• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 10 : வெளிப்படுத்தின விசேஷம் (வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 10-2] பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப் படுவது எப்போது நடக்குமென உங்களுக்குத் தெரியு (வெளி 10:1-11)

(வெளி 10:1-11)
 
எடுத்துக் கொள்ளப்படுதல் எப்போது நிகழுமென்பதான பிரச்சனையை நோக்கி நம் கவனத்தைச் செலுத்துவோமாக. வேதாகமத்திலுள்ள அநேக வசனங்கள் எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்து கூறுகின்றன. புதிய ஏற்பாட்டின் அநேக வசனங்கள் இதனைக் குறித்து விவரிக்கின்றன. அதுபோலவே பழைய ஏற்பாடும் இதனைக் குறித்து கூறுகிறது. உதாரணமாக அக்கினி ரதத்தில் எலியா பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். இப்படியாக எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்து வேதாகமத்தின் அநேக இடங்களில் அது பேசுவதை நாம் காணலாம். எடுத்துக் கொள்ளப்படுதல் என்பது “மேலே உயர்த்தப்படுவது” என்பதாகும். கர்த்தர் தம் வல்லமையினால் தன் மக்களை பரலோகத்திற்கு உயர்த்துவதை இது குறிக்கிறது.
ஆயினும், இந்த எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்த கேள்வியே வேதாகமத்தின் புதிர் நிறைந்த கேள்வியாகும். கர்த்தர் தன் மக்களை எப்போது மேலே உயர்த்துவார்? இந்த எடுத்துக் கொள்ளப்படும் நேரத்தைக் குறித்த கேள்வியானது கிறிஸ்தவத்தினுள் அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வியாகும்.
1 தெசலோனிக்கேயர் 4:14-17ஐப் பார்ப்பதன் மூலம் அப்போஸ்தலனாகிய பவுலிற்கு கர்த்தர் கூறியவற்றைப் பார்ப்போமாக: “இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.”
யூதா1:14 இல் கர்த்தர் கூறுகிறார், “ஆதாமுக்கு ஏழாந் தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக் குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்து வந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.” வேறு வார்த்தைகளில் கூறினால், பிரதான து¡தர்களின் எக்காளச் சத்தத்துடன் பரிசுத்தவான்கள் ஆகாயத்திற்கு நம் கர்த்தரால் எடுத்துக் கொள்ளப்பட்டு, அங்கு சிறிது நேரம் இருந்து நம் தேவனுடன் மீண்டும் பூமிக்கு இறங்கி வருவர். எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்த வேதாகம விளக்கம் இதுவே.
மேற்கண்ட இந்த வசனங்களை இங்கு குறிப்பிட்டதற்கான காரணம் வெளி 10 எடுத்துக் கொள்ளப்படுதல் எப்போது நிகழுமென நமக்கு கூறுவதேயாகும். முன்பே நான் குறிப்பிட்டதைப் போல, இவ்வதிகாரத்தின் சாராம்சம் வசனம் 6இல் காணப்படுகிறது “இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று” எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்த நமது சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் இவ்வசனத்திலுள்ளது.
யோவானின் காட்சியில் ஒரு பலத்த து¡தனைக் கர்த்தர் அனுப்புகிறார். தேவனே இவ்வுலகிற்கு வந்தால் எப்படியிருக்கும் என்பதை இந்த து¡தன் மூலம் அவர் அவனுக்கு காட்டினார். இத்து¡தன் தன் கைகளை வானத்தை நோக்கி உயர்த்தி “சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி; ஸஸ வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர் மேல் ஆணையிட்டுச் சொன்னான்.” இனியும் தாமதிக்கக் கூடாது என்பதின் பொருள், தாமதம் செய்ய எக்காரணங்களும் இல்லை எனக்கூறுவதாகும் “இதற்கு மேல் நேரமில்¨லை என்பதையும் இது கூறுகிறது. இதற்கு மேல் நேரமில்லை என்பது ஏழாம் து¡தன் எக்காளம் ஊதுகையில், கர்த்தர் தமது ஊழியர்களாகிய தீர்க்கதரிசிகளுக்கு அறிவித்த அவரின் புதிர் நிறைவாகும் எனவும் பொருள்படும்.
ஏழு எக்காளங்களின் வாதைகளில் கடைசி எக்காளம் முழங்கையில், இவ்வுலகம் ஏழு பாத்திரங்களின் வாதைகளுக்குள்ளாகச் செல்லும். அப்பொழுது, இவ்வுலகிற்கு எந்த சமயமும் இருக்காது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். வசனம் 6இலுள்ள கர்த்தரின் வார்த்தை, அந்நாளில் “இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று.” என்பது எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறிக்கிறது. பிரதான து¡தன் கர்த்தரின் எக்காளத்தை ஊதும் போது எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும் என்று பவுலும் கூட எங்கோ கூறியிருக்கிறான். பவுலின் மனதில் இருந்ததும் இது தான். எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்து வேதாகமத்தில் காணப்படும் குறிப்புகளுக்கான தொடக்கப் புள்ளி இதுவே.
“இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று.” ஏழாம் து¡தன் எக்காளம் ஊதுகையில் பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழுமென இவ்வார்த்தைக் கூறுகிறது. அவர்கள் ஆகாயத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவர். கர்த்தரின் ஊழியர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து இழந்து போன ஆத்துமாக்களுக்கு கூறிய போது, இந்த உண்மையான நற்செய்தியை ஏற்றுக் கொண்ட விசுவாசிகளின் மீது பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அப்போது அவர்கள் கர்த்தரின் பிள்ளைகளானார்கள். கர்த்தரின் புதிராகிய எடுத்துக் கொள்ளப்படுதல், பரிசுத்தவான்கள் ஆகாயத்தின் மீது எடுத்துக் கொள்ளப்படுதல் உண்மையாகும்.
இதன் பிறகு ஏழு பாத்திரங்களின் வாதைகளாகிய கடைசி வாதைகளை இவ்வுலகின் மீது ஊற்றி கர்த்தர் உலகை முற்றிலுமாக அழித்து, கர்த்தரின் ராஜ்யத்தை இவ்வுலகிற்கு எடுத்து வருவார். நாம் கிறிஸ்துவுடன் ஆயிரம் வருடங்கள் அரசாள்வோம். அதன் பிறகு புதிய வானம் மற்றும் புதிய பூமியில் நித்தியமாக நாம் வாழ்வோம்.
வரப்போகும் எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்து யோவானிற்கு கூறிய பிறகு சிறிய புத்தகத்தை சாப்பிடும்படி கர்த்தர் அவனுக்கு கட்டளையிட்டு மீண்டும் தீர்க்கதரிசனம் கூறும்படி கட்டளையிட்டார். இந்த கடைசி நாட்களில் வாழும் பரிசுத்தவான்களுக்கு கர்த்தரின் ஊழியர்கள் போதிக்க வேண்டியது, எடுத்துக் கொள்ளப்படுதலையும், அதன் நேரத்தையுமாகும். வேதாகமத்தின் சொற்களின்படி அவர்கள் இப்போதங்களைப் போதிக்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து துல்லியமாக பிரசங்கிக்கவும் வேண்டும். இறுதி காலத்தில் வாழும் கர்த்தரின் ஊழியர்களும் அவரின் பரிசுத்தவான்களும் செய்ய வேண்டியது இதுவே. பரிசுத்தவான்களுக்கு இவ்வேலையைக் கர்த்தர் கொடுத்துள்ளார். அவர் தனது புதிரை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். தான் தாமதிக்காமல், தன் செயல்களை நிறைவேற்றுவதாக கர்த்தர் கூறுகிறார். நேரம் வருகையில் கர்த்தர் அனைத்தையும் நிறைவேற்றுவார்.
அதிகாரம் 11இல் இரண்டு ஓலிவ மரங்கள், அதாவது இரண்டு தீர்க்கதரிசிகள் தோன்றுகிறார்கள். இந்த இரு கர்த்தரின் ஊழியர்களும் இரண்டு ஓலிவ மரங்களால் குறிப்பிடப்படுகிறார்கள். அந்திகிறிஸ்துவினுடனான அவர்களின் போரில் அவர்கள் கொல்லப்பட்டு மூன்றரை நாட்களில் மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பப்படுவர். வேறு வார்த்தைகளில் கூறினால், அந்திகிறிஸ்துவினால் பரிசுத்தவான்கள் இரத்த சாட்சிகளாய் மரிக்கையில் எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும் என கர்த்தர் காட்டுகிறார்.
நமக்குத் தெரிந்தது என்னவெனில், பரிசுத்தவான்கள் மகா உபத்திரவக் காலத்தினு¡டே செல்வார்கள் என்பதும், ஏழு எக்காளங்களின் வாதைகளின் ஆறு வாதைகளின் போதும் இவ்வுலகில் வாழ வேண்டுமென்பதுமாகும். இந்த ஏழு எக்காளங்களின் வாதைகளினு¡டேயும் பரிசுத்தவான்களை கர்த்தர் பாதுகாப்பார். அதாவது ஆறாவது, வாதைவரை கர்த்தர் அவர்களைக் காப்பார். ஆனாலும் அந்திகிறிஸ்து தனது கொடுங்கோலாட்சியின் உச்ச கட்டத்திலிருக்கும் போது கர்த்தருடனான தனது இறுதி கட்ட போரில் அவர்களைக் கொன்றான். பரிசுத்தவான்கள் இப்போது தழுவும் மரணம் இரத்தசாட்சியாகும். தம்முடைய விசுவாசத்தைக் காத்துக் கொள்ள நீதியின் மரணத்தை அவர்கள் பெறுவதால் “இரத்தசாட்சிகள்” என இதனை நாம் அழைக்கிறோம். இந்த இரத்தசாட்சிக்குப் பிறகு எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும் என்பதை நாம் விசுவாசிப்பதோடு இவ்விசுவாசத்தை மற்றவர்களுக்கும் போதிக்க வேண்டும்.
மகா உபத்திரவக் காலத்திற்கு முன் எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழுமா அல்லது பிறகு எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழுமா என அநேகர் குழப்பத்திலுள்ளனர். உபத்திரவத்திற்கு பின்னால் கிறிஸ்து வருவாரெனவும், இயேசுவின் இந்த இரண்டாம் வருகையின் போது பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படுவர் என்றும் முன் காலத்தில் மக்கள் எண்ணுவதுண்டு. ஆனால் மகா உபத்திரவத்திற்கு முன்பே எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழுமென அநேக கிறிஸ்தவர்கள் இப்போது விசுவாசிக்கின்றனர். ஏழு எக்காளங்களின் வாதைகளும் ஏழு பாத்திரங்களின் வாதைகளும் தம்மை ஒன்றும் செய்யாது எனவும், தாம் தம் அன்றாட, அமைதியான, சிறப்பான வாழ்வின் போது எடுத்துக் கொள்ளப்படுவோம் எனவும் அவர்கள் எண்ணுகின்றனர். ஆனால் தவறான போதனைகளினால் நாம் ஏமாறக் கூடாது. எடுத்துக் கொள்ளப்படும் நேரத்தைக் குறித்து இம்மக்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். இறுதி காலம் நெருங்க நெருங்க அவர்களின் தெய்வ பக்தி குறைந்து, விசுவாசம் மறைந்து போகும்.
மகா உபத்திரவத்தின் நடுவில் எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும் என நான் கூறுவதின் மூலம் உங்களை அதிக அளவு பக்தியுடையவர்களாக மாற்ற முயலவில்லை. எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்த தெளிவான அறிவுடையவர்களாகவும் உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக் கொள்ளப்படும் என்ற தவறான போதகத்திலிருந்து தப்பிக்கவும் இதனை உங்களுக்கு கூறுகிறேன். ஏனெனில் வசனம் 6இல் கர்த்தர் விபரமாகக் கூறுகிறார் “இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று.” ஏழு பாத்திரங்களின் வாதைகள் ஊற்றப்படும் போது ஏழு எக்காளங்களின் வாதைகளைப் போலில்லாமல் இது தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக ஊற்றப்படும். பரிசுத்தவான்களாகிய நாம் இதனை அறிந்து கொள்ள வேண்டும்.
வெளி 16:1-2 கூறுகிறது, “அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழு தூதருடனே: நீங்கள் போய் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன். முதலாம் தூதன் போய், தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று.” இந்த முதல்வாதையை மற்ற பாத்திரங்களின் வாதைகள் தொடரும், அவை தானே இயங்குவதைப் போலிருக்கும். து¡தர்கள் தம் பாத்திரங்களை ஒவ்வொன்றாக காலி செய்வர். இப்போது எக்காளமோ, வேறெதுவோ ஊதப்படாது. வேறு வார்த்தைகளில் கூறினால், ஏழு பாத்திரங்களின் வாதைகளை ஒன்றன் பின் ஒன்றாக ஊற்றுவதால், கர்த்தர் இவ்வுலகை முற்றிலும் அழிப்பார். ஏன்? ஏனெனில் ஏழு எக்காளங்களின் வாதைகளுடன் ஏழு பாத்திரங்களின் வாதைகளையும் ஊற்றுவதுடன் எல்லாமே முடிந்து போகும்.
ஏழு எக்காளங்களின் வாதைகள் வரும் போது ஒரு வாதைக்கும் இன்னொரு வாதைக்கும் சிறிய இடைவெளி இருக்கும். ஆனால் ஏழு பாத்திரங்களின் வாதைகளுக்கிடையில் எந்த இடைவெளியும் இருக்காது. இந்த ஏழு பாத்திரங்களின் வாதைகளும் கடைசி நேரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதால் ஏழு எக்காளங்களின் வாதைகளும் ஒரு ஒழுங்கின் படி வந்து, கடைசி எக்காளம் ஊதப்படுகையில், உலகம் முற்றிலும் ஒரு புதிய நிலைக்கு மாறும். இங்கு எல்லாமே முடிந்து போகும்.
இதனால் தான் வெளி 11:15-18 கூறுகிறது “ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின. அப்பொழுது அவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம், தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர். ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம்வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.”
ஏழாம் து¡தன் எக்காளத்தை ஊதிய போது பலத்த சத்தம் “அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.” என்று கூறியதாக இங்கு எழுதப்பட்டுள்ளது. ஆனால் எவ்வித வாதையைக் குறித்தும் கூறப்படவில்லை. ஏன்? ஏழாம் எக்காளத்தின் பிறகு அதற்கான வாதை வராமல், எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழ்வதே அதற்கு காரணம். கர்த்தர் பரிசுத்தவான்களை உயிரோடெழும்பி எடுத்துக் கொள்வார். இதில் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மற்றும் இறந்து போன பரிசுத்தவான்கள் ஆகிய இருதிறத்தினரும் அடங்குவர். இந்த எடுத்துக் கொள்ளப்படுதல் முடிந்த பிறகு, ஏழு பாத்திரங்களின் வாதைகளைப் பொழிந்து, இவ்வுலகத்தை முற்றிலுமாக அழிப்பார்.
நாம் எடுத்துக் கொள்ளப்படும் நேரத்தை வெகு துல்லியமாக அறிந்து கொள்ள வேண்டுமானால் வெளி 10:7இலிலுள்ள கர்த்தரின் வார்த்தையை நோக்க வேண்டும். அவர் தனது ஊழியர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் கூறியபடி கர்த்தரின் புதிர் இப்போது மிக நிச்சயமாக முடிவு பெற்றிருக்கும். கர்த்தரின் புதிரென இங்கு அழைக்கப்படுவது பரிசுத்தவான்களின் எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறிக்கிறது.
நீங்கள் தெளிவாக புரிந்து கொள்வதற்கும் சரியான விசுவாசத்தைப் பெறுவதற்கும் இன்னுமொரு வசனத்தை இங்கு காட்டுகிறேன். மீண்டும் வேதாகமம் கூறுகிறது “இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம் (1 கொரிந்தியர் 15:51-52).” கடைசி எக்காளத்தின் போது பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்படுவர் என்று வேதாகமம் தெளிவாகக் கூறவில்லையோ? எக்காளம் ஊதப்படுகையில் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் அழியாதவர்களாக எழுப்பப்படுவர். நாமும் கூட எடுத்துக் கொள்ளப்படும் அந்நொடியிலேயே மாறுவோம்.
அதிகாரம் 11இல் தோன்றும் து¡தன் கர்த்தரால் அனுப்பப்பட்ட மகத்துவமுள்ள து¡தனாவான். இவன் முன்பு எக்காளங்களை ஊதிய ஆறு து¡தர்களிலிருந்து வேறுபட்டவன். அந்த வல்லமை மிக்க து¡தனை நாம் பார்க்கையில், அவன் கர்த்தரைப் போலவே தோன்றுவதால், அவன் தான் கர்த்தர் என தவறாக எடுத்துக் கொள்ளுவோம் “பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது. திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து, சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகாசத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.”
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இயேசு கிறிஸ்து செய்ய வேண்டியவைகளெல்லாம் அவர் சார்பாக இத்து¡தன் செய்வதால் இத்து¡தனைக் கர்த்தரென தவறுதலாகக் கருதுவோம். இந்த மகத்துவமுள்ள தேவது¡தன் மூலம் கர்த்தர் அனைத்துக் காரியங்களையும் செய்வார் என இது கூறுகிறது. இத்து¡தன் கடலில் ஒரு காலையும், தரையில் ஒரு காலையும் வைத்து அவை இரண்டையும் அழித்துப் போடுவான். இடி முழக்கங்கள் வரும் போது கர்த்தர் மனிதனையும் பிரபஞ்சத்தையும் படைத்த நேரம் கிறிஸ்துவுக்குள் அவர் திட்டமிட்ட அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்.
ஏழு எக்காளங்களின் வாதைகளில், பரிசுத்தவான்களாகிய நாம் முதல் ஆறு வாதைகளையும் நாம் அனுபவிப்போம். இதுவரையில் நற்செய்தியை நாம் பிரசங்கிப்போம். சிறிய புத்தகத்தைச் சாப்பிட்டு மீண்டும் தீர்க்கதரிசனம் கூறும்படி கர்த்தர் யோவானிடம் கூறினார். இந்த வார்த்தை உங்களுக்கும் எனக்குமானதாகும். அதாவது கடைசி தினம் வரை நம் விசுவாசத்தில் தரித்திருந்து தொடர்ந்து வாழ வேண்டும். ஏழாவது எக்காளம் முழங்கையில் நம் எடுத்துக் கொள்ளப்படுதல் நிறைவேறும் என்ற இந்த எடுத்துக் கொள்ளப்படுவதைக் குறித்த சத்தியத்தை உணர்ந்து விசுவாசத்துடன் அதனைப் பற்றிக் கொண்டு அந்நாள் வரை வார்த்தையைக் கேட்டு நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும்.
ஏழாம் எக்காளம் ஊதப்படும் வரை வாதைகளின் நடுவிலும் அந்திகிறிஸ்து செயல் பாடுடையவனாயிருப்பான். அவனால் பரிசுத்தவான்கள் இரத்தசாட்சியாவார்கள். அப்பரிசுத்தவான்கள் வெகு சீக்கிரமாக எடுத்துக் கொள்ளப்படுவர். இந்த நேரத்தில் கூட இயேசுவின் விசுவாசிகளின் இயேசுவின் மீதுள்ள விசுவாசம் வேர்வரை அசைக்கப்பட்டு அதன் உறுதியை இழந்து போனாலும், நீங்களும் நானும் விசுவாசத்துடன் வாழ வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஏழாம் எக்காளம் ஊதப்படுகையில் நம் எடுத்துக் கொள்ளப்படுதல் நடைபெறும் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும், இவ்விசுவாசத்துடன் நாம் வாழ வேண்டும்.
நம்முடைய சொந்தக் கண்களால் ஏழு எக்காளங்களின் வாதைகளை நாம் காண்போம். முதலிலிருந்து ஆறாவது வாதை வரை நம் கண்களால் கண்டு அதனை எண்ண முடியும். இதன் பிறகு நம்முடைய இரத்தசாட்சியாக மரிப்போம் என்ற உணர்வு நமக்குள் வரும் போது அதற்கேற்றபடி நாம் இரத்தசாட்சிகளாக்கப்படுவோம். இது கதையுமல்ல, விஞ்ஞானப் புதினமுமல்ல. உங்களுக்கேற்றவாறு அதனை விசுவாசிக்காமலிருக்க முடியாது. உங்களுக்கும் எனக்கும் இது தான் நடக்கும்.
வெளிப்படுத்தின விசேஷத்தில் நமது எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்து தெளிவாகக் கூறும் வசனமாகிய வெளி 10:6, ஏழாம் எக்காளம் ஊதப்படுவதுடன் பரிசுத்தவான்களின் எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும் எனவும், ஏழு பாத்திரங்களின் வாதைகளுடன் இவ்வுலகம் முடிவிற்கு வருமெனவும் கூறுகிறது. பரிசுத்தவான்களை எடுத்துக் கொண்ட பிறகு முழு உலகத்தையும் அதன் அழிவிற்கு கர்த்தர் எடுத்து வருவார். பரிசுத்தவான்கள் யாவரும் எடுத்துக் கொள்ளப்படும் போது தேவனை அவர்கள் ஆகாயத்தில் புகழ்வார்கள். ஆனால் இவ்வுலகில் ஏழு பாத்திரங்களின் வாதைகள் ஊற்றப்பட்டு, இவ்வுலகை அவை முற்றிலுமாக அழிக்கும். இந்த ஏழு பாத்திரங்களின் வாதைகள் முடியும் போது தேவனுடனே கூட பரிசுத்தவான்கள் புதிதாக்கப்பட்ட இப்பூமிக்கு வருவார்கள். அப்பொழுது கிறிஸ்துவின் ராஜ்யமாகிய ஆயிர வருட அரசாட்சி இப்பூமியில் கட்டப்படும்.
இன்றைய கிறிஸ்தவர்கள் உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக் கொள்ளப்படுதலை ஆதரிக்கிறார்கள். அவர்கள் ஆயிர வருட அரசாட்சி இல்லை என்று கூறுமளவிற்கு அதாவது ஆயிர வருட அரசாட்சி என்ற ஒன்றில்லை எனக் கூறுமளவிற்கு அவர்கள் சென்றுள்ளனர். அப்படியானால் ஆயிர வருட அரசாட்சி இல்லையா? இப்படி விசுவாசிக்கும் அநேகர் இருக்கிறார்கள். கொரியாவிலுள்ள மிகப் பெரிய ஆலயங்களில் பிரசங்கிப்பவர்கள் கூட, 666 என்ற குறியீட்டிலிருந்து எடுத்துக் கொள்ளப்படுதல் வரை வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ளவைகளெல்லாம் நடக்காது எனவும் அவை அடையாளம் மட்டுமே எனவும் அறிவிக்கிறார்கள். நம் தேவன் ஒருமுறை “மனித குமாரன் வருகையில், விசுவாசத்தை இப்பூமியில் அவர் காண்பாரா” எனக் கேட்டதைப் போல் இக்கடைசிக் காலத்தில் உண்மை விசுவாசிகளைக் காண்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது.
நம்முடைய எடுத்துக் கொள்ளப்படுதல் நடக்குமென தேவன் நம்மிடம் கூறுகிறார். நாம் எடுத்துக் கொள்ளப்படும் போது தேவனை நாம் ஆகாயத்தில் சந்தித்து அவரைப் புகழுவோம். அவரால் ஆறதலடைந்த நாம், அவருடனே கூட மீண்டும் பூமிக்குத் திரும்பி வருவோம். ஆயிர வருட அரசாட்சிக்குள் வரும் நாம் புதிததான உயிரோடெழுப்பப்பட்டு மறுரூபமடைந்த சா£ரத்துடன், புதிதாக்கப்பட்ட உலகில், ஆசீர்வாதத்துடன் மாறுபட்ட வாழ்வை வாழ்வோம். கர்த்தரின் மகிமையால் தரிப்பிக்கப்பட்டவர்களாய் வாழுவோம். இத்தகைய விசுவாசத்துடனும் நம்பிக்கையுடனும் நீங்களும் நானும் வாழ வேண்டும். ஆயிரம் வருட அராட்சி முடியும் போது புதிய வானம் மற்றும் புதிய பூமியில் நித்தியமான மரியாதையுடனும் மகிமையுடனும் கிறிஸ்துவுடனே கூட அரசாளுவோம்.
ஆயிர வருட அரசாட்சிக்குள்ளும் புதியவானம் மற்றும் புதிய பூமி ஆகியவற்றுள்ளும் நாம் பிரவேசிக்கும் போது அனைத்து தேவது¡தர்களும் நமது பணியாட்களாவர். ஆவிக்குரிய அனைத்துக் காரியங்களும், கர்த்தராலும் இயேசு கிறிஸ்துவாலும் படைக்கப்பட்ட முழு உலகமும், அதிலுள்ள அனைத்தும் யாருக்கும் சொந்தம்? அவையெல்லாம் நம்முடையதாகும். அதனால் தான் எல்லாவற்றையும் சுதந்தரிப்பவர்கள் பரிசுத்தவான்களே என வேதாகமம் கூறுகிறது. நீங்களும் நானும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்களாயிருப்பதால் நாம் கர்த்தருடையதும் கிறிஸ்துவினுடையதுமான வாரிசுகளாயிருப்போம். எல்லாமே அவர்களுடையதாகும். விசுவாசத்துடன் இவ்வுலகின் கஷ்டங்களை மேற்கொண்டு, இவற்றை நாம் சுதந்தரிக்கும் நாளிற்காக காத்திருக்க வேண்டும். கர்த்தரின் சிறப்பு போர் வீரர்களான நம்மிடம் போரிடக் கூடிய விசுவாசம் இருக்க வேண்டும்.
எந்த தாமதமுமின்றி இவையெல்லாம் சீக்கிரமாக நிறைவேற்றப்படும் என கர்த்தர் கூறினார். வேறு வார்த்தைகளில் கூறினால், அவை சீக்கிரமாக நிறைவேற்றப்படும். இதனைக் குறித்து கர்த்தர் ஏன் இன்னமும் விளக்கமாக் கூறவில்லை என சிலர் நினைக்கலாம். கர்த்தரின் செயல்களை மறைத்து வைப்பது அவர் ஞானம் (நீதிமொழிகள் 25:2, லு¡க்கா 10:21) என்பதே இக்கேள்விக்கான பதிலாகும்.
கர்த்தருடைய திட்டங்கள் விபரமாக எழுதப்பட்டிருந்தால், இவ்வுலகில் குழப்பமுண்டாக அதுவே காரணமாக இருக்கும். அப்படிபட்ட நிலையில் பரிசுத்தவான்களால் கடைசி தினம் வரை இப்பூமியில் வாழ முடியாது. அவ்விசுவாசிகளால் அனைத்து பரிசுத்தவான்களும் கொல்லப்படுவர். ஒரு பரிசுத்தவானால் கூட தப்பிக்க முடியாது. முடிவு காலத்தில் நடைபெறுவதைக் குறித்த விபரங்கள் வேதாகமத்தில் எழுதப்பட்டிருந்தால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறந்தவர்கள் அவிசுவாசிகளால் வெட்டப்படுவர். அவரின் புதிர்களை மறைத்து வைத்திருப்பதால் விரும்புகிறவர்களுக்கு மட்டுமே கர்த்தர் அவற்றை வெளிப்படுத்துகிறார். மற்றவர்களுக்கோ அதனைப் புதிராகவே வைத்திருக்கிறார். இதுவே கர்த்தரின் ஞானமாகும். கர்த்தர் நமக்குத் தன் திட்டங்களை வெளிப்படுத்தி, அதனை அறிந்து கொள்ள நம்மை அனுமதித்தார். இது ஏனெனில், இதனைத் தெரிந்து கொள்வது இக்காலத்துப் பரிசுத்தவான்களுக்கு அவசியமாயிருக்கிறது.
மறுபடியும் பிறந்த கர்த்தரின் ஆலயங்கள் முடிவு காலத்தைக் குறித்து விபரமாகப் பேசுகின்ற என்பது கடைசி நாட்கள் சீக்கிரமாக வருகின்றன என பொருள்படும். உபத்திரவ காலம் மிகவும் அருகிலிருப்பதால் வெளிப்படுத்தலின் வார்த்தைகள் பிரசங்கிக்கப்படுகின்றன. ஆகவே வரப் போகும் இந்த உபத்திரவத்தை மேற்கொள்ளவும் முடிவு காலத்தைக் குறித்த சரியான அறிவையும் பெற பரிசுத்தவான்களால் முடியும். எந்த அறிவுமின்றி உபத்திரவத்தை மறுபடியும் பிறந்தவர்கள் சந்தித்தால் உண்மையாகவே உபத்திரவம் வரும் போது என்ன செய்வது என்ற குழப்பத்திற்குள்ளாவர். தம்முடைய சொந்த விசுவாசத்தை மட்டுமே சார்ந்திருப்போருக்கு இக்குழப்பமானது இன்னமும் அதிகமாயிருக்கும்.
ஆயத்தம் செய்யாத ஆத்துமாக்கள் தம் அறிவீனத்தாலும் குழப்பத்தாலும் முடிவு காலம் வரும் போது தவறான பாதைகளில் செல்வர். “கர்த்தர் உங்களிடம் எதையாவது கூறினாரா?” “நீங்கள் ஜெபிக்கும் போது காட்சிகள் எதையும் உங்களுக்கு காட்டினாரா?” முடிவு காலத்தில் கர்த்தரிடமிருந்து காட்சிகளைக் காணுவதை அநேகர் எதிர்பார்த்து தவிப்பர். அநேகர் தாம் காட்சிகளைக் கண்டதாகக் கூறுவர் “நீங்கள் ஜெபிக்கும் போது கர்த்தர் உங்களிடம் எதையும் கூறவில்லையா?” பரிசுத்தவான்கள் அறிவில்லாதவர்களாயிருந்தால் முடிவு காலத்தில் இத்தகைய கேள்வி வெகு சாதாரணமானதாயிருக்கும்.
“ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்று ஏற்கனவே கர்த்தர் நமக்கு கூறியபடியால் கர்த்தர் இப்படியாக செயல்புரிவதேயில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் பரிசுத்த ஆவியானவர் ஆலயங்களுக்கு கூறுவதை மட்டுமே நாம் கேட்க வேண்டும். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் கர்த்தரின் வார்த்தைக்கு உறுதியளிக்கும் விதமாக உண்மையானவைகளையும் சரியானவைகளையும் குறித்து மட்டுமே சாட்சி கூறுகிறார். உலகின் முடிவு வரும் போது வாதைகள் கதவருகில் நிற்கும் போது அந்த வாதைகளின் ஆச்சரியங்களில் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது. ஆனால் விசுவாசத்தினால் வாழ வேண்டும். ஏனெனில் அதற்கு முன்பே சத்தியத்தின் வார்த்தைகளைக் கேட்டு அதனை நம்மிருதயங்களில் எழுதியவர்களாய் நாமிருப்போம்.
இதனால் தான் எதிர்காலத்தில் வரப்போகிறவைகளைக் குறித்து யோவான் நமக்கு முன்னதாகவே வெளிப்படுத்தினான். இதனால் தான் எழுதப்பட்ட வார்த்தையின் எல்லைக்குள்ளாக கர்த்தரின் ஊழியர்கள் உண்மையைப் பிரசங்கிக்கிறார்கள். எழுதப்பட்ட கர்த்தரின் வார்த்தையிலிருந்து வருபவைகளைக் குறித்து அறிந்து அதனைப் பிரசங்கிப்பதே தீர்க்கதரிசனம் கூறுவதாகும். கனவுகளிலும் ஜெபத்திலும் காட்சியைக் கண்டதாக கூறுவது சரியல்ல.
நாம் கர்த்தரின் பரிசுத்தவான்கள் என்பதையும் நம்முடைய எடுத்துக் கொள்ளப்படுதல் நிச்சயமாய் வருமென்பதையும் நாம் மறக்கவே கூடாது. நீங்கள் இப்போது பரிசுத்தவானாகிவிட்டீர்கள் என்பதையும், உங்கள் எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும் போது கிறிஸ்துவுடனே கூட ஆகாயத்திலிருப்பீர்கள் என்பதையும், இன்னுமொரு ஆயிரம் வருடங்கள் வாழும்படி புதிதாக்கப்பட்ட பூமிக்கு மீண்டும் வருவீர்கள் என்பதையும் புதிய வானம், புதிய பூமியில் நித்தியமாக வாழுவீர்கள் என்பதையும் மறக்கக்கூடாது. உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்தோ உபத்திரவத்திற்கு பிறகு எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்தோ, ஆயிர வருட அரசாட்சி இல்லை என்பதைக் குறித்தோ யாராவது பேசிக் கெண்டிருந்தால் நாம் கண்ட இவ்வசனங்களைக் காட்டி அதன் மூலம் உண்மையை அவர்களுக்குத் தெரிவிக்கவும். 1 தெசலோனிக்கேயர் 4 மற்றும் 1 கொரிந்தியர் 15 ஆகியவற்றையும் அவர்களுக்கு காட்டி பிரதான து¡தன் எக்காளத்தை ஊதுகையில் தேவன் இறங்கி வந்து தம்முடனே கூட பரிசுத்தவான்களை ஆகாயத்திற்கு எடுத்துக் செல்வார் என்பதை அவர்களுக்குக் கூறவும். இந்த எடுத்துக் கொள்ளப்படுதலை விசுவாசிக்கும் போது மட்டுமே உங்கள் விசுவாசத்தை பாதுகாக்க முடியும்.
எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமானால் இரத்த சாட்சியும் சா£ரம் உயிரோடெழும்புவதும் நடைபெற வேண்டும். எடுத்துக் கொள்ளப்படுதல் உயிரோடெழுப்பப்படுவதுடன் நிகழ்வதால், நாம் உயிரோடெழுப்பப்பட்டவுடனேயே எடுத்துக் கொள்ளப்பட்டு ஆகாயத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவோம். ஆகவே எடுத்துக் கொள்ளப்படுதலும் உயிரோடெழுப்பப்படுவதும் ஒன்றேயாகும். முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கேற்பது என்பது ஆயிர வருட அரசாட்சியில் தேவனுடன் வாழ்வது என பொருள்படும். எடுத்துக் கொள்ளப்படுதல் என்பதும் இப்பூமியில் ஆயிரம் வருடங்கள் தேவனுடன் வாழ்வோம் என பொருள்படும்.
அப்படியானால் நாமேன் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்? ஏழு பாத்திரங்களின் வாதைகளை இப்பூமியின் மீது ஊற்றி இப்பூமியிலுள்ள அனைத்தையும் கர்த்தர் அழிப்பதனாலே அதாவது அழிவை உண்டாக்கும் இந்த வாதைகளிலிருந்து தம்முடைய பிள்ளைகளை தப்புவிப்பதற்கு பரிசுத்தவான்களை அங்கிருந்து அகற்றுவார். பரிசுத்தவான்களைப் பாவிகளிலிருந்து பிரிக்கவும், அவர்களின் செல்ல வேண்டிய இடத்தைக் காட்டவும், அவர் அவர்களை எடுத்துக் கொள்கிறார். நாம் இவற்றையெல்லாம் நம் எடுத்துக் கொள்ளப்படுதல், உயிரோடெழுப்பப்டுதல் மற்றும் இரத்த சாட்சி ஆகியவற்றை விசுவாசிக்க வேண்டும்.
சிலருக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது விளக்கமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சிலருக்கோ அது முற்றிலும் இரகசியமாக மறைக்கப்பட்டுள்ளது. அதுபோலவே பரிசுத்தவான்கள் இரத்த சாட்சியாக மரிப்பதும், உயிரோடெழும்புவதும், எடுத்துக் கொள்ளப்படுவதும், ஆயிர வருட அரசாட்சியில் அவர்கள் ஆளுவதும், புதிய வானமும் புதிய பூமியும் கர்த்தரின் இரகசியங்களாகும். இந்த இரகசியங்களை அவர்கள் விசுவாசிக்கும் படி செய்து முடிவு காலத்தில் அவர்கள் வாழ்ந்து பரலோக ராஜ்யம் மற்றும் எடுத்துக் கொள்ளப்படுதலின் மீதுள்ள விசுவாசத்தால் கஷ்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
இத்தகைய விசுவாசத்தை நீங்களும் நானும் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய விசுவாசம் அதாவது நாம் எடுத்துக் கொள்ளப்படுவதையும், புதிய வானம் புதிய பூமியில் நாம் வாழுவோம் என்பதையும், அந்திகிறிஸ்துவால் நாம் சாய்க்கப்படுகையில் தேவன் நம்மை உயிரோடெழுப்புவார் என்பதையும், எடுத்துக் கொள்வார் என்பதையும், ஆகாயத்தில் சஞ்சரிக்கும் படி செய்வார் என்பதையும், ஆயிரம் வருடங்கள் அவருடனே வாழும்படியாக பூமிக்கு திரும்புவோம் என்பதையும் விசுவாசிக்காது இந்த கடைசிக் காலத்தின் கடினமான காலத்தில் தொடர்ந்து வாழ முடியாது.
பரிசுத்தவான்களிடம் அழகிய கனவொன்றிருக்கிறது. நம் தேவனைத் தவிர வேறு யாராலும் இதனை நனவாக்க முடியாது. இந்த நம்பிக்கையில்லாவிட்டால் மோசமான இவ்வுலகில் கவலையுடனும் துன்பத்துடனும் நாம் வாழ்வோம்.
தனக்குக் கிட்டிய அருமையானதை வைத்திருக்குமாறு பவுல் தீமோத்தேயுவிடம் கூறினான். இந்த நற்செய்தி அழகானது, இதைப் போன்றவைகளே இரத்தசாட்சி உயிரோடெழும்புதல் மற்றும் எடுத்துக் கொள்ளப்படுதல்; இதைப் போன்றே ஆயிரம் வருட அரசாட்சியிலும் புதிய வானம் புதிய பூமியில் வாழுவதும் மகிழ்ச்சியாயிருக்கும். இவையெல்லாம் நல்ல, அழகிய காரியங்கள். அவை பரிசுத்தவான்களுக்கு மட்டுமே உரியவை, அவற்றை விசுவாசம் மற்றும் நம்பிக்கையினாலே நனவாக்க முடியுமேயன்றி கற்பனைகளினாலும் காட்சிகளாலும் நனவாக்க முடியாது. இந்த நம்பிக்கையும் விசுவாசமும் தேவனால் கொடுக்கப்பட்டவைகள். இவற்றின் மீதுள்ள விசுவாசத்தினால், ஆயிர வருட அரசாட்சியும் புதிய வானமும், புதிய பூமியும் எப்போது வருமென்ற நம்பிக்கையுடன் இக்காலத்தில் நாம் வாழ்ந்திருக்க வேண்டும்.
எடுத்துக் கொள்ளப்படுவது நீங்களும், நானுமே. நாம் விசுவாசத்துடன் வாழ வேண்டும். எப்போது எடுத்துக் கொள்ளப்பட்டு தேவனுக்கு முன்பு நிற்போமென்று ஆயிர வருட அரசாட்சி மற்றும் புதிய வானம் புதிய பூமி ஆகியவற்றிற்காக விசுவாசத்துடன் காத்திருக்க வேண்டும்.
வரப் போகிறவர் சீக்கிரமாக வருகிறார் என்று கர்த்தர் கூறுகிறார். மகா உபத்திரவக் காலத்தின் ஏழாண்டு காலத்தின் முதல் பாதி காலத்தில் வரும் வாதைகள் மெதுவானவைகளும் குறுகிய காலமும் இருக்கக் கூடியவை. இந்த வாதைகள் ஏழாண்டு காலத்திலும் தொடர்ந்திருந்தால், அதை எப்படி தாக்குபிடிக்க முடியும்? முதலில் வரும் வாதைகள் குறுகியவைகள். முடிவு நெருங்கும் போது அவை அதிகரிக்கும். ஏழாம் எக்காளத்தின் வாதை வரும் போது அது மகத்தானதொரு காட்சியாயிருக்கும்.
பரிசுத்தவான்களின் விசுவாசத்தை ஆடச் செய்ய சாத்தான் முயலுகையில், சில ஆலயத் தலைவர்களைக் கொன்று அவர்களை உதாரணமாக காட்டுவான். சாத்தான் இப்படிக் கூறலாம் “கர்த்தரை மறுதலித்தால் நான் உன்னை உயிருடன் விடுவேன்” உலகம் மீண்டும் நல்லபடியாவதாகத் தோன்றினாலும், சாத்தானின் இந்த அருளைக் குறித்து இருமுறைச் சிந்திக்க வேண்டும். ஏழு பாத்திரங்களின் வாதைகளை தேவன் பொழிவிப்பாரெனவும், இந்த வாதைகளினால் உருவாகும் எல்லாத் துன்பங்களுக்குள்ளும் செல்ல வேண்டுமெனவும் நன்கு அறிந்த ஒருவர் தேவனை எப்படி மறுதலிப்பான்? உலகின் முடிவினைக் குறித்து அறிந்த பரிசுத்தவான்கள் தேவனை மறுதலிக்கவும் மாட்டார்கள். நம்முடைய இருதயங்களில் பரிசுத்த ஆவியானவர் இருப்பதால் அவர் நமக்கு தைரியத்தைத் தருவார்.
முடிவு காலத்தில் கர்த்தரின் திட்டங்கள் துரிதமாக நிறைவேற்றப்படுவதால் சலிப்படைய அங்கு இடமில்லை. குறுகிய காலமேயிருக்கும் வாதைகள் முடியும் போது உயிரோடெழுப்புதலும், எடுத்துக் கொள்ளப்படுதலும் நிகழும். இது ஆகாயத்திற்கு நம்மை எடுத்துச் செல்லும். நம்முடைய மாமிச சா£ரமானது ஆவிக்குரிய சா£ரமாகி தேவனைத் துதிப்பதை எண்ணிப் பாருங்கள். கர்த்தரின் ராஜ்யத்தில் முற்றிலும் வேறு வகையான ஒரு உலகத்தை அனுபவிப்போம். அது அழகாகவும் அருமையானதாகவும் இருக்கும். இதைப் போல் பூமியில் நாம் அனுபவித்திருக்கவே மாட்டோம். ஆவிக்குரிய சா£ரத்திற்கு நேரமும் இடமும் எல்லையாகாது. ஆகவே அதிசயமான உலகில் நாம் வாழ்வதோடு எங்கு வேண்டுமானலும் நாம் செல்லலாம்.
இத்தகைய பெரிதான ஆசீர்வாதங்களை அளித்த கர்த்தருக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன். மகா உபத்திரவத்தைக் குறித்தும், அதன் வாதைகளைக் குறித்தும் நமது இரத்த சாட்சியைக் குறித்தும் உயிரோடெழுப்பப்படுவதைக் குறித்தும் எடுத்துக் கொள்ளப்படுவதைக் குறித்தும் விளக்கமாக எங்களுக்கு வெளிப்படுத்திய கர்த்தருக்கு நான் நன்றி கூறுகிறேன். கடைசி காலத்தை அறிந்து அதனை விசுவாசிப்பவையாக நம்மிருதயங்கள் எப்போதும் இருக்கட்டும் எனவும் ஜெபிக்கிறேன்.