(வெளி 8:1-13)
இயேசு திறந்த ஏழு முத்திரைகளையுடைய ஒரு புத்தகம் வெளி 5ல் வருகிறது. கர்த்தரின் வல்லமையும் அதிகாரமும் இயேசுவிற்கு கொடுக்கப்பட்டது என இது பொருள்படும். அப்போதிலிருந்து அவர் கர்த்தரின் திட்டப்படி பூமியைக் கொண்டுச் செல்வார் எனவும் இது பொருள்படும். வெளி 8 இவ்வசனங்களுடன் தொடங்குகிறது “அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று. பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங் கண்டேன், அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.” இயேசு இப்படியாக அப்புத்தகத்தின் ஏழாவது முத்திரையைத் திறந்து வரப் போகிறவைகளைக் காட்டுகிறார்.
பரிசுத்தவான்களின் ஜெபங்களுடன் ஏழு எக்காளங்களின் வாதைகள் தொடங்குமென நமக்குக் கூறுவதுடன் அதிகாரம் 8 தொடங்குகிறது. வசனம் 6 முதல் அதிகாரம் 8 வரை இவ்வுலகின் மீது வரப்போகும் ஏழு எக்காளங்களின் வாதைகளைக் குறித்து கூறுகிறது.
முதலாம் எக்காளத்தின் வாதைகள்
முதலாம் எக்காளம் - வசனம் 7: “முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.”
ஏழு எக்காளங்களின் வாதைகள் இப்பூமியின் மீது வரும் போது பரிசுத்தவான்களாகிய நாம் இந்த வாதைகளில் சிக்கிக் கொள்வோமா இல்லயா என்பதே நாம் முதலில் கண்டுபிடிக்க வேண்டியது.
ஏழு எக்காளங்களை ஊதும் ஏழு தேவது¡தர்களை இங்கே காணலாம். இந்த ஏழு வாதைகளில், முதல் ஆறு வாதைகளின் போதும் நாம் இந்த பூமியிலிருப்போம் என்பதை நாம் நினைவு கூற வேண்டும். ஏழாவது எக்காளம் ஊதப்படுகையில், நாம் எடுத்துக் கொள்ளப்படுவோம் என்பதையும், இவற்றை ஏழு பாத்திரங்களின் வாதைகள் தொடரும் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
முதலாம் து¡தன் எக்காளம் ஊதுகையில், கல்லும் அக்கினியும் இரத்தத்துடன் கலந்து பூமியின் மீது பொழிந்தது எனவும் இது பூமியின் மூன்றிலொரு பாகத்தையும் மரங்களின் மூன்றிலொரு பாகத்தையும் எரித்துப் போட்டது எனவும், வசனம் 7 நம்மிடம் கூறுகிறது. வேறு வார்த்தையில் கூறினால், பூமி மற்றும் இயற்கை ஆகியவற்றின் மூன்றிலொரு பாகம் எரிந்து போயிற்று.
இயற்கை இப்படி எரிந்து போய்விட்ட நிலையில், நம்மால் வாழ முடியுமா. கல்லும் அக்கினியும் இரத்தத்துடன் கலந்து நம்மீது பொழியும் போது, மரங்கள் சாம்பலாகிய நிலையில், இத்தகைய எரிந்து போன இயற்கைச் சூழலில் நம்மால் வாழ முடியுமா? கல்லும் அக்கினியும் இரத்தத்துடன் கலந்து பெய்யும் மழைக்கு நம்முடைய குடும்பங்களை இழந்த நிலையிலும், அடர்த்தியான காடுகளும் மலைகளும் எரிந்து போன நிலையை நாம் சந்திக்கும் போது, நம்மில் யாருக்கும் தொடர்ந்து வாழும் ஆசை இருக்காது, நாம் விரும்பினாலும் நம்மால் வாழ முடியாது.
இந்த முதல் வாதையினு¡டே நீங்களும் நானும் செல்ல வேண்டியிருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம். நாம் இந்த பெரிய வாதையின் நாளின் சூரிய உதயத்தின் போது அதனுள் செல்லும் போது அந்திகிறிஸ்து ஏற்கனவே இவ்வுலகத்திலிருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
அந்திகிறிஸ்து இப்பூமியைத் தனது ஆளுகைக்கு உட்படுத்து முன் இத்தகைய வாதைகள் தொடங்கிவிடுவதால், உலகத் தலைவர்கள் இவ்வாதைகளுடன் போராட ஒன்று சேருவர், இவர்களின் ஒரு தலைவர் பெரியதொரு சக்தியை உருவாக்கும் விதமாக ஏழு மற்றத் தலைவர்களை ஒன்றுச் சேர்ப்பான்.
இப்படி நடக்கும் போது சர்வ அதிகாரமும் பெற்றவனாக அந்திகிறிஸ்து தோன்றுவான். அந்திகிறிஸ்து இயற்கையின் பேரழிவை தன் திறமையினால் சமாளித்து அதிலிருந்து மீட்டு வருவதைக் காணும் அநேகர், அவனின் வல்லமையினால் திருப்தியுற்று, அவனைப் பின்பற்றத் தொடங்குவர். அவனை தெய்வமாக எண்ணுவர், அவன் ஆதரவாளர்கள் நிச்சயமாய் தோன்றுவார்கள்.
முதலாவது து¡தன் தன் எக்காளத்தை ஊதுகையில் ஏழு எக்காளங்களின் முதல் வாதையை அது எடுத்து வருமெனவும், அது பூமியின் மூன்றிலொரு பாகத்தை எரித்துப்போடுமெனவும் வேதாகமம் நமக்குக் கூறுகிறது. இந்த வாதை பூமியின் மீது வரும் போது, பரிசுத்தவான்களாகிய நாமும் உலகின் மக்களும் இப்பூமியில் வாழ்வோம். அப்படியானால் உலகிற்கு என்ன நடக்கும்? குழப்பம் தலைவிரித்தாடும், உடைமானங்களும், சடலங்களும், காயமுற்றோரும் சிதறிக் கிடப்பர். உலகைச் சூழும் அக்கினிக் கடல் உருவாக்கும் புகையினாலும் நச்சு வாயுக்களாலும் காற்று மண்டலம் மூடப்பட்டிருக்கும், நெருப்பு உலகைப் பாலைவனமாக்கி விடுவதால், ஆக்சிஜன் மீண்டும் உருவாக்கப்படுவது குறைந்து போய், காற்றில் ஆக்சிஜன் அருகிப் போகும். இந்த முதலாவது வாதையே எல்லாவற்றையும் சாம்பலாக்கிப் போடும், நாம் வாழும் ஆசையை அகற்றும் அளவிற்கு அது பேரழிவை உண்டாக்கும்.
இந்த வாதையிலிருந்து, நாமொரு ஞானமான தேர்வைச்செய்ய வேண்டும். அமைதியான இவ்வுலகில் வாழும் நாம் பெரிய வாதைகளினாலும் மகா உபத்திரவங்களினாலும் பயந்தவர்களாவோம். ஆனால் இந்த பயத்திலிருந்து விடுதலைப் பெற்று துணிச்சலுடையவர்களாய் நம்மால் இருக்க முடியும். உலகின் இயற்கை மூன்றிலொரு பாகம் எரிந்து கொண்டும், மக்கள் அழுதுக் கொண்டும் இருக்கும் போது, இத்தகைய வாதைகள் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன என நாமறிந்துள்ளதாலும், இன்னமும் அநேக வாதைகள் வருகின்றன என அறிந்திருப்பதாலும், நாம் துணிவுடன் இருக்கலாம். நம்மிடம் நம்பிக்கை இருப்பதால், நாம் அதனால் நிரப்பப்பட்டவர்களாயிருக்கலாம். ஆனால் நாமும் மாம்சத்தினால் உருவானவர்களாயிருப்பதால், சில நேரங்களில் பயம் நம்மை ஆட்கொள்ளும். ஆனால் நமக்கு இவ்வுலகின் எதிர்காலம் தெரியுமாகையால், நம் நம்பிக்கையை இப்பூமியின் மீது வைக்காமல், கர்த்தரின் ராஜ்யத்தை நாம் நம்புவோம். இத்தகைய விசுவாசத்துடனும், பரிசுத்த ஆவியானவரை வாசஞ்செய்யப் பெற்றிருப்பதாலும் நாம் துணிச்சலுடனும், தைரியத்துடனும் இருக்கலாம்.
உலக மக்களின் அழுகுரல் இன்னமும் அதிகமாகும். பாவ மன்னிப்பு பெறாத நம் குடும்பத்தினர் இதே வாதையில் சிக்கிக் கொண்டதையிட்டு, நாமும் கூட அழலாம். தம் பாவங்களிருந்து விடுதலையாகாதவரும் மாம்ச சம்பந்தப்பட்ட நம் குடும்பத்தினர் கூட உணவிற்காக, நம்மை அந்திகிறிஸ்துவிற்கு காட்டிக் கொடுப்பர். மறுபுறம், வேறு சிலர், பாவமன்னிப்பு பெறுவது எப்படி என கேட்டு நம்மிடம் வருவர். அவர்களுடைய இரட்சிப்பு இன்னமும் சாத்தியமானதாக இருப்பதால், இப்படி நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏழு எக்காளங்களின் வாதைகள் வரும் போது, மூன்றிலொரு பங்கு உலகத்தினர் இறந்து போவர் என வேதாகம் கூறுகிறது. மூன்றின் இரண்டு பங்கு உலகத்தினர் உயிருடனிருப்பர் எனவும் இது கூறுகிறது. மூன்றிலொரு பங்கு உலக மக்கள் எரிந்து போகும் போது, நாம் இரத்த சாட்சியாக மரிக்கப்போகும் காலமும், நம் தேவனின் வருகையும் அதிக தொலைவில் இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். கல்லும் அக்கினியும் இரத்தத்துடன் கலந்த மழையை வானத்திலிருந்து ஊற்றப் போவதாக கர்த்தர் கூறினார்.
கர்த்தர் நம் மீது கல் மழையையும், நெருப்பு மழையையும் அனுப்பும் போது, அவற்றைத் தவிர்க்க முடியாதவர்களாயிருப்போம். அறிவியல் எத்தனையாய் வளர்ந்தாலும், பொழிந்து கொண்டிருக்கும் கல் மழையையும் நெருப்பு மழையையும் தடுக்கும் விதமாக பாதுகாப்பு அரணை காற்று மண்டலத்தில் அமைக்க முடியாது. நம்மால் அப்படிப்பட்ட கருவிகளைத் தயாரிக்க முடிந்தாலும், கர்த்தரிடமிருந்து வரும் வாதைக்கு முன்னால் அதற்கு எந்த பலனும் இல்லாமலிருக்கும். இந்த வாதைகள் உண்மையாகவே நம் மீது வருமென்று நம்மிருதயங்களில் ஏற்றுக் கொண்டு கர்த்தரின் வாக்குத்தந்த வசனங்களை நம்மிருதயங்களில் நம்பி வாழ வேண்டும்.
ஒரு மனிதனின் தலை அளவு, 45 செ.மீ. சுற்றளவு கொண்ட பனிக் கட்டிகள் அண்மையில் சீனாவில் விழுந்ததாக செய்திகள் அறிவித்தன. கீழே விழும் போது அதிக அளவு ஆற்றலைப் பெற்றவையாய் இந்த மனித தலையளவு உள்ள பனிக் கட்டிகள், மிகப் பெரிய ஆற்றலுடன் அவற்றின் வழியிலுள்ள அனைத்தையும் நொறுக்கியவாறு, வீட்டுக் கூரைகளை உடைத்து கீழே விழுந்தன. முதலாம் வாதையில் விழப் போகிறவைகள் இன்னும் அதிக ஆற்றலும் விழும். சீனாவின் இந்த பனி மழையை விட அழிவு மிக்கதாய் இருக்கப் போகும் வாதையானது உலகின் மூன்றிலொரு பங்கை எரித்து போடும் விதமாக வரும் என்பதை நம்மிருதயங்களில் விசுவாசிக்க வேண்டும். இந்த உண்மையை நம்மிருதயங்களில் வைத்திருக்க வேண்டும். இந்த வாதை வரும் போது இந்த விசுவாசத்துடன் நாம் செயல்பட வேண்டும். இந்த உலகம் சீக்கிரமாக அழிந்து போகும் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். இந்த வாதையை சந்திக்கும் தைரியமிக்கவர்களால் நாம் இந்த விசுவாசத்துடனிருந்து, இரத்த சாட்சியாக மரிப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். ஏழு எக்காளங்களும் ஊதப்படும் போது ஏழு வாதைகளும் இப்பூமியின் மீது வரும். இது இவ்வாதைகளின் முதலாவது வாதையாகும்.
கர்த்தர் அனுப்பிய இரண்டாம் எக்காளத்தின் வாதை
இரண்டாம் எக்காளம் - வசனம் 8-9: “இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிறபெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது. அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று. சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.”
இரண்டாம் வாதையின் போதும் பரிசுத்தவான்கள் வாழ்ந்திருப்பர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெரிய மலை போன்ற ஒன்று கடலில் வீசப்பட்டது எனவும், இது கடலின் மூன்றிலொரு பங்கை இரத்தமாக்கி அதில் வாழும் உயிரினங்களின் மூன்றிலொரு பங்கினை அழித்துக் போட்டதாகவும் இங்கு எழுதப்பட்டுள்ளது. இறுதி காலம் வரும் போது, பிரபஞ்சத்தின் ஒழுங்கு சீர்குலையும், நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி, அவைத் துண்டுதுண்டாக மாறும். இதிலிருந்து உருவாகும் கற்கள் பூமியை நோக்கி வரும். இந்த விண்கற்கள் பூமியின் காற்று மண்டலத்திற்குள் நுழைந்து, தம்முடைய கொடிய ஆற்றலுடன் கடலில் விழுந்து, அதின் மூன்றிலொரு பாகத்தை இரத்தமாக்கி, அதில் வாழும் உயிரினங்களில் மூன்றிலொரு பாகத்தைக் கொன்று, அதிலிருக்கும் கப்பல்களின் மூன்றிலொரு பாகத்தையும் அழித்துப் போடும். இவ்வாதையானது ஏழு எக்காளங்களின் வாதைகளின் இரண்டாவது வாதையாகும்.
இது நடைபெறும் போது கடலிலிருந்து மீன்பிடித்து உண்ண முடியுமா அல்லது அதில் நீந்தத்தான் முடியுமா? இவை இரண்டுமே சாத்தியமாகாது. பெரிய மலைப் போன்ற வின்கல் கடலில் விழும் போது, கடலின் மூன்றிலொரு பாகம் இரத்தமாகி, அதில் வாழும் மூன்றிலொரு உயிரினங்கள் இறந்து போய், அவற்றின் சடலங்களினால் கடல் நீர் அழுகிக் போகும், இதனுடன் உருவாகும் பேரலைகளும் பூமியதிர்ச்சிகளும் கப்பல்களை மட்டும் அழிப்பதாயிராமல் அநேக மக்களையும் அழிக்கும்.
ஒரு விண்கல் கடலில் விழுந்து பூமி முழுவதையும் மூடும்படியான ஒரு பேரலை உருவாவதை திரைப்படம் ஒன்றில் பார்த்திருக்கிறேன். இந்தத் திரைபடத்தை எடுத்தவர்கள் இறுதிகாலத்தின் இந்த வாதைகளைத் தம்மனதில் கொண்டிருக்க வேண்டுமென நான் எண்ணுகிறேன். பூமியை மிகப் பெரிய பேரழிவுகள் அழிக்கும் என்ற உண்மையை அவிசுவாசிகளும் இலகுவில் அறிவர். விண்கற்களின் வாதையினால் கணக்கிலடங்காத மக்கள் இறந்து போவர். ஆனால் பூமியின் மூன்றிலொரு பாகம் மட்டுமே அழிந்து போனதால், நீங்களும் நானும் ஏழு பாத்திரங்களின் வாதைகள் ஊற்றப்படும் வரை இப்பூமியில் வாழ்ந்திருப்போம்.
மகா உபத்திரவத்திற்கு பின்பு எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழுமென முன்காலத்தில் மக்கள் நம்பினர், ஆனால் உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக் கொள்ளப்படும் தத்துவம் தோன்றிய பிறகு அநேக இறையியலாளர்கள் உபத்திரவத்திற்கு பிந்திய எடுத்துக் கொள்ளப்படும் தத்துவத்தை விசுவாசிக்கத் தொடங்கினர். இன்னமும் மோசமானதாக ஆயிரம் வருட அரசாட்சி இல்லை எனக் கூறும் தத்துவமும் தோன்றியுள்ளது. வெளிப்படுத்தின விசேஷத்தின் முழுவார்த்தைகளையும் சமாளிக்க முடியாத இறையியலாளர்கள் இப்போது அதன் வார்த்தைகளிலிருந்து ஓடத் தொடங்கினர். வரப் போகிறவாதைகளினால் இவ்வுலகின் மீதுள்ள நம்பிக்கைகளை இழந்து போனவர்களுக்கும், தேவன் வாக்குத்தத்தம் செய்த ஆயிர வருட அரசாட்சி புதிய வானம் புதிய பூமி ஆகியவை மீது தம் நம்பிக்கைகளை வைத்திருக்கும் பரிசுத்தவான்களுக்கும் மிகப் பெரிய வித்தியாசமிருக்கும்.
இறுதிகாலம் நெருங்கும் போது நம்முடைய விசுவாசத்தை நாம் ஆயத்தம் செய்ய வேண்டும், ஆனால் அப்படிச் செய்வதற்கு பதிலாக, அநேக மக்கள் உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக் கொள்ளப்படுதலையும் ஆயிரம் வருட அரசாட்சி இல்லை என்பதையும் பற்றி பேசுவதற்கும், உண்மை நிலையை சந்திப்பதைத் தவிர்க்கவும் முயற்சி செய்கின்றனர். அன்றாடச் சம்பவத்தைப் போல், இயேசு கிறிஸ்து ஆகாயத்தின் மீது வருவார் என்றும், தம் வாழ்க்கை எப்பிரச்சனையின்றியும் இருக்குமெனவும், எவ்வாதைகளையும் சந்திக்காமல் நேரடியாக கர்த்தரின் ராஜ்யத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவோம் என்றும் விசுவாசிப்பதால், மகா உபத்திரவத்திற்கு தம் விசுவாசத்தை ஆயத்தம் செய்வதே இல்லை.
முதலில் பார்க்கும் போது மகா உபத்திரவத்திற்கு ஆயத்தம் செய்யாமல், இளைப்பாறிக் கொண்டிருப்பவர்கள் வெகு துணிச்சலுடன் இருப்பதைப் போல் தோன்றலாம். மறுபடியும் பிறவாத பாவிகள் மகா உபத்திரவத்தின் முன் மிகவும் துணிச்சலுடன் இருப்பதைப் போல் தெரிவதற்கான காரணம், அவர்கள் கள்ளத் தீர்க்கதரிசிகளின் பொய்களைக் குடித்து, இறந்து போய்விட்டதால், அவர்களிடம் ஆவிக்குரிய விருப்புகள் எதுவுமில்லை. இக் காரணத்தினாலேயே, அவர்களின் ஆத்துமாக்கள் ஏற்கனவே இறந்து போய்விட்டதால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை கேட்காமலும், அதனைத் தள்ளி விடுவதுமாயிருக்கிறார்கள். இந்நற்செய்தி அவர்கள் நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறந்து கர்த்தரின் ராஜ்யத்திற்குச் செல்வதை ஏதுவாக்கும் (யோவான் 3:5).
ஆனால் மறுபடியும் பிறந்தவர்கள், இப்போது எத்தனை வசதிகளுடன் வாழ்ந்தாலும், இறுதிகாலத்தின் உபத்திரவங்களுக்கு தம் விசுவாசத்தை ஆயத்தம் செய்ய வேண்டும். கர்த்தரிடம் விசுவாசம் உள்ளவர்களாயிருப்பவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்க ஆயத்தமுடையவர்களாய் அவர்கள் இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால், உபத்திரவ காலத்தின் போது எத்தனை ஆத்துமாக்களை இரட்சிக்க முடியுமோ அத்தனை ஆத்துமாக்களை அவர்களால் இரட்சிக்க முடியும்.
மகா உபத்திரவக் காலம் சீக்கிரமாகவே வரப்போகிறது என்பதை அலட்சியம் செய்வதே மிகவும் முட்டாள்தனமானதாகும். கொரிய யுத்தத்தின் போது நடந்ததைப் போன்றே, அப்படிச் செய்பவர்கள் வாதைகளுக்கு முன் உதவியற்றவர்களாயிருப்பர். கொரிய யுத்தம் தொடங்குவதற்கு முன் வடகொரிய இராணுவம் தென்கெரியாவின் எல்லைகளில் குவிக்கப்படுவதாகவும், எந்நேரத்திலும் அது தாக்கப்படலாமெனவும் அமெரிக்கா எச்சரித்தது, ஆனால் தென்கொரிய அரசாங்கமும் இராணுவமும் இதனை முற்றிலும் அலட்சியம் செய்தன. அவர்கள் தம் இராணுவத்தினரை விடுமுறையில் அனுப்பிவிட்டு, படையெடுப்பின்போது இராணுவ அதிகாரிகள் தம் வார விடுமுறையை அனுபவிக்குமாறும் அனுமதித்தனர்.
வடகொரியாவின் படையெடுப்பைக் குறித்து அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் யுத்தத்திற்கு ஆயத்தம் செய்யாமலிருந்ததால், அவர்களால் வடகொரியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாது போயிற்று. சிறிது நேரத்திலேயே, தென்முனை வரை அவர்கள் ஆக்கிரமித்தனர். தென்கொரியா தனது இராணுவத்தினரை மீண்டும் அழைத்து, யுத்தத்திற்கு அவர்களை ஆயத்தம் செய்யும் முன், அதன் எல்லைகள் ஏற்கனவே ஊடுருவப்பட்டது. ஆகவே மிகப் பெரிய அழிவுகளுடன் பின் வாங்குதலைத் தவிர அவர்களால் வேறெதும் செய்ய முடியவில்லை.
இறுதி காலத்தைக் குறித்து கர்த்தர் பேசிய வார்த்தையை நாம் விசுவாசிக்கவில்லை எனில் நமது நிலையும் இப்படி பரிதாபமானதாயிருக்கும். நாம் உண்மையாக இதனை விசுவாசித்தால் இத்தகைய நிலையிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும். நமக்கு பாதுகாப்பளிக்கும் ஒரு இடத்தைக் குறித்து வெளிப்படுத்தின விசேஷம் கூறுகிறது. ஆனால் அதன் இருப்பிடத்தை அது தெரிவிக்கவில்லை. ஆயினும், பரிசுத்தவான்கள் தங்கியிருப்பதற்கு ஒரு கூறையும் பாதுகாப்பும் இருக்குமென அது கூறுகிறது. இந்த பாதுகாப்பான இடம் ஆலயத்தைத் தான் குறிப்பிடுகிறது. இவ்வுலகில் தங்கியிருக்க இவ்வுலகில் நாமொரு இடத்தை எங்கு காணுவோம்? இஸ்ரவேலிற்கு ஓடிப் போய் விட்டால் தம்மால் தப்பிக்க முடியுமென சில மக்கள் கூறுகின்றனர். ஆனால் இஸ்ரவேலர்களோ இன்னும் அதிக உபத்திரவங்களை அனுபவிப்பர். அந்திகிறிஸ்து இஸ்ரவேலில் தங்கியிருந்து ஆளுகைப் புரிவதால் அங்கு வாதைகள் இன்னமும் அதிகமாயிருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது, உடனேயே உபத்திரவத்தைக் குறித்த வார்த்தை நிகழாது என்றாலும் கூட, அதனை உங்களிருதயங்களில் அறிந்து எதிர்காலத்திற்காக உங்களை ஆயத்தம் செய்ய வேண்டும். இருதயப்பூர்வமாக இதனை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். இந்த விசுவாசத்துடன், நீங்கள் மகா உபத்திரவக் காலத்தில் வாழ்வதைப் போலெண்ணி மக்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை மக்களுக்குப் பிரசங்கித்து அவர்களின் இருதயங்களை ஆயத்தப்படுத்தி, பாதுகாப்பான இடத்திற்கு அவர்களை வழிநடத்த வேண்டும். கர்த்தர் நம்மைத் தனது ஆலயத்தில் வைத்தார். ஆகவே நாம் இத்தகைய வரப்போகிற காரியங்களைக் குறித்து மக்களுக்கு பிரசங்கித்து முடிவு காலத்திற்கான அவர்களின் நம்பிக்கையை ஆயத்தப்படுத்த அவர்களுக்கு உதவ வேண்டும்.
இதற்காகத் தான் நாம் இவற்றைச் செய்து கொண்டிருக்கிறோம். அதாவது, நம் முழு பலத்துடனும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறோம். பெருமைப் பாராட்ட வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்து நாம் பிரசங்கிக்காமல், இக்காலத்தின் விசுவாசிகளுக்கும், அவிசுவாசிகளுக்கும் தேவைப்படும் வார்த்தையாக அது இருப்பதால் அதனைப் பிரசங்கிக்கிறோம். இப்போதிருந்தே இந்த விசுவாசத்தை ஆயத்தம் செய்தால் தான், உபத்திரவங்களும் வாதைகளும் நம்மீது வரும் பொழுது நம்மிருதயங்கள் அசைக்க முடியாத¨யாயிருக்கும்.
கர்த்தர் தமது சிறப்பான பாதுகாவலை நமக்கு அளிப்பார். ஆனால் நாம் பயங்கரமான, கடுமையான, கொடிய உலகில் வாழ்வதால், இறுதி காலத்தில் என்ன நிகழும் என நாமறிந்து இந்த உபத்திரவங்களை மேற்கொள்ள நம் விசுவாசத்தை ஆயத்தம் செய்தால், நற்செய்தியை இன்னும் அதிகமாக பரப்பலாம். கர்த்தரின் ராஜ்யத்தை இன்னமும் அதிகமாய் நம்புவதால், இவ்வுலகின் ஓட்டத்தோடு நாம் அடித்துச் செல்லப்பட மாட்டோம் அல்லது நம் நம்பிக்கையை விற்கவும் மாட்டோம். ஆனால் இன்னமும் அதிகமான விசுவாச செயல்களில் ஈடுபடுவோம். இதனால் தான் நாம் வெளிப்படுத்தலின் வார்த்தையைப் பிரசங்கித்து, அநேக விசுவாச பணிகளைச் செய்து வருகிறோம்.
மூன்றாம் எக்காளத்தின் வாதை
மூன்றாவது எக்காளம் - வசனம் 10-11: “மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீருற்றுகளின்மேலும் விழுந்தது. அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாயிற்று;” இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.
இந்த மூன்றாம் வாதைகளினு¡டே பரிசுத்தவான்களும் வாழ்ந்திருப்பர். இரண்டாம் எக்காளத்தின் வாதை கடலின் மேல் வந்தது. ஆனால் இந்த மூன்றாம் எக்காளத்தின் வாதை இப்போது ஆறுகளின் மீதும் நீரூற்றுகளின் மீதும் வரும். வானத்திலிருந்து விழும் பெரிய நட்சத்திரம் என இங்கு குறிப்பிடப்படுவது வால் நட்சத்திரமாகும். இந்த வால் நட்சத்திரத்தால் தாக்குதலுக்குள்ளான ஆறுகளும் நீரூற்றுகளும் கசப்பாகும். அவற்றின் நீர் கசந்து போகும். பழைய காலத்தில் எட்டி மரத்தை மக்கள் வெட்டி, மருந்தாக அதனைச் சாப்பிடுவது உண்டு. அதன் கசப்பை எண்ணிப் பார்க்கவே முடியாது. இந்த கசப்பு எல்லா நீர் நிலைகளின் மீதும் பரவுவதால், அதனைக் குடித்த அநேக மக்கள் இறந்து போவார்களென வேதாகம் நமக்குக் கூறுகிறது.
உலக நீரின் மூன்றிலொரு பாகம் இந்த எட்டிக் கசப்பாய் மாறிப் போவதால் அநேக மக்கள் இதனால் மரிப்பர். ஆனால் இந்த வாதைகளினு¡டே கர்த்தர் அவர்களைப் பாதுகாப்பார். நீரினால் உருவாகும் நோய்களே அநேக மக்கள் மரித்துப் போவதற்கான காரணமாயிருக்கும். வால் நட்சத்திரம் நீரில் விழுந்ததால் அதன் உயிர் வேதிப் பொருட்களின் தன்மை மாறிப் போயிருப்பது இதன் காரணமாயிருக்கலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் நீர் கசப்பானதால் மக்கள் மரித்துப் போக மாட்டார்கள். வேறெதுவோ அதன் காரணமாயிருக்கும். இவையெல்லாம் உண்மையானவைகள் என்பதை அறிந்து அவற்றை விசுவாசிக்கிறோம். இவை தவறாது எதிர்காலத்தில் நிகழும்.
நான்காம் எக்காளத்தின் வாதை
நான்காம் எக்காளம் - வசனம் 12: “நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற் போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று.”
இந்த நான்காம் வாதைகளினு¡டும் பரிசுத்தவான்கள் வாழ்ந்திருப்பர் என்பதை மறக்க வேண்டாம்.
ஒரு நாளின் மூன்றிலொரு பாகம் வெளிச்சமுடையதாயிருக்காது என்பது, சராசரியான ஏழிலிருந்து எட்டு மணிநேரங்களிலிருந்து பகலானது நான்கு மணி நேரமாக குறைந்து போகும் என்பதாகும். சந்திரனும் நட்சத்திரங்களும் கூட ஒளி மங்கிப் போவதால், முழு உலகமும் இருண்டு போகும். வேறு வார்த்தைகளில் கூறினால், நன்கு பிரகாசமாக இருக்க வேண்டிய பகல்வேளை திடீரென இருண்டு போகும். எடுத்துக் கொள்ளப்படுதல் என்ற திரைப்படம் உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக் கொள்ளப்படும் தத்துவத்தை பின்பற்றுகிறது. முழு உலகமும், பகல் பொழுதிலேயே இருண்டு போவதையும், எல்லோரும் அலறி பயந்து போவதையும் இங்கு காணலாம். நீங்கள் அங்கிருப்பதாக எண்ணவும். அது பகல் 11 மணியாயிருக்கலாம். ஆனாலும் திடீரென சூரியன் மறைந்து போய், அங்கு எந்த வெளிச்சமும் இல்லாது போய் விடுகிறது. நீங்கள் கூட மரணத்தின் து¡துவன் உங்கள் முன் தோன்றியதைப் போல் எண்ணி பயத்தினால் நடுங்குவீர்கள்.
இத்தகைய அழிவுமிக்க காலத்தினு¡டே நாம் வாழவேண்டுமென்பது நமக்குத் தெரியும். ஆனால் நீங்கள் பயப்பட வேண்டாம். கர்த்தர் நம்மைப் பாதுகாத்து இன்னமும் அதிகமாய் நம்மை ஆசீர்வதிப்பார். இப்போது உங்கள் விசுவாசம் இன்னமும் உறுதியாக இருப்பதினால் உங்கள் ஜெபங்களுக்கு கர்த்தர் பதிலளிப்பதோடு, நீங்கள் ஜெபிக்கும் நொடிப் பொழுதிலேயே உங்களுக்காக அவர் பணியாற்றுவார். உலகின் முடிவு பரியந்தமும் நான் உங்களுடன் கூட இருப்பேன் என கர்த்தர் வாக்குத்தத்தம் செய்த படியால், இறுதி காலத்தின் மகா உபத்திரவத்தின் போது அவர் நம்மைத் தனியே விடமாட்டார். சிறிதளவு சந்தேகமுமின்றி, அவர் எப்போதும் நம்முடனே இருக்கிறார். இப்படியாக கர்த்தர் எப்பொழுதும் நம்முடனே இருப்பதால், அவர் நம்மை பாதுகாத்து, வாழ்ந்திருக்கச் செய்வார் என்பதை நாம் விசுவாகிக்க வேண்டும். இந்த விசுவாசத்தை மற்றவர்களுக்கு பரப்பி அவர்களின் விசுவாசத்தையும் ஆயத்தம் செய்ய வேண்டும்.
இன்னமும் மூன்று வாதைகள் காத்திருக்கின்றன
வசனம் 13 கூறுகிறது, “பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்துவரக்கண்டேன்; அவன் மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்.”
ஐயோ என மூன்று முறை தேவது¡தன் கூறுகையில், இன்னமும் மூன்று வாதைகள் பூமிக்கு அனுப்பப்படும். வேறு வார்த்தைகளில் கூறவதானால், ஏழு எக்காளங்களின் வாதைகளில் இன்னமும் மூன்று வாதைகள் காத்திருக்கின்றன. ஏழாம் எக்காளம் ஊதப்படுகையில் நாம் எடுத்துக் கொள்ளப்படுவது நிகழும் என்பதை நாமறிந்து கொள்ள வேண்டும். முதல் ஆறு எக்காளங்களின் வாதைகள் முடிவுற்று, ஏழாம் து¡தன் தன் எக்காளத்தை ஊதுகையில், பரிசுத்தவான்கள் உடனடியாக உயிரோடெழுந்து எடுத்துக் கொள்ளப்படுவர். அனைத்து பரிசுத்தவான்களும் எடுத்துக் கொள்ளப்பட்டு மேகங்கள் மேல் தேவனை அவர்கள் சந்திக்கும் போது ஏழு பாத்திரங்களின் வாதைகள் இப்பூமியின் மீது ஊற்றப்படும்.
ஏழு எக்காளங்களினதும் ஏழு பாத்திரங்களினதும் வாதைகளின் தொடக்கத்தினு¡டே இப்பூமியானது வெகு சீக்கிரமாகச் செல்லும் என்பதையும், அதற்கு பிறகு கர்த்தரின் சித்தப்படி ஏழாம் எக்காளத்தின் வாதை ஊற்றப்படும் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவற்றை நம் முழு இருதயங்களுடனும் விசுவாசிக்க வேண்டும். நம்முடைய விசுவாசத்தை வளர்ப்பதன் மூலம் இந்த வாதைகளினு¡டே நாம் தொடர்ந்து செல்லும் உறுதிமிக்க விசுவாசமாய் இது மாறும். இறுதி காலத்தைக் குறித்த தெளிவான அறிவு இல்லாமல் மக்கள் விசுவாசித்தால், உபத்திரவகாலம் வருகையில் அவர்கள் அதிர்ச்சியடைவர்.
முடிவில் நாம் வெற்றி பெற வேண்டுமானால், நம்முடைய விசுவாசத்துடன் கடைசி காலத்தைக் குறித்த தெளிவான அறிவும், நம்மிடம் இருக்க வேண்டும். இன்று முடிவு நமக்கு மிக அருகில் நெருங்கியிருக்கும் இந்நேரத்தில், நாம் ஆலயத்தை அலட்சியம் செய்வதோ அதிலிருந்து அதிகத் தொலைவிலிருப்பதோ கூடாது. நம்முடைய இருதயங்களெல்லாம் ஆலயத்துடன் ஐக்கியமாக இருக்க வேண்டும். எதுவானாலும் ஆலயங்கள் மூலமாக நமக்குப் போதிக்கப்படும் கர்த்தரின் வார்த்தைகளை நாம் விசுவாசிப்பதுடன், நம்பிக்கையுடன் ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு வாழ வேண்டும்.
வாதைகள் வரும்போது, உங்கள் குடும்பத்திலுள்ள இரட்சிக்கப்படாதவர்களோ, உறவினர்களோ அல்லது நண்பர்களோ உங்களிடத்தில் வரலாம். நம்முடைய உறவினர்களும், நண்பர்களும் பெற்றோர்களும் யாரென கேட்ட போது, கர்த்தரின் சித்தத்தின்படிச் செய்பவர்களே நம் குடும்பத்தினரும், பெற்றோர்களும், சகோதரர்களுமாவர் என நம் தேவன் கூறினார். மகா உபத்திரவ காலம் வருகையில் யார் தமது உண்மைச் சகோதரர், யார் தமது சகோதரி, யார் தமது குடும்பத்தினர் என மறுபடியும் பிறந்தவர்கள் தெளிவாக அறிந்து கொள்வர். இந்த விசுவாசத்துடன் நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்வதாலும், இந்த வாதைகளிலிருந்து உங்களையும் என்னையும் கர்த்தர் ஏற்கனவே விடுவித்தபடியால், நம்மை அவர் இந்த வாதைகளிலிருந்து பாதுகாத்து, நம்மை அவரின் பிள்ளைகளாக தமது ஆலயத்தில் வளர்ப்பார். இந்த விசுவாசம் நமக்குள் உறுதியாக வேரூன்ற வேண்டும்.
முடிவுகாலத்தில் அந்திகிறிஸ்துவுக்கு நம்மை விற்பவர்கள் நம் மாமிசக் குடும்பத்திலிருந்து வெளியேறலாம். அவர்கள் நம் குடும்பத்தினராகவும் உறவினராகவும் இருந்தாலும், நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறந்தவர்களாயில்லா விட்டால், தொடக்கத்திலிருந்தே அவர்கள் வேறு யாரோ என நினைக்குமளவு நம் விசுவாசம் உறுதியானதாயிருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால் உண்மையான புதியவர்கள் செய்வதைவிட இவர்கள் மிக மோசமானவற்றைச் செய்யக் கூடியவர்கள். இப்படிப்பட்டவர்கள் இரட்சிக்கப் பட்டவர்களாயில்லா விட்டால் அவர்கள் சா£ரப்படி நமது குடும்பத்தினர் என்பது ஒரு பொருட்டல்ல. எப்படியாயினும் அவர்கள் நம் எதிரிகள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதனைக் குறித்து கர்த்தரின் வார்த்தை அடிக்கடி என்ன கூறுகிறது என்பதற்கு நம்மிருதயங்களை அகலத் திறந்து இதனையே உண்மையென நம்ப வேண்டும்.
கந்தகத்தையும், நெருப்பையும் பொழிவித்து சோதோம் மற்றும் கொமோராவை எப்படி அக்கினிக் கடலாக கர்த்தர் மாற்றினாரோ அது போலவே முடிவு காலத்தில் பாவிகள் மீது கொடிய வாதைகளை அவர் கொண்டு வருவார். சோதோம் மற்றும் கொமோராவைக் கர்த்தர் அழித்தமைக்கு புதை பொருள் வரலாறு நிரூபனமாயிருக்கிறது.
இந்நாட்களில், விண்கற்கள் பூமியில் முட்டி மோதி மனித குலம் அழிந்து போவதைக் குறித்த அநேக திரைபடங்கள் வெளி வந்துள்ளன. கடைசி நாட்களில் இப்பூமியின் மீது வரப்போகும் வாதைகளைக் குறித்து வேதாகமம் கூறுவதின் அடிப்படையில் இத்திரைப் படங்கள் அமைந்துள்ளன. விண்கற்கள் பூமியில் விழும் வாய்ப்புகள் மிகவும் அதிகம், இது இந்த வாதைகள் இப்பூமியில் நிகழ்வதை இன்னமும்அதிகரிக்கச் செய்கின்றன.
இதற்கான நல்ல உதாரணம் டைனோசர்களின் ஃபாசில்களாகும். பூமியானது பழைய காலத்தில் அநேக மாறுதல்களினு¡டே சென்றுள்ளது என்பதை இது காட்டுகிறது. இந்த ஃபாசில்கள் மூலம் அழிந்து போன உயிரினங்ளைப் பற்றி நாமறிகிறோம். ஒரு பெரிய விண்கல் பூமியின் மீது மோதியதால் டைனோசர்கள் உட்பட அநேக உயிரினங்கள் அழிந்து போயின என்பதாக சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆகவே வெளி 8ல் எழுதப்பட்டுள்ள விண்கற்களின் வாதைகள் இவ்வுலகில் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
வெகு சீக்கிரத்திலேயே...
வெகு சீக்கிரமாகவே இத்தகைய வாதைகள் இப்பூமியின் மீது வருமென்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சில விஞ்ஞானிகள், மனிதர்களை படிவமெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது கர்த்தருக்கே சவால் விடுவதாகும். ஆகவே இக்காலத்தில் கர்த்தர் அனுப்பும் படியாக வாதைகள் தயாராக உள்ளன. அறிவியலின் வல்லமையை எண்ணி மனித குலம் கர்த்தரை மறந்து போகக் கூடாது.
மனித குல விஞ்ஞான அறிவின் வல்லமையின் மூலம் உலகின் வாதைகளைச் சமாளிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் விஞ்ஞானத்தின் எக்கண்டுபிடிப்புகளாலும் கர்த்தரின் வாதைகளைத் தவிர்க்க முடியாது. ஏனெனில் மனிதர்கள் இதுவரைச் சந்தித்த வாதைகளை விடவெல்லாம் மிகவும் கொடிய வாதைகளாய் அவையிருக்கும். மனிதர்களின் விஞ்ஞான வளர்ச்சியை நாம் காணும் போது, மனித குலம் கர்த்தரின் அதிகாரத்திற்குச் சவால் விடுவதைக் காணலாம். அவரைப் போலாக மனிதர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் எத்தனை விஞ்ஞான வளர்ச்சிகளை அடைந்தாலும், கர்த்தர் அனுப்பும் வாதைகளை யாராலும் தடுக்க முடியாது. இந்த வாதைகளெல்லாம் மனிதர்கள் வேண்டியவையே.
கர்த்தர் அனுப்பும் இந்த வாதைகளிலிருந்து தப்பிக்கும் ஒரே வழி நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் இரட்சிப்பின் சத்தியத்தைக் கண்டு கொள்வதேயாகும். மேலும் இதனை விசுவாசித்து தேவனின் கரங்களில் நாம் சரணடைய வேண்டும். கர்த்தருடைய பயங்கரமான தீர்ப்பினை தவிர்க்கும் ஒரே வழியான, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசமே இவ்வாதைகளிலிருந்து நம்மைத் தப்புவிக்கும்.
ஆசீர்வாதங்களும் சாபங்களும் கர்த்தரின் கைகளிலிருக்கின்றன. கர்த்தர் இப்பூமியை விட்டுவிட நினைத்தால், இப்பூமி தொடர்ந்துமிருக்கும், அப்படியில்லை எனில், அது அழிக்கப்படும். இத்தகையதொரு காலத்தில் வாழும் நீங்கள் கர்த்தரின் வார்த்தையை மட்டும் நம்பி அதனைப் பின் பற்றுவதாலும், அவருக்கு இன்னமும் அதிகமாய் பயப்படுவதாலும், கர்த்தர் உங்களை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு வழிநடத்துவார். அது வரப்போகும் வாதைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.
இப்போதும் கூட உலகம் முழுவதிலுமுள்ள அநேக மக்கள் பூமியதிர்ச்சிகளினாலும், சூறாவளிக் காற்றுகளினாலும், நோய்களினாலும் நடுநடுங்கி இறந்து போகிறார்கள். மேலும் போர் எங்காவது நடைபெற்றுக் கொண்டேதானிருக்கிறது. நாடுகளோடு, நாடுகளும், ராஜ்யங்களோடு ராஜ்யங்களும் எதிர்த்து நிற்கின்றன. சீக்கிரமாக தோன்றப்போகும் அந்திகிறிஸ்துவானவன், இத்தகைய குழப்பமான நிலையின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதால், அநேக மக்கள் அவனைப் பின்பற்றுவர். இதனுடன் மிகப் பயங்கரமான வாதைகள் பூமியின் மீது இறங்கும், முடிவில் கர்த்தர் அனுப்பிய இவ்வாதைகளால் இப்பூமி முற்றிலுமாக அழிக்கப்படும்.
புதிய வானத்தையும் புதிய பூமியையும் கர்த்தர் படைத்து பாவவிடுதலை அடைந்தவர்களுக்கு அதனைக் கொடுப்பார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து மறுபடியும் பிறந்தவர்களுக்கு அளிக்கவே கர்த்தர் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறார். கர்த்தர் முதலாவது உலகத்தை அழித்து இரண்டாவது உலகத்தைத் தோற்றுவிப்பார். பழைய கால டைனோசர்கள் அழிந்தது போலவே விஞ்ஞான வளர்ச்சிப் பெற்ற இந்த நவீன மக்களும் அழிந்து போவர், கர்த்தர் தரும் புதிய உலகத்தின் புதிய தொடக்கத்தை நாம் நம் கண்களாலேயே காணும் சாட்சிகளாயிருப்போம்.
நாமிப்போது எப்படி வாழ்வது என யோசிக்க வேண்டும். இங்கு வசனங்கள் குறிப்பிட்டது போல் எல்லா வாதைகளும் வருமென நாம் விசுவாசிப்பதுடன், கர்த்தரின் நீதிக்காக மீதியிருக்கும் நாட்களில் வாழ்ந்து விசுவாசத்துடன் மறு உலகிற்கு ஆயத்தம் செய்ய வேண்டும். வெளிப்படுத்தலின் தீர்க்கதரிசன வார்த்தையைக் குறித்த அறிவுள்ளவர்களாய் நாமிருக்க வேண்டும். இப்போது நானிதனை ஏன் கூறுகிறேன் என்றால் அந்நாள் வரும் பொழுது இப்படியாக நீங்கள் பெற்ற அறிவு உங்கள் விசுவாசத்திற்கு மிக்க பயனுள்ளதாக இருப்பதைக் காணுவீர்கள்.
விண்வெளியிலுள்ள பூமியில் மோதக் கூடிய வாய்ப்புகள் உள்ள அனைத்தும், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கோள்களுக்கிடையே சிதறிக் கிடக்கும் விண்கற்களும், எண்ணிலடங்காத வால் நட்சத்திரங்களும் “புவியருகு பொருட்கள் (NEO)” என அழைக்கப்படுகின்றன. சூரிய மண்டலத்திலுள்ள 893 என்ஈஓ-க்களை நாசா ஒருமுறை பட்டியலிட்டது. இந்த என்ஈஓ-க்களில் ஏதாவது ஒன்று பூமியின் மீது விழுந்தால் அது ஏற்படுத்தும் பேரழிவுகள் கற்பனையையும் மீறியதாயிருக்கும். ஆயிரக்கணக்கான அணுகுண்டுகளைக் காட்டிலும் இந்த பெருவிபத்து மிக மோசமானதாயிருக்கும்.
அப்பொழுது இப்பூமிக்கு என்ன நிகழும் என எண்ணிப் பாருங்கள். உலகின் காடுகளும், நீரும், கப்பல்களும் அழிக்கப்படும். ஆகவே மனிதர்களெல்லாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நித்திய வாழ்விற்கு ஆயத்தம் செய்யும் ஒரு வாழ்வை வாழ வேண்டும்.
இயற்கை வாதைகள் இவ்வுலகிற்கு வரும் போது, சூரியனின் மூன்றிலொரு பாகமும், சந்திரனும், நட்சத்திரங்களும் தம் வெளிச்சத்தை இழந்து போகுமென தேவன் கூறினார். சில மக்களுக்கு இது தெரியும். சிலர் இதனை விசுவாசிக்கிறார்கள். மிகச் சில மக்கள் மட்டுமே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து அந்த உண்மையைப் பிரசங்கிக்கிறார்கள்.
நம்முடைய மனம் விழித்தெழ வேண்டும். இந்த வாதைகள் நிச்சயமாய் வரும். மீதியிருக்கும் நம் வாழ்வில் எத்தகைய நம்பிக்கையுடனும் குறிக்கோளுடனும் வாழ வேண்டும் என கண்டுபிடிக்க வேண்டும். மகா உபத்திரவத்திற்கு ஓரடித் தொலைவிலேயே இன்றைய காலம் இருக்கிறதென, நீங்களும் நானும் உணர்ந்து எஞ்சியிருக்கும் நாட்களை விசுவாசத்துடன் நம்மிருதயங்களில் சந்தேகத்திற்கான எத்தடயமுமின்றி வாழ வேண்டும்.
இந்த உபத்திரவத்தைக் குறித்த தீர்க்க தரிசனவர்த்தையை விசுவாசிக்காமல் நாம் வாழ்ந்தால் நம்மிருதயங்கள் வெறுமையாவதோடு நம் நோக்கங்களை இழந்து போய் வாழ்வு தரும் போராட்டங்களினால் முடக்கப்பட்டு விடுவோம். இது நடக்கவே கூடாது. அதே சமயம், இவ்வுலகின் மீது நம்பிக்கை வைத்து இந்த உலகை நாம் விட்டு விடமாட்டோம் என்பது போல் நாம் வாழக்கூடாது. சிறிதளவு அறிவியல் அறிவுள்ளவர்களுக்கு இவ்வுலகின் மீது நம்பிக்கை வைத்து எப்பயனும் இல்லை என்பது நன்கு தெரியும். கர்த்தர் இவ்வுலகை நிச்சயமாக அழித்துப் போடுவார்.
கர்த்தர் புதியதொரு இயேசுவின் ராஜ்யத்தைப் படைத்து நீதிமான்களை அதில் வாழச் செய்தார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்போர் தம்முடன் நித்தியமாக வாழவும் அவர் அனுமதிப்பார்.
கர்த்தருக்கு முன்பாக நம் சொந்த சித்தங்களையும் சிந்தனைகளையும் விட்டுவிட்டு அவரின் தீர்க்கதரிசன வார்த்தைகளைத் தாழ்மையுடன் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் பிரசங்கிக்க வேண்டும். பிறகு தேவன் வரும் போது அவரைச் சந்திக்க வேண்டும். இந்த கர்த்தரின் பணிக்காக நாம் வாழுவோமாக. தேவன் இப்பூமிக்கு திரும்பி வருகையில் புதியதொரு வாழ்வை நாம் பெறுவோம். நம்முடைய சா£ரங்கள் அவருடையதைப் போலாகும். அவர் நமக்கு கூறியதைப் போலவே நாம் அவருடைய புதிய உலகில் மீண்டும் வாழுவோம்.
தேவன் திரும்பி வரும் துல்லியமான நாளையும் நேரத்தையும் நாம் அறியோம். ஆனால் உலகில் ஏற்படும் அடையாளங்களை நோக்கும் போது கர்த்தரின் வார்த்தையில் கூறப்பட்டுள்ள வாதைகள் நமக்கு மிக அருகில் நெருங்கியிருப்பது தெரிகிறது. இவற்றையெல்லாம் தீர்க்க தரிசனங்களாய் உரைத்து இரட்சிப்பின் பாதையை நமக்குக் காட்டிய நம் கர்த்தரை இப்படியாக நாம் விசுவாசிக்க வேண்டும்.