(வெளி 13:1-18)
“பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன. நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி, அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள். பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது. அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையம், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது. மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது. உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன். சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும். பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது. அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காரியம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது. அன்றியும், அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து, மிருகத்தின் முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று. மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்தாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது. அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக் கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.”
விளக்கவுரை
வசனம் 1: பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன.
கடலிலிருந்து ஒரு மிருகம் தோன்றுவதை அப்போஸ்தலனாகிய யோவான் கண்டான். யோவான் கண்ட இந்த மிருகத்தின் மூலமாக அந்திகிறிஸ்து இவ்வுலகில் தோன்றும் போது அவன் என்ன செய்வான் என்பதைக் கர்த்தர் காண்பித்தார். ஏழு தலைகளை உடையதாகவும் பத்து கொம்புகளை உடையதாகவும் கர்த்தர் யோவானிற்கு இந்த மிருகத்தை காட்டியது, இத்தகைய மிருகம் தோன்றி இவ்வுலகில் செயல்படும் என காட்டுவதற்காக அல்ல. ஆனால் இந்த மிருகத்தின் வல்லமையுடன் ஒருவன் தோன்றி பரிசுத்தவான்களை துன்புறுத்தி இரத்த சாட்சிகளை உருவாக்குவான் என்று கூறுகிறார்.
வெளிப்படுத்தின விசேஷத்தில் வரும் எல்லாமே வெறும் உவமானங்கள் என இது பொருள்படுமா? இல்லவே இல்லை, முடிவு காலத்தில் அந்திகிறிஸ்து எப்படி காட்சியளிப்பான் எனவும் எப்படி செயல்படுவான் என்பதையும் காட்ட கர்த்தர் இத்தகைய காட்சிகளை உபயோகிக்கிறார். இத்தகைய ஞானத்துடனும் வல்லமையுடனும் கர்த்தரால் மட்டுமே பேச முடியும். வெளிப்படுத்தின விசேஷத்தின் 13ஆம் அதிகாரத்தின் மூலம் இறுதி காலத்தைக் குறித்த தெளிவான சித்திரத்தை நம்மால் காண முடியும்.
யோவான் முதலில் கண்டது கடலிலிருந்து வெளியே வந்த மிருகம் போன்ற உருவத்தையாகும். இம்மிருகத்தின் ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் இந்த உலகிற்கு வரப்போகிற அந்திகிறிஸ்துவின் வல்லமையைக் குறிக்கிறது. “அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன” என்ற சொற்றொடர் அந்திகிறிஸ்து உலகின் நாடுகளைத் தன்பக்கம் சேர்த்து கர்த்தரை எதிர்த்து நிற்பான் என்று பொருள்படும். உலகிலுள்ள அனைத்து ராஜாக்களையும் அவன் ஆளுவான் எனவும் இது பொருள்படும். பத்து கி¡£டங்கள் அவற்றின் வெற்றியையும் மிருகத்தின் தலையில் எழுதப்பட்ட தேவது¡ஷன பெயர் அவற்றின் பெருமையையும் குறிக்கிறது.
எதிர்காலத்தில் எல்லா நாடுகளும் சேர்ந்த ஐக்கிய அமைப்பொன்று உலகை ஆளும். இப்படி ஒன்றாகச் சேர்ந்த நாடுகள் பொதுவான விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய அரசாளும் அமைப்பாகவிருக்கும். இந்த ஒன்று சேர்க்கப்பட்ட மிகப் பெரிய வல்லமை ஒரு மிகப் பெரிய சக்தியாகும். அது தனது எல்லைகளைப் பெரிதாக்கி உலகின் நாடுகளையெல்லாம் ஆளும். அந்திகிறிஸ்து இறுதியாக இப்பூமியில் தோன்றுகையில் அது அவனின் காரியங்களைச் செய்யும். அவன் கர்த்தரின் எதிரியாவான். அவன் சாத்தானின் வல்லமைகளை அணிந்து செயல்படுவான். அவன் பிசாசின் ஊழியனாவான்.
வசனம் 2: நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.
அந்திகிறிஸ்து தோன்றும் போது அவன் பரிசுத்தவான்களையும் உலகின் மக்களையும் என்ன செய்வான் என இந்த வார்த்தை நம்மிடம் கூறுகிறது. வரப்போகிற அந்திகிறிஸ்து இத்தகைய கொடியச் செயல்களை பரிசுத்தவான்களிடம் நடப்பிப்பான். ஏனெனில் இத்தகைய காரியங்களைச் செய்யும் அதிகாரத்தையும் வல்லமையையும் சாத்தானிடமிருந்து அவன் பெறுவான். அந்திகிறிஸ்து தோன்றும் போது எத்தனைக் கொடூரமாக பரிசுத்தவான்களை அவன் நடத்துவான் என இது நமக்கு காட்டுகிறது. அவர்கள் தம் இரத்த சாட்சியினால் அந்திகிறிஸ்துவின் மூலம் எத்தனையாய் துன்பப்பட்டோம் என்பதைக் காட்டுவார்கள்.
அந்திகிறிஸ்து எத்தனைப் பயங்கரமானவனாய் இருப்பான் என இந்த வார்த்தைக் காட்டுகிறது “அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும்” என்ற சொற்றொடர் அவனின் அழிக்கும் வல்லமையைக் குறிக்கிறது. இங்கு “வலுசர்ப்பம்” என்பது கர்த்தரால் உருவாக்கப்பட்ட தேவது¡தனாவான். அவன் அவரின் சிங்காசனத்தைக் கேட்டு அவரிடம் சவால் விட்டான். இந்த அதிகாரத்தில் தோன்றும் மிருகமானது வலுசர்ப்பத்திடமிருந்து அதிகாரத்தைப் பெற்று கர்த்தரையும் அவர் பரிசுத்தவான்களையும் எதிர்த்து நிற்கும் செயலைச் செய்யும்.
பரலோகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஒரு து¡தனாகிய சாத்தான், கர்த்தருக்கு முன்பாக அவரை எதிர்த்து நிற்கக் கூடியவனுக்கு தனது வல்லமையையும் அதிகாரத்தையும் வழங்கி கர்த்தருக்கெதிராகவும் அவரின் பரிசுத்தவான்களுக்கெதிராகவும் அவனைப் போரிடச் செய்து அவனை சாவதற்கு வழிநடத்துவான். சாத்தானின் வல்லமையால் தரிப்பிக்கப்பட்ட அந்திகிறிஸ்து கர்த்தரின் மக்களையும், அனைத்து மனிதர்களையும் எதிர்காலத்தில் நசுக்குவான்.
வசனம் 3: அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி,
ஏழு அரசர்களில் ஒருவனாக அந்திகிறிஸ்து தோன்றுவான் என இவ்வசனம் கூறுகிறது. அந்திகிறிஸ்து மிருகம் என அழைக்கப்படுகின்றான். ஏனெனில் பரிசுத்தவான்களுடன் மிருகத்தனமாக அவன் நடந்து கொள்வான்.
இங்கு கர்த்தரின் எதிரியும் பரிசுத்வான்களும் ஒரே மாதிரியாக தோன்றுவார்கள். ஏனெனில் இறுதி காலத்தில் மரணப் பிரச்சனைகளைக் கூட அவர்களால் தீர்க்க முடியும். பூமியை வருத்திக் கொண்டிருக்கும் வாதைகளின் பிரச்சனையை அவன் தீர்க்க கூடியவன் என முடிவு காலத்தில் அநேக மக்கள் விசுவாசிப்பர். ஆனால் அவன் கர்த்தரின் எதிரியாவான். உலகப்படியான மக்களைத் தனக்கு சரணடையும் படி செய்தாலும் கர்த்தருக்கும் அவரின் பரிசுத்தவான்களுக்கும் எதிராய் நிற்பதால் இறுதியில் அவன் அழிக்கப்படுவான்.
வசனம் 4: அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.
மிருகத்தனமாகச் செயல்படுபவனுக்கு வலுசர்ப்பம் தனது எல்லா அதிகாரத்தையும் அளிப்பான் எனவும் அவனைத் தனது ஊழியனாக்கும் எனவும் இது நமக்கு கூறுகிறது. இதனால் உலகிலுள்ள அனைத்து மக்களும் வலுசர்ப்பத்தை கர்த்தராக நினைத்து பயத்தால் நடுங்கி அவனை ஆராதிப்பர். மிருகத்திடமிருக்கும் வல்லமை இக்காலத்தில் பூமியிலுள்ள எந்த அரசர்களிடமும் இருக்காது. ஆகவே அவன் தன்னை கர்த்தர் என்று அறிவிப்பதையும் தெய்வமாகுவதையும் யாராலும் தடுக்க முடியாது.
மிருகத்திற்கு வலுசர்ப்பம் அதிக வல்லமையை வழங்குவதால் வலுசர்ப்பத்தையும் மிருகத்தையும் மக்கள் மதித்து மிருகத்தை தமது கடவுளாக ஆராதிப்பர். இத்தகைய வல்லமைப் பெற்ற அந்திகிறிஸ்து தோன்றுகையில், ஒளியைக் காட்டிலும் இருளை விரும்புகிறவர்கள் அவனைத் தமது கடவுளாக ஆராதித்து அவனை உயரே உயர்த்துவார்கள்.
வசனம் 5: பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.
மிருகம் வலுசர்ப்பத்திடமிருந்து அதன் பெருமைமிக்க இருதயத்தையும் மூன்றரை வருடங்கள் (42 மாதங்கள்) அது பெருமையாக பேசுவதற்கான அதிகாரத்தையும் பெறும். இப்படியாக பரிசுத்தவான்களையும் இவ்வுலகின் மக்களையும் மூன்றரை ஆண்டுகள் துன்புறுத்தும் அதிகாரத்தை மிருகம் பெறுவான்.
அந்திகிறிஸ்துவாகிய மிருகம், கர்த்தரை எதிர்த்து நிற்கும். அவரின் ஆலயத்தை மூன்றரையாண்டுகள் பழித்துக் கூறும் வார்த்தைகளைப் பேசும் அதிகாரத்தை பெறுவான். இப்படியாக எல்லாப் பாவிகளும் மிருகத்திடம் சரணடைவர். இறுதியாக மிருகத்துடன் இவர்களும் தமது அழிவைச் சந்திப்பர்.
வசனம் 6: அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையம், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது.
வலுசர்ப்பத்திடமிருந்து அதிகாரத்தைப் பெற்ற அந்திகிறிஸ்து கர்த்தரையும், அவரின் து¡தர்களையும் பரிசுத்தவான்களையும் மூன்று வருடம் ஆறு மாதங்களுக்கு பழித்து கூறுவான். அவர்களைச் சபித்து திட்டுவான். வலுசர்ப்பம் கூறியபடி இவையெல்லாம் செய்யப்படும். கர்த்தரை மூன்றரை ஆண்டுகள் தேவது¡க்ஷனம் கூறும் அதிகாரத்தை மிருகத்திற்கு அளிக்கும் சாத்தானின் செயல், கர்த்தரின் அனுமதியின் பேரிலேயே நடக்கும் என்பதை நாமறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும்.
முக்கியமாக, கர்த்தரையும் அவர் மக்களையும் து¡க்ஷிக்கவே அந்திகிறிஸ்து வந்தான். வலுசர்ப்பத்திடமிருந்து அதிகாரத்தைப் பெற்ற அந்திகிறிஸ்து மகா உபத்திரவத்தின் முதல் மூன்றரை ஆண்டுகள் கர்த்தரின் பெயரையும் அவர் மக்களின் பெயரையும் து¡ஷிப்பான்.
வசனம் 7: மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப் பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர் மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.
பரிசுத்தவான்களைக் கொல்லும் அதிகாரத்தை வலுசர்ப்பத்திடமிருந்து மிருகம் பெற்று அநேக இரத்தசாட்சிகளை உருவாக்குவான். அவன் முழு உலகையும் அரசாளுவான். இவ்வுலகிலுள்ள ஒவ்வொருவரையும் தனது ஆளுகைக்குட்படுத்தும் அதிகாரம் அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும்.
அந்திகிறிஸ்து பரிசுத்தவான்களைக் கொல்லுவான். உலகம் முழுவதையும் ஆளுவதற்கான அவனின் ஒரே வழி பரிசுத்தவான்களுடன் போரிட்டு அவர்களை மேற்கொள்வதாகும். அந்திகிறிஸ்துவை ஆட்டுவிப்பது பிசாசானவனாகும். விழுந்து போன து¡தனான அவன் கர்த்தரைப் போல் தானும் ஆராதிக்கப்படுவதை எதிர்பார்த்தான். பரிசுத்தவான்களைக் கொல்வதன் மூலம் மறுபடியும் பிறக்காதவர்கள் அவனுக்கு ஆராதனைச் செய்வர். உபத்திரவத்தின் இந்த காலத்தில் எல்லா பரிசுத்தவான்களும் அந்திகிறிஸ்துவால் துன்புறுத்தப்பட்டு இரத்த சாட்சியாக்கப்படுவர்.
வசனம் 8: உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.
அந்திகிறிஸ்து இவ்வுலகை வெல்லும் போது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து மறுபடியும் பிறந்தவர்களைத் தவிர மற்ற அனைவரும் அதாவது மறுபடியும் பிறக்காத அனைவரும் அவனைத்தமது தெய்வமாக வணங்குவர். அந்திகிறிஸ்துவை பாவிகள் மட்டுமே ஆராதிப்பர். அவர்களின் பெயர் ஜீவப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்காது.
வசனம் 9: காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன்.
கர்த்தரின் மக்கள் யாவரும் இரத்த சாட்சியாகும்படி அவனின்/அவளின் விசுவாசத்தை ஆயத்தப்படுத்த வேண்டுமெனவும் இது நமக்கு கூறுகிறது. இவை யாவும் வேதவசனங்களில் எழுதப்பட்டுள்ளபடி அப்படியே நிறைவேற்றப்படும்.
வசனம் 10: சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப் பட்டுப் போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப் பட வேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்.
இறுதிகாலத்தில் மறுபடியும் பிறந்தவர்களைக் கொன்றவர்களுக்கு அதே விதமான சாவையும் உபத்திரவத்தையும் அளிக்கப் போவதாக கர்த்தர் கூறுகிறார். உபத்திரவத்தின் முதல் மூன்றரையாண்டுகள் கடந்த நிலையில் அந்திகிறிஸ்துவாலும் அவனைப் பின்பற்றுவோராலும் பரிசுத்தவான்கள் கொல்லப்படுவர். ஆனால் பரிசுத்தவான்களை இப்படிக் கொன்றவர்களுக்கு இன்னமும் அதிகமான உபத்திரவங்களையும் துன்பங்களையும் கர்த்தர் திருப்பித் தருவார். எல்லா பரிசுத்தவான்களும் தமது இருதயங்களை ஐக்கியப்படுத்தி தேவனின் வார்த்தை மீதுள்ள தமது விசுவாசத்தின் மூலம் இந்த கடினமான உபத்திரவத்தை மேற்கொண்டு தம்முடைய இரத்த சாட்சியத்தைத் தழுவுவதன் மூலம் கர்த்தருக்கு மகிமையளிக்க வேண்டும்.
வசனம் 11: பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.
இங்கு நாம் காண்பது முதல் மிருகத்தையல்ல. இது இரண்டாம் மிருகமாகும். இரண்டாவது மிருகமும் கூட வலுச்சர்ப்பத்தைப் போன்றே யோசிக்கவும் பேசவும் செய்யும். தான் வலுசர்ப்பத்தைப் போன்றவன் என்று எண்ணுவது மட்டுமின்றி இந்த நம்பிக்கையின் அடிப்படையில் செயல்பட்டு பரிசுத்வான்களை இன்னமும் அதிகமாக துன்புறுத்துவான். இந்த மிருகம் அந்திகிறிஸ்துவின் தீர்க்கதரிசியாகும்.
வசனம் 12: அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காரியம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது.
முதல் மிருகத்திடமிருந்து இரண்டாம் மிருகம் அதிகாரங்களைப் பெற்று முதல் மிருகத்தை தான் வணங்குவதுடன் இப்பூமியில் இன்னமும் மிஞ்சியிருப்பவர்களும் முதல் மிருகத்தை வணங்கும் படி செய்யும். அவனுடைய வேலை முதல் மிருகத்தின் சிலைகளை செய்து கர்த்தரை வணங்குவதை போல் எல்லோரையும் வணங்கச் செய்வதேயாகும். இந்த செயலால் முதல்மிருகமும் இரண்டாம் மிருகமும் எல்லா மக்களும் கடவுளைப்போல் வணங்கும் பொருட்களாவர். இது சாத்தானின் சாராம்சமும், அவனின் சுபாவமுமாகும்.
வசனம் 13: அன்றியும், அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து,
மனிதர்களின் கண்களுக்கு சாத்தான் இவ்வுலகில் பெரிதான அதிசயங்களைச் செய்து காட்டுவதால் அநேக மக்களை அவனால் வஞ்சிக்க முடியும். வானிலிருந்து பூமிக்கு நெருப்பை மழையாகப் பொழிவிக்கும் வல்லமை அவனிடமிருக்கும்.
வசனம் 14: மிருகத்தின் முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ண வேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.
ஆனால் சீக்கிரமாக சாத்தான் தனது சுயரூபத்தைக் காட்டுவான். அவனுக்கு வேண்டியதெல்லாம் மக்கள் மனதிலிருக்கும் கர்த்தர் மீதுள்ள அவர்களின் விசுவாசத்தைத் திருடி அவர்கள் தன்னை வணங்குவதேயாகும். இதனைச் சாதிப்பதற்கு மனிதர்களுக்கு முன் அநேக அதியங்களைச் செய்து கர்த்தரின் மக்களை கொல்லுவான். அவனுடைய இறுதியான நோக்கத்தை நிறைவேற்ற அதாவது அவனும் கர்த்தரைப் போலாவதை நிறைவேற்ற கர்த்தரின் இடத்திற்கு ஏற அவன் முயலுவான். ஆகவே அவன் முதல் மிருகத்தைப் போன்ற ஒரு உருவத்தை ஏற்படுத்தி மக்கள் அவனைக் கடவுளை ஆராதிப்பதைப் போல் ஆராதிக்கச் செய்வான்.
வசனம் 15: மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்தாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.
தன்னை தெய்வமாக்குவதில் சாத்தானுக்குள்ள மிகப்பெரியத் தடை கர்த்தரின் மக்களாதலால், அவர்களை அழிக்க சாத்தான் தனக்கு முடிந்ததையெல்லாம் செய்வான். மிருகத்தின் உருவத்தை ஆராதிக்காதவர்களை அது எத்தனைப் பேராயிருந்தாலும் அவர்களை அவன் கொல்லுவான். ஆனால் மிருகத்திடம் பரிசுத்தவான்கள் சரணடைய மாட்டார்கள். தம்முடைய மறுவாழ்வை எதிர்பார்த்து எண்ணிலடங்கா பரிசுத்தவான்கள் தம்முடைய இரத்த சாட்சியத்தை விருப்பத்துடன் தழுவுவர். அந்திகிறிஸ்து பரிசுத்தவான்களுக்கு அநேக துன்பங்களை எடுத்து வரும் போது கர்த்தர் அவனுக்காக ஏழு பாத்திரங்களின் வாதைகளையும், நித்தியமாக எரியும் நரகத்தையும் ஏற்பாடு செய்திருப்பார்.
வசனம் 16-17: அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
உபத்திரவம் உச்சியில் இருக்கும் போது எல்லோரையும் தனது கட்டுப்பாட்டிற்குட்படுத்த அவர்களைத் தமது வலது கைகளிலோ அல்லது நெற்றிகளிலோ ஒரு குறியீட்டை பெறுமாறு அந்திகிறிஸ்து வலியுறுத்துவான். இந்த குறியீடானது மிருகத்தின் குறியீடாகும். எல்லோரையும் தனது ஊழியர்களாக்க அவர்கள் தனது குறியீட்டைப் பெற வேண்டுமென அந்திகிறிஸ்து மக்களை கட்டாயப்படுத்துவான்.
மக்களின் உயிரைத் தனது பிணையாகக் கொண்டு அரசியல் திட்டங்களுக்கு அந்திகிறிஸ்து செல்வான். மிருகத்தின் குறியீட இல்லாதவர்களுக்கு அது அவனின்/அவளின் அத்தாட்சியாக இருப்பதால் வாங்குவதையோ விற்பதையோ இயலாததாக்குவான். இந்தக் குறியீடு மிருகத்தின் பெயராயிருக்கும் அல்லது அவனின் எண்ணாயிருக்கும். எதிர்காலத்தில் இந்த மிருகம் உலகிற்கு வருகையில் அவனுடைய பெயரினாலோ அல்லது அவனின் எண்ணினாலோ ஆன, அவனின் குறியீட்டைப் பெற வேண்டும். இந்தக் குறியீட்டைப் பெறுபவர்கள் அக்கினியும் கந்தகமும் எரிகிற அக்கினிக் கடலிலே எறியப்படுவர் என்ற கர்த்தரின் எச்சரிக்கையை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
வசனம் 18: இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.
மிருகத்தின் எண் 666 ஆகும். சுருக்கமாகக் கூறினால் மிருகமே கர்த்தர் என இது பொருள்படும் “ஒரு மனிதன் கர்த்தராவான்” எனக் கூறும் எந்த எண்ணாவது இருக்கிறதா? அத்தகையப் பொருளைப் பெற்றிருக்கும் ஒரு எண் அந்திகிறிஸ்துவின் எண்ணாகும். திரியேகக் கர்த்தரே நமது ஒரே உண்மையானக் கர்த்தராயிருப்பதால் பரிசுத்தவான்களால் இந்த எண்ணை பெற்றுக்கொள்ள முடியாது. தேவன் மீதுள்ள தம் விசுவாசத்தினால் பரிசுத்தவான்கள் சாத்தானை மேற்கொள்ள வேண்டும். இதுவே பரிசுத்தவான்களால் எல்லா மகிமையையும் தேவனுக்கு கொடுக்கக் கூடிய சிறந்த விசுவாசமும் ஆராதனையுமாகும். நம்முடைய விசுவாசத்தினால் வெற்றி பெறுவோமாக.
முக்கிய சொற்களுக்கான விளக்கங்கள்
அதிகாரம் 13ன் தலைப்பு அந்திகிறிஸ்து மற்றும் சாத்தானின் தோன்றுதலாகும். இவர்களின் தோன்றுதலுக்கு பிறகு பரிசுத்தவான்கள் ஆவிக்குரிய போரில் ஈடுபடுவர். இந்த யுத்தத்தில் அந்திகிறிஸ்துவால் இரத்த சாட்சியாவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அந்திகிறிஸ்து சாத்தானின் ஊழியனாவான். பரிசுத்தவான்களைத் துன்புறுத்தி அவர்களை இரத்த சாட்சிகளாகும்படி செய்வது இவன்தான்.
இந்த காலத்தில் வாழுகையில் எல்லா கிறிஸ்தவர்களும் உலகிலுள்ள கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் வெளிப்படுத்தலைக் குறித்து அறிந்திருக்க வேண்டும். அந்திகிறிஸ்துவை சாத்தான் கடவுளாக்கும் நேரம் வருமென்று வெளி அதிகாரம் 13 தீர்க்கதரிசனம் கூறுகிறது. உலகின் வல்லமைமிக்க அரசியல் தலைவர்களில் ஒருவனுக்கு சாத்தான் மிகப் பெரிய அதிகாரத்தைக் கொடுத்து கர்த்தருக்கெதிராகவும் அவரின் பரிசுத்தவான்களுக்கெதிராகவும் அவனை நிற்கச் செய்வான். அந்திகிறிஸ்து தன்ன¨யே கர்த்தராக அறிவித்து அவருடன் போராடுவான்.
மிருகத்தனமாக அந்திகிறிஸ்து எடுத்து வரும் உபத்திரவங்களினாலும் துன்பங்களினாலும் கர்த்தரின் மக்கள் உட்பட அனைவரும் பெரிதும் துன்புறுவர். அந்திகிறிஸ்துவின் சிலையானது சாத்தானின் ஜீவ சுவாசத்தைப் பெற்றிருப்பதால் உயிருடனிருப்பதைப் போலவே அதுவும் பேசும். மேலும் மக்களைக் காயப்படுத்தும் அதிகாரமும் அதனிடமிருக்குமென இவ்வசனங்கள் கூறுகின்றன. மறுபடியும் பிறவாதவர்கள் அவனிடம் சரணடைந்து அவனின் ஊழியர்களாவர். அதே நேரம் சாத்தானின் சிலையை ஆராதிக்காதவர்கள் எத்தனைப் பேராயிருந்தாலும் அவர்கள் அனைவரும் கொல்லப்படுவர். எல்லோரும் தமது வலது கைகளிலோ அல்லது நெற்றிகளிலோ தனது பெயரையோ அல்லது தனது எண்ணையோ பெறச் செய்வான்.
நம்முடைய விசுவாசத்தை முன் கூட்டியே நாம் ஆயத்தம் செய்து வெளி 13இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த வார்த்தையின் பொருளை புரிந்து அதனை விசுவாசித்து எதிர்காலத்தில் நம் விசுவாசத்தால் சாத்தானுடன் போரிட்டு அவனை மேற்கொள்ள வேண்டும். இந்த வெளிப்படுத்தின வார்த்தையைக் கற்று அதனை விசுவாசித்து இன்றைய கர்த்தரின் மக்கள் தேவனுக்கு மகிமையைச் செலுத்த வேண்டும். இப்படியாக அந்திகிறிஸ்துவை உறுதியாக எதிர்த்து நின்று அவனை வெற்றியினால் மேற்கொள்ள வேண்டும்.
நரகத்தின் தோற்றம்
நரகம் ஏன் இருக்கிறது எனவும் அது ஏன் உருவாயிற்று எனவும் முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். சாத்தானுக்காக உருவாக்கப்பட்ட இடம் நரகமாகும். தொடக்கத்தில் அவன் சாத்தானாயிருக்கவில்லை எனவும், அவனும் கர்த்தரால் படைக்கப்பட்ட தேவ து¡தர்களில் ஒருவன் எனவும் வேதாகமம் கூறுகிறது. ஆனால் தனது பெருமையினால் கர்த்தருக்கு சவால் விட்ட இந்த து¡தன் தனது பாவத்தினிமித்தம் சாத்தானாயினான். இவனை அடக்கி வைக்க கர்த்தர் படைத்த ஓரிடம் நரகமாகும். தனக்கு எதிராக நிற்பவர்களுக்கும், சாத்தானுக்கும் அவனைப் பின்பற்றுவோருக்கும் தண்டனையளிப்பதற்காக கர்த்தர் நரகத்தைத் தோற்றுவித்தார்.
ஏசாயா 14:12-15 இந்த து¡தன் எப்படி சாத்தானானான் என விவரிக்கிறது. “அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.”
கர்த்தருக்கெதிராக பரலோகத்தில் நின்ற இத்து¡தன் கர்த்தரின் சிங்காசனத்தை இச்சித்தான். அவனுக்கு மேலிருப்பவர் கர்த்தர் மட்டுமே எனக் கண்டு அவரை அங்கிருந்து அகற்றி சிங்காசனத்தில் அமர அவன் முயன்றான். இந்த புரட்சியின் பதிலாக கர்த்தரால் அவன் பரலோகத்திலிருந்து விரட்டப்பட்டு சாத்தானாய் முடிவடைந்தான். இந்த புரட்சியில் சாத்தானைப் பின் பற்றியவர்கள் பிசாசுகள் என வேதாகமம் கூறுகிறது.
தன்னால் படைக்கப்பட்டவைகள் தனக்கு எதிராகத் திருப்பியதால் அவரின் நீதியின் தண்டனையை படைத்தவைகளுக்கு அளிக்க “நரகம்” என்ற இடத்தைக் கர்த்தர் உருவாக்கினார். சாத்தான் முடிவில்லாது கர்த்தருக்கு சவால் விட்டாலும் அவரின் செயல்களைத் து¡ஷித்தாலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது எல்லோருக்கும் பிரசங்கிக்கப்பட்டவுடன் ஆயிரம் வருடங்களுக்கு பாதாளத்திலே அவன் கட்டப்படுவான்.
கர்த்தருக்கு எதிராக தான் மாறிய பாவத்தைக் குறித்து சாத்தான் வருந்த மாட்டான் என்பதால் கர்த்தரைப்போன்ற உயரத்திற்கு தானும் உயர தொடர்ந்து முயற்சி செய்வான். ஆனால் நித்தியமாக நரகத்தின் பயங்கரமானத் தண்டனையை அவன் பெறுவான். கடைசி வரை சாத்தான் கர்த்தருக்கும் நீதிமான்களுக்கும் எதிராக தொடர்ந்து நின்று மக்கள் தன் சிலையை வணங்கும்படி செய்வான். கர்த்தரையும் அவரின் பரிசுத்தவான்களையும் து¡ஷிக்கும் இந்த விழுந்து போன து¡தனை சாத்தான் அல்லது பிசாசு எனவும், வலுசர்ப்பம் அல்லது பழையச்சர்ப்பம் (வெளி 12:9) எனவும் வேதாகமம் அழைக்கிறது.
666 என்பது மிருகத்தின் எண்ணாகும்
கர்த்தர் சாத்தானை அவனின் சிறையில் அடைப்பார். ஆனால் அவன் நரகத்தில் அடைபடும் முன் எல்லா மக்களும் தமது வலது கையிலோ அல்லது நெற்றியிலோ தனது குறியான 666 என்ற அவனது எண்ணைப் பெறும் படிச் செய்வான். இந்த குறியை பெறாதவர்கள் எதனையும் விற்கவோ வாங்கவோ முடியாதபடி செய்வான்.
7 என்ற எண் நிறைவைக் குறிக்கிறது. இது கர்த்தரைக் குறிக்கிறது. மறுபுறம் 6 என்ற எண் மனிதனைக் குறிக்கிறது. ஏனெனில் ஆறாம் நாள் தனது சாயலாக கர்த்தர் மனிதனைப் படைத்தார். 666 எனும் மிருகத்தின் எண் மனிதன் தன் பெருமையின் மூலம் திரியேகக் கர்த்தராக முயல்வதைக் குறிக்கிறது. உலகின் மக்கள் இக்குறியான 666ஐப் பெறுவதற்கான நேரம் வெகு தொலைவில் இல்லை.
வெளி 13:1 பத்து நாடுகளிலிருந்து ஏழு அரசர்கள் தோன்றுவர் என கூறுகிறது. அவர்களில் ஒருவனுக்கு அதிக வல்லமை இருந்தது. சாத்தான் அவனுக்கு அதிகாரம் கொடுத்தான். அவன் இவ்வுலகைத் தனது ஆளுகைக்கு உட்படுத்துவான். தன்னுடைய காயங்களைக் குணப்படுத்துவதும், வானத்திலிருந்து அக்கினி மழையைப் பொழிவதுமான பெரிய அதிசயங்களைச் செய்வதன் மூலம் உலகின் அனைத்து மக்களும் அவனைப் பின்பற்றும் படி செய்வான்.
வேறு வார்த்தையில் கூறினால், கர்த்தரைப் பின்பற்றும் மக்களைப் பார்க்கிலும், தன்னை பின்பற்றுவோரை சாத்தான் அதிகரிப்பான். அநேக மக்கள் அவனையே கர்த்தரென்று ஆராதிப்பர். துன்பமான நேரங்களில் 2 கதாநாயகர்கள தோன்றுவதைப் போல் சாத்தானிடமிருந்து அதிகாரங்களைப் பெற்ற அந்திகிறிஸ்து உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் அரசியல் பொருளாதார பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதன் மூலம் மக்கள் தன்னை ஆராதிக்க வேண்டுமென எதிர்பார்ப்பான். முடிவு காலத்தில் கர்த்தரிடம் நேரடியாக சவால் விடுவதன் மூலம் சாத்தான் தனது சுயரூபத்தைக் காட்டுவான்.
தானியேல் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதைப் போல் மகா உபத்திரவம் அதன் முதல் மூன்றரையாண்டுகளைக் கடக்கும் போது மிகவும் கடினமானதாக மாறும். முதல் பாதியான மூன்றரையாண்டுகள் தொடரும் இக்காலத்தில் படுபயங்கரமான வாதைகளும் சாத்தானின் வல்லமையான ஆளுகையும் நிகழும். ஆனால் இந்த முதல் மூன்றரையாண்டுகள் முடியும் போது அதனைப் பின் தொடர்வது அதிபயங்கரமான உபத்திரவங்களாகும். அப்பொழுது உலகின் மக்கள் மத்தியில் செயல்படும் படியான அதிகாரம் சாத்தானுக்கு வழங்கப்படும். தனது பேச்சைக் கேட்காதவர்களைக் கொல்லுவான். வானத்திலிருந்து அக்கினியை எடுத்து வந்து அந்த அற்புதத்தால் மக்களை வஞ்சிப்பான். கர்த்தருக்கெதிராக மக்களை தேவது¡க்ஷனம் கூறும்படி செய்வான்.
அதே சமயம் சாத்தானிடமிருந்து அனைத்து அதிகாரங்களையும் பெற்ற அந்திகிறிஸ்து பரிசுத்தவான்களைத் து¡க்ஷித்து தனக்குக் கீழ்ப்படியாத அனைத்து பரிசுத்தவான்களையும் கொன்று குவிப்பான். வசனங்கள் 7-8 நமக்கு கூறுகின்றன, “மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப் பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர் மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது. உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.” அங்கு அப்போது மிருகத்தை ஆராதிக்க மறுப்பவர்கள் மறுபடியும் பிறந்த கர்த்தரின் மக்களாய் இருப்பார்கள். அவர்களின் பெயர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும்.
இரத்த சாட்சியாகும் நிகழ்ச்சி
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்கள் தேவனுக்குள்ளாக தமது விசுவாசத்தைக் காத்துக் கொள்ள சாத்தானின் குறியீட்டை மறுக்கும் போது இரத்த சாட்சிகளாய் மரிக்கும் நிகழ்ச்சி தோன்றும். வேறு வகையாகக் கூறினால் மகா உபத்திரவகாலத்தின் முதல் மூன்றரை ஆண்டுகள் நெருங்கும் போது அதன் உபத்திரவத்தின் அளவு மிகவும் அதிகரித்ததாய் மாறும். இந்நேரத்தில் இரத்த சாட்சிகளாய் மரிக்கும் பொருட்டு நீதிமான்களின் விசுவாசம் ஆயத்தப்பட வேண்டும்.
ஆயினும் இயேசுவைத் தமது இரட்சகராய் விசுவாசித்தாலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காதவர்கள் பாவமன்னிப்பை பெறாதவர்களாகையால் அவர்களின் இருதயங்களில் இன்னமும் பாவமிருப்பதால் அவர்கள் சாத்தானின் பக்கம் நின்று இறுதியில் அவனிடம் சரணடைவர்.
இயேசுவை விசுவாசித்தாலும் மறுபடியும் பிறக்காதவர்களின் இருதயங்களில் பரிசுத்த ஆவியானவர் இல்லாமையால் அவர்கள் நெருக்கப்படுகையில் அவர்கள் சாத்தானால் கட்டுண்டு அவனின் குறியீட்டைத் தமது வலது கரங்களிலோ அல்லது நெற்றியிலோ பெற்று அவனைத் தமது கடவுளாக ஆராதிப்பார்.
இந்நேரத்தில் சாத்தானை ஆராதிக்காதவர்கள் பாவமன்னிப்பைப் பெறாதவர்கள் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். மிருகத்திடம் சரணடைபவர்கள் சாத்தானுடனே கூட கந்தகம் எரிகிற அக்கினிக் கடலிலே வீசப்படுவர் எனக் கர்த்தர் தெளிவாகக் கூறியதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வசனம் 9-10 நமக்கு கூறுகிறது “காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன். சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்.” இந்நேரத்தில் அந்திகிறிஸ்துவும் அவனைப் பின்பற்றுவோரும் நீதிமான்களுக்கு பெரிதான துன்பங்களை எடுத்து வருவதுடன் அவர்களைத் தமது வாளுக்கு இரையாக்குவர். ஆயினும் இங்கு நாம் சரியாக அறிந்து கொள்ள வேண்டியது யாதெனில் நீதிமான்களை துன்புறுத்தி கொல்லும் நமது எதிரிகளைக் கர்த்தர் நிச்சயமாக பலி வாங்குவார்.
கர்த்தரின் வாக்குத்தத்தங்களை விசுவாசித்து பரிசுத்தவான்கள் துன்புறுத்தப்படுவதையும் மரணத்தையும் அனுபவித்தேயாக வேண்டும். நம் எதிரிகளின் மீது கர்த்தர் தன் கோபத்தை எடுத்து வராவிட்டால் நீதி செய்யப்படும் என்ற உணர்வோடு எப்படி நம் கண்களை மூடுவோம்? நம்மைத் துன்பப்படுத்தும் நமது எதிரிகளைப் பலி வாங்குவதாக நம் கர்த்தர் வாக்குத்தத்தம் செய்துள்ளபடியால் நம் மரணம் வீணாகிப் போகாது. நீதிமான்களைத் துன்புறுத்தி அவர்களை நெருக்கியவர்களை கர்த்தர் நிச்சயமாய் பலி வாங்குவார். மேலும் நீதிமான்களை உயிரோடெழுப்பி எடுத்துக் கொண்டு ஆட்டுக் குட்டியானவரின் திருமணப் பந்தியில் பங்கேற்கச் செய்து தேவனுடனே கூட ஆயிரம் வருடங்கள் ஆளும்படி செய்து தம்முடனே கூட நித்தியமாக வாழச் செய்வார். இதனை நாம் விசுவாசித்து இதனையே நாம் நம்புவோமாக. நம்முடைய அனைத்து நம்பிக்கைகளையும் நிறைவேற்றுவதால் நம்முடைய தேவனே சிறந்த கர்த்தராவார்.