(வெளி 15:1-8)
“பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது. அன்றியும், அக்கினி கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன். அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி:
சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே,
தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே,
தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்?
தேவரீர் ஒருவரே பரிசுத்தர்,
எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்;
உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.
இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது; அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அவ்வேழு தூதர்களும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரந்தரித்து, மார்பருகே பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள். அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்த பொற்கலசங்கள் ஏழையும் அந்த ஏழு தூதர்களுக்குங் கொடுத்தது. அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவாலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.”
விளக்கவுரை
வசனம் 1: பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது.
ஏழு து¡தர்களால் ஊற்றப்பட்ட ஏழு பாத்திரங்களின் வாதைகளினால் உலகிற்கு முடிவு உண்டானது என 15ஆம் அதிகாரம் நம்மிடம் கூறுகிறது. அப்போஸ்தலனாகிய யோவான் கண்ட “வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளம்” என்பது என்ன? பரிசுத்தவான்கள் கண்ணாடி கடலில் நின்று தேவனின் செய்கைகளைப் போற்றுவது அதிசயிக்க வைக்கும் காட்சியாகும்.
வசனம் 2: அன்றியும், அக்கினி கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்.
“அக்கினி கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும்” என்ற சொற்றொடரானது கர்த்தர் தமது ஏழு பாத்திரங்களின் வாதைகளை இவ்வுலகில் ஊற்றும் போது பூமியிலிருப்போரின் புலம்பலும், துன்பமும் அதிகமாகுமென்றும், மறுபுறம், பரிசுத்தவான்கள் ஆகாயத்தினின்று தேவனைத் துதிப்பார்களென்றும் கூறுகிறது. கர்த்தரால் இப்பூமியின் மீது ஊற்றப்பட்ட ஏழு பாத்திரங்களின் வாதைகள், பரிசுத்தவான்கள் தம் எதிரிகளை பலிதீர்க்க அனுப்பப்பட்டதாகும்.
இந்நேரத்தில் கர்த்தரின் உயிரோடெழுப்பப்படுதலிலும், எடுத்துக் கொள்ளப்படுதலிலும் பங்கேற்ற பரிசுத்தவான்கள் அக்கினி நிறமுடைய கண்ணாடி கடலிலே நின்று அவரின் செயல்களைத் துதிப்பர். இரத்த சாட்சிகளாகிய பரிசுத்தவான்கள் தேவனின் வல்லமையினால் உயிரோடெழுப்பபட்டு எடுத்துக் கொள்ளப்படுவதால் அவரின் இரட்சிப்பிற்காகவும் வல்லமைக்காகவும் என்றென்றும் அவரைப் புகழ்வர். அந்தி கிறிஸ்துவையும், அவனது ரூபத்தையும், அவனின் பெயர் அல்லது எண்ணால் உருவாகிய குறியீட்டையும் நிராகரிக்கும் விசுவாசத்துடன் அவனை மேற்கொண்டு வெற்றி பெற்றவர்கள் புகழ்ந்து கொண்டிருக்கும் இப்பரிசுத்வான்களாயிருப்பர்.
வசனம் 3: அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
கண்ணாடி கடலில் நின்று பரிசுத்தவான்கள் மோசேயின் பாட்டையும், ஆட்டுக் குட்டியானவரின் பாட்டையும் பாடினார்கள். அவை கீழ்வருமாறு, “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்” இந்த பாடலின் அடிகளிலிருந்து அவை எழுதப்பட்டதைப் போலவே அவரால் செய்ய முடியாத எதுவும் இல்லை என போற்றுகின்றன. “தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்” என்றும் இங்கு எழுதப்பட்டுள்ளது.
“ஆச்சரியமுமானவைகள்” என்று இங்கு எழுதப்பட்டுள்ள வார்த்தை “வார்த்தைகளால் விவரிக்க முடியாத மிகப் பெரியவைகள்” என பொருள்படும். அவரின் செய்கைகள் அதிசயமும் மகத்துவமுமானவை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகியவற்றின் அனைத்து பரிசுத்தவான்களையும் அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சித்து அவர்களைப் பாவமற்றவர்களாக்கி தம் விசுவாசத்தால் இரட்சிக்கப்பட்ட இந்த பரிசுத்தவான்களை அவர்களின் மாமிசத்தின் மரணத்திலிருந்து உயிரோடெழுப்பி அவர்களை ஆகாயத்திற்கு உயர்த்தி அவர்கள் ஆகாயத்திலிருந்து தேவனைத் துதிக்க அனுமதித்தார். தேவனாகிய கர்த்தர் அவர்களின் இரட்சகராகவும், அவர்களின் தேவனாகவும், மகத்துவமுள்ளவராகவுமிருப்பதால் இந்த பரிசுத்தவான்கள் அவரைப் புகழுகின்றனர்.
நம்முடைய தேவனாகிய கர்த்தர் பிரபஞ்சத்தையும், நீயும் நானும் உட்பட அதிலுள்ள யாவையையும் படைத்தார் என்றும் அவரே நம் தேவனென்றும் உண்மையாகவே நீ விசுவாசிக்கின்றாயா? இந்த சத்தியத்தை விசுவாசிப்பவர்களாலேயே தேவனருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் விசுவாசிகளாக முடியும். இந்த விசுவாசமுடையவர்களே உண்மையான விசுவாசத்தை உடையவர்கள். இயேசு கிறிஸ்துவே படைப்பாளி என்பதையும், அவரே பிரபஞ்சத்தையும் அதிலுள்ள யாவற்றையும் படைத்தார் என்பதையும் கிறிஸ்தவர்கள் அறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும். தேவனாகிய கர்த்தர் செய்த அனைத்தையும் அறிந்து அவற்றை விசுவாசிப்பதின் மூலம் அவர்கள் அவரைப் போற்றி ஆராதிக்க வேண்டும். “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்!” மோசேயின் சங்கீதத்தையும் ஆட்டுக் குட்டியானவரின் சங்கீதத்தையும் பாடும் உண்மையாகவே மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்களின் இந்த துதியானது அவர்களின் உண்மை விசுவாசத்தைக் குறிக்கிறது.
தேவனாகிய இயேசு மகத்துவமான கர்த்தர் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசுவே கர்த்தரென்றும் இந்த பிரபஞ்சம் முழுவதையும் படைத்தவர் அவரென்றும் விசுவாசிப்பார்கள். தேவன் இப்பூமிக்கு மனித சா£ரத்தில் வந்தாரென்பதையும் மனித குலத்தின் பாவங்களை ஒரே தரமாக தன் மீது ஏற்றுக் கொள்ள தனது 30ஆம் வயதில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார் என்பதையும் அவர் சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்தாரென்பதையும் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார் என்பதையும் கூட விசுவாசிப்பார்கள். தம்முடைய விசுவாசத்தின் மூலம் பாவமன்னிப்பைப் பெற்று பரிசுத்தவான்களாயினர். இந்த உண்மையை அறிந்து இதில் உண்மையாக விசுவாசம் வைத்திருப்பவர்களை மகா விசுவாசத்தின் மக்களென அழைக்கலாம்.
எடுத்துக் கொள்ளப்பட்டு ஆகாயத்திலிருக்கும் பரிசுத்தவான்கள் “தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்” என துதிப்பதாக இந்த வசனம் இங்கு கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால் தேவனாகிய கர்த்தர் இந்த பிரபஞ்சத்தையும் மனிதர்களையும் படைத்தமைக்கும், தேவன் யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் பாவிகளின் பாவங்களையெல்லாம் கழுவி அவர்களை இரட்சித்தமைக்கும், கர்த்தரின் பிள்ளைகளாகும்படியான உரிமையைக் கொடுத்தமைக்கும் அவரைப் புகழுகின்றனர். இவையெல்லாம் தேவனருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் ஆயிற்று. பரிசுத்தவான்களால் கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சிகளாக முடிவதும், அவர்கள் உயிரோடெழுப்பப்படுவதும் எடுத்துக் கொள்ளப்படுவதும் நித்திய ஜீவனும் கர்த்தரால் நமக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களாகும்.
எல்லாப் பரிசுத்தவான்களும் கர்த்தரைப் போற்ற வேண்டும். அது அவரின் மகிமையை வெளிப்படுத்த வேண்டும். தேவன் பாவிகளுக்காக செய்த நீதியின் செயல்களுக்காக இவற்றைச் செய்ய வேண்டும். அதாவது அவர் நமது எல்லாப் பாவங்களையும் மறையச் செய்தமைக்கும், அவர் பூமியிலிருக்கும் போது செய்த அனைத்து காரியங்களுக்காகவும் அவரைப் போற்ற வேண்டும். ஆகாயத்திலிருக்கும் பரிசுத்தவான்கள் மோசேயின் சங்கீதத்தையும் ஆட்டுக் குட்டியானவரின் சங்கீதத்தையும் பாடுகின்றனர். மகத்துவமுள்ள எத்தனை பெரியவையும் அதிசயமாயுமிருக்கிறது என்பதற்காக தேவனைத் துதித்து பாடுகிறார்கள்.
தேவன் பரிசுத்தவான்களுக்கு செய்தவையும் அவருக்கு எதிராக நிற்பவர்களுக்கு செய்தவையும் நமக்கு அதிசயமானது மட்டுமல்ல, அது மிகவும் பெரியதுமாகும். இந்த உலகைக் கர்த்தர் படைத்தமைக்கான நோக்கம் மனிதர்களை தனது மக்களாக்குவதற்காகும். மனிதர்களுக்கு அவர் செய்தவைகள் எல்லாம் நமக்கு அதிசயமானதாயும் பெரியதாகவும் இருக்கிறது. கர்த்தர் நமக்குச் செய்த எல்லாவற்றிற்காகவும் கர்த்தருக்கு நாம் மகிமைச் செலுத்துகிறோம். அவருடைய செய்கைகளை விசுவாசித்து அவரைத் துதிக்கிறோம்.
தனது சாயலாகவே கர்த்தர் மனிதனைப் படைத்ததும் மிகப் பெரியச் செயலாகும். அவர் தனது சட்டத்தை அனைவருக்கு கொடுத்து இவ்வுலகிற்கு இயேசு கிறிஸ்துவை அனுப்ப கன்னி மரியாள் மூலமாய் செயல்பட்டதும் நமது கண்களுக்கு முன் அதிசயமான காரியங்களாகும். அதே நேரம் இப்படி செய்யப்பட்ட அனைத்து செயல்களும் பாவிகளை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிக்கவே என்பதையும் நாம் விசுவாசிக்கிறோம். யோவானால் இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெறும் படி செய்து உலகின் பாவங்களை எல்லாம் அவரின் சா£ரத்திற்குள் ஒரே தரமாக சுமத்தியதும் மிகப் பெரிய செயலாகும். இப்படி செய்தமையால் மனித குலத்தின் எல்லாப் பாவங்களையும் முற்றிலுமாக அவர் மறையச் செய்தார்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களுக்கு நித்தியமான பாவ மன்னிப்பையும், தனது பரிசுத்த ஆவியானவரையும் கொடுத்த தேவனாகிய கர்த்தரின் செயல் அதிசயமானதும் பிரமிக்க செய்வதுமாகும். அவர் தன்னுடைய இரட்சிக்கப்பட்ட பரிசுத்தவான்களை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இவ்வுலகம் முழுவதும் பிரசங்கிக்கச் செய்தமை இன்னுமொரு அதிசயமாகும். அது நம்மை ஒருவிதத்தில் பிரமிக்கச் செய்கிறது. நமது தேவனாகிய கர்த்தர் பரிசுத்தவான்களுக்கு இரத்த சாட்சியாவதையும், உயிரோடெழுப்பப்பட்டு எடுத்துக் கொள்ளப்படுவதையும் பரலோகத்தில் அவர்கள் மகிமையுடன் வாழ அனுமதிப்பதையும் செய்யும் செயலானது அதிசயமான ஆசீர்வாதமாகும்.
இவற்றையெல்லாம் திட்டமிட்டு நேரம்வரும் போது அவை ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வருகிறார். தேவனின் இச்செயல்கள் பரிசுத்தவான்கள் கர்த்தரை மகிமைப் படுத்தி துதிக்க செய்கிறது. இது நமது இருதயங்களுக்கான பெரிதான ஆசீர்வாதங்களாகும். நாம் தேவனுக்கு நன்றி கூறுகிறோம். அவர் தமது ஏழு பாத்திரங்களின் வாதைகளின் மூலமாக தனது மகத்துவமுள்ள வல்லமையை வெளிப்படுத்தி தமது எதிரிகளை அவரே பலி வாங்குவார் என்பது ஆசீர்வாதமானதாகும்.
தேவனாகிய கர்த்தரின் செய்கைகள் பரிசுத்தவான்களின் கண்களுக்கு மிகப் பெரியவையாகத் தோன்றுவதால் அவர்கள் அவரைப் புகழ்வர். தேவன் எங்கும் வல்லமையுடையவராய் நிறைந்திருப்பதற்காகவும், அவருடைய மிகப் பெரிய செயல்களுக்காகவும் அதிகாரத்திற்காகவும் அவர்கள் துதிக்கின்றனர். நம்முடைய தேவன் மனிதர்களிடமிருந்து மட்டும் துதிக்கப்படாமல் பிரபஞ்சத்திலுள்ள அவரால் படைக்கப்பட்ட அனைத்தினாலும் துதிக்கப்படத்தக்கவர். அல்லேலு¡யா!
அவருடைய மகத்துவமுள்ள வல்லமைக்காகவும், தெளிவான ஞானத்திற்காகவும், அவரின் நீதிக்காகவும், அவருடைய என்றென்றும் மாறாத நீதியின் நியாயத்தீர்ப்பிற்காகவும், அவருடைய மாறாத அன்பிற்காகவும் தேவனாகிய கர்த்தர் தமக்குச் செய்தவற்றை தமது கண்களால் கண்டு அதனை அனுபவித்தவர்களால் அவரைப் புகழாமல் இருக்க முடியாது. அவர் பிரமிக்கத்தக்க செயல்களைச் செய்துள்ளமையால் பரிசுத்தவான்கள் தன்னை என்றென்றும் துதிப்பதை கர்த்தர் அனுமதித்தார்.
தேவன் நமக்காக செய்தவற்றிற்காகவும் அவருடைய நற்தன்மைகளுக்காகவும் பெரிதானவர் என்பதாலும் பரிசுத்தவான்கள் தேவனாகிய கர்த்தரை நித்தியமாக போற்றுவர். இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்தினாலும் நம் தேவனாகியக் கர்த்தர் புகழப்படத்தக்கவர். அவருடைய மகத்துவமுள்ள வல்லமையால் அவரின் செயல்கள் சாத்தியமாயிற்று. அல்லேலு¡யா, தேவனுடைய வல்லமைக்காகவும் ஆசீர்வதிக்கப்பட்ட மாறாத அன்பிற்காகவும் நான் தேவனைத் துதிக்கிறேன்.
வசனம் 4: கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.
தேவனுடைய செயல்களை ஆகாயத்திலுள்ள பரிசுத்தவான்கள் தமது வாய்களினால் புகழுகின்றனர். யார் “உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்?” இத்துதியானது மிகச் சரியான உணர்ந்து கொள்ளுதலினாலும் விசுவாசத்தினாலும் ஆனது. தேவனாகிய கர்த்தரின் மகிமைக்கு முன்னால் யாராலும் நிற்க முடியாது என்பதையும் அவரின் புகழப்படுதலை யாராலும் நிறுத்த முடியாது என்பதையும் இது கூறுகிறது. பயத்தினால் நடுங்காமல் தேவனின் பெயரிற்கு முன்னால் யாரால் நிற்க முடியாது? இயேசுவே ராஜாதிராஜாவாகவும் மகத்துவமுள்ள கர்த்தராகவும் இருப்பதால் இவ்வுலகிலுள்ள எவராலுமோ அல்லது பிரபஞ்சத்திலுள்ள எவராலுமோ அல்லது நித்தியமானவைகளின் எவராலுமோ நம் தேவனாகிய கர்த்தரை எதிர்த்து அவரை மேற்கொள்ள முடியாது.
இயேசு கிறிஸ்துவின் பெயரிற்கு முன்னாலும் தேவனாகிய கர்த்தரின் மகத்துவமுள்ள வல்லமைக்கு முன்னதாகவும் அவரின் உண்மைக்கு முன்பாகவும், இவ்வுலகிலுள்ள யாவும் பரிசுத்தவான்களும் பயந்து நடுங்குவதைத் தவிர்க்க முடியாது. தேவனாகிய கர்த்தரின் வல்லமை எல்லையில்லாததாகையாலும் அவர் உண்மையானவராலும் நிறைவானவராயும் இருப்பதாலும் படைக்கப்பட்டவைகள் யாவும் அவருக்கு நன்றி கூறுகின்றன. அவருடைய பெயரை புகழந்து மகிமைச் செலுத்துகின்றனர். கர்த்தருக்கு பயப்படும் இருதயத்தை ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டும். உலகிலுள்ள யாவும் நம் தேவனின் பெயரைப் போற்ற வேண்டும். ஏன்? ஏனெனில் நமது தேவன் பரிசுத்தமானவராக இருப்பதால் எல்லா மனிதர்களையும் அவர்களின் அநீதிகளிலிருந்து விடுவித்தார்.
அந்திகிறிஸ்துவின் மீது ஏழு பாத்திரங்களின் வாதைகளை தேவன் ஊற்றுவதால் இவ்வுலகில் வாழும் அந்தி கிறிஸ்துவின் சேவகர்களும் மதவாதிகளும் கர்த்தரின் நீதியை அறிவிப்பார்கள். அவரைப் புகழ்வதை நம்மால் தவிர்க்க முடியாது. ஏழு பாத்திரங்களின் பெரிய வாதைகளின் மூலமாக தேவனின் நீதியின் நியாயத் தீர்ப்பு வெளிப்படுத்தப்படுவதால் படைக்கப்பட்ட அனைத்து உயிரிணங்களாலும் தேவது¡தர்களாலும் ஆகாயத்திலுள்ள பரிசுத்தவான்களாலும் நமது தேவனாகிய கர்த்தர் மகிமையையும் துதிகளையும் ஆராதனைகளையும் பெற தகுதியானவர்.
தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரிற்கு பயப்படாதிருக்கும் துணிச்சலுடையவர் யார்? நமது தேவன் படைக்கப்பட்டவரல்ல, அவர் மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தர். அவரை எதிர்த்து நிற்பவர்களின் மீது ஏழு பாத்திரங்களின் பயங்கரமான வாதைகளை ஊற்றியதன் மூலம் அவருடைய மகத்துவத்திற்கும் வல்லமைக்கும் முன்னால் அவரால் படைக்கப்பட்டவைகள் அவரைப் புகழ்வதை தேவனாகிய கர்த்தர் தவிர்க்க முடியாததாக்கினார்.
“எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின” ஆகவே தேவனின் பெயரைத் து¡க்ஷிப்பவர்களால் எக்காலத்திலும் சந்தோக்ஷத்துடன் வாழ முடியாது.
அவரின் உயர்ந்த நிலை எங்கும் செயலாற்றும் தன்மை, இரக்கம், அவரின் பெரிதான இரட்சிப்பு, அன்பு ஆகியவற்றை விசுவாசித்து புகழுவதன் மூலமும் தேவனின் பெயரிற்கு முன்னால் முழங்கால் படியிடுவதினாலுமே அவருடைய பெயரிற்கேற்ற ஆராதனையை நம்மால் செய்ய முடியும். தேவன் பூமியிலிருந்த போது அவர் செய்தவைகளையும் படைக்கப்பட்ட அனைத்தும் விசுவாசித்து புகழ்ந்து அவரை ஆராதிக்க வேண்டும். அனைத்து நாடுகளினாலும் அனைத்து மக்களினாலும் நமது தேவன் புகழப்படத்தக்கவர். ஆமென். அல்லேலு¡யா.
வசனம் 5: இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது.
முடிவின் போது ஏழு பாத்திரங்களின் வாதைகளை நமது தேவனாகிய கர்த்தர் இப்பூமியின் மீது ஊற்றுகையில் கர்த்தர் தனது பரலோகத்திலுள்ள தனது வீட்டைத் தனது பரிசுத்தவான்களுக்கு அளிப்பார். இவையெல்லாம் தேவனாகிய கர்த்தரால் நிறைவேற்றப்படும். அப்படியானால் ஆசரிப்புக் கூடாரத்தின் உடன்படிக்கை என்ன? இப்பூமியிலிருந்த ஆசரிப்புக் கூடாரத்தைப் போன்றது கர்த்தரின் வீடாகும் “பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது.” என்ற சொற்றொடர் தேவனாகிய கர்த்தரின் ராஜ்ய காலம் தொடங்கியது என பொருள்படுகிறது.
ஆசரிப்புக் கூடார ஆலயத்தின் கதவு திறக்கப்பட்ட போது கடைசி வாதைகளும் தேவனாகிய கர்த்தரின் கடைசி வாதைகளும் இப்பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்த அறிவிக்காமல் கர்த்தருக்கு முன்பாக எவ்வித விசுவாசங்களும் ஏற்றுக் கொள்ளப்படாது. இந்த உண்மையின் நற்செய்தியை அறிந்து அதனை விசுவாசிப்பதுடன் கிறிஸ்துவின் ராஜ்யத்திற்குச் சென்று அதில் வாழ்வதற்கான காலம் இப்போது நம்மை நெருங்கி வருகிறது என்பதையும் அறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும்.
வசனம் 6: அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அவ்வேழு தூதர்களும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரந்தரித்து, மார்பருகே பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.
ஏழு பாத்திரங்களின் வாதைகளை கர்த்தர் இப்பூமியின் மீது ஊற்றும் போது இந்த ஏழு வாதைகளும் நீதியின் நிமித்தமாக செவ்வனே செய்யப்படுகின்றன என்று விசுவாசிக்கும் தேவது¡தர்கள் மூலமாக அவர் செயல்படுவார் என இவ்வார்த்தைக் காட்டுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் கர்த்தரின் ஊழியர்கள் அவரின் நீதியை எப்போதும் விசுவாசித்து தம்முடைய முழு விசுவாசத்தையும் அவரின் நற்தன்மையின் மீது வைக்கும் போதே தேவனுக்கு பணியாற்றும் தகுதியை அவர்கள் பெறுகின்றனர் என இது கூறுகிறது.
தேவனுடைய செய்கைகள் எப்போதும் சரியானவைகளாய் இருக்கும் என விசுவாசிக்கும் போது மட்டுமே தேவனின் செயல்களை அவர்களால் செய்ய முடியும். தேவனின் நீதியினால் தரிப்பிக்கப்பட்டு அவர் இரட்சிப்பின் மீதுள்ள நம்பிக்கையை தலைக்கவசமாக அணிந்து தம்முடைய விசுவாசத்தைப் பாதுகாத்து தேவனை மகிமைப்படுத்தும் ஒரு வாழ்வை வாழும் போதே பரிசுத்தவான்களால் கர்த்தரின் விலையேறப்பட்ட ஊழியர்களாக உபயோகிக்கப்பட முடியும்.
வசனம் 7: அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்த பொற்கலசங்கள் ஏழையும் அந்த ஏழு தூதர்களுக்குங் கொடுத்தது.
கர்த்தர் தமது ஊழியர்களின் மூலமாக பணியாற்றும் போது ஒரு ஒழுங்கு முறையில் அவர்களைப் பணியாற்றும் படி செய்கிறார். இத்தகைய வேலைகள் ஒரு ஒழுங்கு முறையில் நிறைவேற்றப்படும் எனவும் இது கூறுகிறது “நான்கு ஜீவன்களின் ஒன்று” என்ற சொற்றொடர் தேவன் தன் நோக்கங்களை நிறைவேற்ற தன் விலையேறப்பட்ட ஊழியர்களை வைத்துள்ளார் என்பதைக் காட்டுகிறது. அவர் அவர்கள் மூலமாக செயல்படுகிறார். இங்கு காணப்படும் நான்கு ஜீவன்களும், தேவனுடன் எப்போதும் இருக்கும் அவருடைய நான்கு மிகவும் விலையேறப்பட்ட ஊழியர்களாவர். அவருடைய நோக்கங்களுக்கு முதலில் ஊழியம் செய்வது அவர்களே. கர்த்தர் மேலானவர் என்பதையும், அவர் எங்கும் செயல்படுபவர் என்பதையும் நாம் அறிய வேண்டும். அவர் தனது ஊழியர்களின் மூலமாக செயல்படுகிறார் என்பதையும் நாம் விசுவாசிக்க வேண்டும்.
வசனம் 8: அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவாலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் பிரவேசிக்கக் கூடாதிருந்தது.
தேவனாகிய கர்த்தர் இப்பூமியை நியாயந்தீர்ப்பதற்கு முன்னால் அவரின் பரலோகத்தினுள் யாராலும் பிரவேசிக்கமுடியாது. கர்த்தர் எத்தனைப் பரிசுத்தமானவர் என்பதை இது காட்டுகிறது. புகழ்ச்சிகளினால் மகிழும் கர்த்தர் அவரல்ல எனவும் இது நமக்குக் கூறுகிறது (சங்கீதம் 5:4). ஆகவே பரலோக ராஜ்யத்தினுள் யாராவது பிரவேசிக்க விரும்பினால். தேவன் மனிதகுலத்திற்கு அருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவன்/அவள் விசுவாசிக்க வேண்டுமென்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களை மட்டுமே நமது தேவனாகிய கர்த்தர் தனது ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதை அனுமதிக்கிறார்.
ஏழு பாத்திரங்களின் வாதைகளை ஊற்றி கர்த்தர் தனது எதிரிகளை அழித்த பிறகு பாவ மன்னிப்பு பெற்ற பரிசுத்தவான்கள் அவரின் ராஜ்யத்தில் நித்தியமாக வாழும் ஆசீர்வாதத்தை அவர் அளிப்பார். கர்த்தரின் அனைத்து செய்கைகளும் மனிதர்களின் கற்பனைகளையெல்லாம் மீறியவை. அவை அவரின் மேண்மையையும், பெரிதான தன்மையையும் வெளிப்படுத்துகின்றன. தன்னுடைய பகைவர்களை நியாயந்தீர்ப்பதன் மூலம் கர்த்தர் தன் மகத்துவத்தை அறிவிக்கிறார். கர்த்தருக்கெதிராக நிற்கும் பாவத்திற்காக அவர்களை அழிக்கும் வல்லமை அவரிடம் இல்லாவிட்டால் எல்லோராலும் புகழப்படுதலை அவரால் பெற முடியாது.
ஆனால் தனக்கெதிராக நின்றவர்களைத் தண்டிக்கும் வல்லமை கர்த்தரிடம் இருப்பதால் தேவனாகிய கர்த்தர் அவர்களை நியாயந்தீர்த்து நித்திய தண்டனையாக நரகதண்டனையை அவர்களுக்களிப்பார்.
அனைத்து நாடுகளிலுமுள்ள எல்லா மக்களாலும் நித்தியமாகப் போற்றப்படுவதற்கு நம் தேவனாகிய கர்த்தர் தகுதியானவராவார். தம்முடைய எதிரிகளின் அனைத்து பாவங்களுக்காகவும் அவர்களை இப்படியாக நியாயந்தீர்த்து பிறகு தன்னுடைய ராஜ்யத்தை அவர் திறப்பார். ஆமேன். நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பெரிதான வல்லமைக்காகவும் அவருடைய மகிமைக்காகவும் பரிசுத்தத்திற்காகவும் அவரைத் துதிக்கிறோம். அல்லேலு¡யா!