(வெளி 12:1-17)
இறுதிகாலத்தில் கர்த்தரின் ஆலயம் உபத்திரவத்தை எப்படிச் சந்திக்கும் என்பதை அதிகாரம் 12 காட்டுகிறது. வசனம் 1 கூறுகிறது “அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன.” இங்கு “சூரியனால் தரிப்பிக்கப்பட்ட பெண்” எனக் குறிப்பது பூமியிலுள்ள கர்த்தரின் ஆலயத்தையும், “சந்திரன் அவள் பாதபடியாக இருக்கிறது” என்ற சொற்றொடர் கர்த்தரின் ஆலயம் இன்னமும் உலகின் அதிகாரத்தின் கீழிருக்கிறது எனவும் பொருள் படுகிறது. இவ்வுலகிலுள்ள கர்த்தரின் ஆலயமும், அதன் பரிசுத்தவான்களும் தமது இரத்த சாட்சியின் மூலம் கர்த்தரை மகிமைப்படுத்துவர் என இது நம்மிடம் கூறுகிறது.
“அவள் தலையில் பன்னிரண்டு நட்சத்திரங்களிலான மாலை” என்ற சொற்றொடர் இறுதி காலத்தில் ஆலயம் சாத்தானுடன் போரிட்டு விசுவாசத்தினால் இரத்த சாட்சியாகும் எனக் கூறுகிறது. கர்த்தரின் வார்த்தைக் கூறுவதைப் போல் கர்த்தரின் ஆலயம் நிச்சயமாக வெற்றி பெறும். நம்முடைய விசுவாசத்தை அழிக்க சாத்தான் வெவ்வேறு வழிகளில் நம்மை பயமுறுத்துவான். நம்மைத் துன்பப்படச் செய்து காயப்படுத்தி இறுதியில் நம் உயிரையும் கேட்பான். அப்போதும் கூட நாம் நமது விசுவாசத்தை பாதுகாத்து நீதிமானாக இரத்த சாட்சியாவோம். இது நம் விசுவாசத்தின் வெற்றியாகும்.
ஆதி சபையின் காலத்தில் கூட நமக்கு முன் சென்ற அநேக பரிசுத்தவான்கள் இரத்த சாட்சியாக மரித்தனர். இந்த இரத்த சாட்சியாதல் நமது பலத்தினால் நிகழ்வதல்ல இது நமது இருதயங்களில் வாழும் பரிசுத்த ஆவியானவரால் ஆகும்.
“சூரியனால் தரிப்பிக்கப்பட்ட பெண்” என்ற சொற்றொடரில் “பெண்” என இங்கு குறிப்பிடப்படுவது கர்த்தரின் ஆலயத்தைக் குறிக்கிறது. அவள் “சூரியனால் தரிப்பிக்கப்பட்டிருந்தாள்” எனக் குறிப்பிடப்படுவது ஆலயமானது அதிகமாக துன்புறுத்தப்படும் என பொருள்படுகிறது. இறுதி காலத்தின் படுபயங்கரமான உபத்திரவங்களுக்கும் வாதைகளுக்குமிடையே இருந்தாலும், பரிசுத்தவான்கள் தமது விசுவாசத்தை திறமையாக பாதுகாப்பதுடன் சாத்தானிடம் சரணடைவதேயில்லை. ஏன்? அவர்களுடைய இருதயங்களிலிருக்கும் பரிசுத்த ஆவியானவர் அவர்களை சாத்தானுக்கு எதிராக நின்று போராடும்படி செய்வதுடன் தம் உயிரே போனாலும் கூட எத்தகைய பயமுறுத்தல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் சரணடையாத விசுவாசத்தையும் அளிப்பார்.
மேலும் ஏழு எக்காளங்களின் வாதைகள் சீக்கிரமாக முடியுமெனவும் அதனைத் தொடரும் ஏழு பாத்திரங்களின் வாதை பூமியை முற்றிலுமாய் அழித்துப் போடுமெனவும், கர்த்தரின் வார்த்தையை பரலோக ராஜ்யத்தின் மீது நம்பிக்கை வைத்தவர்கள் விசுவாசிப்பதால் அவர்கள் சாத்தானுக்கு முன்பாக மண்டியிட மாட்டார்கள்.
சாத்தானுக்கு சரணடைய நேரிட்டால் சிறந்ததொரு உலகம் அவர்களுக்கு காத்திருக்காது என்பதை அறிந்து அதனை விசுவாசிப்பவர்களால், அவன் முன்னால் மண்டியிட முடியாது. அந்திகிறிஸ்துவின் மீதும் அவனைப் பின்பற்றுவோரின் மீதும் ஊற்றப்படும் ஏழு பாத்திரங்களின் வாதைகள், ஒப்பின்றியும், இரக்கமின்றியும் அவர்களைப் பீறிடும். இத்தகைய வாதைகளைக் குறித்து 100 சதவீதமும் அறிந்த பரிசுத்தவான்கள், பயமுறுத்தல்களுக்கு பயந்து தம் விசுவாசத்தை விட்டுவிட மாட்டார்கள். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் அவர்களின் இருதயங்களிலிருந்து செயலாற்றுவார். நமக்குள் சஞ்சரிக்கும் பரிசுத்த ஆவியானவர் சாத்தானை எதிர்த்து நின்று அவனை மேற்கொண்டு இரத்த சாட்சியாவதற்கான பலத்தினை நமக்குத் தருவார்.
நான்காம் எக்காளத்தின் வாதை கடந்து ஐந்தாம் மற்றும் ஆறாவது எக்காளங்களின் வாதைகள் வரும் போது, “இரத்த சாட்சியாக மரிப்பது” நமக்கு வரும். நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்களே தம் விசுவாசத்தை பாதுகாப்பதற்கு இரத்த சாட்சிகளாய் மரிப்பவர்களாவர். ஏழு எக்காளங்களின் வாதைகள் இறங்கும் போது உலகின் மீது அதிகாரம் செலுத்த சிறிது நேரம் அந்திகிறிஸ்து கர்த்தரால் அனுமதிக்கப்படுவான்.
தன்னுடைய அதிகாரம் மிகச் சிறிய நேரமே இருக்குமென்பதை அறிந்த சாத்தானின் ஊழியனான அந்திகிறிஸ்து, இயேசு கிறிஸ்துவை தமது தேவனாக ஆராதிப்பவர்களைத் துண்புறுத்துவான். இப்படி செய்வதால் தன்னுடனே கூட அநேகரை நரகத்திற்கு அவனால் எடுத்துச் செல்ல முடியும். ஆனால் இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தின் மூலமாக தம் அனைத்துப் பாவங்களையும் அவர் மீது சுமத்தியவர்கள் அந்திகிறிஸ்துவின் துன்புறுத்தல்களுக்கு சரணடையாமல் இயேசு கிறிஸ்து வழங்கிய நற்செய்தியை திறனுடன் பாதுகாத்து இரத்த சாட்சியாவர்.
விசுவாசத்திற்கான அத்தாட்சி இரத்தசாட்சியாகும். இந்த அத்தாட்சியை உடையவர்களுக்கு தேவன் ஆயத்தம் செய்த ஆயிர வருட அரசாட்சியும் புதிய வானமும் புதிய பூமியும் கிட்டும். இது உலகம் முழுவதும் பரவியிருக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்போர்களுக்கு பொருந்தும். அநேகமாக அனைத்து மறுபடியும் பிறந்தவர்களும் முடிவுகாலத்தின்போது இரத்த சாட்சியாக மரிப்பார்களென வேதாகமம் நம்மிடம் கூறுகிறது.
ஆனால் இரத்த சாட்சியாவதிலிருந்து தப்பிக்க, நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள தம் விசுவாசத்தை கைவிட்டு அந்திகிறிஸ்துவின் பக்கம் நின்று அவனைக் கடவுளாக ஆராதித்து அவனுக்கு ஊழியம் செய்வோர் ஏழு பாத்திரங்களின் வாதைகளினால் மரிப்பர். இது தவிர அந்திகிறிஸ்துவினாலும் அவர்கள் கொல்லப்படுவர். அவர்களுடைய மரணம் இரத்த சாட்சியாகாது. அது வெறும் மரணம் மட்டுமே. சாத்தானும் அந்திகிறிஸ்துவும் நரகத்திற்குள் எறியப்படுகையில் இம்மக்களும் அவர்களுடனே கூட செல்வர்.
இரத்த சாட்சியாக மரிப்பதை தவிர்ப்பதற்காகவும் உபத்திரவத்தின் கஷ்டங்களை சிறிதளவு குறைப்பதற்காகவும் இயேசு கிறிஸ்துவை மறுதலிப்பது முட்டாள்தனமான செய்கையாகும். ஏழு எக்காளங்களின் வாதைகள் முடிந்து தம் விசுவாசத்தைக் காத்தவர்கள் இரத்த சாட்சியாக மரித்த பிறகு ஏழு பாத்திரங்களின் வாதைகள் பூமியை அழிக்கும். அதில் தப்பிப்பவர்கள் சிலரே. எது தெளிவாக இருக்கிறதெனில், பாவமன்னிப்பு பெற்றவர்கள் நிச்சயமாக இரத்த சாட்சியாக மரிப்பர். இந்த இரத்த சாட்சியாக நாம் மரிக்க வேண்டிய நொடியில் தேவனை நாம் மறுதலிக்கக் கூடாது. ஆகவே இறுதி காலத்தைக் குறித்த சரியான அறிவினாலும், வார்த்தையை சரியாக புரிந்து கொள்வதின் மூலமும் நாம் நம்முடைய விசுவாசத்தை ஆயத்தம் செய்ய வேண்டும்.
நம் பாவங்களுக்கு பாவமன்னிப்பை பெற்றோம், நாம் இரத்த சாட்சியாக மரிக்கும் போது இதுவரை அறிந்திராத மகிழ்ச்சியினால் நாம் நிறைவோம். ஏனெனில் கர்த்தர் நமக்குத் தேவையான பலத்தை அளிப்பார். நீங்களும் நானும் தேவனுக்காக இரத்த சாட்சியாக மரிக்க வேண்டியிருப்பதால் நம்முடைய விசுவாசம் தெளிவாக நம் இருதயங்களில் பதிந்திருக்கட்டும். இந்த இரத்த சாட்சியாக மரிக்கும் நொடிப் பொழுது சென்றவுடன், நிச்சயமாய் கர்த்தர் நம் உயிரோடெழுப்பப் படுதலையும் எடுத்துக் கொள்ளப் படுதலையும் தந்து ஆயிர வருட அரசாட்சியில் நம்மை மகிமை உடையவர்களாக்கி தமது நித்தியமான பரலோகத்தையும் புதிய பூமியையும் கொடுத்து நாம் அதனை ஆளும்படி செய்வார். மேலும் செல்வாக்குடன் நித்தியமாக நாம் வாழ்வதையும் அனுமதிப்பார். நாம் இதனை விடாப்பிடியாக விசுவாசித்தால் நமது துன்பங்கள் இன்பமாக மாறும்.
அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான், “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்” (ரோமர் 8:18). நற்செய்திக்காக ஊழியம் செய்த போது பவுல் மிக அதிகமாக துன்பப்பட்டான். குற்றுயிராகும் அளவிற்கு அநேக சமயங்களில் அடிக்கப்பட்டான். இந்த வேதனைகள் கர்த்தருக்கு மகிமையை எடுத்து வருவதாக பவுல் விசுவாசித்தமையால் அவனின் வேதனைகள் பேரானந்தமாயிற்று. வரலாற்றுச் சான்றுகளைப் பார்க்கும் போது பவுல் உட்பட அனைத்து அப்போஸ்தலர்களும் இரத்த சாட்சிகளாய் மரித்தனர். வாட்டிக்கன் மலையின் உச்சியில் பேதுரு தலைகீழாக அறைந்து கொல்லப்பட்டான். பாலிகார்ஃப் உட்பட ஆதிசபையின் தலைவர்கள் மற்றும் மற்ற பரிசுத்தவான்கள் தாம் தீயினால் எரித்துக் கொல்லப்படும் நேரத்தில் கூட கர்த்தருக்கு புகழ்பாடினார்கள். கர்த்தர் தமது பரிசுத்தவான்களுக்கு இத்தகைய பலத்தைக் கொடுக்காவிட்டால் இத்தகைய நிகழ்வுகளுக்கு சாத்தியமேயில்லை.
இக்காலத்திலும் இத்தகைய விசுவாசமிக்க பரிசுத்தவான்கள் இருந்தாலும் தம்முடைய விசுவாசத்தை மறுதலிப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இன்றைய இறையியலாளர்களால் மிகவும் மதிக்கப்படும் ஒரு இறையியலாளர் ஓரிகன் ஆவர். இவர் அப்போஸ்தலர்களிடமிருந்து நேரடியாக நற்செய்தியைக் கேட்டவர். ஆயினும் இவர் இரத்த சாட்சியாக மரிப்பதற்கான சமயம் வந்த போது அதிலிருந்து தப்பி சென்றார். அவரை பின்பற்றியவர்கள் இரத்த சாட்சிகளான போதிலும் இவரின் உயிர் தப்பியது. இயேசு அவரிற்கு செய்த அனைத்தையும் அவர் மறுத்திருக்காவிட்டால் அவரால் இப்படிபட்ட காரியத்தை செய்திருக்க முடியாது. ஓரிகள் இயேசுவின் தெய்வீகத் தன்மையை மறுதலிப்பவர்களின் பிரதிநிதியாகிப்போனார். அவர் இத்தகைய துரோகத்தை செய்தாலும், இன்றைய இறையியலாளர்கள் அவரை மிகவும் உயர்வானவராக கருதுகிறார்கள்.
மற்ற பரிசுத்தவான்கள் இரத்த சாட்சியான போது ஓரிகன் ஏன் அதிலிருந்து தப்பினார்? ஓரிகனின் மனவலிமைக் குறைந்ததெனவும், இரத்த சாட்சியாக மரித்த மற்ற பரிசுத்தவான்களின் மனவலிமை அதிகமானது எனவும் இதற்கு பொருளல்ல. இரத்த சாட்சியாக மரித்த பரிசுத்தவான்கள் கர்த்தரைப் புகழ்வதுடன் அப்படி செய்தார்கள். ஏனெனில் பவுல் கூறியதை அவர்கள் விசுவாசித்தனர். அதாவது “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல” என்பதை விசுவாசித்தனர். வேறுவார்த்தைகளில் கூறினால் கர்த்தரின் வாக்குத்தத்த வார்த்தையை விசுவாசித்தமையால் இப்போதைய துன்பத்தை அவர்களால் தாங்க முடிந்தது. அவர்கள் உயிரோடெழுப்பப்பட்டு எடுத்துக் கொள்ளப்பட்டு தன்னுடைய ஆயிர வருட அரசாட்சியை அளிப்பேன் என்பது அவரின் வாக்குத்தத்தமாகும்.
இரத்த சாட்சியாக நாம் மரிக்க வேண்டுமென தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதனைக் குறித்த தெளிவான அறிவுடன் விசுவாச வாழ்வு வாழ்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேறுபாடிருக்கிறது. ஆதிகால சபையின் இரத்த சாட்சியாக மரித்த பரிசுத்தவான்களின் சித்திரம் தம் சொந்த சித்திரமாக இருக்க கூடியவர்களின் விசுவாச வாழ்க்கை உறுதியானதாகவும், மதிப்புமிக்கதாகவும், துணிச்சலுடையதாகவும் இருக்கும். ஏனெனில் வேதாகமத்தின் வார்த்தை அவர்களுடையதாகும். இரத்த சாட்சியத்துவத்தை தழுவச் செய்யும் விசுவாசத்துடன் அவர்கள் எப்போதும் வாழுகிறார்கள். அதாவது அவர்கள் தம் இரத்த சாட்சியையும், கர்த்தர் அவர்களை உயிரோடெழுப்பி எடுத்துக் கொள்வதையும் புதிய வானத்தையும் புதிய பூமியையும் அவர்களுக்காக கர்த்தர் முன்னதாகவே திட்டமிட்டதையும் அவர்கள் விசுவாசித்து வாழ்ந்து வருகிறார்கள்.
இதனை விசுவாசிப்பவர்களால் உறுதியான விசுவாச வாழ்வை வாழ முடியும். ஏனெனில் தமது விசுவாசம் தம் முடிவிற்கு தம்மை ஆயத்தம் செய்வதை அவர்கள் அறிவர். அப்பொழுது அவர்களால் கர்த்தரைப் புகழ்வாரே மரிக்க முடியும். இது இறையியலின் ஒரு கூற்றாக இல்லாமல் உண்மையான விசுவாசமாயிருப்பதால் இந்த வார்த்தையையும் நற்செய்தியையும் முற்றிலுமாக விசுவாசிக்காதவர்கள் அந்திகிறிஸ்துவிற்கு நம்மை விற்பவர்களின் முதன்மையானவர்களாயிருப்பார்கள். நீங்களும் நானும் இரத்த சாட்சிகளாகப் போகிறோம் என்பதை உணருகையில் நம்மைப் போன்ற அதே விசுவாசத்தை உடைய கர்த்தரின் ஆலயத்திலுள்ள நமது சகோதரிகளும் சகோதரர்களும் நம்முடனே கூட எப்போதும் இருப்பது நமக்கு முக்கியமானதாகும். கர்த்தரின் ஊழியர்கள் அவரின் மக்கள், அவரின் ஆலயம் ஆகிய அனைத்தும் கூட நமக்கு முக்கியமானவையாகும்.
இறுதிகாலத்தில் வசிக்கும் நம்முடைய விசுவாசத்தைப் போலில்லாமல், ஆதிசபையின் காலத்தின் பரிசுத்தவான்கள் இன்னமும் அதிகமதிகமாய் விசுவாசத்துடனிருந்தனர். தம்முடைய இரத்த சாட்சியையும், அதனைத் தொடரும் உயிரோடெழுப்பப்படுதலையும் எடுத்துக் கொள்ளப்படுதலையும், ஆயிர வருட அரசாட்சியையும் புதிய வானம் மற்றும் புதிய பூமியையும் அவர்கள் விசுவாசித்தனர். இதனால் தான் மகா உபத்திரவ காலத்தில் தாம் வாழ்வதைப் போன்றதொரு விசுவாசத்துடன் அவர்கள் வாழ்ந்தனர். தேவனின் வருகை சமீபமாயிருக்கிறது எனவும் நம்பினர். உபத்திரவ காலத்திற்கு மிகவும் அருகிலிருக்கும் ஒரு காலத்தில் நாம் வாழ்வதால் அவர்களைக் குறித்து வாசிக்கும் போது அச்சம்வங்கள் உண்மையாகவே நம் கண்களின் முன் நிகழுவதைப் போலுள்ளது. ஏனெனில் அவர்களும் கூட உபத்திரவத்தைக் குறித்த கர்த்தரின் வார்த்தையையும், தம்முடைய இரத்த சாட்சியையும், உயிரோடெழுப்பப்படுவதையும் எடுத்துக் கொள்ளப்படுதலையும் விசுவாசித்தனர்.
இறுதிகாலம் நமது கண்களுக்கு முன்பாக நேரடியாக வந்து கொண்டிருப்பதான ஒரு காலத்தில் நாம் வாழ்வதால், இரத்த சாட்சியத்துவத்திற்கான நமது விசுவாசத்தை நமது இருதயங்களுக்குள்ளாக இருக்கமாக ஆயத்தம் செய்ய வேண்டும். கிறிஸ்துவின் நீரையும் இரத்தத்தையும் விசுவாசிப்பவர்களுடன் சாத்தான் சவால் விடுகிறான். அவன் அவர்களின் விசுவாசத்தை சீரழிக்க முயல்கிறான். சாத்தானின் இந்த சவாலிற்கு நாம் சரணடையாமலிருக்க நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நம்மிருதயங்களில் உறுதியாக இணைக்க வேண்டும். புதிய வானம் மற்றும் புதிய பூமி ஆகியவை மீதுள்ள விசுவாசத்தினால் அதன் உறுதியை சோதிக்க வேண்டும். நம்முடைய இரத்த சாட்சியாகும் அந்த நொடி வரை நம்முடையதான இந்த விசுவாசம் கழன்று போகாமலிருப்பதில் நிச்சயமாயிருக்க வேண்டும்.
ஆதிசபையின் பரிசுத்தவான்கள் தமது விசுவாசத்தை உறுதியுடன் காத்தமைக்கு ஒரு காரணம் இருந்தது. அவர்கள் உபத்திரவத்தைக் குறித்து வேதவசனங்கள் கூறும் வார்த்தைகளை அறிந்து அவற்றை விசுவாசித்ததும் அவர்களின் இரத்த சாட்சியத்துவம், உயிரோடெழுப்பப்படுவது மற்றும் எடுத்துக் கொள்ளப்படுவது ஆகியவற்றை விசுவாசித்ததுமே அதற்கான காரணம். நீங்களும் நானும் கூட இரத் சாட்சிகளாவோம். நான் மரிப்பேன், நீங்களும் கூட மரிப்பீர்கள், நம்முடைய விசுவாசத்தைக் காப்பதற்கு நாம் மரிப்போம். முதலாவது இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்படுவது நானாகத்தானிருக்கும். இது கொடிய காட்சியாகத் தெரியலாம். ஆயினும் முடிவில் நாம் பயப்படுவதற்கு எதுவுமிருக்காது. இரத்த சாட்சிகளாவதை மறுப்பது நமது விசுவாசத்தை மறுப்பதாகும். இதனை நம்மால் செய்யவே முடியாது.
நம்முடைய இரத்த சாட்சியத்தின் மூலம் கர்த்தர் மகிமையடைய வேண்டும். இதனை நமது இலக்காக அவர் ஏற்படுத்தினார். ஆகவே இது நாம் ஒருமுறை செல்ல வேண்டிய ஒன்று. இதனுள் செல்வதிலிருந்து நம்மால் தப்பிக்கவோ அல்லது தவிர்க்கவோ முடியாது. ஆகவே அதனை நோக்க்¢ வேகமாக ஓடி அதன் மீது முழு பலத்துடனும் பாய்வோமாக. யாரிடமும் இல்லாத ராஜாக்களின் அதிகாரம் நம்மிடம் இருக்கிறது. நித்திய ஆசீர்வாதத்தைக் குறித்த விசுவாசமும் நம்மிடமிருக்கிறது. நம்மைப் பலப்படுத்தும் படி எப்போது வேண்டுமானாலும் கர்த்தரிடம் நாம் ஜெபிக்கலாம். இன்னும் அதிக மகிமையை அவருக்கு அளிக்க முடியும். நாம் இரத்த சாட்சிகளாவதைக் குறித்து பயப்படாமல் அதனை விசுவாசிக்கும் போது இன்னும் பெரிதான மகிழ்ச்சியை நாம் பெறுவோம். இது கர்த்தரிற்கு பெரிதான மகிமையை அளிப்பதாகும். இது நமது பெரிதான ஆசீர்வாதமாகும்.
பரிசுத்தவான்களின் இரத்த சாட்சியைக் குறித்தும், உயிரோடெழுப்பப்படுவதைக் குறித்தும், எடுத்துக் கொள்ளப்படுதலையும், ஆயிர வருட அரசாட்சியையும், புதிய வானத்தையும் புதிய பூமியையும் குறித்து வெளிப்படுத்தின விசேஷத்தில் கர்த்தர் எழுதினார். வெளிப்படுத்தின விசேஷத்தை அறிந்து கொள்வது, அழிந்து கொண்டிருக்கும் இப்பூமியில் உறுதியான விசுவாசத்தைக் கொண்டிருப்பதாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி இல்லாமல் வெளிப்படுத்தின விசேஷத்தில் எழுதப்பட்டுள்ள புதிய வானம் மற்றும் புதிய பூமிக்குச் செல்லும் பாதையில் நம்மால் பயணிக்க முடியாது. இரத்த சாட்சியத்துவத்திற்குள் செல்லாமல் இவ்விசுவாசத்தை உறுதி செய்ய முடியாது. நற்செய்தியை மறுதலிக்காமல் உங்கள் இருதயத்தில் இந்த விசுவாசத்தை உறுதியாக கட்டியிருப்பீர்களெனவும் சமயம் வரும் போது இரத்த சாட்சியாவீர்கள் எனவும், உங்கள் விசுவாசத்தால் பார்ப்பீர்களெனவும் நான் விரும்பி ஜெபிக்கிறேன். இந்த நொடிப் பொழுதிலிருந்து உங்கள் விசுவாச வாழ்வு முற்றிலுமாக மாறும்.
சாத்தானின் வலைகளில் சிக்கி, வீணாக நாம் மரிக்க மாட்டோம். நம்மிருதயங்களில் பரிசுத்த ஆவியானவரின் செய்கைகளைப்பின் தொடர்ந்து நம் விசுவாசத்தைக் காப்பதற்கு நாம் மரிப்போம். இது தான் இரத்த சாட்சி. நம்முடைய இரத்த சாட்சியின் நாள் நிச்சயமாக வரும். நாம் அதற்கு அஞ்ச மாட்டோம். ஏனெனில் நம்முடைய சா£ரங்கள் சாத்தானால் கொல்லப்பட்டாலும், புதிய மகிமைப் பொருந்திய சா£ரத்ததுடன் கர்த்தர் நம்மை சீக்கிரமாகவே உயிரோடெழுப்புவார் என்பது நமக்குத் தெரியும். நம்முடைய இரத்த சாட்சியைத் தொடர்ந்து நாம் உயிரோடெழும்புவதும் எடுத்துக் கொள்ளப்படுதலும் நிகழும் என்பதும் அதற்கு பிறகு நமக்கு காத்திருப்பவைகளான ஆயிர வருட அரசாட்சி மற்றும் பரலோகத்தின் நித்திய ஆளுகை ஆகியவையும் இருப்பதுவும் நமக்குத் தெரியும்.
முன்பொருகாலத்தில், ரோம் நகரத்தை மறுபடியும் கட்டுவதற்காக அந்நகரத்திற்கு ரோமச் சக்கரவர்த்தியாகிய நீரோ நெருப்பு வைத்தான். இதனால் ரோம மக்கள் கோபமுற்ற போது கிறிஸ்தவர்களை அதற்காக குற்றப்படுத்தி அவர்களைத் தீவைத்து கொளுத்தினான். அதனைப் போலவே மகா உபத்திரவத்தின் போது இயற்கை அழிவுகள் உலகத்தை தாக்குகையில் பரிசுத்தவான்களாகிய நம்மை அந்திகிறிஸ்து குற்றப்படுத்தி, நம்மைக் கொல்லுவான்.
ஆகவே இப்போதிலிருந்தே இரத்த சாட்சிக்கான விசுவாசத்தைக் கொடுக்கும்படி கர்த்தரிடம் ஜெபிக்க வேண்டும். இவ்விசுவாசத்துடன் நாம் மரிக்க முடியும். நம்முடைய விசுவாசத்தை விட்டு விடாமல் நாம் மரித்தால், கர்த்தரின் மகிமை வெளிப்படும். ஆனால் நம் விசுவாசத்தை விட்டுவிட்டு அந்திகிறிஸ்துவிடம் சரணடைந்து அவனை நம் கடவுளாக ஏற்றுக் கொண்டால் நித்திய அக்கினியில் நாம் எறியப்படுவோம். வேறு வார்த்தைகளில் கூறினால் அந்திகிறிஸ்துவை மேற்கொள்ளக் கூடிய விசுவாசத்தைக் கேட்டு கர்த்தரிடம் ஜெபித்தால் நம்முடைய தேவன் பலத்தையும் வல்லமையையும் நமக்குத் தருவார். நம்முடைய இருதயங்களை உறுதியாக்காமல் நம்முடைய விசுவாசத்திற்கு நாம் துரோகம் செய்தால் நமக்கு கொடுப்பதற்கு அவரிடம் இருப்பது நரகம் மட்டுமே.
கொரிய யுத்தத்திலிருந்து நானொரு கதையை சொல்லட்டும். வடகொரிய படையினர் தெற்கு பக்கத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட சபைக்குச் சென்றனர். அங்கு சூடல் பே என்ற டீக்கன் ஒருவர் பொறுப்பாளராயிருந்தார். ஆலய வளாகம் அசுத்தமாயிருப்பதைக் கண்ட போர் வீரன் ஒருவன் அதனைச் சுத்தம் செய்யுமாறு டீக்கனிடம் கூறினான். கர்த்தருடைய நாளை பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டுமாதலால் தன்னால் அப்படிச் செய்ய முடியாது என சூடல் பே மறுத்தார். பொறுமையை இழந்த போர் வீரர்கள் ஆலய வளாகத்தைத் துப்புரவு செய்யாவிட்டால் சபையோரின் முன்னதாக சுட்டுவிடுவதாக பயமுறுத்தினர். ஆனால் தன்னுடைய விசுவாசத்தை காப்பேன் என்று தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தபடியால் அவரை அவர்கள் கொன்றனர். பின்காலத்தில் சில கிறிஸ்தவர்கள் இதனை இரத்த சாட்சி என்றனர். ஆனால் இது இரத்த சாட்சியே அல்ல. ஏன்? ஏனெனில் இரத்த சாட்சி என்பது நீதியின் செயலுக்காக மரிப்பதாகும். அதாவது கர்த்தருக்கு மகிமை சேர்ப்பதாகும். கர்த்தர் பெயரை வைத்துக் கொண்டு தனது பிடிவாத்திற்காக இறப்பது இரத்த சாட்சியாகாது.
கர்த்தர் நமக்கருளிய அன்பின் இரட்சிப்பை நம்மால் து¡க்கி எறிய முடியுமா? நாம் களங்கங்களையும் பாவங்களையும் உடையவர்களாய் இருந்த படியாலே இயேசு கிறிஸ்து தனது ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய அனைத்துப் பாவங்களையும், தன் மீது எடுத்துக் கொண்டு சாகும்படியாக சிலுவையிலறைப்பட்டார். தேவனின் இந்த அன்பிற்கு முற்றிலுமாக நம்மை அர்ப்பணிக்க முடியவில்லை எனில் நம்முடைய மரணத்துடன் மறைந்து போகும் மாமிசத்திற்காக புதிய வானத்தையும் புதிய பூமியையும் கொடுக்கும் நற்செய்தியை எறிந்து விடுவதும் முடியாத ஒன்று, இரட்சிக்கப்படுவதற்காகவும் இரட்சிப்பின் நற்செய்தியை அனைவருக்கும் போதிக்கவும் பிரசங்கிக்கும் போது மரிக்கவும் நாம் இந்த உலகில் பிறந்தோம். பாவமன்னிப்பைப் பெற்றுக் கொண்ட பரிசுத்தவான்களின் கதி விசுவாசத்துடன் வாழ்வதும் இரத்த சாட்சியாவதுமாகும். நம் மீது வரப்போகும் கர்த்தரின் மகிமைக்காக விசுவாசத்திற்கான சாத்தானின் சவாலை மேற்கொள்ள வேண்டும்.
நாம் அநேக குறைபாடுகளுடனும், அதிகமான களங்கங்களுடனும் இருப்பதால் வேறு எதனாலும் கர்த்தருக்கு மகிமையளிக்க முடியாது. இத்தகைய மக்களான நமக்கு தேவனுக்கு மகிமையளிக்கும்படியான ஒரு வாய்ப்பைக் கொடுத்தார். இது நமது இரத்த சாட்சியைத் தவிர வேறெதுவுமில்லை. இதனைத் தவிர்க்க வேண்டும். கர்த்தரை நாம் விசுவாசிப்போமாக. நாம் அவரிடம் வேண்டினால் உபத்திரவ காலத்தின் அளவை அவர் குறைப்பார். புதிய வானம் புதிய பூமி ஆகியவற்றைச் சுதந்தரிக்கப் போகிறோம் என்ற நமது நம்பிக்கையுடன் நமது நம்பிக்கையைப் பற்றிக் கொண்டு சீக்கிரமாகவே முடிந்து போகும் துன்பங்களை மேற்கொள்வோமாக. அவருக்காக விசுவாசத்துடன் வாழ்ந்தவர்களுக்கு தேவன் மிகப் பெரிய துன்பத்தை அனுமதிக்கமாட்டார் என்பதையும், அவர்களின் விசுவாசத்தை மறுதலிக்கும் படியான எதையும் அவர் அனுமதிக்க மாட்டார் என்பதையும், அவர் அவர்களை பாதுகாத்து இன்னும் அதிகமான கிருபையை அவர்களுக்கு வழங்குவார் என்ற நம்பிக்கையுடனும் நாம் வாழ்வோமாக.
நாம் இரத்த சாட்சியாக வேண்டுமென்பதை அறிந்துள்ளதால் கடினங்களைச் சந்தித்த அனுபவங்களையும், துன்பங்களினு¡டே வாழ்வதையும், தேவனுக்காக உழைப்பதையும் பயிற்சியாக பெற்றிருக்க வேண்டும். இத்தகையவைகளின் மூலமாக தேவனுடன் நடக்கும் அனுபவத்தின் மூலமாக நம் விசுவாசத்தை வளர்த்து முடிவு காலம் வரும் போது தேவன் கொடுத்த பலத்தினால் இரத்த சாட்சியாவதை நம்மால் சந்திக்க முடியும். கர்த்தருக்காக துன்பப்படும் அனுபவம் இல்லாதவர்களாய் நாமிருந்தால் அவருக்கு அர்பணிக்காமலிருந்தால் அவருக்காக அழைக்காமலும் தியாகம் செய்யாமலுமிருந்தால் மகா உபத்திரவத்துடன் நமது இரத்த சாட்சியாகும் நேரம் வருகையில் பயம் நம்மை மேற்கொள்ளும். துன்பங்களை அனுபவித்து வேதனைகளை மேற் கொண்டவர்களினாலேயே இந்த துன்பத்தையும் இன்னுமொரு முறை வெல்ல முடியும்.
உங்கள் விசுவாச வாழ்வு தேவனுக்காக துன்பப்படுவதாகவும் அதனை வெற்றி கொள்வதாகவும், இரத்த சாட்சியாக வேண்டிய நேரம் வரும் போது நீங்களும் கூட கர்த்தருடைய கிருபை மற்றும் ஆசீர்வாதத்தின் மூலம் தமது மகிமையும் இவை யாவும் அனுமதிக்கப்பட்டன என தம் இருதயங்களில் கூறி வாயினால் அறிக்கை பண்ணுகிறவர்களில் ஒருவராக இருக்க வேண்டுமென கர்த்தரிடம் ஜெபிக்கிறேன்.
பரலோக இராஜ்யத்தையும், புதிய வானத்தையும் புதிய பூமியையும் உங்கள் விசுவாசத்தால் பெற தீவிரமாக விரும்பினீர்களானால் அவை உங்களுடையதாகும். எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்பட்டு உண்மையைக் குறித்த அறிவை அவர்கள் பெற வேண்டுமென கர்த்தர் விரும்புகிறார் (1 தீமோத்தேயு 2:4).