(வெளி 11:1-19)
இரண்டு தீர்க்கதரிசிகளைக் கர்த்தர் ஏன் இஸ்ரவேல் மக்களிடம் அனுப்ப வேண்டும்? இஸ்ரவேல் மக்களை இரட்சிப்பதற்காக கர்த்தர் அப்படிச் செய்வார். தன்னுடைய இரண்டு சாட்சிகளும் 1260 நாட்கள் சாட்சி கூறும்படி கர்த்தர் செய்வாரென முக்கிய வசனங்கள் கூறுகின்றன. இஸ்ரவேலர்களை இரட்சிப்பதற்கான கடைசி முயற்சி இதுவாகும். இப்படியாக இஸ்ரவேல் மக்களை கர்த்தர் இரட்சிக்கிறார் என்பது உலகத்தின் முடிவு வந்துவிட்டது என்று கூறுவதாயிருக்கும்.
வசனம் 2 கூறுகிறது “ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிறபிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.” கொடியவாதைகள் புறஜாதியார் மீது வருகையில் ஏழாண்டு கால மகா உபத்திரவகாலம் தொடங்கி சிறிது சிறிதாக பெருங்குழப்பத்தையும் வாதைகளையும் எடுத்து வந்து, நற்செய்தியைக் கேட்டு விசுவாசித்த புறஜாதியார்களும் இரத்தசாட்சியாக்கப்படுகையில் இஸ்ரவேல் மக்களுக்காக இரண்டு தீர்க்கதரிசிகளை கர்த்தர் உருவாக்கி இயேசுவே கர்த்தரெனவும் இரட்சகரெனவும் சாட்சியாக அறிவிக்கச் செய்து இப்படியாக இஸ்ரவேலரை இரட்சிப்பார் என இது பொருள்படுகிறது. இவையெல்லாம் வரப்போகிற கர்த்தரின் செய்கைகள் என இது கூறுகிறது.
சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு தம் பிரிவின் தலைவர்களே இறுதி காலத்தின் இரண்டு ஒலிவ மரங்களென்றும், அவர்களுடைய பிரிவினைத் தோற்றுவித்த ஸ்தாபகரே முடிவு காலத்திற்காக தீர்க்கதரிசனம் கூறப்பட்ட எலியா எனவும் கூறுபவர்களுக்கும் இந்த வார்த்தையை நாம் போதிக்க வேண்டும். உலகப்படியான ஆலயங்கள் வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்து பேசும் போதெல்லாம் ஒலிவ மரங்களைப் பற்றி கூறும் இந்த வசனத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். வேதப்புரட்டர்களின் பிரிவு மக்களில் இதுவரை என் விசுவாச வாழ்வில் சந்தித்த அனைவரும் இங்கு குறிப்பிடப்பட்ட இரண்டு ஒலிவ மரங்களும் அவனின்/அவளின் மதப் பிரிவின் தலைவர் எனக் கூறாமலிருக்கத் தவறியதில்லை. எனக்குத் தெரிந்த எல்லா வேதப்புரட்டர்களும் இதனைக் கூறியவராவார்.
ஆனால் வெளிப்படுத்தலில் காணப்படும் இரண்டு ஒலிவ மரங்களும் இரண்டு விளக்குத் தண்டுகளும் இந்த வேதப்புரட்டர்கள் வலியுறுத்துபவைகளைப் போன்றவையல்ல. உண்மையில் கூறினால் இந்த இரண்டு ஒலிவ மரங்களும் இரண்டு தீர்க்கதரிசிகளைக் குறிப்பிடுகின்றன. இஸ்ரவேலர்களை இரட்சிக்கும்படி அவர்களிலிருந்தே தோற்றுவிப்பர்.
இஸ்ரவேல் மக்களை கர்த்தர் எப்படி இரட்சிப்பார் என அதிகாரம் 11 தெளிவாகக் கூறுகிறது. ரோமர் புத்தகத்தின் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எப்படியொரு கரு இருக்கிறதோ அதுபோலவே வெளிப்படுத்தின விசேஷத்தின் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஒரு கருப் பொருள் இருக்கிறது. இந்த கருப் பொருளை அறிந்து கொள்வதின் மூலமே இந்த அதிகாரம் என்னவென புரிந்து கொள்ள முடியும். நாற்பத்தி இரண்டு மாதங்கள் புற ஜாதியாரின் காலம் ஒழிந்தது எனவும், இஸ்ரவேலரின் இரட்சிப்பிற்கான காலம் தொடங்கியது எனவும், இதிலிருந்து இஸ்ரவேலர் மட்டுமே இரட்சிக்கப்படுவார்கள் எனவும் சில மக்கள் கூறுவர்.
இது உண்மைக்கு அப்பாற்பட்டது. உபத்திரவத்திலிருந்து இரட்சிக்கப்பட்டவர்களாய் கணக்கிலடங்காத புற ஜாதியார் வருவரென அதிகாரம் 7 நமக்கு கூறுகிறது. அதாவது புறஜாதியாரும் இஸ்ரவேலரும் உபத்திரவத்தின் போது இரட்சிக்கப்படுவார்கள். இஸ்ரவேலர்கள் மட்டுமல்ல. இறுதிகாலத்தில் இஸ்ரவேல் மக்களை இரட்சிக்க கர்த்தர் இரண்டு தீர்க்கதரிசிகளை தோற்றுவிப்பார் என்பதைத் தான் அதிகாரம் 11 கூறுகிறது. இதன் பொருள் இதன் பிறகு புறஜாதியார் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்பதல்ல.
சிலர் உடனே கேட்பார்கள், அப்படியானால் இஸ்ரவேலர்களில் 144,000 பேர் ஏற்கனவே இரட்சிக்கப்படவில்லையா, அதிகாரம் 7 கூறுவதைப் போல் கர்த்தரால் முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுதானே? முத்திரையிடப்பட்டது இரட்சிக்கப்படுவதற்கு ஈடாகாது. இயேசு கிறிஸ்துவினாலேயல்லாமல் யாருக்கும் இரட்சிப்பு கிட்டாது. இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து நம் அனைத்துப் பாவங்களையும் ஞானஸ்நானத்தினால் ஏற்றுக் கொண்டு இவ்வுலகத்தின் அனைத்துப் பாவங்களையும் சிலுவைக்கு எடுத்துச் சென்று அதில் மரித்து மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுப்பினார் என்பதை விசுவாசிப்பதன் மூலமே இரட்சிக்கப்பட முடியும்.
நாம் மரிக்கும் வரை பாவம் செய்யப் போகிறவர்கள் என நமக்குத் தெரிந்தாலும், இயேசு கிறிஸ்து நம்முடைய எல்லாப் பாவங்களையும் மறையச் செய்து நமது இரட்சகரானார் என்பதை விசுவாசிப்பதன் மூலம் நாம் இரட்சிக்கப்பட்டோம். 144,000 இஸ்ரவேலர்கள் முத்திரிக்கப்பட்டிருந்தாலும், கர்த்தர் தனது இரு தீர்க்கதரிசிகளையும் எழுப்பி, அவர்கள் மூலமாக தனது நற்செய்தியை இந்த இஸ்ரவேலர்களுக்கு பிரசங்கிப்பார். வேறு வார்த்தைகளில் கூறினால் இந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் நற்செய்தியை இஸ்ரவேலருக்கு போதிப்பதன் மூலம் அவர்களின் 144,000 பேர் இரட்சிக்கப்படுவர் என வார்த்தை நம்மிடம் கூறுகிறது.
வேதாகம் பாகுபாடோ அல்லது முன்தீர்ப்போ உடையது அல்ல. இயேசுகிறிஸ்துவினாலேயே அல்லாமல் யாராலும் இரட்சிப்படைய முடியாது. இயேசு கிறிஸ்துவின் மூலம் அல்லாமல் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள், அல்லது நீங்கள் இரட்சிக்கப்படவில்¨ல் என கர்த்தர் கூறவில்லை.
இந்த வசனங்களில் இரண்டு ஒலிவ மரங்கள் என்று குறிப்பிடப்படும் இரண்டு தீர்க்கதரிசிகளும் கொல்கொதா என்ற இடத்தில் கொல்லப்படுவர். அவர்களுடைய சா£ரத்தைப் புதைக்காமல் அப்படியே விட்டு விடுவர். இயேசுவை விசுவாசிக்காதவர்களும், ஏற்றுக் கொள்ளாதவர்களும் அவர்களின் மரணத்தில் மகிழ்ந்து ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறுவர். ஆனால் வசனம் 11 மற்றும் 12 ஆகியவைக் கூறுகின்றன, “மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று. இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள், அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.”
இது நேரடியாக கூறுகிறது. அதாவது, நீ புறஜாதியாராகிய நீங்களும் நானும் சமயம் வரும் போது விசுவாசத்திற்காக நாம் இரத்தசாட்சிகளாவோம். நம்முடைய இரத்தசாட்சிக்கு பிறகு உயிரோடெழும்புதலும் எடுத்துக் கொள்ளப்படுதலும் வரும். இந்த செய்தி வெளிப்படுத்தின விசேஷத்தின் முழுவதிலும் தோன்றுகிறது. ஏழு பாத்திரங்களின் வாதைகள் பூமியில் ஊற்றப்படும் போது எடுத்துக் கொள்ளப்பட்ட பரிசுத்தவான்கள் ஆகாயத்திலிருந்து கர்த்தரைப் புகழுவதாக கூறும் வசனங்களும் உள்ளன.
அதிகாரம் 14 இரட்சிக்கப்பட்ட 144,000 பேரைக் குறித்து கூறுகிறது. அவர்கள் கர்த்தரைப் புகழ்ந்து ஒரு பாடலைப் பாடுகிறார்கள். அதனை இரட்சிப்பின் முதற்கனிகளைத் தவிர வேறு யாராலும் பாட முடியாது. இஸ்ரவேல் மக்கள் இரட்சிப்படையும் போது அவர்கள் எல்லா இடத்திலும் இரத்தசாட்சியாகி அதற்கு பிறகு உயிரோடெழுப்பப்படுவதும் எடுத்துக் கொள்ளப்படுதலும் நிகழும் என இது கூறுகிறது.
புறஜாதியாருக்கும் இது பொருந்தும். முடிவு காலத்தில் ஏழு எக்காளங்களின் வாதைகளினினு¡டே அநேக கஷ்டங்களை அனுபவிப்போம். ஆனால் இத்தகைய வாதைகளிலிருந்து கர்த்தர் நம்மை பாதுகாப்பார். ஏழாண்டின் மகா உபத்திரவம் அதன் உச்சிக்கு செல்கையில் முதல் மூன்றரையாண்டுகள் முடிகையில் பரிசுத்தவான்களை துன்புறுத்துவதும் அதன் உச்சிக்கு செல்லும். அநேக பரிசுத்தவான்களும் கர்த்தரின் ஊழியர்களும் இரத்த சாட்சியாக கொல்லப்படுவர். அவர்கள் இரத்த சாட்சியாக மரித்து பிறகு வெகு சீக்கிரமாக எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும்.
ஏன்? ஏழு பாத்திரங்களின் வாதைகள் பூமியில் ஊற்றப்படும் போது பரிசுத்தவான்கள் பரலோகத்தில் கர்த்தரைப் புகழ்ந்து கொண்டிருப்பார்களென வெளிபடுத்தின விசேஷம் மீண்டும் மீண்டும் கூறுகிறது. வார்த்தை இதனை மிக்க நன்று என விளக்குகிறது.
வெளி 10:7 கூறுகிறது “இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று.” தேவரகசியம் என்பது எடுத்துக் கொள்ளப்படுதலையே குறிக்கிறது. 1 தெசலோனிக்கேயர் 4:16ல் அப்போஸ்தலனாகிய பவுல் நம்மிடம் கூறுகிறான், “ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.”
தேவன் பரலோகத்திலிருந்து இறங்குவார் என்பது அவர் உடனடியாக பூமிக்கு வருவார் என்று பொருள்படாது. அவர் பரலோகத்திலிருந்து ஆகாயத்திற்கு வந்து, படுத்திருப்பவர்களை உயிரோடெழுப்பி மறுபடியும் பிறந்தவர்களை எழுப்புவதுடன் ஆகாயத்தில் தேவனைச் சந்திக்கும்படி பரிசுத்தவான்கள் அங்கு எடுத்துக் கொள்ளப்படுவது நேரடியாக நிகழும். ஆட்டுக் குட்டியானவரின் திருமண விருந்து ஆகாயத்தில் நடைபெற்ற பிறகு மீதியிருக்கும் ஏழு பாத்திரங்களின் வாதைகளையும் இப்பூமியில் ஊற்றி இந்த பூமி முற்றிலுமாக அழிந்த பிறகு நம்முடனே கூட தேவனும் கூட புதிதாக்கப்பட்ட இவ்வுலகிற்கு இறங்கி இன்னமும் அங்கு உயிருடனிருப்பவர்களுக்கு காட்சியளிப்பார்.
ஒருவரின் சொந்த யோசனைகளின் அடிப்படையில் வெளிப்படுத்தின விசேஷத்தையும் வேதாகமத்தையும் விளக்குவது அழிவின் பாதைக்கு கொண்டு செல்லும். சில இறையியலாளர்கள் அறிவித்த வெறும் கொள்கைகளை விசுவாசிப்பது தவறு. மேலும் வார்த்தையை தெளிவாக புரிந்து கொள்ளாமல் இத்தகைய வலியுறுத்தல்களுக்கு பரிந்து பேசுவதும் தவறானது.
கிறிஸ்துவ சமுதாயத்தில் மிகவும் பிரபலமான மரியாதைச் செலுத்தப்பட இறையியலாளர்கள் எல்.பெர்காஃப் மற்றும் ஆபிரகாம் குய்ப்பர் ஆகியோராவர். இவர்கள் ஆயிர வருட அரசாட்சி இல்லை எனக் கூறினர். உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக் கொள்ளப்படுதல், உபத்திரவத்திற்கு பிந்திய எடுத்துக் கொள்ளப்படுதல், ஆயிரம் வருட அரசாட்சி இல்லை என்பனவற்றில் கடைசி தத்துவமாகிய ஆயிரம் வருட அரசாட்சி இல்லை என்பதை விசுவாசிப்பது வேதாகமத்தை விசுவாசிக்காததற்கு ஒத்ததாகும்.
உபத்திரவத்திற்கு பிந்திய எடுத்துக் கொள்ளப்படும் தத்துவத்தை மக்கள் விசுவாசிக்கும் காலம் சென்றுவிட்டது. இக்காலத்தில் எல்லோரும் உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக் கொள்ளப்படுதலை விசுவாசிக்கிறார்கள். ஆனால் இத்தத்துவமும் கூட வேதாகமத்தின் படியானதல்ல. ஆயினும் எப்போதெல்லாம் உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்து கூறப்படுறதோ அதனை மக்கள் விரும்புகின்றனர். ஏன்? ஏனெனில் உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக் கொள்ளப்படும் தத்துவத்தின்படி ஏழாண்டுகளின் மகா உபத்திரவத்தைக் குறித்து கிறிஸ்தவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
அனலுமில்லாத குளிருமில்லாத ஒரு விசுவாசத்துடன் வாழ்வது விசுவாசிகள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாயிற்று. ஆலயங்களைப் பொறுத்தவரை தமது சபையாரின் அளவை பெரிதாக்குவதே அவற்றின் கவலையாக இருக்கிறது. மக்களின் விசுவாசம் இப்படி குறைபாடுடையதாக வளர்கிறது. மகா உபத்திரவத்தினு¡டே செல்ல வேண்டும் என்று கவலைப்பட வேண்டியதில்லை என அவர்கள் எண்ணுவதால் அவர்களின் விசுவாசம் மலர் மெத்தையைப் போலாகிவிட்டது. ஆனால் முடிவு காலம் நெருங்குகையில் அது உறுதியானதாக வேண்டும். ஆயிரம் வருட அரசாட்சி இல்லை என்பதை முன் காலங்களில் மக்கள் விசுவாசித்தார்கள். பிறகு உபத்திரவத்தற்கு பிந்திய எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்து சிறிது காலம் விசுவாசித்தார்கள். இப்பொழுதோ உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக் கொள்ளப்படும் தத்துவத்தை விசுவாசிக்கிறார்கள்.
1830களில் ஆயர் ஸ்கோஃபீல்ட் என்பவர் மூடி வேதாகமக் கல்லு¡ரியின் பேராசிரியராக இருந்தார். அவர் தனது வேதாகம விளக்கத்தைக் குறித்து எழுதத் தொடங்கினார். உலகப் புகழ் பெற்ற இறையியலாளரான டார்பியின் கருத்துக்களால் ஸ்கோஃபீல்ட் தாக்கப்பட்டார்.
கத்தோலிக்க ஆயராயிருந்த டார்பி ஸ்கோஃபீல்டின் ஆவிக்குரிய பயிற்றுவிப்பாளராவார். அவர் சிறந்த புத்தி கூர்மையுடையவரும் அனைத்தையும் அறிந்தவராயும் இருந்தார். கத்தோலிக்க ஆலயத்தின் தவறுகளை உணர்ந்து அதனைவிட்டு வெளியேறி சிறியதொரு கிறிஸ்தவ நிறுவனத்தில் சேர்ந்து அதன் தலைவருமானார். டார்பி இடைவிடாது வேதாகமத்தைப் படித்து அதனை ஆராய்ந்தாலும், வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து மகா உபத்திரவத்திற்கு முன் எடுத்துக் கொள்ளப்படுவோமா அல்லது பிறகு எடுத்துக் கொள்ளப்படுவோமா என்பதை சரியாக அறிய முடியாதவராய் இருந்தார். ஆகவே இதற்கான மேலாதாரங்களைத் தேடி பயணம் செய்தார்.
இப்பயணத்தின் போது பரிசுத்த ஆவியானவரைக் குறித்த ஆய்வின் தலைவராயிருந்த இளம் பெண்ணை அவர் சந்தித்தார். மகா உபத்திரவத்திற்கு முன் எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழுமென அப்பெண் ஒரு காட்சியில் கண்டதாக வலியுறுத்தினாள். அவள் கூறியதை நம்பி, உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும் என திருப்தியடைந்த டார்பி, உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக் கொள்ளப்படும் தத்துவத்துடன் தனது வேதாகம ஆராய்ச்சியை முடித்தார்.
ஆயினும், இக்காலத்திய மக்கள் உபத்திரவத்திற்கு பிந்திய எடுத்துக் கொள்ளப்படும் தத்துவத்தை முக்கியமானதாக நம்பியதால் டார்பியின் உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக் கொள்ளப்படும் தத்துவம் அத்தனையாய் வரவேற்கப்படவில்லை.
வெளிப்படுத்தின விசேஷத்தில் எழுதப்பட்டிருப்பவை இஸ்ரவேல் மக்களின் இரட்சிப்பைக் குறித்தது எனவும், அதற்கும் புறஜாதியாரின் இரட்சிப்பிற்கும் சம்பந்தமில்லை எனவும் டார்பி கூறினார். மேலும் “தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும்” (10:11) என்பது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து பிரசங்கிப்பதை அல்லவென்றும், பரலோகம் வருகிறதென்ற பரலோகத்தின் நற்செய்தியைக் கூறுவதாகவும் அவர் இதற்கு விளக்கமளித்தார்.
டார்பியின் இந்த தத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஸ்கோஃபீல்டு அதனைத் தனது வேதாகம விளக்கத்தில் உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக் கொள்ளப்படுதலை அப்படியே சேர்த்து ஏழு காலங்களைக் குறித்த தனது சொந்த தத்துவத்தை உருவாக்கினார். ஸ்கோஃபீல்ட் தனது காலத்தாரின் வேண்டுதலைச் சந்தித்தார். அது அவரின் சூழ்நிலையுடன் நன்கு பொருந்தியது, அது உலகம் முழுவதும் மதத்தை ஒரு குழப்பு குழப்பி எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாயிற்று.
ஆனால் வேதாகமத்தில் கர்த்தர் என்ன கூறுகிறார்? கர்த்தரின் சிங்காசனத்திற்கு முன்பாக இயேசு முத்திரையிடப்பட்ட புத்தகத்தின் ஏழு முத்திரைகளையும் திறந்ததாக நாம் காண்கிறோம். கர்த்தர் தனது ஏழு காலங்களையும் ஏழு முத்திரைகளால் பிரித்தார்.
முதலாவது காலம் வெள்ளைக் குதிரையின் காலமாகும். இது இரட்சிப்பின் காலமாகும். உலகையும் மனிதனையும் படைத்த அந்நொடியே கர்த்தர் நம்மை இக்காலத்தில் இரட்சிக்கத் திட்டமிட்டு அதன் படியே நம்மை இரட்சித்தார். வெளி 6:2 நமக்கு கூறுவதைப் போல், “நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.” கர்த்தர் வெற்றி பெற்றதுடன் தொடர்ந்தும் வெற்றி பெறுவார். படைத்தலுக்கு முன்பே நற்செய்தி இருந்ததுடன் இரட்சிப்பு ஏற்கனவே தொடங்கியது.
இரண்டாவது காலம் சிகப்புக் குதிரையின் காலமாகும். இது சாத்தானுடையது. இது பிசாசினுடைய காலமானதால் மனிதர்களிடமுள்ள சமாதானத்தை அவன் எடுத்துப் போட்டான். அவர்கள் ஒருவரில் ஒருவர் யுத்தம் பண்ணும் படியாகவும், ஒருவரை ஒருவர் வெறுக்கவும், ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொருவருடன் மோதும் படியும் செய்தான்.
மூன்றாவது காலம் கருப்புக் குதிரையின் காலமாகும். இது சா£ர மற்றும் ஆவிக்குரிய பஞ்சத்தை உடைய காலமாகும். நான்காவது காலம் மங்கின நிறமுடைய குதிரையின் காலமாகும். இது இரத்த சாட்சிகள் உருவாகும் காலமாகும். ஐந்தாவது காலம் எடுத்துக் கொள்ளப்படுதலின் காலமாகும். பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்படுதலை ஒரு காலமாக கர்த்தர் உருவாக்கினார். ஆறாவது காலம் ஏழு பாத்திரங்களின் காலமாகும். இதில் உலகம் அழிந்து போகும். இதனைத் தொடருவது ஆயிரவருட அரசாட்சி, புதிய வானம் புதிய பூமி ஆகிய காலமாகும். கர்த்தர் இவ்வாறு உலகின் காலங்களை ஏழு பாகமாகப் பிரித்து ஏழு முத்திரைகளுடைய புத்தகத்தில் வைத்தார்.
ஸ்கோஃபீல்ட் ஏழு காலங்களைப் பிரித்து கூறியது அவரின் சொந்த கருத்தாகும். வெளி 6இல் தீர்க்க தரிசனம் உரைக்கப்பட்ட ஏழு காலங்களும், கர்த்தரால் உருவாக்கப்பட்டு ஒரு புத்தகத்தில் அவற்றை எழுதி அதில் ஏழு முத்திரைகளை இட்டு அவரின் கரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் மாறுபட்டது. ஆயினும் மக்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக் கொள்ளப்படும் தத்துவத்தை விசுவாசிக்கின்றனர். இதனை தீவிரமாக விசுவாசிப்பவர்கள் கர்த்தரை முழுமையாக விசுவாசிக்க வேண்டிய அவசியமில்லை என முடிவு செய்தனர்.
அவர்கள் தமது இருதயங்களில் தீர்மானித்தனர் “மகா உபத்திரவத்திற்கு முன்னதாக நாம் எடுத்துக் கொள்ளப்படுவதால், ஏழாண்டுகளின் மகா உபத்திரவ காலம் வருவதற்கு முன்னால் கர்த்தரின் சமூகத்தில் நாமிருப்போம். ஆகவே நாம் கவலைப்படுவதற்கு எதுவுமில்லை”
உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக் கொள்ளப்படுவோம் என வார்த்தை நம்மிடம் கூறியிருந்தால் நம்முடைய விசுவாசத்தை ஆயத்தம் செய்ய வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஆலயத்திற்கு வருடத்திற்கொரு முறையோ, இருமுறையோ சென்றால் போதுமானது. ஆனால் கர்த்தர் இதனை நம்மிடம் கூறவில்லை.
“ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ் சொல்லும்படி,” “பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்” உபத்திரவ காலத்தின் போது புற ஜாதியாரும் கூட இரட்சிக்கப்படுவார்களென இத்தகைய கர்த்தரின் வார்த்தைகள் கூறுகின்றன. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பரப்ப கர்த்தர் தனது இரண்டு தீர்க்கதரிசிகளையும் தோற்றுவிப்பார். கர்த்தர் ஏற்படுத்திய மகா உபத்திரவ காலமாகிய ஏழாண்டு காலத்தின் முதல் மூன்றரையாண்டுகள் நிகழும் கஷ்டங்களில் வாழாமல் அவருக்கு முன்பாக யாராலும் நிற்க முடியாது. இந்நேரத்தில் உபத்திரவத்திலிருந்து அநேக இரத்த சாட்சிகள் வருவார்களெனவும் கர்த்தர் நம்மிடம் கூறுகிறார்.
இயேசுவை சரியாக விசுவாசிக்க வேண்டுமானால் ஒருவர் வேதாகமத்தை தெளிவாக கற்று மிகச் சரியானவைகளை மட்டும் விசுவாசிக் வேண்டும். வேதாகமத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்காமல் தம்முடையதை பிரசங்கித்து அதனை விசுவாசித்தால் அவர்கள் வேதப்புரட்டர்களாவர். இவ்வுலகில் இத்தனை எண்ணிலடங்காத பிரிவுகள் இருப்பதற்கான காரணம் அநேக மக்கள் வேதாகமத்தை தம் சொந்த விசுவாசத்துடன் சேர்த்து அதற்கு விளக்கமளிப்பதுவே.
இஸ்ரவேல் மக்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்பது அவரின் வாக்குத்தத்த வார்த்தைகள் கர்த்தரின் திட்டத்திற்கேற்ப நிறைவேறும் என்பதாகும். கர்த்தர் நமக்கு கூறிய வாக்குத்தத்த வார்த்தைகளை முறித்து போடாமல் அவற்றை நிறைவேற்றுபவராயிருக்கிறார் என்பதையும் இது நமக்குத் தெரிவிக்கிறது. இதனால் தான் நம்மிடம் இத்தகைய பெரிதான நம்பிக்கை இருக்கிறது.
இஸ்ரவேலின் இரண்டு தீர்க்கதரிசிகளும் தம் மரணத்திற்கு மூன்றரை நாட்களுக்கு பிறகு உயிரோடெழுப்பப்பட்டு பரலோகத்திற்குச் செல்வர். இது தான் எடுத்துக் கொள்ளப்படுதலாகும். மகா உபத்திரவத்தின் இரத்த சாட்சிகள் எவ்வாறு எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்பதற்கு இது ஒரு மாதிரியாகும். நம்முடைய எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு இது ஒரு முன்னோடியாகும். ஏழாம் எக்காளம் ஊதப்பட்ட பிறகு இவ்வுலகம் கிறிஸ்துவின் ராஜ்யமாகும் என்றும் அதன் பிறகு அவர் அதனை நித்தியமாக அரசாளுவார் எனவும் வேதாகமம் கூறுகிறது. அப்படியே இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தவர்களும் அவருடனே கூட அரசாளுவார்கள்.
பரிசுத்தவான்களை எடுத்துக் கொண்ட பிறகு கர்த்தர் இப்பூமியை முற்றிலுமாக அழிப்பார். அழிவு 100 சதவீதமாக இருக்குமா என நமக்குத் தெரியாது. ஏனெனில் இதைக் குறித்து வேதாகமத்தில் விளக்கமாக கூறவில்லை. ஆனால் வெளி 11:18 இல் கர்த்தர் நம்மிடம் கூறுகிறார், “ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம்வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.”
மகா உபத்திரவ காலத்தின் உச்சக்கட்டமாகிய மூன்றரையாண்டுகள் கடந்த பிறகு எடுத்துக் கொள்ளப்படுதல் நிச்சயமாக நிகழும். இது மிகச் சரியாக மூன்றரை ஆண்டுகள் கடந்த பிறகு அல்ல அதிலிருந்து சிறிது காலம் தள்ளி நடைபெறும். ஏழு வருட காலத்தின் நடுப்பகுதியில் உபத்திரவம் அதன் உச்சத்திலிருக்கும். இப்பொழுது தான் இஸ்ரவேல் மக்களின் பரிசுத்தவான்கள் இரத்த சாட்சியாக கொல்லப்படுவர். இது நடந்த சில காலத்திற்கு பிறகு எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும். எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழுகையில் ஆகாயத்தில் நடக்கும் ஆட்டுக் குட்டியானவரின் திருமணப் பந்தியில் நாம் பங்கேற்போம்.
மத்தேயு 25 நம்மிடம் கூறவதைப் போல் நாம் ஆகாயத்தில் நடக்கும் ஆட்டுக் குட்டியானவரின் திருமணப் பந்தியில் பங்கேற்கும் போது ஏழு பாத்திரங்களின் வாதைகள் பூமியின் மீது ஊற்றப்படும். அப்போது நாம் கர்த்தரைத் துதித்த வண்ணம் பூமியில் நடப்பவைகளைக் கண்டு கர்த்தருடைய கிருபைக்காக அதிகமதிகமாய் அவருக்கு நன்றி கூறுவோம்.
கடைசி நாட்கள் வரும் போது வெளிப்படுத்தலின் வார்த்தையின் மூலமாக காலத்தைப் பிரித்துணரக் கூடியவர்களாய் நீங்களிருப்பீர்களென நம்பி அதற்காக ஜெபிக்கிறேன். வார்த்தையை சரியாக விசுவாசிக்கவும் விசுவாசத்தினால் உங்கள் வாழ்வை நன்கு வாழவும், எதிர்காலத்திற்காக ஆயத்தப் படுங்கள். ஆட்டுக் குட்டியானவரின் திருமணப் பந்தியில் நீங்கள் அவருடனே கூட பங்கேற்கும் போது அவரைப் புகழவும், மகிமைப்படுத்தவும், ஆராதிக்கவும் வேண்டுமானால் உங்கள் விசுவாசத்தை ஆயத்தம் செய்ய வேண்டும்.
வரப்போகிற நாட்களில் வெளிப்படுத்தலின் வார்த்தைகள் உங்கள் பெரிதான வழிகாட்டியாக இருப்பதை நிரூபிக்கும் என நம்புகிறேன். அத்துடன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள உங்கள் விசுவாசத்தின் மூலம் உண்மையாகவும் நன்றாகவும் வாழ வேண்டுமென உங்கள் இருதயத்திற்கு இன்னுமொரு முறை நினைவூட்டுகிறேன்.