(வெளி 14:1-20)
“பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாரயிரம்பேரையும் நிற்கக்கண்டேன். அல்லாமலும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது. அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம் பேரேயல்லாமல் ஒருவரும் கற்றுக்கொள்ளக் கூடாதிருந்தது. ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள். பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுது கொள்ளுங்களென்று கூறினான். வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்கொடுத்தாளே! என்றான். அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது. தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான். பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று. பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன். அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச்சொன்னான். அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது. பின்பு வேறொரு தூதனும் கருக்குள்ள அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான். அக்கினியின்மேல் அதிகாரமுள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கருக்குள்ள அரிவாளைப்பிடித்திருக்கிறவனை நோக்கி: பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது, கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தத்தோடே சொன்னான். அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின் மேலே நீட்டி, பூமியின் திராட்சப்பழங்களை அறுத்து, தேவனுடைய ஆக்கினையென்னும் பெரிய ஆலையிலே போட்டான். நகரத்திற்குப் புறம்பேயுள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதி தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள் மட்டும் பெருகிவந்தது.”
விளக்கவுரை
வசனம் 1: பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாரயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.
அந்திகிறிஸ்துவால் இரத்த சாட்சியாக்கப்பட்டு உயிரோடெழுப்பப்பட்டு எடுத்துக் கொள்ளப்பட்ட மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்கள் பரலோகத்தில் தேவனைத் துதிப்பதை இது குறிக்கிறது. அந்திகிறிஸ்துவால் இரத்த சாட்சியாக்கப்பட்ட பரிசுத்தவான்களும், து¡ங்கிக் கொண்டிருக்கும் பரிசுத்தவான்களும், புதியதொரு சங்கீதத்தால் தேவனைப் புகழுவர். இந்த புதிய பாடலை 144,000 பேர் பாடியதாக வசனம் 4இல் நாம் காண்கிறோம். எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள் 144,000 மக்கள் மட்டுந்தானா என நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இங்கு 14 என்ற எண் அனைத்தும் மாறியது எனப் பொருள் படுகிறது (மத்தேயு 1:17).
பரிசுத்தவான்கள் இரத்த சாட்சியாக மரித்து எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு இந்த உலகத்தை முற்றிலும் புதிதான ஒரு உலகமாக மாற்றுவார் என்பதை நாம் உணர வேண்டும். இந்த உலகிற்கு பதிலாக தம் மக்களுடன் அவர் வாழும் புதியதொரு உலகத்தை அவர் படைப்பார். படைத்தவரின் சித்தம் இதுவாகும்.
பூமியிலிருந்த போது கிறிஸ்து வழங்கிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பரிசுத்தவான்களாகியவர்களே பரலோகத்திலுள்ள தேவனைப் புகழ்ந்து கொண்டுள்ளனர். அவர்கள் கிறிஸ்துவினுடையவர்கள் என்பதால், ஆட்டுக் குட்டியானவரின் பெயரும் பிதாவின் பெயரும் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும்.
வசனம் 2: அல்லாமலும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது.
தேவனால் அளிக்கப்பட்ட இரட்சிப்பையும், தேவன் ஒருவரே உண்மையான கர்த்தர் என்ற விசுவாசத்தையும் பாதுகாப்பதற்காக இரத்த சாட்சியாகி மீண்டும் உயிரோடெழுப்பப் பட்ட பரிசுத்தவான்களே பரலோகத்திலிருப்பவர்களாவர். அவர்களுடைய சா£ரங்கள் தேவனுடைய வல்லமையால் உயிரோடெழுப்பப் பட்டதாலும், எடுத்துக் கொள்ளப்பட்டதாலும் அவருடைய இரட்சிப்பிற்காகவும், அவர்களுக்கு அதிகாரமளித்த ஆசீர்வாதத்திற்காகவும் பரலோகத்தில் அவரைப் புகழ்கின்றனர். அவர்கள் புகழ்ந்து பாடும் பாடல்கள் ஓடைகளின் அழகிய சத்தத்தைப் போலவும், இடியைப் போல் மகத்துவமுள்ளதாகவும் இருந்தது. அவர்கள் பூமியிலிருந்த போது தேவனருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பாவமன்னிப்பு பெற்றதன் மூலம் அவர்களனைவரும் நித்தியமாக இரட்சிக்கப்பட்டனர்.
வசனம் 3: அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரேயல்லாமல் ஒருவரும் கற்றுக் கொள்ளக்கூடாதிருந்தது.
144,000 மக்கள் என்பது எடுத்துக் கொள்ளப்பட்ட பரிசுத்தவான்களைக் குறிக்கிறது. வேதாகமத்தில் 14 என்பது புதிய மாறுதலைக் குறிக்கிறது. பரலோகத்தில் புதிய பாடல்களால் தேவனைத் துதிப்பவர்கள், தாம் பூமியிலிருக்கும் போது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பாவமன்னிப்பை பெற்று மறுபடியும் பிறந்து மாறுபாடடைந்தவர்களைக் குறிக்கிறது. இதனால் தான் அவர்கள் 144,000 பேராயிருந்தார்கள் என தேவன் கூறுகிறார்.
இதற்கும் மேல் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமான பாவ விடுதலை ஆசீர்வாதத்தை பெற்றவர்களையன்றி வேறு யாராலும் தேவனைப் புகழ முடியாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தமது பாவங்கள் மன்னிக்கப்பட்டதால் பரிசுத்த ஆவியானவரைப் பரிசாக பெற்றவர்களால் நம் தேவன் புகழப்பட்டார்.
வசனம் 4: ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக் கொள்ளப் பட்டவர்கள்.
இந்த பரிசுத்தவான்கள் உலகின் வல்லமைக்கோ மதங்களுக்கோ தமது விசுவாசத்தை விட்டுக் கொடுக்காதவர்கள். தம்முடைய விசுவாசத்தை இலகுவாக மாற்றக் கூடிய அநேக மக்கள் பூமியில் வாழுகிறார்கள். ஆனால் தேவனின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசித்து தம்முடைய பாவங்களுக்கு பாவமன்னிப்பை பெற்று பரிசுத்தவான்களாகியவர்களின் விசுவாசத்தை இவ்வுலகின் எதினாலும் மாற்ற முடியாது.
பரலோகத்திற்கு ஏறி தேவனைப் புகழும் பரிசுத்தவான்கள் தேவனருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை எம்மாற்றமும் இன்றி விசுவாசித்து தமது விசுவாசத்தை காத்தவர்களாவர். தேவனால் பரலோகராஜ்யத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டவர்களாலேயே தேவனைப் புகழ முடியும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள அவர்களின் விசுவாசத்திற்காக அவர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.
வசனம் 4இல் நடுவில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, “ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே.” நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தால் தமது எல்லாப் பாவங்களும் ஒரே தரமாக சுத்திகரிக்கப்பட்டவர்கள் இப்படியாக மறுபடியும் பிறந்த பிறகு தேவன் வழிநடத்தும் இடங்களுக்குச் செல்வர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தம் பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்றதால் தேவன் அவர்களை வழிநடத்தும் இடங்களுக்கு மகிழ்ச்சியுடன் செல்லும் விருப்பம் அவர்களின் இருதயங்களில் காணப்படுகிறது. அவர்களின் விசுவாசத்திற்காக அந்திகிறிஸ்துவால் இரத்த சாட்சியாக்கப்பட்டு தேவனால் உயிரோடெழுப்பப்பட்டு எடுத்துக் கொள்ளப்பட்டதால் அவர்கள் தேவனைப் பரலோகத்தில் போற்றுவர்.
“இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக் குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள்” எனவும் எழுதப்பட்டுள்ளது. இவ்வுலகிலுள்ள எண்ணிலடங்காத மக்களின்ல தேவனருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டவர்கள் ஒரு கைப்பிடி அளவினரே. அதனால் தான் தேவன் ஏரேமியா 3:14இல் இவ்வாறு கூறுகிறார், “நான் உங்களை ஊரில் ஒருவனும் வம்சத்தில் இரண்டுபேருமாகத் தெரிந்து, உங்களைச் சீயோனுக்கு அழைத்துக்கொண்டுவந்து” நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைச் சந்தித்து பாவமன்னிப்பை பெற்றவர்கள் இத்தனைக் குறைவானவர்களே.
அவர்கள் ஆட்டுக் குட்டியானவருக்கு சொந்தமானவர்களான படியால் உயிரோடெழுப்பப் படுவதின் முதல் கனிகளாயிருப்பர். அவர்கள் தேவனுடைய வல்லமையினால் எடுத்துக் கொள்ளப்பட்டு கிறிஸ்துவை எப்போதும் போற்றுவர். இவையெல்லாம் தேவனின் வாக்குத்தத்தின்படி நடைபெறும். இவ்வுலகத்திலும் கூட தேவன் வழிநடத்தும் இடங்களுக்குச் செல்பவர்கள் அவர்களாய்தானிருப்பர். இவையெல்லாம் கர்த்தரின் கிருபையினாலும் அவரின் வல்லமையினாலும் நடந்தேறும்.
வசனம் 5: இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து மறுபடியும் பிறந்தவர்களால் இந்த உண்மை நற்செய்தியை தமது வாயினால் பிரசங்கிக்க முடியும். இந்நாளின் அநேக மக்கள் தம்முடைய சொந்த வழிகளில் நற்செய்தியைப் பிரசங்கித்தாலும் வெகு சிலரே உண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து பிரசங்கிக்கின்றனர்.
இயேசுவின் சிலுவை இரத்தத்தை மட்டுமே பிரசங்கிப்பவர்கள் தேவனருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து பிரசங்கிப்பதில்லை. ஏன்? ஏனெனில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மட்டுமே வேதாகமத்தின் உண்மையான நற்செய்தியாகும். நீதிமான்களின் இருதயங்களிலுள்ள எல்லாப் பாவங்களும் உண்மை நற்செய்தியின் வார்த்தையால் எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டதால் தம் முழு உணர்வுடனும் இந்த நற்செய்தியைத் தமது வாய்களினால் பிரசங்கிக்க முடியும்.
வசனம் 6-7: பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுது கொள்ளுங்களென்று கூறினான்.
மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்கள், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து தொடர்ந்து அறிவிக்க வேண்டும். ஆகவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிக்கும் இப்பணி பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்படும் நாள் வரை தொடர வேண்டும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் மட்டுமே தமது விசுவாசத்தை காக்கும் பொருட்டு அந்திகிறிஸ்துவால் இரத்த சாட்சியாக்கப்படுவர். அவர்கள் மட்டுமே பரலோக ராஜ்யத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவர். எல்லோரும் கர்த்தருக்கு பயப்பட வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் தம் பாவமன்னிப்பைப் பெற்று பரிசுத்த ஆவியானவரை ஈவாகவும் பெற வேண்டும். இன்றைய கிறிஸ்தவர்களால் தேவனருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நன்றியுடன் விசுவாசிக்க முடியவில்லையெனில், இயேசுவின் மீதுள்ள அவர்களின் விசுவாசம் வீண்.
முழு பிரபஞ்சத்தையும் அதிலுள்ள யாவையையும் படைத்தது இயேசு கிறிஸ்துவேயன்றி வேறுயாருமல்ல. இயேசு கிறிஸ்துவை தமது கர்த்தராக மனித குலம் அங்கீகரிக்க வேண்டும். அவர் அவர்களைப் படைத்ததுடன் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு இரட்சிப்பை அளித்ததால் அதற்கேற்ற படி அவரை ஆராதிக்க வேண்டும். ஏனெனில் அவரின் கைகளால் அனைத்தும் நிறைவாகப் படைக்கப்பட்டன. அவரின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை தமது இருதயங்களால் விசுவாசிப்பதால் அனைத்து மனிதர்களும் தமது பாவங்களுக்கான மன்னிப்பை பெற்று பரிசுத்த ஆவியானவரை ஈவாக பெறும் ஆசீர்வாதத்தைப் பெறுவர்.
கர்த்தருக்கு எதிராக நிற்பவர்களுக்கு இயேசு கிறிஸ்து அளிக்கும் நியாயத் தீர்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கு உலகம் தன்னை ஆயத்தம் செய்தல் வேண்டும். தேவனால் எடுத்துக் கொள்ளப்படுவோம் என்ற நமது விசுவாசத்தை நாம் ஆயத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் கர்த்தரின் நியாயத் தீர்ப்பின் நாள் சமீபமாயிருக்கிறது. தேவனருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதே எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக ஆயத்தப்படுவதற்கான வழியாகும். ஏன்? அவருடைய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிப்பதின் மூலமே ஒருவரால் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் கடைசி நாட்கள் வருகையில் தேவனால் ஆகாயத்திற்கு உயர்த்தப்படும் மகிமையின் ஆடையால் தரிப்பிக்கப்பட்டவராவர்.
ஆகவே எல்லாப் பாவிகளும் இயேசு கிறிஸ்துவை தமது படைப்பின் கர்த்தராகவும் இரட்சிப்பின் கர்த்தராகவும் விசுவாசித்து அதற்கேற்றபடி அவரை ஆராதிக்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்கள் தமது இருதயங்களில் ஏற்றுக் கொண்டு, அவரின் பாவமன்னிப்பின் கிருபையையும், பரிசுத்த ஆவியானவரை ஈவாகவும் பெற்றுக் கொள்ள வேண்டும். கர்த்தரை ஆராதிப்பவர்கள் தேவனருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தமது இருதயங்களில் பெற்றுக் கொள்வார்களேயன்றி அதனைத் தள்ளி விடுவதில்லை. ஏனெனில் கர்த்தரை ஆராதிப்பது இப்படித்தான்.
வசனம் 8: வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்கொடுத்தாளே! என்றான்.
இயேசு கிறிஸ்துவின் பயங்கரமான நியாயதீர்ப்பினால் இவ்வுலகம் அழிந்து போகும். அதனுடைய மதங்கள் அடிப்படையில் தவறான போதகங்களினால் உருவானதால் அது கர்த்தரால் அழிக்கப்படும். இந்த உலகப்படியான மதங்கள் மக்கள் கர்த்தரைவிட உலகைப்பின்பற்றும் படி செய்து கர்த்தருக்கெதிராக நிற்கும் கருவிகளாய் அவர்களை மாற்றினர். இப்படியாக இவ்வுலகம் அழிக்கப்படும். ஏனெனில் அதன் மக்களின் கர்த்தரை விட்டுவிட்டு உலக மதங்களை இச்சித்தனர்.
உலக மதங்களை அவர்கள் பின்பற்றினார்கள் என்பதின் பொருள் பிசாசுகளாகிய தவறான தெய்வங்களை அவர்கள் பின்பற்றினார்கள் என்பதாகும். ஆகவே கர்த்தர் தனது கோபத்தின் மூலம் இவ்வுலகை அழிப்பார். இவ்வுலகிலுள்ள யாவும் அதன் தவறான மதங்களும் கர்த்தரால் அழிக்கப்படும். அவர்கள் கர்த்தரின் கோபாக்கினையின் மதுவைக் குடிப்பார்கள். கர்த்தரை எதிர்த்து நிற்பவர்களும் உலக மதங்களை ஒட்டி வாழும் பிசாசுகளும் கர்த்தரின் வாதைகளினால் பலமிழந்து நித்திய நரகத்திற்குள் எறியப்படுவர்.
வசனம் 9-10: அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.
இங்குள்ள யாவரையும் கர்த்தர் எச்சரிக்கிறார். யாராவது மிருகத்தையோ, அவனின் உருவத்தையோ ஆராதித்தால் அல்லது அவனின் குறியீட்டை வலது கையிலோ அல்லது நெற்றியிலோ பெற்றால் அவனும்/அவளும் நரகத்தண்டனையைப் பெறுவர் என அவர் கூறுகிறார். அநேக மக்களின் மூலமாக பணியாற்றி அந்திகிறிஸ்துவின் சாயலாக உருவாக்கப்பட்ட சிலையை அனைத்து மனிதர்களும் வணங்க வேண்டுமென சாத்தான் பலவந்தம் செய்வான். ஆனால் மறுபடியும் பிறந்தவர்களோ அந்திகிறிஸ்துவுக்கு எதிராக போராடி தமது விசுவாசத்தைக் காப்பதற்காக இரத்த சாட்சியாவர். மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்கள் தமது விசுவாசத்தைக் காப்பதற்காக அந்திகிறிஸ்துவை எதிர்த்து நின்று இரத்த சாட்சிகளாக வேண்டும்.
யாராவது அந்திகிறிஸ்துவுக்கு சரணடைந்து அவனின் ரூபத்திற்கு முன் விழுந்து அவனது பெயர் அல்லது எண்ணினால் உருவான அவன் குறியீட்டைப் பெற்றால் அவனோ/அவளோ கர்த்தரின் கோபாக்கினையைப்பெற்று அக்கினியும் கந்தகமும் எரிகிற நித்திய நரகத்தினுள் வீசப்படுவர். உபத்திரவகாலத்தின் சமயம் வருகையில் பரிசுத்தவான்கள் கர்த்தரிடம் ஜெபித்து தேவனுக்குள் தமது விசுவாசத்தைக் காத்து தம்முடைய நம்பிக்கையை அவரின் ராஜ்யத்தின் மீது வைக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாக அந்திகிறிஸ்துவுக்கு எதிராக நின்று தம் விசுவாசத்தை காத்து தம்முடைய இரத்த சாட்சி உயிரோடெழுப்பப்படுதல் மற்றும் எடுத்துக் கொள்ளப்படுதலில் பங்கேற்று தேவனின் ராஜ்யத்தில் அவருடன் சஞ்சரிப்பதான நித்திய ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
வசனம் 11: அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.
சாத்தானைத் தமது கடவுளாக ஆராதிப்பவர்கள் கர்த்தரின் வாதைகளையும், கொந்தளித்துக் கொண்டிருக்கும் நரகத்தின் நித்திய தண்டனையும் பெறுவர். முடிவு காலத்தில் அந்திகிறிஸ்துவுக்கு யாரெல்லாம் சரணடைந்து அவனைத் தமது கடவுளாக ஆராதிக்கிறார்களோ அவர்கள் கர்த்தரின் கோபாக்கினையால் நிரம்பிய நெருப்பும் கந்தகமும் எரிகிற நரகத்தில் துன்புறுவர். யாரெல்லாம் மிருகத்தையும் அவன் உருவத்தையும் பின்பற்றுகிறார்களோ, யாரெல்லாம் மிருகத்தின் குறியீட்டைப் பெறுகிறார்களோ அவர்களுக்கு இரவிலும் பகலிலும் இளைப்பாறுதல் இருக்காது என்பதை நாமனைவரும் விசுவாசிக்க வேண்டும்.
வசனம் 12: தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.
தேவன் அவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்த செல்வம், மகிமை மற்றும் ஆசீர்வாதங்களை பரிசுத்தவான்கள் விசுவாசிக்கும் போது அவர்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டும். உபத்திரவ காலத்தின் போதும் அவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அவர்களின் இரத்த சாட்சிக்குப் பிறகு அவருடன் அவர்கள் வாழும் ஆசீர்வாதத்தை அளிக்கப் போவதாகவும், தேவனுடைய வல்லமையினால் அவர்கள் உயிரோடெழுப்பப்பட்டு பரலோகத்திற்கு அவர்கள் உயர்த்தப்படுவர் என்பதும் முடிவு காலத்தைக் குறித்து பரிசுத்தவான்களுக்கு தேவன் அருளிய வாக்குத்தத்தமாகும்.
பரிசுத்தவான்கள் இப்படிச் செயல்படுவர். ஏனெனில் தேவனுடன் ஆட்டுக்குட்டியானவரின் திருமணப் பந்தியில் நுழையும் இந்த ஆசீர்வாதத்தையும், ஆயிரம் வருடங்கள் அவருடன் ஆட்சி புரிவதையும் பரலோக ராஜ்யத்தில் அவருடன் எப்போதும் வாழ்வதையும் அவர்கள் விசுவாசிப்பர். ஆகவே முடிவு காலம் வருகையில் பரிசுத்தவான்கள் தமது விசுவாசத்தைக் காக்க இரத்த சாட்சியாக வேண்டும். ஆகவே அக்காலத்தின் அனைத்து உபத்திரவங்களினு¡டும் பொறுமையுடன் அவர்கள் வாழ வேண்டும்.
ஆகவே இக்காலத்தில் வாழும் பரிசுத்தவான்கள் அந்திகிறிஸ்து தன்னுடைய பயமுறுத்தல்களாலும் அழுத்தப்படுதலினாலும் ஆசைகளினாலும் தம்முடைய விசுவாசத்தை விட்டுவிடும்படி வலியுறுத்தப்படுகையில், கர்த்தரின் வாக்குத்தத்தங்களை விசுவாசித்து இரத்த சாட்சியாவர். ஏன்? அதற்கு சில காலத்திற்குப் பிறகு அவர் வாக்குத்தத்தம் செய்த படி நம் தேவனுடைய அனைத்து ஆசீர்வாதங்களும் நிறைவேறும். எல்லாப் பரிசுத்தவான்களும், கர்த்தரின் வார்த்தையின் மீதும் தேவனின் மீதும் விசுவாசத்தை வைத்திருப்பதின் மூலம் மட்டுமே தம் பரிசுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆகவே தேவனின் வார்த்தையின் மீதுள்ள உங்கள் விசுவாசத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். கர்த்தரின் வார்த்தையின் மீதும் இயேசு கிறிஸ்துவின் மீதும் உள்ள தமது விசுவாசத்தை இப்படியாக பாதுகாத்த பரிசுத்தவான்களை அவர் முற்றிலும் புதியதொரு உலகத்திற்கு வழிநடத்துவார்.
தேவனின் நற்செய்திக்கு ஊழியம் செய்யும் பரிசுத்தவான்கள் உபத்திரவ காலத்தின் எல்லா கடினங்களினு¡டும் பொறுமையுடன் ஏன் செயல்பட வேண்டுமென்பதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன. எதிர்காலம் நலமானதாய் இருக்க வேண்டுமானால் இக்காலத்தின் பாடுகளை பொறுமையுடன் தாங்குவது அவசியமானதாகும்.
ரோமர் 5:3-4 நம்மிடம் கூறுகிறது, “அது மாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரிட்சையையும், பரிட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து உபத்திரவங்களியேயும் மேன்மை பாராட்டுகிறோம்.” தேவனை விசுவாசித்து மகா உபத்திரவக் காலத்தில் வாழக் கூடியவர்கள் மேலும் உயிரோடெழுப்பப்படுவதையும் அவரால் எடுத்துக் கொள்ளப்படுவதையும் அவருடைய ராஜ்யத்தில் வாழும் ஆசீர்வாதமான ஒரு வாழ்க்கையை வாழுவார்கள். நம்முடைய விசுவாசத்தின் மூலம் உபத்திரவத்தினு¡டே நாம் வாழ வேண்டும். தம்முடைய விசுவாசத்தை தேவன் மீது வைப்பதின் மூலம் முடிவு காலத்தின் மகா உபத்திரவத்தினு¡டே பரிசுத்தவான்களால் நிச்சயமாக வாழ முடியும். இவ்வுலகிலும் பரலோகத்திலும் எல்லாக் காரியங்களையும் தேவன் நிறைவேற்றுவார் என பரிசுத்தவான்கள் விசுவாசிக்கின்றனர்.
வசனம் 13: பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று.
வசனம் இங்கு “கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள்” எனக் கூறுகிறது. ஏன்? ஏனெனில் உபத்திரவத்தின் காலம் வருகையில் அதாவது அந்திகிறிஸ்து இவ்வுலகை ஆளும் போது இப்பூமியில் வாழும் அனைத்துப்பாவிகளும் கொல்லப்படுவர். ஆகவே வருகின்ற கிறிஸ்துவின் ராஜ்யத்தை பரிசுத்தவான்கள் எதிர்பார்த்து தம் விசுவாசத்தைக் காத்து விசுவாசத்துடன் இரத்த சாட்சிகளாக வேண்டும். கர்த்தருக்கு மகிமை அளிப்பதற்காக இரத்த சாட்சியாக மரித்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தம்முடைய விசுவாசத்தைக் காக்க அவர்கள் இரத்த சாட்சியானார்கள்.
அப்படிப்பட்ட பரிசுத்தவான்களைக் கர்த்தர் பொறுப்பேற்றுக் கொண்டு அவர்களை உயிரோடெழுப்பி தனது ராஜ்யத்திற்கு எடுத்துக் கொள்வார். அப்பொழுது பரிசுத்தவான்கள் இவ்வுலகில் பட்டபாடுகள் முடிவடையும். தேவனளித்த பரிசுகளால் அவர்கள் மகிழ்ந்திருப்பர். இந்நேரத்தில் தேவனுடன் அரசாண்டு நித்திய வாழ்வைப் பெற்ற மகிழ்ச்சியில் பரிசுத்தவான்கள் இருப்பர். அவருடைய ராஜ்யத்தின் செல்வமும் மகிமையும் அவர்களுடையதாகும். இதனால் தான் முடிவு காலத்தில் தமது விசுவாசத்தைக் காக்க இரத்த சாட்சியானவர்கள் இத்தனையாய் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பர். தேவனின் ஆயிர வருட அரசாட்சியின் செல்வங்களுடனும் மகிமையுடனும், அதன் பிறகு வரும் அவருடைய பரலோக ராஜ்யத்திலும் நித்தியமாக அவர்கள் வாழ்ந்திருப்பர். மிருகத்திற்கு சரணடையாமல் தேவனுக்குள் தமது விசுவாசத்தைக் காப்பவர்களுக்கு, தேவனுடனிருந்து நித்தியமாக ஆளும் ஆசீர்வாதத்தைக் கர்த்தர் வழங்குவார்.
வசனம் 14: பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன்.
பரிசுத்தவான்களை எடுத்துக் கொள்வதற்காக தேவன் திரும்பி வருவார் என இவ்வசனம் நம்மிடம் கூறுகிறது. தேவன் பரிசுத்தவான்களின் அதிபதியாக இருப்பதால் தம்முடைய விசுவாசத்தைக் காப்பதற்காக இரத்த சாட்சியாக மரித்த பரிசுத்தவான்களை உயிரோடெழுப்பி எடுத்துக் கொள்வதின் மூலம் கர்த்தரின் ராஜ்யத்திற்கு அவர்களை உயர்த்துவார். மகா உபத்திரவ காலத்தின் போது பரிசுத்தவான்கள் நிச்சயமாக எடுத்துக் கொள்ளப்படுவர்.
வசனம் 15: அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச்சொன்னான்.
பரிசுத்தவான்கள் தேவனால் எடுத்துக் கொள்ளப்படுதல் முடிந்துவிட்டதை இவ்வார்த்தைக் குறிக்கிறது. வரிசைப்படி கூறினால் பரிசுத்தவான்கள் இரத்த சாட்சியாக்கப்பட்ட பிறகு எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும். ஏற்கனவே மரித்து போன பரிசுத்தவான்களையும், இரத்த சாட்சியாக மரித்த பரிசுத்தவான்களையும் ஒரே சமயத்தில் ஒன்றாக நம் தேவன் எடுத்துக் கொள்வார். இரட்சிப்பு இரத்த சாட்சி, உயிரோடெழுப்பப்படுதல், எடுத்துக் கொள்ளப்படுதல், நித்திய வாழ்வு ஆகியவையே பரிசுத்தவான்களின் விசுவாசம் நிறைவாவதாகும். அந்திகிறிஸ்துவால் துன்புறுத்தப்படும் பரிசுத்தவான்கள் இரத்த சாட்சிகளாகும் நேரமே எடுத்துக் கொள்ளப்படும் நேரமாகும். இதனுடனே கூட உயிரோடெழும்புவதும் நடைபெறும்.
வசனம் 16: அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது.
இவ்வசனமும் கூட பரிசுத்தவான்களின் எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறிக்கிறது. எடுத்துக் கொள்ளப்படுதல் என்பது பரிசுத்தவான்களை ஆகாயம் வரை உயர்த்துவதாகும். இதன் பொருள் பரிசுத்தவான்கள் ஆகாயத்திற்கு உயர்த்தப்பட்டு மீண்டும் பூமிக்கு திரும்பி வருவார்கள் என்பதா? ஆம், பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு நம் தேவன் பூமியையும், கடலையும், அவற்றிலுள்ள யாவற்றையும் எழு பாத்திரங்களின் வாதையை ஊற்றி அழிப்பார். இப்படியாக இவ்வுலகத்தை அழித்த பிறகு எடுத்துக் கொள்ளப்பட்ட பரிசுத்தவான்களுடன் மீண்டும் அவர் இறங்கி வருவார்.
பிறகு தேவனும் அவரின் பரிசுத்தவான்களும் இவ்வுலகை ஆயிரம் வருடங்கள் அரசாளுவர். மேலும் ஆட்டுக்குட்டியானவரின் திருமணப் பந்தி முடிந்த பிறகு அவர்கள் நித்தியமான பரலோக ராஜ்யத்திற்கு ஏறுவார்கள். ஆட்டுக் குட்டியானவரின் திருமணப் பந்தியில் பரிசுத்தவான்கள் சேரும் போது உலகிலுள்ளவைகளையும் முழு உலகத்தையும் தேவன் புதியதாக்கியிருப்பார்.
அவர்கள் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு தேவனுடனே கூட ஆகாயத்திலே அவர்கள் சிறிது நேரம் தங்கியிருப்பர். ஏழு பாத்திரங்களின் வாதைகளெல்லாம் முடிவு பெறும் போது ஆயிரம் வருடங்கள் ஆளும் விதமாக புதிதாக்கப்பட்ட இவ்வுலகிற்கு அவர்கள் இறங்கி வருவர். அதன் பிறகு அவர்கள் தேவனுடனே கூட கர்த்தரின் ராஜ்யத்திற்கு சென்று அவருடனே கூட நித்தியமாக வாழ்வர்.
வசனம் 17: பின்பு வேறொரு தூதனும் கருக்குள்ள அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான்.
இங்கு தோன்றும் தேவது¡தன் நியாயத் தீர்ப்பின் தேவது¡தனாவான். அவன் கர்த்தரை எதிர்த்து நின்ற உலகின் மக்களின் மீது மிகப் பெரிய வாதைகளை எடுத்து வந்து நித்திய அக்கினியில் அவர்களை வீசுவான். அந்திகிறிஸ்துவையும் அவனைப் பின்பற்றியோரையும் மறுபடியும் பிறவாத உலகின் அனைத்துப் பாவிகளையும் ஒன்றாக பாதாளத்தில் எறிந்து அவர்களைக் கட்டுவதே அவனின் கடமையாகும்.
வசனம் 18: அக்கினியின்மேல் அதிகாரமுள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கருக்குள்ள அரிவாளைப்பிடித்திருக்கிறவனை நோக்கி: பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது, கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தத்தோடே சொன்னான்.
கர்த்தரை எதிர்த்து நின்ற அவர்களின் பாவத்திற்காக கர்த்தரால் அவர்கள் தீர்க்கப்படும் நேரம் வந்து விட்டதைக் குறித்து இவ்வசனம் கூறுகிறது. கர்த்தரின் நேரப்படி இது அவரின் திட்டங்களைச் செயல்படுத்தும் நேரமாகும். பாவிகளுக்கு தனது அக்கினியின் நியாயத் தீர்ப்பை அளிக்க எல்லாப் பாவிகளையும் கர்த்தருக்கெதிராக நின்றவர்களையும் ஒன்றாக சேர்த்து அவர்களின் பாவங்களுக்கேற்றபடி அவர்களைத் தண்டிப்பான்.
வசனம் 19: அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின் மேலே நீட்டி, பூமியின் திராட்சப்பழங்களை அறுத்து, தேவனுடைய ஆக்கினையென்னும் பெரிய ஆலையிலே போட்டான்.
பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு அந்திகிறிஸ்துவும் பாவிகளும் ஏழு பாத்திரங்களின் வாதைகளால் மிகவும் துன்புறுவர். இவ்வுலகிலும் கூட தன்னுடைய கொடிய வாதைகளை பாவிகளின் மீது எடுத்து வந்து அவரின் கோபாக்கினையால் அவர்களைத் தண்டிப்பார். இதன் பிறகு அவர்களுக்கு நரகத் தண்டனை வழங்கப்படும். இப்பாவிகளின் மீதும், அந்திகிறிஸ்துவின் மீதும் அவனைப் பின்பற்றியவர்களின் மீதும் கர்த்தர் தம் வாதைகளை இப்படியாக ஊற்றுவது அவரின் நீதியின் செய்கையாகும். கர்த்தருக்கு எதிராக நின்ற பாவிகளுக்கான கர்த்தரின் திட்டம் இதுவேயாகும்.
வசனம் 20: நகரத்திற்குப் புறம்பேயுள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதி தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும் பெருகிவந்தது.
கர்த்தரின் கோபாக்கினை எத்தனை கொடூரமாயிருக்கும் என்பதையும், ஏழு பாத்திரங்களின் வாதைகள் பூமியின் மீது ஊற்றப்படும் போது இவ்வுலகில் இன்னமும் இருப்போராகிய மனிதர்களும் மற்ற ஜீவராசிகளும் துன்பப்படுவர் என்பதையும் இவ்வசனம் இங்கு நம்மிடம் கூறுகிறது. இந்த வாதைகள் முழு உலகையும் ஆக்கிரமிக்கும் என்பதையும் இவ்வசனம் கூறுகிறது. பரிசுத்தவான்கள் இரத்த சாட்சியாக்கப்பட்டு உயிரோடெழுப்பப்பட்டு எடுத்துக் கொள்ளப்படும்போது அந்நொடியிலேயே ஏழு பாத்திரங்களின் வாதைகளும் மொத்தமாக பூமியின் மீது ஊற்றப்படுவதால் அதன் இயக்கங்கள் அனைத்தும் முடிந்து போகும்.
பரலோகத்திலிருந்த பரிசுத்தவான்கள் மற்றும் கர்த்தரிடம் இருந்த தேவது¡தர்கள் ஆகியோரைத் தவிர இந்த பயங்கரமான வாதைகளிலிருந்து தப்பிப்பது யாருமில்லை. மறுபுறம் கர்த்தருக்கு எதிராக நின்றவர்களுக்கு நரகத் தண்டனைக் காத்திருக்கிறது. அதற்கு மாறாக மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்கள் தேவனுடனே கூட ஆகாயத்தில் ஆட்டுக்குட்டியானவரின் திருமணப் பந்தியில் பங்கேற்பர். அப்பொழுது தேவனருளிய இரட்சிப்பிற்காக அவருக்கு நன்றி கூறி அவரைப் புகழுவார்கள்.