிலிருந்து 144,000 பேர்களை இரட்சித்து தம்முடைய மக்களாக்குவதாக கர்த்தர் தீர்மானித்தார்.
 
வசனம் 2-3: “ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறிவரக்கண்டேன்; அவன் பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி: நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று சத்தமிட்டுக் கூப்பிட்டான்.”
இங்கு, 144,000 இஸ்ரவேலர்கள் முத்திரிக்கப்படும்வரை, பூமியையும் கடலையும் வாதைக்குட்படுத்த அனுமதிக்கப்பட்ட நான்கு தூதர்களையும் காத்திருக்குமாறு கர்த்தர் கட்டளையிடுகிறார். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் 12,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுடைய நெற்றியில் கர்த்தரின் ஜீவ முத்திரை பொறிக்கப்படும்வரை உபத்திரவப்படுத்தவேண்டாமென கர்த்தர் அவர்களிடம் கூறினார். இது இஸ்ரவேல் மக்கள் மீதுள்ள அவரின் கரிசனத்தைக் காட்டும் கர்த்தரின் சிறப்புக் கட்டளையாகும்.
 
வசனம் 4: “முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களுலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்துநாற்பத்து நாலாயிரம் பேர்.”
கர்த்தரால் முத்திரிக்கப்பட்டவர்கள் கர்த்தரின் சிறப்பு பாதுகாவலையும் அவரின் சிறப்பு இரட்சிப்பையும், முடிவு காலத்தின் மகா உபத்திரவத்தின் போது பெறுவார்கள்.
 
வசனம் 5-9: யூதா கோத்திரத்தில் முத்திரைப் போடப்பட்டவர்கள் பன்னீராயிரம் ரூபன் கோத்திரத்தில் முத்திரைப் போடப் பட்டவர்கள் பன்னீராயிரம். காத் கோத்திரத்தில் முத்திரைப் போடப் பட்டவர்கள் பன்னீராயிரம். ஆசேர் கோத்திரத்தில் முத்திரைப் போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். நப்தலி கோத்திரத்திரத்தில் முத்திரைப் போடப் பட்டவர்கள் பன்னீராயிரம். மனாசே கோத்திரத்தில் முத்திரைப் போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். சிமியோன் கோத்திரத்தில் முத்திரைப் போடப் பட்டவர்கள் பன்னீராயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைப் போடப் பட்டவர்கள் பன்னீராயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைப்போடப் பட்டவர்கள் பன்னீராயிரம். செபுலோன் கோத்திரத்தில் முத்திரைப் போடப் பட்டவர்கள் பன்னீராயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரைப் போடப் பட்டவரகள் பன்னீராயிரம். பெஞ்சமீன் கோத்திரத்தில் முத்திரைப் போடப் பட்டவர்கள் பன்னீராயிரம். இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.”
இஸ்ரவேல் மக்களில் முத்திரிக்கப்படும் -12,000 பேர் இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் கர்த்தரின் சிறப்புக் கிருபை பெற்றவர்களாயிருப்பர் என்று இந்த வசனம் நமக்கு கூறுகிறது. இஸ்ரவேல் கோத்திரங்களின் ஒவ்வொன்றிலும் உள்ள 12,000 பேரிற்கு இரட்சிப்பை கர்த்தர் வழங்கி அவர்களை அவரின் மக்களாக்குவார்; இந்த சிறப்புக் கிருபை ஒவ்வொரு கோத்திரத்தாருக்கும் சமமாக வழங்கப்படும்.
இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்தாரையும் கர்த்தர் சமமாக நேசித்தமையால், தம்முடைய மக்களாகும் ஆசீர்வாதத்தை அவர்கள் அனைவருக்கும் வழங்கினார். கர்த்தர் ஆபிரகாமிற்கும் அவன் சந்ததியினருக்கும் வழங்கிய வாக்குத்தத்த வார்த்தையை நிறைவேற்றும்படி இஸ்ரவேலர்களை இக்கிருபையினால் தரிப்பித்தார். இப்படி நாம் பார்க்கும் விதமாக, மனித குலத்திற்காக திட்டமிட்ட மற்றும் வாக்குத்தத்தம் செய்த அனைத்தையும் கர்த்தர் நிறைவேற்றுகிறார்.
புறஜாதியாரில் அநேகர் மகா உபத்திரவத்தின் போது இரட்சிக்கப்பட்டு கர்த்தரின் மக்களாவர் என இது நமக்கு கூறுகிறது. வேறுவார்த்தைகளில் கூறுவதானால், புறஜாதியாரின் பெருந்திரளான மக்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு இறுதி காலத்தில் தமது விசுவாசத்துடன் இரத்தசாட்சியாக மரிப்பர். ஆகவே, கடைசி நாட்களிலும் கூட புறஜாதியாரை தம் மக்களாக்க கர்த்தர் செயல்படுகிறார் என்பதை நாம் நினைவு கூற வேண்டும்.
 
வசனம் 10-11: “அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும், நான்கு ஜீவன்களையும் சூழ நின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு”
கர்த்தர் இறுதிகாலத்தில் இஸ்ரவேலருக்கும் புறஜாதியாராகிய நமக்கும் தமது இரட்சிப்பின் கிருபையை அருளினார். ஆகவே நம் தேவன் வணக்கத்திற்கும், புகழுதலுக்கும் மகிமைக்கும் தகுதியானவர். பரிசுத்தவான்களின் எல்லா ஆராதனைகளுக்கும் கர்த்தரைத் தவிர வேறு தகுதி வாய்ந்தவர் யாரும் இருக்க முடியாது.
 
வசனம் 12: “ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் கனமும் ஸ்தோத்திரமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக: ஆமேன், என்றார்கள்.”
கர்த்தரின் அனைத்து ஊழியர்களும் கர்த்தராகிய தேவனைப் புகழுகிறார்கள். இப்படியாக கர்த்தர் இந்த புகழுதல்களையும் மரியாதைகளையும் பெறுவது மிகச் சரியானது.
 
வசனம் 13-14: “அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அதற்கு நான் ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்; இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.”
பரிசுத்தவான்கள் தம் மகிமைப் பொருந்திய இரத்தசாட்சியத்துவத்தை மேற்கொண்டு தம்முடைய உண்மை விசுவாசத்தைப் பாதுகாக்கும்படி கர்த்தர் மகா உபத்திரவத்தின் காற்றை உயர்த்தியபிறகு அவர் தம்முடைய இறுதி அறுவடையை சேர்ப்பார்.
மகா உபத்திரவக்காலத்தின் ஏழாண்டு காலத்தின் முதல் மூன்றரையாண்டுகள் கடந்த பிறகு, பரிசுத்தவான்கள் அந்திகிறிஸ்துவால் பெரிதும் துன்புற்று, தம்முடைய விசுவாசத்தைக் காக்கும் பொருட்டு இரத்தசாட்சிகளாய் மரிப்பர். ஆலய வரலாறில் இதுவரை கண்ட உபத்திரவங்களிலிருந்து இரத்தசாட்சியாக மரிக்கச் செய்யும் இந்த உபத்திரவம் வேறு பரிமாணம் உடையது; அது கர்த்தரை இப்பூமியில் விசுவாசிக்கும் பரிசுத்தவான்கள் தம் விசுவாசத்தை முற்றிலும் விட்டு விடும்படி வலியுறுத்துவதாயிருக்கும். இரத்தசாட்சியாக மரிப்பது பரிசுத்தவான்களுக்கு பெரிதான மரியாதையாகும். தாம் இரத்தசாட்சியாக மரிப்பதன் மூலம், பரிசுத்தவான்கள் தாம் கர்த்தர் மீது வைத்திருக்கும் உண்மை விசுவாசத்தை தெளிவாகக் காட்டலாம். மகா உபத்திரவத்தின் முடிவு காலத்தில், தம்முடைய இரத்தசாட்சியாகிய மரணத்தின் மூலம் எல்லா பரிசுத்தவான்களும் தம் விசுவாசத்தைக் காத்து, தம்முடைய உயிர்த்தெழுதலிலும், எடுத்துக் கொள்ளப் படுதலிலும் பங்கேற்று கர்த்தரின் சிங்காசனத்திற்கு முன் நிற்பர்.
 
வசனம் 15-16: “ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும், அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள் மேல் படுவதில்லை.”
கர்த்தருக்கு முன்பாக, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் இரட்சிப்பின் மீது விசுவாசம் உள்ளவர்கள் தம் உண்மை விசுவாசத்தைப் பாதுகாக்கும் பொருட்டு இறுதிகாலத்தில் இரத்தசாட்சியாக மரிப்பர். கர்த்தர் அத்தகைய விசுவாசமுள்ள பரிசுத்தவான்களுக்கு சிறப்பு பாதுகாவலையும் ஆசீர்வாதத்தையும் கொடுத்து, அவர்களை தம் கரங்களால் அரவணைப்பார்.
அந்திகிறிஸ்துவுடன் போரிட்டு இரத்தசாட்சியாக மரித்து மீண்டும் உயிரோடெழுப்பப்பட்ட பரிசுத்தவான்கள், கர்த்தரின் ராஜ்யத்தில் மீண்டும் மரிப்பதோ, கவலைகளினால் துன்பப்படுவதோ இல்லை. கர்த்தரின் பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்களுடன் சதா சர்வகாலமும் அவர்கள் வாழ்ந்திருப்பர். கர்த்தரின் கைகளில் அரவணைக்கப் பட்டவர்களுக்கு எந்த குறைவும் இருக்காது. அவர்கள் தீங்கினால் துன்புறுவதோ துயரப்படுவதோ இல்லை. அவர்களுக்காக காத்திருப்பது கர்த்தரின் சிறப்பான பரிசும், அன்பும் மகிமையும் ஆகும், அவை அவர்களுக்கு நித்தியமாக வழங்கப்படும்.
 
வசனம் 17: “சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணிருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.”
கர்த்தர் பரிசுத்தவான்களின் நித்திய மேய்ப்பராய் இருந்து நித்திய ஆசீர்வாதங்களை அவர்களுக்கு நல்குவார். பரிசுத்தவான்கள் பூமியிலிருந்த போது கர்த்தருக்காக அனுபவித்த துன்பங்களுக்கும் இரத்தசாட்சியாக மரித்தமைக்கும் பரிசளிக்கும் விதமாக கர்த்தர் அவர்களை ஜீவ தண்ணீரின் ஊற்றுகளுக்கு வழி நடத்தி, கர்த்தரின் சிங்காசனத்திற்கு முன்பு தேவனுடன் உணவருந்தச் செய்து, தம்முடைய மகிமையில் அவர்கள் சேரும்படி தம் ஆசீர்வாதங்களினால் நித்தியமாக தரிப்பிப்பார். இப்பரிசுத்தவான்கள் பூமியில் வாழ்ந்தபோது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து, கர்த்தரின் மகிமைக்காக தியாக வாழ்க்கை வாழ்ந்து, அவருடைய பெயரிற்காக இரத்தசாட்சியாக மரித்து, இப்படியாக தம் விசுவாசத்தைக் காப்பாற்றியதால் அவர்கள் புதியவானம் புதிய ராஜ்யத்தில் அவரின் மகிமையின் நடுவில் நித்தியமாக வாழ கர்த்தர் அவர்களை அனுமதித்தார். அல்லேலூயா! தேவனையே புகழுவோமாக!