(வெளி 16:1-21)
ஏழு பாத்திரங்களின் வாதைகளில் முதலாவது வாதை பொல்லாத கொடிய புண் ஆகும். இரண்டாவது வாதை கடலை இரத்தமாக மாற்றுவதாகும். மூன்றாவது நல்ல நீரை இரத்தமாக மாற்றுவதாகும். சூரியனின் சூட்டினால் மக்கள் கருகி சாவது நான்காவது வாதையாகும்.
முக்கிய வசனங்கள் நம்மிடம் கூறுகின்றன, “நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைக் தகிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.” கர்த்தர் சூரியனை பூமிக்கு அருகாகும் படிச் செய்து அவற்றின் உயிரினங்களை கருகச் செய்வார் என இது நம்மிடம் கூறுகிறது. இது நடக்குமாறு கர்த்தர் அனுமதிக்கையில் சூரியனின் சுட்டெரிக்கும் வெயிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது. ஒருவன் ஆழமான ஒரு குகையை பூமியனடியில் தோண்டி அங்கு மறைந்தாலும் தப்பிக்க முடியாது. இவ்வாதைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட அறைகளைக் குளிரூட்டும் கருவிகளாலும் கூட கர்த்தரின் வாதையை நிறுத்த முடியாது. அவர்களுக்கு சாவைத் தவிர வேறெதுவும் கிட்டாது.
இந்த வாதை வரும் போது அவர்களுக்கு என்னவாகும் என கற்பனை செய்வோமாக. அவர்களுடைய தோல் உரிந்து போகும், அவர்களுடைய உட்சதைகளும் கூட சமைக்கப்பட்டு பொழுபொழுவென கொட்டி அழுகும். தோலின் புற்றுநோயால் அனைவரும் மடிவர்.
சூரியனின் கடுமையான சூட்டினால் அவர்கள் வெந்து மாண்டாலும் மக்கள் தம் பாவங்களுக்காக மனம் வருந்த மாட்டார்கள். கர்த்தரின் வாதைக்கொடியது. இந்த வாதைகளை அனுபவித்தாலும் கூட மக்கள் மனம் வருந்தாமலிருப்பது மிகவும் அதிசயமானது. அவர்கள் தொடர்ந்தும் மனம் வருந்தாமல் இருப்பதால் கர்த்தரின் வாதைகள் தொடரும்.
முக்கிய வசனங்கள் கூறுகின்றன, “ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டு” இன்றைய உலகை பார்க்கையில் இப்போது கர்த்தரால் தீர்க்கப்பட வேண்டிய கணக்கிலடங்காத மக்களை நாம் காண்பதில்லையா? கர்த்தர் தனது கோபாக்கினையை பொறுமையுடன் பிடித்திருப்பதால் அவர்கள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. ஆயினும் இயேசு கிறிஸ்து வழங்கிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காமல் அவர்கள் மரித்தாலும் மரிக்கக் கூடாத சா£ரங்களுடன் அவர்கள் உயிரோடெழுப்பப்பட்டு நரகத்தின் எரிகின்ற அக்கினியின் நித்திய துன்பத்தைச் சந்திப்பர்.
இது நடக்கும் போது, அவர்களின் வேதனைத் தாங்க முடியாத அளவு அதிகரிக்கும், அப்போது மக்கள் சாவை விரும்புவர். ஆனால் நரகத்தின் துன்பங்கள் நிரந்தரமானவை. கர்த்தரால் தீர்க்கப்பட வேண்டியவர்கள் தாம் மரித்து போனால் நலமாயிருக்கும் எனக் கூறும் நேரம் வரும். ஆனால் மரணம் அவர்களை விட்டு ஓடிப்போகும். ஏனெனில் அவர்களை நித்தியமாக தீர்க்கும்படி அவர்களை சாகாதபடிச் செய்வார்.
ஆறாவது வாதை அர்மகெதோன் யுத்தமாகும். ஏழாவது வாதை அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவரும் வாதையாகிய மிகப் பெரிய பூமி அதிர்ச்சியும் கல்மழையுமாகும்.
வசனம் 17-21 நம்மிடம் கூறுகிறது, “அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான். ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து: ஆயிற்று என்று சொல்லிய பெருஞ்சத்தம் பிறந்தது. சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை. அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்கு தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அதுக்கு முன்பாக நினைப்பூட்டப்பட்டது. தீவுகள் யாவும் அகன்றுபோயின, பர்வதங்கள் காணப்படாமற்போயின. தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள் அந்த வாதை மகா கொடியதாயிருந்தது.”
ஏழாம் பாத்திரத்தின் வாதையைக் கர்த்தர் ஊற்றுகையில் மிகப் பெரிய பூமி அதிர்ச்சி பூமியைத் தாக்கும். முழு உலகமும் மூன்று பாகங்களாகப் பிரியும். அதுவரை நின்று கொண்டிருந்த கட்டிடங்கள் தரைமட்டமாகும். அவற்றின் ஒன்றைக் கூட விட்டு வைக்காது என மேற்கண்ட வசனம் நம்மிடம் கூறுகிறது. கர்த்தரின் படுபயங்கரமான கோபத்திற்கு இவ்வுலகம் உள்ளாவதால் எல்லாத் தீவுகளும் மலைகளும் மறைந்து போகும்.
இவை நடந்த பிறகு இமயமலை அப்படியே இருக்குமா? இல்லை, உயிருடனிருப்பவர்களின் கண்களின் முன்பாக உயர்ந்த மலைகள் மறைந்து போகும். இவ்வுலகிலுள்ள எல்லா மலைகளும் எவ்வித தடயமுமின்றி மறைந்து போகும். ஒவ்வொரு கல்லும் 100 இராத்தல் (45 கிலோ) எடையுள்ள கல் மழையானது பூமியின் மீது விழுமெனவும் இவ்வசனங்கள் நம்மிடம் கூறுகின்றன. இத்தகைய கல்மழையிலிருந்தும் பூமியதிர்ச்சியிலிருந்தும் யாராலும் தப்பிக்க முடியுமா?
கர்த்தரை விசுவாசிக்காதாவர்கள் மீதும் அவர் வார்த்தையை அலட்சியம் செய்தவர்களின் மீதும் கர்த்தரின் கோபாக்கினை வந்தது என வெளி 1 நம்மிடம் கூறுகிறது. இவ்வுலகின் சில மக்கள் தம்மை தெய்வீகமானவர்களென நினைத்துக் கூறுகிறார்கள் “கர்த்தரின் கோபாக்கினைக்கு நான் உட்பட மாட்டேன். அல்லது அவரால் தீர்க்கப்படவும் மாட்டேன்” ஆயினும் தம்முடைய பெருமைகளினாலும் மூர்க்கத் தனங்களினாலும் நிறைந்த இம்மக்களின் மீது மிகச் சரியான கர்த்தரின் தீர்ப்பு வரும். ஏழு பாத்திரங்களின் வாதைகளைக் கர்த்தர் ஊற்றும் போது அதனால் தாக்கப்படும் இவ்வுலகம் அழிந்து போகும் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும்.
கர்த்தரின் வார்த்தையின் மீது நமக்கு விசுவாசமிருக்க வேண்டும்
இவ்வுலகை அழிப்பதாக கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். ஆகவே இவ்வுலகம் நித்தியமாக இருக்காது. அதன் முடிவு காலத்திலிருக்கும் அனைவரும் இந்த உண்மையை இன்னமும் உறுதியாக விசுவாசித்து தம் ஆவிக்குரிய விசுவாசத்தைப் பற்றிக் கொள்ள வேண்டும். ஆகவே இவ்வுலகிலுள்ள மக்கள் அனைவரும் தமது ஆவிக்குரிய உறக்கத்திலிருந்து எழும்ப வேண்டும். இதுவரை எத்தகைய விசுவாசத்தோடு நீங்கள் வாழ்ந்தீர்களென எனக்குத் தெரியாது. ஆனால் முடிவு காலத்தில் என்ன நடைபெறபோகிறது என்பதின் மீது உங்கள் எண்ணங்களைக் குவியச் செய்து விழித்தெழுந்து அதனை விசுவாசிக்க வேண்டும். ஆகவே வெளிப்படுத்தின விசேஷத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட அனைத்து தீர்க்கதரிசனங்களையும் அறிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கர்த்தரின் ஏழு பாத்திரங்களின் வாதைகளுக்கு இவ்வுலகம் உட்படும் என நம் தேவன் நம்மிடம் கூறினார். மக்கள் அதனை நன்கு ஏற்காவிட்டாலும் கூட நற்செய்தியைத் தொடர்ந்து பிரசங்கித்து தேவனுக்காக நாம் காத்திருக்க வேண்டும்.
இவ்வுலகின் எதிர்காலம் ஆபத்திலிருக்கிறது. இன்றைய உலகம் அனைத்து ஆபத்துகளாலும் சூழப்பட்டுள்ளது. போர் புரிவோம் என்ற பயமுறுத்தலிலிருந்து சீர் குலைந்த வானிலை வரையிலும், சுற்றுச் சூழல் மாசுபட்ட நிலையிலும், சமூகப் போராட்டங்கள் பெருகிக் கொண்டிருக்கும் நிலையிலும், எல்லாவிதமான நோய்களும் உருவாகும் நிலையிலும் இவ்வுலகம் உள்ளது. இன்றைய காலம் நோவாவின் காலத்தைப்போலிருப்பதாக தேவன் நமக்கு கூறினார். இன்றைய காலம் நோவாவின் காலமாயிருக்கிறது என்பது இவ்வுலகம் கடைசி நாட்களுக்குள் நுழைந்துவிட்டது என்று பொருள்படும். இறுதி காலத்தின் அடையாமானது மக்கள் தம் சா£ர காரியங்களில் மட்டுமே ஆர்வமுடையவர்களாய் இருப்பர் என்பதாகும். சாப்பிடுவது, குடிப்பது, திருமணம் செய்வது, போன்ற பல காரிங்கள் உள்ளன. ஆகவே அவர்கள் கர்த்தரால் தீர்க்கப்பட வேண்டியவர்கள். நோவாவின் காலத்தில் கூட இத்தகைய மக்கள் நோவாவிடம் கூறியதைக் கேட்கவில்லை. ஆகவே நோவா குடும்பத்தின் எட்டு பேரைத் தவிர மீதி எல்லோரும் அழிந்து போனார்கள். வரப்போகிற நாட்களின் உலகம் இப்படிப்பட்டதாய் இருக்கும்.
வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளதைப் போல் கர்த்தரின் அனைத்து வாக்குத் தத்தங்களும் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் 5 சதவீதமானவை மட்டுமே நிறைவேற வேண்டியவை. மீதி அனைத்தும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்டன. இரட்சிப்பின் வார்த்தைகளும், தேவனால் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட பாவ விடுதலையும் கூட நிறைவேற்றப்பட்டுவிட்டது. கர்த்தரின் வார்த்தையில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காதவர்களுக்கு நியாயத் தீர்ப்பு மட்டுமே மிச்சமிருக்கிறது. மறுபடியும் பிறந்தவர்களுக்கு ஆயிரம் வருட அரசாட்சியும் புதிய வானமும் புதிய பூமியும் காத்திருக்கின்றன. இங்கு நீதிமான்கள் பிரவேசித்து வாழ முடியும்.
கர்த்தர் இரக்கமிக்கவர், நீதிமான்களின் பக்கத்தில் அவர் இருக்கிறார். ஆயினும் அவருடைய கோபாக்கினைகளுக்கு பாத்திரமானவர்கள் மீது கர்த்தர் நிச்சயமாகத் தனது கோபாக்கினையை ஊற்றுவார். இரக்கம் தேவைப் படுகிறவர்களுக்கோ அவர் நிச்சயமாய் இரக்கம் செய்வார்.
இந்த வாதைகள் எப்போது நிகழும்? பரிசுத்தவான்கள் இரத்த சாட்சியாகிய பிறகும் 666 என்ற குறியீடு இவ்வுலகத்தின் மீது திணிக்கப்பட்டு பரிசுத்தவான்களால் எதிர்க்கப்பட்ட பிறகும் இந்த ஏழு பாத்திரங்களின் வாதைகளும் வரும். வாதைகளுக்குப் பின்னால் முதல் உயிர்த்தெழுதலும், ஆயிர வருட அரசாட்சியும், மகிமையான வெள்ளை சிங்காசனத்தின் மீது இயேசு அமர்ந்து அளிக்கும் இறுதி தீர்ப்பும் வரும். நித்தியமான பரலோக ராஜ்யம் திறக்கப்படுவது இதனைப் பின்தொடரும். கர்த்தரின் திட்டங்களைக் குறித்த அறிவை வேதாகமத்தின் மூலம் பெற வேண்டும்.
மரித்தோரிலிருந்து இயேசு மீண்டும் உயிரோடெழுந்தார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் தனது ஞானஸ்நானத்தின் மூலமும் இரத்தத்தின் மூலமும் மனித குலத்தின் அனைத்துப் பாவங்களையும் மறையச் செய்தார் என்பதை விசுவாசிக்கிறீர்களா? நம் தேவன் தனது நீராலும் இரத்தத்தாலும் மனித குலத்தின் அனைத்துப் பாவங்களையும் மறைய செய்து மூன்று நாட்களில் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து இப்போது பிதாவின் சிங்காசனத்தின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தவர்களின் பாவங்கள் முற்றிலும் மறைந்து போயின. மரித்தவர்களிலிருந்து கிறிஸ்து உயிரோடெழுந்ததைப் போல் அவர்களும் உயிரோடெழுப்பப் படுவர்.
ஆகவே பரிசுத்தவான்கள் தேவனுடனே கூட மகிமைப்படுத்தப்படுவார்கள். ஆனால் இப்பூமியில் வாழுகையில் தேவனுக்காக அநேகத் துன்பங்களைச் சந்திப்பார்கள். இக்காலத்தின் பாடுகள் நமக்காக காத்திருக்கும் மகிமையுடன் ஒப்பிடவே முடியாதவை. ஏனெனில் மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்களுக்காக காத்திருப்பது இந்த மகிமை மட்டுமே. ஆகவே பரிசுத்தவான்கள் எதிர்காலத்தைக் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. நீதிமான்கள் செய்ய வேண்டியதெல்லாம் நற்செய்திக்காக தம் எஞ்சியிருக்கும் வாழ்வை விசுவாசத்துடன் வாழ்வதே. ஆத்துமாக்களை இரட்சிக்கும் செயலுக்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும். உலகை நாம் பின்பற்றக் கூடாது.
எஞ்சியிருக்கும் வாழ்வை கர்த்தருக்காக அர்ப்பணிப்போமாக
நம்மிலுள்ள சிலர் நற்செய்தியை மறுதலிப்பார்களோ என நான் கவலைப் படுகிறேன். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை யாரெல்லாம் மறுதலிக்கிறார்களோ, அவர்கள் முடிவில் தேவனையே கூட விட்டுவிடுவார்கள். நாம் பலவீனங்களாயிருந்தாலும் தேவனால் நிறைவேற்றப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து அதனைப் பின்பற்றினால் நம்மால் விசுவாச வாழ்வு வாழ முடியும். பரிசுத்தவான்களால் தமது சொந்த ஞானத்தினாலும் பலத்தினாலும் மட்டுமே வாழ முடியாது. அவர்கள் அப்படி செய்ய முயன்றால் அவர்கள் தமது விசுவாசத்திற்கு துரோகம் செய்து தமது சொந்த அழிவையும் சந்திப்பர். இதனைத் தவிர்க்க விசுவாசத்தினால் நாம் வாழ வேண்டும்.
666 என்ற குறியீட்டை மனிதர்கள் பெறுவதை ஏன் தேவன் அனுமதிக்கிறார்? இது அரிசியை உமியிலிருந்து பிரிப்பதற்காகும். பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பாக கர்த்தர் செய்ய வேண்டிய முதலாவது காரியம் அரிசியை உமியிலிருந்து தெளிவாக பிரித்தெடுப்பதே.
பரிசுத்தவான்கள் போராட வேண்டிய அநேக போராட்டங்கள் உண்டு. பரிசுத்தவான்கள் கர்த்தரின் பகைவர்களுடன் போரிடுவதை தவிர்க்கலாகாது. சாத்தானுடன் போராடுவதற்கு அவர்கள் தயங்கினாலும் சாத்தானிடமிருந்து பலமான உதையைப் பெறுவர். ஆகவே எல்லாப் பரிசுத்தவான்களும் ஆவிக்குரிய போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அது அவர்களுக்கு முடியும். பரிசுத்தவான்கள் போராடிய அனைத்துப் போராட்டங்களும் சரியானவையே. கர்த்தரை பரிசுத்தவான்கள் பின்பற்ற வேண்டுமானால் சாத்தானுடனும் அவன் ஊழியர்களுடனும் அவர்கள் போரிட்டு வெற்றி பெற வேண்டும்.
பரலோக ராஜ்யத்திற்காக பரிசுத்தவான்கள் போராட வேண்டும். கர்த்தரின் ராஜ்யத்திற்காக அவர்கள் துன்பப்பட வேண்டும். உலகின் மக்களால் அவர்கள் வெறுக்கப்பட வேண்டும். தேவனுக்காக போராடுவதற்கு பரிசுத்தவான்களுக்கு கிடைத்த வாய்ப்பு அவர்களின் நன்மைக்கானதே. கர்த்தருக்காகப் போரிடக் கூடிய ஒரு வாய்ப்பு உங்களுக்கு கொடுக்கப்பட்டால் அதற்காக நீங்கள் அவருக்கு நன்றி கூற வேண்டும். அத்தகையதொரு போராட்டம் நல்லதொரு போராட்டமாகும். அது கர்த்தரின் நீதிக்கான போராட்டமாகும்.
நீதிமான்களுக்கு கர்த்தர் உதவுகிறார். நம்முடைய வாழ்வில் அநேக நாட்கள் வரப்போவதில்லை. தேவனுக்கு முன்பாக நாம் நிற்கும் வரையில் ஆவிக்குரிய போராட்டத்தை போராடும், ஆவிக்குரிய செயல்களைச் செய்யும் ஒரு வாழ்வை நாம் நமது எஞ்சியிருக்கும் நாட்களில் வாழ வேண்டுமென நம்பி அதற்காக ஜெபிக்கிறேன். இவ்வுலகின் மக்கள் நம்மிடம் என்ன கூறுவார்கள் என்பது பொருட்டல்ல. ஆவிக்குரிய போராட்டங்களை நாம் நடத்த வேண்டும். ஆவிக்குரிய கனிகளைச் சுமக்க வேண்டும். இக்கனிகளை சுமக்க வேண்டும். இக்கனிகளை நமது தேவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். நம்முடைய தேவன் திரும்பி வரும் நாள் வருகையில் அவர் முன்பு நாம் மன உறுதியுடன் நிற்போமாக. இந்நாள் வரும் போது நம்முடைய கண்ணீரை நம் தேவன் துடைத்து நாம் வலிகளினால் அழாத துன்புறுத்திய பாவங்களைக் காணாத ஓரிடத்தில் வாழுவதற்கு அனுமதிப்பார்.
நாமெல்லாம் விசுவாசத்துடன் வாழ்வோமாக, இந்த விசுவாசத்துடன் பரலோக ராஜ்யத்தினுள் நாம் பிரவேசிப்போமாக.