(வெளி 9:1-21)
“ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகைஎழும்பிற்று; அந்தக் குழியின் புகையில் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது. அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது. பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. மேலும் அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது; அவைகள் செய்யும்வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையையைப்போலிருக்கும். அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம். அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது; அவைகளுடைய தலைகளின்மேல் பொன்மயமான கிரீடம் போன்றவைகளிருந்தன; அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள்போலிருந்தன. அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல்போலிருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போலிருந்தன. இருப்புக் கவசங்களைப்போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்திற்கு ஓடுகிற அநேகங் குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன. அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன; அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரமுடையவைகளாயிருந்தன. அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர். முதலாம் ஆபத்து கடந்துபோயிற்று; இவைகளுக்குப்பின்பு இன்னும் இரண்டு ஆபத்துகள், இதோ, வருகிறது. ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தந்தோன்றி, எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐப்பிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன். அப்பொழுது மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள். குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபது கோடியாயிருந்தது; அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன். குதிரைகளையும் அவைகளினால் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன. அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள். அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும், தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது, அவைகளாலே சேதப்படுத்துகிறது. அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல்மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளை விட்டு மனந்திரும்பவுமில்லை; தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை.”
விளக்கவுரை
வசனம் 1: ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.
கர்த்தர் பாதாளத்தின் திறவுகோலை து¡தனிடம் கொடுத்தார் என்பது நரகத்தையொத்ததொரு வாதையை மனிதர்களுக்கு அளிக்கப் போகிறார் என்று பொருள்படும்.
பாதாளம் என்பது முடிவு இல்லாத ஆழமுடைய ஒரு குழி எனவும் பொருள்படும். பூமியிலுள்ள அந்திகிறிஸ்துவுக்கும் அவனைப் பின்பற்றுவோருக்கும் நீதிமான்களை எதிர்த்து நிற்போருக்கும் தண்டனை வழங்க பாதாளத்தின் வாசலைக் கர்த்தர் திறப்பார். இந்த பாதாளத்தின் திறவுகோல் ஜந்தாம் து¡தனிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இது நரகத்தைப் போன்றே படுபயங்கரமான வாதையாகும்.
வசனம் 2: அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகைஎழும்பிற்று; அந்தக் குழியின் புகையில் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது.
பாதாளத்தின் வாசலைத் திறக்க கர்த்தர் அனுமதித்த போது, எரிமலைகளிலிருந்து உருவாகும் சாம்பலைப் போன்ற ஒரு துகள் பூமி முழுவதையும் நிரப்பும், இது இருளின் வாதையை எடுத்து வரும். இருளை நேசிப்பவர்களுக்காக இந்த இருளின் வாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நமது கர்த்தர் ஒளியின் கர்த்தராக நம்மைப் பிரகாசிக்கச் செய்கிறார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை எல்லோருக்கும் அவர் வழங்குகிறார். இந்த உண்மையை விசுவாசிப்பவர்களுக்கு இரட்சிப்பின் கிருபையை கர்த்தர் வழங்கியதோடு தன்னுடைய ஒளிரும் வெளிச்சத்தில் வாழவும் அவர்களை அனுமதித்தார். ஆனால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாதவர்களை கர்த்தருடைய நீதியின் தண்டனையைப் பெறுவார்கள். இருளின் வாதையையும், தனது நீதியின் நியாயத் தீர்ப்பையும் அவர் எடுத்து வருவார்.
மக்கள் அடிப்படையில் பாவிகளாய் பிறந்தவர்கள். அவர்கள் வெளிச்சத்திலிருப்பதற்கு பதிலாக இருளில் இருப்பதையே விரும்புகிறார்கள். அவர்கள் தேவனருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காமல் அதனை புறம்பேத்தள்ளியமைக்காக இருளின் வாதை அவர்கள் மீது வருவது சரியானதே.
வசனம் 3: அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது.
தம்முடைய உள்யோசனைகளின் மூலம் கர்த்தருடைய உண்மையை எதிர்ப்பவர்களின் பாவங்களைத் தண்டிக்க வெட்டுக்கிளிகளை அவர் பூமிக்கு அனுப்புவார். இந்த வெட்டுக் கிளிகள் கொடுக்குடையதாகவும், அது தேள்கடியைப் போல் வேதனையுடையதாகவும் இருக்கும். ஆகவே இவ்வுலகிலுள்ள அனைத்துப் பாவிகளும் கர்த்தரின் உண்மையான அன்பை விசுவாசிக்க வேண்டும். அப்படி விசுவாசிக்காதவர்கள் கர்த்தரின் அன்பை நிராகரித்ததும், அவருக்கு எதிராக நின்றதும் எத்தனைக் கொடிய பாவமென அறிந்து கொள்ள வேண்டும்.
தம்முடைய உள்யோசனைகளால் கர்த்தரின் உண்மைக்கு எதிராக நின்ற பாவத்திற்கு கிரயம் செலுத்தும் விதமாக கர்த்தர் வெட்டுக்கிளிகளை இப்பூமிக்கு அனுப்பினார். வெட்டுக்கிளிகளினால் உருவாகும் வாதையானது அவர்களின் பாவத்தினால் உருவான துன்பமாகும்.
வசனம் 4: பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.
வெட்டுக்கிளிகளின் வாதையை இப்பூமிக்கு அனுப்பினாலும், தம்மால் முத்திரையிடப் பட்டவர்களுக்கு கருணை காட்டுவதை அவர் மறந்து போகவில்லை. இயற்கையை சேதப்படுத்த வேண்டாமென வெட்டுக் கிளிகளுக்கு அவர் கட்டளையிட்டார்.
வசனம் 5: மேலும் அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது; அவைகள் செய்யும்வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையையைப் போலிருக்கும்.
உன்னதப் பாட்டு 8:6ல் கர்த்தர் தமது அன்பையும் கோபத்தையும் குறித்து கூறுகிறார் “நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாய் இருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜூவாலை கடும் ஜூவாலையுமாயிருக்கிறது.” இதுபோல் அவருடைய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் காட்டப்பட்ட கர்த்தரின் அன்பை நிராகரித்தவர்களுக்கு இத்தண்டனை எத்தனைக் கொடியதாக இருக்குமென இந்த வாதை நமக்கு காட்டுகிறது. இந்த வாதையானது ஐந்து மாதங்களுக்கு மக்களைத் துன்புறுத்தும்.
வசனம் 6: அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம்.
வெட்டுக்கிளிகள் கொடிய வேதனையை மக்களுக்கு எடுத்து வருவதால் இந்த வலியை விட சாவது நலமாயிருக்கும் என மக்கள் எண்ணுவர். அவர்கள் எத்தனை விரும்பினாலும் அவர்களால் சாக முடியாது. மக்கள் கர்த்தரை அலட்சியம் செய்தமையாலே இவ்வாதை உருவாயிற்று. இம்மாமிசத்தின் முடிவு வாழ்வின் முடிவு என நினைத்து, வாழ்வையும் சாவையும் ஆட்சி செய்யும் கர்த்தரை அவர்கள் அலட்சியம் செய்தனர். இந்த வெட்டுக் கிளிகளின் வாதையின் மூலமாக, அவர் அனுமதியின்றி மரணம் கூட வராது என்பதைக் கர்த்தர் காட்டுகிறார்.
வசனம் 7-12: அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது; அவைகளுடைய தலைகளின்மேல் பொன்மயமான கிரீடம் போன்றவைகளிருந்தன; அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள்போலிருந்தன. அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல்போலிருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போலிருந்தன. இருப்புக் கவசங்களைப்போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்திற்கு ஓடுகிற அநேகங் குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன. அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன; அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரமுடையவைகளாயிருந்தன. அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர். முதலாம் ஆபத்து கடந்துபோயிற்று; இவைகளுக்குப்பின்பு இன்னும் இரண்டு ஆபத்துகள், இதோ, வருகிறது.
மக்களை ஐந்து மாதங்கள் வரை துன்புறுத்தும் வல்லமை பாதாளத்திலிருந்து வரும் வெட்டுக் கிளிகளின் கொடுக்குகளுக்கு இருக்கிறது. இந்த வெட்டுக் கிளிகள் பெண்களைப் போல் அழகு மிக்கதாக தோன்றினாலும் இவை மிகவும் பயங்கரமானதாயும், கொடியவையாகவும் இருக்கும். கர்த்தரைவிட பெண்களை நாடிய பெரிய பாவத்தை மனிதன் எப்படிச் செய்தான் என்பதை இது காட்டுகிறது. இத்தகைய மாமிசத்தின் பாலியல் இச்சைகளை நமது வாழ்வினுள் புகுத்தி நம்மைக் கர்த்தரிடமிருந்து பிரிக்க சாத்தான் முயற்சி செய்கிறான் என்பதை நாம் மறக்கக் கூடாது.
வசனம் 13-15: ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தந்தோன்றி, எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐப்பிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன். அப்பொழுது மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள்.
மனிதர்களின் நலத்திற்காக இத்தனை நாள் காத்திருந்த கர்த்தர், இறுதியாக அவர்களின் பாவத்தை நியாயம் தீர்க்கத் தொடங்கினார். இப்போது போரின் வாதைத் தொடங்கும் இது மனிதர்களின் மூன்றிலொரு பாகத்தினை யூப்பிரட்டஸ் நதியினருகில் கொல்லும்.
வசனம் 16: குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபது கோடியாயிருந்தது; அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன்.
குதிரை வீரர்கள் எத்தனைப் பேர் இருப்பார்கள் என இங்கு கூறப்பட்டுள்ளது. இது நவீன யுத்தத்தைக் குறிக்கிறது. இந்தப் போரினால் மூன்றிலொரு பாகம் மக்கள் இறந்து போனாலும், மீதியிருப்பவர்கள் சிலைகளை வணங்கி தம் பாவங்களிலிருந்து மனம் திரும்பாமல், கர்த்தருக்கெதிராக நிற்பர். முடிவுகாலத்தில் அவனுடைய/அவளுடைய பாவங்களால் ஒவ்வொருவருடைய இருதயங்களும் எத்தனையாய் இருகிப் போயிருக்கும் என்பதை இது காட்டுகிறது.
வசனம் 17: குதிரைகளையும் அவைகளினால் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன.
அப்போஸ்தலனாகிய யோவான் கண்டது 21ம் நு¡ற்றாண்டின் கொடிய அழிவாயுதங்களாகும். அவை பீரங்கிகள், போர் விமானங்கள் மற்றும் நவீன ஆயுதங்கள் ஆகியவையாகும்.
வசனம் 18-19: அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள். அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும், தலைகளுள்ளவை களாயுமிருக்கிறது, அவைகளாலே சேதப்படுத்துகிறது.
முடிவு காலத்தில், நவீன போர் ஆயுதங்களால் நடைபெறும் கொடிய யுத்தமொன்று வரும். இத்தகைய ஆயுதங்களிலிருந்து வரும் நெருப்பினாலும் கந்தகத்தினாலும் மூன்றிலொரு பங்கு மக்கள் மரிப்பர்.
வசனம் 20: அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல்மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவு மாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காத படிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளை விட்டு மனந்திரும்பவுமில்லை.
இத்தகைய வாதைகள் நிகழ்ந்தாலும், போரிலிருந்து தப்பிய மனிதர்கள் சிலைகளைத் தொடர்ந்து வணங்கியவாறு அவற்றிற்கு முன்பாக விழுந்து கொண்டிருப்பர். ஏனெனில் இம்மக்கள் அழிந்து போக வேண்டியவர்கள்.
வசனம் 21: தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை.
முடிவு காலத்தில் தம் பாவங்களுக்காக கர்த்தர் முன் மனிதர்கள் மனம் வருந்தமாட்டார்கள் என்பதை இது காட்டுகிறது. ஆகவே கர்த்தர் இப்பாவிகளை நியாயம் தீர்ப்பார். ஆனால் நீதிமான்களுக்கோ ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு உலகை வழங்குவார்.