(வெளி 10:1-11)
“பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது. திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து, சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகாசத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின. அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன். சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி; இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று, வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல, நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதூரமாயிருக்கும் என்றான். நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அதுதேனைப்போல மதூரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று. அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங் குறித்துத் தீர்க்கதரிசனஞ் சொல்ல வேண்டும் என்றான்.”
விளக்கவுரை
இந்த அதிகாரத்தின் முக்கியமான வசனம் 6ஆம் வசனமாகும்: “இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று” வேறு வார்த்தைகளில் கூறுவதானால் இந்த சமயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும்.
வசனம் 1: பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.
அதிகாரம் 10ல் காணப்படும் மகத்துவமுள்ள தேவது¡தன் கர்த்தர் கூறுபவற்றைச் செய்பவனாவான். அவன் வரப் போகிற கர்த்தரின் கிரியைகளைக் குறித்து சாட்சி கூறுகிறான். இந்த து¡தனின் கம்பீரம் கர்த்தர் எத்தனை மகத்துவமும் வல்லமையுமுள்ளவர் என்பதைக் காட்டுகிறது. கர்த்தர் இவ்வுலகின் கடல்களை அழிப்பாரெனவும், பரிசுத்தவான்களை உயிரோடெழுப்பி பரலோகத்திற்கு அவர்களை எடுத்துக் செல்வாரெனவும் இது கூறுகிறது.
வசனம் 2-3: திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து, சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகாசத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.
தம்முடைய திட்டத்தின் படியே கர்த்தர் அனைத்தையும் செய்கிறார். கடைசி நாள் வரும் போது நிலத்தையும் கடலையும் அவர் அழித்துப் போடுவார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் முதல் கடலையும் முதல் நிலத்தையும் அவர் அழிப்பார்.
கர்த்தர் தாம் திட்டமிட்டபடி செய்யும் உறுதியான சித்தமுடையவராயிருக்கிறார் என்பதையும், அவரின் செய்கைகள் முடிவு பெறுவதையும் இவ்வசனங்கள் காட்டுகின்றன. வேதாகமத்தில் ஏழு என்ற என் நிறைவேறுதலைக் குறிக்கிறது. கர்த்தர் தம் வேலைகளை நிறைவேற்றி ஓய்வெடுத்த போது இந்த எண்ணை உபயோகித்தார். அதுபோலவே, முடிவு காலத்தில் அநேகரை அழிவிலிருந்து தப்புவிக்கும் அதே நேரம், இவ்வுலகை நிச்சயமாய் அழித்து போடுவார் எனவும் இந்த வசனங்கள் கூறுகின்றன.
வசனம் 4: அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.
பரிசுத்தவான்களை எடுத்துக் கொள்வதை இரட்சிக்கப்படாதவர்கள் காணாதவாறு இருக்கும்படியாக ஏழு இடிகள் கூறியவற்றை எழுத வேண்டாமென கர்த்தர் யோவானிடம் கூறினார். அவிசுவாசிகளிடமிருந்து கர்த்தர் தம் செய்கைகளை மறைக்கிறார். அவர்கள் கர்த்தரின் எதிரிகளாயிருப்பதினால் அவரின் பரிசுத்தவான்களை வெறுத்து அவர்களை துன்புறுத்துகின்றனர்.
நோவாவின் காலத்தில் கர்த்தர் உலகத்தை நீரினால் அழித்தார். வரப்போகும் இந்த பெரு வெள்ளத்தைக் குறித்து நோவாவிற்கு மட்டுமே வெளிப்படுத்தினார். இப்போதும் கூட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து உலகம் முழுவதும் கர்த்தர் பிரசங்கிக்கிறார். இதனை விசுவாசிப்பவர்களைத் தவிர எடுத்துக் கொள்ளப்படுதல் எப்போது நிகழும் என வேறு யாருக்கும் அவர் கூறவில்லை. நீதிமான்களுக்காக தனது ராஜ்யத்தில் ஒருலகத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர்களுடன் அங்கு வாழ்வதற்கும் ஆசையுடையவராய் இருக்கிறார்.
வசனம் 5&7: சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி; ஸஸ வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர் மேல் ஆணையிட்டுச் சொன்னான்.
எல்லாவற்றையும் கர்த்தரின் பெயரினால் உறுதியெடுக்கலாம் எல்லாவற்றையும் ஒருவரின் சொந்த பெயரில் உறுதியெடுப்பதில்லை. யாராவது பெரியவர்களின் பெயராலேயே உறுதியெடுக்கிறோம். ஏற்கனவே அவரின் பரிசுத்தவான்களாகியதாலும், கடைசி நேரத்திலிருக்கும் பரிசுத்தவான்களுக்கு கடைசி உத்தரவாதம் அளிப்பது கர்த்தரே. இங்கு எடுத்துக் கொள்ளப்படுதல் நிச்சயமாய் வருமென மகத்துவமுள்ளவரின் பெயரால் வல்லமை மிக்க தேவது¡தன் உறுதியெடுக்கிறான். புதிய வானத்தையும் புதிய பூமியையும் கர்த்தர் உருவாக்கி அந்த புதிய உலகில் தன் பரிசுத்தவான்களுடன் வாழ்வார் என இந்த உறுதிமொழி நமக்குத் தெரிவிக்கிறது. கர்த்தர் புதிய உலகைப் படைக்க நேரம் கடத்தமாட்டாரென்றும் தம் பரிசுத்தவான்களுக்காக இதனை சீக்கிரமாக முடிப்பார் என்றும் இது காட்டுகிறது.
வசனம் 6: இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று.
கடைசி எக்காளமாகிய ஏழாம் எக்காளம் ஊதப்படுகையில் எல்லா பரிசுத்தவான்களும் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். பரிசுத்தவான்களின் எடுத்துக் கொள்ளப்படுதல் எப்போது நடக்குமென்பதே உலக மக்கள் ஆச்சரியத்துடன் எதிர்பார்ப்பதாகும்.
வெளி 10:6 நம்மிடம் கூறுகிறது “இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று.” இங்கு ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்ற வாக்கியம் கூறுவது என்ன? எப்படி நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது உண்மையான நற்செய்தியோ, எப்படி அதனை விசுவாசிப்பவர்கள் அவனின்/அவளின் இருதயங்களில் அதனைப் பெற்றுக் கொள்கிறார்களோ, அதுபோலவே ஏழாம் எக்காளம் ஊதப்படுகையில் பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்படுவது நிச்சயமாய் நிகழும்.
ஆறாவது மற்றும் ஏழாவது எக்காளங்களின் வாதைக்குப் பின்னால், அந்திகிறிஸ்து தோன்றி தனது ஆளுகையை அங்கு ஏற்படுத்தி மிருகத்தின் குறியீட்டை அனைவரும் பெறுமளவு வலியுறுத்தி, அப்படிச் செய்யாத பரிசுத்தவான்களை இரத்த சாட்சியாகும் படி செய்வான். இதற்கு சிறிது பிறகு, ஏழாம் து¡தன் எக்காளத்தை ஊதுகிறான். இரத்த சாட்சியாக மரித்த பரிசுத்தவான்களும், தப்பியிருக்கும் பரிசுத்தவான்களும் உயிரோடெழுப்பப்பட்டு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். அப்போது ஏழு பாத்திரங்களின் வாதைகளான கடைசி வாதைத் தொடங்கும். இந்நேரத்தில், பரிசுத்தவான்கள் பூமியிலிருக்க மாட்டார்கள். அவர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு தேவனுடன் பரலோகத்திலிருப்பர். ஏழாம் து¡தன் கடைசி எக்காளத்தை ஊதுகையில் தாம் எடுத்துக் கொள்ளப்படுவோம் என்பதை பரிசுத்தவான்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
அப்போஸ்தலனாகிய பவுலும் கூட 1 தெசலோனிக்கேயர் 4இல், பிரதான து¡தனின் எக்காளத்துடன் தேவன் பரலோகத்திலிருந்து இறங்கி வருவார் எனக் கூறினான். எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும் போது தேவன் இவ்வுலகிற்கு வருவார் என அநேக கிறிஸ்தவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் இது உண்மையல்ல, எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும் போது தேவன் பூமியின் மீது வருவதில்லை. அவர் மேகங்களின் மீதிருப்பார். வேறு வார்த்தைகளில் கூறினால் பரிசுத்தவான்களை ஆகாயத்திற்கு உயர்த்தி, மேகம் மீது அவர்களைப் வரவேற்று எடுத்துக் கொள்ளப்படுவதை நிறைவேற்றுகிறார்.
உண்மையான பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்படும் போது தேவன் பூமிக்கு வருவார் என தவறாக நினைத்துக் கொண்டுடிருக்கும் இந்த கிறிஸ்தவர்கள் தம் தவறான புரிந்து கொள்ளுதலை கைவிட வேண்டும். சத்தியத்தை தெளிவாக அறிந்து சரியான முறையில் அதனை விசுவாசிக்க வேண்டும். ஏழாம் து¡தன் தன் எக்காளத்தை ஊதுகையில் பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்படுதல் நடைபெறும் என்பதையும் அவர்கள் நினைவு கூற வேண்டும்.
“ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும்” தேவரகசியம் என இங்கு கூறப்படுவது ஏழாம் எக்காளத்தின் வாதையோடு வரும் பரிசுத்தவான்களின் எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறிக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சுருக்கமாகக் கூறினால் கர்த்தர் முதலாவது உலகத்தை அழித்து, இரண்டாவது உலகத்தைப் படைக்கிறார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து இப்பூமியிலிருக்கும் போது விசுவாசித்து மறுபடியும் பிறந்தவர்களுடன் கர்த்தர் சஞ்சரித்து அவர்களுடன் வாழவும், மகத்துவமுள்ளவர் தம் மக்களுடன் செய்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றவும் இதனைப் படைக்கிறார். இது கர்த்தரின் சித்தமாயிருக்கிறது. இப்பிரபஞ்சத்தின் படைப்பாளி அவரே, இதனை பரிசுத்தவான்களுக்காக ஏற்படுத்தினார்.
ஏழாம் எக்காளத்தை து¡தன் ஊதுகையில், ஏழு எக்காளங்களின் வாதைகளும் முடிந்து போகும். அப்பொழுது ஏழு பாத்திரங்களின் வாதைகள் தொடங்கும். வார்த்தை நம்மிடம் கூறுகிறது “இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று.” ஏழாம் து¡தன் எக்காளம் ஊதுகையில் எடுத்துக் கொள்ளப்படுதல் பரிசுத்தவான்களுக்கு நிகழும் என்பது தேவரகசியம்.
பரிசுத்தவான்கள் இப்பூமியில் இப்போது வாழ்கிறார்கள். அவர்கள் புதிய அருமையான உலகில் வாழ வேண்டுமானால், இரத்தசாட்சியாக மரித்து, உயிரோடெழும்பி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அப்பொழுது ஆட்டுக் குட்டியானவரின் திருமணப் பந்தியில் தேவனுடன் பங்கேற்கவும், ஆயிரம் வருடங்கள் அவருடனே ஆளுகைச் செய்யவும் அவர்கள் அழைக்கப்படுவர். இந்த ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு, அந்திகிறிஸ்து சாத்தான் மற்றும் அவர்களைப் பின்பற்றிய அனைவரும் கர்த்தரின் நித்தியமான தீர்ப்பைப் பெறுவர். அப்பொழுதிலிருந்து, நித்திய ஆசீர்வாதங்களுடைய தேவனின் ராஜ்யத்தில் அவருடனே வாழும் படியாக பரிசுத்தவான்கள் ஆசீர்வதிக்கப்படுவர். கர்த்தருடைய புதிரென்பது இது தான். உண்மை விசுவாசமுடைய நமக்கு இந்த புதிரை வெளிப்படுத்தி கர்த்தருக்கு நன்றிகளை மட்டுமே நம்மால் கூற முடியும். ஏழாம் து¡தன் தன் எக்காளத்தை ஊதும் போது இந்த வாக்குத்தத்தங்களை எல்லாம் நிறைவேற்றுவதாக கர்த்தர் கூறுகிறார்.
வசனம் 8: நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,
கடைசி நாள் வரும் வரையிலும் பரிசுத்தவான்களும் கர்த்தருடைய ஊழியர்களும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிக்க வேண்டுமென கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். இந்த நற்செய்தியானது பாவமன்னிப்பு, இரத்த சாட்சி, உயிரோடெழுப்பப்படுதல், எடுத்துக் கொள்ளப்படுதல், ஆட்டுக் குட்டியானவருடைய கல்யாணப் பந்தி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இதுவரை நற்செய்தியைப் பிரசங்கிக்கும் விதமாக, பரிசுத்தவான்களும் கர்த்தரின் ஊழியர்களும் தம் விசுவாசத்தின் மூலம் கர்த்தரின் வார்த்தைகளால் போக்ஷிக்கப்பட வேண்டும். இதனை மகா உபத்திரவ காலத்திற்கு முன் செய்ய வேண்டும். இரண்டு விதமான நம்பிக்கைகளை கர்த்தர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். முதலாவது மறுபடியும் பிறப்பதற்கான விசுவாசமாகும். இரண்டாவது இரத்தசாட்சியத்தைத் தழுவும் படியான உண்மை விசுவாசமாகும்.
வசனம் 9: நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதூரமாயிருக்கும் என்றான்.
கர்த்தரின் ஊழியர்களும் பரிசுத்தவான்களும் கர்த்தரின் வார்த்தைகளால் போக்ஷிக்கப்பட்டு மற்றவர்களுக்கு அதனைப் பரப்ப வேண்டும். கர்த்தரின் வார்த்தையை விசுவாசிப்பவர்களின் இருதயங்கள் அருமையானவையாக இருந்தாலும், இழந்து போன ஆத்துமாக்களுக்கு விசுவாச வார்த்தைகளைப் போதிப்பது இலகுவானதல்ல. அதற்கு அநேக தியாகங்களைச் செய்ய வேண்டுமென இவ்வசனம் நமக்கு போதிக்கிறது. இங்கு கர்த்தர் நமக்கு காட்டுவது இதுவே.
வசனம் 10: நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அதுதேனைப்போல மதூரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.
கர்த்தரின் வார்த்தையை யோவான் விசுவாசத்துடன் உண்ட போது, அவனிருதயம் மகிழ்ச்சியினால் நிரம்பிற்று. ஆனால் சத்தியத்தை விசுவாசிக்காதவர்களின் நடுவில் கர்த்தரின் வார்த்தையை பிரசங்கித்த போது யோவான் அநேக பிரச்சனைகளைச் சந்தித்தான்.
வசனம் 11: அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும் என்றான்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாகவே கர்த்தரின் ஆசீர்வாதம் வருகிறது என பரிசுத்தவான்கள் போதிக்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து கர்த்தரின் ஆசீர்வாதத்திற்குள் அனைவரும் வருவதே இவ்வுலகிற்கான தேவனின் சித்தமாயிருக்கிறது என்பதையும் போதிக்க வேண்டும். புதியதொரு உலகம் வருகிறது, அது கர்த்தரால் எடுத்து வரப்படுகிறது. அதில் பிரவேசிக்க விரும்புகிறவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நீதிமான்களானவர்களாயிருக்க வேண்டும் என்பதை பிரசங்கிக்கும் படி கர்த்தர் யோவானுக்கு கட்டனையிட்டார். இவ்வேலையைச் செய்ய, பரிசுத்தவான்களும் கர்த்தரின் ஊழியர்களும் தொடக்கத்திலிருந்து மீண்டுமாக கர்த்தரின் வார்த்தையை பிரசங்கிக்க வேண்டும். இப்படிச் செய்வதினால் இவ்வுலகிலுள்ள அனைவரும் விசுவாசமுடையவர்களாவர். இவ்விசுவாசம் அவர்கள் பரலோகத்திற்கு சென்று நம் தேவனுடன் வாழ்வதை அனுமதிக்கும்.