(வெளி 9:1-21)
ஏழு எக்காளங்களின் வாதைகளில் ஐந்தாவது மற்றும் ஆறாவது வாதைகளை குறித்து மேற்கண்ட வசனங்களில் நாம் இப்போது பார்த்தோம். ஐந்தாவது எக்காளம் வெட்டுக் கிளிகளின் வாதையையும் ஆறாவது எக்காளம் யூப்பிரட்டீஸ் நதியில் நடைபெறும் வாதையையும் அறிவித்தன.
இந்த ஏழு எக்காளங்களின் வாதைகளினு¡டே பரிசுத்தவான்கள் செல்வார்களா என்பதே நாம் முதலில் கண்டுபிடிக்க வேண்டிய ஒன்று. நாம் முதலில் கேட்கவேண்டிய, தெரிந்து கொள்ள வேண்டிய விசுவாசிக்க வேண்டிய ஒன்று இதுவே.
ஏழு எக்காளங்களின் வாதைகளின் நடுவில் பரிசுத்தவான்கள் சிக்கிக் கொள்வார்களா? பரிசுத்தவான்களும் இவ்வாதைகளின் நடுவில் சிக்கிக் கொள்வார்கள். உலகிலுள்ள காடுகளின் மூன்றிலொரு பாகம் எரிந்து போகும், மூன்றிலொரு கடலும் ஆறுகளும் இரத்தமாகும். சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் தாக்குதலுக்குள்ளாகி தம் வெளிச்சத்தில் மூன்றிலொரு பாகத்தை இழக்கும். மூன்றிலொரு பாகம் அழிந்து போனாலும் இன்னமும் மூன்றிலிரண்டு பாகம் அப்படியேதானிருக்கிறது.
உலகின் மூன்றிலொரு பாகத்தை அழிக்கும் முதல் ஆறு வாதைகளினு¡டே இரட்சிக்கப்பட்ட பரிசுத்தவான்கள் இருப்பர் என வார்த்தை நமக்கு கூறுகிறது. ஆயினும் இந்த வாதைகளுக்கு நாம் பயப்பட வேண்டியதில்லை. ஏனெனில், கர்த்தரின் முத்திரையைத் தம் நெற்றிகளில் பெறாதவர்களை மட்டும் தாக்குமாறு தமது ஐந்தாம் வாதையில் வெட்டுக்கிளிகளுக்கு கர்த்தர் கட்டளையிட்டார். இந்த ஏழு எக்காளங்களின் வாதைகளுக்கு நடுவே அவரால் முத்திரையிடப்பட்டவர்களை அவர் பாதுகாப்பார்.
ஆயினும் பரிசுத்தவான்கள் அனைத்து வாதைகளினு¡டும் செல்வார்கள் என இது பொருள்படுகிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து விடுதலையான நீங்களும் நானும் முதலாவது வாதையின் நடுவில் இருப்பதை அறிவோம். கர்த்தர் பொழிவிக்கும் நெருப்பு மழையில் பூமியின் மூன்றிலொரு பாகம் எரிந்து போகும். இரண்டாவதாக எரியும் மலையொன்று கடலில் விழுவதால் கடலின் மூன்றிலொரு பாகம் இரத்தமாகும். மூன்றாவதாக பெரியதொரு வால் நட்சத்திரம் ஆறுகளின் மீதும் ஊற்றுகளின் மீதும் விழுவதால் அவை கசப்பாகிப் போகும்.
சூரியன் சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் ஆகியவற்றின் மூன்றிலொரு பாகம் தாக்கப்பட்டு இருண்டு போவதான நான்காவது வாதையினு¡டேயும் நாம் வாழ்வோம். தேள்களைப் போன்ற வலியை உடைய வெட்டுக்கிளிகள் துன்புறுத்தும் ஐந்தாவது வாதையினு¡டும் நாம் செல்வோம். ஆறாவது வாதை யூப்பிரட்டீஸ் நதியருகே உலக யுத்தம் ஒன்றை எடுத்து வரும், இந்த வாதைகளிலும் நாம் நடுவில் இருப்பதைக் காணுவோம். கர்த்தரின் திட்டம் செயல்படக் காத்திருப்பதால், அதைக் குறித்து யாராலும் எதுவும் செய்ய முடியாது. கர்த்தரின் வார்த்தையில் எழுதப்பட்டுள்ள இந்த பயங்கரமான ஆறு வாதைகளினு¡டும் நாம் செல்வோம்.
உங்கள் பாவங்களிலிருந்து உங்களை நம் தேவன் விடுதலை செய்தார். அவர் தம்முடைய ஞானஸ்நானத்தின் மூலமும், அவரின் சிலுவை இரத்தத்தின் மூலமும், அவர் மரணத்திலிருந்து உயிரோடெழும்பியதன் மூலமும் நம் அனைத்துப் பாவங்களையும் அவர் எடுத்துப் போடுவார். இயேசு கிறிஸ்து நமக்காக செய்தவற்றை விசுவாசித்து நாம் பாவ மன்னிப்பைப் பெற்றோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் பாவ மன்னிப்பை பெற்றவர்கள் இந்த ஆறு பயங்கரமான வாதைகளினு¡டே சென்றாலும், கர்த்தரின் சிறப்பான பாதுகாப்பு அவர்களுடனிருக்கும். வேறு வார்த்தைகளில் கூறினால் கர்த்தரின் சிறப்பான கிருபை நம்மை வாழ அனுமதிக்குமென வார்த்தை நமக்கு கூறுகிறது. வாதைகளின் நடுவிலிருக்கும் இரட்சிக்கப்பட்டவர்களாகிய நமக்கு சிறப்பு முன்னுரிமைகளையும் பாதுகாவலையும் அளித்த கடவுள் நம் நன்றிகளுக்கு எத்தனைப் பொருத்தமானவர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஐந்தாம் து¡தன் எக்காளம் ஊதிய போது “ஒரு நட்சத்திரம்” வானத்திலிருந்து பூமியின் மீது விழுந்ததை யோவான் கண்டான். அதனிடம் பாதாளத்தின் வாசலைத் திறக்கும் திறவு கோல் இருந்தது. இங்கு நட்சத்திரம் எனப்படுவது தேவது¡தனாகும். கர்த்தரின் நட்சத்திரங்கள் என்பவதற்கான ஆவிக்குரிய பொருள் அவரின் ஊழியர்களும் பரிசுத்தவான்களும் என்பதாகும். பூமியின் மீது விழுந்த இந்த தேவது¡தன் பாதாளத்தின் திறவுகோலைப் பெற்று அதனைத் திறந்தான். அப்போது மிகப் பெரிய புகை மண்டலம் அங்கிருந்து உருவாயிற்று.
பாதாளம் என்பது எவ்வித எல்லையுமில்லாத முடிவில்லா ஒரு பெரிய குழியைக் குறிப்பிடுகிறது. இது படுகுழியெனவும் அழைக்கப்படுகிறது. அது எல்லையில்லா ஆழத்தினையுடைய குழியாகும். ஐந்தாம் எக்காளம் ஊதப்பட்ட போது இந்த பாதாளத்தின் திறவுகோலைப் பெற்று கொண்ட அத்து¡தன் இந்த திறவுகோலின் மூலம் பாதாளத்தைத் திறந்தான். மிகப் பெரிய தீயிலிருந்து உருவாவதைப் போல் கரும்புகை இங்கிருந்து வந்தது. குழியிலிருந்து வந்த இப்புகை சூரியனையும் வானத்தையும் மறைத்தமையால் முழு உலகமும் இருண்டு போயிற்று.
பாதாளம் திறக்கப்பட்ட போது அங்கிருந்து வந்தது புகை மட்டுமல்ல. வெட்டுக்கிளிகளும் கூட புகையுடன் சேர்ந்து வந்தன. பூமிக்கு வந்த இத்தகைய வெட்டுக்கிளிகளுக்கு பூமியிலுள்ள தேள்களின் வல்லமை கொடுக்கப்பட்டிருந்தது. அவை தமது கொடுக்கினால் மக்களைக் கொட்டின. அவற்றின் முகங்கள் மனித முகங்களைப் போலவும், அவற்றின் உருவம் போரிற்கு ஆயத்தமாயிருக்கும் குதிரையைப் போலவும் அவற்றின் பற்கள் சிங்கத்தின் பற்களைப் போலவும், அவற்றின் முடி பெண்களின் முடியைப் போலவும் இருந்ததாக வேதாகமம் கூறுகிறது.
வெட்டுக்கிளி எனக் கூறாமல் வெட்டுக்கிளிகள் எனக் கூறப்பட்டிருப்பதன் மூலம் இங்கு ஒரு வெட்டுக்கிளியையோ அல்லது சில வெட்டுக்கிளியைப் பற்றியோ கூறாமல், மிகப்பெரிய வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப் பற்றி வேதாகமம் கூறுகிறது. இது பூமியின் சில பகுதிகளில் வெட்டுக்கிளிகள் அடிக்கடி படையெடுத்து எல்லாப் பயிர்களையும் தின்று தீர்ப்பதைப் போன்றது. அவை மிச்சமாக விட்டுச் செல்வது அப்பயிர்களின் வேர்களை மட்டுமே. இத்தகைய வெட்டுக்கிளிகள் பாதாளத்திலிருந்து உருவாகி, மக்களை ஐந்து மாதங்களுக்கு துன்புறுத்தும்.
ஏழு எக்காளங்களின் முதல் ஐந்து வாதைகள் வரை பாதிக்கப்பட போவது மறுபடியும் பிறவாதவர்கள் மட்டுமே. இந்த வெட்டுக்கிளிகளின் வாதை மறுபடியும் பிறந்தவர்களாகிய நம்மைக் கடந்து செல்லும். வெட்டுக்கிளிகளின் வாதையை நம் தேவன் நம் மீது வர அனுமதிக்கமாட்டார். ஏனெனில், மறுபடியும் பிறந்தவர்களை வெட்டுக் கிளிகள் கொட்டினால், “நாம் ஏன் இரட்சிக்கப்பட்டோம்” என நற்செய்தியாகிய இரட்சிப்பை வாந்தி பண்ணுவோம் என்பது அவருக்குத் தெரியும். இதனை நாம் வசனம் 4லிருந்து காணலாம். “பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.”
இஸ்ரவேல் மக்களில் 144,000 பேர் கர்த்தரின் முத்திரையால் முத்திரிக்கப்படுவார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் புறஜாதியாரைக் குறித்து வேதாகம் எதையும் குறிப்பிடவில்லை. பாவிகளைப் போல் நாமும் கூட இந்த வெட்டுக்கிளிகளால் துன்புறுத்தப்படுவோம் என்று இது பொருள்படுமா? இல்லவே இல்லை, 144,000 இஸ்ரவேலர்கள் முத்திரிக்கப்பட்டதைப் போல் நாமும் கூட முத்திரிக்கப்பட்டுள்ளோம். அதாவது பாவமன்னிப்பைத் தமது இருதயங்களில் பெற்றவர்கள் கர்த்தருக்கு முன்பாக பரிசுத்த ஆவியானவரால் முத்திரிக்கப்பட்டுள்ளனர். பரிசுத்த ஆவியானவரைத் தமது இருதயங்களில் வாசஞ்செய்யப்பட்டவர்கள் கர்த்தரின் பிள்ளைகளாக முத்திரிக்கப்பட்டுள்ளனர். அவருடைய மக்களாகிய நாம் 144,000 இஸ்ரவேலருடன் சேர்ந்து வெட்டுக்கிளிகளின் வாதையிலிருந்து தப்புவோம்.
வெட்டுக்கிளிகளின் வாதை மறுபடியும் பிறவாதவர்களை மட்டுமே அணுகுவதால், மக்கள் நம்மை மேலும் வெறுத்து நம்மை அதிகமாக துன்புறுத்துவர். இல்லாதையின் ஐந்து மாதக் காலத்தின் போது மறுபடியும் பிறக்காதவர்கள் மட்டுமே வெட்டுக்கிளிகளால் கொட்டப்படுவர். இதனால் அவர்கள் கொடிய வலியினால் துன்புறுவர். ஆயினும் அவர்களால் மரிக்கமுடியாது. இந்த வெட்டுக்கிளிகளின் முகங்கள் மனித முகங்களைப் போலவும், அவற்றின் முடி பெண்களின் முடியைப் போலவும், அவற்றின் பற்கள் சிங்கத்தின் பற்களைப் போலவும், அவற்றின் உருவம் போரிற்கு ஆயத்தமாயிருக்கும் குதிரைகளைப் போலவும், தேள்களைப் போன்ற வாலினை உடையதாகவுமிருக்கும். அவைச் செல்லுமிடங்களிலுள்ள ஒவ்வொருவரையும் தன் தலையினால் பயமுறுத்தி, தம் பற்களால் கடித்து, தம் விக்ஷமுடைய கொடுக்குளினால் கொட்டி விவரிக்க முடியாத வேதனையை உருவாக்கும்.
ஒருமுறை கொட்டப்படுவதே கொடிய வேதனையை உருவாக்குவதாயிருக்கும். அது உயர் மின்னழுத்தத்தால் தாக்கப்பட்டதைப் போலிருக்கும், இது ஐந்து மாதங்கள் அப்படியே இருக்கும். அவர்களால் சாகவும் முடியாது, அவர்கள் வெட்டுக் கிளிகளால் எத்தனையாய் துன்பப்பட்டாலும் இந்த வேதனையில் வாழ்வதை விட இறந்து போவது நலமாயிருக்கும் என எத்தனையாய் முயற்சித்தாலும், அவர்களால் சாக முடியாது. இந்த வெட்டுக்கிளிகளின் வாதையின் போது மரணம் கட்டுப்படுத்தப் பட்டிருப்பதால், ஐந்து மாதங்களுக்கு ஒரு சாவுகூட பூமியில் நிகழாது. இந்த வாதை ஐந்து மாதங்கள் பூமியைத் துன்புறுத்தும்.
நம் கண்களால் இத்தகைய வாதைகளை நாம் கண்டதில்லை. ஆனால் அவை கர்த்தரால் திட்டமிடப்பட்டுள்ளன. இப்பூமியின் மீதும், இவ்வுலகின் மக்களின் மீதும் அதாவது கர்த்தரை விசுவாசியாதோர் மீதும், அவரின் அன்பையும் இரட்சிப்பையும், அவரின் விடுதலையாக்கும் நற்செய்தியையும் விசுவாசிக்காதவர்களின் மீதும் இந்த வாதை வருமென கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். கர்த்தர் இவற்றையெல்லாம் திட்டமிட்டதால் இவற்றையெல்லாம் அவர் எடுத்து வருவார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும்.
கர்த்தர் திட்டமிடுபவைகளையும், அவர் செய்பவைகளையும் யாராலும் கேள்வி கேட்க முடியாது என்பதால், கர்த்தரை விசுவாசிப்பதைத் தவிர நம்மால் செய்ய முடிந்தது வேறெதுவுமில்லை. வெட்டுக்கிளிகளால் மக்கள் துன்பப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில் கூட இவ்வெட்டுக்கிளிகளால் நாம் துன்புறுவதை கர்த்தர் அனுமதிக்க மாட்டார். ஏனெனில் கர்த்தருடைய முத்திரையைத் தமது நெற்றிகளில் பெற்றவர்களைத் துன்புறுத்த வேண்டாமென கர்த்தர் அவற்றிற்கு கட்டளையிட்டுள்ளார்.
ஏழு எக்காளங்களின் வாதைகளை கர்த்தர் ஏன் அனுப்புகிறார்?
மறுபடியும் பிறந்தவர்கள் ஏழு வாதைகளின் மூலம் மகிமைப் பெறவும், மறுபடியும் பிறக்காதவர்களுக்கு மறுபடியும் பிறக்க இன்னுமொரு வாய்ப்பை வழங்கவும், கர்த்தர் படைத்த இவ்வுலகிலுள்ள ஒவ்வொருவருக்கும், தானே தேவனாகிய கர்த்தர் என்றும், இவ்வுலகைப் படைத்தவரென்றும், இரட்சகரென்றும், எல்லோருக்குமான நியாயாதிபதியெனக் காட்டுவதுமே இந்த ஏழு எக்காளங்களின் வாதைகளுக்கான கர்த்தரின் நோக்கமாகும்.
முதலில் இந்த வாதைகளின் மூலம் பாவிகளுக்கு துன்பத்தை எடுத்து வந்து நீதிமான்களை அவற்றிலிருந்து தப்பிக்கச் செய்வதன் மூலம், தேவனின் மகத்துவத்தையும், அவரின் கிருபையையும், ஆசீர்வாதங்களையும் மகிமையும் நீதிமான்கள் புகழும்படிச் செய்கிறார்.
இரண்டாவதாக தம்முடைய கடைசி அறுவடைக்காக கர்த்தர் இந்த வாதைகளை அனுமதிக்கிறார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை குறித்து தெரிந்தும் அதனை விசுவாசிக்காதவர்களுக்கு கடைசி வாய்ப்பை அளிக்கவும், அவர்களை இரட்சிக்கவுமே ஏழு எக்காளங்களின் வாதைகளை அவர் எடுத்து வருகிறார். கர்த்தர் உருவாக்கிய இந்த உபத்திரவங்களின் மூலமாக புறஜாதியாரும் இஸ்ரவேலர்களும் தேவனிடம் திரும்பி இரட்சிக்கப்படுவதற்கான கடைசி வாய்ப்பை அளிக்கிறார்.
மூன்றாவதாக, நம் தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக இவ்வுலகிலுள்ள அனைத்தும் தோன்றியதால் இந்த கொடிய வாதைகளின் மூலம் அவரின் அன்பையும் அவர் தந்தையின் அன்பையும் நிராகரித்து இரட்சிப்பின் நற்செய்தியை விசுவாசிக்காதவர்களுக்கும் தம் மகத்துவமுள்ள வல்லமையைக் காட்டுவார். இயேசு கிறிஸ்து மனித சா£ரத்தில் இவ்வுலகிற்கு வந்து தன் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் தன் மீது ஏற்றுக் கொண்டு அவரின் சிலுவை மரணத்தின் மூலம் அவற்றைத் துடைத்தார். மறுபடியும் பிறவாதவர்கள் இவ்வுலகின் துன்பத்தையும், மரணத்திற்குப் பிறகு வரும் நித்திய வாழ்வின் நித்திய தண்டனை¨யும் அனுபவிக்கச் செய்வார்.
இத்தகைய நோக்கங்களுக்காகவும் திட்டங்களுக்காகவும் இத்தகைய வாதைகளை கர்த்தர் இப்பூமிக்கு அனுப்புகிறார். இந்த வாதைகள் நிச்சயமாய் வருமென்பதை அறிந்து அதனை நாம் விசுவாசிக்க வேண்டும். வெட்டுக்கிளிகளின் வாதையிலிருந்து நாம் தப்பினாலும், இந்த எல்லா வாதைகளினு¡டாகவும் நாம் வாழ வேண்டுமென்பதை நாம் மறக்கக் கூடாது. உலகின் காடுகள் மற்றும் இயற்கையின் மூன்றிலொரு பாகத்தைச் சுற்றெரிக்கும் வாதையின் போதும், கடல்களின் மூன்றிலொரு பாகம் இரத்தமாக மாறும் வாதையின் போதும், மூன்றிலொரு பாகம் ஆறுகளும் நீரூற்றுகளும் கசப்பாய் மாறும் வாதையின் போதும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை கருமையாக்கும் இருளின் வாதையின் போதும், உலகை அழிக்கும்போரின் வாதையின் போதும் நாம் அவற்றின் நடுவில் இருப்போம். இத்தகைய வாதைகளின் நடுவில் நாம் வாழ்ந்தாலும், மிகப் பெரிய ஆனந்தத்தில் நிரம்பியவர்களாய் நாமிருப்போம்.
ஏழு எக்காளங்களின் வாதைகளினால் இப்பூமியில் வாழும் ஆசை அற்றுப் போகும். எரிமலைகள் எல்லா இடத்திலும் இருக்கின்றன. பூமியதிர்ச்சிகள் பூமியைப் பிளக்கின்றன. மலைகள் எரிந்து கொண்டிருக்கின்றன. கடல், ஆறுகள், நீரூற்றுகள் ஆகியவற்றின் மூன்றிலொரு பாகம் இரத்தமாகவும் கசப்பாகவும் மாறியது. இத்தகைய ஒரு காட்சியை ஒரு நொடி எண்ணிப் பாருங்கள். து¡சிகளும், புகைகளும், சாம்பல்களும் முழு உலகத்தையும் மூடியிருக்கின்றன. சூரியன் 10 மணிக்கு உதித்து 4 மணிக்கு மறைந்து போகிறது. சந்திரனும் நட்சத்திரங்களும் அவற்றைக் காண முடியாத அளவிற்கு தம் ஒளியை இழந்து போயின. இத்தகைய ஒரு உலகில் வாழ நீங்கள் விரும்புவீர்களா? விரும்பமாட்டீர்கள்.
இதனால் தான் பரிசுத்தவான்கள் கர்த்தரை மட்டும் நோக்கிப் பார்த்து தம் நம்பிக்கையை அவரின் ராஜ்யத்தின் மீது வைப்பர். நம்முடைய அனைத்து நம்பிக்கைகளின் 100 சதவீதமும் அவர் மீது மட்டுமேயிருக்கிறது. இவ்வுலகில் வாழும் ஆசைகளெல்லாம் முற்றிலுமாக அகன்று போகும், நாம் ஆயிரம் வருடங்கள் இப்பூமியின் மீது வாழ்வதற்கான உலகத்தின் செலவங்கள் யாவற்றையும் கொடுத்தாலும் கூட வாழ விரும்பமாட்டோம். இந்த வாதைகளையெல்லாம் கர்த்தர் திட்டமிட்டு செயல்படுத்துவதால் யாராலும் அதனை நிறுத்த முடியாது. கர்த்தர் இந்த வாதைகளைத் திட்டமிட்டதால் அவர் அவற்றை நிச்சயமாய் அனுமதிப்பார்.
கர்த்தர் திட்டமிட்ட இவ்வாதைகள் ஏன் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளன? கர்த்தர் ஏன் யோவானை பரலோகத்திற்கு அழைத்துச் சென்று ஏழு எக்காளங்களை ஊதும் போது உருவாகும் வாதைகளைக் காணும் படியும் கேட்கும்படியும் செய்து அவன் கண்டவைகளையும் கேட்டவைகளையும் எழுதும்படி செய்தார்? பூமிக்கு என்ன நடக்குமெனக் காட்டுவதின் மூலம் பரிசுத்தவான்கள் தம் விசுவாசத்தை கர்த்தரின் ராஜ்யத்தின் மீது வைக்கும்படியும், உலகம் முழுவதும் இந்த நற்செய்தியைப் பிரசங்கிக்கும் படியும், எல்லோரும் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் படி செய்யவும், அவர் யோவானுக்கு அவற்றைக் காட்டினார்.
மக்கள் மீண்டும் யோசிக்கவும், கந்தகமும் அக்கினியும் எரியும் நரகத்தில் துன்புறாமலும் இருக்கும் படியாக கர்த்தர் இவற்றையெல்லாம் திட்டமிட்டு அவற்றை அனுமதித்தார். வேறு வார்த்தைகளில் கூறினால் இவ்வாதைகளிலிருந்து தப்பிக்கும் விதமாக கர்த்தர் அவர்களுக்கொரு அடைக்கலத்தை தந்தார். நம்மில் யாரும் நரகத்திற்கு செல்லக் கூடாது என்பது கர்த்தரின் விருப்பமாயிருப்பதால் இவ்வாதைகளின் மூலம் பாவிகளின் இருதயங்கள் தம்மிடம் திரும்புவதை அவர் விரும்புகிறார். எல்லோரும் பரலோகத்திற்கு வழிநடத்தப்படும் படியாக இந்த வார்த்தை எழுதப்பட்டு நமக்கு காண்பிக்கப்பட்டது என நான் நம்புகிறேன்.
வேறு வார்த்தைகளில் கூறினால் கர்த்தர் நம் மீது அனுமதிக்கும் வாதைகள் நம்மைத் துன்புறுத்துவதற்காக அல்ல. நாம் இப்பூமியின் மீது நம் நம்பிக்கையை வைக்காமல் அவரின் ராஜ்யத்தின் மீது நம்பிக்கை வைக்கும் விதமாக இப்பாதைகளை கர்த்தர் இப்பூமிக்கு அனுப்புகிறார். நரகத்திற்கு செல்லும் இழந்து போன ஆத்துமாக்களுக்கு அவரின் இரட்சிப்பாகிய அன்பைப் பிரசங்கிக்கும் படியாக இவ்வாதைகளை அவர் அனுமதிக்கிறார் எனவும், இப்படி செய்வதால் அவர்களும் இரட்சிப்பின் வார்த்தையைக் கேட்டு இரட்சிக்கப்பட்டு இந்த உபத்திரவத்திலிருந்து தப்பிக்கலாம் என்பதையும் நாமறிய வேண்டும்.
ஒருவகை பூனை மீன்கள் மற்றவைகளிலிருந்து பிரபலமானவை. அவைகள் கொட்டுவதினால் உருவாகும் வலி அனைவருக்கும் தெரிந்தது. இந்த மீனை கையாளும் போது கவனமாயில்லாவிட்டால் அவற்றின் செதில்களினால் உங்கள் கைகள் கொட்டப்படும். இதன் பிறகு சிறிது நேரத்தில் உயிர் போகும் வலி உண்டாகும். அது மின்சாரத்தினால் தாக்கப்பட்டதை போலிருக்கும். ஆனால் வெட்டுக்கிளிகளின் கடியுடன் இதனை ஒப்புடும் போது இது ஒன்றுமேயில்லை.
ஐந்து மாதங்கள் இவ்வேதனையிருந்தால் எப்படியிருக்குமென எண்ணிப் பாருங்கள். இதுவே வலிகளிலெல்லாம் மோசமானதாயிருக்கும். இத்தகைய வலியுடன் வாழ்வதைவிட இறந்து போவதை மக்கள் விரும்பினாலும் அவர்களால் அப்படி செய்ய முடியாது “சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம்” என வார்த்தைக் கூறுவதற்கிணங்க அவர்களால் இறந்து போகவும் முடியாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசித்து கர்த்தரின் பிள்ளைகள் ஆனதாலும், நம்முடன் பரிசுத்த ஆவியானவர் இருப்பதாலும், இந்த வாதையிலிருந்து கர்த்தர் நம்மைக் காப்பார். ஆகவே இந்த வெட்டுக்கிளிகளினால் உருவான வலி நமக்கிராது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பாவ மன்னிப்பை நாம் பெற்றதால் இத்தகைய வாதைகளுக்கு மத்தியிலும் நாம் பாதுகாக்கப் பட்டவர்களாயிருப்போம்.
வெளிப்படுத்தின விசேஷத்தை பயத்துடன் மட்டுமே நாம் காணக் கூடாது. வாதைகளின் நடுவில் கர்த்தர் நம்மை எப்படிக் காப்பார் என்பதையும், நம் மூலமாக அவர் எப்படி மகிமையடைவார் என்பதையும், கர்த்தரின் மகிமையால் நாமெப்படி உடுத்தப்படுவோம் என்பதையும் வெளிப்படுத்தலின் வார்த்தையின் மூலமாக நாம் காண வேண்டும். இதனை நாம் அறிவதால் அதிகத் துணிச்சலைப் பெற்று இன்னமும் அதிகமாய் நற்செய்தியைப் பிரசங்கித்து உபத்திரவம் வருகையில் இன்னமும் அதிகமாக கர்த்தரை மகிமைப்படுத்தலாம். நம்மிருதயங்கனில் எவ்வித பயமின்றியும், உலக வாழ்க்கைக்கான எவ்வித விருப்புமின்றியும் நாம் வாழ வேண்டும். கர்த்தர் இதனை முன்னதாகவே நமக்கு அறிவிப்பதால் நமக்கு தைரியம் இருக்கும். ஆகவே துணிச்சல்மிக்க விசுவாசம் நம்மிடம் இருக்க வேண்டும்.
ஏழு வாதைகளையும் இரண்டு வகையாக பிரித்திருப்பதாக கர்த்தர் கூறுகிறார். அவை முதல் நான்கு அழிவுகளும், பிறகு வரும் மூன்று ஆபத்துகளுமாகும். பின்னால் வருபவைகள் மிகவும் பயங்கரமானதாயும் கொடியதுமாயிருக்கும். ஆகவே ஐந்தாம் பயங்கரம் முடிந்த பிறகு அவர் அறிவிக்கிறார். “முதலாம் ஆபத்து கடந்துபோயிற்று; இவைகளுக்குப்பின்பு இன்னும் இரண்டு ஆபத்துகள், இதோ, வருகிறது.”
இரண்டாம் பயங்கரம் ஆறாவது எக்காளத்தின் வாதையாகும், “எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐப்பிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன். அப்பொழுது மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள்.” வசனம் 16 கூறுகிறது, “குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபது கோடியாயிருந்தது” ஒரு பெரிய யுத்தம் உருவாகுமெனவும் இந்த யுத்தத்தினால் மூன்றிலொரு பங்கு மனிதர்கள் மரித்துப் போவார்களெனவும் இது கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் இப்பூமியின் மீது படுபயங்கரமான யுத்தத்தை கர்த்தர் எடுத்து வருவார்.
வசனம் 17-18 கூறுகிறது: “குதிரைகளையும் அவைகளினால் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான மார்க் கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப் போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன. அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப் பட்டார்கள்.” மிகப் பெரிய குதிரை யுத்தம் ஒன்றின் மூலம் கணக்கிலடங்காத மக்கள் மரிப்பதைக் கர்த்தர் அனுமதிப்பார். இந்த வாதையானது ஆறாவது து¡தன் எக்காளம் ஊதுவதுடன் வரும்.
ஏழாவது எக்காளம் ஊதப்படும் போது என்ன நடக்கும்? உயிரோடெழும்புவதும் எடுத்துக் கொள்ளப்படுதலும் நிகழும். ஆறாவது எக்காளம் வரை அனைத்து வாதைகளும் இயற்கையாகவோ அல்லது யுத்தமாகவோ மக்களுக்கு மரணத்தை நேரடியாக எடுத்து வருவதாயிருக்கும். இந்த வாதைகளெல்லாம் ஏழு எக்காளங்களின் வாதையாக இருப்பதினாலும் வேதாகமத்தில் இது எழுதப்பட்டுள்ளதாலும், இந்த வார்த்தையை நான் நம்புகிறேன். நீங்களெப்படி? இந்த உண்மையை நீங்களும் விசுவாசிக்கிறீர்களா?
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பாவமன்னிப்பை பெற்று விட்டீர்களா? இந்த வாதைகளில் உட்படாமலும் நித்திய வாதையான நரகம் சென்று துன்பப்படுவதிலிருந்து தப்பிக்கவும் இப்போது நீங்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க வேண்டும். உங்கள் பாவங்களை மறையச் செய்யவும், மகா உபத்திரவத்திலிருந்து உங்களைத் தப்புவிக்கவும், தன் ராஜ்யத்தையும் புதிய வானத்தையும் புதிய பூமியையும் உங்களுக்குக் கொடுக்கவும் நற்செய்தியை அவர் அளித்தார். இந்த நற்செய்தியை விசுவாசிக்கும் நம்பிக்கை உங்களிடம் இருக்க வேண்டும். இந்த நற்செய்தியை நீங்களறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே அன்றி பரலோகத்திற்கு நீங்கள் செல்வதற்கான வேறு வழிகள் இல்லை.
இயேசு பேதுருவிடம் கூறினார் “பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்” இயேசு கிறிஸ்துவை நம் இரட்சகராக விசுவாசிக்கும் போது பரலோக ராஜ்யத்தின் திறவுகோல் நம்மிடம் கொடுக்கப்படுகிறது. அவர் இவ்வுலகிற்கு வந்து யோர்தான் நதியில் யோவான் அவருக்கு அளித்த ஞானஸ்நானத்தின் மூலம் மனித குலத்தின் அனைத்துப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டு இப்பாவங்களை சுமந்து சிலுவைக்குச் சென்று மரித்து, மரித்தவர்களிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்தார். நாம் பரலோகத்திற்கு செல்வதும் இவ்வாதைகளிலிருந்து தப்பிப்பதும் இவற்றை விசுவாசிப்பதிலிருக்கிறது. நம்முடைய பாவங்களெல்லாம் துடைக்கப்பட்டன என இது விசுவாசிக்கிறது.
ஏழாம் எக்காளம் ஊதப்படும் சத்தத்துடன் எடுத்துக் கொள்ளப்படுதலும் வெளி 13 குறிப்பிடும் இரத்தசாட்சியாக மரிப்பதும் ஒன்றாக வரும். அந்திகிறிஸ்து தோன்றும் போது நீதியின் மரணத்தை நாம் சந்திப்போம். நற்செய்திக்காக நாம் மரிப்போம்.
நீங்கள் அறிந்து விசுவாசிக்கும் இந்த நற்செய்தி எத்தனை மதிப்புடையதென்பதையும் முக்கியமானதென்பதையும் நீங்கள் இப்போது அறிந்தீர்கள். இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசியுங்கள். அப்பொழுது உங்களால் முடிவு காலத்தை துணிச்சலுடன் சந்திக்க முடிவதுடன், தேவன் வாக்குத்தத்தம் செய்த ஆயிர வருட அரசாட்சி, புதிய வானம் மற்றும் புதிய பூமி ஆகியவற்றில் சஞ்சரிப்பீர்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கு சுற்றிலும் நிற்கும் 24 மூப்பர்களில் ஒருவராக தேவனை நாம் ஆராதிக்கவும், உபத்திரவத்தை துணிச்சலுடன் மேற்கொள்ளவும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
இந்த நற்செய்தியை உங்கள் இருதயங்களால் விசுவாசித்து மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்களாகிய நீங்கள் முடிவு காலத்தினை மேற்கொண்டு கர்த்தரின் ஆயிர வருட அரசாட்சியையும் அவரின் நித்திய பரலோகத்தையும் சுதந்தரிப்பீர்களென நம்பி ஜெபிக்கிறேன்.