• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 10 : வெளிப்படுத்தின விசேஷம் (வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 12-1] எதிர்காலத்தில் துன்பத்திற்குள்ளாகப்போகும் கர்த்தரின் ஆலயம் (வெளி 12:1-17)

2021.04.23 112
(வெளி 12:1-17)
“அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன. அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள். அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது. அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது. சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும், எடுத்துக்கொள்ளப்பட்டது. ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் அவளைப் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது. வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான். மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக் காலமாத்திரமுண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன். வலுசர்ப்பமானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண்பிள்ளையைப் பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தினது. ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின்முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப் படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது. அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டு போகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது. பூமியானது ஸ்திரீக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை விழுங்கினது. அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக் கொள்ளுகிறவர்களும், இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம் பண்ணப்போயிற்று.”
 
 
விளக்கவுரை
 
வசனம் 1: அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன.
இரத்த சாட்சியாகியதன் மூலம் கர்த்தரின் ஆலயம் அவரிற்கு மகிமையளிப்பதை இது நமக்கு கூறுகிறது. “சூரியனால் தரிப்பிக்கப்பட்ட பெண்” என்பது பூமியிலுள்ள கர்த்தரின் ஆலயத்தைக் கூறுகிறது. “சந்திரன் அவள் பாதபடியாக இருக்கிறது” என்பது ஆலயமானது உலகின் ஆட்சிக்குட்பட்டிருக்கிறது எனவும் பொருள் படும் “அவள் தலையில் பன்னிரண்டு நட்சத்திரங்களினாலான மாலை” இருந்தது என்ற சொற்றொடர் ஆலயமானது தனது இரத்த சாட்சியத்தால் சாத்தானை பயமுறுத்தி அவன் துன்புறுத்தல்களை மேற்கொள்ளுமென பொருள்படும்.
மகா உபத்திரவத்தற்கு நடுவில் இருக்கும் கர்த்தரின் ஆலயத்தை இது குறிப்பிடுகிறது. இறுதி காலத்தில் அவரின் ஆலயம் சாத்தானால் துன்புறுத்தப்பட்டு அநேகர் இரத்த சாட்சிகளாய் மரிப்பர். ஆயினும் கூட அது தனது விசுவாசத்தின் மூலம் சாத்தானை மேற்கொண்டு கர்த்தரால் மகிமைபடுத்தப்படும். உபத்திரவத்தின் காலத்தில் கூட கர்த்தரின் ஆலயத்தினுடைய பரிசுத்தவான்கள் அந்திகிறிஸ்துவை மேற்கொண்டு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து இரத்த சாட்சியாக மரிப்பதன் மூலம் அவனை வெற்றி கொள்வர்.
நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறந்த கர்த்தரின் பிள்ளைகள் இறுதி காலத்தில் நிச்சயமாக இரத்த சாட்சியாக கொல்லப்படுவர். உபத்திரவம் வருவதற்கு முன்பே கர்த்தரை விசுவாசித்து அவரை ஆராதிப்பவர்களும், நற்செய்தியை விசுவாசிப்பவர்களும், உபத்திரவங்களுக்கிடையே காளான்களைப் போல் எழுவர். அவர்களிடம் இரத்த சாட்சியைக் குறித்த விசுவாசம் இருப்பதால் அது அவர்கள் அந்திகிறிஸ்துவை மேற்கொள்வதையும் அவனுக்கு எதிராக எழுந்து நிற்பதையும் ஏதுவாக்கும்.
அவரிற்கு துரோகம் செய்து இரத்த சாட்சியாக மரிப்பதைத் தவிர்ப்பவர்கள் பரலோகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள். அவர்கள் பாதாளத்திற்குள் சாத்தானுடனே கூட தள்ளப்படுவார்கள். உறுதியான விசுவாசத்தினால் இரத்த சாட்சியாக மரிப்பதற்கு நம்மை ஆயத்தம் செய்ய வேண்டும் அல்லது நமக்காக ஆயத்தமாயிருக்கும் நித்திய ஆசீர்வாதத்தை நாம் இழப்போம். சாத்தானின் பயமுறுத்துதல்களுக்கு மறுபடியும் பிறந்த அனைவரும் உள்ளாவர் என்பதை நாம் அறிய வேண்டும். இரத்த சாட்சியாக மரிப்பது ஒரு நொடி தான் நடக்கும். இந்த குறுகிய நேரம் கடந்த பின் ஆயிர வருட அரசாட்சியும் பரலோகமும் நமதாகும்.
முடிவு காலம் எப்போது வருமென அறிந்து இக்காலத்தில் நாம் வாழ வேண்டும். விசுவாசத்தினாலும் பரிசுத்த ஆவியானவராலும் நாம் இரத்த சாட்சிகளாவோம். இரத்த சாட்சியாக மரிக்க நேரிடும் போது எதனால் பேசுவது என்பதற்கான சொற்களை பரிசுத்த ஆவியானவர் கொடுப்பதோடு, நாம் துன்புறுத்தப்படுதலை தைரியத்துடன் மேற்கொள்ளவும், நம்முடைய விசுவாசத்திற்கு துரோகம் செய்யாமல் விருப்பத்துடன் இரத்த சாட்சியாவதை ஏற்பதையும் ஏதுவாக்குவார்.
கொடிய உபத்திரவங்களுக்கு நடுவிலும், கர்த்தரின் ஆலயம் சாத்தானை எதிர்த்து போராடி இரத்த சாட்சியாவதன் மூலம் அவனை மேற்கொள்ளும். அந்திகிறிஸ்துவை தனது இரத்த சாட்சியால் மேற்கொள்வதற்கும் சாத்தானின் இந்த கடைசி காலத்திலும் கூட தேவனின் வார்த்தைகளை நாம் விசுவாசிப்பதற்கும் கர்த்தரிடமிருந்து கர்த்தரின் ஆலயம் சன்மானம் பெறும் என்பது மிகவும் தெளிவானது.
 
வசனம் 2: அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள்.
கர்த்தரின் ஆலயம் உபத்திரவத்திற்குள் இருப்பதாக இவ்வசனம் நமக்கு கூறுகிறது. முடிவு காலத்தில் சாத்தான் எடுத்து வரும் துன்புறுத்தல்களுக்கும் உபத்திரவங்களுக்கும் ஊடாக முழு ஆலயமும் சென்று கொண்டிருப்பதாக அது நமக்கு கூறுகிறது. மகா உபத்திரவத்தைக் கர்த்தரின் ஆலயம் கடந்து செல்லும். அது அந்திகிறிஸ்துவினுடன் போராடும் காலமாகும். அவர்கள் இப்படி ஜெபிப்பர் “கர்த்தாவே, உமது கிருபையை தாரும்; அப்போது இந்த உபத்திரவங்கள் சீக்கிரமாய் கடந்து போகும். இந்த உபத்திரவங்களை சமாளிக்க எங்களுக்கு உதவும். எங்களுடைய உபத்திரவங்களை மேற்கொள்ள அனுமதியும். சாத்தானை நாம் மேற்கொள்ளும்படி செய்யும்.”
 
வசனம் 3: அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது.
எதிர்காலத்தில் சாத்தான் இப்பூமியில் தன்னைக் காட்டும் போது அவன் தான் கர்த்தர் என்பதைப் போல் நடிப்பான். உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் ஒன்று சேர்த்து தனது நோக்கங்களை நிறைவேற்ற அவற்றைத் தனது கருவிகளாக உபயோகிப்பான். அவன் பரிசுத்தவான்களை கொல்வது நிச்சயம். மேலும் தான் கர்த்தரைப் போலவும் ராஜாவைப் போலவும் உலகை அரசாளுவான்.
“ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது” என்ற சொற்றொடர் சாத்தான் சமாதானத்தை உடைப்பவன் என்பதையும் ஏழு ராஜாக்களையும் பத்து நாடுகளையும் வைத்திருப்பான் என்றும் கூறுகிறது. சாத்தான் மிக அடிப்படையாக கர்த்தரை எதிர்த்து நிற்பான் என இது நமக்கு கூறுகிறது.
 
வசனம் 4: அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது.
சாத்தான் என்ன செய்கிறான் என்பதை இவ்வசனம் கூறுகிறது. வலுசர்ப்பமானது கர்த்தருக்கெதிராக பரலோகத்தில் செயல்பட்டதால் அங்கிருந்து தள்ளிவிடப் பட்டது. பரலோகத்தின் மூன்றிலொரு தேவது¡தர்களையும் அவன் தன்னுடன் எடுத்துக் கொண்டு தன்னுடனே கூட அவர்களையும் அழிவிற்கு வழிநடத்தினான். இப்படியாக கர்த்தரின் சந்நிதியில் இருந்து அவன் விரட்டியடிக்கப்பட்டான். ஆனால் அவன் பூமியிலிருக்கும் போது கூட, கர்த்தரின் நற்செய்தியை விசுவாசிப்பவர்களை துன்புறுத்துவதின் மூலம் அதன் வேலையை நிறுத்த முயல்கிறான்
 
வசனம் 5: சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும், எடுத்துக்கொள்ளப்பட்டது.
கர்த்தரின் ஆலயம் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தமைக்காக இரத்த சாட்சியாக்கப்பட்டதால் அது கிறிஸ்துவினாலே உயிரோடெழுப்பப்பட்டு பரலோக ராஜ்யத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமென இது நமக்கு கூறுகிறது.
 
வசனம் 6: ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் அவளைப் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது.
தேவன் தம் பிள்ளைகளை மூன்றரையாண்டு காலமாக போக்ஷிப்பார் என இவ்வசனம் நமக்குக் கூறுகிறது. முழு அளவிலான உபத்திரவம் வருவதற்கு முன்னுள்ள 1260 நாட்கள் கர்த்தரின் ஆலயம் அவரால் போஉக்ஷிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். நேரம் வரும் போது அது அந்திகிறிஸ்துவுக்கு எதிராக போராடி இரத்த சாட்சியாகும்.
 
வசனம் 7-8: வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம் பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம் பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற் போயிற்று.
சாத்தான் பரலோகத்திலிருந்து முற்றிலுமாக விரட்டப்பட்டதை இது குறிக்கிறது.
இவ்வுலகிற்கு வரும் முன்பு, சாத்தான் பரலோகத்திலிருந்து முற்றிலுமாக வீசப்படுவான். சாத்தானால் பரலோகத்தில் தொடர்ந்து வாழ முடியாது. ஆகாயத்தின் மீது சாத்தானுக்கு அதிகாரம் இருப்பதால் ஆகாயத்திலும் பூமியிலுமாக அமர்ந்து பூமியை அவன் ஆளுவான். இப்படியாக அவன் பரலோகத்திலிருந்து முற்றிலுமாக விரட்டப்படுகையில் கடைசி நாட்களில் பரிசுத்தவான்களை இன்னமும் அதிகமாக துன்புறுத்துவான். ஆனால் கர்த்தர் ஏற்படுத்திய பாதாளத்திற்குள் சாத்தான் தள்ளப்பட்டு அங்கே கட்டுண்டு போவான்.
 
வசனம் 9: உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.
முடிவு காலத்தில் பரலோகத்திலிருந்து பூமிக்கு விரட்டியடிக்கப்படும் சாத்தான், கடைசி முறையாக பரிசுத்தவான்களை துன்புறுத்தி அவர்களை கொல்லுவான். அநேக பரிசுத்தவான்கள் அவன் கரங்களினால் இரத்த சாட்சியாவர்கள்.
 
வசனம் 10: அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான்.
பரலோக ராஜ்யத்தில் சாத்தான் இனிமேல் காணப்பட மாட்டான். இறுதி காலம் கடந்து போகையில் பரலோகத்தில் அவனால் தொடர்ந்து இருக்க முடியாது. இதனால் தான் வெளி 21:27 தீயவர்களுக்கும் பொய்யர்களுக்கும் பரலோகத்தில் இடமில்லை என நம்மிடம் கூறுகிறது.
 
வசனம் 11: மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
முடிவு காலம் வருகையில் தம் விசுவாசத்தைக் காப்பதற்கு நீதிமான்கள் இரத்த சாட்சியாக மரிப்பார்கள். யாரெல்லாம் பரிசுத்தவான்களோ அவர்கள் முடிவு காலத்தில் அவனின்/அவளின் இரத்த சாட்சியின் மூலம் வெற்றி பெறுவார்கள். வேறு வார்த்தைகளில் கூறினால் தேவனை விசுவாசிக்கும் இரத்த சாட்சிகள் தம்முடனான போரில் வெற்றி பெறுவார்கள்.
 
வசனம் 12: ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரமுண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.
பரலோகத்திலிருந்து சாத்தான் எறியப்படுவதால் இவ்வுலகின் மேல் அவனிற்கு தற்காலிகமாக அதிகாரம் இருக்கும். அவன் இப்பூமிக்கு வந்த பிறகு பரிசுத்தவான்களை படுபயங்கரமாக துன்புறுத்துவான். ஆனால் இரத்த சாட்சியாக மரிக்கும் பரிசுத்தவான்கள் ஆகாயத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவர், அவர்களுக்காக ஆனந்தம் காத்திருக்கும். எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு பிறகு கர்த்தர் ஏழு பாத்திரங்களின் வாதைகளை பூமியின் மீதும் கடலின் மீதும் ஊற்றுவார்.
 
வசனம் 13: வலுசர்ப்பமானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண்பிள்ளையைப்பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தினது.
மகா உபத்திரவகாலத்தின் போது பரிசுத்தவான்களுக்கு நேரிடப் போகும் துன்புறுத்தல்களை இது குறிப்பிடுகிறது. பரிசுத்தவான்களும் கர்த்தரின் ஊழியர்களும் இரத்த சாட்சியாக இந்நேரத்தில் மரிப்பார்கள். ஆனால் இது விசுவாசத்தின் வெற்றியாகும். மரணமோ, துன்பமோ அல்லது சாபமோ அவர்களை அண்டுவதில்லை. அவர்களுக்கு காத்திருப்பதெல்லாம் கர்த்தரைத் துதிப்பதும் பரலோகத்தில் நித்தியமாக மகிமைப்படுத்தப்படுவதுமாகும்.
 
வசனம் 14: ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின்முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப் படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.
மகா உபத்திரவத்தின் மூன்றரையாண்டுகள் கடந்த பிறகு எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழுமென வேதாகம் நம்மிடம் கூறுகிறது. மகா உபத்திரவத்தின் இயற்கை வாதைகளின் நடுவிலும், பரிசுத்தவான்களுக்கு கர்த்தர் தம்முடைய சிறப்பு பாதுகாவலையும், போக்ஷனையையும் வழங்குவார் என இவ்வார்த்தைக் கூறுகிறது. விசுவாசத்தை வைத்திருப்பவர்களை கர்த்தர் போக்ஷிப்பார். இந்த விசுவாசத்தின் மூலமாக சாத்தானுடன் போரிட்டு அவனை மேற்கொள்ளலாம்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்காக வாழ்வதும் அப்படியே இந்த நற்செய்தியை பிரசங்கிப்பதும் நமது போக்ஷாக்கு ஆகும். இந்த உலகத்தின் மீது ஏழு எக்காளங்களின் வாதைகள் வரும் வரையிலும், நற்செய்தியைத் தொடர்ந்து பிரசங்கித்து நாம் வாழுவோம். ஏன்? நாம் இரத்த சாட்சிகளாய் மரிக்கும் வரை இந்த நற்செய்தியை பிரசங்கிக்கவில்லையெனில் அநேக ஆத்துமாக்களை நரகத்திற்கு இழப்போம். இப்போதைய நேரத்தை விட்டு விட்டால் வேறு சமயம் நமக்கு கிட்டாது.
 
வசனம் 15-17: அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது. பூமியானது ஸ்திரீக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை விழுங்கினது. அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக் கொள்ளுகிறவர்களும், இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம் பண்ணப் போயிற்று.
முன்பு நற்செய்தியிலிருந்து அகன்று போகும்விதமாக சாத்தான் பரிசுத்தவான்களைத் துன்புறுத்தி அவர்களைக் கொன்றான். ஆனால் இந்நாட்களில் நற்செய்தியானது வெவ்வேறு வழிகளில் தீவிரமாக பரவுவதால் பாவத்தை மழையாக பொழிந்து அதன் ஓட்டத்தில் பரிசுத்தவான்களை கொல்ல முயல்கிறான். பாவநதியை ஊற்றி பரிசுத்தவான்களை அதன் நீரைக் குடிக்கச் செய்வதின் மூலம் அநேக பரிசுத்தவான்களுக்கு மரணத்தை அவன் எடுத்து வந்தான். ஆனால் மறுபடியும் பிறவாதவர்கள் இந்த நதியின் முழு நீரையும் குடித்து விட்டார்கள். இந்த முயற்சியினாலும் பரிசுத்தவான்கள் கொல்லப்படாமல் உயிருடனிருப்பதால் சாத்தான் அவர்களை முற்றிலுமாய் கொல்வதற்கான இன்னொரு முறையை எடுத்து வருவான். இது அதிகாரம் 13இல் கூறப்பட்டுள்ளது.