• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 10 : வெளிப்படுத்தின விசேஷம் (வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 15-2] நித்தியமானவைகளைப் பிரிக்கும் புள்ளிகள் (வெளி 15:1-8)

(வெளி 15:1-8)
 
கர்த்தரை எதிர்த்து நின்ற அவரின் பகைவர்கள் மீது பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்பட்டவுடன் ஏழு பாத்திரங்களின் வாதைகள் ஊற்றப்படும் என்று அதிகாரம் 15 விவரிக்கிறது “ஏழு” என்ற எண் வெளிப்படுத்தின விசேஷம் முழுவதிலும் பரவலாக உபயோகப்பட்டுள்ளது. ஏழு முத்திரைகள் ஏழு எக்காளங்கள் ஆகியவை கர்த்தரின் முழுமையையும் மற்றும் மகத்தான வல்லமையையும் குறிக்கின்றன. இயேசு கிறிஸ்து எதையும் செய்யக் கூடிய எல்லா இடத்திலும் இருக்கும் கர்த்தராவார். இயேசு கிறிஸ்து எதையும் செய்யக் கூடியவரும் எல்லா இடத்திலும் இருப்பவராகிய கர்த்தர் என்பதன் பொருள் நமது தேவன் மகத்துவமானவரும் அவரால் செய்யக் கூடாதது எதுவுமில்லை என்பதாகும். நம்முடைய தேவனே கர்த்தராவார். அவர் எல்லாவற்றையும் திட்டமிட்டார், அவற்றை நிறைவேற்றும் வல்லமை அவரிடம் இருக்கிறது.
இவ்வுலகில் தேவன் ஊற்றப்போகும் ஏழு பாத்திரங்களின் வாதைகளினால் வெளிப்படுத்தப்பட்ட அவரின் எல்லா இடங்களிலும் இருப்பதும், எல்லாவற்றையும் செய்யக் கூடியதும், வல்லமையுமான அவரின் மகத்துவங்களுக்காக பரிசுத்தவான்கள் அவரைப் போற்ற வேண்டும். எல்லா இடங்களிலும் வியாபித்திருந்து எல்லாவற்றையும் செய்யக் கூடியதான அவரின் மகத்துவங்கள் இத்தகைய நியாயத்தீர்ப்புகளைச் சாத்தியமாக்கியமைக்காக தேவனுக்கு நாம் நன்றி கூறுகிறோம். ஏழு பாத்திரங்களின் வாதைகளினாலும் நரகத்தின் நித்திய துன்பங்களுக்கும் தேவன் தமது எதிரிகளை உட்படுத்தி பலி தீர்ப்பார் என்பதற்கு பரிசுத்தவான்கள் நன்றியறிதலுடையவர்களாயிருப்பது மிகவும் சரியானதாகும். தேவனைப் புகழுவதைத் தவிர பரிசுத்தவான்களால் வேறெதுவும் செய்ய முடியாது. அல்லேலு¡யா.
மகா உபத்திரவத்தின் ஏழாண்டு காலத்தின் முதன் மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு ஏழு பாத்திரங்களின் வாதைகள் வரும். இந்த ஏழு பாத்திரங்களின் வாதைகளினால் நம்முடைய தேவனே மகத்துவமுள்ள கர்த்தரென அறிந்து அவருக்கு அவர்கள் பயப்படுவதால் எதிரிகளின் இருதயங்கள் துவண்டு போகும்.
“வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளம்” என்று வசனம் 1இல் கூறப்பட்டிருப்பது இவ்வுலகில் ஊற்றப்படப் போகும் கடைசி வாதைகளைக் குறிக்கிறது. அதாவது அவை ஏழு பாத்திரங்களின் வாதைகளாகும் “பெரிதும் ஆச்சரியமுமான” என்ற சொற்கள் என்ன கூறுகின்றன என்றால் அங்கு மூன்று நிலைகளிருக்கின்றன. முதலாவது தீர்க்கதரிசன வார்த்தைகளின் மூலமாக இவ்வுலகிற்கு வரப் போகும் வாதைகளைக் குறித்து பரிசுத்தவான்கள் ஏற்கனவே அறிந்திருப்பர். இரண்டாவது பரிசுத்தவான்களுக்கு ஏழு பாத்திரங்களின் வாதைகள் அனுமதிக்கப்படாது. மூன்றாவது தேவனால் அனுப்பப்பட்ட ஏழு பாத்திரங்களின் வல்லமை இவ்வுலகம் முழுவதற்கும் பேராபத்தை எடுத்து வருவதாயிருக்கும்.
மறுபுறம் விடுவிக்கப்பட்டு எடுத்துக் கொள்ளப்பட்ட பரிசுத்தவான்கள் ஆகாயத்திலிருந்து “கர்த்தரின் ஊழியனான மோசேயின் சங்கீதத்தையும் ஆட்டுக் குட்டியானவரின் சங்கீதத்தையும்” பாடுவார்கள். இப்பாட்டின் வரலாற்றை யாத்திராகமம் 15:1-8இல் நாம் காணலாம். இது இஸ்ரவேலரின் பாட்டாகும். மோசே அவர்களை சிவந்த சமுத்திரத்தின் வழியாக அழைத்துச் சென்ற போது தேவனுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் அவர்கள் புகழ்ந்து பாடினர். எகிப்திய ராணுவத்தினால் நெருக்கப்பட்ட அவர்களை தேவன் தமது வல்லமையினாலும் அதிகாரத்தாலும் இரட்சித்தமைக்கு அவரைப் புகழாமலிருக்க முடியவில்லை.
அதுபோலவே புதிய ஏற்பாட்டின் பரிசுத்தவான்கள் தமது நித்திய இரட்சிப்பிற்காக தேவனைப் புகழாமலிருக்க முடியாது. யோவானிடமிருந்து இயேசு பெற்ற ஞானஸ்நானத்தினாலும் அவரின் சிலுவை இரத்தத்தினாலும் பாவமன்னிப்பு நிறைவேற்றப்பட்டது. முடிவு காலம் வருகையில் கர்த்தரின் மக்கள் இன்னுமொருமுறை தேவனைத் துதிப்பார்கள். தம்மை இரத்த சாட்சியாக மரிக்கச்செய்தமைக்கும், உயிரோடெழுப்பியதற்கும் எடுத்துக் கொண்டதற்கும் நித்திய ஜீவனிற்காகவும் அவரிற்கு நன்றி கூறுவார்கள். இயேசு கிறிஸ்துவின் மூலம் அவர்கள் தம்பகைவர்களிடமிருந்தும் தம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.
அத்துடன் இப்பாட்டின் முக்கியமான வேறுபாடு யாதெனில் தேவனின் வல்லமையையும், மகத்துவத்தையும், நீதியையும் இது புகழுகிறது. தேவனின் வல்லமைக்காகவும், அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சித்த அவரின் கிருபைக்காகவும், நித்திய வாழ்வின் ஆசீர்வாதத்திற்காகவும் இரத்த சாட்சிகளால் அவர்களைத் துதிக்காமலிருக்க முடியாது.
“சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது” என்று வசனம் 5 குறிப்பிடுவது தேவனும் அவர்களுடனே கூட இருக்கும் ஆசீர்வாதத்தை எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேர்களுக்கு கர்த்தர் அனுமதித்த ஆசரிப்புக் கூடாரத்தை இது குறிப்பிடுகிறது.
வசனம் 6இலுள்ள “மெல்லிய வஸ்திரம்” என்பது கர்த்தரின் நீதியைக் குறிப்பிடுகிறது. து¡தர்கள் கர்த்தரின் நீதியினால் தரிப்பிக்கப்பட்டிருப்பர் எனவும், எந்த பகைவர்களாலும் தடுக்க முடியாத நியாயத் தீர்ப்பைச் செயல்படுத்தும் அதிகாரத்தை அவரிடமிருந்து பெறுவர் எனவும் இது நம்மிடம் கூறுகிறது.
வசனம் 8 கூறுகிறது, “அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவாலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் பிரவேசிக்கக் கூடாதிருந்தது.” இங்கு மூன்று அர்த்தங்களைக் காணலாம். கர்த்தரின் எதிரிகளின் மீது அவரின் கோபாக்கினை எத்தனை முழுமையாயிருக்கிறது என்பதை இது காட்டுகிறது.
இரண்டாவது பாவிகளுக்கான கர்த்தரின் நீதி நிறைவாக இருப்பதால், இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் விசுவாசிக்காமல் தேவனுடைய ஆலயத்திற்குள் யாரும் பிரவேசிக்க முடியாது என்பதை இது கூறுகிறது.
மூன்றாவதாக எந்தவொரு மனிதர்களின் நற்தன்மையும் கர்த்தரின் நீதியின் நியாயத் தீர்ப்பைத் தவிர்க்க அவர்களை ஏதுவாக்காது எனவும், இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசிப்பதால் மட்டுமே பாவிகளின் மீது ஊற்றப்படும் கர்த்தரின் கோபாக்கினையிலிருந்து அவர்களால் தப்பிக்க முடியுமெனவும் இது காட்டுகிறது.
ஆகவே பரிசுத்தவான்கள் நற்செய்தியை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு கடைசி நொடி வரை அதனைப் பிரசங்கிக்க வேண்டும். இதுவரைத் தமது பாவங்களுக்கான பாவ மன்னிப்பைப் பெறாதவர்கள் கர்த்தரின் நீதியின் நியாயத் தீர்ப்பைச் சந்திப்பதற்கு தாம் கட்டுப்பட்டவர்கள் என்பதையும் அவர்கள் உணர வேண்டும். ஆகவே தேவனருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு சீக்கிரமாகத் திரும்ப வேண்டும். கர்த்தர் தனது எதிரிகளின் மீது எடுத்த வரும் ஏழு பாத்திரங்களின் வாதைகளின் மூலமாக தீர்ப்பு அனைவரின் கண்களுக்கும் முன்னதாக நிறைவானதாயிருக்க வேண்டும். இந்த பாவத்திற்கான தண்டனை முடியும் வரை யாராலும் அதனைத் தடுக்க முடியாது.
அந்திகிறிஸ்து, சாத்தான், பிசாசுகள் மற்றும் கிறிஸ்துவின் அன்பினால் நமக்களிக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காமல் அவர்களை எதிர்த்து நின்றவர்களும் நம் தேவனின் எதிரிகளாவர் என வெளிப்படுத்தின விசேஷத்தின் அதிகாரம் 15 நமக்குக் காட்டுகிறது. தமது எதிரிகளின் மீது இந்த வாதைகளை எடுத்து வந்து அவர்களை நியாயந்தீர்க்கப் போகும் தேவனுக்கு நன்றி கூறி அவரைத் துதிக்கிறேன். கர்த்தரின் ஊழியனாகிய மோசேயின் சங்கீதத்தினாலும் ஆட்டுக் குட்டியானவரின் சங்கீதத்தினாலும் பரிசுத்தவான்கள் தேவனைத் துதிப்பது மிகவும் சரியானதே.
தேவனின் நீதியையும், வல்லமையையும், கம்பீரத்தையும், உண்மையையும், புகழுவதை யாராலும் தடுக்க முடியாது. இத்தகைய ஆசீர்வாதங்களைக் கொடுத்த தேவனை நான் துதிக்கிறேன். அல்லேலூயா!