• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 10 : வெளிப்படுத்தின விசேஷம் (வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 7-2] போர்களத்தில் நிற்கக்கூடிய விசுவாசத்தைப் பெற்றிருப்போமாக (வெளி 7:1-17)

(வெளி 7:1-17)
 
இன்றைய கிறிஸ்தவர்கள், வேதாகம சத்தியங்களைக் குறித்து தெளிவாக அறிந்திருக்கவேண்டும். குறிப்பாக, வெளிப்படுத்தலின் வார்த்தையின் மூலமாக, பரிசுத்தவான்களின் எடுத்துக்கொள்ளப்படுதலைக் குறித்து தெளிவாகப் புரிந்துகொண்டு சரியான விசுவாசத்துடன் வாழவேண்டும். ஏழுவருட காலம் நிகழப்போகும் மகா உபத்திரவத்தின் நடுப்பகுதியான மூன்றரை வருடங்களை சிறிது கடந்தபோது எடுத்துக் கொள்ளப் படுதல் நிகழும் என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே, கர்த்தரின் சித்தமாகிய மனிதகுலத்தை பாவங்களிலிருந்து இரட்சித்து, நித்திய ஜீவனை அளிக்கும்படியாக இயேசுகிறிஸ்துவினுள் அவர் திட்டமிட்டபடி செய்ய, முடிவு காலத்தில் போராடக்கூடிய விசுவாசத்தை ஆலயங்களும் பரிசுத்தவான்களும் பெற்றிருக்க வேண்டும்.
கர்த்தர் இந்த தன் சித்தத்தை நிறைவேற்ற அந்திகிறிஸ்துவின் நடவடிக்கைகளை அனுமதித்தார். மகா உபத்திரவக்காலத்தின் ஏழாண்டு காலத்தின் முதல் மூன்றரை ஆண்டுகளாக அந்திகிறிஸ்து மும்முரமாய் செயல்படுவான். இக்காலத்தில் அந்திகிறிஸ்து தன் முடிவைத் தொடர கர்த்தர் அவனை அனுமதித்தார். ஏன்? கர்த்தர் நமக்காக திட்டமிட்ட தன்னுடைய பெரிதான நோக்கங்களை நிறைவேற்றும்படியாக, சாத்தானை பாதாளத்தில் தள்ளி அவனைக் கட்டவேண்டும், அப்படிச் செய்ய தேவன் தாமே இவ்வுலகிற்கு வரவேண்டும். இதனால்தான் மகா உபத்திரவ காலத்தின் ஏழாண்டு காலத்தின் முதல் மூன்றரையாண்டுகள் அந்திகிறிஸ்து தன் செயல்களை வல்லமையாய் செய்ய கர்த்தர் அவனை அனுமதித்தார்.
கர்த்தர் எல்லோருக்கும் பாவ விடுதலையைக் குறித்தும் நித்திய ஜீவனைக் குறித்தும் தம் வார்த்தையை அளித்தார். இந்த வார்த்தையை நிறைவேற்றும்பொருட்டு மகா உபத்திரவத்தை அவர் திட்டமிட்டார். முக்கிய வசனத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது “இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று பூமியின்மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.” கர்த்தர் ஆபிரகாமிற்கும் அவன் சந்ததியினருக்கும் கர்த்தராயிருப்பதாக வாக்குத்தத்தம் செய்திருப்பதால் இஸ்ரவேல் மக்களின் 144,000 பேரை அவர்களின் அழிவிலிருந்து விடுவிக்க கர்த்தர் திட்டமிட்டார். இந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற கர்த்தர் தம் இரட்சிப்பின் கிருபையை இஸ்ரவேலர்களுக்கு அருளி இறுதிகாலத்தில் ஆபிரகாமின் சந்ததியினரில் 144,000 இஸ்ரவேலர்களை விடுவிப்பார்.
பரிசுத்தவான்களுக்கு தம்முடைய ஆயிரவருட அரசாட்சியையும் நித்தியமான புதிய வானத்தையும் புதிய பூமியையும் கொடுக்க கர்த்தர் மகா உபத்திரவம் உலகிற்கு வருவதை நிச்சயமாய் அனுமதிப்பார். மகா உபத்திரவத்தின்போது அந்திகிறிஸ்துவின் காலத்தை அனுமதித்தபிறகு, கர்த்தர் சாத்தானை பிடித்து பாதாளத்தில் தள்ளி அதனை மூடுவார். அந்திகிறிஸ்துவின் தோன்றுதலையும் மகா உபத்திரவத்தையும் கர்த்தர் அனுமதிப்பதற்கான காரணம் இஸ்ரவேலர்களை இரட்சித்து, புறஜாதியாருக்கு நித்திய ஜீவனை அளிக்கும் அவரின் கிருபையை அளிக்கவும் அவர் வாக்குத்தத்தம் செய்தவற்றை நிறைவேற்றவும், மகா உபத்திரவத்தின் மூலமாக அவர்கள் வெள்ளை ஆடைகளை அணியவுமாகும்.
நாம் கண்டிப்பாக கடந்து செல்லவேண்டிய கால கட்டங்கள் மகா உபத்திரவமும் அந்திகிறிஸ்துவின் அரசாட்சியுமாகும். கர்த்தர் நம்மீது அனுமதித்த இவையெல்லாம், நம் அனைவரையும் இரட்சித்து, கிறிஸ்துவின் ராஜ்யத்தில் நித்திய ஜீவன் என்ற அவரின் கிருபையினால், தரிப்பிக்கப்படவே என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். ஆகவே, நாம் வாழும் காலம் எது என தெளிவாகப் பிரித்துணர்ந்து, அதில் வாழ நம்மிடம் எத்தகைய விசுவாசம் இருக்கவேண்டுமென நம்மை நாமே கேட்கவேண்டும். சுருக்கமாகக் கூறினால் நம் விசுவாசம் தெளிவானதாகவும் நிச்சயமானதாகவும் இருக்கவேண்டும்.
கர்த்தரின் வார்த்தையை நாம் விசுவாசிக்கிறோம். இவ்வார்த்தை ஆவிக்குரியபடியும் சரீரப்படியும் நிறைவேறும் எனவும் நாம் விசுவாசிக்கிறோம். இன்றைய காலம் முடிவு காலத்தை நோக்கி ஔடும் காலமாயிருக்கிறது. முடிவு காலத்தில் அந்திகிறிஸ்துவும் அவனைப் பின்பற்றுவோரும் தோன்றுகையில், நம் வாழ்வை இரத்தசாட்சியாக அளிக்க நேரிட்டாலும், நம் விசுவாசத்தைக் காக்க அவர்களை எதிர்த்து போராடவேண்டும். இக்காலம் நம்மை வெகுவேகமாக அணுகுகிறது. வார்த்தையை நாம் விசுவாசித்தோமானால், பெரிய பகைவனாகிய அந்திகிறிஸ்துவுடனும், அவனை பின்பற்றுவோருடனும் எதிர்த்துபோராடவேண்டும். இதுவே போர்களத்தில் நிற்கக்கூடிய விசுவாசமாகும்.
போர் என்பது சண்டையிடுவதாகும். சண்டையிடுவது என்று நான் கூறுவது வன்முறையாக அடித்து நொறுக்கவேண்டுமென்பதில்லை. அதற்கு மாறாக, சாத்தானின் ஊழியனாகிய அந்திகிறிஸ்துவிற்கு அடிபணியாமல் தம் விசுவாசத்தை பாதுகாப்பது என்று சண்டை இங்கு பொருள்படுகிறது, அவன் தேவன் நமக்களித்த இரட்சிப்பின் நற்செய்திக்கு எதிராக நின்று விசுவாசிகளைத் துன்புறுத்துவான். இறுதிகாலத்தில் இரத்தசாட்சியாக மரிப்பவர்கள் இயேசுவின் சாட்சியை தம்மில் உடையவர்களாகவும் கர்த்தரின் வார்த்தையை கடைபிடிப்பவர்களாகவும் இருப்பர். இயேசு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் வந்தார் என்பதை அவர்கள் சாட்சி பகறுகின்றனர்.
சண்டையிடுவது என்பது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தைக் காப்பதாகும். இந்த நற்செய்தியைப் பாதுகாக்க, தேவன் அளித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து மறுபடியும் பிறந்தவர்கள், மறுபடியும் பிறந்த கர்த்தரின் ஆலயங்களிலுள்ள மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்களுடன் ஐக்கியமாகவேண்டும். மற்றவர்களுக்கு நம் விசுவாசத்தைப் பரப்பி அவர்களின் ஆத்துமாக்களை இரட்சிக்கும் வளைந்து போகாத தீர்மானத்துடன் மிகத் துணிச்சலாக போர்களத்திற்குள் பிரவேசிக்க வேண்டும். போரிற்கு முற்றிலுமாக ஆயத்தமாக இருக்கிறோம் என்பது நம் விசுவாசத்தை பாதுகாத்து மற்ற ஆத்துமாக்களையும் இரட்சிக்கிறோம் என்பதாகும்; கர்த்தர் பிரியப்படும் ஆலயத்தின் இந்த விசுவாசம், வெற்றிக்கான வழியாகும். கர்த்தரின் ஊழியர்களும் அவரின் பரிசுத்தவான்களும் தம் போரிடும் விசுவாசத்துடன் எப்போதும் இருத்தல் வேண்டும்.
போரிற்கு ஆயத்தமாயிருக்கும் மனதுடனும் விசுவாசத்துடனும் இருக்கவேண்டியுள்ள இன்றைய காலம் எத்தகையது? இன்றைய காலம் தெளிவாக அநேக மாறுதல்களுக்குட்படுகிறது. எடுத்துக்கொள்ளப்படுதலைக் குறித்தும் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையைக் குறித்தும் அநேக “தத்துவங்கள்” தோன்றி மறைந்தன. அவற்றுடனே கூட, அவற்றிற்கேற்றபடி மக்களின் விசுவாசமும் மாறுகிறது.
1800 ஆம் ஆண்டுகளில் எடுத்துக்கொள்ளப்படுதலைக் குறித்த புதியதொரு தத்துவம் அறிவிக்கப்பட்டது, அனைவரும் உபத்திரவத்திற்கு பின் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவத்தை விசுவாசித்து அதனைப் போதித்தனர், அது மகா உபத்திரவ காலத்தினூடே முழுமையாக பரிசுத்தவான்கள் கடந்த பிறகு கிறிஸ்து திரும்புவார் என்றும், கிறிஸ்து மீண்டும் வரும் அந்நேரத்தில் அவர்கள் உயிரோடெழுப்பப்பட்டு எடுத்துக்கொள்ளப்படுவர் என்றும் அது வாதித்தது. ஆனால் 1800 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் மெதுவாக வளர்ந்த உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவம், உபத்திரவத்திற்கு பின் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவத்தை முற்றிலும் தலைகீழாக்கியது.
உபத்திரவத்திற்கு முன் எடுத்துக் கொள்ளப் படும் தத்துவம், ஏழாண்டுகால மகா உபத்திரவம் தொடங்குவதற்கு முன்னரே இயேசுவின் விசுவாசிகள் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவர் என்று வாதிடுகிறது. இக்கொள்கை தொடக்கத்தில் அநேகரால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும், இப்போது சிலரைத் தவிர, எல்லோரும் உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவத்தை விசுவாசிப்பதில் முடிவடைந்தனர். ஆனால் உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவம் கர்த்தரின் வார்த்தையுடன் முற்றிலுமாக பொருந்தவில்லை என்பதோடு அது கர்த்தரின் வார்த்தையையும் அவரின் திட்டங்களையும் பொருளற்றதாக்கியது. ஆயினும் வேதாகமத்தைக் குறித்த அறிவில்லாதவர்களின் மனங்களிலும் சிந்தனைகளிலும் உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவம் மிக உறுதியாக நடப்பட்டுள்ளது.
அக்கால அப்போஸ்தலர்கள் கர்த்தரின் காலத்தை இரண்டு காலங்களாகப் பிரித்தனர். இயேசுகிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தினால் இரட்சிப்படையும் காலம் முதலாவதாகும், இந்த முதலாவது காலம் முடிவடைந்து அதனைத் தொடரும் மகா உபத்திரவத்தின் காலம் இரண்டாவது காலமாகும். இயேசுகிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தினால் இரட்சிப்படையும் காலம் முதலாவது என்பதை புரிந்துகொண்டாலும், இரண்டாவது காலமாகிய இயேசுகிறிஸ்துவின் வருகையும் பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படுதலும் நடைபெறும் காலமாகிய மகா உபத்திரவத்தின் காலத்தை புரிந்துகொள்வது மிகக் கடினமாக இருக்கிறது என இந்நாளின் அறிஞர்கள் கூறுகின்றனர்.
காலங்களைக் குறித்த அறிவின்மையால் உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவத்தை விசுவாசிக்கும் கிறிஸ்தவர்களிடம் இருப்பது தவறான விசுவாசமாகும். கிறிஸ்து திரும்பி வரும் நாளை அவர்களே அறிவிப்பது, மகா உபத்திரவத்திற்கு முன் தாம் எடுத்துக்கொள்ளப்படுவோம் என்றெண்ணி தம் விசுவாசத்தை அப்படியே தேக்கி வைப்பது ஆகியவையெல்லாம் -உபத்திரவத்திற்கு முன் எடுத்துக் கொள்ளப்படும் தத்துவத்தை விசுவாசித்தன் விளைவே. “உலகம் கஷ்டத்தைச் சந்தித்தால் யாருக்கென்ன கவலை? மகா உபத்திரவத்திற்கு முன்பே நான் எடுத்துக்கொள்ளப்படுவேன், ஆகவே எல்லாமே நன்றாயிருக்கின்றன” என்று தமக்குள் எண்ணி, அநேக கிறிஸ்தவர்கள் ஆவிக்குள் சோம்பேறிகளாயினர். இவையெல்லாம் எடுத்துக்கொள்ளப்படுதலைக் குறித்த தெளிவான, துல்லியமான வேதாகம அறிவில்லாததால் வந்தன.
ஸ்கோஃபீல்ட் உபத்திரவத்திற்கு முன் எடுத்துக் கொள்ளப்படும் தத்துவத்தை கூறினார், இதன் பலனாக, இத்தத்துவத்தை விசுவாசிப்போரின் மனங்கள் தம் சொந்த சுகத்தை நோக்கி மெதுவாக நகன்றன, அவர்கள் “மகா உபத்திரவம் இவ்வுலகிற்கு வருமுன்பே நாம் எடுத்துக்கொள்ளப்படுவோம், ஆகவே இப்போது எத்தனை உல்லாசமாய் வாழமுடியுமோ அத்தனை உல்லாசமாய் வாழுவோம்” என்று எண்ணுகின்றனர். இப்படியாக அவர்களின் விசுவாசம் செயலற்றதாகியது.
மகா உபத்திரவத்தைக் குறித்தும் எடுத்துக் கொள்ளப் படுதலைக் குறித்தும் வேதாகமம் என்ன கூறுகிறது? வேதாகமம் உபத்திரவத்தின் நடுவே எடுத்துக்கொள்ளப்படுதலைக் குறித்து கூறுகிறது. இஸ்ரவேலர்களும் புறஜாதியார்களும் மங்கின நிறமுடைய குதிரையின் காலத்தில் நடைபெறும் மகா உபத்திரவத்தின் முதல் மூன்றரையாண்டுகளைக் கடக்கும்போது, இயேசுவால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் அவர்கள் அந்திகிறிஸ்துவினால் துன்புறுத்தப்படுவார்கள் என அது நமக்குக் கூறுகிறது.
மகா உபத்திரவத்தின் முதல் மூன்றரையாண்டுகளுக்குப் பிறகு அந்திகிறிஸ்து பரிசுத்தவான்களைக் கொல்லுவான் -அதாவது, பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாக மரிப்பார்கள் என்று இது நமக்கு கூறுகிறது. பரிசுத்தவான்களில் இரத்தசாட்சியாக மரித்தவர்களும் மரிக்காதவர்களும், மகிமையின் சரீரங்களாக உயிரோடெழுப்பப்பட்டு, அவர்களுடைய உயிர்த்தெழுதலின் அந்நொடியே, வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவர் என அது நமக்குக் கூறுகிறது. மகா உபத்திரவத்தின் நடுவில் பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, ஏழு பாத்திரங்களின் வாதைகள் ஊற்றப்பட்டு இவ்வுலகம் முடிவிற்கு வரும். அப்போது சாத்தானையும் அந்திகிறிஸ்துவையும், அவனைப் பின்பற்றுவோரையும் நியாயந்தீர்க்க தேவன் திரும்பி வருவார்.
ஜீவப்புத்தகத்தில் தம் பெயர் எழுதப்படாதவர்கள் அந்திகிறிஸ்துவுக்கும் அவன் சிலைகளுக்கும் சரண்டைவர் என்று வெளி 13 நமக்கு கூறுகிறது. வேறுவார்த்தைகளில் கூறுவதானால், ஜீவப்புத்தகத்தில் தம் பெயர் எழுதப்பட்டவர்கள் அந்திகிறிஸ்துவிற்கும் அவனைப் பின்பற்றுவோருக்கும் அடிபணிய மாட்டார்கள். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை தம் இருதயங்களில் விசுவாசிக்க மறுத்து ஜீவ புத்தகத்தில் தம் பெயர் எழுதப்படாதவர்கள் சாத்தானையும் அவன் சிலைகளையும் ஆராதித்து அவற்றிற்கு சரணடைவர்.
இதனால் தான், மகா உபத்திரவத்தின்போது பரிசுத்தவான்கள் பூமியில் இருப்பார்கள் எனவும், உபத்திரவத்தின் மத்திய பாகம் கடக்கும்போது, அவர்கள் ஆகாயத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவர் எனவும் வேதாகமம் நமக்குக் கூறுகிறது. ஏழாண்டு கால உபத்திரவத்தின் போது அந்திகிறிஸ்துவின் குறியீட்டைப் பெற்று சாத்தானுக்கு சரணடைபவர்கள் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே தள்ளிவிடப்படுவர், ஆனால் ஜீவப்புத்தகத்தில் தம் பெயர்கள் எழுதப்பட்டவர்கள் சிலைக்கு சரணடைய மாட்டார்கள் என்பதோடு மகா உபத்திரவத்தின் நடுவே எடுத்துக் கொள்ளப்படுவர்.
மகா உபத்திரவத்தின் ஏழாண்டு காலத்தின் மத்திய பாகம் கடந்து சில நேரங்கள் கழியும்போது உண்மையான எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும். இந்தப் புத்தகத்தை தொடரும் இரண்டாவது பாகத்தில் எடுத்துக்கொள்ளப்படும் நேரத்தைக் குறித்த விளக்கமான வேதாகமக் குறிப்புகள் கூறப்படும். அநேக மக்கள் எடுத்துக்கொள்ளப்படும் நேரம் சீக்கிரமாய் நடக்குமென அறிவித்து உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படுதலைக் குறித்து கூறுகிறார்கள். அல்லது அதனை தாமதமாக நடக்குமென அறிவித்து உபத்திரவத்திற்கு பின் எடுத்துக்கொள்ளப்படுவதை குறித்து பேசுகிறார்கள். உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவத்தின் மதிப்பினை அவர்கள் உறுதிசெய்யாவிட்டாலும் அறிஞர்கள் அதனைக் குறித்து பேசுகிறார்கள். ஆயினும், ஆலயம் செல்பவர்களில் அநேகர் இக்கொள்கையை இறுகப்பற்றிக்கொண்டு அதனை விசுவாசிக்கின்றனர். சில மக்கள் தம் எல்லா உடமைகளையும் ஆலயங்களுக்குக் கொடுக்கின்றனர், அல்லது எப்படியோ கணக்கிடப்பட்ட கிறிஸ்துவின் வருகைக்காக வெறியுடன் காத்திருக்கின்றனர்.
சில காலங்களுக்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் உறுப்பினர்கள் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, அந்நாளில் கிறிஸ்து திரும்பி வருவார் என விசுவாசித்தனர். ஆகவே அவ்ர்கல் அனைவரும் ஒரு மலையின் மீதேறி, தம் சரீரங்களை ஒன்றாக ஒரு கயிறால் கட்டி நடு இரவு வரை எடுத்துக்கொள்ளப்படுவதற்காக காத்திருந்தனர். நேரம் சென்றது, அவர்கள் எத்தனை ஆவலாய் காத்திருந்தபோதிலும், இயேசு திரும்பி வரவில்லை. இறுதியில் தம் பிடிவாதத்தை விட்டு, கயிற்றிலிருந்து தம்மை அவிழ்த்துக்கொண்டு மலையிலிருந்து வெட்கத்துடன் இறங்கி வந்தனர். இத்தகைய ஒரு பைத்தியக்காரத்தனமான செய்கை கிறிஸ்தவ உலகினுள் இப்போது சாதாரணமாகி விட்டது. இத்தகையச் செய்கைகள் கொரியாவில் மட்டுமில்லாமல், உலகம் முழுவதும், ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா மற்றும் எல்லா இடங்களிலும் இவை நடக்கின்றன.
ஆகவே, நமக்குத் துல்லியமாகத் தெரியவேண்டியது என்னவெனில், கர்த்தர் தன் விசுவாசமிக்க பரிசுத்தவான்களுக்கு கூட மகா உபத்திரவத்தை வரும்படிச் செய்வார் என்பதே. பரிசுத்தவான்களுக்கு மகா உபத்திரவத்தை கர்த்தர் அனுமதிப்பதற்கான காரணம், தம் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றவே -உபத்திரவத்தின் மூலம் சாத்தானை நித்திய அக்கினியில் எரியவும் கிறிஸ்துவின் ராஜ்யத்தை இவ்வுலகில் ஆயிரம் வருடங்கள் ஏற்படுத்தும்படி இவ்வுலகை புதிய உலகாக மாற்றவும், பரிசுத்தவான்கள் அங்கு அவருடன் ஆளும்படிச் செய்யவும், இயேசுவை விசுவாசிப்பவர்களுக்கு புதிய வானத்தையும் புதிய பூமியையும் அருளவுமேயாகும். மகா உபத்திரவத்தை நம்மீது வர அனுமதித்தமைக்கான கர்த்தரின் சித்தம் இதுவே.
மகா உபத்திரவத்தின் ஏழாண்டு காலம் இன்னமும் தொடங்கவில்லை. இதுவரை நாம் அனுபவித்து இயற்கை அழிவுகளைக் கருத்தில் கொண்டால், அதனை ஆலைகளில் தோன்றும் நெருப்புடன் ஒப்பிடலாம், அவற்றை தீயணைக்கும் படையினர் இலகுவாய் அணைத்துவிடுவர் ஆனால் மகா உபத்திரவத்தின் போது இவ்வுலகிற்கு காத்திருக்கும் அழிவுகள் சாதாரணமானவை அல்ல, அது உலகின் காடுகளில் மூன்றிலொரு பங்கு காடுகளை எரித்துபோடும் நெருப்பாகும்.
அத்தகைய அழிவுகளும் வாதைகளும் இவ்வுலகைத் தாக்கும்போது ஆடிப்போகாமலும் தொடர்ந்தும் வாழ கர்த்தரின் ஊழியர்களுக்கும் பரிசுத்தவான்களுக்கும் போரிடக்கூடிய விசுவாசமிருக்கவேண்டும். மகா உபத்திரவத்தின் நடுப்பகுதிவரை நாம் பூமியில் இருக்கப்போவதால், அந்திகிறிஸ்துவுக்கும் அவனை பின்பற்றுபவர்களுக்கும் எப்போதும் சரணடையாதிருக்கும் வகையான விசுவாசத்துடன் இறுதி காலத்தில் நாம் வாழவேண்டும். போர்க்களத்திற்குள் செல்லும் ஒரு வீரன் எப்படி ஒரு தீர்மானமிக்க இருதயத்துடன் நுழைகிறானோ, அதுபோலவே, உங்கள் குடும்பத்தார் உட்பட இன்னுமோர் ஆத்துமாவை இரட்சிக்க நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உலகம் முழுவதும் பிரசங்கிக்க வேண்டும்.
உலகம் எப்போதும் இத்தனை அமைதியுடன் இருக்காது. நம்முடைய வாழ்வினை குழப்பம் ஆண்டு, கஷ்டங்கள் நிறைந்தாலும், கடைசி நாள் வரை கர்த்தர் நம்மைக் காப்பார் என்று விசுவாசித்து விசுவாசத்துடன் எப்போதும் வாழ்ந்திருக்கவேண்டும். உலகின் மதங்களும் சாத்தானும் எல்லா வகையான ஊடுருவும் வார்த்தைகளால் மக்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து திருடி, இறுதியாக அவர்களின் ஆத்துமாக்களை நரகத்திற்குள் தள்ளிவிடுவர்.
இப்போதும் கூட பெரிய பிரிவுகளைச் சேர்ந்த எண்ணிலடங்காதவர்கள் ஸ்கோஃபீல்டின் உபத்திரவத்திற்கு முன் எடுத்துக்கொள்ளப்படும் தத்துவத்தை விசுவாசித்து மற்ற அநேகரை நாசமாய்ப் போகும்படி வழி நடத்துகின்றனர். மகா உபத்திரவத்திற்கு முன் தாம் எடுத்துக்கொள்ளப்படுவோம் என்று விசுவாசிப்பவர்கள், அந்த உபத்திரவ நாட்களைச் சமாளிக்கும் விதமாக தம் விசுவாசத்தை ஆயத்தப்படுத்த தேவையில்லை என எண்ணுகின்றனர். இன்றைய வாழ்வில் விசுவாசத்துடன் இருந்தால், தேவன் அழைக்கும்போது ஆகாயத்திற்குள் ஏறிவிடுவோம் என அவர்கள் எண்ணுகின்றனர். ஆனால் பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படுவது மகா உபத்திரவ காலத்தின் முதல் மூன்றரையாண்டுகள் கழிந்தபின்னரே, ஆகவே கிறிஸ்து எப்போது திரும்புவார் என்பதை கருத்தில் கொள்ளாமல் உபத்திரவகாலத்திற்கு தம் விசுவாசத்தை ஆயத்தம் செய்யவேண்டும். ஏழாண்டுகால மகா உபத்திரவத்தின்போது இஸ்ரவேல் மக்களையும் புறஜாதியாரின் அநேகரையும் கர்த்தர் இரட்சிப்பார் என்பதை நாம் விசுவாசிக்கவேண்டும்.
வசனம் 14 நம்மிடம் கூறுகிறது “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.” இது இரத்தசாட்சியாக மரிப்பதைக் குறிப்பிடுகிறது. இரத்தசாட்சி என்பது ஒருவனின் விசுவாசத்திற்கேற்ப நீதியின் செயலுக்காக மரிப்பதாகும். பாவங்களிலிருந்து விடுதலையான பரிசுத்தவான்களுக்கு தேவையான விசுவாசம், தேவன் நம் எல்லாப் பாவங்களையும் மறையச் செய்தார் என்பதை விசுவாசிப்பதாகும், இந்த விசுவாசத்தைப் பிடித்துக்கொள்ளவேண்டும். ஆனால் பரிசுத்தவான்களின் விசுவாசத்தைக் கிழித்துப் போட சாத்தான் எப்போதும் முயன்று கொண்டே இருக்கிறான். ஆகவே சாத்தானுக்கு எதிராக விசுவாசப் போரைத் தொடுக்கவேண்டும்.
இந்த போரில் சாத்தானிடம் நாம் சரணடைந்தால், அவனுடன் சேர்த்து அவனின் ஊழியர்களாக நாமும் நரகத்தினுள் தள்ளப்படுவோம், நம்முடைய உயிரையே விலையாகக் கொடுக்க நேரிட்டாலும், நம்முடைய நம்பிக்கையை காக்க நாம் போரிட்டால் இரத்தசாட்சியாக மரித்து, இந்த இரத்தசாட்சியத்தின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் கர்த்தரின் ராஜ்யத்தினுள் பிரவேசிப்போம். நம்முடைய விசுவாசத்தைப் பாதுகாக்க இப்போரைத் தொடுப்பதால் நம் மரணம் நீதியுடையதாகவும் மகிமையுடையதாகவும் இருக்கும்.
ஆகவே, நீதியின் செய்கைகளுக்காக போரிடும் விசுவாசம் நம்மிடம் இருக்கவேண்டும். மற்றவர்களுக்காக, அவர்களின் ஆத்துமாக்களை இரட்சிக்கும் ஒரு போரில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை விசுவாசிப்பதுடன், இந்த ஆத்துமாக்களை பரலோகத்திற்கு அனுப்பும் போரில் இறுதி வெற்றி பெறும்வரை நம் விசுவாசத்தைப் பாதுகாக்க வேண்டும். வெற்றியின் கிரீடத்தை நாம் பெறும்வரை, தேவனின் வார்த்தையாகிய பட்டயத்தின் மூலம் சாத்தானுடனான போரில் அவனை மேற்கொள்ளவேண்டும்.
மக்கள் ஒரு முறை பிறந்து ஒரு முறை மரிக்கிறார்கள். மருத்துவத்துறை எத்தனை முன்னேற்றங்களை கண்டிருந்தாலும் எல்லோரும் மரிக்கவே செய்வர். மக்கள் 10 வயதில் இறந்தாலும் 80 வயதில் இறந்தாலும் அவர்கள் அனைவரும் பாவத்திற்கான கர்த்தரின் நியாயத்தீர்ப்பை அனுபவித்தே தீருவர். பூமியிலிருக்கும்போது தேவன் அருளிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காமல் மரித்தவர்கள் தம் நியாயத்தீர்ப்பைப் பெற்று ஆக்கினைக்குள்ளாகும்படி நித்திய அக்கினிக்குள் தள்ளிவிடப்படுவர். அவர்களுடைய எல்லாப் பாவங்களும் இயேசுவின் நீரினாலும் இரத்தத்தினாலும் கழுவப்பட்டு அவர்கள் பனியைப் போல் வெண்மையாக இருந்தாலும், இந்த உண்மையை விசுவாசிக்காத பாவம் மன்னிக்கப்படாதாகையால், இந்த அவிசுவாசிகள் பூமியில் வாழ்ந்தபோது கர்த்தருக்கும் மனிதர்களுக்கும் முன்பாகச் செய்த பாவங்களுக்காக நியாயத்தீர்ப்பைப் பெற்று, அதற்கான விலையை கொடுப்பர்.
கர்த்தருக்கு முன்பாக நரகத்தண்டனை பெறுவதைத் தடுக்க, நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கும், இயேசு அருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிக்கவேண்டும். நம்முடைய எல்லா பாவங்களையும் நிவர்த்தி செய்யும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது சிலுவையின் இரத்தத்தை மட்டுமே விசுவாசிக்கும் நற்செய்தியிலிருந்து வேறுபட்டது. சாதாரண சமயமோ அல்லது மற்ற சமயமோ, எவ்வேளையிலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கித்தேன். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதினால் மட்டுமே பரிசுத்த ஆவியானவரை நம்மால் பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு கர்த்தரின் பிள்ளைகளானோம் என்ற ஆசீர்வாதத்தையும் பெறுவோம். இயேசுவை நாம் விசுவாசிக்கும்போது சிலுவை இரத்தத்தினால் மட்டுமே ஆன தவறான நற்செய்தியிலிருந்து தூரமாகி அதனை விசுவாசிக்காமல் இருக்கவேண்டும்.
பழைய ஏற்பாடு உண்மை நற்செய்தியாகிய கைவைத்தலையும் வெண்கலப் பாத்திரத்தையும் குறித்து கூறுகிறது. புதிய ஏற்பாட்டில், கிறிஸ்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் நம் பாவங்கள் எல்லாம் ஒரே தரமாக இயேசுவின் மீது சுமத்தப்பட்டது என கர்த்தரின் வார்த்தை கூறுகிறது. பழைய ஏற்பாட்டின் வெண்கலப்பாத்திரமும் புதிய ஏற்பாட்டின் ஞானஸ்நானமும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள அதே விசுவாசத்தையே குறிக்கின்றன, இது நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தது -இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலம் நம் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டதாலும், அவரின் சிலுவை மரணத்தாலும் அவரின் உயிர்த்தெழுதலினாலும் இரட்சிக்கப்பட்டோம். இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி இல்லாது யாராலும் இரட்சிக்கப்படமுடியாது.
மகா உபத்திரவத்தின் நடுப்பகுதியை அடையும் வரை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நம் விசுவாசத்தினால் தொடர்ந்து வாழ வேண்டும். இந்த காலத்தை பிரித்துணரவேண்டும், கர்த்தர் விரும்புகிற விதமாக மிச்சமிருக்கும் கடைசி சிலநாட்கள் வாழவேண்டும். கர்த்தரின் ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கித்து நல்ல செய்தியை அனைவருக்கும் எடுத்துச் செல்லவேண்டும். இந்த கடைசி நாட்களிலும் கூட அநேக மக்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று தேவன் நமக்கு கூறினார்.
நீரில்லாமல், வெறும் மணலும், சுட்டெறிக்கும் சூரிய வெளிச்சமும் இருந்தாலும் சில செடிகளால் பாலைவனத்தில் உயிருடன் இருக்கமுடியும். இந்த மோசமான பாலைவனம் சூட்டினாலும், காய்ந்துபோன தூசியாலும் மணலாலும் நிரம்பியிருந்தாலும், மழை பொழிந்து நீர் வரும்போது, செடிகள் முளைத்து, பூத்து, ஒரு வாரத்திலேயே கனிகளைத் தருகின்றன. பாலைவனத்தில் கிட்டாதது தண்ணீரே; விதைகள் மணலுக்கடியில் புதையுண்டிருக்கின்றன, அவற்றால் முளைக்க முடியாவிட்டாலும் மழைக்காக காத்து காய்ந்துபோகாமல் உயிருடன் இருக்கின்றன. சிறிது ஈரம் இந்த காய்ந்த விதைகளைத் தொடும்போது, அவை உடனடியாக முளைக்கின்றன. ஒரே நாளில் விதை முளைத்து, மறுநாளில் வளர்ந்து, மூன்றாம் நாளில் பூவிட்டு காய் காய்க்கிறது. அவற்றின் கடைசி நாளில் இச்செடிகள் தம் விதைகளை தரையில் விதைக்கின்றன, இறுகிப்போன விதைகள் மணலுக்கடியில் ஒளிந்துகொள்கின்றன.
ஒரு நாள் இருப்பது கூட சாத்தியமில்லை எனத் தோன்றும் பாலைவனத்துச் செடி தண்ணீர் கிட்டும்போது வளருவதைப் போன்று, இறுதிகாலத்தில் ஆத்துமாக்களும் கூட பாலைவனம் போன்ற உலகில், நீர் போன்ற நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் சிறிதுபடுவதினாலேயே முளைத்து, பூத்து, கனிகளைத் தரும். ஏழு எக்காளங்களின் வாதைகள் வரும்போது, மகா உபத்திரவத்தைக் குறித்து வார்த்தை மூலம் கேள்விப்பட்டவர்கள் அவர்களில் நடப்பட்ட நற்செய்தியை உணர்ந்து, அதனைக் கடைபிடித்து சில நொடிகளிலேயே இரத்தசாட்சிக்குத் தேவையான விசுவாசத்தைப் பெறுவர்.
நீங்களும் நானும் நம் விசுவாசத்தைக் காப்பதற்காக இரத்தசாட்சியாக மரிக்கும்போது, அநேக விசுவாசத்தின் மக்கள் இருப்பர், பாலைவனச் செடிகள் காய்ந்துபோன நிலத்தில் உடனடியாக முளைப்பதைப் போன்று குறியீட்டைப் பெறாதமைக்கும் சிலுவையை வணங்காதமைக்கும் நம்முடனே கூட இரத்தசாட்சியாக மரிப்பர். நாம் இப்போது பரப்பும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது, இரத்தசாட்சியத்தை அநேக மக்கள் தழுவும்படியாக அவர்களின் விசுவாசம் உடனடியாக வளர அவர்களை ஏதுவாக்கி, தொடர்ந்து போரிடும் கர்த்தரின் ஊழியர்களாக்கும்.
சிறு பிள்ளைகளிலிருந்து பெரியவர்கள் வரை நாமனைவரும் தேவ சேனையின் போர்ச்சேவகராவோம். நம்முடைய இருதயங்களை போரிற்கு எப்போதும் தயார் நிலையில் வைத்து, பொய்களினால் வஞ்சிக்கப்படாமல் கிறிஸ்துவின் பிள்ளைகளாக, சரியான விசுவாசத்துடன் வாழவேண்டும். போரில் வெல்வோர்களாகிய நமக்கு, கர்த்தர் வெற்றியின் கிரீடத்தையும் கூறமுடியாத பரிசுகளையும் அளிப்பார். ஆகவே, நாம் கர்த்தரின் நீதியின் செய்கைகளுக்கு பணிபுரிதலுடனும், சாத்தானையும் அவன் பொய்களையும், உலகின் தீங்குகளையும் எதிர்த்து நிற்கும் விசுவாசத்துடனும் நாம் வாழவேண்டும்
 
 
உபத்திரவ காலத்தின் போது கர்த்தர் நமக்கு துணிச்சலான விசுவாசத்தை அருளுவார்
 
மங்கின நிறமுடைய குதிரையில் காலம் வரும்போது அதன் அடையாளங்களை கர்த்தர் நமக்குத் தருவார். வசனம் 1 கூறுகிறது, “இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று பூமியின்மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.” இங்கு காற்று என்பது கர்த்தர் தோன்றச் செய்யும் உபத்திரவத்தின் காற்றைக் குறிக்கிறது. இஸ்ரவேல் மக்களைக் காக்கும் பொருட்டு கர்த்தர் அவர்களை முத்திரித்து இக்காற்றை சிறிது நேரம் பிடித்திருப்பார் என்று வெளி: 7:1-8 நம்மிடம் கூறுகிறது. ஆனால் சமயம் வரும்போது -அதாவது, கர்த்தரின் ஏழு காலங்களில் ஒன்றான பஞ்சத்தின் காலமாகிய கறுப்புக் குதிரையின் காலம் முடிவடையும் போது,- மங்கின நிறமுடைய குதிரையின் காலத்தை கர்த்தர் திறப்பார். அப்போது உலகின் நான்கு காற்றுகளும் உயர்த்தப்படும்படி அவை உலகிற்கு உபத்திரவத்தின் காற்றினை எடுத்துவரும்.
மங்கின நிறமுடைய குதிரையின் காலத்தைத் திறக்கும் சமயம் வரும்போது, உபத்திரவத்தின் பயங்கரமான காற்று வீசி, அநேக இஸ்ரவேலர்கள் மரிப்பர், நாம் உட்பட அநேக புறஜாதியாரும் கொல்லப்படுவர். மங்கின நிறமுடைய குதிரையின் காலமும் தொடங்கும்.
இப்போது கறுப்பு நிறக் குதிரையின் காலம் நடப்பதால், பஞ்சத்தின் காற்று உலகைச் சுற்றிலும் வீசுகிறது, இக்காலம் முடியும் போது மங்கின நிறமுடைய குதிரையின் காலம் தொடங்கும், அது உபத்திரவத்தின் காற்றை தோற்றுவிக்கும். உபத்திரவக் காற்று ஏழாண்டு கால மகா உபத்திரவம் முழு அளவில் தொடங்கியதைக் குறிக்கிறது. பிரபஞ்சம் படைக்கப்பட்டதிலிருந்து மனித வரலாறு தொடங்கியது முதல் மகா உபத்திரவத்தை கர்த்தர் முதன் முதலாக உலகிற்கு எடுத்து வருகையில் -அதாவது மங்கின நிறக் குதிரையின் காலத்துடன் தொடங்கும் உபத்திரவத்தின் காற்று வீசுகையில்- அனைத்தும் முடிவடையும், அவையாவும் புதிதாக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்படும்.
மங்கின நிறமுடைய குதிரையின் காலம் வருகையில் உபத்திரவமும் தொடங்கும் என்பதை நாம் அறியவேண்டும். உலகை ஆளுபவர்கள் ஒன்றாகச் சேரும்போது, சில அரசியல் வாதிகள் முழு அதிகாரத்தையும் பெறுவர், அவர்களுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் ஆளுபவர்கள் உபத்திரவத்திற்குள் மரணத்திற்குள்ளும் தள்ளப்படுவர். மங்கின நிறமுடைய குதிரையின் காலத்தில் வாழ்வது மிகக் கடினமாயிருப்பதை மக்கள் காண்பார்கள். அப்போது அவர்கள் ஏழு எக்காளங்களின் வாதைகளினால் உருவாகும் இயற்கை அழிவுகளினால் பெரிதான கஷ்டங்களை சந்திக்கும்போது அந்நேரத்தின் அரசியல் சூழ்நிலைகளும் கஷ்டத்தை அதிகரிப்பதோடு அவர்களை பயமுறுத்துவதாகவும் இருக்கும். இந்நிலையிலும் கூட, கர்த்தர் மக்களின் மத்தியில் தொடர்ந்து செயல்படுவார். அவர் எண்ணிலடங்காத புறஜாதியாரை இரட்சிப்பிற்கு வழிநடத்துவார்.
மங்கின நிறமுடைய குதிரையின் காலத்தில் உபத்திரவத்தின் காற்று வீசுகையில், ஔரிடத்தில் மட்டுமே நம்பிக்கைக் காணப்படும். வார்த்தையானது “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக” என்று நமக்கு கூறுவதைப் போன்று, நம்முடைய நம்பிக்கை பிதாவாகிய கர்த்தரின் மீதும் இயேசுகிறிஸ்துவின் மீதுமே காணப்படுகிறது. பயங்கரமான உபத்திரவக் காற்று வீசத் தொடங்கும் போது அந்திகிறிஸ்து இப்பூமியில் தோன்றி, அரசியல் உலகை மட்டுமின்றி தனித்தனி சமூகங்களையும் ஒன்று சேர்த்து பொருளாதாரம், கலாச்சாரம், மதம் ஆகியவற்றையும் உலகை ஒன்றிணைப்பதில் ஐக்கியப்படுத்துவான். உபத்திரவம் என்பது பயங்கரமான துன்பங்களுக்குள்ளாகச் செல்வதாகும். இவையெல்லாம் திடீரென சம்பவிக்கும்.
பொருளாதார ஐக்கியத்தின் காற்று இவ்வுலகம் முழுவதும் வேகமாக வீசுகிறது. தடையற்ற வியாபாரத்திற்கு பலமான இயக்கம் ஏற்படுத்தப் பட்டுள்ளது, அநேக பொருளாதார கழகங்களின் உறுப்பு நாடுகள் தம் பொருளாதார வரிகளை அழித்துள்ளன. பாதுகாக்கப்பட்ட வியாபார முறையில், ஒரு நாடு தன் தயாரிப்புகளின் விலையை இன்னொரு நாட்டில் நிலவும் சந்தையில் கூறமுடியாது, அதிக விலைப்போட்டியை சந்தித்தன, ஏனெனில் ஏற்றுமதி செய்யும் போதும், இறக்குமதி செய்யும் போது அவற்றின் மீது சுமத்தப்படும் வரி விலையை உயர்த்தும், அவற்றின் அசல்விலை எப்படி இருந்தது என்பது ஒரு பொருட்டேயல்ல.
ஆனால் இத்தகைய வரி என்ற சுவர்கள் விழுகின்றன. ஐரோப்பாவில் நல்லதொரு உதாரணத்தைக் காணலாம், அங்கு வரிகள் அகற்றப்பட்டுவிட்டன. உதாரணமாக ஐரோப்பிய சமூகத்திலுள்ள உறுப்பு நாடுகளின் மத்தியில் வரி ஏதும் இல்லை. இது வரப்போகிற பெரிதான ஐக்கியத்தின் தொடக்கமாகும், இது அரசியல் கலாச்சார ஐக்கியத்தை சுட்டிக்காட்டுகிறது. இது ஒரு ஆச்சர்யமான நிகழ்ச்சி. சுங்க வரி இல்லாமல் ஒரு நாடு தன் பொருட்களை மற்ற நாடுகளில் விற்கலாம். உலக பொருளாதார சூழ்நிலையில் இது ஒரு மிகப்பெரிய மாறுதலாகும். ஐரோப்பிய சமூகம் பொருளாதார ஐக்கியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினால், உலக பொருளாதார ஐக்கியமும் வேகமாக முன்னேறும்.
1997 இல் கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளை விழுங்கிய பொருளாதார சிக்கல்களைப் போல் எதிர்காலத்தில் ஏதேனும் நடந்தால், இந்நாடுகள் ஒன்றுக்கொன்று பொருளாதார உதவி செய்வதாக ஒப்பந்தம் ஒன்றை அண்மையில் செய்துள்ளன, 1997 இல் ஆசியாவின் பொருளாதார சிக்கலின் போது அமெரிக்கா பொருளாதார உதவியைச் செய்தது. ஆனால் மேற்கூறிய ஒப்பந்தத்தின்படி, இந்த ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளில் ஏதாவது ஒன்று பொருளாதார சிக்கலில் மாட்டினால் மற்றவை பண உதவி செய்யும். இதன் பொருள் பொருளாதார ஐக்கியமொன்றை உருவாக்குதலாகும். எப்படி ஐரோப்பிய சமூகத்தின் மூலம் அதன் உறுப்பு நாடுகளின் பெரிதான முன்னேற்றத்திற்கு ஐரோப்பிய நாடுகள் சுங்க வரியை ஒழித்தன. அதுபோலவே தூரகிழக்கு நாடுகளான இம்மூன்று நாடுகளும் தம் பொருட்களை ஒன்று சேர்க்கின்றன. இத்தகைய தனி நாடுகளும் அவற்றின் அமைப்புகளின் முன்னேற்றங்களும் ஐக்கியமாவது அரசியல் கூட்டமைப்பிற்கு வழிநடத்தும்.
சுங்கவரியை அகற்றி பொருளாதார ஐக்கியத்தை ஏற்படுத்துவதென்பது தனித்தனி நாடுகள் ஒரு பெரிய வல்லமை மிக்க அமைப்பை உருவாக்குகின்றன என பொருள்படும். ஏழு பாத்திரங்களின் இயற்கை அழிவுகள் வந்து, உலகம் முழுவதும் குழப்பம் நிகழுகையில், இத்தகைய சர்வதேச அமைப்புகளும் நிறுவனங்களும் வல்லமை மிக்க தலைவனைத் தேர்ந்தெடுக்கும். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், குழப்பமுள்ள இவ்வுலகத்தில் ஒழுங்குபடுத்த இதனை ஒரு நாடாக்கி, எல்லா வல்லமையுள்ள ஆளுபவனைத் தேர்ந்தெடுக்க முயல்வர்.
இப்படி நடக்கும்போது உபத்திரவத்தின் காற்று வீசும். தனி மனிதர்களின் உரிமைகளை மதிப்பதற்கு பதிலாக, தனிப்பெரும்பான்மையைப் பெறுவதற்காக சிலரின் உரிமைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஏற்றுக்கொள்ளப் படமுடியாதது நடைபெறும், இதனை நாம் எதிர்பார்க்கலாம். இத்தகைய நிகழ்வுகளுக்கான அடிப்படை வேலைகள் கறுப்புக்குதிரையின் காலத்திலேயே நடைபெறும், ஆனால் மங்கின நிறமுடைய குதிரையின் காலத்தில் முற்றிலுமாக நடைபெறும்.
1997 இல் கொரியா பொருளாதார சிக்கலில் மாட்டியபோது அது உலக நாடுகளின் பொருளாதார அமைப்பின் (IMF) பொறுப்பில் வந்தது, அது பொருளாதார அழிவில் முழுகிப்போயிற்று. நிலத்தின் விலை விழுந்தது, ஒரு இரவிற்குள்ளாகவே மக்கள் தம் வேலைகளை இழந்தனர். மத்திய தர குடும்பங்கள் தெருவுக்கு வந்தன. இத்தகைய பொருளாதார அழிகள் சர்வசாதாரணமாகி விட்டன, இன்னொரு நாட்டில் புதியதொரு பொருளாதார சிக்கல் ஏற்பட்டது என்பதைக் கேட்காமல் ஒரு நாள் கடப்பதில்லை. இக்காற்று பஞ்சத்தின் காற்றாகும். நாமிந்த பஞ்சத்தின் காலத்தில் வாழுகிறோம், இத்தகைய காலத்தில் உங்களிடம் பணமில்லாவிட்டால் உங்கள் மதிப்பு பெருமதியில்லாததாகிவிடும். குறுகிய காலத்திலேயே, இந்த பஞ்சத்தின் காலம் உபத்திரவத்தின் காலமாக முற்றிலும் வீசும்.
பூமியின் நாலு மூலைகளின் காற்றை கர்த்தர் சிறிது காலம் பிடித்து வைத்து இஸ்ரவேல் மக்களில் 144,000 பேரிற்கு முத்திரைத் தரிப்பித்தார். அவர்களுக்கு தீங்கு நேராது செய்த பிறகு, உபத்திரவத்தின் காற்றை விடுவித்தார். இந்த உபத்திரவத்தின் காற்றைத் தூதர்கள் விட்டுவிடும்போது, மகா உபத்திரவத்தின் காற்று வீசத் தொடங்கும். உபத்திரவத்தின் காற்று உலகத்தை ஒன்று சேர்க்கும், சாத்தானின் ஆளுகைக்குட்படும். இதன்பிறகு ஏழு எக்காளங்களின் வாதைகளை ஏழு வருடங்களில் பெரிதான இயற்கை பேரழிவுளாக அனுபவிக்கும். இந்த ஏழு எக்காளங்களின் வாதைகளை ஏழு பாத்திரங்களின் வாதைகள் தொடரும்.
அந்திகிறிஸ்துவின் இந்த கொடுங் கோலாட்சியின் போது விசுவாச சுதந்திரம் பறி போய், பஞ்சமும் பட்டினியும் மிக மோசமான அளவை அடைந்து, அரசாங்கம் அளிக்கும் உணவில் மட்டுமே வாழும்படியாக மக்கள் மாறிப்போவர். வெளிப்படுத்தின் விசேஷத்தின் 7 ஆம் அதிகாரம் வரவிருக்கிற மொத்த நிகழ்வுகளையும் நமக்கு அளிக்கிறது.
இக்காலத்தில் நமக்காக வேறெதுவெல்லாம் காத்திருக்கின்றன. மங்கின நிறமுடைய குதிரையின் காலத்தில் இஸ்ரவேலர்களிலிருந்தும் புறஜாதியாரிலிருந்தும் எண்ணிலடங்காத இரத்தசாட்சிகள் மரிப்பர். மகா உபத்திரவம் வரும்போது ஒரே ஒரு நம்பிக்கைதான் நமக்கிருக்கும். வசனம் 10 நம்மிடம் கூறுகிறது, “அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.” வேறுவார்த்தைகளில் கூறுவதானால், நம்முடைய இரட்சிப்பு சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் தேவனிடமும், ஆட்டுக்குட்டியானவரிடமும் மட்டுமே காணப் படுகிறது. 4ஆம் அதிகாரத்தில் நாம் காண்பதைப் போல், ஒரு சிங்காசனம் இயேசுகிறிஸ்துவுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது, அந்த சிங்காசனத்தில் அமர்ந்திருப்பது இயேசுகிறிஸ்துவே, அவர் பலவீனராய் இராமல், மகத்துவமுள்ள கர்த்தரின் குமாரராகவும், அனைவரின் நியாயாதிபதியாகவும் வீற்றிருகிறார். பிதாவாகிய கர்த்தர் தம் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். ஆகவே திரியேகக் கடவுளைக் குறித்து நாம் பேசும்போது, பிதாவாகிய கர்த்தர், குமாரர் மற்றும் பரிசுத்த ஆவியானவர் ஆகிய அனைவரும் ஒருவரே. சுருக்கமாகக் கூறினால், நம்முடைய இரட்சிப்பு கர்த்தரிடமும் ஆட்டுக்குட்டியாகிய இயேசுகிறிஸ்துவிடமும் மட்டுமே இருக்கின்றன.
பயங்கரமான உபத்திரவம் வருகையில் எங்கே நம் நம்பிக்கையை காண்போம்? மகா உபத்திரவத்தின் போது அந்திகிறிஸ்து தோன்றுகையில், அவன் தனக்காக ஒரு உருவத்தைச் செய்து, அந்த உருவத்தை வணங்காதவர்களையும், தன் குறியீட்டை தம் கைகளிலோ, நெற்றியிலோ பெற்றுக் கொள்ளாதவர்களையும் கொல்லப்போவதாக பயமுறுத்துவான் (வெளி 13).
சுற்றுச் சூழலைப் பொறுத்தவரை, நெருப்பும் கற்களும் வானிலிருந்து கொட்டி, பூமியதிர்ச்சிகள் நிகழ்ந்து, மற்ற வாதைகளும் தொடர்வதால் இயற்கையின் சூழல் எத்தனை மோசமானதாக மாறமுடியுமோ அத்தனை மோசமானதாய் மாறும். இந்த வாதைகளால் பாதிக்கப்படாத இடங்கள் பூமியில் இராது. பூமியதிர்ச்சிகளின் மூலம் பூமி பிளந்து, சூரியன், சந்திரன், நட்சத்திரங்களெல்லாம் இருண்டுபோய் கடல்களும் ஆறுகளும் வாதைகளினால் வரண்டு போயிருக்கும் இத்தகைய மோசமான சுற்றுச் சூழலில் நிகழும் அரசியல் நிலை அந்நேரத்தில் மிகவும் மோசமானதாயிருக்கும். அந்திகிறிஸ்து மிகவும் கொடுமையாக அரசாளுவான். அவன் முழு அதிகாரத்தையும் பெற்று எல்லா உலகத் தலைவர்களையும் தன் ஆளுகைக்குட்படுத்துவான்.
 
 
அந்திகிறிஸ்து ஏன் தோன்றவேண்டும்?
 
சாத்தான் தன்னுடைய கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, தன் அதிகாரத்தை அந்திகிறிஸ்துவிற்கு சில காலம் அளிப்பான் -அதாவது, அவன் மக்கள் தன்னை வணங்கி உண்மை கர்த்தருக்கு மேலாக தான் உயர்த்தப்படவேண்டும் என்ற தன் ஆசையை நிறைவேற்ற இப்படிச் செய்வான். ஆனால் இந்த ஆசை நிறைவேறாது என்று சாத்தானுக்கு தெரியும். ஆனால் கடைசி காலத்தில் மனிதர்களால் தான் மகிமையடைய முயற்சிப்பான், தனக்கு கீழ்ப்படியாதவர்களை கொலை செய்வான். எல்லா துன்பங்களிலும் பெரிதான துன்பம் பரிசுத்தவான்களின் மீது விழும். அப்பொழுது பரிசுத்தவான்களுக்கு சாவதைத் தவிர தேர்ந்தெடுக்க வேறெதுவும் இருக்கப்போவதில்லை. ஏனெனில் அவர்களால் விசுவாசிக்ககூடியவரும் அவர்களின் ஒரே நம்பிக்கையுமாக இருப்பது, நம்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் இரட்சித்த நமது கர்த்தரான இயேசுகிறிஸ்துவே. இக்கர்த்தரை நாம் சார்ந்திருக்கலாம், அவரை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே பயங்கரமான வாதைகளின் மத்தியிலும் உபத்திரவங்களின் மத்தியிலும் மரணத்திலிருந்து தப்பிக்க முடியும்.
இக்கடைசி நாட்களில் “சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும்” மட்டுமே நம் நம்பிக்கை செல்கிறது. நம் கர்த்தரை விசுவாசித்ததால், பரிசுத்தவான்கள் இரத்தசாட்சிகளாய் கொல்லப்பட்டனர், அவர்களுடைய அவர் மீதான அந்த நம்பிக்கையினால் கொடிய வாதைகளிலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிக்கப்படுவர். ஏழு வருட மகா உபத்திரவ காலத்தின் போது நடக்கப்போகும் எல்லாவற்றையும் குறித்து வெளி 7 இப்படியாக கூறுகிறது.
உபத்திரவத்தின் காற்று உருவாக்கப் போகும் நிகழ்வுகளை தொடர்ந்து பார்ப்போமாக. வசனம் 9-10 நம்மிடம் கூறுகிறது, “இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக் குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக் குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.” வெள்ளை ஆடை அணிந்து தேவனைப் புகழும் இந்த பெருந்திரளான கோத்திரத்தாரும் பல மொழிகளையும் பேசுபவர்கள் யாரெனக் கேட்டபோது 24 மூப்பர்களில் ஒருவர் கூறினார் “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.”
பெருந்திரளான மக்கள் மகா உபத்திரவக் காலத்தின்போது இரட்சிக்கப்படுவார்கள் என இது நமக்கு கூறுகிறது, அநேக இரத்தசாட்சிகள் எல்லா நாடுகளிலிருந்தும், கோத்திரங்களிலிருந்தும் மொழிகளிலிருந்தும் தோன்றுவர். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், அந்நேரத்தின் எல்லா உபத்திரவங்களின் போதும் வாதைகளின் போதும் கர்த்தர் மட்டுமே தம் இரட்சகர் என விசுவாசிக்கும் பெருந்திரளான மக்கள் இருப்பர். சுருக்கமாகக் கூறினால், இரட்சிப்பு திரியேகக் கடவுளில் மட்டுமே காணப்படுகிறது என இது பொருள்படும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை கர்த்தர் நமக்கு கொடுத்ததால், நம் பாவங்களிலிருந்து அது நம்மை இரட்சித்தது, நாம் இந்த நற்செய்தியை விசுவாசிப்பதால், அந்திகிறிஸ்து தோன்றி அவனிடம் சரணடையுமாறும் அவனைக் கடவுள் என்றும் அழைக்கவேண்டுமெனவும் வலியுறுத்தும்போது, அவனுக்கு நாம் அடிபணியமாட்டோம். மேலும், நம்மில் சிலர் அந்திகிறிஸ்துவிடம் சரணடைய முயன்றாலும், அவர்களால் வாழமுடியுமா என்பது சந்தேகமே, ஏனெனில், அவர்களுக்காக பேரழிகளை எடுத்துவரும் வாதைகளும் சாத்தானின் கடைசி வெறியாட்டமும் காத்திருக்கின்றன. இக்காலத்தில் எதற்கும் உத்திரவாதம் இருக்கப்போவதில்லை.
நம்மை இரட்சித்த கர்த்தரை விசுவாசிப்பதைத் தவிர நமக்கு வேறுவழிகளில்லை. கர்த்தரை விசுவாசித்து துணிச்சலுடன் நம் இரத்தசாட்சியத்துவத்தை தழுவவேண்டும், அவர் நமக்கு ஆயிரவருட அரசாட்சியையும் புதியவானத்தையும் புதிய பூமியையும் அருளுவார். ஏனெனில் அவர் நம்மை மரித்தோரிலிருந்து எழுப்பி, எடுத்துக்கொண்டு புதியவானம் மற்றும் புதியபூமியின் மகிமையையும் ஆசீர்வாதத்தையும் வழங்குகிறவர். இதனால் தான் ஆட்டுகுட்டியின் இரத்தத்தினால் கழுவப்பட்ட வெள்ளை ஆடைகள் அணிந்த அநேக மக்கள் இருப்பர்.
கர்த்தரின் மீதுள்ள விசுவாசத்தின் பொருட்டு உண்மையாகவே இரத்தசாட்சிகளாக மரித்தவர்கள் இருப்பர். இக்காலத்தில், உலகின் எல்லா நாடுகளிலிருந்து இரத்தசாட்சியாக மரித்த பரிசுத்தவான்களும் மற்றவர்களும், கர்த்தர் மீதுள்ள தம் விசுவாசத்திற்காக மரித்தவர்களாவர். நாம் இப்போது பிரசங்கிக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் கர்த்தரை விசுவாசித்து இரத்தசாட்சியத்துவத்தை தழுவுவர், அவர் அவர்களை அந்நேரத்தின் பயங்கரமான உபத்திரவங்களிலிருந்தும் வாதைகளிலிருந்தும் தப்புவிப்பார். இந்த பயங்கரமான வாதைகளிலிருந்து கர்த்தரால் மட்டுமே நம்மை விடுவிக்க முடியும்.
மகா உபத்திரவத்தின் ஏழாண்டு காலங்களில் நடக்கப்போகும் முக்கியமான நிகழ்வுகளை உங்களுக்கு கூறிக்கொண்டிருக்கிறேன். உபத்திரவத்தின் காற்று இவ்வுலகில் வீசும்போது, எவ்வித நம்பிக்கையும் இவ்வுலகில் விட்டு வைக்கப்படாது. நமக்குத் தெரிந்த உலகம் அப்போது இராது, வானமும் பூமியும் புத்தகச் சுருள் சுருட்டப்படுவதைப் போல் மறைந்துபோகும்.
கர்த்தர் அப்போது இந்த பூமியில் புதியதொரு பூமியை படைத்து, இரத்தசாட்சிகள் அதனை ஆயிரவருடங்கள் ஆளச் செய்து, இந்த ஆயிரவருடங்கள் முடிந்தபிறகு அவர்களைத் தனது நித்திய ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்வார். நம்முடைய கர்த்தரே நம்மை நம் பாவங்களிலிருந்து விடுதலைச் செய்தார், அவர் நம்மை மகா உபத்திரவத்தின் மரணத்திலிருந்தும் அழிவிலிருந்தும் இரட்சித்தார், நமக்கு அடைக்கலம் அளிப்பது அவரே. இரத்தசாட்சியாக மரிக்கவேண்டிய நேரம் வரும்போது நீங்களும், நானும் இவ்வுலகில் நற்செய்தியைக் கேட்டு அதனை விசுவாசித்தவர்களும், நம்மை நம் பாவங்களிலிருந்து இரட்சித்த கர்த்தரை விசுவாசித்ததினால் துணிச்சலுடன் இரத்தசாட்சியாவர். உறுதியான விசுவாசத்துடனும் நம்பிக்கையுடனும் நம் இரத்த சாட்சியத்துவத்தைத் தழுவுவோம். சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் கர்த்தரே பயங்கரமான வாதைகளிலிருந்தும் உபத்திரவங்களிலிருந்தும் நம்மை விடுவிக்கப்போகிறவர்.
நம்மை நம் பாவங்களிலிருந்து இரட்சித்தது கர்த்தரே என்றும், பயங்கரமான வாதைகளிலிருந்து நம்மை விடுவிக்கப் போவதும் கர்த்தரே என்றும் விசுவாசிக்காமல் இரத்தசாட்சியாக நம்மால் மரிக்க முடியாது. இப்போது இரத்தசாட்சியாகியவர்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப்புத்தகத்தில் எழுதப்பட்டவர்களே. ஜீவப்புத்தகத்தில் தம் பெயர் இடம்பெறாதவர்களால் இரத்தசாட்சியாக முடியாது.
நற்செய்தி முழு உலகிலும் சரியாக பிரசங்கிக்கப்படும், இவ்வுலகிலுள்ள எல்லோரும் அதனைக் கேட்டு, அதைக் குறித்து அறிவார்கள். நாம் இடைவிடாது நற்செய்தியைப் பரப்புவதால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி உலகம் முழுவதும் சாட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகா உபத்திரவம் வரும்போது, இவ்வுலகிலுள்ள அநேக ஆத்துமாக்கள் தம் நம்பிக்கையை ஆட்டுக்குட்டியானவரின் மீது மட்டுமே வைப்பார்கள், தம்முடைய வாழ்வே போனாலும், கர்த்தரையே அவர்கள் விசுவாசிப்பதால், அவர்களால் தம் இரத்தசாட்சியத்துவத்தை தழுவ முடியும். விசுவாசிகளின் பெயர்கள் ஜீவப்புத்தகத்தில் எழுதப்படுவதை ஏதுவாக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது தொடர்ந்து பிரசங்கிக்கப்படும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் இறுதிகாலத்தில் இரத்தசாட்சியாவர். வெளி 13:8 நம்மிடம் கூறுகிறது, “உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்." ஜீவப்புத்தகத்தில் தம் பெயர்கள் எழுதப்படாதவர்கள் எந்த விதிவிலக்குமின்றி மிருகத்திடம் சரணடைவர் என்பது முற்றிலும் உண்மையாகும்.
இறுதி நாட்களின் மகா உபத்திரவத்திலிருந்து நம்மை விடுவிக்கக் கூடியவர்கள் இயேசுகிறிஸ்துவும் பிதாவாகிய கர்த்தரும் மட்டுமே. நாம் கர்த்தரால் இரட்சிக்கப்பட்டோம் என்று விசுவாசிக்கிறேன். அவரிற்காக நாம் மரணத்திற்குள்ளானாலும், கர்த்தர் நம்மை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பி, வானத்திற்குள் எடுத்துக்கொண்டு, பூமியிலுள்ள எல்லாவற்றையும் புதுப்பித்து, தன் ஆயிரவருட அரசாட்சியில் வாழ நம்மை அனுமதிப்பார்.
இத்தகைய உபத்திரவ காற்றினால் சீரழிக்கப்போகும் மங்கின நிறமுடைய குதிரையின் காலம் வேகமாக நம்மை நெருங்குகிறது. கறுப்புக் குதிரையின் காலம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. அது அதன் வழியைக் கடந்த பிறகு மங்கின நிறமுடைய குதிரையின் காலம் தோன்றும். அப்போதிலிருந்து ஏழு வருட மகா உபத்திரவக்காலத்திற்குள் முழு உலகமும் பிரவேசிக்கும். இது ஏழு வருடங்களுக்கு அதிகமாயுமில்லாமல் குறைவாகமுமில்லாமல், இந்த மகா உபத்திரவத்தின் காலம் நிச்சயமாய் நிறைவேறும், ஏனெனில் இது கர்த்தரின் திட்டமாயிருக்கிறது.
மகா உபத்திரவ காலம் தொடங்கிவிட்டது என சிறிது நேரம் கருதுவோமாக. நம்மைச் சுற்றிலும் இருக்கிற மரங்களும் புற்களும், இவ்வுலகத்திலிருக்கிற மரங்களும் புற்களும் நெருப்பில் எரிகின்றன. வானம் புகையினால் நிறைந்திருக்கிறது, சூரியன் கரும் மேகத்தினால் மறைக்கப்பட்டு பகல் நேரத்தில் கூட உலகத்தை கருமையில் ஆழ்த்தியது, மக்கள் எல்லா இடங்களிலும் மரிக்கிறார்கள், நம்மை நோக்கி அழைக்கும் மக்களின் குரல்களையும் கேட்கிறோம். யாரை நாம் நம்புவோம்? நம்மை நம் அனைத்துப் பாவங்களிலிருந்து இரட்சித்த, அந்திகிறிஸ்துவுக்கு சரணடையாத நம்மை இரத்தசாட்சிகளாக்கி மீண்டும் வாழ்விப்பதாகக் கூறிய, இவ்வுலகிற்கு திரும்பி நம்மை உயிரோடெழுப்பி எடுத்துக்கொள்வதாக அறிவித்த, நம்மை தனது புதியவானத்திற்கும் புதியபூமிக்கும் எடுத்துச் செல்வதாக கூறிய கர்த்தரை நீ நம்புவாயா அல்லது நீ அவரை நம்பமாட்டாயா? நாம் கர்த்தரைத்தான் நம்புவோம்! கர்த்தர் மட்டுமே நம் நம்பிக்கை! அந்திகிறிஸ்துவை முகஸ்துதி செய்வதோ, நம்மில் நாமே சார்ந்திருப்பதோ நம்மை விடுதலையாக்காது; குகைகளில் ஒளிந்துகொள்வதோ, பூமியிலிருந்து தப்பி விண்கலங்களுக்குச் சென்றுவிடுவதோ - எதுவுமே நம்மை விடுவிக்காது, கர்த்தரால் மட்டுமே அது ஆகும்!
வால் நட்சத்திரம் இந்த கோளினை முட்டும்போது, எல்லா விதமான துகள்களும் பூமியின் மீது விழுந்து, முழு உலகையும் அழிக்கும். கர்த்தர் முதலில் படைத்த அனைத்தும் அழிந்துபோகும். அப்போது உண்மையான நம்பிக்கை நம் இருதயங்களில் ஊற்றெடுக்கும். அத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் யாரின் மீது நம் நம்பிக்கையை வைப்போம்? கர்த்தரிடம் மட்டுமே உதவி கேட்டு அவரை மட்டுமே நோக்கிப் பார்க்க முடியும், கர்த்தரைத் தவிர வேறுயாரும் நம்மை இரட்சிக்கவில்லை!
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வார்த்தையை விசுவாசித்து நாம் இரட்சிக்கப்பட்டதால், இந்த இரட்சிப்பிற்காக கர்த்தருக்கு நன்றி கூறி அவரைப் புகழுகிறோம். ஆனால் மகா உபத்திரவத்தின் காலம் வருகையில், நம்மை மரணத்திலிருந்தும் பயங்கரமான வாதைகளிலிருந்தும் விடுவித்த கர்த்தரை எல்லாவற்றினாலும் புகழ்ந்து நன்றி கூறுவோம். அந்திகிறிஸ்துவின் கைகளிலிருந்து கர்த்தரால் மட்டுமே நம்மை விடுவிக்க முடியும். நாம் கர்த்தரின் மீது விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வைப்பதாகவும், கர்த்தர் நம்மை உயிரோடெழுப்பி ஆயிரவருட அரசாட்சியிலும் புதியவானம் புதியபூமியிலும் நித்திய மகிழ்ச்சியில் வாழ அவர் அனுமதிப்பதாகவும், நாம் விசுவாசித்து அவரை நம்புவதால், வரப்போகிற எல்லா உபத்திரவங்களுக்கும் எதிர் நின்று அவற்றை மேற்கொள்ள முடியும்.
நேரம் வரும்போது, அந்திகிறிஸ்து நம்மை அவன் சிலைக்கு முன் அழைத்துச் சென்று “இந்த சிலையை வணங்கி என்னைக் கர்த்தர் என்றழை. இயேசு கர்த்தரல்ல. நானே கர்த்தர், உன்னை இரட்சிக்கப்போவது நானே” என்று கூறுவான். இப்படியாக அந்திகிறிஸ்து தன்னை வணங்குமாறு கூறும்போது, நாம் பயப்படுவோம், ஆனால் மறுபடியும் பிறந்தவர்களாகிய நம்மில் யாராலும் அவன் உருவத்தை வணங்கமுடியாது. ஏன்? நாம் அந்திகிறிஸ்துவின் குறியீட்டை பெறுமாறு வலியுறுத்தப்பட்டு அதைப் பெறச்செய்த பிறகு அவன் நம்மை தனது அடிமைகளாக்கி, மக்களைக் கொல்ல நம்மை உபயோகப்படுத்தி இறுதியில் நம்மையும் கொல்வான்.
தானே கர்த்தர் என்று அந்திகிறிஸ்து எழுந்து பிரகடனம் செய்யும் நேரம் வரும். அந்திகிறிஸ்து தன்னைப் போன்ற மிகப்பெரிய உருவத்தைச் செய்து, உலகம் முழுவதும் உள்ளவர்கள் தன்னை கர்த்தராக அழைக்கும்படி உத்தரவிட்டு, அவனைப் புகழ்ந்து பாடும்படி, பாடகர் குழுவை அமைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இக்காலத்தில் சமாதானம் உருவாகி இயற்கை சூழல் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருந்தால், புதிய உலகம் திறவுண்டது என ஒருவன் நினைக்கலாம். ஆனால் காடுகள் அழிந்துபோய், சூரியன் மறைந்து பூமி இருண்டுபோய், மக்கள் சாகும் தருவாயில் கூக்குரலிட்டு, குப்பைகளும், அரைவாசி எரிந்து போன சடலங்களும் தெருக்களில் சிதறிக்கிடக்க நாம் யாரும் அந்திகிறிஸ்துவின் கட்டளையான அவன் சிலையை வணங்க வேண்டுமென்பதற்கு கீழ்ப்படியவும் மாட்டோம், அவனைக் கர்த்தர் என்று அழைக்கவும் மாட்டோம். மறுபடியும் பிறந்த எல்லா விசுவாசிகளும் கர்த்தரின் வார்த்தை தீர்க்கதரிசனம் உரைத்த அந்திகிறிஸ்து இவன் தான் என அப்போது அறிந்துகொள்வார்கள்.
பரிசுத்த ஆவியானவரும் நமக்குப் போதனைச் செய்கிறார். சரணடையாத இருதயங்களை அவர் நமக்கு அளிக்கிறார். “உனக்கு வேண்டுமானால் என்னைக் கொல், நான் மரித்தேனானால் தேவன் உன்னைப் பலி வாங்குவார். அவர் என்னை நிச்சயமாக மறுபடியும் உயிரோடெழுப்புவார்” என்று கூறும், துணிச்சலான இருதயங்களை நமக்குத் தருவார். தேவன் எப்படி மூன்று நாட்களில் மரித்தோரிலிருந்து உயிரோடெழும்பினாரோ, அதுபோலவே, நாமும் மீண்டும் உயிரோடெழும்புவோம் என்று விசுவாசிக்கிறோம். தேவன் நம்மைத் தவறாது எடுத்துக்கொள்வார்.
 
 
நீதிமான் அந்திகிறிஸ்துவிடம் எப்போதும் சரணடைவதே இல்லை
 
கர்த்தர் முதல் உலகத்தை அழித்து, அதனிடத்தில் ஆயிரவருட அரசாட்சியைக் கட்டி நீதிமான்கள் அதனை ஆயிரம் வருடங்கள் ஆளச் செய்வார் என்ற வாக்குத்தத்த வார்த்தையைக் கேட்டு, அதனை விசுவாசித்து மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்கள் அந்திகிறிஸ்துவிடம் சரண்டைவதேயில்லை, ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் அவர்களின் இருதயங்களில் வாசஞ்செய்வதால் அவர்களுக்கு எல்லாம் தெரியும். ஆனால் பரிசுத்த ஆவியானவர் இல்லாதவர்கள் தம் உயிரிற்காக கெஞ்சி சாத்தானிடம் சரண்டைவர், முதலில் புதிதான உலகம் போல் தெரியுமிடத்தில் பெரும்பான்மையானோர் போகும் வழியை பின்பற்றாவிட்டால் எங்கே தம் உயிர் போய்விடுமோ என பயப்படுவார்கள். இப்படியாக எல்லோரும் மரணத்திற்கு பயந்து அதற்கு அடிமையாகும்போது, மறுபடியும் பிறந்தவர்கள் மட்டுமே இந்த மரணபயம் இன்றி தம்முடைய இரத்தசாட்சியத்துவத்தை துணிச்சலுடன் தழுவுவர், அவர்களுடைய செய்கை, உதித்தெழும் சூரியனைப்போல் பிரகாசமாயிருக்கும்.
மறுபடியும் பிறந்தவர்களால் அப்படிச் செய்ய முடியும். ஏனெனில் தாம் புதிய சரீரங்களுடன் மீண்டும் உயிரோடெழுப்பப்படுவோம் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது. இதனால் தான் பரிசுத்த ஆவியானவர் தம்மீது வாசஞ்செய்யப்பட்டவர்கள் மரணத்திற்கு பயப்படுவதில்லை, அதற்கு பதிலாக பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரும் துணிச்சலான வார்த்தைகளை அந்திகிறிஸ்துவிடம் பேசி அவனை முடக்கமுடியும். இப்பொழுது அவர்கள் கோழைகளாயிருக்கலாம், ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பரிசுத்த ஆவியானவரால் முத்திரையிடப்பட்டவர்கள், பரிசுத்த ஆவியானவரின் மூலமாகப் பேசுவதற்கு பகைவர்களால் பதிலளிக்க முடியாது. இந்த கர்த்தரின் வார்த்தையை நாம் விசுவாசிக்கிறோம்.
“நீ உன்னை கர்த்தர் என்றழைக்க உனக்கு எத்தனை தைரியம்? நீ பரலோகத்திலிருந்து விரட்டப்பட்டாய், இப்போது பூமியிலிருந்தும் விரட்டப்படுவாய்! உன்னுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன!” என்று பரிசுத்தவான்கள் கூறுவதைக் கேட்டு அந்திகிறிஸ்து அதிர்ச்சி அடைவான். சிலர் மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்து நாடுகளிலிருந்தும் பெருந்திரளானவர்கள் அந்திகிறிஸ்துவிற்கு எதிராக நிற்பர். அந்திகிறிஸ்து அவர்களனைவரையும் கொல்வான். இந்நேரத்தில் அவர்களை மரணத்திற்குள்ளாக்கினாலும் பரிசுத்தவான்கள் அடிபணிவதில்லை. கர்த்தரின் வார்த்தை “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக” என்று நம்மிடம் கூறுவதைப் போல், பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரும் பெரிதான விசுவாசத்தின் நம்பிக்கையின் மூலம் மரிப்போம்.
அப்போஸ்தல நடபடிகள் சாட்சியிடுவதைப்போல், ஸ்தேவானைக் கொல்லும்படி கல்லெறியும்போது, அவன் வானத்தை அண்ணாந்து பார்த்து கர்த்தரின் சிங்காசனக் காட்சியைக் கண்டான், அதில், வலது புறமிருந்த இயேசு அவனை வரவேற்பதற்கு தயாராயிருந்தார். அவன் மரிக்கும்போதும், இயேசு எப்படி தன்னை சிலுவையிலறைந்தவர்களை மன்னிக்கும்படி கேட்டாரோ அப்படியே இவனும் தன் மீது கல்லெறிபவர்களை மன்னிக்கும்படியாக ஜெபித்தான்.
ஸ்தேவானைப் போன்றே இறுதிக்காலத்திலுள்ள இரத்தசாட்சிகளாகும் பரிசுத்தவான்கள், பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவதால், தளர்ந்து போகாமல் துணிச்சலுடன் இருப்பர். இப்போது அவர்கள் கோழைகளாகவும் பலவீனமுடையர்களாகவும் தோன்றினாலும், இப்போது இந்த செய்தியைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் நேரம் வரும்போது, துணிச்சலைத் தரும் விசுவாசமுடையவர்களாயிருப்பர்.
பயப்படாதீர்கள். இங்கு பயப்பட எதுவுமில்லை; ஏனெனில் அந்திகிறிஸ்துவிலிருந்து உபத்திரவம் வரையிலும், வெளி 6 இல் குறிப்பிடப்பட்ட கர்த்தரின் திட்டப்படி அவரின் அனுமதியுடனேயே நடைபெறும்.
இரத்தசாட்சியாகும் துணிச்சல் நம் மாமிசத்தின் பலத்திலிருந்து வருவதில்லை. இரத்தசாட்சியாவது பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலும், சத்தியத்தின் மீதுள்ள நம் விசுவாசத்தினாலும் சாத்தியமாகிறது. வேறுவார்த்தைகளில் கூறுவதானால், கர்த்தரை அவரின் வாக்குத்தத்த வார்த்தையில் விசுவாசித்து, நம் கர்த்தர் மகத்துவமுள்ள கர்த்தர் என்பதையும் விசுவாசிப்பதால், நம்மால் இரத்தசாட்சியாக முடியும்.
கர்த்தரின் திட்டப்படியான ஏழாண்டு காலத்தில் இரத்தசாட்சியாக நாம் மரிப்பதை அவர் அனுமதித்தது அவரின் அருளேயாகும் என்பதை நீங்கள் இப்போது உணர்ந்து கொள்ளவேண்டும். நமக்கான கர்த்தரின் திட்டத்தில் ஒன்றாகிய இரத்தசாட்சியை அறிவினால் எண்ணிப்பார்ப்பதற்கு பதிலாக கர்த்தரின் சித்தப்படி அதனை நம்மிருதயங்களில் விசுவாசிப்போமாக. நாம் இரத்தசாட்சியாக மரிக்க வேண்டிய நேரம் வரும்போது, அதனைச் சந்திக்க தேவைக்கும் அதிகமான பலத்தை கர்த்தர் தருவார் என்ற கர்த்தரின் வார்த்தையை விசுவாசிப்போமாக.
ஒவ்வொரு உலகிலும் முழுமையாக ஆளும் ஒருவர் இருக்கிறார். மறுபடியும் பிறந்தவர்கள் கர்த்தரால் ஆளப் படுகிறார்கள், ஆனால் மறுபடியும் பிறவாதவர்கள் சாத்தானின் ஆவியால் ஆளப்படுகிறார்கள். முடிவு காலம் வரும்போது, மறுபடியும் பிறந்தவர்கள் கர்த்தரால் ஆளப்படுவதால், எல்லா சோதனைகளையும் உபத்திரவங்களையும் சமாளிக்கும் உறுதியை அவரிடமிருந்து பெறுவோம். அதற்கு மாறாக, சாத்தானால் ஆளப் படுகிறவர்கள், அவர்கள் வேண்டும் என்றாலும், வேண்டாம் என்றாலும் அவனைத் தான் பின்பற்ற வேண்டும், ஏனெனில் அவர்கள் சாத்தானின் ஆளுகைக்குட் பட்டவர்களாயிருக்கின்றனர்.
யாருடைய வல்லமை பெரிதானது? கர்த்தர் மற்றும் சாத்தானில் யாருடைய வல்லமை பெரிதானது எனபதைப் பொறுத்து நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களா அல்லது சபிக்கப்பட்டவர்களா என்பது தீர்மானிக்கப்படும். முடிவு காலத்தில் நம்மை இரட்சிக்கப்போவது, யாரை நாம் விசுவாசித்து பின்பற்றுகிறோம் என்பதையும், யாரின் வார்த்தையை நாம் விசுவாசிக்கிறோம் என்பதையும் பொறுத்திருக்கிறது. கர்த்தரையும் அவரின் வார்த்தையையும் விசுவாசித்தவர்கள் பாதுகாக்கப்பட்டு, ஆசீர்வதிக்கப்படுவதோடு அவருடைய மகத்துவமுள்ள வல்லமையினாலும் அதிகாரத்தினாலும் நித்திய வாழ்வும் நமக்குக் கொடுக்கப்படும். ஆனால் சாத்தானின் வார்த்தையைக் கேட்டு அவனிடம் சரணடைந்தவர்கள், அவனுடனே கூட நரகத்தில் வீசப்படுவர், அவர்களை நரகத்திலிருந்து தப்புவிக்கும் வல்லமை அவனிடம் இல்லை. இதனால் தான் வெளி 1-7 வரை கர்த்தர் தன் வார்த்தையை அளித்தார்.
வெளிப்படுத்தின விசேஷத்தின் அதிகாரம் 8 மற்றும் அதற்கு பிறகும் மங்கின நிறமுடைய குதிரையின் காலத்தில் என்ன நடக்குமென விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. முதலாவது ஏழு எக்காளங்களின் வாதைகள் பூமியின் மீது வரும். இந்த ஏழு வாதைகளில் வசனம் 7 இல் காணப்படும் முதலாவது வாதையை நாம் காண்போமாக: “முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப் பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொரு பங்கு வெந்து போயிற்று, பசும் புல்லெல்லாம் எரிந்து போயிற்று.” முதலாம் எக்காளத்தின் வாதையுடன் கற்களும் நெருப்பும் இரத்தத்துடன் சேர்ந்து பூமியில் மழையாகப் பெய்யும். பூமியின் மீது நெருப்பு மழையாகப் பெய்வது இது முதல் முறையல்ல, ஏனெனில் அநேக நேரங்களில் விண்கற்களோ, வால் நட்சத்திரங்களோ ஏற்கெனவே பூமியில் விழுந்திருக்கின்றன.
ஆனால், அவற்றால் முழு உலகிற்கும் பேரழிவை எடுத்துவர முடியவில்லை, ஆனால் மங்கின நிறமுடைய குதிரையின் காலம் வருகையில் முழுமையாக வீசும் உபத்திரவக் காற்று முழு உலகத்தையும் ஆட்டுவிக்கும். இந்த காற்று சூறாவளியாகி இயற்கையை அகற்றிப்போடுகையில், வானத்திலிருந்து பொழியும் அக்கினி மூன்றிலொரு பங்கு காடுகளையும் புற்களையும் எரித்துபோடும், அனைவரும் கொழுந்துவிட்டெரியும் இத்தீயை அணைக்க தீவிரிப்பர்.
முதலாவது வாதையின் போது உலகின் காடுகள் முற்றிலுமாக எரிக்கப்பட்ட பிறகு, எரியும் மலையொன்று கடலில் விழுமென கர்த்தரின் வார்த்தை நமக்குக் கூறுகிறது, -அது அநேகமாக வால்நட்சத்திரமாக இருக்கலாம். இதனைத் தொடர்ந்து மூன்றாம் வாதை விவரிக்கப்பட்டுள்ளது: “மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொரு பங்கின் மேலும், நீருற்றுகளின் மேலும் விழுந்தது.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு வால் நட்சத்திரம் பூமியின் மீது விழும். ஆழமான தாக்கம் என்ற படத்தில் ஒரு வால் நட்சத்திரம் கடலில் விழுந்து பேரலைகளை ஏற்படுத்துவதைப் போல், மூன்றாம் வாதை அதேபோன்ற அழிவை ஏற்படுத்தும். இந்த வாதை இப்படத்தில் காட்டுவதைப் போன்று அத்தனை மோசமாயிருக்காது, ஆனால் பூமியில் இங்குமங்கும் விழும் பெரியகற்கள் பூமிக்கு குறிப்பிட்ட அழிவை எடுத்துவரும். பேரலைகள் கடலிலுள்ள ஜீவன்களின் மூன்றிலொரு பகுதியையும் கப்பல்களின் மூன்றிலொரு பகுதியையும் அழிக்கும்.
இத்தகைய உபத்திரவக் காற்று வீசத்தொடங்கும்போது, மங்கின நிறமுடைய குதிரையின் காலம் சமீபத்திருப்பதை நாம் அறிவோம். எதிர்காலத்தில் உங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளில் வானத்திலிருந்து பெய்த நெருப்பு மழையினால் உலகின் மூன்றிலொரு பாகம் காடுகள் எரிந்துகொண்டிருக்கின்றன என பரபரப்பான செய்திகள் வரும்போது, நிகழவேண்டியவைகள் கடைசியாக வந்துவிட்டன என்பதை அறிந்துகொள்ளுங்கள். சிறுவர்களிலிருந்து வயது சென்றவர்கள் வரை தீயை அணைக்க அரசாங்கம் எல்லோரையும் கூப்பிடும்போது, முடிவின் தொடக்கம் கடைசியாக வந்துவிட்டதை அறிந்துகொள்வீர்கள்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் நமக்கு, இந்த வாதைகளிலிருந்து நம்மை விடுவிக்கும் இரட்சிப்பு மகத்துவமுள்ள கர்த்தரிடமே காணப்படும். அந்திகிறிஸ்து நம்மை கொல்லும்போது, நமது உலகிற்குரிய வல்லமை அவனுடையதைப் போல் இல்லாமையால் இரத்தசாட்சியாக நாம் மரிப்போம். ஆனாலும் மிகப்பெரிய மகிழ்ச்சியுடன் இரத்தசாட்சியாவோம். இந்த பயங்கரமான உபத்திரவத்தின் நடுவே நம்பிக்கையுடன் இரத்தசாட்சியத்துவத்தை தழுவியவர்களாகிய நம்மை மகத்துவமுள்ள கர்த்தர் மீண்டும் உயிரோடெழுப்புவார், அத்துடன் தேவன் நமது மேய்ப்பராகி ஜீவத் தண்ணீர்களண்டையில் நம்மை வழிநடத்துவார்.
கர்த்தரின் ராஜ்யத்தைக் கட்டி, அவர் நம்மை அங்கு எடுத்துச் செல்வதால் இன்னுமொருமுறை அக்கினியினாலும், தாகத்தாலும், சூரியனின் சூட்டிலிருந்தும் துன்புறமாட்டோம். கர்த்தர் நம்முடன் வாழ்ந்திருந்து, நம்மை ஆறுதல்படுத்தி, நம் கண்ணீரைத் துடைத்து நித்தியமாக வாழும்படிச் செய்வதால், இன்னுமொருமுறை துன்புறவேமாட்டோம் என வார்த்தை நம்மிடம் கூறுகிறது.
 
 
வாக்குத்தத்த வார்த்தையின் மீது உறுதியாயிருங்கள்
 
நான் வேதாகமத்தில் சஞ்சரிக்கும்போது, என்னிருதயம் நம்பிக்கையுடன் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுகிறது, கர்த்தரால் மட்டுமே இந்த பயங்கரமான வாதைகளிலிருந்து நம்மை தப்புவிக்கமுடியும் என நான் அறிகிறேன். “தேவனாகிய இயேசுவே வாரும்!” நான் என் தேவனை விசுவாசிக்கிறேன். அவர் என்னை என் பாவங்களிலிருந்து இரட்சித்ததைப் போன்று, இந்த பயங்கரமான உபத்திரவத்திலிருந்தும் என்னை விடுவிப்பார் என விசுவாசிக்கிறேன். என் உடன் பரிசுத்தவான்களையும் அவர் விடுவிப்பார் எனவும் விசுவாசிக்கிறேன். கடைசி நாட்கள் வருவதற்கு முன்பே என்னுடைய இரட்சிப்பு சிங்காசனத்தில் வீற்றிருக்கும் கர்த்தரிடமும் ஆட்டுக்குட்டியானவரிடமும் இருக்கிறது என விசுவாசிக்கிறேன். உங்களுடைய இரட்சிப்பும் கூட, கர்த்தரிடம் காணப்படுகிறது எனவும் விசுவாசிக்கிறேன்.
மகா உபத்திரவ காலம் வருவதால் உலகம் சீக்கிரமாகவே வாதைகளினாலும் அழிவுகளினாலும் நிரம்பும். இந்த உலகம் எத்தனை கடினமானதாக மாறினாலும் அக்காலத்தின் வாதைகளிலிருந்து உபத்திரவங்களிலிருந்தும், நம் பகைவர்கள் எடுத்துவரும் துன்புறுத்தல்களிலிருந்தும் கர்த்தர் நம்மை விடுவிப்பார் என நான் விசுவாசிக்கிறேன், ஏனெனில் கர்த்தர் நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்து, தம் பிள்ளைகளாகும்படி நமக்கு உரிமையை வழங்கி, நம்மைத் தனது பிள்ளைகளுமாக்கினார்.
மறுபடியும் பிறக்காதவர்களின் நிலை நம்மை விட மிகவும் பரிதாபகரமானதாயிருக்கும். எல்லாமே எரிந்து குழப்பம் மிகுந்திருக்கையில் முழு விசுவாசத்தையும் வைக்க கர்த்தர் ஒருவர் இல்லாதிருப்பது எத்தனை கடினமானது? சில மக்கள் தம் மதங்களை இறுகப் பிடித்துக் கொண்டிருப்பர், அது புத்த மதாமாயிருந்தாலும் சரி, இஸ்லாமாக இருந்தாலும் சரி, அவர்கள் அதனில் எந்த நம்பிக்கையும் பெறமாட்டார்கள். தவிப்பும், பரிதவிப்பும் மட்டுமே அவர்களுக்காக காத்திருக்கும். இத்தகைய பரிதவிப்பில் தம் முடிவை அடையும் அநேக மக்கள் இருப்பர். இம்மக்களைப் போன்று நாமும் கூட இதே குழப்பங்களுக்குள்ளும் கஷ்டங்களுக்குள்ளும் செல்வோம். ஆனால் நமது இருதயங்கள் அவர்களுடையதிலிருந்து வேறுபட்டவை. நம் விசுவாசங்களை இப்போது ஆயத்தம் செய்யும் நாம் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள், ஏனெனில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக கர்த்தர் நம்மை பாவமற்றவர்களாக்கினார்.
யோவான் 1:12 நம்மிடம் கூறுகிறது, “அவருடைய நாமத்தின் மேல் விசுவாசம் உள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.” வேறுவார்த்தைகளில் கூறுவதானால், கர்த்தர் நம்மை முத்திரையிட்டார். அவர் நம்மை “நீங்கள் என்னுடைய பிள்ளைகள்” என்று கூறி அவரின் பிள்ளைகளாகும் உரிமையை நமக்கு வழங்கினார். இந்த பெரிய மகிமையான உரிமையை அவர் நமக்கு வழங்கினார். நாம் கர்த்தரின் பிள்ளைகள். நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்திருக்கும்போது, நம்மிருதயங்களில் ஏதேனும் பாவங்கள் உள்ளனவா? இல்லை! எல்லாவற்றிலும் கர்த்தரின் பிள்ளைகளாகவில்லையா? நாம் ஆனோம்! கர்த்தரின் பிள்ளைகள் வேதவசனங்களில் அறிவு பெறாதவர்களாயும், குறைபாடுகளையுடையவர்களுமாக இருந்தால், கர்த்தர் அவர்களின் தந்தையாக அவர்களை காக்கமாட்டாரா? அவர் காப்பார்! அறிவில் குறைவுடைய பிள்ளைகளை பெற்றோர்கள் மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்வதைப் போல், பலவீனமுள்ளவர்களுக்கு அதிக வல்லமையையும் பாதுகாப்பையும் அவர் அளிக்கிறார்.
அந்திகிறிஸ்துவின் நேரம் வந்து குழப்பங்கள் கட்டுக்கடங்காமல் போகும்போது, பரிசுத்த ஆவியானவரின் மூலம் கர்த்தர் தம் பிள்ளைகளை பலப்படுத்தி, விசுவாசத்தையும் நம்பிக்கையையும் துணிச்சலையும் அளிப்பார். அவர் நமக்கு தைரியமளிப்பதால் நாம் பயப்படோம். நம்மிருதயங்களில் பயமுண்டாகுமோ என்ற பயத்தை தவிர வேறெதற்கும் பயப்படோம். மக்கள் தம்மைச் சுற்றி எது நடந்தாலும் அதிலிருந்து தப்பி அதனைத் தவிர்க்கலாம். ஆனால் அவர்கள் எப்படித் திரும்பினாலும் தம் இருதயங்களிலுள்ள பயத்தை உதறி விடமுடியாது. படுக்கையறைகளிலோ, வீட்டினடியிலோ, பதுங்கு குழிகளிலோ அவர்கள் இருந்தாலும், அவர்கள் இருதயங்களை கவ்வியிருக்கும் பயத்திலிருந்து ஔட முடியாது.
அதற்கு மாறாக பரிசுத்தவான்களின் இருதயங்களில், பயமில்லாமல் துணிச்சல் மட்டுமே இருக்கிறது, ஆகவே, “எது நிகழவேண்டுமே கடைசியில் அது வந்துவிட்டது. தேவன் திரும்பி வரும் நேரம் வந்தது! அவர் நம்மை சீக்கிரமாக எடுத்துக்கொள்வார்!” என்று தமக்குத்தாமே கூறி தைரியத்துடன் இரத்தசாட்சிகளாவதை அவர்கள் சந்திப்பர். இது இன்றுபோல் சாதாரண நாளாயிராமல் -உலகின் மூன்றிலொரு பங்கு எரிந்துகொண்டிருக்கும்போது, எடுத்துக்கொள்ளப்படுவது நிகழும். ஆனால் உபத்திரவம் இன்னும் மோசமாவதற்கு முன் பரிசுத்தவான்களைக் கர்த்தர் ஆகாயத்திற்கு எடுத்துக்கொள்வார்.
கர்த்தர் உனக்காக ஏழு காலங்களை ஆயத்தப்படுத்தினார் என்பதை இப்போது நீ விசுவாசிக்கிறாயா? அவர் அப்படிச் செய்தார் என்று வெளி 6 நம்மிடம் கூறுகிறது. அவர் அப்படிச் செய்தபோது, எழுதியிருக்கும்படியே பரிசுத்தவான்கள் அனைத்தையும் தாங்கும்படிச் செய்வார். தம் பாவங்களை நிவர்த்தி செய்பவர்கள் பெரிதும் ஆசீர்வதிக்கப் பட்டவர்களாயிருப்பர், ஆனால் நற்செய்தியை ஏற்றுக்கொள்ள வெட்கப்பட்டு அதனை விசுவாசிக்காதவர்கள், துரதிருஷ்டசாலிகளாக நரகத்தில் முடிவடைவர். கொடிய வாதைகள் எதிர்காலத்தில் வருமென்று கர்த்தர் நம்மிடம் கூறுகிறார், இவ்வாதைகள் முடிவடையும்போது, மறுபடியும் பிறவாதவர்கள், அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் தள்ளப்படுவார்கள். இதனால் தான் அமைதியான உலகை கர்த்தர் நமக்குக் கொடுத்துள்ளார், அதானால்தான் இத்தகைய அமைதியான காலத்தில் தம் நற்செய்தியை நமக்கு வழங்கினார்.
கர்த்தர் மனித சரீரத்துடன் 2000 வருடங்களுக்கு முன் இவ்வுலகிற்கு வந்தார். நமக்காக, நம் எல்லாப் பாவங்களையும் தன் மீது சுமக்கும்பொருட்டு ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் மரித்து உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை விடுவித்தார். அவர் நமது இரட்சகராக நம்மை இரட்சித்தார். அவர் தம்முடைய ஆசீர்வாதத்தால் நம்மை மூடினார், இது கர்த்தரையும் அவரின் இரட்சிப்பையும் நாம் விசுவாசித்து, இரட்சிக்கப்பட அனுமதித்தது. இது கர்த்தரின் கிருபையாகும். இந்த நற்செய்தி நம்மை நம் பாவங்களிலிருந்தும் கர்த்தரின் நியாயத்தீர்ப்பிலிருந்தும் விடுவித்தது. இதுவே கர்த்தரின் ஒரே பேறான குமாரனை நம்மிடம் அனுப்பி நம் பாவங்களை அவர் மீது சுமத்தி நம்மிடத்திலிருந்து தம் சொந்த குமாரனையே நியாயத்தீர்ப்படையச் செய்தது. இதனை இப்போது விசுவாசிப்பதால், கர்த்தரின் கிருபையால் தரிப்பிக்கப் பட்டவர்களாய் அவரிடமிருந்து நித்திய ஜீவனைப் பெறுகிறோம். இதனை நாம் விசுவாசிப்பதால், நாம் கர்த்தரின் பிள்ளைகளானோம், நாம் இப்போது கர்த்தரின் பிள்ளைகளானதால், கடைசி நாட்களின் உபத்திரவம் மிகவும் அதிகமாகும்போது அவர் நம்மை மேலே அழைத்து பாதுகாப்பார்.
இந்நேரத்தில் கர்த்தரின் பிள்ளைகளையும் சாத்தானின் பிள்ளைகளையும் தெளிவாகப் பிரித்தறியலாம். அவர்களுடைய தவறுகள் வெளியே தெளிவாகத் தெரியும். பின்னால் இதைக் குறித்து மிகவும் விபரமாக எழுதுவேன். இப்போது நீங்கள் நினைவு கூறவேண்டியது என்னவெனில், மகா உபத்திரவம் நமக்கு வந்து இரத்தசாட்சிகளாய் நாம் மரிக்கும்போது, கர்த்தருக்கு முன்பாக உயிர்த்தெழுந்து எடுத்துக்கொள்ளப்படுவோம். இதனை யாரும் விசுவாசிக்கிறார்களா இல்லையா என்பது பொருட்டல்ல; இது நடந்தே தீரும், ஏனெனில் கர்த்தர் காற்றை வீசச்செய்வேன் என்று கூறினார், ஆகவே, அதினதின் காலத்தில் அவைகள் நடந்தேறும்.
வசனம் 1 நம்மிடம் கூறுகிறது, “இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று பூமியின்மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.” கர்த்தர் இந்த காற்றுகளைப் பிடித்து வைத்திருப்பதால் அது இப்போது வீசாது. வேறுவார்த்தைகளில் கூறுவதானால், கர்த்தர் அனுமதிக்கும்போது, இந்த காற்றுகள் பூமியின் நான்கு பாகங்களிலிருந்தும் வீசும். கர்த்தரால் அனுமதிக்கப்படும் போது தேவ தூதர்கள் இக்காற்றுகளை விடுவித்து, மங்கின நிறமுடைய குதிரையின் காலத்தை வேகமாக்குவர். இப்படியாக மகா உபத்திரவத்தின் காற்று வீசத் தொடங்கும்போது, இயற்கை அழிவுகளையும் போரையும் பூமியெங்கும் இது எடுத்துவரும். ஒவ்வொருவரும் முழு பேரழிவின் நடுவில் இருப்பர். ஆனால் இதுவரை தேவன் காற்றுகளைப் பிடித்து வைத்துள்ளார்.
உலகிலுள்ள நாடுகள் ஆயுதங்கள் தயாரிப்பதில் அதிக பணத்தைச் செலவிடுகின்றன. பெரிய வல்லரசுகள் தம் தேசிய வருவாயிலிருந்து 30 சதவீதம் வரை இராணுவ செலவுகளுக்காக பணம் செலவழிக்கவேண்டிய நிலைமை உருவாகும். இப்போதும் கூட மிகப்பெரும் அளவில் செல்வமானது, இராணுவம் மிகப்பெரிய பயங்கரமான ஆயுதங்களை வடிவமைப்பதில் செலவிடப்படுகிறது, அதாவது, பேரழிவு ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. எப்போதெல்லாம் பொருளாதாரம் நன்றாகிறதோ அப்போது மீதியிருக்கும் பணம் இராணுவ செலவுகளுக்காக ஒதுக்கப்படுகிறது.
உதாரணமாக அமெரிக்க நாடு, ஏவுகணைகளை முறியடிக்கும் “நட்சத்திர போர்திட்டம்” என்ற திட்டத்தினை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டம் முழுவதுமாக செயல்படுத்தப்படும்போது, போரானது பூமியில் மட்டும் நடைபெறாமல், வானிலும் நடக்கும், விண்வெளியில் இருக்கும் விண்கலங்கள் ஏவுகணைகளை வெளியிலிருந்தே சுட்டுத் தள்ளும். அப்போது வானில் நடக்கும் போர் முற்றிலும் வேறு பொருளுடையதாயிருக்கும். இப்போதிருக்கும் கேள்வி, யார் முதலில் விண்வெளியில் செயல்படும் ஆயுதங்களைத் தயாரிப்பர் என்பதும் விண்வெளியை இராணுவ நடவடிக்கைகளுக்காக யார் முதலில் உபயோகப்படுத்துவர் என்பதுமாகும்.
இத்தகைய நிகழ்வுகளை பார்க்கும்போது, கர்த்தர் அனுமதிக்கும்போதும் பயங்கரமான வாதைகள் பூமியின் மீது வருமென்பதையும், தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களையும் பெற்றவன் சீக்கிரமாகத் தோன்றுவான் என்பதை நாம் உணரலாம்.
ஆயினும், கர்த்தர் அனுமதிக்கும்போதே இவையெல்லாம் நடந்தேறும். உலகம் எத்தனை கடினமானதாய் மாறினாலும், கர்த்தர் நம் மேய்ப்பராகி, ஜீவ தண்ணீர் ஊறும். ஊற்றண்டைகளில் நம்மை வழிநடத்தி, நம் கண்ணீரை எல்லாம் துடைப்பார் என விசுவாசிக்கிறோம். இதனால் தான் இரட்சிக்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்களாயுள்ளனர்.
இயேசுவை நீங்கள் விசுவாசிக்கும்போது நீங்கள் விரும்புவதைப் போன்று அவரை விசுவாசிக்க முடியாது. கர்த்தரின் வார்த்தையை விசுவாசிப்போரின் நம்பிக்கையே உண்மையான நம்பிக்கையாகும்.
வெளி 7:14 நம்மிடம் கூறுகிறது, “அதற்கு நான் ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்; இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.” இங்கு “தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்” எனக் கூறப்படுவதின் பொருள் அவர்கள் தேவனை விசுவாசிப்பதால் இரத்தசாட்சியாக்கப்படுவர் என்பதாகும். இந்த வசனத்திற்கு விளக்கம் கூறுகையில் கவனமாக இருக்கவேண்டும். சிலுவையின் இரத்ததை மட்டுமே விசுவாசித்து இரட்சிக்கபடுவதாக இது கூறவில்லை.
இதற்கு மாறாக தம்மிருதயங்களில் பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வதைப் பெறாதவர்கள் கர்த்தரின் பிள்ளைகள் அல்ல என்பதை நீங்கள் அறியவேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காதவர்கள், நற்செய்தியை விசுவாசிப்பதேயில்லை. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களால் மட்டுமே இரத்தசாட்சியத்துவத்தைத் தழுவ முடிவதுடன், உபத்திரவத்தையும் மேற்கொண்டு தேவனுக்கு பெரிதான மகிமையை இப்படியாக அளிக்க முடியும்.
நாம் கர்த்தரை விசுவாசிப்பதால், பெரிய கஷ்டங்களும் பாடுகளும் வரும்போது நம் விசுவாசத்தை விளக்காமலும், சாத்தானுக்கு அடிபணியாமலுமிருந்து, கர்த்தரிடமிருந்து பெற்ற பலத்தினால் இரத்தசாட்சிகளாவோம். அப்போது நாம் தேவனால் உயிரோடெழுப்பப்பட்டு அவரால் பாதுகாக்கப்படுவோம். ஆட்டுக்குட்டியானவர் நம் மேய்ப்பராகி நம் கண்களிலிருந்து கண்ணிரையெல்லாம் துடைப்பார். நாம் பசியுடனோ, தாகத்துடனோ, சூட்டாலோ அல்லது வேறெதுவாலுமோ துன்பப்படுவதில்லை. ஏன்? நாம் ஏற்கெனவே மகா உபத்திரவத்திற்குள் சென்றிருப்பதால் கர்த்தர் துன்பங்களை நித்தியமாக எடுத்துப்போட்டதே அதன் காரணம். கர்த்தரின் ஆச்சர்யமான இவ்வுலகமே பரலோகமாகும். அது அத்தகைய ஆச்சர்யமான இடமாய் இருப்பதால் மக்கள் அதனை பரதீசு என்றும் பரலோகம் என்றும் அழைக்கின்றனர், அது நல்லவைகள் அனைத்தும் குவிந்திருக்கும் இடமாகும்.
பரதீசு எல்லையில்லா மகிழ்ச்சியினை உடைய இடமாகும். புத்தமதத்தைப் பொறுத்தவரை பரதீசானது தெய்வங்கள் ஆனவர்களுக்கு, அதாவது புத்தருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் யாராலும் புத்தராக முடியுமா, அல்லது யாராலும் தெய்வமாக முடியுமா? அப்படியாக முடியாது! சித்தார்த்தன் சாகும்படுக்கையில் கூறினான் “தெய்வமாக மாறு; தெய்வமாக மாறுவதன் மூலமே உன்னால் உலகின் பயங்கரங்களிலிருந்து தப்பிக்க முடியும்.” ஆனால் பாவத்திலிருந்து தப்பவோ அதன் கொடிய பயங்கரங்களை அவனாலோ/அவளாலோ மேற்கொள்ளவே முடியாது. சித்தார்த்தனே தப்பிக்க முடியாதவனானான். அதுபோலவே, எல்லோரும் தப்பிக்க முடியாதவர்களாயினர். வார்த்தை நமக்கு கூறுவதைப் போல் “அவராலேயன்றி வேரொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேரொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்” (அப்போஸ்தலர் 4:12). நமது இரட்சிப்பு கர்த்தரால் மட்டுமே கொடுக்கப்படுகிறது, இயேசுகிறிஸ்து பிரபஞ்சத்தையும் நம்மையும் படைத்தார். இயேசுகிறிஸ்துவே இரட்சகர் என்றும் அவரே நம்மை கொடிய வாதைகளிலிருந்து விடுவிப்பவர் என்றும் உள்ள இந்த உண்மையையே, பரிசுத்த ஆவியானவர் மூலமாக கர்த்தர் நமக்குப் போதிக்கிறார்.
பரலோகமே மிகவும் அதிசயமான இடமாகும். நீங்கள் மரியாதையுடனும் மகிமையுடனும் மகிழ்ச்சியாக வாழவேண்டுமா? நீங்கள் விலையேறப் பட்டவர்களாக அங்கீகரிக்கப்பட்டு நித்திய மகிழ்ச்சியுடன் வாழ விரும்புகிறீர்களா? நீங்கள் நிறைவாகவும், ஆசீர்வதிக்கப்பட்டும், எந்தக் குறையுமில்லாமலும் வாழ விரும்புகிறீர்களா? கர்த்தர் நம்மை அழைத்துச் செல்லுமிடம் அத்தகைய இடமாகும். அது பரலோகமாகும். இதில் எந்த குறைவுமில்லை, எதுவும் குறைந்து போவதை காணவே முடியாது. நீங்கள் நோய்வாய்ப்படவே மாட்டீர்கள், சூட்டினால் தீங்கு நேராது, அல்லது நீங்கள் கண்ணீர் விடுவதுமில்லை.
இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது, தன்னுடனே கூட சிலுவையில் அறையுண்ட திருடனிடம் கூறினார், “நீ என்னுடனேகூட பரதீசிலிருப்பாய்” பரதீசு என்பது மகிழ்ச்சியின் தோட்டமென பொருள்படும். அவ்விடத்தில் எல்லாவிதமான மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அனுபவிக்கலாம். இப்பூமியில் நம்மை மகிழ்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் உள்ளாக்கும் அனைத்தும் இவ்விடத்தில் இருக்கும், இவ்விடத்தில் கர்த்தர் நம்மை வாழும்படி அழைக்கிறார். இதனை விசுவாசித்து, இந்த பரலோகத்தை, பரதீசை, கர்த்தரின் ராஜ்யத்தை உங்களுடையதாக ஆக்கிக்கொள்ளுங்கள். கர்த்தரின் ராஜ்யம் சிறந்ததும் நிறைவானதுமாகும், பூமியிலிருந்த ராஜ்யங்களின் குறைகளை அங்கு காணவே முடியாது.
கர்த்தர் மகத்துவமுள்ளவரானதால், இந்த ராஜ்யத்தை நமக்கு அருளுவார். நம் தேவன் மகத்துவமுள்ள கர்த்தராயிருப்பதால், அவர் தம் மக்களை விடுவித்து, அவர்களை ஒருபோதும் கண்ணீர் விடாதிருக்குமாறும், எதனாலும் துன்பப் படாமலிருக்குமாறும் செய்வார். ஜீவத்தண்ணீர் ஊறும் ஊற்றுகளுக்கு நம்மை வழிநடத்துவார். நித்திய வாழ்வு, நித்திய மகிழ்ச்சி, நித்திய ஆனந்தம், ஆகியவற்றிற்கு நடுவே வாழும்படி நம்மை வழிநடத்துவார். அவருடைய வல்லமை மகத்துவமுள்ளதால், இவையெல்லாம் சாத்தியமே என நான் விசுவாசிக்கிறேன்.
நம்மை இரட்சித்த கர்த்தர் வல்லமையற்றவராய் இருந்தால், நாமும் கூட வல்லமை அற்றவர்களாயிருப்போம். ஆனால் நம்மை விடுவித்த கர்த்தரிடம் முழுமையான மகத்துவமுள்ள வல்லமையிருக்கிறது. அவர் தம்முடைய முழு வல்லமையினால் நம்மை பாவமற்றவர்களாக்கினார். அதனால் நாம் அவரின் பரிசுத்தவான்கள் என அழைக்கப்படுகிறோம்.
இந்த பூமியில் எத்தகைய வாழ்வு நம்முடையது என்பது பொருட்டல்ல. நாம் கர்த்தரின் பிள்ளைகளாயிருப்பதாலும், ராஜாதிராஜாவின் வல்லமை நம்மிடமிருப்பதாலும், மறுபடியும் பிறந்தவர்களைவிட நம் வாழ்வு மோசமாக இருந்தாலும் மங்கின நிறமுடைய குதிரையின் காலம் வந்து நம் தேவன் திரும்பி வருகையில், அவர் நம்மை மேலே எடுத்துச் சென்று அவரின் பரதீசில் நம்மை வாழச்செய்வார். நாம் எக்குறையும் இல்லாதவர்களாயும் முழு வல்லமையுள்ளவர்களாயும் ஆளுவோம், இங்கு தேவதூதர்கள் நமது ஊழியர்களாயிருப்பர். பரிசுத்தவான்கள் எல்லா ஆசீர்வாதங்களுடனும் மகிமையுடனும் நித்தியமாக வாழ்வர்.
பரிசுத்தவான்கள் மறுபடியும் மரிப்பதே இல்லை. இதனைத் தான் எல்லா மதங்களும் கனவு காண்கின்றன -நித்தியமாக வாழுதல், அரசாளுதல், பரலோகத்திற்குள் பிரவேசித்தல். இந்த ஆசீர்வாதம் எனக்கு மட்டுமில்லை, ஆனால் கர்த்தர் அதனை உங்களுக்கும் கூட சமமாக நல்கினார்.
சமயம் வருகையில் கர்த்தர் உபத்திரவங்களின் காற்றை வீசச் செய்வார் என்றும், இந்த உபத்திரவங்களின் காற்று வீசும்போது, சாத்தானிற்கு எதிராக எழுந்து நிற்க போதுமான பலத்தை நமக்களிப்பார் என்றும், இறுதியாக நம்மை எடுத்துக்கொள்வார் எனவும், நான் விசுவாசிக்கிறேன்.
இவற்றையெல்லாம் கர்த்தர் நமக்கு வாக்குத்தத்தம் பண்ணவில்லையா? அவர் அப்படிச் செய்தார்! அவர் நம்மிடம் கூறினார். “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்திருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்தில் நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” ( யோவான் 14:1-3). நம் தேவன் நம்மிடம் இதைத்தான் வாக்குத்தத்தம் செய்தார். வெளி 20-22 வரையிலுள்ள கர்த்தரின் எல்லா வார்த்தையும் நமக்கான அவரின் வாக்குத்தத்த வார்த்தையே.
அல்லேலூயா! நான் கர்த்தருக்கு எல்லா நன்றிகளையும் கூறுகிறேன்.