(வெளி 8:1-13)
“அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று. பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங் கண்டேன், அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது. வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது அதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று. பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின. அப்பொழுது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள். முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று. இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது. அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று. சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று. மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீருற்றுகளின்மேலும் விழுந்தது. அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள். நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று. பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்துவரக்கண்டேன்; அவன் மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்.”
விளக்கவுரை
கர்த்தர் பூமிக்கு அனுப்பப்போகும் வாதைகளைக் குறித்து வெளி 8 கூறுகிறது. இந்த வாதைகளினால் மற்றவர்களுடன் சேர்ந்து பரிசுத்தவான்களும் துன்புறுவார்களா என்பதே மிகவும் அவசியமான கேள்வியாகும். ஏழு எக்காளங்களின் வாதைகளினு¡டே பா¢சுத்தவான்களும் செல்வர் என வேதாகமம் கூறுகிறது. ஏழு வாதைகளில், கடைசி வாதையைத் தவிர மீதி எல்லாவாதைகளினு¡டும் அவர்கள் செல்வர். இந்த அதிகாரத்தில் காணப்படும் ஏழு எக்காளங்களின் வாதைகள் கர்த்தர் இப்பூமிக்கு அனுப்பப்போகும் வாதைகளாகும். தேவது¡தர்கள் ஏழு எக்காளங்களை ஊதும் போது தொடங்கும் வாதைகளினால் இவ்வுலகைத் தண்டிக்கப் போவதாக கர்த்தர் நமக்கு கூறுகிறார்.
வசனம் 1: அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று.
மனிதர்களின் மீது கர்த்தா¢ன் கோபத்தை ஊற்றுவதற்கு முன்புள்ள அமைதியை இவ்வசனம் குறிப்பிடுகிறது. கர்த்தர் இப்பூமிக்கு தம் பயங்கரமான வாதைகளை அனுப்பும் முன் சிறிது காலம் மிகவும் அமைதியாயிருப்பார். அவா¢ன் ஏழு எக்காளங்களின் வாதைகள் எத்தனை கொடியதாகவும் பயங்கரமானதாகவும் இருக்குமென இது நமக்குக் காட்டுகிறது. இந்த வாதைகளுக்குப் பின் மனிதர்கள் கர்த்தருக்கு முன்னால் நிற்பர், அப்போது இரட்சிக்கப்பட்டவர்கள் நித்திய வாழ்வைப் பெறுவர். இரட்சிக்கப்படாதவர்களோ நித்திய ஆக்கினையைப் பெறுவர். ஆகவே இக்காலம் எத்தகையது என்பதை உணர்ந்து, ஊழியர்களின் வேலையை செய்ய எழுவோமாக.
வசனம் 2: பின்பு, தேவனுக்கு முன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங் கண்டேன், அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.
கர்த்தர் தம்முடைய செயல்களைச் செய்ய ஏழு தேவது¡தர்களை பயன்படுத்தினார். இன்றைய காலத்தில், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வார்த்தையை விசுவாசிக்கும் நீதிமான்களின் மூலம் கர்த்தர் செயல்படுகிறார் என்பதை மறவாதிருப்போமாக.
வசனம் 3: வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
சாத்தான் மற்றும் ஆவியைப் பின்பற்றுவோரின் துன்பப்படுத்துதல்களின் நடுவிலும் உபத்திரவங்களுக்கு நடுவிலும் பா¢சுத்தவான்கள் செய்த ஜெபத்தைக் கேட்ட கர்த்தர் பூமிக்கு வாதையை அனுப்புவதை இது காட்டுகிறது. “பொன் து¡பம்” என்று இங்கு குறிப்பிடப்படுவது எல்லாப் பா¢சுத்தவான்களினதும் ஜெபத்தைக் குறிக்கிறது. இதன் பொருள், அவர்களின் ஜெபங்கள் கர்த்தா¢டம் ஒப்படைக்கப்படும் போது அவா¢ன் செய்கைகள் நிறைவேறும். பா¢சுத்தவான்களின் ஜெபத்தைக் கேட்டு கர்த்தர் செயல்படுகிறார்.
வசனம் 4: அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது அதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று.
அந்திகிறிஸ்து பா¢சுத்தவான்களை இப்பூமியில் எத்தனையாய் கொடுமைப்படுத்தினான் என்பதை இது காட்டுகிறது. முடிவு காலத்தின் உபத்திரவங்களினால், அந்திகிறிஸ்துவை விரட்டும்படியும், உபத்திரவ காலம் சீக்கிரமாக கடந்துச் செல்லும் படியும், கர்த்தா¢ன் கோபம் எத்தனை பயங்கரமானது என தம் கொலையாளிகளுக்கு காட்டும்படியும் அவர்கள் ஜெபிக்கிறார்கள். இப்படியாக பா¢சுத்தவான்களின் ஜெபத்தைக் கர்த்தர் பெற்றுக் கொள்கிறார் என்பதை இவ்வசனம் காட்டுகிறது. பா¢சுத்தவான்களின் ஜெபங்களைப் பெற்றுக் கொண்ட பிறகு, அந்திகிறிஸ்துவையும் அவனைப் பினபற்றுவோரையும் கர்த்தர் தம் ஏழு எக்காளங்களினதும், ஏழு பாத்திரங்களினதும் வாதைகளினால் நியாயந்தீர்க்கத் தொடங்குவார். அந்திகிறிஸ்துவையும் அவனைப் பின்பற்றுவோரையும் கர்த்தர் நியாயந்தீர்ப்பதே பா¢சுத்தவான்களுக்கான அவா¢ன் இறுதி தீர்ப்பாகும்.
வசனம் 5-6: பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின. அப்பொழுது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.
ஏழு எக்காளங்களின் வாதைகளை இப்பூமிக்காக கர்த்தர் ஏற்பாடு செய்கிறார். ஆகவே சத்தங்களிலிருந்தும், இடி முழக்கங்களிலிருந்தும், மின்னல்களிலிருந்தும், பூமியதிர்ச்சிகளிலிருந்தும் இவ்வுலகம் தப்பாது.
வசனம் 7: முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.
பூமியின் மூன்றிலொரு பாகத்தை எரிப்பது முதலாவது வாதையாகும். இவ்வாதையின் போது மூன்றிலொரு பங்கு மரங்களும், எல்லா புற்களும் எரிந்து போகும். இவ்வுலகின் காடுகளின் மேல் இவ்வாதை வரும்.
இத்தகைய வாதையை கர்த்தர் ஏன் அனுப்ப வேண்டும்? கர்த்தா¢ன் படைப்பின் அழகை மக்கள் தம் கண்களால் கண்டிருந்த போதிலும், தம்மை படைத்தவரைக் கர்த்தராக ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு பதிலாக படைத்தவருக்கும் பதிலாக படைக்கப்பட்டவைகளை ஆராதித்து ஊழியம் செய்தனர் (ரோமர் 1:25). கர்த்தருக்கு மகிமையை அளிப்பதற்கு பதிலாக அவருக்கு எதிராக எழுந்து நிற்பவர்களின் மீது கர்த்தர் ஏழு எக்காளங்களின் வாதைகளை அனுப்புகிறார்.
வசனம் 8-9: இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிறபெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது. அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று. சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.
இரண்டாம் எக்காளத்தின் வாதையானது ஒரு எரிநட்சத்திரம் பூமியின் மீது விழுவதாகும். இந்த விண் கல்லானது கடலின் மேல் விழுந்து அதன் மூன்றிலொரு பங்கை இரத்தமாக்குவதுடன், கடலில் வாழுபவைகளின் மூன்றிலொரு பாகத்தைக் கொன்று, கப்பல்களின் மூன்றிலொரு பாகத்தையும் அழிக்கும். கர்த்தர் படைத்த இயற்கையின் மூலம், மனிதர்கள் அநேக ஆசீர்வாதங்களைப் பெற்றனர். இயற்கையின் ஆசீர்வாதங்களுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துவதற்கு பதிலாக, அவர்கள் மூர்க்கராகி கர்த்தருக்கு எதிரானவர்களாயினர். இரண்டாம் வாதை இந்தப் பாவத்திற்கான தண்டனையாகும்.
வசனம் 10: மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீருற்றுகளின்மேலும் விழுந்தது.
ஆறுகளின் மூன்றிலொரு பாகத்தின் மீதும் நீருற்றுகளின் மீதும் இந்த விண்கல் விழுவதை கர்த்தர் ஏன் அனுமதித்தார்? உயிர்களின் ஆதாரமாகிய தேவனால் மனிதர்கள் வாழ்ந்தாலும், அவர்கள் அவரை ஆராதித்து நன்றி கூறவில்லை. மாறாக உயிர்களின் ஆதாரமாகிய இந்த தேவனை மறந்து போனார்கள்.
வசனம் 11: அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.
இந்த வாதையினால், மூன்றிலொரு பங்கு ஆறுகளும் ஊற்றுகளும் கசப்பாகிப் போகும். இதன் நீரைக் குடித்தவர்கள் இறந்து போவார்கள். கர்த்தா¢னதும், பா¢சுத்தவான்களினதும் இதயங்களை நொறுக்கிய பாவிகளுக்கான தண்டனை இவ்வாதையாகும். நீதிமான்களுக்கு எதிராக பாவிகள் செய்த செயல்களுக்காக பலி வாங்குவதில் கர்த்தர் தவறமாட்டார். பாவிகள் நீதிமான்களைத் துன்புறுத்தும் போது, கர்த்தர் அவர்களை நியாயந்தீர்ப்பார். மூன்றாம் வாதையும் இயற்கையை அழிப்பதாயிருக்கும். கர்த்தர் அளித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காத மக்களின் கீழ்ப்படியாமையின் பாவத்திற்காக இது அனுப்பப்பட்டது. வேதாகமம் கசப்பு எனக் கூறுவது கர்த்தருக்கு கீழ்ப்படியாமல் அவரை எதிர்ப்போருக்கான நியாயத்தீர்ப்பு என பொருள் படும்.
வசனம் 12: நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று.
சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களின் மூன்றிலொரு பகுதியை கருமையாக்குவது நான்காவது வாதையாகும். எல்லாக் காலத்திலும் மனிதர்கள் சாத்தானைப் பின்பற்றி இருளை நேசித்தனர். ஆகவே இயேசு கிறிஸ்து வழங்கிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி அளித்த இரட்சிப்பு எனும் ஒளியை அவர்கள் விரும்பவில்லை. இருண்டு போன சபிக்கப்பட்ட உலகம் எத்தனை பயங்கரமானதாயிருக்கும் என அவர்களுக்கு கற்பிக்க, இந்த இருளின் வாதையைக் கர்த்தர் அனுப்புகிறார். இயேசு கிறிஸ்துவை வெறுத்து இருளை நேசிக்கும் பாவத்தினால் கர்த்தா¢ன் கோபம் எத்தனை பயங்கரமானது எனக் காட்டுவதற்கும் இந்த வாதை அனுப்பப்படுகிறது. இதன் பலனாக சூரியன், சந்திரன் மற்றும் உடுக்களின் மூன்றிலொரு பாகம் ஒளியினை இழந்து இருண்டு போகும்.
வசனம் 13: பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்து வரக்கண்டேன்; அவன் மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்.
இவ்வுலகில் வசிப்போருக்கு இன்னமும் மூன்று பயங்கரங்கள் காத்திருக்கின்றன என இந்த வசனம் நமக்குக் கூறுகிறது. ஆகவே எத்தனைச் சீக்கிரமாக முடியுமோ அத்தனைச் சீக்கிரமாக, பாவிகளும், கர்த்தரை எதிர்த்து நிற்போரும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம் பாவங்களிலிருந்து விடுதலையாக வேண்டும்.