(வெளி 14:1-20)
வெகு சீக்கிரமாக தோன்றப்போகும் அந்திகிறிஸ்துவை மேற்கொள்ள தேவன் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் தாம் இரத்த சாட்சியாகும்படி ஆயத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்வதற்கு அந்திகிறிஸ்து வைத்திருக்கும் தந்திரமான திட்டங்களை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே பரிசுத்தவான்களால் அவனை எதிர்த்து நின்று அவனை வெற்றி கொள்ள முடியும். தன்னுடைய பெயர் அல்லது எண் ஆகிய தன் குறியீட்டை மக்கள் பெறும்படி செய்து கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை அழிக்க அந்திகிறிஸ்து முயலுவான்.
கர்த்தருக்கு எதிராக நிற்பதன் மூலமும் நீதிமான்களின் விசுவாசத்தை அழிப்பதன் மூலமும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக கிட்டும் பாவமன்னிப்பிலிருந்து மக்களைத் தடுக்கும் விதமாக, அந்திகிறிஸ்து கிறிஸ்தவ விசுவாசத்தை அழிக்க முயல்கிறான். அந்திகிறிஸ்து மக்களைத் தனது ஊழியர்களாக்கி கர்த்தருக்கெதிராக அவர்களை நிற்கும்படி செய்தான். இதற்காக பூமியில் இன்னமும் இருக்கும் அந்திகிறிஸ்துவும் அவன் ஊழியர்களும் மிகப் பெரிய தண்டனைகளையும் வாதைகளையும் அனுபவிப்பர்.
கர்த்தர் எதிரிகளின் மீது ஊற்றப்போகும் ஏழு பாத்திரங்களின் வாதைகளைக் குறித்து தெளிவாக அறிந்து நீதிமான்கள் தம் விசுவாச வாழ்வினை வாழ வேண்டும். உபாகமம் 32:35இல் “பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது” என்று கர்த்தர் கூறுவது போல் அவர் தன் பிள்ளைகளின் மரணத்திற்காக அவர்களை பழிதீர்ப்பார். நாம் நமது விசுவாசத்தைக் காத்து வெற்றி வாழ்வை வாழ வேண்டும். நம்முடைய கோபத்தினால் ஆட்கொள்ளப்பட்டு கனிதராத வேலைகளை செய்யக் கூடாது. இரத்த சாட்சிகளாக தாம் மரித்த பின்பு இவ்வுலகில் இருக்கும் அனைவரையும் கர்த்தர் அழிப்பார் என்பதை விசுவாசித்து அந்திகிறிஸ்துவுடன் பரிசுத்தவான்கள் போரிட வேண்டும்.
நாம் மறக்கக் கூடாத சத்திய வார்த்தை
தம் பாவங்களுக்கு பாவ மன்னிப்பு பெற்ற அனைவரும், பாவமற்ற பரிசுத்தவான்கள் மட்டுமே அந்திகிறிஸ்துவால் இரத்த சாட்சிகளாக்கப்பட்ட பிறகு உயிரோடெழுப்பப்பட்டு எடுத்துக் கொள்ளப்படுவர் என்பதை விசுவாசிக்க வேண்டும். அந்திகிறிஸ்துவின் தோற்றமும் பரிசுத்தவான்கள் இரத்த சாட்சிகளாய் மரிக்கும் அந்நாளில் கர்த்தரின் எல்லா வாக்குத்தத்தங்களும் நிறைவேற்றப்படும் என்பதை நாம் மறந்து போகக் கூடாது.
வசனம் 14 முதல் அதிகாரம் 14இலுள்ள கர்த்தரின் வார்த்தைகள் பரிசுத்தவான்களுக்கு எடுத்துக் கொள்ளப்படுதல் நிச்சயமாய் நிகழும் என்றும், இது அவாகள் இரத்த சாட்சியாக மரித்த பிறகு நிகழும் என்றும் நமக்கு போதிக்கின்றன.
சாத்தான் தனது மக்களுக்கு தனது குறியீட்டைப் பொறித்த பின்னரே நமது உயிரோடெழும்புதலும் எடுத்துக் கொள்ளப்படுதலும் நிகழும் என்பதை நாம் மறக்கக்கூடாது. அந்திகிறிஸ்துவால் இரத்த சாட்சியாக மரித்த நீதிமான்களுக்கு முதலாவது உயிர்த்தெழுதலும் எடுத்துக் கொள்ளப்படுதலும் காத்திருக்கும். இந்நேரத்தில் சாத்தானின் குறியீட்டை பெற்றுக் கொள்ள மறுப்பதற்காக நீதிமான்கள் இரத்த சாட்சிகளாவர். இதன் மூலம் அவர்கள் தம் விசுவாசத்தை பாதுகாப்பார். இரத்த சாட்சியாக மரித்த நீதிமான்கள் இவ்வுலகில் அனுபவித்தபாடுகளுக்கு ஏற்ப தமது சன்மானத்தைப் பெறுவர். அவற்றுடன் கர்த்தரின் மகிமையும் கூட சேர்ந்திருக்கும்.
உங்களுடனிருக்கும் பரிசுத்தவான்களோ அல்லது ஊழியர்களோ தமது விசுவாசத்தை பாதுகாக்க இரத்த சாட்சிகளாவதை நீங்கள் காணும் போது அதற்காக துக்கப்படவோ கோபப்படவோ வேண்டாம். இதற்கு பதிலாக தமது விசுவாசத்தை பாதுகாக்க இரத்த சாட்சிகளாகும் படி தம்மை அனுமதித்த கர்த்தருக்கு எல்லாப் பரிசுத்தவான்களும் நன்றி கூற வேண்டும். ஏனெனில் சிறிய காலத்திற்குள் மகிமையான சா£ரங்களுடன் இரத்த சாட்சிகள் உயிரோடெழுப்பப்பட்டு தேவனால் அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுவர்.
கர்த்தருக்கு எதிராக நின்றவர்களுக்காக ஆயத்தப்படுத்தப் பட்ட ஏழு பாத்திரங்களின் வாதைகள் என்ன?
வசனம் 19 கூறுகிறது “அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின் மேலே நீட்டி, பூமியின் திராட்சப்பழங்களை அறுத்து, தேவனுடைய ஆக்கினையென்னும் பெரிய ஆலையிலே போட்டான்.” பரிசுத்தவான்கள் இரத்த சாட்சியாக மரித்த பின்பு கர்த்தருடைய அன்பை எப்போதும் எதிர்த்து நின்றவர்கள் கர்த்தரின் மிகப் பயங்கரமான வாதைகளை அனுபவிப்பர்.
ஏனெனில் தேவனருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்கள் இவ்வுலகில் வாழும் போது தமது இருதயங்களுக்குள் ஏற்றுக் கொள்ள மறுத்து அதற்கு எதிராகவும் நின்றனர். நீரினாலும், இரத்தத்தினாலும் அவர்களை இரட்சிக்க வந்த இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை விசுவாசிக்காமல் கர்த்தரின் எதிரியானவர்கள் இவர்களே. ஏழு பாத்திரங்களின் வாதைகளைக் கர்த்தர் தம்மீது கொட்டுவதை மட்டும் அவர்கள் அனுபவிக்காது படுபயங்கரமான நரகத் தண்டனையான வாதையையும் அவர்கள் அனுபவிக்க வேண்டும்.
தேவனால் எடுத்துக் கொள்ளப்படாதவர்களின் மீது கர்த்தர் எடுத்து வரும் ஏழு வாதைகள் இவைகளே. பரிசுத்தவான்கள் இரத்த சாட்சியாக மரித்த பிறகு ஏழு பாத்திரங்களின் வாதைகளை இவர்கள் மீது எவ்வித இரக்கமுமின்றி கர்த்தர் ஊற்றுவார். எடுத்துக் கொள்ளப்படாதவர்களின் மீதும் பூமியில் இன்னமும் வாழும் சாத்தானின் அடிமைகள் மீதும் கர்த்தரின் மகிமைக்கு எதிராக தேவது¡க்ஷனம் கூறுபவர்கள் மீதும் இவை ஊற்றப்படும்.
அப்படியானால் நீதிமான்களை இரத்த சாட்சியாகும்படி கர்த்தர் ஏன் அனுமதிக்கிறார்? மறுபடியும் பிறக்காதவர்களுடன் நீதிமான்கள் வாழ்ந்திருந்தால் நேரம் வரும் போது கர்த்தரால் ஏழு பாத்திரங்களின் வாதைகளை பூமியின் மீது ஊற்ற முடியாது என்பதே இதற்கான காரணம். நீதிமான்களைக் கர்த்தர் நேசிப்பதால் தம்முடைய மகிமையில் அவர்கள் சேரும்படியாக இரத்த சாட்சியாக அவர்கள் மரிப்பதை அனுமதிப்பார். இதனால் ஏழு பாத்திரங்களின் வாதைகளைக் கட்டவிழ்த்து விடும் முன் நீதிமான்களை இரத்த சாட்சிகளாக்குகிறார். இரத்த சாட்சிகளாகிய நீதிமான்களை உயிரோடெழுப்பி எடுத்துக் கொண்ட பிறகு இவ்வாதைகளை மிக இலகுவாக இவ்வுலகின் மீது ஊற்றுவார். இவை இவ்வுலகில் இருக்கும் மக்கள் மீது கர்த்தர் எடுத்து வரும் ஏழு பாத்திரங்களின் வாதைகளாகிய கடைசி வாதைகளாகும்.
ஆயிர வருட அரசாட்சியும் பரிசுத்தவான்களின் அதிகாரமும்
தேவன் தமது பரிசுத்தவான்களுடன் இப்பூமியின் மீது இறங்குகையில் ஆயிர வருட அரசாட்சியின் காலம் தொடங்கும். மத்தேயு 5:5 நம்மிடம் கூறுகிறது “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.” பரிசுத்தவான்களுடன் தேவன் இப்பூமிக்கு திரும்பி வருகையில் “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு” என்று கூறப்பட்ட சங்கீதம் 37:29இன் வார்த்தை நிறைவேற்றப்படும்.
அனைத்து பரிசுத்தவான்களுடனும் தேவன் இவ்வாறு இப்பூமிக்கு இறங்கி வருகையில் இப்பூமியானது அவர்களுக்கானதாகும் படியான அதிகாரத்தை அவர்களுக்கு வழங்குவார். இந்நேரத்தில் பத்து நகரங்களின் மீதும் இன்னுமொரு ஐந்து நகரங்களின் மீதுமான அதிகாரத்தை அவர் வழங்குவார். தேவன் திரும்பி வருகையில் இவ்வுலகத்தையும் அதிலுள்ளவைகளையும் அவர் புதிதாக்குவதோடு அப்போதிலிருந்து பரிசுத்தவான்கள் தன்னுடனே கூட ஆயிரம் வருடங்களுக்கு அதனை அரசாளும்படி செய்வார்.
அப்படியானால் இக்காலத்திலுள்ள நீதிமான்களிடம் எத்தகைய நம்பிக்கை இருக்க வேண்டும்? இப்பூமியில் கிறிஸ்துவின் ராஜ்யம் நிறுவப்படும் அந்நாளை நம்பி அவர்கள் வாழ வேண்டும். தேவனின் ராஜ்யம் இப்பூமியின் மீது வருகையில் சமாதானமும் மகிழ்ச்சியும் அவரின் ஆளுகையிலிருந்து வழிந்தோடும் ஆசீர்வாதங்களும் அங்கிருக்கும். தேவனின் ஆளுகைக்குட்பட்டிருக்கையில் எதுவும் நமக்கு குறைவுபடாது. ஆனால் அவரின் நிறைவினாலும், நேர்த்தியினாலும் மட்டுமே நாம் வாழ்ந்திருப்போம்.
தேவனின் ராஜ்யம் இப்பூமியின்மீது வருகையில் நீதிமான்களின் அனைத்து நம்பிக்கைகளும் கனவுகளும் நிறைவேற்றப்படும். இவ்வுலகில் ஆயிரம் வருடங்கள் வாழ்ந்த பிறகு நித்தியமான பரலோக ராஜ்யத்திற்குள் நீதிமான்கள் பிரவேசிப்பர். அதற்கு மாறாக தேவனை எதிர்த்து நின்றவர்கள் அக்கினியும் கந்தகமும் எரிகிற நித்திய நரகத்தினுள் வீசப்படுவர். அவர்களுக்கு கிட்டுவது இரவும் பகலும் துன்பப்படுவதே.
ஆகவே தேவனின் நாளுக்காக நீதிமான்கள் நம்பிக்கையுடன் வாழ வேண்டும். இரத்த சாட்சியாகுதல் உயிரோடெழுப்பப்படுதல் எடுத்துக் கொள்ளப்படுதல் நித்திய வாழ்வு ஆகிய அனைத்தும் தமக்குரியவை என்பதை நீதிமான்கள் மறக்கக் கூடாது. இந்த சத்திய வார்த்தையை உங்களிருதயத்தில் வைத்து இதுவரை நீங்கள் அறிந்தவைகளை நம்பி உறுதியுடன் அவற்றைப் பற்றிக் கொள்ளுங்கள்.
தேவன் திரும்பி வரும் நாள் வரையிலும் பரலோக ராஜ்யத்தில் தம் நம்பிக்கையை வைத்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிக்கும் ஒரு வாழ்வை நீதிமான்கள் வாழ்வர். கர்த்தரின் ராஜ்யத்தில் நித்தியமாக வாழும்படியான அதிகாரம் நீதிமான்களிடம் இருக்கிறது. மேலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இவ்வுலகில் பிரசங்கிக்கும் அதிகாரமும் அவர்களிடம் இருக்கிறது.
இந்த இருண்ட காலத்தில் பரிசுத்தவான்கள் செய்ய வேண்டியது என்ன?
இந்த காலம் இருண்ட காலம் என்பதும் இதில் வாழ்வது கடினமாகிக் கொண்டேயிருக்கிறது என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பாவிகளுக்கு போதித்து நாம் அவர்களை வளர்க்க வேண்டும். இயேசு கிறிஸ்துவினால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் வரும் பாவ மன்னிப்பைக் குறித்தும், கர்த்தரின் அன்பைக் குறித்தும் பரிசுத்தவான்கள் முழு உலகத்தற்கும் போதித்து அதனைப் பரப்ப வேண்டும். நீதிமான்கள் இப்போது செய்ய வேண்டியது இதுவே.
இந்த வாய்ப்பை நழுவ விட்டால் இன்னொரு வாய்ப்பு கிட்டாது. உலகின் முடிவுகாலம் அதிகத் தொலைவில் இல்லாதமையால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து இன்னும் அதிகமாய் பிரசங்கித்து பரலோக ராஜ்யத்தைக் குறித்த நம்பிக்கையினால் இழந்து போன ஆத்துமாக்களை வளர்க்க வேண்டும். நீதிமான்கள் செய்ய வேண்டிய நற்செயல்கள் இவைகளே.
இன்றைய உலகில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்த வார்த்தை அவர்களிடம் இல்லாத போதும் இயேசுவை விசுவாசிப்பதாக கூறி தேவனுக்கு ஊழியம் செய்யும் ஒரு வாழ்வை அநேகர் வாழுகின்றனர். ஆனால் உண்மையான சத்தியமில்லாத மதவாழ்க்கை நடத்துபவர்கள் கள்ளத் தீர்க்கதரிசிகளாவர். இந்தப் பொய்யர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள். அவர்கள் இயேசுவின் பெயரால் விசுவாசிகளின் உடமைகளை எல்லாம் சுரண்டுகிறார்கள்.
இந்த கள்ளத்தீர்க்கதரிசிகளால் வஞ்சிக்கப்பட்டு தம்முடைய விசுவாச வாழ்வை வாழ முயலுபவர்களை எண்ணி இரக்கப் படுகிறோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி இல்லாத விசுவாச வாழ்வு வாழும் இந்த சாதாரண கிறிஸ்தவர்கள் பாவிகளாகவே இருப்பதோடு கர்த்தரின் சட்டத்தின் சாபத்துடனேயே வாழுகிறார்கள். அவர்கள் தாம் இயேசுவை விசுவாசிக்கிறோம் என்பதற்கு பொருளில்லை. அவர்கள் பாவத்துடனேயே வாழுகிறார்கள். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்தால் தம்முடைய இருதயங்களிலுள்ள பாவங்களெல்லாம் மறைந்து பனியைப் போல் வெண்மையாகி பரிசுத்த ஆவியானவரைப் பரிசாக அவர்கள் பெறுவர் என்ற செய்தியை அவர்கள் அறியாதவர்களாயுள்ளனர்.
அதற்கு மாறாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து அதனைப் பிரசங்கிக்கும் கர்த்தரின் ஊழியர்கள் சமாதானத்துடன் வாழுகின்றனர். கர்த்தரின் ஊழியர்களும் அவரின் மக்களும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் மகிழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் அறிவிக்கிறார்கள், “யோவானிடமிருந்து பெற்ற தனது ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களை தன் மீது ஏற்றுக் கொண்டு சிலுவையில் இப்பாவங்களுக்காகத் தீர்க்கப்பட்டு இவ்வுலகின் பாவங்களையெல்லாம் அவர் மறைய செய்தார். இந்த இரட்சிப்பாகிய பாவ நிவாரணத்தை நான் விசுவாசித்த போது என்னை அழுத்திக் கொண்டிருக்கும் அனைத்துப் பாவங்களும் மறைந்து போயின. நான் இப்போது நீதிமான் ஆனேன்.”
இத்தகைய சாட்சிகளால் கர்த்தரின் ஆலய பரிசுத்தவான்கள் கர்த்தருக்கு மகிமையை செலுத்துகிறார்கள். இந்த விசுவாசத்தை உடையவர்களால் பரலோகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்க முடியும்.
முதல் உயிர்த்தெழுதல் பரிசுத்தவான்களுக்கானது
இன்னும் சிறிது காலத்தில் தேவன் இவ்வுலகிற்கு திரும்பி வருவார். கொஞ்சக் காலத்தில் அந்திகிறிஸ்துவாகப் போகிறவன் தோன்றி அநேக மக்களின் வலது கரங்களிலோ அல்லது நெற்றிகளிலோ தனது குறியீட்டைப் பதிப்பான். இந்நேரம் வருகையில் தேவனின் இரண்டாவது வருகையும், பரிசுத்தவான்கள் இரத்த சாட்சிகளாக்கப்படுவதும், உயிரோடெழுப்பப்படுவதும் எடுத்துக் கொள்ளப்படுவதும் உங்களருகில் இருப்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இத்தகைய நாளும், நேரமும் வரும் போது அது பரிசுத்தவான்களின் மகிழ்ச்சிக்குரிய நாளாகும் என்றும், மறுபடியும் பிறவாத பாவிகளுக்கோ அவர்களின் பாவங்களுக்கான நியாயத் தீர்ப்பின் நாள் என்றும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இரத்த சாட்சிகளாய் மரித்த அனைத்துப் பரிசுத்தவான்களும் உயிரோடெழுப்பப்பட்டு தேவனுடனே கூட ஆட்டுக் குட்டியானவரின் திருமணப் பந்தியில் பங்கேற்பர். இக்காலத்தில் நீங்களும் நானும் இரத்த சாட்சிகளாய் மரிக்கும் போது நம்முடைய சா£ரங்கள் சீக்கிரமாகவே உயிரோடெழுப்பப்பட்டு எடுத்துக் கொள்ளப்படுவோம். நமக்கு முன்பாக மரித்து போன பரிசுத்தவான்களின் சா£ரங்களுக்கு என்னவாயிருந்தாலும் அது பொருட்டல்ல. அவர்களின் சா£ரங்கள் ஏற்கனவே து¡சியாகிப் போயிருந்தாலும் அவற்றின் எவ்விதமான அடையாளங்களும் இல்லாவிட்டாலும் அதனால் எப்பிரச்சனையும் உருவாகாது. இந்நேரம் வருகையில் இக்காலத்தின் பலவீணமான சா£ரங்களுடன் பரிசுத்தவான்கள் உயிரோடெழுப்பப்படாமல் நிறைவான சா£ரங்களுடன் எழுப்பப்படுவர். இந்நேரத்தில் நீதிமான்கள் தம்முடைய மகிமையின் சா£ரத்துடன் உயிரோடெழுப்பப்பட்டு தேவனுடன் நித்தியமாக வாழ்வர்.
கடினமான நாட்கள் நமக்காக காத்திருந்தாலும் அந்திகிறிஸ்து தோன்றி நம்மைத் துன்பப்படுத்தும் போது நாம் இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்து இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நமது விசுவாசத்தை பாதுகாக்க வேண்டும். நீங்களும், நானும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்தமையால் பரிசுத்தவான்கள் இரத்த சாட்சிகளாகும் போது நாமும் அதில் பங்கேற்போம் என்பதையும் நாம் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கேற்று அவர்களின் எடுத்துக் கொள்ளப்படுதலிலும் பங்கேற்போம் என்பதையும் மறக்கக் கூடாது.
இந்த உண்மையின் மீதுள்ள உங்களின் விசுவாசத்திலிருந்து தொலைவிற்கு செல்லக்கூடாது என்பதையும், அந்திகிறிஸ்துவை எதிர்த்து அவனை மேற்கொள்ளும் வாழ்க்கையை வாழ வேண்டுமென்பதையும் நாம் மறக்கக்கூடாது. கடைசி நாள் வரும் வரையிலும் இவ்வுண்மையை விசுவாசித்து நமக்கு முன் இரட்சிக்கப்பட்டவர்களுடன் ஐக்கியமாயும், கர்த்தரின் வார்த்தையைப் பற்றிக் கொண்டு தேவனை விசுவாசத்துடன் பின்பற்றியும் நாம் வாழ வேண்டும்.
மக்களை ஏமாற்றும் அநேக பொய்யர்கள் இப்போதும் கூட உள்ளார்கள்
இப்போதும் கூட கணக்கிலடங்காத மக்கள் சாத்தானின் ஊழியர்களாக தவறான விசுவாசங்களைப் போதிக்கின்றனர். குறிப்பாக அநேக பொய்யர்கள் உபத்திரவத்திற்கு முந்திய எடுத்துக் கொள்ளப்படும் தத்துவத்தை தமது சபையாருக்கு போதித்து ஏழு ஆண்டுகள் நடைபெறும் மகா உபத்திரவத்திற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர்களைத் திருப்திபடுத்துகின்றனர்.
அதற்கு மாறாக உபத்திரவத்தின் முதல் மூன்றரையாண்டுகள் கடந்த சிறிது காலத்தில் பரிசுத்தவான்களின் இரத்த சாட்சியாகுதலும் எடுத்துக் கொள்ளப்படுதலும் நிகழுமென வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது. இத்தகைய பொய்யர்களால் வஞ்சிக்கப்படாதிருப்போமாக. அதற்கு பதிலாக மகா உபத்திரவத்தின் ஏழண்டு காலத்தின் முதல் மூன்றரையாண்டுகள் கடந்த நிலையில் நாம் இரத்த சாட்சிகளாக்கப்பட்டு அதன் பிறகு உயிரோடெழுப்பப்பட்டு எடுத்துக் கொள்ளப்படுவோம் என்பதை அறிந்து அதனை விசுவாசிப்போமாக.
ஆகவே மகா உபத்திரவத்தின் ஏழாண்டுகளுக்கும் தமக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை எனக்கூறும் கள்ளத் தீர்க்கதரிசிகளிடமிருந்து நீங்கள் தொலைவில் இருங்கள். உபத்திரவத்தின் முதல் மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் தாம் இரத்த சாட்சியாக மரிப்பதும், உயிரோடெழுப்பப்படுவதும் எடுத்துக் கொள்ளப்படுவதும் நடக்கும் என்று உண்மையான பரிசுத்தவான்கள் விசுவாசிப்பர்.
அப்படியானால் நாமெப்படி வாழ வேண்டும்?
யாராவது தேவனைத் தமது இரட்சராக விசுவாசித்தால் அதாவது தேவன் இவ்வுலகிற்கு வந்து யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் சுமந்து, சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்தோரிலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசித்தால், இந்த விசுவாசியின் இருதயத்திற்குள் பரிசுத்த ஆவியானவர் அவனுக்காக/அவளுக்காக ஈவாக வருவார்.
பரிசுத்த ஆவியானவர் கர்த்தரின் ஆலயத்தின் மூலமாக தெரிவிப்பவைகளை உங்கள் காதுகளால் கேட்டு இருதயங்களால் விசுவாசித்து கர்த்தர் மீதுள்ள உங்கள் விசுவாசத்தால் வாசம் செய்ய வேண்டும். கர்த்தரின் ஆலயம் வழிநடத்துவதற்கேற்ப பரிசுத்தவான்கள் வாழ வேண்டும். தனித்திருந்தால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை யாராலும் பிரசங்கிக்க முடியாது. அதனைக் கடைபிடிக்கவும் முடியாது. அதற்கு ஊழியம் செய்யவும் முடியாது. இதனால் தான் ஏற்கனவே மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்களுக்கும் கூட கர்த்தரின் ஆலயம் மிகவும் முக்கியமானது.
கர்த்தர் தனது ஆலயத்தையும் தனது ஊழியர்களையும் இவ்வாறு உலகில் நியமித்தார். அவர்களின் மூலமாக அவர் தம் ஆடுகளைப் போக்ஷிக்கிறார். இறுதி காலம் நம்மை நெருங்கிக் கொண்டிருப்பதால் கர்த்தரின் செய்கைகள் இன்னமும் விலையேறப்பட்டதாயும் முக்கியமானதாயும் இருக்கிறது. பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்ட விசுவாச வாழ்வை வாழுவீர்களென நம்பி அதற்காக ஜெபிக்கிறேன். இறுதி காலம் இன்னமும் நெருங்கி வருவதால் ஒன்று சேர்வதற்கும், ஜெபிப்பதற்கும், ஆறுதலளிப்பதற்கும், பற்றிக் கொள்வதற்கும், ஒருவருக்கொருவர் உதவுவதற்கும், தேவனுக்காக வாழ்வதற்கும், ஒரே நோக்கத்திற்காக ஒரே மனதினை உடையவர்களாகவும், நீதிமான்கள் இன்னும் அதிகமாய் உழைக்க வேண்டும்.
இரத்தசாட்சிகளாவதையும், உயிரோடெழுப்பப் படுவதையும், எடுத்துக் கொள்ளப்படுவதையும், நித்திய ஜீவனையும் கர்த்தர் பரிசுத்தவான்களுக்கு அளித்தார். அந்திகிறிஸ்துவுடன் போராடி அவனை வெற்றிக் கொள்ளும் வகையான வாழ்வை நாமனைவரும் வாழ்ந்து கர்த்தருக்கு முன்பாக உறுதியுடன் நிற்போமாக. அல்லேலு¡யா.